Pages

Wednesday, July 26, 2017

பாறைகள் - கிரேசி :: மலையாளச் சிறுகதை ஆங்கிலம் வழி தமிழில் ரவி இளங்கோவன்


பாறைகள்

 மலையாளச் சிறுகதை ஆங்கிலம் வழி தமிழில் ரவி இளங்கோவன்

நான்தான் எல்ஷிபா, பீட்டரின் மகள். நீயே பீட்டர் எனும் பாறை, இப் பாறையின் மீதே நான் என் தேவாலயத்தை எழுப்புவேன் என்று தேவன் அறிவிக்க வில்லை. இருப்பினும் என் தந்தை மிக எளிமையான முறையில் தேவாலயம் கட்ட தன் பங்களிப்பைச் செய்தார். தன் மூத்த மகள் தினம்மாவை பங்களிப் பாகக் கொடுத்தார். வயதுக்கு வந்து மணப் பருவத்தில் இருக்கும் நம் மகளைப் பற்றி ஒருபோதும் நீ சிந்திக்க மாட்டாயா ? என்ற என் தாயின் துக்கம் வெளிப் பட்டு எரிந்து எரிந்து ஜ சவாலைகளாக மாறி இறுதியில் வசவுகளில் மடியத் தொடங்கிய வேளையில்தான் தந்தை தினம்மாவை தேவனின் மணமகளாக்கினார். அவர் அகம்பாவத்துடன் வலது கையை ஆகாயத்திற்கு உயர்த்தி சிறு விரலால் சிட்டிகையிட்டபடி என் தாயின் முகத்தில் ஒரு அசிங்கமான புன்னகையை உமிழ்ந்தபடி வெளியேறினார். அவருடைய முதுகிற்குப் பின், தன் வெற்றியைக் கொண்டாட சாராயக் கடைக்குச் சென்ற பின், அம்மா வெறுப்பில் வெறுமனே காறித் துப்ப மட்டும் செய்யவில்லை. நீயெல்லாம் எதற்கு திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாய் ? என்ற கேள்வியை அவளுடைய பற்களைக் கடித்தபடி வெளிப்படுத்தி அவரைக் குத்தினாள். மூன்றாவது பெண் பிறந்த பின், அக்குழந்தை இறந்தபோதிலும், கிராம மருத்துவன் கூறியபடி முயல் இரத்தத்துடன் திருநீறைக் கலந்து அப்பா தந்ததைத் தின்று பிரசவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது நல்லதாயிற்று என்று கூறி தன் மார்பில் அறைந்து அறைந்து தனக்குத் தானே ஆறுதல்படுத்திக் கொண் LTG)T.

தந்தையும் தாயும் நெருப்பையும் அமிலத்தையும் வீட்டின் மீது பொழிந்து கொண்டிருந்த வேளையில் என்னைக் காத்தது வார்த்தையல்ல. ஒரு கிளார்க்-கம்-டைப்பிஸ்ட் வேலைதான். கான்வெண்டின் பெருஞ்சுவர்களின் உள்ளே தீனக்காளைச் சந்தித்து என் வேலையைப் பற்றிக் கூறச்சென்றேன். வெள்ளைஉடையில் தீனக்கா மேலும் வெளிறிப் போயிருந்தாள். அவளுடைய கனவுகள் அனைத்தும் மரணத்தில் மூழ்கி அவளது பெரிய கருத்த விழிகளில் மிதந்து கொண் டிருந்தன என்னைவிட மிக, மிக அழகான தீனக்கர்வின் விதியை எண்ணி என் கண்களில் ஊற்றெடுத்தது. தினக்கா, கண்ணிர் அலைகளினூடே நடந்து வந்து என்னைத் தொட்டாள். அவளுடைய விரல்கள் மரித்தவர்களுடையதைப் போல குளிர்ந்திருந்தன. என் நரம்புகளில் ரத்தம் உறைந்தது. எனது குழந் தைப் பருவ திக்கல் திரும்பி விட்டது. 'தீனக்கா, எனக்கு வேலை கிடைத்துவிட்டது' என்பதை திக்கித் திணறி சொல்லுவதற்குள் நான் வார்த்தைகளுக்குள் தடுமாறி விழுந்து விட்டேன்.
தினக்கா புன்னகைத்தாள். அவளுடைய புன்னகையின் சோகம் ஒரு பனிக் கத்தியைப் போல என் இதயத்தைக் கிழித்தது. குறைந்த பட்சம் நீயாவது தப்பித்தாய் என்று தினக்கா பெருமூச்செறிந்து சொல்கையில், பைத்தியம் பிடித்தது போல் நான் ஒடினேன். மூர்க்கமாகத் தள்ளி கதவைத் திறந்து விதியை நோக்கி விரையும் பொழுது யாரோ என்னைப் பின்னிருந்து பற்றி இழுப்பது போல், நான் திரும்பி ஒரு கணம் பின்னால் பார்த்தேன். முற்றத்தில் தீனக்கா ஒரு உப்புத் தாளாக உறைந்திருந்தாள்.

ஒரு பழைய தோள்பையை எடுத்து அதன் தூசியைத் தட்டியபடி நான் அறிவித்தேன் "இப்பொழுது நான் எனக்கென ஒரு பாதையில் செல்கிறேன்."

நான்_எவது தந்தையின் விரல்கள், பணப்பையின் முடிச்சைத் தளர்த்தியபடி, நடுங்கி, நடுங்கி இறுதியில் அசைவற்றுப் போவதைப் பார்த்தேன். தனிமையின் ஊசி முனை மீது என் தாயின் புகை படிந்த விழிகள் எழுதுவதை நான் பார்த்தேன். இக் காட்சிகள் அனைத்தையும் என் புறங்கையால் ஒதுக்கியபடி நான்
வீட்டை விட்டு வெளியேறினேன்.

அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் பெண் தன்னை மிருதுளா என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் தன் கழுத்தில் தொங்கும் தாயத்தை பயபக்தியுடன் வருடியபடி, அவளுடைய தந்தை அவளது இதயம் மிகவும் மென்மையானது என்பதால் அன்புடன் அவ்வாறு பெயரிட்டதாகக் குறிப்பிட்ட வுடன் எனக்கு மிகுந்த கோபம் வந்தது. மேலும் அவர் பாசமும் நேசமும் மிக்க ஒழுக்கமான மனிதர் என்றும் விளக்கினாள். அவளுடைய தந்தைதான் குழந்தையாக இருக்கையில் அவளைக் குளிப்பாட்டி, ரசநாதி சூரணத்தை தலையில் சூடு பறக்கத் தேய்த்து, தலையை சீவி பின்னலிட்டு அதில் மல்லிகை மலர் களைச் சூடி விடுவார் என்று தேவையின்றி பேசப் பேச என் இதயம் பொறாமையால் எரியத் தொடங்கியது. தான் உண்மையில் வளர விரும்பவில்லையென்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கே செல்ல விரும்புவதாகவும் அறிவித்தபடி, அவள் என் அந்தரங்கத்தை உள்ளாடைகளைக் களைவதைப் போல் களைந்து விட்டாள்.
நான் விதியில் நடக்கும்பொழுது என் முன்னே செல்லும் எவரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்வேன். என் வலது காலை அவனது வலதுகால் தடத்தில் பதிப்பேன். என் இடது காலை அவன் எங்கு பதித்தானோ அங்கு பதிப்பேன். வழக்கமாக, என் வலது காலை முன் வைத்து இந்த ஆட்டத்தைத் தொடங்குவேன். இந்த ஆட்டம் வேகம் பெற்று பின் மடிந்து விடும். இப்படி, அவனுடைய காலடித்தடங்களைப் பின்பற்றியபடி மற்ற அனைத்தையும் மறந்து நான் இன் குழந்தைப் பருவத்து அறியாமையின் ப்டிக்கட்டுகளின் மீது ஏறுவேன். அங்கே தினக்காவும் நானும் எதிர்காலத்தை முற்றாக ஒதுக்கியபடி கிள்ளித்தட்டு விளுையாடுவோம் அல்லது தீனக்கா முழங்கால் வரையுள்ள பாவாடையை உயர்த்திக் கட்டி ஒரு குச்சியை வாயில் வைத்து புகை பிடிப்பது போல பாவனை செய்வாள். நான் ஒரு தென்னம்பிள்ளையை என் இடுப்பில் வைத்து, ஒரு துண்டை தாவணி போல சுற்றி ஒரு மனைவியாகவும் தாயாகவும் ஆவேன். இந்த உலகிலிருந்து வெகு வெகு தொலைவில் ஆகாயத்தின் உச்சியில் தொங்கும் எங்கள் குழந்தை இல்லத்தில் இந்த பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு பிரகாசம் பரவுகிறது.

இத்தகைய மாபெரும் பயணத்தின் ஊடே ஒரு முறை நடுத்தர வயதான ஒரு மனிதனைப் பின் தொடர்ந்து அவனது வீட்டின் முன்புறத்தை அடைந்தேன். காலடிகள் உள்ளே மறைந்த உடன், யாரோ என் திகைப்புற்ற முகத்தின் முன்னே கதவை அறைந்து சாத்தினார்கள். நான் திரும்பினேன். ஒரு மெல்லிய புன்னகையில் என் அதிர்ச்சியை மறைத்தபடி.

எப்படியோ, மிருதுளா என்னோடு பேசிய பின்னர், விடுதியிலிருந்து அலு வலகம் செல்லும் வழியில் யாருடைய காலடிகளையும் என்னால் தொடர முடிய வில்லை. அதற்கு மாறாக மிகுந்த உறுதியோடும் வேகத்தோடும் அவற்றைக் கடந்து செல்வேன். அலுவலகத்தை அடைந்தவுடன் இருக்கையில் வியர்த்து மூச்சிரைக்கச் சாய்ந்தபடி, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நான் எரியத் தொடங்குவேன். இந்த எரிதலில் ஒரு மாற்றத்தின் இடி முழக்கத்தை நான் கேட்டேன். நான் உக்கிரமாக, ஆத்திரத்துடன் தட்டச்சு இயந்திர எழுத்துக்களைக் குத்தினேன்.

திடீரென மிருதுளாவுக்குத் திருமணமானது. ஒரு மாத விடுமுறைக்குப் பின் அவள் அலுவலகம் திரும்பினாள். அவளது விழிகள் உறக்கமற்ற இரவுகளால் நிறைந்திருந்தது. அவளது உதடுகள் சந்தோஷத்தின் முழுமையில் களைத்திருந்தன. அவளுடைய வளைவுகள் ஒரு பயனற்ற சோர்வில் பொதிந்திருந்தன. சில நேரங்களில் புடவைக்குப் பின்னிருந்து, அவளுடைய இடது மார்பு, புதிதாக அடைந்த முழுமையின் துடிப்பில் வெளியே குதித்து ஆண்கள் பெண்களின் விழிகளை சிறைப்படுத்தியது. நான் எனது தட்டையான, குறிப்பிட்டுச் சொல்ல இயலாத மார்பைக் குறித்து அதிக அவமானமடைவதை உணர்ந்தேன். அதிக கவனம் எடுத்து, யாரும் அதை கவனிக்காத வகையில் கனத்த பருத்திப் LGOG) யால் மறைத்துக் கொண்டேன்.

மிருதுளா யாருடனும் அதிகமாக பேச மறுத்ததைக் கண்டு திருப்தியாக இருந்தது. ஆனால் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, அவளது வாயிலிருந்து வார்த்தைகள் மேடையின் மீது மோதிக் கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தைப் போல வெளிப்பட்டன. ஒரு சில வார்த்தைகள் கர்ஜித்தபடி, வந்தன. அவை என்னைச் சுற் வந்து இகரத்திக் கிழித்தன. - மிருதுளா தன் தந்தையின் உருவத்தை வேரோடு பறித்தெடுத்து அந்த இடத்தில் கணவனைப் பதித்து விட்டாள். அதைப்பார்த்து நான் கசபபுடன புன்னகைத்தேன். அவளு மீது அவளுடைய கணவன் கொண்டுள்ள காதலும் அவர்களுடைய படுக்கையறை ரகசியங்களும் என்னை எரித்தன. இவ்வாறாக என் இரவுகளில் உறக்கத்தின் வசந்தங்கள் த்தினுள் இழுக்கப்பட்டுவிட்டன. நான் கண்களை மூடியவுட னேயே ஒரு நேசமற்ற குடிகாரக் கணவன், விங்கிய விழிகளுடன் வசவான வார்த்தைகளுடன் கண்ணுக்குத் தெரியாத எதிர்கால சமவெளியிலிருந்து என் மீது வந்து மோதினான். (ஒவ்வொரு காலையிலும் என் இதயத்தின் மீதான எடை, சுமை, அதிகரித்துக்கொண்டே இருந்தது. குறைந்த பட்சம், ஒரு மருத்துவரை, நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறத் தீர்மானித்தேன்.

அந்த மருத்துவர் ஒரு கறுத்த காளை, அவருடைய உருண்டை விழிகள், குறுகிய நெற்றி, அடர்த்தியான முடி எனக்கு ஒரு காட்டெருமையை நினைவு படுத்தின. இன்னும் நெருக்கமாக நான் அவரை ஆராயத் தொடங்குவதற்குள் என் மார்பின் மீது ஸ்டெதாஸ்கோப்பை அழுத்தமாக வைத்தார். நான் சில முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்தேன். பரிசோதனை முடிந்த பின், அவரது தல்ை ஒரு ஊசலைப் போல ஆடத் தொடங்கியது. பின், ஒரு முக்கலையும் முனகலையும் வெளிப்படுத்தியபடி அவர் ஒரு பொருத்தமற்ற பறவைக் குரலில் பேசினார், "இதயத்திற்குப் பதில் உனக்குள் ஒரு பாறை இருக்கிறது. அது இறுக்கமடைந்து கொண்டிருக்கிறது."

எனக்கு அதிர்ச்சியாக இல்லை. எவ்வாறு அதிர்ச்சியடைவது என்பதை நான் மறக்கத் தொடங்கி விட்டேன். என் வற்றி உலர்ந்த மார்பகங்களை வெறித்தபடி அவர் தொடர்ந்தார் : 'உனக்குள் இருந்த மென்மையின் கடைசித் துளிகள் வறண்டு கொண்டிருக்கின்றன.'

எவ்வித பாதிப்புமின்றி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த நான், இதுதான் வேதத்தின் பின் இணைப்பு என்பதை உணர்ந்தேன். வெளியே சுட்டெரிக்கும் சூரியனில், நான் ஆகாயத்தை நோக்கி என் முகத்தை உயர்த்தி னேன். இந்தப் பாறையின் மீது எதைக் கட்ட நீ உத்தேசித்திருக்கிறாய் ? பதிலாக, என் விழிகளை இருள் நிறைத்தது.
*
(கிரேசியின் முதல் சிறுகதைத் தொகுப்பு '' படியிறங்கிப் போன பார்வதி ' சமீபத்தில் வெளியாகி மலையாள இலக்கிய உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச்சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் வி. சி. ஹாரிஸ். இது "Indian Literature மே-ஜூன் 1993 இதழில் வெளியாகி யுள்ளது.)

சதுரம் D 3 -சிற்றிதழ்

Tuesday, July 25, 2017

மூன்றாம் உலகத்தின் பார்வையில் ஆல்பெர் காம்யு வ.கீதா :: காலச்சுவடு ஆண்டுமலர் 1991

Automated Google-OCR

WWW padippakam.Com

மூன்றாம் உலகத்தின் பார்வையில் ஆல்பெர் காம்யு

வ.கீதா


காம்யுவைப் பற்றி, அவரது இலக்கியப் படைப்புகள், 'சாதனைகள் ஆகிபன பற்றிப் பேசுவது தயக்கத்தையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம் தான். காம்யுவின் மொழி அழகு, அவரது இலக் கிய நடையிலுள்ள லயம் சொற்களைக் கலனமா கவும் துல்லியமாகவும் அவர் கையாளும் விதம் ஆகியன வாசகரின் மனதைக் கவரக் கூடியவை, ஆனால் காம்யுவின் படைப்புகளின் சமூக, அரசி யல் பரிமாணங்களைக் கவனத்தில் கொள்ளும் போதும், காம்யு வாழ்ந்த வரலாற்றுச் சூழலை நினைவுகூறும் போதும் காம்யுவின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய சில முக்கியக் கேள்வி களை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ்வகை யில் நமது ரசனையையுமே நாம் விமர்சிக்க வேண்டியுள்ளது.

