Pages

Tuesday, May 31, 2016

மடித்தாள் பட்டி - பி. எஸ். ராமையா

மடித்தாள் பட்டி - பி. எஸ். ராமையா
https://archive.org/download/orr-10460_Madithal-Patti-PSRamaiah/orr-10460_Madithal-Patti-PSRamaiah.pdf

மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி, "இடது காளைக்கு ஒரு லாடம் விழுந்திருக்குதுங்க மாடு நொண்டுது” என்றான்.

"இந்த நடுக் காட்டிலே என்ன செய்ய முடியும்? மெள்ள வெள்ளைப் பட்டிக்குப் போய்விடுவோம்.அங்கே லாடம் கட்டிக் கொள்ளலாம்” என்றேன்.

"அதுவரை தாங்காதுங்க மாடு வீணாப் போயிடும். கொஞ்சம் இறங்கி அப்படி அந்த ஆலமரத்தடியிலே குந்திக்குங்க ஒரு நொடியிலே மடித்தாள் பட்டிக்குப் போயி லாடம் கட்டிக்கிட்டு வந்துடறேன்" என்றான்வண்டிக்காரன்.

அவன் குரலில் மாட்டின் பரிதாப நிலை பிரதிபலித்தது. சலிப்புடன் வண்டியிலிருந்து குதித்தேன்.வண்டிக்காரன் மாடுகளை அவிழ்த்து வண்டியை ஒருபுறம் தள்ளி நிறுத்தினான். ஒரு மாட்டை மாத்திரம் அங்கேயே அருகிலிருந்த ஒரு மரத்தின் வேரில் கட்டி விட்டு, இன்னொரு மாட்டைஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.

பங்குனி மாதத்து வெயில் மூளையுருகும்படி  தாக்கிக்கொண்டிருந்தது. அந்த முரட்டு வழியில் வண்டியின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து உடலெல்லாம் நோவெடுத்தது. இந்த இடத்தில் லாடம் விழுந்து, மாடு நொண்டும்படி நேர்ந்த அதிருஷ்டத்தைப் பற்றி எரிச்சலுடன் முனு முணுத்துக் கொண்டே வண்டிக்காரன் குறிப்பிட்ட ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அது வண்டிப்பாதையிலிருந்து கொஞ்சம் உயர்ந்த மட்டத்திலிருந்தது.ஆகையால், நான் இருந்த இடத்திலிருந்து வெறும் மரம் மாத்திரம்தான் தெரிந்தது.

ஆனால் மரத்தடிக்குப்போனவுடன் என்மனத்திலிருந்த எரிச்சலெல்லாம் ஒரே வியப்பாக மாறிவிட்டது. ஆகா! எவ்வளவு கம்பீரமான காட்சி!

அந்த இடத்தைச்சுற்றி மூன்று திசைகளில் அடுக்கடுக்காகப் பல குன்றுகள் அமைந்திருந்தன. ஒன்று வெறும் கருங்கல்லாலேயே அமைந்தது. சாதாரணக் காட்டுக் கள்ளிச் செடிக்குக்கூட இடம் கொடுக்கமறுக்கும் கரடு.

இன்னொன்றின் மேல் அங்கும் இங்குமாக முளைத்திருந்த புதர்ச் செடிகள் மற்றொன்று கொஞ்ச தூரத்தில் நீலப் பச்சை ஆடையணிந்து அந்தவெயிலில் அழகு பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு புறத்தில் இரண்டு குன்றுகளுக்கிடையில் மாரிக் காலத்தில் குளமாக வேஷம் போடும் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அதில் அடர்த்தியாகக் கருவேலம் செடிகளும், மரங்களும் வளர்ந்து நிறைந்திருந்தன. இந்தக்குளத்தின் மூன்றாவது திசையில்தான் அந்த நீலப்பச்சைமலை நின்றுகொண்டிருந்தது.

ஆலமரத்திற்கு மேற்கே கொஞ்சம்தள்ளி ஒரு பெரிய கிணறு இருந்தது. அதற்குக் கருங்கல்லால் கரை கட்டி உள்ளே இறங்கப் படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கிணற்றையடுத்து ஒரு மரத்தடியில் ஒரு சிறிய காட்டுக் கோயில் மண் சாந்து வைத்துக் கருங்கற்களால் கட்டியது.ஒரே ஒர் அறைகொண்டது.கோயிலின் முன்புறச்சுவரின்மேல், இருமூலைகளிலும், ஆணும்பெண்ணுமாக இரண்டு மண் சிலைகள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. கோயிலை அடுத்திருந்த மரத்திலிருந்து இரும்புச் சங்கிலியில் கட்டிய ஒரு பெரிய வெண்கலமணி தொங்கிக்கொண்டிருந்தது. அந்த மரத்தைச் சுற்றி அங்கங்கே அடுப்பு மூட்டி எரித்த அடையாளமாக மும்மூன்று கரி ஏறிய கற்கள் கிடந்தன.

அந்த இடத்தின் கம்பீரம் நிறைந்த வனப்பில் ஈடுபட்டுச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு நின்றவன், “முருகா" என்று யாரோ உரக்கச்சொல்லியதைக் கேட்டுத்திரும்பினேன்.

கிணற்றுக்குள்ளிருந்து ஒரு பண்டாரம் கப்பரையில் ஜலம் நிறைத்துக்கொண்டு ஏறி வந்துகொண்டிருந்தார். அறையில் கோவணம். மேலே உடலை மறைத்துப்போர்த்திய ஒருகாவித்துணி, மழ மழவென்று சிரைத்த தலை, நெற்றியிலும் உடலிலும் பளிச்சென்று பூசிய திருநீறு. கழுத்திலே காவித் துணிக்கு மேல் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் ருத்திராட்ச மாலை. வலது கையில் தண்ணிர்நிறைந்ததிருவோடு இடதுகையில் ஒரு முறுக்குத்திடி.

பண்டாரம் படியேறி வெளியில் வந்து திருவோட்டைச் சூரியனுக்குக் காட்டுவது போலத் தூக்கிப்பிடித்து, முருகா! என்று ஒரு தரம் பலமாக உச்சரித்தார். பிறகு ஒருநிமிஷம் கண்களை மூடித் துதிக்கும் பாவனையில் நின்றார். கண்ணைத் திறந்து இன்னொரு தரம்,“முருகா" என்று சொல்லிவிட்டு, நாலைந்துமிடறு தண்ணீர் குடித்தார். மீதித் தண்ரைக் கால்களில் ஊற்றிக்கொண்டு என்னை நோக்கிவந்தார்.

யாரோ சோம்பேறிப் பண்டாரமென்ற அலட்சியத்துடன் நின்றேன். ஆனால் அருகில்வரவர அவர் முகத்திலிருந்த தனிக்களை என் உள்ளத்தைக்கவர்ந்தது. சாமுத்திரிகா லட்சணப்படிபார்த்தால் அதை ஓர் அழகான முகமென்று சொல்லமுடியாது. எங்கள் வண்டி வந்த சாலையைவிடக்கரடுமுரடாகத் தோன்றியது. ஆனால் அந்த முரட்டு அமைப்பிலே ஒரு விசேஷக்கவர்ச்சி இருந்தது.உள்ளத்திலிருந்து பொங்கி வந்து முகத்தில் பரவி ஒளி வீசும் ஓர் அதிசய சக்தியின் கவர்ச்சி. கண்கொட்டாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டுநின்றேன்.

பண்டாரம் என் அருகில் வந்து ஏற இறங்கப்பார்த்துவிட்டு "கோவிலிலே பூசைபோடவந்தீர்களா, ஆண்டவனே."என்றார்.

நான், "இல்லை, செம்பட்டிக்குப்போகிறேன்: திடீரென்று ஒரு மாட்டுக்குலாடம் விழுந்துநொண்டஆரம்பித்துவிட்டது.வண்டிக் காரன் லாடம் கட்ட மடித்தாள் பட்டிக்குப் போயிருக்கிறான். நீங்கள்தான்கோவில்பூசாரியா” என்றேன்.

பண்டாரம் கோவிலை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு, "இல்லை. ஊர் சுற்றும் பரதேசிப் பண்டாரம்" என்று சொல்லி விட்டுமேலே நடக்க ஆரம்பித்தார்.

வண்டிக்காரன் வரும் வரை அவரைப் பேச்சுத் துணைக்காவது நிறுத்திக்கொள்ளலாமே என்ற எண்ணம் எழுந்தது என் மனத்தில், "ஸ்வாமி இது என்னகோவில் தெரியுமா?" என்றேன்.

பண்டாரம் நின்று திரும்பி, "மடித்தாளம்மன் கோவில்; அந்தக்கோவில் கதையைக் கேட்க ஆசையுண்டாஆண்டவனே.” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தார்.

ஆவலுடன்,"சொல்லுங்கள்"என்றவன்.அவர் கண்குறிப்பை அறிந்து மரத்தடியில் ஒரு புறம் உட்கார்ந்தேன். பண்டாரம் திருவோட்டையும் முறுக்குத் தடியையும் அருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துசொல்ல ஆரம்பித்தார்.

"நீங்கள் அருகில் போய்ப் பார்த்தீர்களா கோவிலை? இல்லையா? உள்ளே இருக்கும் தெய்வத்திற்குப் பெயர் மடித்தாளம் மன். இந்தக்கோவிலினால்தான் பக்கத்துக்கிராமத்திற்கு மடித்தாள் பட்டி என்று பெயர் வந்தது.

"பேய் பிசாசுகளை அடக்குவதில் ரொம்ப சக்தியுள்ள தெய்வம் என்பது கிராம ஜனங்களின் நம்பிக்கை, பேய் பிடித்த பெண்களை இங்கே கொண்டுவந்து ஆடவிட்டுப் பொங்கலிட்டுப் பூசைபோட்டால் பேய் பறந்து போய்விடுமாம். அது போனதற்கு அடையாளமாக அந்த மரத்தில் ஆணி அடிப்பார்கள்.

"ஆண்டவனே! மனிதன் குணத்தில் உயரும்போது அவனிடம் தெய்வீகம் பிறக்கிறது. அவனைத் தெய்வாம்சம் என்று வணங்குவதிலே தவறில்லை. ஆனால் பாருங்கள். ஆண்டவனே காலம் போகப்போக அவனே தெய்வமாகிவிடுகிறான். சிலசமயங்களிலே, நல்லபடியாக மக்களை உயர்த்தும் தெய்வநிலையிலிருந்து விழுந்து, அவர்களைப் பயமுறுத்திப் பலிகேட்கும் காட்டேரியாகவும் மாறிவிடுகிறான். அப்படி மாறிய ஒரு தெய்வத்தின் கோவில்தான் இது.

"வருகிற மன்மத வருஷம் பங்குனிக்குச் சரியாக முன்னூறு வருஷமாகும் இந்தக் கோவில் கட்டி என்ன எண்ணுகிறீர்கள்? நடப்பது பார்த்திப பங்குனி சரியாகப் பத்துவருஷம் இருக்கிறது மன்மத பங்குனிக்கு.

"அப்போது மதுரையிலே திருமலைநாயக்கர்,ஆண்டுகொண் டிருந்தார். அவருடைய கடைசிக் காலத்தில் விஜயநகர ராஜ்யம் சீர்குலைந்து போயிற்று. அதையெல்லாம் படித்திருப்பீர்களே? அந்தச் சமயத்தில் மைசூர் ராஜ்யத்தில் கந்தர்வ ராச உடையார் என்பவர் ஆண்டு கொண்டிருந்தார். மதுரைநாயக்கருக்கும், மைசூர் உடையாருக்கும் விரோதம் ஏற்பட்டுவிட்டது. மைசூர் அரசர் மதுரைமேல் படைகளை அனுப்பிவிட்டார்.

"அந்தப் படை முதலில் சத்திய மங்கலம் பிராந்தியத்தைப் பிடித்துக்கொண்டது. அப்போது திருமலைநாயக்கர் உடல்நலம் குன்றிப்படுத்த படுக்கையாக இருந்தார். அவருடையதம்பிகுமார முத்து நாயக்கன் படைகள் திரட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருந்ததை நம்பியிருந்து விட்டார். ஆனால் குமாரமுத்து நாயக்கனுக்குத் தீரமும் இல்லை, திறமையும், மைசூர்ப்படைகளை எதிர்க்க ஓர் ஏற்பாடும்செய்யவில்லை.

“சத்திய மங்கலத்தைப் பிடித்தபோது எதிர்ப்பு இல்லாமல் போகவே மைசூர்த் தளபதிக்கு ரொம்ப தைரியம் வந்து விட்டது. படைகளை நடத்திக் கொண்டே மடமடவென்று மதுரைக்கருகிலேயே வந்துவிட்டான் தலை நகருக்கே ஆபத்து வந்து விட்ட தென்பதைக் கண்டவுடன்தான் திருமலை நாயக்கர் விழித்துக் கொண்டார். உடனே மறவச் சீமைக்கு அதிபதியான ரகுநாத சேதுபதிக்கு உதவி கோரி ஆளனுப்பினார். சேதுபதி மந்திரத்தால் வரவழைப்பதுபோல ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வந்துவிட்டார். நாயக்க மன்னரும் அவசரமாக ஒரு படை திரட்டினார்.இரண்டு படைகளும் சேர்ந்து மைசூர்ப்படைகளை எதிர்த்தன. எதிரிகள் பின்வாங்கி ஓட்டமெடுத்தார்கள்.

"சேதுபதி, படைகளுடன் எதிரிகளைத் துரத்திக் கொண்டு போனார். மைசூர்ப் படைகள் பின்வாங்கி அதோ தெரிகிறதே அந்தக் குளம், அங்கே வந்து தங்கினார்கள். அந்த இடம் இயற்கையாக மூன்று புறமும் குன்றுகள் சூழ்ந்துகோட்டைபோல அமைந்திருக்கிறதல்லவா? அதைப் பயன்படுத்திக் கொண்டு, மைசூரிலிருந்து உதவி வரும்வரையில் எதிர்த்துநிற்கவழிசெய்து கொண்டான்.அந்தத்தளபதி துரத்திக்கொண்டுவந்த சேதுபதியின் படைகள் கிழக்கே ஒரு காத துரத்தில் கூடாரமடித்தார்கள்.அவர்கள் துரத்திக் கொண்டு வந்த விறுவிறுப்புடனேயே தாக்கியிருந்தால் எதிரிகளைப் பஞ்சாகப் பறக்கவிட்டிருக்கலாம். ஏனோ அப்படி நடக்கவில்லை. இருதரப்பாருக்கும் கொஞ்சம் களைப்பாறவும், அணிகளைத் திருத்தியமைக்கவும் நேரம் கிடைத்தது.

“சுமார் பத்து நாள்வரை இரண்டு படைகளும் காத தூரத்தி லேயே ஒதுங்கி இருந்தன. பத்தாம் நாள், மைசூரிலிருந்து புதிய படைகள் வந்திருப்பதாகச் சேதுபதிக்குச் செய்தி எட்டியது. எவ்வளவு படைகள் வந்திருக்கின்றன; அவற்றை எப்படி உபயோகிக்கப்போகிறார்கள் அவர்களே தாக்குவார்களா என்பன போன்ற தகவல்களை உளவறிந்து கொண்டுதான் மேலே தம் திட்டத்தை வகுக்கவேண்டுமென்று முடிவு செய்தார்.சேதுபதி.

“உளவறிவதில் நிபுணர்கள் பலர் அவரிடம் இருந்தார்கள். அந்தக்கலையில் சூரர்கள். ஆனால் அவர்களையெல்லாம் அனுப்பாமல், ரகுநாத சேதுபதி, தாமே மாறு வேஷத்தில் புறப்பட்டார். அவர் அப்படிப் புறப்பட்டுப்போனது அவருடைய படையாட்களுக்கே தெரியாது.

"அந்தக்காலத்தில் அதோ இருக்கிறதே. வண்டிப்பாதை அது ஒரு காட்டோடையாக இருந்தது. இந்த மடித்தாள் பட்டி அப்போது நல்ல செழிப்பான கிராமம். பத்துப் பதினைந்து மச்சு வீடுகளும் உண்டு. இந்த எல்லை போர்க்களமாக மாறியவுடன் கிராமத்து மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். மைசூர்க்காரர்கள் வந்த பார்த்து யாருமில்லாததால் ஊரை அப்படியே விட்டு விட்டார்கள்.

