தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 29, 2018

வன சாட்சி - யூமா. வாஸுகி :: கணையாழி - ஜுன் 1995

வன சாட்சி - யூமா. வாஸுகி
வானம் பாதி விழிகள் மூடிய கிறக்கத்தின் உபரி வெளிச்சம் தன் வெளிர் சாம்பல் சருமத்திற்குள் சூழலைத் திணித்திருந்தது. சதுரக் காகிதத்தின் ஒரு முனையில் மட்டும் தொட்டு எழுகின்ற சுவாலை போல அந்தரத்தில் நிலைத்திருந்தது பெருஞ்சுடரின் கூர்மை. ஒளிப்புள்ளிகளைக் கணக்கற்று பிறப்பித்து, மாயைக்குள்ளாக எறிந்து கொண்டிருந்த துளை. அமானுடக் கருவிலிருந்தது . சப்தங்கள் மாய்ந்திருந்தன. அந்த ஜனக் கூட்டத்திற்கு முன்னே நீளும் ராஜபாட்டையின் முடிவில் ஸ்திர இருக்கையிலிருந்தது இலக்கு. தலையசைத்த கட்டளையால் அழைத்தது. - எவற்றாலும் வரையறுக்கப்பட்டு விடாதபடி மாற்றங்கள் தொடர்ந்த முகம். | தோற்றங் கள் - எதுவாயினும் தனக்குத் தானே. செதுக்கிக் | கொண்ட ஒரே பாவனை... தாகம். மற்றொன்று. இன்னும் ஒன்று. மீண்டும் உயிர். அதன் ஆயுதத்தின் கால் பகுதியும் உயிர் நிரம்பவில்லை . | ஏராளமாய் மீதமிருந்த இடத்திற்காக ஜனக் கூட்டம் அசைந்து முன்னேறியது. "

சவ லட்சணம் மெழுகிட்ட திரள் முகங்கள் நிதானமாய் நகர்ந்தன. அவற்றின் மருட்சியான "முறுவலிப்பு. நிகழும் இறுதிக் கணங்களைப் பற்றிய நிஜத்தில் மனந்திரிந்து போனதை வெளியாக்கிற்று.

- அறிந்தது முதல் அனுபவித்த காலத்தின் பழைய செதில்களுள் ஒன்றைத் தேர்ந்து கடைசியாக புதுப்பித்துக் கொள்ள விரும்பினார்கள். காலடியில் மிதிபட்ட பிணங்களின் சிதைந்த உறுப்புகள் முயற்சிகளைத் தடுத்தன, தவறித் தோன்றிய ஒன்றிரண்டு நினைவுகளும் அது நடந்த காலத்தின் பரவசத்தை நிரூபிக்கும் வலுவற்றுத் | தொய்வடைந்திருந்தன. நிராகரிக்கப்பட்ட தளர்ந்த உடல்கள் தெருவின் உதிரத் தேமல்களின் மேல் கால் படாத கவனத்தோடு சென்று கொண்டிருந்தன. தப்பிக்கின்ற வாய்ப்பு வைத்திருந்த மற்ற திசைக் கூறுகளை, இலக்கு, புகை நூற்கின்ற தன. சிலந்தியைக் . கொண்டு மறைத்திருந்தது புகைத் திரையால். மரணித்துக் கிடந்த உடல்களைக் கடந்து இலக்கடையும் தூரம் வரைதான் இருப்பிலிருந்த வாழ்க்கை . ஒருவர் தீர்ந்த கணமே வரிசையின் முடிவு வரையும் அதன் அதிர்வு - நீண்டது. முன்னே செல்பவர்களோடு இடித்துக் கொள்ளாமலிருக்க பின் தங்கி நடந்தார்களே தவிர எவருக்கும் தயக்கமில்லை . ஏனெனில் இலக்கின் அழைப்புக் கட்டளை யானது. அவர்களின் உணர்வாழத்தில் நின்று. அனுமதிக்கப்பட்ட வுழியைச் சுட்டியது.

- அவர்களோடுதான்,, அவர்களில் ஒருவனாக அவர்களைப் போலவே , அவனும் நடந்து கொண்டிருந்தான். " வழி தவறி • இவர்களோடு இணைந்தவன . புதிர்களையும், பயங்கரங்களையும் சுவைக்கக் கற்று விழியிற் தெரிந்தது அனுபவச் சுமை. தேசங்கள் தன் மேன்மையை இவனிடத்திலே இறைஞ்சக் கூடும். இவன் மரம் வரைபவன். பறவைக் கூடுகளின் எளிமையால் நெய்யப்பட்டிருந்தது இவனுடைய ஆன்மா. தொலைவான இருட்கானகங்களின் மரங்களுடாக சலசலத்தோடிய காற்று. அவனைத் தேடிக் காணாமல் சலிப்புற்று, ஏக்கமாய் அருவிச் சாரலோடு கலந்து மலையுச்சிக்குப் போனது. காற்றுப்போக்கில் உராய்ந்து அவன் அண்மைக்காக முனகியது, தன் உள்ளீடற்ற உடம்பில் அவன் பெயரை நிறைத்த மூங்கில் . | சாலைகளின் , கட்டிடங்களின் மேலாகப் பறந்து. . அவனது வரவுக்காகக் காத்திருந்தன இருப்பிடங்களைக் கைவிட்ட பறவைகள். அவைகளின் பார்வைக்கும், ராஜபாட்டையை மறைத்திருந்தது சிலந்தியின் திரை. மையமிழந்து சோம்பின தாவரங்கள், மரங்களின் ஆராதனைக்கென  ஒரே சாதகமாய் தூரிகையிருந்தது . தூரிகையின் இழைக் குச்சங்கள் எப்போது இயக்கப்படுமோ அப்போதெல்லாம் அவனது கித்தான்களில் பெயர்ந்து வாழ்வதற்கு ஆயத்தமாக இருந்தன எல்லாமும்.

- - அருகில் வந்தவர்களோடு, நட்புத் தன்மையான பேச்சைத் தொடங்குவதற்கும் தடையாயிருந்தது ஒளிப்புள்ளிகள், இறப்பு நோக்கிய ஈர்ப்பு சிந்தனையுள்  புகாது கொஞ்ச நேரம் நீடித்தது "சுதந்திர உணர்வு. மிகு தூரத்தில், கண் தெரியாத இடங்களில் புஷ்பிக்கும் மலர்களின் வாசனையை. இருப்பிலேயே நுகரும் புலன் மேய்ந்தது பச்சை உதிர வாடையை. சமரசம் அல்லது உடன்படிக்கை ஏற்பட்டுவிடக்கூடுமென்ற அச்சம் புரிய ஆரம்பித்தது. அவனது "ஒரு தலை தாழ்ந்த வணக்கம் மீட்சிக்கான அமரத்துவச் செய்திகளின் பிரகடனத்தை முறியடிக்கும். வளையக் கூடாதவனாய் பிறப்பித்திருந்தது இயற்கை . முதன் முதலாக தப்பித்தலின் அவசியம் ஆளுமை அற்ற மார்க்கங்களின் பால் உறிஞ்ச முயன்றது. ஒரு சாவு நடந்த அடுத்த வினாடி அனைவருக்கும் ஏற்பட்ட திடுக்கிடல், நடுக்கம் அவனையும் தொற்றியது. ' '

| மரம் வரைபவள் நெருங்கிக் கொண்டிருக்கிறான். சமீபத்திலிருக்கிறது இலக்கு. பலி வேட்கையில் விரிந்து மின்னும் விழிகள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மரணம். சிரம் துண்டிக் கப்பட்டு- அவயங்கள் சிதைக்கப் பட்டு வெறுமனே நின்ற இடத்திலேயே உயிரற்று விழச்செய்து நடந்தேறியது. இலக்கு ஒருவனது | தொண்டைக்குள் தன் நாவைச் செலுத்த அது நீண்டு உள்ளிறங்கி, குடலையும், பிறவற்றையும் தன் சுழற்சியால் அறுத்தது. மூன்றாவதாகவோ அல்லது நான்காவது ஆளாகவோ லெக்கிளி தரிசனத் திற்குட்படப்போகிறான் வரைபவன்.

| வேர்களின் விசித்திர முடிச்சுகளையும், மரப்பட்டை பிளவுகளிடையே கசிகின்ற திரவத்தையும். கிளைகளின் தேடல் பாஷையையும் உள்ளடக்கிய அற்புதங்களின் பட்டியல் கிழிபடப் போவதற்கு முன்னதாக ஒரு முறை நிமிர்ந்ததில் கழன்று விழுந்தது

அச்சம். அந்த நிமிடத்தில் மகிமைக்குப் புறம்பான விஷயங்கள் எல்லாருடைய மனங்களிலிருந்தும் சில நொடிகள் விலகி நின்று திரும்பவும் இணைந்து கொண்டன. இயற்கை நிலைப்பின ரூபங்களிட' மிருந்து உருவகிக்கப்பட்ட தீர்க்க தரிசன மிக்க ஆறுதல், பின், நடப்புகளை மரம் வரைபவனிடம் . கட்டி முடித்தது. "

- ஒவ்வொரு பலி முடிந்த பிறகும் முன்னிலும் அதிகமான சக்தியைக் கொண்டது இலக்கு. அடுத்ததை தலையிலிருந்து இடுப்பு வரைசரிபாதியாகப்பிளப்பதென்ற முடிவு. மேலோங்கிய ஆயுதம், உயர்ந்த நிலையிலேயே உறைந்தது. இறுகிய கண்ணாடிக் குழம்பா இருந்த இலக்கின சிந்தனையுள் புழு ஒன்றுதானித்து அதன் நெளிவுகளில் ஏற்பட்ட சன்ன விரிசல்கள் எதிர் நின்ற வரைபவனுக்கு பூகமானது. இலக்கு ஆயுதத்தைத் தாழ்த்தியது. இடது கையை உயர்த்தி, விரித்த விரல்களின் முனைகளில் இது காறும் சப்தங்களை விழுங்கிக் கொண்டிருந்த ஒளிப்புள்ளிகள் ஓட்டிக்கொண்டன. இப்போதுதான் ஓசை பிறந்தது.

யார் நீ

அவளைப்பற்றியும், அவன் சார்ந்தவைகளைப் பற்றியும் சொல்லத் தகுதியான வார்த்தைகளை ஆராய்ந்து களைப்படைந்தான். சம்பிரதாயமாக்கப்பட்ட வார்த்தைகளின் மீது ஏற்பட்ட அவ நம்பிக்கை, வினயமற்ற மோனத்தைக் கொடுத்தது. பதிலுக்கென நீளும் அவகாசத்தை இடை முறித்துச் சொன்னது இலக்கு.'

| 'போகலாம் ' நீ... வழி பாட்டுக்குரியவர்களை - நான் கொல்வதில்லை'.

அவன் புன்னகை தடவிய உதடுகளோடு ஏறிட்டுப் பார்த்தான். கண்ணாடிக் குழம்பின் விரிசல்களுக்கிடையில் புழு இப்போது ஆழமான கீறலொன்றை உண்டு செய்திருப்பதை விளங்கி, இலக்கைக் கடந்து மெதுவாக நடக்கத் தொடங்கினான். மீண்டும் வெளியில் தவழ்ந்தன ஒளிப் புள்ளிகள். அடுத்த பலியிலிருந்து தெறித்த ரத்தம், வரைபவனின் பிடறியில் பட்டு வழிந்தது. , ,

- கவிழ்ந்திருந்த புகை ஒடு பிரிந்து மெதுவாக எங்கும் துலக்கமாகிக் கொண்டிருந்த போது எதிர்ப்பட்ட முதலாவது குடிசைக்குள் நுழைந்தான் . யாருமற்ற உள்ளிடத்தில் புனிதமும், தூய்மையுமான மணம் விரவி இருந்தது. அதன் கவர்ச்சியான மயக்கம் மனுஷ அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட பேருணர்வை பிரத்யகப்படுத்தியது. அவயங்களின் இணைப்புகலெல்லாம் வியப்பின் கணுக்களாக்கி வரைபவன் நின்று கொண்டிருந்தான். உடல், உடைமடிப்பிலிருந்து உதிர்ந்தளிப்புள்ளி ஒன்றிலிருந்து அதையொத்த பல நூறு புள்ளிகள் பெருகிச் சுழன்றன. குடிசையின் சுவர்; கடல் திரவம் போலாயிருந்தது. குளிர் மென்மையின் நீல நிற "விசாலத்தினூடே புலப்பட்டுக் கொண்டிருந்தது பெண்ணுருவம். | தோன்றிக் கொண்டிருக்கையிலேயே அவள் உடல் நெளிவுகளில் பீறிட்ட , நவயௌவன வசீகரம் அவன் நினைவுகளை முற்றுமாய்க் கைப்பற்றியது. உருவம் பூர்த்தியாகும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் - அவள் இமைத்தாள். அந்த மோகனச் சிமிட்டலுக்கு வயப்பட்டு ஓரடிமுன் நகர்ந்து, அவளை ஏந்திக் கொள்ளத் தயாராயிருந்தான் . கடைசியாக புருவமும், உதட்டின் வரிகளும் துல்லியமடைந்த பின்னர் அவள் முழுமையான வடிவெடுத்து அவனின் அனுஷ்டானத்திற்குத் தன்னைச் சமர்ப்பித்து நின்றாள்.