இன்றைய உலகில் ஏகாதிபத்தியமும் காலனித்துவமும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகச் சந்தையின் வடிவில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. நியூ காலடோனியா, மார்த்தினிக் போன்ற நாடுகளை பிரான்ஸ் இன்னும் தன் கால னிகளாகவே வைத்துள்ளது. பசிபிக் பெருங்கட லில், பிரான்சிலிருந்து வெகு தொலைவில், பிரெஞ்சு உயிர்களுக்குச் சேதம் ஏற்படாவண் ணம், பிரான்ஸ் தனது அணு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள

தீவுகளில் வாழும் மக்களின் வாழ்வும் அத்தீவுக ளின் இயற்கை வளமும் மிகுந்த சேதத்திற்கு உள் ளாகியுள்ளன. கடந்த ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சி நடந்து முடிந்த 200 ஆம் ஆண்டைக் கோலாகல மாகக் கொண்டாடிய பிரெஞ்சு அரசு, 'விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்' ஆகியவற்றின் பெயரில் நியூ காலடோனியாவில் தமது காலனி பாதிக்கத்தை உறுதி செய்து கொண்டது.

இந்தவொரு வரலாற்றுச் சூழலில் இருபதாம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான காம்பு பற்றி, அல் ஜீரியாவில் பிறந்து, அங்கேயே பல ஆண்டுகள் வாழ்ந்தும், அங்கு நிலவிய மிக மோசமான கால னியாதிக்கத்தை, அந்த ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்த அராபிய விடுதலை இயக்கங்களைப் பற்றி எந்த உணர்வையும், புரிதலையும் வெளிப்ப டுத்தாது எழுதிய காம்யு பற்றி நாம் பேசுவதென் றால் அதற்கு என்ன பொருள்?

ஏதோவொரு வகையில், நம்மில் பலர் ஐரோப்பா தன்னைப் பற்றித்தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள சுய-மதிப்பை விமர்சிக்காது ஏற்றுக் கொண்டு விட்டோம். ஐரோப்பாவின் தத்துவ, ஆன்மீக, உளவியல் பிரச்சினைகளை அவற்றிற்கு ரிய குறிப்பிட்ட வரலாற்று, சமூகச் சூழலில் வைத் துப் புரிந்துகொள்ள நமக்கு இன்னும் தெரிய வில்லை. இந்தக் காரணத்தினாலேயே காம்யு

காலச்சுவடு

283

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய சாதனை கள் பற்றி நாம் பேசுகிறோம். இத்தகைய இலக்கி யப் படைப்புகளில் நிலவும் 'மெளனங்கள் பற்றி, அந்த மெளனங்களில் குடிகொண்டிருக்கும் அரசி யலைப் பற்றி, அப்படைப்புகளின் வடிவங்களில் தொக்கி நிற்கும் சித்தாந்தங்களைப் பற்றி நாம் பேசுவதே இல்லை.

ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலர் படைப்பா ளிகள், விமர்சகர்கள் - கடந்த காலத்தில் காலனி யாட்சியையும் அதன் விளைவுகளையும் ஆழ மாக ஆராய்ந்து, நுணுக்கமான சிக்கலான பல படைப்புகளை உருவாக்கியுள்ளனர். நவ - கால னியமாக அவர்களது சமூகங்களை ஆட்டிப்பு டைக்கும் புதிய பொருளாதார, சிந்தாந்த அடக்கு முறைகளையும், நிர்ப்பந்தங்களையும் விமர்சித்து எதிர்த்து வருகின்றனர். காலனித்துவத்தால் ஆப் பிரிக்க பழங்குடி சமூகங்களில் ஏற்பட்ட விபரீத மான மாற்றங்கள், ஆப்பிரிக்க பண்பாடுகள் அழிந்தமை, ஆப்பிரிக்க வாழ்வுமுறைகள் சிதைந்த நிலை ஆகியவற்றைக் கருப்பொருட்க ளாகக் கொண்டு ஏராளமான சிறுகதைகள், புதி னங்கள், நாடகங்கள், கவிதைகள் படைக்கப்பட் டுள்ளன. ஆப்பிரிக்காவைப் பற்றி ஐரோப்பியர் கள் எழுதியவற்றிற்கு சவாலாக இன்று பல ஆப்பி ரிக்கர்கள் தமது படைப்புகளை முன்நிறுத்தியுள்ள னர். காம்பு, கான்ராட்டோன்றவர்களின் படைப்பு களை நாம் புதிய வகைகளில் புரிந்துணர்வதற்கு இந்தப் புதிய ஆப்பிரிக்க இலக்கியப் படைப்புகள் உதவுகின்றன.

எனவே காம்யுவின் எழுத்துக்களை, இன் றைய சூழலில் நாம் படிக்கையில், வேறொரு குர லும் கூடவே ஒலிப்பதை நம்மால் உணர முடிகி றது. காம்யு சொல்ல மறந்ததை சொல்லத்தயங்கி யதை சொல்லாமல் விட்டதை இன்று ஆப்பிரிக் கர்கள் சொல்கின்றனர். இவர்களில் பலர் ஐரோப் பிய மொழிகளில் எழுதுகின்றனர். சிலர் ஆப்பி ரிக்க மொழிகளில் எழுத துவங்கியுள்ளனர். ஐரோப்பிய இலக்கியக்கோட்பாடுகள் கொள்கை கள் ஆகியவற்றை உள்வாங்கி, இவற்றைத் தமது கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தியுள்

WWW.padippakam.Com

எனர் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். இவர்கள் ஆப் பிரிக்க வரலாற்றிற்கும் வாழ்வுமுறைக்கும் சாட்சி யமாக இருக்கக்கூடிய ஒரு அழகியலையும் உரு வாக்கியுள்ளனர் என்றே நாம் கூறலாம். பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய அந்நிய ஆதிக்க மொழிக ளைத் தமதாக்கிக் கொண்டு ஆப்பிரிக்க உலகைப் பற்றி எழுதும் இந்தப் புதிய படைப்பாளிகள் பற்றி இன்று நாம் பேசுவதுதான் நியாயமானது. ஆனால் இன்று நாம் விவாதிக்கப்போவது காம்யு வைப் பற்றிதான். எனினும், காம்பு சொல்ல வந்த தைக் கொண்டு அவர் சொல்லாமல் விட்டதை, அவரது படைப்புகள் சாதிக்கும் மெளனங்களைப் பற்றி இங்கு நாம் பேசுவதே பொருத்தமானது.

காம்யுவின் முக்கியப் படைப்புகள் அல்ஜீரி யாவையும் அங்கு வாழ்ந்த பிரெஞ்சு மக்களின் வாழ்வையும் மையமாகக் கொண்டுள்ளன. காம்பு, அல்ஜீரியாவை பிரான்சின் ஒரு பகுதியா கவே கருதினார் என்பதற்கு ஏராளமான சான்று கள் உண்டு, காம்யு அல்ஜீரியாவின் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தவர் மாத்திரம் அல்லர், காலனியத்துவத்திற்கு முன் நிலவிய அல்ஜீரிய வரலாற்றையும் சமூகத்தையும் ஒதுக்கி நிராகரித்த வரும் கூட அவர் எழுதுகிறார்:

'அல்ஜீரியாவைப் பொறுத்தவரை, தேசிய விடுதலை என்பது வெறும் உணர்ச்சிகளால் உந்தப்படும் ஒரு சூத்திரமேயன்றி வேறல்ல. இதுவரைக்கும் அல்ஜீரிய தேசம் என்று ஒன்று இருந்ததே இல்லை. யூதர்கள் துருக்கியர்கள், கிரேக்கர்கள், இத்தாலியர்கள், பெர்பெர்கள் ஆகியோரும்கூட உருவாகவிருக்கிற அல்ஜீ ரிய தேசத்தின் தலைமைக்கு உரிமை கொண் டாட முடியும். இப்போது உள்ள நிலையில் அராபியர்கள் மட்டுமே அல்ஜீரியாவாக அமைவதில்லை. அல்ஜீரியாவிலுள்ள பிரெஞ்சுக்காரர்களும் ஒரு ஆழமான அர்த் தத்தில் சுதேசிகள்தான். மேலும், அராபியர் களை மட்டுமே கொண்ட ஒரு அல்ஜீரிய பொருளாதார சுதந்திரத்தை பெற்றுவிட முடி யாது பொருளாதார சுதந்திரமின்றி அரசியல் சுதந்திரம் என்பது வெறும் மாயையே.

காலச்சுவடு

284

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW padippakam.Com

பிரெஞ்சு நாட்டின் முயற்சிகள் எவ்வளவு தான் குறைபாடு உடையனவாக இருந்த போதிலும், வேறு எந்த நாடும் அல்ஜீரியாவுக் கான பொறுப்பை ஏற்க இசையாத அள விற்கு, அம்முயற்சிகள் அமைந்துள்ளன' இவ்வாறு காம்யுவின் சிந்தனை ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு அல்ஜீரிய, அராபிய எதிர்ப்புச் சிந்தனையாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

காம்யுவின் படைப்புகளில் அல்ஜீரியாவின் அராபியர்களோ, அலர்களுடைய தனிப்பட்ட, சமூகப் பிரச்சினைகளோ இடம் பெறுவதில்லை. அந்நியன்', 'கொள்ளைநோய்' ஆகிய இரண்டு புதினங்களிலும் வரும் சம்பவங்கள் அல்ஜீரியா வில் நடைபெறுவனதான். ஆயினும் இவ்விரு புதினங்களிலும் அராபியர்கள் குறிப்பிடத்தக்கப் பாத்திரங்களை வகிப்பதில்லை. 'அந்நியனில் வரும் அராபியர்களுக்கு பெயர்களைக் கூடகதா சிரியர் வழங்குவதில்லை. இங்கு அராபியனின் தனிப்பங்கு - ஒரு சவமாக அவன் விழுந்து கிடப் பதுதான். நாடுகடத்தலும் சாம்ராஜ்யமும்" என்ற தொகுப்பில் இடம்பெறும் 'விருந்தாளி", "சோரம் போனவள் ஆகிய இரண்டு கதைகளிலும் அராபி யர்களைப் பற்றி, வழக்கத்தைவிட அதிகமாக காம்பு குறிப்பிட்டாலும், அவர்களுக்குமே ஒரு தனித்தன்மையை அவர் அளிப்பதில்லை. அராபி யர்களின் பார்வையில் உலகம் எவ்வளவு வித்தி யாசமாக இருந்திருக்கும் என்பதையும், அராபி யர்களுக்கென்று ஒரு வரலாறு, வாழ்வுமுறை இருக்கக் கூடும் என்பதையும் காம்யு உணர வில்லை. பல சமயங்களில் உணர மறுத்தார். காம் யுவின் விசுவாசிகள் கூறலாம்: காம்யு பிரெஞ்சு மக்களைப் பற்றியோ அராபிய மக்களைப்பற் றியோ பேச முற்படவில்லை. மாறாக 'மானுட நிலைமைப் பற்றிதான் அவர் அக்கறை கொண்டி ருந்தார் என்று. ஆனால் இங்கு 'மானுடம்' என் பது பிரெஞ்சு மக்கள் என்பதாகக் குறுக்கப்பட்டி ருப்பதை நாம் காணவேண்டும், குறிப்பாக ஐரோப்பிய சமூகத்திலிருந்தும், பண்பாட்டிலிருந் தும் துண்டிக்கப்பட்டு அல்ஜீரியப் பாலைவன

காலச்சுவடு

285.

வெப்பத்திலும் தமது 'ஆளுமை'யை இழக்க விரும்பாது 'வைராக்கியத்துடன் வாழ்ந்த பிரெஞ்சுக் காலனியர்களுக்கு மானுடம் குறுக்கப் பட்டுள்ளதை நாம் காண வேண்டும்.

அல்ஜீரியாவில் வாழவந்த பிரெஞ்சுக் காலனி யாளர்களுக்கு ஏற்பட்ட மனச் சஞ்சலங்கள், தார் மீக நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அவலச்சுவையோடு சித்திரிக்கும் காம்யு, இந்த குழப்பமான 'மானுட நிலைமைக்கு அடிப்படை யாக விளங்கிய பிரெஞ்சுக் காலனித்துவத்தைப் பற்றி, அதன் அடக்கு ஒடுக்குமுறைகள், ஆதிக்க நெறிகள், அதிகார மையங்கள் பற்றி மெளனம் சாதிக்கிறார். ஆனால் மெர்சோவின் தர்மசங்க டம், ரியூவின் விரக்தி கலந்த கருணை, டாருவின் தனிமையுணர்வு - இவையாவற்றையும் காலனித் துவத்தின் இந்த மற்ற அம்சங்களிலிருந்து நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

மெர்சோ ஒரு அராபியனைக் கொல்கிறான், மெர்சோவைக் கொலை செய்யத் தூண்டியது எது? தற்காப்பு உணர்வா? பயமா? அல்லது அந்த அல்ஜீரிய வெப்பமும், உப்புக்கலந்த அந் தக் கடல் காற்றுமா? அராபியன் கத்தியை உருவு கிறான். மதிய வெய்யிலில் அது தீப்பிழம்பாக ஒளிர்கிறது. மெர்சோ தெளிவற்ற நிலை" யில் தகிக்கும் கடற்கரை மண்ணில் தன்னிலை குழம்பி அராபியனைச் சுடுகிறான், முதல் தோட்டாலே அராபியனின் உயிரைப் பறித்துவிடுகிறது. மெர்சோ தொடர்ந்து ஐந்து முறை சுடுகிறான். ஒரு அபத்தமான உலகில் நடைபெறும் ஒரு அபத்த மான செயலாகவே விமர்சகர்கள் மெர்சோ செய்த கொலையை விளக்குவது வழக்கம், மெர் சோவைப் பொறுத்தவரையில் அவனது செயல்க ளுக்கு அவனால் காரணங்காட்ட முடியாது. உல கின் வழக்கமான மதிப்பீடுகளை அவன் அங்கீக ரிப்பதுமில்லை. நிராகரிப்பதுமில்லை, சகமனிதர் களுடன், அவனைப் பிணைப்பன அன்பும் ஆசை யுந்தான். ஆனால், இவற்றின் அடிப்படையில் தனது சகமனிதர்களுக்காக, அவர்களின் பொருட்டு, தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதை யும் அவன் விரும்புவதில்லை. பிரபஞ்சத்தின்

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW, padippakam. Com

தணிவான அக்கறையின்மையை, தனது கன நேர அனுபவங்களில் லயித்தவனாய் மன அமை தியுடன் அவன் எதிர்கொள்கிறான். ஒருவன் தனது கணநேர அனுபவங்கள், ஆசைகள், வேட் கைகள், உணர்வுகள் ஆகியவற்றில மடடும்தான் மனநிறைவு பெறமுடியும் அபத்தமான உலகில் ஒரு தனிமனிதனின் வாழ்வை உறுதிசெய்வதும் இவைதான்-இந்த நினைப்பில் மெர்சோ தூக்கு மேடைக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.

மெர்சோவின் தனிமை, அவனை "அந்நிய' னாகப் பிரித்துக்காட்டும் அவனது செய்கைகள், நடத்தை ஆகியன மானுட உலகத்தில் உள்ளார்ந்த அபத்தத்தை உணர்ந்து வாழ்பவனின் செயல்கள் மாத்திரம் அல்ல. இச் செயல்களும் இவை மேற் கொள்ளப்படும் 'அபத்தமான இந்த மானுட உல கமுமே வரலாற்று விளைவுகள். இவ்வரலாறு இரண்டு உலகப் போர்களுக்கும் இடையே நில விய ஐரோப்பிய சமூகத்தின் அவலமான அபத்த மான வரலாறு மாத்திரம் அல்ல. இது முதலாளித் துவத்தின் காலனித்துவத்தின் வரலாறும் கூடத் தான். எந்த அல்ஜீரியச் சூழலில் மானுட உலகின் அபத்தத்தை, மானுடனின் அந்நியமாதலை காம்யுநிலைநாட்ட விரும்புகிறாரோ, அந்த அல் ஜீரியச் சூழல் காலனித்துவத்தால் ഖl.േ&') பட்ட ஒன்று. அல்ஜீரியாவின் அராபியர்களும் ஒருவித அபத்தமான உலகில்தான் வாழ்ந்து வந் தனர் தமது வரலாற்றை இழந்தவராய், தமது அடையாளம் குழம்பியவராய், மனவளம் குன்றி யவராய், ஆனால் ஃப்ரான்ஸ் ஃபேனோன் விளக் கியுள்ளது போல, அல்ஜீரியாவின் அராபியர்கள் இந்த அபத்த உலகின் ஆதிக்க நெறிகள், அதிகார மையங்கள் ஆகியன பற்றி அனுபவரீதியாக நன் றாகவே உணர்ந்திருந்தனர். தமக்கு ஏற்பட்டிருந்த கொடூரமான அந்நியமாதலுக்கு யார் காரணம் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால் காம்யுவின் கதாநாயகர்களோ தாம் அனுபவித்த அந்நியமாதலை பிரபஞ்சத்தின் விதியாகப் புரிந் துகொண்டனர்.ஐரோப்பிய மனசாட்சியின் அங்க வாய்ப்புகளைத் தமது கதாநாயகர்களின் வாழ் வில் உருவகப்படுத்திய காம்யு தனது உலகக்கண் - ܒܚ- ܚܘܝܕ

காலச்சுவடு

286

னோட்டத்தை அல்ஜீரிய - அரபு சூழலுடன் பொருத்திப் பார்க்கவில்லை.

