Pages

Tuesday, January 31, 2017

கொரில்லா - ஷோபாசக்தி (இறுதி அத்தியாயம்)

Automated Google-OCR

1. இரவு முழுவதுமே என்னிடம் எதுவித விசாரணைகளையும் மேற்கொள்ளாமலும் என்னிடம் எதுவித வாக்குமூலங்களையும் பெற முயற்சிக்காமலும் ஆனால் என்னை ஒரு கண் தூங்க விடாமலும் வெறுமனே பொலிஸ் நிலையத்தில் உட்கார வைத்திருந்தார்கள். தொடர்ந்து சிகரட் புகைத்துக் கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில் சலிப்புற்று எதற்காக என்னைக் கைது செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்குப் பொலிசார் 'பிரான்ஸில் தமிழ் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த சந்தேகம்" என்றார்கள். "அப்படியானால் விசாரணையை ஆரம்பியுங்களேன், உங்களால் விசாரணையை உடனடியாக நடத்த முடியாவிட்டால் இப்போது என்னைப் போக அனுமதியுங்கள், பின்னர் நீங்கள் விசாரணை நடத்த ஆயத்தமாக இருக்கும் போது என்னை அழையுங்கள் வருவேன்’ என்று சும்மா கதை விட்டுப் பார்த்தேன். 'உன்னை விசாரணையின்றியே காலவரையின்றி தடுத்து வைக்கும் அதிகாரம் பொலிசாருக்கு உள்ளது. ஏனெனில். அந்தப் பொலிஸ் அதிகாரியைப் பேசவிடாமல் நான் குறுக்கிட்டு "ஏனெனில் நான் கறுப்பு நிற அந்நியன்’ என்று சொல்லிவிட்டு இன்னொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன். '

2. இதன் பின்பு நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே நான் தூங்க முற்படும் போதெல்லாம் ஒரு பொலிசுக்காரன் என்னைத் தட்டி உலுக்கி இதோ விசாரணையை ஆரம்பித்துவிடப் போகிறோம் தயாராகு" என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். காலை எட்டு மணியளவில் என்னை விதம் விதமாக புகைப்படம் பிடித்தார்கள். என் பத்து விரல் ரேகைகளையும் பதிவு செய்து கொண்டார்கள்.

3. சரியாக மதியம் 12.06 மணிக்கு என்னை ஒரு மிக விசாலமான அறைக்குள் பொலிசார் அழைத்துச் சென்றார்கள். அந்த அறை பளிச் என்று மிகச் சுத்தமாகவும் வெறுமையாகவும் ‘ஓ’ வென்று கிடந்தது. நான்கு மூலைகளிலும் நான்கு நாற்காலிகள் மட்டும் போடப் பட்டிருந்தன. பொலிஸ் அதிகாரி ஒரு நாற்காலியைச் சுட்டிக்காட்டி அதில் உட்காருமாறு கட்டளையிட்டான். அப்போது குள்ளமானவனும், உருளையானவனும், செம்பட்டையான தொங்கு மீசை கொண்டவனுமான ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க வெள்ளையன் கைகளில் சில கோப்புக்களுடன் அறைக்குள் பிரவேசித்தான். என்னைச் சூழ நின்று கொண்டிருந்த பொலிசார் வந்தவனுக்கு துடித்துப் பதைத்து சல்யூட் அடித்த விறுத்தத்திலேயே அவன் தான் தலைமை விசாரணை அதிகாரி என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த விசாரணை அறையில் எனக்குத் தொடர் ஆச்சரியங்கள் காத்திருந்தன.

4 முதலாவது ஆச்சரியமாக சும்மா சுடுதண்ணி குடித்த நாய் மாதிரி கடுப்பாய் வெடித்தும் மறு விநாடி விகாரமாய் இளித்தும் என்னோடு பேசிய அந்த விசாரணை அதிகாரி எனது கால் எங்கே எப்படி யாரால் துண்டிக்கப்பட்டது, எந்த நாட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றேன் என்பதையெல்லாம் மிகத் துல்லியமாகச் சொல்லி தான் சொல்வது சரியா எனக் கேட்டான். நான் மெளனமாகத் தலையாட்டினேன். அவன் வாய் கொள்ளாத சிரிப்புடன் அப்படியென்றால் நீ நாடு கடத்தப்படப் போவது உறுதியாகி விட்டதல்லவா?" என்று கேட்டான். எல்லாம் நான் எதிர்பார்த்திருந்தது தான், எதற்கும் நான் தயாராகத்தான் இருக்கிறேன் என்பது போல அவனைப் பார்த்து நானும் மெலிதாகச் சிரித்தேன்.

5. அடுத்த சில நிமிடங்களில் அந்த விசாரணை அறைக்கு அந்தோனிஅழைத்து வரப்பட்டான். அவன் என்னைப் பார்த்ததுமே உற்சாகமடைந்தவனாகக் காணப்பட்டான். என்னையும் அந்தோனியையும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளக் கூடாது என விசாரணை அதிகாரி உத்தரவிடவில்லைதான். ஆனாலும் நாங்களிருவரும் பேச முயற்சிக்கவில்லை. பொலிசாரின் துளைக்கும் பார்வைகளும், சுடலை அமைதியுமாய் அந்த அறை இருந்த இருப்பு எங்களைப் பேசவிடாமல் தடுத்திருக்கலாம். அந்தோனி என் எதிர்ப்புற மூலையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டான். "உன்னுடைய பெயர் என்ன?" இது தான் விசாரணை அதிகாரி அந்தோனியை நோக்கிக் கேட்ட முதலாவது கேள்வியாய் இருந்தது. அந்தோனியால் புரிந்து கொள்ளக் கூடிய மாதிரி விசாரணை அதிகாரி பிரஞ்சு மொழியைக் கொச்சையாக உடைத்து உடைத்துப் பேசினான். கேள்விக்கு மறுமொழியாக அந்தோனி தன்னுடைய பெயர் தனிநாயகம் என்று சொன்னான்.

8. உடனே ஒரு வாட்டசாட்டமான பொலிசுக்காரன் விசாரணை அதிகாரியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி தோள்களைக் குலுக்கியவாறே இந்தச் சின்னப்பயலான வேசி மகன் நேற்றைய இரவிலிருந்தே தன்னுடைய பெயர் தனிநாயகம் என்றும் தன்னுடைய வயது நாற்பத்து மூன்று என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான்' என்று கூறிச் சிரித்தான்.

