தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, May 07, 2016

மோக முள் - தி. ஜானகிராமன் (சில பகுதிகள்) (268 - 302)

மோக முள் - தி. ஜானகிராமன் (சில பகுதிகள்) (268 - 302)22சின்னப் பையனாக, அதாவது ஏழு, எட்டு, ஒன்பது வயதில், சின்ன லீவு, பெரிய லீவுக்கெல்லாம், சங்கு தஞ்சாவூரில்தான் தங்குகிற வழக்கம்.அவன் முதன்முதலில் வந்தது இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது பாபுவுக்கு ஏழு வயதிருக்கும். பாபுவிடம் அப்போது சின்ன கள்ளி டப்பா ஒன்று இருந்தது. சாக் கட்டி விற்றது போக மிகுந்திருந்த டப்பா அது யாரோ கடைக்காரனிடம் வாங்கி வந்தது. ஸ்லேட்டுக் குச்சிகள், புழுக்கைப் பென்சில்கள் ரப்பர்கள், சோடாபாட்டில் மூடிகள் நாலைந்து, புஸ்தகத்திலிருந்து கிழிந்த நாலைந்து அக்பர், அவுரங்கசீப் முதலிய தலைகள் எல்லாம் அதில் கிடக்கும். அதோடு ஈய நாலனா நாணயம் ஒன்று கிடந்தது. ஏதோ கள்ள நாணயம். பெருவியாதி வந்த முகம் மாதிரி ஒரு அசட்டுப் பளபளப்புடன் வந்த அது, இரண்டு மூன்று வாரங்களில் நன்றாகக் கறுத்துவிட்டது. ஒரு வருஷமாகக் கிடந்த அதைப்பற்றி பாபுவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. செல்லாக்காசு என்று அப்பா சொன்னதிலிருந்து அது அங்கேதான் கிடக்கிறது. புழுக்கைப் பென்சிலுக்கும் குச்சிக்கும் உள்ள உபயோகம்கூட இல்லாமல் அது கள்ளிப்பெட்டியின் அடியில் கிடந்தது.சங்கு அதைப் பார்த்ததுதான் தாமதம்."ஏய், இது ஏதுடா?" என்றான்."அப்பா கொடுத்தா. செல்லாக்காசுடா அது.""செல்லாக்காசா?" என்று அதைக் கையில் எடுத்து, திருப்பித் திருப்பிப் பார்த்தான் சங்கு. "ஆமாண்டா, செல்லாக்காசுதான்."சற்றுக் கழித்து, "இதைச் செல்ல வைக்கலாமாடா" என்றான்."எப்படிடா வைக்கிறது?""நான் ஒரு வித்தை பண்றேன் பாரு."அவ்வளவுதான். கொஞ்சம் புளியை எடுத்து ஒரு நாழிகை தேய்த்து, பிறகு விபூதியை வஸ்திரகாயம் செய்து-அவன் வேஷ்டிக்குக் கீழ் சம்பட மூடி ஒன்றை வைத்து வஸ்திரகாயம் செய்த சிரத்தையும் காரியத்தில் கண்ணும் இப்போது நினைத்தால்கூடச் சிரிப்பு வருகிறது.புது நாணயமாகச் செய்துவிட்டான்.வெள்ளி நாணயமாக மாறிவிட்டது கள்ளக் கால் ரூபாய்."வாங்கடா போகலாம்."姿268签 தி. ஜானகிராமன்பாபு, சங்கு, அவர்களுக்கு ஒன்றுவிட்ட அத்தை பிள்ளை _ாரும் கிளம்பிவிட்டார்கள். கோயில் பக்கத்தில் ஒரு கடையைப் _அழைத்துப் போனான் பாபு.சற்றுத் தூரத்திலிருந்தே கடையைப் பார்த்தவாறு "இது_ாமடா" என்று நின்று விட்டான் சங்கு._ண்டா சங்கு ?"வேண்டாம்டா இந்தக் கடைக்காரனைப் பார்த்தால் பிடிக்கலை"இரண்டு மூன்று கடைகளை ஒதுக்கிவிட்டான் சங்கு.நால்வரும் நடந்துகொண்டிருந்தார்கள்."ஏய் பேசாம வாங்கடா" என்றான் சங்கு.வெற்றிலைப்பாக்குக் கடையில் ஒரு பொம்மனாட்டி உட்கார்ந் _ருந்தாள். அவள் முகம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வாயில் ப. இருக்கு. ஆனால், பல் இல்லாதது போன்று காணும் முகவாய், பனிபர்ஸ் வாய் - மாவடு ராமசாமிக்கு இருந்த மாதிரி.'வாழைப்பழம் எப்படி?" என்று மேலே கயிற்றில் தொங்கும் ாரை நிமிர்ந்து பார்த்தான் சங்கு. அவன் பின்னல் விறைத்துக் கொண்டு நின்றது."எடுத்துக்க புள்ளே சல்லிக்கு ரண்டு பளம், எத்தினி வேணும்?" ான்று பொம்மனாட்டி சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தாள்."சல்லிக்கு ரண்டா? அப்படீன்னா அரையனாவுக்குக் கொடு."ஒரு சீப்பை எடுத்துக்கொடுத்து, காசை வாங்கிக்கொண்டு, மீதி மூன்றரையனாவைக் கொடுத்தாள் அவள்."வாங்கடா."மூன்றரை அனாவை வைத்துக்கொண்டு என்ன செய்வது? பளிங்குக் குண்டு கலர் அப்போது காலணாத்தான். ஆளுக்கு மும்மூன்று பழங்களாகப் பகிர்ந்து நாலு கலர் வாங்கிக் குடித்தார்கள். அதாவது, சங்கு வாங்கிக்கொடுத்தான். அப்புறம் அரையனாவுக்கு பக்கவடா, பப்பர்மிட், ஆளுக்கு ஒரு ஜப்பான் கொடை மார்க் பென்சில், எல்லாம் போக, அரையனா மிச்சம் பிடித்துக்கொண்டு வந்துவிட்டான் சங்கு. வயிறு எல்லாவற்றிற்கும் நிரம்பிக்கிடந்தது. சோடா ஏப்பம் மூக்கால் வரவர எல்லாம் வீடு வந்து சேர்ந்தன. பாபுவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.மாடியில் ஒரே கும்மாளம். இது நடந்தது மத்தியானம் மூன்று மணிக்கு.婆269 婆மோக முள்________________இருட்டுகிற சமயத்திற்கு "டேய் பாபு" என்று கீழேயிருந் அப்பாவின் குரல் கேட்டது. Л0/ ழயிருநது"ஏம்பா.""இஞ்ச வா." பாபுவுடன் எல்லாம் மாடிப்படியில் இறங்கின. பாபுவுக்குச் சொரேர் என்றது. மணிபர்ஸ் முகவாயுடன் அந்தப் பொம்மனாட்டி நின்றுகொண்டிருந்தாள். "இதுங்கதாம்மா வந்திச்சு இதுங்களேதான். இந்த நாலு புள்ளிங்களும்தான்" என்று காண்பித்தாள் அவள்.- "ஏண்டா பாபு, இவ கடையிலே வாழைப்பழம் வாங்கினேளா" என்றார் வைத்தி,"இந்தப் புள்ளெதாம்மா வாங்கிச்சு" என்று சங்குவைக் காட்டி னாள் அவள்."யாரு வாங்கினா? என்னன்னு நெனச்சுண்டிருக்கே பல்லை உடைச்சிப்பிடுவேன்" என்றான் சங்கு.- "த்தா சும்மா இரு நீ அரையனாவுக்கு வாழைப்பழம் வாங்கலே மத்தியானம் ""நான் ஒண்னும் வாங்கலே." பாபு என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தான்."எந்த வீட்டிலே வந்து கேக்கறேடீ! இதுகளுக்கெல்லாம் இந் ஊர்கூட இல்லியே" என்றாள் அம்மா. இந்த இல்லங்கம்மா இந்தக் காசை கொடுத்திச்சு. பணத்தைக் குடுத்து மூனரையனா நான்தாம்மா பாக்கி சில்லரை குடுத்தேன். நான் இவ்வளவு குறிப்பாச் சொல்றேன். எனக்கென்ன பைத்தியமா?""ஏண்டா சங்கு, நீ பழம் வாங்கலியா?" என்றார் வைத்தி. "இல்லை சித்தப்பா." ജൂലൈ மாமா சங்குதான் வாங்கினான். எனக்குக்கூட ரண்டு கொடுத்தான் என்று மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தான் ஆத்தைபிள்ளை நாகராஜன். அவனுக்கு ஐந்து வயது எல்லாருக்கும் சின்னவன்."ஆமாம், |----I- எனக்குக்கூட மூணு குடுத்தான். அப்பறம் சோடா பக்கோடா பப்புருமுட்டு, பென்சில் எல்லாம் வாங்கினான்" என்றான் இன்னொரு அத்தை பிள்ளை.婆270婆தி. ஜானகிராமன்_பார்த்தீங்களாம்மா?"_ான்னடா சங்கு."நான் கலர் பென்சிலெல்லாம் இவகிட்டே ஒண்னும் வாங்கலே" _றான் சங்கு.பளம் வாங்கலியா?"பழம்தான் வாங்கினேன்."சங்கு மகா நெஞ்சழுத்தக்காரன். உண்மை வெளிப்பட்டும் _றாப்பை விடவில்லை."இந்தக் காசா கொடுத்தே?""இதை ஒண்னும் கொடுக்கலே.""இல்லே மாமா, இதான் குடுத்தான். மத்யானம் புளியும், ாம்பலும் போட்டுத் தேக்க இவன்தான் வெள்ளையாப் பண்ணி ான்" என்று மறுபடியும் கரடிவிட்டான் அத்தைபிள்ளை.சங்குவுக்குப் பேசமுடியவில்லை. வேறு நாலணாவைக் கொடுத்து அவளைப் போகச் சொல்லிவிட்டு, உதட்டில் காத்திருந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டார் வைத்தி."ஏண்டா கழுதே இப்படித்தான் பண்றதோ?" என்று கடிந்து கொண்டாரே ஒழிய அவருக்கு முகத்தில் கோபத்தைத் தருவித்துக் கொள்ளக்கூட முடியவில்லை."இனிமே பண்ணுவியா இதுமாதிரி"_ _ஹம. "இது ஏதுடீ புள்ளே” என்று முகவாயில் கையை வைத்துக் கொண்டாள் அம்மா.ஒன்றுவிடாமல் அவ்வளவும் அப்படியே ஞாபகமிருக்கிறது. சங்கு இன்னும் எவ்வளவோ விஷமங்களின் தலைவனாக, நடுநாயகமாக விளங்கியிருக்கிறான். மூன்றாவது பாரம் படிக்கும்போது லிவிற்கு வந்தவன், பாபு பாடுவதைப் பார்த்து, மாடிக்கட்டையோரமாக நின்று "ஏய் பாபு, நீ உள்ளே உட்கார்ந்து ஒரு பாட்டுப்பாடேன்" என்று சொல்லிவிட்டு, தெருவைப் பார்த்துக்கொண்டே பாட்டுக்குத் தகுந்த மாதிரி வாயையும் தலையையும் அசைத்துக்கொண்டிருப்பான். தெருவில் போகிறவர்கள் அவன்தான் பாடுவதாக நினைக்க வேண்டு மாம்!பாபுவுக்கு ஒன்றோடொன்றாக வந்து நினைவில் மோதிற்று. இப்போதும் சங்குவைப் பார்த்ததும் குழந்தைப் பருவம் திரும்பி வருகிறாற் போலிருக்கிறது.婆271婆மோக முள்