ஒன்றினது மற்றொன்றின் ஆளுகையென இரு பிழம்புகளின் ஆவேசக் கலப்பில் தோன்றிய சிரேஷ்டக் கிரணங்கள், குடிலெங்கும் தெய்வ சஞ்சாரத்தின் அடையாளங்களைச் சம்பவித்தன. உடல் அதிர்வுகளில் பூத்தெளிப்பாய் ஆன்மா சிலிர்த்து விழித்தது. முயக்கத் தொடர் அலையின் எழுச்சி, துளைத்துச்சென்றது சகல தப்பிதங்களையும். உடல்கள் குழைந்தன. இறுகின. நெட்டுயிர்த்தன.பாதாளத்திற்கும் - சிகரத்திற்குமான ஊசலாட்டம், காம பரிபாலனத்தை நடத்திச் சென்ற இச்சையின் நிவர்த்தி. தொலைவே நின்று கொண்டு. வனப் பதாதைகளை வீசி நர்த்தனமாடியது. வேகமான மூச்சுக் காற்று. மலைகளில் தூர்ந்து கிடந்த நீர்ச்சுனைகளை எழுப்பி பொங்கச் செய்தது. கரங்களின் வலுவான ஸ்பரிசத் தேடுதலில் கரை உடைந்து எட்டிய இடத்தில் பாய்ந்தது மகிழ்வு. சூன்யத்தில் நிர்ணயமான வாயில்களிடையில் அடங்கியும், ஆர்ப்பரித்தும் மென் துகிலொன்று இரண்டுடற் கலந்த | மாம்ச வாசனையியற்றி களிப்பில் மிதந்தது.
பிணை நிறுத்தி புணரச் செய்து போன ' யதார்த்தம் திரும்புகையில், சொப்ன உலகு, தன் அளப்பரிய விரிவைச் சுருக்கி மறையும் தருணம் நெருங்கிக் கொண் டிருந்த போது, ஏக காலத்தில் பனி உருக தீவிரங் குறைந்தது அக்னியும். களைப் படைந்து சயனித்தவளின் விலாப் புறங்களில் சிறகுகள் முளைக்கத் தொடங்கின . சிறகுகள் முழு வளர்ச்சி அடைந்த பின் பறந்து போக எத்தனித்த அவளைப் பற்றியிழுத்து இறுதியாக இமைகளில் முத்தமிட்டான் மரம் வரைபவன். அவள் இமை ரோமங்களில் சில, அவன் உதடுகளோடு தங்கியது. அவளின் குழந்தைச் சுவாச மணத்தை ஆழநுகர்ந்து இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்ட பின் குடிலின் கதவைத் திறந்தான். வெளியே முன் பார்த்த எதுவுமின்றி செழிப்பின் ஜீவனோடு சூரியனைக் கலந்து. ஆரவாரமாய்க் குலுங்கி' அவனை வரவேற்றது பெருங் கானகம், வனங்களின் சாட்சியானவன் திரும்பவும் காட்டிலேயே தன் உலவுதலைத் தொடங்கினான். காப்பிலிருந்த அவளின் இமை | ரோமங்கள், இலை நரம்புகளின் நுட்பத்தைச் சொல்வதற்கு ஒரு தூரிகைப்பொருளாக உதவக்கூடும்

Thursday, September 27, 2018

'கவந்தனும் காமனும்' புதுமைப்பித்தன் கதைகள் தழுவல் குற்றச்சாட்டு- தொ.மு.சி. ரகுநாதன்



'கவந்தனும் காமனும்'

 'சிட்டி' என்ற பெ. கோ. சுந்தரராஜனும், யாழ்ப்பாணத் தமிழரான சோ. சிவபாத சுந்தரமும் சேர்ந்து, தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் என்ற 367 பக்கங்கள் கொண்ட பெருநூல் ஒன்றை எழுதி, 1989 இல் வெளியிட்டுள்ளனர். 1978இல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய நான்கு சொற்பொழிவுகளின் விரிவாக்கமே இந்நூல், பொதுவாக, சிட்டி எந்தவொரு நூலையும் தனியாக எழுதுவதில்லை. அவரோடு நடத்திய பேட்டியொன்றில் கு.ப.ரா., தி.ஜா. சிவபாதசுந்தரம் என்று எப்போதுமே கோ - ஆதாருடன் சேர்ந்தே முக்கிய நூல்களை எழுதியிருக்கிறீங்களே? என்று இது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது, அவர் அதற்குக் காரணம் என் சோம்பல் தான். என்னால் பொறுமையாக உட்கார்ந்து நிறைய எழுத முடியாது. ஆனால் தகவல்களைத் திரட்டுவது, ஒழுங்குபடுத்திப் பிரிப்பது, பிறகு கோவைப்படுத்தி அதனடிப்படையில் டிக்டேட்' செய்வது எல்லாம் எனக்கு சுலபம். அதுதான் காரணம் என்று கூறியுள்ளார். (சுபமங்களா நேர்காணல். மே.1992) அதனால் மேற்குறிப்பிட்ட நூலில் கூறப்பட்டிருப்பாவையும் நான் சிட்டியின் கருத்துக்களே என்று எடுத்துக் கொள்கிறேன். ( இந்த நூலில், இலங்கை மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றைச் சேர்ந்த சிறுகதை ஆசிரியர்கள், அங்கு நிகழ்ந்த சிறுகதை வளர்ச்சி மற்றும் வரலாறு ஆகிய விவரங்களை வழங்குவதில் மட்டுமே சிவபாதசுந்தரம் பெரும்பங்கு வகித்திருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்.)

பொதுவாக, இந்நூல் ஏராளமான தகவல்களையும், ஆதாரங்களையும் சேகரித்து, தமிழில் சிறுகதை வளர்ச்சியையும் வரலாற்றையும் விரிவாகக் கூறுகிறது என்ற முறையில், எல்லோரும் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை. என்றாலும், உதாரணமாக, மாதவையா எழுதிய கதை என்று கருதி, வேறொருவர் எழுதிய கதையொன்றைக் குறைகூறி, சி.சு.செல்லப்பா எழுதியுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டும் பகுதியில், தமிழில் திறனாய்வுகள், டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நுனிப்புல் மேயும் நிலையில்தான் இருக்கின்றன' (பக். 38) என்று குற்றம் புதுமைப்பித்தன் கதைகள்

சாட்டுகின்ற சிட்டியும், இந்நூலில் சில தகவல்களைத் தமது விருப்பு வெறுப்புக்களுக்கேற்பத் திரித்தும் மறைத்தும் திரையிட்டு மூடியும் தெரிவிக்கும் குற்றத்துக்கு உள்ளாகியுள்ளார் என்பதோடு, இவரும் விமர்சனம் என்ற பெயரால் சில விஷமத்தனங்களையும் புரிந்துள்ளார் என்பதை, எனது இந்த நூலின் பின்வரும் பக்கங்களில் உரிய இடங்களில் நான் விளக்கிக் கூறுவேன்.

மேற்கண்ட நூலில் புதுமைப்பித்தனும் மாப்பஸானும் என்ற உபதலைப்பின் கீழ் புதுமைப்பித்தன் தழுவி எழுதிய மாப்பஸான் கதைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுவதற்கு முன்பே, எடுத்த எடுப்பில் முதல் பாராவிலேயே புதுமைப்பித்தன் மீது தழுவல் இலக்கியக் கர்த்தா என்ற முத்திரையைக் குத்தும் ஆர்வத்திலும் ஆத்திரத்திலும் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுப்பின் இரண்டாவது பதிப்பை (1955) விமர்சித்த பேராசிரியர் ரா. ஸ்ரீ தேசிகன் அவருடைய கதைகளில் கவந்தனும் காமனும்' என்ற கதை ஆல்டஸ் ஹக்ஸ்லியின் (Aldous Huxley) கதையொன்றின் தழுவல் எனக் குறிப்பிட்டிருந்தார். இதே பேராசிரியர் 1940 இல் இந்தத் தொகுப்பின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் மேற்சொன்ன அபிப்பிராயத்தைச் சொல்லவில்லை. அன்று புதுமைப்பித்தனின் இலக்கியப் புகழ் உச்சகட்டத்திலிருந்ததால் இத்தகைய குறைபாடு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை போலும்

(தமிழில் சிறுகதை - வரலாறும் வளர்ச்சியும் . பக். 155), மேற்கண்ட மேற்கோளில் எது உண்மை, எதெது பொய் என்பதை நான் கூறப் புகுவதற்கு முன்னால், இங்கு வேறோர் ஆய்வுரையைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.

பல்கலைக்கழகப் பட்டம் பெறுவதற்காக 1975 - 80 ஆண்டுகளில் புதுமைப்பித்தன் கதைகளையும் ஜெயகாந்தன் கதைகளையும் ஒப்பாய்வு செய்தவரும், சிட்டி, க.நா.சு., சி. சு. செல்லப்பா முதலிய மணிக்கொடி எழுத்தாளர்கள் பு. பி. பற்றிக் கூறிய சில கூற்றுக்களை வேதவாக்காக ஏற்றுக் கொண்டிருப்பவருமான வேதசகாயகுமார் என்ற ஆய்வாளர், புதுமைப்பித்தன் - கதைகளின் கதை என்ற தமது கட்டுரை ஒன்றில் (காலச்சுவடு - இதழ் 11, 1995), புதுமைப்பித்தன் கதைகள், காஞ்சனை, ஆண்மை என்ற மூன்று தொகுப்புக்களும் புதுமைப்பித்தனால் தெரிந்தெடுக்கப்பட்ட கதைகளைக் கொண்டவை என்று எழுதி, (முதலில் ஊழியன் பத்திரிகையில் வெளிவந்ததும், பின்னர் புதுமைப்பித்தனின் ஆறு கதைகள் என்ற தொகுதியில் இடம் பெற்றதுமான) புதுமைப்பித்தனின் செவ்வாய் தோஷம் என்ற கதையை ஒரு தழுவல் கதை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்வினையாக நான் எழுதிய கட்டுரையில் (காலச்சுவடு - இதழ் 12, 1995) புதுமைப்பித்தன் உயிரோடு இருந்த காலத்திலேயே புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலை வெளியிட்ட நவயுகப் பிரசுராலயம், இந்தத் தொகுதியைத் தொடர்ந்து ஆறு கதைகள்' என்ற தலைப்பில் புதுமைப்பித்தனின் ஆறுகதைகளை ஒரு நூலாகவும், மற்றும் நாசகாரக் கும்பல்' என்ற நெடுங்கதையை அதே தலைப்பில் தனிநூலாகவும் வெளியிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி புதுமைப்பித்தனால் தேர்வு செய்யப்பட்டு வெளிவந்த சிறுகதைத் தொகுதிகள் புதுமைப்பித்தன் கதைகள், காஞ்சனை, ஆண்மை ஆகிய மூன்று மட்டுமே என்று கூறுவது எப்படிச் சரியாகும் என்று கேட்டிருந்தேன். அத்துடன் செவ்வாய் தோஷம்' ஒரு தழுவல் கதை என்பது அவரது கண்டுபிடிப்பானால் அதன் மூலக்கதை எதுவென்று எனக்குத் தெரிவிக்குமாறும் கேட்டிருந்தேன்.

ஆனால் எனது கட்டுரைக்கு எதிர்வினையாக அவர் மீண்டும் எழுதிய கட்டுரையில் (காலச்சுவடு - இதழ் 13; 1996). செவ்வாய் தோஷம்' தழுவல் கதை என்றால், அதன் மூலக்கதை எது என்ற என் கேள்விக்குப் பதிலளிக்காமல், புதுமைப்பித்தனால் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆண்மை, காஞ்சனை, புதுமைப்பித்தன் கதைகள் என்ற மூன்று தொகுதிகளும் என்றே கூறுகிறேன்' என்று முன்னர் கூறியதையே மீண்டும் கூறி, முதலிரு தொகுதிகளிலும் கதைத் தேர்விற்கான காரணங்களை அவரே கூறுகிறார். 'புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிக்கான கதைகளைத் தெரிவு செய்வதிலும் அவருடைய பங்கு உண்டு என்ற தகவலை என்னால் பெற முடிந்தது என்று எழுதியதோடு அவர் குறிப்பிட்டுள்ள மூன்று தொகுதிகளிலும், புதுமைப்பித்தன் தழுவல் கதைகளைப் புறக்கணித்துள்ளார் என்ற என் நிலைப்பாடு சரியானது தானே' என்று மார்தட்டித் தமக்குத் தாமே மாலை போட்டுக் கொள்கிறார். ' ஆறு கதைகள்' என்ற தொகுதியில் இடம் பெற்றிருந்த செவ்வாய் தோஷம் என்ற கதையின் பிரசுர வரலாறு தெரியாமல், அதனைத் தழுவல் கதை என்று அவர் முடிவு செய்துவிட்டதால் நேர்ந்த தவறான முடிவுதான், புதுமைப்பித்தன் தெரிவு செய்து வெளியிட்ட கதைத் தொகுதிகள் ஆண்மை , காஞ்சனை, புதுமைப்பித்தன் கதைகள்
ஆகிய மூன்று மட்டுமே என்ற முடிவாகும்.