“ஓடிப்போன கிராம மக்களில் கள்ளிமுத்தன் என்று ஒர் அம்பலகாரன் இருந்தான்.கிராமத்தில் பெரிய பணக்காரன்.அவன் ஊரைவிட்டு ஓடிய அவசரத்தில்தம் சொத்தையெல்லாம் வீட்டின் முற்றத்தில் புதைத்துவைத்துவிட்டுப் போய்விட்டான். பத்துநாளாக இரண்டு படைகளும் கை கலக்காமலிருக்கவே எப்படியாவது புதைத்த பொருளை மீட்டுக் கொண்டு போய்விடுவதென்ற உறுதியுடன்,சேதுபதி மாறுவேஷத்தில் புறப்பட்ட அதே இரவில் அவனும் புறப்பட்டு வந்தான். தானும் கூட வருவேனென்று பிடிவாதம் செய்து, அவன் மனைவி மடிச்சியாச்சியும் அவனுடன் வந்தாள். இருவரும் இருளின் போர்வையில் மறைந்து வந்து வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இருளிலேயே அவசரமாகத் தங்கள் புதையலைத் தோண்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

"சேதுபதி அந்தப் பக்கம் வந்தபோது அவர்கள் வீட்டிற்குள் தோண்டும் சத்தம் கேட்டது.சந்தேகப்பட்டுச்சுவரேறி முற்றத்தில் இறங்கினார். அம்பலகாரன் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தான். சேதுபதி அவன் பயத்தைத் தெளிவிக்கச் செய்த முயற்சியெல்லாம் பலிக்காமல் போகவே,தான் யாரென்பதைவெளியிடவேண்டியது அவசியமாகிவிட்டது.

அவர் சேதுபதிமகாராஜா என்பதையறிந்தபிறகுதான்.அம்பல காரன் ஒய்ந்தான். புருஷனும் மனைவியும் அவர் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.அவருடைய வீர வெற்றிகளைப் பற்றிக்கேள்விப் பட்டிருந்த மடிச்சியாச்சி அவரை ஒரு தெய்வீக புருஷனாகவே நினைத்திருந்தாள்.

"சேதுபதி, தாம் மேற்கொண்டு வந்த வேலையை விளக்கி, 'அம்பலகாரனிடம் இந்தப் பிரதேசத்தின் அமைப்பு, எதிரிப் படைகளின் இருப்பு ஆகியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அவர் புறப்படத் தயாரானபோது மடிச்சியாச்சி,  'மகாராஜா இந்த ஏழை சொல்லைக் கேட்க வேண்டும். எதிரிப் படைகளுக்குள்ளே நீங்கள் தனியாகப்போவது சரியில்லையென்று எனக்குப் படுகிறது. உத்தரவு கொடுத்தால் இவரே போய் என்ன விவரம் வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வந்துவிடுவார். என்றாள்.

"அம்பலகாரனும் உற்சாகத்துடன்,'ஆம் மகாராஜா' மைசூர்க் காரர்களுக்குக் கள்ளில் ரொம்பப் பற்றுதல், நான் போய் இங்கே கள்ளிருப்பதாகச் சொல்லி எதிரிகளில் ஓரிருவரை அழைத்துக் கொண்டுவருகிறேன். உள்ளே கொண்டுவந்து கட்டிவைத்து நமக்கு வேண்டியதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்றான்.

"இந்தத்திட்டத்துக்குச் சேதுபதி எப்படி இணங்கினார், ஏன் இணங்கினார் என்று யாரால் சொல்ல முடியும் இணங்கிவிட்டார். அம்பலகாரன் புறப்பட்டுப்போனான். மடிச்சியாச்சி மகாராஜாவை வீட்டுக்குள் அழைத்துச்சென்று விளக்கேற்றி உட்கார வைத்தாள்.
"அம்பலகாரன் வீட்டிலிருந்து புறப்பட்டபோது சரியாகத் தானிருந்தான். ஆனால் போகும் வழியில் சூழ்ந்திருந்த இருளில் ஆட்சிபுரிந்தபேய்களின் குணங்கள் அவன் நெஞ்சிலும் ஆட்சிபுரிய ஆரம்பித்து விட்டன. சேதுபதிக்கு உதவி செய்வதில் கிடைக்கும் சன்மானம் எவ்வளவு இருக்கும்? ஆனால் எதிரி தளபதியிடம் சேதுபதியையே பிடித்துக்கொடுப்பதாகச்சொன்னால் ஏராளமான சன்மானம் கிடைக்கக்கூடுமல்லவா? இந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள அவனிடம் சக்தி இல்லை. தன்னைக் கண்டு அவன் போட்ட பயக்கூச்சலைக் கொண்டே சேதுபதி இதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால்..!

“எதிரிப்படைகளின் முன் எல்லையை அடைந்தவுடனேயே பல படைவீரர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். தன்னை அவர்களுடைய தளபதியிடம் அழைத்துச்செல்லும்படி கேட்டுக்கொண்டான்.

“தளபதியிடம் போனவுடன் தனக்குத் தாராளமாகச் சன்மானம்கொடுத்தால்,சேதுபதியையேபிடித்துக்கொடுப்பதாகச் சொன்னான். அவன் கேட்குமளவு பொன்னாகவே கொடுப்பதாக வாக்களித்தான் தளபதி அவனுடன் பொறுக்கியெடுத்த ஐம்பது வீரர்களை அனுப்பினால் சேதுபதியைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதாகச் சொன்னான். அம்பலகாரன், மைசூர்க்காரர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

"அவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிட்டு நீ இங்கேயே காவலில் இருக்க வேண்டும் என் ஆட்கள் கொண்டு வந்தவுடன் தான் உன்னைப் போகவிடுவேன்” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

"அவர்கள் சொல்லும் வழியில் போனாலல்லாமல்தான் உயிருடன் கூடத் தப்பமுடியாது என்பது தெளிவாகிவிட்டது அம்பலகாரனுக்கு எப்படியானாலென்ன நமக்கு வேண்டியது உளவுக்கூலி பொன்தானே என்று அவர்கள் நிபந்தனைக்கு உடன்பட்டு காட்டோடைக்குக் கிழக்கேயிருக்கும் கிராமத்தில் தெற்குக் கோடியிலிருந்து இரண்டாவது வீட்டிலிருக்கிறார். தனியாகத்தானிருக்கிறார்” என்று சொல்லிவிட்டான்.

“தளபதி பொறுக்காக நூறு வீரர்களைத் திரட்டி அனுப்பினான். அவர்கள் திரும்பிவரும்வரை கவனித்துக்கொள்ளும்படி, அம்பலகாரனை இரண்டுவீரர்களிடம் ஒப்படைத்தான்.

“மைசூர் வீரர்கள் வந்து கிராமத்தைச் சூழ்ந்து கொண் டார்கள். அம்பலகாரனை எதிர்பார்த்துக் காத்திருந்த சேதுபதிக்குக் குறளிசொல்வதுபோல ஏதோ கோளாறு நேர்ந்திருக்கிறதென்று மனத்திலே பட்டு விட்டது. ஆனால் போனவன் துரோகம் செய்திருக்கக்கூடுமென்று அவர் சந்தேகிக்கவே இல்லை.

"மடிச்சியாச்சியிடம், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறதென்று எனக்குப்படுகிறது. நாம் உடனே இங்கிருந்து போய்விடவேண்டும். உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போக முடியாது. என்னுடன் வந்துவிடு, உன்னை மறுபடி உன் கணவனிடம் சேர்க்க வழி செய்கிறேன்.புறப்படு” என்றார்.

"ஆனால் அவர்கள் தப்புவதற்குச் சமயமே இல்லை என்பது அடுத்த கணமே தெளிவாகிவிட்டது. எதிரி வீரர்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்களில் ஒருவன் சிலரைப் பின்புறமாக முற்றத்தில் ஏறிக் குதிக்க உத்தரவிட்டது உள்ளே கேட்டது.

"மடிச்சியாச்சிநடுநடுங்கிப்போய்விட்டாள்.தங்களால்தான் அந்த வீர தெய்வத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற எண்ணம் மனத்தில் ஓங்கிவிட்டது.

"ஆண்டவனே! இந்த பயம் என்கிற குணம் ரொம்ப அதிசயமானது. அதுவே ஒருவனைப் புழுவிலும் புழுவாக மாற்றிவிடுகிறது: இன்னொருவனை வீராதி வீரனாக்கிவிடுகிறது. மற்றொருவனை அமரனாக்கிவிடுகிறது. பயம்.அழிக்கும் சக்தி அதிலிருந்து கற்பனை செய்தும் காண முடியாத துணிச்சலும், தியாகமும் பிறப்பது எவ்வளவு பெரியஅதிசயம்!

"மடிச்சியாச்சியைப் பிடித்த பயம் ஒரே நொடியில் அவளை தெய்வப் பெண்ணாக மாற்றிவிட்டது. அவளிடம் இயற்கையிலே இருந்த தாய்மைதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். சேதுபதியைத் தன் சொந்த மகனாக வரித்துக் கொண்ட அந்தத்தாய், அடுத்த கணம். அன்னை பராசக்தியின் ஒர் அவதாரமாகிவிட்டாள்.
"ஒரே கணத்தில் அந்தக்கூடத்துக்காட்சியை மாற்றி அமைத் தாள்.ஒருபக்கத்தில் கிடந்தபாயைக்கொண்டுவந்து நடுக்கூடத்தில்
முத்துக்கள் பத்து* 51
________________
விரித்தாள். முற்றத்தில் தோண்டிப் போட்டிருந்த மண்ணில் கொஞ்சம்அள்ளிக்கொண்டுவந்தாள்பானையிலிருந்ததண்ணிரில் மண்ணைக் கலந்து சேதுபதியின் நெற்றியிலும், கன்னங்களிலும், மூக்கின்மேலும்பூசினாள்.பாயின்மேல் உட்கார்ந்துசேதுபதியைத் தன் மார் மேல் சாய்த்துக்கொண்டு மகாராஜா, நீங்கள்தான் என் கணவர். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு, உரத்த குரலில், 'என் சாமியில்லே! கொஞ்சம் தூங்குங்க. உடம்பு நெருப்பாக கொதிக்குதே காளியாத்தா என் தாலிக் கவுத்தைக் காப்பாத்திக் குடு தாயே! ஒனக்கு ரெண்டு கடா வாங்கிவெட்டச்சொல்றேன் என்று பிரலாபிக்க ஆரம்பித்தாள்.

“வீரர்கள் முற்றத்துக்குள் ஏறிக்குதித்து உள்ளே வந்தார்கள். ஒருவன் வாசல் கதவைத் திறந்துவிட அங்கிருந்தவர்களும் வந்து கூடத்திலிருந்த இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் வீட்டின் மற்றப்பகுதிகளில் புகுந்து தேட ஆரம்பித்தார்கள்.

"சேதுபதிரொம்பத்திறமையுடன் நாடகமாடினார்.அவர் எழ முயலுவதும், ஆச்சி அவரை இழுத்து மார்பின் மேல் சாத்திக் கொண்டு, சும்மா இருங்க என் ராசா என் சாமியில்லே! ஐயா, உங்களுக்கெல்லாம் புண்ணியமுண்டு. என் வீட்டுக்காரருக்கு ஏதாவது மருந்து குடுத்துக் காப்பாத்துங்கையா காளியாத்தா! எனக்குத்தாலிப்பிச்சைபோடுதாயே என்றகூவியதுவந்தவர்களைத் திகைத்து நிற்கச் செய்துவிட்டது.

மைசூர் வீரர்களும் நம்ம ஜனங்கள்தானே? தன் கணவனைத் தவிர வேறு ஒர் ஆண்பிள்ளையை ஒருத்திதன் மார்பின்மேலேயே சாத்திக் கொள்வாளா! அதுவும் காளியாத்தாளிடம் தாலிப்பிச்சை கேட்கிறாள்.ஆகையால், அவர்கள் சேதுபதியையும் ஆச்சியையும் நிஜமான கணவனும் மனைவியும் என்றே நம்பிவிட்டார்கள்.

அந்த வீட்டின் இதரப் பகுதிகளிலும் அக்கம் பக்கத்திலும் தேடிய ஆட்கள் வெறும் கையுடன் திரும்பி வந்தார்கள். அதன் பிறகுதான் அவர்களை நடத்திவந்த வீரன், ஆச்சியிடம்கேட்டான்: "ஏய் உண்மையைச் சொல்லிவிடு; இங்கே சேதுபதி வந்தாராமே, எங்கே அவர்? ஏமாற்ற முயன்றால் இருவரையும் துண்டம் துண்டமாகவெட்டிஎறிந்துவிடுவோம் என்றான்.

"ஆச்சி கண்ணிருடன், அப்படியாவது என் கஷ்டத்தை முடிச்சிடுங்க. பத்து நாளாச்சு நாங்க வெயிலைப் பாத்து. பயந்து கிட்டு எலிங்கமாதிரி இப்படிப் பதுங்கிக்கிட்டுக் கெடக்கிறோம். அஞ்சுநாளாச்சு இவரு சோறு தண்ணிபாத்து. நீங்கசொல்ற ஆளை நான் சொப்பனத்திலே கூடப் பாத்ததில்லே. நீங்க கொளந்தை குட்டிங்களோடே நல்லா இருப்பீங்க. உங்க பொஞ்சாதிங்கதாலி கெட்டியாயிருக்கும். எங்க ரெண்டு பேரையும் ஒரே அடியாக் கொன்னு போட்டுடுங்க என்று படபடவென்று பேசினாள்.

“அவள் பேச்சின் முடிவில் சேதுபதி ஒரு தடவை முனகித் தலையைப் புரட்டினார். ஆச்சி தலையைப் பிடித்துத் தடவி விட்டு, ஐயோ,சும்மாஇருங்களேன் என்று சமாதானப்படுத்தினாள்.

வீரர்களின் தலைவனுக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது. நம்மிடம் உளவு சொல்ல வந்தவன் ஏமாற்றி இருக்கிறான் என்று சொன்னான் ஒருவன். அப்படித்தான் தோன்றுகிறது. மதுரைக்காரர்கள் ஏதோ சூழ்ச்சியாக அவனை அனுப்பி இருக்கிறார்கள். புறப்படுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டுப் புறப்பட்டான் தலைவன். அந்த அபாய காலத்தம்பதிகளைத் திரும்பிக் கூடப்பார்க்காமல் போய்விட்டார்கள்.

அவர்கள் கன்னடத்திலேயே பேசினாலும் சேதுபதி ஓர் அளவுக்கு உண்மையை ஊகித்துக்கொண்டுவிட்டார்.எதிரியாட்கள் கிராமத்தின் எல்லைக்குப் போகும்வரை அவகாசம் கொடுத்து விட்டுக்குதித்து எழுந்தார்.தம் சொந்தத்தாயைவணங்குவது போல ஆச்சியை வணங்கினார். அம்பலகாரனுடைய துரோகத்தைப் பற்றித்தான் அறிந்துகொண்டதைச் சொல்லி, அவளைத்தன்னுடன் வந்துவிடும்படி அழைத்தார்.

மடிச்சியாச்சி அதற்குச் சம்மதிக்கவில்லை. என் கதி என்ன ஆனாலும் சரி, நீங்கள் தப்பிப் போய் ஊரைக் காப்பாத்துங்கள் வேலையை முடிக்காமல் திரும்புவதில்லை என்று மைசூர்ப் பாசறையைநோக்கிப்புறப்பட்டார்.

மைசூர் வீரர்கள் ஏமாற்றத்துடனும், மதுரைக்காரர்கள் செய்யும் புலன்புரியாத சூழ்ச்சியின் பயத்துடனும் திரும்பிச்சென்று தங்கள் தளபதியிடம் நடந்ததைச்சொன்னார்கள். அவர்கள் தளபதி கோபத்தில் அம்பலகாரனை இழுத்து வரச் சொல்லி, முன்பின் யோசிக்காமல் அவன் மூக்கை அறுக்க உத்தரவிட்டான். மூக்கை இழந்து துடித்துக் கொண்டிருந்தவனிடம், அவன் குறிப்பிட்ட வீட்டிலிருந்த தம்பதிகளைப்பற்றிச்சொன்னான் தளபதி.