7. அந்தோனி லொக்கா கொல்லப்பட்டுவிட்ட விசயத்தை இன்னும் அறிந்து கொள்ளாதவனாய் இருக்கிறான். எனக்கு செய்த மாதிரியே, அவனை ஏன் கைது செய்திருக்கிறார்கள் என்ற காரியத்தை பொலிசார் இன்னும் அவனுக்கும் சொல்லாமலேயிருக்கிறார்கள். ஏதோ மக்டொனால்ட்ஸ் உணவுச் சாலையில் ஆள்மாறாட்டம் செய்து வேலை பெற்றுக்கொண்டான் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே தன்னைப் பொலிசார் கைது செய்திருக்கிறார்கள் என்பதாய் அந்தோனி நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். யார் கண்டது? அவனைப் பிணை எடுத்துச் செல்வதற்காகவே நான் வந்திருப்பதாகவும் அவன் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

8. விசாரணை அதிகாரி வேகமாய் நடந்து போய் அந்தோணியின் நாடியைத் தூக்கி அந்தோனியின் கண்களைப் பார்த்தான். பின்னர் ஒ உன்னுடைய பெயர் தனிநாயகமா? நல்லது. அது மிக நல்லது. ஆனால் நான் உன்னை பெத்தி தனிநாயகம் என்றே அழைப்பேன். அப்படியானால் அது யார்க்றோன் தனிநாயகம் என்று யோசிக்கிறாயா? அவனைத்தான் இப்போது நீ சந்திக்கப் போகிறாய்" என்று இளித்தான். இப்போது லொக்கா விசாரணை அறைக்குள் அழைத்துவரப்பட்டார். லொக்காவைக் கண்ட தருணத்தில் என் மண்டைக்குள் ஒரு மகிழ்ச்சி மின்னிப் பறந்தது. லொக்காவுக்குப் புறத்தாலேயே ரிடாவும் விசாரணை அறைக்குள் அழைத்து வரப்பட்டான். அறைக்குள் மீதமிருந்த இரு நாற்காலிகளிலும் அவர்கள் உட்கார வைக்கப்பட்டார்கள்.


9. ஆச்சரியங்களாலே அந்த விசாரணை அறை நிரம்பி வழிவதாயிற்று. ஒரு மந்திரக் குகைக்குள் நிகழ்வது மாதிரி ஆட்கள் திடீர் திடீரெனத் தோன்றுகிறார்கள். இவ்வளவுக்கும் மந்திரவாதி - நான் விசாரணை அதிகாரியைக் குறிப்பிடுகிறேன் - அவனை அழைத்து வாருங்கள், இவனை அழைத்து வாருங்கள் எனத் தன் ஊழியரை ஏவிக்கொண்டிருக்கவில்லை. ஏற்கனவே எழுதிவைக்கப் பட்டிருந்த நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுவதை ஒத்ததாய் நிகழ்வுகள் அமைகின்றன.

10. லொக்கா ஒரு முறை தன் தலையைத் தூக்கி என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவாறேயிருந்தார். ரிடா எப்போதும் போலவே பதற்றமாய் விழித்து எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தான். அவனின் கால்கள் நடுங்கிக் கொண்டிருப்ப வையாய்த் தெரிகின்றன.

11. இப்போது விசாரணை அதிகாரி எங்களுக்கு நட்டநடுவாய் வந்து நின்று கொண்டு செருமி குரலைச்சரிப்படுத்திக் கொண்டான். நல்லது பயல்களே நேற்றைய மாலையில் என்ன நடந்தது என்பதை உள்ளது உள்ளவாறே க்றோன் தனிநாயகமும் இந்தக் கண்ணியத்துக் குரிய அரபு இளைஞனும் எங்களுக்கு நடித்துக் காட்டட்டும். பயல்கள் நீங்கள் மிகவும் கவனமாக அதை நடிக்கவேண்டும். எங்கள் வீடியோப் படப்பிடிப்பாளரால் பதிவு செய்யும் இந்தக் காட்சிகள் உங்களின் வாக்குமூலங்களாக நீதிமன்றத்தில் என்னால் சமர்ப்பிக்கப்படும். மிகையான, மேலதிகமான பாவனைகளும், உங்களுக்குள்ளேயே புதைக்கப்படும் பாவனைகளும் நீதிமன்றத் திலே உங்களுக்கு எதிராய் மாறிவிடக் கூடும். சரி அதை நாங்கள் ஆரம்பிப்போம். ஒகோ, க்றோன் தனிநாயகத்தின் மனைவியாக நடிப்பதற்கு ஒருவர் வேண்டுமல்லவா? அதிகாரி இந்த இடத்தில் பேசுவதை நிறுத்தி அந்தோணியைப் பார்த்து எழுந்திருக்குமாறு சுட்டுவிரலால் உத்தரவிட்டு "ஏ பெத்தி தனிநாயகம் நீ க்றோன் தனிநாயகத்தின் மனைவியாக நடிக்கலாம். அது ஒன்றும் உனக்கு அவ்வளவு சிரமமாய் இருக்காது என்றே நம்புகிறேன். ஏனென்றால் பிணமாக நடிப்பதில் பெரிய சிரமங்கள் எதுவுமில்லையே."

12. என் அடிவயிறு சுண்டி இழுத்து உதடுகள் தகித்து உலர்ந்து

1690 கொரில்லாபோயின. இப்போது அதிகாரி என்னைப் பார்த்து நான் கூறியதை தெளிவாக இவர்களுக்கு மிகத் தெளிவாக மொழிபெயர்த்துச் சொல்லலாம். ஏனென்றால் இது கொலை வழக்கு. மிகவும் துல்லியமாக எதையும் செய்வதே எங்களுக்கும் நல்லது, உனது நண்பர்களுக்கும் நல்லது எனக் கூறிவிட்டு ரிடாவைப் பார்த்து "என்ன இளைய மனிதனே நாங்கள் ஆரம்பிப்போமா என்று கேட்டான். ரிடா பதறியடித்துக் கொண்டு எழுந்து ‘ஆம் உடனடியாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு என்னை இந்த நரகத்தி லிருந்து தயவு செய்து விடுவியுங்கள் என்றான்.

13. எங்கள் நால்வரையும் விசாரணை அதிகாரியும் பொலிசா ரும் பக்கத்திலிருந்த இன்னொரு மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றனர். வியக்கத்தக்க முறையில் அந்த மண்டபத்தின் தரையில் வெண்கட்டிகளால் லொக்காவின் வீட்டின் அமைப்பும், தொலைக் காட்சி, நாற்காலிகள், மேசை சாமான் சக்கட்டுகளும் அச்சொட்டாக வரையப்பட்டிருந்தன. இந்த நாடகத்தை எங்கிருந்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியாமலுக்கு இருந்தது.