ஆண்மை , காஞ்சனை ஆகிய இரு தொகுதிகளிலும் புதுமைப்பித்தன் எழுதிய முன்னுரைகள் இடம் பெற்றிருந்தன. எனவே அவை புதுமைப்பித்தன் தெரிவு செய்த கதைகளே என்று தீர்மானிப்பதில் வேதசகாயகுமாருக்குச் சிரமம் இருக்கவில்லை. ஆனால் புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியில் புதுமைப்பித்தனின் ஆசிரியர் முன்னுரை எதுவும் இடம் பெறவில்லை. அதனால் அவர் அந்தக் கதைகளைத் தெரிவு செய்வதிலும் புதுமைப்பித்தனுக்குப் பங்கு இருந்தது என்ற தகவலைத் தம்மால் பெற முடிந்தது என்று கூறிச் சமாளிக்க முயன்றிருக்கிறார். வேதசகாய குமார் தமது ஆராய்ச்சியைத் தொடங்கிய 1975 ஆம் ஆண்டுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியை வெளியிட்ட நவயுகப் பிரசுராலயம் அஸ்தமித்துப் போய்விட்டது. புதுமைப்பித்தன் கதைகள் தொகுதி வெளிவந்த காலத்தில் நவயுகப் பிரசுராலயத்தின் பதிப்பாசிரியராக இருந்த ப. ராமஸ்வாமியும் அப்போது உயிரோடு இருக்கவில்லை. இந் நிலையில் புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிக்கான கதைகளைத் தெரிவு செய்வதில், புதுமைப்பித்தனுக்கும் பங்கு இருந்தது என்ற தகவலை ' யாரிடமிருந்து பெற்றார் என்பது வேதசகாய குமாருக்கே வெளிச்சம்!

ஆனால் புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதிக்கான கதைகளைத் தெரிவு செய்வதில் மட்டுமல்லாமல், நான் குறிப்பிட்ட ஆறுகதைகள், நாசக்காரக் கும்பல் ஆகியவற்றைப் பிரசுரத்துக்குத் தெரிவு செய்து திருத்தம் செய்து கொடுப்பதிலும் புதுமைப் பித்தனுக்குப் பங்கு இருந்தது என்பதற்கு அகச்சான்றுகளே உள்ளன. உதாரணமாக, புதுமைப்பித்தன் கதைகள் தொகுதியில் இடம் பெற்றுள்ள கவந்தனும் காமனும்' என்ற கதை வ.ரா. காலத்து மணிக்கொடிப் பத்திரிகையில் 22-7-1934 இதழில் வெளிவந்த காலத்தில், அந்தக் கதையில் வரும் பின்வரும் பகுதி கீழே கண்டவாறுதான் எழுதப்பட்டிருந்தது.

அதோ மூலையில் சுவற்றருகில் பார்த்தாயா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீ போட்டிருக்கிறாயே, உன் பாப்ளின் ஷர்ட்டு; உன் ஷெல் பிரேம் கண்ணாடி எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான், அப்பா ரொம்ப ஜம்பமாக, நாஜுக்காக கண்ணை மூட வேண்டாம் எல்லாம் அந்த வயிற்றுக்காக '

மூலப் பிரதியில் வாசகனை ஒருமையில் விளித்த புதுமைப்பித்தன் கதைத் தொகுதியில் மரியாதைப் பன்மையோடு விளித்து, சில சொற்பிழைகளையும் திருத்தியிருக்கிறார். தொகுதியில் இடம் பெற்றிருந்த இந்தப் பகுதி வருமாறு: 'அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது. நீங்கள் போட்டிருக்கிறீர்களே, பாப்ளின் ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி! - எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, நாஸக்காக கண்ணை மூட வேண்டாம். எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான்'

(இதேபோல் அவர் அத்தொகுதியில் இடம்பெற்ற விநாயக சதுர்த்தி என்ற கதையிலும் சில திருத்தங்களைச் செய்திருந்தார். அவை என்ன என்பதை இந்நூலில் பிறிதோரிடத்தில் பார்ப்போம்).

ஆறு கதைகள், நாசகாரக் கும்பல் ஆகிய நூல்களில் பதிப்புரையோ, முன்னுரையோ இடம் பெறாமல் புதுமைப்பித்தன் பார்த்துக் கொண்டது ஏன் என்பதை முந்திய அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறேன், அதில் நான் கூறியதை நம்பாவிட்டாலும், இவ்விரு நூல்களையும் தெரிவு செய்து திருத்தம் செய்து கொடுப்பதில் புதுமைப்பித்தனுக்கும் பங்கு இருந்தது என்பதற்கும் அந்நூல்களிலேயே அகச்சான்றுகள் உண்டு. பத்திரிகையில் வெளிவந்த காலத்தில், அபார்ஷன் என்ற தலைப்பிலேயே வெளிவந்த கதை (இந்தக் கதை புதுமைப்பித்தன் மரணத்துக்குப் பின்னால், 1953 ஏப்ரலில் தமிழ் சுடர் நிலையம் வெளியிட்ட அவளும் அவனும்' என்ற தொகுப்பில் இந்த தலைப்பிலேயே வெளிவந்தது. ஆறுகதைகள்' என்ற தொகுதியில் 'கருச்சிதைவு' என்ற புதுமைப்பித்தனின் திருத்தத்தோடு கூடிய தலைப்பிலேயே வெளிவந்தது என்பது இதற்கொரு சான்றாகும். இதேபோல் நாசகாரக் . கும்பல்' என்ற நெடுங் கதையை நவயுகப் பிரசுராலய வெளியீட்டுக்குத் திருத்தம் செய்து கொடுத்ததிலும் புதுமைப்பித்தனுக்குப் பங்கு இருந்தது. பி. எஸ். ராமையா காலத்து மணிக்கொடியில் 1.11.1937 இதழில் இக் கதை வெளிவந்த காலத்தில் புதுமைப்பித்தன் அந்தக் கதையில் தம்மையறியாமலே ஒரு தவறு செய்திருந்தார். அதில், வரும் மருதப்ப மருத்துவனாரின் மனைவி காலமாகிவிட்டார் என்று கதையின் முற்பகுதியில் எழுதிவிட்டு, கதையின் பிற்பகுதியில் அவர் மனைவியின் கைத்தாங்கலில் தள்ளாடி வந்ததாக எழுதியிருந்தார். இந்தத் தவற்றுடனேயே அந்தக்கதை மணிக்கொடியில் வெளிவந்திருந்தது. இந்தத் தவற்றைக் குறித்து, என் கதைகளும் நானும் என்ற கட்டுரையில் அவர் சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார். (புதுமைப்பித்தன் கட்டுரைகள் - பக். 5). ஆனால் நாசகாரக் கும்பல் கதை தனிநூலாக வெளிவந்த காலத்தில் புதுமைப்பித்தன் இந்தத் தவற்றைத் திருத்திக் கதையைச் சீர்படுத்திக் கொடுத்திருந்தார். இந்தத் திருத்தத்தோடுதான் அக்கதை நூல் வடிவில் வெளிவந்தது என்பதே. இதனை உறுதிப்படுத்தும் சான்றாகும்.

இந்த உண்மைகளை யெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புதுமைப்பித்தன் தெரிவு செய்து கொடுத்த கதைத் தொகுதிகள் ஆண்மை, காஞ்சனை, புதுமைப்பித்தன் கதைகள் ஆகிய மூன்று மட்டுமே என்று சாதித்து, தாம் தெரிவு செய்து கொடுத்த இந்தத் தொகுதிகளில் புதுமைப்பித்தன் தழுவல் கதைகளைப் புறக்கணித்துள்ளார் என்ற தமது நிலைப்பாடு சரியானதே என்று தமக்குத்தாமே பெருமை பாராட்டிக் கொள்ளும் வேதசகாயகுமார், அந்த கட்டுரையில் (காலச்சுவடு - இதழ் 13, 1996) தாம் இவ்வாறு முன்னர் கூறியதையே மறந்துவிட்டு, புதுமைப்பித்தன் கதைகள் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளில் இரண்டு கதைகள் தழுவல் கதைகள் என்று சான்றாதாரங்களோடு குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் வேடிக்கை : விசித்திரம்! அவற்றில் ஒன்று கவந்தனும் காமனும் (மற்றொரு கதை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம். மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
*22.7.34 மணிக்கொடி இதழில் வெளியான 'கவந்தனும் காமனும் தழுவல் கதை என புதுமைப்பித்தன் கதைகளுக்கு கூட மதிப்புரை எழுதிய ரா.ஸ்ரீ. தேசிகன் கூட குறிப்பிட்டிருக்கிறார். ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதை என மூலத்தைக் கூடக் குறிப்பிட்டிருக்கிறார். '
இவ்வாறு அவர் எழுதியதற்கு ஆதாரம் என்ன? 1989 இல் வெளியான சிட்டியின் தமிழில் சிறுகதை - வரலாறும் வளர்ச்சியும்' என்ற நூலில் காணப்படும் (நான் முன்னர் குறிப்பிட்டுள்ள ) அதே மேற்கோள்தான் இவருக்கு ஆதாரம். சிட்டி விமர்சனம் ' என்று எழுதியதை இவர் மதிப்புரை என்று மாற்றியுள்ளதோடு, 'தேசிகன் கூட' என்று கூட ' என்ற அடைமொழியைச் சேர்த்து, தாம். கூற வந்ததை மேலும் அழுத்தமாகக் கூறியுள்ளார் என்பதுதான் வித்தியாசம். மேலும், மூலத்தைக் கூடக் குறிப்பிட்டிருந்தார்' என்று சிட்டி கூறாத வாசகத்தைத் தாமாகவே சேர்த்து மேலும் அழுத்தம் கொடுத்திருந்த வேதசகாயகுமார், ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அந்த மூலக்கதை எது என்ற தேவையான விவரத்தை மட்டும் தெரிவிக்காமலே விட்டுவிட்டார். ஏனெனில் அது அவருக்குத் தெரியாது என்பதே உண்மை நிலை! இவ்வாறு எழுதிவிட்டு ஆனால் இதை வைத்து அவரை (புதுமைப்பித்தன் மதிப்பிட யாரும் முனையவில்லை' என்று அடுத்த வரியில் சப்பைக்கட்டு வேறு கட்டியுள்ளார்!

சரி. சிட்டி மேற்கண்டவாறு எழுதியதற்கு ஆதாரம் என்ன? தமது நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள குறிப்புகள்' என்ற பகுதியில், 'ராமையா பி. எஸ். - மணிக்கொடி காலம் என்று அந்நூலின் பக்க எண்ணைக்கூடக் குறிப்பிடாமல் ஆதாரம் காட்டியுள்ளார்.