ரேமோ தனது அராபியக் காதலியை அடித் துத் துன்புறுத்துவதை, பிறகு ரேபோவைப் பின் தொடர்ந்த அவளது சகோதரனை தான் கொல்ல நேர்ந்தது ஆகியன மெர்சோவுக்கு வேண்டுமா னால் அபத்த நிகழ்வுகளாத தொடர்பற்ற விஷ யங்களாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு கால னித்துவச் சூழலில், அடிமைகளாக வாழ்ந்து வரு பவர் இந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை அறி வர்; இவற்றை நியாயப்படுத்தும் சித்தாந்தங்க ளையும் அவர்கள் அறிவர், மெர்சோவுக்கும், அவனது வெள்ளைத்தோல் சகாக்களுக்கும் அரா பியர்கள் வெறும் உடல்கள்,பெயரற்ற பிறத்தியார் கள். அராபிய பெண்மணிகள் அவர்களது ஆசை வெறியைத் தணிப்பதற்கென்றே இருப்பவர்கள். அராபிய ஆண்களோ, வெள்ளையரின் கண் ணோட்டத்தில், முதுகெலும்பு இல்லாத ஆண் மையற்ற பேடிகள், ஃப்ரான்ஸ் ஃபேனோன் தனது 'கருப்புத் தோல்கள், வெள்ளை முகமூடிகள் என்ற நூலில் இதை மிகத் தெளிவாக விளக்கியுள் ளார். அதாவது அராபியப் பெண்ணைத் தனது அதிகாரத்தின் துணைக்கொண்டு தனதாக்கிக் கொள்ளும் ஐரோப்பிய வெள்ளையன், இதன் மூலம் தான் அராபியனின் தன்மான உணர்வைக் குலையச் செய்வதாகவே எண்ணுவான். இப்பொ ழுது, அராபியன் தன்மானம் இழந்தவனாகி விடு கிறான். தனது உடமைகளை, தனது மண்ணைக் காத்து இவற்றிற்காகப்போராடும் உரிமையையும் கூட அவன் இழந்தவனாகி விடுகிறான்.

மெர்சோ தான் கொலை செய்த அராபியனை எண்ணி வருந்துவதில்லை. தான் தூக்கு மேடைக் குச் செல்வதற்கு முன் மரணத் தண்டனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து, அது குற்றவாளிக்கு எந்த வொரு சந்தர்ப்பத்தையும் தர மறுக்கும் பூரண தண்டனை என்று அங்கலாய்க்கும் மெர்சோ அந்த அப்பாவி அராபியனை ஒரு கண நேரமே னும் நினைவு கூருவது இல்லை. வெள்ளை உல கம் என்றும் கருப்பு உலகம் என்றும் காலனிய

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW padippakam.Com

உலகம் இருகூறாகப் பிளவுபட்டிருப்பதைப் பற்றி யும், இவ்விரு உலகங்களுக்கிடையே உள்ள உறவை ஒழுங்கமைப்பது துப்பாக்கியும் வேலி யும்தான் என்பதையும் குறிப்பிடுகிறார் ஃப் ரான்ஸ் ஃபேனோன். பிளவுபட்டுக் கிடக்கும் இந்த உலகில் மெர்சோவினால் அராபியர்களை "அந்நியராக', 'பிறத்தியாராகவே காண முடிகி றது. செலஸ்ட்டுடனும் மாரியுடனும் ஏன் தன் நாயை அன்றாடம் உதைக்கும் சாலமானோவு டன் கூட - ஏதோவொரு உறவை அவனால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் தான் கொல்ல நேர்ந்த அராபியனோ, மெர்சோவின் கண்களுக்கு ஒரு சடலமாக மட்டுமே தெரிகிறான். அராபியர்களைப் பற்றி ஐரோப்பாவில் ஒரு வழக் குண்டு; "செத்துப்போய்விட்ட அராபியனே நல்ல அராபியன்' என்பதுதான் அது (The only good Arab is a 'dead Arab). Cypressilsigildt இனவெறிக்குச் சான்றாக விளங்குவது இந்த வழக்கு இனவெறி, காலனித்துவம் ஆகியன விதித்திருந்த விதிகளை, வரையறுத்த எல்லைக் கோடுகளை - மானுடருக்கிட்ையில் நிலவக் கூடிய பரஸ்பர உறவை நிர்ணயிக்கும் எல்லைக் கோடுகளை - கடந்து மெர்சோ, என்றென்றும் சாசுவதமான மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் என்று கொள் வது எவ்வளவு அபத்தம்; மெர்சோவின் செயல் காலனியாட்சியின் துப்பாக்கி - வேலி அரசிய லின் வரம்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட ஒன்றே தவிர அர்த்தமற்ற உலகில் நிகழ்ந்த அபத்தமான செயல் அல்ல, காலனிய உலகில் வாழ்ந்தும், அவ் வுலகின் அடிப்படையாக விளங்கி அதனை இயக்

கிய ஆண்டான்/அடிமை, வெள்ளையன்/அராபி யன் உறவுபற்றி காம்யு சாதிக்கும் மெளனம் அவ ரது சிந்தனையின் வரம்புகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இந்த மெளனம் எவ்வளவு கண்ட னத்துக்குரியது என்பதைப் பின்வரும் செய்திகள் நிரூபிக்கும், கொலைச் செயலுக்கு அபத்த உல கில் அர்த்தம் இல்லை என்று கூறிய காம்யு இரண் டாம் உலகப் போர் நடந்து முடிந்தபின், ஸ்டாலி னிச சோவியத் யூனியன் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின், கொலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். அபத்த உலகில் ஒருவன் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்ற நினைப்போடு நம்மைத் தற்கொ லைக்கு உந்தியிருக்க வேண்டும் என்றும், அவ் வாறு நாம் தற்கொலை செய்து கொள்ளாது அபத்த உலகின் அபத்தத்தை நினைத்து வாழ்க் கையை ஒட்டுவது தர்க்கரீதியாக சரியானதல்ல என்றும் அவர் கூறினார். ஒருவன் தான் வாழ்வ தென்று முடிவு செய்தபின், பிறர் கொலை செய் யப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்று வாதாடிய காம்யு, இந்த முரணான சூழலில் கலக மனப்பான்மையுடன் வாழ்வதில்தான் அர்த்த முண்டு என்றார். 1956 இல் வெளியிடப்பட்ட 'கலகக்காரன்' என்னும் நூலில் இந்த நிலைப் பாட்டை அவர் முன்வைக்கிறார். ஆனால் இதே காலகட்டத்தில் அல்ஜீரிய அராபியர்கள், திட்ட மிட்டமுறையில், பிரெஞ்சு ராணுவத்தால் படு கொலைச் செய்யப்பட்டதை அவர் கண்டிக்க வில்லை; மாறாக பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்துக் கிளம்பிய அல்ஜீரிய விடுதலைப் போராட்டத் தைக் கண்டித்தார். அராபியர்களைப் பற்றிய அவ ரது புரிதல்கள் பிரெஞ்சு இனவாதமும் காலனித்து வமும் வகுத்திருந்த சித்தாந்த சட்டகத்திலிருந்து

காலச்சுவடு

287

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW.padippakam.Com

பிரிந்து, அராபியர்களின் சமகால வீர வரலாற்றை அங்கீகரிக்கும் வகையில் வளர்ச்சியடையவே இல்லை,

அல்ஜீரியாவில் நிறுவப்பட்டமிகமோசமான காலனித்துவத்தை காம்யுவினால் எவ்வாறு சகித் துக் கொள்ள முடிந்தது? காலனித்துவத்தின் தீய விளைவுகளைப் பற்றி அதிகம் எழுதவில்லை அவர் என்றாலும் தாம் வாழ்ந்த சூழல் அதர்மச் சூழல் என்பதை உணர்ந்திருந்தார். "கொள்ளை நோய் என்ற புதினத்தில், அதர்மச் சூழலில் தார் மீக உணர்வுடன் ஒருவர் வாழ்வது எப்படி என்ற பிரச்சினையை அவர் எழுப்பவே செய்கிறார். ஆனால் அல்ஜீரியாவின் அரசியல் பிரச்சினையு டன் தொடர்புடைய விஷயமாக அவர் அதைக் காண்பதில்லை. இதுபற்றி எட்வர்ட் ஈய்த் கூறுகி றா.

'காம்பு இங்கு போற்றுவது மனிதர்கள் தம் மைத் தாமே அறிந்து கொள்வதைத்தான்; அதா வது ஒரு மோசமான சூழ்நிலையில், மாயை நீங் கிய முதிர்ச்சியும் தார்மீக உறுதியும் இணைந்த நிலையில் ஒருவர் இருப்பது என்பதைத்தான்'

(Edward Said - "Narrative Geography and Interpretation", NLR 180, March/April 1990, Page 87)

இந்த மோசமான சூழ்நிலையும் ஒரு வர லாற்று விளைவு மானுடர்களின் செயல்பாட்டி னால் ஏற்பட்டுள்ள ஒன்று என்பதை காம்பு ஏற்ப தில்லை. அவரைப் பொறுத்தவரை மானுட வாழ்வு என்பதே ஒரு அவலநிலை; எல்லையற்ற பிரபஞ்சத்தின் அசைக்கமுடியாத அமைதியை, மெளனத்தை எதிர்கொள்ளும் மானுட முயற்சி கள் தோல்வியில்தான் போய் முடிவடையும், இந்த சூழலில் வாழ மானுடர் எத்தகைய நெறிக ளைப் பின்பற்ற வேண்டும், எப்படி வாழ வேண் டும் என்பதைப் பற்றிய ஒரு ஆய்வே கொள்ளை நோய்',

கொள்ளைநோய் இன் கதாநாயகன் மருத்து வன் ரியூ கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டுள்ள

காலச்சுவடு

ஓரான் நகரத்தில் பிணிதீர ஓயாது உழைக்கிறான். நோயின் முதல் கட்டங்களிலேயே அதை இனங் கண்டு கொண்டு, மக்களின் நலம் கருதி, ஓரான் நகராட்சியை அவசரகால சட்டங்களை இயற்றும் படி செய்கிறான். ஓரicன் நகரத்தின் அன்றாட வாழ்வு படிப்படியாக பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. வெளி உலகுடன் அந்நகரத்துக் குள்ள தகவல், பயணத் தொடர்புகள் துண்டிக்கப் படுகின்றன. ஓரான் நகரம் ஒரு சிறைச்சாலை போல் ஆகிவிடுகிறது. கொள்ளைநோய் ஏற்படுத் தும் மரணத்தைத் தடுப்பதென்பதோ மிகவும் கடி னம், ஒரான் நகரத்தை மரணம் முற்றுகையிடுகி றது. தொடர்ந்து ஏற்படும் சாவுகள் ரியூவையும் அவனுக்கு உதவியாக இருக்கும் டர்ரூவையும் பத்திரிகையாளன் ராம்பெர்வையும் வெவ்வேறு விதங்களில் பாதிக்கின்றன.

பாரீஸில் தனக்காகக் காத்திருக்கும் காதலிக் காக ஏங்கும் ராம்பெர், ஒரான் நகரத்திலிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்ற எண் னத்தில் நகரக்காவல்காரர்கள் இருவரை நாடுகி றான். ஆனால் தப்பிப்போகத் தக்க தருணம் வரும்போது தனது மனதை மாற்றிக் கொண்டு ரியூவிற்கு உதவி செய்வது என்று முடிவு செய்கி


" |288

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW.padippakam.Com

றான். நோயினால் அவதியுறுவோருக்குத் தன்னா லான உதவியைச் செய்யாது தப்பியோடினால் அந்த நினைவு தன்னை வாட்டியெடுக்கும் என் றும், தான் சந்தோஷத்தைத் தேடிப் போக, அது வுமே குற்றவுணர்வால் களங்கப்படுத்துவதைதன் னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் ராம் பெர்கருதுகிறான். இது காதலா, கடழையா என்ற பிரச்சினைதான் என்றாலும் எக்காரணத்தைக் கொண்டும் காதலைத் துறப்பது நியாயமல்ல என்று ரியூ கூறுகிறான். எனினும் ரியூவுமே தனது மனைவியைப் பிரிந்து வாழ்பவன்தான். மனைவி வேறொரு நகரத்தில் காசநோய்க்காக சிகிச்சைப் பெற்று வந்தாள். ரியூ, ராம்பெர் இருவருமே நோய்வாய்ப்பட்டுள்ள மக்களுக்குப் பணி செய் வதைத் தவிர தம்மால் வேறு எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்திருந்தனர்.

இவ்வகையில் ரியூவின் நிலைப்பாடு இது தான் தனது மருத்துவப் பணிகள் மூலம் நோயால் வாடிக்கிடப்போருக்கு ஆறுதல் வழங்குவதையே தனது கடமையாகக் கண்டான். தன் தொழிலை அவன் பணிவுடனேயே அணுகுகின்றான். ஒரு வீரனாகவோ மகானாகவோ தன்னை அவன் கரு திக் கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டுள்ள உலகின் ஒரு நிச்சயம், மரணமும் அது ஏற்படுத் தும் துயரமும்தான். இவற்றை அடக்கத்துடனும் தன்மானத்துடனும் எதிர்கொள்வதையே ரியூ விரும்பினான். மானுடகுலத்தின் துயரத்தில் ஒரு வன் தன்னைத் கரைத்துக் கொள்வதன்மூலம் மர னத்தைப் பற்றிய பயத்தை நீக்கலாம். மேலும் துயரம் என்பது சாசுவதமானது அல்ல. பழையன வற்றை மறந்து, அவற்றிலிருந்து மீண்டு, எப்பொ ழுதும் போல வாழத் தயங்கமாட்டார்கள் மனிதர் கள் என்பதை ரியூ அறிந்தவன்தான். அவனுக்கு இதுவும் தெரிந்த ஒன்றுதான். மறுபடியும் கொள் ளைநோய் தாக்கும்; கொள்ளைநோய்க் கிருமி முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்று. தனது காலம் வரும் வரை காத்திருந்து மறுபடியும் அது தன் கைவரிசையைக் காட்டும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். இவ்வகையில் பிணி, நோய், மரணம் முதலியன மக்களுக்கெதிராகக்

காலச்சுவடு

289

கிளம்பியுள்ள அநியாயங்கள், அநீதிகள் என்பது அவனது புரிதலாக இருந்தது. மரணத்துடன் போராடும் மக்களின் வாழ்விற்கு ஒரு சாட்சியாக ரியூ தன்னைக் கருதிக் கொள்கிறான். அவர்க ளுக்கு ஏற்பட்ட கொடூரத்தை மானுட நினைவில், நிறுத்துவதைத் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகக் கொள்கிறான்.