14, 15, 16, 17, 18, 19

மாலை ஆறு மணி, நாற்பது நிமிடங்கள். லொக்கா தனது குளிர் அங்கியுனுள் கையை நுழைத்து சாவியை எடுத்து வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வருகிறார். சோர்வாக வரவேற்பறையில் இருக்கும் நாற்காலியில் சாய்ந்து கொள்கிறார். வரவேற்பறையில் யாரும் இல்லாமலே தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருப்பதால் சினந்து கொண்டே எழுந்து போய் தொலைக்காட்சியை அணைக்கும் போது தொலைக்காட்சிக்கு அருகில் இருக்கும் நாற்காலியின் முதுகில் ஒரு கறுப்புத் தடித்த தோலால் செய்யப்பட்ட குளிரங்கி தொங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்து யோசனையுடன் சுற்றும் முற்றும் பார்க்கிறார். குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்கிறது. மெதுவாக நடந்து போய் குளியலறைக்கு வெளியே நின்று மூடப்பட்டிருக்கும் குளியலறையின் கதவையே பார்த்தவாறு ஒரு சிகரட் பற்றவைத்துக் கொள்கிறார். அப்போது குளியல் அறைக் கதவு திறக்க உள்ளிருந்து நிர்வாணமாக ரிடா வெளியே வருகிறான். (இந்தக் காட்சியின்போது ரிடா முதலில் சற்றுத்தயங்கிய போதிலும்

ஷோபாசக்தி On 170

50 - Legil--

ரிடா நிர்வாணமாக நடிப்பது தான் சட்டப்படி செல்லுபடியாகும் என்று விசாரணை அதிகாரி வலியுறுத்தினான்) ரிடா லொக்காவைக் கண்டவுடன் பதறுகிறான். அவன் சரீரம் உதறுகிறது.

ffilm

மாலை வணக்கம் தனிநாயகம்.

லொக்கா

தயவு செய்து வெளியே போப்விடு.

வொக்கா திறந்திருக்கும் கதவு வழியாக குளியலறைக் குள்ளே பார்க்கிற7ர். மார்பின் குறுக்காக ஒரு துண்டைக் கட்டியவ/7றே ஜூவர7ணி தலையைக் குனிந்து கொண்டு குளியலறையினுள்ளிருந்து வெளியேற முயற்சிக்கிற7ர். லெ7க்கா தனது மார்பான் ஜூவர7ணியை நெருக்கித் தன்னி ஜூவர7ணியை மறுபடியும் குளியலறைக்குன்தள்ளிக்கொண்டு தானும் குளியலறைக்குள் நுழைகிறார்/ ரிடா ஒடிசி சென்று படுக்கையறையினுள்துழைந்து தனது ஆடைகளை எடுத்து அணிந்தவாறே அவசர அவசரம7க வரவேற்பறைக்கு வருகிறான், வரும்பே/து குளியலறைக் கதவு மூடப் பட்டிருப்பதைக் கவனிக்கிறான். வரவேற்பறைக்கு வந்து தனது குளிர் அங்கியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறுகிறான். கதவு சாத்திக் கொள்கிறது/குளியலறைத் தொட்டியின் விளிம்பில் ஜூவர7ணிதலையைக் குனிந்தவாறே உட்கார்ந்திருக்கிறார்

லொக்கா

ஜூவா சண்ணத்து செய்த ச7ம7ன்தான் உம்மிட அமரை அடக்குமெண்ட7ன் நானும் என்ரதுணித்தோல வெட்டுறன்.

குளியலறையின் ம7டத்திலிருக்கும் கத்திரிக்கோலை உருவி எடுக்கிறார். ஜூவராணி எழுந்து லொக்காவின் கை களை77 பிடிக்கிறார்.

1710 கொரில்லாஜீவா தனிநாயகம், நான் எத்தினை தரம் செ7ல்லிப் // 'z-സ്കെ ഉഗ്രക്രഗ്രീക്ഷത്രമ ക്ലബ്ബു (ബ_ന്നു. ബൈ டிவோர்ஸ் எடுங்கோ,

லொக்கா

67622.6/765?

ஜீவா

ஒருத்தருக்கும் பிரச்சனையில்லை. நான் எங்கேய7வது போயிருவன்.

லொக்கா

எங்க 2 துணிவுதியாவுக்குப் போவியே/72 என்னை நீ ஆகத்தான் பெ7ண்ணயன் ஆக்கிக்கொண்டிருக்கிற7ம்.

சட சடவென கத்திரிக்கோல7ல் மூர்க்கத்துடன் ஜூவர7ணியின் ம7ர்பு, முகம், குரல்வளை, அடிவயிறு, பெண்குறி எங்கும் குத்துகிற7ர் லெ7க்கர இதைச் செய்து காட்டும் போது காகித அட்டையால் செய்யப்பட்டிருந்த ஒரு கத்திரிக்கே7ல் டெ/7லிச7ர7ல் லெ7க்காவுக்கு கொடுக்கப் பட்டிருந்தது) ஜூவராணி நிலத்தில் துடித்து விழுகிறார். அழைப்பு மணி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க வொக்கா ஜூவர7ணிக்கு அருகில் அமர்ந்திருந்து ஆவராணியின் தலை முடியைக் கொஞ்சம் கொஞ்சம7கக் கத்தரித்துக் கொண்டி ருக்கிறார். -

கதவைத் திறந்து வெளியேறிய ரிடா சில நிமிடங்கள் கதவுக்கு அருகிலேயே தயங்கியவாறு திர்கிறான். பின் பதட்டத்துடன் அழைப்பு/ மணியை அழுத்துகிறான். யாரும் கதவைத் திறவாதத7ல் மீண்டும் மீண்டும் விடாமல் அழுத்துகிறான். யாரும் கதவைத்திறக்கவில்லை.தனது குளிர் அங்கியினுள் கையை விட்டு கைத் தொலைபேசியை எடுத்து 77 என்ற இலக்கத்தை அழுத்தி தொடர்பு கொள்கிறான். 77 என்ற இலக்கம் பிரான்ஸின் அவசரப் பொலிச7ரின் கட்டுப்பாட்டு அறைக்கு உரியது.