உண்மையில் பி.எஸ்.ராமையாவின் 'மணிக்கொடி காலம் என்ற நூலில் அவர் எழுதியிருந்தது என்ன? அது பின் வருமாறு:
ஒரு நாள் மாலையில் நானும் புதுமைப்பித்தனும் செம்புதாஸ் தெருவழியாகச் செல்லும்போது, அந்தத் தெருவைக் குறுக்கில் வெட்டிக் கொண்டு செல்லும் ஜோன்ஸ் தெரு அல்லது டூம்ஸ் தெரு முனையில் கண்ட ஒரு காட்சியும் இரண்டு கதைகளுக்குப் பொருளாக அமைந்தது.
புதுமைப் பித்தன் 'கவந்தனும் காமனும்' என்ற கதையை எழுதினார். அது வாரப்பதிப்பில் வெளிவந்தது. நான் 'கார்னிவல்' என்ற தலைப்பில் எழுதியது கதைப் பதிப்பில் வெளிவந்தது.
'பின்னால் ஒரு கதைத் தொகுப்பில் 'கவந்தனும் காமனும் வெளிவந்தது. அந்த நூலுக்கு மதிப்புரை எழுதிய ரா ஸ்ரீ தேசிகன் அந்தக் கதை ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல்தான் என்று ஹிந்து பத்திரிகையில் எழுதியிருந்தார்.
'அதைப் படிக்க எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தக்கதை பிறப்பதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சி, அதை நேரில் கண்ட நானும், புதுமைப்பித்தனும் அதை வைத்து ஆளுக்கு ஒரு கதை எழுத வேண்டுமென்று செய்த தீர்மானம் ஆகியவற்றை விளக்கி, ஹிந்துவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் என் கடிதம் பிரசுரமாகவேயில்லை . " எனக்குத் தெரியாமல் தேசிகனின் கூற்றுக்கு சிதம்பர சுப்பிரமணியமும் ஒரு மறுப்பு எழுதியனுப்பினார் என்று பின்னால் அறிந்தேன். அவருடைய மறுப்புக் கடிதமும் ஹிந்துவில் வெளிவரவில்லை . (மணிக்கொடி காலம் - பக். 136 - 137).
மணிக்கொடி காலம் என்று நூலை வேதசகாய குமாரும் அறியாதவர் அல்ல. மணிக்கொடி காலம் 1969, 70 களில் தீபம் இதழில் தொடராக வெளிவந்தது என்பதைத் தாம் அறிந்திருந்ததை. முன்னர் குறிப்பிட்ட அதே கட்டுரையில் பிறிதோரிடத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வேதசகாய குமாரும் சரி. அவருக்கு ஆதாரமான சிட்டியும் சரி, 'மணிக்கொடி காலம் என்ற நூலில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருந்ததை மறந்து (அல்லது மறுத்து) விட்டது ஏன்? - பி. எஸ். ராமையா கூறியுள்ளதை அடியோடு மறைத்து, 'கவந்தனும் காமனும் ஒரு தழுவல்கதைதான், அதற்கு ஆதாரம் உள்ளது என்று கூறி, புதுமைப்பித்தனின் சொந்தக்கதை ஒன்றின் மீது தழுவல் முத்திரை குத்த விரும்பிய விருப்பமே இதற்குக் காரணம் என்று கூற முடியாதா?

ராமையா இந்துப் பத்திரிகையில் புதுமைப்பித்தன் கதைத் தொகுதிக்குத் தேசிகன் ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். அதில் 'கவந்தனும் காமனும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ஓர் ஆங்கிலக் கதையின் தழுவல் என்று எழுதியிருந்தார் என்ற தகவலை மட்டுமே எழுதியிருந்தாரே தவிர, அந்த மதிப்புரை எந்த ஆண்டில் வெளிவந்தது என்பதையும் குறிப்பிடவில்லை. ஆல்டஸ் ஹக்ஸ்லியின் மூலக் கதையின் தலைப்பு என்ன என்பதையும் குறிப்பிடவில்லை . இவற்றை அவர் குறிப்பிடத் தவறியதற்கு அவரைக் குறைகூற இடமில்லை. ஏனெனில் அவரே 'மணிக்கொடி காலம் 11 ஆம் அத்தியாயத்தை பின்வருமாறே தொடங்கியுள்ளார்; 'இந்தக் கட்டுரைத் தொடரை நான் முழுவதும் ஞாபகத்தின் வலுவிலேயே எழுதி வருகிறேன். அந்தக் காலத்திய நாட்குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை .'

எனவே ராமையா தேசிகனின் அந்த மதிப்புரை இந்துவில் எந்த ஆண்டில் அல்லது தேதியில் வெளிவந்தது. அதில் கவந்தனும்தொ.மு.சி. ரகுநாதன்

காமனும் கதையின் மூலக்கதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லியின் எந்தக் கதையைத் தேசிகன் குறிப்பிட்டிருந்தார் என்ற முக்கியமான விவரங்களை அவரால் நினைவு கூர்ந்து எழுத முடியவில்லை. மேலும் ராமையாவே கூறியதுபோல் மணிக்கொடி காலம் என்ற நூல் நினைவுக் குறிப்புக்களே தவிர ஆராய்ச்சி நூலல்ல. எனவே, இந்த விவரங்களை ராமையா கூறாது விட்டது குறித்து அவரை நாம் குறைகூற முடியாது.

ஆனால், தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் விரிவாக ஆராய்ந்து கூற முனைந்த ஒரு நூலை எழுதியுள்ள சிட்டி, பி.எஸ். ராமையா குறிப்பிட்ட 'இந்துப் பத்திரிகையின் மதிப்புரையைத் தேடிப்பார்க்கும் சிரமத்தை மேற்கொள்ளாமல் 'மணிக்கொடி காலம்' நூலில் கூறியிருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, தாம் எழுதிய பகுதியில், தாம் மிகவும் ஆதாரபூர்வமாக எழுதுவதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கோடு - பச்சையாகச் சொன்னால் வாசகர்களை ஏமாற்றும் நோக்கத்தோடு - புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியின் இரண்டாவது பதிப்பை (1955) விமர்சித்த ரா.ஸ்ரீ. தேசிகன்' என்று ராமையாவின் நூலில் கூறப்படாத ஒரு தகவலை கூடுதலாகக் கூறியதோடு நிறுத்திக்கொண்டு அந்த விமர்சனம் இந்துப் பத்திரிகையில் வெளிவந்தது என்ற தகவலையும், இந்த விமர்சனத்தை மறுத்து, ராமையா. இந்துப் பத்திரிகைக்குக் கடிதம் எழுதியது போன்ற விவரங்களையும் மட்டும் வேண்டுமென்றே மறைத்து விட்டிருக்கிறார்.

இதற்குக் காரணம் என்ன? புதுமைப்பித்தன் கதையின் முதற்பதிப்பு 1940 இல் வெளிவந்தது என்பதும், அதற்குத் தேசிகன் ஒரு முன்னுரை எழுதியிருந்தார் என்பதும், அந்த முன்னுரையில் 'கவந்தனும் காமனும்' என்ற கதை ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதை ஒன்றை நினைவூட்டுகிறது என்று கூடத் தேசிகன் எழுதவில்லை என்பதும், புதுமைப்பித்தன் கதைகளின் முதற்பதிப்பு வாசகர்கள் பலரையும் போலவே சிட்டிக்கும் தெரியும். எனவேதான், தேசிகன் அந்த முன்னுரையில் மேற்சொன்ன அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவில்லை. அன்று புதுமைப்பித்தனின் இலக்கியப் புகழ் உச்சக் கட்டத்திலிருந்ததால் இத்தகைய குறைபாடு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்று அவருக்குத் தோன்றவில்லை போலும் என்று எழுதிவிட்டு, எனவே தேசிகன் புதுமைப்பித்தன் கதைகளுக்கு விமர்சனம் எழுதியிருந்தால், அவர் இரண்டாவது பதிப்பையே விமர்சித்திருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டே, 'புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியின் இரண்டாவது பதிப்பை (1955) விமர்சித்த தேசிகன்' என்று எழுதுகிறார். அதே சமயம் பொதுவாக இந்துப் பத்திரிகை எந்தவொரு நூலின் இரண்டாவது பதிப்புக்கோ, அதற்குப் பின்னர் வந்த பதிப்புக்களுக்கோ விமர்சனமோ, மதிப்புரையோ எழுதுவதில்லை என்ற உண்மை தமக்குத் தெரிந்திருந்தது என்பதால், அந்த விமர்சனம் வெளிவந்த பத்திரிகை எது என்பதை வாசகருக்குத் தெரிவிக்காமல், இந்துப் பத்திரிகையின் பெயரையே கூறாது, அதனைப் புத்திசாலித்தனத்தோடு மறைத்துவிடுகிறார். இது நேர்மையற்ற செயல் அன்றி வேறென்ன?

- சிட்டியின் நேர்மையற்ற செயலுக்கு இங்கு இன்னொரு சான்றையும் நாம் எடுத்துக்காட்டலாம். தேசிகனின் விமர்சனத்தைக் குறிப்பிட்டு சிட்டி மேற்கண்டவாறு எழுதியுள்ள பக்கத்துக்கு (பக்.155) 25 பக்கங்கள் தள்ளி, 180 - 185 பக்கங்களில் உறவும் பரிமாற்றமும் என்ற உபதலைப்பின்கீழ், மணிக்கொடி எழுத்தாளர்கள் சிலரிடையே கதைகளைப் படைப்பதிலேயே கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன என்றும், இதன் விளைவாக அவர்களிற் சிலர் இரட்டைக் கதைகளை எழுதினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உதாரணங்களாக, சிட்டி மணிக்கொடியில் அந்தி மந்தாரை' என்றும், இந்தக் கதையின் பொருளமைதிக்கு மறு பார்வையாக, கு.ப.ராஜகோபாலன் கலைமகளில் கனகாம்பரம்' என்றும் கதைகள் எழுதியதையும், இதேபோல் கு.ப.ரா. 'புரியும் கதை என்ற தலைப்பில் ஒரு கதை எழுத, சிட்டி 'புரியாத கதை' என்ற தலைப்பில் வேறொரு கதையை எழுதியதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவரங்களையெல்லாம் எழுத முற்படு முன்பே, ஒரே விஷயத்தைப் பற்றி இருவர் இருவேறு கோணங்களில் கதைகள் எழுதியதற்கு உதாரணமாக, ராமையாவும் புதுமைப்பித்தனும் ஒருநாள் சென்னைப் பட்டணத்தின் ஒதுக்குப்புறமான ஒரு சந்து வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது கண்ட ஒரு காட்சியை வைத்து இருவரும் வேறு வகையான கதைகளைப் புனைந்த செய்தியை ராமையா சொல்கிறார் என்று தொடங்கி, மணிக்கொடி காலம் என்ற நூலில், பி. எஸ். ராமையா தமது கார்னிவல்' என்ற கதைக்கும், புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும் கதைக்கும் தோற்றக்காரணமாக விளங்கிய காட்சியைக்
குறித்தும், இரு கதைகளும் பிறந்த விதம் குறித்தும் (நாம் முன்னர் மேற்கோள் காட்டி) எழுதியுள்ள பகுதியில் (மணிக்கொடி காலம் - பக். 136-137) முதல் இரண்டு பாராக்களை மட்டும் சிட்டி மேற்கோள் காட்டி, புதுமைப்பித்தன் தாம் நேரடியாகக் கண்ட காட்சியை அப்படியே எழுதினார். ஆனால் ராமையா தமது கதையில் பணக்காரத் தாசியுடன் கார்னிவல் காட்சி பார்த்துவிட்டுத் திரும்பிய மைனர், செம்புதாஸ் தெரு சம்பவத்தில் ஒரு படி அதிகம் சென்றதாகக் காண்பித்தார்' (சிட்டியின் நூல் பக்.184 -185) என்று எழுதியுள்ளார். இங்கும் மேற்கூறிய ராமையாவின் மேற்கோள் பகுதியில், முதல் இரண்டு பாராக்களை மட்டுமே சிட்டி மேற்கோள் காட்டிவிட்டு, இதன் பின் வரும், 3, 4, 5 பாராக்களில், கவந்தனும் காமனும் ஒரு தழுவல் கதை என்று இந்துப் பத்திரிகையில் தேசிகன் எழுதியதை மறுத்து, பி. எஸ். ராமையாவும் சிதம்பர சுப்பிரமணியமும் இந்துவுக்கு மறுப்பு எழுதியது பற்றியுள்ள விவரங்களை, சிட்டி முற்றிலும் மறைத்திருக்கிறார். இதுவும் புதுமைப்பித்தன் மீது தழுவல் முத்திரை குத்த வேண்டும் என்ற முனைப்பில் செய்த நேர்மையற்ற செயலேயாகும்.

உண்மை நிலைதான் என்ன?

முதலாவதாக, புதுமைப்பித்தன் கதைகளின் இரண்டாம் பதிப்பைப் பற்றிச் சிட்டி கூறும் தகவலே தவறானது, புதுமைப்பித்தன் கதைகளின் முதற்பதிப்பு 1940 இலும், இரண்டாம் பதிப்பு 1947 இலும் வெளிவந்தன; இவை இரண்டும் நவயுகப் பிரசுராலய வெளியீடுகள். இதன் பின் அதன் மூன்றாவது பதிப்பு 1953 இலும், நான்காம் பதிப்பு 1955 இலும் வெளிவந்தன; இவை இரண்டும் ஸ்டார் பிரசுர வெளியீடுகள், 1955 ஆம் ஆண்டு வெளிவந்த நான்காம் பதிப்பையே அவர் இரண்டாம் பதிப்பாகக் காட்ட முயன்றிருக்கிறார். உண்மையில் தேசிகன் இந்துப் பத்திரிகையில் எழுதியது என்ன என்பதை, மங்கிய நினைவின் காரணமாக, ராமையா மதிப்புரை என்று எழுதியதும், சிட்டி விமர்சனம் என்றும், வேதசகாயகுமார் 'மதிப்புரை என்றும் எழுதியதும் தவறாகும். மேலும் தேசிகன் இந்துப் பத்திரிகையில் எழுதிய காலம் 1955 ஆம் ஆண்டு என்று சிட்டி கூறியிருப்பது

முற்றிலும் தவறாகும்.