கொள்ளைநோய் என்பது மனிதரால் அகற்ற வேமுடியாத ஒன்று என்று கருதுபவன் டர்ரூ. தனது இளமைக் காலத்திலிருந்தே மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியவன் அவன். மனி தனே மனிதனின் உயிரைப் பறிப்பதென்பது என் னென்றும் நடந்துள்ளது என்றும், இதுதான், உண் மையில் மனித ஆன்மாவை ஆட்டிப்படைக்கும் கொள்ளைநோய் க்கிருமி என்றும் டர்ரூ கருதி னான். இந்த உலகில் கொள்ளை நோயால் பாதிக் கப்படாதவர் மிகச் சிலரே என்பதும் டர்ரூவின் கருத்து. அவன் கூறுகிறான்:

'நம்மில் ஒவ்வொருவனுக்குள்ளும் கொள் ளைநோய் இருக்கிறது. இந்த உலகில் ஒரு வன் கூட அதிலிருந்து விடுபட்டிருக்க வில்லை. நான் அறிவேன் - நாம் நம் மீது முடிவில்லாத கண்காணிப்யைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்;இல்லாவிடில் ஒரு நொடி நேர அஜாக்கிரதையில் நாம் யாரோ ஒருவரது முகத்தில் நமது மூச்சை விட்டு அவ ருக்கு நோயைத் தொற்ற வைத்துவிடுவோம். இயல்பானது நுண்கிருமி மட்டுமே. மற்றவை அனைத்தும் - ஆரோக்கியம், நேர்மை, தூய்மை (வேண்டுமானால் இதையும் சேர்த் துக் கொள்வோம்) - மானுட சித்தத்தின் விளைபொருள்கள்தான்,ஒரு போதும் தடுமா நக் கூடாத உஷார் நிலையின் விளைபொருள் கள்தான். யாருக்குமே நோயைத் தொற்ற வைக்காத ஒரு நல்ல மனிதன் மிக அற்புத மான அளவிலேயே கவனக்குறைவு உடைய வன், இந்த கவனக் குறைவைத் தவிர்க்க மகத் தான மனோதிடமும் எப்போதும் விழித்திருக் கும் மனமும் தேவை, ஆமாம் ரியூகொள்ளை

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW padippakam.Com

நோயால் பிடிக்கப்பட்டிருப்பது என்பது சோகமான விஷயம்தான். ஆனால் மேலும் சோர்வு தரக்கூடியது கொள்ளைநோயால் பிடிக்கப்பட்டிருப்பதை மறுப்பதுதான். இத னால்தான் உலகத்தில் எல்லோரும் அவ்வ ளவு சோர்வடைந்திருக்கிறார்கள். எல்லோ ருமே கொள்ளை நோயால் அனேகமாக சலிப்படைந்துவிட்டனர். எனவேதான் கொள்ளைநோயை நம்மிடமிருந்து வெளி யேற்ற விரும்பும் நம்மைப்போன்ற ஒரு சிலர் மனக்கசப்பூட்டும் சோர்வை உணர்கிறோம். இச்சோர்விலிருந்து விடுதலை என்பது மர ணத்தின் மூலமே தவிர வேறு வழியில் இல்லை."

(Albert Camus, Collected Fiction of Albert Camus. P. 218)

ராம்பெர். ரியூ டர்ரூ ஆகிய மூவரும் காம்யு வின் சிந்தனையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றனர். மரணம், மரணத்தை சலனமின்றி, எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி எதிர்நோக்கும் மானுடன் அநீதி, அநீதியால் பாதிக்கப்பட்டோருடன் தன்னை ஐக்கியப்படுத் திக் கொள்ளும் மானுடன் துயரம், துயரத்தைப் போக்குவதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளும் மானுடன்-டர்ரூ, ரியூ, ராபெர் ஆகிய மூவரும் காம்யுவின் "கலக மனிதனின் வெவ்வேறு அம் சங்களைப் பிரதிநித்துவம் செய்கின்றனர்.

காம்யு கொள்ளைநோய் என்பதை ஒரு ஆன் மீக, தத்துவ, மெய்ப்பொருள் (Metaphysical) பிரச்சினையாகவே சித்தரிக்கிறார். கொள்ளை நோயின் தன்மை, இதனால் பாதிக்கப்பட்ட உடல் படும் அவதி, நோயைப் போக்கமேற்கொள்ளப்ப டும் மருத்துவம், நோய் பரவுவதைத் தடுக்க எடுக் கப்படும் முயற்சிகள், இயற்றப்படும் சட்டங்கள், நிறுவப்படும் தற்காலிக நோய்த்தடுப்பு முகாம் கள், ஓரான் நகரத்தின்போக்குவரத்தும் பரஸ்பரத் தொடர்பும் கறாராக வரையறுக்கப்பட்டிருந்த விதம் ஆகியன பற்றிய செய்திகளும் பெளதீக விவரங்களும் இங்குத் தரப்பட்டுள்ளன என்பது

காலச்சுவடு

290

உண்மைதான். ஆனால் கொள்ளைநோய் ஏற்ப டுத்தும் வேதனை, முடிவில் ஆன்மீக வேதனை யாகவே விளக்கப்படுகிறது. நகர நீதிபதி ஒத் தோனை எடுத்துக் கொள்வோம். சட்டம், ஒழுங் கைக் காப்பவர் அவர் ஓரானில் குற்றவாளிகள் யார், குற்றமற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்ய அவருக்கு உரிமையுண்டு, மரணத்தீர்ப்பு அளித்து நீதி" யை நிலைநிறுத்த அவருக்கு அதி காரம் உண்டு. கொள்ளைநோயால் அவரது மகன் இறந்துவிடுகிறான். மரணத்தை இனி தன்னால் வெல்ல முடியாது, இனி தான் மரணத்தின் அதிப தியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தவ ராய் அவர் நோய்த்தடுப்பு முகாம்களில் சேவை செய்வதென்று முடிவு செய்கிறார். ஓதோனின் மனமாற்றம் அவரது தனிப்பட்ட வேதனையி னால் ஏற்பட்ட ஒன்றுதான் என்றாலும், நீதிபதி யான அவர் சமூகத் தொண்டராக மாறுவதையே குறிக்கிறது. தீர்ப்பு வழங்குபவன் வாழ்க்கை வழங்கக் கூடிய இறுதித்தீர்ப்பை எதிர்நோக்கி வாழ்கிறான். 'கொள்ளைநோயில் வரும் மற்ற கதாபாத்திரங்களுங்கூட - கிறித்தவப் பாதிரியார், அரசு குமாஸ்தாக்கள், கோத்தார் ஆகியோர் - கொள்ளைநோயை ஒரு மருத்துவப் பிரச்சினை யாகப் பார்ப்பதில்லை, சமூகத்துடன் தமக்குள்ள உறவைப் பற்றிய உணர்வை கொள்ளை நோய் மிகத் தெளிவாக தமக்கே படம்பிடித்துக் காட்டி புள்ளதாகவே இவர்கள் கருதினர்.

ஆனால், நாம் இங்கு கேட்க விரும்பும் கேள்வி இதுதான் கொள்ளைநோய் என்பது 'மானுட நிலைமை யை விளக்குவதற்கான ஒரு உருவகமாகச் செயல்பட்டாலும், இந்த கதைநிகழ் வதோ ஒரு குறிப்பிட்ட அல்ஜீரிய நகரத்தில்தான். ஆனால் இந்நகரத்தின் தனித்தன்மை பற்றி நமக்கு எதையும் ஆசிரியர் தெரியப்படுத்துவதில்லை. மரங்களற்ற, கவர்ச்சியற்ற, ஆன்மாவற்ற" ஒரு நகரமாக ஓரான் சித்தரிக்கப்படுகிறது. இதற் கென்று விசேஷ அம்சங்கள் எதுவும் இல்லை.

சதாசர்வகாலமும் ஓய்ந்துகிடக்கும் இந்நகரம்

பெயரளவிலும் தட்பவெப்ப ரீதியாகவும் மட்

ஆண்டுமலர்1991

படிப்பகம்

________________

WWW padippakam.Com

டுமே ஒரு அல்ஜீரிய நகரம். ஆனால் இங்கு அரா பியர்களும் ஆப்பிரிக்கர்களும் வாழ்கின்றனர் என்பது எங்குமே சொல்லப்படுவதில்லை - ஒரு இடத்தில் தவிர ரியூவைச் சந்திக்க வரும் ராம் யெர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, நகரத்தில் அராபியர்கள் வாழும் பகுதியி லுள்ள வீட்டு வசதிகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியன பற்றி அறிந்து கொள்வதற்காக தான் ஒருமுறை ரியூவை அணுகி உதவி கோரியதாகக் கூறுகிறான். ஆக, ஒரானில் 'அராபியர் பகுதி" ஒன்று இருந்தது என்பது இப்படித்தான் நமக்கு தெரியவருகிறது. ஆனால் ஓரானை ஒரு பிரெஞ்சு நகரமாகவே கதாசிரியர் சித்தரிப்பதால், "ஒரான் ஒரு அராபியப் பெயர், அது ஒரு அராபிய நகரம்' என்ற எண்ணம் வாசகருக்கு"சட்டென்று உதிப்ப தில்லை.

ஒரான் ஒரு அராபிய நகரம் என்பதை காம்பு திட்டவட்டமாகச் சொல்லாததற்குக் காரணம், அல்ஜீரியச் சூழலை இங்கு அவர் ஒரு குறியீடா கப் பயன்படுத்துவதால்தான். இதன் காரணமா கவே அவர் நகரத்தின் பொருண்மை அம்சங் களை, குறிப்பாக அங்குவாழ்ந்த அராபியர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி மெளனம் சாதிக்கிறார். அவற்றைப் பற்றி அவர் எழுதியிருந் தால் ஓரான் ஒரு ரத்தமும் சதையுமான, வரலாற்று வெளியில் அமைந்துள்ள ஒரு நகரமாய் மாறியி ருக்கும். இருத்தலியல் பிரச்சினைகளை எழுப்பு வதற்கு தகுந்த களமாக இருந்திராது என்றாலும் இங்கு அராபியர்களும் இருந்தனர் என்பதற்கு கொள்ளைநோய் புதினத்திலேயே ஒரு சான்று இருப்பதால், நாம் சில கேள்விகளை முன் வைப் போம்:

-கொள்ளை நோய், அராபியர்களையும் பாதித்ததா? பாதிக்கப்பட்ட அராபியர்கள், உடல் வேதனையுடன் மன உளைச்சலையும், தர்ம சங்கடங்களையும் அனுபவித்தனரா?

- கொள்ளைநோய் பரவுவதைத் தடுக்க மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள், இயற்றப்பட்ட சட்டங்கள், நிறுவப்பட்ட கட்டாய நோய்த்

தடுப்பு முகாம்கள் அராபியர்களின் அன்றாட

வாழ்வை எவ்வகையில் பாதித்தன?

- ரியூவின் மருத்துவம் அவர்களுக்கும் ஆறு தல் அளிக்கக் கூடியதாக இருந்ததா?

காம்யுவைப் பொறுத்தவரை கொள்ளை நோய் ஒரு மனவியாதியும் கூட அல்லவா? அது அராபியர்களையும்கூடப் பாதிக்கத்தான் செய் தது. ஆனால் அராபியர்கள் அனுபவித்த வேதனை ஒரு மனவேதனை மாத்திரம் அல்ல. காலனித்துவம் மிக கொடூரமான கொள்ளை நோய், அது ஏற்படுத்திய மரணமும் துயரமும் அராபியர்களின் வாழ்வுடனும் உடலுடனும் இரண்டறக் கலந்துவிட்டவை, டர்ரூவைப் போல் மரணத்தை ஒரு தத்துவப் பிரச்சனையாக அராபி யன் பார்க்கவில்லை. அது அவனுக்கொரு அன் றாடப் பிரச்சினை. காலனி ஆட்சியையும் அதன் அதிகார மையங்களையும் வெறுக்கப் பழகியி ருந்த அராபியர்கள், அவர்களின் "நன்மை" க்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளையும் நியதிகளையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்த்தனர். வெள் ளையனால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் தமது தனி வாழ்வை, குடும்ப அமைப்பை, தமது பண்பாட்டை, தமது வாழ்வு முறையை மாற்றிய மைக்கக் கூடியவை, தனது அடிப்படை உரிமைக ளைப் பறிக்கக் கூடியது என்பதை அராபியர்கள் அறிந்திருந்தனர். காலனியாளர்களின் சேவைப் பணிகளையுமே அராபியர்கள் தமக்கெதிராக செயல்படுவனவாகக் கண்டனர். அவர்கள் ரியூ வின் மருத்துவ சிகிச்சையை வேதனை தீர்க்கும் சுயநலமற்ற பணியாகக் கருதி அதைப் பாராட்டி யிருக்க மாட்டார்கள். ஃபிரான்ஸ் ஃபேனோன்

எழுதுகிறார்:

'அல்ஜீரியாவில், ஒரே சமயத்தில், இனவா தம், அவமானம் ஆகியவற்றுடன் மேற்கத் திய மருத்துவமும் புகுத்தப்பட்டது. அது ஒரு ஒடுக்குமுறை அமைப்பின்பகுதியாக இருந்த காரணத்தால், சுதேசியின் மனதில் எப்போ தும் குழப்பமான அபிப்பிராயத்தையே அது உருவாக்கியது. இந்தக் குழப்பத்தை உண்மை

காலச்சுவடு

29

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW.padippakam.Com

யில் ஆக்கிரமிப்பாளரின் ஆதிக்க வடிவங்க ளுடன் தொடர்புபடுத்தியே புரிந்து கொள்ள (տlգամ),

காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டவன் காலனித்துவ ஆட்சியாளர்களின் எல்லா சாத னைகளையுமே ஒரு இழிவான பொருளிலும் ஒரு அதீதமான கண்ணோட்டத்திலும் மட் டுமே பார்க்கும்படியான வகையில் காலனி யச் சூழல் செயல்படுகிறது. காலனித்துவ ஆட்சிக்குட்பட்டவன் மருத்துவரையும், பொறியியலாளரையும், பள்ளி ஆசிரியரை யும் தன்னோடு ஒன்றிவிட்ட குழப்பம் என்ற மங்கலான திரையினூடாகவே காண்கிறான். கிராமத்திற்கு மருத்துவர் மேற்கொள்ளும் கட் டாயமான வருகைக்கு முன்னர் போலீஸ் அதி காரிகள் மூலம் கிராம மக்கள் பொதுவான இடத்திற்குக் கொண்டுவரப்படுகின்றனர். இத் தகையதொரு பொதுவான நிர்ப்பந்தம் நில வும் சூழ்நிலையில் இங்கு வந்து சேரும் மருத் துவர், நிச்சயமாக நாட்டு மருத்துவராக இருக் கமாட்டார். மாறாக, அவர் ஆதிக்க சமுதாயத் தைச் சேர்ந்த மருத்துவராக அநேகமாக ராணுவ மருத்துவராக இருப்பார் சுகாதார மேம்பாடுகள் பற்றிய புள்ளிவிவரங் கள் நோய்க்கு எதிரான போர்ாட்டத்தில் கிடைத்த வெற்றியாக சுதேசிகளால் கருதப்ப டவில்லை. மாறாக, தமது நாட்டின் மீது ஆக்கி ரமிப்பாளர்களின் பிடிப்பு விரிவடைந்ததற் கான சான்றுகளாகவே அவற்றை அவர்கள் Lrfäßpffsär (Franz Fanon "Medicine and Colonialism, "in A Dying Colonialisin". p. 12

ஓரினின் அராபியர்கள் பற்றி மெளனம் சாதிக்கும் காம்பு, ஓரானை அங்கு வாழ்ந்து வந்த பிரெஞ்சு மக்களின் இயல்பான தாயகமாக சித்த ரிக்கிறார் கொள்ளைநோய் ஏற்படுத்திய பீதி நீங் கிய பின் தாங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது Till Ji, அனுபவித்த ஏக்கங்கள, வேட்கைகள் முதலியவற்றை நினைவுகூர்ந்தும், நாடு கடத்தப்பட்டவர்கள் தமது தாயகத்திற்குத்

காலச்சுவடு

292

திரும்பிவருபவர் போல குதூகலித்துமே, ஓரான் நகரவாசிகள் தமது தற்காலிக சிறைச்சாலை'யின் வரம்புகளைக் கடக்கின்றனர். அவர்கள் ஒரான் நகரத் தெருக்களில் வளைய வந்து தமது மனங்க ளில் இதுநாள் வரைக்கும் முடங்கிக் கிடந்து அன் பையும் ஆசையையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தக் காட்சியுடன் தன்னை இணைத்துக் கொள் ளும் ரியூ அவர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பி வந்து விட்டம்கள் என்று கருதுகிறான். கொள் ளைநோயால், பாதிக்கப்பட்டவரின் நினைவும் வேட்கையும் தமது ஆசைக்குரியதை அடையும் தருணத்தில் ஓரான் நகரம் உயிர்பெறுகிறது. ஓரான்நகரம் மாற்றானின், அராபியனின் இல்லம் என்ற உணர்வுக்கு இங்கு இடமில்லைதான். பிரெஞ்சு காலனியாளர்கள் வாழும் ஒரு வெளி யாகவே சித்தரிக்கப்படும் ஒரான் காலனியாளர்க ளின் கற்பனையில், வேட்கைகளில் ஒரு தாயக மாக காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில், ஓரான் யாருடைய இல்லம்? தாயகம்? அராபியர் கள், அயலானின் ஆதிக்கத்திற்குட்பட்ட தமது மண்ணை நினைவிலும் நெஞ்சிலும் நிறுத்தியே அம்மண்ணின் விடுதலைக்காகப் போராடத் துணிந்தனர். ஆனால் தமது தாயகத்தை மீட்டு எடுக்க அன்பும், ஆசையும், நினைவும் மாத்திரம் அவர்களுக்குப்போதுமானதாக இருக்கவில்லை. ஏனெனில் அராபியர்கள் விரும்பிய தாயகம் அவர்கள் கற்பனையில் மலர்ந்து நினைவில் பூத்த மலர் அல்ல. காம்யுவின் பார்வையில் அல்ஜீ ரியா, ஆப்பிக்கக் கண்டத்தின் வரைபடத்திலுள்ள ஒரு பெயர் அல்ஜீரியா, அதன் கடல், கடற்கரை கள், அதன் மத்தியதரைக் கடல் பண்பாடு (இது வுமே கிரேக்க மோகம் கொண்டிருந்த காம்யுவின் கற்பனையில் வளர்ந்த ஒன்று) இங்கு ஒருவன் மேற்கொள்ளக்கூடிய சிற்றின்ப வாழ்க்கை - இவை அல்ஜீரியாவை பிரெஞ்சு பூர்ஷவா உலகத் திற்கு ஒரு மாற்று உலகாக காம்புவிற்குக் காட் டின. ஆனால் காம்யு காணத் தவறியது இதைத் தான் ஐரோப்பியர்கள் வரைபடங்கள் தயாரித்து அவற்றில் அல்ஜீரியா என்ற பெயரை பொறித்த தற்கு முன்னும் (அதற்குப் பின்னும்) ஒரு அல்ஜீ ரிய நாடும், நாகரிகமும், பண்பாடும் இருந்தன. இருந்து வருகின்றன. ஆகையால் அராபியர்கள்

