Pages

Sunday, August 27, 2017

இந்தியக் கலைமரபும் ஹிட்லரிசமும். and சநாதனமும் புரட்சியும் - பிரமிள்




பச்சை மரத்தின் தாவரச் சதை மீது மட்டுமல்ல, எல்லாவிதமான பிரிவினைகளையும் பரிகசிக்கும் பசுமை செறிந்த அபூர்விகளின் மானுடச் சதை மீதும் பாய்கிறது கோடரி.


- பிரமிள்

https://www.facebook.com/vairamuthu.mech/posts/1325099014196502

இந்தியக் கலைமரபும் ஹிட்லரிசமும்.- பிரமிள்
_______________________________________

கலைஉணர்விற்கும் மனிதகுணத்திற்க்குமிடையே உள்ள தொடர்புகளை, எளிமைப்படுத்திவிட முடியாது. ஏனெனில், கலைஉணர்வு – மனசின் சில விசேஷ உணர்வுகளை மட்டும் கூர்மையாக்குவதன் மூலம் – ஒரு மேல்தோல் பயிற்ச்சியளவிலேயே சித்திக்கக்கூடியது. இந்தப் புறச்சித்திக்கும், அகதர்சனத்தைச் சார்ந்த விழிப்பின் விளைவான கவித்துவத்துக்கும், சாயல் அளவில்தான் ஒற்றுமை உண்டு. கலையின் புறச்சித்தியை, சித்தாந்தவடிவுகள் மூலம் நிர்ணயிக்க முடியும்; அகதர்சனத்தின் விளைவான கவித்துவம், சித்தாந்தப்பூர்வமான அழகியலின் தர்க்கங்களுக்கு இசைவு காட்டினாலும்கூட, தன்னளவில் அது செயல் வடிவாக மனசை இயக்குகிற ஒன்று என்ற அளவில் வேறுபட்டது; அதாவது, அகதர்சனப் பண்பு உள்ளவனுக்கு அழகு என்பது ஒரு இயல் அல்ல, அனுபவம். இதையே செயல்வடிவம் என்கிறோம். ஆனால் இந்த அனுபவத்தைப் பிறருக்குத் தொற்றவைப்பதற்க்கான மொழி முதலிய கருவிகளை ஆள்வது அழகியல். இந்தக் கருவிரீதியான இயலையே, மேல்தோல் அளவான பயிற்சி என்கிறேன். பெரும் அளவுக்கு அழகினை ஒரு இயலாகப் பயில்கிறவர்களே, அதன் சகல பரிமாணங்களையும் ஆதர்சிப்பவர்களாகப் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். இது உலகெங்குமே கைக்கொள்ளப்படும் பிறழ்வு.
அழகை அதன் இயல்வடிவில் அன்றி, செயல்வடிவில் – அக தர்சனப் பண்பின் அனுபவதளத்தில் – உணரும்நிலை, அருள்வசப்பட்ட மனோநிலை ஆகும். இத்தகைய அருளாளர்கள், அழகின் இயல் வடிவான வெளியீட்டுமுறைகளைப் பற்றிப் பெரும்பாலும் அலட்சியமாகவே இருப்பார்கள். ஏனெனில், அவர்களது அனுபவவெளி எல்லையற்றது; வெளியீட்டுக்கருவியின் அணுப்பிராந்தியத்தினால் அளவிடப்பட முடியாது; வெளியீட்டின் ஆதாரமான மனோபாவங்கள் ஒவ்வொன்றையும், பரிபூர்ணமாக நிராகரித்த நிலையில் பெறப்படுவது. எனவேதான், ரமணர் எழுதிய எதுவுமே கவிதையாகவில்லை. அரவிந்தரின் ஆங்கில மாகாவியமான சாவித்ரியை, ஒரு தலைகுனிவான இளநகையுடன் மேற்கில் உள்ளவர்கள் கண்கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள் – அரவிந்தரின் ஆன்ம புருஷார்த்தத்தை மதிப்பவர்களாக அவர்கள் இருப்பினும் கூட. ஆனால், ஆன்மிக மதிப்பீடுகளைத் தங்களுடைய குறுகிய மனோபாவங்களுக்கு ஆதாரமாக்குகிற சநாதனிகள், இது விஷயத்தில் மணலைக் கயிறாகத் திரித்துவந்திருக்கிறார்கள். இதுவே இந்தியக்கலையியலின் மனோபாவங்களை நிர்ணயித்து வந்துள்ளது. வெளியீட்டுச் செம்மைக்கும் ஆன்மார்ந்த மனோ நாசத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, இவர்கள் மழுப்புகிறார்கள். அன்றைய பாரம்பரியத்தில், ஞானமே சிகர புருஷார்த்தம் என்ற மதிப்பின்படி, ஞானவெளியில் பிறப்பவையே உயர்தரமானவை என்ற அடிப்படை நிறுவப்பட்டிருக்கலாம். ஆனால், வெளியீட்டின் தளத்துக்கு வந்துவிட்ட எதுவும் விமர்சனத்தின் எல்லைக்கு உட்பட்டதுதான் என்பதை, இது மறுக்கமுடியாது. சிகரபுருஷார்த்தம் வெளியீட்டைக் கையாளுமானால், அதுவே விமர்சனத்தையும் எடுத்துப் பிரம்மாஸ்த்திரமாக்கிப் பிரயோக்கிக்க வல்லதுதானே!

கலையுணர்வு இருக்கிற உள்ளத்தில், மனிதநேயமும் அதனைச் சார்ந்த உயரிய பண்புகளும் இருக்குமென்றோ, மனிதநேயமில்லாத உள்ளத்தில் காலையுனர்வுகூட இல்லாமல் போய்விடுமென்றோ, சுலபமாக முடிவுகட்டுவதற்கு எதிரான சாட்சியங்கள் நிறையவே உள்ளன. இதற்கு மிகவும் தெளிவான உதாரணம், மோகன்தாஸ் கே.காந்தி. உயர்தர ஓவியங்களை அவரால் உணரமுடிந்ததில்லை. அவரது சத்யசோதனை என்ற சுயசரிதையில், எங்குமே கலைப்பாங்கான ஒரு உள்ளத்திற்குச் சாட்சியமும் இல்லை. இயற்கைகூட, அவரது மனசில் கலாரீதியான நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தியதில்லை. தாம் எடுத்துக்கொண்ட நீதிப்பூர்வமான பிரதிக்ஞையை மீறிவிடும்படி தாம் ஏமாறக்கூடாது என்கிற பிடிவாதத்தை மட்டுமே, அவரது மனோவியல் பின்னணியாக, சத்யசோதனையில் காண்கிறோம். இந்தச் சுயகட்டுப்பாட்டுடன் இழைந்த ஒரு மனிதநேயம்தான் அவருடையது. இதே கலையுணர்வற்ற காந்தி, ஹரிஜனர்களுடன் சாஸ்திரத்தையும் சநாதன கேந்திரத்தையும் மீறி ஆலயப் பிரவேசம் செய்தபோது, அவரைத் தடுத்து நிறுத்த முயன்றவர்கள் அன்றைய பிரட்டானிய அரசினரல்ல. இந்திய இசையை நுட்பமாக உணர்ந்து ரஸிக்கிற, சநாதனகேந்திரம்தான் குறுக்கே நின்றது.

மனசாட்சிகூட இல்லாத மனோநிலையில் கலையுணர்வு – அதாவது, தன் இயல்வடிவில் – இருக்க இடமுண்டு. இதற்கு மிகப்பெரிய – உலகப் பிரசித்தமான ஆதாரம், இந்திய சநாதனம். “கேட்கவும் பயிலவும் பொருளறியவும் கூடாது; ஸ்மிருதியும் அங்ஙனமே,” என்ற பாதராயண வியாசரின் பிரம்மசூத்திரத்திற்கு உரைவகுத்த சங்கராச்சாரியார், “இதனால்தான், சூத்திரனுக்கு (பிரம்மஞானத்தில்) உரிமை இல்லை. ஏனென்றால், ஸ்மிருதி அவனை வேதங்கேட்கவும் பயிலவும் கூடாது என்று மறுத்திருக்கிறது. வேதத்தைக் கேட்கக்கூடாது, வேதத்தைப் பயிலக்கூடாது, அதன் பொருளை அறியக்கூடாது, அதன்படி ஒழுகக்கூடாது” – இவ்வளவு விளக்குகளை ஸ்மிருதி சூத்திரனுக்குக் கூறுகிறது. ‘அவன் வேதவாக்கியத்தைக் கேட்டல் அவன் காதில் அரக்கையும் ஈயத்தையும் காய்ச்சி ஊற்றவேண்டும்’ என்று, அவன் வேதங்கேட்பதை விலக்கியிருக்கிறது. ‘சூத்திரன் என்றால் நடக்கும் சுடுகாடு. ஆதலால், அவனுக்கு அக்கம்பக்கத்தில் வேதாத்தியானம் செய்யலாகாது’. எனவே இதனால், அவன் வேதம் பயில்வதையும் தடுத்தாயிற்று. ஏனென்றால் எவனுடைய அக்கம்பக்கத்தில்கூட வேதத்தியானம் செய்யலாகாதோ, அத்தகையவன் தானே எங்ஙனம் வேதத்தைப் பயில்வது? மேலும், அவன் வேதத்தை உச்சரித்தால் அவனுடைய நாக்கைத் துண்டிக்கவேண்டும் என்றும், (வேதமந்திரத்தை) உள்ளத்தில் கொண்டால் அவனைக் கொல்லவேண்டும் (உடலைத் துணிக்கவேண்டும்) என்றும் சொல்லியிருக்கிறது. ஆதலால் அவன் வேதத்தின் பொருளை அறிவதோ அதன்படி ஒழுகுவதோ கூடாது என்று ஏற்படுகிறது. ‘சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்காதே’ என்று எழுதியுள்ளார் சங்கரர் (பிரம்ம சூத்திர சங்கர பாஷ்யம், அத். 1 : 3-38). இவ்வாறு, உலகின் வேர்ந்தப் பூர்வீக நீதித்துவத்திலுமே இல்லாத, மனசாட்சியற்ற கொடுங்கோலைத் திவ்வியமானது என்று கொண்டாடுகிற இந்திய சநாதனிகளிடம், உயர்தர இசைக் கலையுணர்வும் இருந்திருக்கிறது. இவர்களுள் ஒருவர் மௌனி என்பதை நான் மட்டுமல்ல, இன்றைய தமிழிலக்கிய உலகின் பலரும் நேரில் அறிவார்கள்.