உண்மையில் தேசிகன் 'கவந்தனும் காமனும்' என்ற கதை சம்பந்தமாக இந்துப் பத்திரிகைக்கு எழுதியது ஒரு சிறு கடிதம் தான். அக் கடிதம் இந்துப் பத்திரிகையில் புத்தக விமர்சனப் பகுதியில் Letter to the Editor என்ற தலைப்பின் கீழ் புதுமைப்பித்தன் 1948 இல் மறைந்து ஓராண்டுக்கும் மேலான பின்னர், 27.11.1949 அன்று வெளிவந்தது. இதுவரை எந்தவோர் ஆய்வாளரும் இந்தக் கடிதத்தைத் தேடி எடுத்து வழங்காததால் இதனை இதன் மூல

வடிவத்திலேயே கீழே வழங்குகிறேன்:

Pudumaipithan's Stories,
Sir,
I request that the attention of those who are interested both in Aldous Huxley and Pudumaipithan, may be drawn to Pudumaipithan's Story 'கவந்தனும் காமனும் and Aldous Huxley's 'Half - Holiday' (Two or three Graces) in Rotunda (Pages 614 to 632). The situation is lifted from that story; and the Concluding portion is almost a translation. It is I that wrote the introduction to his stories. I did not discover it then.
R. S. Desikan

பக்கங்கள்

இதன் தமிழாக்கம் வருமாறு:

'புதுமைப்பித்தன் கதைகள் ஆல்டஸ் ஹக்ஸ்லி, புதுமைப்பித்தன் ஆகிய இருவரிடத்திலும் ஆர்வம் கொண்டுள்ளவர்களின் கவனத்தை, புதுமைப்பித்தனின் கவந்தனும் காமனும்' என்ற கதையின் பாலும் ரோட்டுண்டா வெளியீடான (Two) (r three (iraCCS) என்ற தொகுதியில் உள்ள ஆல்டஸ் ஹக்ஸ்லியின் Half-Holiday பக்கங்கள் 614 முதல் 632 வரை) என்ற கதையின் பாலும் செலுத்துமாறு நான் வேண்டிக் கொள்கிறேன். கதைச் சம்பவம் அந்தக் கதையிலிருந்து திருடப்பட்டுள்ளது. மேலும் முடிவுப் பகுதி கிட்டத்தட்ட ஒரு மொழிபெயர்ப்பேயாகும். அவரது கதைகளுக்கு முன்னுரை எழுதியவன் நான்தான். அப்போது நான் இதனைக் கண்டு பிடிக்கவில்லை .

ரா. ஸ்ரீ தேசிகன். தேசிகன் இந்தக் கடிதத்தில் புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும் கதைச் சம்பவம் ஹக்ஸ்லியின் 'அரைநாள் விடுமுறை கொள்கிறேன்" "(Half Holiday) என்ற கதையிலிருந்து திருடப்பட்டதேயாகும் என்றும், முடிவுப்பகுதி கிட்டத்தட்ட ஒரு மொழிபெயர்ப்பேயாகும் என்றும் எழுதியுள்ளதன் மூலம், அவர் நேரடியாகவே புதுமைப்பித்தன் மீது இலக்கியத் திருட்டுக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் என்பது நிதரிசனம், அவரது குற்றச்சாட்டு சரிதானா, இல்லையா என்பதை இப்பகுதியில் பின்னர் பார்ப்போம். அதே சமயம் இந்தக் கடிதம் நான் முந்திய அத்தியாயத்தில் எடுத்துக்காட்டிய தேசிகனின் உண்மை சொரூபத்தையும் அம்பலப்படுத்துகிறது. அதாவது முன்னுரை எழுதுவதற்காகப் புதுமைப்பித்தனின் கதைகளைப் படித்துப் பார்த்த காலத்திலேயே புதுமைப்பித்தனின் மீது தழுவல் முத்திரை குத்த வழியுண்டா என்ற எண்ணத்தோடுதான் அவற்றைத் தேசிகன் படித்துப் பார்த்திருக்கிறார் என்பதும், அதன் காரணமாகவே அப்போது புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதை விக்டர் ஹியூகோவின் (ஏழைபடும்பாடு நாவலில் வரும் ) பாண்டைன் என்ற கதாபாத்திரத்தின் கதையை நினைவூட்டுவதாகவும், துன்பக் கேணி' கதை லெவலின் போலிஸ் கதையை நினைவூட்டுவதாகவும் விஷமத்தனமாக எழுதி , புதுமைப்பித்தன் மீது மறைமுகமாகத் தழுவல் முத்திரை குத்த அவர் முயன்றிருக்கிறார் என்பதும் நமக்குத் தெளிவாகிறது என்பதோடு, புதுமைப்பித்தன் மறைந்த பின்னால் மறு வருடமே அவர் புதுமைப்பித்தன் மீது நோடியாகவே இலக்கியத் திருட்டுக் குற்றத்தைக் கூறத் துணிந்திருக்கிறார் என்பதே அவ்வாறு அம்பலமாகும் உண்மை சொரூபமாகும். எனது இந்தக் கூற்றைப் பின் வரும் பக்கங்கள் உறுதிப்படுத்தும்.

இனி ஆல்டஸ் ஹக்ஸ்லி எழுதியுள்ள அரைநாள் விடுமுறை என்ற கதையைப் பார்ப்போம். அந்தக் கதை மூன்று பக்கத்தில் முடிந்துவிட்ட புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும் கதையைப் போல் அல்லாமல், பதினேழரைப் பக்கங்கள் கொண்ட நீண்டதொரு கதையாகும். எனவே அந்தக் கதையின் சுருக்கத்தையும், புதுமைப்பித்தன் காப்பியடித்ததாகத் தேசிகன் குறிப்பிட்டுள்ள கதையின் இறுதிப்பகுதியையும் கீழே வழங்குகிறேன்.

அந்தக் கதைச் சுருக்கம் வருமாறு: அன்று சனிக்கிழமை ; அரைநாள் விடுமுறை நாள், அப்போது வசந்த பருவம், லண்டன் நகரில் ஹைட்பார்க் பூங்காவில் காதலர்கள் கைகோத்து உதவினர். பொதுவாக அந்த வசந்த காலம் பிற்பகல் பொழுது இதயத்தில் சரக எண்ணங்களை எழுப்புவதாக இருந்தது. பூங்காவில் அலைந்து திரிந்த பீட்டர் என்ற இளைஞனை அந்தப் பொழுது மிகவும் பாதித்தது. அவன் தன் தனிமையை அதிகமாக உணர்ந்தான். அவன் ஓர் ஆபீசில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்ப்பவன். அதனால் அவனுக்குத் தனது சுருங்கிப் போன சூட்டையும், பிதிர்ந்து போன பூட்சையும் புதுப்பித்துக்கொள்ள வசதியில்லை . மேலும் அவன் அழகனுமல்ல. குட்டையானவன். முகத்தில் மலிவான மூக்குக் கண்ணாடியும் பருக்களும் வேறு. திருவாய் வேறு.

என்றாலும், இந்த மாதிரி வேளைகளில் அவன் கற்பனைகளில் ஈடுபட்டுச் சுகம் காண்பதே வழக்கம். அதாவது ஒரு பெரிய மனிதர் வீட்டுப் பெண் கல் தடுக்கிவிழ அவளைக் காப்பாற்றி அவள் அன்பைப் பெறுவது, அல்லது குளத்தில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றி அதன் தாயின் அன்பைப் பெறுவது. அல்லது தன்னைப்போல் தனிமையில் வாடும் ஒரு பெண்ணைச் சந்தித்து அவள் காதலைச் சம்பாதித்துத் திருமணம் செய்து கொள்வது என்ற ரீதியில் அவனது கற்பனைகள் ஓடும். ஆனால் உண்மையில் இவ்வாறு எதுவும் அவன் வாழ்க்கையில் நடக்கவில்லை. யாரிடமும் தயக்கமின்றிப் பேச அவனது திக்குவாயும் இடைஞ்சலாக இருந்தது.

இந்நிலையில் ஆளரவமற்ற ஒரு பாதையில் தோற்றத்திலேயே செல்வச் செழிப்புமிக்க இரு பெண்கள் நடந்து செல்வதைப் பீட்டர் கண்டான். அவர்களோடு ஒரு கறுப்பு நாயும் வந்தது. அவர்கள் எளிதில் அடைய முடியாதவர்கள்தான். என்றாலும் பீட்டர் அவர்களைப் பின் தொடர்ந்தான். ஏதாவது ஒரு அதிசய நிகழ்ச்சி அவர்களது வாழ்வில் தன்னைப் புகுத்திவிடாதா என்ற நப்பாசை அவனுக்கு என்றாலும் அந்த நாய் வடிவத்தில் அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்தக் கறுப்பு நாயும். எதிரே வந்த வேறொருவரின் மஞ்சள் நிற நாயும் ஒன்றையொன்று முறைத்துச் சண்டையிடத் தொடங்கின. இந்நிலையில் பீட்டர் அந்த நாய்களின் சண்டையில் குறுக்கிட்டு, கறுப்பு நாயைக் காப்பாற்ற முயன்றான். என்றாலும் அந்தக் கறுப்பு நாய்தான் அவனது கையைப் பலமாகக் கடித்துவிட்டது. ஒரு மட்டிலும் அவன் அந்த நாயைக் காப்பாற்றி அந்தப் பெண்களிடம் கொண்டு வந்தான். அவர்களில் கிசுகிசுத்த குரலில் பேசும் பெண் உங்களுக்குக் காயம் பட்டுவிட்டது . போலிருக்கிறதே என்று இரங்கிக் கூறினாள். அது ஒன்றும் பெரிதில்லை' என்று சமாளித்தவாறே, கைக்குட்டையை எடுத்துச் காயத்தின் மீது சுற்றிக் கொண்டான் பீட்டர். கீச்சுக்குரலில் பேசும் இன்னொரு பெண் அவனிடம் உங்களுக்கு மிக மிக நன்றி' என்று கூறினாள். இல்லை இல்லை காயம் பெரிதாகத்தான் இருக்கிறது, நீங்கள் மருத்துவரிடம் சென்று, கிருமி நாசினி மருந்து போட்டுக் கையில் கட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும்' என்று கூறினாள் கிசுகிசுக் குரலி..

இதன்பின் அந்தப் பெண்கள் இருவரும் அவனுக்குப் புரியாத அன்னிய மொழியில் தணிந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டனர். இதற்குள் கீச்சுக்குரலி தன் பர்சிலிருந்த ஒரு பவுண்டு நோட்டை அவன் கையைப் பிடித்துத் திணித்துவிட்டு அவனிடம் குட்பை' கூறினாள். கிசுகிசுக்குரலி அதற்குள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். பீட்டர் கீச்சுக்குரலியிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் அவனது திக்குவாய் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. கீச்சுக்குரலி அவன் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு, 'உடனே மருத்துவரிடம் சென்று மருந்து போட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று முன்னே சென்றுவிட்ட தோழியுடன் சேர்ந்து கொண்டாள்.

அவன் பணத்தை ஏற்றுக் கொண்டானா? என்று கேட்டாள் கிசுகிசுக் குரலி.

ஆமாம் ஆமாம் என்று கீச்சுக் குரலில் கூறிவிட்டு, இந்த நாய்ச்சண்டை குறுக்கிடுவதற்கு முன் உன்னிடம் நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?' என்று பேச்சை மாற்றினாள்..

பீட்டர் அவர்களைப் பின்தொடர விரும்பினான்; ஆனால் தொடரவில்லை . அவர்களைச் சந்தித்தால் ஏதாவது கூற முனைந்தால் மேலும் அவமானம் தான் ஏற்படும். ஒருவேளை அவர்கள் தான் கூடுதலாகப் பணம் எதிர்பார்ப்பதாக நினைத்து, மேலும் ஒரு பவுண்டு நோட்டைக் கையில் திணித்துவிட்டுப் போய்விட்டால்........

ஆனால் அவனது வழக்கமான கற்பனையோ வேறுவிதமாக இருந்தது. அதாவது என்ன நடந்திருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அந்தக் கற்பனையின் படி, அவள் அவனது கையில் நோட்டைத் திணித்தவுடன், அவன் புன்னகை செய்தவாறே அந்த
3

இதன் பின் அவன் தேநீர்க்கடையை விட்டு வெளியே வந்து, எங்கே செல்கிறோம் என்ற நோக்கமேதும் இன்றி வீதி வீதியாக நடந்து, இறுதியாக ஸ்ட்ராண்டு என்ற இடத்தை நோக்கிச் செல்லும் சந்து வீதிகளுக்குள் நுழைந்தான்.

(இதன் பின்னரே தேசிகன் குறிப்பிட்டுள்ள கதையின் கடைசிப் பகுதி வருகிறது. அது பின் வருமாறு :)

கோவென்ட் கார்டனுக்கு அருகிலுள்ள தெருவொன்றில் ஒரு பெண் அவன் மீது மோதி உரசினாள். குஷியாக இரு, அன்பே,

இப்படி வருத்தமாக இருக்காதே என்று கூறினாள் அவள்.

