Pages

Monday, October 31, 2016

முத்தம்மா - கண்டு உரையாடியவர் க. லல்லி : காலச்சுவடு 12

 Automated Google-OCR


WWW.padippakam.Com

முத்தம்மா திருநெல்வேலி மாவட்டம் ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்தவர் பிடித் தொழிலாளி பெண்ணாகவும் கூலி உழைப்பாளியாகவும் வாழ்வை எதிர்கொண்ட முத்தம்மாவின் நினைவுகள் துயரங்களாலும் போராட்டங்களாலும் மட்டுமானதல்ல ஆழ்ந்த மன நெகிழ்ச்சியும் வாழ்தலின் லெம்மையில் ஒற்றிப்போகாத அங்கத உணர்வும் நிரம்பியவை அமர் நூறு நிமிட நேர உரையாடலில் தனது குழந்தைப் பருவம் முதல் தன்னுடைய குழந்தைகளின் காலம் வரையிலான

நீண்ட தொலைவை ஒரே வீச்சில் கடந்து செல்கிறார். இந்த 

கடந்து செல்லவில் தன்னிரக்கமே தோல்வி மனப்பான்மையோ 
சிறிதம் இல்லை. தன் வாழ்வின் பிரதிநிதித்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தன்னியல்பாகத் தொகுத்துக் கட்டமைத்திருக்கும் விதமும் அதற்கான துல்லியமான மொழியும் முத்தம்மாவைச் சிறந்த கதைச் சொல்லியாக அடையாளம் காட்டுகின்றன. மையநீரோட்டத்திற்கு அப்பால் வாழும் மக்களின் அசலான மனங்களும் மொழியும் அவர்களின் அனுபவங்களும் வாய்மொழியாக நேரடிப் பதிவுகளுக்கு உட்படும்போது ஆவை, தமிழின் அநேக முற்போக்குப் படைப்பாளிகளின் மக்கள் இலக்கியங்களைவிட அதிக உயிர்ப்பும் நம்பகத்தன்மையும் கொண்டவையாக இருக்கும் இப்பதிவுகளின் மூலம் வரலாற்றின் மெளனங்களிலிருந்தும் எழுத்துருவமான புனைவுகளின் சிதைவுகளிலிருந்தும் அவர்களின் குரல் வெளிப்படும் சொல்லுகிறவர்கள் எழுதுகிறவர்களின் மூலப்பொருளாக என்றும் இருக்க வேண்டியதில்லை. ஒலிநாடாவிலிருந்து அச்சுக்கு முத்தம்மாவின் கதை மாற்றப்பட்டபோது அவரது குரலின் தாளகதி மழுங்கிவிட்டது இனி முத்தம்மா தன் கதையைச் சொல்கிறார்

பிறந்தோம் வளர்ந்தோம் பட்டிக்காட்டுல ஆறுமுகம் படடி பட்டிக்காடுதானே, எங்கம்மா ரொம்ப பட்டிக்காடு, எங்கம்மாவுக்கு துணி போடக்கூடாது, கண்ணாடி பார்க்கக் கூடாது பாவாடை சட்டை போட்டு நாங்க அறியோடி

ஒரு சேலையை எடுத்தாந்து ரெண்டா கிழிச்சிக்கிடுவா எங்கக்காவுக்கும் எனக்கும் ஆவ ஒரு தட்டு நான் ஒரு தட்ட உடுத்திக்கிடுவோம். இதம் எங்க அம்மாவுக்கு உள்ளது ஆவ வாழ்க்கை வரலாறு அதான். அவ காலத்துல் துணியே போட்டது கிடையாது எங்களுக்கு அத மாதிரி துணியே எடுத்துத் தர்றது கிடையாது கொசுவலம் பின்னால வைச்சுக் கட்டிக்கிடனும்,

அப்ப எல்லாப் பிள்ளைகளும் காக்காட்டி விளையாடும். பாவாடை சட்டை போட்டிருக்க பிள்ளைக காத்காடும் போது நல்லா விரியுமில்ல! அப்ப எங்களுக்கு அழுகையா இருக்கும். நம்ம பாவாடை விரிய மாட்டேங்கே. அப்படின்னுட்டு ரொம்ப வருத்தத்தோடு இருப்பேன். எங்க அக்கா என்ன செய்வா இந்தக் கொசுவலத்தை எடுதது நல்லாச் சுத்தி சுத்தி கொசுவலம் வைச்சி ஏ புள்ளே எம் பாவாடையைப் பாருங்க அப்படின்னுட்டு விரிச்சிக் காமிட்டா அந்தப் பிள்ளைகள் ட்ட எங்கம்மாவுக்கு படிப்பு என்னான்னே தெரியாது. படிக்க வைக்க எதுவுமே செய்யமாட்டா. அந்தக் காலத்துலுள்ள ஆள் 92 வய்சாக்க இன்னும் இருக்கா

பெறவு ஒரு காலத்துலே, கொஞ்சம் நாகரீகம் 6ւI(B5, நாகரீகம் வந்தவுடனே 'எங்கம்மாகிட்ட சேல கேக்கேன் நான் நல்ல சேல எடுத்துத்தாம்மா. ஒரு வாயில் சீலை எடுத்துக் கொடும்மா. எல்லாரும் வாயில் சீலையா கட்டுதாங்க அப்படின்னுட்டு எங்கம்மாகிட்ட நிதம் கேட்டு அழுவுதேன். எனக்கு நீ சேல எடுத்துத்தா கேல எடுத்துதான்ட்டு அப்ப ஒரு நாளு என்ன செஞ்சிருக்கா இங்கிருந்து போயிருக்கா கடைக்கு மில்லுல வேல பார்த்துட்டு வரும்போது கடையில போய் "எம்மவ GJILigyp) வயலுன்னு கேக்காய்யா ஒரு வயலு கொடுங்கன்னு அப்படின்னுருக்கா, அப்ப கடைக்காரன் சொல்லியிருக்கான் 'நீ எத்தனாயிரம் ரூபாய்க்கும்மா வயலு பிடிக்கப் : in? அதான்யா அந்தச் சிலையில ஒரு வயலு இருக்குல்ல அந்த வயலுதான் கேட்கா என் மவ. ஏ உடுக்க சேலையாம்மா?'ஆா'ஓ வாயில் சேலையம்மா? அந்த எழவுதான் அப்படின்னுட்டு சொல்லிட்டா நல்ல சேலப் பார்த்து எடுத்து வந்துட்டா எனக்கு சந்தோஷம் சொல்லவே முடியல. ஆனா எங்கம்மா சேல எடுத்தான்னா அந்த பணிக்கர் சேலதான், தறி சேலதான் எடுத்துக் கொடுத்து ரெண்டா கிழிச்சிடுவா, அவளுக்கு ஒன்னு எனக்கொன்னு! இப்படித்தான் எங்க அம்மா கதை

நாலு பேர் நாங்க ரெண்டு ஆம்பளை, ரெண்டு பொம்பளை எங்கக்கா எனக்கு மூத்தவ அண்ணன் எனக்கு முத்தவன், தம்பி எனக்கு இளையவன்.

எங்கண்ணனுக்கு பத்து வயசிருக்கும் போது எங்கப்பா இறந்து போச்சு எங்களுக்குத் தெரியாது. அப்ப எனக்கு

ஆறு வயசு, அப்ப உள்ளதுகளுக்கு ஆறு வயசுன்னா ஒன்னுந் தெரியாதுல்ல. இப்ப உள்ள புள்ளைகதான் பொறந்தவுடனே ரஜனி ஸ்டைலு அந்த ஸ்ட்ைல்ங் கறதுங்களே. எங்கப்பா இறந்தவுடனே எனக்கு நேரே இளையது ஒரு தங்கச்சி இருந்தது. நாங்க எல்லாம் சினனப் புள்ளைகதானே, எங்கம்மா வேலக்குப் போயிடுவாங்க மில்லு வேல நாலு புள்ளைகளையும் வைச்சிட்டு, ஒரு புள்ளே வேறே வயித்துல எங்கப்பா சாவும் போது அஞ்சு மாசம் வயித்துல. வேலக்குப் போறா, இந்தப் புள்ள சின்னப் புள்ள முலு வயசு போல கிடக்கு அந்தப் புள்ள செத்துப் போவுமேன்னு நினைச்சது கிடையாது. சின்னப் புள்ளைகதானே நாங்க எப்படி யிருந்தாலும் எங்கக்காக்கூட போகலும்னு சொன்னா நான் சொல்வேன், அக்கா நீ கூட்டிட்டுப் போ, அவ சொல்வா நீ கூட்டிட்டுப் போன்னுட்டு இந்த ரெண்டு பேரும் சேர்ந்து அந்தப புள்ளயை பூச்சாண்டி வாரான், கண்னை மூடிக்கன்னு சொன்னா, ரெண்டு கண்ணையும் கையை வைசசி மூடிக்கிடும் அந்த புள்ள அப்படிச் சொல்லி சொல்லி சொல்லி அந்தப் புள்ள கண்ணு மூடுபட்டே போயிடுக்க கடைசியில் செத்தே போச்சு பிறவு என் தம்பி பொறந்தான். சின்ன வயசில முதல்ல படிக்கப் போனத சொல்லுதேன் எங்கம்மா படிச்சிருந்தாதானே எங்களை படிக்க வைப்பா எங்கம்மாவுக்குத்தான் படிப்புன்னா என்னன்னு தெரியாதே ஒரு வாத்தியார் இருந்தார். அந்த வாத்தியா வந்து எங்களுக்கு சொந்தக்காரங்க நான் சினிமாப் பாட்டு படிக்கறத பாத்தவுடனே 'உன்னை எப்படியாவது படிக்க வைச்சிடறேன்மா அப்படின்னு கேட்டார். பள்ளிக்கூடம் நாலு மணிக்கு முடியதுன்னா அதுக்கு முன்னாலேயே என்னை கூப்பிட வந்திடுவார். நீ வந்து ரெண்டு பட்டாவது படிம்ம அப்படிம்பர். வந்தவுடனே பாட்டு படிப்பேன். நான் சாவுமுன்னே உனக்கு சொல்லித்தந்திட்டு சாவுதேம்மா அப்படின்னு சொல்வர். கடைசியில அவர் சொல்லித் தரல. பாட்டுப் படிச்சதுதான மிச்சம். அவர் செத்துப் போயிட்டார். அதுக்கப்புறம் இன்னொரு வாத்தியாரு அவர் ரிட்டையராயிட்டார். அவரு வந்துராப்பள்ளிக்கூடம் சொல்லிக் குடுக்கேன் பிள்ளைகளா, நீங்க எல்லாரும் வாங்க அப்படின்னு சொன்னவுடனே, எப்படியாவது படிச்சிடணும்னு ஒரு ஆசை எனக்கு ரொம்ப ஆசை. எங்கக்காளும் நானும் படிக்கப் போனோம் படிகக போனா முதல்ல சிலேட்டு வாங்கிக் கொடுத்துட்டா எங்கம்மை. ஒரு பொஸ்தகமும் வாங்கிக் கொடுத்துட்டா ஒரு மாசம் ஆனவுடனே ஒரு ஆளுக்கு ரெண்டு ருவா கேட்டார் நாலு ருவா கேட்டார். நாலு ருவா கொடுத்து பொட்டச்சிக படிக்கவா, படிக்க போவேண்டா அப்படின்னு சொல்லிட்டா, கடைசியில சிலேட்டு, பொஸ்தகம் வாங்கினது வேஸ்டாப் போக்க, அதுக்கப்புறம் சிவந்திரத்துல போய் படிச்சோம். பொஸ்தகம் கிடையாது இப்பந்தான் அரசாங்கத்துல இருந்து என்னன்னவோ கொடுக்காங்களே. அந்த நேரத்துல என்ன உண்டு?

காலச்சுவடு 12

படிப்பகம்

டிசம்பர் 1995WWW.padippakam.Com

அப்பமும் படிக்க முடியல, இப்பமாவது படிக்கணும்னு பாத்தேன். அதும் முடியல. கரெக்டா ஒரு மாசம் படிச்சேன். அப்பந்தான் முதல் முதல இந்த பால் மாவு ஊத்துதாங்க பள்ளிக்கொடத்துல அரசாங்கத்துலருந்து பால் மாவை கலக்கி ஊத்துவாங்க மத்தியானம் போல, ஒரு புள்ள என கூட சேர்நத சிநேகிதி மூணாங்கிளாஸ் படிப்பா, என்னை ஒண்ணாங் கிளாஸ் ல கொனடு போய வைசசிட்டாங்க, பொஸ்தகம் கிடையாது ஒண்ணுங் கிடையாது. சும்மா அநத புள்ள கள பார்த்து ஆனா ஆவன்னான்னு படிச்சிட்டே இருப்போம். ஒரு மாசம் ஆனவுடனே அவ ஒரு கொலுசை தொலைச்சிட்டா. பள்ளிக்கூடத்துக்கு வேணான்ட்டாங்க. நானும் போவல. அம்மாமார் பள்ளிக்கொடத்துக்கு ஒரு வாரம் போயிருக்கேன், ஆமா அங்கேயும் போய் ரெண்டு பாடம் படிச்சிட்டு, கும்மிப் பாட்டு மாததிரம் படிச்சிட்டு. எங்கக்கா சடங்காயிட்டா, அதுக்கப்புறம் போவல. கல்யாணம் முடிச்ச பெறவுதான். எங்க வீட்டுக்காரங்க படிச்ச ஏடு இருந்தது. என் கூட இனனொரு பிள்ளையும் சேர்ந்தா, அந்த ஏட்ட்ை வைச்சி முதல்ல ஆனா ஆவன்னா சொல்லி படிச்சோம். அப்புறம் எங்க வீட்டுக்காரங்க ஒனணாங்கிளாஸ் புஸ்தகம் வாங்கிட்டு வந்தாங்க, ஒண்ணாங்கிளாஸ் புஸ்தகத்தை பீடித் தட்டுல வைச்சிட்டே படிச்சோம். பீடித்தட்ட தூரப்போடக் கூடாதே.

சின்ன வயசுலேயே, பத்து பன்னென்டு வயசுலேயே பீடி சுத்த ஆரம்பிச்சேன். சொக்கலால்

இருவது ருவா மிச்சம் தேத்திடுவோம். அப்ப விலைவாசி கம்மிதானே. அப்ப ஒரு சேல ஏழு ருவாதான இப்பு எடுக்க முடியுமா? நீனாவது ஒரு வாரத்துக்கு கூலி வேலைக்குப் போ, போ முத்து என்ன செய்ய? எனக்கு வெட்கமா இருக்கு இவ்வளவு நாளா நான வணடியிலயே போயிட்டேன. இனிமே நான் எப்படி போவேன்? நீ ஒரு வரம் போ'

அப்ப. முத நா போயாச்சி. பக்கத்து வீட்டு புள்ள கூட போயிட்டேன். போயி மணிமுத்தாறுல இந்த புல் வைக்காறங்கள்ல இந்த "ஸ்லோப் அதுலே போய் கீழும் மேலும் கீழும் மேலும் ஏறணும். ஏறணும் இறங்கணும், அந்தப் புல்லை எடுத்துக் கொடுக்கணும். பழையபடி எடுத்துட்டு வரணும், மண்ணள்ளி கொண்டு போய் போடணும் போட்டுப் போட்டு கால் ஆனக்கால் மாதிரி வீங்கிப் போயிடுத்து அழுவுதேன் அழுவுதேன் அழுவுதேன் அஞ்சுகோட்டை கண்ணிர் அங்கன வைச்சு அழுவதேன். என் நிலமை இப்படியாயிட்டே, என்ன செய்ய அப்படின்னுட்டு அழுவுதேன். என் கூட வந்த புள்ள என்னை கைநாத்துப பணணுதா, 'யக்கா நீங்க அழுவாதீங்க. இந்த வேலையை வுடறாதீங்க. உங்களுக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு அப்படித்தான் இருக்கும். பிறவு ஒண்ணுமே செய்யாதுக்கா, அப்படின்னு கைபோட்டு என்ன கூப்பிடுதா. கால் எடுத்து வைக்க முடியல. வீட்ல வந்திருந்து அழுவுதேன். எங்க வீட்டுக்காரங்க என்னோடு சேர்ந்திருந்து அழுவுதாங்க. 'என்ன கட்னதாலதானே நீ இவ்வளவு கஷ்டப்படறே முத்து. என்ன

பீடிதானே. வேற எந்த பீடியும் கிடையாது. அழுவுதேன் செய்யட்டும், அப்படின்னுட்டு அவங்களும் கூட மடக்கு பீடி எதுவுமே கிடையாது அப்ப, அழுவுதேன் சேர்ந்து அழுதுகிட்டு. வெந்நீ போட்டு ஒத்துங்க பீடிததடட வைசசிட்டே பொஸ்தகத்தையும் கேன் அப்படின்னு பக்கத்து வீட்டு புள்ள போயிடுசசி. விரிச்சி வைச்சிடடே ஆனா ஆவன்னா அழுவு தன வெந்நீ துணியை வைச்சி ஒத்துதாக கால்ல.

படிச்சிட்டே பீடியும் சுத்திக்கிடுவோம், நைட்டுல அஞ்சுகோட்டை பழையபடி அந்த புள்ள வந்து கூப்பிடுது

எங்க வீடடுக்காரங்க சொல்லிக் கொடுப்பாங்க. ஆண்ணிர் அங்கன எனககுப் போகவே இஷ்டமிலல. 'யககா.

ஏறுக்குமாறா சொனனேனனா மண்டையில ஒரு குட்டு குட்டி வைச்சிடுவாங்க குட்னவுடனே

வைச்சு அழுவுதேன்.

இதோட வுட்றாதீங்க, இப்ப இந்த நேரத்துல விட்டிங்கன்னா பழையபடி வேலைய

போங்க உங்க படிப்பப் பாருங்க, உங்களப் என் நிலமை பாத்துதானே ஆகணும், இன்னிக்கு மாத்திரம் பாருங்க சொல்லித் தந்த இப்படியாயிட்டே, கஷ்டமாயிருக்குன்னு விட்டுறாதீங்க. வந்து என63ானனு : கேட்டா, அது எப்படி? செய்ய ருங்க வலியோட வலியா, நாங்க மத்தி அபபடினணு ரெண்டாந்தரம் குடடுவாங்க. எனன சய யானததுககபபுறம உங்கள வேல பாக்கவிடாம அபபுறம பேசாம படுத்துக்கிடுவேன். அப்படின்னுட்டு :: இடையில ಜ್ಷ படிகக மாட5டன. படிசசா அரைகுறைப வாங்கிட்டு போறோம், அப்படினணு சொல்லி படிப்புதான படிச்சுடலாம். பேப்பரை அழுவுதேன். அந்த புள்ள கூட்டிட்டுப் போயிருச்சி. வாசிச்சறலாம். 86_L_ھا.L_(DlLل போனவுடனே موال اللافيا 682 لا

சடங்காயி ரெண்டு வருஷங் கழிஞ்சி மூணாவது வருஷம், எங்க வீட்டுக்காரங்க வந்து ரொம்ப கஷ்டப் பட்டவங்க, அப்ப டேம்பு ஆரம்பிக்கு அதுலதான் வேல பாக்காங்க, மாசம் அம்பது ரூபா சம்பளம். அப்பத்தான் கல்ாணத்தை முடிச்சாங்க கல்யாணத்தை முடிச்சி ஒரு அளுக வருஷம் நல்லா இருந்தோம. மணிமுத்தாறுல எங்களுக்கு வீடெல்லாம் கொடுத்திருந்தாங்க வீடு நல்ல வீடுதான். காலையில இட்லி காபிதான். எப்பவும் டிபன்தான். நல்லா இருந்தோம் சினிமா எந்தப் பக்கத்துல இருக்கோ அந்தப் பக்கம் போயிடுவோம்; சினிமா பார்க்கறதுக்கு எங்க வீட்டுக்காரங்க நல்லா சினிமா விருப்பம் உள்ளவங்கதான். நான் பாட்டு படிச்சா கேட்டுகிட்டே இருப்பாங்க, எங்க போய்யிட்டு வந்தாலும் சந்தோஷமா இருக்கணும். பாட்டுப்படி முத்து அப்படிம்பாங்க நான் பாட்டுப் படிப்பேன். அப்புறம் ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தோம். அதுக்கப்புறம் மணி முத்தாறு டேம்பு முடிஞ்சிடுச்சி. சீட்டைக் கையிலக் கொடுத்துட்டாங்க வேலயில்லைன்னு. சீட்டைக் கொடுத்தவுடனே ஒரு வாரம் ஒரே அழுகதான். என்ன செய்ய? இவ்வளவு நாளா கிளினர் அப்படின்னு வண்டியில போவ இருந்துட்டு அதுக்கப்புறம் மம்பட்டியைத் தூக்கணும்னா கூலி வேலைக்குத்தானே போகணும். நான் வேலை பார்த்ததே கிடையாது எங்க வீட்ல. வீட்டுக்கும் முத்தத்துக்கும் நடமாடறதுதான். அம்பது ருவா சம்பளத்துல

காலச்சுவடு 12

போயிட்டேன். போய் இப்படி மேலுங் கீழுங் இறங்காம இப்படி ஒரு தளத்துல நின்னு மண்ணு சுமக்கச் சொல்லி வைச்சிட்டாங்க மண்ணை அந்தால பைய பைய சுமந்து கிட்டே. அழுதுகிட்டுதான். அழுகை இன் கண்ணை மிஞ்சுடுதே, கஷ்டம் வரும்போது கண்ணி வந்துருதில்ல. கஷ்டமே இல்லாம இருந்துட்டு கஷ்டம் வரும்போது கண்ணிர் தானே முன்ன வருது எப்படியெல்லாம் இருந்தோமே இப்டி கஷ்டம் வந்திரிச்சேஅப்படின்னுட்டு,

எங்க வீட்டுக்காரங்க பிறவு கூலி வேலைக்கு எங்க டேம்புலயே வந்துட்டாங்க. ரெணடு பேருமே வேல பாத்தோம் அதுக்கப்பிறம் ஒரு ஏழு வருஷம் போல வேல பாத்தோம். வேல பார்த்துட்டு பழையபடி வீட்டுக்கு வந்தாச்சு,

இங்க வேல பாத்துட்டு இருக்கும் போதேதான் எங்கண்ணன்காரன் நீங்க வேல பாக்கறது எனக்கு கஷ்டமாருக்கு நீ வா. உனக்கு ஏதாவது ஒரு வேல ஏதாவது கடை வைச்சுத் தாரேன். அப்ப நான் சொன்னேன். நம்ம போவேண்டா, நம்ம இங்கேயே இருப்போம் அத்தான். நம்ம அங்க போயி நம்ம பொருள வித்து செய்யவா, அந்த பொருள் இருந்தா ஒரு ஆபத்துக்கு நமக்கு உதவும். நம்ம போவேண்டா அப்படின்னேன். எங்க வீட்டுக்காரங்க கேட்கல. எனக்கு அட்டியல் போட்டிருந்தாங்க கழுத்துக்குள, அஞ்சு களஞ்சி. அவங்க ஒரு வீடு கட்டினாங்க. அதுக்கு ஒரு கூரை வைக்க முடியல. மழை

டிசம்பர் 1995

படிப்பகம்WWW.padippakam.Com

வந்திட்டு, உடனே எங்கம்மா நீ அட்டியலை கொடும்மா உனக்கு அடுத்த மாசம் திருப்பிக் கொடுத்திடறேன்ன்னு சொன்னவுடனே அட்டியலை கழட்டி அம்மா கையில கொடுத்திட்டேன். அம்மா என்ன செஞ்சிட்டா அண்ணன் கையில கொடுத்திட்டா அண்ணன் என்ன செஞ்சிட்டான் அடகு வைக்கப் போறேன்னுட்டு வித்துட்டு வந்திட்டான், வித்துட்டு வந்துட்டு எங்களுக்கு ஒரு அம்பது ருவாய்க்கு சாமான் வாங்கிக் கொடுத்தான். அப்ப அம்பது ருவாய்க்கு சாமான் வாங்கனாத்தான் ரொம்பயே, உடனே அம்பது ருவா சாமானை வெச்சி கடை வைக்க பண்ணிட்டான். கடை வச்சா ரெண்டு பேரும் கடையில இருந்தா என்ன வருமான்ம் வரும் ? ஒருத்தரு கடையில இருந்தா அதுக்குரிய வருமானம் அப்ப கிடையாது. இருந்து இருந்து பாத்துட்டு கடைசி முடிவு கடையும் எடுபட்டுப் போச்சு. உடனே பீடி சுத்துதோம். எங்கே? முக்கூடலுக்கு. முக்கூடல் டோனாக்க ஒரு ரூவா ஆறT சம்பளம் புத்தும் பத்தும் இருபது மைல் நடக்கனும், கார் கிடையாது. அம்பாசமுத்திரத்தோட சரி, காருக்கு போவமும் மாட்டேன். கோழி கூப்பிட எந்திரிச்சி போனோம்னா கரெக்டா ஒம்பது மணிக்கு அச்சாபீஸுக்கு போயிடுவோம். அதுக்கு முன்னால ஒரு இடத்துல, ஆத்துப் பக்கத்துல இறக்கி வச்சு சாப்பாடு கட்டிக் கொண்டு போறதில கொஞ்சம் சாப்பிட்டு தண்ணியை குடிச்சிட்டு பழையபடி பெட்டியைத் தூக்கிட்டு போயிடுவோம். பழையபடி அங்கிருந்து நாலு ரூவா இருபது பைசா தருவாங்க முன்னூறு வண்டலுக்கு இருபது பைசான்னா ரெண்டன. அப்ப பைசால்லாம் கிடையாதே ரெண்டனா தந்தா அதக் கொண்டு வந்து அச்சாபீஸ் பக்கத்துல முறுக்குக்கடை வைச்சிருப்பாங்க, அந்த முறுக்கு இவ்வளவு அகலம் இருக்கும் உள்ளங்கை அகலம் நல்லா நெருங்க இருக்கும். ரெண்டனா கொடுத்தா நாலு முறுக்குத் தருவாங்க, அந்த நாலு முறுக்குல ரெண்டு முறுக்கை நான் சாப்பிட்டுருவேன். அந்தச் சோததையும் அங்கன இருக்க எல்லோருமா சாப்பிடுவோம். மரத்து நிணல்ல இருந்து சாப்பிட்டு அந்த ரெண்டு முறுக்கையும் எங்க வீட்டுக காரங்களுக்கு வைச்சிக்கிடுவேன். வைச்சிக்கிட்டு பேசாம நாங்க பாட்டுக்கு நடவதான் இருபதுக்குக் கொறையாம போவோம். சில ஆட்க வண்டி கொண்டு வருவாங்க, அந்த வண்டியில இந்தப் பெட்டியை வைச்சிக்கிடட்டான்னா, சில ஆட்க வைச்சிக்கிடுங்கம்பான சிலவன் வைக்கவிட மாட்டான். அப்படியா நடந்து வருவோம். எங்க வீட்டுக் காரங்க வருவாங்க இந்த பங்கள இருக்குல அது பக்கத்துல வந்துருவாங்க, ஒரு கட்டு முன்னூறு வண்டலு அப்ப, பெரிய கட்டு பிரஸ் கட்டு. இந்த முறுக்கு வைச்சிருப்பேன்ல அந்த முறுக்கு ரெண்டையும் கொடுப்பேன். கடிச்சி தின்னுட்டு நடந்துகிட்டே வருவாக, சில அன்னக்கி விறகு சுமக்க போவாங்க சில அன்னக்கி போவமாட்டாங்க. நான் அந்த நாலு ருவாயைக் கொண்டாந்து மூணு ருவாய்க்கு அரிசி பருப்பு எண்ணெய் எல்லாம் நாலனா நாலனாவுக்கு இப்படியா வாங்கிக் கிடலாம். அப்ப ஒரு ருவாய்க்கு ஒரு பக்கா அரிசியும் ஒரு காப்படியும் போடுவான். அப்ப ஒண்ணேமுக்கால் பக்காவாச்சு வாங்கிப் போட்டு ஒரு வாரத்துக்கு சமாளிச்சுருவோம். பழையபடி மறு வாரம் போய் வாங்கிட்டு வருந்தட்டி எல்லாம் இருக்கும். எங்க வீட்டுக்காரங்க இடையில ஏதாவது ரெண்டு நாளைக்கு விறவுக்குப் போனா அந்த துட்டை வைச்சி சினிமாவுக்கு எங்கயாவது போய்க்கிடறது. அதுக்கப்புறம் அது முடிஞ்சுது

நாங்க மணிமுத்தாறுல இருக்கும் போது எங்களுக்குத் தெரிஞ்சவரு, இன்ன இடத்துல டேம் ஆரம்பிக்கிறாங்களாம், சம்பளம் நிறைய கொடுக்காங்களாம், ஒரு ஆளுக்கு அஞ்சு ரூவா. அஞ்சு ருவான்னா பெரிய சம்பளம் அப்ப. வாடேன்னு எங்க வீட்டுக்காரங்களை வந்து கூப்பிட்டாரு எங்கம்மா என்னை போவ வேண்டாங்கா நீ போவ வேண்டாம்மா, அங்க முத முத எப்படி எப்படியெல்லாம் இருக்கோ, நீ போவ வேண்டாம் அப்படின்னா. எங்க

ܐܢܝܚ

காலச்சுவடு 12

O

வீட்டுக்காரங்க என்ன சொல்லுதாங்கன்னா நீ வராம நான் எப்டி போவேன் முத்து பொம்பளைய கூட்டிட்டு போனாலும் ஒரு இடத்துல திரணையிலாவது படுத்துக் கிடலாம்; அப்போ பொம்பளை இருக்கா அப்படின்னு சொல்லி எரக்கப்பட்டு இடங் கொடுப்பாங்க. ஆம்பளைக்கு யார் இடங் கொடுப்பா? அதனால நீ இல்லேன்னா நான் வரவே மாட்டேன். எத்தன நாளைக்குத்தான் உங்கண்ணன் கைய எதிர்பார்த்து உங்கம்மா கைய எதிர்பார்த்து சாப்பிடறது? நமக்குன்னு நாம் தனிய உழைச்சி சாப்பிடனும், வா' அப்படின்னு கூப்பிடுதாங்க. நான் வாரேங்கேன், ஒரு தரம் வரலங்கேன், இப்படியா யோசனையில இருக்கு, அந்தவுடனே சினிமாவுக்கு வான்னு கூட்டிட்டுப் போயிட்டாங்க சினிமாவுக்குப் போவ போவ போதை ஏத்துதாங்க எனக்கு அப்படின்னு இப்படின்னு சொல்லி கடைசில நான் ஒத்துகிட்டேன். 'சரி வாரேன் அப்படின்னு Qlrrrrლზედაზlu IIrif{fl.

