தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .458.- 467 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
 automated google-ocr in ubuntu with the help of Libre draw


நீலகண்டப் பறவையைத் தேடி. . . .458.-

வங்காள மூலம் :
அதீன் பந்த்யோபாத்யாய
தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி


நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா புதுடில்லி
458.- 467

விட்டு நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு காலணா கொடுத்தார்கள். சோனா தன் பங்கோடு பெரியப்பாவின் பங்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு அவருடைய பங்கை ஒரு பையில் தனியாகப் போட்டு வைத்திருந்தான். திருவிழாப் பார்த்த பிறகு அவன் பெரியப்பாவின் பங்கை அவருடைய பையில் போட்டுவிடுவான். ஆனல் அவனால் பெரியப்பாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத தேடப் போய்த்தான் அவனுக்கு நேரமாகிவிட்டது. அவன் வராந்தா வழியாகச் சமையலறையைக் கடந்து போனன். இந்த வழியில் போனல் அவன் சீக்கிரம் வடக்கு வாசலுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.
அமலாவும் கமலாவும் அவனுக்குப் பவுடர் பூசிவிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். இந்தப் பெரியப்பா ரொம்ப மோசம் அவரால்தான் அவனுக்குப் பவுடர் பூசிக்கொள்ள முடியாமல் போய் விட்டது !
அழுகை அழுகையாக வந்தது அவனுக்கு. அவர்கள் எல்லாரும் இப்போது வடக்கு வாசலில் இருப்பார்கள். அமலாவும் கமலாவும் அவர்களுடைய அறையில் இருக்கமாட்டார்கள். அவன் வேகமாக ஒடினன். வடக்கு வாயிலே அவன் அடைந்தபோது அங்கு ஒரு வரையும் காணுேம். யானையும் இல்லை, ஜசீமும் இல்லை, அமலா - கமலாவும் இல்லை. வீட்டில் எல்லா விளக்குகளும் எரிந்துகொண் டிருந்தன. எல்லாரும் அவனே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தன்னந்தனியாக இப்போது அவன் என்ன செய்வது?
இருந்தாலும் ஒரு தடவை அமலா கமலாவின் அறைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். வீட்டு வேலைக்காரிகளைக் கூடக் காளுேமே ! அவர்கள் எங்கே போய்விட்டார்கள்? அவன் படிகளில் வேகமாக ஏறி மாடிக்குப் போன்ை. ஒரிரண்டு அந்நிய முகங்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. யாரும் அவனுடன் பேசவில்லை. அவனுக்குப் பயமாக இருந்தது. எப்படியாவது அமலா கமலாவின் அறைக்குப் போய்விடவேண்டும். அவர்கள் அவனே விட்டுவிட்டுத் திருவிழாப் பார்க்க போயிருக்க மாட்டார்கள். இந்தச் சமயத்தில் திடீரென்று அந்த மாளிகையின் விளக்குகள் எல்லாம் அணைந்து விட்டன. இவ்வளவு லஸ்தர் விளக்குகளும் அலங்காரங்களும் இருட்டில் மறைந்துவிட்டன. ஏரிகரையில் குழலிசை ஒலிக்கவில்லை. கூண்டிலிருந்த மைனு மட்டும் இருட்டில் கூவியது: "சோனு, நீ எங்கே போறே ?... இருட்டு, ஒரே இருட்டு.”
இப்படிப்பட்ட கும்மிருட்டை இதுவரை பார்த்ததே இல்லே அவன். ஒரு முழத் தூரத்திலுள்ள ஆளேக்கூடப் பார்க்க முடியாதபடி அவ்
.458

வளவு இருட்டு. மனிதர்கள் நிழல்கள் போல் இங்குமங்கும் ஒடுவது தெரிந்தது. யாரோ வேகமாக அவனைத் தாண்டிப் போனர்கள். அவன் பயந்துகொண்டே, 'அமலா' என்று கூப்பிட்டான்.
இருட்டில் ஒரு முரட்டுக் கை வந்து அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு, "யாரைக் கூப்பிடறே ?" என்று கேட்டது.
'அமலா !'
'நீ யாரு?"
"நான் சோனு.”
"எங்கே போகணும் உனக்கு ?"
