தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, May 31, 2020

2.கதை மொழியின் வரகுக் கதிரடுக்கு - கோணங்கி

ஒற்றைசடைக் குதிரைவாலிக் கதிருடன் வந்த புராதனக் கதைசொல்லி
 
2.கதை மொழியின் வரகுக் கதிரடுக்கு
'பெரிய தன் ஆவி பெரியது' என ஆருகதர் முதுமொழியில் ஓடும் குருதிமொழி உடல் முழுவதும் பரவிநிற்க மையத்தைவிட்டு இடமற்று ஓடும் ஆவி தொல்காப் பியன் உடல்மொழியில் ஆறுவகை உயிரின் வெட்பதட்ப வன்மென் உடம்பின் பல்லுயிர் புல்லும் மரனும் நத்தையும் முரளும் சிதலும் எறும்பும் நண்டும் தும்பியும் மாவும் புள்ளும் உடம்பில் வரைந்த தொல்காப்பியனாய் அறிய நேர்ந்த புராதனக் கதை சொல்லியே கல்லில் பதுங்கிய சமணபூதமாய் தன் உடல்பேழையில் தாவரங் களின் பாதரஸ மொழி மண்டலத்தை அடுக்கி பட்டினிக்குரத்தி கண்ட கிணறும் பெண்பள்ளியில் ஏடுகள் வாஸிக்க மதுரை நகரத்து எழுத்தாணிக்காரத் தெருவில் கீறிய வரிகளைத்தேடி நடந்தான் புராதனக் கதைசொல்லி. மையும் காகிதமும் அறுத்து அணிந்துகொண்ட முகமூடிகளுடன் கதைக்காரர்கள் அச்சு எந்திரங்களின் முன் வரிசையாய்ச் சென்று உடம்பில் வரைந்த ஆதி எழுத்துக்களை இழந்தார்கள். பனையோலைச் சந்துகளில் ஆந்தை இறகு பூனையிடம் கேட்டு எழுதிவந்த நிகண்டுகள் புரண்டு ஒடிந்த மொழிக்கு நரம்புகள் கோர்த்து ஆனை மலைப் பிலம் விலகி கவுந்தி எனும் தவக்குரத்தி அழைத்து வந்த கோவலன் ஆவி யோடு உரையாடலைத் தொடங்கியிருந்தான் கதை சொல்லி. கிளாஸ்காரத் தெருவில் சிம்ளிக்குள் இன்று பதுங்கிய சதுக்கபூதம் எளிய வீட்டு மண் சுவற்றில் சரித்தடமாய்ப் பதிந்து சிம்ளி விளக்கில் ஆடி குழந்தையுடன் பேசியது. தன் வயிற்றின் குடல்வழி மடிப்பில் ஓடத்துவங்கிய எந்திர ஆமைகளின் வாகன மிருகங்களின் டிராபிக் விதிகளை மீறிய கதைகளில் கதாவசீகரம் இழந்ததால் வேற்றுக் கிரகத் தாவரங்கள் வளையும் பாதையில் காலத்தைத் திருகி நட்சத்திரங் களின் மொழியில் கதைபோடும் குழந்தைகளிடம் தோற்றுப்போனது சதுக்க பூதம். ஏனோ சுண்ணாம்புக் காரைச் சுவரில் குழந்தைகள் நினைவுடன் கரித்தடத்தில் பதிந்து கூடவே வரும் சதுக்கபூதமே கதை சொல்லியாக இருக்கக்கூடும். சாதாரண கரித்தடத்தில் எத்தனையோ உலர்ந்த உருவங்களின் ரூபத்தை மௌனமாகச் சொல்லிக் கொண்டிருந்த "இருட்டு" கதையாக மாறியிருந்தது. வராலிக்கொடி முடிச்சுப்போல துருத்திய மூட்டும் எலும்புகளும் கல்லில் அண்ணாந்து கிடந்த நாகமலைச் சமணர் கையில் ஏந்திய வரகுக்கதிர் அடுக்கைக் கொண்டு இசை இலக்கணம் வகுக்க ஏழ்பெரும் பாலையினின்றும் நூற்றி மூன்று பண்கள் தோன்ற சிலம்பின் அரங்கேற்றுக் காதை உரைப்ப பட்டினித் தவத்தில் நீண்ட உடல்மீது தாவர அகராதி முளைத்து காற்றின் குரல் அடுக்கில் தமிழ் ஒலிப்ப நரம்புகள் ஓடி மூச்சினை ஆட்கொண்ட கல்மூங்கில் நாசியில் மிருக மூர்க்க மூச்சில் எரியும் இசைக்கு யாழ் அரக்கர் ராவணயாழின் பூதகண சுரவரிசை ஐந்திணைகளில்


14
மறைந்த மணிமேகலையின் அட்சயப்பேழையில் இசை எண்கள் புரண்டுவர
முற்பிறப்பு எலும்புகளின் செந்நிறத்தில் திணைப்பூவில் ஆயிரம் நரம்புத் தொகை கொண்ட பேரியாழ் அதிர்ந்து கௌதமரின் விரிகதிர்கள் நாண எரிதழல் கொள்மேனி புலப்பட தொல்படிவக் காளான் குடையின் கீழ் கற்பவளமாய் சமணர் கல்படுக்கையில் கீறும் ஆயிரம் உதிர்நரம்பு இசைபடிய உடல்மொழி
மலையின் சாயலில் சிறுத்தையின் உதயகால வெளிர்பிரதேசத்தில் நெருஞ்சியில் மலரும் அருகரின் மொழித்தேகம் பிஞ்சும் பூவுமாய் தும்பிகள் இறகு சிவக்க நில ஆவரைகளின் காரநெடியும் சூரியனின் குளிர்ந்த வட்டத்தில் அம்மண ரூபங்களில் பறவைகளும் பூச்சிகளும் வண்டுகளும் மென்துகள்களும் சுழன்று தொலைவில் வட்டமிட்டு வெளிர் மஞ்சள் சூரியனில் நகங்களைத் தீட்டும் மிருகங்களின் ஈர மூச்சு சமணர் அம்மண உடலில் பட்டு கல் படுக்கையில் தாவர மிருக மனித மொழி உருமாறும் தொல்காப்பியத் திணைப்பூவில் நத்தையின் உணர்கொம்புகள் தேடித் தேடி ஊர்ந்து செல்ல சீவிச்சீவிக் கிடந்த குகைப் படுக்கையில் சுருள் நத்தைகள் சமணர் உடல்மீது நகர்ந்து நுரை எச்சிலால் ஸ்பரிசித்த மெலிவுக்கும் மெலிவான உடல் உயிர் கொண்ட சமணரின் கட்புலனாகா லிபியும் கண்களுமே இலக்கியம்.
பாட்டு இடை வைத்த குறிப்பினானும் பா இன்றி எழுந்த கிளவியானும் பொருள் மரபு இல்லாப் பொய்மொழியானும் பொருளொடு புணர்ந்த நகை மொழியானும் உரைவகை நடையே நான்கு என மொழிப.
கேலிச்சித்திரம், கதாமந்திரம், புனைவு, மறைபொருள், உவமான, உவமேயமென வகுத்த ஈராயிரம் வருஷங்களுக்குமுன் உரைநடைக்கும் இலக்கணம் கண்ட தமிழ் வனாந்திர மலைப் பூச்சியாய் மறைந்திருக்கும் வேடர் மண்கூரை வீடுகளின் முற்றத்தில் அடுக்கிய பாறைகளில் அமர்ந்து கூத்துவாசல் ஏறி ஆடும் கோவலன் சுதையில் இளங்கோ அடிகள் எனும் சமணன் செதில் உடம்பில் கீறிய சிலப்பதிகார வரைதோலில் கடல் கொண்ட புகாரும் தன் விதிர்த்த முலைக்காம்பில் நெருப்பு உமிழ இவ்வூர் தீவூட்டிய ஒருமகள் சிலம்பில் வென்று எரியும் குலவை ஒலி சுழன்று முத்துப் பரல் களாய் சுழல சிலம்பில் பதுங்கிய மகளிர் குலவை ஒலி கதைமரபு கண்ட தமிழின் கதைப்பாடல் ஆதிகுடித் தனிமொழியில் ஆயிரம் வேடர் வில் அதிரப்பாயும் அம்புகளின் முன்னோடும் ஒரு ஆயிரம் விலங்கின யோனி பேதங்களில் சுழலும் குலவை ஓசை ஆழக்குமிழ் நெருப்பின் உயிர்ச்சர ஓசை வாய்வழிக் கதைமரபு.
மறைந்த மிருகத்தொலி உறிந்து அதிரும் ஊனின் வெறிமிக்க வாத்தியம் காட்டுப் பகடைகள் முழக்க சுடுவனப்புலால் கடிபடும் ஓசை சிக்கிமுக்கியில் உராய பரவும் தீயில் தவில் விரல்கள் எரிந்து பரபரக்க பேரிகை படகம் இடக்கை உடுக்கை கூத்து மத்தளம் விம்ம திமிலை குடமுழா கணப்பறை துடி பெரும்பறை தோலால் விரிய தொல்காப்பியனின் தோல் சூத்திரத்தில் மொந்தை முரசு கண்விடுதூம்புயென மிக்க நூலோர் விரித்துரைத்தனரே.
பறையன் மகனெனினும் காட்சியுடையான் இறைவன் என உணரற்பாற்று


15
என அருங்கலச் செப்பு நூல்வரை ஆலமரத்து முனியாய் சமணர் கல்எழுத் தாக்கிய தமிழை இருநூறு வருஷ உரைநடைக்காரர்கள் ஆழ்ந்து பற்றாததினால் இரண்டாயிரம் வருஷம் விளைந்த கற்பவளமொழி அகப்படாமல் எதார்த்தத்தை அழுத்தி அழுத்தி அச்சேற்றினார்கள்.
சிலம்பில் உடைந்த இசை அதிகாரத்தை தகர்த்தெழுந்து தமிழின் நவீன கதைக்கு ஒருமுகப்படுத்தாத மையத்தையே வெற்று அச்சாகச் சுற்றிப்படராத மொழி யடுக்கு இனித்தான் உருவாக வேண்டுமோ?
உடல்மேல் செல்லும் உடல்பாதையில் வெண்பாலை மயங்கும் நுண்ணிய இழை களால் நெய்த பிரிவின் மறைமுக நிலப்பரப்பில் ஆண்டாளின் பாசுரம் கீறிய விரலிலிருந்த கிளி பறந்து கூடல் நகர் தடாதகைப் பிராட்டியின் தோளில் அமர்ந்து யாழின் சுரவரிசை கதை சொல்லியாகிய கிளி அலகில் கவ்விய ஒற்றை வரகுக் சுதிரில் மறைந்திருக்க கிளிக்கூட்டு மண்டபத்தில் சங்கப் புலவரெல்லாம் கிளியாக உருமாறி வரகுக் கதிர்கொண்டு தீட்டிய காவியம் எழுந்த தமிழ் கொழு முனை எரிய கம்பனின் வலிய ஏர்மேழி யுகாந்தகாலநெருப்பாய்ப் பிளந்த நிலத் தடியில் கவிபாடும் தாவர ராசியின் நவதானியமெல்லாம் கம்பன் எழுத்தடியில் உருண்டு செல்ல சூரியனோடு எழும் சமண விருட்சங்களின் நிழல் தன் வேரைத்
தொட வெகுகாலம் ஆயிற்று இன்றுவரை. குடைசாய்ந்த தமிழ் உரைநடைக்கு 'வேதாளம் சொன்ன கதை'யிலிருந்து உருவெடுத்த பித்தன் டிராம் வண்டியில் பாரீஸ் கார்னரில் வந்திறங்கிய சிவனுடன் புராணத்தையும் எதார்த்தத்தையும் இரண்டு கப் காப்பியாக கலந்து அருந்திவிட்டு கூட்டிப்போன சிவனோடு வாதாடிய குழந்தையை கடவுள் ஜெயித்ததால் கந்த சாமிப்பிள்ளைவீட்டுக்கு அரிசிமூடை வந்திறங்கியது ரிக்ஷாவில், கூடுவிட்டுக் கூடுபாயும் குழந்தையின் அற்புதவுலகை விட்டு ஆலீஸை வெளியேற்றும் சமூகவியல் படைப்பாக்கி தோல்வி கண்ட பித்தனே அடிசறுக்கிய வழி பலரும் அச்சடித்த தாள் முகமூடியுடன் பின்பற்றலாயினர். ஆனால் 'சாமியாரும் குழந் தையும் சீடையும்' கதையில் பித்தனுக்கு நெல்மணி ஈக்கியாகக் கீறியது குழந்தையின் கண்கள். சீடை தின்றவாறு நதியோடு காலாட்டும் குழந்தையின் கால்காப்பில் சூரியன் ஒளிபடரச் சிரித்தாள். குழந்தையின் பாததூளியை முத்தமிட சூரியனும் தவங்கிடக்கத்தான் வேண்டுமென முடித்தான்
தென்பொதிகை அகத்தியன் தன் பாஷாண மை கொண்டு தீட்டிய செல்லம்மாளின் உருவில் அவள் இறந்து கொண்டிருக்கும் உடலோடு வேறு ஏதோ மயக்க உலகமும் சேர்ந்து கொண்டு சாவின் தடம் கண்ட நாயின் பிலாக்கணமும் நரியின் ஊளையும் குறுக்கிட சாவு அருகில் நகர்ந்த பித்தனின் உரைநடை செல்லம்மாளின் நாடியில் துடித்து குருதியில் படரும் சாவின் இருட்டில் நான் சிறுவயதில் கண்ட நோயாளிப் பெண் எறும்பைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். மயக்கமான கண்களிலிருந்து அந்த எறும்புகள் கல்லில் ஊர்ந்து தப்பிவிடும். கல்லை மயங்க வைக்கவும் அதன் உள்ளே மறையும் எறும்புகள் அவள் ஞாபகங்களை எடுத்துச் சென்று பூமியின் மர்மங்களில் புதைந்த அரளிப்பூவில் மறையும். அவள் மங்கலான பார்வையில் சாவின் பதற்றத்திலிருந்தன கல்தூண்கள். ஞாபகத்தின் சிவப்புப் படிவங்களில் கீறல் வழிய கல்தானே சாவியாகி நிலப்பரப்பில் கிடந்தது. கல் தூண்களின்