இங்கே முதலில், இன்னொரு நுட்பமான விஷயத்தைக் கவனிக்கவேண்டும். விஷேசமாக இசை போன்ற நுண்கலை வடிவங்களில், எளிதாக சமூகநிலைகளை விமர்சிக்கவோ படம்பிடிக்கவோ முடியாது. இசையில் மனிதநேயம் வெளிப்பட இடமில்லை. அதில் மனிதநேயம் அற்ற சமூகம் விமர்சிக்கப்படவும் இடமிராது. இது, இங்கே நன்கு அவதானிக்கப்படவேண்டிய ஒன்று. அதாவது, இசையின் குணரூபமான வடிவத்தையே இங்கே நான் இசையெனக் குறிப்பிடுகிறேன் – கிருதிகளையோ இசைப் பாடல்களையோ அல்ல. இந்தக் கிருதிகளும் இசைப்பாடல்க்களும்கூட, இசையின் குணரூபத்துக்கு இரண்டாம் பட்சமானவைதாம் என்ற அளவில்,அவற்றில் உள்ள பொருளும் தனது முக்கியத்துவத்தை அடைவதுமில்லை.

கலையுணர்வு என்றாலே, இசையுணர்வு போன்றவற்றில் உள்ளது போல் சமூக விமர்சனப் பண்பு அற்ற குணரூபம்தான் என்ற எழுதாக்கிளவிகூட இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து வந்திருக்கிறது. இந்திய இலக்கிய வடிவங்கள், ஆயிரக்கணக்கான வருஷங்களாகச் சமூக நிதர்சனன்களைப் பற்றிய பதிவுகளாகிவிடாமல் தவிர்த்துவந்த மரபு இது. இந்த மரபு, இந்து சநாதனத்தை எதிர்த்தவர்களிடம்கூடத் தளர்ந்தது இல்லை – வள்ளலார் என்ற சிதம்பரம் ராமலிங்கத்திடம்கூட.

இதன் விளைவாக, சமூக சித்தரிப்பாகவும் சமூக விமர்சனமாகவும் பிறந்திருக்கக்கூடிய எழுத்தியல் வடிவம், இந்தியாவில் வெறும் ரொமாண்டிக் தளத்தை மீறமுயன்றதுகூட இல்லை. இந்த மரத்தநிலை முற்றாகச் சிதறியது, மேல்நாட்டுப் பாதிப்பினால்தான். இந்தச் சிதறலினால் பின்னமடைந்த சநாதனிகளுக்கு, கலையுணர்வினைச் சமூக விமர்சன உறவிலிருந்து பிரித்துக்கண்டு பேணிமகிழ்வது, ஒரு சிக்கலான காரியமாகும். இந்த சிக்கலினால், தொடர்த்த முடியாமல் தேங்கியவர் மௌனி. இவரது இலக்கியம் இசையின் பண்புகளைச் சார்ந்தது என்பது, நான் கூருவதஈ விளக்கும்.

எழுத்தியல் கலைவடிவம், சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கக்கூடிய கருவி; இருந்தும், அந்தப் பிரதிபலிப்பைத் தமது எழுத்திலிருந்து தவிர்த்ததுடன், பிறரும் அதையே செய்யவேண்டும் என்று நேர்ப்பேச்சுகளில் சுற்றிவளைத்துக் கூறிவந்துள்ளார் மௌனி. இவர் வெறுமனே இசைத்துறையில் ஈடுபட்டிருந்தால், இவருக்கு இந்தப்பிரச்சனை வந்தேயிராது. எழுத்தைக் கையாளவந்து, அதன்மூலம் இசைசார்ந்த மனோபாவங்களை ஆரம்பத்தில் வெற்றிகரமாக வெளியிட்டவர் மௌனி. எழுத்தியலினுள் இவர் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனதுக்குக் காரணமோ, இவரது குறுகியபார்வைதான் – சமூக விமர்சனத்தைத் தவிர்க்கவேண்டும் என்ற முரட்டுத்தனம்தான்.

இதற்கு ஆமாம் போட்டவர்கள் பண்ணின அலாதியான காரியம், வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கவேண்டிய தங்களது ஜாதீய உளைச்சல்களை, கோழைத்தனமான கிசுகிசு லெவலுக்குக் கொண்டுபோனதுதான். ஆனால் மௌனியின் கலை உள்ளத்தால் இதைச் செய்யமுடியவில்லை 1971 வாக்கில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்மட்டும்தான் தொடர்ந்து எழுதுவேன் – திராவிடக் கட்சி வந்தால் எழுதமாட்டேன் – என்று முடிவுகட்டிய, ஒரு குணரூபக் கலையுணர்வாளர் இவர். இதை நான் குறிப்பிடுவதன் காரணம், சமூகவிமர்சனப் பண்பை, எழுத்தில் அநுசரிக்காமால் கலைப்படைப்பச் சாதிப்பவரைப் பற்றி நாம் அங்கலாய்க்க இடம் இல்லை; சமூகத்தின் கதிகளைத் துச்சமாக மதித்து மேலேறிச் சஞ்சரிப்பவராகவும் அவர் இருக்கவேண்டும் என்பதுதான், அவரது கலையின் தொடர்ச்சிக்கு ஆதாரமாக முடியும். ஆனால் மௌனி சமூககதியினைத் துச்சமாக மறுக்கமுடியாததுடன், அந்தக் கைதிகளைப் பிரதிபலிக்காத தம்முடைய கதைகளுக்கு ஏற்ற சூழல் வேண்டும் என்றும் விரும்பிய ஓர் குழப்பவாதி ஆவர். இதற்குக் காரணம், கலை என்பது சமூக சௌகரியத்தைச் சார்ந்த அனுபவமாக, இந்தியமரபில் பேணப்பட்டமைதான்.

சௌகரியமாக நிலைமை இல்லாவிட்டால், சங்கீதம் கிளம்பாது. ஆனால் நிச்சையமாக எழுத்து அந்நிலையில், சகல போர் எந்திரங்களையும் எதிர்க்ககூடிய யுத்தக்கருவியாக மாறக்கூடியது. இந்தச் சங்கதிதான், இந்தியமரபில் மழுப்பப்பட்டிருக்கிறது. இந்த மரபின் வசப்பட்டமையால்தான் மௌனி, தமது எழுத்தியக்கதைத் தி.மு.க. – காங்கிரஸ் போட்டிக்குள் உருட்டி, ஒரேயடியாகத் தொலைத்துவிட்டார்.

கலையின் இயல்வடிவு, வெறுமனே மேல்தோல்அளவான ஒன்றுதான் என்பது, சநாதனிகளுக்கு ஆபத்தானதாகும். ஏனெனில், இந்த மேல்தோல் அளவில், தியாகங்கள் அற்ற வழிமுறைமூலம் ஒரு போலியான சுயம்பிரபாவத்தை எழுப்பிக்கட்டி, ‘இதில் உள்ளது ஆன்மிகக்கலவை’ என்று மார்க்கட்டில் தள்ளிவிடுகிற சௌகரியத்துக்கு அது உதவாது. எனவே, கலைத்தன்மையைச் சாதிப்பதுக்கும், ஆன்மிகப் பண்புகளான மனிதாயம், புனிதத்துவம் ஆகியவற்றுக்குமிடையே இவர்கள் முடிச்சுப்போடுகிறார்கள். இங்கேதான், மனிதநேயத்தைத் தவிர்த்தே கூர்மைப்படுத்தத்தக்க உணர்வாக, கலையுணர்வை இனம் காண்கிறோம். ஒரு காந்தியிடம், ஒரு மௌனியின் இந்தக் கலையுணர்வு இருந்திருக்க வேண்டுமா? ஒரு ஹிட்லரிடம், இந்தக் கலையுணர்வு இல்லாமலே போய்விடக்கூடுமா?
வாழ்க்கை, கலை, அனுபவம், வெளிப்பாடு என்ற நூலில் உள்ள வெங்கட் சாமிநாதனின், ‘ஹிட்லரும் ரிச்சார்ட் வாக்னரும்’ என்ற கட்டுரையின்படி, கலையுணர்வு – அதிலும் விஷேசமாக இசைக் கலையை உணரத்தக்க கலையுணர்வு – மனிதநேயத்திலிருந்து பிரிக்கப்படவே முடியாத ஒன்று. இதற்கு எதிராகக் குவிந்துள்ள சாட்சியங்கள், தமது கிரகிப்புக்குள் புகுந்துவிடாதபடி, இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார் வெ.சா. இவரது கருத்துகளுக்கு, இப்போது பிரசித்திபெற்றிருக்கும் ‘மனிதநேயம்’ என்ற விஷயம், முக்கிய கலவையாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ‘சம்பாஷணைப் பிரபஞ்ச’மாக இந்தக் கலவையே முக்கியத்துவம் வகிக்கிறதாக, இடதுசாரிகள்கூட மயங்குவது ஒரு மேலதிக சுவாரஸ்யம்; இது, கவனத்துக்கும் ரசனைக்கும் உரியது.
அனால், ‘மனசாட்சி’யைப் பற்றி வெ.சா.வின் ‘சம்பாஷணைப் பிரபஞ்சம்’, மூச்சுக்கூடவிடவில்லை என்பதைக் கண்டுகொள்ள வேண்டும். ஏனெனில் மனசாட்சி செயல்வடிவங்களாக மாறித் தொலைத்துவிடும். மனிதநேயமும் வெறும் பிராண்டு; நெற்றியில் பட்டையாக ஓட்டத்தக்கது. இதிலும்கூட ஆபத்துண்டு. மனிதநேயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும்படி கேட்டல்? அதற்குப் பதிலாக, வெறும் சித்தாந்தம் ஒன்றையே பதிலாகத் தருகிறார் வெ.சா. இச்சித்தாந்தப்படி, மனிதநேயம் உள்ள இதயத்திலேயே இருக்கும். ஆகவே, ‘எனக்கு மனிதநேயம் இருக்கிறது,’ என்று மார்தட்டலாம். இதுதான் நன் பிரஸ்தாபித்த அவரது ‘ஹிட்லரும் ரிசார்ட் வாக்னரும்’ என்ற கட்டுரையின் ‘சம்பாஷணைப் பிரபஞ்சம்’ – யுனிவர்ஸ் ஆஃப் டயலாக்.