பீட்டர் வியப்போடு அவளைப் பார்த்தான். அவள் அவனோடு பேசிக்கொண்டிருந்தாள் என்பது சாத்தியமா? அதுவும் ஒரு பெண் - அது சாத்தியமா? மோசமான பெண் என்று ஊர்மக்கள் கூறும் ரகத்தைச் சேர்த்தவள் தான் அவள் என்பது அவனுக்குத் தெரியத்தான் செய்தது. என்றாலும் அவள் தன்னோடு பேசி விட்டாள் என்ற உண்மை அவனுக்கு அசாதாரணமாகத்தான் இருந்தது. அவன் அவளது 'மோசமான நடத்தை யோடு அவளைச் சம்பந்தப்படுத்திப் பார்க்கவில்லை.

என்னோடு வாருங்கள்' என்று குழைந்தாள் அவள். பீட்டர் தலையசைத்தான். இதனை உண்மையென்று அவனால் நம்ப முடியவில்லை . அவள் அவனது கையைப் பிடித்தாள்.

'உங்களிடம் பணம் இருக்கிறதா? என்று ஆதங்கத்தோடு கேட்டாள் அவள்.

அவன் மீண்டும் தலையசைத்தான். 'உங்களைப் பார்த்தால் ஏதோவொரு சவ அடக்கத்துக்குப் போய்விட்டு வந்தவர் போல் தோன்றுகிறது' என்றாள் அவள்.

'நான் தனிமையில் வாடுகிறேன்' என்று விளக்கினான் அவன். அவனுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. அழவும் கூட விரும்பினான் - அழுது ஆறுதல் பெற விரும்பினான். அவன் பேசும்போது அவனது குரல் நடுங்கியது.

தனிமையா? வேடிக்கைதான். உங்களைப் போன்ற அழகான வாலிபன் தனிமையில் வாட வேண்டியதேயில்லை' அவள் அர்த்தபுஷ்டியோடு, எனினும் குதூகலமாற்றுச் சிரித்தாள்.44

அவளது படுக்கையறையில் மங்கிய இளஞ்சிவப்பொளி நிலவியது. மலிவான மற்றும் சலவை செய்யாத உள்ளாடையின் மணம் காற்றில் மிதந்தது.

'கொஞ்சம் பொறுங்கள்' என்று கூறிவிட்டு அவள் வாசல் வழியாக உள்ளறைக்குள் சென்று மறைந்தாள்.

அவன் காத்திருந்தவாறே அமர்ந்திருந்தான். ஒரு நிமிடம் கழித்து அவள் ஒரு கிமோனோவையும் படுக்கையறைப் பாதுகைகளையும் அணிந்து கொண்டு திரும்பி வந்தாள். அவள் அவனது மடி மீது அமர்ந்து இரு கைகளையும் அவனது கழுத்தைச் சுற்றிப் போட்டு, அவனை முத்தமிடத் தொடங்கினாள். அன்பே அன்பே என்று உடைந்த குரலில் கூறினாள். அவளது கண்கள் உணர்ச்சியற்று இறுகிப் போயிருந்தான். அவளது சுவாசத்தில் சாராய நெடி வீசியது, மிகவும் அருகே பார்த்தபோது, அவள் வருணிக்க முடியாத அளவுக்குக் கோரமாக இருந்தாள்."

பீட்டர் அவளைப் பார்த்தான்; அப்போதுதான் முதன்முறையாக அவளைப் பார்த்து, அவள் எப்படிப்பட்டவள் என்று முற்றிலும் உணர்ந்து கொண்டான். அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். கல் தடுக்கி விழுந்து கணுக்காலைச் சுழுக்கிக் கொண்ட பெரிய மனிதரின் மகளையும், தனிமையில் இருந்த அனாதையையும், குளத்துக்குள் தவறி விழுந்த குழந்தையின் தாயான அந்த விதவையையும், கீச்சுக்குரலியையும் கிசுகிசுக் குரலியையும் நினைவுகூர்ந்த அவன் அவளது கைகளை விடுவித்துவிட்டு அவளைத் தன்னிடமிருந்து தூரத்தள்ளிவிட்டுத் துள்ளியெழுந்தான்.

'ஸாரி, நான் போ... போ... க வேண்டும். எதையோ நான் மறந்து விட்டேன்' என்று கூறியவாறு தன் தொப்பியை எடுத்துக் கொண்டு வாசல் நோக்கி நகர்ந்தான்.

அந்தப் பெண் ஓடோடியும் வந்து அவனது கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள். நீ.. நீ... வாலிபப் பிசாசே!' என்று கூச்சலிட்டாள். அவளது வசைமொழி பயங்கரமாகவும் ஆபாசமாகவும் இருந்தது. ஒரு பெண்ணைப் படுக்கக் கூப்பிட்டுவிட்டுப் பிறகு பணம் கொடுக்காமல் வெளியே ஓடப் பார்க்கிறாயா? உன்னை விடமாட்டேன் , விடமாட்டேன். மீண்டும் அவளது வசைமொழி தொடங்கிவிட்டது

பீட்டர் பைக்குள் கையை விட்டு, அந்தக் கீச்சுக்குரலி அழகாக மடித்துக் கொடுத்திருந்த பவுண்டு நோட்டை வெளியே எடுத்தான். அதனை அவளிடம் கொடுத்தவாறே, என்னைப் போக விடு, விடு' என்று கூறினான்.

அவள் அந்த நோட்டைச் சந்தேகக் கண்ணோடு பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு வெளியே விரைந்து, படிக்கட்டுகளின் வழியாக இறங்கி வீதிக்குள் ஓடிவிட்டான்.

இதுதான் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதை இனி புதுமைப்பித்தனின் கவந்தனும் காமனும் கதைக்கு வருவோம்.

மூன்று பக்கமேயுள்ள அந்தக் குட்டிக்கதையில், புதுமைப்பித்தன் முதலிரண்டு பக்கங்களில் நாகரிகம் கோலோச்சும் சென்னை நகரத்தின் இரவு நேரத்து ஒளி விளக்குகளின் பிரகாசத்தையும், நாகரிக உலகின் அடிப்படைத் தத்துவமான போட்டி, வேகம் ஆகியவற்றையும், இரும்பு நாகரிகத்தின் சின்னமான டிராம் வண்டிகளின் எக்களிப்புச் சிரிப்பையும் நமக்கு இனம் காட்டிவிட்டு, இதுதான் தெரு மூலை. மனித நதியின் கழிப்பு! இது வேறு உலகம்!' என்று இருண்ட சந்து முனையொன்றை சுட்டிக்காட்டுகிறார் இங்கு நடக்கும் விபசாரத்தை . அதோ மூலையில் சுவர் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது...... நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின்ஷர்ட்டு, உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி ! எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான் என்று நம்மிடம் இடித்துக்

கூறிவிட்டுக் கதையைத் தொடருகிறார். அந்தப் பகுதி வருமாறு.

தன் நினைவில்லாமலே ஒரு வாலிபன் தெரு வழியாக வருகிறான். களைப்பு, பசி இவை இரண்டுந்தான் அப்போது அவனுக்குத் தெரியும். மனிதனை மிருகமாக்கும் இந்தத் தெரு வழியாகத்தான் அவன் ஆபீஸ்க்குச் செல்வது வழக்கம். அந்தப் பெயரற்ற ஆபீஸ், அவனை முப்பது ரூபாய்களுக்குச் சக்கையாகப் பிழிந்தெடுத்த பிறகு, இந்த உணர்ச்சிதான் வருமாக்கும் அதோ அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஒருவன் - இவனைவிட அதிகமாகக் கொழுத்த தீனியாதிக்கிறான்? அவன் தன்னை மறக்க - யோகிகளைப் போல் அல்ல - குடிக்கிறான். இவனுக்கு அது தெரியாது.

ஒரு மூலை திரும்புகிறான்; சற்று ஒதுக்கமான மூலை

அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண், பதினாறு, பதினேழு வயது இருக்கும். காலணா அகலம் குங்குமப் பொட்டு, மல்லிகைப்பூ இன்னும் விளம்பரத்திற்குரிய சரக்குகள்.

அவளை அவன் கவனிக்கவில்லை. என்னாப்பா, சும்மாப் போரே? வாரியா?

வாலிபன் திடுக்கிட்டு நிற்கிறான்.

நீ என்னப்பா, இதான் மொதல்தரமா? பயப்படுறியே? கையை எட்டிப் பிடித்தாள். உன் பெயரென்ன?

'ஏம் பேரு உனக்கு என்னாத்துக்கு ? இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே வழிதான் புலப்படுகிறது.

அதற்குள் அவள் சந்திற்குள் இழுக்கிறாள். வாலிபன் உடனே மடியிலிருந்த சில்லறைகளையெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, 'போ! போ என்று அவளை எட்டித் தள்ளிவிட்டு ஓடி விடுகிறான்.

ஏண்டா, போடிப்பயலே பிச்சைக்காரின்னா நெனச்சுகினே' என்று சில்லறைகளை விட்டெறிகிறாள்.

அவன் அதற்குள் ஓடிப்போய் விட்டான். இந்த அசம்பாவிதமான செய்கையினால் அவள் மலைக்கிறாள். சற்றே பயம்.

'பேடிப் பயல் பேமானி' என்று முணுமுணுத்துக் கொண்டே இருட்டில் சில்லறையைத் தேடுகிறாள்.

ஆனால் அவனும் அன்று பட்டினி என்று இவளுக்குத் தெரியாது. எக்காளச் சிரிப்பு மாதிரி, எங்கோ ஒரு பக்கத்திலிருந்து டிராமின் கண்கணப்பு.தொ.மு.சி. ரகுநாதன்

புதுமைப்பித்தனின் கதை இவ்வாறுதான் முடிகிறது.

ஆல்டஸ் ஹக்ஸ்லி கதையின் முடிவுப் பகுதியையும் பார்த்தோம்; புதுமைப்பித்தன் கதையின் முடிவுப் பகுதியையும் பார்த்தோம். கதைச் சம்பவம் ஹக்ஸ்லியின் கதையிலிருந்து திருடப்பட்டது என்றும், முடிவுப் பகுதி கிட்டத்தட்ட ஒரு மொழி பெயர்ப்பே என்றும் தேசிகன் கூறியுள்ள குற்றச்சாட்டு சரிதானா? இரண்டு பகுதிகளையும் படித்துப் பார்த்த பின்னர் 'கவந்தனும் காமனும் ஹக்ஸ்லி கதையின் மொழிபெயர்ப்பு அல்ல, அந்தப் பகுதியின் தழுவல் கூட அல்ல என்பது எவருக்கும் தெரியவரும்.

சொல்லப்போனால், இரண்டு கதைகளின் கருப்பொருள்களும் வேறுவேறானவை; நோக்கங்களும் வேறு வேறானவை.

ஹக்ஸ்லியின் கதையில் வரும் ஏழை வாலிபன் வசந்த பருவத்தில் பூங்காவில் உலாவரும் காதலர்களைக் கண்டு, தன் மீது அன்பு செலுத்தவும் தன்னைக் காதலிக்கவும் எவளாவது பெரிய இடத்துப் பெண்ணொருத்தியோ அல்லது குறைந்தபட்சம் தன்னைப்போல் ஓர் அனாதைப் பெண்ணோ கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தில், கற்பனைக்காதல் எண்ணங்களில் மூழ்கிச் சுகம் காண்கிறான். அவன் மனத்தில் காதல் பற்றிய எண்ணங்களே மேலோங்கி நிற்கின்றன. இதன்பின் பூங்காவில் நடந்து வந்த இரு செல்வச் செழிப்புமிக்க பெண்களைத் தொடர்ந்து சென்று, அவர்களது அன்பைச் சம்பாதிப்பதற்காக அவர்களுக்கு உதவுவதாக எண்ணி, அவர்களோடு வந்த நாயிடம் கடிபட்டு, இறுதியில் அவமானப்பட்டுத் திரும்புகிறான். இறுதியில் ஒரு சந்து முனை விலைமகள் அவனைச் சந்தித்து, அவனைத் தன் வீட்டுக்கு அழைக்கும்போது, அவள் நடத்தை கெட்டவள் என்று தெரிந்தும், அவளது அழைப்புக்கு உடன்பட்டு, அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளோடு உடலுறவு கொள்வதற்கு முன்னர்தான் அவனுக்கு ஞானோதயம் பிறக்கிறது. தான் எதிர்பார்த்த காதலையோ அன்பையோ வழங்கக்கூடியவள் அவளல்ல என்பதை உணர்ந்து, அவளை விட்டு விலகி, ஓடிவிடுகிறான்.