16
சங்கேத மொழி, மஞ்சள் அலகு அசைத்த பறவைகளால் பரிமாறப்பட்டு, செடிகள் முன்னுணர்ந்து சொல்ல சிதில ஓடுகள் இலைகளாகி கல்லில் ரத்தநார்கள் ஓடி, எப்போதுமாக உள்ளவற்றைப் பதிவு கொண்டு, காணாமல்போன பெண் களின் வரிகள் கொண்டு, நோயாளிப்பெண்ணின் பேசாத வார்த்தைகளாய்ப் பதிந்திருந்தன கல்லில். 'இறந்து கொண்டிருக்கும் சிறுமியின் கல்ச்சாவியை' செல்லம்மாளின் சாவு மயக்கத்திலிருந்துதான் எழுத நேர்ந்திருக்கும். நினைவு தோன்றிய காலத்தில் நாங்கள் குடியிருந்த 'நடராஜபுரம் தெருவில்' நோயாளிச் சிறுமியைப் பார்த்தவாறு பள்ளி சென்றேன். கல்மேட்டில் கண் சொருகிய நிலை யில் ஊரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில் உருகத் தொடங்கி யிருந்த ஊரின் தோற்றத்தை காரை வீட்டு தூண்களில் அவள் மறைவதை அவள் நிலவின் வெளிவட்டமாக மாறிப் பௌர்ணமியில் வனாந்திரத்தின் மரங்களையும் காற்றையும் சப்தங்களையும் உறைந்த ஊரையும் ஆட்கொள்வதைப் பார்த்திருக் கிறேன் நாகலாபுரம் என்ற என் அம்மா ஊரின் மறைமுகத்தில். செல்லம்மாளுக்கும் நோயாளிப் பெண்ணுக்குமான மயக்கப் பிரதேசத்தை என் அம்மாவின் கண்ணி லிருந்து இங்கே முன்வைக்க விரும்புகிறேன். நாகலாபுரத்தைச் சுற்றிலும் போன வண்டிச் சோட்டின் ஓரம் சரல்ரோட்டில் தான்தோன்றிப் பாதைகளில் நூறு நூறு கர்ப்ப ஸ்திரீகள் கல்லை உருகவைக்கும் வேதனையில் சுமைதாங்கித் தூண்களாக சாவின் பதற்றத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும்.
பாங்கிணத்துப் பெரும்பசிக்குத் தன் பிள்ளைகள் வாரிக்கொடுத்த நல்லதங்காள் பாலேறும் சோளக்கதிர்களில் சிசுக்களை ஒளித்து வைத்து ஈர உடம்போடு வீற்றிருக்கிறாள் இருளைத் துணியாகச் சுற்றி மண்கூரை வீட்டில். கிராம வீதிகளில் மூலை தவறாமல் தானியம் உருண்டோட இறந்தவர்கள் எழுந்துவரும் காற்றில் சீங்குழல் ஊதிவரும் நிர்வாணக் குழந்தைகள் ஏழும் எண்வகைக் கூலம் நடுங்க புல் வரகு திணை சாமை இறுங்கு மூங்கில் நெல்லும் நல்லதங்காள் துயரம் கேட்டு பால்குடிக்கும் சிசுவும் ஓடிவர ஆறாத் துயரத்தில் ஒற்றை வரகுக் கதிருடன் வந்த அர்ச்சுனாபுரத்து வெள்ளையம்மாள் கிழவி வரப்பில் ஓடிவர வளைந்த கதிர்த் தானியங்கள் தரையில் முட்டியழ மஞ்ச நிற இமைதிறந்து கண்பொத்தி அழுதது
நெல்லும்.
பதினாறடிக்கூந்தல் பாங்கிணற்றைச் சூழ்ந்து சுற்றிப் பிள்ளைகளை மறைத் திருக்க அண்ணன் படுகொலைகாரத்தேவன் பாங்கிணற்றை முட்டி அழுத சோகம் - ராவணன் ரணகளத்துக்கு வந்ததைக் கண்ட மாத்திரத்தில் அங்கு பிணங்களை தின்னவந்த பேய்களும் பட்சி ஜாலங்களும் சினேகித்து அழுதன. சில ராவணன் பாதத்தில் வீழ்ந்து சோகத்தில் பீடித்து அழ சில பேய்கள் துன்புற்ற மார்பிலடித்தன. யானைப் பிணங்களுக்குள் பதுங்கியழுதன. வெற்றிவில்லைப் பிடித்தவாறே மகன் இந்திரஜித் கை அறுந்து கிடக்கிறதைக் கண்ணால் கண்டு தலைமேல்கைவைத்து ஊழிக்கால சண்ட மாருதமாகப் பெருமூச்சுவிட்டான். பாண வர்ஷங்களால் மூடப்பட்டிருக்கிற இந்திரஜித் மார்பை ராவணன் கண்ணீ ரால் நிறைத்ததை இந்த உலகில் வேறுயாரும் புத்திர சோகத்தில் இப்படி இருபது கைகளும் அலைப்பட அழுததில்லை. படுகொலைகாரத்தேவனும் காஞ்சிவனத்துப் பெண்களும் பிள்ளைகளும் ஊரே திரண்டு அழுத சோகம் ராவணன் புத்திர


17
சோகத்திற்கு இணையானதை இறந்த பின்னும் நல்லதங்காள் கூந்தல் பதினாறடிக்கு மேலும் வளர்ந்து கொண்டே இருந்ததை பாட்டியின் குரல்வளைக்குள் ஒளிந்து, சொல்லியவாறே வெள்ளையம்மாள் கிழவியாகி நல்லதங்காள் கோவிலைச் சுற்றி வேப்பமுத்து பொறுக்கிக் கொண்டிருந்தான் கதைசொல்லி.
II
முட்டை வடிவ பாங்கிணற்றை கிணற்றடி ஸ்திரீகள் கதையாக ஒரு புனா சிருஷ்டியில் கல்யானை மீது துணி உலர்த்திக் கொண்டிருந்த செண்பா உடம் பெல்லாம் ஊக்குமாட்டி துணி விலகாமல் கிணற்றில் தலைகீழாக விழுந்து மறைகிறாள். வௌவால்கள் பறந்து பறந்து போகாதே செம்பா போகாதே...' என இடைமறிக்க அவள் விழுந்த பின்னும் வாவாவென்று கூப்பிடுகின்றன. எல்லாக் காலத்திலும் வாழ்ந்த அஞ்சனாவதியைத் தேடுவோர் யாருமில்லை. கல்தச்சனின் ஒரே மகளான அஞ்சனாவதி பெரிய பெரிய பாதங்களுடன் பெரிய வீடுகளுக்கு நீர் எடுத்து கல்தொட்டிகளை நிரப்பினாள். அவள் சாயை படர்ந்த 5 அறையின் இருட்டு இன்னும் உயிருடன் இருந்தது. சுவர்க்கருப்பில் அவள் விரல் தடங்களில் அவள் நடுக்கம் இருந்தது. காளியங்கோயில் பொந்துகளில் மறையும் கல் ஆந்தையின் குரலில் அவள் பற்றிய சாவு பயம் தொற்றிக் கொள்ளும். பக்கவாதத்தில் விழுந்துவிட்ட தகப்பனுக்காக நித்தநித்தம் காளியங்கோயிலில் விளக்குச் சரம்போட்டு கிளியஞ்சிட்டி தீபம் ஏற்றி உருகி மருகினாள். பெரிய மொடாப் பானைகளின் சுமைதாங்கிக் குட்டையாக இருந்த அவள் உருவம் கிணற்றுடன் பதிர்ந்திருந்தது ஏனோ.
வாழை மடல் காதுகளைக் கொண்ட தமயந்தி குடத்தை வைத்து மர ராட்டை சுற்ற விட்டுக் கிணறை எட்டிக் கேட்கிறாள் "வாழைத் தோட்டங்கள் முறியாமல் பூக்கும் பருவத்திலிருந்த என்சகோதரி கௌரியைத் தேடிவந்தேன் சொல்” என்றாள். ஒரே சமயத்தில் ஆறேழு ஒளிமீன்கள் துள்ளி மேல் எழுந்து உயரத்தில் அசைந்த வாறு கிணத்தின் சருக்கத்தில் மறைந்து கொண்டிருந்த கௌரியைச் சொல்லி அவள் வாழைக்குருத்துள் சுருண்டிருக்கிறாள். ஒவ்வொரு அகன்ற இலையுமே அவள் உரு என்றபடி தலைகீழாய் மறைந்தன ஒளிமீன்கள். எந்தப்பக்கமிருந்து நீர் இரைத்தால் கிணறுதரும் உணர்வைத்தானே பெறமுடியும் என்பது ஸ்திரீ களுக்குத் தெரியும். அவரவர் அந்தரங்கத்தைக் கிணற்றுடன் பறிமாறிக் கொள்
வார்கள். ஆனைக்கிணத்தின் வேதனைதரும் நிறத்தில் அரளிப்பூ கூப்பிடும். உருவங்கள் சிதைந்த தெலாக்கல் யாரைக்கூப்பிடுமென்று தெரியாது. ஒவ்வொரு ஸ்திரீயுமே ஆனைக்கிணத்துடன் பந்தப்படுகிறாள். உறக்கத்திலும் அந்தக் கிணத்தில் பதிந்த கல்யானையின் காதுகள் அசையும். யாரும் பார்த்திராத யானைக்கு பெண்களைத் தெரியும். யாரும் பார்க்காமலே கல்யானையின் நினைவு வரும். ஒவ்வொருவரும் அதைக் கடந்தே போயினர். எத்தனையோ ஸ்திரீகளின் நினைவுகொண்டு சோகத்தில் ஆழ்ந்த யானையின் பெரிய உரு அசையாமல் நிற்கிறது எல்லையற்ற ராத்திரியில் இடம்பெயர்ந்தவர்களும் கல்யானையைக் கிணற்றுடன் கொண்டு போகக்கூடும். தெரியப்படுத்த முடியாத வெளிச்சங்களைத் தன்னுள் கொண்ட கல்யானையின் சின்னச் சின்னதான கண் களில்தான் ஸ்திரீகளின் உலகம் ஒளிந்திருக்கக்கூடும். அதைக் கண்டதுமே ஸ்திரீகள் அலாதி அடைகிறார்கள். கிணற்றடிஸ்திரீகளின் தோற்றத்தில் எல்லாக் கிராமங்களுமே மறைந்திருக்கின்றன இருளில்


NI
550
18 கரும்புதின்ற கல்யானையின் புராணத்தையும் காதசைக்கும் கல் யானையையும் ஆனைக்கிணத்தை நல்லதங்காளின் பாங்கிணற்றுடன் இணைக்க முயன்றேன். ஒவ்வொரு ஸ்திரீயாகத் தூரிலிருந்து பொங்கிக் கிணத்துக்குமேல் வந்து மறை கிறார்கள். கிணத்தின் சறுக்கத்தில் நல்லதங்காள் என்ற சோக விநோதக் கதைப் பாடலில் அவள் பதினாறடிக் கூந்தல் இறந்தபின்னும் கிணற்று நீர் சுழலில் சுழன்று நீள்வதைக் காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் கடைசி நாவலான 'பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதை'யில் காண நேர்ந்ததால் ஸ்பானியக் கதைப் பாடலுக்கும் நல்லதங்காளின் பதினாறடிக்கூந்தலுக்கும் பக்கம் பக்கமாக ஒரே சமயத்தில் கூந்தல் வளர்வதை தமிழின் வாய்வழிக் கதைமரபாகக் கொள்ள வெள்ளையம்மாள் கிழவியின் குடலுக்குள் இரைந்து கொண்டிருக்கும் கதைச் சுருளை என்னவென்று காண முடியாத உள்ளுரைகளை உணர்கிறேன். பாட்டியின் குடலைப் பேனாக்கத்தியால் அறுத்து எழுத்துவழிக் கதைமரபுடன் இணைப்பது அவ்வளவு எளிதல்ல. புராணத்திற்குள் கரும்பு தின்ற கல்யானையும் மௌனியின் கல்யாளி ஆங்காரத்தில் எழுந்து துடிப்பதையும் கல்யானை காதுகளை அசைத்து ஸ்திரீகளின் ஞாபகங்களில் நிற்பதையும் பதிமூன்று நட்சத்திரங்கள் கிணற்றில் வந்து மூழ்குவதைப் பார்த்த கதை சொல்லிக்கு அராபிய இரவுகள் நட்சத்திரங்களின் பயணத்தைத் தொடர்ந்து கடல்வழி தெரிவதும் என புராணம், வனமந்திர தேவதைச்சுருள், மீமனித மாயச் சுருள், குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் வேனல்சார் வாய்வழிக்கதை மரபு என யதார்த்தத்துடன் இணைக்க முயன்றிருக்கிறேன் இங்கே. “சலூன் நாற்காலியில் சுழன்றபடி" கதையில் கண்ணாடிகளால் ஆன சலூனைச் சுற்றி சர்ரியலிஸ பிம்பங்களையும் மாய எதார்த்த உருக்களையும் சுழலவிட்டு கண்ணாடியிலிருந்தே செல்லும் நகரின் இயக்கத்தை மறைந்து திரியும் கிரிமினல் குற்றவாளிகளைத் தலைவர்களின் எலும்புக்கூடுகளை உருமாற்றி ஏடன் தோட்டத் தில் ஆதாமும் ஏவாளும் வந்து கண்ணாடியைப் பார்த்து வெட்கித் தலைகுனி கிறார்கள். எல்லையற்ற காமம். கண்ணாடிகள் உடைந்து கடல் தொந்தளிப்பு. - புராதன நகரங்கள் மீது புறாக்களாக மாறிய ஆதாமும் ஏவாளும் பறந்து எங்கும் உலகங்கள் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. பாழ்வெளி. கொந்தளிக்கும் அலை. தலை இழந்த என் சவம் செடிமுளைத்த மதிலாக மாறியது. காற்றின் ஊளை.
அதன்மீது கால்வைத்து அமரும் புறாக்கள். அவற்றின் ஊடல்,
லணை
I
a "நின் காதலாலே சுவாசிக்கிறேனடி சாம்பா” காலை
"பிராணநாதா. அதோ ஒரு பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்வதேன்"
"அவள் பாவி. விகாரமானவள். அவள் கெரில்லா எலும்புகளை முத்த மட்டாள் என்பதற்காக
வேலை - "எது பாவம் - விகாரம்" பாதை
"இயற்கை எழில் சூழ்ந்த வனாந்திரத்தில் அந்தக் கேள்விகள் எதற்கு,
PRO கண்ணே "


பெண்புறா கோபம் கொண்டு போரிடும் கடலையே வெறித்தது. ஆணின் ஏமாற்றுகள் சமாதானங்கள் பெரும் பொய்.