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW, padiippakan. Com

தேடிய தாயகம் ஐரோப்பியக் கற்பனைக்கு அப் பால் நிலவிய தனித்தன்மையுடைய வேறொரு

உலகம்,

அல்ஜீரியாவின் தனித்தன்மையை, அதற்கே வுரிய வாழ்வுமுறைகளை அங்கீகரிக்காத காம்யு அல்ஜீரியாவின்பால் வெள்ளையர்களுக்கு இருந்த அலாதியானக் காதலைப் பற்றி மாத்திரம் குறிப்பிடுகிறார். 'விருந்தாளி' அவரது சிறுகதைக ளில் ஒன்று. இதில் இடம்பெறும் முக்கிய கதாபாத் திரம், பள்ளி ஆசிரியன் டாரூ. மெர்சோவைப் போன்றவன்தான் அவனும் தனிமையில் வாழ்ந்து வந்தவன். ஒரு நாள் இரவு அல்ஜீரிய விடுதலைப்போர்துவங்கியப் பின்னர், ஒரு அரா பியன் டாரூவின்பொறுப்பில் ஒப்படைக்கப்படுகி நான் டாரூ அவனைப் பொழுது விடிந்ததும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண் டும். பொழுது விடிகிறது. அராபியனின் வாழ்க் கையிலும் அவனது பிரச்சினைகளிலும் தலையிட விரும்பாது டாரூ அராபியனைத் தனியே காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கிறான். அராபி பன் செல்லும்முன் பள்ளி அறையொன்றின் கரும் பலகையில் எழுதிவிட்டு செல்கிறான், நீ உனது சகோதரனை கைவிட்டு விட்டாய், இதன் பயனை நீ அனுபவிப்பாய்' என்று. ஆனால் சிறிதும் சலன மடையாத டாரூ அல்ஜீரியப் பாலைவனத்தின் பரந்த வெளியை வெறித்துப் பார்க்கிறான். அரா பியன் சிறை நோக்கிச் செல்கிறான். யார் இங்கு வேண்டாத விருந்தாளி - டாரூவா, அராபியனா? அபத்த உலகம் பற்றிப் பேசும் காம்யுவின் அரசி யல் நிலைப்பாட்டில் எந்தவொரு குழப்பமும் இல்லை, இந்தக்கதையிலுமே அராபியனின் மண் உரிமையை அவர் அங்கீகரிப்பதில்லை. மாறாக டாரூவுக்கு அம்மண்ணின் மீது இருந்த காதலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்.

காலச்சுவடு

காம்யு சாதிக்கும் மெளனங்கள் தனிப் பட்ட மனிதனின் சிந்தனையின் வரம்புக ளைக் குறிப்பன மட்டும் அல்ல. அவர் சொல் லாமல் விட்டவை காலனித்துவ சிந்தாந்தங்க ளாலும் மூடி மறைக்கப்பட்டவைதான். கால னித்துவம் தான் ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளை "கன்னி நிலங்களாக, அதாவது, நாகரிகம் இன்னமும் குடியேறாத இடங்க ளாகக் கண்டது. வெள்ளைக்காரர்கள் இந்நா டுகளை வேறு நாகரிகங்களின், பண்பாடுக ளின் உறைவிடமாகக் காணவில்லை. மாறாக, தமது ஏகாதிபத்தியத் தாபங்களும், வேட்கை களும் கற்பனையும் நிறைவு பெறுவதற்கான களமாகவே அவற்றைக் கண்டனர். காம்யு வின் சிறுகதைத் "சோரம் போனவளி"ல் வரும் யானின் என்ற பிரெஞ்சுப்பெண்மணி அல்ஜீரி யப் பாலைவனத்தின் பரப்பில் தனது ஆளு மையை, பெண்மையை உறுதி செய்து கொள் கிறாள். யானின் ஒரு சராசரிப் பெண், அவ ளுக்கு திருமணமாகி இருபது வருடங்க ளுக்கு மேல் ஆகியிருந்தன. அவளது கண வன், அவள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், ஒரு விற்பனையாளன். ஒருமுறை யானினின் கணவன் ஊர் ஊராகச் சென்று தனது சரக்குகளை விற்கப் புறப்படு கையில், யானினும் அவனுடன் செல்கிறாள் - அவளது வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்கள் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு சிற்றுாரில் ஒரு இரவுதங்க வேண்டி வருகி றது. பயணக் களைப்பு பானீனை தளரச் செய் தாலும் அவ்வூரிலிருந்த ஒரு பழங்கோட் டையை அவள் பார்க்க விரும்புகிறாள். பய ணம் முழுவதிலும் இனந்தெரியாத சோகமும், பயமும் யானினை ஆட்கொண்டிருந்தன. மாலைநேர வெய்யிலில் அவளும் அவளது கணவனும் கோட்டைக்குச் செல்கின்றனர். கோட்டையின் உச்சியை அவர்கள் அடை கின்றனர். கீழே அவர்கள் பார்வைக்கென்றே

293

LILq: IILIċI Li

ஆண்டுமலர் 1991



________________

WWW padippakam.Com

விரிந்து கிடந்தாற்போல் ஒரு பரந்தபாலைவ னக் காட்சி, யானின் உடலும் உள்ளமும்பதை பதைக்க அக்காட்சியை ரசிக்கிறாள்: "பொழுது சாயச்சாய வெளிச்சம் தளர்ந்து மென்மையானது; அது படிகநிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறியது. அதே சமயத்தில் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்த பெண் ணின் மனத்தில், காலம், பழக்கம், சலிப்பு ஆகியவை உருவாக்கியிருந்த முடிச்சு மெல்ல அவிழத் தொடங்கியது. நாடோடிக ளின் முகாமை அவள்பார்த்தவண்ணம் இருந் தாள். அங்கு வாழ்ந்து வருபவர்களை அவள் பார்த்தது கூட இல்லை, கறுப்புக் கூடாரங்க னில் சலனம் ஏதும் இல்லை, எனினும் அவர்க ளைப் பற்றிதான் அவளால் நினைக்க முடிந் தது-இந்த நாள் வரை அவள் தெரிந்து கொள் ளாதிருந்த அவர்களைப் பற்றித்தான். வீடற்ற வர்களாய், உலகத்திலிருந்து துண்டிக்கப்பட் டவர்களாய் அவளது கண்களுக்குத் தெரிந்த பரந்த நிலப்பரப்பில் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு சிலரே அவர்கள். இந்தப் பரந்த நிலப்பரப்போ இன்னும் பெரியதொரு வெளியின் மிக அற்பமான பகுதியே. இந்தப் பெரிய வெளி நெளிந்து சுளிந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தென் பகுதியில், நதி யொன்றினை அனைத்துள்ள காடொன்றில் போய் முடிகிறது. காலம் தோன்றிய முதல், முற்றிலும் சுரண்டி யெடுக்கப்பட்ட இந்த எல்லையில்லாத நிலத் தின் காய்ந்த மண்ணில், ஒரு சில மனிதர்கள் விடாது பயணம் செய்து வந்துள்ளனர்

Aஉடைமைகள் ஏதுமின்றி, யாருக்கும் அடிய ணியாதவராய், வறுமையால் பீடிக்கப்பட்டு, ஆனால் ஒரு வினோதமான ராஜ்யத்தின் சுதந் திர மன்னர்களாய் இந்த எண்ணம் ஒரு இனிய, பெரிய சோகத்தை தன்னுள் ஏற்படுத் தித் தனது கண்களை மூட வைத்தது ஏன் என் பது யானீனுக்குத் தெரியவில்லை'AlbertCaམ་༽"e Collectad Fiction of Albert Camus, P. 321

யானினின் மனதை நெகிழச் செய்யும் இக்காட்

காலச்சுவடு

294|

சியில் அராபிய நாடோடிகளும் இடம்பெறுகின்ற னர். ஆனால் அவர்கள் மாறாத தன்மையுடைய வர்களாய், வரலாற்றிற்கு வெளியே வாழ்பவர் கள். யானின் மனதில் மென் உ0ர்வுகளைத் துண் டும் இந்தப் பாலைவன நாடோடிகள் அவளது கற்பனையில் சஞ்சரிக்கும் அவளது வேட்கையின் பிரதிபிம்பங்களே தவிர ரத்தமும் சதையுமான மனிதர்கள் அல்ல, யானின் நள்ளிரவில் மீண்டும் கோட்டைக்குத் தனியாக வருகிறாள். கோட்டை உச்சிக்குச் சென்று மலையில் அவள் கண்டு ரசித் தக் காட்சியை நினைவில் நிறுத்தி பாலைவனத் தின் பரப்பில், அதன் அமைதியில் இரண்டறக் கலந்து விடுகிறாள். மாலையில் அவளை வாட் டிய இனிய பெரிய சோகம் பீறிட்டு வெளிவருகி

DS).

'பயத்திலிருந்து, பித்துப் பிடித்தவளாய், போவது எங்கு என்று தெரியாதவளாய் பல் லாண்டுகாலமாக ஓடிய பிறகு அவள் ஒரு நிலைக்கு வந்தாள், அதே சமயம் தனது மூலா தாரங்களை தான் திரும்பப் பெறுவது போல அவளுக்குத் தோன்றியது, அவளது உடலில் புத்துயிர்பாய்ந்தது. அவளது உடல் நடுக்கம் நின்றது. மதில் சுவர் மீது தனது வயிற்றை அழுத்திய அவள் நகரும் வானத்தை நோக் கித் தனது உடலை நீட்டி நிமிர்த்தினாள்.தனது படபடக்கும் இதயம் அமைதியடைந்து தன் னுள் மெளனம் குடிகொள்ளவே அவள் காத் திருந்தாள். நட்சத்திர மண்டலங்களின் கடைசி நட்சத்திரங்கள் பாலைவனத்தின் தொடுவானத்தில் சற்றுத்தாழ்வாக,அசைவற் றுக் கிடந்தன - தமது ஒளியைச் சிந்தியவாறு. பிறகு, தாங்கொணாத மென்மையுடன் இர வெனும் தண்ணீர் யானினினுள் பாய்ந்தது; குளிரை மூழ்கடித்தது, அவளது ஜீவனின் மையத்திலிருந்து மெல்ல மெல்ல எழுந்தது அது அலை அலையாகப் பொங்கி வழிந்து, முனகும் அவளது வாய்வரைக்கும் எழுந்தது. அடுத்தகணம், வானம் முழுவதுமே அவள் மீது கவிழ்ந்து கிடந்தது. அவளோ குளிர்ந்த மண்ணில் மல்லாக்காக விழுந்து கிடந்தான்." (Albert Carnis, The Collected fiction of Albert

Camus p. 324-325)

ஆண்டுமலர் 1991

படிப்பகம்

________________

WWW padippakam.Com

ஒரு குட்டி பூர்ஷ்வாதாம்பத்திய வாழ்வு அவ ளுக்கு வழங்க இயலாத இன்பங்களை இந்தக் கன்னி நிலத்திடமிருந்து அவள் பெறுகிறாள். இது எல்வாறு சாத்தியமாகிறது? வெள்ளையர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் காலனித்துவ சூழலில், வெள்ளை இனப் பெண்ணும் இந்த ஆதிக்கத்தின் பயன்களைப் பெறுகிறாள், குடும்ப வாழ்வில் ஒரு மனைவியாக, கணவனைச் சார்ந்தே வாழ வேண்டிய அவள், காலனியச்சூழ லில், காலனி ஆட்சிக்கு அடிபணிந்து கிடக்கும் சுதேசிகளின் மீது தன்னால் அதிகாரம் செலுத்த முடியும் என்பதை உணர வருகிறாள். இந்த உணர்வு அவளது ஆளுமையை அவள் உறுதி செய்து கொள்ள உதவுகிறது. இவ்வாறு செய்வ தால் பூர்ஷ்வாக் குடும்ப உறவுகளைக் கடந்து தனது தனித்தன்மையை வெளிப்படுத்தும் போதும், கணநேரமே நீடிக்கும் இவளது விடு தலை உணர்வு பிறத்தியானின் அடிமைத்தனத்தி னாலேயே சாத்தியமாகிறது.

காம்யு சொல்லாமலே விட்டவற்றை நாம் தொகுத்துக் கூறுவதென்றால்:

மெர்சோ வழும் அபத்தமான உலகம், ரீயூ வின் சாதாரண நகரம், யானின், டாரூ ஆகி யோரின் உலகம், ரீயூவின் சாதாரண நகரம், யானின், டாரூ ஆகியோரின் மனதுக்கு போதையூட்டும் பரந்தபாலைவனம்; அல்ஜீரி யக் கடற்கரைகள் - இவை வேறொரு நாகரி கத்தின் உறைவிடங்கள். வேறு வரலாறுகளின் க்ள்ங்கள். காம்யுவின் கதாபாத்திரங்களின் கற் பனை சிறகடித்துப் பறக்கக் காத்திருக்கும் கன்னி நிலங்களோ, வெற்று வெளிகளோ அல்ல. மெர்சோ செய்த கொலை அர்த்தமற்ற செயல் அல்ல, காலனித்துவச் சூழலில் வெள் ளையனின் ஒவ்வொரு செயலும் அவனை ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளனாகவே காட்டு கிறது. மெர்சோ செய்த கொலை வெள்ளைய னின் அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடே கொள்ளைநோய், அதற்கான சிகிச்சை - இவற்றைக் கொண்டு ஒரு தார்மீகப் பிரச்சி னையை காம்யு எழுப்புவதாக அவரது விசு வாசிகள் கூறலாம். ஆனால் காம்பு எழுப்பும்

பிரச்சினை மானுடகுலம் முழுவதற்கும் பொதுவான ஒரு தார்மீகப் பிரச்சனையல்ல. தனது செயல்களுக்கு பொறுப்பு ஏற்க விரும் பாது, தமது காலனித்துவ அரசியல் உருவாக் கிய நிர்பந்தங்களை தார்மீக நிர்பந்தங்களாக மட்டுமே காண முயற்சி செய்தவரின் பிரச் சினை மாத்திரமே இது.

ஒருவர் சொல்லாததைக் கொண்டு அவர் சொல்ல வந்ததை மதிப்பீடு செய்வது எந்த அள வுக்கு நியாயமானது என்ற கேள்வி எழலாம். ஆனால், பேச்சும் மெளனமும், ஒன்றை ஒன்று நிர்ணயிப்பதை நாம் காண வேண்டும். ஓரான் ஒரு அராபிய நகரம் என்று காம்யு சொல்லாததால் தான் அதனை ஒரு பிரெஞ்சு நகரம்ாக அவரால் காணமுடிகிறது. தனது அராபியக் கதாபாத்திரங்க ளுக்கு ஒரு பெயரைக்கூட காம்பு வழங்காததால் தான் அவர்களை பிறத்தியார்களாக, வெறும் உடல்களாக சித்தரிக்க முடிகிறது. அல்ஜீரியாவை பிரெஞ்சு காலனித்துவம் வலுக்கட்டாயமாக தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது என்ற வரலாற்று உண்மையை காம்யு வெளிப்படையா கச் சொல்லாததால்தான் அவரது கதைகளில் பொதிந்திருக்கும் இனவாத அரசியல், மனிதநேய மாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

காம்யுவின் படைப்புகளுக்கு புதிய அர்த்தங்களைக் கற்பித்து, அவரது எழுத்துக்களில் காணப்ப டும் இடைவெளிகளை நிரப்பிவிடலாம் என்ப தல்ல நாம் சொல்ல வருவது, காம்யுவின் மனித நேயம், அது சாத்தியப்படுத்திய கலை -இவற்றை ஏன் நாம் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காட் டவே நாம் இங்கு முயற்சி செய்துள்ளோம். ஐரோப்பா தனது மிகச் சமீபகால வரலாற்றை மறந்து, ஜனநாயகம், மனிதநேயம், சமத்துவம் முதலியவற்றின் இயல்பான உறைவிடமாகத் தன்னை பிரதிநிதித்துவம் செய்து வரும் ஒரு சூழ லில்,ஐரோப்பாவின் குற்றங்களை நாம் நினைவுப டுத்திக் கொள்வது அவசியமாகிறது.