"அமலாகிட்டே, அவங்க என்னைத் தசரா பார்க்கக் கூட்டிண்டு போறதாச் சொல்லியிருக்காங்க. கமலா என் மூஞ்சியிலே பவுடர் பூசிவிடறேன்னு சொல்லியிருக்கா."
'நீ அவங்க அறைக்குப் போகக்கூடாது. யாரும் போகக்கூடாது."
"நான் போகத்தான் - போவேன்." 'கூடாது."
அந்தக் கை யாருடையதென்று சோளுவுக்குத் தெரியவில்லை. ஆனல் அது ஒரு பெண்பிள்ளையுடையது என்று மட்டும் புரிந்தது. பிருந்தாவனியாக இருக்கலாம். பயத்தால் ஒன்றும் புரியாதவகை அவன் கம்பிக் கிராதியைப் பிடித்துக்கொண்டு நின்றன். யாராவது அவனே ஆபீஸ் கட்டிடத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டால் நல்லது. m. o. -
மாடிப்படியில் ஒரு விளக்குத் தெரிந்தது. இருட்டில் நின்றிருந்த அவனுக்கு இரண்டாவது பாபு படியிலேறி வருவது தெரிந்தது. அவருக்கு முன்னுல் அவருடைய வேலைக்காரன் ஹரிபத். அங் கிருந்து ஒடிவிடத் தோன்றியது சோளுவுக்கு.
இரண்டாவது பாபுவைப் பிடித்துக்கொண்டு அழைத்து வந்தார்கள். அவர் முகத்தில் வேதனை. சோனுவுக்கு ஆச்சரியம். சற்றுநேரம் முன்புதானே அவர் மேடையில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண் டிருந்தார்! இப்போது அவரைப் பார்த்தால் அவருடைய உயிரே சோர்ந்து போய்விட்டது போல் தோன்றியது. சோளுவின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அமலா கமலாவுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லையே? அவர்களுடைய அறை உட்புறத்தில் தாழிடப்பட்டிருந்தது. அறைக்குள் அமலாவும் கமலாவும் விம்மி விம்மி அழுவதாகத் தோன்றியது.
யானை தனியே அந்த இருண்ட மாளிகையிலிருந்து திரும்பிச் சென்றது. யாரும் தசரா பார்க்கப் போகவில்லை. ஏதோ கெட்ட செய்தி கிடைத்திருந்தது போலும், இந்தக் குடும்பத்துக்கு. அது
459

என்று யாருக்கும் சொல்லத் தெரியவில். மிகவும் சிலருக்கு விஷயம் தெரிந்திருக்கலாம். அவர்களில் புந்திரநாத்தும் ஒருவர். அவர் வேகமாக நடந்து போய்க்கொண் بط மாளிகையிலிருந்த எல்லாமே விசர்ஜனமாகிவிட்டது பாலும ஒரு நிர்ஜனமான பொட்டலில் நடப்பதுபோல் ங்க க. அவருக்கு. - [5 துபோல் இருந்தது
வந்ததும் அவர்கள் ஜன்னல் வழியே அவனைப் பார்க்கலாம். |మఖాతా பெண்களும் ஏனே அவனைக் கவர்ந்திருந்தார்கள். அவர் తతాత ஏதோ நேர்ந்திருக்கிறது . அது என்னவென்று தெரியாமல் அவன அங்கிருந்து நகரப் போவதில்லை.
அப்போது யானை இருட்டில் மரங்களின் வழியே போய்க் * யந்திர அறையில் ஒரு டார்ச்சைப் போட்டுக்
- உடகார்ந்திருந்தான் இப்ராகிம். ஆற்றங்கரையில் நடந்து போன யானையின் காதுகள் அடித்துக்கொள்ளும் அரவம் மிதந்து வநதது.
எங்கிருந்தோ பிரதிமை விசர்ஜன அரவங்கள் கேட்டன. பைத்தியக்காரப் பெரியப்பா எங்கே போனுரோ, தெரியவில்லை. "ம்"சாகவும் ஒன்றும் வாங்கித் தர முடியவில்2ல சோளுவால். அவனுடைய இரண்டு பைகளிலும் பளபளக்கும் செம்புக் காசுகள் இருந்தன. மேலே அமலா அறையின் ஜன்னல் மூடிக் கிடந்தது.