ஆளியார் டேம்பு, பொள்ளாச்சி பக்கத்துல, இங்கயிருந்து கோயமுத்தூருககு எட்டு ருவா சார்ஜசு எங்களுக்கு கல்டகுறிச்சியிலிருந்து வண்டியேறி போயாச்சு அவரு டீக்கட வக்கிறதுக்கு எல்லாம் கொண்டு வாராரு. அவரு டிக்கடதான் வப்பாரு, அதான் எங்களுக்கு ரூவா போட்டு கூட்டிட்டு போறாரு கூட்டிட்டுப டோனா எங்கண்ணன், இந்த அட்டியல வித்தானே எங்களுக்கு தெரியாம, அட்டியல வித்து அவன் ரெண்டாள கூட்டிக்கிட்டு வாறான். எங்களுக்கு ருவா போடல எங்கண்ணங்காரன. மோசஞ் செஞ்சவன். அங்க வந்து, இந்த திருநேலில வந்து வண்டி இருக்கோம் அவங்களும் அதே வண்டிக்குள்ள வந்து சேர்ராங்க பொள்ளாச்சில போய் எறங்கி. வண்டிககு வாறம். ரெண்டு பேரு காதல்ல வந்துட்டாங்க, பொண்ணும் மாப்ளயும் அவங்களும் எங்ககூடவே வந்து சேந்துட்டாங்க யாருமே அங்க போனது கிடையாது. எடத்தையும் பாக்கல ஒண்ணும் பாக்கல. இந்த எடத்துலதான் டேம்பு ஆரம்பிக்கப் போறங்கய்யா. நீ இந்த எடத்துல எறங்கு அட்டீன்னு ட்ரைவர் சொன்னான். இந்த க்ளினர் சொன்னான். இவுங்க சொல்லுதாங்க என்ன பெரம்பிகுளம்னு சொன்னா மலையா இருக்கும்னு சொன்னாங்க, மலைக்குள்ள இருக்கும்னு சொன்னாங்க, நீ மொட்டத் தரையில எறக்கிவிடப் பாகதியே அதெல்லாமில்ல. நாங்க அங்கதான் போகனும் அப்டீனனுடடாங்க.

அந்த ஒடனே எஸ்டேட்டு பக்கம் வால்டாற. அதுககு மேல மல. அந்தச் சரிவல கொண்டு எறக்கிவட்டுட்டான். அஞ்சு மைலுக்கு அந்தப் பக்கம் எறக்கிவுட்டுட்டான் அட கடவுளே, அந்த எடத்துல, அவர் சொன்ன இடத்துல எறங்கியிருந்தா இவ்வளவு வேணுமா? கடேசியா நடப்பம். விதியோ விதின்னு மழ ஜோன்னு கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. நெருஞ்சி முள்ளு படந்து படந்து கெடக்குது. நெருஞ்சி முள்ளு கால்ல குத்தது கூட எங்களுக்கு ஒணர்வில்ல. போறம். கண்ணிரு ஒரு பக்கம் வடியது. பசீன்னா தாங்க முடியல. பசி. யாரு வீட்ல போயி எனன சாப்ட? எங்ன போயி கேக்க ? எந்த வீட்ல குத்த வகக? யாரத் தெரியும் நம்மஞக்கு? மணி என்ன ஆயிடடு, ஏழு மணி ஆயிட்டு ஏழு மணிக்கு தடந்தெரியுமா? தடமும தெரியல தெசையும் தெரியல. நாங்க பாட்டுக்கு போறம் எந்தப் பக்கம் கொஞ்சம் ஒளி தெரியிதோ அந்த நேருக்குப் போறம் அங்க ஆளு இருப்பாங்கன்னு போறம். அஞ்சு மைலுல்ல, அஞ்சு மைலுக்கு அந்தப் பக்கம் கொண்டுல்ல விட்டுட்டு போய்ட்டான். அவம் மரியாதையா சொன்னா நம்ப கேக்கணுமில்ல, கேக்கலண்ணா.அதன.

எங்கள கொண்டு ஓரத்துல வச்சிருக்காங்க. இநத குளுவச்சி. நரி குளுவங்க குடிச போட்டுககிட்டு இருப் பாங்களே, அதுபோல பெடடி சட்டி எல்லாம் வச்சுக்கிட்டு இட்டி கொரங்கு மாதிரி குத்த வச்சுக்கிட்டு இருக்கம் ஆளுந் தெரியாது, பேருந் தெரியாது. ஒருத்தரும் தெரியாது. பேசாம இருக்கோம் வாரவுங்கள்லாம் பாத்துட்டு பாத்துட்டு

ഴ്ച. ട്ഥLi് 1995

படிப்பகம்WWW.padippakam.Com

போறாங்க, எங்கள கூட்டிட்டு போனாரே தேவரு ஒரு வீட்ட கண்டுபுடிச்சு வந்துட்டாரு பொட்டலம் வக்கத்தான் அந்த வீடு எடம் இருக்கு குடிச தான, பெரிய வீடு ஒண்ணும் கெடையாதே. அந்த பொட்டணத்த கொண்டு பாதுகாப்பா வச்சாச்சு, சமையல் பண்ணியாச்சு, சமையல் பண்ணி, ஒரே சாம்பார்தான். அதுல வேற தொட்டுககிட கிட்டுக்கிட ஒண்ணுங் கெடையாது. எல்லாத்துக்கும் ஊததியாச்சு சாப்டாச்சு சாப்டுட்டு படுக்கனுமே, பதிமூணு பேரும். எங்க படுக்கதுக்கு எடம் இருக்கு (சிரிப்பு). முழிச்சிக்கிட்டே இருக்கோம், அந்தால ஒரு ஆளு சொல்லிச்சுது இந்த மாதிரி ஒரு காண்ட்ரக்குகாரங்க ரூம்பு ஒண்ணு மறிச்சு போட்ருக்காங்க. நீங்க போயி அதுல போயி படுங்க. காலையில் எந்திரிச்சி வேல எங்கயாவது இருக்கான்னு பாக்கலாம்னு சொல்லிட்டாங்க.

ஒடனே சரீன்னு அவ்வளவு பேரும் போய் படுத்தாச்சு ஒரு ரூம்புக்கு நாலு பேரு அஞ்சு பேருன்னு போய் படுத்தாச்சு, கரீக்கிட்டா பன்னிரெண்டு மணி, நைட்ல, பன்னெண்டு மணி இருக்கும். நம்ம மணியா வச்சிருக்கம் அபபம் பாக்க?

அடிச்சது பாரு மழி. ஆன தும்பிக்கை மாதிரி மழ பெய்யிது அவ்ளோவ் பெரிய மழ,

கடேசில எங்களுக்கு தெசையும் தெரியல, எந்தப் பக்கம் ஆறு இருக்குது, எந்தப் பக்கம் நம்மஞக்கு வீடு இருக்குன்னு தெரியல.

இருட்டு தடதடதடங்குது அந்த வெளிச்சத்துல பாத்தா வெள்ளமாட்டம் தெரியது. நாங்க ரூமுக்குள்ள நிக்கோம் அநத படுத்திருந்த ருமுக்குள்ள இவ்வளவு தண்ணி. வச்சிருந்ததுணியெல்லாம் நனஞ்சு போச்சு தொப்பல் விட்டு போயிருக்கோம் கையி காலெல்லாம் அப்டியே வெறைக்கிது. அப்டியே இருக்கு. எங்க அண்ணஞ் சொன்னான் ஆத்துக்குள்ளதான் நிக்கோம், வீட்டுக்குள்ள நிக்கம்னு நெனக்காத நீ. ஏல, எல்லாவுங்களும் ஒண்ணு போல சங்கிலி கோர்த்தால கோருங்களே கையிகள், வெள்ளம் அடிச்சிரக் கூடாது அப்டீன்னுட்டு சங்கிலி போட்டாச்சு, கொருத்தாச்சி எல்லாரும். (சிரிப்பு) சங்கிலியைத் கொருத்து நிக்கோம். இந்த ஒட்டன்ங்க பூராவும் LD LibLJ Lyulo சம்மட்டியும் துக்கிட்டு ஒட்டமா ஒடியாந்தாங்க வந்து அணை கட்டுதாங்க. தண்ணி வீட்டுக்குள போவுதுல அதுக்கு அணை கட்டுதாங்க, அந்தால 'ஏப்ப இவ்வளவு பேரையும் பார்த்துகிட்டு நிக்கற. அட இங்க வந்து கொஞ்சம் தள்ளுடா. தள்ளேன்டா. அப்படிங்கான், இவ என்னடா பேப்பயலா இருக்கான். நாங்கள்ளாங் விறைச்சி போய் கையி காலெல்லாம் நடுங்கிப் போய் நிக்கோம்: அப்படின்னு இவங்க போல்ல. "ஏய் என்ன கல்லாட்டம் நிக்கற போய் தண்ணியைப் போய்த் தள்ளுடா அப்படிங்கறான். அட சும்மா கிட அப்படின்னு இவங்க சண்டை போடுதாங்க. அந்தானக்கி, கிடக்க குச்சி கூளமெல்லாம் பூரா கால்கள்ல வந்து அடிக்கி, படுத்திருந்த இடத்துல இவ்வளவு தண்ணி முட்டுக்குச் சரியா சுவர் வைச்சிருக்காங்க. எல்லாம் அள்ளிட்டுப் போயிட்டு மழை, அந்த வெள்ளம் பூரா மேல வந்து அடிக்கு ஆறு எந்த பக்கங்கிடக்கு? ஏங்களுக்கு மேல கிடக்க ஆறு, ஆத்துக்குள்ள நிக்கோம், கட்டைகளும் கிட்டைகளும் வந்து அடிக்கு நம்மள அப்படிங்கான் எங்கண்ணன் (சிரிப்பு). கடைசி இப்படி வைச்ச கைய

எடுக்க முடியல. விறைக்கி, ரெண்டு மணி நேரம் நின்னுருக்கோம் தண்ணிக்குள்ள அந்தால ஒரு ஆளு சொல்லிச்சுது "ஐயோ பாவம் எந்த தேசத்துக்காரங்களோ எநத ஊர்க்காரங்கள்ோ அநாதையா வந்து நிக்காங்க படுகக இடமில்லாம இங்க தண்ணிக்குள்ள நிககாங்களே. அவங்கள போயி அணை போடுனனு சொலலு தாங்களேய்யா ஒடனே எங்களுககு அழுவையா வருது, ஒரு ஆள் சொல்லும் தம்பி இனனகசி மழை வெறிச சிக்கிடாது. நீங்க இப்படி போங்க, கெழகக வநது டிபார்ட்டுமண்ட் வீடு கட்டிப் போட்டுருக்காங்க பெரிய பெரிய வீடு. சிமெண்டு ஓடு, அதனால உங்களுக்கு எப்படியும் கொஞ்சம் பாதுகாப்பா ராத்திரி மட்டுமாவது இருந்திரலாம். அந்தவுடனே அவ்வளவு பேரும் பைய பைய பெறப்படறோம். பொறப்பட்டு அந்த இடி இடிக்குமலா அபL வெளிச்சம் அடிக்கும்ல அப்ப விறுவிறுவிறுன்னு போவோம நாங்க. அந்தால அந்த இருட்டு வந்தவுடனே நின்னுக்கிடறது. அதுலேயே, பழையபடி இடி இடிககையில் ஒடுறது. இப்படியே ஒரு மைல் நடந்திருக்கோம். தீப்பெட்டிய உரசிப் பாககனும்னா ஒனனுமில்ல தீப்டெட்டியெல்லாம் நனைஞ்சு போசசு, இங்கிருந்து தடவி தடவி தடவிப் போறோம். போயி, வெளிச்சத்துலத் தெரியுது வெளேர்ன்னு. அங்கயாத்தான் இருக்கும் அப்படின்னு நினைச்சிட்டு போறோம். போய்ட்டோம், வீட்டைப் போய்ப் பார்த்தோம் தலைவிதியைப் பாருங்க, அங்கயாவது நய நிம்மதியா நம்மஞக்கு இருக்கதுக்கு இடம் இருந்துதானணு பாருங்க! சிமென்ட்டு போட்டு தண்ணி ஊத்திக் கிடக்கு எப்படியிருக்கும் விடிய விடிய நட்டமா நின்னுருககோம. ரெணடு மணி நேரமா, அட கடவுளே, இன்னிககு நமகசூ கொடுத்து வைச்சது இவ்வளவுதான அப்படின்னுட்டு விடிய விடிய விடியகண்லதான விடிஞ்சுது விடிஞ்ச பெறவு எங்கள அதுலேயே நிக்கச் சொலலிட்டு பொம்பளக எல்லாம் நீங்க இதுல இருங்க. வேலை எங்கயாவது இருக்கா, சாப்பாட்டுககு ஏதாவது வழி இருக்கா அப்படின்னு, பார்த்துட்டு வாறோம் அப்படின்னு சொல்லிப் பாத்துட்டு அரிசி எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க. அன்னைக்கி

காலச்சுவடு 12

11

go-DL 1995

படிப்பகம்WWW.padippakam.Com

எங்க வீட்டுக்காரங்களுக்கு வந்து நல்லா சந்தோஷமா எட்பமும் சிரிச்சிகிட்டு இருக்கணும் நம்ம கவலய, கஷ்டத்த வநது வெளிய காமிக்க கூடாதும்பாங்க வெற கட்டு சொமந்துகிட்டு வெளிய வந்தாலும் நல்லா ஸ்டைலாதான போவணும்பாவ.

அவரு வந்து கலர் ரொம்ப கம்மி கருகருன்னு டாரு டப்பாதான். எங்கக்காதான் சொல்லுவா டாரு டப்பாவ புடிச்சேன் அப்டிம்பா, அதுபோல, அப்ப கல்யாணம் முடிஞ்சு போயிருககம். எங்க பக்கத்து வீட்லயிருந்து ஒரு ஆளு கேக்குது, "உம் புருஷன் எது? அப்டீன்னு கேட்டுது. இதான் என் வீட்டுக்காரங்க அப்டின்னேன். 'உண்மய சொல்லு, இது ஒம்புருஷனா ? "ஆமா, இதுதான் எம்புருஷன் அப்டீன்னேன். இல்லியே. ஒனக்கும் அவனுக்கும் எவ்ளவோ வித்தியாசம் இருக்கே ஒன்னய கூட்டிட்டு வநதிருப்பான் அப்டித்தான் நெனக்கேன் அப்டிங்கா,

சுமமா கெடமமா. கூட்டிக்கிட்டு எதுக்கு வரணும்? எங்க வீட்ல நாஞ் செல்லப்புள்ள அவங்க விட்ல அவுங்க செலலப் புள்ள அதனால எங்கள சின்ன வயசிலே கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க

ஆங். அப்டி சொல்லு. அப்டி இருக்கும் (சிரிப்பு) அட்டீன்னு சொல்லுதா அந்த பக்கத்து வீட்டு பொம்புள. அப்ப அந்த எடத்தவிட்டு இன்னோரு எடத்துக்கு வரம் நாங்க ஒரு வீட்ல வந்து வாடகக்கி இருந்தம், வாடகக்கி இருந்தா எங்க வீட்டுக்காரங்களுக்கு டிபாட்டுமெண்டுல வேல கெடச்சிட்டு டிபாட்டுமெண்டுனா ஒண்ணே கால் ரூவா சம்பளம, இருந்திருந்து கொஞ்சம் கூடியிருக்கு சும்மா

ஒரு காட்டுப்பொறத்துல போயி காத்துக் கெடக்கணும்.

அதுககு ஒண்ணே கால் ருவா சம்பளம் கொடுப்பான், அத வாங்கிட்டிருந்தோம்.

அந்த ஊர்ல நம்ப ஊரப்போல வேலகளுக்கு பொம்ளைகள்லாம் போக வேண்டிய சோலியே இல்ல. இப்ப நாலு பேரு இருக்காங்க, சமச்சுப் போட்டா அந்த நாலு பேரும் சம்பளம் குடுத்துருவாங்க நம்ப சம்பளமும் அதுலே பாத்துர்லாம். அப்டித்தான் வீட்டுக்கு வீடு நடக்கு அந்த 2ET6),

அதுக்கப்புறம் நெறைய்ய டேம்புகள் காண்ட்ரக்டு எடுத்து நடக்குது. நெறைய்ய வேல. வேல பாக்கத்தான் காலும் கைய்யும் தெடனும் வேணும். நல்ல வேல எல்லாப் பககமும,

திருநவேலின்னா வேலயே குடுக்க மாட்டான். "எந்த ஊரு? அப்டினனு சொன்னா "எங்களுக்கு திருநவேலி,

நமம பேச்சு பாத்தவொன்னே சொல்லிருவான் அவங்க இழுத்திழுத்து பேசுதாங்களா, நம்ம பேச்ச பாத்தவொன்ன

"ஓங்க ஊரு? ‘எங்களுக்கு திருநவேலி '8ഖങേ ! G_T!

மல்லுகட்டி அங்குணே நின்னு சாதிச்சு அந்த டேம்புல காண்டரக்டுகாரங்கிட்ட வேல பாத்தோம் வேல பாத்துட்டு அதுக்கப்புறம் அந்த எடத்த விட்டு அடுத்த எடத்துக்கு வந்தோம். வந்த பெறவு கொஞ்சம் கஷ்டம் ஒஞ்சுட்டு, நல்லா ஜாலியா இருந்தோம் என்னென்ன நம்ம நெனக்கமோ, எங்க வீட்ல் எதுஎது எங்கம்மா எனக்கு வாங்கிக் குடுக்கலியோ அதெல்லாம் எம் புருஷன் எனக்கு வாங்கிக் குடுத்தாங்க என்ன என்ன தேவையோ, நம்ம கேக்கவே வேண்டா, எங்கம்மாவுக்கு பொரிகடல தவிர வேற எதுவுமே தெரியாது. எங்க வீட்ல நா இருக்கும் போது, பொரிகடலதான். மில்லுல சம்பளம் போட்டா பொரிகடல ஒண்ணுதான் வாங்கிட்டு வருவா. வேற எந்தப் பண்டமும் அவளுக்கு தெரியவே செய்யாது. புள்ளைக இல்லையா. ரெண்டுவேரும் ஜாலிதான், ஜாலியா இருந்து நல்லபடியா இருந்தோம், இருந்துட்டு அதுக்கப்புறம் எனக்கு. அஞ்சு வேரு கொழந்தயில்லாம இருந்துல, அதுல மொதல்ல நாந்தான் கொழந்த உண்டாகியிருக்கேன் கொழந்த உண்டானவன்ன என்ன வக்க எடமில்ல, ஆம்பளயாளு, பொம்பளயாளுங்க

எல்லாஞ் சேந்து ஒரு நாளக்கி ஒரு சோறு பொங்கியாந்து தருவாங்க எனக்கு அவுங்களுக்கெல்லாம் கொழந்தையில்ல. மொத மொத இவங்களுக்கு கொழந்தையிருக்கே அட்டீன்னு ஆம்பளயாளும் சோறு பொங்கியாநது தருவாங்க. பொம்பளயாளும் சோறு பொங்கியாந்து தருவாங்க எனககு ஒரு ஆறு மாசம் பொறந்தது. எங்க வீட்டுக்காரங்களுக்கு வைதுரி கண்டுட்டு, வைசூரி கண்டவொன்ன இவங்களுக்கு ஒம்போதுநாள் காச்ச அடிச்சிருக்கு காச்சஅடிச்சி அதுக்கப்புறம் அம்மங்கண்டுட்டு அந்த ஊர்ல அம்மங் கண்டா ரொம்ப பயப்படுதாங்க மொகத்துல முழிக்கக் கூடாதுங்காங்க இப்ப நம்ம ஊர்லயெல்லாம் அப்படியில்ல, நம்ம பாட்டுக்கு போவம் வருவோம். அந்த ஊர்ல வந்து மொகத்துலே முழிக்கக் கூடாது வேற எதுவுமே குடுக்க கூடாதாம், தயிரு மாத்தரந்தான் குடுக்கணுமாம். உப்பு போடாமா குடுக்கணுமாம். அப்ப இபடியெல்லாம் பக்கத்து வீட்ல சொல்லுதாங்க. இப்டி குடு அப்டி குடுக்காத அப்டீன்னு சொல்லுதாங்க

எங்க வீட்ல சொல்லுவாங்க 'ஏ முத்து, அவுங்க சொல்லிட்டு கெடக்காங்க உப்பு போடாம எப்டி சாப்ட முடியும் வயறார நம்ம ஊர்ல இட்டியா செய்வாங்க ? நம்ம ஊர்ப்படியே நீ செய்யி அப்டீன்னாங்க அப்பறம் கொஞ்சம் உப்புப் போட்டு பெசஞ்சு, கையில எல்லாம் ஒரே முத்துதான் எலய போட்டு சோத்த அள்ளித்தான் குடுக்கணும் அள்ளி குடுத்து அதுக்கப்புறம் சாட்டுவா. வெளிய போறது கூட. வெளியபோக முடியலேன்னுட்டாங்க அப்டி கஷ்டப்பட்டு ஒரு இருவது நாள் வரைக்கும் ரெண்டு பேருமே வேலக்கி போ முடியல. எனக்கு ஆறு மாசம் ஆயிட்டா, எனக்கும் வேலக்கி போ முடியல. அதுக்கப்புறம் இவங்க என்ன செய்தாங்க, 'ஒடனே நம்ம வீட்டுக்கு போகனும், இனிமே நம்ம் இருகக கூடாது நீயும் வேலக்கி போ முடியாது. நானும் வேலக்கி போ முடியாது என்ன செய்வோம், இந்த எடத்துல? அப்டீன்னுட்டு அதுக்கப்புறம் கூட்டிட்டு வந்தாச்சு இங்க, இங்க கூட்டிட்டு வந்து ஒரு ஆறு மாசம் வரைக்கும் எங்க வீட்டுக்காரங்க வேலக்கி போகல, அவுங்கம்மா மில்லு வேல பாத்தது. அவங்க வேல பாத்ததுனால ரெண்டு பேருமே இருந்துக்கிட்டோம்.

அதுக்கப்புறம் ஐஸ் யாவாரம் பாத்தாக எங்க வீட்டுக்காரங்க, ஐஸ் யாவரம் பாத்து கூட்டற வேலக்கி போயி, வெறக கெட்டு சொமந்து, மில்லுக்குள போயி காண்ட்ராக்டுல வேல பாத்தாக அப்ப சம்பளம் எவ்வளவு ரூவா? மூணு ருவா,

நாங்க போயி கொஞ்ச நாள்ல எங்க அத்த ரிட்டேடு ஆயிட்டாங்க, அவுங்களுக்கு காலு வாதம் மாதிரி வந்தவொன்ன வேலய எழுதிக் குடுத்திட்டாங்க கிராஜிட்ல. எங்கத்தே வேல பாத்த ருவாய வச்சு சொந்த எடம் எடுத்துப்புட்டோம், சொந்த எடம் எடுத்து ஒரு வீடு கட்டியாச்சு, அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே வீடு கட்டி ரெண்டுவேரும் அந்த வீட்லே இருக்கோம், ஏங்கொழுந்தனுக்கு கல்யாணம் முடிக்கல. எல்லாம் குடும்பமா ஒண்ணாத்தான் இருக்கோம்

பெறவு ஏங்கொழுந்தனுக்கு கல்யாணம் முடிஞ்சது. கல்யாணம் முடிஞ்சவொன்ன அவனுக்கு தனி வீடு வச்சாச்சு, அந்த ஒரீே விட்டத்தான் பக்கத்துல எடுக்கதுக்கு வழி கெடையாது. ருவாயில்ல. அதுக்காக ஒரே விட்ல நடு சென்டர்ல செவுரு வச்சு அவன் அந்தப் பக்கம் நாங்க இந்தப் பக்கம் இருந்துகிட்டோம்.

அவுங்க இதுல அத நெனக்கவேயில்ல. செரி, நம்ம சும்மா காண்ட்ரக்டுல வேல பாப்போம் எப்டி எப்டி ஆவதோ அப்டீன்னுட்டு வேல பாத்துகிட்டு இருக்கும்போது ஒரு ஆளு சொல்லிருக்கு இப்ப ஆளு எடுக்காங்க, உங்க அம்மா (எங்க அத்த நாப்பது வருஷம் வேல பாத்து இருக்காங்க மில்லுல. ஒன்னே ஓங்கம்மா வந்து கிராஜிட்டுதான போட்ருக்கு நீயும் போயி எழுதிக்குடேன்' அப்டீன்னு சொல்லிருக்கு ஒரு ஆளு.

காலச்சுவடு 12

տ Յ լույf 1995

படிப்பகம்WWW.padippakam.Com

ஒன்னே எங்க வீட்ல சொல்லிருக்காங்க, "எங்கம்மா கிராஜிட்டு, எப்டி எனக்கு வேல தருவாங்க? அப்டீன்னு கேட்ருக்காங்க 'சரி கெடச்சா கெடக்கி, கெடக்காட்டா போவுது, நீயும் போயி ஆளோட பேரக்குடேன்' அப்டின்னு சொன்ன ஒனன இவக பேர குடுத்திட்டாவ, பேரக குடுத்துட்டு அன்னிக்க வேல பாக்கல. மறுநாளு அவுரங்க போயி வேலககி நின்னிருக்காங்க நா சண்ட போடுதேன். "ஓங்களுக்கு எங்க வேல கெடைக்கும்? ஓங்கம்மா கிராஜிட்டு போட்டவுக. ஓங்களுக்கு எப்டி வேல கெடைக்கும்? இந்த முனு ருவா சம்பளத்தையும் கெடுத்துட்டு இருக்கயளேன்னு ரெண்டு வேரும் சண்ட போட்டுட்டு இருக்கோம் சரி பாப்போம் எத்தன. இதே போவது அதுல இதுவும் போவுது என்ன செய்ய அப்டின்னுட்டு போயி மறுநாளு போயி இருக்காங்க,

மொதல்ல பேரு குடுத்தாச சாம். கரெக்டா குடுததுருக்காவ, மொதல்ல கேட்ருக்காங்க. 'என்ன நீ ரெண்டாம் தரத்து புள்ளையா மொத தாரத்து பிள்ளையா, ஓங்கம்மா ஒனக்கு ஒத்தையிலயா? ஒங்கப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியா முணு பொண்டிடாட்டியா அப்டின்லாம் கேட்ருக்காக இல்ல எங்கம்மா ஒரே ஆளுதான், நாங்க ரெண்டு ஆம்புள அப்டீன்னு இவுக எல்லாஞ் சொல்லி பேரு குடுத்துருக்காவ. எவ்வளவுருவா வாங்குனாவ ஓங்கம்மா அப்டீன்லாம் கேட்டுக்காங்க. இவக கரெக்டா சொல்லிருக்காவ, இத்தன ருவா கிராஜிட்டு, இத்தன. ருவா பிராவிடன்பண்டு வந்தது அப்டீன்னு சொல்லிருக்காங்க, எல்லாம் எழுதிக்கிட்டாக, மறுநாளு போயி நிக்காங்களாம். எங்க வீட்டுக்காரங்க ரொம்ப வளத்தியா இருக்க மாட்டாங்க கடடதான். ஒல்லிதான். கூட்டம் பின்னால நிக்கிதம் ஐநூறு

ஆளு நிக்கிதாம். இவுக பெறத்த போயி ஒரு பாலத்து மேல.

உட்காநதிருக்காவ, இவ்ளோவ் பேரு நிக்காவ, நம்மம்மா கிராஜிட்டு, நம்மஞக்கு எங்க வேல கெடைக்கும் மில்லுல அப்டீன்னுட்டு பீடி குடிச்சிட்டே இருக்காவ, அந்த ஒன்ன ரெண்டு ஆளு சொல்லி. முணு ஆளு எடுத்துருக்கான், நாலாவது ஆளா அவுகள கூப்புட்ருக்கான சொரணம் மவன் மாடசாமியின்னு நூறு ஆளுக்கு இந்தப் பக்கம் நின்னுகிட்டு கைய ஒசத்திருக்காக 'ஸார். நான் இங்க இருக்கேன் ஸார்.அப்டீன்னுட்டு (சிரிப்பு)

வேலக்கி போயாச்சு. வேலககி போனவொன்ன என்னெல்லாம் செக் பண்ணுதாங்களோ, அங்கல்ல போயி பாஸ் பண்ணனும் நம்ப டாக்டரு இந்த கொட(விலா) பக்கத்துல நாலு வெரல வச்சு இடிச்சு பாத்தாக என்னப்யா ஒரே எலும்பா இருக்கே? அட்டீன்னு கேட்டானாம் டாக்டரு இல்ல சார் ஏம் பாடியே வீக்குதான் அட்டின்னாகளாம். "சரிசரிபோ அப்டீன்னுட்டானாம். வேலக்கி போய்ட்டு சீட்டு வாங்கிட்டு வாறாக அன்னைக்கு, அதுப்புறம் வந்து சொன்னாக நீ சண்ட போட்டால்ல, எப்படி எங்க அம்மானால எனக்கு கெடச்சுடுச்சு அப்படீன்னு வேலக்கி போறாக, வேலக்கிபோய் சேர்ந்தாக நல்லா இருந்தோம். இந்தக் கொழந்த இந்தப்புள்ள எனக்கு எறந்து போச்சு. இந்த ஓம்போது வருஷம் கழிச்சி பொறந்துதே அந்தப்பையன் எறந்துபோச்சு. அதுக்கப்புறம் வந்து. கொழந்த பெறக்க பெறக்க. எட்டு மாசம் ஆனவொன்ன கொழந்த பொறந்துரும். எட்டுமாசம். ஓம்போது மாசம். நெலக்கவே செய்யாது, வயித்துலயே நெலக்காது, அப்படியே பொறந்துரும். அதுல வேற எங்களுக்கு ரொம்ப கவல. இல்லாம இருந்துட்டா ஒண்னுமில்ல. இருந்திருந்து இப்படி போவுதே. அப்படீன்னு ரொம்ப கவல பட்டோம். கவலப்பட்டு கடேசி முடிவுதான் ஒரு பையன் பெறந்தான். எம் மவன்.

அதுக்கடுத்தால எனக்கு ஒடம்பு ரொம்ப இதாயிப் போச்சி. ஒடம்புல ஒண்ணுமே இல்லியே, கொழந்த செத்தவொன்ன அவள என்ன கவனிக்காங்க? கவனிக்க மாட்டங்கல்ல, 'புள்ளதான் செத்துப்போச்சே இவளுக்கு என்ன பார்வை' அப்படீன்னு சொல்லிருதாகள்ல.