காலச்சுவடு

295 ஆண்டுமலர் 1991

Monday, July 17, 2017

அலைகள் - சுந்தர ராமசாமி

auschwitz/


“A country is considered the more civilized the more the wisdom and efficiency of its laws hinder a weak man from becoming too weak or a powerful one too powerful.”


அலைகள் - 

சுந்தர ராமசாமி

அன்று இரவு என்னைக் கைதுசெய்துவிடுவார்கள் என்று என் பரிசயக்காரன் எதிர்பார்த்தான். என்னிடம் அவன்கொண்ட கவர்ச்சி - என் அனுமானம் தான் இது - மிகையான கற்பனையை விரிக்கிறதோ என்று நான் யோசித்தேன். இம்சையற்றுக் கடற் கரையில் திரியும் ஒரு பூச்சி கைதுசெய்யப்பட என்ன இருக்கிறது? "அப்படியல்ல" என்றான் அவன் மீண்டும். இது நடந்து மூன்று நாட்கள் (பின்னிரவும் சேர்த்தால் நான்கு) ஆகிவிட்டிருந் தன.

சரி. மறுபக்கம், எதுவும் நிகழக்கூடிய இருள் கவியும் நாட்கள் உருவாகி வருவதாயும் எனக்குப் பட்டுக்கொண்டிருந் தது. அதன் முதல் தாக்குதல்போல் மிகுந்த சங்கடத்தைத் தரும் அலைக்கழிப்பு நாட்களாகக் கழிந்துகொண்டிருந்தன. மனக் கஷ்டம் ஒருபுறமிருக்க சரீர உபாதைகள் - நாய் அலைச்சலும். பட்டினியும், உடம்பொடுக்கி உறக்கமும் - தாங்க முடியவில்லை. பாதங்களில் வீக்கம் கண்டிருந்தது. காலையில் வற்றி, மாலையில் மீண்டும் பொதியாய் வீங்கும். என் உடன்பாடோ, முன்னுணர்வோ இல்லாமல் திடும் திடுமென விரியும் மனக் காட்சி வேறு என்னைத் தொய்ய வைத்துக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று காட்சிகள் மாறி, மாறி, ஒரே விதமாய். சில சமயம், கோலத்தின் வரைகள் மிதிபட்டு அழிந்துபோய்ப் புள்ளிகளும் அரைகுறையாய் மிஞ்சிப்போன முளித்தனம் மனதில் விரியும். இதைத் தொடர்ந்து விவசாயிகள் ராப்பகல் பாடுபட்டு நிமிர்த்த பயிரை நடுநிசியில் பள்ளத்தாக்கிலிருந்து துஷ்டஐந்துக்கள் கூட்டம் கூட்டமாய் இறங்கி, மிதித்து துவம்சம் செய்துவிட்டு விடியக்கருக்கில் அமைதியாய்த் திரும்பும் காட்சிகளும் மனதில் விட்டுவிட்டுத் தோன்றும். இன்னபடி இது என்றில்லாமலும் இதற்காக இது என்றில்லாமலும் எதுவும் நிகழலாம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் உருக்கொள்ளும் அலங்கோலம் என்மீதும் கவியும் எனும் எளிமையான உண்மை அப் போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அலைகள் 471

அன்று நடுநிசி தாண்டியதும் நடக்கத் தொடங்கி வெயில் ஏறும்முன் அடுத்த ஊர் சேர்ந்துவிடவேண்டியது என்று எண்ணி யிருந்தேன். அதுதான் தப்பு என்று அடித்துச் சொன்னான் பரிசயக்காரன். 'பயணம் கிளம்புவது பற்றி முன்கூட்டி யாரிடமும் சொன்னதற்கு ருஜா இல்லையே' என்றான் அவன். 'கைதாவதிலிருந்து தப்பிக்க நழுவியதாகும்' என்றான். அவன் வாதம் எனக்கு உள்ளூர உறைக்கவில்லை என்றாலும் உதாசீனப்படுத்த முடியாத சுட்டல் இருப்பதாகப் பட்டது. அதிசய ருஜக்களும் தடயங்களும், சாட்சிகளும் நிரம்பிய உலகம் அதிகாரிகளுடையது. மன தின கோணங்கியைத் தருக்கத்தில் அளந்து காட்ட வேண் டிய நிர்ப்பந்தத்தில் தோல்வியே நிம்மதியாகிவிடும். தண்டனையும் ஆசுவாசமாகத் தெரியும். பயணம் புறப்படுவதைக் கைவிட் டேன். கைதாகக்கூடும் என்ற செய்தியே நடமாட்டத்தைக் கட் டுப்படுத்திவிட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறு ஒரு சூழ்நிலை உருவாகும் என இரண்டு தினங்களுக்கு முன் யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன். எல்லாவற்றையும் முழுகிவிட்டு அங்கு வந்திருந்தேன். தெரியாத ஊர்களில் மனம் போனபடி திரிந்து, சாவிடம் என்னை ஏற்றுக் கொள்ளும்படி அரற்றியபடி அலைந்துகொண்டிருந்தேன். நினை வுகளை என்னால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. என் மீது அவை கவிந்து பிடுங்காமல் தடுத்துக்கொள்ளவும் தெரியவில்லை. தூக்கம் தான் ஒரு இடைவெளியை - ஓய்வை - விடுதலையைத் தந்து கொண்டிருந்தது. என்றாலும் தூக்கத்தில் நினைவுகளின் பிடுங்கல் அற்ற விச்ராந்தி எனக்குத் தெரியாமல் கழிந்துபோய் மீண்டும் பிடுங்கல் ஆரம்பிக்கும்போது தான் கழிந்துபோனதே தெரிகிறது. உண்மையில் விச்ராந்தியை எனக்குச் சில கணங்களேனும் பிரக்ஞையுடன் சுவாசிக்க ஆசையாக இருந்தது. என்னதான் வேண்டித் தவம் கிடந்தாலும் அது எனக்கு லபிதமாகாது என்றும் பட்டது. மலபார் கோயில் பிரகாரத்தில் தற்செயலாய்ச் சந்தித்த ஆத்மஞானி சொன்னார். 'வேஷ்டியைக் காவியில் முக்கி எடுத்து விடலாம் கூடிணப்பொழுதில், கூடினப்பொழுதில், மனதை முக்க? பரமேச்வரா' என்று தன் இரு கரங்களையும் வானத்தை நோக்கி விரித்தார். மனதை வெகு நன்றாகக் காவியில் முக்கப் போகிறேன் என்று நம்பிக்கொண்டிருந்தபோது பதுங்கியிருந்து தாக்குவது மாதிரி இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வழக்கம்போல் அன்று சாயங்காலமும் மணல் மேட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். அது கடற்கரையின் ஊர் தாண்டிய பகுதி, கும்பலின் சலசலப்பு இராது. முன்னெல்லாம். சமீபமாக அந்த இடத்துக்கு சூரியனைப் பார்க்கத் தோது என்ற திடீர்________________




472 சுந்தர ராமசாமி

மவுஸ்" ஏற்பட்டுக் கூட்டத்தை ஆகர்ஷிக்க ஆரம்பித்திருந்தது. இப்போது அங்கும் கசகசவென்று கூட்டம். அன்று மேகம் குறைந்த வானம், வழக்கத்தைவிடவும் இருந்தாலும் நம்ப முடியாது. கடைசி நிமிஷத்தில் ஒரு துண்டு மேகம் புறப்பட்டு வந்து மறைத்துக்கொண்டு நிற்கும் சதிக்கு ஏவிவிட்டது போலிருக் கும். சில சமயம் குழந்தைகள் கைப்பொருளை மறைத்துக் கொள்வதுபோல் மேகத்தின் மறைவும் வெகுளித்தனமாகவும் அழகாகவும் இருக்கும். மறைக்கப்பட்டுத் தெரிவதும் சூரியனுக்கு அழகாகத்தான் இருந்தது. ஒரே விதமாய் இருதடவை இதுநாள் வரை சூரியன் அஸ்தமிக்கவில்லை என்பதை ஒரு வாக்கியமாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டேன். 

சூரியன் மறைந்தது. மறுகணம் கூட்டம் பிசுபிசுத்துக் கலைய ஆரம்பித்தது. சூரியன் அற்ற வானத்தைப் பார்ப்பது பாவம் என்பது போலவும், அடுத்து முக்கியமான வேலையைச் செய்து முடிக்கக் கணமும் பொறுக்க முடியாது என்பது போலவும் கூட்டம் பிசுபிசுக்க ஆரம்பித்தது. மணல் மேட்டின் கடல் நோக்கிய சரிவில் நான் இறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து பார்ப் பதற்குக் கும்பலின் அசைவு வேடிக்கையாக இருந்தது. ஒரு பெரிய மேடையில் அனைவரையும் திணித்து நிற்கவைத்துக் கயிற்றால் அதைக் கட்டியிழுப்பது போலிருந்தது. 

சூரியன் மறைந்த பின்பு கடற்கரையில் மிஞ்சியிருக்கும் வெளிச்சத்துக்கு ஆயுள் சொற்பம். கணத்துக்கு கணம் இருள் ஊடுரு விக் கறுத்துக்கொண்டிருக்கும்; வெளியிடமுடியாத பெரும் துக்கத் துக்கு ஆட்பட்டுக் கலங்கும். மானசீகமாக அந்த துக்கத்தில் பங் கெடுத்துக்கொண்டு நிற்பது எனக்குப் படிந்துப் போயிருந்தது. 

கடலின் ஆழத்திலிருந்து ராக்ஷஸத் தடி உருண்டைகளை மேல் உதைத்துத் தள்ளுவதுபோல் நீரோட்டம் திமிறியெழும். மேற்பரப்பு குலுங்கி அதிரும். காற்று பிடித்து உன்னியெழும் அலைகள் கரை நோக்கி வரும். சர்ப்ப வீரர்களின் குதிரைப்படை குதித்துக் குதித்து நம்மை நோக்கி நெருங்கும். பக்கவாட்டுகளி லிருந்து நாம் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நிமிஷத்தில் வேறு படைக்கலங்களின் நீள் வரிசை இணைந்து மேலும் கம்பீரம் பெற்றுக் குதித்து முன் நகர்ந்தோடிவரும். இவ்வாறான ஒரு ஆக் கிரமிப்புக்கு இந்த அசட்டு ஈரமணல்கரை எப்படிப் பதில் சொல் லப்போகிறது என்று நாம் யோசிக்கும் போது, கரையோரம் படைகள் சின்னாபின்னப்பட்டுச் சிதறிப் பின் திரும்பி ஓடும். இதை விட அழகானது எதுவுமில்லை; இந்த அலைகளை விட இவைக ளின் எழுச்சியும், ஆர்ப்பாட்டமான சொற்ப நேர வாழ்வும்,

அலைகள் 478

மண்டை மோதிச் சின்னாபின்னப்பட்டு உருத்தெரியாமல் வீழ்ச்சி அடைவதையும் விட, இன்ன உயரத்தில் எழுந்து ஆர்ப்பாட்டத் துடன் வரும் அலை, கரையில் இவ்வளவு தூரம் ஏறி ஈரம் பண் ணும் என்று கணக்குப் போட்டு எப்போதும் அதில் தோற்றுக் கொண்டிருப்பேன். இவ்வாறு மீண்டும் மீண்டும் தோற்பது மிகுந்த சந்தோஷத்தைத் தரும். 

அப்போது மணல்மேட்டிலிருந்து அதட்டல் கேட்டது. அடி வயிற்றை எக்கிக்கொண்டு கத்தினால் தான் இந்தக் காற்றில், இந்த அலை இரைச்சலில் இவ்வளவு சத்தத்தை வெளியே தள்ள முடியும். என் காதில் வார்த்தைகள் எதுவும் தெளிவாய் விழ வில்லை. என்னைப்போலவே ஈரமணலில் நின்றபடி பாதங்களைக் கடல் அலைகளில் நனைத்துக்கொண்டிருந்த புதுத் தம்பதிகள் அவசரமாய்த் திரும்பி மேலேறிச் சென்றனர். மீண்டும் சத்தம் கேட்டது. அப்பெண் தன் கையைக் கணவன் கையிலிருந்து விடுவித்து முன்னால் அசைத்து, 'உங்களைத்தான்' என்று காட்டினாள். திரும்பிப் பார்த்தேன். மணல் மேட்டில் காக்கி உடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் நாலைந்து பேர், 'கரை ஏறு, கரை ஏறு' என்று கத்தியபடி கைகளை மிதமிஞ்சிய வேகத்துடன் வீசிச் சைகை செய்தார்கள். அவர்களைப் பார்த்த போது எனக்கு உள்ளுறச் சிரிப்பு வந்தது. ஒரு நாட்டிய மேடை பின்னாலிருந்து எட்டிப் பார்க்கும் கோமாளிகள் போலவும், பள்ளிச் சிறுவர்களின் நாடகத்துக்கு, சிறுவர்களே சிப்பாய்கள் வேஷம் போட்டுக்கொண்டு நிற்பதுபோலவும், போலிஸ்கார மண் பொம்மை களுக்கு ஒருமணி நேரம் ஆயுள் கொடுத்ததில், நழுவி வந்து இங்கு நிற்பதுபோலவும் பலவாறாகத் தோன்ற ஆரம்பித்தது. 'ஏன் சிரிக்கிறே, கரையேறு' என்று ஒருவன் கத்தினான், கரையில் நிற்கும் நான், கரையேறுவது எப்படி என்று வேண்டு மென்றே மிகையாக விழித்துக்கொண்டு நின்றேன். அப்படி நின்று கொண்டிருந்தபோதே திடீரென்று என் மனதில் விசனம் கவிந்தது. முப்பது, முப்பந்தைந்து வருஷங்களுக்கு முன்னால் என் தாயார் என்னை முதன் முதலாவதாக இங்கு அழைத்து வந்ததும், கடல் ஏற்படுத்திய பயமும் திக்பிரமையும் அழுகையும் நினைவுக்கு வந்தன. பின்னர் இந்நாள் வரையிலும் எத்தனை யோ தடவை கடலோரம் நின்றதும் எதிர்பாராத வேளைகளில் அவை கீழே தள்ளியதும் நனைந்ததும் ஈரத்தில் ஒட்டிக்கொண்ட மணலைக் கையிலும் தொடையிலும் தட்டிக் கொண்டதும் நினைவுக்கு வந்தன. அன்றிலிருந்து இன்று வரையிலும் மானசீக உறவுகொண்டு என்னுடன் பிணைந்துபோய்விட்ட இந்தக் கடலுக்கு என் பாதத்தைத் தந்து நிற்கும் எளிமையான________________

47. சுந்தர ராமசாமி

சந்தோஷம்கூட. சட்டை போட்டிராத என் முதுகில் ஒரு குத்தலை உணரவே திரும்பிப் பார்த்தேன். காக்கி உடை அணிந்த சேவகன் ஒருவன் கைத்தடியுடன் நின்றுகொண்டிருந்தான். "ஏன் குத்தினாய்?" என்று எனக்குக் கேட்கத் தெரிவதற்குள் 'காது மந்தமா?' என்று அவன் கேட்டான்.

'இல்லை' என்றேன். இந்த நேர் பதில் அவன் மண்டையில் ரத்தத்தை ஏற்றியது, அவன் முகத்தில் தெரிந்தது. மற்ற சேவகர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் பயப்பட மறுத்துக்கொண்டு நின் றதில் மிகுந்த கஷ்டம் அடைந்த அத்தனைபேரும் இமைக்காமல் என்னையே விழித்துக் கோபத்தை வெளியே தள்ளிக்கொண்டிருந் தனர். இன்னும் ஐந்தாறு நிமிஷங்களுக்குள் பொழுது தீர்ந்து அவர்கள் மீண்டும் மண் பொம்மைகள் ஆகிவிடுவார்கள் என்ற கற்பனை மனதில் விரியவே என் முகத்தில் சிரிப்பின் குறிகள் படர்ந்தன. 