19
"பெண்ணால்தான் இந்தப் பெரும் போர்"
"ஆம்! போர் நடந்து கொண்டே இருக்கிறது. யாழின் வெற்று இசை எல்லோரும் மடிந்து விட்டார்கள். யாழின் வெறுமையான இசை" ம்
அதை என்னால் தாங்க முடியவில்லை கண்ணோ ''
அதை என்
"சொர்க்கத்தில் இந்திரன் சபையில் அடிமையான பெண்விரல்கள் நிற்ப தில்லை. பூம்புகார் பட்டினத்து நடனமாது. கோவலனால் கைவிடப்பட்ட ருத்ர கணிகை, மாதவி என்று பேர். அவளிடம் யாழ் உள்ளவரை "
அந்த யாழ் என்
வெற்று இசை அதிகரிக்கிறது. யாயை "ஆ..ஆ தேவதாசிகளிடம் யாழ் உள்ளவரை.... யாழ் உள்ளவரை”
கடல் தீப்பற்றி எரிகிறது. தீயின் நிழல் மதில்களில் அசைவது திரும்பவும் போர் மண்டுவிப்பதாகத் தோன்றியது
போன்
IE
afé TUTI "சுவாமி, தங்களிடம் ஒரு வரம் கேட்பேன் தருவீர்களா”
de tonyi, iar “என்ன வேண்டும் சாம்பா” "அந்த யாம் எனக்கு வேண்டும். மாதவியின் யாம்."
வா பலி "நிறைவேறும் காரியத்தைச் சொல் சாம்பா, விளையாடாதே!"
- "தீயில் குதிக்க வேண்டும் நீங்கள்” பகல் பாவப்பட்டகம் me the ஆண்புறா தலைகீழாக தீயில் விழுந்தது. போரிடும் தீயின் நிழல்கள் மதில் மீது பட்டு அசைகின்றன. மதில் சுவர்மீது பெண்புறா மட்டும். அதன் காலடியில் யாழ் அதிர்கிறது. அதன் அதிர்வு அதிகரிக்க அதிகரிக்க தீயிலிருந்து 'மூலதனத்தின் பக்கங்கள் புரண்டு கெரில்லா எலும்புகள் எழுந்து வருகின்றன. கண்ணாடிக்குள் என் அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாது. தலை திருப்பலில் எல்லாம் உடைந்து சிதறியது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணாடி உடைந்து கழுத்துக்கு நேராகக் கீறல் என் உடம்புடன் தலையை ஒட்டவைத்துக் கொண்டிருந்தான் முடி ஒப்பனையாளன். அந்த மாயக்கிழவனின் கண்கட்டு வித்தையில் யார் தலையோ வந்து சேர்ந்தது. மம்ம
ம்ப டி
ம ம் " என் காலை எனக்க வேண்டும்''
FLIS0
போலியோ ''உடைந்து கிடக்கும் கண்ணாடியில் தேடு.''
06
“என் தலை எனக்கு வேண்டும்
நகரின் முச்சந்தியில் தேசத்தலைவர்களின் எலும்புக்கூடுகளைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவற்றைக் குளிப்பாட்டித் துவட்டிவிட்டு பீடங்களில் அமர்த்தியிருந்தது. தொண்டர்கள் பதினாறு பேர்களைத் தலைகீழாகக் கட்டிக் காயடித்துக் கொண்டிருந்த கருப்பு அங்கிகள் பீடத்திலிருக்கும் சுழல் நாற் காலியில் சாய்ந்திருக்கும் எலும்புக் கூடைச் சுற்றித் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள். எலும்புக்கூடுகள் சொற்பொழிவாற்றும் குரல் ஊளை யிடுகிறது. எங்கும் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த பிரஜைகள் கால் விலங் குகளைத் தரையில் இழுத்துக் கொண்டு நகர்கிறார்கள், மலக்கிடங்குகளைச் சுற்றி கைகால் வீங்கிய குழந்தைகள், நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள்


நோயுற்றிருந்தார்கள். நோயுற்றவர்கள் இறந்து கொண்டிருந்தார்கள். டாபர்கள் அபினி விற்பவர்கள். காவலரின் கண்பார்வையில் போகும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. சலூன் கண்ணாடியில் காவலரின் கண்கள் ஒட்டப்பட்டிருந்தன. கதைகளில் சுழலும் என்உரு எப்போதும் எல்லாக் கண்ணாடி வழியாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தலையை மாற்றி விடும் மறைமுக சித்திரவதை முகாம்களை எழுதநேர்ந்த மனப்பதிவே கயிற்றரவுக் கண்ணாடிப் படத்தில் கயிறு/அரவு இரண்டின் இணைவிடத்தில் தோன்றும் கண்ணாடியில் அண்ட கோள விலாஸம் பார்த்துத் தன் பல பிறவிகண்டு கண்ணாடிப் பாம்பின் படத்தில் சாவின் அருகில் முகம்பார்த்து உரையாடலைப் பித்தன் துவங்கி வைத்திருக்கிறான். கண்ணுக்குப் புலப்படாத கண்ணாடிதான் பித்தனின் கயிற்றரவு. மொழிக்கும்/ சதாச்சுருளுக்குமான, எழுத்துக்கும் வாசகனுக்குமான, படைப்புக்கும் எழுத்தாளனுக்குமான, தாத்தாவுக்கும் பேரனுக்கும், அமீபாவுக்கும்/ மனிதனுக்குமான உரையாடல் பல நிலைகளில் தொடர்வதைப் பித்தன் என்ற மாயாஜாலப் பேர் வழியை நாவிதனாக்கிக் கண்ணாடி முன் நிறுத்தி சலூன் நாற்காலியைச் சுழல விட்டிருக்கிறேன் சுழன்று பாருங்கள்.
கயிற்றரவுக் கண்ணாடிப் படத்தில் பித்தன் கதைமொழி பனவிடலி இடுக்கில் நாகரத்தினம் கேட்டு அரவு கக்கிய ஒளிக்கல் பாதையில் கிழக்காந்தை வெருண்டு கதற ஒளி ஊர்ந்த நினைவுப் பாதையில் கபாடபுர நகர்ப்படலம் விரிய பல்வேறு புள்ளும் சிலம்பும் ஓசை இருள்வெளி படரமுன் நகர் புதை ஓடுகள் திறந்து கடல் புரண்டுவரப் புலித்தோலில் தீட்டியதமிழ்உருண்டு கடல்கொள்ள நாயின் பிலாக் கணம் செங்கோண்தரைச்செலவு கடல்கோள் நிகழ்ந்தபின் அங்கு போனவன் நீர் கன்னியின் மூக்குத்திக் கல்லின் ஒளி ஒற்றையடிப் பாதையில் நகர்ந்து முக்காலங் களில் ஒளிப்ப பித்தன் எதிரே பலிபீடத்தில் கன்னியின் சிரசு ரத்தவிளாறாய் வளர்ந்து கொண்டே இருக்கும் கூந்தல். அவள் நிழலாய் நகரும் நிலந்தரு திருவிற்பாண்டியன் பிலம் விலகி மறைந்தான். “ஞானக்குகை”யின் உயிர் குடிக்கும் கன்னியின் வசீகரப் புன்னகை உதடசையாமல் பிளக்கும் இடைவெளி தாண்டி நீளும் பித்தனின் கரங்களைப் பற்றி நடக்க முயல்வேன் இன்று இரவில் வலுசர்ப்பங்கள் மேடுகளில் படுத்துக் காற்றைக் குடித்தவாறு படமெடுக்கும் இடத்தில் நீலவிஷம் தீண்டிக் கண்டத்தில் விஷம் சுமந்து நிற்கிறான் பித்தன்.
மாயப்பித்தன் சிவனோடும் வாணியச்செட்டி ஆச்சியின் குழாய்ப்புட்டிலும் வறுமையான பாட்டியின் தனிமைச் சிரிப்பில் பத்தாயிரம் நரிகள் சிரித்த சிரிப்பே பரியை நரியாக்கிய கதாமந்திரம் கிழவியின் சிரிப்பில் கண்டு வாய்வழிக் கதை மரபுக்கும் புராணத்திற்கும் கட்புலனாகா இணைப்பைச் செய்ததும் கயிற்றரவு தீண்டி தமிழ் உரைநடை நெடுகிலும் நீண்டு கிடக்கிறான். அவனைத் தாண்டிப் போன எட்டிய வெளியில் அழியாச்சுடரான மெளனி சனாதனப் பேய்க்கூட்டத்தை உதறி எழுந்து ஆடும் தவிப்பில் சுடர் நடுங்க எவற்றின் நடமாடும் நிழல்களோ இவையென சுடர் பரவ வெகு ஆழத்தில் பார்த்த பெண் பதுமைகளின் துயரமுகம் காண நேர்ந்த எத்தனையோ ஸ்திரீகளின் இருளுருவங்கள் சாவிலும் பின் தொடர அவளுள் ஒடுங்கிய உன்னத கீதம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கர்ப்பக்


21
கிரக இருளில் மறைகிறான். அவளைப் பின்தொடரும் மௌனி இருள் வெளி படர்ந்து எட்டிய வெளியில் அழியாச் சுடரில் சாவில் பிறந்த சிருஷ்டியில் மயங்கிய பாதையில். “நினைவுப் பாதை”யில் நகுலன். விண்ணுக்கடியில் வாலாட்டும் அந்த மஞ்சள் நிறப் பூனையின் சிரிப்பு. பூனை மறைந்து விட்டபின்னும் அதன் சிரிப்பு மறையவில்லை. அருகே சுசீலாவின் வெண்கலச்சிலை மலைமீது விழுந்து நெடுங்காலமாய் உருள் கிறதே. பாசியடைந்து சர்ப்பங்கள் தீண்டிய சுசீலாவின் உடல் கொம்பேறிய விஷத்தில் பச்சையாய் அசைகிறதே. நினைவு ஊர்ந்து செல்கிறது. பார்க்கப் பயமாக இருக்கிறது. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. மஞ்சளான பித்தப்பூக்கள் நகுலன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கின்றன. நழுக்கென்ற சர்ப்பம் இலையடியில் மறைகிறது. சாதாரண பூச்சிகளும் பறவைகளும் அற்றுவிடுமானால் உலகம் வெறிச்சென்று விடும். கோட்ஸ்டாண்ட் கவிதைகள் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்றன. யார் கைமூலம் என்பதை விட எழுதும் கைமூலம் எழுதப் பட்டுவிடும். படைப்பாளி இருக்கிறானா, இறந்துவிட்டானா என்ற உயரமான கேள்விகளுக்கு மேல் கோட்ஸ்டாண்ட் மீது நகுலன் உடல் உரித்துப் போடப் பட்டிருக்கிறது. எதிரே சூரல் நாற்காலியில் நகுலன். நவீனன் டைரியை எழுதிக் கொண்டிருக்கிறார். கோட்ஸ்டாண்டிலிருந்த நகுலன் உடல் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. “நகுலன் இறந்து விட்ட பின்னும் ஒலிநாடா" ஒலிப்பேழையில் இனியாகும் எழுத்தை மரணத்துக்குப் பின்னும் எழுதிக் கொண்டிருக்கிறார் நகுலன்.