ஷோபாசக்தி0172

நன்றி - நூலகத்திட்டம்

அடுத்த சில விநாடிகளில் என்னையும் அந்தோனியையும் மட்டும் ஒரு மாடி அறைக்கு பொலிசார் அழைத்துப் போனார்கள். போகும் போது திரும்பி கடைக்கண்ணால் லொக்காவைப் பார்த்தேன். முகத்தைக் கைகளால் மூடியவாறு நாற்காலியில் சாய்ந்து கிடந்தார். ரிடாவைப் பார்த்து தலையசைத்தேன். அவனுடைய உதடுகள் பரிதாபமாய்ப் பிளந்து சிரிக்க முயன்றன.

2. கீழேயுள்ள விசாரணை அறைக்கு நேர்மாறாக இந்த அறை கருவிகளும், கணனிகளும், கோப்புகளும், சுவரில் ஒட்டப் பட்டிருக்கும் எண்ணற்ற புகைப்படங்களுமாய் தாறுமாறாய்க் கிடந்தது. ஒரு மேசையைச் சூழ பொலிசாரும் நாங்களும் உட்கார்ந்திருந்தோம். எனக்கு எதிரே மேசையின் அப்புறத்தில் ஒரு பொலிசுக்காரன் மிகச் சிறிய கணனியை மேசையில் வைத்து உபயோகித்துக் கொண்டிருந்தான். எனது இடது புறத்தே அந்தோனியும் அந்தோனிக்கு நேர் எதிராய் எனது வலப்புறத்தே விசாரணை அதிகாரியும் உட்கார்ந்திருந்தனர். உடனடியாக இன்னொரு விசாரணையை ஆரம்பிக்கப் போவதாக எங்களுக்கு அதிகாரி கூறி தனது அடிவயிற்றைத் தடவிக்கொண்டான். விசாரணைக்கு உள்ளாக்கப்படுபவர்களுக்கு ஒய்வே வழங்காமல் தொடர் விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் விசாரிக்கப் படுபவனை மனரீதியாய் துன்புறுத்தி மூளையை பிறாண்டி எடுக்கும் இந்த விசாரணை உத்தியை உலகத்தில் உள்ள எல்லாப் பொலிசுக்காரர்களும் கடைப்பிடித்து வருகிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.

3. கணனியோடு மாரடித்துக் கொண்டிருந்த பொலிசுக்காரன் எழுந்து சட்டையைக் கழற்றும்படி அந்தோனிக்கு உத்தரவிட்டான். அந்தோனிக்கு அவன் கூறியது புரியவில்லை. நான் அந்தோனிக்கு மொழிபெயர்ப்பில் உதவலாமா? என்று கேட்டேன். "சரி பண்ணிக்கொள், ஆனால் அனைத்து விசாரணைகளும் ஒலிப்பதிவு

1730 கொரில்லாசெய்யப்படுகின்றன என்பதை நீ மறக்கக்கூடாது" என்றான் விசாரணை அதிகாரி.

4. அந்தோனி சட்டையைக் கழற்றியவுடன் அவனது மார்புக் காம்பின் கீழே ஒரு ரப்பர் குமிழ் பொருத்தப்பட்டது. அந்த ரப்பர் குமிழ் ஒரு பிராங் நாணயம் அளவிலே இருந்தது. அந்தோனியின் கையில் முழங்கைக்கு மேலால் ஒரு குமிழ் பொருத்தப்பட்டது. அந்தோனி மிகவும் பயந்தவனாய் காணப்பட்டான். அந்தோனிக்கு ஏதாவது மின் அதிர்ச்சி கொடுக்கப் போகிறார்களோ என்று தான் முதலில் நினைத்தேன். திடீரென L'herbe rouge என்ற பிரஞ்சுத் திரைப்படத்தில் இந்தக் குமிழ்களைப் பார்த்தது மண்டையில் உறைத்தது. இது பொய் அறியும் கருவி.

5. விசாரணை அதிகாரி மீண்டுமொரு இளிப்புடன் இது என்னவென்று தெரியுமா?" என்று கேட்டான். தெரியும் என்று தலையாட்டினேன். நீ தான் பரபாஸ் கிரிமினல் ஆயிற்றே, உனக்கு தெரியாமல் போய்விடுமா? சரி உனது கூட்டாளிக்கு அவனது உடம்பில் பொய் அறியும் கருவி பொருத்தப்பட்டிருப்பதையும், உண்மைக்கு மாறாய்ப் பேசினால் அது காட்டிக் கொடுத்து விடும்

என்பதையும் சொல்" என்றான். அதிகாரி கூறியதை அந்தோனிக்கு

தமிழ்ப்படுத்திச் சொன்னேன். எனக்கே அந்தோனியின் முகத்தைப் பார்க்கச் சகிக்க முடியாத அளவுக்கு இருண்டு போய் அது ஒரு சவத்தின் முகமாய் விறைத்துக் கிடந்தது.

6. விசாரணை அதிகாரி எழுந்து போய் அந்தோனியின் பின்புறமாய் நின்று கொண்டான். அவனது குரல் பெரும் அச்சமூட்டுவதாய் ஆங்காரத்துடன் ஒலித்தது. அவனின் குரலை நான் அந்தோனிக்கு மொழிபெயர்த்தேன்.

7, ஏய் பெத்தி தனிநாயகம் உன் உண்மையான பெயர் என்ன? எங்கிருந்து பிரான்சுக்கு வந்தாய்?

8. பெயர், யாகப்பு அந்தோனி தாசன். இலங்கையிலிருந்து ரஷியா, இத்தாலி ஊடாக பிரான்சுக்கு வந்தேன்.

9. அதிகாரி மெதுவாக நடந்து போய் கணனித் திரையைப் பார்த்தான். "பிசாசே நீ என்னிடமா பொய் சொல்கிறாய்? அதிகாரி தனது காலைச் சுழற்றி அந்தோனியின் கழுத்தில் எத்தினான்.

ஷோபாசக்தி0174

நன்றி - நூலகத்திட்டம்

அந்தோணி கதிரையோடு கீழே மல்லாந்து விழுந்தான். அதிகாரி அந்தோணியைத் தூக்கி நிறுத்தி மறுபடியும் உட்கார வைத்தான். இப்போது நீ எனக்குச்சொல்லவேண்டும்! நீ மூன்று வருடங்கள் ஜெர்மனி ஒல்லாந்து எல்லையிலிருக்கும் ஒக்றுப் நகரத்தில் வசிக்கவில்லையா? அதிகாரி கைகளை ஓங்கியவாறே நின்றான். அந்தோனியின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. அது உண்மைதான் என்று அந்தோணி ஒத்துக் கொண்டான். நான் அதை அதிகாரிக்கு மொழி பெயர்த்துச் சொன்னேன்.