என் எதிரே நின்ற சேவகன் தலையை உயர்த்தி இரு கை விரல்களையும் வாயோரம் குவித்துக்கொண்டு, மணல் (மேட்டைப் பார்த்து, “கரையேற மறுக்கிறான்' என்று கத்தினான். 

அதிகாரிகள் மணலில் இறங்கிவர ஆரம்பித்தார்கள். அழகான பூட்ஸ் தடங்களைப் பின்னால் தள்ளிக்கொண்டு, அவசரத் தின் தள்ளாட்டத்துடன் மணல் சரிவில் வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எத்தனைபேர் என்பது இப்போது நினைவில்லை. நாலு பேருக்கு மேல் என்று ஒரு சித்திர உணர்வு இருக்கிறது. அவர்களில் தலைமை அதிகாரி சற்று ஸ்தூலமாகத் தள்ளாடும் உடலு டன் இருந்தார். அவருடைய தொப்பி வித்தியாசமாக இருந்தது. கைகளையும் கைத்தடியையும் அதிகமாக அசைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் உடலைத் தூக்கி நாட்டி வந்துகொண்டிருந் தார். அவர் அதிகமும் நாற்காலியில் புதைந்து, மின் விசிறி நின்றால் தவித்து, சிவப்பு மையால் தாளில் வெட்டியும், சுழித்தும், போனில் கத்தியும் தன்பதவிக்கு ஈடுகொடுத்துக் கொண் டிருப்பவர் என்பதும், மிகவும் விசேஷமான காரணத்தை முன் னிட்டே இன்று கிளம்பியிருக்கிறார் என்றும் தோன்றிற்று. 

சற்று தூரத்தில் நின்றவாறே என்னைப் பார்த்து இவர் 'என்ன? .என்ன?.என்ன..?' என்று கத்தினார். ஒவ்வொரு "என்ன'வுக்கும் முன்னதைவிடக் குரலை உயர்த்திச் சிப்பாய்கள் விறைப்புற்று என் முகத்தைப் பார்த்தபடி நின்றனர். என் பதிலுக்குப் பின் அதிகாரி பிறப்பிக்கக்கூடிய ஆணையை நொடிப் பொழுதில் நிறைவேற்றத் துடிப்பது அவர்களுடைய விறைப்பில் வெளிப்பட்டது,

 'ஒன்றுமில்லை' என்றேன்.

 'பின ஏன் கரையேற மறுப்பது?" 

"கொஞ்சம் நிற்க ஆசை."

 'பிடித்துத் தள்ளு அவனை' என்று அதிகாரி கத்தினார். சேவகர்கள் என்னை விரைந்து சூழ்ந்து குண்டுக்கட்டாகத் தூக்கி பத்துப் பதினைந்து அடிகள் மணல் மீது ஏறி மண்ணில் தொப்பென்று போட்டார்கள். 

நான் எழுந்திருந்து கைகளிலும் வலது கன்னத்திலும் காதி லும் படிந்திருந்த மணலைத் தட்டியவாறு மணல்மேட்டைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன். சொரணை கெட்டத்தனம் என் உடம்பிலிருந்து வழியும்படி மிகவும் சாவதானமாக அசைந்தேன். பின், வானத்தைப் பார்த்து, வியப்பதுபோல் பாவித்து, சிப்பாயகள் பக்கம் திரும்பி, "என்ன அற்புதமான நிலா'' என்றேன். ஒரு அதிகாரி ஓடி வந்து என் முதுகில் ஓங்கி குத்தினார். 'கொல்லு அவனை' என்று ஆங்கிலத்தில் மற்றொரு அதிகாரி கத்தினார். 

மணல்மேடு தாண்டி, கடற்கரை தார் பேட்டை அடைந்த போது அந்த இடம் சற்று முன் காட்சியளித்ததற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாததுபோல் இருந்தது. நாடகத்தின் புதிய காட்சி யில், பின்திரை ஜோடனை, பாத்திரங்கள் எல்லாம் மாறியது போலவும், களேபரமாகவும் இருந்தது. ஆங்காங்கு பல சேவகர்கள் காக்கி உடையணிந்து குண்டாந்தடியுடன் நின்று கொண்டிருந்த னர். கார்களும், ஜிப்புகளும், கண்ணாடி ஜன்னல்களுக்குப் பட்டுத் திரை போட்டிருந்த உயர் அதிகாரிகளின் வாகனங்களும் நின்று கொண்டிருந்தன. இரண்டு நிமிஷங்களுக்கு ஒன்று என்று நினைக் கும்படி ஜீப்புகள் அதிவேகமாய்ப் பாய்ந்து வந்து, சர்ரென்று தூசி கிளப்பி ஒரம் கட்டி நிற்கவும், நின்று முடிப்பதற்கு முன்னரே பின்பக்கம் வழியாக அதிகாரிகள் மாறி மாறிக் குதித்து, குதித்த இடத்தில் விரைப்புற்று சல்யூட் செய்தார்கள். எல்லாம் வேறு யாராலோ இயக்கப்படும் எந்திர பொம்மைகளின் இயக்கம் போலவே பட்டது. சுமார் நாற்பது வயது மதிக்கத்தகுந்த ஒரு அதி காரி மிக உயரமாக நின்று - மிகப் பெரிய புராதன முன் முகப்புக் கொண்ட ஓட்டலின் முன் பக்கப் பாதை தார்ரோட்டில் இணையும் இடம் அது - சிப்பாய்களின் வனக்கங்களை மிகுந்த நோரணை யோடு பெற்றுக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வேறு அதிகாரி களும் நின்று கொண்டிருந்தனர். ஏதோ விதமான ஒழுங்கு முறை யில் சிப்பாய்கள் இடம்மாறித் தங்களுக்குரிய ஸ்தானங்களைப் பிடித் துக்கொண்டிருந்தனர். அவர்களுடை மனக் கணக்கின் கூறுஎன்ன என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. இருந் தாலும் ஒவ்வொருவருடைய மனசிலும் இருந்த வரைபடததுக்கு அனுசரணையாக இயங்கியதால்தான் இத்தனை - விரைவாகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் ஒழுங்காவது சாத்தியமாயிற்று என்பது தெரிந்தது. ஒரு உயர்மட்ட அதிகாரியின் வருகைக்கு எல்லோரும் ஆயத்தம் கொள்ளுவதாய் பட்டது. ஏனெனில் 6T6) லோருடைய பார்வையும் மணல்மேட்டில் எதிர்பார்க்கும் தனமை யுடன் குத்திட்டு நின்றது. விறைப்பும், நிசப்தமும் கூடி நிலைத் ததில் சிறு சத்தமும்கூட பெரிய அபஸ்வரமாய் முனைக்க ஆரம்பித்தது. பூட்ஸின் அடியில் மணல் நெரியும் ஓசைகூட நின்று விட்டது. இனிமேல் யாராலும் தங்களுடைய தொண்டையை கனைத்துக்கொள்ளவோ, வசக்கேடாய் ஊன்றப்பட்டுவிட்ட பாதத் தைச் சரிசெய்துகொள்ளவோ முடியாது. அப்படிச் செய்யத் தேவை புள்ளவர்கள் இரண்டு மூன்று நிமிஷங்களுக்கு முன்னாலேயே அதைச் செய்து முடித்திருக்க வேண்டும். இல்லாத வரையிலும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். 

இப்போது மணல்மேட்டிலிருந்து ஒரு சிறு கூட்டம் முன்னால் நகர்ந்து வருவது தெரிந்தது. முதலில் தலைகள் மேலெ ழுந்து பின்னால் முழு ஆகிருதிகளும் தெரிய ஆரம்பித்தன. ஏழெட்டு பேர் வடிவமற்ற ஒரு ஒத்திசைவோடு அழகாக, வேக மாக, தங்கள் உடல் பாரங்களைக் காற்றின் மீது நகர்த்திவிட்டது போல் ஆயாசமற்று வந்துகொண்டிருந்தார்கள். நடுநாயகமாக வந்துகொண்டிருந்தவர்தான் உயர்மட்ட அதிகாரி என்பது வெகு சுலபமாகத் தெரிந்தது. ஒரு பெரிய நடிகன்போல் மிகவும் வசீ கரமாக இருந்தார் அவர். படிப்பாளியின் களையை வெளியே தள்ளும் மூக்குக்கண்ணாடி. அடர்த்தியான கேசம். வெள்ளை வெளிரென்று மிக மெல்லிய ஆடைகள். சிறு வயதிலேயே உயர் மட்டப் பதவியில் நேராக ஏறி விட்டதாலோ என்னவோ முகத் தில் பெருமிதம் வழிந்துகொண்டிருந்தது. இச்சிறு கூட்டம் நெருங்க நெருங்க காத்துக்கொண்டிருந்த சிப்பாய்கள் மேலும் விறைப்புற்று, முறுக்கேற்றும் நரம்புகள் அறுபட்டுத் தெறித்து விடும் என நம் மனம் பயந்து துடிக்கும் நிமிஷத்தில் பட்டென பூட்ஸ் காலால் தட்டி சல்யூட் அடித்தனர். ஆக்ஞைகோஷம் அடங்கிப்போன பின்பும் வெகுநேரம் ரீங்கரித்துக் கொண்டிருந் தது. இந்த ஒசையின் முரட்டு ஒலியிலும் பூட்ஸ" ஒசையிலும் மரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் மேலெழுந்து பறந்ததுபோல் கற்பனைக் காட்சி என் மனதில் எழுந்தது. உண்மையில் அங்கு மரங்களும் இல்லை; பட்சிகளும் இல்லை. 

அப்போது கடலோரத்திலிருந்து என்னை விரட்டிய அதி

477

அலைகள்

காரி, பாதையோரம் நின்றுகொண்டிருந்த பெரிய அதிகாரியிடம் சென்று என்னைக் காட்டி ஏதோ சொன்னார். பெரிய அதிகாரி
என்னை கை காட்டி அழைக்கவும், அருகே சென்றேன். 

'இப்போது போனவர்தான் எங்கள் துறையிலேயே உயர்ந்த பதவியில் இருப்பவர். பெரிய மேதை' என்றார். 

'சந்தோஷம்' என்றேன். ஒரு அசட்டு வார்த்தை உச் சரிக்கப்பட்டதில் நாணம் ஏற்பட்டது. 

தன் கீழ் அதிகாரிகள் அவர்களுடைய விவேகக்குறைவால் எனக்கும் அவர்களுக்குமான உறவை சிடுக்காக்கி வைத்திருப்பவர் கள் என்ற முன்தீர்மானமும், பக்குவமாக அணுகினால் அநேக முடிச்சுக்களை அவிழ்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அவருடைய பீடிகையில் வெளிப்பட்டன. 

'ஒரு வாரம் முன்னால் ஒரு பெண்ணை கடல் கொண்டு போய் விட்டது. மேலதிகாரி வந்திருக்கும் வேளையில் அனர்த்தம் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காகத்தான்.”

 நான் எதுவும் பேசவில்லை.

 “உங்கள் நடவடிக்கைக்கு வருந்துகிறீர்கள் அல்லவா? அதுதான் விஷயம். எனக்குப் பெரிசுபடுத்துவது பிடிக்காது.' 

நான் பதில் சொல்லவில்லை. 

“எங்களிடம் மன்னிப்புக் கேட்பது அவமானமல்ல. சட்டத்துக்குத் தலைவணங்கும் பெருமிதமான விஷயம் அது.' 

நான் கல்தூண் மாதிரி நின்று கொண்டிருந்தேன், 'நான் கணித்ததுபோல் நீர் எளிமையான மனிதர் அல்ல." அவருடைய குரலும் முகபாவமும் மாறிற்று. 

ஒரு சிப்பாய் இரண்டு அடி முன் நகர்ந்து விறைப்புற்று, சல்யூட் அடித்து, பூட்ஸாகால் தட்டி ஓசையெழுப்பி மேலும் விறைப் புற்றான். முகத்தைப் பார்த்தபோது அவன் உறைந்துபோய்விட் டான் என்றும், மீண்டும் உயிர்க் களை ஏற்படுத்துவது சாத்திய மில்லை என்றும் தோன்றிற்று. 

முகத்தை மேலே அசைத்துக் கேள்விகுறி எழுப்பினார் அதிகாரி.

 'நேற்று இவர் என்னை எதிர்த்துப் பேசினார். நீச்சலடித்து மரணப்பாறைக்குச் சென்றதைக் கண்டித்ததற்கு கேலி செய்தார்.'

 “ “உண்மையாகas?”

 ” 'உண்மைதான். சிரித்துவிடக்கூடிய வார்த்தைகள் தான், நகைச்சுவை உணர்ச்சி இருந்தால்.'

 'எங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி இல்லை என்கிறீர் J56ፐበr?” ”

________________




SS

சுந்தர ராமசாமி 478

Ü6)6). h 9, sulii ܼ ܥ . 'பொதுப்படையாக ೧॰: : நீங்கள் - அதாவது உங்கள் து?" ந்திரம் இலை கள் மெய்யாகவே உங்களுக்கு அதற்கான சுதநத s யா? சிரிப்பும் கட்டுப்பாடும் எககாலத்தில் ஜீவிக்க இயலாது என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? 

மரணப் பாறைக்கு ஏன் சென்றீர்க '

சங்கிலித்துறையில் குளித்துக்கொண்டிருந்தேன். மரணப் பாறையின் மறுபக்கம் பள்ளத்தாக்கு போலிருக்கும். நணபன சொல்லியிருந்தான். அங்கு அலைக9' சுழிப்புகளும் பாறை மேலிருந்து வழியும் நீரின் அழகு, பாறையின் இடுக்குகளில் அவை நிகழ்த்தும் ஜாலங்கள் - சொல்லமுடியாது. அறபுதம. இனம் கூற முடியாத துக்கம் மனதில் வியாபித்து, TLD பொருட்படுத்துவ தெல்லாம் அற்பம் என்ற எண்ணம் ஏற்பட்டு, மாசு மறுவறற ஆகா சம் மனவெளியில் விரிந்துவிடும். ரொம்பவும் லேசாக இருக்கும். பாறை இடுக்கில் முளைத்திருக்கும் சிறு தாவரங்களைக் குனிந்து முத்தமிடத் தோன்றும்.' 

"அது தடை செய்யப்பட்ட இடம் என்பது தெரியுமா?’’ 

"தெரியாது.'

 'தடுத்தபின்?" 

'வெறும் கெடுபிடி என்று எடுத்துக்கொண்டேன். கடலில் நீச்சலடிப்பதைச் சட்டம் தடுக்குமா?"

 அதிகாரி என் முகத்தையே வெறிக்க, அந்த நிமிஷங்கள் எல்லோருடைய நெஞ்சிலும் கனத்துக்கொண்டிருந்தது. 

'போங்கள், இந்த இடத்தைவிட்டு' என்று அதிகாரி ஆங்கிலத்தில் கத்தினார். 

நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 

பரிசயக்காரனின் சந்தேகம் என நினைக்கும்படியான காரியங்கள் அன்று அதிகாலையிலிருந்தே தொடங்கியிருந்தன. அவ் வப்போது யாராவது வந்து என்ன ஏது என்று என்னிடம் விசா ரித்துக் கொண்டிருந்தார்கள். ஏன் எதற்கு என்று கேட்டார்கள். அவர்களுக்கு அர்த்தமாகிற மாதிரி என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எல்லாம் யாரோ ஏவிவிட்ட மாதிரிப்பட்டது. வெறும் பிரமைகள் தானோ என்றும் சந்தேகப்பட்டுக் கொண்டேன். 

மத்தியானச் சூடு தணிந்து கொண்டிருந்தது. சங்கிலித் துறை மண்டபத்தில் படுத்தபடி கடலைக் கவனித்துக்கொண்டிருந் தேன். கடல் தூங்குவது மாதிரியும், விழிப்புற்றுச் சோம்பல்பட்டு காலை அசைத்தபடி படுத்துக் கிடப்பது மாதிரியும் தோன்றிக் கொண்டிருந்தது. படியோரம் பதுங்கியிருந்தவன் நிமிர்ந்த மாதிரி

அலைகள் 479. 