Monday, May 11, 2020

ஒற்றைசடைக் குதிரைவாலிக் கதிருடன் வந்த புராதனக் கதைசொல்லி 1. கதாமந்திரப் பரப்பு: வனமந்திர தேவதைச்சுருள் - கோணங்கி

ஒற்றைசடைக் குதிரைவாலிக் கதிருடன் வந்த புராதனக் கதைசொல்லி 
1. கதாமந்திரப் பரப்பு: வனமந்திர தேவதைச்சுருள் - கோணங்கி

பழைய பிரதிகள் கதைசொல்ல மறுக்கும் பட்சத்தில் ஞாபகப் பரப்பிலிருந்து விடுபட்டுப் போன வனமந்திர தேவதைச் சுருள் ஆனது வான விளிம்புவரை பரந்து கிடக்கும் நிலம் கடல் ஆறு வழியாக பயணம் செல்லும்போது, மூப்படைந்த அலகும் மாபெரும் சிறகுகளும் கொண்ட கதை சொல்லியாகிய அண்டரண்டாப் பட்சி நினைவால் மர்மமாகச் செதுக்கி வைத்திருக்கும் அற்புத விநோதக் கதைகளால் ஆன வரைபடத்தைப் பின்பற்றிச் செல்லும்போது ஒவ்வொரு தேசங்களின் அடையாளக் கற்களில் அமர்ந்து தன் அலகால் கீறிச் சென்ற கோடுகள் திரும்பத் திரும்ப வந்தமர்ந்து கீறிய கல் வரிகளாகி கதாச்சுருள் சுழன்று கொண்டிருக்கவேண்டும். மனித மிருக பூதக ராட்சஸப் பறவையின கற்பனை மிருக எலும்புகளாக மாறக்கூடிய எழுத்தறியாத வனமந்திர தேவதைச் சுருள் ஆனது எப்போதுமே மீண்டும் கதை சொல்லியை வரலாற்றிலிருந்து உயிர்ப்பித்துவிடும். 

வெவ்வேறு உருவங்களை எடுத்து எழுதப்படாத சரித்திரத்தில் இடம் மாறிக் கொண்டே இருக்கிற முடிவற்ற காகிதப் பரவலில் சிதைந்த கதாமூலத்தின் ஒவ்வொரு துகளையும் கொண்டு உயிர் பெறுகிறான் கதை சொல்லி. 

கனவில் விழுந்த பிம்பங்களைக் குறுக்கே கீறி அதன் வாய்திறந்து வரும் வன மந்திர தேவதைச்சுருள் என்பது சுயேச்சையான உலகங்களோடு இணைந்திருப்பதால் ஒவ்வொரு கனவுமே வனமந்திர தேவதைச்சுருளின் வசீகரத்தில் எல்லா மொழிகளோடும் இணைந்து பாஷைகளுக்கு முந்திய கருவறைக்குள் கர்ப்ப ஸ்திரீயின் சுரோனிதப்பைக்குள் குழந்தையின் மூடிய விரல்களுக்குள் இருக்கும் கமலக்கல்லாகவே இருக்கக்கூடும். கனவுக்குள் அலைவுறும் கதைசொல்லி ஸ்திரீகளின் துயிலில் சென்று மர்மமான சுரோனிதப் பைகளைக் கீறி கமலக்கல்லை எடுத்துத் தன் கண்களைக் குறுக்கே வெட்டி சுரோனிதக் கல்லை கண்மேல் பொருத்தி வேறொரு பிரபஞ்சத்தில் உலவும் குழந்தையோடு உரையாடலைத் தொடங்குகிறான். உயிரின் தோற்றமே இருளறைக்குள் நீந்தும் கதாச்சுருளாக சுருண்டு சிசுவின் வளர்ச்சியாய் உருமாறி ஜனித்த இடத்திலேயே ஒரு வனமந்திர தேவதைச் சுருளின் வேனல்சார் உபகதைகளாக வாழத் தொடங்குகிறது குழந்தை. பொருட்கள் பெயர்கள் மீது வசீகரம் கொள்ளாத நிலையில் பிரபஞ்சத்தின் தைல மிதப்பில் நீந்தத்துவங்கிய சிசுவின் பிறந்த சிவப்பு மாறாத உரு ஈக்கிநெல் கீறித் திறந்த கீற்றுக் கண்களின் சிறு ஒளியே கதைசொல்லியால் இரு கமலக்கல்லின் மறைமுகமாய் இருக்கவேண்டும். அதன் இமை ரெப்பை மினுப்பில் எந்த வார்த்தையும் பிறக்காதபோது கதை பிறந்தது. 

பின்னே தாயாரும் தாதியரும் இமை பூட்டிய கண்மீது வார்த்தைகளை ஒட்டிப்பிறந்த வெளியை மூடி அதிசய உலகைவிட்டு வார்த்தைகளால் விரட்டினார்கள் கதையை. ஒரு ஊர்ல ஒரு நரி அதோட கதை சரி. கதை கதைகளின் கதை என கதை விரித்த கிளைகள் எண்ணிக்கையற்றுப் போயின. 

குழந்தைகளின் அதிசய உலகைக் கொண்டே கதை அல்லாததின் பரப்பை முன் அறியப்படாத வனமந்திர தேவதைச்சுருளின் இன்னொரு பிரதியை உருவாக்கும் புனைவின் வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன குழந்தையோடு ரவுக்கை போட்ட எலிகளும். 
அறியப்பட்ட எல்லாக்கதைகளின் சாத்தியத்தை போர்ஹே எழுதிவிடக்கூடும். போர்ஹே நுழையச் சாத்தியமல்லாத கதையை ஒரு குழந்தையும் பாட்டியம் பூனைகளும் ஆந்தைகளுமே உருவாக்க முடியும். 

முதல் கதை என சொல்ல முடியாத அளவிற்கு போர்ஹே முன் அறியாக கதையிலும் நுழைந்து விடுவதை காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் 'கனவுகளை விற்பவள் நான்' கதையின் பிற்பகுதியில் நெரூடாவும் மார்க்வெஸ்ஸும் பேசிக் கொண்டதிலிருந்து, 

நெரூடா: 'கனவுகள் சொல்லும் அவளைக் கனவில் கண்டேன்.' 

கண்ட கனவைச் சொல்லுமாறு அவர் மனைவி வற்புறுத்த 'என்னைக் கனவில் கண்டதாக அவளைக் கண்டேன்' என்றார் நெரூடா 

'போர்ஹேயின் கதையிலிருந்துதான்' என்றேன். 

'ஏற்கெனவே எழுதிவிட்டாரா' என்று எழுத்தாளனின் வருத்தத்துடன் கேட்டார் நெரூடா, 

'இல்லாவிட்டால் என்றாவது புதிர்ப் பாதைகளில் ஒன்றாக வைத்து எழுதி விடுவார்' என்றேன். 

எனவே 

போர்ஹேயை விட்டு விலகமுடியாத புதிர்ப்பாதைகளில் அவரை சந்தித்துக் கொள்ள நேர்வதிலிருந்து தப்பமுயன்று தோற்றுப்போன நான் எழுதுதல் என்ற வேஸ்ட் பேப்பர் தயாரிப்பில் ஈடுபடுபவன். பூச்சி இன ஆராய்ச்சி பறவைகள் ஆய்வு மானுடவியல் அறிவியல் மனநோய் - பாலியல் கலகங்களில் மொத்தமாகவும் சரணடைந்துவிட்ட இந்த நூற்றாண்டு அடுத்த நூற்றாண்டில் முன்கூட்டியே தடுக்கி விழுந்து விட்டது. ஆனாலும் காகிதத்தில் எழுதுவது கஷ்டம். எழுதிய காகிதங்களை சிகரெட்டாகச் சுற்றலாம். எழுத எழுத சிகரெட் ஆஷ்ட்ரேயில் பல துண்டுகள் சிகரெட் எரிந்து வளைந்த கருப்புக் குச்சிகள், சாம்பல். மறுபடியும் சிகரெட் என் கதையைச் சுருட்டி சிகரெட்டாகப் புகைத்துக் கொண்டிருக்கிறேன். எழுதுபவனுக்கு எழுத்தின் ஊடாகத்தான் ஜீவனே நகரும்போலும். சிகரெட்டைப் பாதியில் அணைத்து ஆஷ்ட்ரேக்குள் பத்திரப்படுத்திக்கொள்வேன். எழுத எழுத ஒவவொரு காகிதமாக சுருட்டிப் பற்றவைப்பதுதான் வழக்கம். இதை மீறுவதில்லை. 

எழுதப்படும் கதையின் முதல் காகிதத்தைக் கிழித்துச் சுருட்டிப் புகைத்தபடி அடுத்த பக்கத்தை எழுதுவேன். எழுத்தின் வேகத்தில் புரளும் பக்கம் ஒவ்வொன்றும் முடிவற்ற பாத்திரங்களின் இடமாற்றத்தில் வெவ்வேறு வேளைகளில் கால இட ரீதியான இடைவெளியில் வேறு தோற்றம் கொண்டபோது முன்யோசிக்கப்படாத உணர்வுகளில் தாஸ்தாயெவ்ஸ்கியோடு பகிர்க்க கொள்ளும் கதாபாத்திரங்களின் சூதாட்ட வெறி என்னைத் தொற்றிக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதிச் சுருட்டி நெருப்பின்றியே உணர்வுகளால் மேண்ட காகிதங்களின் முடிவற்ற பரவல் எாத்து முடிந்த பின்னும் எழுத்துகள் மறையாமல் வளர்க்க வந்து கொண்டிருக்கின்றன. சிகரெட் புகைபோன்ற மெல்லிய வெள்ளை ஆடைகள் அசைய வனமந்திர தேவதை என்முன் உரையாடலைத் தொடங்கியபோது கடலுக்குள்ளிருந்து மீனுக்குள்ளிருந்து சிப்பிக்குள்ளிருந்து கதைராஜ்ஜியத்தில் கடல்பாசிநிற எழுத்துகள் மரம் கல்லாக மாறும் பாசில்களாக எழுத்தென்பது தொல்தமிழின் குலக் குறிகளுடன் நீந்திக் கொண்டிருக்கிறது கண்முன்னே போர்ஹேயை விட்டுவிலகிய கீழை மந்திரக்கதையுடன் மேற்கில் அறியப்பட்ட கதைகளின் நிழல் விழாத ஜப்பான் சீன இந்திய அரேபியக் கதை மரபின் பாதையில் கனவாலோ புனைவு மொழியாலோ புதிய கதைவெளியைப் படை வேண்டியது அவசியமாகிறது. 

நவீன கதை மெட்டாபிஷன் நவநவீனம் அ நேர்கோடு என கதைகள் எல்லாமே எழுதும் முறையை மாற்றி மாற்றித் திரும்பத் திரும்பக் கொடுத்து வாங்கப்பட்டு கதை தன்னைத் திரும்பத் திரும்ப மறுகதையாக்கம் கொண்டு சிறைப் பட்டிருக்கக்கூடும். 

அதன் காரணமாக பொதுவாசகர்கள் பெருகுகிறார்கள் கதாவசீகரம் இழப்பதும் நடக்கிறது. ஆகவே கிழை மந்திரக் கதைச்சுருளை வேறுபட்ட பிராந்தியக் குணங்களின் மண் நிறங்களின் முகங்களில் வட்டமாய் எழுத வேண்டியது அவசியமாகிறது.

எனவே 

முடிவடைந்த கதைக்கும் பனைமரங்களில் அமர்ந்திருக்கும் பேய்களிடம் சாவிகளை வாங்கி கதை அல்லாததிலிருந்து புதிய அற்புதக் கதையைத் திறக்கும் புனைவு எழுத்தை காலத்தின் வரிசைக்கிரமமான அடுக்குகள் முன்னும் பின்னுமாய் மாறிமாறித் தீவிரமாய் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை உடைத்துக்கொண்டு டாலியின் உருகிவழியும் கடிகாரத்தைப் பின்னோக்கித் திருகியவாறு நூற்றாண்டுகளின் அடுக்கில் அலைந்து கொண்டிருக்கும் கதைசொல்லி தமிழின் முதல்தாவலாக அறியப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரத்துக்குப்பின் விரட்டியடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு குடிஉரிமைகள் பறிக்கப்பட்டு லத்தீன் அமெரிக்க எழுத்துக்குள் பதுங்கித்திரிந்தவன் நிர்மூலமாக்கப்பட்ட இனங்களின் கடைசி மனிதனாய் வருகிறான் புராதனக் கதைசொல்லி 

அவனிடம் சொல்வதற்கு ஏதுமில்லை கதைகளைத் தவிர. அவன் கொண்டு செல்வதெல்லாம் கைவிடப்பட்ட இனங்களின் குலக்குறிகளைத்தான். அதிலிருந்து இன்னொரு பிரதியை புனர்சிருஷ்டியில் புத்துருவாக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட நவீன கதைசொல்லி சரித்திரத்தில் படிந்த நிழல்களை இழுத்துக் கொண்டு மையும் காகிதமும் இன்றி கைதட்டியவாறு கதைகூறிக் கதைகூறி கூத்து வாசலில் நின்று எதார்த்த வாதத்திலும் சமூகவியல் படைப்புகளிலும் திரிவோரை மரபின் தொனியோடு கூவி அழைக்கிறான்.

குலக்குறிகள், தொல்கதைச்சுவடிகளை இழுத்துச் செல்லவில்லை அவன் கயிற்றரவைக்கண்ட பித்தனாக மாயக்கண்ணாடியுடன் உரையாடலை தொடங்கிவிட்ட ரஸவாதியாக தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்ட துண்டு துண்டான காலகட்டங்களின் கேலிச் சித்திரங்களை கடந்த யுகத்தின் கோடுகளால் வரைந்து ஜிப்ஸிகளின் டேரட் கார்டுகளை குலுக்கிக்கொண்டு முக்காலங்களின் சறுக்குப்பாதையில் உருமாறிக்கொண்டே புலப்படாத நகரங்களை நோக்கி நெடுங்கால நகரங்களின் விளக்குகள் ஏற்றிய இரவு அவன் வருவதாக கூறப் பட்டிருந்த கல்வெட்டில் உள்ளவாறு கழுகு மூக்குடன் பாபகெனோ படைப்பில் வரும் பறவைமனிதனின் கதையைச் சொல்லியவாறு நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறான். எதிரே முகவெட்டு பார்த்து முகத்தில் எழுத்தை வாஸிக்கும் அவன் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு கதாச்சுருள் எழுதப்பட்டிருப்பதை நிமித்திகமாகச் சொல்லிவிடும் நூதனக் கண்களில் சாம்பல் நீலம் மறைந்திருக்கும். 