"நாலஞ்சு நாளாச்சா ஊருக்கு வந்து ?" "ஆமாம். ஆறு நாளாறது." "எனக்குத் தெரியவே தெரியாதே.""அதான் நேரே வந்துவிட்டேனேடா." "வேலையெல்லாம் செளகரியமாயிருக்கா?" "இருக்கு." "இப்ப என்ன சம்பளம் கொடுக்கிறான்?""முப்பத்தஞ்சு ரூபா. நான் இப்ப முதலியாருக்கு ப்ரைவேட் செக்ரடரி,"_மஹம."எத்தனை நாள் லீவு?""ஒரு மாசம்."பாபுவுக்கு ஆச்சரியமாயிருந்தது. சங்கு கண்டபடி கண், காது தெரியாமல் செலவு செய்கிறவன். முப்பத்தைந்து ரூபாயில் காரைக்கால் சில்க் சட்டை, கல் பொத்தான், கிளாஸ்கோ மல் - எல்லாம் எப்படித்தான் வாங்குகிறானோ!"ஊரிலெ அப்பா அம்மா எல்லாம் செளக்யம்தானே?"_Lh.”"ஊரிலே விசேஷம் ஏதாவது உண்டா?" "நிறைய இருக்கு" என்றான் சங்கு."என்ன ?""பெரிய பண்ணை பட்டப்பாவை பளார்னு கன்னத்திலே ஒண்ணு விட்டேன் நேத்திக்கி" என்று மூக்கு விடைக்கப் பார்த்தான் சங்கு.பாபுவுக்குத் தூக்கிவாரிப் போட்டது."என்னது?""ஆமாண்டா, பளார்னு ஒரு அறை.""யாரை ?""பெரிய பண்ணை தண்டு பிள்ளை பட்டப்பாவை.""எதுக்கு அறஞ்சே அவனை ""நேற்றைக்குச் சீட் பாடிண்டிருந்தான் பய. சாயங்காலம் நான் போய் நின்னுண்டு வேடிக்கை பார்த்திண்டிருந்தேன். கன ராங்கி婆272 婆 தி. ஜானகிராமன்டி_பயன்னா. இவனுக்கு எத்தனை லட்சம் இருந்தா எனக் _ன்னன்னேன். விட்டேன் பளார்னு - ஒரே அடியிலே ஆள் ஆடிப் போயிட்டானா!""என்னத்துக்கு அடிச்சே?""என்னத்துக்கா? நந்தமங்கலத்திலே சுப்புணி மாமா செத்துப் போயிட்டாராமே.""ஆமாம்.""உன்னிடம் சொன்னா நீ வருத்தப்படுவே.""என்ன சொல்லேன்.""கும்மாணம் போகப்போறேன் நாளைக்குன்னேன். ஒகோ! அப்படியான்னான் பட்டப்பா. போனா துக்கம் விசாரின்னான். யாரைன்னேன். உன் தம்பியைத் தாண்டான்னான். என் தம்பிக்கு என்னன்னேன். உங்க சித்தப்பாக்கு மாமனார் ஸ்தானத்திலே இருந்தாரே நந்தமங்கலம் மிராசுதார் . அவர் செத்துப் போயிட்டாரேடான்னான். எனக்குச் சட்டுனு ஒண்ணும் புரியலே...""என்ன சொன்னான் ?""என் சித்தப்பா வைத்திக்கு மாமனார் ஸ்தானத்திலே இருந்தாராம் சுப்புணி..""அப்படீன்னா?”"என்னடா பாபு இது?" "நெசம்மாவே ஒண்ணும் புரியலே எனக்கு!" "பார்வதிபாய் பொண்ணு யமுனா உனக்கு சித்தி முறை, பட்டப்பா அபிப்பிராயத்திலே.""என்ன!" என்று திகைத்தாற்போல வாயைத் திறந்தான் பாபு."என்ன சொன்னான் ?""என் சித்தப்பாவுக்கு மாமனார் ஸ்தானத்திலே இருந்த சுப்புணி போனதுக்கு நான் உன்னை துக்கம் விசாரிக்கணும்!"பாபுவுக்கு உதடு துடித்தது. உடல் குமுறிற்று. "எனக்குப் பதறித்து என்ன சொன்னேன்னு ஒரு கத்து கத்தினேன். என்னடா சங்கு எப்படியிருந்தா என்னடா, உறவு உறவு தானேன் னான். உறவா, உறவா, என்ன சொன்னேன்னேன். கிட்டக்கப் போனேன். இழுத்தேன் பார் ஒண்ணு கன்னத்தைக் காட்டி குடுமி கிடுமியெல்லாம் பறந்துபோச்சு சீட்டுக்கட்டெல்லாம் பறந்தது. நாத்தக் கழுதே பணத்திமிரா உன்னை இப்படி பேசச் சொல்றது:மோக முள் 婆273婆பல்லுக்கில்லெல்லாம் உடைச்சுக் கையிலே கொடுத்து விடுவேன், ஜாக்ரதைன்னேன். ஒரு நிமிஷம் மலங்க மலங்க முழிச்சான். உள்ளே எழுந்துபோயிட்டான். கிட்ட இருக்கிற பசங்கள்ளாம் அப்படியே பதறிப் போய்ட்டான். அவன் சீட்டைக் கீழே போட்டான். துண்டை உதறிப் போட்டுண்டு வீட்டைப் பார்க்கப் போய்ச் சேர்ந்தான். ராத்திரி அவன் தம்பி வந்தான். என்னடா கை மிஞ்சினியாமேன்னான். வாசலிலெ திண்ணையிலே வந்து உட்கார்ந்துண்டு. என்ன செய்தேன் தெரியுமா? உள்ளே போய் குதிருக்கடியிலே மூங்கிலரிவாள் கிடந்தது. எடுத்துவந்தேன். எலே, பரிஞ்சா பேச வந்தே எழுந்து போறியா? ஒரே வீச்சா வீசட்டுமா! தலை திண்ணையிலேயே உருண்டு போயிடும்னேன். எடுத்தான் பார் ஓட்டம். வீட்டுக்குப் போய்க் கதவைச் சாத்திண்டவன்தான், ரண்டு பசங்களையும் வாசல்லெ காணும். அந்தப் பய மாத்திரம் எதிர்த்துப் பேசியிருந்தான், இத்தனை நாழி கொலைக் கேசுக்கு ரிமாண்டிலே உட்கார்ந்திருப்பேன் ... காலமேதான் சாப்பிட்டுவிட்டு இங்கே கிளம்பினேன். அம்மா வந்து கொல்லை வழியாலே போடா பஸ்ஸுக்குன்னாள். நீ சும்மா இருமான்னு வாசலோடதான் வந்தேன். பட்டப்பா வாசலிலெ உட்கார்ந்திருப்பனே ஈஸி சேர்லே சாஞ்சிண்டு-பெரியவா, சின்னவா யார் போனாலும் காலைக்கூட மடக்காமல், இன்னிக்கி வாசலிலெ ஈ காக்கையைக் காணும். வாசல் கதவைத் திறக்கவில்லை. சிங்கம் மாதிரி வந்தேன். அப்பா ஓடி வந்தார். பின்னாலே ஏண்டா சொல்லிக்காம புறப்பட்டுட்டியே தனியா, அந்தப் பசங்க பணக்காரப் பசங்க கொலைக்கு அஞ்சமாட்டான். இப்படி வறியேன்னார். "யாரு! அவன் ஆளைவிட்டு அடிக்கச் சொல்லுவான். நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? நானே தீர்த்துவிடுவேன். எனக்கு ஆள் வாண்டாம். பரதை ராஸ்கல்கள்! ஊர்லே ஒரு கூட்டுகிறவள் பாக்கியில்லே. இந்தப் பன்னிப்பய சித்தப்பாவைப் பற்றியா ஆரமிச் சான். நாக்கு அழுகவில்லையே இந்தப் பயலுக்கு அந்த மகாத்மாவை சொல்லிவிட்டுன்னு கத்திண்டே போனேன். அப்பாவுக்கு ஏண்டாப்பா கூட வந்தோம்னு ஆயிடுத்து மெதுவாடானா மெதுவான்னார். மெது என்னப்பா மெது? இந்தப் பயலை ஒருகை பார்க்காமலா விடப்போறேன்னு கத்திண்டே வந்தேன். ஊர்லே திண்ணையில் இருந்ததுகள்ளாம் என்னைக் கண்டு பயந்து பேசாமல் உட்கார்ந் திருந்தது!சங்குவிற்குக் குரல் ஏறிக்கொண்டே இருந்தது. உடலும் முகமும் உணர்ச்சிக்கு ஆளாகி வெறி பிடித்து நடுங்கிற்று. மகா கோபக்காரன் அவன். பச்சைக் குழந்தையிலேயே ராக்ஷச விளையாட்டெல்லாம் விளையாடின. அவன், அரிவாளைத் தூக்கிக்கொண்டு போனதும் அதிசயமாகத் தோன்றவில்லை. பாபுவுக்கு வருத்தத்திலும் கோபத்தி லும் உடல் நடுங்கிற்று தூய்மையே வடிவான தகப்பனாரை நினைத்து அவன் உள்ளம் வெம்பிற்று. கண்ணில் நீர் தளும்பி நின்றது.签274签 தி. ஜானகிராமன்- - - - ன் சொல்ல வாண்டாம்னு பார்த்தேன்"இதுக்குத்தான் நான - - *-*---- - _று பாபு கண்ணில் நீருடன் கலங்குவதைப பார்த்துக்கொண்டே _ன்னான் சங்கு"நீ சொல்லாட்டா, யாராவது சொல்லத்தானே போறா? _னாலெ இப்ப ஒண்னும் மோசம் போயிடலெ."இனிமே ஒரு பய வாயைத் திறந்துட்டு உசிரோட இருந்துடறதா _ வீச்சா விசி விடமாட்டேன்! நீ சும்மா மனசைப போட்டு _வட்டிக்காதே பாபு எனக்கு வேறு ஒண்னும் இல்லெ பாயும் சித்தப்பாவைப் போய் நாக்கிலெ நரம்பில்லாம பே விட்டானேன்னுதான் எனக்குப் பதர்றது.""சித்தப்பா என்ன ? சீதையே தப்பலெ. மகாத்மா காந்தியே தப்பலெ. சித்தப்பா எந்த மூலை?""ராமன் சீதையைக் கொண்டு காட்டிலே விட்டான் நான _அந்த மாதிரி செய்ய முடியுமா? அந்தப் பட்டபா நாககை அறுக்காமலா இருக்கப் போகிறேன்! நீ பாரு மதராஸ் போதுக் குள்ளேயும் அவன் என் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கலெ நான் ஜெயிலுக்குத்தான் போகப் போறேன். உத்தியோகமுமாக்க மண்ணும்ாச்சு ...நீ மாத்திரம் சொல்லிவிட்டானே சொல்லிவிட்டா னேன்னு சாம்பிப் போகாம இருந்தால் போதும்."சங்கு நீ ஏதாவது எக்கச்சக்கமாப் பண்ணிவிடாதே, எனக்குப் பயமாயிருக்கு."பயம் என்னடா பயம்; இந்த பயலுக்கு வயசாச்சா இல்லியா சின்னப்பயலா கழுதைக்கு ஆறாப்போல முப்பது வயசாப போறது. இவனுக்கு ஏதாவது பாடம் கற்றுக்கொடுக்காம இருந்தா சும்மா இருப்பானா?""அது அவன் சுபாவம் அவன் அப்பா இல்லையோ? அக்கா குறைப்பட்டுப் போனப்புறம் அவளுக்கு வரவேண்டிய LIGðMTLD, பாத்திரம் எல்லாம் ஏப்பம் விட்டான். பொய்க் తాతా ఆ பதினாயிரம் ரூபாய் பாக்கின்னு கேஸ் போட்டான், கோட்டி a. வந்து சத்தியம் பண்ணினான். அக்காவைக் கோர்ட்டுக்கு இழுத்துக் கூண்டிலெ ஏற்றி அழ அழி அடிச்சான். அப்பாவே இப்படிப் பண்ணியிருக்கிறபோது பிள்ளை சும்மா இருப்பானா? அவனும தன் பங்கைச் செய்துவிட்டான்.""அவன் செய்த பாவம் எல்லாம்தான் குழந்தைகள் தலையிலெ விடிந்திருக்கே ரண்டு பிள்ளைகளுக்குப் பெரு வியாதி ஒரு பெண் வேறே பிடிச்சிண்டிருக்கா அதை ஒரு பெண் பைத்தியம் பிறத்தியாரைத் தூவிக்கிறபோது இதெல்லாம் ஏன் நினைச்சுப் பார்க்கவில்லை அந்தப் பட்டப்பா கழுதை?"மோக முள் 婆275婆"குழந்தைகளுக்கு வியாதி எப்படி வந்ததோ, நாம் ஏன் அதைச் சொல்லனும் 2""நான் சந்தோஷப்படலை இப்ப எல்லாம் இப்படி இருக்கேன்னு வருத்தமாத்தான் இருக்கு இவ்வளவு இருந்தும் இந்தப் பயலுக்குப் புத்தி வரவில்லையே. இந்தப் பயலும் காலேஜிலே போய் இண்டர் வரையில் படித்துவிட்டுத்தானே வந்திருக்கான்.""காலேஜிலே படித்துவிட்டா மனுஷன் கடவுளாக மாறிடு வான்னு நெனச்சிண்டிருக்கியா?""என்னமோப்பா, அப்படித்தான் எல்லாரும் நெனச்சுண்டிருக் காப்பல இருக்கு எனக்குக் காலேஜும் கீலேஜும் என்ன தெரியும்?"பெரியப்பா அவனைக் காலேஜில் படிக்க வைக்காத ஏக்கமும் வருத்தமும் படிக்கிறவர்கள் மீது ஏளனமாக வந்து பாய்வது பாபுவுக்குத் தெரிந்தது."அதெல்லாம் ஒண்ணுமில்லே சங்கு காலேஜிலே பிள்ளைகளைப் படிக்கவைக்கிறவர்கள், உயர்ந்த மனுஷனாக ஆக்கணும்கறத்துக்காக வைக்கலெ. நாலு காசு கூடச் சம்பாதிக்கிறதுக்கு அஸ்திவாரமா யிருக்கும்னு செய்யறா, அவ்வளவுதான். யாராவது ரெண்டு மூணுபேர் நெஜமா அதனாலெ பிரயோஜனமடைந்தாலே அதிகம். பட்டப்பா மாதிரி எதிலேயும் அலட்சிய புத்தி, அகம்பாவம், இடை வெட்டுப் பேச்சு இதுதான் ஜாஸ்தியாகப் படிகிறது. படிப்பும் புத்தியும் வரதோ என்னமோ, அதுக்கு இருக்கற அகம்பாவம் வந்துடறது. நான் என்னமோ சொல்றேனேன்னு நினைக்காதே. எனக்கு இப்ப இருக்கிற கர்வமும் எல்லாம் தெரிந்த நினைப்பும் கொஞ்சம் கடுமைன்னுதான் சொல்லனும் முன்னைவிட பட்டப்பாவுக்கு கேட்பானேன்? பிறக்கிறபோதே பணக்காரன்."