காலச்சுவடு 12

5


ܝ ܦ ܦ

Rt

s

படிப்பகம்

டிசம்பர் 1995WWW.padippakam.Com

சொன்னோம். செரி, நீங்க நாளைக்கி கொண்டு வந்து கட்டுங்கோ அப்டீன்னு சொல்லிட்டாங்க அந்தவொன்ன செரின்னு மறுநாளு ஆயிரம் ருவா கொண்டு கட்டினோம். கட்டி பிறவு படிப்புல சேந்துட்டான, சேநத. நாம் பிடி சுத்தனும் பிடி கத்தித்தான் இவனுக்குச் சாட்பாட்டுக்கு பிடி கததி வாரத்துக்கு பதினைஞ்சி ருவா கொண்டுட்டுப் போவேன். வசசிக்கட செலவுக்குன்னு குடுட்டேன. அவம் பத்திரமா வசசிக்குவான ஒன்னே இந்த பையங்க பூராவும் திங்கறதுக்கு ஏதாக்கம் வசசிருக்குமே, ஒவ்வொருத்த விடல் காரச்சவ்வு அரைச்சி குடுத்திருப்பாங்க முறுக்கு கட்டுக் குடுத்திருப்பாங்க, எங்க வீட்ல என்ன உண்டு? ஒன்னு மில்லே. நான் என்ன செய்வேன்? அரிசியை வறுத்து அதுககடை கொஞ்சம் பொரிகடலையும் வங்கிப் போட்டு ஒரு பாட்டல்ல போட்டு. அப்புறம் கொண்டகடல வாங்கி அத உப்பு தண்ணி தெளிச்சி கொண்டு போய் குடுப்பேன். இத திண்ணுக்கடா அட்டின்னு 'எம் ஸ்ளிக்கூடம் போய் வந்தவொன்ன என்னத்த திம்போம்னு வருதும்மா அப்டிம்பான். இதத்தான் ரெண்டு ஆர்லிக்ஸ் பாட்டல்ல கொண்டு போயி குடுப்பேன.

எங்கணணன ஒரு நாளாவது போயி பாததுடுவானனு எவ்வளவோ சொன்னேன். "அண்ணே நீ போயி பாத்துட்டு வானனே, பாததுடடு வாண்னே எல்லாப டையனகளுக கும் பாயாரோ போயி பாககங்களாம். நீ ஒரு நாள் போயி பாருண்ணே அப்டின்னேன். பாக்கவே மாட்டேன்னுட்டான். கடேசில அலம்புள்ள படிககப் போவும்போதுவாரத்துக்கு ஒரு தடவ போயி பாக்கத்தான் செஞ்சான் இன்னும் அத எம் மவன் நெனக்கத்தான் செய்யறான். நம்ம மாமா ஒரு நாள் பாக்க வர மாட்டேன்னுட்டாரேம்மா, அவரு மவன் படிக்கும் போது வாரத்துக்கு ஒரு நாள் போறாரேம்மா அட்டீன்னு கேக்கத்தான் செஞ்சான அதுககப்புறம் படிசக முடிச்சான்

அதுக்குப் பெறவு, ஒவ்வொரு பக்கமா அப்ளிகேஷன் போட்டான். போடடவொன்ன மொதல்ல பாண்டிச்சேரில வேலககி வா அபண்ணு இண்டர்பூ வநதிருசசி இண்டாயூ வந்தவொன்ன இங்கியிருந்து போய்ட்டோம். நெய்வேலில அக்கா இருககதுனால அங்க போயி தங்கி. ரெண்டு பேரும் போயிருந்தோம் நானும் போயிருந்தேன். எம்மா நானுத்தம்பது ருவா சம்பளமாம் ? நானுத்தம்பது சம்பளத்த வச்சு என்னம்ம செய்யமுடியும்? நாஞ் சாப்பிடுவனா? ஓங் களுககு அனுபவனா? அபடின்னான். அப்ப நாஞ் சொன்னேன் 'எட. நானுத்தம்பது ருவா சம்பளமின்னாலும் ஒனககே நீ கழிச்சிகிடடாலும் பரவாயில்லை. எங்களுக்கு நீ பணம் ஒண்ணும் அனுப்ப வேண்டாம் எப்டின்னாலும் எல்லாரும் சொலலுவங்க, ஒங்க மகன் எண்ண செயயிதான் அப்டின்னு சொன்னா வேல பாக்கான ஆட்டின்னு சொன்னா அது பேரா இருக்கும் இல்ல எம்மவன் கம்மா விடல இருக்கான் அப்டீன்னு சொன்னா அது எப்டிடா பேரா இருக்கும்? நானுத்தம்பது ருவா சம்பளமிருந்தாலும் பரவாயில்ல. நீ வேலக்கி போ. அப்டீன்னு சொல்லிட்டேன். அவனுக்கு மனசே இல்ல. நானுத்தம்பது ருவா சம்பளத்துல என்னண்ணு வேலக்கி பேகன்னுட்டு, பெறவு கடேசி செரியம்மா நாம் போறேன்' அப்டின்னுட்டு போய்ட்டான்.

அதுக்கப்புறம் நானுத்தம்பது ருவா சம்பளம் வாங்கி அதுல எனக்கு அம்பது ருவ அனுப்புாைன், மாசம் அம்பது ரூவா அனுப்பிடுவான். அம்பது ருவ அனுப்பிட்டு அவனும் சப்பாட்டுக்கு எல்லாம் பாத்துக்குவான் அங்க ஒரு ரெண்டு வருஷமோ முணு வருஷமோ வேல பாத்தான் அங்க வேல பாத்துக்கிட்டு இருந்துட்டு அதுக்கப்புறம் இங்க அப்ளிகேஷன் போட்ருக்கான் ஒதருக்கு ஒன்னே ஒதுர்ல கூடுதல சம்பளமின்ன வொன்ன அங்க வரச் சொல்லி ஆட வந்துட்டு ஒன்னே அங்கயிருந்து இங்க வந்துட்டான். இங்க வந்து அவனுக்கு ஆயிரத்தி ஐநூறு ருவா சம்பளம் ஆயிரத்தி ஐநூறு ருவ சம்பளம் வாங்குனா எனக்கு நானூறு

ருவா வந்துரும் நானூறு ருவா, ஐநூறு ருவ அனுட்டனா ஒரு சீட்டையும் போட்டு தந்துட்டு போய்ட்டான். 'அம்மா இவ்வளவு ருவா நீங்க செலவழிங்க, இவவளவு ருவா சீட்டுக்கு நான் அனுப்புறேன் அப்டீன்னு சொல்லி ஐநூறு ருவா அனுப்பிச்சிடுவான். அவனும் வரவு செலவு பாகக வேண்டியிருக்குமில்ல.

அப்பறம் அங்கயிருநதுக்கிடடே எனண செஞகடடான், இங்க அபளிகேஷன் போட்டான். இந்த கெமிக்கல்ல. ஒடனே நீ வேலக்கி வநதுடு அபடினணு சொல்லி ஆடா வந்துட்டு இநத ஆறுமுகனேரிக்கு அங்கயிருந்து இங்க வந்துட்டான்.

இங்க வந்து வேல பாத்தான். வேல பாத்தவொன்ன சம்பளம் கூடுன சம்பளம் மூவாயிரத்து ஐநூறு ருவா சம்பளம் வாங்குனான். ஒன்னே யாணம் புள்ளைக்கு முடிக்கணும்னு பாத்தேன். ப்க். புள்ளைக்கு (பொண்ணுக்கு கலிய00 ல் கூடவிப் அவலுக்குத்தான் பொனணு வீட்டுக்காரங்க வந்துக்குட்டே இருக்காங்க என்ன என்ன என்ன என்னன்னுடடு.

பெறவு அதுக்கப்புறம் அவனுக்காவது கலியாணதத முடிப்போம் அட்டினணு சொலலி அவனுக்கு கலியாணதத முடிச்சேன் ஒரு ரெண்டர வருஷம் ஆச்சு கலியாணம் முடிச்சு கலியானம் முடிச்சதுககு படடடாடு பெரிய பாடு இந்த காததிக மாசம் கலியாணம வசசா மழ இல்லாம இருக்குமா? அய்யோ மழயோட கெடந்து அல்லலு அல்லலு பெரிய அல்லலு பட்டோம். அல்லல் பட்டு. பொணணு எந்த ஊரு, தஞ்சாவூரு பக்கத்துலயில்ல, தஞ்சாவூருக்கு போவணும். நிச்சயதார்த்தத்துக்கு போயிருக்கோம். ரெண்டாயிரம் ருவா கேட்ருக்கான வேணுக்கு ரெனடாயிரம் ருவா செலவழிச்சு நிச்சயதாம்பூலம் வச்சிட்டு வந்தாசசு, அதுக்குப் பெறவு மூணாவது மாசம் காததிய மாசம் ஆயிப்போசசு நா அவ அப்பாககிட்ட சொன்னேன், நம்ம வந்து அயபபசி மாசம் கலியாணத்த வச்சிக் கிடுவோம்னேன். அவன எனன சொல்லிடடான், "நா எல்லாப் பக்கமும் லோனு பேட்ருக்கேன, லோனு எப்ப எட்ப வருதோ, அதுனால நீங்க எனக்கு ஒரு மாதம் ஆவாசம் தரணும். அப்பத்தான் நான் செய்ய முடியும்' அட்டின்னுட்டான். சன்னுட்டு அய்ப்பசி போயி காத்திய மாசம் வந்துட்டு காத்திய மாசம் கலியாணம் வச்சு விட்ல பந்தல் போடல. ஒண்னுஞ் செய்ய முடியல. இந்த கோதம் தியேட்டரிலே வசசு கலியாணம் முடிச்சோம். கலியாணத்த முடிச்சு ஒரு ஒனனற வருஷம ஆவுது

கண்டு உரையாடியவர் க. லல்லி (258,94) கோட்டோவியம் கே. எம். ஆதிமூலம்


LI

காலச்சுவடு 12

18

199-LĎLJŤ 1995

படிப்பகம்

Sunday, October 30, 2016

ஜார்ஜ் லூயி போர்ஹே - Interview மொழிபெயர்ப்பும் குறிப்புகளும் சா.தேவதாஸ்.

Automated Google-OCR

மொழிபெயர்ப்பும் குறிப்புகளும் சா.தேவதாஸ்.

போர்ஹே Lo G) உலகங்களையும், மனநிலைகளையும் கொண்டவர். நவீன ஸ்பானிய இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபர். ஆங்கிலக் கவிதை, ஃபிரான்ஸ் காஃப்கா, பழைய ஆங்கிலம் மற்றும் நோர்ஸின் வீரர் சார்ந்த தொன்மவியலிலிருந்து தனது படைப்பாற்றலுக்காக நிறைய எடுத்துக்கொண்டவர். அரசியல் எதிர்ப்பினையும் ஒழுக்கவியல் எதிர்ப்பினையும் தீவிரமாகக் கொண்டுள்ள, அர்ஜென்டினாவைச்சேர்ந்த இவரது எழுத்து, தென் அமெரிக்க வரலாற்றையும் மானுட இதயத்தின் சலனங்களையும் சுற்றி வருவது. எளியமுறையிலே தன் எழுத்தை நிக்ழ்த்திக் காட்டுவதாக கூறிக்கொள்ளும் கதை சொல்லி. அருகாமையிலிருக்கும் மதுபான விடுதிகளிலோ விசித்திரமான கோயில்களிலோ தன் தன் கதைகளை நிகழச்செய்பவர். நிலவொளியில் மிளிரும் வரிப்புலிகள் மற்றும் கத்திகளையோ, பழங்காலத்துச் சுவடியினைப் புரட்டுகின்ற பண்டிதரின் பொறுமையினையோ விவரிப்பவர். கனவுகளிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பிறப்பது அவரது எழுத்து. எதனையும் நிச்சயத்தன்மையுடன் எடுத்துக்கொள்ள இயலாது, வாழ்க்கை ஆற்றல் மிக்கது. ஆனால் அது கட்டுமீறிப் போவதற்குள் அவ்வளவாகக் காட்டிக் கொள்ளாதது.

மொழியியல், தொன்மவியல், சமூக எல்லைகளைத் தொடர்ந்து தாண்டிச் செல்வதாக இருப்பவை இவரது கட்டுரைகளும் கதைகளும் கவிதைகளும், உலகெங்கிலுமாக இவருக்கு அங்கீகாரம் தேடித்தந்தவை. 1920களில் எழுதத் தொடங்கிய இவரது முக்கியமான கட்டுரைகளின் தொகுதி Ficciones 1944ல் வெளிவந்து விட்டாலும், 1961 இல் வெளியான Labyrinths தொகுப்பே இவரை உலகுக்கு அடையாளம் காட்டியது.

இவருடன் உரையாடுவதென்பது அவரது கடந்த காலம் மற்றும் அணுகு முறைகளின் புதிர்ப் பாதையினூடே அவரைத் தேடுதலாயிருக்கும். இத்தேடலில் எதிர்ப்படும் சுவர்கள் எதிர்பாராத விதங்களில் வண்ணம் பூசியதாயிருக்கும். இவை நமக்கு குறிப்புகளை அளிக்கலாம்; தேடுதலின் போதான கேளிக்கையாக மட்டுமே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரே போர்ஹேயை காணமுடியும் என்பது எதிர்பார்க்கலாகாது. போர்ஹே ஒருவராக இல்லை, பலராக இருக்கிறார்,

இது 25.41980 இல் Artful Dodge எதிர்கொண்ட போர்ஹே.

உன்னதம் l 4.1

WWW.tamilarangam.net

ஜார்ஜ் லூயி போர்ஹே

lili

|-

போர்ஹே - முதலில் சொல்லிவிடுகிறேன், எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்பது போன்ற கேள்விகள் வேண்டாம். ஏனெனில், எதிர்காலங்கள் பலவாயும் ஒன்றிலிருந்து மற்றது மாறுபட்டதாயும் உள்ளது எனக் கருதுகிறேன்.

டேனியல் போர்னே - அப்படியானால் உங்களது கடந்தகாலம், தாக்கங்கள் பற்றிக் கூறுங்கள்

போர்ஹே - நல்லது, எனக்குக் கிடைத்த தாக்கங்கள்ப் பற்றிக் கூற முடியுமேயொழிய பிறரிடம் நான் செலுத்தியவை பற்றிக் கூற இயலாது. அது பற்றி அறியேன், அது பற்றிக் கவலைப் படுவதில்லை. ஆனால் முதலாவதாக என்னை ஒரு வாசகனாகவும் அப்புறம் எழுத்தாளனாகவும் கருதிக் கொள்கிறேன். அது அனேகமாகப் பொருத்தமற்றது, என்னை ஒரு நல்ல வாசகனாகக் கருதுகிறேன். பல மொழிகளில் நல்ல வாசகன், குறிப்பாக ஆங்கிலத்தில் - ஏனெனில் கவிதை, ஆங்கிலம் மூலமாகவே என்னை வந்து சேருகிறது. ஸ்வின்பர்ன், டென்னிஸன், கீட்ஸ், ஷெல்லி மீதான என் தந்தையின் நேசத்தால் - என் தாய்மொழி மூலமாக, ஸ்பானிஷ் மூலமாக அல்ல. ஒருவித மயக்கமாக என்னிடம் வந்தது. அதனைப் புரிந்து கொள்ளவில்லையெனினும் உணர்ந்து கொண்டேன். தன் நூலகத்தை தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு என் தந்தை விட்டு விட்டார். என் சிறுபிராயத்தை எண்ணிப் பார்க்கையில், நான் வாசித்த புத்தகங்களின் ரீதியிலேயே எண்ணிப்பார்க்கிறேன்.

போர்னே - உண்மையிலேயே நீங்கள் புத்தகமனிதர் தான். நீங்கள் நூலகராக இருந்ததும், தொண்மையானவை மீது உங்களுக்கு மோகம் இருப்பதும் சேர்ந்து புதியவை படைத்தலுக்கு எப்படி உதவியுள்ளன என்று கூற முடியுமா?

போர்ஹே - என் எழுத்தில் புதுமையேதும் உள்ளதா என்று அதிசயிக்கிறேன். அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே என்னை எண்ணிக் கொள்கிறேன். கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டில்(1899) பிறந்தேன். சமகாலத்து எழுத்தாளர்களையும் படிக்கிறவன் என்றாலும் டிக்கன்ஸ், பைபிள் அல்லது மார்க் ட்வைய்ன் படித்து வளர்ந்தவன். கடந்தகாலத்தில் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். நம்மால் கடந்த காலத்தை உருவாக்கமுடியாது, மாற்ற முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்தை இல்லாமல் ஆக்குவது அரிதானது என்ற பொருளில் கூறுகிறேன். ஆனால் கடந்த காலம் என்பது வெறுமனே ஒரு நினைவு, ஒரு கனவு நினைத்துப் பார்க்கையில் அல்லது எனக்கு சுவாரஸ்யமானவற்றை வாசித்துக் கொண்டிருக்கையில், என் கடந்த காலம் தொடந்து மாறுவதாகத்தோன்றும். நான் படித்த எழுத்தாளர்களுக்கு அல்லது தமது மொழியின் அங்கமாக, தம்மரபின் அங்கமாக இருந்த எழுத்தாளர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறேன். மொழி தன்னளவிலேயே ஒரு மரபாயிருக்கிறது.

தமிழ்த் தேசிய ജൂഖങ്ങ5, 9ഖങ്കി





________________

WWW.tammilla Canoaména: ஸ்டீபன் கேப் - உங்களது கவிதையைப் பார்ப்போமா, (3)-533i.

போர்ஹே - நானொரு அழையா விருந்தாளி, கவிதை எழுத முயலுகையில் நான் எழுதுவதே இல்லை என்கின்றனர் என் நண்பர்கள். ஆனால் உரைநடை எழுதும் என் நண்பர்கள் உரை நடை எழுத முயலுகையில் நான் எழுத்தாளரே கிடையாது என்கின்றனர். எனவே என்ன செய்வதென்றே தெரியாமல் தர்மசங்கடமான மனோநிலையில் இருக்கிறேன்.

கேப் - கேரிஸ்னைடர் என்னும் நவீனகவி Rprap என்னும் சிறுகவிதையில் தன் கவிக் கோட்பாட்டை விளக்குகிறார் அவரது கருத்துக்கள் உங்களது கவிதையுடன் சில அம்சங்களில் ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. கவிதையிலுள்ள வார்த்தைகளின் பாலான அவரது அணுகுமுறையை விவரிக்கும் அதன் சிறுபகுதியை மேற்கோள்காட்ட விரும்புகிறேன்.

போர்ஹே - சரி சிறுபகுதியென்ன, பெரிய பகுதியாகவே கூறலாம், இல்லையா? இக்காலைப் பொழுதில் அதனை ரசிக்க விரும்புகிறேன், (Riprap தொகுப்பிலிருந்து கவிதையை கேப் வாசிக்கிறார்)

கேப் - ரிப்ரேப் என்னும் இத்தலைப்பு சறுக்கலான மலைப்பகுதியில் குதிரையில் செல்வதற்காக அமைக்கப்படும் கல்பாதையைக் குறிக்கும்

போர்ஹே - வெவ்வேறான உருவகங்களுடன் அவர் எழுதுகிறார், நான் அப்படி எழுதுவதில்லை. எளிய முறையிலே எழுதுகிறேன். விளையாட அவரிடம் ஆங்கிலமிருக்கிறது, எனக்கு இல்லை.

கேப் - ஒவ்வொரு கல்லும் இருபுறமுள்ள ஒவ்வொரு கல்லையும் சார்ந்திருக்கின்ற, பிணைப்புக் கொண்டுள்ள இப்பாதையுடன், கவிதையில் வார்த்தைகளை இடம்பெறச் செய்வதனை ஒப்பிடுவதாகத் தோன்றுகிறது அவரது கருத்து. கவிதை கட்டுமானத்தில் இவ்வணுகுமுறை உங்களுக்கு ஏற்புடையதா அல்லது பலமுறைகளில் இதுவும் ஒன்றுதானா?

போர்ஹே -"ஆதிவாசிகளின் பாடல்புனைய அறுபத்தொன்பது வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் சரியானவைதான்" என்று கிப்ளிங் கூறியதுபோல, சரியானமுறைகளுள் அதுவும் ஒன்றாகலாம் என்றே எண்ணுகிறேன். ஆனால் என்னுடைய முறை அதுபோன்றதல்ல - அது ஒருவித உறவு, இருண்டதான ஒன்று. ஒரு கருத்து எனக்கு கிடைக்கும் போது அது ஒரு கதையாகலாம், கவிதையாகலாம். எனக்குக்கிடைத்திருப்பது தொடக்கமும் இலக்கும்தான். இடையே நிகழவேண்டியதை நான் கண்டறிய வேண்டும் - இட்டுக்கட்டவேண்டும், அப்போது என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறேன். ஆனால் பொதுவாக அதுபோன்றதொரு உத்வேகம் வரும்போது, அதனைத் தடுத்திட என்னால் ஆனமட்டும் பார்ப்பேன், அதையும் மீறி நீடித்தால், எப்படியாவது எழுதியாக வேண்டியிருக்கும். ஒரு போதும் விஷயங்களைத் தேடுவதில்லை. டீக்கடையிலோ தூங்க முயலும் போதோ, தூங்கிஎழும்போதோ விஷயங்கள் கிடைத்துவிடும். போனஸ் அயர்ஸின் வீதிகளிலோ அல்லது வேறெங்கோ எந்த நேரத்திலும் கிடைத்துவிடும். உதாரணமாக, ஒருவாரத்திற்குமுன் ஒரு கனவு வந்தது, தூங்கி எழுந்தபோது அது தீக்கனவாயிருந்தது. அது சொல்லத் தகுதியானதல்ல என்றிருந்தேன், ஆனால் அதில் ஒரு கதை மறைந்திருப்பதாய் எண்ணுகிறேன். அதனைக் கண்டறிய விரும்புகிறேன். அதனைக் கண்டுவிட்டதாக எண்ணும் இப்போது, அய்ந்து - ஆறு மாதங்களில் எழுதிவிடுவேன். நேரம் எடுத்துக்கொள்வேன். ஆதலின் என்னிடம் வேறுபட்டதான முறை இருக்கிறது எனலாம், நிச்சயமாக ஒவ்வொரு கைவினைக் கலைஞனிடமும் அவனுக்கே உரியமுறையில் உள்ளது, நான் அதனைப்

உன்னதம் | 42

கேப் - பகுத்தறிதலின் தலையீடு ஏதுமின்றி தன்மனநிலையை அப்படியே வாசகனுக்கு மாற்றிட முயலுகிறார் ஸ்டைனர். உணர்தலை நேரடியாக மாற்றிட விரும்புகிறார். இது சற்று அதீதமாய் உங்களுக்குத் தோன்றுகிறதா?

போர்ஹே -இல்லை ஆனால் அவர் மிகவும் எச்சரிக்கை கொண்ட கவியாகத் தோன்றுகிறார். நானோ வயதானவன், கல்லங் கபடமற்றவன், மனம் போனபடி பிதற்றுகிறேன், என்பாதையை அறிந்திட முயலுகிறேன். உதாரணமாக என்ன செய்தி வைத்திருக்கிறேன் என மக்கள் கேட்கின்றனர், ஏதுமில்லை என அஞ்சுகிறேன். நல்லது இங்கே கதையொன்று இருக்கிறது, அதன் நீதி என்ன? எனக்குத் தெரியாதென்றே அஞ்சுகிறேன். நான் வெறுமனே கனவு காண்பவன்தான், அப்புறம்தான் எழுத்தாளன். எனது சந்தோஷகரமான தருணங்கள் நான் வாசகனாயிருக்கும்போது தான்.

கேப் - விளைவுகள் பொதிந்துள்ளனவாக வார்த்தைகளைக் கருதுகிறீர்களா? அல்லது படிமங்களைத் தாங்கி நிற்பதாகக் கருதுகிறீர்களா?

போர்ஹே - நல்லது, ஆமாம், உதாரணமாக, சிற்றுணர்ச்சிப் பாடலொன்றை(Sonnet) உருவாக்க குறைந்தது ஸ்பானிய மொழியில் சில வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. ஒரிரு ஒளியியைபுகளே உண்டு. அவற்றை உருவகங்களாக, வினோதமான உருவகங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சொல்வேன், இது அதிரடிவாசகமே. ஆங்கிலத்தின் "Moon" லத்தீன்-ஸ்பானிய வார்த்தையான "Luna"விலிருந்து வேறுபட்டதான சொல்லிலிருந்து உருவாகிறது. "Moon" என்னும் சொல் ரீங்கரிக்கும் சப்தமாயுள்ளது, அழகானவார்த்தை, ஃபிரஞ்ச் சொல்லும் அழகானதே "Lune" ஆனால் பழைய ஆங்கிலச்சொல் "Mona"இருஅசைவுகளைக் கொண்டுள்ள இது அழகாயில்லை. அப்புறம், கிரேக்கவார்த்தை இன்னும் மோசமானது, மூன்றசை கொண்ட "Celena" ஆனால் "Moon" என்பது அழகிய சொல். இச்சப்தத்தை ஸ்பானிய வார்த்தையில் காணமுடியாது. என்னால் வார்த்தைகளில் சஞ்சரிக்க இயலும், வார்த்தைகள் உத்வேகம் தருபவை, தமக்கென்று ஜீவன் கொண்டவை.

கேப் - வார்த்தை தனக்கெனக் கொண்டுள்ள ஜீவன், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அது தரும் அர்த்தத்தைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறதா?

போர்ஹே - அர்த்தங்கள் அநேகமாய் பொருத்தமற்றவை என்றே எண்ணகிறேன். முக்கியமானது எது வெனில், அல்லது நான் குறிப்பிட வேண்டிய இரு முக்கிய அம்சங்கள், உணர்வும் உணர்விலிருந்து எழும் வார்த்தைகளுமே, உணர்ச்சியற்ற விதத்திலே எழுதக்கூடும் என்றுநான் எண்ணவில்லை, அப்படி முயன்று பார்த்தால், அது செயற்கையானதாகயிருக்கும். அது போன்ற எழுத்தை நான் விரும்புவதில்லை. ஒரு கவிதை தன்னைத் தானாகவே எழுதிக்கொண்டது என்று நாம் எண்ணும்போது தான் உண்மையிலேயே அது உயர்ந்தகவிதை என்று கருதுகிறேன். அது ஒடிக்கொண்டிருக்க வேண்டும்.

கேப் - ஒரு கவிஞரிடமிருந்து இன்னொருவரிடம் போகும்போது ஒருவகையான தொன்மங்கள் இன்னொருவிதமானவற்றால் இடமாற்றம் செய்யப்படக்கூடியவையா, அப்போதும் அதேவிளைவு கிடைக்குமா?

போர்ஹே - ஒவ்வொருகவியும் தனக்கேயான தொன்மவியலைக் கொண்டிருக்கிறான் என்றே கருதுகிறேன், அதனை அவன் அறியாதிருக்கலாம். வரிப்புலிகள், கத்திகள், புதிர்ப்பாதைகள் குறித்த தனிப்பட்ட தொன்மவியலை நான் உருவாக்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகின்றனர், அது

தமிழ்த் தேசிய ஆவணச் Ցi6)յլգ56i/

________________

WWW.tamilarangam.net

எனக்குத் தெரியாது. என் வாசகர்கள் இதனைக் கண்டறிகின்றனர். ஆனால் அது கவிஞனின் வேலை என்று நினைக்கிறேன். நான் அமெரிக்காவை எண்ணுந்தோறும் அதனை வால்ட்விட்மன் சார்ந்ததாகவே எண்ணுகிறேன். "மன்ஹாட்டன்' என்னும் வார்த்தை அவருக்கென கண்டுபிடிக்கப்பட்டது, இல்லையா?

கேப் - ஆரோக்கியமான அமெரிக்கா குறித்த ஒரு படிமம்?

போர்ஹே - ஆமாம், அதே வேளையில் வால்ட் விட்மனே ஒரு தொன்மம்தான், மிகவும் துரதிஷ்டம் வாய்ந்து, மிகவும் தனிமைப்பட்டு எழுதியவர் குறித்த ஒருதொன்மம். எனினும் தன்னை ஓர் அழகிய நாடோடியாக ஆக்கிக்கொண்டவர். பூமியில் தன்னை ஒரு தொன்மவியல் மானுடனாக படைத்துக்கொள்ள முடிந்த ஒரே எழுத்தாளன் வால்ட்விட்மன்தான் என்று சுட்டிக் காட்டியிருக்கிறேன்.Trinityயில் உள்ள மூவரில் ஒருவர் வாசகர்தான். ஏனெனில் நாம் வால்ட்விட்மனை வாசிக்கும் போது நாம் வால்ட் விட்மனாகி விடுகிறோம். அதனைச் செய்து காட்டிய விசித்திரமான நபர் அவர் ஒருவரே. உலகெங்கும் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது தான், குறிப்பாக நியூ இங்கிலாந்து மாநிலம், ஒதுக்கிவிட முடியாத எழுத்தாளர்களைத் தந்துள்ளீர்கள். உதாரணமாக, போ, விட்மன், மெல்வின், ஹென்றி ஜேம்ஸ் போன்றோர் இல்லாது போனால், நிகழ்கால இலக்கியம் இத்தகையதாக இருக்க இயலாது,ஆனால் தென்னமெரிக்காவைப் பொறுத்தவரை, எங்களுக்கும் ஸ்பெயினுக்கும் முக்கியமானதாக நிறைய உண்டு, எஞ்சிய மற்ற உலகத்திற்கு முக்கியமாக இராது. மிக நேர்த்தியானதாகவே ஸ்பானிய இலக்கியம் தொடங்கிற்று என்று கருதவே செய்கின்றேன், பின்னர் எப்படியோ க்யூவெடோ, கோங்கோரா என்னும் எழுத்தாளர்களுடன் எதுவோ விறைத்திருப்பதை உணர்கிறோம், முன்புபோல அம்மொழி ஓடிக்கொண்டிருப்பதில்லை.

போர்னே' - 20 ஆம் நூற்றாண்டுக்கும் இது பொருந்துமா? உதாரணமாக லோர்கா இருக்கிறார்.

போர்ஹே - ஆனால், லோர்காவை நான் அதிகம் விரும்புவதில்லை. இது என்னிடம் உள்ள பலவீனம். காட்சிரீதியிலான கவிதைகளை நான் வெறுக்கிறேன், அவர் எப்போதும் காட்சி ரீதியிலானவர். விசித்திரமான உருவங்களைத் தேடுபவர், ஆனால் அவர் மிகவும் மதிக்கப்படுபவர் என்பதை அறிவேன். தனிப்பட்ட முறையில் அவரை நான் அறிந்தவன், நியூயார்க்கில் ஓராண்டு வாழ்ந்தார். ஓராண்டு இருந்தும் ஆங்கிலத்தில் ஒருவார்த்தைகூட அறிந்து கொள்ளாதது மிக விசித்திரமானது. போனஸ் அயர்ஸில் ஒரே ஒருமுறையே சந்தித்தேன். அதன் பிறகு அவரது அதிர்ஷ்டம் தூக்கிலிடப்பட்டு விட்டார். கவிஞருக்கு நேரக்கூடிய உயர்ந்த விஷயம். நேரிய சாவு இல்லையா? கச்சிதமான மரணம், பின்னர், அவரைப் பற்றி ஆண்டனியோ முசாரோ அழகான கவிதை எழுதினார். கேப் - ஹோபி இந்தியர்கள் பலமுறை உதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றனர், அவர்தம் மொழியின் தன்மை, அம்மொழியும் சொற்கோவையும் எவ்விதம் உருப்பெறுகிறது என்பதன் காரணமாக, போர்ஹே - அது பற்றி எனக்குத் தெரியாது. பாம்பாஸ் இந்தியர்கள் பற்றி என் பாட்டி கூறியிருக்கிறார், தன் வாழ்க்கையை ஜீனினில் கழித்தவர்-அது நாகரீகத்தின் மேற்குமுனையாகும் அவர்களது கணிதம் இப்படிப்போவதாக என்னிடம் கூறினார். ஒரு கையை உயர்த்திக்கொண்டு "பாம்பஸ் இந்தியரின் கணிதத்ததைக் கற்றுத்தருகிறேன்" என்றாள்.