10. அதிகாரி கொஞ்சம் அமைதியடைந்தான். 'நல்லது இப்போது சொல் உனது உண்மையான பெயர் என்ன?

11. 'என்னுடைய உண்மையான பெயர் ஏசுராசன் ரொக்கிராஜ் என்று என்னிடம் அந்தோனி சொல்ல நான் அதிகாரியிடம் 'அவனுடைய உண்மைப் பெயர் ரொக்கிராஜ் என்பதை அவன் ஒப்புக்கொள்கிறான்” என்றேன்.

l2. அதிகாரி கணனியோடு மாரடிக்கும் பொலிசுக்காரனைப் பார்க்க அவன் உதடுகளைப் பிதுக்கினான். அதிகாரி எட்டி அந்தோனியின் தலைமயிரை கொத்தாகப் பிடித்தான். 'நீ பொய் சொல்கிறாய், எனக்குத் தேவை உனது உண்மையான பெயர்." அதிகாரி பேசி முடித்தவுடன் நான் மொழி பெயர்க்க தயாராக விருந்தேன். ஆனால் அதிகாரி பேசி முடிக்க முன்பு அவனின் இடுப்பிலிருந்த வொக்கி டோக்கி அவனை அழைத்தது. அதிகாரி பேசுவது எனக்கு தெளிவாகவும் அதிகாரியோடு வோக்கி டோக்கியில் உரையாடும் குரல் சற்றுத் தெளிவின்றியும் எனக்குக் கேட்டது. பேசிக் கொண்டிருக்கும் அதிகாரியின் ஒரு கை இப்போதும் அந்தோனியின் தலைமயிரைப் பற்றி இழுத்தவாறே யிருந்தது.

13. அந்தோனி என்னைப் பார்த்து "அண்ணே என்னுடைய பெயர் கொரில்லா என்று அதிகாரிக்குச் சொல்லிப் பாருங்கள் என்று இரண்டு மூன்று தடவைகள் மெல்லிய குரலில் கெஞ்சினான். எனது கவனமெல்லாம் அதிகாரியின் வோக்கி டோக்கி உரையாடலிலேயே இருந்தது.

14. சில நிமிடங்களுக்கு முன்பாக பிரான்ஸில் இன்னொரு தமிழ்ச் சீவன் கொல்லப்பட்டதாம்.

1750 கொரில்லாஅவன் சுயிங்கம் மென்றுகொண்டே வந்தான். நான் நேற்றிலிருந்து இவனைக் கவனித்து வருகிறேன். இவன் அதிகம் பேசுவதில்லை. நடையில் ஒரு துள்ளல் தெரிய தோள்களைக் குலுக்கி கால்களை அகல வைத்து நடக்கிறான். என்னைவிட இவன் மிகச் சில வயதுகள் இளையவனாய் இருக்கக்கூடும். எப்படி யெனினும் இவன் இருபது வயதுகளுக்கு மேற்பட்டவனாய் இருக்கமுடியாது.

2. எங்களின் கால்களின் கீழே புல்வெளி விரித்துக் கிடந்தது. எவரும் சந்தேகமுற வேண்டாம், நான் நிச்சயமாகவே அந்தப் புல்வெளியையும் புற்கள் அழகாக கத்தரிக்கப்படுவதையும் ரசித்துக்கொண்டுதான் போனேன்.

3. நாங்கள் அந்தத் தொடர் மாடிக் குடியிருப்பின் பிரதான வாசலை வந்தடைந்த போது, அவன் நிதானமாக நடந்து சென்று தூரவுள்ள குப்பைத் தொட்டியில் சுயிங்கத்தை உமிழ்ந்து விட்டு வரும் வரையில் நான் காத்திருந்தேன். பின் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அதன் பின் புற முனையால் இன்ரர் ஃபோனை அழுத்தினேன்.

4. சற்று தாமதத்திற்குப் பின்னாக ஒரு முதிய பெண் குரல் பேசிற்று. பதில் சொன்னேன், கதவு திறக்கப்பட்டது.

5. நாங்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்த போது ஒரு இளம் பெண்ணைக் கண்டோம். அவர்கள் சமையல் அறையில் உணவருந்திக் கொண்டிருப்பதால் கதவைத் திறந்துவிட தாமதித் ததற்காக அந்தப் பெண் எங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். எங்களை அமரச் சொல்லிவிட்டு அவர் மீண்டும் இடது புறமிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்.

6. அந்தச் சிறிய வரவேற்பறையில் நானும் அவனும் தனித்திருந்தோம். அவன் அப்பெண் சென்று மறைந்த இடப்புற அறையையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். என் எதிரே சுவரில் ஒரு மிகப் பெரிய ஓவியம் கண்ணாடிச் சட்டகத்துள்

ஷோபாசக்திப 176

நன்றி - நூலகத்திட்டம்

தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஓவியம் உண்மையில் அதன் அசலிலிருந்து கணனித் தொழில்நுட்பத்தின் மூலம் உருப்பெருக்கி பிரதி செய்யப்பட்டுள்ளது.

7. ஒரு பெண்ணின் முழுப் பிரதிமை. தீர்க்கமான கோடுகள், எனினும் உணர்வுகள் இறந்த நீள் செவ்வக முகம். அடர்ந்த திருத்தமான கரிய புருவங்கள். மேலுதட்டின் மீது உறுத்தலாய் கிடக்கும் பூனை ரோமங்கள், நெடிய கழுத்துப் பகுதி, அதனை நெருக்கி கிழிக்கும் முள் அணிகள், மார்பின் கீழாக இறக்கி விடப்பட்டிருக்கும் மெக்ஸிகள் பாணி அங்கி, பெண்குறியிலிருந்து தெறிக்கும் திவலைச்செந்நீர், பாதங்களை பழுத்த பெரும் இலைகள் தாங்க உச்சந்தலையிலிருந்து முளைத்தெழும் மலர்க் கதம்பமும், பின்னணியில் பசிய இலைகளும்.

8. ஒரு பார்வையிலேயே அவ் ஓவியம் பிறைடா காலோவால் வரையப்பட்ட அவரின் சுயப் பிரதிமை எனச் சொல்லிவிடலாம். மசூதி ஒவியங்கள், ஆலய ஓவியங்கள் வரைந்து அவற்றின் மேலே கடிகார முட்கள் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப் பீர்கள். அது போலவே பிறைடா காலோவின் இடது புற மார்பின் மேலாக கடிகார முட்கள் பொருத்தப்பட்டு அவை சுற்றிக் கொண்டிருந்தன.