பாபுவுக்கு பட்டப்பாவின் தகப்பனார் தண்டுவின் நினைவு வந்தது, திண்ணையில் உட்கார்ந்து வெள்ளிப் பெட்டியிலிருந்து வெற்றிலை எடுத்துச் சுண்ணாம்பு இடுவதும், புகையிலையை அதக்கிக் கொண்டு தலை கொழுத்த அகம்பாவத்தில் இரைவதும். எப்படி மறக்க முடியும்? வார்த்தைக்கு வார்த்தை வெசவு. அப்பன், ஆயி என்று பூர்வோத்தரங்களை அம்பலத்திற்கு இழுக்கிற வெசவுகள்."எல, என்ன, பேச்சுக்கீச்செல்லாம் கடுமையாயிருக்கு தலையைக் கிள்ளிப்பிடுவேன். ஜாக்ரதை, காமாட்டிக் கழுதே!""உங்கப்பன் இருக்கானாடா ஊர்லெ?"கார்யஸ்தரிடம், இசுமாயி ராவுத்தருக்காகப் பண்ணை காத்திண் டிருக்காது. நாளை சாயங்காலம் ஆறு மணி பைசாமாறா வட்டி யோட பணம் வரணும் ஒரு நிமிஷம் தாண்டித்தோ கோர்ட்டுலேதான் பார்க்கலாம் அவரைன்னு சொல்லிப்பிடு."签276婆 தி. ஜானகிராமன்_லும், கந்தலுமாக நாலைந்து பிராம் ப_ வேளையில் சோற்றுக்குக் காததுக- - - - --> - லில் - ன்னதாதா என்று பட்டம் வந்துவிட்டது. வாச - _வருக்கு அ தாத மனச் சோம்பேறிகள்கொண்டிருப்பார்கள்._ஸ்வாமி, நாலு நாளா ஆகாரமில்லே."பேஷ், எனக்கு ஒருநாள்கூட இருக்க முடியலியே! என்ன _ாதரம் நீர்?"_மெளத்கல்ய கோத்ரம்."_ான்ன வேதம்?"_சாம வேதம்."எங்கே ஒரு காண்டம் சொல்லும் பாப்பம்.""அத்யயனம் பண்ணலியே."சோறுதான் திங்கத் தெரியுமோ?""அது சரி, ஏதாவது ஸ்தோத்ரமாவது சொல்லத் தெரியுமா?""ஏதோ ரண்டு மூணு தெரியும்.""ம் பிராம்மணனாகப் பிறந்து ஏனய்யா இப்படிப் பாஷாண்டியா அலையறே? சரி உள்ளே போய் தின்னுட்டுப் போ."ஒய் நீர் என்ன கோத்ரம்?""சரவணபவ கோத்ரம்.""என்னது? கேள்விப்படாததாயிருக்கே?... என்ன சூத்ரம்?வந்து. கிருஷ்ண சூத்ரம்.""ஒகோ... இங்க வாரும் இப்படி " கன்னத்தில் ఇత్థ ஒரு அறை. "காலிப் பரதேசிப் பயலே, பாப்பார வேஷமா போடறே: கப்ட்றா பூணலை ம் கயட்டுறான்னா...""இல்லே ஸ்வாமி"மி சாமின்னு சொல்லேன். தீனிக்காஸ்வாமி என்னடா ஸ்வா - - * ம். கயட்டினயா:பாப்பாரப் பேச்சு கயட்டுறா பூணலை. ம. * எறி பந்தல் மேலே ஒடு நிக்கப்படாது இங்கேஇ ரண்டும் வெவ்வேறு நாளில் நடந்தது. ஒரு கோடை டிஃப் போனபோது பார்த்தது. தண்டு .." பெரிய மனிதர். அதிகாரம் பனம் எல்லாம தன. லயே, நடையிலேயே, குரலிலேயே, முழங்கின வண்ணமாகததான பிள்ளைகளுக்கும் பெண்ணுக்கும் சடசடவென்று வியாதி வந்தபிறகு婆277婆மோக முள்

மனிதன் சற்று அரண்டுபோய், அடங்கிவிட்டானாம் அடங்கிய காலத்தில் பார்க்கவில்லை. பார்க்கச் சந்தர்ப்பம் இல்லை. மனிதன் உலகத்தை விட்டே போய்விட்டான்.பட்டப்பா நில, ரொக்கங்களோடு அவருடைய அருமையான குணங்களுக்கும் வாரிசாகிவிட்டான். உள்ளே கிடந்த சாய்வு நாற்காலியை வாசலில் கொண்டு போட்டான். கால் சட்டத்தை முன்னால் நீட்டி அதன்மேல் காலைப் போட்டுக்கொண்டான். அந்தக் கால் யார் வந்தாலும் மடங்காது, தொங்கினால் இயந்திரம் போல் ஆடிக்கொண்டிருக்கும். நரம்புத்தளர்ச்சி இல்லை; பெரிய மனிதத்தனம். அப்பாவைப் போலவே பேச்சு, காலாட்டல், காய்தா எல்லாவற்றிலும் உருவாகியிருந்தான் இந்தப் பிள்ளை.சீட்டாட்டத்தில் அபார மோகம் அவனுக்கு அவன் சகோதரர் களுக்கும்தான். நிலங்களைப் பண்ணை வைத்தால், நேரில் போய் நின்று கவனிக்க வேண்டும். என்னதான் காரியஸ்தன் இருந்தாலும் எஜமான் தலைகாட்டாமலிருப்பது விவசாயத்துக்கு கெளரவமில்லை. இந்த வம்பே வேண்டாமே, வெளியூர் நிலங்கள் குத்தகையில் விளையும்போது, உள்ளூர் மட்டும் பழுதாகிவிடப் போகிறதா? அப்பா இறந்த இரண்டு மாதத்திற்கெல்லாம் பண்ணைச் சாகுபடியை விட்டு, உள்ளூர் நிலங்களையும் குத்தகைக்கு விட்டார்கள் சகோதரர்கள். இப்போது மற்ற காரியங்களை, அதாவது சீட்டாட்டத்தைக் கவனிக்க நிறைய பொழுது இருக்கிறது. திண்ணை இரண்டும் நிறைந்துவிட்டன. கிராமத்தில் கைகளுக்கா பஞ்சம்:ஒரு திண்ணையில் பட்டப்பா கோஷ்டி இன்னொரு திண்ணை யில் அவன் தம்பி செல்லப்பா கோஷ்டி காலையில் காப்பி சாப்பிட்டுவிட்டுப் பதினோரு மணி வரையிலும், சாப்பிட்டு ஐந்துமணி வரையிலும் என்று இரண்டு வேளைகளாக வேலை நேரத்தைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள் கூஜா நிறையத் தண்ணிர். வாய் நிறையப் புகையிலை. வேஷ்டி நழுவுகிறது தெரியாமல் கருமமே கண்ணான ஈடுபாட்டில் புகையிலைச் சாற்றைத் துப்பு வதற்குக் கூட எழுந்து போக மனமில்லாமல் விழுங்கக் கற்றுக்கொண்டு விட்டார்கள்.ஒரு காலத்தில் அதாவது முப்பது வருஷங்களுக்கு முன்பு வரையில், கிளிமங்கலத்தில் வேதங்களும் சாஸ்திரங்களும் இடைவிடா மல் ஒலித்துக்கொண்டிருந்தனவாம். பழைய தர்சனங்களில் பிரமான மாக விளங்கிய இரண்டு பண்டிதர்களுக்கு எங்கெங்கிருந்தோ சீடர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தலை சாய்ந்ததும் உள்ளுர்ச் சீடர் ஒருவர் குருவாக மாறிப் பத்து வருட காலம் அந்தச் சம்பிரதாயத்தைக் காப்பாற்றி வந்தாராம். அவர் போன பிறகு அறிவு மந்தம் ஒரு இருபது வருட காலம். இப்போது பட்டப்பா தலை எடுத்ததும் சிந்தனை மீண்டும் களைத்துவிட்டது. வேறு வடிவில் முளை கண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது. வேத ஒலியாக婆278 蔓 தி. ஜானகிராமன்இருந்தால் என்ன? ஜாக்கி, பத்தாம் பந்து ஏழம் பந்து என்றிருந்தால் _ன எல்லாம் சிந்தனைதான். பார்க்கப :_ சொந்த புத்தி வேண்டும். வேதமா படிப்பா' - "” சீட்டாடுகிற நேரம் போக திண்ணைச் ாய்வு நாற்காலியில் காலை நீட்டிப் படுத்திருப்பான் யாராவது _வந்தால், பொதுவாக மனிதர்களைப்பற்றித் தன் அபிப்பிராயங் ளைச் சொல்லிக்கொண்டிருப்பான். இப்போது சங்குவை பாத்ததும், சங்கு கும்பகோணம் .ே நகிறேன் எனது. நம அப்பாவைப் பற்றி வைத்திருந்த அழிப்பிராயத்தைத தன சொந்த முறையில் சொல்லிவிட்டான். கட்டுவிரியன் பிடுங்கும்போது நலலவன கெட்டவன் என்று யோசிக்கவா செய்யும்:"நீ எங்கே போனே அங்கே?' என்று கேட்டான் பாபு."பொழுது போகலே, போனேன். நானும் சீட்டைத் தொட்டு நாலு வருஷமாச்சு ஒரு கை உட்காரலாமனு GurGTಿ போய் ாண்டு நிமிஷம் ஆனதுமே ஏதோ பேச்சு வந்தது. கும்பகோணம் போகப் போறேன். பாபுவைப் பார்க்கன்னு சொன்னேன். துககம கேட்கவான்னான். எனக்கு முதல்லெ ***ான் பேத்தினான். கன்னத்திலே வாங் ண்டான். உள்ளே o, ಶಿ நானும் அறைந்ததோடு விடவில்லை. வெளியிலேவாடா விஷப்பாம்புன்னு கூப்பிட்டேன். உன் மாதிரி சாவி தேடுறவன்னு நெனச்சிண்டியா எல்லோரையும்னு கத்தினேன்."சாவி தேடறவனா?""ஆமாம், அவன் பண்ணினதைச் சொல்லி வெய்யனும்! இல்லாட்டா அவனை எப்படி மூக்கறுக்கிறது:"அவன் என்ன பண்ணினான்."என்ன தெரியாதுபோல கேட்கிறே?""எனக்கு ஒண்னும் தெரியாதே.""போன மாசம் நடந்துதாமே உனக்குத் தெரியாது?""என்னது?"- - - #சுக் கிடக்கு"என்னடா இது? மெட்ராஸிலே படைபடைகது. சேதி உறவு ஜனங்கள்ளாம் துணியை வழிச்சிண்டு திரிக்கிறது. வன் சாவி தேடின கதையைச் சொல்லிச் சொல்லி, ஒண்னும் தெரியாதுங்கிறியே?"தெரியவே தெரியாது எனக்கு சாவி தேடினானா?"- -- "ஆமாம். ஊரிலேதான் ராமையா சொன்னார்."என்ன ?"婆279 婆மோக முள்________________"போன மாசம் நடந்ததாம். பட்டப்பா திடீர்னு பத்துப் பதினைஞ்சு தரம் குளிக்க ஆரமிச்சானாம். ஒரு நாளைக்கு பட்டா மணியம் இருக்கானே அப்பு, அவன் பெண்டாட்டி ஈரப் புடவை சொட்டச் சொட்ட அழுதுண்டே விறுவிறுன்னு நடையும், ஒட்டமுமா குளத்திலிருந்து வந்தாளாம். பட்டப்பா எதிர்த்த துறையிலே குளிச்சிண்டிருந்தானாம். கொஞ்ச நாழி கழிச்சு இவ காலை ஏதோ கவ்வினாப் போல இருந்துதாம். அலறிப் புடைச்சிண்டு இவ கரையிலே ஏறியிருக்கா. திரும்பிப் பார்த்தா பட்டப்பா தலை ஜலத்துக்கு மேலே! சிரிச்சானாம். ஐயோ ஐயோன்னு வெதறிப்போய் குடத்தைக்கூட எடுக்காமல் ஓடி வந்திருக்கா அவ. பட்டாமணியம் அப்பு வாசல்லே நின்னுண்டு கத்தினானாம், அக்ரமாயிருக்கே. கேள்வி முறை இல்லையான்னு. பட்டப்பா பூணல்லேர்ந்து சாவி கயண்டு விழுந்துடுத்து தேடினேன்னானாம். அசட்டுப் பிசட்டுன்னு முழித்துவிட்டு நல்லவன் மாதிரி கோபித்துக்கொண்டானாம்.""பட்டப்பாவா இப்படிப் பண்ணினான்!" "பட்டப்பாவான்னா: பட்டப்பா என்ன மகரிஷியா?" "அப்படியிருக்கிறவனா, அப்பாவைப்பற்றிச் சொன்னான் " "வேறு தினுசா இருக்கிறவன் ஏன் சொல்கிறான்?" "யமுனாவையும் பார்வதியையும் இவன் பார்த்துக்கூட இருக்க மாட்டானே?""பாத்திருந்தால்தான் சொல்லணுமா? ஏதோ ரொம்ப வேண்டியவான்னு தெரியும் அவ்வளவுதான். பிணைச்சுட வேண்டியது." பாபுவுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. சரீர சம்பந்தத்தைத் தவிர, வேறு ஒன்றுமே மனிதர்களுக்குப் புரியாதா? வேறு தினுசாக எதையும் அர்த்தம் செய்துகொள்ளும் கற்பனையே இல்லையா?அதுவும் அப்பாவையா சொன்னான் ?இந்தச் சங்கு ஒரு அவசரக்காரன். அவனை எதற்காக அறைய வேண்டும்? பட்டப்பா பணக்காரன், அவனை அறைந்த சாகசம் கட்டாயம் பரவத்தான் பரவும். காரணம் என்ன என்று கேட்பார்கள். காரணத்தைச் சொன்னால், அப்பா பெயர் அடிபடும்.