உன்னதம் 3

"எனக்குப் புரியாது" என்றேன். "உனக்குப் புரியும், என் கைகளைக் கவனி 1,2,3,4, பல" முடிவின்மை அவள் பெருவிரலில், தூரம் பற்றி மக்களுக்கு சொற்பமாகவே தெரியும் என்று இலக்கிய வாதிகள் கூறுவதையும் கவனித்திருக்கிறேன். அவர்கள் மைல், லீக் ரீதியில் எண்ணுவதேயில்லை.

போர்னே - கெண்டுகியிலிருந்து வரும் நண்பன் ஒருவன் ஒரு மலை, இரு மலைகள் என அவர்கள் தூரத்தைக் குறிப்பிடுகின்றனர் என்றான்.

போர்ஹே- நிஜமாகவா? எவ்வளவு புதிராயிருக்கிறது. கேப் - ஸ்பானிஷிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஜெர்மனுக்கும் அல்லது பழைய ஆங்கிலத்திற்கும் மாறுவது, உலகை நோக்குவதற்கான வெவ்வேறான வழிமுறைகளைத் தருவதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? போர்ஹே - மொழிகள் ஒரே தன்மையானவையென கருதவில்லை. ஸ்பானிய மொழியில் விஷயத்தை ஒடச்செய்வது சிரமமானது, ஏனெனில் அதன் வார்த்தைகள் மிக நீளமானவை. ஆனால் ஆங்கிலத்தில் இலேசான வார்த்தைகள் உண்டு. உதாரணமாக, ஆங்கிலத்தில் Sowly,Quickly என்று குறிப்பிட்டால் அவ்வார்த்தையின் பொருள்மிக்கதான Ug,560)ud, G.5' 5(plguth, Slow-ly, Quick-ly. Slow, Quick 6060T கேட்கலாம், ஆனால் ஸ்பானிஷில் Seiy lentamente, rapidamente என்கிறோம், கேட்பது என்னவோ - mente என்பது என் நண்பன் ஒருவன் ஷேக்ஸ்பியரின் சிற்றுணர்ச்சிப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான், ஒரு ஆங்கிலப் பாடலுக்கு இரு ஸ்பானியப் பாடல்கள் தேவைப்படும் என்றேன் - ஏனெனில் ஆங்கில வார்த்தைகள் குறுகியவை, நேரிடையானவை, ஸ்பானிய வார்த்தைகளோ மிக நீளமானவை. ஆங்கிலத்திற்கு பெளதிகப் பண்புமுண்டு. SR'iGifissist The Ballad of East and West gai) gyi.5Gau அதிகாரி ஒருவர் ஆஃப்கானத்து குதிரைத் திருடனை பின் தொடர்ந்து கொண்டிருப்பார். இருவரும் குதிரை மீதிருப்பர். "தாழ்ந்து விட்ட நிலவினை அவை விண்ணிலிருந்து ஒட்டிவிட்டன அவற்றின் குளம்படிகள் விடியலை முரசடித்து எழுப்புகின்றன" என்று கிப்ளிங் எழுதுகிறார். ஸ்பானிஷில் தாழ்ந்துவிட்ட நிலவினை விண்ணிலிருந்து ஒட்டிவிட முடியாது, விடியலை முரசடித்து எழுப்பமுடியாது. அவ்வாறு செய்யஇயலாது. அவன் விழுந்தான், எழுந்து கொண்டான் என்பது போன்ற எளிய வாக்கியங்களைக்கூட அப்படியே ஸ்பானிஷில் கூற இயலாது. தன்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு எழுந்தான் அல்லது இது போன்ற கருத்துச் சுருக்கத்தால் குறிப்பிட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் வினைச் சொற்களைக் கொண்டும் அசைச் சொற்களைக் Gargist Guh (560 pupilgirl fraid, guith. Dream away your life, live upto, something you have to live down sT sist Gypsio suo rT iib எழுதமுடியும். இவை ஸ்பானிஷில் சாத்தியமில்லை, சொல்ல இயலாதவை. அடுத்து, கூட்டுவார்த்தைகள். உதாரணமாக Word smith ஸ்பானிஷில் இது பகட்டாரவாரம் கொண்டதாக, நயமற்றதாக பn herrero de palabras என்று வரும் ஆனால் ஜெர்மானிய மொழியில் எளிதாய்வரும். ஆங்கிலத்தை விடவும் சிறப்பானதாய் ஜெர்மனியில் இருக்கும், ஏனெனில் ஜெர்மனியில் எப்போதும் வார்த்தைகளை உருவாக்க இயலும். ஆங்கிலத்தில் அவ்வாறு இயலாது. ஆங்கிலோ - சாக்ஸன்கள் பெற்றிருந்த சுதந்திரம் நமக்கு அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக, ast Sigefole அல்லது victorious people என்னும் வார்த்தை, பழைய ஆங்கிலத்தில் இவற்றை செயற்கையானதாக கருத இயலாது. ஆனால் ஸ்பானிஷில் இதனைக் குறிப்பிட இயலாது. அழகானவை என ஸ்பானிஷில் நான் கருதுவது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது; ஒலிகள் மிகத்தெளிவானவை,

தமிழ்த் தேசிய ஆவணச் зл6)ulgaѣ6іт

________________

WWW.tamilarangam.net

ஆங்கிலத்திலோ திறந்த உயிரொலிகள் இல்லாது போய்விட்டன. கேப்-ஆங்கிலோ-சாக்ஸன் கவிதையின்பால் ஈர்த்தது எது? போர்ஹே - அர்ஜெண்டினாவின் தேசிய நூலகத்தின் தலைமை நூலகராக நான் நியமிக்கப்பட்டபோது, வாசிக்கமுடியாதபடி பார்வையை இழந்துவிட்டேன். வளைந்து கொடுக்கப் போவதில்லை, பின்வாங்கமாட்டேன், தன்னிரக்கத்திற்கு இடந்தரமாட்டேன் என்றேன். பிறிதொரு விசயத்தை முயன்று பார்த்தேன். அப்போது வீட்டிலே ஸ்வீட்டின் Anglo saxon Reader Djö (plub Anglo saxon Chronicles 3)(51'ILIg| 15806876}{jići, வந்தது. ஆங்கிலோ-சாக்ஸனை கற்றுப்பார்ப்போம் என்று தொடங்கினேன். கையேடுகள் மூலமாகக் கற்றேன். இரு வார்த்தைகள் மூலம் இதனுடன் காதல் வயப்பட்டேன். இன்னும் நினைவில் நிற்கின்ற அவ்விருவார்த்தைகள் London, Londonburhand Lojbpub Rome, Romeburh. 9):'Gust gi, 16opu ஆங்கிலத்தைக் காட்டிலும் சிறந்த இலக்கியத்தைப் பெற்றிருக்கும் பழைய நோர்ஸ் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கேப் - இருபதாம் நூற்றாண்டின் தொன்மவியலை, எழுத்தாளர்களுக்கென எவ்விதம் விளக்குவீர்கள்?

போர்னே - அது ஒரு பெரும் கேள்வி

போர்ஹே- பிரக்ஞைபூர்வமாக செய்யப்படக்கூடியதென நான் நினைக்கவில்லை. உடனிகழ்காலத்தவராக இருந்திட முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே உடன்நிகழ் காலத்தவராகவே இருக்கிறோம். எக்காலத்திலும் உருவாகி வந்து கொண்டிருப்பதே தொன்மவியலில் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கிரேக்க பழைய நோர்ஸ் தொன்மவியலை என்னால் விளக்கக் கூடும். - சார்லஸ் சிலுவர் - உங்களை பாதித்திருக்கும் வகையிலே, நீங்கள் மேற்கொண்ட அனுபூதியான/ மதத்தன்மையிலான வாசிப்புகள் ஏதேனும் உண்டா என்று வியப்புறுகிறேன். போர்ஹே - நிச்சயமாக உண்டு, ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் சூஃபிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருக்கிறேன். நான் சாவதற்குள் ஸ்வீடன் இயற்கை விஞ்ஞானியான ஸ்வீடன் போர்க் பற்றிய நூலொன்றை எழுதுவதில் என்னால் ஆனதைச் செய்வேன் என எண்ணுகிறேன். எமர்ஸனின் Representative Man மூலமாக அவர் அறிமுகமானார். ப்ளேக்கும் ஒரு அனுபூதியாளரே, ஆனால் ப்ளேக்கின் தென்மவியல் எனக்குப் பிடிப்பதில்லை அது மிகவும் செயற்கையானது.

போர்னே -விட்மனை வாசிப்பவர் விட்மனாகிறார்" என்றீர்கள் நீங்கள் காப்ஃகாவை மொழியாக்கம் செய்தபோது நீங்கள் ஏதாவதொரு அம்சத்தில் காப்ஃகாவாக இருந்தீர்கள் என்று உணர்ந்தீர்களோ என ஆச்சரியப்படுகிறேன்.

போர்ஹே- காஃப்காவுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன், உண்மையில் நான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன். செஸ்டர்ன், காப்ஃகா, சர் தாமஸ் ப்ரெளன் போன்றோர் முன்னிலையில் நான் வெறும் வார்த்தையே. நான் அவரை விரும்புகிறேன், பதினேழாம் நூற்றாண்டு ஸ்பானிஷில் மொழி பெயர்த்தேன், அது நன்றாக வந்தது. Urne Burial விலிருந்து ஒர் அத்தியாயத்தை க்யூவெடோவின் ஸ்பானிஷில் மொழிபெயர்த்தோம், அது நன்றாக இருந்தது. அதே காலகட்டம், லத்தீனை வேறொருமொழியில் எழுதுவது. லத்தீனை ஆங்கிலத்தில் மற்றும் ஸ்பானிஷில் எழுதுவது, என்னும் அதே கருத்துக்கள் எல்லாம் இருந்தன.

போர்னே - காப்ஃகாவை ஸ்பானிஷில் மொழி பெயர்த்தவர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் அவரை மொழியாக்கும் போது சேவையுணர்வு கொண்டிருந்தீர்களா?

உன்னதம் 44

போர்ஹே - இல்லை, வால்ட் விட்மனின் Song of Myselfனை மொழி பெயர்க்கும் போது அவ்வாறு உணர்ந்தேன், நான் செய்து கொண்டிருப்பது முக்கியத்துவம் கொண்டது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். விட்மனை மனப்பாடமாகத் தெரியும்.

போர்னே - நீங்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளுள் ஏதாவதொன்று, உங்களது படைப்பினைப் புரிந்துகொள்வதற்கும் ரசிப்பதற்கும் உதவியிருப்பதாக, நீங்களே செய்திருப்பவற்றை நியாயப்படுத்துவதாக எப்போதாவது உணர்ந்தீர்களா? போர்ஹே - இல்லை, என்னுடைய படைப்பு பற்றி நான் எண்ணவில்லை.

போர்னே -நீங்கள் மொழி பெயர்க்கும் போது.?

போர்ஹே - இல்லை, போனஸ் அயர்ஸிலுள்ள என் வீட்டை வந்து பாருங்கள், என் நூலக்த்தைக் காட்டுகிறேன் என்னுடை யதோ என்னைப் பற்றியோ ஒரு புத்தகம்கூட இருக்காது. இது நிச்சயமானது. என் புத்தகங்களை தெரிவு செய்கிறேன். சர்தாமஸ் ப்ரெளன் அல்லது எமர்ஸனுக்கு அருகிலே இடம்பிடித்துக் கொள்ள நான் யார்? ஒன்றுமில்லாதவன்.

போர்னே - படைப்பாளர் போர்ஹேயும், மொழிபெயர்ப்பாளர் போர்ஹேயும் முற்றிலும் வேறானவர்களா?

போர்ஹே - ஆமாம், வேறானவர்களே. மொழிபெயர்க்கும் போது அத்துமீறாதிருக்க முயலுகின்றேன். நல்லதொரு மொழியாக்கம் செய்ய, அத்துடன் கவிஞராக இருக்கவும் முயலுகிறேன்.

போர்னே - உங்களது படைப்புகளில் அர்த்தமெதனையும் பொதிந்து வைத்திட நீங்கள் முயன்றதில்லை என்றீர்கள்

போர்ஹே - என்னை ஒரு அறவியல் சார்பாளனாகவே கருதிக் கொள்கிறேன். ஆனால் அறநெறிகளை போதிக்க முயலுவதில்லை. என்னிடம் செய்தி கிடையாது. சமகால வாழ்வு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தினசரிகள் எதையும் வாசிப்பதில்லை. அரசியலையும், அரசியல்வாதிகளையும் வெறுக்கிறேன். எந்தக்கட்சியையும் சேர்ந்தவனில்லை. என் அந்தரங்க வாழ்க்கை அந்தரங்கமானதே, புகைப்படத்தையும் விளம்பரத்தையும் தவிர்க்கவே முயலுகிறேன். என் தந்தைக்கும் இதே எண்ணம் இருந்தது. "நான் வெல்ஸின் 'புலப்படாத மனிதனாக விரும்புகிறேன்" என்பார், அது குறித்து பெருமிதப்படுவார். ரியோ டி ஜெனிரோவில் என் பெயரை யாரும் அறியார். அங்கே புலப்படாதிருப்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக விளம்பரம் என்னைக் கண்டுகொண்டுவிட்டது. அது பற்றி நான் என்ன செய்யக்கூடும்? அதனை நான் தேடுவதில்லை. என்னை அது தேடிக்கொண்டது. ஒருவருக்கு எண்பது வயதாகிறது, கண்டறியப்படுகிறார், துப்பறியப்படுகிறார்.

போர்னே - உங்களது படைப்பின் அர்த்தம், அர்த்த மின்மை தொடர்பாக காஃப்காவின் படைப்பெங்கும் குற்றவுணர்வு ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களது படைப்பில் ஒவ்வொன்றும் குற்ற உணர்வைத் தாண்டியதாக இருக்கிறது.

போர்ஹே -ஆமாம், அது சரிதான் காப்ஃகாவுக்கு குற்றவுணர்வு இருந்தது. என்னிடம் இருப்பதாக நான் கருதவில்லை, ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் நான் செய்திருப்பவை செய்யப்பட்டுள்ளன, எனக்காக அல்லது என் மூலமாக, ஆனால் உண்மையிலேயே நான் அதனைச் செய்திருக்கவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, என்னால் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

போர்னே - பஞ்சபூதங்களால் ஆன வரம்புக்குட்பட்ட சேர்க்கை மட்டுமே உண்டு. எனவே கருத்துக்களை உருவாக்குவதென்பது

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

________________

WWW.tamilarangam.net

கடந்தகாலம் பற்றிய மறுகண்டுபிடிப்பே - என்னும் உங்களது கூற்றுடன் இதைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாமா? போர்ஹே - பார்க்கலாம் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு தலைமுறையும் கடந்தகாலத்துப் புத்தகங்களை மீளவும் எழுதிக் கொள்ளவேண்டியுள்ளது, அதனைச் சற்று வித்தியாசமாக செய்கிறது என்று எண்ணுகிறேன். ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டுவிட்ட கவிதை ஒன்று என்னால் எழுதப்படுகிறது. அதாவது என்னால் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இதுவே எனது தார்மீகப்பணி, இலேசான மாறுதல்களையே நாம் செய்கிறோம், ஆனால் மொழியினை ஒன்றும் செய்யமுடியாது என்றே கருதுகிறேன். அவ்வாறு செய்திட ஜாய்ஸ் முயன்றார். அவர் சில நேர்த்திமிகு வரிகளை எழுதியபோதும், தோற்றுவிட்டார்.

போர்னே - மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட இக்கவிதைகள் எல்லாம் புதிர்ப்பாதையில் ஒரே சுவரிடம் வந்து சேருதல் போன்றது என்பீர்களா?

போர்ஹே - அப்படியே. அது நல்ல உருவகம், ஆமாம் நிச்சயமாக,

போர்னே - உள்ளூர் வண்ணத்தை பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும், எப்போது சரியாக இருக்காது என்பதற்கான வழிகாட்டு நெறிகளைக் கூறுவீர்களா?

போர்ஹே - தடைப்படுத்தாத விதத்திலே செய்யமுடியுமானால் நல்லது. ஆனால் அழுத்திக்கூறினால், எல்லாம் செயற்கையாகி விடும். ஆனால் அது பயன்படுத்தப்பட வேண்டும், அது விலக்கப்பட்டதல்ல என்கிறேன். அதனை அழுத்த வேண்டியதில்லை. போனஸ் அயர்ஸில் ஒருவித கொச்சை மொழியினை உருவாக்கியிருக்கிறோம். அதனை எழுத்தாளர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அதிகப்படியாக பயன்படுத்து கின்றனர். ஆனால் மக்களுக்கு அதனால் பயனேதும் கிடையாது. இருபது நிமிடத்திற்கொருமுறை கொச்சை வழக்கில் வார்த்தை ஒன்றினை அவர்கள் கூறலாம், ஆனால் எப்போதும் கொச்சை மொழி பேசிட யாரும் முயலுவதில்லை.

போர்னே - வட அமெரிக்க எழுத்தாளர் யாரேனும் உள்ளூர் வண்ணத்தை திறம்பட கையாண்டுள்ளனரா. அப்பண்பாட்டிற்கு அந்நியர் என்ற முறையிலே உங்களுக்கு அதனை ஆற்றலுடன் வெளிப்படுத்தியிருப்பவர் என யாரைக் கருதுகிறீர்கள்?

போர்ஹே - மார்க் ட்வைன். ரிங் லார்ட்னர் சிறிது வழங்கி யிருப்பதாக எண்ணுகிறேன். அவரை மிகமிக அமெரிக்கத் தன்மை கொண்டவராக எண்ணுகிறீர்கள் இல்லையா?

போர்னே - மற்றும் நகர்ப்புறத்தன்மை வாய்ந்தவர் போர்ஹே - மிகவும் நகர்ப்புறத்தன்மை, மற்ற எழுத்தாளர் யார்? ப்ரெட் ஹார்டியை வாசித்திருக்கிறேன். ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளராக இருந்தார் என எண்ணுகிறேன். ஹெமிங்வேயை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. தவறான முறையிலே கதையைச் சொல்வதும், காலக்கிரமத்தைக் கலந்து போடுவதுமாக இருந்த போதும் ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளரே.

போர்னே - ஃபாக்னரின் Wild Palmsயை மொழி பெயர்த்தீர்கள்

போர்கே - ஆம், ஆனால் அந்நூல் அவ்வளவாய் எனக்குப் பிடிக்காது. Lightin August மிக நல்ல புத்தகம், ஆனால் அது அவருக்குப் பிடிக்காது. Sanctuary யும் குறிப்பிடத்தக்க படைப்பே. அதுவே நான் படித்த முதல் ஃபாக்னர் புத்தகம். பிறகு மற்ற புத்தகங்களைப் படிக்கலானேன். அவரது கவிதையினையும் படித்தேன்.

போர்னே - ஃபாக்னரையும் அவரது உள்ளூர் வண்ணத்தையும் நீங்கள் மொழிபெயர்க்கும்போது நேரடியான ஸ்பானிஷில் கொண்டு வந்தீர்களா அல்லது உள்ளூர் ஸ்பானிஷ் வகையொன்றில் மாற்றிட

உன்னதம் | 45

தமிழ்த் தேசிய

முயன்றீர்களா?

போர்ஹே - இல்லை, கொச்சை வழக்கை மொழிபெயர்க்க வேண்டுமாயின், நேரடியான ஸ்பானிஷில்தான் செய்யவேண்டும், இல்லாது போனால் வேறுவிதமான உள்ளூர் வண்ணம் 660-åSlb. 2-5rt rø00T Losts, El Gaucho, Martin Fierro என்றழைக்கப்படும் கவிதை மொழிபெயர்ப்பு எங்களிடமுண்டு. இப்போது அது கெளபாய் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது தவறு என்பேன். ஏனெனில் இதில் கெளபாய்கள் பற்றித்தான் நினைக்க முடிகிறதேயொழிய, தென் அமெரிக்க இடையர்களை எண்ணிப் பார்க்க இயலவில்லை. மார்டின் ஃபைரோவை என்னால் முடிந்த அளவுக்கு தூய ஆங்கிலத்திலே மொழியாக்கம் செய்வேன். கெளபாயும், தென் அமெரிக்க இடையரும் ஒரேவித மனிதர்தான் என்ற போதும், அவர்களை வேறுபடுத்தித்தான் எண்ணுகிறோம். உதாரணமாக, கெளபாய் என்றதும் துப்பாக்கிகளை எண்ணிப்பார்க்கிறோம். ஆனால், தென்னமெரிக்க இடையனை நினைக்கும் போது குறுவாள்களும், நேருக்குநேர் மோதல்களுமே நினைவுக்கு வரும். எழுபத்தைந்து அல்லது சற்று அதிகமான வயதுடைய கிழவன், இளைஞன் ஒருவனை நேருக்கு நேர் மோதலுக்கு சவால்விட்டதைப் பார்த்திருக்கிறேன். பயங்கரமாகத் தோன்றும் இரு குறுவாள்களை எடுத்துவந்தான். ஒன்று வெள்ளிப்பிடி கொண்டிருந்தது. ஒன்று மற்றதைவிடப் பெரியதாக இருந்தது. இரண்டும் ஒரே அளவினதாய் இல்லை. அவற்றை மேசைமீது வைத்துவிட்டு, 'சரி இப்போது உன் ஆயுதத்தை எடுத்துக்கொள் என்றான். நீ பெரியதை எடுத்துக் கொள்ளலாம், அதற்காக நான் கவல்ைப்படப் போவதில்லை என்ற பொருள் அப்பேச்சில் இருந்தது. அப்போது இளைஞன் மன்னிப்புக் கேட்டான். கிழவனது வீட்டில் பல குறுவாள்கள் இருந்தன, ஆனால் அவை இரண்டையும் வேண்டுமென்றே தெரிவுசெய்தான். "இக்கிழவனுக்கு குறுவாளைக் கையாளத்தெரியும், ஏனெனில் இன்னொன்றை அவனால் தெரிவுசெய்ய இயலும்" என்று அக்குறுவாள்கள் கூறின.

போர்னே - அது உங்கள் கதைகளை நினைவுபடுத்துகின்றன.

போர்ஹே - அம்மையக்கருத்தை என் கதையில் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு நபரின் அனுபவத்தைச் சொல்வதிலிருந்து கதைகள் பிறக்கின்றன.

போர்னே - அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் அவ்வர்த்தத்தை குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னால் போதுமானது.

போர்ஹே - அதன் பொருள்: அவன் ஒரு போக்கிரி, மோசடிக்காரன். அதே வேளையில் அவனுக்கென்று ஒரு நெறி உண்டு. எச்சரிக்கை இல்லாது யாரையும் தாக்குவது பற்றி அவன் எண்ணிப்பார்த்ததில்லை. ஒட்டு மொத்த காரியமும் மிகமிக மெதுவாக நிகழ்ந்தது. இன்னொருவரைப் புகழ்வதன் வாயிலாக ஒருவர் தொடங்கலாம். அப்போது, யாருக்கும் சண்டையிடத் தெரியாத பிரதேசத்திலிருந்து வந்தவன் அவன் என்று நாம் சொல்ல விரும்பலாம். ஒருவேளை அவனுக்குக் கற்றுக் கொடுக்கலாம். அதன் பிறகு மற்றவரை புகழ்ச்சிச் சொற்களால் இடைமறித்து தெருவிற்குள் போவோம் உனது ஆயுதத்தைத் தெரிவு செய்து கொள்' என்பது போன்று கூறலாம். ஆனால் இது முழுதும் மிகமிக மெதுவாக நிறைவேற்றப்பட்டது. அத்தகைய விவரிப்பு நழுவிவிட்டதோ என்று ஆச்சரியப் படுகிறேன். இப்போதெல்லாம் துப்பாக்கிகளை சுழல் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர், அந்த அறநெறி யெல்லாம் போய்விட்டது. தொலைவிலிருந்தே ஒருவரைச் சுட்டுவிடலாம்.

போர்னே - கத்திச்சண்டை மிக நெருக்கமானது.

போர்ஹே - நெருக்கமானது, ஆமாம், அவ்வார்த்தையைப் பயன்

ஆவணச் சுவடிகள்

________________

படுத்தினேன். ஒரு கவிதையின் இறுதியிலே அதன்ை'iன்பிரிதிக்ல்ளியே தெரிவு செய்வேன். செஸ்டர்டனையும்

படுத்தினேன். ஒருவனது தொண்டை அறுபட இருக்கிறது, நெருக்கமான கத்தி அவன் கழுத்தின் மேல் என்கிறேன்.

போர்னே - பழைய வடிவங்களையும் ஸ்தாபிதமாகிவிட்ட எழுத்தாளரையும்போல எழுதிப்பார்த்து புதுஎழுத்தாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள்

போர்ஹே - இது நேர்மைசார்ந்த பிரச்னை என்று எண்ணுகிறேன், இல்லையா? எதையாவது புதுப்பிக்க விரும்பினால், ஏற்கனவே செய்யப்பட்டுள்ளவற்றை உங்களால் செய்து காட்ட இயலும் என்று காட்டியாக வேண்டும். புது முயற்சி மூலம் ஆரம்பிக்கவியலாது. உதாரணமாக சுயேச்சையான கவிதைமூலம் தொடங்க முடியாது. சிற்றுணச்சிப்பாடல் ஒன்றை முயன்று பார்க்க வேண்டும், அல்லது வேறுவிதமான செய்யுள் வகையை பரீட்சித்து, அப்புறம் புது விஷயங்களுக்குப் போகவேண்டும்.

போர்னே - விலகி வெட்டிச்செல்லும் நேரம் எது? புது முயற்சியில் இறங்குவது எப்போது என்று நீங்கள் உணர்ந்ததை உங்கள் அனுபவத்திலிருந்து கூறுங்களேன்?

போர்ஹே - முடியாது, நான் தவறு செய்துவிட்டேன். சுயேச்சையான கவிதையிலிருந்து தொடங்கினேன். அதனைக் கையாள்வது எப்படி என நான் அறிந்திருக்கவில்லை. மிகச் சிரமமானது, சாஸ்திரிய வடிவங்களை எழுதுவது எளிதானது. ஏனெனில் உங்களுக்கு உதவிடும் வகைமாதிரி அவற்றில் இருக்கிறது என்பதை பின்னரே கண்டுகொண்டேன். ஆனால் சுயேச்சா கவிதையில் உங்களுக்கென ஒருவகை மாதிரியை உருவாக்கவேண்டியிருக்கிறது மற்றும் அதனை மாற்றிக் கொண்டிருக்கவேண்டும். நல்லது, உரைநடை வருவது கவிதைக்குப் பின்னர்தான். உரைநடை மிகச் சிரமமானது. எனக்குத் தெரியாது. உள்ளுணர்வால் எழுதியிருக்கிறேன். பிரக்ஞை பூர்வமான கவியாக என்னை நான் கருதவில்லை.

போர்னே - மரபார்ந்த வடிவங்களுடன் தொடங்க வேண்டும் என்றீர்கள். இது பார்வையாளர் சார்ந்த பிரச்னை இல்லையா?

போர்ஹே - இல்லை, பார்வையாளரை நான் நினைத்ததேயில்லை. எனது முதல் நூலை அச்சிட்டதும், அதனை புத்தகக் கடைகளுக்கோ, மற்ற எழுத்தாளர்களுக்கோ அனுப்பவில்லை, நண்பர்களுக்குத் தந்துவிட்டேன். முன்னூறு பிரதிகளை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். அவை விற்பனைக்காக இருந்ததில்லை. அந்நாட்களில் ஓர் எழுத்தாளர் புகழ் பெறுவது அல்லது வெற்றி - தோல்வி பற்றி யாரும் நினைத்ததில்லை. 1920, 1930களில் அக்கருத்துக்கள் எங்களுக்கு தொலைதூரமானவை. வெற்றி, தோல்வி - புத்தகங்களை விற்பது என்ற ரீதியில் யாரும் எண்ணிப்பார்த்தில்லை. எழுதுவதை பொழுதுபோக்கு அல்லது ஒருவித விதியாக நாங்கள் எண்ணினோம். டிக்வென்ஸியின் சுயசரிதத்தை நான் படித்த போது, தன்னுடைய வாழ்க்கை இலக்கிய வாழ்க்கையாக இருக்கும் என்பதை அவர் அறிந்துகொண்டிருந்தார், என கண்டு கொண்டேன் மில்டனும், கோல்ரிட்ஜீம் அப்படியே அறிந்திருந்தனர் என எண்ணுகிறேன். தம்வாழ்க்கை இலக்கியத்திற்கும் வாசிப்புக்கும் எழுவதற்கும் அர்ப்பணிக்கப்படும் என்பதனையறிந்தனர். GurifGar - Borges and I areágytó égy a 6262)Tuylő The Watcher என்னும் கவிதையும் இரட்டை(Double)யின் பாலான உங்களது ஆர்வத்தைக் காட்டுகிறது எழுத்தாளர் அல்லாத போர்ஹேயை சிறிது நேரம் பேசவிட்டு, தான் விரும்பினாலும் விரும்பாது போனாலும் எழுத்தாளர் போர்ஹேயின் மதிப்பீட்டைத் தரச்செய்யலாமா?

போர்ஹே - அவ்வளவாக நான் விரும்புவதில்லை. மூலப்

உன்னதம் 46

காஃப்காவையும் தேர்ந்தெடுப்பேன்.

போர்னே - ஆக, அர்ஜென்டினாவிலுள்ள உங்களது நூலகத்தில் உங்கள் நூல்கள் இடம் பெறாதது எழுத்தாளர் அல்லாதவரின் முடிவென்று நினைக்கிறீர்களா?

போர்ஹே - ஆம், நிச்சயமாக, 

போர்னே - அக்குழலில் தன்னை உணருமாறு செய்து கொண்டாரா? 

போர்ஹே - ஆமாம், அவர் செய்து கொண்டார். ஆமாம் என்னைச் சுற்றிலும் அவரின் எந்த நூலையும் காணமுடியாது உங்களால், ஏனெனில் நான் நோயுற்றவன், ஒய்ந்துபோனவன் என்று அவருக்கு எச்சரிக்கை செய்தேன். நான் உணரும்விதம் குறித்து அவரை எச்சரித்தேன். நல்லது, போர்ஹே மீண்டும் இங்கே இருக்கிறார். நான் என்ன செய்யக்கூடும்? ஒத்துப்போக வேண்டியதுதான். நான் அனுமானிப்பது போலவே ஒவ்வொருவரும் உணருகின்றனர்.

போர்னே - ழான் பால் சார்த்தின் ஒரு வாசகம் என்னை எப்போதும் வசீகரப்படுத்தும், அவர் குறிப்பிட்டார் "Manis a Wizardunto man". அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்றுக்கொள்கிறீர்களா?