9. மாற்கு மாஸ்டருக்கு மிகவும் பிடித்த ஓவியை பிறைடா காலோ தான். வகுப்பின் ஒரு கலந்துரையாடலின் போது எனது சகமாணவன் ஒருவன் "சேர் நீங்கள் அடிக்கடி சொல்வது போல ஒரு புகைப்படக் கருவியின் பணியைத் தான் எதார்த்த ஓவியர்கள் செய்வதுண்டு. ஆனாலும் அவர்களின் உழைப்பு நுட்பமானதும் கடினமானதும் ஆகும். ஆனால் பிறைடா காலோவிடம் உழைப்புக் கூட கிடையாது. அவர் தனது சுயப் பிரதிமைகளை மட்டையடி அடித்தே பெரிய ஆளாகி விட்டார்" என்றபோது முதலும் கடைசியுமாக மாற்கு மாஸ்டர் மிகுந்த கோபத்துடன் ஒன்றும் பேசாமல் தனது வகுப்பை சில நிமிடங்கள் நிறுத்தி வைத்தார்.

10. இப்போது இடது புற அறைக் கதவு திறக்கப்பட்டது. அந்த அறையினுள் இருந்து தனது கைகளை முகர்ந்தவாறே வந்த சபாலிங்கம் பிறைடா காலோவின் ஒவியத்திற்கு நேர் கீழாக இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

1770 கொரில்லா11. “சொல்லுங்கோ தம்பியவை." 12. "அண்ணே இந்தப் பொடியனுக்கு ஒரு கேஸ் எழுத வேணும்" என்றவாறே என்னோடு வந்தவனைப் பார்த்தேன். அவன் வேகமாக எழுந்து சென்று அந்தப் பெண் சென்றதும் சபாலிங்கம் உள்ளிருந்து வந்ததுமான இடப்புறத்து வாசலை மறித்தாற்போல நின்றுகொண்டான்.

13. சபாலிங்கம் கண்களை சுருக்கியவாறே நாற்காலியிலிருந்து எழுந்து நின்று இடப்புறத்து வாசலை மறித்துக்கொண்டு நின்றவனைப் பார்த்தார். அவன் இப்போது எங்களுக்கு தனது முதுகைக் காட்டியவாறே இரு பக்க நிலைகளிலும் தனது இரு கைகளையும் விரித்து ஊன்றி நின்றிருந்தான்.

14. சபாலிங்கம் என்னைப் பார்த்து மெதுவாகக் கேட்டார், "என்னப்பன், என்ன செய்யப் போறிங்கள்?"

15. "என்னப்பன் - இந்த அப்பன் என்பது எமது தீவுப் பகுதிகளில் மட்டுமே வழங்கப்படக் கூடிய ஒரு அருமையான விளிப்புச் சொல்லாய் இருக்கலாம் என நினைத்துக் கொண்டே நான் எழுந்தேன். சபாலிங்கத்தின் இடதுபுற நெற்றியின் அருகாக பிறைடா காலோவின் மார்புக் கடிகார முட்கள் சுழன்றன.

16. நேரம் சரியாக 13.17.

...நான் ஓடி வந்து பார்க்கும் போது அவரின் கன்னத்திலிருந்து இரத்தம் வடிகிறது. அந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டே ‘என்னப்பா நடந்தது?" என்று கேட்கிறேன். ஆனால் அவரிடமிருந்து ஒரு பதிலுமில்லை. அப்படியே மெதுவாக முழுங்காலிலிருந்து தலையை நிலத்தோடு சரித்து ஒரு சில நிமிடங்களில் அவரின் உயிர் போய் விட்டது. எமது தாய் நாட்டில் இருக்க முடியாத காரணத்தால் தான் நாம் அந்நிய நாட்டிற்கு வந்தோம். அந்நிய நாட்டில் "கூட நம்மவர்கள் அவருடைய உயிரை அநியாயமாகப் பறித்து விட்டார்கள். நானும் பிள்ளையும் அவரை இழந்துதவிக்கின்றோம். இந்நிலை எந்தவொரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது.

- திருமதி கோமதி சபாலிங்கம். (ஒரு படுகொலையின் மொழியிலிருந்து)