அடித்ததும் நல்லதுதான். இனிமேலாவது வாயைத் திறக்காம லிருப்பான் பட்டப்பா. நல்ல பாடம்தான் ..."நீ கவலைப்படாதேடா பாபு. அந்தப் பய தலை என் கால்லெ படனும் இனிமே சொல்லலே சொல்லலேன்னு என் கால்லெ விழப் பண்றேனா இல்லியா பாரு இல்லேன்னா என் பேர் சங்கு இல்லை.""என்ன பண்ணினா என்னடா: கீழே விழுந்த வார்த்தையை எடுக்க முடியுமா? அவன் சொல்றதைச் சொல்லிவிட்டான். அவன் இனிமே காலிலெ விழுந்தா என்ன, கையிலே விழுந்தா என்ன?”签280签 தி. ஜானகிராமன்"விட்டுக்கு நெருங்கின ஸ்நேகம் விஷமமா நெனச்சுட்டான் அந்தக் கழுதை சரி, சும்மா அலட்டிக்கிண்டே இருக்காதே. நான் அவனைப் பார்த்துக்கறேன். நீ மாத்திரம் அக்கா, அம்மா, அப்பா யாரிடமாவது இதையெல்லாம் சொல்லிவைக்காதே. ரொம்ப வருத்தப் படுவா. அதுவும் சித்தப்பா ஏதாவது வருத்தப்படுவர். அந்தப் பய வீணா அழிஞ்சு போயிடப் போறான்."பாபு எழுந்தான். அவனுக்குச் சங்கு சொல்வதைக் கேட்டு ஆச்சரியமாயிருந்தது. அப்பா வருத்தப்பட்டால் பட்டப்பா அழிந்து போய்விடுவான் என்று குழந்தை மாதிரி நினைப்பதும், அது நேராமல் தடுக்க அவனுக்கு இருந்த கருணையும். சங்கு வேடிக்கையான ஆள் தான்."சட்டையைப் போட்டுக்கோயேண்டா பாபு.""எங்கே?""ஹோட்டலுக்குப் போகலாம் வா..."சங்கு கண் காது தெரியாமல் செலவு செய்கிறவன். ஹோட்ட லுக்குப் போனால் தித்திப்பு, ப்ரூட் ஸாலட், நெய் தோசை டிக்ரி காபி - இந்தத் தரத்தில்தான் அவன் செலவுகள் போகும். இதற் கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்று பாபுவுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் முடிந்ததில்லை.இரவும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, யமுனாவையும் ராஜத்தையும் பார்த்துவிட்டு, ராஜத்தோடு ஒரு சினிமாவும் பார்த்து விட்டுத் திரும்பும்போது இரண்டு மணி ஆகிவிட்டது.சங்கு வேலை பார்க்கிற கம்பெனி மதராஸில் இரும்பு, எஃகு மோட்டார்கள், ரிக்ஷாக்கள் முதலியவற்றில் வியாபாரம் செய்துவந்தது. முதலாளியின் சொந்த குமாஸ்தாவாக இருந்தானாம் அவன. அவன் எழுத்து பார்க்கப் பார்க்க அழகாக இருக்கும். பேச்சும் பந்தல் பந்தலாகத்தான் போட்டுப் பேசுவான் அவன். தினந்தோறும் நாலு பட்டதாரிகளாவது அவனிடம் வேலைக்காக வந்து போய்க் கொண்டிருந்தார்களாம்."பாபு, நீ பி.ஏ. முடிச்சுட்டு வா. முதலாளிட்ட அழச்சிண்டு போறேன். உன்னை எங்கேயாவது பிராஞ்சு மானேஜராப் போட்டுடும் படியா நான் பாத்துக்கறேன் ... என்ன?""அதுக்கு இப்ப என்ன? பி.ஏ, பாஸ் பண்ணின்னா அதெல்லாம்!""இப்ப வந்தாலும் சரி, யுத்த டயம் பாரு ஏகப்பட்ட பிசினஸ். இப்ப வந்தாக்கூட நூறுருபாய் சம்பளம் தயாராயிருக்கு.""பாஸ் பண்ணின அப்பறமே வரேன்.""உன் இஷ்டம். நீ இப்ப வந்தாலும் பரவாயில்லைன்னுதான் சொன்னேன்."மோக முள் 婆281婆______________மறுநாள் விடியற்காலையில் பையை எடுத்துக்கொண்டு பாபநாசம் புறப்பட்டுவிட்டான் சங்கு, சித்தப்பாவைப் பார்க்க அப்படியே தஞ்சாவூர், திருச்சி எல்லாம் போய்விட்டு, நாலைந்து நாள் கழித்துத்தான் ஊர் திரும்புவானாம்.காரடியில் நின்றுகொண்டு, "அப்பாவிடம் ஏதாவது சொல்லி விடாதே சங்கு ராத்திரி பேசிண்டிருந்தோமே, அதைப் பற்றி" என்று எச்சரித்தான் பாபு."இப்ப நீ எனக்கு ஜாக்கிரதை பண்ண ஆரமிச்சுட்டியே.""நீ கோபக்காரன், ஏதாவது திடீர்னு பட்டப்பா ஞாபகம் வரும் வாயில் வந்ததைக் கொட்டிவிடுவே.""அதெல்லாம் பயப்படாதே... ஊரிலே ஏதாவது விசேஷம் உண்டான்னா, ஒரு விசேஷமுமில்லைன்னு வாயைத் தைச்சுப் போட்டுக்கறேன்.""அதான்.""கோபக்காரன்னா, முன்யோசனைகூடக் கிடையாதுன்னு நெனச்சியாடா எனக்கு ?" என்று சிரித்தான் சங்கு."சரி. நீ திரும்பி எப்ப வருவே!""நாலு நாள் ஆகும்.""வந்து ரண்டு நாள் இருந்துட்டுப் போகும்படியா வா.""பேஷா ... நான் வரட்டுமா? நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். சும்மா ஒர்ரி பண்ணிக்காதே.""ցրՈ."- பன்னிப் பன்னிச் சொல்லிவிட்டுப் போனான் சங்கு. சரி எனறு உறுதியும் அளித்தான் பாபு. ஆனால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?பட்டப்பாவைப் போய் உதைத்து நசுக்க வேண்டும் போலிருக் கிறது. அப்பாவைப் பற்றி இவன் யார் சொல்ல? பிதிரார்ஜிதமாக நம் குடும்பத்திடம் தண்டு வளர்த்த துவேஷத்தை இவனும் பெற்று விட்டானா?பரம்பரைச் சொத்தில் வாழ்ந்து வருகிற சுகவாசி. அவனால் வேறு என்னதான் செய்ய முடியும் சம்பாதிக்க வேண்டும் என்று கவலையில்லை. இருக்கிற தொழிலையும் மேற்பார்வை பார்க்கக்கூடச் சோம்பிக்கொண்டு குத்தகைக்கு விட்டுவிட்டு, ஜீவனாம்சம் வாங்குகிற வாழாவெட்டியைப் போல, உலுப்பை வாங்குகிற கைம்பெண்ணைப் போல வீதம் வாங்கி வாழ்கிறவன். திண்ணையை உட்கார்ந்து தேய்த்துத் தேய்த்துப் பொழுதைத் தேய்க்கிறவன்.签282签 தி. ஜானகிராமன்_அப்பா இவனைப்பற்றி நினைத்துக்கூட இருக்கமாட்டார். அவரைப்பற்றி இவனுக்கென்ன இவ்வளவு அக்கறை?அதுவும் யமுனாவையா இழிவுபடுத்த வேண்டும்?அவளைப் பார்த்திருக்கக்கூட மாட்டான் இவன். ஒருவேளை பாதிருக்கிறானோ என்னவோ! யமுனாவும் பார்வதியும் அக்கா _ாடு ஒரு தடவை கிளிமங்கலம் போய் வந்தார்களாம். ஞாபகம் _ருகிறது.ஜபத்திற்கு உட்கார்ந்து கண்ணை மூடியபோது அவனுக்கு _ாகச் சிரிப்பு வந்தது. யமுனாவின் முகத்தை அங்கு பார்த்தபோது, நெஞ்சு உலுங்கிற்று. உன்னையா சொன்னான்: மடையன். சங்குவை விவிட்டால், அந்த பட்டப்பா தலையை உன் காலில்கூட விழச் செய்துவிடலாம் ... சை, அந்த தரித்திரம் பிடித்த தலை போயும் போயும் உன் காலிலா பட வேண்டும்? நல்லதே நினைக்காத _லை. பணம் பணம் என்று கர்வம் கொழுத்து ஜடமாகிவிட்ட லை. நேரான கண்ணையும் புத்தியையும் இழந்து நிற்கிற தலை. வயசு முப்பதுதான். கர்வம் என்னமோ முப்பது உலகை ஆள்கிற மாதிரி கர்வமா இது? அறியாமைதானே அசட்டுத் தனமில்லையா இது சங்குவின் அறையிலா இது தெளியப் போகிறது? அறிவை மயக்குகிற திமிரைத் தின்று தின்று வளர்ந்து மதமதத்துப் போன மனம் அது. நுணுக்கமாக மனித உயர்வுகளை ஆராயவா தெரியப் போகிறது? எல்லாரும் தன்னைப் போல போக்கிரி, பொல்லாதவன் என்று தன்னையே பிறரிடம் காணும் ஆழ்ந்து கிடக்கிற சிறுமை; அகற்ற முடியாத சிறுமை.அன்று ரங்கண்ணாவிடம் போக முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தபோது, இவ்வளவு நேரம் நீ ஜபம் செய்யவில்லை' என்று சிரிப்பதுபோலக் கொல்லையில் காரிக்குருவி ஏளனமாக ஒரு ஒலிவடிவைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தது. அரைமணியாக அது ஒயவில்லை. அது சிரிக்கிற ஏளனத்தைக் கேட்டுவிட்டுத்தான் அவன் கண்ணைத் திறந்தான். ஆமாம், ஜபம் செய்யத்தான் இல்லை. முக்கால் மணியாக பட்டப்பாவின் நினைவு தான். அவன் முதலை மாதிரி நீருக்குள் சென்று சாவி தேடியது - அப்புவின் மனைவி அரண்டு ஓடி வந்தது - தண்டுவின் அட்டகாசம் இந்த ஜபம்தான் இவ்வளவு நாழியாக நடந்திருக்கிறது.மணி ஒன்பதரை கோபம் கோபமாக வந்தது. தன்மீதுதான். எழுந்தான் பாபு ரங்கண்ணாவிடம் போய்த் தம்புரா ஒலியையாவது கேட்டிருக்கலாம்.காலேஜுக்குப் போய், ராஜத்தையும், மற்ற நண்பர்களையும் பார்த்த பிறகுதான் - வெகு நாழி கழித்து - மனது ஒரு நிலைக்கு வந்தது.மோக முள் 签283签

_______________இரவு வாசித்து முடித்ததும், ரங்கண்ணா நேற்று சொல்லிக் கொடுத்த பாடத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தான். நேற்று முழுவதும் சங்குவோடு கழிந்துவிட்டது. சங்குவிடம் இதைப்பற்றிச் சொல்லவில்லை. மனதுக்குள் ரங்கண்ணா சொன்ன கீர்த்தனத்தை, அவர் சொல்லிக் கொடுத்த ராகத்தின் தனித்தனிப் பிடிகளாக ஆராய்ந்தான் பாபு ராகத்தை முந்நூறு வருஷ சரித்திரத்துடன் அலசிவிடுகிற வழக்கம் அவருக்கு தியாகய்யரும், தீட்சிதரும் அதை எப்படிக் கையாண்டிருக்கிறார்கள், அந்த ராகத்திற்குப் பழைய பெயர் என்ன, புதுப்பெயர் என்ன, அது எப்படி உருமாறிற்று, அழகுக்காக எப்படி இரவல் ஸ்வரங்களை, யார், எந்தக் காலத்தில் சேர்த்தார்கள் - எல்லாவற்றையும் சொல்லிவிடுகிற வழக்கம் அவருக்கு.ரங்கண்ணாவின் செவி நுண்ணிய செவி எங்கெங்கோ வேகமாக கணத்தில் பத்தில் ஒரு பங்கு நேரம் தொட்டு விடும் ஒரு அசைவை ஏதோ ஒலியளக்கும் கருவிபோல இடம் கண்டுபிடித்து விடுகிற காது அது. அந்த மாதிரி இந்தக் காது பதமாக, கூர்மைப்பட, எத்தனை வருஷங்கள் ஆகுமோ? ஒரு ஆயுள் சாதனை அது!