.. வெளிச்சம், தூபங்கள், மத்தள ஒலி எல்லாமே நின்று விட்டன. ஒர் இடத்திலும் வெளிச்சம் இல்லை. எங்கும் ஒரே இருட்டு, மேலே நிர்மலமான ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் ஒளி உலகத்தின் நலத்தைக் காப்பாற்ற முயற்சி செய்தது. ஜன்னலைத் திறந்துவிட்டால் சோன, அமலா கமலா வுககு ஏதாவது உதவி செய்யலாம். அவன் அவர்களுடைய முகத்தைப் பார்ப்பதற்காக, முழங்கால்களுக்கு நடுவில் தலையை வைத்துக்கொண்டு புல்லின் மேல் உட்கார்ந்திருந்தான்.
விசர்ஜனத்துக்குப் பிறகுதான் பூபேந்திரநாத்துக்குச் சோளுவின் நினைவு வந்தது. அவன் எங்கே? எல்லாரும் அவனை இருட்டில் தேடினர்கள். கடைசியில் ராம்சுந்தர் தான் சோ ைவீட்டு வரா ந்
460

தாவை ஒட்டிய திறந்த வெளியில் தூங்கிக்கொண் டிருப்பதைக்
கவனித்தான்.
காலையில் அந்தப்புரத்திலிருந்து சோளுவுக்கு ஒரு கடிதம் கிடைத் தது. "நாங்க விடியற்காலை ஸ்டீமர்லே கல்கத்தாவுக்குத் திரும்பிப் போருேம். உன்னைச் சந்திக்க முடியாமே போயிடுத்து!"
அவன் ஆபீஸ் கட்டிடத்தின் வாயிற்படியில் தனிமையில் மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இன்று ஒன்றும் பிடிக்கவில்லை. நதிப்படுகையில் நானற்காட்டில் யாரோ திருட்டுத் தனமாகப் புல்லாங்குழல் இசைப்பதாக அவனுக்குத் தோன்றியது.

*******************************
இப்போது ஊர் திரும்பும் படலம். ஈசம காலை யில் சீக்கிரமே சமையல் செய்து சாப்பாட்டை முடித்துக்கொண்டு விட்டான். படகின. மேல்தட்டில் தனணிரை ஊற்றி நன்ருகக் கழுவினுன். படகின முன்பகுதியில் தண்ணிர் தேங்கியிருந்தது. அதை வடித்துப் படகின் பளுவைக் குறைத்தான். படகின் பாய் கிழிந்திருந்த இடங்களை முந்தின நாள் தான் ஊசி நூலால் தைத்துச் சரி செய்திருந்தான் ப - கைச் செலுததுவதில் ஒரு சிரமம் இல்லாமல் இருபபதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்தான். அவன் கயிறு க3ளச் சரிபார்த்துக்கொன டிருந்தபோது இரண்டாவது எசமான் வருவதைக் கண்டான். அவருக்குப் பின்னல் சோன, லால்ட்டு, பல்ட்டு, பைத்தியக்கார எஜமான், கடைசியில் நாய்.
ஸ்டீமர்த் துறையில் இப்போது நல்ல கூட்டம். பூஜை விடுமுறை யைக் கழித்தவர்கள் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். இந்தக் கிராமமே ஒரு பட்டணம் போல ததான். உயர்நிலைப்பள்ளி, தபால் ஆபீஸ், கடை வீதி, சந்தை, ஆனந்தமயிக் காளிகோவி , ஜமிந் தார்களின் மாளிகைகள் எல்லாம் இருந்தன. பூஜை நாட்கள் விமரிசையாகத்தான் கழிந்தன. அப்புறம் பூஜைக்கு வந்தவர்களில் சிலர் டாக்கா போவார்கள். சிலர் கல்கததா போவார்கள். மக்களில் பெரும் பகுதி போனதும் ஊர் வெறிச்சிட்டுவிடும்.