GuntířGAD — Man is a Wizard ?

போர்னே - கருத்துக்களை இட்டுக்கட்டுகிறான்; பிரபஞ்ச விதிகளை உருவாக்குகிறான், சகமனிதர்கள் அவற்றை நம்புமாறு செய்கிறான். அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?

போர்ஹே- குறிப்பாக அது கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியது என்று கருதுகிறேன், இல்லையா? மற்றும் இறையியலாளருக்கும் பொருந்துவது. Trinity பற்றி எண்ணிப் பார்த்தோமானால், அது எட்கார் ஆலன் போவைவிட புதிரானதாய் இருக்கும். பிதா, சுதன், பரிசுத்த ஆவி. அவை ஒன்றாகிவிடுகின்றன. மிக மிகப் புதிரானது. ஆனால் யாரும் அதனை நம்புவதில்லை. குறைந்தபட்சம் நான் நம்புவதில்லை.

போர்னே - ஆற்றல் வாய்ந்தவையாக தொன்மங்கள் இருந்திட அவை நம்பவேண்டிய அவசியமில்லை. போர்ஹே - இல்லை. இருந்தும் வியப்படைகிறேன். உதாரணமாக, நம் கற்பனை Centau னை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் பூனைமுகம் கொண்ட எருதினை ஏற்பதில்லை. இல்லை, அது சரியானது இல்லை, நயமற்றது. ஆனால் Minotaur, Centaur களை ஏற்றுக்கொள்கிறோம், அவை அழகா யிருப்பதால், குறைந்தபட்சம் அவை அழகியவை என்று எண்ணுகிறோம். நிச்சயமாக அவை மரபின் அங்கமாயுள்ளன. ஆன்ால் வரலாற்றுச் சின்னங்களையும் நாணயங்களையும் அறிந்திராத தாந்தே, லத்தீன் எழுத்தாளர்கள் மூலமாக கிரேக்க தொன்மங்களை அறிவார். தாடியுடன்கூடிய மனிதமுகம் கொண்ட எருதாக Minotaur னை எண்ணினர். மிக அருவருப்பானது, எருதின் முகம்கொண்ட மனிதனாக அவனை நினைத்துக்கொள்ளும்போது, தாந்தேயின் பல பதிப்புகளில் அதுபோன்ற Minotaurனைப் பார்க்கலாம். ஆனால் தாந்தே, பாதி எருதை, பாதி மனிதனை வாசித்திருந்ததால், அவனை அப்படியாக எண்ணினார். நம் கற்பனை அதை ஏற்பதில்லை, ஆனால் பல தொன்மங்களை நான் எண்ணிடும்போது, மிகவும் கேடான தொன்மம் என்று இருக்கிறது, அது தேசங்கள் பற்றின தொன்மம். நான் ஒரு சிலி தேசத்தவன் அல்ல, உருகுவே நாட்டவன் அல்ல, அர்ஜென்டினாவைச் சேர்ந்தவன் என்று ஏன் நான் நினைத்துக் கொள்ளவேண்டும்? நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை. நம்மீது நாமே திணித்துக்கொள்ளும் அத்தொன்மங்கள், வெறுப்பையும் யுத்தத்தையும் குரோதத்தையும் உண்டாக்கும் மிகக் கொடியவை. நாளடைவில் அரசாங்கங்களும் தேசங்களும் இல்லாது போய் நாமெல்லாம் சர்வதேசப்பிரஜைகளாகி விடுவோம். O

தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்

பிரமிள் பேட்டி - கால சுப்பிரமணியம் (லயம் 12)

.padippakam 
......


இன்றைய பின்னணி, அதிகாரம், அதனை மூலதனமாக்கி அரசியல் யந்திரத்தின் மூலம் பயங்கரமாகக் கொள்ளையடித்தல். அதிகாரத்தைப் பிடிப்பதற்காகவே, மூலபுருஷர்களின் அன்றைய இயக்கங்கள் இன்றைய கோஷதாரிகளாலும் வேஷதாரிகளா லும் பயன்படுத்தப்படுகின்றன. சீரிய இலக்கியத் துறையில் செயல்படும் வெங்கட்சாமிநாதனும், அரசியல் விமர்சகரான சோவும், பெருவாரிப் பத்திரிகை வாதியான சுஜாதாவும் இவ் விதமாகப் பிரச்சினையைப் பார்ப்பவர்கள்தாமா? இது விஷயத் தில் சோவைத்தான் ஓரளவுக்கு சரியான எழுத்தாளராகப் பார்க்க முடிகிறது. வாழல் எவருடையதானாலும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இருந்தும்கூட அவர் ஜாதீயவாதிதாம். சுஜாதா, தமது ஸ்தானத்தை ஆடாமல் பார்த்துக் கொள்கிறதுக்காகக் கொஞ்சம் பச்சோந்தித் தனமான வர்னஜாலங்களைப் பண்ணு வார்-இது வெசாக்குப் பிடிக்காது. ஆனால் வெ.சா.வுக்கும் சோவுக்குமிடையே பரஸ்பர முதுகு சொறிதல் உண்டு. இவருக்கு அவர் ஜினியஸ், அவருக்கு இவர் ஜீனியஸ். 

கா.சு பார்ப்பன இயக்கத்திலேயே எல்லா பிராமணர் களும் இருப்பதாக நீங்கள் பார்க்கவில்லையே? 

பிரேமிள் : பார்ப்பன இயக்கத்துக்கு எதிரானவர்களும் அந்த வகுப்பில் இருப்பது எனக்குத் தெரியும். திராவிட இயக் கத்தில் சேர்ந்து, இப்போது அ.தி.மு.க.வில் உள்ள கார்க்கி ஒருவர். தமது பெயரிலேயே ஹஸன் என்ற முஸ்லீம் இந்திய விடுதலைப் போராளியின் பெயரைக் கொண்ட நடிகர் கமல் ஹசன் இன்னொருவர். ஹாலன் என்பதுக்கு சிரிப்பவன் என்ற சமஸ்கிருத வழிப் பொருள் உண்டு. ஆனால் கமல்ஹசன் என்பதுதான் அவர் அதை உபயோகிக்கும் உண்மை வடிவம். இவரைத் தமது பிராமன சங்கத்தில் சேரும்படி சோ அழைத்த போது "நான் பிராமனன் அல்ல, பறையன் என்று கூச்சலிட்டு மறுத்தவர் நடிகர் கமல்ஹசன் சாமான்யருள் நான் குறிப்பிடப் பலர் உள்ளனர். இங்கேயும் பிற இடங்களிலும் வெ.சா. போன்றோரின் பார்ப்பனிய வாதங்களுக்கு நான் தரும் ஆதாரபூர்வமான மறுப்புகள் அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவை. 

கா.சு

பெரியார், அண்ணாதுரை ஆகியோரின் எழுத்துகள் சாகித்ய அகாதமி இலக்கிய வரிசையில் வெளிவரவேண்டும் என்று ஏற்கனவே காரணம் தந்து விளக்கியிருக்கிறீர்கள். இவர் கள் இப்படி பிரசுரம் பெறவேண்டும் என்று நீங்கள் விரும்பு வதற்கு வேறு காரணங்களும் உள்ளனவா? 


பிரேமிள்
சரித்திரம் இருட்டடிப்புச் செய்யப்படக்கூடிய ஒன்று. ஆறுமில்லியன் யூதர்களை நிர்மூலம் செய்த நாஸிகளின் சரித்திரத்தை இருட்டடித்து அது நடக்கவே இல்லை என்று கூறுகிறவர்கள் மேனாடுகளில் உள்ளனர். முக்கியமாக Fred Lecteur என்ற அமெரிக்க “சரித்திர எழுத்தாளரையும் Gunter Drecker என்ற ஜெர்மன் அரசியல்வாதியையும் குறிப்பிடலாம். 

ஈ.வெ.ராவுக்கும் அண்ணாதுரைக்கும் சாகித்ய அகாதமி வரிசையில் இடம் பெறவேண்டும் என்று பிரேமிள் ஏன் மாய்கிறான்? காரணம் சமூகப் பொது உணர்வும் சரித்திரப் பிரக்ஞை யும் ஆகும். ஈ.வெ.ரா. உருவாக்கிய பகுத்தறிவு இயக்கம், இந்தியாவில் தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் நடந்த தில்லை, இந்த இயக்கங்களின் விளைவாகத் தமிழகத்தில் மட்டுமே ஜாதி எதிர்ப்பு, தேவதாசி முறை ஒழிப்பு முதலியவை நிறைவேறியுள்ளன. இவை இடதுசாரி இயக்கங்களினாலேயே சாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தும், இடதுசாரி அரசை அமைத்த கேரள மாநிலத்தில் ஜாதீய எதிர்ப்பு இல்லை. அங்கே பெரியார் எழுத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரி கிறது. தேவதாசி முறையும் ஒழியவில்லை. தமிழவனார் குட்டிக்கர்ணம் போட்டுக் கோமாளித்தனமாகப் புகழும் கர்நாடகத்தின் கதை இதைவிட மோசம். ஆர்.எஸ்.எஸ். -ன் கேந்திரமே அதுதான். தேவதாசி முறையும் அங்கே உண்டு. ஆக இன்று ஞானி போன்ற மார்க்சியவாதிகள்கூட "பெரியாரியம்’ பேசுவதன் காரணம் கவனத்துக்குரியது. மிக எளிதாகப் பொது மக்களின் உள்ளத்தில் பயமற்ற பகுத்தறிவுப் பண்பைத்தூண்டும் சக்தி ஈ.வெ.ரா, அண்ணாதுரை எழுத்துகளில் உள்ளது. இது அகில இந்தியச் சொத்தாக மாறுவது அவசியம். இதற்கு அகாதமிப் பிரசுர வரிசை ஓர் உபகரணமாகும். 

கா.சு :
இன்றைய சமூகத் தலைமையை ஏற்பதற்கு திறன் (Merit) உள்ளவர்கள்தாம் தேவை என்று மீறல் பேட்டி யில் கூறியிருக்கிறீர்கள். திறனாளி ஊழல்வாதியாக இருந்து )? 

பிரேமிள் :
 ஊழல் என்பது 'திறன் ஆகாது. இங்கே ஒரு நுட்ப விபரம், ஹிட்லர் தனக்காக எதுவும் பணம் பண்ண வில்லையே என்று இங்கே ஆர். எஸ். எஸ். கூடாரத்திலிருந்து குரல் கேட்கிறது. ஊழல்வாதியினின்றும் வேறுபட்ட ரத்தவெறி பிடித்த இனவாதம்தான் அவனுடையது. ஊழல் என்பது நாட்டின் நிதியமைப்பைத் தனித்த அதிகாரிகள் கையாடும் நிலையாகவும், லஞ்சத்தின் மூலம் அதிகாரத் தொடர்பு கொள்ள வரும் மக்களைச் சுரண்டும் நிலையாகவும் பொருள் பெறும். ஹிட்லரின் இரத்த வெறியில் இந்த வகை ஊழல்கள் இரண்டாம் பட்சமானவை. அதாவது, இவற்றையும் உள்ளடக்கி இவற்றை எளிதாக நடைமுறைப்படுத்தும் பயங்கரவாத வடிவ மான இனவெறி பிடித்த சர்வாதிகாரக் கட்டுமானம் அவனுடையது. ஊழல் செய்யும் நம் அதிகாரிகள் எட்டமுடியாத வகையில் பயங்கரவாதத்தின் மூலம் யூதர்களின் செல்வங்களை அவனது அதிகாரிகள் கொள்ளையடித்தனர். அவர்களது சர்வாதிகார முறையில் செக்ஸ்கூட, பயங்கரவாதத் தாக்குதல் தான். இதன் பொருளாதாரப் பின்னணியில் கனரகத் தொழில் வரை ஜெர்மனியில் ஒரு சுபீட்சம் ஏற்படக்கூடிய விதமாக, முதலாம் உலகயுத்தத்துக் கடன்களை எல்லாம் இந்த சர்வாதி கார முறை மூலம் தட்டிக் கழித்தான் ஹிட்லர், கடனைத் திருப்பித்தராத இந்நிலைதான் அவனது ஜெர்மனியின் திடீர் அபிவிருத்தியாக மாறியது. இதைத் தனது பயங்கரவாதம், இனவெறி, சர்வாதிகாரம் ஆகியவற்றுக்குத் தேவையான மூலாதாரமாகப் பேணியமைதான், அவனைப் பார்த்து இங்கே உள்ள இனவெறியர்களை ஜொள்ளு வடிக்க வைக்கிறது. இது Meritocracy அல்ல; திறன், நன்மை இரண்டும் சேர்ந்த ஒன்றே Meritocracy ஆகும். இதற்கு தமிழில் சீராட்சி எனலாம். ஏனெனில், சீர்மையில் திறனும் நன்மையும் கலந்த ஒழுங் கமைப்பு, பொருள் பெறுகிறது. 

கா. சு

புதுமைப்பித்தனைப் பற்றி யாரும் சரியாகக் கணிக்கவில்லை என்று முன்றில் அரற்றுகிறதே! முன்றிலில் ஒடியாடும் அணில்கள் இதைச் செய்யலாமே! 

பிரேமிள் :

பத்திரிகை ஒன்றை வைத்துக் கொண்டு அதன் மூலம் தாம் வளைதோண்டி முன்னேறுவதற்கு உதவக் கூடியவர்களின் கோணங்கித்தனமான விமர்சனங்களையும், எழுத்துக்களையும் பிரசுரித்து வரும் முன்றிலார், புதுமைப் பித்தனை ஆய்வுப்பூர்வமாக அணுகத் திறன் கொண்டவரல்லர். முன்றிலாரின் தோஸ்த் சா. கந்தசாமி, வெவ்வேறு இடங்களில் பு, பி. யை மட்டம் தட்டியே விமர்சித்திருக்கிறார். முன்றிலுக்கு மூச்சுக் காட்டத் தைரியம் இல்லை. ஏனெனில் சா. க ஒரு கூச்சல்வாதி. பிரேமிளின் கருத்துகளைத்தான் இவர்கள் எதிர் பார்த்து சிவராத்திரி நோன்பு காக்கிறார்கள். எனது பார்வை *சமன் செய்து சீர்தூக்கும் பண்பைக் கொண்டிருப்பது, தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் இரண்டு கண்கள் என்கிறேன்.  கண்களுள் ஒன்றைக் குத்திக் கொண்டு ஒரு பக்கத்துக் காட்சியை மறுப்பவர்களாகவே பார்ப்பணிய வாதிகளும். திராவிடீயர்களும் ஒத்தைக் கண்பார்வை செலுத்துகிறார்கள். இந்த ஒத்தைக் கண் பார்வைக்கு உபயோகமாகிறவற்றைத் தந்திரமாகத் தமதாக்கும் வேலைதான் முன்றிலாருடையது. இல்லாவிட்டாலும் என் இயக்கத்தின் தர்மார்த்த சக்திக்குப் பின்னால் ஒண்டி நின்று கல்லெறிவதே இவர்கள் நோக்கம். 

கா. சு :

முன்றில் இப்படிச் செய்தால் கவிதா சரண் அப்பட்டமாகவே உங்களை ஒப்பிக்கிறது. சு. ரா. பற்றி, எழுதியவர் பெயரில்லாமல் கவிதா சரண் ஒரு கட்டுரை வெளி யிட்டபோது, உங்கள் கட்டுரையா என்று ஞானி என்னை விசாரித்தார். நான் கொஞ்சம் படித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றேன். அப்படியானால் உங்களின் கருத்துகளை வாங்கி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஞானி. 

பிரேமிள்

நவீன எழுத்தியல் பற்றி விவஸ்தையற்ற விதமாக எடுத்தெறிந்து எழுதியுள்ள கவிதாசரண் - வேதநாயகம் பிள்ளை, பாரதி, பு. பி. ஆகியோரிலிருந்து இன்றுவரை எழுதி வருவோர்களைத் தேர்ந்து எடுத்தாவது விமர்சித்து ஒரு விமர்சகராகத் தம்மை நிறுவிக் கொண்டவரல்லர். எனவே இவர் 'டுபுக்’ என்று சு. ரா. பற்றி என்னை அடியொற்றிக் கூட எழுதுவதற்கு உரிமை அற்றவர். முன்றிலும் இவரும் செய்வது வழுக்கைத் தலையில் நரை பிடுங்கும் வேலையைத்தான். ஏதோ நான் எழுத்து காலத்தில் எழுதியது பார்ப்பனியச் சார்புடையது என்று அழுது வடிந்தபடியே, "பிரேமிள் நிறைய பேசவும் எழுதவும் வேண்டும்' என்று உயர இருந்து பிச்சை கேட்கும் முன்றிலார், எனது கருத்துகள் மேற்படி, வேலைக்கு உபயோகமாகப் பிறக்க வேண்டும் என்றே இளிக்கிறார். தமிழ வனின் விவஸ்தையற்ற கட்டுரை போன்றவற்றை ஆசிரியக் கண்ணோட்டமற்றுப் பிரசுரிப்பது; இந்த தமிழவனுக்கு பன்னீர்செல்வத்தின் பிதற்றல் பாராட்டு - அப்படியே அவரது பன்னீர், விக்ரமாதித்யன் மீதும் தெளிக்கப்படுகிறது. விக்ரமாதித்யனும் முன்றிலாரும் ஒரே ஜாதி என்பது கூட நேர்ப் பேச்சுகளில் நாறுகிறது முன்றில் தர்பாரில், முன்றில், வெளிப்படையான ஒரு அரங்கமல்ல; அதில் வளைகள்தாம் தோண்டப்பட்டு பெருச்சாளிகள் குடியிருக்கின்றன. ஏனெனில், ஈ.வெ. ராவுக்கும் அண்ணாதுரைக்கும் சாகித்ய அகாதமியில் இலக்கியப் பிரசுரிப்புத் தேவையில்லை என்று தமிழவன் கூறிவிட்டு, பின்னாடி அரண்டுபோய் எழுதிய கட்டுரையை முன்றில் - 15 பிரசுரிக்கிறது. இதைக் கைப்பிரதியில் படித்துவிட்டு பதில் எழுதிக் கொடுத்தேன். அதே இதழில் தமிழவனின் பல்லிளிப்புடன் போடுவதற்காக, ஆனால் முன்றிலின் பெருச்சாளி சாம்ராஜ்யம் இதைச் செய்யவில்லை. அடுத்த இதழில் போடுவ தாகச் சொல்லிவிட்டு போடாமல் விட்டதுடன், ஏற்கனவே காலக்ரமம் பத்திரிக்கையில் வந்த என் 'சூன்யவம்சம் கவிதையை மட்டும் போட்டிருக்கிறது. பிறகு லயம் பேட்டியில் தமிழவனது மேற்படி பிரச்சினை சிறிதளவு பதில் பெற்றதும், (முன்றில் -17ல்) தமக்கு தரப்பட்ட கட்டுரை பிரசுரிக்கப்படத் தேவை இல்லை என்று பெருச்சாளிப் பொந்துக்குள் பூந்து கொள்கிறார் முன்றிலார், ஏன்? என் கட்டுரைக்குப் பதில் தர அவராலும் முடியாது. அவர் எவருடைய கடாட்சத்துக்காக அதைப் பிரசுரிக்காமல் விட்டாரோ அந்தக் கார்லோஸ் தமிழவனாலும் முடியாது. என் 'சூன்யவம்சத்தைப் போட்டுவிட்டு அதற்கு மட்டும் தி. க. சி. யின் அரண்டான் மிரண்டான் எதிரொலியைப் போடுகிறார் முன்றிலார்.என் கட்டுரையில் 'அடா!' என்று இருக்கிறதாம். இதைத் தயவு செய்து எடிட் பண்ணும்படி முன்றிலார் கேட்டு எடிட் பண்ணிக்கூட நான் கட்டுரையைக் கொடுத்திருக்கிறேன் என்பதும் இவ்விடத் தில் குறிப்பிட வேண்டும். 

(இக்கட்டுரை சென்ற இதழ் லயத்தில் பிரசுரம் பெற்றிருக்கிறது.) 

கா. சு

 சுபமங்களாவில் எழுத்தாளர்களின் போட்டோக்கள் வெளிவரும் நேர்த்தி குறித்து நீங்கள் சொன்னது முன்றில் 16-ல் திரித்துக் கூறப்பட்டிருந்தது. 

பிரேமிள்

எழுத்தாளர்களை நடிக, நடிகையர்களாக்கி செயற்கையாக சுபமங்களா? படம் பிடித்துக் காட்டுகிறது. ஒர் எழுத்தாளின் ஆத்மாவைப் படத்தின் மூலம் வெளிக் கொண்டு வருவதுதான் சரி என்று மீறல் பேட்டியில் கூறிய நான், உதாரணமாக மெளனியையும், க. நா. சு. வையும் ஸோன்ரெக்ஸா எடுத்த படங்களை குறிப்பிட்டு, விபரம் தந்தி ருக்கிறேன். ஆனால் இது ஏதோ போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற விஷயம் என்று நினைத்து "நபக்கவ் கூட போஸ் குடுத்தாரு என்று சுபமங்களாவைப் பார்த்து ஜொள்ளு வடிக் கிறார் முன்றிலார் நான் குறிப்பிடும் ஸோன்ரெக்ஸா படங்களும் கூட, மெளனியையும், க.நா.சு. வையும் போஸ் கொடுக்க வைத்து எடுத்தவைதாம். போஸ் எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதுதான் விஷயம். பின்னாடி நீலபத்மனாபனை கோவில் முதலிய பின்னணிகளோடு கலந்து, அவரது எளிய ஆடையும், தாடியும் சீரியஸ்ான முகத்தோற்றமும் வெளிப்படும் விதமாக, சுபமங்களா வெளியிட்டிருக்கிறது. இது விதிவிலக்கு. 

முன்றிலாருக்கு அறிவார்த்தம் வராது - அவரது பார்ப்பன எதிர்ப்பியக்கம் கூட சமூக விரோத விஷம்தான். இதனால் அவரது வேலை முன்பின் முரணாகிறது. ஓர் உதாரணம்; முன்றில் 14-ல், தமிழகக் கோவில்கள் ஆரியருடையவை என்ற வெ. சா. வின் கூற்றை மறுக்கும்போது, 'ஆரியர்கள் வட துருவத்திலிருந்து கோவிலைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு வந்தார்களா?" என்று கேட்கும் முன்றில், பிந்திய இதழில், ஆரியர் மெஸப்பத்தோமியாவிலிருந்து வந்ததாக வையாபுரிப்பிள்ளை கூறியதைப் பிரசுரிக்கிறது. நேரே வட துருவத்திலிருந்து எக்ஸ்பிரஸ் பிடித்து ஆரியர்கள் இங்கே வரவில்லை. இந்தியத் தமிழகக் கோவில்களின் சாயல்கள் ஏற்கனவே உருவாகி இருந்த சமீப கிழக்கில் ஊறியவர்களாகவே இங்கு வந்தனர். இந்த சமீப கிழக்கில் நமது கோவில்களின் முன்மாதிரிகள் உள்ளன. இப்படிச் சிந்திக்கக் கூடிய பிரக்ஞை அமைப்பு அற்றது முன்றிலாருடைய ஜன்மம். 

கா. சு :
மனித வக்ரம் சார்ந்த விதிவிலக்குச் சிந்தனை என்றும் இறக்குமதிச் சரக்கு என்றும் நவீன இலக்கியத்தைக் கண்டி க்கும் ‘கவிதாசரண் பத்திரிகை ஞாபகத்துக்கு வரு கிறது. 

பிரேமிள் : "விதிவிலக்கு" என்று எதுவுமே கிடையாது. இக்குரலை அன்று எழுப்பியவர்கள் கல்கி, ராஜகோபாலாச்சாரி போன்றோர். இன்று சிறு பத்திரிகைக்காரர்களின் தாக்கம் வெகு ஜனப் பத்திரிக்கைகளை மட்டுமல்ல, பண்டித மண்டலங்களை யும் பாதித்திருக்கிறது. குமுதத்திலிருந்து தமிழ்ப்பொழில் வரை, ஏதோ ஒரு கோணத்தில் சிறுபத்திரிகை சார்ந்த பெயர்கள், பிரச்சினைகள் எதிரொலிக்கின்றன. தாம் உவந்து அட்டையில் அலங்காரமாக வெளியிடும் மாடர்ன் ஆர்ட்டையும் ‘கவிதா சரண் இறக்குமதிச் சரக்கு என்று காண வேண்டும். இது ஒரு மோஸ்தருக்காகச் செய்யப்படுகிற ஒன்றே தவிர வேறல்ல. 

கா. சு முன்றில், கவிதாசரண் போன்றவைகளுக்கு யூனிவர்சலான பார்வை இல்லை என்கிறீர்கள், 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் கவிதையைக் கணையாழியில் என்.எஸ். ஜகந்நாதன் குறிப்பிட்டு, இந்தக் கவிதைக்கும் திராவிட இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டபோது, சம்பந்தம் உண்டு என்றது கவிதாசரண் ஆனால் எப்படி, என்ன சம்பந்தம் என்ற விளக்கமில்லை. 

பிரேமிள் : கணியன் பூங்குன்றனாரின் கவிதையுடன் திராவிட இயக்கம், பார்ப்பன இயக்கம், கணையாழி, கவிதா சரண், முன்றில் எதுவுமே உரிமை கொண்டாட முடியாது. வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள், சங்கப் பாடல்கள், சித்தர் பாடல்கள் என்ற நமது பொக்கிஷங்களுக்கும் இந்தக் கணையாழி - ஆரியப் பார்ப்பான்கள், முன்றில், கவிதாசரண் திராவிட பார்ப்பான்கள் - இரு பகுதியினருக்குமே தொடர்பு இல்லை. இவர்கள் மேற்படி பொதுவான பொக்கிஷங்கள் மீது தங்கள் சாக்கடைக் குட்டை களில் கிடந்தபடி தங்களுடைய குறுகல்வாதச் சேற்றைத்தான் வாரியடிக்கிறார்கள், தமிழும் சமஸ்கிருதமும் ஆன்மீகப் பிணைப்பு கொண்டவை. தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்கு போயிருக்கக் கூடியவை கூட அநாதி காலத்தில் இனப் பாகு பாட்டை மீறிய தமிழ் ரிஷிகள், ஆரிய ரிஷிகள் ஆகியோரின் சங்கமம் எதனுடையவோ ஒரு விளைவு என வேண்டும். இத்த கைய சங்கமம் துவேஷங்களுக்கு அப்பாற்பட்ட உந்நத இயக்க மாகும். இப்படி இந்தியவியலை ஒரு பொதுப் பார்வையோடு அணுகுகிற என்னைப் போன்ற ஒருவனது பார்வை முற்றிலும் வேறு விதமானது. சரித்திர விபரங்களை அனுசரிப்பதற்கும் வெறுப்புகளை உமிழ்வதற்குமிடையே வேறுபாடு தெரியாதவர் கள்தாம் இந்த ஆரியப் பார்ப்பான்களும் திராவிடப் பார்ப்பான் களும் பூங்குன்றனாரின் கவிதையை எடுத்தால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரியைத் தொடரும் வரி 4 திதும் நன்றும் பிறர்தர வாரா' இது நாடோடித்தனம் என்று ஆரியப் பார்ப்பான்கள் கூறினால் தங்களுடைய பிறப்புறுப்புக்களையே அறுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஏனெனில் இது ஆரியர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்துகிற திராவிடப் பார்ப்பான்களுக்கும் ஸ்பெஷல் சொத்து ஆகாது. 

கா. சு

தமிழ் வாதத்தை நவீன இலக்கிய களத்துக்குள் நுழைக்கும் பணி இன்று முடுக்கப்பட்டுள்ளதே? 

பிரேமிள்

ஆம். அவர்தான் என்று எழுதினால் ராங். "அவர்தாம்' என்பதே கரெக்ட். இந்தத் தத்துவவாதிகளின் பார்வையில் பாரதி, புதுமைப்பித்தன் - எவருக்குமே தமிழ் கரெக்டாக எழுதத் தெரியாது. ஆனால், நான், இது போன்ற நியதிகளைக் கட்டுரையில் கடைப்பிடிப்பவன். இருந்தும், படைப்பியல் எழுத்து பேச்சுப்பாணியை ஒட்டி இருப்பதே நிரடல் இல்லாத நடைக்கு நல்லது. இதை உணர்ந்திருந்தவர் கள்தாம் (தான் அல்ல) பாரதி, பி. பு, போன்றோர். உரை யாடலில் மட்டுமின்றி, பாத்திரங்களின் பார்வைகளைப் பிரதி பலிக்கும் இதர பகுதிகளுக்கும் இலக்கணத்தின் இறுக்கம் உதவாது. இதை இலக்கியச் சுரணை உள்ளவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும். 

கா. சு : 'விருட்சம் கவிதைகள் முன்னுரையில், "உண ராம லேயே வசன கவிதைகளைப் பாரதி எழுதியாக ‘சாஸ் திரியப் பார்வை செலுத்துகிறார் ஞானக் கூத்தன். 

பிரேமிள் : பாரதி, "வசனகவிதை" என்ற தலைப்பிலேயே ஒரு நீண்ட படைப்பைத் தந்துள்ளார். இந்தப் படைப்புக்கு, படைப்பை வெளியிட்டவர்கள் தாம் ‘வசனகவிதை” என்ற பெயரை அளித்தார்களா இல்லையா என்பது ஒரு பிரச்சி னையே அல்ல. ஏனெனில் படைத்தவன் பாரதி, படைப்பு, நிச்சயமாக வசனத்தை மீறிக் கவிதையைச் சாதிப்பது, இதை பாரதி உணராமல் எழுதியதாகத் தொனிக்கும் இந்த ‘சாஸ் திரீய பூச்சாண்டியாரை விடவும் ஆங்கில, சமஸ்கிருதப் பயிற்சி, கூடவே பிரெஞ்சு மொழி ஞானம் வாய்ந்திருந்தவர் பாரதி. அவர் ஏதோ குருட்டாம் போக்காக வசன வடிவில் கவிதை எழுதியதாகப் பிதற்றுவது, குருட்டாம் போக்காகக் கவிதை எழுதும் ஒருவரின் குருட்டாம்போக்குக் கருத்து. இது அதிகப் பிரசங்கித்தனம், 

கா. சு 3 கவிதை பற்றி வெகுஜனத் தளத்தில் பேசப்பட்ட தைக் கவனித்தீர்களா? 

பிரேமிள் : ஒரு மொழியின் உச்சகட்ட சாதனை கவிதை தான் என்பதை உணராதது வெகுஜன இலக்கிய உலகம். கவிதைக்கு அடுத்து சிறுகதை, பிறகு நாவல். உயர்ந்த எழுத் தியலார்களின் தகுதிகளும் இந்த வரிசையிலேயே வரும். தினமணிசுடர் பேட்டியில் தமிழில் மைனர் பொயட்ஸ் கூட இல்லை என்கிறார் சுந்தரராமசாமி என்றால், வேறொரு பத்திரிகையில், கவிதையின் எதிர்காலம் பற்றி ஆருடம் சொல் கிறார் ஜெயகாந்தன் - இனி கவிதைக்கு இடம் இல்லை என்று! 