கீர்த்தனை முழுவதையும் அரைமணி நேரம் முணுமுணுத்தான் பாபு, சஞ்சாரங்களைத் தனித்தனியாகப் பிடித்துப் பார்த்தான். இன்று என்னமோ குரல் சரியாகப் பேசவில்லை. மனமும் ஒருமைப் படவில்லை. சுவர்க்கோழி கிணிக் கிணிக் என்று ஒரு மணி நேரமாகக் காது முனையில் உட்கார்ந்திருப்பது போலப் புலம்பிக்கொண்டிருக்கிறது. "கிணிக் கினிக் கினிக், கிணிக் கிணிக் கிணிக். அப்பா! கீச்சென்று காதைத் துளைக்கிறது, எழுத்தாணியை சுரசுரக்கிற உலோகத்தில் அழுத்தி அழுத்தித் தேய்க்கிறாற்போல.எப்போதுமே உற்றுக் காதைக் கொடுத்துக்கேட்டால் ஒழிய கேட்காத அந்த ஒலி இன்று செவியைத் துளைக்கிறது. அருகில் எங்கேயோ கத்துகிறது, எங்கே என்று தெரியவில்லை. எழுந்து அதன் பிறப்பைத் தேடித் தேடிப் பார்த்தாய்விட்டது. பூச்சி எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. புத்தகத்தால் இரண்டு மூன்று தடவை தட்டியதில் மரியாதை காட்டுவதுபோல ஓய்ந்துவிட்டு மீண்டும் கிணிக் கிணிக் என்று துளைக்கத் தொடங்கிவிட்டது.அப்பா எவ்வளவு கீச்சுக்குரல்! தூக்கம்கூட வராது போலிருக் கிறது. காதை மாற்றி உற்றுக் கேட்டபோது, வழக்கம்போலக் கேட்கும் அடங்கிய ஒலி ஒன்று வீ என்று நீளமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. இந்தப் பூச்சி புதிதாக வந்திருக்கிறது போலிருக்கிறது. பாட்டைக்கூடப் பாட முடியாமல் அடித்துவிட்டது.படுத்துக்கொண்டே கேட்கலாமே. நேற்று இரவு இரண்டு மணி வரையில் சினிமா பார்த்தது போதாதென்று சங்கு படுத்துக் கொண்டே ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தான்.துங்குகிறபோது மூன்று மணிக்கு மேலாகிவிட்டது.婆284婆தி. ஜானகிராமன்பாபு பாயை உதறிக் கட்டிலில் பரப்பி, மேஜை மேலிருந்த _கைச் சிறிது பண்ணிவிட்டுக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு _ல் படுத்தபோது, அவனுக்குச் சட்டென்று தூக்கி வாரிப் _து.மொட்டை மாடிக்குப் போகும் நிலையண்டை ஒரு உருவம் _து.எழுந்து உட்கார்ந்து, "யாரு?" என்றான்."ஸ்" என்று வாயில் கை வைத்தாள் அவள்.அடுத்த வீட்டுத் தலைமை குமாஸ்தாவின் மனைவி. எச்சரித்த _தட்டிலேயே நின்றது. கண்ணில் ஒரு புன்சிரிப்பு தெறித்து நின்றது."நீயா?"ஆமாம் என்ற பாவனையில் தலையாட்டல்.பாபுவுக்கு உடல் நடுங்கிற்று. அவளையும் கடந்து மொட்டை மாடிப்பக்கம் விழிகள் சென்றன."அங்கே யாருமில்லை" என்ற அர்த்தத்தில் அவள் உதடு பிதுங்கிற்று முகம் பளபளவென்றிருந்தது. காதில் பூரித்த வைரத்தோடு கன்னத்தில் வீசிக் கொட்டிற்று காதின் முன் மயிர் சற்று அதிகமாகவே ழே இறங்கியிருந்தது முகத்தின் களையை இன்னும் உயர்த்திவிட்டது. அந்த முகம் அழகி என்று சொல்வதே இந்த இறக்கத்தால் தானோ என்னவோ! முகத்தில் ரோஜா நிறப்பவுடர் குளுகுளுவென்று கமழ்ந்தது. தலையில் வைத்திருந்த பூவின் ஒரம் வெள்ளையாக எடுப்பாகத் தெரிந்தது. பளிர் என்று மஞ்சள் குங்குமம். மூக்கில் ஒரு வைரப்பொட்டு நீலமாக இறைத்தது.ஒரு சிவப்புப் பட்டுப்புடவை. முடமுடக்கிற கும்பகோணம் தறிப்புடவையல்ல. ஏதோ காரைக்கால் பட்டோ, வங்காளப்பட்டோ தெரியவில்லை. துவண்டு விழுகிற பட்டு. ஒரு வெள்ளைப்பட்டு ரவிக்கை கையில் ஒரே ஒரு வளை.நிலவு மாதிரி அடித்த அரிக்கேன் விளக்கின் ஒளியில் பளிர் என்று அவள் முகம் சுடர்விட்டது. பல்லின் லேசான காவி சிரித்தது. வெற்றிலையையும் ஏலக்காயையும், கடைவாய் அரைத்துக்கொண் டிருந்தது."விளக்கைச் சின்னது பண்ணு" என்று ஜாடை காட்டினாள் அவள் இயந்திரம்போலக் கீழ்ப்படிந்தான் அவன்."என்ன விசேஷம்" என்று கேட்கிற ஒலி எழவில்லை. இரைந்து பேசக்கூடிய சந்தர்ப்பமா?婆285婆மோக முள்

________________"என்ன?" என்று தொண்டைக்குள்ளிருந்து பதில் வந்தது."என்ன சமாச்சாரம்? எங்கே வந்தே?""ஏன், நான் உள்ளே வரப்படாதா?”"எதுக்கு வந்தே?"“எதுக்குன்னா!"“எதுக்கு ?""ஏன் இப்படிப் பயந்து சாகறேள் மூஞ்சியெல்லாம் வேர்த்து வடியறதே" என்று முந்தானையால் அவன் மூக்கின் கீழ் முத்திட்டவியர்வையைத் துடைத்த அவளுடைய கையைச் சட்டென்று அகற்றினான் அவன்.அவன் உடல் அந்த கை பட்டு இன்னும் நடுங்கிற்று."ஏன், கோபமா என்மேலே?"பாபுவின் பெருமூச்சைக் கேட்டு "ஏன் பயந்து சாகறேள்: கீழே உங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிருக்கிறார்! இங்கேயும் ஒருத்தருமில்லை, அது காம்பிலே போயிருக்கு" என்று முகவாயாலேயேதன் மொட்டை மாடியைக் காண்பித்தாள் அவள்.பாபு உதறிக்கொண்டிருந்தான்.பாபுவுக்கு உடல் வெடவெடவென்று நடுங்கிற்று. அனல் விசிற்று. ஜூரம வருகிறதுபோல வந்த காங்கையில் நாக்கு ஒட்டிக் கொண்டது. உள்ளுதட்டையும், ஈற்றையும் தடவி நனைத்துக் கொண்டது.அவளுடைய புன்சிரிப்பில் விஷமமா, அனுதாபமா தெரிய வில்லை. இரண்டும்போல்தான் இருக்கிறது."எப்படி வந்தே?" என்று கேட்டான். "மாடிக்கட்டையைத் தாண்டி வந்தேன்."“எதுக்கு ?""என்ன வேணும் உனக்கு ?""வேணும்னாத்தான் வரணுமா? இல்லாட்டா வரப்படாதா p""உங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா?""அப்படின்னா'"பதில் கேட்டேனே."婆286婆 தி. ஜானகிராமன்எதுக்கு"எதுக்கா. அவ்வளவு ஞாபகம் வச்சிண்டிருக்கேளா? கடுதாசி _ணளே. சுண்டைக்காயிலெ சுற்றி எரிஞ்சேளே."_ஆமாம்."வழிச்சுப் போட்டுன்னுகூட நீங்க ஜாடைக் காமிககலியா?"கிழிச்சுப் போட்டியா?" 'இல்லை."நான் செய்தது தகாத காரியம். அதுக்குத்தான் கிழிச்சுப் _ான்னேன். யோசிக்காமல் எறிஞ்சதுக்கப்புறம் எனக்குப் _ன்னு வந்தது. கிழிச்சுப் போடுன்னு அதான் கெஞ்சினேன்."நான் கிழிச்சுப் போடுவேனா அதை என்னை அவ்வளவு ாகுகின்னு நினைச்சுவிட்டேளா?""நான் செய்தது தப்புத்தானே?"இல்லை, அந்தக் கடுதாசியைப் பெட்டிக்கு அடியிலே _ாதையா வச்சிருக்கேன். அதை மத்யானம் எல்லாம் எடுத்து ாடுத்துப் பார்க்கிறேன். என்னை என்ன எதுன்னு கேக்கறதுக்கு ா இருக்கா? எனக்கு இருக்கற மனுஷா இப்ப அதுதான். படுத்து எடுத்துப் பார்க்கிறேன். உங்களைத்தான் கண்ணிலேயே ான முடியலியே."கடைசி வார்த்தைகள் விக்கலும், விசும்பலுமாகக் கலந்து வந்தன. பாபு திகைத்து நின்றான். அழுதுகொண்டிருந்தவள் _னைத் துடைத்துவிட்டு, தெருவைப் பார்க்கும் ஜன்னல் _வுகளைச் சாத்திவிட்டு வந்தாள்."நான் பதில் போடலியேன்னு கோபமா?" என்று தோளைத் தொட்டாள். கையை எடுத்து அப்பால் விட்டான் அவன்."நீ இப்ப எதுக்கு வந்திருக்கே?"போடலாம்னுதான் நெனச்சேன். பயமாயிருந்தது. பத்துப் பதினைஞ்சுநாள் கழிக்க எழுதிக்கூட வச்சேன் அப்புறம் நீங்க திரும்பிக்கூடப் பார்க்கலெ.""நீ எதுக்கு வந்திருக்கே"பதில் சொல்லத்தான் வந்தேன். போதுமா? எதுக்கு வந்தே,எதுக்கு வந்தேன்னு கரிக்கணுமா? . ஏன் பயமாயிருக்கா? உங்க விட்டுக்காரர்தான் ஊரில் இல்லையே. அந்த மாமி, பாட்டியெல்லாம் கடத்திலேதானே படுத்திண்டிருக்கா""நீ போய்விடு."மோக முள் 婆287 婆

________________"ஏன் என்னைக் கண்டா பிடிக்கலையா? நான் அழகா இல்லியா"கிணிக் கிணிக் கிணிக் கிணிக் என்று அந்த சுவர்க்கோழி இன்னும் கத்திக்கொண்டிருந்தது. அக்கரையில் ஒரு கோட்டான் அலறிற்று. இக்கரையில் சாகுருவி ஹ் என்று பாறையாகக் கட்டிப் போன தொண்டையில் அழுதுகொண்டிருந்தது.நடுக்கம்கூட நின்றுவிட்டது. வயிற்றில் மட்டும் - திடீரென்று வந்த அதிர்ச்சியின் கலக்கம் மட்டும் கனத்துக் கிடந்தது. யாராவது இதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்ற அச்சம். அதோடு இன்னதென்று தெரியாத ஒரு அச்சம் வேறு.ஜாதிப் பூவின் மணம் விட்டுவிட்டுக் கமழ்ந்தது. தெய்வீகமான வாசனை இது! அம்மா அரும்பு அரும்பாக இரவில் தொடுத்து படங்களுக்கெல்லாம் போட்டிருப்பாள். காலையில் அலமாரியைத் திறக்கும்போது குப்பென்று அந்த மணம் சற்று உஷ்ணமாக வீசும் - உள்ளே பட்டாபிஷேகத்தில் அமர்ந்த ராமனும் சீதையும் காமாட்சி யும் விடும் மூச்சைப் போல - தெய்வீக மணம்.இந்தப் பூவை மனிதர்கள் எப்படி மனதோடு சூட்டிக் கொள் கிறார்கள்! தெய்வத்துக்குரிய இந்த மணத்தை எப்படித் தலையில் தரிக்கத் துணிகிறார்கள்!இந்த மணம் கூடத்தில் கமழ, அன்று அப்பா சொன்னதெல் லாம் - விஜயதசமியன்று அப்பா சொன்னதெல்லாம்! அந்தப் புனிதமான சொற்களின் மணம் அல்லவா இது!நெஞ்சு படபடவென்று பரந்தது. "கெளரவத்துக்கே இழுக்கு இது..." அப்பா உடனே இங்கு வந்து குதித்து ஜன்னல்கம்பி வழியாலேயே இழுத்துக்கொண்டு போய்விட்டால் இவள் என்ன செய்ய முடியும்: ராஜூவுக்கு மனிதனுக்கெட்டாத சக்திகள் எல்லாம் இருந்தன. வாம். அப்படியானால் அவருடைய அழியாத ஆத்மா ஓடிவந்து என்னைத் தடவிக் கொடுத்து, அணுக முடியாத ஸ்பர்சிக்க முடியாத, நெருப்புத்துண்டமாக என்னைச் செய்துவிடும் ராஜூவுக்கு அந்த மண்டை வெடிக்கிற உச்சி வேளையில், காலில் பொடி ஒட்டுகிற அந்த வேளையில் ஒரு குளத்தையும் காண்பித்து, அமிருதமான அன்னத்தையும் கொடுத்தாளே ஒரு அம்மாள் குழந்தையுடன் வந்து! அவள் வந்தால் ?