எல்லாம் வெறிச்சிட்டுப் போனது போல்தான் இருந்தது பூபேந் திரநாத்துக்கு. உறவினர்கள் ஊர் திரும்பினர்கள். அதிகாலையி லேயே சாப்பிட்டு விட்டார்கள் அவர்கள். கரையில் நின்று கொண்டு அவர்களுக்கு விடை கொடுத்தார் அவர். சீதலகஷா
461

ஆற்றில் படகுகள் கண் பார்வையிலிருந்து மறையும் வரையில் அவர் கரையிலேயே நின்றுகொண்டிருந்தார். ஏனே அவருக்கு இந்த நேரத்தில் ஆபிஸ் கட்டிடத்துக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்க வில்லை. அவர் காளிகோவிலை நோக்கி நடந்தார். பேசாமல் கோவிலில் உட்கார்ந்துகொண்டு தேவி தரிசனம் செய்ய விரும்பினர். புரோகிதர் காலு சக்கரவர்த்தியைப் பார்த்துச் சுகம் விசாரித்த மாதிரியும் இருக்கும். வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு அந்த இடிந்துபோன, பாசி பிடித்த, கோட்டை போன்ற பழங்கட்டிடத்தில் கோவிலின் உருவ ஒற்றுமை ஏதாவது தெரி கிறதா என்றும் பார்க்கலாம்.
மெளல்வி சாயபுவுக்கு என்ன தைரியம் ? இங்கே மக்களைக் கூட்டிக்கொண்டு வந்து தொழுகை நடத்தப் போகிருராம்! ஆட்டுப் பலி கொடுக்கப் போகிருராம்! அப்படியெல்லாம் செய்தால் கலகந்தான் வரும். பூபேந்திரநாத் தமக்குள் சொல்லிக்
கொன டார். 'தேவி! வெட்டப்பட்ட தலைகளை மாலேயாக அணிந்தவளே ! நீ எங்களுக்குச் சக்தியைக் கொடு, அம்மா !”
அவருடைய மனக் கண்ணில் ஒரு தர்மயுத்தக் காட்சி தோன்றியது. ஆனந்தமயி காளி தன் சரீரத்திலிருந்து ஆயிரக் கணக்கான வீரர்களைத் தோற்றுவிப்பாள், இன்ளுெரு மகிஷாசுர வதத்துக்காக! பூபேந்திரநாத் தமக்குள் சிரித்துக்கொண்டார். ஏளனப் புன்னகை தோன்றியது அவருடைய முகத்தில். போலீஸ் ஸ்டேஷனிலுள்ள ஹெட்கான்ஸ்டபிள், பட்டனத்திலுள்ள போலீஸ் துரை மாஜிஸ்டிரேட் உள்பட எல்லாரும் பாபுக்களின் கையில். அவர் கள் ஒரு தந்தி கொடுத்துவிட்டால் ஒரு ஸ்டீமர் நிறையப் போலீஸ் வந்துவிடும். இந்தக் கலகக்காரர்கள் என்ன செய்ய முடியும்? உள்ளுற அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் அவர் தமக்குத் தாமே பேசத் தொடங்கிவிட்டார். தாம் ஒரு போர்க்களத் தில் நடந்துகொண் டிருப்பதாக அவருக்கு நினைப்பு.
சுக்கானப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஈசம் சோன வைக் கேட்டான். "என்ன எசமான், மூஞ்சி ஏன் சுரத்தாயில்லே?" ஈசம் தன் முகத்தைப் பார்க்காதவாறு திரும்பிக்கொண்டான் சோளு,
"கவலைப்படாதீங்க. நேரே துறையிலே கொண்டுபோய் நிறுத் தறேன் படகை. அம்மா அங்கே வந்து காத்துக்கிட்டு இருப்பாங்க. நீங்க இறங்கினதும் உங்களைத் தூக்கி மடியிலே வச்சுக்குவாங்க." பைத்தியக்கார மனிதர் படகின் முனையில் உட்கார்ந்திருந்தார். அவர் தலைக்கு மேல் வெயில். ஈசம் மீண்டும் மீண்டும் அவரை உள்ளே போய் உட்காரச் சொல்லியும் அவர் கேட்கவில்லை, பத்மா
462

சனம் போட்டுக்கொண்டு அசையாமல் உட்கார்ந்திருந்தார் அவர். வெயிலில் அவர் முகம் சிவந்துவிட்டது. சோவுைக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. அவன் வீடு திரும்புகிருன். அமலாவும் கமலாவும் அவனை விட்டுவிட்டு எவ்வளவோ தொலைவுக்குப் போய்விட்டார் கள். எந்த முகத்தோடு அம்மாவைப் பார்ப்பான் அவன் ? ஒரு பாவத்தைச் செய்துவிட்ட உணர்வு அவனை உறுத்தியது. அமலா கமலாவின் அழுகையைக் கேட்டதிலிருந்து அந்த உணர்வு இன்னும் தீவிரமாகிவிட்டது. 'நீ பண்ணினது பாவம் !" என்று யாரோ சொல்வதுபோல் இருந்தது அவனுக்கு. மெளனமாகப் படகில் உட்கார்ந்திருந்தான் அவன்,
துறைக்குப் படகு வரும் அரவம் கேட்டுத் தனமாமி ஒடிவந் தாள். பெரிய மாமியும் வந்தாள். அவர்களுக்கு முன்னலேயே செய்தி கிடைத்திருந்தது, பைத்தியக்கார மனிதர் நீந்தியும் நடந்தும் மூடா பாடா போய்விட்டது பற்றி. சோனுவுடன் அவரும் திரும்பி வருவாரென்று அவர்களுக்குத தெரியும்.