இதற்காக அவர் காட்டமுயன்ற ஹிட்லர், வாக்னர் ஆதரங்கள் அவ்வளவும், வெறும் அறியாமையை மட்டுமல்ல, பொய்யுரைக்கும் தன்மையையும் காட்டுகின்றன. ஏனெனில், அவர் பார்த்த வாக்னர் திரைப்படத்தைக் காட்டிய ஜெர்மன் நிறுவனமான மாக்ஸ்முல்லர்பவன், தனது அறிமுகங்களிலும் சொற்பொழிவுகளிலும், ‘வாக்னர், பெரும் கலைஞராக இருந்தாலும்கூட, கீழ்த்தர யூத வெறுப்பாளராகவும்கூட தம்மை வெளியிட்டிருக்கிறார்,’ என்பதைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இதை அப்படியே இருட்டடிப்புச் செய்து, ‘வாக்னர் பெரும் கலைஞர்; ஆகவே அவரிடம் மனிதவிரோதம் சார்ந்த யூத வெறுப்பு இருந்திருக்கமுடியாது,’ என்று வலியுறுத்திக் கூறியுள்ளார் வெ.சா.

மனசாட்சி இல்லாத மனோநிலையில் கலையுணர்வு இருக்கமுடியும்; இந்திய சநாதனம் இதற்கு ஆதாரம் என்பதை மறைக்க முயற்ச்சிப்பதுதான் வெ.சா.வின் நோக்கம். வெ.சா., தமது கட்டுரையில் மனிதநேயத்துக்கு முடிச்சுபோடும் உணர்வு, இசைக் கலையைச் சார்ந்தது. இந்தக் கலை, விசேஷமாக இந்தியாவில், ஒரு மரபைப் பேணிப் பாதுகாத்துவருவது. எனவே, இசைக்கலை உணர்வைப் பேணுகிறவர்களது மனிதவிரோதத்தை மறைத்து, ‘கலைஉணர்வே மனிதநேயம்’ என்று குரல் எழுப்புவதே, வெ.சா.வின் இயக்கம் ஆகும்.

இசை உணர்வு ஹிட்லருக்கு இருந்திராது என்று அடித்துக் கூறுவதற்க்கு முன்னுரையாக, அவனது இனவெறியையும், பொதுவாக உள்ளூர் ஜாதி வெறியர்களையும் நோக்கி, ‘நான் உங்கள் கட்சியில் இல்லை’ என்று வெ.சா. கூறுவதுடன், ‘ஆயிரக்கணக்கான வருஷங்களாக உடலில் ஊறியுள்ள ஜாதி உணர்வு’ என்று எதையோ தோண்டியெடுத்து, அதற்கு ஒரு முணுமுணுப்பு பூஜையும் பண்ணிவிடுகிறார். கூடவே, ‘அறிவாளிக்கு சாதிப்பிரச்சனை இறந்துபட்ட பிரச்சனை’ என்று, ஒரு லெவல் கிராஸிங்கையும் ரெட்லைடையும் போடுகிறார்.

‘உடலில் ஜாதி உணர்வு ஊறியிருப்பதாகவும், அது தானறியாத அடிமன இயக்கம், அது தன்னையறியாமல் வெளிப்படவும் கூடும்’ என்று சநாதனிகள் உளறுவதைத் தூக்கிப் பிடிக்கும் வெ.சா., முதலில் தன்னுடைய வேர்வையை ருசித்துப்பார்த்திருக்க வேண்டும்; அது உப்புக்கரிக்கும். இது, உடலின் ஆதித்தோற்றம் சமுத்திர ஜீவவடிவங்களிலேயே சம்பவித்தது என்பதற்கு ஆதாரம்; இதனால், ரசாயன ரீதியாக மனிதரத்தத்துக்கும் சமுத்திர நீருக்குமிடையே வித்யாசம்கூட இல்லை. உடலில் ஜாதிஉணர்வு ஊறி இருந்தால் அமீபா, தவளை முதலிய ஜாதிகளுக்கு...?

ஜாதிஉணர்வு உடலில் இல்லை; இளமையில் பெற்ற போதனையில் மட்டுமே தங்கியிருக்கிறது. உதாரணமாக, ஒருவர் குழந்தைப் பருவத்திலிருந்து ஓநாய்களால் வளர்க்கப்பட்டிருந்தாரானால், அவர் இன்றும் நாலுகாலில்தான் நிற்பார். பச்சைமாமிசம்தான் சாப்பிடுவார்; பக்கத்தில் வரும் மனிதக்குழந்தைகளின் கண்களை, ஏமாந்த சமயத்தில் குத்தவும் செய்வார். இதற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சியங்கள் விஞ்ஞானப் பதிவுகளாக உள்ளன. வடக்கே ஒரு கிறஸ்துவ மடாலயத்தில், இதே லட்சணங்களில் அகப்படுமளவு, ஓநாய்ப் போதனைபெற்ற பாஸ்கல் (Pascal) என்ற சிறுவன் இன்றும் இருக்கிறான். இது உடலினால் அல்ல, மனசினால் பால்யத்தில் உருவாக்கப்பட்ட பீடிப்புத்தான். பால்யம் அல்லது formative என்பது, குழந்தைக்கு கிடைக்கிற பராமரிப்பின் வழியே அதன் அடிப்படை வியக்தி(Personality)யையும் உருவாக்கிவிடும். இது, ஆயிரக்கணக்கான வருஷ விஷயமே அல்ல. அது ‘தானறியாத அடிமனஇயக்கம்’ என்று கூறி, ஜாதியத்துக்குப் பிரக்ஞாபூர்வமான பொறுப்புகளை ஏற்காமல் தப்பிக்கவும் முயற்ச்சிக்கிறார் வெ.சா. உழைப்பையும் திறனையும்விட, பிறப்பின் மூலம் எளிதாக – ஒரு சிரமமும் இல்லாமல் – ‘உயர்வு’ பெற்று விடக்கூடிய இந்திய ஜாதியத்துக்கு, வெ.சா.வைப் போன்ற சித்தாந்திகளைவிட்டால் இன்று வேறு கதியில்லை.

ஹிட்லரின் விஷயத்த்க்கும் இசைக்கலையுணர்வுப் பிரச்சனைக்கும் வருவோம். ஹிட்லரின் ஜெர்மானிய இனவெறியில் உருக்கொண்டு ஐரோப்பாவை ஊடறுத்த பாசிசம், ஹிட்லருடன் ஆரம்பித்து அவனுடன் முடிவடைந்துவிட்ட விஷயமல்ல. பாசிச மரபு என்பது, பிறப்பு முதலிய ஜாதிய அடிப்படைகளின் மூலம் தங்கள் சௌகர்யங்களை ஸ்தாபிக்கிற மனோபாவம்தான். சுதந்திரார்த்தமான மதிப்பீடுகளும் பொதுவுடைமை உணர்வுகளும், இந்த மனோபாவத்தை நிராகரிப்பவை. சுதந்திரமும் போதுஉணர்வும் ஒரு இயக்கமாக எழும்போது, அதை மிக மூர்க்கமாகக் கருவருப்பதற்கு எழுகிற, பழமைவாத இயக்கத்தின் போதுப் பெயரே பாசிசம். இத்தகைய பாசிஸ்டுகள், எகிப்திய பூசாரிவர்க்கமாக முதன்முதலில் சரித்திரப்பதிவு பெற்றுள்ளனர். இன்று ஈரானின் அயத்தொல்லா கொமேனிப் பூசாரி வர்க்கமாகப் பாசிசம் மத்திய கிழக்கைச் சீர்குலைக்கிறது. இவர்கள், லௌகீகமான பொன் – பொருள் – பூமி விஷயங்களுக்காக, மிகப் பிரம்மாண்டமான மதிப்பீடுகளை விபச்சாரம்செய்கிற, அநாதியான ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம். இந்தப் பரம்பரையில், இங்கே தமிழகத்தில் இன்று உள்ளவர்கள் எப்படி வேஷத்தை மாற்றினாலும், உள்ளூரத் தங்கள் பரம்பரைக்குச் சமாதனம் தரும் வெ.சா. போன்றோரது வாதங்களின் மூலம் வெளிப்பட்டுவிடுகிறார்கள்.