ஒரு வேளை அவள்தானோ என்னமோ இவள்:"நான் சொல்றதை நம்பலியா நீங்க?" என்று சொல்லிக்கொண்டே அவள் இடுப்பிலிருந்த ஏதோ ஒன்றை எடுத்தாள். அந்த இருண்ட வெளிச்சத்தில் ஊன்றிப் பார்த்தபோது நன்கு தெரிந்தது. தோடு,婆288婆 தி. ஜானகிராமன்_தி மாதிரி நகை வைக்கிற சிறு பெட்டி வெல்வெட்டால் _றயிட்டு வழவழக்கிற பெட்டிபாபு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். என்னை நம்பலியா?"என்ன ?"அந்தச் சிறு புத்தானை அமுக்கித் திறந்தாள் உள்ளே ஒரு _று காகிதத்துண்டு."நீங்க எழுதிப் போட்டதுதான். நான் யாரு என்னன்னெல்லாம் _டேளே. ஏன் திடீர்னு பார்க்கக்கூட மாட்டேன்னுட்டேள் _டுக்கக்கூட இஷ்டமில்லியா? அப்பா, அம்மான்னு யார் கையிலா _வளர்ந்திருந்தா "_அப்பா, அம்மா இல்லியா உனக்கு ?"'இல்லை. இடி விழுந்து செத்துப் போயிட்டா. ஒன்றுவிட்ட அதைதான் வளர்த்தா... அதெல்லாம் இப்ப எனக்கு நினைக்கக்கூட வேண்டாம் போலிருக்கு அப்பா அம்மா வளர்த்திருந்தா நான இங்கே வந்து உங்களைப் பார்த்திருக்கப்போறேனா?. உங்களை நெனச்சு நெனச்சு இப்படி மத்யானமும் ராத்ரியும் தூக்கும வராமல வங்கிண்டிருப்பேனா?. ஒண்ணே ஒண்ணு சொல்றேன், கேக்கறேளா""நேத்திக்கு நீங்க பாடினேள் பாருங்கோ மனசு விஷய'வா அதுதானே?""ஆமாம்.""இனிமேல் என் காதுபட அதைப் பாடாமல் இருக்கேளா?""ஏன் ?""நீங்க பாடினா நன்னாத்தான் இருக்கு ... பாடவேண்டாம்.""ஏன் p""என் கல்யாணத்தில் யாரோ ஒரு பெண் வந்து பாடினா அதை" என்று மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள் அவள்."அதை இனிமே பாட மாட்டேளே ?” "இல்லை." "அதுக்குத்தான் நான் வந்தேன். நான் போயிட்டு வரட்டுமா""நான் பாடவில்லை."மோக முள் 婆289 婆______________"எனக்கு அதைக் கேட்டால் பைத்தியம் பிடிச்சுப் போயிடும் போலிருக்கு.""சரி, பாடலை.""நான் வரட்டுமா?""அதுக்குத்தான் வந்தியா?""ஆமாம். நான் வரட்டுமா?"“チsf.""சரியா?""போயிட்டு வா.""உங்களைப் பார்த்தா நல்லவர் மாதிரி இருக்கு இங்கே மாத்திரம் கல்லா இருக்கு" என்று மார்பைத் தடவினாள் அவள். "இந்த மார்பு மாதிரிதானே இருக்கும் உள்ளே இருக்கிறதும் ... ஏன் கையை எடுத்து எடுத்து எறியறேள் கன்றுக்குட்டியைத் தள்ளிவிடற மாதிரி... என் கண்ணாவுக்கு என்னைக் கண்டா பிடிக்கலியா? உனக்குக்கூடவா நான் பிடிக்காமப் போயிட்டேன்?"இப்போது இரண்டு கைகளாலும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து, மூச்சுக்காற்று அவன் மூக்கில் படப் பேசினாள் அவள் சற்று முன்பு அழுதவளா இவள்!"என் கண்ணாவுக்கு என்னைக் கண்டா பிடிக்கலியா? ... எங்கே, என்னமோ திமிர்றேளே, மிரள்ற கன்னுக்குட்டியாட்டமா? திமிரு பார்ப்பம் . . .""விடு என்னை.""மாட்டேன்.""இரைஞ்சு கத்துவேன்.""கத்தேன் பார்ப்பம்.""இப்ப நீ என்ன பண்ணனும்ங்கறே.""நீ ஒண்ணும் பண்ண வாண்டாம்."திமிர முடியாமல் நின்றான் அவன். அவள் புன்சிரிப்பு மலர, அவனைச் சிறு மூச்சு படும் நெருக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்தாள்."திமிரு பார்ப்பம்.""ஏன் மூஞ்சி விளக்கெண்ணெய் குடிச்சாப்பல இருக்கு ஜாதிப்பூ கமகமன்னு மணக்கலெ?. ஒரு பூவைப் பிச்சுக்கோயேன்."签290签 தி. ஜானகிராமன்பாபு இடிந்தாற்போல கட்டை மாதிரி நின்று கொண்டிருந்தான். _ன் பூ வேண்டாமா பிச்சுக்கோயேன்." 'பூவைத்தான் பிச்சுப் பிச்சு நசுக்கிண்டிருக்கியே." ஒண்ணும் நசுக்கலை சித்தநாழி படுத்திண்டிருந்தேன் அங்கே_டுத்து வச்சுட்டுத்தான் படுத்திண்டிருந்தேன். வரும்போதுதான் _ண்டு வந்தேன். ஒண்ணும் நசுங்கலை."புரிந்துதான் இப்படிப் பேசுகிறாளா இவள்:_றம்.""என்ன ஹம்?""நான் ஒரு பூவை எடுத்து உன் மூக்கிலே அடைப்பேன் அதுக்கு ஒரு கையைன்னா எடுக்கணும்.""இல்லை, எடுத்துக் கொடு.""உம் நான் மாட்டேன். கையைப் பிச்சிண்டு ஒடறதுக்கா. P இந்த நீ வேணும்னா எடுத்துக்கோ என்று தலையைத் திருப்பினாள். முக்கில் ஜாதிப் புஷ்பம் ஜிலுஜிலுவென்னு தீயைப் போல உராய்ந்தது."வேண்டாம்.""ஏன், பிடிக்காதா?”"வேண்டாம்.""ஏன் சொல்லேன்.""அது ஸ்வாமிக்கு வைக்கிறது.""க்கும். நீதான் எனக்கு ஸ்வாமி.""என்னை விடேன்.""நீ என்னைப் பாரு முதல்லே, ஏன் இப்படி வருத்தமாயிருக்கே: உன்னை யாராவது ஏதாவது சொன்னாளா? ... மருந்து இது சமு. மாதிரியே இருக்கியே. இதைப் பாரேன். நீ என்னைப் பார்க்கிறாப்பல இருக்கு. ஆனா வேறு எங்கோ பார்க்கிற மாதிரி இருக்கே நீ என்ன பார்க்கிறேன்னு தெரியும் சொல்லட்டுமா? ... ஒரே ஒரு ஊர்லே ஒரு ராஜாவாம். ஆனா அவன் ரொம்ப நல்லவனாம். எல்லோருக்கும் ஒடிஓடி ஒத்தாசை பண்ணுவானாம். பககதது தேசம் ஒரு காட்டு தேசமாம். அங்க வந்து ஒரு ராணி ஆண்டுண்டிருந் தாளாம். அவளுக்கு ஒரு நாளைக்கு பாம்பு கடிச்சுதாம். மந்திரம் மாயம் எல்லாம் பண்ணிப் பார்த்தாளாம். கண்ணுக்குக் கலிக்கன் போட்டாளாம். இறங்கவே இல்லியாம். இந்த ராஜா இருக்கானே,மோக முள் 签291婆_______________அவன் இப்படி வேட்டைக்கு வந்திருந்தானாம். அப்ப காட்டிலே ராணி வீட்டிலே அமர்க்களமாயிருந்ததைப் பார்த்துவிட்டு, என்னன்னு போனானாம். சேதியைச் சொன்னாளாம் எல்லோரும். உடனே வெளியே ஒடிப்போய் ஒரு பச்சிலையை எடுத்து வந்து நசுக்கி வாயிலே சாற்றைப் பிழிஞ்சானாம். உடனே கொஞ்ச நாழிக்கெல்லாம் அவ சிரிச்சிண்டு எழுந்து வெட்கப்பட்டுண்டு நின்னாளாம். அப்புறம் அவன் மேலே ஆசை வந்துடுத்து அவளுக்கு அவனோ போயிட்டான். வேட்டைக்கு எப்ப வருவான் வருவான்னு பார்க்கலாம்னு காட்டிலே தனியா நின்னுண்டு, குளம்புச் சப்தம் கேக்கறதான்னு பார்த்துண்டே நிப்பாளாம். ஒரு தடவை வந்தானாம். திரும்பிப் பார்க்காமலே போயிட்டானாம். அப்பறம் உடம்பு வந்துடுத்தாம், ஸ்வப்னத்திலே அந்த ராஜா பேரைச் சொல்லிப் பேத்தினாளாம். உடனே எல்லாரு மாப் போய் அந்த ராஜாகிட்ட இந்த மாதிரி சமாச்சாரம் ராணி உங்களை நெனச்சு உருகி உருகித் தேஞ்சு போறான்னாளாம். இந்தக் காட்டுப் பொண்ணையா நான் பண்ணிப்பேன். போங்கோ வந்த வழியைப் பார்த்துண்டுன்னு இறைஞ்சானாம் அவன். காட்டு ராணி நாலஞ்சு தடவை ஆளனுப்பிச்சாளாம். ராஜா மசியலெ. நல்லவனாயிருந்தாலும் காட்டுராணிதானே என்று அலட்சியம். உடனே அவ ஒரு படையோடு வந்து தாக்கினாளாம். முற்றுகை போட்டாளாம். காட்டு சைன்யம்னா? நல்ல பலம் உள்ளவன் சிப்பாய் எல்லாரும். கடைசியிலே கோட்டைக் கதவை இடிச்சு இப்படித் திறந்தாளாம்.""இவ்வளவுதான் தெரியுமா?" என்று கோட்டைக் கதவுகளாகக் கற்பனை செய்யப்பட்டிருந்த தன் உதடுகளை அந்த உதடுகளினின்று இழுத்துக்கொண்டான் பாபு."உன் கதையும் நீயும்." "ஏன், கதை நன்னாயில்லியா? ... நீ முடியறதுக்குள்ளேயும் அவசரப்பட்டா! அப்பறம் அந்தக் கதவைச் சாத்திச் சாத்திப் பாத்தா ராஜாவோட சிப்பாயெல்லாரும். ஆனால் ராணி அதைத் திறந்துவிட்டாள் இப்படி" இது என்ன சுவை! என்ன போதை இது!மெல்லிய மூச்சும், பூவின் மணமும், காந்தும் நெடியுமாக அந்த இளமை வந்து பாபுவைத் தாக்கிற்று. காரண காரியங்களை அலசிக்கொண்டிருந்த அறிவைக் கழுத்தைப் பிடித்துக் கீழே அமுக்கிற்று. ஜாதிப் பூ மனிதத் தலையில்தான் இப்போது கமழ்ந்தது. கன்னத்தின் பூனை மயிர் மின்னிற்று. தளதளவென்ற அதன் மென்மையை மலரச் செய்தது. எவ்வளவு அழகான நெற்றி! காதின் முன் இந்த மயிர் எவ்வளவு இறக்கம்! அவன் கழுத்தில் அவள் கன்னமும், தலையும் வலமும் இடமுமாக மாறி மாறித் தேய்ந்து கொண்டிருந்தன.婆292 婆தி. ஜானகிராமன்"இப்பகூட என்னைப் பிடிக்கலியா?"போயிடேன்."_ான் மேலே கோபமா?"----lo.அவள் கழுத்து பளபளவென்று பொலிந்தது. கழுத்திலிருந்து _ங்கிய தோள்பட்டையில் பழுக்கத் தொடங்கிய பழமாக ೧.ಕಾ೦ பும் அழுத்தமும் கலந்த அந்தக் கலவையை இளமையின் தேர்ந்த _தான் கலந்திருக்க வேண்டும் வளைவுகளும் அழுத்தமும் மலரின் _மையும் புதிய கட்டின் உறுதியும் சேர்ந்து அவனைத் தாக்கின."நீங்க ஏன் திரும்பியே பார்க்கலெ என்னை?”"Lo.""இப்பகூடப் பார்க்கமாட்டேளா?"“Lh.""அப்படின்னா பார்க்கமாட்டேங்கறேளே.""க்கும்.""நீங்க யார் கிட்ட பாட்டு கத்துக்கறேள்.""ஆமாம்.""சொல்லுங்களேன்.""பேசாமல் இரேன்.""உங்க அப்பா, அம்மா எல்லாரும் பாபநாசத்திலே இருக்காளாமே.""க்கும்.""எனக்கும் பாடத் தெரியும்.""ம்ஹ்ம்.""நீங்க யார்கிட்ட சொல்லிக்கிறேள்."“Lh.""சொல்லப்படாதா?”"ம்ஹ்ம்.அமுத கலசம் போல உணர்வின் அலைமீது அந்த உடல் மிதந்தது."க்கும், திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்னுட்டு அப்ப என்னத்துக்காகப் போயிடு போயிடுன்னேள்?"婆293婆மோக முள்_________________ * *ககும."பயமாயிருக்கிறதா?”"ஆமாம்."நீளச் சுரைக்காய்களைப் போல அந்தச் சிறு ஒளியில் கால்கள் பளபளத்தன.'