படகிலிருந்து இறங்கியதும் சோனு தாயைக் கட்டிக்கொண்டான். உடனே அவனது மனச் சுமை முற்றும் மறைந்துவிட்டது.
"சோனு, நீ அம்மாவுக்காக அழலியே ?' என்று பெரிய மாமி கேட்டாள். -
இல்லை என்பதற்கடையாளமாகத் தலையை ஆட்டினுன் சோளு. 'இல்லே. நீ அழுதிருக்கே. உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியறதே. லால்ட்டு, சோனு அழுதான இல்லேயா ?"
'இல்லை, பெரியம்மா." "சரிதான். இனிமேல் நீயும் உன் பெரியப்பா மாதிரி ஆயிடுவே. எங்கே வேணுமானுலும் கத்துவே! யாரையும் நினைக்கமாட்டே." இவ்வாறு மறைமுகமாகத் தன் கணவனே க் குததிக் காட்டினுள் பெரிய மாமி. அவளுடைய குத்தலைப் புரிந்துகொண்டு அவர் அவளைப் பார்த்தார்.
"வாங்க ' ஆனல் அவள் சொல்ல விரும்பியது: "நீங்க எங்கே யாவது போயிட்டா எனக்குப் பயமா இருக்கு கஷ்டமா இருக்கு. உங்களை விட்டால் எனக்கு வேறே யாரு கதி?' என்பதுதான். உலகத்தையே ஜயித்துவிட்டு வந்த உணர்வு ஏற்பட்டது. சோளுவுக்கு. எவ்வளவு புதிய அநுபவங்கள்! மான், மயில், பயாஸ்கோப் ஆகியவற்றைப்பற்றியெல்லாம் யாரிடமாவது சொல்லா விட்டால் அவனுக்கு நிம்மதி இருக்காது. முதலில் மாலதி அத்தை யிடம் பயாஸ்கோப்பைக் காண்பிக்க வேண்டும். பாதிமா வந்தால் அவளிடமும் காண்பிக்க வேண்டும்.
463

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் திரும்பியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. எல்லாரையும் சந்திக்கத் துடித தான். வீட்டுக்குள் நுழைந்ததும் தாத்தா, ుL-4 తత్ర நமலகாரம செய்தான். அவன் தாழ்வாரத்துக்கு வந்ததும், 'டிரஸ் மாத்திக்கினடு சாப்பிட வா, சோன' என்று அழைத்தாள் பெரிய மாமி. - எவ்வளவோ நேரத்துக்கு முன்னால் சாப்பிட்டது. ஆகையால
நியாயப்படி இப்போது நல்ல பசியிருக்க வேண்டும் அவனுக்கு, ஆனல் அவன் பெரிய மாமியின் வார்த்தையைக் காதில் போட்டுத் கொள்ளவில்லை. அவர்கள் கை கால்களைக் To கழுவிக்கொண்டு வந்தால் பெரிய மாமி அவர்களுக்குச் சாப்பாடு போடுவாள், ஆணுல் யாருமே சாப்பிட வரவில்லை. - ங் கடியில் கின்
சோன குளக் கரைக்கு ஒடிப் போய் மருதமரததடி 6ು நின்ருன. அங்கிருந்து பார்த்தால் சோபா ஆபுவின் வீடு | കൂഖണ முழங்கால் அளவு தண்ணிரில் நடந்து తి 35 Guru п 15131 விடு வெறிச் சென்று கிடந்தது. வீட்டில் நரேன்தாஸ் இல்லை, ஆபு இவலே. அவர்களுடைய அம்மாவும் இல்ல. யையும் காணவில்லை. யாரோ நெசவு அறையில் புகைய நறுக