ஜெர்மனியில் ஹிட்லர் பதவிக்குவர இடம்விட்டு ஒதுங்கிய ராணுவ வர்க்கம், ஜெர்மனியின் கலாச்சாரக்கட்டுமானத்துடன் இணைந்த ஒரு உயர்குடிவர்க்கமாகும். முதலாவது உலகப்போரில் வீழ்ச்சியடைந்த ஜெர்மனியை, யுத்தசந்நதத்துக்கும் தன்முனைப்பான சக்திகேந்திரத்துக்கும் கொண்டுவர, ஹிட்லரின் இனவெறிதான் ஒரேவழி என்று, இந்த ராணுவத்தலைமையே நம்பிற்று. இதன் விளைவுதான் ஹிட்லரின்பதிவியே தவிர, வேறு ஏதும் அற்புதமல்ல – ஹிட்லரின் தனித்த சமத்காரங்களுமல்ல. ராணுவத்தலைமை விரும்பியிருந்தால், ஹிட்லரின் கட்சிக்கு உயிர்நாடியாக இருந்த பிரௌன்சட்டை – கறுப்புச் சட்டை அரசியல் ரௌடிகளை, ஆரம்பத்திலேயே நசுக்கி அழித்திருக்கமுடியும். இதற்குமாறாக, ஹிட்லரின் பிரத்தியேக ராணுவமாகக் கருஞ்சட்டைகள் மாறி, ஜெர்மன் ராணுவத்தையும் ஜெர்மனியையும்விட கருஞ்சட்டைகளே முதன்மையான அக்கறைக்கு உரியவர்களாகும் அளவுக்கு, நிலைமை மாறியது. காரணம், ஜெர்மானியக் கலாச்சாரத் தலைமையிலிருந்து பிரித்து இனம்காணமுடியாத, ராணுவ வர்க்கத்தின் – உயர்குடி வர்க்கத்தின் – ஒத்துழைப்புத்தான்.

மேலும் இந்த உயர்குடி வர்க்கம், யூதர்களை என்றுமே தங்களிடமிருந்து பிரித்துக் குறைத்துமதிப்பிட்ட வர்க்கமாகும். உதாரணமாக, ஜெர்மனியில் யூதர்கள் தங்கள் இனத்தைவிட்டு, ஜெர்மானியர்களுடன் கலந்து ஜெர்மானியராக மாறுவதற்குச் சட்டபூர்வமான தடைகூட, ஹிட்லருக்கு முன்பிருந்தே வழங்கியிருக்கிறது. இதற்கும்மேல் போனால், ஜெர்மன் இசைமேதையான ரிச்சர்ட் வாக்னர்கூட, யூதர்களைக் கீழாக மதித்தவர்தாம். அவரது மகனை மணந்த விஃபிரெட் என்ற ஆங்கில மாது கூத்த பேட்டியைச் சினிமாவில் பார்த்துவிட்டு (உண்மையில், வயதான இந்த மாது பல கொடியநிலைகளை மறந்து, மறைத்தே பேசுகிறார்.), வாக்னரைப் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டதாகத் தம்மைப் பற்றி நம்பி, வாக்னர் இசைமேதை என்ற அடிப்படையில் அவருக்கு இனஉணர்வு இருந்திராது என்கிற வெ.சா., செருப்புக்கு அளவாகக் காலை வெட்டிக்கொண்டிருக்கிறார். ஏனெனில், அவர் பார்த்த சினிமாவில், வாக்னரின் மகளை மனந்தவனைப் பற்றிய கதையே இல்லை.
‘இசையில் யூதாயிசம்’ என்ற இனவெறித்தனமான கட்டுரையை எழுதிய ரிச்சர்ட் வாக்னரின், நிபலுங்கன் ரிங் (Nibelngen Ring) என்ற பிரம்மாண்ட இசைநாடகம் (Opera) கூட, அதில் வரும் பொன்பித்துக் கொண்ட குள்ளர்களை யூதர்களுக்குக் குறியீடாகக் கொண்டது என்பது பாசிசமரபு. இதன் விளைவாக, வாக்னரின் இசையே இன்றைய ஐரோப்பாவில் ‘மரியாதைக்’குரிய ஒன்றல்ல. யூதநாடான இஸ்ரேலில், வாக்னரின் இசைக்கு சென்சாரின் தடைகூட உண்டு, ரிச்சர்ட் வாக்னர் இசைமேதை, மாபெரும் கலைஞன், ஆகவே அவனுக்கு இனஉணர்வு இருந்திராது என்னும் வெ.சா.வின் அறியாமையை அம்பலமாக்கும் விபரமாகும். இது, உலகறிந்த வெளிப்படை விபரம். உள்விபரமோ, இந்த இனவெர்யை ஜெர்மனிக்கும் அதன் ஓரிரு தலைகளுக்கு மட்டுமல்ல, ஹிட்லரின் எழுச்சிக்கு ஆதாரமாகப் பிரான்சிலும் இங்லாந்திலும் ஜனித்தவர்களது சரித்திரப் பிரசார நூகளுக்கும்கூட தொடர்பு காட்டுகிறது.

இவர்கள்: பிரான்சில் ஜனித்த Count Joseph Arthur de Gobneau, இங்கிலாந்தில் ஜனித்த Houston Stewart Chamberlian. இவர்களுள் கொபினு எழுதிய சரித்திரப் பிரச்சாரநூல், நன்கு வல்யூம்களைக் கொண்டது. மனித இனங்களிடையிலே உள்ள உயர்வுதாழ்வு பற்றிய கட்டுரை (‘Essay on the inequality of the Humar Races’) என்ற அது, பிரெஞ்சு மொழியில் பாரிசில் 1853-55 காலகட்டத்தில் வால்யூம் வால்யூமாக வெளியாகியது. சேம்பர்லேன், ஆங்கில உயர்குடியில் பிறந்தவனாயினும், ஜெர்மனியைப் பரிபூரணமாகத் தழுவி, ஜெர்மன் மொழியிலேயே தனது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் அஸ்திவாரங்கள் (1899) என்ற நூலை எழுதினான்; இவ்விருவரின் கருத்துக்களும், ஆரியஇனத்து உந்நதத்தை – அது மற்றைய இனங்களைவிட உயர்வு என்பதை – வலியுறுத்த வந்தவை. அதிலும், ஜெர்மானிய ஆரியனே இவ்விருவரின் பார்வையிலும் மகா உயர்த்தி. இந்தக் கருத்தை பிரெஞ்சுக்காரர்களோ ஆங்கிலேயரோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் ஜெர்மானியர்கள் இவ்விருவரையும் தங்கள் இனவாத கிரந்த பரமாச்சாரியர்களாகக் கொன்றனர். ஜெர்மனியில், கொபினு சொஸைட்டிகூட உருவாகியது. ஜெர்மன் அரசனான இரண்டாவது வில்ஹெல்ம், சேம்பர்லேனின் கருத்துக்களினால் பரவசமடைந்தான். இந்தக் கொபினுவும் சேம்பர்லேனும், ஆழ்ந்த கலாச்சார உணர்வும் பரந்த அறிவாற்றலும் உள்ள மனிதர்களாவர்; அவர்கள் எதோ கலையுணர்வற்ற காட்டள்கள் என்று, இவ்விடத்தில் வெ.சா. சித்தாந்தம் பண்ண முடியாது. இவ்விருவருடனும் நேர்த்தொடர்பு கொண்டிருந்தவர் வாக்னர் (கார்ல் மார்க்ஸைக்கூட மோகித்துச் சந்தித்தவரும் இதே வக்னர்தான்). அதாவது, இவர்களது இனவாதப் பார்வைகள் மூலம் கிளர்ச்சிபெற்றவர்களுள் ஒருவராகவே, வாக்னர் இவர்களுடன் தொடர்புகொண்டார். அத்துடன் நிற்கவில்லை. அவர் செம்பர்லேனுக்கும் தமது மகளுக்கும் மணத்தொடர்பு ஏற்பட அனுமதி தந்து, அவனைத் தமது மருமகனாக ஏற்றும்கொண்டார். அதாவது, வாக்னரின் மகனது மனைவி பற்றி சினிமாவில் பார்த்து, ஐரோப்பிய இன உணர்வு பற்றியும் வாக்னர் பற்றியும் அறிந்துகொண்ட வெ.சா.வுக்கு, வாக்னரின் மக்களினது மணவினை விபரமும் அத்துடன் நிரூபணத் தொடர்புகள் காட்டுகிற வாக்னரின் இனவாதமும் தெரியவில்லை. ஏன்? சினிமாவிலே அதையெல்லாம் அவருக்கு யாரும் காட்டவில்லை!

இதே சேம்பர்லேன், ஜெர்மன் இனத்தைப் பற்றிய தமது பேராசை நிறைவேறாமையால் தளர்ந்த சமையத்தில், பவேரிய மாநிலத்திலே குட்டி அரசியல்வாதியாக ஹிட்லர் தோன்றியபோது, அவன்மூலம் ஜெர்மனி தழைக்கும் என நம்பி, அவனை ஆசீர்வதித்தவனுமாவான். இன்னும் போனால், வாக்னரே தமது ஆரம்பகால வாழ்வில், பாரிஸில் இசைத்துறைக் கட்டுரைகளை எழுதியபோது, யூத எதிர்ப்பினை ‘இசையில் யூதாயிசம்’ கட்டுரையில் வெளியிட்டவர்தாம். மறுபுறம் சேம்பர்லேனின் நூல், யூத எதிர்ப்புக்கு மிகவும் வக்ரமான ஆதாரங்களைத் தருவது. ஹிட்லர், இந்தத் தலைகளின் முடிவுகளை ராணுவாதிகார சக்தி மூலம் செயல்படுத்தியவன். இவ்வளவு தொடர்புகள், கலாச்சாரவாதிகளுக்கும் இனவதிகளுக்குக்கும் இடையே இருக்கின்றன.