அம்பலகாரன், ஐயையோ! அவள் என் பெண்சாதிதான். அவள் மார்மேலே படுத்திருந்தவன்தான் சேதுபதி. சண்டாளி: எனக்கே துரோகம் செய்துவிட்டாள்" என்று கூவித் தன் மூக்கை அறுத்த வாளையே பிடுங்கிக்கொண்டு ஓடினான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தகோலத்தைக்கண்டமடிச்சியாச் சிக்கு நிலைமை புரிந்துவிட்டது. கொஞ்சமும் கலங்காமல் அந்த வெறியனின் கோரத்தாண்டவத்திற்கு உட்பட்டாள். அம்பலகாரன் அவளைக் கண்டதுண்டமாக வெட்டி எறிந்தான். அப்பொழுதும் அவன் வெறி அடங்கவில்லை. அவள் மூக்கை அறுத்து எடுத்துக் கொண்டு மதுரைத்தளத்தை நோக்கி ஓடினான்.”

பண்டாரம் இந்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டு மடித்தாள் பட்டி இருந்த திசையில் பார்த்தார். நானும் திரும்பிப் பார்த்துக்கொண்டே"அப்புறம்” என்றேன் ஆத்திரத்துடன்

அப்புறம் என்ன? சேதுபதி தாமே போய் எதிரியைப் பற்றித் தமக்கு வேண்டியதை எல்லாம் தெரிந்துகொண்டார். புதிதாக வந்த படைபலம் தருவதற்கு அவகாசம்கொடாமல், மறுநாளே மதுரைப் படைகள் தாக்கின. அறுபது நாழிகைஇடைவிடாமல் நடந்த புயல் போரில் இரு தரப்பாரிலும் பெருவாரியானசேதம் மதுரைப் படைகள் எதிரிகளை மைசூர் வரையில் துரத்திக் கொண்டு போனார்கள். மடிச்சியாச்சியின் மூக்குக்கு மைசூர் தளபதியின் மூக்கையே பதில் வாங்காமல் விடுவதில்லை என்று சபதம் கூறித் துரத்தினார் சேதுபதி அதில் வெற்றியும் பெற்றார். அதனால்தான் அந்த யுத்தத்துக்கு மூக்கறுத்தான் சண்டை என்று பெயர் வழங்குகிறது.

சேதுபதி திரும்பி வரும்வ ழியில், இங்கே இதே இடத்தில்தான் தண்டடித்துத்  தங்கினார் .மடிச்சியாச்சியை அடக்கம் செய்திருந்த அந்த இடத்தில் கோவிலைக் கட்டுவித்தார். அவளுக்கு மடி கொடுத்ததாய் என்று பெயரும் வைத்தார்.மடிகொடுத்ததாய் மடி கொடுத்த அம்மனாகி இப்போது மடித்தாளம்மனாகிவிட்டாள்.

"ஆண்டவனே! அதோ உங்கள் வண்டிக்காரன் வந்து விட்டான்.உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா” என்று பண்டாரம் கப்பரையையும், தடியையும் எடுத்துக்கொண்டு எழுந்தார்.

நானும் கூடவே எழுந்து, "இது நிஜக் கதையா ஸ்வாமி” என்றேன். பண்டாரம், "அவ்வளவும் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறது. கல் அந்தக் கிணற்றுக்குள்ளே கிடக்கிறது. உற்சாகமுள்ள வர்கள் தேடி எடுத்தால் பார்க்கலாம்" என்றுபுறப்பட்டார்.

அவர்போவதையே பார்த்துக்கொண்டு, அரை நாழிகைவரை நான் சிலைபோல் நின்றிருந்தேன் என்பது வண்டிக்காரன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

- பி. எஸ். ராமையா

Monday, May 30, 2016

மெளனியின் மெளனம் கலைகிறது - துர்வாஸ ஜே. வி. நாதன் பேட்டி




மெளனியின் மெளனம் கலைகிறது

மெளனி அவர்களை பேட்டி கண்டவர் : துர்வாஸ ஜே. வி. நாதன்

கண்ணதாசன் இதழில், மறுபதிப்பு கணையாழி

சுறுசுறுப்பு நிறைந்த, 68 வயது இளைஞரான மெளனியைச் சமீபத்தில் சிதம்பரத்தில், அவர் இல்லத்தில் சந்தித்தேன். எழுத்துக்களைப் போலவே அவருடைய பேச்சும் ஒரு உன்னதமான அனுபவமாக மிளிர்கிறது. "உங்களுக்காக நான் பேசவில்லை. என்னையே நான் clarify பண்ணிக்கிறேன்" என்று கூறிக்கொண்டு அவர் பேசுகையில்... எனக்குப் பிரமிப்புத்தான்.

படைப்பவனுக்கும் (கலைஞன்) அவனது படைப்புக்கும் உள்ள சம்பந்தம்பற்றி மெளனி கூறினார் : ஒருவன் தன் பிள்ளை கலெக்டராகப் போக வேண்டும் என்று நினைத்து பிள்ளை பெற்றெடுக்கலாம். அவன் வளர்ந்த பின் ஜெயிலில் இருக்கலாம். தகப்பன் எவ்வளவு தூரம் தன் எண்ணம் ஈடேறாததைக் குறித்து நொந்து கொள்ள முடியும், எந்த விதத்தில் கொள்ள வேண்டும் பிறந்த பிள்ளை தனி object. தனி உயிர் பெற்றது. அது நன்றாக இருக்குமானால் படைப்பாளி தன் மார்பை எப்படி பெருமிதத்துடன் உயர்த்திக் கொள்ள வேண்டும் அல்லது ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு உயரிய கதை எழுதி அனுப்பி திரும்பப் பெற்றால் எந்த மனோபாவம் கொள்ளவேண்டும், psychological mistake என்று சொல்லக் கூடிய தரமற்ற பத்திரிகைகள் அவை என்று தூற்றுவது rational ஆகுமா ? அவை அப்படி இருக்கலாம். ஆனால் இவன் இந்த முடிவிற்கு இந்தக் காரணம் முன்னிட்டுக் கொள்வது logical? தற்போது அநேக குழுவினரையும். ஒரு reaction விளைவாகத்தான் நான் காண முடிகிறது.

படிப்பகம்

________________

www.padippakam.com

159

நான் இப்பல்லாம் ஏன் எழுதறதில்லைன்னு எல்லோரும் கேட்கிறார்கள். எழுத நிறைய விஷயம் இருக்கு. I am a writer and artist always. எனக்கு சுயவிமர்சனம் அதிகம் (self criticism) அதிகம். வரவர விமர்சனப் பார்வை அதிகமாவதால் முன்பு எழுதியவதைவிட இப்போது எழுதினால் இன்னும் புரியாமல்தான் போகும் என நினைக்கிறேன். கலை வெளியீட்டுக்கு (expression) தமிழ் மொழி இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதத் தொடங்கிய போது இருந்ததைப்போலவே, விருத்தியடையாமல் தமிழ் இருக்கிறது. எல்லாவற்றையும் in and through words சொல்லியாக வேண்டியிருக்கு. என் மூளை எழுதிப் பார்க்கிற சில அபூத impression களை express செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது.

கலை என்பது என்ன?

அனுபவ வெளியீட்டை அழகாகச் செய்தால் கலை ஆகும். அனுபவம் என்பது வார்த்தையற்றது: உணர்வால் பெறப்படுவது. Experience should be aesthetic. பிருமத்தின் manifestationதான் நாமெல்லோரும். அரூப பிரம்மத்தின் குணங்கள் சொல்லப்படும்போது பல்வகைப்படும். முக்கியமாக, சத் (exists) சித் (consciousness) ஆனந்தம் (enjoyment). மாயை என்பது சம்பந்தப்படும்போது நாமரூபங்கள் 5 வித குணமுடையதாக ஏற்படுகின்றன. நாமரூப பேதமே உலகை விதம் விதமாகக் காட்டுகின்றது. அதனால்தான் அனுபவங்களும் விதம் விதமாக ஏற்பட இருக்கின்றன. பிரத்யட்ச அனுபவத்தில் நான்கு வகையாகப் பிரித்து தனியெனக் காண வகையுண்டு. (1) cognitive mode of experience, (2) Moral code, (3) Religious mode and (4) Aesthetic mode. இதன் அடிப்படையில் பிரத்யட்ச ஞானம் இல்லாத போதும் பழைய அனுபவ ஞாபகத்திலிருந்து - imagination

படிப்பகம்

________________

www.padippakam.Com

160

sublimate ஆகி, symbolical ஆக எழுத்பாது மூலம் படைப்பாக  வெளிவரலாம். இப்படியாக வெளி வியாபகத்திற்கு ஒரு passion மிகத் தேவை. Passion இல்லாத அநேக பெரிய artists அரிய aesthetic experienceஐ அனுபவிக்க முடியும், எழுதாமலே. அநேகமாக இப்படித்தான் என் காலம் இப்போது போய்க்கொண்டிருக்கிறது. அச்சமயம் யாருடனாவது பேசினால் நான் எதை எதையோ, வார்த்தைக்கு அப்பாலிருந்து வார்த்தை மூலம் ஒரு அனுபவத்தைக் கொடுப்பதாகிறது. யார் எவரிடம் என்பதன்றி - அவர்கள் மனோபாவத்தை, விசாலத்தைப் பொறுத்து - எதையும் நினைக்க இருக்கலாம்.

Aesthetive mode of experience என்கிறபோது subjective-objetive மறைந்து போய் mystic levelல்; self contained ஆக சஞ்ஞாரம் பண்ணின்டு universal ஆக place, time எல்லாம் மறைந்து போய்விடுகிற இடம் - அதுவே spontaneous overflow ஆக மாறிவிடுகிறது.. உண்மையான கலைஞனுக்கு அனுபவம் வெளியீடு ஆகும் போதும் வார்த்தைகள் தாமாகவே வந்து விழுகின்றன. நாயைக் கட்டியிழுப்பது போல் வார்த்தைககளைக் கட்டி இழுப்பதெல்லாம் timeல் அடிபட்டு போய்விடக்கூடியவை. 

ஒரு எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட, எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்த artistic restraintதான் அவனைக் கலைஞன் அளவுக்கு உயர்த்த முடியும் (consciousness proposes- l d disposes)

என் சிறுகதைகளில் சில வரிகளைப் பாருங்கள் :

விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவதுதானா ஆடவர் வாழ்க்கை கிட்டே நெருங்க கவர்ச்சி கொடுக்காது இருக்க எப்படி முடியும் பெண்களால் இருட்சுடரைக் கொண்டு விளக்காக முடியுமா?" (சாவில் பிறந்த சிருஷ்டி)

படிப்பகம்

________________

www.padippakam.com

161

"நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" (அழியாச்சுடர்)

ஆதாரமற்று நினைப்பதிலும் அதிர்ந்து இடிய, வடிவாகும் கற்பனைக் கோட்டை" (மனக்கோலம்)

நினைப்பதால் உருவாகிற கோட்டை, நினைப்பதால் இடிகிறது. இரண்டுக்கும் நினைவே காரணமாகிறது.

இந்த வரிகள் யாவும் subjective-objective இரண்டும் ஒன்றாகிக் கலந்து symbolicalஆக மேல் நிலைக்குப் போகிற constructions. வலிந்து கட்டிக் கொண்டு, வார்த்தைகளைக் கோர்த்து இவற்றை உருவாக்கிவிட முடியாது. தானாக, அர்த்த அழுத்தத்துடன் தோன்றி உதிர்ந்தவை இவை.

வார்த்தைகளை வலிந்து அடுக்கி, சுழற்றி மேற்பூச்சு நகாசு வேலை செய்பவன் artist ஆகமாட்டான். அவன் ஒரு artisan அவ்வளவுதான். அதிலும் மொழியின் இலக்கியப் பிரயோகத்தைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முடியாமல், மேற்போக்கு நகாசுக்கான pliable medium தான் மொழி என நினைப்பவன், (பொற் கொல்லனுக்குத் தங்கம் மாதிரியாக) மொழி மூலமாக creative process எப்படி இயங்குகிறது (symbolical ego) என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவன் கலைஞனாவது முடியாத காரியம்,

"நனவோடை எழுத்தாளர்' என்று சிலரைக் குறிப்பது பற்றி...?

Stream of consciousness என்பது unorganised primary data of experience or perception from an artist. பளீர் பளீரென்று artistஐக் வாட்டக்கூடியது. நமக்கு ஒரு aesthetic satisfactionஐ கொடுக்கக் கூடியது. புரியாததை  தான் தெரிந்தவன் எனக் காட்டத் தெரிந்ததென இரண்டொரு வார்த்தை பிரயோகங்களை தனக்கு இஷ்ட

படிப்பகம்

________________

www.padippakam.Com

162

தேவதையான சில கதாசிரியர்களுக்கு சேர்த்து அடிக்கடி உபயோகப்படுத்துவதால் நிகழும் அபத்தங்களில் ஒன்று இது.

எழுதுவதற்கு, experience பண்ண வேண்டும் என்பது அவசியத் தேவையா?

மனைவி செத்துப்போன ஒருவனின் மனநிலையை மாறுதல் சிறுகதையில் எழுதியிருக்கிறேன். இதோ என் மனைவி உயிருடன் இருக்கிறாள். அனுபவத்தால்தான் எழுத வேண்டுமா என்பது இருக்கட்டும், experience பண்ணுகிறபோது எழுதமுடியுமா...?

குடிகாரன் மாதிரி ஒருவன் நடிக்கிறான். குடித்து விட்டு ஒருவன் மண்ணில் விழுந்து கிடக்கிறான். முன்னது குடிகாரனது நிலை வெளியீடு, பின்னது குடிகாரனின்' வெளியீடு. என் காதல் சாலை சிறுகதையில் ஒரு  குடிகாரன் வருகிறான். அது Drunken states's aesthetic experience ஆகும் - இது ஒரு paradox.

கண்ணதாசன் (செப்டம்பர்-73) எம்.வி.வி. பேட்டியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தவைகளில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. தேனீயில் வெளிவந்த என் இரண்டு சிறுகதைகள் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டவை, தரப்பட்டவை என்பதைச் சொல்கிறேன்.

'மனக்கோலம் (1948) கதையை என் வழக்கப்படி திருப்தியின்றி வெவ்வேறு script ஆக பதினைந்து தடவைக்கு மேல் எழுதிக் கிழித்தும், கடைசியாக நான் பக்கம் பக்கமாக எழுதிப்போட, கரிச்சான்குஞ்சு அருகிலிருந்து வாங்கிக் கொள்ள மகளின் திருமணம் முடிந்த அன்று நள்ளிரவு ரயிலில் சிதம்பரம் திரும்பியாகவேண்டிய அவசரத்தில் - கரிச்சான்குஞ்சு, கதையின் கடைசிப் பக்கத்தை இன்னொரு தடவை படித்துவிட்டு, வேறு எழுதக் கோரியபோது "அவ்வளவுதான்-அதைத் திருப்பிப் பார்த்தால்-எல்லாமே எனக்குத் திருப்தி தராமல் கிழித்துப்

படிப்பகம்

________________

www.padippakam.com

I63

போட்டுவிட்டு வேறு எழுதத் தோன்றிவிடும். நான் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும்" என்று கிளம்பி விட்டேன்.

எம். வி. வி. தன் பேட்டியில் முதல் கதையை நேரில் கொண்டு வந்து தந்தார். திருத்திப் போடு என்று சொல்லி விட்டுப் போனார், என்று கூறியிருப்பதற்காக இதனைக் கூறுகிறேன்.

இரண்டாவது சிறுகதையை நான் தேனி’க்குத் தந்த கதை இது: அப்போது க. நா. சு. பொறுப்பேற்று நடத்திய சந்திரோதயம் பத்திரிகையின் ஆண்டும் மலர் ஒன்று கொண்டு வரப் போவதால் என் கதை வேண்டு மெனக் கேட்க நான் எழுதிக் கொடுத்த கதை: நினைவுச் சுவடு (1948). சந்திரோதயத்தில் அப்போது உதவி ஆசிரியராக சி. சு. செல்லப்பாவும், ஒவியராக சாரதியும் இருந்தார்கள். சந்திரோதயம் மலர் வெளியிடும் முன்பே நின்று விட்டது. அச்சமயத்தில் எம்.வி.வி. தேனீ! பத்திரிகைக்கு என் கதை அவசியம் தேவையென்று கேட்க நான் க.நா.சு.விடம் வெளியிடாமல் வைக்கப்பட்டிருக்கும் என் கதையைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். க. நா. சு. அந்தக் கதைத் தாள்களை கறையான் அரித்துவிட்டதாகக் கூறியதால், மறுபடியும் எம்.வி.வி. என்னை வந்து துளைத்தார். நினைவுச் சுவடு' கதையைத் திருப்தியின்றி மாற்றி மாற்றி எழுதிய கடைசி versionக்கு முந்திய பிரதி தற்செயலாக அகப்பட, அதை அவருக்குக் கொடுத்தேன். அதுவே தேனி'யில் வெளிவந்த எனது இரண்டாவது சிறுகதை.