o ப்பது தெரிங் |94్వ முேக இடமாகத் தோன்றியது சோை வுக்கு. வீட்டில் யாருமே இல்லை. சூரியன் அஸ்தமித்து ు--17. அறைகள் எல்லாம் காலியாகக் கிடந்தன. ೨೯u೯T '' அங்கிருந்து ஒட யத்தனித்தபோது மாலதி அத்தை ஒரு பிட் o மரத்தடியில் நிற்பதைக் ೧. தனியாக நின்று அவ
- - த்துக் கொண்டிருந்தாள். "ಕ್ಷ್ சென்ருன். வேறு நாட்களில் அத்தை அவனே அப்படியே 51.1 శీత5ు. ఆల్ట இன்று அவளுடைய கண்கள் உணர்ச்சியற்று ಶ್ರೀ J பின்னிக் கொள்ளவில்லை. அவள். முகத்திலும் ೯7ು೧. உணாசசயு மில்லை. தன்னுடைய உடம்பில் ಛ। ஒா ஆகததம ಶ್ರೀಪ್ತಿ விட்டாற் போலவும் அதை வெளியேற்றித் தன்னச் :: கொள்ள முயற்சி செய்பவள் Gມrລາຄາເ ೨೨೩e "... உமிழ்ந்தாள். எதிரில் யாரோ இருப்பது போல ஏதோ ū. o கொண்டே யிருந்தாள் அவள். சோணுைவப் பார்த்ததும் அவ అు ஒன்றும் பேசாமல் அப்படியே_நின்றுகொண் டிருநதா எா. சோனுவை அடையாளங் கண்டு கொண்டதாகவே தெரியவில்: e. சோன மரத்தடியில் போய் நின்றன். அவன త్రిత్రాతలి தன பயாஸ்கோப்பைக் காண்பிக்க வந்திருந்தான். இப்போது அவளு டைய முகத்தைப் பார்த்தபிறகு அவனுக்குப் பேச வார்த்தை
464

வரவில்லை. மாலதி அத்தைக்கு ஏதோ வியாதி வந்திருக்கிறது வியாதி வந்த ஆளுக்குத்தான் கண்ணும் முகமும் இந்த மாதிரி இருக்கும். அதற்கு மேலும் அங்கே நிற்க முடியவில்லை அவளுல். அவன் தன் பெரியம்மாவிடம் ஒடி, "மாலதி அத்தை மரத்தடியிலே ' என்று பேச ஆரம்பித்து முடிக்கவில்லை. "மாலதி கிட்டே போப் அவளைத் தொந்தரவு பண்ணுதே' என்ருள் பெரியம்மா.
"சித்தப்பா எங்கே ? சோபா, ஆபு எங்கே ? நரேன்தாஸ், பால் வீட்டிலே சுபாஷோட அப்பா இவங்கள்ளாம் எங்கே?' என்று அவன் பெரியம்மாவைக் கேட்டான்.
"பக் கிரி தர்காவிலே ஏதோ திருவிழா. ஊரிலே எல்லாரும்
W
திருவிழாவுக்குப் போயிருக்காங்க" என்ருள் பெரியம்மா.
பெரியம்மா சொன்ன பக்கிரி சாயபுவின் கதையைக் கேட்ட சோளுவுக்கு உலகத்தில் இன்ைெரு கர்ண பரம்பரைக் கதை பிறந் திருப்பதாகத் தோன்றியது.
அதிசயமான, நம்ப முடியாத நிகழ்ச்சிதான் இது. ஒரே இரவில் இரண்டு சம்பவங்கள் எப்படி நடக்கும்? நடக்காது, நடக்க முடியாது. நள்ளிரவில் நரேன்தாஸ் விட்டுவாசலில் பக்கிரிசாயபு தோன்றினர் சாட்சாத் லகஷ்மி தேவியைப் போல், தாயைப் போல், மாலதியை இங்கு விட்டுவிட்டுப் போளுர், ஆச்சரியம் என்ன வென்ருல், அதே இரவில் தர்காவில் ஏதோ பினத்தைப் புதைக்க வந்தவர்கள், ஜோட்டன் விளக்கை எரியவிட்டுக்கொண்டு உட் கார்ந்திருப்பதையும் அவள் அருகில் சவப்பெட்டியில் பக்கிரி சாயபுவின் சவத்தையும் கண்டார்கள்.