குற்றங்களின் பாதையில் பைத்தியமாகத் திரிந்தவர்களை அவனுக்குத் தெரியும். பலவகை மையில் எழுதப்பட்டு அடித்து திருத்தப்பட்ட உலகின் எல்லா வனமந்திர தேவதைச்சுருளுக்குமான கதைப்பேழையை இழுத்துக்கொண்டு வருகிறான். எந்தமொழி எனக் காணமுடியாமல் குழம்பியிருந்த பக்கங்கள் ஆங்கிலமல்லாத லத்தீனில் பாரசீகக் கதைகளில் இடம் மாறிக்கொண்டே ஆதி குடிகளுடன் சேர்ந்து திரிந்த அவர்கள் இயற்கை மொழி உச்சரிப்புகளை சித்திர வடிவமாக்கியிருந்தது. உலகின் அடிவாரங்களில் மறைந்து திரியும் கணங்களின் அடையாளங்களுடன் எலும்புமாலை அணிந்து நரபலிக் காடுகளில் ஓடித்திரிந்த தடங்களின் மந்திர வெட்டுகள் அவன் பாதங்களில், சடங்குகளில் ஊதப்பட்ட மந்திரக்குழலின் ஒலி பதிந்திருந்த உடம்பில் செதில்களை அசைத்தபடி அடி ஆழங்களில் புதைந்த கற்பாறைகளின் பிளவுகளுக்குள் சென்று கணக்குழுவின் மந்திரக்குழல் வாசித்தபடி கதை சொல்லியைச் சுற்றி சுருணை சுருணையாக மஞ்சள் கோலங்கள் சுற்றிச் சுற்றி மாந்திரீக ஒலியலைகள் கதைக் கூட்டமாய் மயங்கி வெண்கொம்புகள் பார்க்க மயக்கமூட்டுவதாயிருந்தன. கொம்பூதும் உதடுகள் கவ்விய மந்திரக்குழலில் கதைசொல்லியின் மரணத்துக்கான இசை ஒரு கார்வையில் நீருக்குள் ததும்பித் ததும்பி உயிரின் அனந்தத்தில் மேலெழுந்த பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருக்கிறேன். தன் உயிரையே பணயம் வைத்துப் பதியப்பட்ட மஞ்சள் கிறுக்கல்களை நான் திரும்பத்திரும்ப வாஸித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பக்கங்களை விட்டுவிடுபட என்னால் முடியவில்லை. அவற்றை எந்த இலக்கியத்திலேனும் படித்ததாக ஞாபகமில்லை. என்னை ஆரம்ப நிலைக்குக் கொண்டு செல்ல மந்திரத்திற்குள் சிக்கவைத்தது. மந்திர வார்த்தைகள் திரும்பத் திரும்ப திரும்பி வந்தன. கடக்க முடியவில்லை. கட்டுண்டநிலையில் வெகுகாலம் வாழ்ந்த கீழ்த்திசைக் கதைகள் தான் தோன்றியாக அலைவுறுகின்றன. தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்ட ஆதிகுடிகளின் கனவுகள் சுவடு விழுந்து பதிந்த கழுதைகளின் சாயல்களை மனித வடிவுகளில் வரையப்பட்ட சோகங்கள். பெரிய பெரிய பாதங்களில் வரைந்த கோலங்கள். உதடுகிழிந்த ஆதிவாசிகள் புலிக்குகையில் கட்டம் கட்டமான கோடுகளில் இருந்த ஆதிபயம். கோண்டுகளின் கடல் மந்திரம். மிகவும் அழுக்குப்படிந்து பக்கங்களின் முனைகள் கிழிந்த அவன் கதைப் பேழை, கருப்பானது. விரல்கள் பட்டு அழிந்த எழுத்துகள். பலரும் சந்திக்க மற கண்களுக்குப்படாது மறையும். உள்ளே ஒடிந்த தாள்கள். கவன புரட்டினேன். ஒவ்வொரு ஒடிந்தவார்த்தைகளும் தைக்கப்பட்டிருந்த கந்தலாகும் வார்த்தைகள். தலைகீழாக அடுக்கப்பட்டிருந்தன. காலம் ஊடுருவிப் பழுப்படைந்து பச்சையும் கருப்பும் கலந்த மையில் அலைக்கழிந்த கதை சொல்லியின் கிறுக்கல். 

காணாமல்போன தோல் கூனையின் கிழிசல்களை பொத்தலை சிறிய தோல் வாரினால் மாட்டுக்கொழுப்பில் குத்திய செருப்பு ஊசி எனும் எழுத்தாணி கொண்டு நூதனத்தோல் ஏடு தயாரித்து மிருகத்தொலி உலர்த்தி லிபிகளை வரையும் ரவாதியான கராமத்துப் பகடையும் தச்சுவேலைக்காரரும் சேங்கொட்டையில் ஊக்கால் குத்தி மை எடுத்து குலக் குறி போடும் வண்ணாரும் நவீனக் கதைகளின் மொழியை தைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மென் தோல் மிருகங்களின் சருகு உடல் கூடுகளை உரித்து பதனிட்டு கஷாயங் களும் உப்பும் தடவி உலர்த்தியவாறு ஜிப்ஸிகளாய் திரியும் நரிக்குறத்திகள் தாவரத்தில் ரஸமெடுத்து ஜனங்களின் உடல்தோலில் கீறிய பச்சை மொழி தேள், பாம்பு, பல்லி, டிராகன், அணில், வௌவால், பூரான் ஊர்ந்து வந்து கனவில் பதிய கண்ட கனவின் அகராதியை கம்பள ஜாதிப்பெண்கள் குறி போடும் குச்சியில் சுற்றி வைத்திருப்பதால் தமிழ்க் கதையின் மந்திரக்குறிகளை கம்பள ஸ்திரீயிடமே அறிய முடியும். குறடையும் கம்பளியும் தோளில் போட்டுத் தேள்கொடுக்கு மீசையைத் திருகியவாறு நவகம்பளத்தார் காடாறுமாசம் நாடாறுமாசம் திரியும் போது முன்னுணர்ந்து சொன்னவாக்கில் வேதிவினைகளில் ஓடும் ரஸவாத பரிபாஷைகளை கிராமத்தார் சமிக்ஞைகளால் அறியக்கூடும். புலனுக்கு எட்டாத ஒலிகளைக்கூவும் பறவைகளுக்கு பதில் மொழி கூறிய குருவிக்காரன் பின்னே தேவாங்கு நடந்துபோன தடத்தைக் கவனமாகப் பின்பற்றிப் போன கவுளி தொண் டைக்கடியில் உள்ள வெந்நீர்ப் பைகள் நிரம்பி நடுங்கும் குரலில் கலகலவென்று சுவரிலிருந்தவாறே அதிர்கிறது குரலால், உயர்வெப்ப அழுத்தத்தில் கவுளிமொழி மனிதனோடு ஒட்டி வருவதால் சுவரில் நடந்துவரும் கவுளியின் அடிவயிற்றில் இருந்த முட்டையின் வெள்ளை நிறம் சூரிய ஒளியால் ஊடுருவித் தெரிந்தது. அந்த முட்டைக்குள் பாம்பு போல சுருண்ட ஒரு குட்டிப்பல்லி மொழி சமிக்ஞையாக வால் சதாவும் துடித்தது. தாயிடமிருந்து விடுவிக்கப்படாத முட்டை மீது எழுதப்பட்டிருந்த ஜந்துக்களின் மொழிவடிவைப் பிறவாத பல்லியின் ஜீவனில் உறைந்த கனவை கண்ணாடியில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்' கதையில் ஜுரவேகத்தில் உணரநேர்ந்தது. 

கதாஒலித்தொகுதியாக இராவிருட்டில் புதைந்திருக்கின்றன ஜந்துக்கள். அடையும் குகை இருட்டில் நுண்பூச்சிகளின் உயிர்ச்சத்தமாக நாமறியாத மெய்யெழுத் தொலியும் உயிரெழுத்தொலியும் செடித்திரளில் உராய நாசி வெப்ப மூச்சில் ஒலிவடிவ நுரையீரல் எரிய அலோக - உலோக இணைவில் தொல்மனப் படிவங்கள் நூதன இழையாகப் பின்னப்பட்ட மொழிவலையில் உருவாகும் மாயக்கதைப்பரப்பை எழுத்தறியாத ஜனத்தின் குரல் அடியில் தொட இன்றுவரை யாராலும் முடியவில்லை . 

ஜனத்தின் குரல்மாயக் கதைத்துகளை எடுத்து எழுத்து வழிக் கதையுடன் மறு உருவாக்கம் செய்ய ஓடிப்போன சூனியக்காரக் கிழவியை கிழக்கே போய்த்தான் அழைத்து வரவேண்டும். 

தமிழின் நவீன மந்திரக்கதை உருவாகி இருக்கிறதா? இருந்தால் காலவரம்பற்ற பிரபஞ்சத்தன்மையுடன் இணைந்திருக்கும். தமிழ்க்கதைக்காரர்கள் மந்திரத்தின் பக்கம் புராணத்தின் பக்கம் அற்புதங்களின்பக்கம் திரும்பாமல் இருப்பதற்குக் காரணங்களை அறிவோமா? இந்த வடிவங்களில் சமகால விஷயங்களை முன்வைக்க முடியாமல் போனதேன்? உறைந்து போன வடிவங்களுக்குள் முகம்காட்டி ஒவ்வொரு கதையின் கற்பனை சாத்தியங்களுக்கு எல்லை வரம்பிட்டு விட்டிருந்தார்கள் வைதீகப்பாங்கை முன்வைத்த பெரும்பாலான குடும்ப அச்சில் கிறுகிறுத்தவர்களும் மரபுவடிவத்தில் சிறுகதை படைத்தவர்களும் நேர்கோட்டு அ-நேர்கோட்டு சிதைவுகள் வனமந்திர தேவதைச்சுருளின் தனித்துவத்தைக் கண்டடைந்ததில்லை. வனமந்திர தேவதைச்சுருள் பற்றி எல்லோருமே சில அலகுகளைச் சோதித்திருந்தாலும் உணர்ந்த வழியில் தவறான அறிதலுக்கே இட்டுச்சென்றது. இந்த மரபு கிழக்கில் வெகுகாலம் ஜனங்கள் தங்களுக்குள் இயற்கையிடம் நீருடன் தவளையுடன் பூச்சிகளுடன் காற்றிடம் முட்டையிடம் பாதையிடம் மந்திரக்கட்டாகப் படித்தவர்களை ஏமாற்றி தனி வழியே கொண்டு போகிறார்கள். திரட்டித் தொகுத்த ஃபோக்லோர் மியூஸியங்களில் செத்த மிருகக் காட்சியகமாக பிஸ்லரி வாட்டர் கேனுடன் இன்டர்நேஷனல் செமினார்களில் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிகளில் தட்டுத்தீனி விவாதமாக முள்கரண்டியில் வனமந்திர தேவதைச் சுருளைப் பிடித்து தலைகீழாகப் பார்த்துப் பிரமித்தார்கள்.

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு சி. சு. செல்லப்பா , சிதம்பர சுப்பிரமணியனின் இதய நாதம் ஜடாதரன்



ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு 

சி. சு. செல்லப்பா 

இன்று தமிழ் இலக்கியத்தில் சிறுகதை போல் இல்லாமல் நாவல் வளர்ந்து வருகிறது என்பது உண்மையே. வளர் கிறது என்கிற போது தொகையளவில் மட்டும் இல்லை , தரத்திலும் கூடத்தான். இந்த நிலையில் நாவல்களை தரம் பிரிக்கிறபோது தலைசிறந்த நாவல், சிறந்த நாவல், நல்ல நாவல், சுமாரான நாவல் என்று ரகம் பிரிக்கத் தோன்றுகிறது எனக்கு. இந்த பாகுபாட்டின்படி பார்த்தால் தமிழில் சுமாரான நாவல்கள் என்று சொல்ல ஏதாவது கிடைத்தாலே பெரிய பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். மேலே சொன்ன தரப்பாகுபாடு பற்றி உதாரணம் காட்டிச் சொல் லப்போனால், இதுவரை தமிழில் வெளி வந்துள்ள நாவல்களில் தலைசிறந்தது மோகமுள்' சிறந்தவைகளில் போய்த்தேவு நல்ல நாவல்களில் நாகம்மாள் இதய நாதம்' என்று ஒன்றிரண்டு உதாரணம் காட்டுவேன் சுமாரான நாவல்கள் என்று வருகிறபோது கூட எனக்கு அதிக சங்கடம் இல்லை. 

எனக்கு திருப்தி தருகிற சுமாரான நாவல்களே மிகக் குறைவு. உதாரணத்துக்கு மற்ற சிலதை சொல்வதைவிட எனக்கு விமர்சிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் புத்தம் வீடு நாவல் ஒரு சுமாரான நாவல் என்று சொல்வேன். என் சுமார்' என்பதுக்கு அளவுகோல் என்ன என்று கேட்டால், ஓஹோ என்று சொல்லும்படியான தனித் தன்மையான முயற்சிகள் விஷய , உருவ , உத்தி வகைகளில் கையாளப் படாவிட்டாலும் அதாவது அதிகபட்ச சாதனை இல்லாவிட்டாலும், எலிமெண்டரி' என்கிறோமே அரிச்சுவடி நியதிகள்' அஸ்திவார விதிகளையாவது கவனித்து, அதாவது குறைகள் நீங்கியாவது அல்லது குறைந்த பட்ச குறைகளு டன் இருக்கிற நாவலை சுமார் என்பேன். பாஸ் மார்க் நாவல் என்று வைத்துக் கொள்ளுங்களேன். முப்பத்தைந்து சதவிகித மார்க் பாஸ். 