நான் கதை எழுதுவது என்பதே நாள் கணக்கில் ஏற்படுகிற - சிரமமான விஷயமாக இருக்க, 'கதை எழுதி வைத்திருந்து விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பி திரும்ப வந்துவிட்டது” என்று நான் வருத்தப்பட்டதாக(!) எம்.வி.வி. தன் பேட்டியில் கூறியிருப்பது உண்மையில்லாத விஷயம்.

படிப்பகம்

________________

www.padippakam.com

154

மேலும் அவர் கூறியிருந்தார் : 'மெளனி ஒரு கதைக் கான plot இருப்பதாகவும், எழுதப்போவதாகவும் சொன்னார். plot ஐயும் சொல்க்கொண்டே வந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சொல்லாதீர்கள். நானே எழுதிவிடுவேன் போலிருக்கிறது' என்று தடுத்தேன். "எழுதேன், அதனால் என்ன? நானும் எழுதுகிறேன்' என்றார். அவர் சொன்ன கதைக் கருவிலிருந்துதான் கருகாத மொட்டு' என்ற என் கதை தோன்றியது. அவர் அதே பிளாட்டைப் பயன்படுத்திக் கதை எழுதுகிறாரா என்று எனக்குத் தெரியாது” - -

எம். வி. விக்கு நான் கூறிய பிளாட்டை வைத்துத் தான் பிரக்ஞை வெளியில் (சரஸ்வதி-1960) என்ற என் சிறுகதை எழுதப்பட்டது.

கருகாத மொட்டு, பிரக்ஞை வெளியில் - இவ்விரு கதைகளுடன் ஜெயகாந்தனின் உடன்கட்டை சிறுகதையையும் சேர்த்துப் படியுங்கள்!

அதே போல, என் எங்கிருந்தோ வந்தான் கதையைப் படித்துவிட்டு, புதுமைப்பித்தனின் காலனும் கிழவியும்’ கதையைப் படியுங்கள். எங்கிருந்தோ வந்தான் சிறுகதையின் இரண்டு வரிகளைக் கொண்டு மிகவும் புத்திசாலித் தனமாக அக்கதையை புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். உண்மையிலேயே அது நல்ல கதையாக அமைந்துவிட்டது.

'ஹிந்து உள்பட முக்கியமான தினசரிகளில் மெளனியைச் சந்தியுங்கள்' என்று எம்.வி.வி. விளம்ரம் கொடுத்தது, கண்ணதாசன் இதழைப் பார்க்கிறவரை எனக்குத் தெரியாது. 

விமர்சகன்  யார் ?

விமர்சகன் என்பவன், தன் மனச்சாயையினைத் தவிர்த்து objective ஆகப் பார்க்கக் கூடியவனே object என்பது தனித்து எதிரில் உள்ளது. அதுபற்றி விமர்சகன்

படிப்பகம்

________________

www.padippakam.com

165

objective validity ஆகக் கொடுத்து value judgement பண்ண வேணுமே தவிர, முன்னதாகக் கொண்ட அபிப்ராயங்கள், தன் மனச்சாயை போன்றவைகளை அளவுகோல்களாகக் கொள்வது அறவே கூடாது (factual judgementக்கு objective validity இருப்பது போன்று value judgementக்கு objective basis உண்டா என்பது ஒரு நிரடான பிரச்சினை...) அந்தக் காலத்தில் நாங்கள் இலக்கியம் பற்றிய விஷயங்களைக் காரசாரமாக விவாதிப்போம். ஒருவர் கதை சரியில்லை என்றால் முகத்துக்கெதிரே சொல்வதில் தயக்கமோ, கேட்பதில் அவருக்குக் கோபமோ வராது.

ஒரு தடவை ந. முத்துசாமி பத்திரிகை ஆரம்பிப்பது பற்றிப் பேசியபோது நான் சொன்னேன்: எந்த articleஐ யார் எழுதிய போதிலும், அதில் ஒரு வார்த்தைகூட அனாவசியம் - சரியல்ல எனில் அந்த articleஐ தூக்கி எறிந்துவிட்டு - தரமான விஷயம் கிடைக்கவில்லையானால் பக்கங்களை வெள்ளையாக விட்டுவிடும் தைரியம் இருந்தால் ஆரம்பிக்கலாம்." - -

நான் சிறுகதை எழுதுகிற process ரொம்ப சிரமம் தருவது, ஒரு தடவை எழுதி முடித்த முழு versionஐ மறுபடியும் மாற்றி எழுதுவேன். திரும்பத் திரும்பப் பலமுறை எழுதுகையில் ஒவ்வொரு தடவையும் கதையின் version புதிதாக மாறியிருக்கும். எப்படி - எத்தனை தடவைகள் எழுதிய போதிலும் திருப்தி ஏற்படுவதில்லை. பத்திரிகையில் வந்த பிறகும், இதைவிட நன்றாக எழுதி யிருக்கலாம் என்ற தோற்றம் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு versionஐ கேட்டவருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். என் கதைகள் ஒன்றுக்குக் கூடத் தலைப்பு நான் வைத்ததில்லை. எழுதிய கைப் பிரதிகளையோ, அச்சில் வந்தவைகளையோ பாதுகாத்து வைக்கிற பழக்கம் எனக்கில்லை. ..

படிப்பகம்

________________

www.padippakam.com

166

இப்போதெல்லாம் என்னைத் தெரிந்த நிறையப் பத்திரிகைகள் அனுப்பப்படுகின்றன - என் பழைய விலாசத்திற்கு எப்படியோ அவை என் புது முகவரிக்கு வந்து சேர்கின்றன. அநேகம் வராமலும் இருக்கலாம். பத்திரிகைகளில் கவிதைகள் அதிகம் வெளிவருவதாகத் தெரிகிறது. என் கண்களில் cataractக்கும் Retina detachmentக்கும் ஆபரேஷன் செய்த பிறகு படிப்பது ரொம்ப ரொம்பச் சிரமமான விஷயம். எழுதுவது அதைவிட சேர்ந்தாற்போல் 10 நிமிஷங்கள் படித்து முடித்து 10 நிமிஷம் கண்களுக்கு ஒய்வு கொடுத்துத் திரும்பவும். இப்படித்தான் இப்போதும் நாளைக்கு இரண்டு மணிக்குக் குறையாமல் ஏதாவது செய்கிறேன்.

எது கவிதை?

என் சிறுகதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் கவிதையே. poem is a linguistic artifact whose function is to organise the primary data of experience that can be exhibited in and through words.

சிறுகதை எழுதுவதன் குறிக்கோள் என்ன?

நான் இதற்கு என்ன பதில் கூறவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? காசுக்காக-புகழுக்காக-கலை, கலைக்காக-என்றெல்லாமா? இதே கேள்வியைச் சற்று மாற்றி ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் எனைக் கேட்டார். "Why do you write?" என்று அவருக்குக் கூறிய பதிலையே கூறுகிறேன் “என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லைஅதனால் எழுதுகிறேன்..."

நான் நிறைய எழுத வேண்டும். சிறுகதைகளாகஎன் இலக்கியக் கொள்கைகளைக் கட்டுரையாக என்றெல்லாம் வற்புறுத்துகிறார்கள். எழுத வேண்டும் என்ற வேகமும் எனக்கு இருக்கிறது. இப்போதுள்ள

படிப்பகம்

________________

www.padippakam.com

167

தமிழ், வெளியீட்டுக்கு சரியான அளவில் துணை புரிய முடிவதில்லை, சிரமப்பட வேண்டியிருக்கிறது - எப்படியும் எழுதுவேன்.

'தீபம்’ பட்டிமன்றத்தில் 'தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரிந்துவிடக் கூடாது என்று எழுதுபவர்' என்று என்னைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். "ஞானரதம் பத்திரிகையில் சுயதரிசனம் என்று தான் பேசியதைத் தொகுத்து எழுதினார்கள். அக்கட்டுரையில் பல பிழைகள்... என் எழுத்தே எனக்குப் புரியாததை பிறருக்குப் புரியாத வகையில் இருப்பதாக இருக்கிறதே! நான் பேசுவது புரிந்தவர்கள் பிறருக்குப் புரிய எழுதுவது எப்படியிருக்க முடியும்? இப்போது நான் பேசியதைப் புரிந்து நீங்கள் எழுதி வெளியிடப் போவதாகச் சொல்கிறீர்கள்...?!

நான் பெயரளவில்தான் மெளனி எனவும், ஓயாமல் பேசுவேன் என்றும் எம். வி. வி. தன் கண்ணதாசன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். நான் நிறைய பேசுவேன். பேசுகிறேன். பேசுவது எதிரில் இருப்பவர்களுக்காக அல்ல. என்னால் சுவற்றுடன் பேச முடிய வில்லை. வார்த்தைகள் மூலமாக self clarification பெறும் நோக்கமே என் ஓயாத பேச்சுக்குக் காரணம். என் சிறுகதைகளை நான் பலமுறை ஏன் எழுதிப் பார்க்கிறேனோ, அதே காரணம்தான் என் பேச்சுக்கும். எதிரில் இருப்பவர்களுக்குப் புரிய வைப்பது என் வேலையென்று நான் நினைக்கவில்லை In and through wordsல் எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. பேச்சில், எழுத்தில் என் impressionகளை, experienceகளை சரியாக express செய்ய நான் பெரிதும் பாடுபடுகிறேன்.

அதனாலேயே நான் பெரிதும் நம்புகிறேன்: “My works will live, so long as Tamil lives”. *

ΔΔΔ

படிப்பகம்

https://tamilbooksdb.blogspot.com/2018/05/Mowniyudan-oru-nerkaanal-Interview.html

தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் அவரை ஒருதடவை சந்தித்தாலே போதும், அவருடைய தும்பை மலர் போல் வெண்ணிறமான, அடர்ந்து திமிறி நிற்கும் தலைமுடியும்; சிற்பியின், ஓவிய விரல்களில் தினவு எடுக்கச் செய்யும் முகபாவமும், அவரின் உரையாடலும், அவரது உயர்ந்த கலைப்படைப்பைப் போலவே பசுமையாக நினைவில் நிற்கும்.

மெளனி அவர்கள் கணிதத்தில் பட்டம் பெற்றவர். ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர்; சங்கீதத்தில் பயிற்சி கொண்டவர்; தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்; மெளனியின் ஆளுமை, கணிதத்தால் ஏற்பட்ட அறிவுநுட்பமும், சங்கீதத்தால் உண்டான கலையுணர்வின் நளினமும், இலக்கியத்தால் வந்த கற்பனையும், தத்துவம் அளித்த தீர்க்க முடியாத தாகமும், இத்தனையும் உள்ளடக்கியது. அவருடன் உரையாடும்போது நம் மனக்கண் முன்பு ஒரு மாபெரும் உலகம் விரிகிறது.

உயர்ந்த இலக்கியப் படைப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் புதுப் புதுப் பொருளையும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தையும், ஒருத்தருக்கே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறாகத் தோன்றும்படி இருக்கும் என ஆங்கிலக் கவி ஆடன் கூறியிருப்பது மெளனியின் இலக்கியப் படைப்புக்கு மிகப் பொருந்தும். அவர் எழுதி அச்சில் வெளிவந்தது மிகக் குறைவுதான். ஆனால், எழுதி வைத்து அச்சில் வராதது சுமார் 2 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன!

இரு உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காலத்தால் படைக்கப்பட்டது. இவ்வுலகத்தில் தவிர்க்க முடியாத தேவை, மாயை, துயரம், மாறுதல், அழிவு, இறப்பு யாவும் மாற்ற முடியாத சட்டங்களாக இருக்கின்றன. மற்றோர் உலகமோ ஊழுழியால், காலங்கடந்த நிரந்தரத்தால் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரம், அழகு, அமைதி கொலுவீற்றிருக்கின்றன. நம் சாதாரண அனுபவம் காலத்தால் படைக்கப்பட்ட அந்த முதல் உலகத்தில் நடைபெறுகிறது. ஆனால், அந்த இரண்டாம் உலகத்தின் காட்சி, தற்செயலான சுயமாய் எழும் நினைவாலும், ஆழ்ந்த த்யான உணர்வாலும், தோன்றும்போதே மறையும் அந்தக் காலத்துளிகளில், கணங்களில் புனையா ஓவியம் போல் தெரிகிறது. மெளனி என்னும் மாபெரும் கலைஞன் அந்தக் காலத்துளிகளின் மின்னொளியைப் பிடித்துக் காலத்துக்கு உட்பட்ட இவ்வுலக அனுபவத்தின் மேல் பாய்ச்சுகிறார். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்றாரே அந்த நிழல்களின் மேல் தெரியும் வினா விடைகளைக் காணலாம்.

தங்கள் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களாகவும், இலக்கியத் துறையுடன் தங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது பற்றியும் தீபம் வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லவா?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில், ஆங்கில இலக்கியத்தையும் பிற பாஷைகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உலக இலக்கியங்களையும், படித்து உணர்ந்து ரஸிக்கும் ஆர்வம் பலரிடம் இருந்தது. அவர்களில் நானும் ஒருவன். ஒருவகையில் என் மனோபாவத்தைப் பொறுத்து, ஏன் நாமும் அதைப் போலத் தமிழில் எழுத முயலக் கூடாதென்பதின் விளைவாக என் எழுத்து தோன்றியது போலும். வேறு ஒரு வகையிலும், நான் ஏன் அப்போது எழுத ஆரம்பித்தேன் என இப்போது என்னால் அனுமானிக்க முடியவில்லை. 1934லிலிருந்து முடிவிற்குள், அநேக அரைகுறை கதைகளையும், பூர்த்தியாகாத நான்கு ஐந்தையும், ஒரு நெடுங்கதையும் எழுதிவிட்டேன். என்னைப் பொறுத்த மற்றொரு விஷயம், உருவாகிவிட்டதென்பதற்கு, அச்சுக்குப் போகும் வரையிலும் பலப்பல உருமாறத்தான் திரும்பத் திரும்ப எழுதுவது வழக்கம். இவ்விதமான என் வழக்கத்தினால் என் கதைகள் ஒன்றுக்கும் ஒரு நகல் எனச் சொல்லும்படி என்னிடம் ஒன்றும் இருந்ததில்லை. அச்சில் வந்து எனக்கு அனுப்பிய பிரதிகளையும் நான் கவனமாகக் காப்பாற்றுவது கிடையாது… 1959ல் என் கதைகளை சேகரம் செய்ய க.நா.சுவும், சி.சு.செ.யும் எடுத்துக் கொண்ட முயற்சி நான் சொல்லுவதை மெய்ப்பிக்கும்.

‘மணிக்கொடி காலம்’ பற்றித் தாங்கள் வாய்மொழியாக விளக்கிக் கொள்ள வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஒரு சிறிது கூறுங்களேன்?