புதுமைப்பித்தனின் கதையில் வரும் வாலிபனோ ஹக்ஸ்லி கதையில் வரும் வாலிபனைப்போல் எவளாவது தன்னைக் காதலிக்க வரமாட்டாளா என்று ஏங்கிக் காதல் கற்பனையில் மூழ்கிச் சுகம் காணும் வாலிபன் அல்ல. சக்கையாகப் பிழிந்தெடுத்து வேலை வாங்கிய ஆபிஸிலிருந்து களைப்பு, பசி என்ற இரண்டைத் தவிரபுதுமைப்பித்தன் கதைகள்

வேறு எதுவும் அறியாமல், உடலுறவு பற்றிய எண்ணமோ, உணர்ச்சியோ சற்றேனும் இல்லாமல், தன் நினைவில்லாமலே தான் வழக்கமாக ஆபீசுக்குச் சென்று திரும்பவும் அதே தெரு வழியாகத் தான் வருகிறான், அந்தத் தெருவுக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் வரவில்லை. வந்த இடத்தில் அந்தச் சந்துமுனை விலைமகள் அவன் கையைப் பிடித்து இழுக்கிறாள். ஏன் இழுக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட அவன், அவளிடமிருந்து தப்பிப்பதற்கு வேறு வழி தெரியாமல், மடியிலிருந்த சில்லறையையெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, அவளை நெட்டித்தள்ளிவிட்டு ஓடி விடுகிறான். அந்த விலைமகளோ, 'காரியம் பண்ணாவிட்டாலும் காசைக் கொடுத்துவிட்டுப் போ' என்று தன் வீட்டுக்கு வந்த வாலிபனிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்ட ஹக்ஸ்லி கதையின் விலைமகள் போலல்லாமல், 'பேடிப்பயலே; என்னை என்ன பிச்சைக்காரியென்றா நினைத்துக் கொண்டாய்?' என்று கூறிவிட்டு, அவன் கையில் திணித்த காசுகளை விட்டெறிகிறாள். வறுமை காரணமாகத் தன் உடலை வாடகைக்கு விட்டேனும் ஜீவனம் நடத்த அவள் விரும்பினாளே ஒழிய, பிச்சை ஏற்க அவள் தயாராக இல்லை . இதன் மூலம் உடலை விற்றுப் பிழைக்கும் விலைமகளுக்குக்கூட மான உணர்ச்சி உண்டு என்ற கருத்தைப் புதுமைப்பித்தன் வலியுறுத்துகிறார். என்றாலும் அவளுக்கும் வயிறும் பசியும் இருக்கின்றனவே. எனவே 'போடிப்பயல் பேமானி!' என்று முறு முறுத்துக் கொண்டே , விட்டெறிந்த சில்லறையை இருட்டில் தேடுகிறாள். ஆனால் அவை கிடைக்கவில்லை என்பதை, ஆனால் அவனும் பட்டினி என்று இவளுக்குத் தெரியாது' என்று கூறுவதன் மூலம், இருவரது பரிதாபகரமான நிலையையும் நமக்கு உணர்த்திவிடுகிறார். புதுமைப்பித்தன் உண்மையில் காம உணர்ச்சியையே அற்றுப் போகச் செய்யும் பசியையும், பசியைத் தீர்க்க காம உணர்ச்சியிடமே உடலை அடகுவைக்க முனையும் பரிதாப நிலையையும் உணர்த்தும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டவே தமது கதைக்குக் 'கவந்தனும் காமனும்' என்று தலைப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கதையை ஹக்ஸ்லி கதையின் அப்பட்டமான திருட்டு அல்லது தழுவல் என்று எப்படிக் கூற முடியும்? இது தேசிகனுக்குத் தெரியாதா? தெரிந்தும், புதுமைப்பித்தன் இறந்து ஓராண்டுக்கும் மேலான பின்னர், இந்தக் குற்றச்சாட்டைத் தட்டிக் கேட்கத்தான் புதுமைப்பித்தன் உயிரோடில்லையே என்ற தைரியத்தில், 1949இல் 
தேசிகன் இவ்வாறு கூறினார் என்றால் அது விஷமத்தனம் அல்லாமல் வேறென்ன?

புதுமைப்பித்தன் கதையின் தலைப்பைப் பற்றிக் கூறும்போது இங்கு இன்னொரு விஷமத்தனத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

1987 ஆம் ஆண்டில் வெளிவந்த புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளின் தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ள க. நா. சுப்ரமணியம், அதில் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதைகளைத் தனிக்கதைகளாகவும் தொகுப்புக்களாகவும் தாமும் புதுமைப் பித்தனும் படித்திருப்பதாகக் கூறிய போதிலும், 'கவந்தனும் காமனும்' கதை ஹக்ஸ்லி கதையின் தழுவல் என்றோ , திருட்டு என்றோ கூற முனையவில்லை . ஆனால் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ள அதே பக்கத்தில் கவந்தனும் காமனும்' என்ற தலைப்பே திருடப்பட்டதுதான் என்று தொனிக்கும் விதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார். 1937 38 இல் வெளிவந்த லயனல் பிரிட்டன் எழுதிய லவ் அண்ட் ஹங்கர் என்கிற பெரிய நாவலின் தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு, தன் கதை ஒன்றிற்குத் தலைப்பை, அந்தத் தலைப்பை மாற்றி அழகாக அமைத்து உபயோகித்துக் கொண்டார் - 'கவந்தனும் காமனும்' என்பது அவர் கதையின் தலைப்பு (பக். XLIX)

இவ்வாறு எழுதும்போது, கவந்தனும் காமனும்' 1940 இல் வெளிவந்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுதியில் இடம் பெறுவதற்கு முன்பே, நாம் முன்னர் குறிப்பிட்டபடி. வ.ரா. காலத்து மணிக்கொடியில் 1934 இல் (22.7.1934) வெளி வந்திருந்தது என்ற தமக்கும் தெரிந்த உண்மையை நினைவுகூரக் க.நா.சு. அடியோடு மறந்துவிட்டார். விஷமத்தனம் தலைதூக்கும்போது விவேகம் கண்ணை மூடிக்கொள்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இது. இல்லாவிட்டால், 1937-38 இல் வெளிவந்த ஒரு நாவலின் தலைப்பை, அழகாக மாற்றியமைத்து புதுமைப்பித்தன் 1934 இல் வெளிவந்த தமது கதைக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்று க. நா. சு. எழுதியிருப்பாரா?

சென்னையில் செம்புதாஸ் தெரு வழியாகச் செல்லும்போது, அந்தத் தெருவைக் குறுக்காக வெட்டிச் செல்லும் ஒரு தெரு முனையில் தாமும், புதுமைப்பித்தனும் கண்ட ஒரு காட்சியே, புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும் கதைக்கும், தாம் பின்னர் எழுதிய 'கார்னிவல்' என்ற கதைக்கும் பொருளாக அமைந்தது என்று பி. எஸ். ராமையா தமது மணிக்கொடி காலம் நூலில் எழுதியிருந்ததை முன்னர் பார்த்தோம். இவ்வாறு புதுமைப்பித்தன் எழுதிய கதை மணிக்கொடியில் 1934ம் ஆண்டிலும், ராமையாவின் கதை. அதன் பின் ஓராண்டுக்கும் மேலான பின்னர், ராமையா காலத்துக் கதைப் பதிப்பு மணிக்கொடியில் 1936 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.

இருவர் கதைகளுக்கும் இருவரும் கண்ட ஒரே காட்சிதான் பொருளாக அமைந்திருந்தது என்பதால் 'கார்னிவல்' கதையில் ராமையா அந்தக் காட்சியை எவ்வாறு பயன்படுத்தியிருந்தார் என்பதையும் ஒப்பு நோக்குக்காக இங்கு பார்ப்போம்.

புதுமைப்பித்தன் கதையில் அவர் கண்ட காட்சியே அவரது கதைக்குக் களமாகவும் கருவாகவும் அமைந்தது. ஆனால் புதுமைப்பித்தனின் கதையைப் போல் மூன்று பக்கங்களில் முடியாமல், பதினெட்டரைப் பக்கங்களுக்கு நீண்டிருந்த ராமையாவின் கதையில் அந்தக் காட்சிகதையில் ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்றிருக்கிறது. அந்தக் காட்சியை அவர் தம் கதையில் வேறொரு விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார். எனவே அவரது கதையம்சத்தை ஓரளவுக்குத் தொட்டுக்காட்டி, குறிப்பிட்ட காட்சி கதையில் இடம் பெறும் பகுதியை மட்டும் சற்று விரிவாகப் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

'கார்னிவல் ராமையாவின் சிறந்த கதைகளில் ஒன்றாகும். அக் கதை வனஜா என்ற இளம் வயதுத் தாசிப் பெண்ணின் வாழ்வில் ஒரு நாள் இரவுப் பொழுதில் அவள் பெற்ற அனுபவத்தை அவளது கூற்றாகவே கூறும் விதத்தில் அமைந்த கதையாகும்.

தாசி வனஜாவின் வீட்டுக்குக் கார் வசதி படைத்த, செல்வ வளம்மிக்க, வாலிப வயது மைனர் ஒருவர் வந்து செல்வது வழக்கம். வனஜாவின் காலிலிருந்து உதிரும் தூசியைக் கூடத் தம் கண்களில் ஒற்றிக் கொள்வதை , சொர்க்கானுபவமாக மதிக்கும் அளவுக்கு அவர் தன்னிடம் மயங்கிப் பிரேமை கொண்டிருக்கிறார் என்றும், அவர் தன்னை ஆட்கொள்ள வந்த எஜமானர் என்றும் வனஜா எண்ணிக் கொண்டிருந்தாள். மேலும் அவரது பிரேமை உச்சஸ்தாயியை எட்டும்போது, அவர் தன்னைச் செல்லமாக வன் என்று அழைப்பார். என்றும் அவள் தெரிந்து வைத்திருந்தாள்.

வனஜா வீணை வாசிப்பதிலும், வீணையின் நாதயத்தோடு இணைந்து தன்னை மறந்து பாடுவதிலும் வல்லவள். அன்றிரவுதொ.மு.சி. ரகுநாதன்

அவளது வீட்டுக்கு வந்திருந்த அந்த வாலிபர் , அவளருகே நெருங்கி,

வனீ வீணை வாசி யேன் என்று கொஞ்சினார்.

அவ்வாறே அவளும் அந்த முன்னிரவு நேரத்தில் தன்னை மறந்து வீணையை வாசித்துப் பாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் சில கூலிக்காரர்கள் தமக்குரிய கூலியைக் கொடுக்காமல் தம்மை ஏமாற்றப் பார்த்தவனோடு வாக்குவாதம் செய்து கடுமையாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் வீணை இசையும் பாட்டும் நின்று போகின்றன. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த மைனர், வெளியே விரைந்து சென்று தமது கைப்பிரம்பைச் சுழற்றி, அந்தக் கூலிக்காரர்களை விரட்டியடிக்கிறார். அவர்களும் ஓடி விடுகிறார்கள்.

இதன் பின் அவர் வனஜாவிடம் இந்தத் தடியன்களால் மனசு என்னவோ போலாகிவிட்டது. நமது சுக சங்கீதத்திலே கரகரப்பு தட்டிவிட்டது. எனவே கர்னிவல் ஷோவுக்குப் போய் வருவோம் என்று கூறுகிறார். தன் எஜமானர் சந்தோஷம்தான் தனது லட்சியம் என்று கருதிக் கொண்டிருந்த வனஜாவும் அதற்கு உடன்பட்டு, கிங்ஸ் கார்னிவல் ஷோ' வுக்கு அவருடன் காரில் செல்கிறாள். கார்னிவல் ஷோவிலோ எங்கும் ஒரே இரைச்சல் ; ராட்டினங்களில் ஏறிச் சுழலும் மக்களின் கூச்சல்கள், ஆனால் கூலிக்காரர்களின் சண்டைக் கூச்சலைத் தாங்கமாட்டாமல் அவர்களை விரட்டியடித்த மைனர் , கார்னிவல் ஷோவில் தமக்குச் சொந்தமான, இயல்பான ஓர் உலகத்தில் நுழைந்தவர் போல், அந்த ஆரவாரங்களிலும், விளையாட்டுக்களிலும் கலந்து கொள்கிறார். இதைக்கண்ட வனஜாவின் மனம் கலங்கிப் போய்விட்டது; அவளது சுருதி கலைந்து போய்விட்டது;

அதனை மீண்டும் கூட்ட அவளால் இயலவில்லை.

இரவு நடுநிசி வேளையில் அவர்கள் இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டபோது, இருவரது மனநிலைகளும் வேறுபட்டிருந்தன. வனஜாவோ கார்னிவல் கூத்துக்களையும் கூச்சலையும் கண்டு வெறுத்துப்போன மனநிலையில் இருந்தாள், அவரோ கார்னிவலில் அடித்த கூத்தினால் மோகவெறி போதையேறிய நிலையில் இருந்தார்.