லயம் 47 

படிப்பகம்padippakam 

கவிதை இன்றேல் கலையின் அம்சமும் தத்துவத் தேடல் ஈறான எந்தச் சமூகவியலும் கூட இல்லாத காட்டுமிராண்டித் தனம்தான் நிலவும், இதை உணர பல்துறைப் பிரக்ஞை தேவை. 'மைனர் பொயட் கூட இல்லாத ஒரு மொழி சார்ந்த கலாச்சாரத்தில் மகான்கள் பிறந்திருக்க முடியுமா?' என்று சு. ரா. விடமும், "எதிர்காலம் என்றால் அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகள் நம்முடைய எதிர்காலத்தில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனவே, அங்கெல்லாம் கவிதை காலாவதி யாகிப் போச்சோ?' என்று ஜெயகாந்தனிடமும் கேட்டிருக்க வேண்டும். இவர்கள் தங்கள் சுய பிம்பங்களுக்கு குஞ்சலங்கள் கட்டி "தத்தக்க பித்தக்க என்று ஆடுவதைப் பார்த்து "ஆ, ஊ என்று உச்சக்கட்ட இன்பம் அடைந்து கொண்டிருக்கிற அறி வுலக நபும்சகர்கள், இப்படி இவர்களிடம் கேட்க முன்வருவ தில்லை. 

கா. சு நவீன தமிழிலக்கியத்தின் மதிப்பீட்டுச் சீர் குலைவு பற்றிக் கூறுகிறீர்கள். இந்த மதிப்பீடுகள் ஆரோக்கிய மாக ஆரம்பித்த காலகட்டங்களைச் சொன்னால், சீர்குலைவு பற்றிய குறிப்பு இன்னும் தெளிவுபடுமல்லவா? 

பிரேமிள் : 1959-ல் ஆரம்பிக்கப்பட்ட எழுத்து பத்திரி கையினை இந்த நவீன மதிப்பீட்டியகத்தின் விசேஷமான ஆரம்ப முனையாகக் காட்டலாம். இதற்கு முந்தியே இதன் வேரோட்டங்கள் இருப்பினும் "எழுத்து ஒரு விசேஷ திருப்பு முனை எழுத்துவில் 1940-களின் மணிக்கொடி பரம்பரை, ஒரு விமர்சன அணுகுமுறை மூலம் புனர்ஜன்மம் பெறுகிறது. கலைப்பாங்கின் அடிப்படையில் பிச்சமூர்த்தி,மௌனி, லா.ச.ரா., புதுமைப்பித்தன் முதலியோர் ஆய்வுபூர்வமாக விசேஷிக்கப்படு கின்றனர். இருந்தும், "எழுத்துவுக்குக் கிடைத்த பொருளா தரவு இலங்கையின் தமிழிலக்கிய அபிமானிகளது சந்தாவாகத் தான் இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும் அதாவது, எழுத்து இயக்கத்தின் கலையியல் இந்தியத் தமிழில் காலூன்றி நின்றிருந்தும்கூட, அதன் இயக்கத்துக்குக் கிடைத்த பொருளூட்டம் இலங்கைத் தமிழரிடமிருந்துதான். இதனால் இலங்கைத் தமிழரின் பார்வைகள் எழுத்துவில் இடம் பெற வில்லை என்று கூறவும் இடமில்லை. எழுத்து இயக்கத்தின் அச்சாணி என்று குறிப்பிடக்கூடிய அளவுக்கு செயல்பட்ட பிரேமிள், அந்தப் பத்திரிகையில் 'தர்மு சிவராமு என்ற பெயரில் எழுதியவை இவ்விடத்தில் கவனிக்கப்பட வேண்டும். 

48 லயம் ( ) 

படிப்பகம்padippakam 

அந்தச் சமயத்தில், மிகவும் நம்பிக்கைக்கு உரிய புதியவர்களாக க. நா. சு. குறிப்பிட்ட ஜெயகாந்தனே, சுந்தரராமசாமியோ 

இந்த அளவுக்கு மதிப்பீட்டியலைப் பேணிய எழுத்தாளர் களல்லர். இவர்களுடைய படைப்பியக்கம் கூட பின்னாடி 

வெவ்வேறு வகைகளில் கணம் அடையவே செய்துள்ளது. மதிப்பீட்டியலைப் பொருத்தவரை இவர்கள் செய்தது, செய்வது எல்லாம் தங்கள் படைப்புப் பாதணிகளுக்கு ஏற்ப, மதிப்பீட்டுப் பாதங்களை வெட்டும் னகளங்களாகி உள்ளன. இருவரது பார்வைகளும் வேறுபடுகிறபோது கூட மதிப்பீட்டியலின் நுட்பங்களை மழுங்கடிக்கும் வேலையைப் பொருத்தவரை, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். இவ்விருவரின் ஒற்றுமை, இருவருமே வேறுவேறு விதங்களில் புதுமைப் பித்தனை எதிரொளித்தவர்கள் என்பதே. 

கா. சு இவ்விரு எழுத்தாளர்களும் எந்த வகைப் படைப் பியக்கத்திலிருந்து புவனமடைந்தனர்? 

பிரேமிள் பிணக்கு கதையை அன்று எழுதிய அதே ஜெயகாந்தன் பின்னாடி, இலக்கணம் மீறிய கவிதை” என்ற மனோவியல் அபத்தக் கதை ஒன்றை எழுதி இருக்கிறார். "பிணக்கு வில் ஒரு குடும்பப் பெண், வயோதிபமான பிறகு தனது கணவர் என்றோ ஒரு விபச்சாரியுடன் கொண்ட தொடர்பை இனிமையாக அவர் நினைவு கூர்வதைக் கேட்டுப் பிணங்குகிறாள், பிணக்குடனே மரணிக்கிறாள். இதில் பெரிது படுத்தல் இருந்தாலும், தீவிரமான மனோதர்ம மதிப்பீடு சித்திரம் பெறுகிறது. விபச்சாரம் என்பதே மனோதர்மம் அற்ற மனிதவீழ்ச்சிதான். விபச்சாரம் செய்யும் நபர், அதை ஆதரிக்கும் சமூகக் கட்டுமானம், இரண்டுமே நசிவு நிலையில் உள்ளவை. இந்தச் சாமான்யமான நுட்பத்தைக் கூட இழந்த நிலைதான் பெரும்பாலான பிந்தைய காலத்திய ஜெயகாந்தனுடைய படைப்புகள், ஜப்பானில் ஒரு விபச்சாரி, தன்னுடன் ஜப்பானிய முதல்வர் பனத்துக்காக உறவு கொண்டதை வெளிப்படுத்திய உடனேயே அங்கே அரசாங்கம் மாறி இருக்கிறது. பொருளியல் ரீதியாக ஜப்பான், நம்மால் எட்டவே முடியாதோ என்ற எதிர் காலத்தில் உள்ளதை இலக்கியாரூட ஜாம்பவானாகிய ஜெய காந்தனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கா. சு படைப்பின் விஷய அடிப்படையில், ஜெயகாந்தன் ფა(Iნ மனிதாபிமானி என்று சொல்கிறார்களே? 

[ ] GULL u h 49 

படிப்பகம்padippakam 

பிரேமிள் : மனிதாபிமானம் வேறு, மலிவு விலைத் தர்மங் கள் (easy Virtues) வேறு. வேசிகளும் பொறுக்கிகளும் அவ்வப் போது உயர்குணங்களைக் காட்டினால் கூட அவர்களது "உயர்குணங்கள் வேசித்தனங்களையும் பொறுக்கித் தனங் களையும் நியாயப்படுத்தி விடமாட்டா. இந்த நுட்பம் கசமுசா வாகி விடுகிறது ஜெயகாந்தன் கையில். காரணம், வேசித்தனத் துக்கும் பொறுக்கித் தனத்துக்கும் மகுடம் சூட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே அவர் இந்த நசிவு நிலையில் உள்ளவர்களின் மீது உயர் குணங்களைச் சுமடேற்றுகிறார். மனிதப் பண்புகள் தகுந்த அத்திவாரங்களின் மீதே நிமிர முடியும், நசிவு நிலையில் உள்ளவர்களினால், உயர் பண்புகள் பேணப்பட முடியாதவை. வேசிகளும், பொறுக்கிகளும் காட்டும் கெட்டிக்காரத் தனங்களும், பவ்யங்களும், சந்தர்ப்ப சாமார்த்தி யங்களும் அவர்களுடைய தொழில் நுட்பங்களே தவிர உயர் குணங்களல்ல. இத்தகைய தெளிவுகளை, வேண்டுமென்றே மழுப்பி எழுதும் ஜெயகாந்தன், சொல்கிற கதைக்குத் தேவை யான உண்மை விபரங்களில் கூடத் தமது பாட்டுக்கு ரீல் விடு கிறார். ஒழுங்கான லாட்ஜில் ஹீரோவின் ரூமுக்கு வேசி வந்து போனால், பிரச்சினையை லாட்ஜ் உரிமையாளர்தான் வந்து சந்திப்பார். இப்படிச் செய்தால் ஜெயகாந்தனின் புடுங்கி ஹீரோ பாடு திண்டாட்டமாகி விடும். எனவே லாட்ஜ் உரிமை யாளரைத் தவிர்த்துவிட்டுப் புடுங்கித்தனமாக ஹீரோ பேசு வதற்கு ஏற்றவிதமாக மற்ற ரூம்காரர்களை இளிச்சவாயர் களாக்குகிறார் ஜெயகாந்தன். எத்தகைய சாத்தியக் கூறுகளைக் கொண்ட சொரூபமாக மனிதர்கள் இருக்க முடியும் என்ற நிதானம் அற்று, அவர்களை மலிவாக்கிப் படம் பிடிப்பது என்ன வகை மனிதாபிமானமோ? 

கா. சு : சுந்தரராமசாமியையும் ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனுடைய இமிட்டேட்டர்கள் என்று சொல்ல முடியாதல்லவா? 

பிரேமிள் : புதுமைப்பித்தனும் பாரதியும் நவீன தமிழியலின் ஆளுமைகள். இவர்களுடைய இயக்கம் பலருக்கு ஒரு பிரமாண்ட மான எகிறு தளமாக (spring board) ஆக இருந்திருக்கிறது. இது இயற்கையான இலக்கிய நிகழ்வு. இமிட்டேஷன் என்பது கையாலாகாத செயல். சு. ரா.வும் ஜெ. கா. வும் இப்படி கையாலாகாதவர்களல்லர். இருவருமே ஆபூர்வமான திறனாளி களாகத்தான் பிறந்தார்கள். அப்போது இவர்களது இலக்கியத் தின் எகிறுபலகையாக பு. பி. யின் ஆளுமை இருந்திருக்கிறது. 

50 லயம் ( ) 

படிப்பகம்padippakam 

அதிலிருந்து இவர்கள் எகிறிச் சென்ற வழிகள் இவர்களுடை யவைதாம். அந்த வழிகளில் இவர்கள் செய்துள்ளவை பற்றி மொத்தமாகப் பார்த்தால், எங்கேயுமே எஸ். பொன்னுதுரையின் காட்டுத்தனமான இமிட்டேஷன்களையும் திருட்டுக்களையும் காண முடியாது. என்னைச் சந்தித்த அன்றைய சந்தர்ப்பத்தில், *உந்தச் சீசூ செல்லப்பாவைப் போல நான் முன்னூறு பக்கம் எழுதுவேன்' என்றவர் இந்த எஸ். பொ. வேசித்தனமான எழுத்துதான் இவருடையது. இவருடைய நடைகூட கொச்சை யாக இல்லாத இடங்களில் லா. ச. ரா. இமிட்டேஷன்தான். இது மட்டுமல்ல, செல்லப்பா, பு. பி. , எழுத்து வில் ஆரம்பித்து ஒரு புதிய பரிமாணத்தையே தமிழ் உரைநடைக்குத் தந்துள்ள எனது நடை, எல்லாமே ஏகக் களேபரமாக இந்தக் கோமாளி யால் இமிட்டேட் பண்ணப்பட்டிருக்கின்றன. இவரைவிட பல மடங்கு உயர்தரமானவர் தமிழகத்தின் ஜெயகாந்தன் என்பதை யும் இங்கே குறிப்பிடுவது என் கடமை. ஜெயகாந்தன் எப் போதுமே திருடி எழுதியதுமில்லை, போர்னோ பண்ணியது மில்லை. ஆனால் மொரேவியா, டால்ஸ்டாய் எழுத்துகளைத் தழுவி எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன். அவர் எழுத்து பின்னாடி கூஷினமடைந்துமிருக்கிறது. (சினிமாத் துறையில் ஜெயகாந் தனின் சாதனை சிறப்பானது. அது வேறு விஷயம்). ஜெயகாந்தனைவிட நீண்ட காலம் இலக்கிய இயக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டிருந்தும் சுந்தரராமசாமி, முழுமையாகப் படைத்தவை ஒரு சிறுகதையும் அதன் பொருள் சாயல் உள்ள ஒரு கவிதையும்தான். சிறுகதை ‘பல்லக்குத் தூக்கிகள்’. கவிதை; "மூடு பல்லக்கு”. இந்தப் படைப்புகளில்தான் பின்னாடி அவர் செய்த ஜாதீயக் கிசுகிசுத்தனங்கள் எதுவும் இல்லாத பொருளம்சம் ததும்பி நிற்கிறது. அர்த்தமற்ற சுமையாக எல்லாவித இயக்கங்களும் பொருள் பெறக்கூடிய கருக்களம் இவற்றில் உண்டு. 'வாசனை “போதை" முதலிய சிறுகதை களும், அவரது 'நாய்க் கவிதைகள்' போன்றவையும் எனது "கருக்களம்' (கொல்லிப்பாவை) கட்டுரையில் விமர்சிக்கப் பட்டுள்ளன. ஜே. ஜே. சில குறிப்புகள் பற்றி - ("ஞானரதம்" தீசஷண்யம்" இரண்டிலும்) எனது கட்டுரையான "புதிய புட்டியில் பழைய புளுகு வந்துள்ளது. இவையும் ஞானக் கூத்தன் பற்றிய எனது பார்வைகளும் இடது, வலது, எதிர் கலைச்சாரிகளினால் என் பெயர் குறிப்பிடப்படாமலேயே தாறு மாறாக எதிரொலிக்கப்பட்டுள்ளன. இப்போது, முன்றில், கவிதாசரண், சாரதா, ஊடகம் - சாரிகளும் எனது பார்வை களையே எடுத்துப் பவுடர் பண்ணி, தங்களின் பொச்சரிப்புச் சேற் றையும் சேர்த்து அரிதாரமாக்கிப் பூசிக் கொண்டு நிற்கின்றனர். 


கா. சு நீங்கள் ஏன் புதிய எழுத்தாளர்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை? 

பிரேமிள் பெயர் குறிப்பிடும் ரகமான விமர்சனம் எனக் குப் பிடிக்காத ஒன்று எழுத்துத் திறன் இருந்தும் பார்வைத் தீர்க்கம் இல்லாத விதமாகச் சிலர் எழுதி விடுகிறார்கள். இதே வரிசையில்தான் எழுத்துத் திறன்கூட இல்லாத ஞானக்கூத்த னும் நிற்கிறார். இவர்களுடைய குற்றம் வேறு வேறு முகாம் களில் இருந்து இழைக்கப்பட்டாலும், ஒரே விதமான வக்ரம் என்ற அளவில் இவர்கள் இணைகிறார்கள். இதிலிருந்து தப்பித்துத் தெளிவுடன் எழுத்துத் திறனைக் காட்டுபவர்களும் கூட போலித்தனத்தைக் கொஞ்சம் கெட்டித்தனமாக வெளியிடு பவர்களாகி விடுகிறார்கள். பார்வைத் தீர்க்கம் சம்பந்தமான கோளாறு இல்லாதவர்கள் சிலர் இருந்தும் பார்வைத் தீர்க்கத் தின் தரிசனம் சார்ந்த ஆழம், சமூக விமர்சனாபூர்வமான தீவிரம் என்பவை அருகியே இன்று பிறக்கிறது. தலித்துகளிடம் உள்ள வெடிப்புறு நிலையில் இனித்தான் நாம் இந்த ஆழங்களை எதிர்பார்க்க வேண்டும். 

கா. சு தலித் எழுத்தாளர்களையும் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே? 

பிரேமிள் : ஒரு சுயாதீனமான சமூகப் பெருநிகழ்ச்சிக்கும் தனிமனித மேதமைக்கும் வேறுபாடு உண்டு. தலித் இயக்கம் ஒரு சமூகப் பெரு நிகழ்ச்சி தானே தவிர அதற்குள் இருந்து மேதமை எதுவும் தோன்றிவிடவில்லை. தோன்றித்தான் ஆகவேண்டும் என்பதோ, அத்தகைய தோற்றத்துக்கு நாம் காத்திருக்க வேண்டும் என்பதோ அந்தப் பெருநிகழ்ச்சியின் வீடில் யத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. எனவே தான் , இன்னின்ன எழுத்தாளர்கள் என்று அவர்களுள் எவரை யும் முக்கியப்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறேன். ஆயினும் "பஞ்சமர் நாவலை எழுதிய டேனியல் என்னால் ஏற்கனவே வேறு ஒரு சமயத்தில் இலக்கியக் கட்டமைப்புக்குள் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவரது நாவல்கள், நீலபத்மனாபனின் தலைமுறைகள் போன்று சரித்திரார்த்தமானவை. 

இன்று வெவ்வேறு தரங்களில் எழுதி வருகின்றனர் தலித் இயக்கத்தினர். தலித் இயக்கம், நுட்பமான விதத்தில் சமூக தர்சனப் பண்புள்ள இலக்கிய விமர்சனத்தைச் செய்யாத அளவில்கூட வெடிப்புறப் பேசு' என்ற பாரதியின் இலக்கணத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் சுயாதீன சக்தி ஒன்றை வெளியிட்டு வருகிறது. இன்று இந்தப் பிராந்தியம் கவனிப்புப் பெற வேண்டும். இந்த இயக்கம், ‘தலித் சார்பு காரர்களுக்கும் அப்பால் நடப்பது. மேலும் தலித் இயக்கம், இலக்கியப் பண்பு களை (பு. பி. , பாரதி, பிரேமிள் தரத்தில்) பேணுகிறதா இல்லையா என்பதற்கும் அப்பாற்பட்ட வெடிப்புறு நிலை (Explosion) என்ற அளவில் கவனிப்புக்குரியது. இதை ஒரே யடியாக இருட்டடிப்புச் செய்பவர்கள், காலம் காலமாகப் பதிவு பெறாத நமது சரித்திர இருள் மண்டபத்துக்குள் இத்தகை யோரின் சுயபிரக்ஞாபூர்வமான சிருஷ்டிக் குரல்கள் இருட்டடிப் புக்கு உள்ளாகி இருக்கலாம் என்பதற்கே நிரூபண காரணங் களாகின்றன. 

கா.சு :
இன்றைய கவிதை பற்றி. 

பிரேமிள்
அழகியசிங்கர் போன்றோரின் எழுத்துக்கும் ஞானக்கூத்தனின் வீர்யமற்ற, ஆழமற்ற எழுத்துக்கும் இடையில் வேறுபாடு இல்லை. இருந்தும், இவர்கள் தமது சுய மனித மனோநிலைகள் பற்றியே எழுத முயற்சிப்பதால், ஞா.கூ.வின் சமூக வக்ரம் இவர்களிடம் இல்லை. இவர்கள் ஞா.கூ. வை விடவும் உயிர்த் தன்மையுள்ள கவிதைகளைக் கூட சில வேளை எழுதிவிடுகிறார்கள் என்பதுதான் பகடி. இவ்வகையில் 1984-ல் தற்கொலை செய்து கொண்ட ஆத்மாநாம், பல்வேறு அம்சங்களில் ஞா.கூ. வை விட மிகச் சிறப்பான கவிஞர். 

கா.சு

அழகியசிங்கர் உங்களுடனும் உங்கள் விமர்சனங்கள் படைப்புகள் ஆகியவற்றோடும் பழகுகிறார். இருந்தும், கவிஞரே அல்லர் என்று விமர்சனபூர்வமாக நீங்கள் நிறுவிவரும் ஞானக்கூத்தனை அவர் கவிஞராகக் கருதுவதுடன் அவர் எழுதுகிற எதை வேண்டுமானாலும் பிரசுரிக்கிறாரே? 

பிரேமிள் :

ஞானக்கூத்தன் தமக்கு வேண்டியவாளுக்குப் பிண்டம் போடும் பில்லி சூனியவாதி. அழகியசிங்கர்,முன்றிலார், தமிழவன், நாகார்ஜுனன், சா. கந்தசாமி, வாஸந்தி, சுஜாதா போன்றோரை அருமையான எழுத்தாளர்கள் எனக் கூறி இவர் பிடித்து வைத்திருக்கிறார். இதை விடுத்து, வெறுமனே தமது ‘கவிதை எழவுகளை மட்டும் இவர் எழுதிக் கொண்டிருந்தாரானால் இவரை எவரும் சீந்தக்கூட மாட்டார்கள். இவரது பில்லிசூனியத்துக்கு வசப்படக்கூடியவர்கள் தீவிரமான மதிப்பீட்டுக்கு முன் தாக்குப் பிடிக்க முடியாதவர்கள்தாம் ஓர் உதாரணம் இவருக்கு 'கவிஞர்" என்று அடைமொழி தரும் எஸ். வைத்தீஸ்வரன். இவ்வளவுக்கும் வைதீஸ்வரன் ஒரு சிறந்த கவிஞர். இவர் போய் ஒருவரிக் கவிதையைக்கூட சாதித்திராத ஞா.கூ. வைப் பார்த்து கவிஞர் என்று கூறுவது ஆபால மாகவே படுகிறது. ஞா.கூ. வின் பில்லிசூனிய வேலைக்கு குரு நகுலன், க.நா.சு, வும் இதை அவ்வப்போது சுயலாபம் கருதிச் செய்துள்ளார். இரண்டும் முக்கிய உதாரணங்கள் : க.நா. சு. வின் மொழிபெயர்ப்புப் புத்தகங்களைத் தாம் போடப்போவதாக கெளதமசித்தார்த்தன் அவரிடம் சொன்னதை ஒட்டித்தான் அவரைச் சிறப்பித்து மதிப்புரை தந்திருக்கிறார் க.நா.சு. இதே போல் அவரைப் போய் பார்த்து பல்காட்டி அவரது புத்தகத்தை போட முன் வந்து, தம் பத்திரிகைக்கு சிறப்பாசிரியராகவும் போட்டதால்தான், முன்றிலாரின் பெயர் குறிப்பிட்டார் க.நா.சு. இது பில்லி சூனியமாகவே மாறிவிடுகிறது ஞா.கூ. கையில். 

கா.சு

ஏ.கே. ராமானுஜனின் மறைவு குறித்துக் கட்டுரை எழுதிய சிலர், சந்தடி சாக்கில் தம்மைப் பிரதானப்படுத்திக் கொண்ட கோலாகலத்தைப் படித்தீர்களா? 

பிரேமிள் :

ஏ.கே. ராமானுஜன் சொல்வதைப் பாருங்கள் : "இந்தியாவின் இரண்டு பேரிலக்கிய (கிளாஸிக்கல்) மொழி களுள் ஒன்றான தமிழ் மட்டும்தான் சமகால இந்தியாவில் ஒரு பேரிலக்கியத் தொடர்ச்சியோடு இன்றும் சுவாதீனத் தொடர்பு கொண்டு இயங்கும் ஒரே மொழி. (After Word-The Interior Landscap+1) ஆழ்வார் பாசுரங்களிலிருந்து தேர்ந்து அவர் செய்த மொழி பெயர்ப்பு நூலான "Hymn to the Drowned" நூலின் பின்னுரை இதைவிட ஒரு படி மேல். சமஸ்கிருதவாதி கள் எவ்வளவு பெரிய துரோகங்களைத் தமிழுக்கு இழைத்தனர் என்ற விவரங்களை அதில் காணலாம். ஏ. கே. ரா.வின் இந்தப் பார்வைகள் தமிழின் வர்ணாஸ்ரம தர்மவாத சாக்கடை பிரஷ் களினால் பரிபூர்ணமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. விருட்சம் இதழில் ஞா.கூ. என்ன பண்ணினார் ஏ.கே. ரா. பற்றிய கட்டுரையில்? ஏ.கே. ரா. வை விட்டு தம்மைப் பற்றி எழுதியுள்ளார் ஞா.கூ. தமது குப்பைகளை எப்படித்தான் எழுத முடிகிறது என்ற விதத்தில் ஏ.கே. ரா. சாதுர்யமாகக் கேட்ட கேள்விக்கு பதிலாக அவற்றைத் தாம் மனசிலேயே உருவாக்கி ஒரே பிரதியாக எழுதுவதாக ஞா.கூ. கூறியதும், இதற்குமேல் ஏ.கே. ரா. எதுவும் பேசாததும் அதில் கவனிக்கத்தக்கது. அதா வது எவ்விதத்திலும் செப்பனிடப்புடக்கூட இல்லை, ஞா. கூ" வின் கவிதைகள் என இதிலிருந்து ஏ.கே. ரா. அறிந்து கொண்டு வாளாவிருக்கிறார். இப்படி வாளாவிருப்பதன் உட்பொருளை *நானே ஃபஸ்ட்" டிஸ்ட் புரிந்துகொள்ளவில்லை. உண்மை யில் பால் வாலெரி (Paul Valery) என்ற பிரெஞ்சுக் கவிஞனை மேற்கோள் காட்டி, ஓர் இலக்கியச் சந்திப்பில், சென்னையில் இப்படிச் சொன்னவர் ஏ.கே. ரா : "நல்ல கவிதைக்கும் மோச மான கவிதைக்கும் இடையே உள்ள வித்யாசம், நல்ல கவிதை நன்கு திருத்தி எழுதப்பட்டது, மோசமான கவிதை அவ்வித மின்றி சும்மா எழுதப்பட்டது என்பதுதான்’ வாளாவிருந்ததன் மூலம் இத்தகைய விஷயங்களை ஞா.கூ. போன்ற மூளைக்குச் சொல்லிப் பயனில்லை என்பதைத்தான் ஏ.கே. ரா. வெளியிட் டார். இத்தகைய மூளை தான் ஞா.கூ. என்பதை ஆரம்பத்தி லேயே புரிந்து கொண்டவன் நான். 

கா.சு

ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுக்கோப்புக்குள் எல்லா விதமான இந்தியப் பிரதிமைகளையும் உள்ளடக்க முயற்சிக்கிறதே, இது எவ்வளவு தூரம் போகும்? 

பிரேமிள் :

ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரே லட்சியம் பார்ப்பனியம்தான். இந்தப் பார்ப்பனியத்தின் மூலம் லாபம் பெற முற் படுகிற எல்லா முனைகளும் இதனுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளும் என்ற நம்பிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு உண்டு அதாவது ஊழல், கயமை, அறிவுலக விபச்சாரம் என்ற மூலதனங்களே ஆர்.எஸ்.எஸ். சுடையவை. இந்த இயக்கத்தில் பிறந்த ஜெய மோகனைத்தான் பெயர் இல்லாமல் ‘பூசாரி எழுத்தாளர் என்று மீறல் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறேன். இவர் சிலேட் (நிர்-3, பெப்ரவரி 94) இதழில் தமிழுக்காக மாய்ந்திருக்கிறார். இவரே சென்ற வருட சுபமங்களா கூட்டமொன்றில் சமஸ்கிருதம் தெரியாதவன் நாவல் எழுதக் கூடாது என்று உளறியவரும். நாவல் எழுதுவதற்குரிய முக்கிய தகுதி, ஒருவனால் நீண்ட வியாசங் களை எழுத முடியுமா என்பதும், அதே சமயத்தில் அவனிடம் கலைப்பண்புகள் உள்ளனவா என்பதும்தான். வியாசம் (Essay) என்பதே கலைவடிவமாகும். இதற்கும் கட்டுரை (Artical) என்ற வடிவுக்கும் வேறுபாடு உண்டு. 

தமிழில் வியாசங்களை எழுதியோர் என்று தேடிப்பிடித்தால், முதன்மையாக, "எழுத்து 1960-ன் ஆரம்பங்களிலிருந்து பிரசுரம் பெற்றுவரும் (தர்மு சிவராமு என்ற) பிரேமிளைக் காண முடிகிறது. இதை உடனடியாக அடையாளம் கடுை கொண்ட பார்வைத்தீர்க்கம் அன்று செல்லப்பாவுக்கு இருந்திருக்கிறது. சுயசிந்தனையும், மொழியின் கலைப்பண்பும் சொல்கிற விஷயத்தை அறிவார்த்தமாக நிறைவேற்றும் மனோ தர்மமும் இல்லாவிட்டால் வியாசம் நிறைவேறாது. பிரச்சாரம், தகவல் பரிவர்த்தனை என்ற தேவைகளை நிறைவேற்றுவது கட்டுரை. இருந்தும் கட்டுரை எழுதுதல் என்பது, வியாசத் தின் ஆரம்பநிலை ஆகலாம். கட்டுரை எழுதும் வேலை பீடட லேசான ஒன்றல்ல. அதற்கும் ஒரு மனோதர்மம் வேண்டும். உண்மை சார்ந்த ஒழுக்கம் வேண்டும். இந்த அளவுக்கு வெங்கட் சாமிநாதன் எழுதிய பல கட்டுரைகளும் ந. முத்துசாமி யின் வேற்றுமை (பிரக்ஞையில் வெளியான தொடர்) கட்டுரை யும் சுந்தாராமசாமியின் சில கட்டுரைகளும் கவனத்துக்குரியன. மனோதர்மத்தின் தேவைகளை உதாசீனம் செய்யும்போது இவர்களது கட்டுரைகள் உள்க் கோர்வையின்மைக்கு ஆட்படு கின்றன. சி. சு. செல்லப்பாவும், க. நா. சு. வும் வியாசத்தின் லட்சணங்களை எட்டுமளவு நல்ல கட்டுரைகளை எழுதியவர்கள். சி. சு. செயின் மெளனியின் மனக் கோலம் இவற்றுள் அதிக வீச்சும் உள்ப்பிணைப்பும் கொண்ட மிக நீண்ட கட்டுரை. புதிய தலைமுறையில், இத்தகைய மனோதர்ம வீச்சை அடிப் படையாகக் கொண்ட செவ்விய கட்டுரையாளராக காலசுப்ர மணியத்தைச் சொல்லலாம், கலைப்பண்பும், சுயசிந்தனையும் இந்த அம்சங்களுடன் இனைந்தால் வியாசம் பிறக்கிறது. இவ்வளவையும் சொல்லாமல் வியாசம் என்றால் என்னவென்று &TճմԾT(Լplգ-LIT 351 

வியாசம் பெருமளவுக்கு கலைப்பண்புள்ள சுயசிந்தனையின் விளைவு, இதுவே புரட்சிகள் எல்லாவற்றுக்கும் ஊற்றான த துவச்சுனை, இது புத்தரிடம் தோன்றி மகாயானத்தை ஸ்தாபித்த நாகார்ஜனரிடம் சிகரநிலை பெற்றிருக்கிறது எனலாம். ஆனால் சமஸ்கிருதம், பெருமளவுக்குச் சொன்ன தையே திருப்பிச் சொல்லும் பதிவேட்டுத் தன்மையை அடிப் படையாகக் கொண்டது. மரபுகளின் தொடர்ச்சியே சமஸ்கிருதம் என்ற உபகரணத்தின் தொடர்ச்சி அதில் வியாசம் பிறந்த தில்லை. நாவலும் பிறக்காது. வியாசத்தின் அத்திவாரத் தேவைகள் என்று மேலே குறிப்பிடப்பட்டவற்றைப் பேனத் தக்க மொழி மரபிலே தான் நாவல் தோன்ற முடியும். சமஸ் கிருதக் கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம், சமஸ்கிருதம் தெரியாதவன் நாவல் எழுதக்கூடாது' என்று கூறுவது, சமஸ் கிருதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. 'சுயமாகச் சிந்திக்காதே, உண்மையைச் சொல்லாதே, பிரித்திரத்தைப் பதிவு செய்யாதே' என்ற அறிவுலக விபச்சாரக் கோஷம்தான் இது இதுவே! ஆர். எஸ். எஸ். கம்யூனிஸம், திராவிடீயம் யாவற்றி லும் உள்ளது. பார்க்கப் போனால், சமஸ்கிருதம் வெறுமனே பதிவுகளைச் செய்யும் மொழிக் கருவி (Liguistic device) தான். அது சுயசிந்தனை, திடீரென வெடிப்புறும் பேச்சு - எதற்கும் இடம் தராது. சமஸ்கிருதத்தைக் கற்க முனையும் எவருக்கும் தெரிகிற முதல் விஷயம் இது. சமஸ்கிருதத்தை மீண்டும்’ பேச்சு மொழியாக்கலாம் என்ற ஆர். எஸ். எஸ். உள்வட்டக் கூச்சல் ஒரு சூப்பர் பேத்தல். “மீண்டும் என்ன, எந்தக் காலத்திலுமே சமஸ்கிருதம் பேசப்பட்டதில்லை. இது தர்மானந்த கோஸாம்பியிலிருந்து சந்திரசேகரேந்திர சரஸ்வதி வரை நிபுணர்கள் வெளியிட்ட உண்மைக் கருத்து. ஆர். எஸ். எஸ். களினாலும், பரணிதரன்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்ட விபரம் இது, ஆனால் சமஸ்கிருதம் ஒரு மொழிக்கருவி என்ற அளவில் அது 'நன்கு செய்யப்பட்டது. இது அதை கம்ப்யூட்டர் micro processing - க்கு ஏற்றதாகக் காட்டுகிறது. 