இந்தக் கேள்வியை நான் எப்படி விளங்கிக் கொண்டு பதிலளிப்பது என்பதில் கொஞ்சம் சிரமம் தோன்றுகிறது… ‘மணிக்கொடி காலம்’ என்பது 1932 – 38 வரை. (வ.ரா. பி.எஸ். ராமையா, பா.ரா. இவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு) வெளியான காலத்தைக் குறிப்பதென்று எண்ணி ‘மணிக்கொடி’யில் என்னுடைய பெரும்பான்மையான கதைகள் வெளிவந்ததென்பதை எண்ணிச் சொல்கிறேன். மேலே குறிப்பிட்ட ஆர்வங்கொண்ட அநேகருடைய கதைகள் அதில் வெளிவந்தன. அதிலும், பி.எஸ்.ரா. காலத்திலிருந்து சிறுகதைகளுக்கு எனவே வெளிவந்த பத்திரிகை என்பதில் அதிகமாகவே வந்தன. கதைகளின் புதுத் திருப்பமும், நோக்கும் அநேகர் கவனத்தை ஈர்க்க இருந்தன. அவைகளின் இலக்கியத் தராதரத்தை விமர்சகன் ஏற்று நன்கு தெரிந்து சொல்ல வேண்டியது கடமை. என்னுடையது என்பது என் அபிப்பிராயம். என் கதைகள் மணிக்கொடியில் வர நேர்ந்தது ஒரு எதேச்சையான சம்பவமெனத்தான் எனக்குத் தோன்றுகிறது. யார் யார் கதைகள் அதில் எந்த்ந்தக் காரணங்களுக்காக வெளிவந்தன என்பதை என்னால் சொல்ல இயலவில்லை. ஒருவகையில் என் கதைகள் வேறு எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவந்தோ அல்லது வெளி வராமலோ இருந்து இருக்கலாமெனக் கொள்ளலாம்…

தங்களுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நேராகவோ கடித மூலமாகவோ தொடர்பு இருந்ததா? புதுமைப்பித்தனைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?



மணிக்கொடியில் என் இரண்டாவது கதை வெளிவந்தவுடன், எங்கள் ஊர்வாசியான ந. பிச்சமூர்த்தி அவர்கள் (பழைய மணிக்கொடி எழுத்தாளர் என்பதில்) எனக்கு அறிமுகமானார். அதோடு கூட அவர் நண்பரான கு.ப.ராவும் என் வீட்டிற்கு சமீபத்தில் இருப்பவர்கள். முன்பே இவர்களைத் தெரியுமானாலும், நான் ஒரு கதாசிரியன் என்ற பாவத்தில் சொல்கிறேன். பிறகு நான் இவர்களை சந்தித்துப் பேசுவது வழக்கம். ந.பி. வக்கீலாகத் தொழிலாற்றிக் கொண்டிருந்தவர். அடிக்கடி அவரிடம் பேசுவது முடியாது. கு.ப.ரா. என்னைப் போன்றவர். அவரை அடிக்கடி சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது… அநேகமாக இலக்கிய சர்ச்சைகள்தான். நானும் என்னை ஒரு விதத்தில் விமர்சகன் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டு. (அத்தொழிலை வெகுவாக என் எழுத்து வெளிவரும் முன்பு அதனிடம் உபயோகிக்கிறேன்). என் பேச்சில் சுவாரஸ்யம் கண்டவர் போலும். அதை எழுதித் தன்னிடம் கொடுக்கும்படி அநேக தரம் கேட்டதுண்டு. பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அடிக்கடி நான் அவரிடம் கூறுவதுண்டு. 

ஒருநாள் கு.ப.ரா. என்னை ஒரு கதை எழுதிக் கொடுக்கும்படி கேட்டார். 1937ல் தினமணி ஆண்டு மலரை வெளியிடும் பொறுப்பைப் புதுமைப்பித்தன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் ஒரு துல்லியமான இலக்கிய உணர்வு கொண்டவர் என்றும், மேலும் அவரே ஓர் உயர் இலக்கியப் படைப்பாளி எனவும் சொல்லி, என்னுடைய கதையை அவர் போடுமாறு அவருக்கு அனுப்புவதாகச் சொல்லி கேட்டார். புதுமைப்பித்தன் பற்றியும், மணிக்கொடியில் எழுதுவதிலிருந்து எனக்குப் பெயர் பரிச்சயம் உண்டு. எனக்கு அப்போது எழுத ஒன்றும் தோன்றவில்லை. முடியவில்லை என்று சொல்லவும் இயலவில்லை. ஆரம்ப காலத்தில் எழுதியிருந்த ஒரு அரைகுறை கதை, பிறகு எழுதிய ஒரு அரைகுறை இவைகளை ஒன்றாக சேர்த்து (பின்பகுதி முன்னாலும் முன்பகுதி பின்னாலும் எழுதப்பட்டது) ஒரு பெரிய அளவில் (எனக்கு நீள அளவில் எழுதுவது வழக்கமல்ல) ஒரு கதையை அவரிடம் கொடுத்ததுதான் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 1939ல் ஒருதரம் சென்னை சென்றபோது அவரை நேராக சந்தித்தேன். பிறகு 1945 வரையில் அவ்வப்போது போகும்போது நேர்ந்தால் சந்திப்பது என்பதில் ஒரு நான்கைந்து தரம் சந்தித்துப் பேசியிருப்பேன். அதிகமான தொடர்பு இல்லை. எனினும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்ட வகையில்தான் தோன்ற இருக்கிறது போலும். என்னைப் பற்றி 1946ல் வானொலியில் அவர் பேசியதும் எனக்குத் தெரியாது. சிதம்பரத்தில் வசித்த க.நா.சு. ‘பொன்னி’ என்ற ஒரு பத்திரிகையில் அதைக் காணா எனக்குக் காட்டியதுதான் தெரியும்.

ஒரு ஐரானிகல் ஆட்டிட்யூட் இயங்க ஒரு பிரமாதமான சாதனையைத்தான் புதுமைப்பித்தன் இலக்கியப் படைப்பில் காட்டியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகில் அவருக்கு நிச்சயம் ஒரு ஸ்தானம் உண்டு. இலக்கியப் பார்வை என்பதில் ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’க்கு எந்த மதிப்பு என்பது விமர்சனத்திற்கு உரியது. அவர், க.நா.சு. சொல்கிறபடி அவருடைய ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’ இயங்கிப் பிரமாதமான சாதனை காட்டினாலும் ஒரு பூரண இலக்கியத்தன்மை உருப்பெறாத அளவில் ‘ஒரு மேதையைத் தமிழ்நாடு இழந்தது’ எனக் கொள்வது சரி. (‘ஐரானிக் ஆட்டிட்யூட்’டில் பூரண இலக்கியத்தன்மை உருப்பெற முடியாது என்ற சித்தாந்தம் இதைவிட ஓர் உயரிய ‘ஆட்டிட்யூட்’ இருக்கிறது என்பதைக் குறிக்கும். அதில் யாராவது இருக்கிறார்களா என்பதையும் விமர்சகர்கள்தான் கூறவேண்டும்). க.நா.சு. ஒருவரின் மதிப்பீட்டை ஒருவகையில் சரி என ஒப்புக் கொள்கிறேன். ”மேதைத்தன்மையும், கலையில் ஒரு பூரணத்துவம் காண முடியாதபடிக்கும், அவருடைய தனித்துவம் காட்ட முடியாதபடியும் ஆனதற்குக் கலையாக்குவதிலும், கட்டுப்பாட்டிலும் அவர் நம்பிக்கையற்ரவராக இருந்துவிட்டதினால்தான்” என்பதை நான் வேறு ஒரு வகையாகக் காண்கிறேன். அவர் ஐரானிக் ஆட்டிட்யூட்டில் இலக்கியம் படைத்ததனால் என்று கொள்ளும்படி எனக்குத் தோன்றுகிறது. இலக்கியப்படைப்பில் ஐரானிக் ஆட்டிட்யூட்தான் சிறந்ததெனச் செயல்பட முடியுமென்பது முடியாது. இந்தப் போக்குப் புத்தியைச் சார்ந்தது என்றும் மனதை சார்ந்து முழுமனிதன் செயல்பட இடம்கொடுக்க முடியாதென்பதையும் நான் ஒருவகையில் உணர்கிறேன். புதுமைப்பித்தனுக்கு இந்த மாதிரியான உணர்வும் அடிக்கடி தோன்றியிருக்கலாம். என்னைப் பற்றிய அவருடைய மதிப்பீடு வாசகங்களினூடே அதை நான் அனுமானிக்கிறேன். ஐரானிக் ஆட்டிட்யூட்டில் உயர்வகை இலக்கியம் ஒருவகையில் முடியும் என்பதைப் புதுமைப்பித்தனைப் போல எழுதும், எழுத ஆசை கொள்ளும் அநேக படைப்பாளிகளின் தரத்தை உணரும்போது நமக்கு விளங்கும். ஐரானிக் ஆட்டிட்யூட் இலக்கிய மதிப்பு ஒருவகையில் ரிலேட்டிவ் ஆகத்தான் இருக்க முடியும். அவர் கதைகளில் காணும் ஒரு அதிசய பிரமிப்பு முழுதும் பூர்த்தியாக செயல்பட முடியாதவாறு அனுபவமாவதில், இன்னும் சிறிது காலம் இருந்து அவர் ‘போஸ்’ என இந்த ஆட்டிட்யூட் மாறி வேறுவிதமான இலக்கியம் படைத்திருப்பாரோ எனவும் நினைக்க வேண்டியிருக்கிறது. சமய சந்தர்ப்பம் சூழ்நிலை இவைகளின் நிமித்தம் உண்டாகி ஒரு ‘போஸ்’ எனத் தோன்றியது. விடாது பிடிக்கும் நிலைமை அடைந்து அதை விட்டு விலக முடியாது. மேலும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இந்த நோக்கிற்குச் செயல்படுகிறது என்றும் சொல்லலாம்.

தாங்கள் நீண்ட காலமாக எழுதாமலிருக்கிறீர்களே ஏன்? புதுமைப்பித்தன் தங்களைத் திருமூலரோடு ஒப்பிட்டிருக்கிறார். இனிமேல் திருமந்திரம் ஒன்றாவது கிடைக்குமா?



ஏதோ ஒரு சமயம் எழுதியவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலில் என்னை இந்தக் கேள்வி கேட்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். அப்போது நான் எப்படி எழுதினேன் என்பதே இப்போது எனக்குப் புரியவில்லை. எனக்கு நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உண்டு. எப்படி எழுதுவது என்பது வர வர வெகு கடினமாகவே தோன்றுவதை உணருகிறேன்… இவ்வகையில் கடினமெனத் தோன்ற தமிழ்மொழி வெகுவாக என்னைப் பொறுத்தவரையில் தொண்டாற்றிக் கொண்டு வருகிறது. என்னைத் திருமூலருடன் ஒப்பிட்டது எதற்கென என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வாக்கியத்திற்குப் பிறகு அவர் சொன்னதிலிருந்து ஒருவகை அனுமானம் கொள்ளவும் என்னால் முடியாமல் இருக்கிறது. நான் திருமந்திரம் படித்ததில்லை… புதுமைப்பித்தன் உயிரோடிருந்தால் அவரை நான் பதிலளிக்கக் கேட்டிருப்பேன்.

தற்காலத் தமிழிலக்கியம் பற்றித் தங்கள் கருத்துக்கள் யாவை?

நான் எழுதுவதை சந்தர்ப்பம் நிர்பந்தத்தினாலல்லாது பிறருக்கு தெரியப்படுத்துவது இல்லை. ஒருவகையில் நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன் என வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வகையில் ஆதி நாட்களிலிருந்து என்னை எழுத்தாளனாகத் தெரிந்தவர்கள், எழுத்தாளர்களிலேயே சிலர்தான் இருக்கிறார்கள். அதாவது ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா. சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி.சு.ம, ஆகியவர்கள்தாம். இப்போது சமீபகால இலக்கிய உலக நடப்புகளைச் சில சமீப கால நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டதில் என் அனுமான அபிப்பிராயமெனச் (தற்கால தமிழ் இலக்கியத்தில் சிறிதுதான் பரிச்சியம்) சொல்ல, சமய சந்தர்ப்ப சூழ்நிலை சரியாகப்படவில்லை என்ற லெளகீக காரணத்தை முன்னிட்டு, முடியவில்லை என்பதற்கு மன்னிக்கவும்…

சிறுகதை இலக்கியப் படைப்பில் தங்கள் நோக்கில் தொழில் நுணுக்கங்களாக எவற்றை கூறுகிறீர்கள்?

எந்த அம்சம் தொழில் நுணுக்கமென, நான் என் சிறுகதைப் படைப்பில் கையாண்டேன் என்பது சொல்லும் வகைக்குத் தெளிவாக உணர்வு கொள்ளவில்லை. ஆனால், ஒன்று சொல்லலாம் என நினைக்கிறேன். எதைச் சொல்கிறோம் என்பது, எப்படி சொல்லுவது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றைவிட்டால் இரண்டும்கெட்டு ஒன்றுமே இலக்கியமெனத் தோன்ற உண்டாகாது.

தங்களின் இலக்கியப் பார்வை அல்லது தத்துவத்தைக் கூறுவீர்களா?

இலக்கியம் என்பதற்குப் பதில் கலை என்பதாகக் கொண்டு சிறிது கூறுவது ஒருவகையில் சுலபமாகத் தோன்றுகிறது. இது ஒரு வகையில் உங்களுக்கு ஆச்சர்யமாகப் படலாம். இலக்கியம் என்பது கலையின் ஒரு பிரிவு என்பதில்… ஆனால், இலக்கியம் என்பது வார்த்தைகள் மூலம் செயல்படுவதன் காரணமாக வார்த்தைகள் என்பது அதன் அருத்தத்தின் குறியீடு என்பதினாலும்… மொழி என்பது இலக்கியத் தத்துவத்திற்கு, என்ன உறவுடையது என்பது மிகவும் சிரமம் கொடுக்கக் கூடியது. சில காலம் முன்பு நான் கலை இலக்கியம் என்பதைப் பற்றி நன்கு உணர்ந்தவன் என்று இறுமாப்புக் கொண்டிருந்தேன். தற்காலத்தில் சில விமரிசனத் தோரணைகளும், தமிழ் மொழியில் விரிவும் நன்கு உணர ஏற்பட்டதிலும் மேலும் சமீபமாக சில ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க நேர்ந்ததாலும் இந்த எண்ணம் எவ்வளவு அறிவீனம் என்ற நினைவு ஏற்படலாயிற்று. நான் கண்ட கலைத் தத்துவம் இலக்கிய தத்துவத்துக்கு வேறு முரணாகத் தோன்றியதால் அல்ல வெளியீடு பற்றிய சிரமம், ஆங்கில மொழி விரிவையும் நம் மொழியின் குறைவையும் நான் வெகுவாக வருத்தத்துடன் காண நேர்ந்தது.

அதாவது ‘தான்’ தன்னை மங்கலாக உணர்கிறது. அது உண்மையும் அழகும் நிறைந்ததாயும் உணர்கிறது. அந்த நிறைவைத் தன் முன்னாலேயே ஒரு புறநிலைப் பொருளாக, தனக்கு எதிரான மற்றொரு ‘தான்’ ஆக இல்லாமல், பிரக்ஞை இல்லாமலே உருவாக்கிக் கொள்ளுகிறது. இப்படியாக, இந்த தான் மங்கலாக வெளிப்பட்டதை உண்மையென உணர்ந்து கொண்டே செல்லுகிறது. இந்த நிலையில் கலை, தத்துவம், சமயம் எல்லாமே ஒன்றாக இருக்கின்றன.

இலக்கியப் படைப்பில் படைப்பாளியும், இரசிகனும் ஒருவகையில் ஒன்றெனப்படுவார்கள். படைப்பாளி யாருக்காகவும் படைப்பதில்லை. இரசிகனும் பிறர் படைத்ததென உணர்ந்து படித்து இரசிப்பதில்லை… இலக்கியப் பொருள் என்றோ அழகிய பொருள் என்றோ ஒன்று இருப்பதாக எண்ணி அதைப்பற்றிச் சுற்றி வளைத்து எழுதுவது இலக்கியமாகாது… பிரத்திய அநுபவம் ஒரு நிலை ஒரு பார்வையில் கொள்வதில், அதில் ஒன்றியும், தன் மனம் புலன்கள் இரசித்து உணர்ச்சி வசப்படாது ஒரு நோக்கு காட்சியெனக் காட்டுவதுதான் உயர்ந்த இலக்கியத் தத்துவமெனப் படுகிறது.

‘தீபம்’ பற்றி தங்கள் கருத்தென்ன?