ஷோபாசக்திப 178

179uகொரில்லா

நன்றி - நூலகத்திட்டம்

Thursday, January 26, 2017

கரண்டு - கி. ராஜநாராயணன்

கரண்டு - கிராஜநாராயணன்
https://ia600701.us.archive.org/3/items/orr-11146_Karandu/orr-11146_Karandu.pdf
Automated GOOGLE-OCR
ராமசாமி நாயக்கருக்கு கோவம் அண்டகடாரம் முட்டியது. "பம்ப்செட் ரூமை" சுற்றிச்சுற்றி வந்தார். இன்னதுதான் செய்வதென்று தெரியவில்லை.
"சவத்துப் பயலுக்குப் பிறந்த பயல்கள்" என்று சொல்லி, பல்லை நெறுநெறுத்தார். கண்கள் கோவப்பழத்தைவிட நிறம் கொஞ்சம் கம்மி யாக இருந்தது. மழுங்கச் சிரைத்திருந்ததால் உதடுகள் மட்டுமே துடித்தன. வானத்தை அண்ணாந்து பார்ப்பதும் பக்கத்தில் பார்ப்பது மாக நிலைகொள்ளாமல் தவித்தார்.
விறுவிறு என்று ரெண்டே எட்டில் சமீபத்திலிருக்கும் "டிரான்ஸ் பார்மருக்குப் போய். பல தடவை, அதில் கரண்ட் வரவழைக்கும் 'வித்தையைப் பார்த்திருக்கிறார். "படுபாவிப் பயல்கள்; இன்னும் கொஞ்சநேரம் கரண்டு கொடுத்தால் என்ன கொள்ளையா போகிறது" என்று சொல்லி மண்வ்ெடடியை நங்கென்று ஒசை எழ விட்டெறிந்தார். விட்டெறிந்த அந்தத் திசையில் தெய்வாதீனமாகவும் அதிர்ஷ்ட வசமாகவும் நமது மேன்மைதங்கிய மின்சார அமைச்சரோ அல்லது மின்சாரபோர்டு கனம் மெம்பர்கள் யாராவதோ இல்லை, இருந்திருந் தால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சிறந்த அமைச்சரையோ, நிர்வாகம் தெரிந்த ஒரு மெம்பரையோ நம் மாநிலம் இழந்து ஒரு ஈடுசெய்ய முடியாத மாபெரும் நஷ்டத்துக்குள்ளாகி இருக்கும்.
ராமசாமி நாயக்கர் என்ற பெயருள்ள அந்த விவசாயி தன்னுடைய நாலு ஏக்கர் தோட்டத்தில், சோளம் முளைக்கட்டி இருந்தார். தொடர்ந்து, தண்ணிர் பாய்ச்சினால்தான்; இல்லையென்றால் எறும்புகள் தானியத்தைக் கூட்டிவிடும். மேலும் நாட்கள் வித்தியாசத்தால் கதிர் ஒன்றுபோல் வந்து வாங்காது, உற்பத்தி பெருகாது. நாயக்கருக்குக் கோபம் வரத்தானே செய்யும் பின்னே?
கரண்ட் வினியோகத்திற்கு இங்கே, "விதிப்ட்டு முறை என்று ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு வாரம் மத்தியானம்வரை கரண்ட், அடுத்த வாரம் மத்தியானத்துக்குமேல் கரண்ட், இடையில் வாரத்தில் ஒருநாள் மின்சாரம் நின்றுவிடும்; அதற்கும் லீவு வேண்டுமல்லவா?
அணைகளில் தண்ணிர் பொங்கி வழிந்தாலும் ஷிப்ட்டுதான். நாற்பதுநாள் அடைப்புப் பிடித்து மழை கொட்டினாலும் விவசாயத்துக்கு ஷிப்ட்டுதான். இந்தக் கரண்டை என்னதான் செய்கிறார்களோ தெரியவில்லை.
O56 O specTG
கொஞ்ச வருசங்களுக்கு முன்னெல்லாம் நாயக்கர் நிம்மதியாக பூவரசுமரத்து நிழலில், சுகமாக கமலை வண்டியின் ஒலி ஏற்ற இறக்கங் களுக்கு இசைய வடத்தின்மேல் ஒருக்களித்து உட்கார்ந்துகொண்டு தண்ணிர் இறைத்துக்கொண்டிருந்தார். "நாட்டுப் பாடல்களை" வாய் விட்டுப் பாடி ஆனந்தித்திருந்தார்.
ஒருநாள் அவரிடம் வந்து ஏழு கையெழுத்துக்கள் வாங்கினார்கள். எல்லாம் இங்கிலீஷில் அச்சடித்திருந்தது.
இரண்டாயிரம் ரூபாய் செலவழித்து, பம்புசெட் ரூமும் நிறுவினார் நாயக்கர் அந்த நாளை மறக்கவே முடியாது. பச்சை நிறத்தில் ஒரு பித்தான். அதை அமுக்கவேண்டும் டுவைங்ங்ங். வெளியே வந்து பார்த்தால் சர சர சரவென்று குழாய்வழியாகத் தண்ணீர் வழிந்து கொட்டுகிறது. அடேயப்பா என்ன அதிசயம்; கமலையில்லை, மாடு இல்லை, மாயமாக வந்து விழுதே தண்ணிர்"
"குச்சம்; சூச்சம் வெள்ளைக்காரன் சூச்சம்!வீட்டிலிருந்து மோர், பழம், சர்க்கரையெல்லாம் வரவழைத்து அங்கிருந்த எல்லோருக்கும் வினியோகித்தார் நாயக்கர், O
கரும்பை தலைகீழாக வைத்துத் தின்றுகொண்டு வருகிறமாதிரி காரியாதிகள் வரவர சப்பென்றுகொண்டு வந்தது. இவர் பம்ப்செட்டை ஒட்டினாலும் சரி ஒட்டாவிட்டாலும் சரி வருஷத்துக்கு நூத்தி அறுபது ரூபாய் கட்டியாகவேண்டும். எவ்வளவு ஒட்டினாலும்."உக்கிக் கரணம்" போட்டாலும். மொத்தம் அறுபது ரூபாயிக்குமேல் இவரால் ஒட்ட முடியாது. நூறுருபாய் வருஷக் கடைசியில் மொத்தமாகக் கட்ட வேண்டும். இப்படிப் பத்து வருஷம் கட்டியாக வேண்டும்.
"நான் கரண்ட் போட்டதுக்கு இது அபராதம் ஐயா! நான் கரண்ட் போட்டதுக்கு அபராதம்." என்று சொல்லிக்கொண்டே, பணம் கட்டுவார் நாயக்கர்,
மாதாமாதம் பில் ரூபாயை அவர்கள் வந்து வாங்குவார்களா? மாட்டார்கள். ஒவ்வொரு மாதமும் செலவழித்து கோவில்பட்டி போய் தான் கட்டவேண்டும். அங்கே போனவுடன் பில்லுக்கு ரூபாய் வாங்கிக் கொள்ள நாம் என்ன வச்ச ஆளா.
"அய்யா வந்தீரா, வாரும் போர்டைப் பார்த்தீரா, பாரும். இது பில் கலெக்டரின் இளக்காரமான குரல்.
"திங்கட்கிழமை வரணுமண்ணு எழுதியிருக்கா? போரும்” "திங்கட்கிழமை சந்தை தினம்; கார் கிடைக்காதே" "ஆமா, கிடைக்காது; அதுக்கு நாங்க என்ன செய்ய?" திங்கட்கிழமை நடக்கும் ரண்டாவது காட்சி - : "திங்கட்கிழமைதான் வந்தீரே, காலாகாலத்தில் வரப்படாதா" "ஐயா, நான் என்ன செய்வேன்; கார் கிடைக்கலை நேரமாயிருச்சி; கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க, ஐயா, ஐயா."