இதேதான், இந்தியைக் கலாச்சார சரித்திரத்தின் கதையுமாகும் என்பது கவனத்துக்குரியது. இதைத்தான், புரட்டிப்போட முயற்ச்சிக்கிறார் வெ.சா. கலையுணர்வு இருந்தால் இனவெறி இராது என்று வெ.சா. எழுப்பும் சித்தாந்தம், இந்திய சநாதனிகளுக்குக் கலையுணர்வு இருக்கிறது – எனவே, அவர்களுக்கு இனவெறி இல்லை – என்று மறைமுகமாக ஸ்தாபிக்கும் முயற்சியாகும்.

ஏற்கனவே, இசை சார்ந்த கலையுணர்வு இலக்கியக் கலையுணர்விலிருந்து மாறுபட்டு, சமூகப் பிரச்சினையினை ஆராயும் அடிப்படையில் வேறுபடுவதைக் கண்டோம். ஹிட்லரின் நாஸி ஜெர்மனி, இதை அறுதியாக நிரூபித்த ஒன்று. அதாவது, நாஸி ஜெர்மனியின் எதேச்சாதிகாரச் சூழலில், எழுத்துக்கருவி சார்ந்த கலை எதுவுமே தழைக்கவில்லை. ஏற்கனவே அங்கிருந்த எழுத்துக் கலைஞர்கள் ஜெர்மனியைவிட்டு வெளியேறினார்கள். ஜெர்மன் மொழியே, நாஸி ஜெர்மனியில் உருக்குலைந்தது. ஆனால்?

அனால் அதே நாஸி ஜெர்மனியில், இசைத்துறை தழைத்துள்ளது அற்புதமான இசைக்கலைஞர்கள், ஆனந்தமாகச் சிருஷ்டித்து வாசித்துக் கொண்டிருந்தார்கள். காரணம்?

காரணம், இசையில் சமூக விமர்சனத்துக்கு இடமில்லை என்ற ஒன்றேதான். இசைக்கலையின் விமர்சனப் பண்பின்மையால்தான், நாஸி ஜெர்மனியில் ரிச்சர்ட் ஸ்ட்ராஸ், ஹெர்பர்ட் வொண் கிராயன் போன்ற இசைஇயக்குநர்களும், எதுவித அசௌகரியமும் அற்று வளர்ந்ததுடன், உயர்தரப்படைப்புகளைக்கூட ஈன்றார்கள். ஆனால் அதேசமயத்தில், எழுத்துக்கலை அதன் விமர்சனப்பண்பு மழுப்பப்பட்டமையினால், ஒரேயடியாக அங்கே ஜீவனிழந்து, ஜெர்மன் மொழியே சீரழிவிற்கு ஆளாயிற்று. இந்தச் சாமான்யமான சரித்திர உண்மையை, வெ.சா.வின் கட்டுரை சின்னாபின்னமாகப் போட்டு குழப்பி, இதை எதோ, ‘ஜெர்மன் இசைமரபு, அது இது,’ என்று மழுப்பமுயற்ச்சிக்கிறது. ஏன்?

ஏனென்றால், இந்திய இசையுணர்வும் சமூகவிமர்சனத்தை விலக்கியே தழைத்த ஒன்று என்பதால்தான்; நாஸி ஜெர்மனியில் நடந்த விபரங்கள் சநாதன இந்தியாவில் பிரதிபலிக்கின்றன என்பதால்தான். இந்த இசையுணர்வு என்ற டிக்கெட் மூலம், பொதுவாகக் கலையுனர்வுக்குள் இனவெறியாளர்கள் மனிதநேய வேஷமிட்டு நுழைய வசதியுண்டு.

நாஸி ஜெர்மனியிலிரிந்து இசைக்கலைஞர்கள் ஒன்றும் பெரும் அளவுக்கு வெளியேறவில்லை என்பதும், வெளியேறிய கலைஞர்கள் எழுத்துக்கலைஞர்கள் மட்டமே என்பதும் கவனத்துக்குரியது. அவர்கள் நாஸிகளின் சுயரூபத்தை உணர்ந்து வெளியேறினாலும், ஒரு எழுத்தியல் கலைஞனின் ஆதரவுகூட நாஸிகளுக்கும் ஹிட்லருக்கும் கிடைக்கவில்லை என்று கூறிவிடமுடியாது. ஜெர்மன் சிந்தனையாளர் கௌன்ட் கீஸர்லிங், அமெரிக்கக் கவி எஸ்ரா. பவுண்டு, நார்வே நாவலாசிரியர் நட் ஹாம்சன், பிரான்சின் நாவலாசிரியர் லூயி பெர்டினாண்ட் செலின் ஆகியோர் ஹிட்லரின் கொள்கைகளுடன் உடன்பட்டவர்கள்தாம்; நாஸிசத்தின் கலையுனர்வுப் பிரகடனங்களினால் ஏமாந்தவர்கள்தாம். யூதர்கள், பணத்துக்காகக் கலைத்தரத்தைக் குறைத்தவர்கள் என்ற பொய்மையான குற்றச்சாட்டுக்கு இவர்கள் வசப்பட்டிருக்கிறார்கள். இத்தகையவர்களை ஏய்ப்பதுக்காகவே, நாஸிகளின் பிரச்சார எந்திரம், ஐரோப்பியக் கலைமரபுக்குத் தாங்களே பாதுகாவலர்கள் என்று – அதுவும் முக்கியமாகத் தங்களது அணி இரண்டாவது உலகப்போரில் சிதறுவதைக்கண்டு – கூச்சலிட ஆரம்பித்தது. இதே கூச்சல்தான், இந்திய சநாதன அணி சார்ந்த வெ.சா. போன்றவர்களிடமும் இருந்து, இங்கே கிளம்பிக்கொண்டிருக்கிறது. நாஸிகளுடன் உடன்பட்ட, விதிவிலக்கான சில மேனாட்டு எழுத்தாளர்களைப் போலவே, இந்திய சநாதனத்துடன் உடன்பட்ட ஒரு இலக்கியப் பாரம்பரியமும் இருந்திருக்கிறது. ஆனால் எப்படி ஹிட்லரை ஆதரித்த மேற்படி எழுத்தியல்காரர்கள், அவனது பயங்கரக் கொடுங்கோல் அம்சங்களைக் ‘கண்டுகொள்ளாமல்’ இருந்தார்களோ, அவ்விதமே இந்தியாவிலும் நிலைமை இருந்திருக்கிறது.

இவ்வளவும், ‘கலையுணர்வே மோசமான சங்கதி’ என்று, அறிவார்த்தப் பொதுச்சொத்துக்களை அழிக்கிற புதிய Intellectual vandalism ஒன்றுக்கு வழிவிடக்கூடிய விபரங்களுமாகும். (இந்திய சங்கீதம், பார்பன சங்கீதமே என்று இசைக்கு ஜாதி பார்க்கிறார்கள் சிலர். இந்திய சந்கீதமென்ன, பரதம்கூட இந்த மண்ணில் பிறந்த பூர்வீககலைகளின் செம்மைபெற்ற வடிவங்கள்தாம்.) அத்தகைய நிலைக்குக் கீழிறங்கிய பரம்பரைதான், மார்க்ஸிய இலக்கிய சித்தாந்தப்பரம்பரை, எப்படி வெ.சா.வைப் போன்றோர், ‘கலையுணர்வு எனக்கு இருக்கிறது; எனவே, நான்தான் மனிதாபிமானி.’ என்று ஜம்பமடிக்கிறார்களோ அதேபோல், ‘கலையுணர்வு எனக்கு இல்லை; எனவே, நான்தான் மனிதாபிமானி,’ என்று மார்தட்டுமளவுக்கு, இந்தப் புதிய பரம்பரையின் போக்கு இருக்கிறது. இதுவம் கலையியலை மட்டுமல்ல, மனிதார்த்த உணர்வுகளைக்கூட உணராத சந்தர்ப்பவாதக் கூச்சல்தான்.

கலையாகிவிட்டால் அதன் விஷேச தர்க்கம் ஆசிரியனுக்கு இருந்திருக்கக்கூடிய குறுகிய நோக்கங்களையும் மீறிவிடும் என்பதையே உணராத பரம்பரைத்தான் வெ.சா.வினதும் இந்தப் புதியவர்களினதும். வக்னரையே எடுத்துகொண்டால், அவரது இசைநாடகம் கவனத்துக்கு வருகிறது.

கிறிஸ்துவம் பரவுமுன் நிலவிய வாடஐரோப்பிய புராணங்கள் மூலம் (இவற்றின் தொகுப்பு Edda என வழங்கப்படுகிறது), பெருமையுணர்வுகொண்ட பிரஷ்யப் பரம்பரை வாக்னருடையது. நிபலுங்கன் லியோத் (Nibelungen lied) என்பது, இந்தப் புராணங்களுள் ஒரு மாபெரும் இதிகாசமாகும். இந்த இதிகாசத்தினால் உந்தப்பட்டு, சுமார் 25 வருஷங்களாக உழைத்து, வாக்னர் உருவாகிய இசைநாடகம் தான், நான் ஏற்கனவே குறிப்பிட்ட நிபலுங்கன் ரிங். (நிபலுங்கன் லியாத்தின் மூலகங்களையும் கிருஸ்த்துவத்தின் யூத அச்திவாரங்களையும் இணைத்து, நவீனமாக இன்று ஒரு இதிகாசத்தை ஒரு புதுஉலகமாகவே ஆங்கிலத்தில் சிருஷ்ட்டித்துள்ளார் J.R.R.Tolkien தமது Lord of the Rings படைப்புகளில்). வாக்னரின் படைப்பிலே, பொன்பித்துகொண்ட நிபலுங் என்ற குள்ளர்களாக யூதர்களைக் காண்பது, நாஸிகளின் பாசிசமரபு இது, கிறிஸ்துவுக்கு யூதர்களினாலேயே மரணம் சம்பவித்தது என்ற மரபின் தொடர்ச்சிதான். இதனை, ஷேக்ஸ்பியரிலிருந்து எஸ்ரா பவுண்டு வரை, ஆசிரியர்கள் பலர் ஓரொரு விதங்களில் யூதர்களைப் பற்றிய கணிப்பாக வெளியிட்டுள்ளனர். சமூகார்த்த மதிப்பீடுகளின் குருட்டாம்போக்குக்கே, இத்தகைய மரபுகள் அஸ்திவாரமாகின்றன. ஹிட்லரின் கொடுமையாக இது ராக்ஷஸ வடிவமைந்தபின்புதான், இந்த மரபே கேள்விக்குரியதாயிற்று. எனவே, வாக்னரின் படைப்பு ஒரு மடத்தனமான மரபைச் சுவீகரித்ததுடன், அவரது தீவிர இனஉணர்வும் சேர, குள்ளன் யூதன் ஒரு இறுகிய உருவகமானான்.