இலக்கியத் தரமான பத்திரிகை நீண்டகாலம் வாழ்ந்தது இல்லை. நீடித்து வாழ்வதெல்லாம் இலக்கியத் தரமாக இருப்பதில்லை என்று தோன்றி உருவாகிய ஒரு போலி நியதியைத் ‘தீபம்’ பொய்யாக்கும் என நம்புகிறேன்



Sunday, May 29, 2016

விசாலம் - வண்ணதாசன்

விசாலம் -  வண்ணதாசன்

சாலாவுக்கு இவ்வளவு தூரத்துக்கு உடம்புக்குச் சரியில்லை என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ரொம்பவும் தற்செயலாகவும் யதேச்சையாகவும்தான் ஊருக்குப் போகிற வழியில் அவன் இங்கே வந்திருந்தான்-தன் மூத்த பையனுடன் தாண்டிப் போக முடியாதபடி இந்த வீட்டில் அவனுக்கு நிறைய இருக்கிறது. இன்னதுதான் என்று சொல்ல முடியாது என்றாலும் அது அப்படித்தான் அவனுக்குத் தோன்றியது. ராஜா மாமா வீட்டை ஒத்திக்கு வைக்கப் போகிறார்கள் என்று அவனுடைய அம்மா அவனிடம் சொன்னபோது ஏற்பட்ட வருத்தம் இன்னும் தீரவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மத்தியானம் தான் இதை அவன் கேள்விப்பட்டான். அப்பாவிடம் டவுனுக்குப் போயிருந்த போது, உரக்கடையில் வைத்து யாரோ சொன்னார்களாம். அம்மா அழுது கொண்டே சொன்னாள். அம்மாவுடன் பிறந்தவர்கள் இன்னும் மூன்று பேர் உண்டு. ஆனாலும் கூட அண்ணன் தம்பிகளில் நொடித்துப் போன ராஜா மாமாவையே அம்மாவுக்குப் பிடித்திருந்தது. சாலாவை இவனுக்குக் கட்டிவைக்க முடியாமல் போனதிலிருந்து அவள் தன் அண்ணன் வீட்டிற்குப் போகாமல் இருந்து விட்ட போதிலும், அம்மா ராஜா மாமா ஞாபகமாகவும் அந்த வீட்டு ஞாபகமாகவுமே இருந்திருப்பது நிச்சயமாயிற்று, அவள் அழுகையில். அந்த வீடு ஒத்தியைத் திருப்பாமல் முழுகிப் போய் மாமா இப்போதிருக்கிற வாடகை வீட்டுக்கு வந்த பிறகும் இவன் மாத்திரம் மறுபடி மறுபடி வந்து போய்க் கொண்டுதானிருக்கிறான்.

இந்த வீட்டிற்குள் மாமா எப்படிப் புழங்க முடிகிறது என்று தெரியவில்லை. மங்களா வீட்டு வாசலில் வைத்து ராஜா மாமா வளர்த்த புனுகுப் பூனையும் கூண்டும் எல்லாம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. அந்த புனுக்குப் பூனையை யாருக்கும் கொடுக்க மனமின்றி மாமா கொன்று தாழை மூட்டுக்குள் ஆற்றங்கரையில் புதைத்து விட்டதாகவே அம்மா சொல்கிறாள். ஆனால் ராஜா மாமாவிடம் கேட்டால், கங்காணித் தேவர் வருவாரில்ல, அவர் கேட்டாரு, தூக்கிக் கொடுத்துட்டேன்' என்றே சொன்னார். மாமா பேசுகிற தோரணையிலும் சிரிப்பிலும் எதையும் சந்தேகிக்க முடியாது. எதுவும் நிஜமென்றே ஒப்புக்கொள்ளத் தோன்றும். 'சாலாச்சிக்கு இஷ்டமிருந்தாக் கட்டிக்கிடுதா: நானா குறுக்கே நிற்கப் போறேன்' என்று ராஜா மாமா சொன்னார். ஆனால் சாலாவுக்கு இஷ்டமிருந்தும், ராஜா மாமாவுக்குத்தான் கிராமத்தில் விவசாயம் பார்க்கிற தனக்குக் கட்டிவைக்க இஷ்டமில்லை என்று அம்மா சொன்னபோதுகூட, அவனுக்கு அம்மாவை நம்ப முடியாமலேதான் இருந்திருந்தது. ராஜா மாமா அப்படிப்பட்ட வரில்லை, தங்கமானவர். சாலாவுக்குத்தான் தன்னைப் பிடிக்கவில்லை!" என்பதுதான் சரியாக இருக்குமென்று பட்டது. ஆனாலும் எப்படி மறக்க முடியும் சாலாவை?

அப்புறம் ராஜா மாமாவேதான் அவனுக்குச் செல்லம்மாவைப் பார்த்துக் கட்டி வைத்தார். எட்டு வருஷத்துக்குள் இரண்டு பையனும் ஒரு பெண்ணுமாகி இப்போதும் பிரசவத்தை முன்னிட்டே தாய்விடு போயிருக்கிறாள். இங்கே வந்திருப்பது கூடஅவளைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புகிற வழிதான். பையில் பனங்கிழங்குக் கட்டும் பிரண்டைக் கொடியும் வைத்து அனுப்பியிருப்பது கூடச் செல்லம்மாதான். அவளுக்கு இவன் கண்டிப்பாக ராஜா மாமா வீடு போகாமல் ஊருக்குக் கார் ஏற மாட்டான் என்று தெரியும். இதையெல்லாம் யாரும் யாருக்கும் சொல்ல அவசியமின்றியே செல்லம்மாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டதுதான் ஆச்சரியம். சாலாவின் அழகு பற்றியும், சாலாவிடம் ஒரு மாறாத பிரியம் தன் கணவனுக்கு உண்டு என்பதும், எத்தனை வருஷம் வாழ்ந்து, எத்தனை குழந்தைகள் பிறந்து, மாறிமாறி வயலில் எத்தனை பூ நெல் விளைந்தாலும் சரி இவன் சாலா ஞாபகமாகவே இருப்பான் என்பதுவும், எல்லாம் அவளுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தன. சாலாவின் சடங்கு வீட்டில் எடுத்த பழைய புகைப்படத்தைத் தொட்டில் ஆட்டும் போதெல்லாம் பார்த்துப் பார்த்து அவளும் எத்தனையோ தடவை அவனுடன் சாலாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகாததற்காக வருத்தப்பட்டிருக்கிறாள்.

சாலா இவளை விடவும் மூப்பு. ராஜா மாமா முதலில் ரொம்பவும் கம்பிக்கையுடன் உயர்ந்த இடத்து மாப்பிள்ளைகளாக மட்டும். பார்த்துக் கொண்டு இருந்ததெல்லாம் ஒரு இரண்டு வருஷத்துடன் முடிந்து போயிற்று. இவ்வளவு லட்சணம் இவ்வளவு அமரிக்கை பொருந்திய சாலாவை ஏதோ ஒரு காரணத்துக்காக எல்லோரும் நிராகரித்தபோது ராஜாமாமா ரொம்பக்குறுகிப் போய்விட்டார்.தான் புனலூர், செங்கோட்டை, கொல்லம் என்று அலைந்தது எல்லாம் சாலாவின் தலையில் ரொம்பவும் பிந்தி விடிகிறதுபோல் ராஜா மாமாவுக்குப் பட்டது. தன்னுடன் நேருக்கு நேர் யாரும் சண்டை போடாமல் எல்லாப் பத்துக்களும் சாலாவுடன் மறைமுகமாகச் சண்டை போடுவதை உணர்ந்ததும் ராஜா மாமா ரொம்ப அடங்கிப் போய் விட்டார். அப்படி அடங்கின முகத்துடன், குறைந்த அளவு பேச்சுடன், வீட்டுக்குள் நடமாடும்போது சீட்டிஅடிக்காமல், மருந்துக் கடை சாயபுவுடன் வெளியே போகாமல் இருக்க ஆரம்பித்ததுமே எல்லாம் செங்கலை உருவினது போல ஆகிவிட்டது. வீட்டை ஒத்திக்கு வைத்து, ரிஜிஸ்தர் பண்ணினது. இந்த வீட்டுக்கு வந்தது எல்லாம் இப்போதைக்குள்தான். இடையில் மில்லில் வேலை பார்க்கிற ஒரு பையனுக்கு பள்ளிக்கூட வாத்தியார் ஒருத்தருக்கு எல்லாம் சாலாவைப் பேசி முடிக்கப்போவதாகச்சொன்னார்கள். ஒரு தடவை ராஜா மாமாவைக் கோயில் வாசல் மண்டபத்து நிழலில் வைத்துப் பார்த்தபோதுகூட, 'ஸ்கூல் வாத்தியாருக்குச்சம்பளம் என்ன வரும்? ஒரு டியூஷன் கியூஷன் எடுத்தால் இவள் அதிஷ்டத்துக்கு எல்லாம் நல்லபடியாக நடக்காதா'என்று பேசிக் கொண்டிருந்தார். ராஜா மாமா இவனிடம் சாலாவின் கல்யாணத்தைப்பற்றிப் பேசியது இரண்டுபேருக்குமே சந்தோஷம் உண்டாக்கியதுபோல இருவருமே ரொம்பவும் நெகிழ்ச்சியாக விடை பெற்றுக் கொண்டார்கள். 'கல்யாணம் பேசி முடிவாச்சுதுன்னா எல்லாருமா வாங்க வீட்டுக்கு, ராஜா மாமா அம்மாவை உத்தேசித்துச் சொன்னபடி கையை ஆட்டிக் கொண்டு கோவில் வாசலிலே நின்றது ஞாபகமிருக்கிறது. பின்பு அந்தப் பையன் இன்னும் ஒரு பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல் வாத்திச்சியையே கல்யாணம் பண்ணிக் கொண்டது தெரிந்தது. 


சாலாவின் கல்யாண விஷயத்தில் ஏற்பட்ட இந்தத் தோல்வியைத் தான் மாமாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதைத் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டுதான் சாலாவின் அண்ணனுக்குக் கல்யாணம் நடந்தது. இந்தச்சின்ன வாடகை வீட்டுக்குள் குடித்தனம் நடத்த முடியாமல் ஒருத்தருக்கொருத்தர் பிடிக்காமல் போய்ச் சச்சரவுகள் வலுத்துத் தனியாக அவர்கள் இன்னொரு வீடு போய் ஒரு குழந்தையும் பிறந்த பிறகு மறுபடியும் அந்தச் சின்ன வீட்டிற்கே எல்லோருமாகக் குடியிருக்க வந்த பிறகு கொஞ்ச நாட்களுக்கு எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டு வந்தது.


இடையில் கமிஷன் கடைவரை ஒரு தடவை வந்திருக்கும்போது வீட்டை எட்டிப் பார்க்கையில் சாலா தன் அண்ணன் மகனுக்குப் பவுடர், பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டு பட்டாசலில் உட்கார்ந்திருந்தாள். இவனைப் பார்த்ததும் சட்டென்று உள்ளே எழுந்து போனாள். போவதற்கு முன் இவனைப் பார்த்த மாதிரியும் இருந்தது. அவள் விட்டுப் போன குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு அவன் ராஜா மாமாவுடன் சத்தமாகவே பேசினான். ராஜா மாமா ஈசிச்சேரில் சாக்கைத் தைத்துப் போட்டுக் கொண்டு படுத்திருப்பதையெல்லாம் தாங்கமுடியவில்லை. ராஜா மாமா இதற்கெல்லாம் கூச்சப்படக்கூட இல்லை. பழசைஎல்லாம் முழுதாக மறந்து விட்டு இப்படிப் பட்டாசலில் உட்கார்ந்திருக்கிறது சாதாரண காரியமில்லை. அவருடன் பேசுகிற பொழுது எல்லாம் சாலா ஊடு சுவருக்கு அந்தப்புறம் இதைக் கேட்டுக் கொண்டு நிற்பாள் என்ற உணர்வு அவனுக்கு அதிகம் இருந்தது. அவள் இப்படிக் காய்ச்சலில் படுப்பாள் என்று அப்போது தோன்றவேயில்லை. ராஜா மாமாவீட்டு அத்தைதான் கொஞ்சம் நாளா ரம்பமாவே மெலிந்து விட்டாள். அத்தையைப் பார்க்கிற போதுதான் இந்தக் குடும்பத்தின் கஷ்டம் முகம் காட்டும். இலையெல்லாம் உதிர்ந்த மாதிரி அத்தைதான் நின்றாள். அவள் திடீர்திடீரென்று ராஜாமாமாவை வாய்க்கு வந்தபடி திட்டுகிறதாகவும், "என்னைக் கெடுத்தது மில்லாமல் பாவி எம் புள்ளையையும்ல உக்காத்தி வச்சுட்டான் படுபாவி என்று மேற்கொண்டு சொல்லக் கூடாதது எல்லாம் சொல்லிச் சத்தம் போடுகிறதாகவும், அவளுக்குச் சீக்கிரம் புத்திக்குச் சரியில்லாமல் போய்விடலாம் என்றும் எல்லாம் சொன்னார்கள். அது நிஜமாக இருக்குமென்று.அத்தையின்முகத்தில் உடம்பின் மெலிவில் எல்லாம் போன தடவை வந்திருக்கும்போதே தெரிந்தது.

இந்த தடவை பையனுடன் நடையேறும்போது உள் கட்டில்தான் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். ராஜா மாமாதான் இவனைப் பார்த்ததும் பக்கத்தில் கிடந்த துண்டை அள்ளி மேலே போட்டுக் கொண்டு எழுந்து வந்தார். ராஜாமாமா சொன்னது எல்லாவற்றையும் கேட்க முடியவில்லை. சாலாபத்துப் பன்னிரண்டு நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள். காய்ச்சல் மண்டையிடி என்று ஒன்றுமில்லை. அன்ன ஆகாரம் இறக்கமற்றுப் போச்சு. கைகால் எல்லாம் ஈர்க்குக் குச்சியாக மெலிஞ்சிட்டுது. எல்லாரையும் அடையாளம் தெரியுது. எல்லார்கிட்டேயும் தொண்டைக் குழிக்குள்ளே இருந்து பேசுறாள். டாக்டர் மருந்து மாத்திரைக் கெல்லாம் ஒரு பிரயோஜனமில்லை.துக்க ஒரு ஆளு, கிடத்த ஒரு ஆளு வேண்டியிருக்கு. எல்லாம் நான் பண்ணினது, நான் பண்ணினது',ராஜா மாமா பக்கத்தில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு கரகரவென்று அழுதார். அவரிடமிருந்து கையைத் திருகிப் பிடுங்கி அவர் கைகளைத்தன்கைகளுக்குள் பிடித்துக்கொண்டு உள்கட்டுக்குள் பார்த்தான். பையன்.அவனோடு ஒட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான். சாலா தெரியாமல், அவளைச் சுற்றியிருப்பவர்கள் மட்டும் தெரிய அவனுக்குள் கனம் இறங்கி நகர்ந்து அழுத்தியது.

சாலா கைகளை நெஞ்சின் மேல் வைத்துக் கால் இரண்டையும் நேராக நீட்டிப் படுத்திருந்தாள். அவளாகக் கால் கைகளை மடக்கி நீட்டுகிற தன்மை அதில் தெரியவில்லை. யாராவது அப்படிச் செய்து அவளைப் போர்த்தியும் இருக்க வேண்டும். தூங்குகிறாளா நோயின் குணமா என்பது தெரியவில்லை. கண்கள் மூடியிருந்தன. மணிக்கட்டு எலும்பு நெஞ்சின் மீது கிடந்த கைகளில் துருத்தியிருந்தது. ஒரே ஒரு பழைய தங்க வளையல் ஒரமெல்லாம் தேய்ந்து இரண்டு பக்கமும் கருப்பு வளையல் முன்னும் பின்னுமாகக் கிடந்தது. துணை ஒட்டி அத்தை உட்கார்த்திருந்தாள். அங்கணக் குழிப் பக்கத்து ஜன்னலில் மருந்து சீசாவெல்லாம் இருந்தது. தொட்டிலில் தூங்குகிற வயதுக்கு மேல் ஆகியும் சாலாவுடைய அண்ணன் குழந்தை தொட்டிலில் துங்கிக்கொண்டிருந்தான். வீட்டின் மொத்தத்திலும் ஒரு நிச்சயமற்ற இருட்டு இருந்தது. ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளாமல் சாலா மறுபடி கண்களைத் திறந்து கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சாலா இப்படி இடை இடையே ரொம்ப நேரம் அசந்து கண்ணை மூடிக் கொள்கிறாள். முழிக்கிறபோது தொடர்ந்து பேசுகிறாள். இரண்டு நாளைக்கு முன்னால் தலைசீவி விடச்சொன்னாள். தோளில் சாய்ந்து கொண்டு அவளே ரிப்பன் வைத்துப் பின்னிக் கொள்வாள். முகத்தில் ஒரு தெளிச்சை வந்து விட்டது. அந்தத் தெளிச்சை வரக்கூடாது. சீக்காளிகளுக்குத் திடீரென்று தெளிவு கூடுவது நல்லதுக்கில்லை. ஆகாது, அத்தை இவற்றையெல்லாம் சொன்னதில் வித்தியாசமிருந்தது. அத்தை அழகாயிருப்பாளே தவிர அதிகம் வெடிதுடியாக இருந்ததில்லை. நறுக்கென்று பேசியதில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல நடக்கத் தெரிந்தவளாக இதுவரை தோன்றியதில்லை. ராஜா மாமா வீட்டைவிட்டு ஊர் ஊராக அலைந்ததற்கு இதுவும் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த அத்தைக்கு இப்போது ஒரு மாறுதல் வந்திருக்கிறது. சாலாவின் பக்கத்தில் இருந்து இருந்து சாலாவின் தீட்சண்யம் எல்லாம் அத்தைக்கும் வந்துவிட்டது போல் இருக்கிறது. ராஜாமாமாவுக்கு இது தெரியாமல் இருக்காது. தெரியப் போய்த்தான் அத்தை திடீர் திடீரென்று சத்தம் போடுவதாகச் சொல்கிறதையெல்லாம் சகித்துக் கொண்டு இருக்க முடிகிறது. ராஜா மாமா மாதிரி யாராலும் வெளியே சொல்லாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. சாலாவுக்குக்கூட இந்தக் குணம் இருந்திருக்கிறது. அதுதான் இப்படி ஆளை ஒரேயடியாக உருக்கிப் படுக்கையில் போட்டிருக்கிறது.