எதுக்கு வந்தே, எதுக்கு வந்தேன்னு ஏன் என் மேலே கோபமாய் பாஞ்சே நீ?""எப்ப ?""எப்பவா!""பேசாம இரேன்.""நீங்க ஏன் பேசவே மாட்டேங்கறேள் என்னோட?"உறை கழற்றிய வீணை மாதிரி கிடந்த அந்த உடல், அலை அலையாக எழுந்தது.ஜாதிப் பூ மனிதத் தலையில்தான் கமழ்ந்தது.வெளியே காக்காய்கள் இரண்டு மூன்று, நிலவை வைகறையாகக் கண்டு கரைந்தன. கோட்டான் மட்டும் சுயபுத்தியுடன் கூவிற்று. சாகுருவி நடுநிசிதான் என்று சற்றைக்கொருதரம் கரைந்தது. சினிமாப் பார்த்துவிட்டுப் போகிற ஒரு செருப்பு ஜோடி, வாசலில் டப்பிட்டு டப்பிட்டு ஒலி பெருகித் தேய்ந்து மறைந்தது. 'கிணிக் கிணிக் கிணிக் என்று சுவர்க்கோழி எதற்கோ தாளம் போட்டுக்கொண்டிருந்தது.'பார்த்தா சாது மாதிரி இருந்தது.'பாபு எழுந்து ஜன்னலைத் திறந்துவிட்டான். ஜிலு ஜிலுவென்று குளிர்ந்த காற்று முகத்திலும், மார்பிலும் வீசிற்று."அப்பாடா, நல்ல காற்று... எங்கே அந்த பெட்டி... இதோ இருக்கு இதோ இருக்கு நான் வரட்டுமா?"பாபு காவேரியைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான்."நான் வரட்டுமா?"பாபு தலையசைத்தான்."என் மேலே கோபமா?"இயந்திரம்போல, திரும்பாமலேயே "இல்லை" என்ற பாவனையில் தலையை அசைத்தான் அவன்."ஏன், திரும்பிப் பார்த்துப் போயிட்டுவான்னு சொல்லப்படாதா?”பாபு திரும்பவில்லை.婆294婆 தி. ஜானகிராமன்_கொஞ்சம் எழுந்திரேன் - எழுந்திரேன்."ஜமக்காளத்தை எடுத்து கட்டிலில் போட்டு தலையணையை _துவிட்டு, "போய்ட்டு வரட்டுமா?" என்றாள் அவள்"I,..""இங்கே பாரேன்." பாபு திரும்பினான்."வரட்டுமா?"--- *LI].போக வேண்டாமா ?”"இல்லே போயிட்டு வா." "கோபமில்லியே.""இல்லே." "வரட்டுமாடா, கண்ணா!" என்று மீண்டும் அவன் கையை எடுத்து விரலை அழுத்தினாள். "வரட்டுமா?"i. oLT.நிலையில் தயங்கி, பக்கங்களில் பார்த்துவிட்டு மாடிக் கட்டையண்டை போயிற்று அந்த உருவம்.பாபு திரும்பிக்கொண்டான்.காவேரி புனிதமாக ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு வேகம் எதற்கோ சொல்லைக் காப்பாற்றாதவர்களின் கண் அவ்வளவு சுடுமா? அந்தச் சூடு தாங்காமலா தப்பித்து ஒடுகிறது இந்தப் பிரவாகம்: அ.கெளரவமான மனிதர்களைக் கண்டு தூர விலகும் விரைவா?அதோ அந்தப் படிக்கட்டுதான். அங்குதான் அப்பா உட்கார்ந் திருக்கிறார். ராஜூவின் கதையைச் சொல்கிறார். நடுப்பொட்டலில் அமுதிட்ட அம்மாள்கூட அதோ வருகிறாள்.பாபு வேறு திசையில் பார்த்தான். மனம் கூசிற்று.இந்த மாதிரி வாழைத்தோட்டமாக தூங்குமூஞ்சி மரமாகப் பிறந்திருந்தால் எப்போதும் நிம்மதியுடன் இருந்திருக்கலாம் . ஆ. அந்தத் துறையிலும் அப்பாதான் உட்கார்ந்திருக்கிறார்!"குற்றத்தை நீயாக வந்து ஒப்புக்கொண்டால் ஆகிவிட்டதா? குற்றம் செய்தது இல்லை என்று ஆகிவிடுமா? முதல் குற்றவாளி நான்தான். உன்னிடம் நம்பிக்கை வைத்த குற்றம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் பூஜை உள்ளில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொருளை தெருத்திண்ணையில் வைத்தால் மாடும், ஆடும் இழுத்துப் புழுதியில்மோக முள் 签295婆________________புரட்டுகிறது. நாய் முகர்ந்து பார்க்கிறது. நான் பேசாமலிருந்திருந் தால்" என்று சொல்லிக்கொண்டே அந்த உருவம் நீரில் குப்புற விழுந்தது.சரேலென்று ஜன்னல் கதவைச் சாத்தினான். வெடவெடவென்று உடல் பதறிற்று.அப்படியே படுத்தான். தலையணையை யார் மேற்கே வைத்தார் கள்: கிழக்கேயல்லவா இருப்பது வழக்கம்! ... அவளா.. குடியைக் கெடுத்தவள்.இல்லை. நம்மைச் சோதிப்பதற்காக, துப்புதுலக்குவதற்காக அந்தத் தெய்வமே அனுப்பிய உளவாயிருந்தால் .. ?இந்த அடுத்த வீடு ஏன் இங்கே இருக்கிறது: கட்டை உயரமாக இருந்திருந்தால் அந்த உளவாளி இங்கு வந்திருக்க முடியுமா? இப்படி ஏமாற்றுவதுதான் தெய்வத்தின் பிழைப்பா? இதுவா கருணை: இதுவா தெய்வத்தன்மை? அண்டிக் கெடுப்பதா தெய்வத்தின் வீரம்!இனி ராஜத்தின் முகத்தில் எப்படி விழிப்பது ரங்கண்ணாவின் முகத்தில்: யமுனா இதையெல்லாம் கண்ணைப் பார்த்தே தெரிந்து கொண்டுவிடுவாள். நிலையின் வழியாக அந்த அறை தெரிகிறது. அந்தக் கிழம் எப்படித் தனியாக நம்பி ஊருக்குப் போயிற்று.இந்த நிலையை மூடிவைத்திருந்தால்: மூடியிருந்த கதவைக்கூட காட்டு ராணியின் சிப்பாய்கள் வந்து தகர்த்தார்களாம்.உண்மையாகவே பேதையா இவள் ரத்னம் வைக்கிற பெட்டி யில் அறியாமையின், அவசரத்தின் கிழிசல் ஒன்றைப் பத்திரப்படுத்தி யிருக்கிற இவளா பொல்லாதவள் குடியைக் கெடுக்கிறவள்! பாவம்!- நிலையை மூடியிருந்திருந்தால் எப்படி மோகினி மாதிரிவந்து நின்றாள் உள்ளத்தை உறுதியைக் குடிக்கிற மோகினி வந்தபோது இந்த நிலை மூடியிருந்திருந்தால் .. ?பாபு எழுந்து மொட்டைமாடி நிலைக் கதவைச் சாத்தித் தாழிட்டான்.அந்த மாடியிலிருந்து இருமல் கேட்டது. விழிப்பு இருமலா? துக்க இருமலா?'கிணிக் கிணிக் கிணிக் என்று சுவர்க்கோழி துளைத்தது. உள்ளே உள்ள ஆதார சுருதிக்குமேல் ரிஷபமாக ஒலித்தது அது."ஏண்டா நேத்திக்கு வரலை . . . அண்ணா வந்திருந்தானா? உனக்கு ஒரு அண்ணா இருக்கிறானா. ஒன்றுவிட்ட அண்ணாவா..? அவனையும் அழச்சிண்டு வரப்படாதோ? மூஞ்சி ஏன் என்னமோ போலிருக்கு என்னது? அந்தக் களைன்னா சொட்றது: சங்கீதத் துக்கு முழுக்கு போட்டுட்டேன்னு சொல்லு. மூஞ்சியிலே கொலை婆296婆தி. ஜானகிராமன்பரின களை கூத்தாடறதேடா: யாரைக் கொலை பண்ணினே ? _மஹத்தி எழுந்து தொலை. என் மூஞ்சியிலெ முழிக்காதே. _குத் தேவடியா வீடுதாண்டா லாயக்கு அவளை மடியிலே 1ாட்டுக்கோ. தம்புரா என்ன மடியிலே துன்மார்க்க தரித்திரம்."பாபு இறுக்கிக் கண்ணை மூடிக்கொண்டான். ரங்கண்ணா _யத் தொடங்கினால் எதிராளியின் உடல் வாடிச் சாம்பி _ வேண்டும்."அப்பா பேரைக் கெடுக்க வந்திருக்கியாடா, பாவி? அப்படி _ம்பு கெட்டுதுன்னா எங்கியாவது தேவடியா விட்டுக்குப் போறது: இப்படி ஏன் தலையிலெ சேற்றை வாரிப்போட்டுக்கறே!” அம்மாதான். லை ஆட குங்குமம் பளிர் என்று மின்ன, அவள் வார்த்தைகளில் வளவு நிஷ்டுரம், எவ்வளவு கோட்டையிடிந்த நிராசை!வக்கீல் குமாஸ்தா கிழம் நீளப் பல்லுடன், உடைந்த உடலுடன், விலா எலும்பு ஊத ஊத அழுகிறது.பாபு எழுந்து விளக்கைப் பெரிது பண்ணினான். உதிர்ந்து கிடந்த ஜாதிப்பூவைக் காலால் தள்ளி எடுத்து விசி எறிந்தான்.வாசலில் சாணி தெளிக்கும் ஓசை கேட்டது. இந்த வீட்டு வாசலில்தான். மணி நான்கு ஆகியிருந்தது.அப்பொழுது நான் எழுந்து கீழே ஒடியிருந்தால் ... ஏன் ஓடவில்லை?ஏன் ஓடவில்லை; கீழே எழுந்து விடுவார்கள் என்ற பயமா?இவளைக் கைவிட்டுப் போகிற பயம்தான்.இன்னும் அவள் உருவம் முன்னால் நிற்கிறது. எதையோ திருடிக்கொண்டு நிலையைக் கடந்து, மாடிக் கட்டைச் சுவரை ஏறிக் குதித்து ஓடுகிறாள்.பாபு எழுந்தான். நான்கு மணிதான். இருள் பிரிய வெகு நேரம் இருக்கிறது. குளிர் காற்றாக விசிற்று. உள்ளே அனல் அடித்தது.கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். வேகமாக நடந்தான், கிழக்கே பார்க்க பக்தபுரித் தெருவில் திரும்பி, தெற்கே நடந்து கொண்டிருந்தான்.பாணாதுறைப் பக்கம் போகும்போது, ஒரு நாய் பெரிய உறுமலாக உறுமிற்று பின்னாலேயே வந்தது. அதிகமாகக் குரைக்கக்கூட இல்லை. கன்னத்தில் முள் படர்ந்தது அவனுக்கு பயத்தில் ஒடுங்கி ஒடுங்கி வேகம் என்று தெரியாமல், அதைத் திரும்பிப் பாராமல் நடந்தான்.婆297婆மோக முள்

_______________கூடவே வந்த நாய் எல்லை தாண்ட மறுப்பதுபோல் சட்டென்று நின்று பெரிதாகக் குரைத்தது."கடியேன். பத்து நிமிஷம் முன்னாலேயே உனக்குப் பலியாகி றேனே. ஆனால் நீ என்ன சாகச் சாகக் கடிப்பாயா? நீ என்ன பாம்பா பிடி சோற்றுக்கு வாலைக் குழைத்து அடிமையாக இளிக்கிற நாய்ப் பிழைப்பு."நாயின் குரைப்பு அதுவாக வகுத்துக்கொண்ட எல்லையில் கேட்டது. சிறிது சிறிதாகக் குறைந்தது. நடந்துகொண்டே திரும்பிப் பார்த்தான். தெற்கே பார்த்த நாய் முகத்தை வடக்கே திருப்பி மெதுவாக நடந்து படுத்துக்கொண்டது.Oமகாமசூத் குளத்தின் வடகிழக்கு மூலை இது. பாசியை ஏவி வழுக்கவிட்டுப் பலருக்கு மோட்சம் கொடுத்திருக்கிற மூலை.- நீந்துகிறவனுக்கு நீரில் சாக முடியுமா? ஏன், நடுக்குளத்திலேயே சுற்றிச் சுற்றிச் சோர்கிற வரையில் நீந்தினால் நிச்சயம் காவேரியை நமய முடியது. எங்காவது ஆளை உயிரோடு உலகத்தின் கரையில் கக்கி ஒதுக்கிவிடும். இது நிச்சயம் நம்பிச் சரண் அடையக் கூடிய இடம்- ೧58ು குமாஸ்தா வரதய்யர்கூட இங்கேதான் விழுந்தாராம். வீட்டில் ஏதோ தகராறாம். சாஸ்திரிகள் அன்று சொன்னது நன்றாக ஞாபகமிருக்கிறது.இந்த ஊரில் செய்த பாபம் இந்த ஊரிலேயே தொலைந்து விடுமாம். எவ்வளவு நம்பிக்கை அப்படியானால் இன்னொன்றும் முடியுமா? இந்த ஊரில் பாபம் செய்த உடலை அழிக்க முடியுமா இதற்கு!