ஸ்ரீமதி ஹெப்ஸிபா ஜேசுதாஸன் நாவல் புத்தம் வீடு அவரது முதல் நாவல்; இதுவரை எழுதி இருக்கும் ஒரே நாவல். இந்த பதினைந்து நாவல்கள் விமர்சனக் கூட்டங்களில் கவனிக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒரே நாவல் எழுதியிருப்பவர் இவர்தான். எனவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதை மனதில் கொண்டே நான் இந்த நாவலைப் பார்க்கிறேன். விமர்சகனுக்கு அநுதாபம் இருக்க வேண்டும் என்று நேற்றுக் கூட்டத்தில் சொல்லப்பட்டது. அனுதாபம் என்றால், முன்கூட்டிய வெறுப்பும், அலட்சியமும் காட்டாமல் பார்ப்பது என்றுதான் அர்த்தமே தவிர, எதை யும் தட்டிக் கொடுப்பது என்று அர்த்தம் இல்லை. நடை போட்டுச் செல்லும் சொரணையுள்ள வண்டிமாட்டின் மீது விரலை வைத்தால் அது எகிறிப்பாயும். சொரணைகெட்ட மாட்டை தட்டிக் கொடுத்தால் அது கொஞ்சுவதுக்கு நின்று விடும். அதேபோலத்தான் அனுதாபம் காட்டுவதும். அனு தாபம் பெற இடம் இருந்தால் கொடுத்தே ஆகவேண்டும். இந்த நாவலுக்கு என் அனுதாபத்தை கொடுத்தே பார்க்கி றேன். ஏன் என்றால் அதுக்கு இது இடம் தருகிறது. 

இந்த நாவல் நமக்கு முன் காட்டுகிற தென்ன, போடு கிற கேள்வி என்ன என்பதே கேள்வி. ஜாதி, அந்தஸ்து 

இரண்டும் விளையாடும் விளையாட்டு எப்படி இருக்கும், எதில் முடியும், எந்த விதமாக முடியும் என்பதை ஒரு கோணத்திலிருந்து பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தமிழ் நாவலுக்கு அப்படி ஒன்றும் புதுசு இல்லை. சிறு கதைகளிலும் சில நாவல்களிலும் கையாளப்பட்டிருப்பது தான். எனவே புதுசான ஒரு கதையாகப் படவில்லை எனக்கு. ஆனால் அந்தஸ்தும் வறட்டு கவுரவமும் ஒரு சோக நிகழ்ச்சியாக துன்ப முடிவுக்கு இட்டுச் செல்லாமல், ரோமியோ - ஜுலியட் லைலா - மஜ்னூன் வாழ்வு போல் ஆகாமல் லிஸி - தங்கராஜ் உறவு ஒரு இன்பமான முடிவுக்கு உதவி இருக்கிறது. 

அப்பட்டமாகச் சொல்லப்போனால் இது ஒரு காதல் கதைதான். லிஸி - தங்கராஜ் ஆசை நிறைவேற்றம் பற்றிய உத்தேசம்தான் ஆசிரியரின் முதன்மையான, ஏன், ஒரே நோக்கம் என்று சொல்லலாம். எனவே காதல் வழி கரடு முரடாகத்தானே இருக்கும். இருந்தாக வேண்டும் என்ற சம்பிரதாயமும் இருக்கிறதே. எனவே அதுக்குக் குறுக்கே வருகிறவர்கள் ஏற்படும் நிகழ்ச்சிகள், குரோதம். பொறாமை, இதெல்லாம் வந்தாக வேண்டும் இல்லையா? 'புத்தம் வீடு' பழம் பெருமை கொண்ட லிஸியின் தாத்தா கண்ணப்பச்சி. அவள் குடிகார தகப்பன், மூர்க்கனான சிற்றப்பா , குரோதம் காட்டும் சிற்றப்பா பெண் லில்லி, கபடமாக நடந்து கொள்ளும் அவள் கணவர் வைத்தியர் போன்றவர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி, அதிகப்படுத்தி விபரீதத்துக்கு கொண்டு விட்டு விடுகிறார்கள். பெரியவள் லிஸிக்கு மணம் ஆகாமல் சிற்றப்பா பெண் சிறியவள் லில்லி கல்யாணம், அந்தஸ்து குறைவான தங்கராஜ்லிஸியை மணக்க கேட்டல், இரண்டாலும் தந்தை ஆத்திரம், சிற்றப்பா கொலை, தங்கராஜ்மீது கொலைப்பழி , ஆனால் கொலை செய் தது குடிகாரத் தகப்பன், தந்தையின் தற்கொலை, உபதேசி யாரின் ஆதரவான செயல், உண்மை வெளிவருதல், தங்க ராஜ் - லிஸி திருமணம், ஓய்ந்த மனம் கொண்ட கிழட்டுக் கண்ணப்பச்சியின் வேறு வழியில்லாத சம்மதத்தோடு - இப் படியாகக் கதை முடிகிறது. 

நாவலின் கதையம்சம் உங்களுக்கு தெரிந்திருக்கும் இதிலிருந்து. இந்தக் கதை ஏதாவது புதுசாகத் தொனிக்கிறதா? நம் சினிமாக்கதை போல இருக்கிறது என்று நான் சொல்லத் துணிவேன். மோகமுள் மாதிரி பால் உணர்வு கலையாசை சம்பந்தமான ஒரு அடிப்படை மனோதத்துவப் போராட்டம், பொய்த்தேவு மாதிரி நிஜத்துக்கும் பொய்க்கும் வித்தியாசம் காண இயலாத ஒரு வாழ்க்கை யாத்திரை அனுபவம். 'இதய நாதம்' மாதிரி குரலால் செய்த உபாசனையை இழந்து இதயத்தால் பகவானை உபாசனை செய்யும் நிலைக்கும் வடு ஏற்பட்டத்திலே நிம்மதி பெறுமுன் நடுவே பட்ட வேதனை. 'நாகம்மாள்' மாதிரி அப்பாவியாக இருந்து ஊர் அவருக்குக் கொடுத்த தொல்லையில் ஊரையே எதிர்க்கத் துணிந்த ஒருமனதின் போராட்டம் போல ஒரு விசேஷ' கதையம்சம் கொண்ட நாவல் இல்லை இது . அவை மாதிரி இருந்திருந்தால் ஒரு பெருமுயற்சி என்று நினைத்திருப்பேன். 

ஆக, ஒரு சாதாரணக் கதையம்சம் கொண்டது இந்த நாவல் . ஆனால் அதுக்காக நான் அதை ஒதுக்க, புறக்கணிக்க முற்படவில்லை. அவரது நோக்கத்தை, உத்தேசத்தை, கதைக்கருவை அவரவருக்கே விட்டுவிட வேண்டியதுதான் விமர்சகன் தர்மம். படைப்பாளி கொடுப்பதை ஏற்க மறுத்து விமர்சகன் எதிர்பார்ப்பதை விரும்புவது சரியான காரியம் இல்லை. எனவே, நாவலுக்கான விஷயத்தை அங்கீகரித்து, அதன் உள்ளடக்கத்துக்கு கைத்திறன் பயன்பட்டி ருப்பதையும் காணும் கலைத்திறனையும் நிதானிப்பதுமே விமர்சகன் வேலையாகும். 

பழகின கைகள் செய்கிற காரியத்தை புதுக்கைகளில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஹெப்ஸிபா ஜேசுதாஸன் கை சரியாக எழுத ஆரம்பித்திருக்கிறது. பனைவிளை கிராம மும் புத்தம் வீடும் நமக்கு அறிமுகப் படுத்தப்படுவது முதல் பாத்திரங்களும் ஒருவர் பின் ஒருவராகச் சேர்ந்து வருகிற போக்கில் ஒரு இடத்து, ஒரு மத, ஒரு ஜாதி, ஒரு பழக்க வழக்கச் சித்திரம் உருவாகத்தான் செய்கிறது. இனம் காண முடிகிற அளவுக்குக் கற்பனையில் உருப்பெருகிறது. பிரதேச நாவல் என்றால் ஏதோ அந்தப் பிரதேசத்துக் கொச்சையை அள்ளிக் கொட்டி விட்டால் போதும் என்று தப்பாக கணித் துக்கொண்டிருப்பவர்கள் நமது எழுத்தாளர்கள் பலரும். அதோடு ஒரு இடத்தை பூகோள ரீதியாக வர்ணித்து விட் டால் போதும் என்றும் நினைக்கிறார்கள். இது இல்லை; பிரதேச நாவல் என்பது ஒரு இடத்து மண்ணுக்கு உரிய தனி வித சுபாவம், காற்றாக எங்கும் பரவி இருக்கவேண்டும். அது தான் பிரதேசநாவலுக்கு மூச்சு . அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் பாக்ஸரின் நாவல்கள் தலை சிறந்த உதாரணம். என் நாவல் வாடி வாசல்' மதுரை ராமனாதபுரம் மாவட்டங்களில் அவைகளிலும் குறிப்பிட்ட பிரதேசங்களில் தான் நடக்கும். 

நாகம்மாள் நாவலுக்குப் பிறகு புத்தம் வீடு தான் ஒரு புதிய பிரதேசத்தை இனம் காணச் செய்யும் நாவல் என்று நான் நினைக்கிறேன். கொச்சைக்காக மட்டும் இல்லை, சுபாவத்துக்காக . பனையேறிகளின் வாழ்வு இங்கே படமாகிறது. இந்த ஜாதியாரின், இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய முதல் நாவல் இதுதான். கிருஸ்தவக் குடும்பம் இங்கே பேசுகிறது. கிருஸ்தவ சமூக நாவல் நான் தமிழில் படிப்பதும் இதுதான் முதல் தடவை. அன்று நாகம்மாள் கொங்கு நாட்டைக் காட்டியது. பி. எஸ். ராமையா தன் சிறு கதைகளால் மதுரை பிராந்தியத்தையும், புதுமைப்பித்தன் திருநெல்வேலி பிரதேசத்தை யும் கோணம் காட்டினார்கள். இப்போது திருநெல்வேலிக்கும் தெற்கே கேரளத்தை ஒட்டிய தமிழ்ப் பகுதியில் உள்ள கன்யாகுமாரி பிரதேசம் இதில் கோடி காட்டப்படு கிறது. 

நான் திருநெல்வேலி ஜில்லாவையும் குமரிப் பிரதேசத் தையும் கொஞ்சம் அனுபவித்தவன். தாம்ர பரணி அங்கு ஓடினாலும் பனைமரம்தான் எங்கள் முன் நிற்கும். நாவலில் வரும் பனைவிளை போல் பல கிராமங்களை, கிராம வாசிகளின் பேச்சை நிறையக் கேட்டிருக்கிறேன். திருநெல்வேலிப் பேச்சுக்கும் பனைவிளைக் கிராமத்தாரின் பேச்சுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நான் இந்த நாவலை படிக்கிறபோது ஒரு சில சொற்கள், தவிர மற்றப்படி எனக்குப் புரிந்தது. உதாரணத்துக்கு, அனந்தரத்தி, அடிச்சக் கூடு, பாட்டாக் காரர் , அக்காணி, டீக்கனார், புரோகதி, இற்செறிப்பு , புளாயிடம் போன்றவை. ஆனால் சந்தர்ப்பத்தில் இவைகளைப் பொருள் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாவலில் வரும் பிரதேசச்சொற்களை இப்படித்தான் வாங்கிக்கொள்ள வேண் டும். இந்த நாவலில் பிரதேச மணம் எழுகிறது. ஆனால் மென்மையாக வீசுகிறது. அழுத்தம் இன்னும் விழுந்திருக்கவாம். முதல் நாவல் இல்லையா? கோடி காட்டி இருப்பது வளரும் கைக்கு அறிகுறி. 

இந்த நாவலின் ஆரம்பப் பாராவே எனக்குத் திருப்தி தருகிறது. அதேபோல் பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் வர்ணனையும் நடையும் நாவல் நெடுக இதேபோல போயிருந்தால் அதிகக் கனம் நாவலில் ஏறி இருக்கும். போஷாக்கும் சேர்ந்திருக்கும். 

இந்த நாவல் புறம்போக்கான கதை சொல்லல் வழி பின்பற்றியது. மூன்றாம் மனிதப் பார்வை நாவல். ஆசிரியை கதையைத் தடம் பிசகாமலும் அவசியமான தகவல் களை மட்டும் தேர்ந்தெடுத்தும் சொல்லிச் செல்கிறார். சொல் செட்டு, வளர்த்தாத, நீர்க்காத சம்பாஷணை, இதெல்லாம் இருக்கிறது. கதாபாத்திரங்கள் வர்ணனை எல்லாம் கச்சிதமாகத்தான். பாத்திரங்கள் யாரும் அப்படி ஒன்றும் தீர்க்கமான, திடமான, அழுத்தமான பாத்திரங்கள் இல்லை. குறித்து முதன்மையாக இவர்தான் அடுத்தபடி இவன் என்றெல்லாம் சுட்டிச் சொல்லத்தக்க குறித்த தனிப்பாத்திரம் யாரும் இல்லை. ஏதோ குடும்பப் பெருமை மட்டும் பேசும்; இன்று சீர்குலைந்து கிடக்கிற ஒருகுடும்பத்தின் 

ஜம்பத்துக்குக் குறியீடுகளாக நிற்பவர்கள் தான் காணப் படுகிறார்கள். சீராக இருந்த நிலமை அனுபவித்துச் சீர் கெடும் நாட்களையும் பார்த்து வரும் கண்ணப்பச்சி கூட முன் வந்து நிற்கவில்லை. எல்லோருமே லிஸி - தங்கராஜ் பிரச்னைக்கு உதவுகிற அளவுக்குத்தான் வந்து போகி றார்கள். 