நரேன்தாஸின் விட்டுக்கும் தர்காவுக்குமிடையே பத்துக் கோச தூரம் ஆறுகளும் கால்வாய்களும் நிறைந்த பிரதேசம். அவற்றில் தண்ணிர் எப்போது பொங்கி வரும், எப்போது வடியும் என்று சொல்ல முடியாது.
படகில் கடக்க ஒரு நாள் பிடிக்கும் துரத்தை ஒரு முகூர்த்த நேரத்தில் கடந்துவிட்டாள், பக்கிரி சாயபுவின் பீபி. நள்ளிரவில் பக்கிரிசாயபு தன் வீட்டுவாசலில் தோன்றி மாலதியைத் தன்னிடம் ஒப்புவித்த அதிசயத்தை நரேன்தாஸ் எல்லாரிடமும் பரப்பிவிட் டான். பக்கிரிசாயபு விசுவரூபமெடுத்து, பல யோசனை தூரத்துக்கு வளர்ந்து, தம் அங்கியின் பையிலிருந்து மாலதியை ஒரு பொம்மையை எடுப்பது போல் வெளியே எடுத்து வைத்துவிட்டு ஒரு விநாடியில் காற்றில் மறைந்து போய்விட்டார் என்று அவர் இறந்த செய்தி கேட்டதும் அவனுக்குத் தோன்றியது.
465
30

இரவோடிரவாக, இந்நிகழ்ச்சியின் மூலம், ஒரு பீராக, அவதார புருஷராக ஆகிவிட்டார் பக்கிரிசாயபு. இன்னெரு கர்ணபரம்பரைக் கதை-மதத்தைப் போல, அந்தப் பனையோலைச் சுவடிக் கதைகளைப் போல. எப்போதும் தங்களுக்குள் தகராறு செய்துகொள்ளும் இரண்டு மதங்கள். ஒருபக்கம் அவன்-சோன இன்னெரு பக்கம், மைதானத்துக்கு அப்பால், படுகைக்கு அப்பால் உள்ள பாதிமா !
பாதிமா வந்ததும் சோளு அவளிடம் பயாஸ்கோப் பெட்டியைத் தந்தான்.
"யாரு கொடுத்தாங்க, சோளு பாபு ?"
"அமலா.'
"ஏன் கொடுத்தா ?'
"அவளுக்கு என்கிட்டே பிரியம்."
பாதிமா மருத மரத்தடியில் நின்றுகொண்டு, பேசாமல் சோளுவின் முகத்தைப் பார்த்தாள். 'எனக்குப் பயாஸ்கோப் வேண்டாம்?" என்ருள்.
: ஏன்?"
‘'வேண்டாம். நான் வாங்கிக்க மாட்டேன்."
"ஏன் வாங்கிக்க மாட்டே ?"
பாதிமா பதில் சொல்லவில்லை. சோளு மூடாபாடாவிலிருந்து திரும்பி விட்ட செய்தி கேட்டதும் தண்ணிரில் நடந்து அங்கு வந்து விட்டாள் அவள். வழியில் தண்ணிர் அதிகம் இல்லை, பாதம் மட்டும் முங்கும். பாதிமா வேறு பேச்சுப் பேசாமல் தன் புடைவையைச் சற்றுத் தூக்கிக்கொண்டு தண்ணிரில் இறங்கிளுள், வீடு திரும்புவதற்காக.
"அமலா எனக்கு அத்தை முறை' என்ருன் சோளு.
இப்போது பாதிமா திரும்பிப் பார்த்தாள். தண்ணிரிலிருந்து ஏறி வந்து பயாஸ்கோப்புக்காகக் கையை நீட்டினுள்.