அனால் கலைப்படைப்பாக இது, பொன்னாசை பிடித்த எவரையும் குரியிட்டுக் காட்டிவிடுகிறது என்பது, அரசியல் கண்களுக்குப் புலனாவதில்லை, வாக்னரின் குள்ளர்கள், பொன்னாசை என்ற ஒரு கணத்தின் சித்திரமாக மட்டும் நின்றுவிடுவர். கலையுலகில் இத்தகைய சித்திரங்கள் சாசுவதம் இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே நிலைபெறுகிறது. இது, அறிவார்த்தப் பொதுச்சொத்துகளை அழிக்கிற intellectual vandals-க்குப் புலனாவதில்லை. 
‘யூதர்கள் பொன்னாசை பிடித்தவர்களுமல்ல, குள்ளத்தனமுள்ளவர்களுமல்ல’ என்பது நிறுவப்பட்டாலும், ஷேக்ஸ்பியரிலிருந்து வாக்னர் வரையிலான படைப்பாளிகளின் யூதச்சித்திரம், நிலைபேறு குலைவதில்லை. இது, ‘இல்லையில்லை, யூதர்கள் குள்ளர்கள்தான்’ என்று அவை அடாவடித்தனம் பண்ணுவதால் பெரும் நிலைபேறல்ல. பொன்னாசையும் குள்ளத்தனமும், அற்புதமான கலாநிதர்சனமாக அவர்களினது படைப்புகளில் சித்திரம் பெறுவதே, அவர்களது படைப்புகளைக் காப்பாற்றிவிடுகிறது. ஆக, பொன்னாசையும் குள்ளத்தனமும் எவரிடம் தெரிகிறதோ அவர்களது படைப்புகளைக் காப்பாற்றிவிடுகிறது. ஆக, பொன்னாசையும் குள்ளத்தனமும் எவரிடம் தெரிகிறதோ அவர்கள் குள்ளர்கள் என்று இனம்காட்டுகிற சாசுவதத்தை, அவை பெறுகின்றன. கலைஞனது மனித மனத்தின் குறுகல்களை, அவனது கலைத்தர்க்கத்திலே விளைகிறபொதுப்பண்பு மீறிவிடும் நிலை இது. இவ்விதமானால், யூதர்களையன்றி வாக்னரின் குள்ளர் எவரைச் சித்தரிக்கின்றார்?

சரித்திர சாட்சியத்தின் அடப்படையில், வாக்னரின் குள்ளர்கள் நாஸிகள்தான் – ஹிட்லரின் தலைமையில் இயங்கிய நாஸிகள்தான் – நிபலுங் என்று குறிப்பிடப்படும் குள்ளர்கள். யூதர்களைக் ‘குள்ளர்கள்’ என்று குற்றம் சாட்டி, அசுரத்தனமாக அழித்துவிட்டு, அவர்களது உழைப்பை வாரிச்சுருட்டியதுடன், ஜெர்மனியின் உழைப்பையே அதன்.பாங்கிலிரிந்த தங்கக்கிடங்கிலிருந்து சுருட்டிக்கொண்டு ஓடினார்களே, அந்த ‘உள்வட்டத்து’ நாஸி கருப்புச்சட்டைகள்தாம் குள்ளர்கள். இதுதான் கலையியல் சாதிக்கும் தர்க்கவிளைவு. யூதர்களைக் குள்ளர்கள் என்றும் தங்களைத் தெய்வீக வீரர்கள் என்றும் நம்பியவர்கள் நாஸி கருஞ்சட்டைகள். அனால் மிருகங்களைவிட கேவலமான ஜன்மங்களாகவும் கோழைகளாகவும் தேசத் துரோகிகளாக்கவும்கூட தங்களை உலகசரித்திரத்தில் பதிவுசெய்து கொண்டவர்கள்தாம் இவர்கள். இவர்களைப் போன்ற பொன்பித்தர்களை சரித்திரத்தில் காண்பதரிது. இத்தகைய மனிதர்களுக்கு, புராணப் பொய்கள்தாம் பாதுகாப்புத்தந்தன. வாக்னரின் கலையியலில் உள்ள குறைபாடு, இந்தப் புராணப் பொய் அம்சம்தான்; அவரது கலையல்ல; கலைத்தர்க்கமல்ல.

புராணப்பொய், ஒரு குறிப்பிட்ட இனத்தை அறுதியாக அடையாளம் காட்டி, உந்நதப்படுத்துவது; இன்னோர் இனத்தை இழிவுபடுத்துவது, கலைத்தர்க்கமோ, அந்த உந்நதத்துக்கு அல்லது இழிவுக்கு இவையே காரணங்கள் என்ற தர்க்கத்தைத் தருவிப்பது. இந்நிலையில், உந்நதத்துக்கான காரணங்கள் எவருக்குப் பொருந்துகின்றனவோ, அவர்களே கலையியலின் மூலம் உந்நதமடைவர்; இழிவுக்கும் இதுவே தர்க்கமாகும்.

புராணம் காட்டும் அடையாளத்தைக் கலையின் தர்க்கமும் சரித்திர உண்மையும் சேர்ந்து தகர்த்ததின் விளைவுதான், தெய்வீக ஜெர்மன் வீரர்களே குள்ளர்களாகிய கதை, இது, கலையம்சமா புராணஅம்சமா, எது ஒரு படைப்பியல் தூக்கலாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஆனால், வெ.சா.வைப் போன்றவர்களுக்குப் புராணம் வேறு, ஒரு தனித்த கலைஞனின் கலைப்படைப்பு வேறு என்பதே புரியவில்லை. புராணரூபமாக இனங்களைப் பிரித்து, ‘இவர்கள் உயர்வு, அவர்கள் மட்டம்’ என்று பிரிக்கிற பட்டியடைப்பு மரபுகளை, கலையியல் தன்னந்தனியாக தகர்ப்பது கடினம்; சரித்திரமும் துணை நிற்கவேண்டும். இந்தியமரபில் சரித்திரமே கிடையாது. எனவே, கலையின் தர்க்கம் சரித்திரத்தின் நிரூபனங்களைத் திரட்டக்கூடிய நிலை,இந்திய பாரம்பரியத்தில் ஏற்படவில்லை. இதனால், சரித்திரபுருஷர்களான புத்தர்பிரான் போன்றவர்களைக் கூட, புராணங்கள் மூலம் இழிவுபடுத்தக்கூடிய சௌகரியம், இந்தியாவில் இருந்திருக்கிறது.

ஆனால் தமிழகத்தின் கிராமியக்கலையான தெருக்கூத்திலிருந்து சித்தர்கள்-ஞானார்த்திகள் ஈறாக, இந்த அவலமரபைச் சிதறடிக்கும் சில பொட்டுவெளிச்சங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். கபிலர் அகவலும் ‘சாத்திரங்கள் பேசுகின்ற சட்டநாதபட்ட’ரை வாதுக்கிழுக்கும் சிவவாக்கியருமாக, இவர்கள் சிந்தனையைத் தூண்ட முயன்றிருக்கிறார்கள். தெருக்கூத்தினை எடுத்தால், அதன் உயிர்நாடியே விமர்சன பாவமுள்ள ஒரு விடம்பனம்தான். ஆனால் இன்று தெருக்கூத்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள், ஆய்வுசெய்த ஒரு ஐரோப்பியர், காந்திகிராம நிறுவனத்தின் ஸ்காலர் கிரிட்டிக் என்ற பத்திரிக்கையில் எழுதியதை மொழிபெயர்த்து, அதிலுள்ள மிக முக்கிய பகுதிகளைக் ‘கட்’பண்ணி, கால் என்ற பத்திரிகையில் பிரசுரித்தனர்; இவ்வாறு நீக்கப்பட்டவைகளில் ஒன்று, தெருக்கூத்து சமூக விமர்சனக் கருவியாக பயன்படுத்தப்பட்டது என்ற பகுதி. இதற்கு உதாரணமாக, ‘புரோகிதர்கள் வந்திருக்கிறார்’ என்ற செய்தியைப் ‘போக்கிரிகள் வந்திருக்கிறார்கள்’ என்று, கோமாளி மூலம் ராஜசபைக்குத் தெரிவித்து, போக்கிரிகளை உதைபட வைப்பது பற்றிய விபரம். இத்தகைய போக்கிரிகள் இன்று அறிவுலகத்துக்குள் நடமாடுவதும், இன்று படும்பாடும் தெரிந்த விஷயம்.