நாவலுக்கு முக்கிய அடிப்படை, சுயத்தன்மையின் தரிசன மும் பார்வைத் தீர்க்கமும் (Focus of vision). அடுத்து சரித்திர உணர்வு, நீலபத்மனாபன், டேனியல் போன்றோரிடம் சரித்திர உணர்வு நிறைவுறுகிறது. இவை அணுவளவு கூட இல்லாமைதான் சுந்தரராமசாமியின் கோளாறு. அவரது "வாசனை', 'போதை" போன்ற சிறுகதைகளிலேயே இது இல்லை. சு. ரா.வை நாவலாசிரியராக ஊதிக் கொண்டிருக்கும் கும்பலிடம் மனோதர்மத்தின் நாடி எதுவும் துடிப்பதில்லை. சமீபத்தில் ஒருவர் தம்மால் திரும்பத்திரும்ப சு. ரா.வின் நாவலைப் படித்தனுபவிக்க முடிகிறது என்றார். சமாச்சாரம் என்ன? இந்த ஆசாமி, ஒரு பக்கா ஆர்.எஸ்.எஸ். உள்வட்டத்துக்காரர். இவரிடம் "நாடி (மீறல் சிறப்பிதழ் அதிரடிக் கவிதை)யைப் படிக்கக் கொடுத்தபோது முகம் சிறுத்துவிட்டது. காரணம் அவருக்கு நமது குடிமையின் பகிரங்க சுகாதாரமின்மை கூடப் புலனாகவில்லை. இத்தகைய வாசகர்களையும், இவர்களுக்கு எழுதும் "நாவலாசிரியர்களை'யும்தான் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லி மூளையை மழுங்கடிக்கும் இந்தியச் சிந்தனையின்மையால் தர முடியும். இதுதான் "நாவல் எழுது வதற்கான தகுதி என்பதே சமஸ்கிருதம் தெரியாமல் நாவல் எழுதக்கூடாது" என்பதன் தாத்பர்யம். ஆனால் இதே மனோ பாவம் கட்சிவாரியாகத் தங்களை முளையடித்துக் கொள்ளும் கம்யூனிஸ் திராவிடீயகாரர்களிடமும் உள்ளதுதான். சமஸ்கிருதம் போன்ற 'நன்கு செய்யப்பட்ட ஒரு மொழி, படைப்பு வகைகளுக்கு உதவாது. இந்த விமர்சன அடிப்படை களை விட்டு மொழி, இன, அரசியல் வெறியின் இன்றைய ஆர்.எஸ்.எஸ். மெளடீகத்தையே பூசாரியார் வெளியிட்டிருக் கிறார். கட்சியம், பார்ப்பணியம், திராவிடீயம் எல்லாமே மதிப்பீட்டின் முன்நிலையில், தாக்குப்பிடிக்குமளவுக்குத்தான் அர்த்தம் பெறமுடியும். இன்றேல் இவை எல்லாமே ஊழலின் அடிப் படையில் ஒன்றாகும். அது சரி, ஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு விலகிய பின்பு பூசாரியார் தொடர்ந்து பூசாரீயம் பண்ணுவது ஏன்? உண்மையில் இவர்களைப் போன்ற ஒரு கூட்டமே ஆர்.எஸ்.எஸ்.ஸினால் முடுக்கப்பட்டு வெளியே வந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் முஸ்லீம்களின் ஆத்மவியலையும் இலக்கியத்தையும் கண்டுக்கிறதில்லை, ஆர்.எஸ்.எஸ்.ஸை விமர்சிப்பதும் இல்லை! 

கா. சு

மேஜிகல் ரியலிசம் மேற்கில் காலாவதியாகி விட்டது - அல்லது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழில் இது பற்றிய கவனக்குவிப்பும், முயற்சிகளும் மோஸ் தராக ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன. புதுமைப் பித்தனின் மேஜிக்கல் ரியலிசம் பற்றிச் சொல்ல முடியுமா? 

பிரேமிள் :

மாயாஜாலம், மகேந்திரஜாலம் மாதிரி புதுமைப் பித்தனிடமிருந்து பிறக்கிறது "பித்தஜாலம்’, ‘மேஜிக்கல் ரியலிசம்" என்ற மேலைநாட்டுப் பதத்தைத் தமிழ் எழுத்து வடிவில் பச்சைகுத்திக் கொள்கிற தமிழறியாத) வன்களின் வழவழா கொழகொழாக்களுக்கு அப்பால்பட்ட இந்தப் பித்த ஜாலம் தான் மேஜிக்கல் ரியலிஸம். தமிழின் நவீனத்தன்மைகள் பல பு: பி. யிடமே முன்மாதிரிகளைக் கண்டிருக்கின்றன என்ப தற்கு இது ஓர் உதாரணம். இந்த முன் மாதிரிகளின் வீரியத் துக்கு ஈடு சொல்ல முடியாதவர்கள்தான் இன்றைய அரசியல் ரீதியான வகுப்புவாத வன்முறைக் கூப்பாடுகளை இலக்கியக் களத்தில் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களது 'தமிழிய கூப்பாடு ‘மேஜிக்கல் ரியலிச கூப்பாடு, "பிராமண கோவில் கலாசாரக் கூப்பாடு யாவும் ஒட்டுமொத்தமான கல்லுளிமங்கனிச மாக வடிவெடுத்திருக்கிறது. பு, பி. யின் சமூகக் கண்ணோட்டம் இன்றும் இத்தகையவர்களின் வகுப்புவாதத் தன்மைகளைக் கடந்த யதார்த்தப் பண்பிற்கு உதாரணமாக நிற்கிறது. எல்லாவிதமான கூப்பாடுகளுக்கும் அடியில் உள்ள பொட்டுக் கேடுகளும் அவரது சத்ர சிகிச்சை மூலம் வெளிப்பட்டிருக்கின்றன. இதை அவர் சாதித்தபோது வெறும் யதார்த்தப் பண்புகளுடன் அவரது சிருஷ்டிகர வீச்சு நின்றுவிடவில்லை என்பதையும் காணவேண்டும். கூடவே பு. பி. யிடம் மாஜிக்கல் தன்மைகள் சிகரப்படைப்பு வடிவுகளைக் கண்டிருக்கின்றன - யந்திர மயமாக்கப்படுகிற போது கூட மனிதப்பண்பின் உள் வெளிச்சம் பளிரிடும் கணங்கள் உள்ளன என்பதைக்கூட பு. பி. காணத் தவறவில்லை (இது மிகூழின்யுகம், கவந்தனும் காம னும்). ஆனால் இத்தகைய பளிரடிப்புகளுக்காக யதார்த்தத்தின் கூர்மையான அதிவேக வீச்சுக்களைத்தான் அவர் கையாண் டார். ‘மனித யந்திரம்’ போன்ற கதைகளில் நடுத்தர வர்க்க மனோபாவம் கொண்ட ஓர் உழைப்பாளியின் சபலபுத்தி - “குப்பனின் கனவு" கதையில் அதைவிடக் கீழ்வர்க்கத்து ரிக்ஷாக்காரன் ஒருவனின் மனோராஜ்யம் - இரண்டிலும் எல்லா விதமான ஆவேசமயமான நவீன மோஸ்தரிஸமும் இல்லாமையைக் காணலாம். மனோவியல் ரீதியான தெளிவையும் அவர வரது பின்னணியிலிருந்து விளையக்கூடிய நோக்கங்களையும் தான் இத்தகைய கதைகளில் அவர் சித்தரித்துள்ளார். ஏதாவது ‘தலித்’ இலக்கியம், தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிய இலக் கியம் - என்று தேடுவதனால் அவற்றின் இலக்கியாம்சத்துக்கு இத்தகைய சித்தரிப்புதான் இலக்கணமாக வேண்டும். இன் றேல் அவை பார்ப்பணியம், திராவிடீயம் போல் அரசியல் கனவு வாதக் கோஷங்களின் பிரச்சாரக் குப்பைகளே ஆகும் - "இலக்கியம்’ ஆகாது. உதாரணமாக பு. பி. யின் “குப்பனின் கனவு’ கதை ஒர் அபார ஹாஸ்ய உணர்வின் மூலம் குப்பன் என்ற அந்தப் பாத்திரத்தினது நிதர்சனமான அன்றாட பிரச்சினைக்குள் நம் உணர்வை நெய்து விடுகிறது. பிரச்சார கோஷத்தினால் இதைச் சாதிக்க முடியாது. 

கா. சு 8

 மார்க்யூஸின் மேஜிக்கல் ரியலிசத்துக்கு போர்ஹேயின் ஃபென்டாஸ்டிக் ரியலிசமும் மிஸ்டிக்கல் ரியலிசமும் தான் முன்மாதிரி அல்லவா? 

பிரேமிள் :

கேப்ரியேல் கார்ஸியா மார்க்கஸ் என்ற கொலம் பிய நாட்டு ஸ்பானிய மொழி எழுத்தாளரின் One Hundred years of st litude என்ற நாவல் நோபல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து தமிழ் எழுத்துத் துறைக்குள் நுழைந்த பதம் “மேஜிக்கல் ரியலிசம்". உண்மையில் மார்க்கஸிற்கு முன் னோடி ஹோர்ஹே லூயிஸ் போர்ஹே என்ற அர்ஜன்டீனிய ஸ்பானிஷ் சிறுகதாசிரியர்தாம். Labyinth முதலிய தொகுப்பு கள் மூலமும், ‘இலக்கிய வட்டம்' பத்திரிகையில் 'பாபிலோனிய  லாட்டரி என்ற அவரது கதைக்கு 1960-களில் க.நா.சு, செய்த மொழி பெயர்ப்பு மூலமும் 1971-ல் கசடதபறவில் நான் செய்த வட்டச் சிதைவுகள் மொழி பெயர்ப்பு மூலமும் போர்ஹேயின் மேஜிக்கல் ரியலிச அத்திவாரம் நம்மிடையே தெரிய வந்திருக் கிறது. இருந்தும் மார்க்கஸின் மவுஸ்தான் இங்கே இதுவரை தூங்கி வழிந்து கொண்டிருந்த மண்டைகளில் ஜிலுஜிலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் - போர்ஹே மார்க்லீய எதிர்ப் பாளர். இலக்கிய விஷயங்களில் அவரது வீர்யம் மிகுந்த செல் வாக்குக்கு வசப்பட்டிருந்த மார்க்கஸ் ஒரு மார்க்ஸிய அனுதாபி, அத்துடன் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு தோஸ்த். அதாவது இலக்கிய உணர்வோ, அதைப் பற்றிய கண்ணோட் டமோ இல்லாத அதற்குப் புறம்பான கட்சியக் கசாமுசாவின் மூலம்தான் - அதுவும் மார்க்கஸாக்கு நோபல் பரிசு கிடைத்த பிறகுதான் - 'ஆண்டே' என்று அவரது பிரதிமையின் காலடி யில் விழுந்திருக்கிறதுகள், இங்கேயுள்ள மார்க்ஸிய இலக் கியக் கொத்தடிமைகள் இதுகளிடம் போய் புதுமைப்பித்தன் தான் தமிழின் முதல் மேஜிக்கல் ரியாலிஸ்ட் என்றால், பார்ப்பன, வெள்ளாள ஆதிக்கம் என்ற கூக்குரல் கிளம்பும். ஏனெனில் மோஸ்தர் மரபைப் பின்பற்றும் இத்தகைய கொத்தடி மைகள்தான் நானும் ஒரு மேஜிக்கல் ரியலிஸ்ட் என்று காட்டு வதற்காக வழவழா கொழகொழாக்களை எழுதிப் பிரசுரித்து விட்டுக் குந்தியிருப்பார்கள். 

மேஜிக்கல் ரியாலிஸத்தின் ஆதார வீர்யம் மனம் போன கற்பனையல்ல - கவித்துவமான உரைநடை. இது போர்ஹேயிடம் அபார அளவில் உண்டு. மார்க்கஸிடம் கம்மி. தமிழின் மேற்படி முதல்வரிடமோ பூஜ்யம். இவருக்கு உண்மையில் தமிழே சரிவர எழுதத் தெரியாது என்பது இதில் மேலதிக வேடிக்கை. 

உரைநடையின் கவித்துவ வீர்யம் கொண்ட பித்தனிய ஜாலவித்தைகளாகப் பிறந்தவைதாம் பிரம்மராகூடிஸ், கபாடபுரம் போன்ற கதைகள் இன்று மாஜிக்கல் ரியலிலம் பண்ணிப் பார்க்கிற முதல் முதலைகளினது சுயதம்பட்டக் குட்டைக்கு எட்டாத சிகரப் படைப்புகள் பு, பி. யின் மித்த ஜாலங்களாக ஏற்கனவே தமிழில் பிறந்துள்ளன. 

மேஜிக்கல் ரியலிஸத்தின் ஒர் அம்சம், கவித்துவமான உரைநடை என்றால், இன்னொன்று, மாயாஜாலத் தன்மை யுள்ள அம்சங்களை நம்பத் தகுந்தவையாக்கக் கூடிய வர்ணனை வீர்யம். இதையே "ரியலிஸம்" என்ற பதம் குறிப்பிடுகிறது. யதார்த்தவியலின் பரிபூரண சக்ராதிபத்யத்தைச் சாதிக்கத்தக்க சக்திமானால் மட்டுமே மேஜிக்கலாகவும் எழுதி அதை நம்பத் தகுந்ததாக்க முடியும். இவ்வகை சக்ரவர்த்தி அவர் என்ற சிறப்பும் பு. பி. யினுடைய மேஜிக்கல் ரியலிஸத்துக்கு ஆதார மாகிறது. 

கா. சு :

சுபமங்களா? பேட்டியில் உங்களை ‘வக்கிரமம் பிடித்தவர் என்கிறார் எஸ். பொ. நீங்கள் அவரை எழுத்து" வில் விமர்சித்ததுதான் இதற்கு காரணம் என்பது வெளிப்படை . . . 

பிரேமிள் :

“கும்பலே கோமாளி வேடமிட்டு நடந்தால் கோமாளிக்கு யார் சிரிப்பார்" என்ற புதுமைப்பித்தனின் கவிதை வரி இங்கே நினைவுக்கு வருகிறது. இலக்கிய சரித்திர அவதானம் அற்ற காளான்களும் புல்லுருவிகளும் தமிழே தெரியாத முதலாளிகள் நடத்தும் வெகுஜனப் பிராந்தியப் பத்திரிகைககளில் சம்பாத்தியத்துக்காகக் குந்தியிருந்து செய் யும் கோமாளித்தனங்களின் நடுவில் ஒரு கோமாளி புகுந்து கொண்டு இப்படிச் சொல்ல முடிகிறது. 

*எழுத்து (ஜன 63 - இதழ் 49) வில் கோமாளியாரின் "தீ நாவலை "ஓஹோ என்று புகழ்ந்துவிட்ட அவரது கூட்டாளி தளைய சிங்கத்துக்கு, நான் பதில் சொல்லியிருந்தே. (பிப் 63 - இதழ் : 50) : 'குடும்பம் என்பது பற்றியே கட்டுரை யாளரோ நாவலோ, விசாரத்துக்கு எடுக்கவில்லை. உண்மையில் நாவலின் எல்லை முதிர்ச்சியற்ற வாலிப எழுச்சிகளோடு (அடோலஸன்ட் நிலையில்) முடிந்து விடுகிறது. முதிர்ந்த மனிதனையோ இன்னும் உக்கிரமான குடும்ப உறவுகளையோ, அவதானிக்கவில்லை. எனவே ஓர் இளைஞனின் கனவு தொனித்து மறைகிறது. இத்தகைய முதிர்ச்சியற்ற உறவு நிலையை விவரிப்பதால் சமூக அளவு கோல்களை பாதித்துவிட முடியாது. கட்டுரையாளர் நம்மிடையே இல்லாத கருத்தென்று கூறிய 'அடிப்படை உணர்ச்சியே பாலுணர்ச்சி கருத்து நமக்குப் பழசு. (இப்பதிலை, தமிழின் நவீனத்துவம் தொகுப்பில் முழுமையாகக் காணலாம்). இவ்வளவையும் நான் சொன்ன போது பூடகமாக கோமாளியாரை நான் போர்னோ கிராபர் என்றே சொல்கிறேன். இப்படி நான் விமர்சித்ததற் காகவே இந்த எழுத்தியல் விபச்சாரி எனக்கு ஏதோ வக்ரம் என்கிறார். (மனோவியாதி மண்டலம் - என்ற "லயம் (இதழ்: 6) 
கட்டுரையில் எஸ்.பொ. பற்றி மேலும் பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன) 

"இருபது வருஷங்களாக மெளனி தமது கதைகளை நூலாக வெளியிடாமல் பம்மாத்துக் காட்டிய தாக இதே கோமாளியார் எழுதியிருக்கிறார். "எழுத்துவில் 'இலங்கைக் கடிதம் பகுதி யில் வேறொரு பெயரில் இதை விசாரித்துள்ளேன். தமிழில் பிரேமிள் ஒருவன்தான் சரித்திர உணர்வு, பாரபட்சமின்மை, தீட்சண்யம், தகவல்கள், தர்க்கம், விஞ்ஞானபூர்வமான அணுகு முறை ஆகியவற்றுடன் செயல்படும் எழுத்தியலாளன். இத்த கைய இயக்கம், போலிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் வெறி பிடித்தவர்களுக்கும் கெளரவாதிகளுக்கும் வியாபாரார்த்திகளுக் கும் சுயநலமிகளுக்கும் குருடர்களுக்கும் மந்தைகளுக்கும் ஆபத்தானது. எனவேதான் பிரேமிளுக்கு கிறுக்கு, குரங்கு, நாய், வக்கிரமம் பிடித்தவன் என்ற பட்டங்கள் சூட்டப்படு கின்றன. அறிவார்த்தமாகக் செயல்படுகிறவனுக்கு எதிராக அதே அறிவார்த்தத்துடன் பேச முடியாதவர்கள் செய்யும் (36) 16060 (304. (9)ђ5 (36,16060602ш Poisioning the well (பொதுக் கிணற்றில் விஷம் போடுதல்) என்று தர்க்கவியலில் குறிப்பிடுவார்கள். அதாவது பிரேமிள் கையாளும் அறிவார்த்தம் ஒரு பொதுக்கிணறு. இது பயனற்றதாகவேண்டும் என்ற நோக்கத்தோடு இதற்குள் விஷம் போடுவது போன்றே பிரேமி ளுக்கு பகிஷ்கரிப்புப் பட்டங்கள் தரப்படுகின்றன. இது இத் துடன் நிற்பதில்லை எவருமே சமூகப் பிரச்சினையின் எந்தக் கட்டத்திலுமே அறிவார்த்தமாக இயங்க முடியாதபடி இது தொடரும். அதாவது அறிவார்த்தமே பகிஷ்கரிப்புக்கு உரிய தாகிவிடும். இந்நிலையில் சமூகத்தின் அறிவார்த்தம் சிதறி மேலே குறிப்பிடப்பட்ட போலிகள்.இத்யாதிகளே முக்கியஸ் தர்களாகின்றனர். 

அறிவியக்கம் என்பது வெளிப்படை உரையாடலாகும் (Open dialogue); மூடு கதவுக் கிசுகிசுப்பல்ல. தமிழில் இன்று ஜாதீயம் சம்பந்தமான பொட்டுக் கேடுகளை அம்பலப்படுத்து கிற சமூக தர்சனக் கண்ணோட்டம் எனது விமர்சனங்களில், எழுத்துக்களில் இருக்கிறது. எனவே ஜாதீய வாதிகள், ஜாதி யத்தைப் பாதுகாக்கும் எடுபிடிக்குணம் கொண்டவர்கள் என்னை பகிஷ்கரிக்கிறார்கள், தூஷிக்கிறார்கள். 

கா.சு

பிராந்திய வழக்குச் சொற்களை விதரணையற்றுக் கையாளும் எஸ்.பொ. தமது விசேஷ நடை பற்றி அதிகம் பேசியிருக்கிறார்.1 


பிரேமிள் :

அவரது கதைகளைப் படித்தால், தொன்னைக்கு நெய்யே ஆதாரம் என்ற நம்பிக்கையில் தொன்னையைக் கவிழ்த் துப் பிடிக்கிறார் என்றும், நெய் கீழே கொட்டி விடுகிறது என் றும் காணலாம். பாத்திரங்கள், பேச்சுகள் முதலியவை எல்லாமே பிராந்திய வழக்குச் சொற்களுக்காக என்றே சமைக் கப்பட்ட எக்ஸர்ஸைஸ்தான் இவரது பிரக்யாதி பெற்ற "நடை". ஏறத்தாழ இதே வேலையை இங்கே கி. ராஜநாராயணனும் கோணங்கியும் செய்வதாகக் கூறவேண்டும். இவர்களிடம் கூட வில்லங்கமாக இந்தப் பிராந்திய வழக்குச் சொல் பிரயோகம் தொனித்தாலும், பாத்திர சிருஷ்டி, உணர்வு நுட்பம், அவ தானம் என்பவற்றால் கி.ரா.வும், கற்பனை வீச்சுடன் பரந்து எழும் வியாபகமான மொழி விளையாட்டினால் கோணங்கியும் விசேஷமாக முதல்தரக் கலைஞர்கள். இந்த விசேஷ அம்சம் எதுவுமற்ற தொணதொண நடைதான் கோமாளியாருடையது. பிராந்திய சொற்களை சிருஷ்டிகரமாக தமது நடையினுள் பின்னிவிடும் சாதனையை கி. ரா.வும் கோணங்கியும் செய்தால், **இந்தச் சொற்களை வைத்து வசனங்கள் எழுதுக" என்ற வகுப்பறைப் பயிற்சிக்காக எழுதப்பட்ட உயிரற்ற பண்டிதத் தனத்தை கோமாளியாரிடம் காணலாம். அவரது கதைகளில் எழுதப்படும் பிரச்சினைகள் பாத்திரங்களின் இயற்கைத் தன்மை யிலிருந்து கிளர்வதுமில்லை. ஒரு மனப்பீடிப்பு (Obsession) மட்டுமே அவரது கதைகளில் திரும்பத் திரும்ப வரும், ஏதாவது ஒரிஜினல் அவரிடம் இருந்தது என்றால் அது இதுதான். இதுவே அவர் பேட்டிகளில் கூவிக் குறிப்பிடும் 'பால்". எல்லா போர்னோவிலும் உள்ள 'ஒரிஜினல் பால்" ! 

கா.சு :

இலக்கியத்தில் சிந்தனை அம்சம் தேவையில்லை என்று கூறியுள்ளார் எஸ்.பொ.? இது பிதற்றல் அல்லவா? 

பிரேமிள் :

சிந்தனை அம்சம்தான் பழங்குடித் தனமான மனோபாவ நிலையில் பிறந்த வெளியீட்டு வடிவங்களினின்றும் இலக்கிய வடிவங்களை வேறுபடுத்துகிறது. ஆரம்பத்தில் இது உருவகப்படுத்தப்பட்ட நன்மை தீமைகளின் மோதலாகவும்பின்பு தத்துவார்த்தமாகவும் தீர்க்கமடைகிறது.பேரிலக்கிய லட்சணமே சிந்தனைதான். மோதல்களை வாத நியாயங்கள் வழி நீதித்வத் துக்கும் தெய்வீகத்துக்கும் வழிப்படுத்தும் உபகரணம் சிந்தனை. இந்தச் சிந்தனை அம்சமே, ஆயுதபாணியான வில்லாளி ராமனை, தத்துவ சொரூபமாக்குகிறது கம்பன் மூலம்  மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டயோத்தி வந்தான். 

முதலிரண்டு அடிகளிலே தோன்றி மறைதலையும் காலத்தையும் அளவிடப்படக்கூடிய தன்மையையும் தாண்டிய காரண சிகரம் (Causative Principle) ஆக ராமாவதாரம் தத்துவவடிவு பெறுகிறது. காரண சிகரமே ராமன் என்பதால் அதற்கு அடுத்த படித்தரத்து மும்மூர்த்தங்களும் கூட அவனே என்று தொடர்கிறான் கம்பன். இந்தத் தொடர்ச்சியில் ஒரே பார்வையின் உள்ப்பிணைப்பாக கவிதை பூரணம் பெறுகிறது. இதுவே சிந்தனையின் இயக்கம், இந்த இயக்கத்தின் தாரதம்பத்தை ஓர் அளவையாகக் கொண்டால்தான் இலக்கியத்தை இனம் காட்ட முடியும். 

கா. சு

உங்களைத் தூவிழிப்பது தொடரவே செய்கிறது. முன்றில் 17-ல் உங்களை இமாலய அகந்தைக்காரர் என்கிறார் தி. க. சி. அதே சமயத்தில் எனக்கு எழுதிய கடிதத்தில், * பிரேமிள் போன்ற ஆழமான, கனமான, தரமான சிந்தனையாளர்கள், படைப்பாளிகளை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் படி க்கிறேன். அவர்களுடன் எனக்கு உடன்பாடும் உண்டு, முரண்பாடும் உண்டு. பிரேமிள் போன்றவர்கள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், திறனாய்வுகள் (நூல் வடிவில்) நிரம்ப வழங்க வேண்டும்; இல்லையெனில் தமிழ் இலக்கிய வரலாறு அவர்களை மன்னிக்காது. இது என் உறுதியான கருத்து. (14-7-94) என்றும் எழுதியுள்ளார். முன்றிலில் கூட ஒரு தலைசிறந்த புதுக்கவிஞன் என்று குறிப்பிடுகிறார்; பின்பு துடைத்து வழிக்கிறார். இது அவருடைய ஒரிஜினல் டெக்னிக்தானா? 

பிரேமிள்

தி. க.சி. , வல்லிக்கண்ணன் புதுசாகக் கிளம்பி யிருக்கும் வண்ணநிலவன் ஆகியோர், வெறும் அபிப்ராயக் காரர்கள்தாம். தங்கள் அபிப்ராயங்களை விமர்சன பூர்வமாகத் தகுதிப்படுத்தத் தெரியாதவர்கள். பேper eg) என்பது தத்துவத் துறையின் பதச் சேர்க்கை. இது வெளி மனதில் அமைந்து கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் நிலை, இங்கே பிரேமிளுடையது சூப்பர் ஈகோ எனும்போது, கிறுக்குப் பிடிக்கவே முடியாத வீர்யம் கொண்ட தர்மங்களை அவன் அனுசரிக்கிறான் என்றே பொருள் பெறும். தி. க.சி. க்கு இதுகூடப் புரியாது. வல்லிக் கண்ணன், க. நா. சு. வின் அடியொற்றி அபிப்ராயம் சொல் கிறவர் என்றால், தி. க.சி. நேரிடையாக ப. ஜீவானந்தத்தை மயிரிழை பிசகாமல் அடியொற்றுகிறவர். சுயமூளையற்றவர் களும், "நான் ஒரு கம்யூனிஸ்ட்" என்று மார்தட்டியபடியே, தங்கள் குருட்டுத் தடவலால் தடவிப் பார்த்துக்கூட உணர முடியாத சிருஷ்டி கர்த்தாக்களை எடுத்தெரிந்து அபிப்பிராயம் விளம்ப இடம் தந்தது கம்யூனிஸ் மார்க்ளியே இயக்கம். இந்த இயக்கத்தை இத்தகையோர் வக்கிரப்படுத்தியுள்ளனர். இதனை நமது சூழலில் இடைவிடாமல் தாக்கி வருபவன் நான். எனது இந்தத் தாக்குதல், மறுபுறம் ஆரோக்கியமான இடதுசாரிப் பார்வைகளுக்கு உரமாகிக்கூட உள்ளது. இலக்கிய நயத்தை விண்டு காட்டுவது, எவ்வகை விமர்சனத்துக்கு இன்றியமை யாத அடிப்படை. இலக்கியமாகத் தேறாத ஒரு படைப்பை வேறு எவ்விதத்திலும் ஆராய்வது அர்த்தமற்றது. அது ஒரு குற்றம் என்று நமது "நன்னூல்" கூடக் கூறுகிறது. ஆரோக்கிய மான இடதுசாரிப் பார்வை கொண்ட ஞானிகூட, இலக்கிய மாகத் தேறாதவற்றை தமது ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார்போகட்டும். ஜீவானந்தத்தின் குருபீடத்தருகே தி. க.சி. குந்தி யிருப்பதைக் கவனிப்போம். 