சோனு பயாஸ்கோப்பின் கண்ணுடியைக் கண்ணுக்கு நேரே வைத்துக் கொள்ளும்படி பாதிமாவிடம் சொல்லிப் படங்களை மாற்றி மாற்றி அவளுக்குக் காட்டினன். அராபிய இரவுகளின் அதிசய உலகத்தை அந்தப் படங்களில் பார்த்து ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போய்விட்டாள் பாதிமா. நீங்க இவ்வளவு நாள் எங்கே போயிட் டிங்க ? என்று சோனவைக் கேட்க விரும்பிளுள் அவள். தினம் சாயங்காலமானதும் அவள் அவர்கள் வீட்டுக் கொய்யா மரத்தடி யில் வந்து நின்றுவிடுவாள். அங்கிருந்து இவர்கள் வீட்டு மருத மரம் தெரியும் ; மருதமரத்தடியில் யார் நின்ருலும் தெரியும்.
ஜேஷ்ட ஆஷாட மாதங்களில் மட்டும் சணல் பயிர் உயரமாக வளர்ந்துவிடுவதால் ஒரு மரத்தடியிலிருந்து இன்னொரு மரத்தடியைப் பார்க்க முடியாது. சணல் பயிர் அறுவடையான பிறகு, மறுபடியும்
466

ஒரு மரத்தடியிலிருந்து இன்ைெரு மரத்தடியில் இருப்பவர்களைப் பார்க்கலாம்.
அவள் அன்று மாலையிலும் அவனே இவ்வாறு பார்த்துவிட்டுத் தான் அவனைச் சந்திக்க வந்திருந்தாள். இருந்தாலும் அவன் மேல் அவளுக்குக் கோபமாக இருந்தது. அவனை ஏறிட்டுப் பார்க்க வில்லை, இவ்வளவு நேரம். ஆல்ை இப்போது சோன அவளுக்குப் பயாஸ்கோப்பைக் கொடுத்த பிறகு அவளுடைய கோபம் பறந்து போய்விட்டது.
"பாட்டி ஒரு தடவை உங்களே வந்துட்டுப் போகச் சொன்னுங்க" என்று அவள் சொன்னுள்.
அவளுடைய கொச்சைப் பேச்சைத் திருத்திஞன், சோனு. 'இது புஸ்தகத்துப் பேச்சுன்னு !' "புஸ்தகப் பேச்சுப் பேசக் கத்துக்கறியா?" 'எனக்கு வெட்கமா இருக்கு." 'எனக்குந்தான்' என்று சொல்லிச் சிரித்தான் சோனு, "அமலா அத்தை பெரியம்மா மாதிரி பேசரு. நான் பேசறதைத் திருத்திப் பேசச் சொல்ரு.'
"நீங்க என்ன சொன்னிங்க ?" “எனக்கு வெக்கமாயிருக்குன்னு சொன்னேன். ' 'எனக்குந்தான்' என்று சொல்லிவிட்டுப் பாதிமா தண்ணிரில் இறங்கினுள். மறுகரையில் ஏறிக் கொய்யா மரத்தடியை அடைந் ததும் அங்கிருந்து கையை ஆட்டினுள். சோளுவும் மருத மரத்தடி யிலிருந்து கையாட்டினன். இவ்வாறு சைகைகள் செய்துகொண்டு அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போர்ைகள்.
சோணு தெற்குப் பக்கத்து அறைக்குள் போனுன். அங்கே அலிமத்தி இல்லை. ஆபேத் அலி மட்டும் உட்கார்ந்திருந்தான். அலிமத்தியும் சித்தப்பாவும் திரும்ப நேரமாகும். அவர்கள் பக்கிரி யின் தர்காவுக்குப் போயிருந்தார்கள். இவ்வளவு பெரிய விட்டில் ஆண் துணை யாரும் இல்லை. இரவில் திருட்டுப் பயம். ஆகையால் சசீந்திர நாத் வீட்டுக்குக் காவலாக ஆபேத் அலியை வைத்து விட்டுச் சென்றிருந்தார். ஆபேத் அலி அங்கேயே சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்வான். சோன அரிக்கேன் விளக்கைக் கொண்டு வந்து வைத்தான். "நீங்க தர்காவுக்குப் போகவில்லையா ?' என்று ஆபேத் அலியைக் கேட்டான். "நாளைக்குப் போகப்போறேன்.' ஈசம் வந்துவிட்டதால் இனி ஆபேத் அலி அங்கே இருக்கத் தேவையில்லை. எல்லாரும் அவரவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது தர்காவுக்குப் போவார்கள்.
467