எல்லோரும் இப்படி உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்து அவனுடைய மகன் ஒருவிதப் பயத்தினால் அழ ஆரம்பித்தான். அந்த அழுகை எல்லோர்க்குள்ளும் இருந்து இப்படியொரு பயத்தை முரட்டுத்தனமாகக் கவ்வி வெளியே இழுப்பது போல முரண்டு பிடித்தது. ராஜாமாமாசமாதானப்படுத்தியும் அழுகை நிற்கவில்லை. சாலாவுக்குக் பக்கத்தில் தாள் பொட்டணத்தில் இருந்த அறுப்பு ரொட்டியை எடுத்து அத்தை நீட்டினாள். முன்னால்அத்தைக்கு இதைச் செய்யத் தெரியாது. பையன் அதை வாங்கிக் கொள்ளாமல் 'அம்மாகிட்டப் போகணும்' என்று மறுபடி அழுதான். அழுகைச் சப்தம் எந்த வழியாக வெளியே போவது என்பது தெரியாமல் தடுமாறுவது போல் வீட்டுக்குள்ளேயே பெரிதாகச் சுற்றிச்சுற்றி வந்தது. அவனுக்குப் பையனைக் கூப்பிடத் தோன்றவில்லை. பையன் அந்த இடத்திலேயே இல்லாததாக மறந்து எல்லோரும் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாலாவின் முகத்தில் மட்டும் அவனுடைய பார்வையிருந்தது.

பையனின் அழுகை அதிகபட்சமான ஒரு சப்தத்துக்குப் போய்த் தானாகக் கொஞ்ச நேரத்தில் நின்றபொழுது, சாலாவின் முழு உடம்பும் போர்வைக்குள் லேசாக நடுங்கியது.
1978 
அஃக்

Saturday, May 28, 2016

சிதைவுகள் - அஸ்வகோஷ் (ராஜேந்திரசோழன்)

தற்செயல் சிறுகதை தொகுப்பிலிருந்து

www.padippakam.com

சிதைவுகள் - அஸ்வகோஷ்(ராஜேந்திரசோழன்)

வாழ்க்கையை கற்பனை மயமான புஸ்தங்களில் மாத்திரமே படித்து பிரேமைகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப்பற்றிச் சொல்கிறேன். இப்போது நினைத்தாலும் அது எவ்வளவு விடலைத்தனமாது என்று தான் தோன்றுகிறது என்றாலும் ஆப்பது இது அநுபவம் நேர்ந்தது என்பதை என்னால் சொல்லாமலிருக்க முடிய வில்லை.

நான் பி.யூ.சி. பெயிலாகி விட்டோடிருந்தது. படித்துக் கொண்டிருந்த சமயம் அது. எனக்கு எதிர் விட்டுக்காரியாயிருந்தாள் அவள். நல்ல அழகு. பார்க்கும் போதே இன்னொரு தடலை பார்க்கத்துரண்டும். பார்த்துக் கொண்டே இருக்கலாமா என்று தோன்றும்.

அவளைப் பார்க்கும் போது மனசு என்னிடத்தில் இருக்காது. எங்கோ மிதக்கிற மாதிரி இருக்கும். எப்போதோ ஒரு காலத்தில் நான் அவளோடு மிக நெருங்கிய செளஜன்யம் வைத்திருந்தது மாதிரி. அதற்குக் காரணம் எனக்குத் தெரியாது. எந்தக் காலத்திலும் அவள் எனக்கு பழக்கமானவளல்ல என்பது என்புத்திக்குத் தெளிவாகவே தெரிந்தாலும் அவள் எனக்கு அந்நிய மானவள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 27

இத்தனைக்கும் அவள் கல்யாணமானவள். புருஷன் உள்ளூர்ப் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் வேலை செய்கிறான்.

என் வீட்டுக்கு நேரே தெரு. தெருவைத் தாண்டினால் அவளுடைய வீடு. முழங்கால் உயரச் கற்றுச்சுவர்களுக் கிடையே முற்றம். முற்றத்துக்கு அப்பால் கதவு. முற்றத்திலே அவள். சாயங்கால நேரத்தில் புருஷனின் வரவுக்காக காத்துக் கொண்டு நிற்பாள்.

மழுங்க வாரி படிய விட்ட தலை. எண்ணெய்ப்பூச்சு கறுகறுவென்று பளபளக்கும். காதோரங்களில் சிலுப்பி வளைந்திருக்கும் கறுப்பு மயிர். சிவந்த கன்னம், சின்ன மூக்கு. கண்கள் எப்படியிருக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. சாதாரணமாய் இருக்கும். எதையும் புரிந்து கொள்ள முடியாது.

முன்பக்கம் சார்ப்பு இறக்கிய மரத்துரணில்சாய்ந்து பின்வாகாக கைகளைத் துர்க்கி தூணைக் கட்டிக்கொண்டு நிற்பாள். அக்குளின் ஈரமும் இளமையின் செழுமையும் தெரியும். பக்கவாட்டில் இடுப்பு பளபளக்கும் முழங்கைக்கு மேலே சிவந்த தளதளப்பான சதைகளை ரவிக்கைப் பட்டை இறுக்கிப் பிடித்திருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்தபடி புஸ்தகம் படிக்கிற சாக்கில் அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். என் பக்கம் அதிகமாய்த் திரும்ப மாட்டாள். திரும்பினாலும் எனக்காகத் திரும்பின மாதிரியிருக்காது. அகஸ்மாத்தானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதனாலெல்லாம் எனக்கு சலிப்பு ஏற்படவில்லை. அவள் பார்க்கா விட் உால் பரவாயில்லை. அவள் அங்கேயே நின்று கொண்டிருக்க வேண்டும். நான் பார்த்துக் கொண்டே யிருக்க வேண்டும். -

வீட்டில் அவளும் அவள் புருஷனும் மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த வீட்டுக்கு அவர்கள் வந்து கிட்டத்

படிப்பகம்

________________

www.padippakam.com

28 அஸ்வகோஷ்

தட்ட ஒரு வருஷம் ஆகிறது. இந்த ஒரு வருஷத்தில் விருந்தாளிகள் யாரும் வந்ததாகவோ போனதாகவோ நான்பார்த்தது இல்லை. அவர்கள் ரெண்டே பேர்கள் தான் எல்லாம்.

காலையில் அவன் ஆபீஸுக்குப் போய்விடுகிறான். மத்தியானம் வந்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் போய் விடுகிறான். அவள் மட்டுமே தனியாகக் கிடக்கிறாள். பாவம் பேச்சுத் துணைக்குக்கூட யாரும் கிடையாது. யார் கூடவும் பேசவும் மாட்டாள் போலிருக்கிறது.

அவளைப் பார்க்கும் போது மனசு ரொம்ப இளகி விடுகிறது. அவள் மீது எனக்கு எந்த விதமான பிரியம் என்றோ எந்த அளவுக்கு நான் அவளை விரும்பினேன் என்றோ, அப்போது எதுவும் _ எனக்குத் தெரியாது. அவளோடு பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்! அன்பாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. அவள் ஏதாவது பிரியப்பட்டுக் கேட்டு அதையெல்லாம் நான் வாங்கிக் கொண்டுவந்து கொடுக்கவேண்டும் போல் இருக்கிறது.

சிலசமயம் இதெல்லாம் பயித்தியக்காரத்தனம் மாதிரித் தோன்றும். ஆனால் அது கொஞ்ச நேரம் தான். பொழுது போகப் போக அப்படித் தோன்றிய தெல்லாம் அர்த்த மற்றதாகி விடும். அவளையே பார்த்து உருகிக்கொண் டிருப்பேன். எப்போதாவது நண்பர்களோடு எங்காவது வெளியூர்போய் விட நேர்ந்தால் கூட சாயங்காலமானால் மனசு வதையும். அவளைத் தனியே தவிக்கவிட்டு வந்து விட்ட மாதிரி கிடந்து வாடும். சீக்கிரமே விடு வந்து சேர்ந்து விட வேண்டும் போல் இருக்கும். வந்தால்தான் நிம்மதி:

சாயங்கால நேரங்களில் மட்டும்தான் அவளை இப்படிப் பார்க்கமுடியும். பகல் நேரங்களில் அவனை

படிப்பகம் -

________________

www.padippakam.com

தற்செயல் 29

வெளியே பார்ப்பதே அபூர்வம். எப்போதாவது வந்தாளானாலும் இந்த மாதிரி நிற்க மாட்டாள்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தியிருள் பரவும். தெருவும் வீடும் லேசாய் மங்கும். பூவரச மரத்தில் இருள்?உறையும். நடுநடுவே வெள்ளை வானம் திட்டுத் தெரியும். அவள் தோற்றம் நிழல் உருவாய்க் கலங்கும். முகமும் முழங்கைகளும் மறைந்துவிடும். புடவை வெளுப்பும், ரவிக்கை வெளுப்பும் கம்மலாய்த் தெரியும். இன்னமும் அவள் அங்கேயே நிற்கிறாள் என்பதற்கு அது தான் அடையாளம்.

நான் திண்ணையை விட்டு அசையவே மாட்டேன். மனம் வராது. ஒளிமங்கிய மோகனகரமான பிஞ்சு இருளில் தேவ கன்னிகை மாதிரி அவள் நின்றுகொண்டிருக்கிறாள். நேரே எழுந்து கிட்டேபோக வேண்டும். பக்கத்தில் நிற்க வேண்டும். நெருங்கி இறுக்காமல் விலகியே வாயில் சேலையை மட்டும் வருடி அதன் ஸ்பரிசத்தை சுகிக்க வேண்டும். மேலே இதமாய் அவளைத்தாங்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் மனசு கிளுகிளுக்கும்.

அவன் வருவான்.

கொரட்டுப் படியேறிப் போவான்.

அவள் என்னமோ கேட்பாள். எதுவும் தெளிவாய்க் காதில் விழாது. வெறும் குரல் மட்டும் தான் கேட்கும்.

இரண்டு பேரும் உள்ளே போய்விடுவார்கள். கதவு மூடப்படும்.

எனக்கு வேதனையாய் இருக்கும். பெருசாய் பெருமூச்சு வெளிப்படும். பேசாமல் எழுந்து எங்காவது வெளியே போய் உலாவி விட்டு வரலாமா என்று புறப்படுவேன். உலாவலிலும் மனம் லயிக்காது. வீட்டுக்கே திரும்பி விடுவேன்.

படிப்பகம்

________________

www.padippakam.com

30. அஸ்வகோஷ்

இரவு சாப்பாட்டுக்கு மேல் இருவரும் கொஞ்ச நேரம் வெளி முற்றத்தில் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். நிலாக் காலமானால் அது கூட கொஞ்ச நேரம். இல்லாவிட்டால் சீக்கிரமே உள்ளே போய் விடுவார்கள்.

எனக்கு ஏக்கம் பிடித்து விடும். மனசில் நிம்மதி இருக்காது. இத்தோடு மறுநாள் சாயங்காலம் தான் என்ற நினைவே நெஞ்சை அரிக்கும். இரவு வேண்டாததாய் கிடந்து நீளும். எப்போது விடியும் என்று இருக்கும்.

சில சமயம் சீ, என்னமாதிரிப் புத்தியிது. அசிங்கம்! இப்படியெல்லாம் தோணலாமா, தப்பு இல்லையா என்றும் தோன்றும். எல்லாம் ராத்திரியோடுதான். பொழுது விடிந்தால் மீண்டும் அவள் எதிர் வீடுதான்!

இப்போது கொஞ்ச நாளாய் முழுகாமல் இருக்கிறாள். ஏறக்குறைய மாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதல் பிரசவமாக இருக்கலாம். முன்னைவிட அழகாக இருந்தாள். கைகளும் கால்களும் கதனை கதனையாக அளவோடு பூரித்திருந்தன. முகத்தில் ஒரு அசாதாரணக் களை. கன்னம்-கழுத்து, இடுப்பு, வயிறு எல்லாமே பசபசப்புத் தட்டிப் போய் பச்சென்று பசுமையான புல்தரையைப் பார்ப்பது மாதிரியிருக்கிறது அப்படியே ஆசையாய் மேனி பூராவும் தடவிப் பார்க்க வேண்டும் போல் தூண்டுகிறது.

சாயங்காலத்தில் முன்னே மாதிரி அவள் நிற்பதில்லை. உட்கார்ந்து கொண்டு விடுகிறாள். தூக்க முடியாத பாரத்தைத் துக்கிச் சுமப்பது போல அவள் நடந்து வருவதும் உட்காருவதும் விசித்திரமாய், ஒரு வயிறு பெருத்த செரிமானம் ஆகாத குழந்தையை நினைவூட்டு கிறது.

பார்க்கப் பார்க்க கனிவு சுரக்கிறது.

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 31

தலைப் பிரசவமாயிற்றே! யாராவது வந்து அழைத்துப் போய் விடுவார்களோ! என்று பயமாகவும் இருக்கிறது.

ஆனால் யாரும் வரவில்லை,

பாவம்! சொந்த பந்தம் எதுவும் கிடையாதா? யாருமே வந்து பார்த்துப் போகவில்லையே. எப்படி கூடவே இருந்து பூச்சு பூச்சு என்று மேனி நலுங்காமல் பதுவிசாய் வைத்துக் காப்பாற்றவேண்டிய நேரம். இப்படி அநாதரவாய் விடப்பட்டுக் கிடக்கிறாளே. வீட்டில் எல்லா வேலைகளையும் அவளே தான் செய்கிறாள் போலிருக்கிறது லேசாய் அவளோடு பழக்கமிருந்தால் கூட, கூட மாட ஒத்தாசையாக அவளோடு சேர்ந்து வேலை செய்ய லாம். வெந்நீர் வைத்துக் கொடுக்கலாம்.

அவன் என்னத்தைக் கவனிக்கிறானோ! அவள் மட்டும் என் வீட்டிலிருப்பவளானால் அவளை எப்படி யெல்லாம் வைத்திருக்கலாம். தொட்டுக் குனிந்து ஒரு வேலை செய்யவிடாமல்.

மனம் கசிகிறது. அவள் குந்தியிருப்பதைக்கான யார் பெத்த பெண்ணோ” என்று அநாதையாய் தோன்று கிறது.

கிட்ட போய் பக்கத்தில் குந்தி ஆறுதல் சொல்ல வேண்டும். தொட்டு, தொட்டு, பட்டு மாதிரி அணைத்து. கைகால்களை அமுக்கிவிட்டு, வயிற்றைப் பிரியத்தோடே தடவி: கொஞ்சி, நெஞ்சை நீவிட்டு எந்த நேரமும் பக்கத் திலேயே கிடந்து அணைத்து நெருடிக் கொண்டு. ஏதோதோ தோன்றுகிறது.

எண்ணங்களால் கரைகிறேன்.