தி. க.சி. கேட்கிறார் : "அப்போ கல்கி? அவனை எப்படிச் சொல்லணும்?' ஜீவா ? 'கல்கி அவன் ஒரு பூர்ஷாவா. ஆனால் சோஷல் புரோகிரஸ்ஸிவ்." இங்கே, ஸ்டாலினிய கேள்வி பதில் முறை வழிக்கல்வி(Catechism) வேலை செய்கிறது.இது கத்தோ லிக்க மத மரபைச் சார்ந்தது. கத்தோலிக்க மரபை பின்பற்றி, 'சைவ வினாவிடை' என்ற நூலை ஆறுமுக நாவலர் கூடச்செய் துள்ளார். மேலுள்ள முறை "கம்யூனிஸ் வினாவிடை’’. இரவு கழிந்து விடிகிறது. டூத்பிரஷ0 டன் பாத்ரூம் வாசலில் நிற்கிறார் தி.க.சி. நின்றபடி ஜீவா போலவே தலையை ஆட்டிச் சொல் கிறார். 'கல்கி. அவன் ஒரு பூர்வடி வா. ஆனால் சோஷல் புரோகிரஸ்ஸிவ்' பாத்ரூமுக்குள் புகுத்து கதவைப் பூட்டிக் கொள்கிறார் தி. க.சி.இத்தகைய விபரங்கள் அங்கேயிருந்த சிதம்பர ரகுநாதன், சுந்தரராமசாமி போன்றோருக்கு எல்லாம் அவர்கள் அருவருப்படையுமளவு பழக்கமானவை. ஜீவாவின் பிளாக்மெயில் முறையையும் இவ்விடத்தில் நினைவு கூர்வது தி.க.சி.யின் அத்திவாரத்தைக் காட்டும். இடம் மவுண்ட்ரோடு போஸ்ட் ஆபிஸ் பகுதி. அந்தக் காலத்தில் டிராபிக் கம்மி. போஸ்ட் ஆபிஸ் பக்கத்து நடைபாதையில் போய்க் கொண்டி ருந்த ஜீவா, எதிர்சாரில் பாரதிதாசனைப் பார்த்துவிட்டார். உடனே கையைத்தட்டி அவரைக் கூப்பிடுகிறார். ஆனால் அவரது பக்கத்து தெருவுக்கு பாரதிதாசன் போகாமல் தமது பக்கத்து தெருவுக்கு ஜீவாவை வரும்படி சைகை செய்கிறார்.

ரு புவது ஆழ்ந்த பரிவுடன் தான் மெளனியினால் சித்தரிக்கப் படுகிறது. அதாவது, பிரத்யேகமான நேர்ப்பழக்கங்களில் சு ரா வும், ஞா. கூ-வும் தங்களை ஜாதீயவாதிகளாகக் காட்டுவ தில்லை. எழுதும்போது ஜாதீயத்தை கிசுகிசு லெவலில் பண் ணிக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பு என்பது ஜாதிய வகை யாகவே இவர்களால் பார்க்கப்படுகிறது மெளனியின் குறை பாடு சமூகவியல் ஜாதீயமாகும் எழுத்தில் அவர் மனமறிந்து ஜாதீயத்தை எவ்விதத்திலும் பண்ணியதில்லை. இருந்தும் அவரது பெர்சனலான ஜாதீய மனப்பான்மையின் விளைவாக அவரது கலையுள்ளம் வரண்டிருக்கிறது. சு.ரா-வின் திறன் க்ஷீணமடைந்ததற்கும் இதுவே காரணம். ஞானக்கூத்தன் வெறும் பாமர மூளைக்காரர். இவர் கலைஞருமல்லர், வாசகர் கூட அல்லர். ஊர்த்திண்ணைகளிலும், சத்திரத்துச் சாப்பாட்டுச் சாலைகளிலும் மூக்கு முட்ட பிடித்துவிட்டு உட்கார்ந்திருந்து பாமரப் பார்ப்பான்கள் கதைக்கிறவற்றை கவிதை' என நம்பி எழுதிக் கொண்டிருப்பவர். இம்மூவருக்குமே ஒவ்வொரு விதங் களில் தமிழ்த்துவேஷம் உண்டு. 

கா. சு :

'மெளனிக்கு தமிழ் தெரியாது. அவர் எழுதியவற்றில் இருந்த பிழைகளை நாங்கள்தான் திருத்தி வெளி யிட்டோம்' என்று 1973-ல் எம். வி.வெங்கட்ராம், கண்ண தாசன் பத்திரிகைப் பேட்டியில் கூறி இருக்கிறார். (மறுபிர சுரம்: மெளனி இலக்கியத் தடம்) மெளனி இதற்கு ஒரு நீண்ட பதிலை எழுதினார். 1913-ல் நீங்களும் சுந்தரராமசாமியும் நாகர்கோவிலில் ‘சதங்கையுடன் சம்பந்தப்பட்டிருந்த சமயம் அது உங்கள் வேண்டுகோளின் பேரிலேயே மெளனி அந்த நீண்ட பதிலை எழுதி அனுப்பினார். ஆனால் அது பிரசுரிக்கப் 

பிரேமிள் : இந்த விபரங்களும் இது சம்பந்தமான வேறு விபரங்களும் வெகு சாதுர்யமாகப் புதைக்கப்பட்டு உள்ளன. வெங்கட்ராம் தம் பேட்டியில் 'மெளனிக்கு தமிழ் தெரியாது? என்று சொல்கிறார். பாரதியின் ஜாதி எதிர்ப்புக்காக 'அவனும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா? என்று மெளனி கத்தினார் என்கிறார். பாரதி பற்றி இதே தோரணையில் மெளனி என்னிடமும் பேசியதுண்டு. ஆனால் பாரதியின் கவிதை யில் உள்ள கவித்துவத்தையும், அவன் பாசாங்கில்லாமல் 'என் தாயின் மடி' என்று தரையில் விழுந்து உருண்டதையும் மெளனி உணர்ச்சிகரமாக என்னிடம் புகழ்ந்தவர். இலக்கியச் சித்தரிப்பு முறைகளை மெளனி அறிந்தவர் அல்லர் என்று பொருள்படும் விதத்தில், வெங்கட்ராம் தரும் விபரம் மூன்றாவது: வெங்கட்ராம் கதை ஒன்றில் ஒருவன் பிரியாணி (அந்தக் காலத்தில் பிரியாணி என்றால் மாமிசம் கலந்த உணவு மட்டும்தான். இன்றைய "விஜிடபுள் பிரியாணி' ஒரு அர்த்தநாரீஸ்வரமாகும்) சாப்பிடுகிறான். இதைப் படித்த மெளனி, வெங்கட்ராம் தமக்கு அது வாந்திவர வைப்பதாகக் கூறி இருக்கிறார். அப்படி எழுதக் கூடாது என்ற அர்த்தத்தில் மெளனி பேச, இவர் பாத்திரச் சித்தரிப்பு பற்றி ஏதோ சொல்லியிருக்கிறார். இதுவும் எனக்கு அதிசயமாகப்படுகிறது. ஏனெனில் ஆன்டன் செகாவ்வின் "தி ஸ்டெப்பி" (The steppe) குறுநாவலை அபாரமாகப் புகழ்ந்தவர் மெளனி - என்னிடம் நேர்ப் பேச்சில், சைபீரியாவின் சமவெளியில் பயணம் செய்கிற சிலரைப் பற்றிய இந்தக் கதையில் ஒருவன் ஒரு குளத்தில் மீன் பிடித்து அதைப் பச்சையாகவே வாயில் போட்டு மென்று தின்பது தீர்க்கமாக மயிர்க்கூச்சம் ஏற்பட வைக்கிற மாதிரி சித்திரம் பெறுகிறது. இது ஏன் 'மெளனி’க்கு வாந்தி வர வைக்கவில்லை? மேலும், விபச்சார உலகைத் தமது கதைகளின் ஒரு தளமாக உபயோகித்துள்ள மெளனிக்கு, வேத காலத்திய பிராமணர்களைத் தொடர்ந்து இன்றைய வடக்கத்திய பிராமணர்கள் வரை அநுசரிக்கிற மாம்ச போஜனம் தாங் கலையா? இது ஒருவித பம்மாத்து. அதுவும் தெற்கில் மட் டுமே செயயப்படும் பம்மாத்து. 

கா. சு:

"முன்றில் தமது வெள்ளாள ஜாதியின் சுழி சுத்தம் என்பதற்காக வெஜிடேரியனிஸத்தைக் குறிப்பிடுவதும் பம் மாத்து ஆகிறதல்லவா? 

பிரேமிள் :

உலகத்திலேயே இங்குள்ள விவசாயிகள்தாம் வெஜிடேரியன்கள் என்ற அபத்த தோரணையில் முன்றிலார் எழுதியிருக்கிறார். உலகின் பிற பகுதிகளில் ஆதி காலம் தொட்டு விவசாயிகள் மாம்ச பட்சிணிகளாகவும் இருந்திருக்கின் றனர். தமிழகத்தின் பழக்க விசேஷங்கள் சிலவற்றுக்கு தீவிர பெளத்த இயக்கமும், இதைப் பின்பற்றிய சித்த மரபும்தான் காரணமாக முடியும். ஏனெனில் பழந்தமிழ் இலக்கியங்களில் மாம்ச போஜனமே சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. முன்றிலார் ‘தீபாவனி தமிழர்களுடையது அல்ல, அது வெகுபின் னாடி மைசூர் அரசர் காலத்தில் இங்கே வந்தது" என்று கூறும்போது கூட சில மருத்துவ பின்னணிகளை அறியாத விஷத்தையே கக்குகிறார். தீபாவளி கொண்டாடப்படும் காலம் சுற்றுச்சூழலில் மழைநீர் தேங்கி குளிரின் போர்வையில் காலரா போன்ற கொள்ளை நோய்க் கிருமிகள் அதிவேக உற்பத்தி பெறக் கூடிய காலம், தீபாவளியின் போது நெருப்பு, கெந்தக தகனம், வீட்டைச் சுற்றிலும் தீபங்கள் தொடர்ந்து சில நாட்களுக்கு வைக்கப்பட்டு பின்னாடி, பட்டாசு முதலியவற்றின் மூலம் பவனம் புனிதப்படும் முறை யாகி இருக்கிறது. இது மதத்தின் வழியில் மருத்துவ செயல் முறையை நிறைவேற்றும் வேலை. இந்த நாட்டினரின் வெகு ஜனத்தளத்தை அறிவியல் ரீதியில் எட்டி இந்தப் புனிதப்படுத் தலைச் செய்வது அசாத்யம் என உணர்ந்த அறிஞர்கள் உரு வாக்கிய கொண்டாட்டம்தான் தீபாவளி என்று காணவேண் டும். கார்த்திகை தீபமும் இதையே தொடர்ந்து வரும் மாதத் தில் நிறைவேற்றுகிறது. 

கா. சு சரி,

வெங்கட்ராமின் பேட்டி விஷயத்துக்கு வரு வோம். 

பிரேமிள் : வெங்கட்ராமுக்கு மெளனி எழுதி சதங்கைக்கு அனுப்பிய நீண்ட பதிலில் (1) மெளனிக்குத் தமிழ் தெரியாது (2) பாரதியை கவிஞனல்ல என்றார் (3) பிரியாணி பற்றி எழுதப்படாது என்றார்-என மெளனி கூறியதாக வெங் கட்ராம் சொன்னவை பதில் பெறவில்லை. இவை மூன்றும் தான் மெளனியின் கலையுலக வியக்தி பற்றியவை. மெளனி இவற்றுக்கு மட்டும் தமது பதிலில் பதில் தரவில்லை. திசை திருப்பி, வெங்கட்ராம் குறிப்பிடும் வேறு பிஸினஸ் விஷயங் களுக்கு மட்டும், அதுவும் மகாமட்டமாக, பட்டப் பெயர் ஒன்றை வெங்கட்ராமுக்கு சூட்டி எழுதியிருந்தார்- பட்டு நூல்காரன்" என்று. வெங்கட்ராம் பட்டு நூல் தயாரிக்கும் செளராஷ்டிரர் என்பது இந்த மெளனியக் குறியீட்டின் பொருள். படித்த எனக்கு மெளனியின் கட்டுரை பிரசுரத்துக்கே லாயக்கில்லாதது என்றுதான் பட்டது என் பார்வையை அறிந்து கொண்ட சுந்தரராமசாமி இரண்டு காரியங்களைப் பண்ணினார். அப்போது கல்லூரி மாணவராக இருந்த அ ராஜமார்த்தாண்டன் (கோகயம், சொல்லிப்பாவை இதழ்களின் ஆசிரியராக பின்னாடி வந்து இப்போது தினமணிகதிர் உதவியாசிரியராக உள்ளவர்) மூலம் மெளனியின் கட்டுரைக்குப் பிரதி எடுத்துவைத் துக் கொண்டார். அடுத்து, கட்டுரையை நான் பிரசுரிக்க மறுப்பதாக மெளனிக்கு எழுதினார். சு. ரா ஸ்டைல் போக்கிரித்தனம், ஏனெனில் சதங்கையில் அது பிரசுரமாவதும் ஆகாததும் துளிக்கூட என்னைச் சார்ந்ததில்லை. சதங்கை ஆசிரியர் 'வனமாலிகைக்கு உண்மையில் என்னைப் பிடிக்காது என்பது ஒருபுறம் சு ரா. அவருக்கு ஒரு மாபெரும் ஸ்டார் என்பது மறுபுறம், காரணம் சிம்பிள்- சு.ரா, ஒரு பெரிய துணி வியாபாரி. நான் ஒன்றுமே புரியாத வகையில் எதையோ கிறுக்கும் ஏழை. என்னை எப்படி வனமாலிகை போன்ற கேஸ் ஒரு பொருட்டாக மதித்து ஆலோசனை கேட்டிருக்க முடியும். ஆனால் சு.ரா.வுக்கு என் எழுத்தின் தாரதம்யம் தெரியும், கூடவே குறிப்பிட்ட சில சிக்கலான நிலைமைகளில் என்னைச் சுட்டிவிட்டு தான் ஒரு பரிசுத்தவானாகக் காட்சி தருவதுக்கும் என் "ஆலோசனை’ உதவும். தொடர்கிறது கதை. மெளனிக்கு இதனால் என் மீது பெரிய ஆத்திரம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்தன. தமது கட்டுரையுடன் சென்னைக்கு இதற்காகவே சிதம்பரத்திலிருந்து போய் கி.அ. சச்சிதானந்தத்திடம் காட்டி இதைப் பிரசுரிக்கக் கூடாது என்று நான் சொன்னதாகக் கூச்சலிட்டிருக்கிறார். அதைப் படித்த சச்சிதானந்தமும் என் பார்வை சரி என்பதை மெளனிக்கு கூறியிருக்கிறார். கட்டுரையை வெளியிட்டால் மெளனிக்கு பெயர் கெடும் என்பது அவர் பார்வை. ஆனால் என் பார்வை அது பிரசுரத்துக்கு லாயக்கற்றது என்பதும், இலக்கிய சமூகரீதியாக நான் குறிப்பிட்ட விஷயங்களுக்கு மெளனி பதில் தரவில்லை என்பதுதான். ஆக, என் நோக்கம் இதில் பிரசுர சாதனத்தையும் இலக்கியக் கருத்துப் பரிமாறலையும் சார்ந்தது. இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மெளனி எழுதிய அது எத்தகையதாக இருந்தாலும் பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது அப்போதைய வெசா-வின் பார்வை. அது 1973. அப்போதைய வெ.சா. வேறேமாதிரி அவர் அப்போது மெளனியின் கட்டுரை அப்படியே பிரசுரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறியமை என் பார்வைக்கு முரணான பார்வை அல்ல. அது சு.ரா., சச்சிதானந்தம் ஆகிய இருவரின் பார்வைக்கும் முரணான ஒன்றுதான். இவ்விருவரின் முடிவு மெளனியின் போலித்தனமான இலக்கியக் கருத்துலக வியக்தி (இது மெளனியின் கதாசிரிய இலக்கியத் தகுதிக்கு அப்பாற்பாட்ட வியக்தி) கெட்ட பெயர் பெற்றுவிடக்கூடும் என்ற கரிசனையில் பிறந்த ஒன்று. இதனாலேயே மெளனி, தாமாகவே கட்டுரையைப் பிரசுரிக்கக் கூடிய வசதி பெற்றிருந்தும் அதைத் தூரப்போட்டுவிட்டார். வெ.சா-வுக்கு நான் இதை சுட்டிக்காட்டிக் கூறியது : 'மெளனியின் கட்டுரை வெறும் ஆத்திரத்தில் எழுதப்பட்ட ஒன்று. அவர் தமது கட்டுரையை தாமே ஒரு சமன நிலையில் பரிசீலித்து அதைத் திருப்பி எழுதலாம். அல்லது, விரும்பினால் அவரே இதை இப்போதைய வடிவில் பிரசுரிக்கலாம். இலக்கியக் கருத்துலகில் அவர் செயல்பட லாயக்கற்றவர் என்பது இதன் மூலம் வெளியாகும். ' அப்படி யானால் அது வெளியாகட்டுமே என்பதுதான் அப்போதைய வெ.சா.வின் கருத்து. இது விஷயம், அவரும் நானும் நேர்ச் சந்திப்பில், அதுவும் நாகர்கோவிலுக்கு அவர் வருகை தந்திருந்த சமயம், பேசிப் பிரிந்த பிறகு நடந்த ஒன்று- பகிரங்கத் துக்கு வராதது. நான் நாகர்கோவிலை விட்டு சென்னையில் நடைபெற இருந்த ஜே. கிருஷ்ணமூர்த்தி கூட்டத்துக்கு திரும்பும் வழியில் டி.ஆர். நடராஜனை (சிந்துஜா) மதுரையில் சந்தித்து அங்கே ஒருவாரம் தங்கினேன். அப்போது ஒரு பரீட்சை செய்தேன். மெளனி போன்ற பார்ப்பணியவாதிகளின் மனோ பாவம் எத்தகையது என்று நான் நேரில் அறிய உதவிய பரீட்சை இது. சிந்துஜா அறிய, அவரைச் சாட்சியாக இருக் கும்படியாகச் சொல்லி, மெளனிக்கு ஒரு கார்டு போட்டேன். அதில், எம்.வி.வி-க்கு நானே பதில் எழுதி மெளனிக்கு அனுப்பு வதாகவும், மெளனி அதை தமது பதிலாக பிரதி எடுத்து பிரசுரத்துக்கு அனுப்பும்புடியும் - இதற்கு சம்மதமா என்றும் எழுதப்பட்டிருந்தது. அடுத்தடுத்த நாள் வந்தது, மெளனியின் பதில் : "உடனே எழுதி அனுப்பு, அப்படியே செய்யலாம்" என்பதாக, 'இதுதான் சர்வவல்லபரான மெளனியின் உண்மையான சொரூபம்." என்று சிந்துஜாவுக்கு பதில் கார்டைக் காட்டி னேன் 'இதெல்லாம் வேண்டாம், வேண்டாம்' என்ற கெஞ்சலைத் தவிர அவரால் வேறேதும் சொல்ல முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்துக்குப் பிறகு சிந்துஜா இலக்கிய உலகையே விட்டு வியாபார பத்திரிகை உலகுக்குப் போய் அங்கிருந்தும் வாபஸ் பெற்றுவிட்டார். இந்த மெளனிய சுயரூப தர்சனம்தானோ என்னமோ இதற்குப் பிறகு மெளனியாரும், தமது எண்ணங்களை வெளியிட தமிழ் மொழி போதாது என்று பிதற்ற ஆரம்பித்தார். இந்தப் பிதற்றலை, அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் பார்ப்பணியவாதிகளுடைய கழிவுகளுக்கு கலைத் தனம் சேர்க்கும் ஓவியர் ஆதிமூலத்தின் மெளனி பிரதிமைச் சித்திரத்துடன் வெளியிட்டார். பேட்டி கண்டவர் இன்னொரு ஏஜண்டான பன்னீர்செல்வம். நடக்கிற கருத்துலக மோசடி பற்றிய பிரக்ஞையே அற்று கி. அ. சச்சிதானந்தம், ஆதிமூலம், பன்னீர்செல்வம், சா. கந்தசாமி, தமிழவன், ஜெயகாந்தன் முதலிய பார்ப்பனர் அல்லாதார் பார்ப்பனியத்துக்கு தொன்று தொட்டே ஏஜண்டுகளாக இயங்கி வருகிறார்கள். இத்தகைய அடிவருடிகள் இந்தியாவில் தொன்றுதொட்டு இன்றுவரை இருப் பதால்தான் பார்ப்பனீயம் புதைக்கப்படாமல் அறிவுலகத்தை ரோக உலகாக்கி, நாறச் செய்து - நாறிக் கொண்டு இருக்கிறது. 

கா.சு
மெளனி பின் தமிழ் பற்றி ஆதாரபூர்வமாகச் சொல் லக் கூடியவர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். "சரஸ்வதி விஜயபாஸ்கரன்,    சி. சு. செல்லப்பா, நகுலன் (குரு க்ஷேத்ரம்) மற்றும் மெளனிக்கு உதவியாளராயிருந்த துர்வாஸ் ஜே.வி. நாதன். இவர்கள் மெளனியின் கதைகளைக் கைப்பிரதியில் பார்த்தவர்கள்; வெளியிட்டவர்கள். 'கசடதபற'வில் கூட கடைசி கதை பிரசுரம் பெற்றது. இவர்களிடமிருந்து ஆணித்தர மான பதிலைப் பெறமுடியும். 

பிரேமிள் :

மெளனியின் வாக்கிய அமைப்புகளில் விசித்திரங்கள் உள்ளன. இவை ஒருவகையில் கலைப்பாங்கான பகுதிகளாக நிறைவு பெறும் விசித்திரங்கள். இவை திருத்தப் பட்டிருக்க முடியாதவை. இலக்கணக் குறைபாடுகளும் நிகழ்வ துண்டு. ஆனால் அவை மாபெரும் குற்றமாவது, "தமிழில் என் சிந்தனைகளைச் சொல்லுமளவு தமிழ் வளரவில்லை’ என்று மெளனி கூறியபோதுதான். சரியான இலக்கண வடிவமே கைவராத ஒருவர் இப்படிப் பேசுவது முட்டாள்தனமான குற்ற மாகும். ஒன்று, நான் அறிய அவரது படைப்புகளுடன் அனுப்பும் கடிதங்களில் அவர், லகர, ளகர பேதங்களைத் திருத்தவும்" என்று குறிப்பிடுவதுண்டு. இந்தப் பின்னணியுடன் வெங்கட்ராமன் கூற்றைப் பார்க்க வேண்டும். 

கா.சு :

'மெளனி இலக்கியத் தடம் தொகுப்பில், ஆல்பர்ட் ப்ராங்க்ளின் மெளனிக்கு எழுதிய கடிதத்தை அவரே தமக்குக் காட்டியதாக வெங்கட்ராம் எழுதியுள்ளார். ஆனால் ப்ராங்க்ளின் கடிதங்கள் பற்றி என்னிடம் மேலதிகமாகச் சொல்லியிருக் கிறீர்கள். 

பிரேமிள் :

ப்ராங்க்ளின் மெளனிக்கு கடிதம் எழுதியது 1972 வாக்கில். ஆனால் வெங்கட்ராம், மெளனியின் கண் பார்வை மிகவும் மோசமடைந்த காலத்தில், தமக்கு ப்ராங்க்ளின் கடிதத்தை அவர் காட்டியதாகக் கூறுவதால், இது மிகப் பிந்தி நடந்திருக்க வேண்டும். 1972-ல் பிராங்க்ளின் இரு கடிதங்களை மெளனிக்கு எழுதியுள்ளார். இரண்டையுமே மெளனி எனக்குக் காட்டியிருக்கிறார். முதல் கடிதம், அமெரிக்காவில் மெளனி கதைகளை வெளியிட முயற்சிப்பது பற்றி பிராங்க்ளின் எழுதியது. இரண்டாவது, அமெரிக்க பிரசுர ஸ்தாபனத்தார் மெளனி கதைகளை மறுத்துள்ளதை காரணப் பூர்வமாகக் கூறும் கடிதம். இவற்றுள் முந்தியதை மட்டுமே மெளனி, வெங்கட்ராமுக்கு காட்டி இருக்கிறார். இரண்டாவதை மறைத்து விட்டார். 

நானறிந்த மெளனி இத்தகையவரல்லர். தமது தோல்விகளிை நேரில் சந்திக்கக் கூடிய "ஸ்போர்ட்மென்ஷிப் கொண்டவர் மெளனி. (இளமையில் மைல் மணி என்று அழைக்கப்பட்ட ஒரு முதல்தர ஸ்போர்ட்மென் அவர்). வெங்கட்ராமுக்கு முதல் கடிதத்தை மட்டும் காட்டும் தற்பெருமை உணர்வு கொள்ளும் நிலைக்கு அவர் வந்ததன் காரணம்-தமது ஜீவிதத்துக்கு ஓர் உன்னதமான காரண நியாயத்தை தமக்கே உணர்த்துவதற் காகத்தான். சரீர பலமும் பொருள் பலமும் ஜாதீய செல்வாக்கும் இவற்றின் விளைவான செருக்கும் நிரம்பியிருந்த காலங்களில் அவரிடம் "நீங்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்று என்னைப் போன்றவர்கள் கேட்டபோதெல்லாம், "எழுதுவதால் என்ன புண்ணியமா, புருஷார்த்தமா?' என்றே சொல்லுவார். பின்னாடி தமது உண்மையான புருஷார்த்தம் தமது எழுத்துத் தான் என்று உணர நேர்கிறது. முந்திய பார்வைக்காக பின்னாடி மனோதர்ம சக்திகளினால் இப்படி "தண்டனை பெற்றார் எனலாமா? பிராங்க்ளினின் இரண்டாவது கடிதத்தில்- 'மெளனியின் எந்தக் கதையையும் எந்தப் பிரசுரக்காரரும் வெளியிட முன் வரவில்லை. காரணம் படிப்பவரை ஈர்த்துச் செல்லக்கூடிய அழுத்தமான கதையம்சம் இல்லை. ஆரம்ப வரிகளே சிறுகதை படிப்போரை ஈர்க்கவேண்டும். இது நிறைவுறவில்லை. சில உயரிய தன்மைகளை கதைகள் பெற்றிருந்தும் இந்நிலை வருந்துதற்குரியது' என்றிருந்தது. இதற்குப் பிறகு தமிழுக்கும் பிராங்க்ளினுக்கும் இருந்த தொடர்பு கூட போயே போய் விட்டது. 

தம்மைப் பற்றிய பிராங்க்ளினின் முதற் கடிதம் வந்த சமயத்தில், தமக்கே ஏற்பட்ட தற்பெருமைத் தன்மையை மட்டும் தனிமைப்படுத்தி, அதற்குள் மட்டும் நின்றுகொண்டு, அதையே வெங்கட்ராமுக்கு தர்சனமாகத் தந்துள்ளார் மெளனி, கையில் கொடுக்காமல் கடிதத்தை மூலையில் பிடித்துக் கொண்டு காட்டியதன் காரணம் - தேதி ரொம்பப் பழையது. இந்த விபரம் மறைக்கப்பட வேண்டும் என்பதாக இருக்கலாம். கண் சரியாகத் தெரியாவிட்டாலும், பூதக் கண்ணாடி உதவியுடன் படிக்கும் பழக்கம் மெளனிக்கு இருந்திருக்கிறது. இதனால் தேதியைக் கவனித்து விரலால் மறைத்திருக்கிறார். எழுதுவதையே உதாசீனப்படுத்திய ஓர் உண்மையான கலைஞன், அந்தக் குற்றத்தை இழைத்ததுக்காக அடையும் வீழ்ச்சியை நம்முன் நிகழ்த்திக் காட்டிய சரித்திரசாட்சி இது எனலாமா? O 


பிரேமிள் பேட்டி ; பிற்சேர்க்கை 

கா.சு விமர்சன ஊழல்கள்' நூலில் எழுத்துவில் தொனித்த வைதீகத்தைக் குறிப்பிட்டிருக்கிறிர்கள். தமிழின் நவீனத்வம் பின்னிணைப்பிலும் இது மறுபிரசுரமானது. இப்போது நீங்கள் எழுத்து'வில் பார்ப்பனியம் செயல்பட்டதில்லை என்கிறீர்கள், கசடதபறவினர், பிந்திய காலத்து வெ. சா. மூலம் வெளிவந்த வகையான பார்ப்பனி யம் எழுத்துவில் இல்லை என்பது வெளிப்படை, இருந்தும் உங்கள் விமர்சன ஊழல்கள் கூற்றுடன் இப்போது நீங்கள் முரண்படுவதாகக் கூறி, உங்கள் மீது சாணியடிக்கும் முன்றிலார் எழுதலாம். இதைச் செய்யாமல் முன்றில் 18-ல் எதையோ எல்லாம் பிதற்றுகிறார். காலம் காலமாக நாடறிந்த பாடல், 'கள்ளர் மறவர் காடரகம்படியர் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளராயினரே' இதை தாமே உங்களுக்கு பிரம்மோபதேசம் மாதிரி சொல்லிக் குடுத்தாராம் அப்புறம் உங்கள் பார்வை வெளிவர உதவுகிற வர்களுக்கு பட்டப் பெயர்கள். நான்கு வருணத்தவர்களுள் பிராமணர்களுக்கு மட்டும்தான் கோத்திரம் சொல்வதுண்டு என்று அவர் குறிப்பிடுவதுதான் அவர் புத்திசுவாதீனத்தோடு எழுதினமாதிரி இருக்கிறது. 

பிரேமிள் :
அப்படியானால் ராவணன் இத்யாதி எல்லாம் புலஸ்திய கோத்ரம் என்பதையும் முன்றிலாரின் பேதலித்த புத்தி மறந்துவிட்டது. யக்ஞோபவித சடங்கின் வழி பிராமணர்களை 'துவிஜன்மிகள்' என்கிற வழக்கின் பொருள் 'இந்தியனுக்கும் ஐரோப்பியனுக்கும் பிறந்த'தாக உளறிய முன்றிலாருக்கு பதிலாக, பிராமண, சஷத்ரிய, வைசியர் என்ற மூவர்ணத்த வருமே பூனூல் வழி துவிஜன்மிகள் என்ற மனுதர்மக் கூற்றை முன்வைத்தேன். இப்போது 'கோத்ரம்' என்கிறார். கோத்ரம் சொல்லாமல் யக்ஞோபவிதமும் இதனுடன் செய்யப்படும் பிரம் மோபதேசமும் நடக்காது இதெல்லாம் தெற்கில் தேய் வடைந்து வடக்கில் பெருமளவு நீடிக்கும் விஷயங்கள். இந்த பூனூல், பிரம்மோபதேசம், கோத்ரம் எல்லாமே ஆன்மிக சமாச்சாரம் என்கிற மரபு பித்தலாட்டமாகும் என்பதே என் 

பார்வை. O 

படிப்பகம்