லிஸி , தங்கராஜ் இருவருமே இன்னும் உருவாகாத. சிறு வயது வளர்பருவத்தினர் போலத்தானே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள தங்களவர்கள் ஆட்டுகிறபடி எல்லாம் தானே நடந்து கொள்கிறார்கள். தங்கள் காரியத்தை சாதிக்கத் தக்க வழி வகை தெரியாமல், தீர்மானிக்க முடி யாமல் தவிக்கிறார்கள். ஏதோ ஏசுநாதர் அருள் இருந்து அவர்களை சேர்த்து வைக்கிற மாதிரிதான் (உபதேசியார் தானே துப்பு துலக்கி தங்கராஜ் விடுதலைக்கு வழி செய்கிறார்) அவர்கள் பிரச்னை தீர்கிறது. இந்த நாவலில் லிஸி - தங்க ராஜ் பிரச்னைதான் முக்கியமே தவிர, லிஸியோ தங்க ராஜோ, வேறு யாரோ முக்கியம் இல்லை. ஒரு குறிப் பிட்ட கட்டத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு அந்தஸ்து வித்யாசக் குடும்பத்தவர்கள் சில சிறு மனப்பிராந்திகளைக் கொண்டு, நினைத்து, காரியம் செய்து சிக்கல்களை விளை வித்துக் கொள்கிறார்கள். அவதிப்படுகிறார்கள். அவர்களில் லிஸிக்குத்தான் பிரச்னை கொஞ்சம் கடுமையாக உள்ளது. உள்ளூரத் திடம் இருந்தாலும் வெளியே நடந்து கொள்கை யில் அதைத் தக்க சமயத்தில் காட்டச் சக்தியற்றவளாகவே இருக்கிறாள். தங்கராஜோ தான் செய்கிற காரியம் என்ன என்பதை அவன் உணர்ந்தவன் தான். ஆனால் ஆசையை சக்திக்கு மீறிக் கொண்டு விட்டவன் முன்னும் போக முடி யாமல் பின்னும் போக முடியாமல் இக்கட்டான நிலைமை யில் குழம்புகிறான். அவனாகப்பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை. அவன் சக்திக்கு மீறி அவன் ஆசைப்பட்டதுபோல் அவன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் தான், பிறரது சக்தி யால் தான் அவன் பிரச்னை தீர்கிறது. 

மொத்தமாக, இந்த நாவல் ஒரு முழுமை பெற்றி ருப்பது படுகிறது; ஒருவிதத் திருப்தியும் தருகிறது. ஆனால் ஒரே ஜாதி ஆனாலும் பனையேறித் தொழில் குடும்ப அந்தஸ்து மாறுபாடு சம்பந்தமான ஒரு பிரச்னையை ஆரம்ப முதல் மென்மையாக, நாசூக்காகக் கையாண்டு மெது வாக லாகவமாக கதை வளர்த்து வந்த படைப்பாளி கடைசி அத்யாயத்துக்கு முந்தின அத்யாயத்திலே, அதாவது அண் ணன் மகள் மூத்த லிஸிக்கு மணமாகுமுன் தம்பி மகள் சின்னவள் லில்லிக்கு மணம் ஆகவும் வந்த அடுத்த அத்யாயத் திலேயே இதுவரை உளப்போக்கு ரீதியாக கதை ஜோடித்து வந்ததை கைவிட்டு விட்டு, ஒரு கொலை, கைது, விசாரணை, தற்கொலை, விடுதலை ஆகிய நிகழ்ச்சிகளை ராக்கெட் வேகத் தில் மளமளவென அடுக்கி, லிஸி - தங்கராஜ் மணத்தை முடித்துப் பார்க்க ஏன் இந்த அவசரம்? அதோடு அவர்கள் பிரச்னை தீர, தன் பெண்ணுக்கு முன் தம்பி பெண்ணுக்கு மணம் நடந்த ஆத்திரம், பனையேறித் தொழில் செய்யும் தங்கராஜ் தன் பெண்ணை கட்டிக்க கேட்ட கோபம் இரண் டும் சேர தங்கராஜ் அரிவாளாலேயே தன் தம்பியைக் கொன்று, தங்கராஜ்தான் கொலை செய்தவன் என்று பழி சுமத்தி விசாரணை நடக்கச் செய்து, பின் தன் குற்றம் தன்னை அறுக்க அண்ணன் தற்கொலை செய்து கொண்டது இதெல் லாம் அவசியமா இந்த நாவலுக்கு. இங்கே கொலையும் தற் கொலையும் பிரச்னையாக வந்திருந்தால் சரி. ஆனால் இவை ஒரு நொண்டிச்சாக்காக, கதை முடிச்சவிழப்புக்கு சுளுவாக உதவக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே வருகின்றன. உண்மை யில் இந்த அத்தியாயத்தைப் புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்து விட்டால் என்ன என்று தோன்றுகிறது எனக்கு. செய்து விடலாம். அதுக்கு பதில் இடைச் செருகல் செய்ய எனக்கு உரிமை கிடையாதே. 

போகட்டும் இந்தப் பெரிய குறையிலும் ஒரு ஆறுதல் படிப்பவனுக்கு. கொலை, வழக்கு, தீர்ப்பு, தற்கொலை இத்யாதிகளுக்கெல்லாம் ஆசிரியை காட்சிகள் கட்டங்கள் ஆர்ப்பாட்டமாக எழுப்பாமல், க. நா. சுப்ரமண்யம் பொய்த் தேவு' வில் சொல்லி இருப்பது போல நிதானமாகச் சொல்லிச் சென்றுவிட்டார். இருந்தாலும் இந்தக் கட்டம் தேவையில்லை, இதுக்கு மாறாகக் கதையின் மென்மையான போக்குக்கு ஏற்ற இசைவான வேறு சந்தர்ப்பங்களை ஏற் படுத்தி சுதாவாக கதை விருவிருப்புக்கு வழி செய்திருந்தால் சுருதி மாறி இருக்காது என்று சொல்லத் தோன்று கிறது. 

இன்னொரு குறை உதாரணத்துக்கு : 

இந்த மாதிரி எழுதுவது அறுபதுக்களில் பத்தாம் பசலி எழுத்துதான். வேத நாயகம் பிள்ளையும், ராஜம் அய்யரும் மாதவையாவும் அன்று முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட பழய காலத்தில் இந்த மாதிரி எழுதினதுக்கு மன்னிக்கலாம் - தமிழுக்கே முதல், ஆரம்ப நாவல்கள் என் பதுக்காக, அநுதாபமாகப் பார்த்து . வ.வெ.சு. அய்யரின் 'குளத்தங்கரை அரசமரம்' இப்படிப் பேசினபோது கூட அது கதாபாத்திரமாகத் தன் உணர்ச்சியைக் கலந்தது. அது பொருத்தமானது. ஆனால் இங்கே சாட்சியாக உள்ள ஆசி ரியை தன் உணர்ச்சியை அப்பட்டமாகக் கலக்கிறார். கதாபாத்திரங்கள் அசட்டு அபிமான இருக்கத்தோடு (செண்டி மென்டலாக) நடந்து கொள்வதுதான் நம் தற் போதிய நாவல், சிறு கதைகளில் காண்பது சகஜமாக. இங்கு ஆசிரியையே சென்டிமென்டலாக தன் வேதனைக்குரல் கொடுக்கிறார். இது கலைத்தரமானது இல்லை. இதே மாதிரி இந்த ஒரு இடத்தில் பனையேறிகளின் வாழ்க்கை பற்றி துயரக்குரல் கொடுத்திருப்பது; ஆசிரியை தன்னை முன் நிறுத்திக் கொண்டு 'பனையேறிகள் மகாநாட்டு தலைமைப் பிரசங்கம் போல் தொனிக்கிறது. இதெல்லாம் தவிர்த்தாக வேண்டியவை, சுமாரான நாவல் என்பதிலிருந்து அடுத்த படிக்கு இது நல்ல நாவல் என்ற பிரமோஷன் பெற வேண்டு மானால், 

இந்த நாவலில் அங்கங்கே உபமானங்கள் யதார்த்த மாகவும் நல்ல கவனிப்பைக் காட்டுவதாகவும் இருக்கின்றன 

உதாரணமாக... (பக்கம் 6) இன்னும் சாது வடித்து அழகு பார்க்க', 'பேர் போடப் போனோம்' போன்ற அழகான பேச்சு வழக்கு பிரயோகங்கள் காணப்படுகின்றன. கொச்சைச்சொல்லை பாத்திரங்களின் பேச்சிலே தான் சொல்ல லாம், ஆசிரியர் எழுதக்கூடாது என்று மேடை மேல் தமிழ் எழுதச் சொல்லித்தரும் போதகர்களை பார்க்கிறோம். இந்த நாவலாசிரியை ஒரு கலாசாலைப் பேராசிரியர் : 'ஆனா லும் குறட்டையின் ஒலி பெலந்தான் பெலமாகக்' காறித்துப் புவதிலிருந்து அறியலாம்' என்று எழுதி இருக்கிறார். தெரிந்தேதான் அவர் இந்தச் சொல்லை உபயோகித்திருக் கிறார் ஆசிரியை. எனக்கு இது உடன்பாடு. 

இங்கிலீஷ் வாக்கிய அமைப்பு என்றும், இங்கிலீஷில் நினைத்து தமிழில் எழுதுகிறார்கள் என்றும் ஒரு கிளிப்பிள்ளை புகார் உண்டு. அவள் பலர் காண வெளியில் வருவது கூடாது. இது அவள் விலையை குறைப்பதாகும்' என்று எழுதி இருக்கிறார் .... இதுவும் எனக்கு உடன்பாடு. வளரும் தமி ழுக்கு இதெல்லாம் தேவைதானே. 

ஆக, புத்தம் வீடு' நாவலை நான் படித்து வந்தபோது இன்றைய பல நாவல்களை நான் உதறிவிடுவது போல் என் னால் புறக்கணிக்க முடியாதபடி அது என் கவனத்தை நீடிக் கச் செய்து கொண்டிருந்தது. அதன் நிறைகுறைகள் என் மனதில் பட்டதைக் கொண்டு சுமாரான நாவல் என்று சொல்லுகிறேன். அதோடு இந்த ஆசிரியரின் அடுத்த நாவலை எதிர்பார்க்கிறேன். அது நல்ல நாவலாகவோ சிறந்த நாவலாகவோ இருக்கக்கூடும். 

===========================

***************************** 

சிதம்பர சுப்பிரமணியனின் இதய நாதம் 

ஜடாதரன் 

ஒரு நாத யோகியைக் கதாநாயகனாக வைத்து எழுத வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்துவந்தது. அதன் விளைவே இந்தப் புத்தகம்'' என்று தன்னுடைய முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர் , ந . சிதம்பர சுப்ரமணி யம் அவர்கள். நாதோபாசனையில் தன் வாழ்வை அர்ப் பணித்துக்கொண்டுவிட்ட ஒரு மகானுடன் பழகிய அனுபவ நிறைவு இந்த நாவலைப் படித்து முடித்ததும் நமக்கு ஏற்படு கிறது. 

கதையில் கந்தசாமி பாகவதர் என்பவரின் வாயிலாகக் குறிப்பிடும் கருத்தின்படி, ஆசிரியர் தன் கலையின் பயனை அடைந்துவிட்டார் என்று சொல்லவேண்டும். 

'எங்கேயாவது ஒரு மூலையில் அழுக்கு வேஷ்டியை கட்டிக் கொண்டு ஒரு பரம ரசிகன் உட்கார்ந்திருப்பான். நீ பாடும் பாட்டைக் கேட்டுவிட்டு, ஆத்மானந்தத்தினால் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிப்பான். அதுதான் நீ கற்ற வித்தையின் பலன்'' என்று கதாநாயகனிடம் கந்தசாமி பாகவதர் கூறுகிறார். உண்மையான கலையின் பயனை எவ்வளவு அழ காகக் கூறிவிட்டார் அவர். பாரதப் பண்பில் நம்பிக்கையும் சங்கீதத்தின் தெய்வத்தன்மையில் ஈடுபாடும் கொண்ட ரசிக உள்ளங்களுக்கு இதய நாதம்' ஒரு வரப்பிரசாதம்! 

சொல்லப்போனால் இந்தக்கதையின் ஜீவநாடியே சங்கீதம் தான். ஆகவே வழக்கமாக நாம் படிக்கிற நாவல்களிலிருந்து சற்று விலகிய பாட்டையில் தான் கதை நடை போடுகிறது. அதுவே அதற்கு ஒரு சிறப்பாகவும் அமைந்துவிடுகிறது. சாதாரண மனிதனுடைய எண்ணங்களுக்கும் கலைஞ்னொரு வனின் எண்ணங்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் கலையை ஒரு யோகமாகப் பயிலும் ஒருவனைக் கதாநாயகனாக வைத்து எழுதும்போது, அப்படிப்பட்ட ஒரு யோக அனுப வத்தை உணர்ந்திருந்தாலன்றி, எழுத்தில் வெற்றி பெற்று விட முடியாது. ஆசிரியர் எழுத்தில் இந்த வெற்றியை அடைந்திருக்கிறார் என்று சொல்லும்போதே அவரது கலை உபாசனையை' நாம் வணங்காமல் இருக்க முடியவில்லை. 