வரும் வழியில் ஒரு சந்தில் கார் திரும்பியபோது, அங்கு ஒரு மக்கள் கூட்டம் கூடி, காரைமுன்னே செல்லவிடாமல் வழியில் குறுக்கே நின்றது. மைனர் காரின் ஹார்னைக் கடூரமாக உரக்க ஒலிக்கச் செய்தும், அவர்கள் நகரவில்லை. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த 
மைனர் காரைவிட்டு இறங்கி, 'என்னடா கூட்டம், ரோட்டை அடைத்துக் கொண்டு என்று அதிகார தோரணையோடு அதட்டிக் கொண்டே, கூட்டத்தின் பக்கம் சென்றார்.

இனி வனஜாவின் கூற்றின் மூலமாகவே அந்தக் காட்சியைக் காண்போம். வனஜா இவ்வாறு கூறுகிறாள்:

கூட்டத்தின் நடுவில் ஒரு பெண். என் வயதுதான் இருக்கும். பதினெட்டிலிருந்து இருபதுக்குள் நிறத்தில் கறுப்பு, சாதாரணமான ஒரு மலிவுச் சேலை தான் கட்டியிருந்தாள். கழுத்தில் ஒரு கண்ணாடி மணிமாலை. அவளுடைய உருவம் இளமையில் சரியான ஊட்டமில்லாததாலோ அல்லது வேறு காரணத்தாலோ வெம்பிப்

போனது போலத் தோன்றியது.

'கூட்டத்துடன் முன்னேறி வந்த அந்தப் பெண் அவர் எதிரில் வந்து நின்று பாருங்க சாமி. இவன். எட்டணாக் கொடுக்கிறேன்னு என்னோடே பேசிட்டு, இப்போ பாருங்க சாமி, கொடுக்க மாட்டேங்கிறான். ஆம்பளையைப் பாரு தூ!' என்று வாயிலிருந்து எச்சில் தெறிக்க அந்த மனிதன் பக்கம் பார்த்துக் கூவினாள். அதற்கு மேல் அவள் பேசியதையெல்லாம் ....... என் கை கூசுகிறது.

அவள் என்னுடைய ஒரு தொழில் சகோதரி. ஆம் ஒரு வேசிதான்! நான் ஒரு மாளிகையில் வீணை முதலிய ஆடம்பரங்களுடன் தொழில் நடத்துகிறேன். செல்வந்தர்கள் மைனர்கள் தாமாக என்னைத் தேடி வந்து செல்வத்தைக் கொட்டிக் கொடுத்துச் சுகத்தைத் தேட முயலுகிறார்கள். அவள் அங்கே அந்தக் குறுகிய சந்தில் ஒரு திண்ணையின் மறைவில் நின்று உயிரைப் பிடித்து நிறுத்த முயலுகிறாள். அவளைத் தேடி வருகிறவர்கள் அவளுக்குரிய பேசிய கூலியைக் கூடக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுப் போய்விட முயல்கிறார்கள்.......'

காரிலிருந்த வனஜாவின் இதயம் தன் தொழில் சகோதரியின் நிலையைக் கண்டு கழிவிரக்கம் கொண்ட வேளையில், மைனர் அப்பெண் சுட்டிக்காட்டிய நபரை மிரட்டி, 'நாயே! அவள் பணத்தைக் கொடு' என்று அதட்டுகிறார். இதற்குள் கூட்டத்தின் ஒரு கோடியிலிருந்து போலீஸ்காரங்க வாராங்க' என்று ஒரு குரல் எழுந்தது. உடனே அந்த நபர் ஒரு நாணயத்தை அவளிடம் விட்டெறிந்துவிட்டு நழுவி விடுகிறான். அவளும் அவசரத்தோடு அந்த நாணயத்தைப் பொறுக்கிக் கொண்டு மறுபுறம் ஓடிவிடுகிறாள். கூட்டமும் கலைந்துவிடுகிறது.

மைனர் காருக்குத் திரும்பி வருகிறார். அவர் காரை ஓட்டத் தயாரான வேளையில் அங்கு வந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவரிடம் வந்து என்ன சார் அது?' என்று விசாரிக்கிறார்கள். அவரும் . வேறே என்ன? சோதாப் பயல்கள். இந்த விபசாரி நாய்களை எல்லாம் பிடித்துப் புளியம் விளாறினால் அடித்து ஊரைவிட்டு ஓட்ட வேண்டும்' என்று கூறிவிட்டுக் காரை ஓட்டிச் செல்கிறார்.

வீடு திரும்பிய பின் மைனர். மதுவைப் பருகிவிட்டு, வனீ ! வீணையை எடுத்து அந்தக் கீர்த்தனத்தை முழுவதும் பாடு. சைத்தான்கள்! மனசு என்னவோ போலாகிவிட்டது' என்று வனஜாவிடம் கூறுகிறார்.

வனஜாவும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு வீணையை எடுத்து மீட்டுகிறாள். ஆனால் வீணையின் ஒலியோடு அவளால் லயிக்க முடியவில்லை . விரல்கள் எந்திரகதியில், தந்திகளை மீட்ட, வாய் உணர்ச்சியற்ற இசைத்தட்டைப் போல் பாட்டைப் பாடுகிறது. அந்த இசையோடு அவளால் ஓட்ட முடியவில்லை.

இரவு மணி இரண்டு அடிக்கிறது. மதுவை அருந்தி இளம் போதைச் சுகத்தில் ஆழ்ந்திருந்த மைனர் தூங்கலாமா என்று கேட்கிறார். அவரைப் படுக்கையில் விட்டுவிட்டு, அவள் ஏதோ அவசிய வேலை இருப்பது போல் அங்குமிங்கும் சென்று பொழுதைக் கடத்துகிறாள். இதற்குள் மைனரும் கண்ணயர்ந்து விடுகிறார். அதுவரை ஏதோ சித்திரவதையை அனுபவிப்பவள் போல் துடித்துக் கொண்டிருந்த வனஜா விடுதலைப் பெருமூச்சு விடுகிறாள். வீட்டுக்குள் இருப்பது அவளுக்கு மூச்சை அடைப்பது போலிருக்கிறது. எனவே அவள் ஓசையின்றி முன்புறத் தாழ்வாரத்தில் சென்று நிற்கிறாள். குமுறும் நெஞ்சத்தோடு கீழே குனிந்து பார்க்கிறாள். அப்போது அங்கே வீதியின் மூலையில் விளக்கின் அடியில் அவள் கண்ட காட்சி அவள் உடலைக் குலுங்க வைக்கிறது, நாக்கில் கசப்பு எழச் செய்கிறது. ஏனெனில் அங்கு அந்தத் தெரு விளக்கின் அடியில், அந்தப் பெண் - வரும் வழியில் அந்தச் சந்தில் வயிற்றுப் பிழைப்புக்காக நின்றிருந்த அதே பெண் : நிற்கக் காண்கிறாள். அந்தக் காட்சியை வனஜாவின் வாய்மொழியாகவே காண்போம்.

அவளது கூந்தல் சீர்படுத்தப்பட்டிருந்தது. முகத்தில் அவள் புதிதாக அப்பியிருந்த மாவு பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு தூரத்தில் இருந்தும் அவள் அணிந்திருந்த பழைய பூச்செண்டு ஒய்யாரம் காட்டியது. நான் முதலில் பார்த்தபோது, அவள் தனியாகத்தான் நின்றிருந்தாள். அடுத்த நிமிஷம் யாரோ ஒருவன் அவளிடம் வந்து நின்று பேசினான். அவள் கையை நீட்டினாள். வெள்ளி நாணயங்கள் இரண்டு மோதிய கலீரென்ற ஒலி என் காதுகளுக்கு

எட்டியது........

இந்த அனுபவங்களின் மூலம் அந்த மைனர் தமது காம வேட்கையின் சுருதியைக் கூட்டிக் கொள்வதற்காகத்தான் தன்னை வீணை வாசிக்கச் சொன்னார், தன்னைக் கார்னிவல் கூத்துக்களுக்கு அழைத்துச் சென்றார். அதன்பின் மதுவையும் அருந்தி இளம் போதையை ஏற்றிக் கொண்டுதான் தன்னைப் படுக்கைக்கு அழைத்தார் என்ற உண்மை தன்னையும் அவர் தமக்குக் காமசுகம் தரும் வேசியாகவே, கருவியாகவே மதித்திருக்கிறார் என்ற கசப்பான உண்மை அவளுக்குப் புலப்பட்டுவிட்டது.

தூக்கத்திலிருந்து விழித்த மைனர் வனீ' என்று கூப்பிடுகிறார். இதோ வந்தேன்' என்று கூறிக்கொண்டே வனஜா உள்ளே திரும்புகிறாள்.

ஆனால், ஐயோ! அந்தச் சொல்லில் இருந்த கசப்பு! அவருடைய மோக வெறியின் உச்சஸ்தாயியைக் காட்டும் ஸ்வரஸ்தானமாகிய அந்தச் சொல்லிலிருந்த அந்தக் கசப்பை நான் எப்படிச் சொற்களால் காட்ட முடியும்?

இருபது வருஷமாகியும் அன்று என் நெஞ்சில் நிறைந்த அந்தக் கசப்பு இன்னும் மாறவில்லையே என்ற வனஜாவின் கூற்றோடு முடிகிறது ராமையாவின் கதை.

முப்பதுகளில் மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளையும், இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் சிலரது கதைத் தொகுதிகளையும் தேசிகன் படித்திருந்தார் என்பது, அவரது கைக்குக் கிடைத்த கதைகளில் அழகாய் அமைந்த சிலவற்றை, புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதிக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையில் பட்டியல் போட்டுக் காட்டியிருப்பதன் மூலம் தெளிவாகிறது. எனவே அவர்- 1936 இல் மணிக்கொடியில் வெளிவந்ததும், பின்னர் 1944 இல் 'மலரும் மணமும்' என்ற பி. எஸ். ராமையாவின் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றதுமான அவரது 'கார்னிவல்' என்ற கதையையும் படித்தே இருப்பார் என்று நாம் கூறலாம். ஆனால் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அரைநாள் விடுமுறை என்ற கதையைப் படித்தபோது, கவந்தனும் காமனும் என்ற புதுமைப்பித்தனின் கதை ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதையிலிருந்து திருடியதே என்ற உண்மை' பொறி தட்டிய தேசிகனுக்கு, பி. எஸ். ராமையாவின் 'கார்னிவல் கதையைப் படித்தபோது மட்டும் அந்தப் பொறிதட்ட மறந்து அல்லது மறுத்துவிட்டது போலும்!

இந்நூலின் இரண்டாம் கட்டுரையிலும், இந்தக் கட்டுரையிலும் புதுமைப்பித்தனின் கதைகள் சிலவற்றின் மீது தழுவல் அல்லது திருட்டு முத்திரை குத்தும் நோக்கத்தோடு, தேசிகன் மேற்கொண்ட விஷமத்தனத்தையே விரிவாக ஆராய்ந்திருக்கிறேன். தேசிகனைப் போலவே புதுமைப்பித்தன் மீது தழுவல் முத்திரை குத்த வேறு சில முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. அவற்றைக் கூறுமுன்பு, புதுமைப்பித்தன் மீது இத்தகைய குற்றங்களைச் சுமத்த முயன்று, 1940 இலும் 1949 இலும் விஷமத்தனம் புரிந்த தேசிகன், இதன் பின் பத்தாண்டுகள் கழித்தும் புதுமைப்பித்தனிடம் குறைகள் காணும் போக்கைக் கைவிடவில்லை என்பதை அடுத்து வரும் கட்டுரையில் எடுத்துக்காட்டிவிட்டு, அதன்பின் புதுமைப்பித்தன் மீது மேலும் சுமத்தப்பட்ட தழுவல் குற்றச்சாட்டுக்களை நாம் ஆராய்வோம்.

Thursday, September 20, 2018

பிச்சைக்காரி -- சுரேஷ்குமார இந்திரஜித் :: கொல்லிப்பாவை 10

பிச்சைக்காரி
-- சுரேஷ்குமார இந்திரஜித்

காட்சிகள் தீண்டா விழிகள்
நிச்சலனத்தில் அறைந்திருக்க
கெட்டித்த பற்களுடன்
ஒரு கல், முகமாய் பிசைந்திருக்க
புதுச்சக்தியுடன் விரைத்திருந் தாளொரு கிழவி,
சாலையோரம்..
வெளிச்சம் பரப்பி
இவளுள் பக்கங்கள் பார்த்தால் -
பாட்டி- - தாய் - மனைவி - குமரி -
சிறுமி - குழந்தை - சிசு - கரு -
தந்தையும் தாயும் குலவிய
மோஹன சுணங்கள் , . .
விளிம்பில்
உலர்ந்த வாய் பிளந்து
அலைந்த நாவிற்கு
நீரூற்ற ஆளற்று
விரைத்த பிச்சைக்காரி

** டேவிட் சந்திரசேகர் ஒரு கட்டுரையில்   குறிப்பிட்டுருக்கும் கவிதை.