"மூச்! அந்த சோலியே வச்சிக்கிடப்படாது; போயிட்டு, வாரும்" "ஐயா-ஐயா." O 57
'எனக்கு டிரஷரிக்கு நேரமாச்சி; அடுத்த திங்கட்கிழமை வாரும்டம்.ம்.நகரும்."
மின்சார இலாகாவினர், இந்த - கரண்ட் உபயோகிக்கும் விவசாயிகளை, 'கன்ஸஅமர்கள் என்று அழைக்கிறார்கள். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா! நாய்க்குப் பிறந்த பயல்கள் என்று அர்த்தம்!
O
நாள் முழுவதும் கரண்ட் வேண்டும் - சோளம் முளைக்கட்ட தற்காலிகமாவது நாள்பூராவும் கரண்ட் வேண்டும் என்று ஒரு மனு எழுதிக்கொண்டு ராமசாமி நாயக்கர் கோவில்பட்டிக்கு வந்தார்.
முதலில் ஒரு குட்டி அதிகாரியைப் பார்த்தார். "பாச்சா, பலிக்கவில்லை. அதற்கும் கொஞ்சம் பெரிய அதிகாரியிடம் போனார். காக்கிக் கால்சட்டையைப் போட்டுக்கொண்டு,பப்ளிமாஸ் கன்னங்களோடு ஆள் கடோர்கஜன்மாதிரி வீற்றிருந்தார் அந்த அதிகாரி
மனுவை வாங்கி, பார்க்காமலேயே "என்ன?" என்று எரிச்சலோடு கேட்டார்.
"நோ, நோ, முடியாது, எங்களுக்கு மேலே இருந்து ஸ்டிக்டா ஆடர் வந்திருக்கு" என்று தலையை பலமாக, குலுக்கிவிட்டார்.
இதுக்கும்மேலே அதிகாரி ஒருவர் இருந்தார். அவரையும் பார்ப்பது என்று மனு ஏந்திப் புறப்பட்டார் நாயக்கர்.
இவர் போன அந்த வேளையில் அந்த அதிகாரி ஒரு பெரிய பிளாஸ்க்கிலிருந்து காப்பியை ஊற்றி ஊற்றி அண்ணாந்து குடித்துக் கொண்டிருந்தார். அப்படி அண்ணாந்து குடித்துக்கொண்டிருக்கும் போது அவருடைய தொண்டையின் மத்தியிலுள்ள மேடான உருண்டை ஒன்று மேலுங்கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்த அதிகாரிக்கு நீண்ட மூக்கோடு கூடிய ஒல்லியான உடம்பு தலை தும்பைப் பூவாக நரைத்திருந்தது.
ஒரு மனிதன் வந்து பக்கத்தில் நின்று கொண்டிருப்பது அவருக்குத் தெரியும் பார்க்காமலேயே தெரியும் அதிகாரிகளாக இருந்து பழக்க முள்ளவர்களுக்குத்தான் இப்படிப் பார்க்கத் தெரியும்.
கேவலம் மனிதன் பக்கத்தில் வந்து நிற்கிறான்; புலி வந்து அப்படி நின்றால் பார்க்காமல் இருக்கமுடியுமா அதிகாரி பத்திரிகை படிக்க ஆரம்பித்தார்.
அந்த அறையில், சுவர்க்கடிகார பெண்டுலத்தின் சப்தத்தைத் தவிர ஒன்றுமில்லை. ஏகதேசம், காற்று உள்ளே நுழைந்து தாள்களை சட சடத்து அலுக்கிவிட்டுச் செல்லும், மனிதனை மனிதன் பணிய வைக்கும் இந்த மெளனம் அதிகாரிக்கு திருப்தியாகவும் விவசாயிக்கு துன்பமாகவும் இருந்தது.
ஏக்கம் நிறைந்த பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு நாயக்கர் பூனை போல அடியெடுத்து வைத்துத் திரும்பினார். பத்திரிகையிலிருந்து தன் முகத்தை ஒரு பொம்மைபோல் திருப்பி, "என்ன வேண்டும்? என்று கேட்டார்; மனு நீட்டப்பட்டது.
58 O கரண்டு
வாங்கி அதன்மேல் ஒரு கல்லைத் தூக்கி வைத்து அதை சமாதி பண்ணினார் அதிகாரி
'ஜன்னல் வழியாகப் பார்வையை வெளியே விட்டுக் காதை கன்ஸுமர் பக்கம் காட்டி, விஷயத்தைக் கேட்டுகொண்டதுமாதிரி தலையை ஆட்டி,
"போம், போம்! பதில் வரும்" என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி பத்திரிகையில் ஆழ்ந்துவிட்டார்.
O
ராமசாமி நாயக்கரை யாரும் அவமானப்படுத்தவில்லை. அவமானப்படுத்தியிருந்தாலும் அவருக்கு ஒரு நிம்மதி பிறந்திருக்கும். தலை கவிழ்ந்து தரையைப்பார்க்க, மெதுவாகப் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.
பகல் சினிமா காட்சி விட்டு ஜனங்கள் வந்துகொண்டிருந்தனர். அந்த ஊரிலுள்ள மூன்று சினிமாக் கொட்டகைகளிலும் தினம் தினம் மும்மூன்று காட்சிகள் நடக்கும். பஜார் வழியாக நாயக்கர் நடந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கடையில் பகல் வெளிச்சத்திலேயும் லைட் எரிந்து கொண்டிருந்தது. ரேடியோக்கள் போட்டி போட்டு" பாடிக் கொண்டிருந்தன; ரைஸ்மில்கள் கூடத்தான்.
நாயக்கர் நடந்தே திரும்பி ஊருக்கு வரவேண்டும் அவர் இன்னும் நகரத்தின் மையத்தைத்தான் தாண்டி இருக்கிறார் பையப் பைய இருள் பரவ ஆரம்பித்தது; ஜில்லென்று நகரமே மின்சார ஒளிவிளக்கில் மூழ்கிப் பிரகாசித்தது.
விளம்பர அலங்கார ஒளி எழுத்துக்கள். அவைகளில்தான் எத்தனை கலர்கள்; அணைந்து அணைந்து தானாகப் பொருந்திக் கொள்ளும் பல்புகளின் சரவரிசை வேறு ஒரு தெய்வலோகமாகக் காட்சி அளித்தது நகரம்.
எவ்வளவு பிரகாசம் வெளியில் இருந்ததோ, அவ்வளவு மன இருட்டில் புழுங்கித் தவித்தார் நாயக்கர்.
தண்ணிரில் விழுந்த கோழி, கரையேறி தன் இறக்கைகளை சட சடவென்று அடித்து உதறுவதுபோல், நாயக்கர் தன் மனதைக் கவ்வியி ருந்த கோழைத்தனமான எண்ணங்களை உதறி எறிந்தார். வேஷ்டியை அவிழ்த்து இறுகக் கட்டித் தார் பாய்ச்சினார், கால்களை அகலப் பரப்பிக்கொண்டு மேல்த்துண்டை உதறி, அழுத்தமாகத் தலையில் லேஞ்சி கட்டிக்கொண்டு டிரான்ஸ்பார்மரை நோக்கிப் போனார்.
ஒன்றையும் தொடாமலேயே அவருக்கு ஒரு "ஷாக்" அடித்தது. செய்யவேண்டிய காரியம் இது அல்ல; அது இதைவிட முக்கியமானது என்று தோன்றியது. தன் சக விவசாயிகளை நோக்கி நடந்தார்!

சாந்தி 1962 cynrygio