கதை : 

ஒழுங்குமுறையில்லாது ஊதாரியாக வாழ்ந்து அற் பாயுசிலேயே கண்ணை மூடிவிட்ட வைத்தியின் பிள்ளை கிட்டு விற்குக் கேட்போர் அதிசயிக்கும் சங்கீத ஞானம் பிறவியி லேயே வாய்த்திருந்தது. ''அப்பா சங்கீதம் கற்றுக் கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தது போதும். இவனுக்குச் சங்கீதம் வேண் டாம்'' என்று நினைக்கும் அவனுடைய விதவைத்தாய், தன் தமையனுடன் அவனை அனுப்பிவைத்து சாஸ்திரோக்தமான கல்வி பயிற்றுவிக்க எண்ணுகிறாள். கிட்டுவுக்கு மாமாவையும் பிடிக்கவில்லை. இந்த ஏற்பாடும் பிடிக்கவில்லை. ஆகவே தன்னையே நம்பியிருக்கும் தாய்க்குக் கூடச் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறான் அவன். 

வழியில் ஒரு கல்யாணக் கோஷ்டியைச் சேர்ந்த கிழவர் ஒருவரின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அவருடன் கிளம் பும் அதிருஷ்டம் அவனுக்குக் கிடைக்கிறது. பையனிடம் இருக்கும் சங்கீத ஞானத்தைக் கிழவர் தெரிந்து கொண்ட 

போது, அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வித் வானான திருவையாறு சபேசய்யரிடம் சிஷ்யனாக அவனைக் கொண்டு சேர்த்துவிடுகிறார் அவர். பத்து வருஷத்தில் குருவே வியந்து பாராட்டும் ஞான ஒளியைப் பெற்றுவிடு கிறான். இந்தப் பத்து வருட காலத்தில் அவனுக்குத் தன் ஊர் நினைவோ தாயின் நினைவோ வந்ததாகத் தெரியவில்லை. சபேசய்யர் காலமானபோதுதான் அவனுக்குத் தன் தாயின் நினைவும் ஊரின் நினைவும் வருகின்றன. அதுவரை தனக் குத் தாயார் உயிருடன் இருப்பதையே வெளியே சொல்லிக் கொள்ளாமல் இருந்தான். அதன்பின், சபேசய்யரின் மனைவியிடம் உண்மையைக் கூறி உத்திரவு பெற்றுக் கொண்டு ஊருக்குக் கிளம்புகிறான். 

அங்கே பாழ்மனையும், ஆறு வருடத்துக்கு முன்பே தாய் இறந்து போய்விட்ட செய்தியும் அவனை அறைந்து திருப்பு கின்றன. வெதும்பிய மனத்துடன் திருவையாறு திரும்பி விடுகிறான். 

அவனுடைய கலைத்திறமை எல்லாராலும் ஒருங்கே பாராட்டப் பெறுகிறது. பேரும் புகழும் அவனைத் தேடி வந்து அடைகின்றன. செல்வம் வரும் வழியை அவனாகவே அடைத்துவிடுவது தான் வேடிக்கை இதில். 

ஒரு பணக்காரர் வீட்டுக் கல்யாணத்தில் பாட ஒப்புக் கொண்ட அவன், கச்சேரிக்குக் குறிப்பிட்டிருந்த காலத்தில் வராமல் சந்தியா வந்தனத்தில் ஈடுபடவே, தனவந்தர் வெகு கோபமாயும் உதாசீனமாகவும் பேசிவிடுகிறார். அப்போது ஏற்பட்ட மனக் கொந்தளிப்பில் ''பணத்துக்காகப் பாடும் வழக்கம் இன்றோடு தொலைந்தது ' என்று கூறி சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் செய்வது என்று உறுதியெடுத்துக்கொள் கிறான். இதற்கிடையிலே சபேசய்யரின் மனைவி தருமாம் பாளின் முயற்சியில் அவளுடைய தங்கையின் பெண் நீலா கிட்டுவுக்கு மனைவியாக வந்து வாய்க்கிறாள். பணத்தைத் துச்சமாக மதிக்கும் இவனுக்கு நேர் எதிரிடையான மனப் போக்குள்ள அவளுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கை இடர் மிகுந்ததாக அமைகிறது. ஆயினும் கிட்டு தன் தீர்மானத் லிருந்து கடைசிவரை பிறழவேயில்லை. 

பணவிவகாரம் காரணமாக வீட்டில் சண்டை ஏற்படா மல் இல்லை. ஒரு நாள் வீட்டில் ஏற்பட்ட சண்டையில் மனம் வெறுத்துப்போய் வீட்டைவிட்டே வெளியேறிவிட எண்ணுகிறான் அவன். அவனுடைய நண்பர் கந்தசாமி பாகவதர் கூறும் நல்லுரைகள் அவனைப் பிடித்து நிறுத்து கின்றன. வீடு திரும்பும் கிட்டுவை அமைதியுடன் நீலா வரவேற்கிறாள். 'விதி செய்யும் கொடுமை போதும். நீயும் நானும் ஒருவருக்கொருவர் கொடுமை செய்துகொள்ள வேண்டாம்' என்று கூறி கிட்டு அந்தச் சச்சரவுக்கு ஒரு முத்தாய்ப்பு வைக்கிறான். 

தவத்தின் மகிமையும் ஒளியும் அதற்கேற்படும் இடைஞ் சல்களினால் தான் வலுப்பெற்று மெருகேறுகின்றன. அதைப் போலவே, கிருஷ்ண பாகவதர் என்று எல்லோரும் கொண் டாடும் கிட்டுவின் வாழ்விலும் அவ்வப்போது இடைஞ் சல்கள் வெவ்வேறு உருவில் பிறந்து அவன் தன் தவமேன் மையை விளக்குகின்றன. அற்புதமான சாரீரமும், கிருஷ்ண பாகவதரின் வழியில் அந்தரங்க சுத்தியுடன் கூடிய ஈடுபாடும் கொண்ட தாழி ஒருத்திக்கு சிக்ஷை சொல்லிவைக்கும் நிர்ப் பந்தம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நண்பர் ஒருவர் வற் புறுத்தியபோது, இது தனக்கு ஒத்ததில்லை என்று தயங்கிய அவனே, நாளடைவில் அந்தப் பெண்ணின் குணத்தினாலும் சங்கீதாப்யாசத்தில் அவளுக்கிருந்த உண்மையான பக்தி யினாலும் கவரப்பட்டு ஊராரின் ஏளனப் பேச்சுக்களைப் புறக்கணிக்கும் மனநிலையை அடைந்து விடுகிறான். ஆயினும் அவனே எதிர்பாராத நிலையில் அவள் உள்ளத்தில் அவனிடம் ஏற்பட்டிருக்கும் பிரேமையை தெரிந்து கொண்டபோது அதிர்ச்சியடைகிறான். அந்த நிமிஷம் முதல் அந்த சிக்ஷைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறான். 

இந்த இடைக்காலத்தில் பாலாம்பாள் அவனிடம் காது டிய குருபக்தியும் அவளது அன்பைக் கண்ட நீலாவின் உள்ளப் புகைச்சலும் ரசமான சம்பவங்கள். 

வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதனாகத் தொடங்கி, கலையின் மகோன்னத சிகரத்தை எட்டிப்பிடித்து கிருஷ்ண பாகவதர் என்றால் சங்கீதத்தின் பாதுகாவலர் என்னும் நிலையை அடைந்த அவனுக்குக் கடைசியாக ஒரு பெரும் வீழ்ச்சி. அவனுடைய சாரீரம் அவனைத் திடீரென்று கை விட்டு விடுகிறது. வாழ்க்கையில் எத்தனையோ அடிகளைத் தாங்கிக் கொண்ட அவனால் இந்த அடியைத் தாங்க முடிய வில்லை . 

இந்த வேதனையிலிருந்து அவனை மீட்டு அவனுக்கு மன அமைதி கொடுக்கிறார் கந்தசாமிப் பாகவதர். கதையில் கிட்டுவுக்கு அவ்வப்போது நல்லுரை கூறி உதவும் இந்தப் பாத்திரம் பக்குவப்பட்ட மனநிலையுள்ள ஒரு அற்புதமான பாத்திரம் 

" உன்னுடைய அருமையான குரலை இழந்து நீ வேதனைப் படுகிறாய். வாஸ்தவம்தான். அதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? உன் காதுகள் கேட்ட நாத வெள்ளத்தில் இதுவரை ஈடுபட்டிருந்தாய். இனி, செவிக்கு எட்டாத இனிய நாதத்தில் ஈடுபடுவதற்குத்தான் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நீ நாதத்தின் எல்லையைக் கடந்துவிட்டாய். அடுத்தபடியில் இருப்பது மௌனம்.'' என்று அவர் கூறியதும், 

இதுவரையில் பகவானைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டு வந்தேன். இனி என் இதயத்தால் அவரைக் கூப்பிடுவேன்' என்று பக்குவப்பட்ட மனத்துடன் கிட்டு பதிலளிப்பதும், கதையின் முடிவில் வரும் சுவையான சம்பாஷனைகள் மட்டு மல்ல, கதையின் இதயநாதமாக ஒலிக்கும் வார்த்தைகள் 

ஆடம்பரமில்லாத நடையில் அலுப்புத்தட்டாத வகை யில் அவசியமான சம்பவங்களை மட்டும் கொண்டதாகக் கதையை ஆசிரியர் நடத்திச் செல்லும் பாணி வியக்கத்தக்க தாக இருக்கிறது. கதை முழுவதும் ஒரே சீரான அமைதி விரவிக்கிடக்கும் அழகு , கதை படிக்கும் போது. தெய்வசந்நி தானத்தில் நிற்கும் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. அங்கங்கே முத்துக் கோத்தாற்போல் ஆசிரியர் தெளிக்கும் சில கருத் துக்களைப் பார்ப்போம். 

'சங்கீதத்தை ஒரு யோகமாகவும், தபஸாகவும், பெரிய வர்கள் கருதி வந்தார்கள். ஆனால் தற்காலத்திலே, பாட கர்கள் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அடைவதுடன் தங்கள் சாதனை பூரணத்துவம் பெற்றுவிட்டதாக நினைத்து விடுகிறார்கள். சங்கீதம் என்பது ஒரு தொழில் முறையாகி விட்டது. மனிதனின் ஆத்ம ஞானத்தை உயரவைப்பதற்குப் பதில் அது கீழிறங்கிவந்து லௌகிக பேரம் பேசுவ தாகிவிட்டது.' 

'மரணம். வாழ்க்கையில் ஒரு நிச்சயமான அம்சமாக இருந்த போதிலும் அது எவ்வளவு தூரம் மனிதனுடைய உள்ளுணர்விலே தைத்து அவனுக்கு வாழ்க்கையின் தத்து வத்தைப் போதிக்கிறது. தருமபுத்திரர் நச்சுப் பொய்கை யில் ஆச்சரியப்பட்டது போல், வாழ்க்கையிலே, மனிதன் ஏன் மரணத்தைப்பற்றிய சிந்தனையேயின்றி வாழ்க்கையைச் சதமென்று எண்ணி ஈடுபட்டு நிற்கிறான் என்பது ஆச்சரியப் படவேண்டிய விஷயமாகத்தானிருக்கிறது'' 

உலகத்தில் பார்க்கப்போனால், மனிதனுடைய தன்மை அவன் கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்த தாகத்தான் இருக்கிறது. ஏழையின் சொல் மாத்திரம் அம் பலம் ஏறமுடியாமல் இருப்பதில்லை. ஏழையே அம்பலத் துக்கு வரமுடிகிறதில்லையே...'' 

மனது பக்குவமடைய மயானம் ஒரு பயிற்சியைக் கொடுக்கிறது. வாழ்க்கையின் உண்மையே மயானத்தில் ஆரம்பமாகிறது.'' 

' - 

ஒரு நல்ல நாவலைப் படிக்கும் போது ஒரு வாழ்க்கை யையே வாழ்ந்துவிட்ட உணர்வு தோன்றக்கூடுமானால் அதுவே பெரிய பாக்கியம். 'இதயநாத த்தைப் படிக்கும் போது ரசாநுபவம் நிறைந்த ஒரு நல்ல கச்சேரியைக் கேட்ட மன நிலைமை ஏற்படுகிறது. 

இதயநாதம் ஒரு லட்சிய நாவல். வாழ்வில் ஒவ்வொரு துறையிலும் சில விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்தவர்கள் தான் அந்த விசேஷங்களைப்பற்றிப் பேசமுடி யும். சங்கீதத்தின் அருமையை அனுபவித்து உணர்ந்திருக் கும் திரு. சிதம்பர சுப்பிரமணியம் இந்த நாவலை ஆக்கித் தந்திருப்பது தமிழுக்கு நல்ல தொண்டு. 

இதயநாதம் தெய்வகீதம் பற்றிப் பேசும் ஒரு உயர்ந்த கதை. அதைப் பேசி விளக்க முடியாது. அனுபவித்து அனுப வித்து நெக்குருகத்தான் முடியும். 

''எங்கே மகான்களும் மேதைகளும் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்.'' 

தமிழ் நாவல்கள் (நாவல் விழாக் கட்டுரைகள்)

Publication date 2012-01-06

Topics எழுத்தாளர்கள், சாண்டில்யன், தி. ஜானகிராமன், ந. பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், விக்கிரமன், கட்டுரை, கி.வா.ஜ., நாவல், படைப்புகள், அகிலன், ஆர்வி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., கு. அழகிரிசாமி

Collection openreadingroom; additional_collections

'


தமிழ்ப் புத்தகாலயம்