- மாலையில் வந்து ஒரு கூட்டம் கரையில் நின்று இதைப் பார்த்துக்கொண்டு நிற்கும். போலீஸ்காரன் வந்து இழுத்துப் போடுவான். ஆஸ்பத்திரி... அப்பா, அம்மா, ராஜம், ரங்கண்ணா, யமுனா. ஊரில் அடி வாங்கின பட்டப்பாவும்தான் இதைக்கேட்டுச் சிரிக்கப் போகிறான்!பாசி வழுக்காமல் ஜாக்கிரதையாகக் காலை ஊன்றி வைத்து இறங்கினான் பாபு எதற்கு இந்த ஜாக்கிரதை நீர் வெடவெட வெடவென்று காலை நடுக்கிக் குத்திற்று.சிரிப்பு வந்தது.- ராஜூவின் நினைவு, பொட்டலில் அமுதிட்ட அம்மாள், அப்பா, யமுனா-இவர்கள் இருக்கிற உலகிலா இவ்வளவு அதைரியம்! இவ்வளவு பலஹீனம்! இவ்வளவு கோழைத்தனம்!புழுதி மண்டியிருந்த காலை நன்றாகத் தேய்த்து அலம்பினான்.签298 婆 தி. ஜானகிராமன்இது தண்டனை இல்லை. தப்பித்துக்கொண்டு ஓடி ஒளியும் பாழைத்தனம் ஒடி ஒளிந்துகொள்ளுவதற்கு மரணத்தைப் போல் பதிரக் குறைவான இடம் இருக்க முடியாது! சிரிப்புகளும் நகைப்பு _ம் எழுந்து மானத்தை வாங்குகிற இடம்.பாபு காலை நன்றாகக் கழுவினான். மெதுவாகக் கரையேறினான். _ாயோடு மேற்கு நோக்கி நடந்தான்.கடலங்குடித் தெருவில் ஒரு வீடும் எழுந்திருக்கவில்லை. சில வீடுகளில் சல் சல்லென்று சாணி தெளிக்கும் ஒசை கேட்டது. 1ாண்டு, மூன்று வாசல்களில் மாடுகள் கட்டியிருந்தன. அரிக்கேன் வெளிச்சத்தில் பால் பீர் விழுந்து வெறும் பாத்திரத்திலும் பாதி நிரம்பிய செம்பிலுமாக விழுந்துகொண்டிருந்தது.ராஜத்தின் வீடு சாத்தியிருந்தது. அவனிடம் போய்ச் சொல்ல முடியுமா இதை முடியாது. கதவைத் தட்டிப் பார்ப்போமா... வேண்டாம் . . .இன்னும் நடந்து கடைத்தெரு திரும்பி துக்காம்பாளையத் தெருவில்தான் போக முடிந்தது.யமுனா வீட்டு வாசலில் சாணி மட்டும் தெளித்திருந்தது. கோலத்தைக் காணவில்லை. வாசல்படி ஏறினான் பாபு.கொல்லையில் பார்வதி பல் தேய்த்துக்கொண்டிருந்தாள். "யாரது" என்று உள்ளே விசிறிக்கொண்டே நடையில் யாரோ வருவதைப் பார்த்த யமுனாவின் குரல் எழுந்தது.பாபு பேசாமல் ஊஞ்சலுக்கருகில் வந்து நின்றான். "என்ன பாபு: வா உட்காரு." பதில் பேசாமல் உட்கார்ந்தான். யமுனா பார்த்த பார்வை உள்ளே போய்த் துளைப்பது போலிருந்தது. தலையைக் குனிந்துகொண்டான் அவன்."எங்கேருந்து வரே பாபு:" "சும்மா இப்படி உலாவிவிட்டு வரேன்." "உலாவிவிட்டா அதுக்குள்ளாகவா?”"எதுக்குள்ளாக?""இவ்வளவு காலமேயா?""ஆமாம் பார்க்கனும் போலிருந்தது. வந்தேன். வரலாமோல்லியோ?”"என்னது!"மோக முள் 婆299 婆

________________பாபு அவளை ஒருமுறை பார்த்தான் நிமிர்ந்து, அடிபட்ட நாய்போல."எப்ப எழுந்திண்டே?”"நான் எழுந்திருக்கவேயில்லை, யமுனா.""என்னது?""ஆமாம்" என்று விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டான் அவன். யமுனா வேகமாக அருகில் ஓடி வந்தாள்."பாபு, பாபு என்ன உடம்பு எங்கேருந்து வரே!... என்னத்துக்கு அழறே?"பாபு குழந்தை மாதிரி வாய்விட்டு அழுதுகொண்டிருந்தான். அடைந்து கிடந்த வேதனை பீறிக்கொண்டு வந்தது."என்னத்துக்கு அழறே? எங்கேர்ந்து வரெ? அப்பா உடம்பு சரியாத்தானே இருக்கார்?"அதெல்லாம் ஒன்றுமில்லை என்ற பாவனையில் தலையாட்டி னான் பாபு."பின்னே என்ன ?""ஒண்ணுமில்லே" என்று சட்டென்று அழுகையை அடக்கிக் கொண்டான் அவன்."என்ன பாபு ?" "ஒண்ணுமில்லை ... நான் வரேன்." "எங்கே வரே போயிட்டே இருக்கியே என்ன?" "ஆமாம் யமுனா அம்மாகிட்ட ஒண்ணும் சொல்லாதே" என்று மெதுவாகக் கெஞ்சிவிட்டு வாசலில் இறங்கிவிட்டான் பாபு."பாபு, பாபு!" பாபு திரும்பினான். "இங்கே வாயேன்."'எதுக்கு ?""எதுக்கா?" - "அப்புறம் வரேன்" என்று, அவள் வாயடைத்துக் குழம்பி நிற்க, வாசலில் வேகமாக நடந்து ஆனையடி திரும்பினான் அவன்.காவேரியில் இறங்கிக் குளிக்கும்போது, ரங்கண்ணாவிடம் போவதா வேண்டாமா, போவதா வேண்டாமா என்ற கேள்விதான் ஒலித்துக்கொண்டிருந்தது. நீலுப்பாட்டி வீட்டில் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு, அறைக்கு வந்து பழுப்பு வேஷ்டியைக் கட்டிக்* 100 . நி_ானகிராமன்கொண்டு ஆற்றில் இறங்கினவன், நீரில் நாலைந்து முழுக்குப் போட்டு விட்டு பித்தம் பிடித்து நின்றுகொண்டிருந்தான். இயந்திரம் போல _உடம்பைத் தேய்த்துக்கொண்டது. முழுகும்போது விரல்கள் முகைப் பிடித்துக்கொண்டன. பழக்கத்தின் வலுவில் இதெல்லாம் மனதுடன் சம்பந்தப்படாமல் இயங்கிக்கொண்டிருந்தன. மனம் எங்கேயோ போய் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது.ரங்கண்ணா வீட்டுக்குப் போகலாமா?இந்த ஒன்றரை மாதத்தில் அவரைப் பற்றித் தெரிந்து கொண்டவை _ளை நினைக்கும்போது இனி அவர் வீட்டில் கால் வைக்க, அவர் ாட்டை மிதித்து மாசுபடுத்த மனம் வருமானால் அது நெஞ்சில் ாமில்லாதவன் செய்கிற துணிவு. நல்லது கெட்டது என்ற ாகுபாடில்லாமல், மனச்சாட்சி என்ற ஆந்தரிக உறுப்பே இல்லாத கொடியவன் செய்யும் துணிவு. பாபத்திலேயே உழன்று உழன்று, _வைத்துச் சுவைத்து, கல்லாங்காய்ப் பட்டுப்போன மனம்தான் _விதம் செய்ய முடியும்.ரங்கண்ணாவின் தூய்மை வேடிக்கையான, அதிசயமான அாய்மை. அது கபடமில்லாத இயற்கையாக அமைந்த துய்மையா? அல்லது நல்லதல்லாததைச் செய்யக்கூடாது என்று, பிரக்ஞையுடன் பிரயாசைப்பட்டுக் காப்பாற்றி வந்த தூய்மையா? எதுவென்று நீர்மானமாகச் சொல்லுவது கஷ்டம் ஒரு சமயம் குழந்தையினதைப் போன்ற தூய்மையாக இருக்கும். இன்னொரு சமயம் சரீரத் தூய்மை _யைக் காப்பாற்ற வேண்டிய, மனத் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர் கிண்டலும் கோபமுமாகப் பொரியும்போது, அதிப்பிரயாசைப்பட்டு, போராட்டங்கள் செய்து ாதித்த தூய்மை போன்று இருக்கும். போராட்டமே நிறைந்த நீண்ட ஆயுள் வடிவெடுத்து எதிரில் அமர்ந்திருப்பதுபோல் தோன்றும்இல்லை, அவருக்குப் போராட்டமே ஏற்படச் சந்தர்ப்பம் இல்லையா? நாகத்தைக் கண்டு நடுங்குவதைப் போல், பளபளவென்று மின்னும் அந்தத் தூய்மையைக் கண்டு தீய சக்திகளும், மனிதர்களும் ஒதுங்கி நின்றுவிட்டார்களா? சிலருக்கு இப்படியெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கத்தான் அடிக்கிறது. மகா கோரரூபிகளுக்குக்கூட இந்த அதிர்ஷ்டம் கிட்டுவதில்லை. வாட்டமும் சாட்டமுமாக ரங்கண்ணா மாதிரி வளர்ந்த சிலருக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்கத்தான் அடிக்கிறது. ரங்கண்ணாவின் சிம்ம முகத்தைக் கண்டு ஏமாற்றும் வஞ்சக நரிகள், மாமிச போதையின் வெறி கண்ட நரிகள் ஓடி விட்டனவோ என்னவோ...எப்படியிருந்தாலும் அந்த வீட்டில் அவருடைய வெற்றியின் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. அந்த வீட்டுத் தரை, துரண்கள், ரை வாசல் யாவும் அவருடைய தூய்மையின் ஒளி ஏறி நிற்கின்றன. அந்த விட்டின் இண்டு இடுக்குகளில்கூட இதைக் காண முடியும்.மோ_முள் 臺 30 臺


"ம்" என்று வேதனையில், தன்னையறியாமல் இரைந்து முனகினான் பாபு. புரையோடிய மனம், வலி தாங்காமல் பிறர் கேட்கும் படியாக முனகிற்று. சட்டென்று திரும்பிப் பார்த்தான் அவன். நல்ல வேளையாக ஒருவரும் இல்லை. வீட்டுக்கு நேராக இருந்த துறை அது அங்கு யாரும் வந்து குளிப்பதில்லை. குளிக்கும்படியான படிக்கட்டு வசதிகள் அங்கு கிடையாது. மண் சற்றுக் கரைந்து, துறை மாதிரி ஒரு பள்ளம் விழுந்த இடம் அது. கைலாசமும், பக்கத்து வீடுகளிலிருந்து யாராவது ஆண்பிள்ளைகளும்தான் குளிக்க வருவது வழக்கம் அங்கு. அதுவும் இந்த விடியற்காலையில் வர மாட்டார்கள்.நீரைப் பார்த்தும், பார்க்காமலும் நின்றான் பாபு. "எப்படிப் போகிறது?" இந்தக் காவேரிக்கு இந்தக் கறையைக் கழுவ முடியுமா?துரத்தில் தெற்குக் கரையிலிருந்த மரங்களுக்குப் பின்னிருந்து சூரியன் எழுந்துகொண்டிருந்தது.கரையிலிருந்த மரத்தில் 'டுவ் டூவ் டூவ் என்று ஒரு குருவி வேகமாகக் கத்திக்கொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தான் அவன். மிளகாய் அளவுதான், விரல் நீளம்தான் இருக்கும். பச்சைப் பசே லென்று உடல் எவ்வளவு பெரிய குரல் எவ்வளவு இனிமை!படார் என்று ஜன்னல் கதவு ஓங்கிச் சாத்திக்கொள்ளும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தான். அடுத்த வீட்டு ஜன்னல்தான். சாத்திக்கொண்ட கதவு மறுபடியும் திறந்தது.அவள்தான். காதுக்குமுன் சரிந்து இறங்கும் மயிருடன் அந்த முகம்தான். அதே சிவப்புப் புடவை - அதே ரவிக்கைசட்டென்று பாபு இரண்டு முழுக்குப் போட்டான். இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்துப் பிழிந்து தலையைத் துவட்டிக் கொண்டான். கரையேறி அறைக்குச் சென்று, வேஷ்டியை மாற்றிக் கொண்டு, கீழே இறங்கி, ரங்கண்ணாவின் வீட்டைப் பார்க்க நடந்தான்.