இருள் வருகிறது. இருண்டு இரவாகிறது.

வீட்டில் நான், அம்மா, ரெண்டாங்கிளாஸ் படிக்கிற ஒரு பாப்பா மட்டுமே, அம்மாவும் பாப்பாவும் உள்ளே

படிப்பகம்

________________

www.padippakam.com

32 அஸ்வகோஷ்

படுத்துக் கொள்ள்ார்கள். நான் மட்டும் காற்று வாட்டத் துக்காக வெளியே படுப்பது. திண்ணையில். நல்ல தூக்கம்: யாரோ எழுப்புகிற மாதிரி.

"gsr庁。.. 写7庁...""

"யாரவது" என்று எழுந்திருக்கிறேன்.

"நான் தான் சார் எதிர் வீடு தூக்கத்ல எழுப்பிட்டேன்னு ஒண்னும் நெனச்சிக்காதிங்க'

ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரித் தெரிகிறது.

'பரவாயில்லைங்க?? என்கிறேன்.

"கொஞ்சம் சைக்கிள் கொஞ்சம் வேணும் சார். மிட் ஒய்ஃப் ஊட்டு வரிக்கும் போய் வரணும். ஊட்ல மோசமாயிருக்குது:

தூக்கி வாரிப் போடுகிறது எனக்கு.

அவளுக்கு மோசமா?

“என்ப்டியிருக்குது" என்கிறேன். அதற்குள் துடித்துப் போய் விடுகிற மாதிரியிருக்கிறது.

"ஒண்னுமில்லிங்க பெயின் அதிகமா இருக்குதாம் ரொம்ப முடியாம இருக்கறா அதான் இட்டாந்துட லாம்னு’

திண்ணையில் இருள். அவன் உருவம் மங்கலாய்த் தெரிகிறது. ஊர் சுமாரானதுதான். கவர்ன்மெண்ட் ஆல்பத்திரி இருக்கிறது ஆனால் ஊரை விட்டு தள்ளி ஒரு முககால் மைலில். ஆஸ்பத்திரி, எல்லோருக்கும் குவார்ட்டர்ஸ் எல்லாம் அங்கேதான்.

"எப்படி போய் கூப்டுக்ணு வந்திடப் போறிங்களா?:

"ஆமா சார்:

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 33

"சரி. தோ இருங்க” கதவைத் தட்டுகிறேன்.

சைக்கிளை வழக்கமாய் பூட்டி வைப்பது. சாவி உள்ளே இருக்கிறது. அம்மாவை எழுப்புகிறேன். கதவைத் திறந்தாள் அம்மா. "என்னடா:

எதிர் வீட்டுக்காரர் இல்ல. அவுங்க சம்சாரம்"

"எப்படியிருக்குதாம்?"

அம்மாவிடம் பதில் சொல்லி சாவியைக் கொண்டு வந்து தருகிறேன். கிளிக் என்று பூட்டைத் திறந்து, ஸ்டாண்டைத் தள்ளி சைக்கிளைத் திருப்புகிறவன் 'சார்' என்கிறான்.

1 என்னங்க’

"ஒண்ணும் இதுவா நெனச்சிக்காதீங்க. ஊட்ல அவ தனியாக இருக்கறா. கொஞ்சம் பாத்துக்கோங்க. வர்ரவரிக்கும்.”

'ஜிவி ஜிவு’ என்று உடம்பெல்லாம் என்னவோ ஏறு கிறது. இந்த சந்தர்ப்பத்திலாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளப் போகிறோமே.

"அம்மா’’ என்கிறேன்.

அவன் சொன்னது அம்மாவுக்குப் புரிகிறது.

'இங்கதான் இர்ரா. பாப்பா தனியா கெடக்கறா. அலண்டு அழப்போறா. எப்படியிருக்குதுனு போய் பாாத் துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

தெருவில் மங்கிய நிலா வெளிச்சம். எதிர் வீடு மங்கி யிருக்கிறது. திறந்த சன்னல் வழியே வெளிச்சம் தெரி கிறது. விளக்கு வெளிச்சம் உள்ளே அவள் இருக்கிறாள். என்னமாய் இருக்கிறாளோ! ரெண்டு வீட்டையும் பார்த்த மாதிரி சும்மா தெருவிலேயே இருக்கிறேன்.

*- படிப்பகம்

________________

www.padippakam.com

34 அஸ்வகோஷ்

லேசாய் அவள் முனகுவதும் புரள்வதும் காதில் சலனப்படுத்துகிறது. அம்மா அவளோடு ஏதோ பேசு கிறாள். பதில் குரல் தீனமாய் கீச்சு கீச்சென்று ஒலிக்கிறது. போய் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

"சுகு' என்கிறாள் அம்மா. என்னைத்தான்.

"என்னம்மா வீட்டை நோக்கி நாலடி எடுத்து வைக் கிறேன்.

'அந்த வெத்தலஒலப் பெட்டிய எடுத்துக்ணு வா. தல மாட்டுல இருக்கும் பாரு..

அம்மாவால் வெறும் வாயோடு கொஞ்ச நேரம் குந்தி பேசிக் கொண்டிருக்க முடியாது.

ஒலைப்பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழை கிறேன்.

நடையிலே சுவற்றோரம் அவள் வெறும் கோரைப் பாயிலே படுத்துக் கிடக்கிறாள். முகம் வேதனையாலும் கலவரத்தாலும் பிசைந்தெடுத்தமாதிரி வலி ரொம்பத் தான் இருக்கும்போலிருக்கிறது._பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறாள்.

‘என்ன ஆகுமோ என்று பயம். "நல்ல படியாய் முடிய வேண்டுமே என்ற ஆர்வம். பக்கத்தில் குந்தி என்ன கண்ணு. எப்டிமா இருக்குது. எங்கம்மா வவிக்குது என்றெல்லாம் கேட்க வேண்டும் போலிருக்கிறது.

இரண்டு கையாலும் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நெளிகிறாள். நான் வந்தது தெரியுமோ தெரியாதோ

நானெல்லாம் அவளுக்கு ஆதரவாய் இருக்கிறேன் என்று தெரிந்தால் வலி குறையுமோ என்னவோ!

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 33

பேசாமல் நிற்கிறேன். தவிப்பு கொள்ளவில்லை.

‘ஏண்டா. ஊட்ல போய் இரு. ஏன் இங்க நிக்கிற?" என்கிறாள் அம்மா.

அவள் வலியினால் அவதிப் படுகிறாள். பக்கத்தில் இருந்து ஒத்தாசை செய்வதற்கில்லை. பேசாமல் வந்து விடுகிறேன்

பிரசவம் நல்ல படியாய் முடிந்து விட்டது. இன்னும் எழுந்து நடமாட ஆரம்பிக்கவில்லை அவள், இள்னும் பத்து நாட்களாவது ஆகுமாம். படுத்த படுக்கையாகத் தான் கிடக்கிறாள். அம்மா அடிக்கடி போய்ப் பார்த்துக் கொண்டு வருகிறாள்.

பிரசவித்த பலகீனம், ரொம்ப மோசமாகிப் போயிருக் கிறாள். பார்க்கவே என்னமோ மாதிரி யிருக்கிறது. கசங்கிய புடவையும் கலைந்த தலையும், நோய்ப் பிடித்தாற் போன்ற இளைத்த தேகமும் ஆளே உருமாறிப் போயிருக்கிறாள். முகத்தில் களையோ ஒளியோ இல்லை ஜீவனில்லாமல் இருக்கிறது.

எனக்குள் எதையோ இழந்துவிட்ட மாதிரி வெறுமை யுணர்ச்சி, ஏனென்று தெரியவில்லை. எப்போதாவது சில சமயம் அம்மா அவள் வீட்டில் குந்திக் கொண்டிருக்குக் போது மட்டும் போகிறேன். சாப்பாடு போட அம்மாவைக் கூப்பிடுகிறேன்.

அவள் படுக்கையிலோ அல்லது சுவர் ஒரம் சாய்ந்து உட்கார்ந்து கொண்டோ இருக்கிறாள். குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் உள்ளே நுழைவதாலோ, என்னைப் பார்ப்பதாலோ அவளிடம் எந்தவிதமான மாற்றமும் இருப்பதாகப் படவில்லை. குழந்தை வாயிலிருக்கும் மார்பை மட்டும் லேசாய் மூடிக் கொள்கிறாள். அதைத்தவிர வேறு எதுவுமே இல்லை. பரஸ்பரம் தெரிந்த முகங்களாய் சந்தித்துக் கொள்கிற

படிப்பகம்

________________

www.padippakam.com

36 அஸ்வகோஷ்

போது ஏற்படுகிற ஒரு மலர்ச்சிகூட இல்லை. சலனமில் லாமல் இருக்கிறது.

நினைக்க நினைக்க எல்லாம் சலிப்பாய் இருக்கிறது. எல்லாமே பறிபோய் விட்டது மாதிரித் தோன்றுகிறது. எனக்கென்று எதுவுமே இல்லை. எங்குபோய் விட்ட தென்று புரியவில்லை. வீட்டிலிருக்கப் பிடிக்காமல் வெளிய்ே போய் விடுகிறேன். எங்காவது போய்ச் சுற்றி விட்டு வருகிறேன். பழைய அவளை நினைத்துப் பார்க் கிறேன். எல்லாமே அர்த்தமற்ற அவளாய்த் தெரிகிறது. தளர்ந்து வீடு திரும்புகிறேன். அம்மா ஏதோ முனகுவது கேட்கிறது.

'இவ்வளோ இதுவா இருப்பான்னு நாங்கூட நெனைக் கல. ஒண்ணு கண்ணுல காட்ட மாட்டன்றாளே அந்த புள்ள கையில கூடப் பொறந்த தம்பியாயிருந்தா உடு வாளா பொண்ணு பெரிய வெண்தான். நாங்கூட என்னமோவாங்காட்டியும்னு நெனச்சேன். ஐயோ பாவம் மசமசன்னு கெடக்குதேன்னு. சும்மாவா சொன்னாங்க ஊம ஊரக் கெடுக்கும்னு'

"யாருமா” உள்ளே நுழைகிறேன்.

தோ அந்த எதுர் ஊட்டுப் பொண்ணு தாண்டா' அந்தப் பையன் பாவம். எவ்வளோ வேலை செய்யுது. அதுக்கு வயித்துக்கு போட்டா என்னடா, நறுக் நறுக்ணு தொடையப் புடிச்சுத் திருவிடறா. பாவம் புள்ள என்னமா துடிச்சிப்புடறான்'

எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவள் வீட்டில் கொஞ்ச நாளாய் ஒரு பையன். அவள் புருஷனுடைய தம்பியாம் ஏழெட்டு வயதிருக்கும். விடுமுறையில் அண்ணிக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று அழைத்து வந்திருப்பான் போலிருக்கிறது. பையனைப் பார்த்திருக்கிறேன்.

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 37

நல்ல பையன். அண்ணன் மாதிரியே முகம். சாது. கூச்ச நாச்சமெல்லாம் கூட அதே தான்.

அந்தப் பையனையா அவள் அடிக்கிறாள். அவளா?

"அந்த ஆள் ஒண்னும் கேட்டுக்கறதில்லையா' என்கிறேன்.

"ஆமா. கேட்டான் போ. அவன்தான் பொண்டாட்டி குத்துக்கு பிருமணையாயிருக்கிறானே'

அதற்குமேல் எதையும் காதில் வாங்கச் சக்தியில்லை. அம்மாவையும் எதுவும்கேட்கவிலலை. சாப்பிடஉட்கார்ந்த போதும் சாப்பாடு இறங்க வில்லை. மனசைப் போட்டு பிழிகிறது. எல்லாம் சூன்யம் மாதிரித் தெரிகிறது.

இரவெல்லாம் தூக்கம் இல்லை, வெகு உயரத்திலிருந்து கீழே உருட்டிவிட்ட மாதிரி அவள் காட்சி தருகிறாள். அகல விரிந்த விகாரமான கண்கள் கோரமாய் வெறித்து நோக்க கூர்மையான நகங்கள் பதித்த கைகளை நீட்டிக் கொண்டு வருகிறாள். ஏன் அப்படி யெல்லாம் வருகிறாளோ?

தலையை உலுப்பிக் கொள்கிறேன். ஒன்றும் பயனில்லாமலே போகிறது.

முற்றத்தில் அவள். காலை நீட்டிப் போட்டு குழந்தை யைக் காலில் குந்த வைத்து உட்கார்ந்திருக்கிறாள். எண் ணெய்ப்பிசுக்கேறிய கலைந்த தலை. கழுவாத முகம். கசங்கிய ரவிக்கை. புரட்டியெடுத்த மாதிரி புடவை. தொடை வரிக்கும் வழித்துவிட்டுக் கொண்டிருக்கிறாள். குழந்தை வெளிக்கிப் போகிறது.

நடுநடுவே மூக்கை உறிஞ்சிக் கொள்கிறாள். சத்தம்போட்டுச் சிந்துகிறாள். சிந்தியதை பக்கத்திலிருக்கும் சுவற்றில் மொழுவி கைகளை புட்டத்தில் துடைத்துக்

படிப்பகம்

________________

WWW.padippakam.com

38 அஸ்வகோஷ்

கொள்கிறாள்.

மாராக்கு விலகி தளர்ந்த மார்பு பக்கவாட்டில் தொங்குகிறது. பால் கசிந்து நனைந்த ரவிக்கை. ஈரமாய். மொப்பு அடிக்கும்.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு எழுந்திருக்கிறாள். பூவரச மரத்தடியில் படுத்திருக்கும் நாயைக் கூப்பிட்டு விடுகிறாள்.

நாய் நக்குகிறது. சளுக் சளுக் கென்று.

உள்ளே போய் செம்பில் நீர் கொண்டு வந்து குழந் தையைக் கழுவுகிறாள். முற்றத்தில் மீதி நீரை நாய்

நக்கிய இடத்தில் வீசுகிறாள். துடைப்பம் எடுத்துக்கூட தள்ளவில்லை.

புடவையிலேயே குழந்தையைத் துடைத்துக் கொள் கிறாள்.

அருவருப்பாய்த் தொண்டையைக் காருகிறாள். சத்தம் போட்டு காறிய சளியை ஒரம் துப்பி விட்டு உள்ளே போகிறாள்.

என் முகம் சுருங்குகிறது.

நான் நின்றதனாலோ, பார்த்ததனாலோ, அவளிடம் எந்த வித கூச்ச நாச்சமோ தயக்கமோ காணோம். குறைந்தபட்ட நாகுக்குக்கூட இல்லை. பவ்யம் தெரி யாதவள்.

நான் தலையைப் பிடித்துக் கொள்கிறேன். எவ்வளவு நேரமோ!

இருள் கவிகிறது. கவிந்து இருள்கிறது. எல்லாம் இருளாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் அவள் எனக்கு எவ்வளவு ஸ்வாரஸ்யமானவளாய்த் தோற்றமளித்தாள். அது எவ்வளவு மகோன்னதமான விஷயமாகவும், மோகன

படிப்பகம்

________________

www.padippakam.com

தற்செயல் 39

ரசம் ததும்புவதாயும் இருந்தது. இப்போது எல்லாம் கனவுகளா! அவளை என் இதயத்துக்குள்ளேயே புனிதமாய் வைத்து பூஜித்து வந்ததும், வணங்கியதும் யாருக்குமே தெரியாத ரகஸ்யமாய் உள்ளேயே வெதும்புகிறது.

அம்மா விளக்கைக் கொண்டு வந்து மாட்டுகிறாள். எதிர்வீட்டில் பையன் அலறுகிற சத்தம் கேட்கிறது. 'இல்லண்ணி. இல்ல. இனிமே செய்ய மாட்டேன். கேக்காம தொடவே மாட்டேன். எடுக்கமாட்டேன் அண்ணி... எடுக்கமாட்டேன்...”

"பாவி. என்னமா போட்டு அடிக்கறா. பெத்த புள்ளையா இருந்தா இப்படி போட்டு அடிப்பாளா? நாலு எழுத்து படிச்சிருந்தாள்னா புள்ளைங்களோட அரும தெரியும் அம்மா சொல்கிறாள்.

அடி என் மேலேயே விழுவதுபோல் படுகிறது. நான் மெளனமாய் வெளியே கிளம்புகிறேன். 

"விழிப்பு’’ ...... D.

படிப்பகம்