- பிரமிள்

வைர முத்து updated his status.
20 April · 

சநாதனமும் புரட்சியும்
https://www.facebook.com/vairamuthu.mech/posts/1325099014196502
- பிரமிள்

இயற்கைத் தோற்றங்களுக்குப் புராணிகக் கடவுள் தன்மைகளை ஏற்றும் மனோபாவம், மனிதனது கலாச்சார வரலாற்றின் ஆரம்ப அத்தியாயங்களைச் சார்ந்தது. ஆனால் இயற்கையினது கம்பீரமும் தூய்மையான அழகும் சாந்நித்தியமானவை என்ற உணர்வு, அபார மான மனப்பக்குவத்தைச் சார்ந்த விஷயம். இயற்கையின்பால் சார்ந்திருந்தும்கூட, அதன் அம்சங்களுக்குக் கடவுள் வடிவங்களைத் தரும்போது, இயற்கையிலிருந்து கடவுளரைப் பிரித்து, முடிவில் கடவுளைக் கும்பிட்டுவிட்டு இயற்கையைப் பற்றிக் குருட்டுத்தனமாகும் நிலை பிறக்கிறது. இதுவே சநாதனம். இயற்கையைச் சார்ந்திருக்கும் அளவில், அதன் வளங்களை நாம் போஷிப்பதுதான் நம்மை அது போஷிக்கும் வழியாகும் என்ற அறிவை இழந்து, வெறுமனே புராணம், சிலை, கோவில் என்று தேய்வடையும் போக்கு இந்தச் சநாதனம். கிறிஸ்துவத்திலிருந்து ஹிந்துமதம் வரை, இயற்கையை விட்டு விலகி வெறும் புராணிக வடிவங்களினுள்ளும் அவற்றுக்கான அறிவார்த்தச் சப்பைக்கட்டுக்குள்ளும், பொதுமக்களைச் சநாதனம் வீழ்த்தியுள்ளது. காடுகளை வியாபார நோக்கங்களுக்காக அழிப்பதிலிருந்து சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்துவது வரை, இயற்கை மனிதனால் அழிக்கப்படுகிறது.
இதற்கும், மேலே குறிப்பிடப்படுகிற சநாதன கடவுள் தத்துவத் துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதாவது, இயற்கையைப் போஷிப்பதிலிருந்து விலகி, அதைப் பற்றிய பிரக்ஞையையே மனிதன் இழந்தமையின் விளைவு இது. இயற்கையை இயற்கையாகவே கண்டு, அது சாந்நித்தியமானது என்றும், அதன் நுண்ணிய அம்சங்களிடையே உள்ள தாதுச்சங்கிலியை, மனிதமுயற்சி எதுவும் சிதைக்கக்கூடாது எனவும் உணர்கிறவர்கள், முந்திய சநாதனப் பார்வையை உதறுகிறார்கள். முதன்மையாக, இயற்கையை உருவகப்படுத்தி, அதற்கு அஞ்சுகிற மனோபாவத்தை இவர்கள் முற்றாக நிராகரிக்கிறார்கள்; அச்சமே கடவுளை உருவாக்குகிறது என உணர்கிறார்கள். ‘அச்சமில்லை, எனவே கடவுளுமில்லை,’ என்று உரத்துக் கூவுகிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இவர் போன்றோர் இயற்கையுடன் கொள்ளும் உறவு, அதனைப் போஷித்து, இதன் விளைவாக மனிதனையும் போஷிக்கும் இயக்கமாகும்.
இடதுசாரிகள், என்னைச் சநாதனியாகக் காட்டுவதற்கு முனை கின்றனர். ராமகிருஷ்ணரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ரமணரும் சநாதனிகள் என்றும், இவர்களை ஏற்கிற நானும் இதனால் சநாதனி யாகிவிடுகிறேன் என்றும் கூறுகின்றனர். இவ்வளவுக்கும், இந்த இடதுசாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தங்கள் எழுத்துகளில் மறைமுக ஜாதியவாதத்தை நடத்திக்கொண்டிருந்த எழுத்தாளர்களை, நான் அறிவுபூர்வமான விமர்சனக்கருவி மூலம் சத்திர சிகிச்சை செய்து வெளிப்படுத்திக் காட்டியவன்; இடதுசாரிகளின் ‘அறிவு’க்கு எட்டாதது இங்கே எனக்கு எட்டியுள்ளது. இவ்வளவுக்கு நடுநரம்பு நிலையமான ஒரு பிரச்னையை அறியாத விதத்தில், முதுகுசொறியும் கட்சீய விமர்சனங்களையும் அறிவுக்குப் பொருந்தாத விதண்டாவாதங்களையும் இழிவுபடுத்தல்களையும், இடதுசாரிகள் செய்துவருகின்றனர். உண்மையான சமூகப்புரட்சியை நோக்கமாகக் கொண்ட இயக்கமாக மார்க்ஸியப் புரட்சி இயக்கங்கள் நடைபெறுமேயானால், ஜாதியம் என்ற நடுநரம்புப் பிரச்னையைக் காணமுடியாதிருந்த குருட்டுத்தனத்துக்காகக் குற்றவாளிக் கூண்டில் இவர்களைத்தான் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பாரதூரமான குருட்டுத்தனத்தைப் பூசிமெழுகியபடியே, எனக்கும் ராமகிருஷ்ண ரமண கிருஷ்ணமூர்த்திகளுக்கும் சநாதனப் பட்டம் கொடுத்துவிட்டு, இவர்கள் தப்பிக்க முயல்கிறார்கள்.
மேற்கூறிய எவருமே சநாதனிகள் அல்லர் என்பதை உணரத்தக்க விரிந்த வாசிப்புக்கூட இடதுசாரிகளுக்கு இல்லை என்றே இது காட்டுகிறது. ஓரிரு உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.
காளிகோயில் பூசகராக இருந்த ராமகிருஷ்ணர், தம் கோயிலைப் பெருக்குகிற தோட்டிக்கும் தமக்கும் இடையே எவ்வித வேறுபாட்டை யும் தாம் உணரக்கூடாது என்பதற்காக, தோட்டி வேலையைத் தாமே செய்த ஒருவர். ஏழைகளுக்கும் ஆண்டிகளுக்கும் உணவு கொடுத்த பிறகே, ரமணாஸ்ரமத்தில் தங்கியவர்கள் உணவு கொள்ள வேண்டும் என்ற விதியை ஆஸ்ரம அதிகாரி மாற்றியபோது, ஆஸ்ரமத்தைவிட்டே வெளியேறி, ஆஸ்ரமக்காரர்களைக் கதிகலங்க வைத்தவர் ரமணர். கிருஷ்ணமூர்த்தி, எப்போதும் எங்கும் தாம் நடமாடுகிற இடத்தில் உள்ள குப்பைகளைத் தாமே எடுத்து அகற்றுகிறவர். அதாவது, செயல் ரீதியாகக்கூட இவர்கள் சநாதனிகள் அல்லர். இனம், ஜாதி, வர்க்கம் என்ற உணர்வுகளைத் தங்கள் உள்ளத்திலிருந்து வேரொடு களைந்த வர்கள் இவர்கள். ஆனால் கண்ணெதிரே தங்கள் நடுவே நடக்கும் சநாதனத்தனத்தைக் காணமுடியாத இடதுசாரிகள்தாம் சநாதனிகள். அல்ல, இவர்கள் புரட்சிக்காரர்கள் என்றால், எடுத்தஎடுப்பிலேயே இவர்களினால் சநாதனத்தை அடையாளம் காணவும் காட்டவும் முடிந் திருக்கும். இவ்வித சமூகரீதியான சூட்சமங்களை அடையாளம் காண்பதும் காட்டுவதும்தான், மார்க்ஸியத்தின் அறிவார்த்திகளும் எழுத்தாளர்களும் செய்யவேண்டிய முதல் கடமை. ஆனால் நடப்பதோ இதற்கு முரணானது. இவர்களது அணியைச் சார்ந்த பலருக்கு, மறைமுகமாகச் சநாதனத்தை வெளியிடும் சில இலக்கியவாதிகள் மாபெரும் படைப்பாளிகளாகவும், இவர்களின் சில எழுத்துக்கள் ‘மாஸ்டர் பீஸ்’ என்றும் தோன்றுகின்றன. இவ்வாறு சநாதனிகளைப் பாராட்டும் எந்த மார்க்ஸியவாதியும், உண்மையில் பூர்ஷுவாவை விடவும் கீழ்த்தரமான சுரண்டல்வாதி என்று உணரப்படவேண்டும். நிற்க. ராமகிருஷ்ணர், ரமணர் வழிவந்த - இன்று நம்மிடையேயுள்ள ஒரு சநாதனியின் புரட்சிகரத்தைப் பார்ப்போம்.
திருவண்ணாமலை என்ற ஸ்தலத்தின் வழிபாடு ஒருபுறம், வெறும் கோவில் கலாச்சாரச் சங்கதியாகத் திரிந்தது என்றால், மறுபுறம் அந்த இடத்தினை இயற்கையினது சாந்நித்தியக் களமாகக் கண்ட அபூர்வ புருஷர்களும் அணுகி அங்கே வாழ்ந்திருக்கிறார்கள். இன்று அங்கே வாழ்கிற இத்தகைய அற்புதமனிதர், யோகி ராம்சுரத்குமார். திருவண்ணா மலையின் தென்பகுதிக் காடு ஒன்றில் இவருடன் ஒருசமயம் தங்கிய போது, இயற்கையுடன் ஒருவர் எவ்விதம் ஒன்றிவிட முடியும் என்பதை இவரிடத்தில் காணமுடிந்துள்ளது.