ஒரு சேவகன் தோன்றிக் கைத்தடியினால் கல்படியில் தட்டினான், அந்த உயர் அதிகாரி என்னைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவன் மணல்மேட்டில் தீர்க்கதரிசிபோல், காற்றில் மிதந்தபடி, ஆடைகள் பறக்க, முகத்தில் பிரகாசத்துடன் நகர்ந்து வந்த உருவம் என் மனதில் விரிந்தது. அவரை மீண்டும் சந்திக்கப்போகிறோம் என்பதில் சந்தோஷம் ஏற்புட்டது. ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுக்கொண்டேன். மன அமைதியைக் கெடுப்பதற்கான சமாசாரம் தயாரிக்கப்பட்டு வருவதாகத தோன்றிற்று. 

என்னைக் கண்டதும் உறைந்து போயிருந்த பெரிய அதிகாரியின் முகம் விளக்கை தூண்டியது போல் பிரகாசப்பட்டது. அவரு டைய பற்களிலிருந்த ஒரு வெளிர்த்தன்மை முகம் எங்கும் பரவுவ தாகத் தோன்றிற்று. அறையின் பின் வாசலில் நின்று கொண்டிருந்த பட்லரை அவர் பார்த்ததும் அவன் மறைந்து, தேநீர் கோப் பையுடன் தோன்றி என் முன் வைத்தான்.

 'சாப்பிடுங்கள்' என்றார் அதிகாரி என்னைப்பார்த்து. 'நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள்? ரொம்பவும் ரசமாய் இருக்கி றது' என்று எதிரே அமர்ந்திருந்த சந்நியாசியிடம் சொன்னார். 

அதிகாரியால் மனம் நிறைந்து பாராட்டப்பட்டதில் எங்கு நிறுத்தினோம் என்பதை மறந்து தத்தளித்துக் கொண்டிருந்தார் சந்நியாசி. தலை ஒட்டச் சிரைக்கப்பட்டிருந்தது. அநேகமாக முந்தினநாள். சிறுபிராயம்தான். சிவப்பாகவும், அழகாகவும், பொம்மைத்தனத்துடனும்-அந்த தளதளப்பான உப்பிய கன்னங் கள்-இருந்தார். இடது கண்மணி சொல்லுக்கு நகர்ந்திருந்தது அசட்டுத்தனத்தை-முக்கியமாக, தன்முன் சொல்லப்படுவதைக் கிரகித்துக் கொள்ளமுடியாத மந்தத்தை-அவருக்கு அளித்துக் கொண்டிருந்தது. 

"ஸ்வாமிஜி இங்கு வந்து சேர்ந்ததைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.' என்று அடியெடுத்துக் கொடுத்தார் அதிகாரி. 

"ஆமாம் ஆமாம்' என்று தலையை அதிகமாக அசைத்த படி உற்சாகமாய் ஆரம்பித்தார் சந்நியாசி. "எனக்கு வருஷம் ஞாபகமில்லை, அப்போது அவருக்கு என்ன வயசு இருக்கும். 25? 26? சின்ன வயசு, கால் நடையாகவே. இந்தியா பூராவும். கிடைத்த இடத்தில் படுக்கை, கிடைத்த ஆகாரம் . பிச்சை எடுத்து அலைச்சல், ஊர் ஊராய் அலைச்சல். ஒரே அலைச்ல்,...?' ‘

'எத்தனை உருக்கமான விஷயம்" என்றார் அதிகாரி,

 "எத்தனை நாட்கள் இங்கு தங்கினார். எங்கு யாருடன்,________________




{ՏՍ சுந்தர ராமசாமி

எப்படி. ஒன்றும் தெரியவில்லை. பாறையில் தியானம் மூணு நாள் இல்லை. இரண்டு நாள். இரவு பகல் அன்ன ஆகாரமில் se tursů, stůuhů surs tř syšss? தோணியிலே - ஒரு கட்சி. இல்லை: நீச்சலடித்துத்தான் - இன்னொரு கட்சி.' 

'இல்லை இல்லை. நீச்சலடித்துத்தான் போனார். நீச்ச லடித்துத்தான் போனார்." என்று உற்சாகமாக பெரிய குரலில் முஷ்டியை மேஜை மீது குத்திக்கொண்டே சொன்னார் அதிகாரி. "நான் படித்திருக்கிறேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது' என்று கத்தினார். 

அதிகாரி படித்திருக்கும் செய்தியில் மிகுந்த ஆச்சரியம் அடைந்த சந்நியாசி, 'அப்படியா படித்திருக்கிறீர்கள்? அப்படியா? அப்படியென்றால் சரி, நீச்சலடித்துத்தான் போயிருக்கிறார்" என்றார். 'என்ன தைரியம், என்ன சாகசம்.'

 நிசப்தமாகியதில் அறையின் சூழ்நிலை கனத்துக் கொண் டிருந்தது. அதிகாரி தொண்டையைக் கனைத்துக்கொண்டே என் பக்கம் திரும்பினார். 

"தங்களைப் பார்த்தால் படித்தவர் மாதிரி தெரிகிறது. எதற்கு அதிகாரிகளுடன் அவசியமில்லாத மோதல்..?" 

"மோதவில்லை' என்றேன். 

அதிகாரி சாமியாரைப் பார்த்து, விரலை என் எதிராக சுட்டிக் கொண்டே, "மரணப் பாறைக்கு நீச்சலடித்துப் போயிருக்கிறார். நம் ஆட்கள் தடுத்ததற்கு எதிர்த்துப் பேசியிருக்கிறார்' என்றார்.

 "மரணப் பாறைக்கு நீச்சலடித்துச் சென்றார்" என்று பிர கடனம்போல் சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தார் சந்நியாசி. அதிகாரியும் சிரித்துக்கொண்டார். திடீரென்று, நான் சற்றும் எதிர்பாராத ஒரு நிமிஷத்தில் சந்நியாசியின் முகம் அதிகாரியின் முகம்போல் மாறி கடுகடுப்படைந்து சிவந்தது. 

"அது சரியில்லை. சரியே இல்லை" என்று சந்நியாசி ஆங்கிலத்தில் சொன்னார். அவர் தன் குரலில் அவசியமற்ற வலு ஏற்றுவதுபோல் இருந்தது. பின் குரலைத் தணித்துக்கொண்டு கண்டிப்புக்காட்டும் தன்மையுடன், "சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்ற நீங்கள் ஒத்துழைத்திருக்கவேண்டும். அது தான் உங்களிடம் எதிர்பார்த்திருக்கக்கூடியது.'

 'எனக்கு நம்பிக்கை இல்லை." '

எதில்?'

 'உங்கள் சட்டத்தில் . உங்கள் ஒழுங்குகளில்."

"சரி, உங்கள் நம்பிக்கைதான் என்ன? அவரவர் விருப்பம்

அலைகள் 1s1

போல் அவரவர் நடந்துகொள்ளும்.'

 'தயவு செய்து என்னை எதுவும் கேட்காதீர். நான் ஒரு குழப்பம். எனக்கு எதுவும் தெளிவில்லை. உங்கள் இருவருக் கும் வெவ்வேறு மட்டத்தில் அது சரி இது தப்பு, இது சரி அது தப்பு என்பது தெரிந்திருக்கிறது. ரொம்பவும் தெளிவாக இருக்கிறீர்கள் உங்கள் தெளிவு ரொம்பவும் ஆபாசமாக இருக்கிறது. எப்படிச் சந்தேகமில்லாமல், தெளிவாய் கூச்சமில்லாமல் பேச முடிகிறது.' 

'நீங்கள் மிதமிஞ்சிப் பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது" என்றார் அதிகாரி. "தனக்குத்தான் எதுவும் தெரியும் என்ற அகந்தையுடன் பேசுவதாகப் படுகிறது.'

 'இல்லை எனக்கு அகந்தையில்லை.நான் வெறும் ஒட்டை, சூன்யம். தக்கவைத்துக்கொள்ள என்னிடம் எதுவும் இல்லை. என் வழியாக எல்லாம் வெளியே ஒழுகிக்கொண்டிருக்கிறது. என்னை அலைய விடுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள், தயவு செய்து. தயவு செய்து.' நான் மிகப்பெரிய குரலில் கத்த ஆரம்பித்தேன்.

 "இவர் மனநிலை சரியில்லை' என்றார் சந்நியாசி,

 'இவரை வைத்திய சோதனைக்கு அனுப்பவேண்டும்.' 

‘'வேண்டாம் வேண்டாம்' என்று கத்தினேன் நான். "அலைவது ஒன்றுதான் எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது. அதையும் இல்லாமல் ஆக்கிவிடாதீர்கள்.' 

'உங்களை நான் கைது செய்திருக்கிறேன்" என்றார் அதிகாரி. மேஜை மணியின் பித்தானை அவர் கட்டைவிரல் அழுத்திற்று. 

Ο கொல்லிப்பாவை 1976 

Tuesday, July 11, 2017

மெகெல்லனின் இதயம் (1519) - பாப்லோ நெருடா, போர்க்கருவியாலைத் தொழிலாளி - கரோல் வத்ஜேலா

________________

padippakam
மெகெல்லனின் இதயம் (1519)
பாப்லோ நெருடா

தமிழாக்கம் பிரமிள், ஸி.ஏ. கார்த்திகேயா

|கடல் வழியாக முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த ஐரோப்பியன் மெகெல்லன்; 1519-ல் தென்னமெரிக்காவின் தென் முனையில் உள்ள ஜலசந்தி (நீரிணை)யினுடே பயணிக் கிறான். அது இன்று மெகெல்லன் ஜலசந்தி என்று அழைக் கப்படுகிறது. -மொ. பெ.)

நான் எங்கிருந்து வருகிறேன்?
எந்த டெவில் இடத்திலிருந்து?
இப்படிக் கேள்விகளைச் சிலவேளை நான்
என்னிடமே கேட்டுக் கொள்கிறேன்.
இது என்ன கிழமை?
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எனக்குக் குறட்டை வருகிறது.
பாதிக் கனவில் ஒரு மரம், ஒர் இரவு
ஒரு கண் இமைபோல் எழும் ஒர் அலை
அலையிலிருந்து பிறக்கும் ஒரு நாளின் விடிவு.
புலி முகமாய்ச் சீறும் ஒரு மின்னல் பிழம்பு.

ஓரிரவு, தொலை தூரத்துப் பகல்
என்னிடம் வந்து வினாவிற்று:
கேட்கிறதா உனக்கு மெல்லென்ற நீரின் ஒசை,
(ஆர்ஜன்டைனாவின்) பெடகோனியப் பிராந்தியத்தின் மீது
அந்ந நீர் மோதும் மெல்லோசை?
ஆம் ஐயா, என்றேன்,
கவனித்துக் கொண்டு தானிருக்கிறேன்.
பகல் கூறிற்று :
ஒரு காட்டு ஆடு
இப்பிராந்தியத்தில் ஒரு கல்லில் உறைந்த வர்ணத்தை நக்குகிறது.
 அது கத்துவதை நீ கேட்கவில்லையா?
அதை அறிய உன்னால் முடியவில்லையா?
அந்த மழைக் காற்றின் நீலமயமான  கைகளில்
கைப்பிடியில்லாத நிலவுக்கிண்ணம்
கால் நடைக்கூட்டம் ஓன்று
நகர்வதை நீ பார்க்கவில்லையா?
காற்றின் துவேஷமிக்க விரல்
தனது வெற்று வளையத்தால்
அலையும் வாழ்வையும் தொடுகிறது.

நான் போகுமிடமெங்கும்
தொடர்ந்து வந்தது அந்த நீண்ட இரவு.
மூச்சுத் திணற வைக்கும்படி
கவிழ்ந்து சொரியும் அமிலம் அது.
களைப்புற்ற என் வாழ்வு முழுவதையும் ஒப்பித்து அழுதது
என் கதவின் முன் ஒரு பனித்துளி.
தொள தொளப்பான தனது
உடையைக் காண்பித்தது அது.
வால் நட்சத்திரம் ஒன்று என்னைத் தேடிக் கேவியது.
திடீர் காற்றை எவரும் கவனிக்கவில்லை, - -
அதன் விரிவை, ஊளையை.
அதை நான் அணுகிக் கூறினேன் :
போவோம் நாம்-
நான் தென் திசையைத் தீண்டியவன்.
மணலினுள்ளே பாய்ந்து காய்ந்த கறுப்பான செடியின்
வேரையும் பாறையையும்
பார்வைக்குக் கொண்டு வருவதற்காக
அந்தத் தீவு,
நீரினாலும் வானத்தினாலும் துண்டாடப்பட்டது.
பசித்த ஆறு, சாம்பலின் இதயம்,
சோகமான கடலின் வழி, தனித்த பாம்பு சீறிடும் இடம்,
மரணக் காயம் பட்ட குள்ளநரி - -
தனது குரூரமான புதையலை மறைக்கக் குழிபறிக்கும் இடம்...

புயலையும் திடீரென உடைபட்ட
அதன் குரலையும் நான் சந்தித்தவன்.
ஒரு பழைய புத்தகத்திலிருந்து எழுந்த அதன் குரல்,
நூறு உதடுகள் கொண்ட வாய் மூலம்
ஏதோ ஒன்றை எனக்குச் சொல்கிறது.
தினமும் காற்றினால் விரைவாக
விழுங்கப் படுகிற ஏதோ ஒன்றை.

கப்பலுக்கு என்னவாயிற்று என்று
கடல் நீருக்கு ஞாபகமிருக்கிறது.
கடலோடிகளின் மண்டையோடுகளை ஆதரிக்கிறது.
கடினமான அந்நிய பூமி.
வேட்டைக்கு ஒலிக்கும் எக்காளாமாய்
அந்த பூமி தெற்கின் பீதியை எதிரொலிக்கிறது.
மனிதக் கண்களினதும் காளைக் கண்களினதும்
பள்ளங்களை அது பகலுக்குக் கடனளிக்கிறது.
அவற்றின் வளையம்.
சமாதானப் படுத்த முடியாத
அவற்றின் விழிப்பு நிலையில் எழும் ஒலி...
பழைய வானம் கப்பலை எதிர்ப்பார்த்திருக்கிறது.
தப்பித்தவர்கள் ஒருவருமில்லை.
சிதைந்த கப்பல்
கடலோடிகளின் சாம்பலுடன் வாழ்கிறது.
தங்க-தொழுவமான தோல் வீடுகள்...
கோதுமையோடு கொள்ளை நோய்.
நீண்ட பயணங்களின் பனிக்குளிர்ப் பிழம்பு.
(சுருக்கமான தமிழக்கம்)


(கடல் வழியாக முதல் முதலில் உலகைச் சுற்றி  வந்த ஐே - மெகெல்லன்) 1519-ல் தென்னமெரிக்காவின் தென் முனையில் உள்ள ஜலசந்தி (நீரிணை) யினூடே பயணிக்கிறான். அது இன்று மெகெல்லன்  ஜலசந்தி என்று அழைக்கப்படுகிறது)

 PABLO NERUDA (1904-73), “THE MAGELLAN HEART(1579) இணைமொழிபெயர்ப்பாளர்.சி.ஏ.கார்த்திகேயன்
----------------------------------------------------------------------------------------

போலிஷ்மொழி கவிதை :
கரோல் வத்ஜேலா
போர்க்கருவியாலைத் தொழிலாளி
தமிழாக்கம் பிரமிள்

உலகின் விதியை நிர்ணயிக்க
உன்னால் முடியாது.
யுத்தங்களை ஆரம்பித்து வைப்பவன்
நானல்ல.
போர் வேண்டுமா சமாதானமா?
இதற்குப் பதில் எனக்குத் தெரியாது.
ஏனக்கு இல்லாதது செல்வாக்கு
இதுவே என் கவலை
யுத்தங்களைப் பொறுத்தவரை
பாபி நானல்ல.
நான் திருகாணிகளைத் திருகிவிடுகிறவன்
அழிவின் ஆரம்பப்பகுதிகளை
உருக்காலையில் தட்டி விடுகிறவன்.
அவற்றின் முழுமையோ
மனித ஜீவனின் கோளாறோ
என் அறிவால் எட்ட முடியாதது
பேச்சின் பொய்மைக்கும்
செய்கையின் தேய்வுக்கும்
அப்பாற்பட்ட, பரிசுத்தமான
பேரியக்கம் ஒன்றனுள்தான்
எனது இயக்கம் இடம்பெற முடியும்.
(அதில் அடங்காத இயக்கமும்
இருந்து விடக் கூடுமோ?)
என் சிருஷ்டி முழுவதுமே
தவறான தெனினும்
உலகின் தவறுக்கு நானல்ல
சிருஷ்டி கர்த்தா.


(போப் இரண்டாம் ஜான் பால் போலந்தின் கிரக்கோ நகரில் இளம் பிஷப்பாக இருந்தபோது எழுதிய போலிஷ் மொழிக் கவிதைகளுள்
ஒன்று.) KAROL WOJTYLA (1950-66),
The Armaments Factory Workers.


.......