யோகியை ‘தரிசிக்க’ வருகிறவர்களுள் பெரும்பாலோர், அவரை வழிபடுவது வழக்கம். நான் எவரையும் எதையும் வழிபடுவதில்லை. இதைவிட அடிப்படையாக உள்ள வேறுபாடு, இத்தகைய விஷயங் களில் சத்தியதரிசனம் பெற்றவராக ஒருவர் இருந்தாலும்கூட, அவரு டன் முரண்படக் கூடிய சமூகவியல் பார்வை என்னுடையது. நான் யோகியைச் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில், காஞ்சி சங்கராச்சாரிய பீடத் தினர், ‘சக்திரதம்’ என்ற பிரசார யந்திரத்தின் மூலம், ஹிந்து மதத் திலிருந்து கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகியவற்றிற்கு மாறியவர்களை, திரும்ப ஹிந்துமதத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யும் விளம்பரம், ‘ஹிந்து’வில் வந்திருந்தது. அதை யோகி உற்சாகத்துடன் காட்டினார். நான், இந்த மதவாத சர்க்கஸ்களை முற்றாக வெறுப்பவன். எனவே, ஒன்றும் பேசாமல் ஒருவிதக் கோபத்துடன் உட்கார்ந்திருந்தேன். யோகியார், என்னைத் துருவிப் பேசும்படித் தூண்டினார். எவருடனும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘அநுசரித்துப் போக’ மறுக்கும் நான், ‘இவரு டன் இதுதான் இறுதிச் சந்திப்பாக இருக்கும்போலிருக்கிறது,’ என்ற முடிவுடன் பின்வருமாறு கூறினேன்: ‘மீனாட்சிபுரத்தில், ஹிந்துக்களாக இருந்த ஹரிஜனர்களுக்கு ஹிந்துக்களாக இருந்த உயர்ஜாதியினர் தண்ணீர் தரவில்லை. எனவே, அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். அவர்கள் மாறியது தண்ணீரைத் தேடித்தான்; கடவுளைத் தேடியல்ல. இதில், ஹிந்துக்களுக்கு ஏற்பட்டிருப்பது அரசியல்ரீதியான பயம் மட்டுமே. மதரீதியான பயம்கூட அல்ல இது. தங்களுக்கு வோட்டு பலம் குறையும் என்ற பயம்தான் ஹிந்துக்களுடையது. சக்தி ரதத்துக்குச் செலவு செய்யும் பணத்தையும் உற்சாகத்தையும் கொண்டு, தண்ணீர் கிடைக்காதவர்களுக்குத் தண்ணீர் கிடைக்க உதவுவதுதான் வரவேற்கத் தக்கது. இதற்குத் தடையாக உள்ள சமூகக்கோளாறுகளை நீக்குவது உயர்ந்த காரியம்.’
தங்களை அதிநவீன இன்டலக்சுவல்கள் என்று பாவனை பண்ணுகிற தமிழகத்து இலக்கியவாதிகளுடன் எல்லாம் ஏற்பட்ட இது போன்ற சமூகவியல் பார்வை மோதல்களின்போது, அவர்கள் அருவருக்கத்தக்க விதங்களில் செயல்பட்டிருக்கிறார்கள். இதன் விளைவாக, என் கவிதைகளைக் காணக்கூட முடியாத கண்கூச்சம் ஏற்பட்டுள்ளது - அவர்களுக்கும் அவர்களைப் போன்றோர்களுக்கும். ஆனால் மேலே குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், யோகி எதுவித பதிலையும்கூட எனக்கு எதிராகத் தரவில்லை. அளவற்ற அடக்கத்துடன் தோள்களை ஒடுக்கி, தலையைக் குனிந்து, ‘எனக்கு வேண்டும்’ என்று, கொடுத்த பதிலைத் தம்மீது விழும் அடியாக வாங்கிக் கொண்டிருந்தார் அந்த அபாரமான மனிதர். அதாவது, தமது மதிப்புக்குரியதாக அவர் வெளிப்படுத்திய ஒரு விஷயத்தின் குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டதும், மறுக்காமல் மௌனமாக ஒப்புக்கொண்டார் அவர். இதேபோன்று, தாம் கூறியவை சரி என்றுபட்டால், அதற்காக விவாதிக்கவும் யோகியார் தயங்குவது இல்லை.
ஒருவர் தம்மைப் ‘பெரியமனித’ராகக் காட்ட, அற்புதங்களைக் கூட நிகழ்த்திவிடலாம்; உண்மையில் அவை அவரைப் பெரியவராக்கி விடுவதில்லை. சிறியவனாக நிற்கக்கூட அஞ்சாத ஒரு நூற்று வீத அச்சமின்மைதான் பெரியோனின் லட்சணம். இந்த அளவு அச்சமின்மை உள்ளவனுக்குத்தான் கடவுள் தேவை இல்லை என்கிறார் ஜே.கே. இவனே மெய்ம்மையைத் தேடி அடைகிற இயக்கத்தினைச் சேர்ந்தவன். இவன் சநாதனி அல்லன் - அதன் வைரி அவன். சநாதனி, தன்னைப் பிறர் பெரியோனாக மட்டுமே கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தைக் கொண்டவன்; இதற்காகப் பிறப்புரிமைகள், அந்தஸ்துகள், சடங்குகளை எல்லாம் சநாதனி உருவாக்குவான். மெய்மையைச் சார்ந்தவனது அன்றாட வாழ்வு, இதனை நிராகரித்து, இதன் வேரையே அறுத்துச் செல்வது.
தங்களைப் புத்திசாலிகளாகவும் பெரியவர்களாகவும் காட்டு வதற்காக, அறிவுத்திராணியற்றவர்களும் கீழானவர்களும் கையாள்வது தான் மோஸ்தர் - ஃபாஷன். மோஸ்தர்கள், தருணத்துக்கு ஏற்றவை. இவர்கள் ஜாதியம் பாராட்டும்போது, நாம் அம்பலப்படுத்தினால், உடனே எல்லாவித ஜாதிய அடையாளங்களையும் பழக்கங்களையும் நிராகரிக்கிறமாதிரி உரிய இடங்களில் நடிப்பார்கள். ஜாதிப் பாகுபாடு ‘இல்லாமல்’ பழகியே ஆகவேண்டிய அழுத்தங்கள், நகர்ப்புறங்களிலும் அரசியல் தேவைகளிலும் பிறப்பவை. ஒரு மேல்ஜாதிக்காரர், ஒருசமயம் இதனை இவ்விதம் குறிப்பிட்டார். ‘இங்கே, காங்கிரஸ் கட்சித் தொண்டு வேலை செய்கிறபோது, பிராமணர்களாகப்பட்ட நாங்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்களுடன்கூட தைரியமாக உட்கார்ந்து பந்திபோஜனம் பண்ணுவோம். ஆனால் பிள்ளை, முதலி போல் உள்ள மத்தவா யாரும் கலந்துக்கமாட்டா. எங்களை இது ஒண்ணும் பண்ணாது. ஆவணி அவிட்டத்துக்குப் பூணூல் மாத்தறபோது, இந்தப் பாவத்துக்கு எல்லாம் மந்திரம் உண்டு. பிள்ளை, முதலி இப்படிப் பந்தி போஜனம் பண்ணினா, பிடித்த பீடைக்கு என்ன செய்வான்? இதனாலே, அவர்களைவிட எங்க பேச்சுதான் ஏறும்.’ இது ஒரு தினுசு என்றால், இன்னொரு தினுசைச் சேர்ந்தவர்களும் உண்டு. பூணூல் போட்ட பிராமணனைவிட, போடாத பிராமணனுக்கு ‘இன்ட்லக்சுவல்’ மதிப்பு அதிகம் என்ற மதிப்பைத் தாம் இழந்துவிடாமல் இருப்பதுதான் இவர்கள் நோக்கம். பூணூல் போடும்படி வற்புறுத்துகிற பெற்றோர், உறவினரை மறுப்பதும் இதனால்தான். ஆனால் பூணூலைச் சுரணை யின்மையின் குறியீடாக்கி சத்யஜித் ராய், சத்கதி எனும் படம் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, ‘இது என்ன? தி.மு.க.விலே சேர்ந்துவிட்டாரா ராய்?’ என்று பிதற்றிக் கொண்டு அலைபவர்களும் இவர்கள்தான். அதாவது, நேர்வழிப் பழக்கங்களில் போடும் வேஷம் ஒருவிதம் - கலாச்சார, பிரசாரக் கருவிகளினூடே நடப்பவற்றைக் கவனிக்கும் பார்வை வேறுவிதம்.
மோஸ்தர்கள் ஏதும் அற்ற ஓர் அபூர்வ எளிமைதான், ஞானி களுடையது. பிறர் தம்மை அவரவர் விரும்புவதுபோல் அணுக இடம் தரும் அற்புத எளிமை இது. இன்னவிதமாக மட்டுமே என்னை அணுகவேண்டும் என்ற வரையறை ஏதும் இதில் இல்லை. எனவே, இதில் சநாதனமும் இல்லை; மோஸ்தரும் இல்லை. எத்தகைய உறவுக்கும் தயாரான, வெற்றுவெளித்தனம்தான் உண்டு. பாமர மக்களும் மதத்தினது பழக்கதோஷங்களின் பிடியில் அகப்பட்டவர்களுமே மலிந்த நமது சமூகப் பிராந்தியத்தில், அவர்கள் தங்களுக்குத் தோன்றியவாறே தம்மை வழிபட இடம் விடுகிறவர் யோகியார். அவரை வழிபடுவோரில் பெரும்பாலானோர், வாழ்வினால் வருத்தப்பட்டவர்கள் என்ற அளவில், அவர்கள் மீது கருணையை ஒவ்வொரு விதங்களில் பொழிகிறார் யோகி. தம்மையல்ல, தம்மை கருவியாக்கும் வேறு சக்தியைத்தான் அவர்கள் வழிபடுகிறார்கள் என்பது, அவரது எல்லாவிதமான சமிக்ஞைகளிலும் வார்த்தைகளிலும் தெரிகிறது. இது மட்டுமல்ல, தம்மீது கி.வா.ஜ., பெ.தூரன் போன்றோர் பாடியுள்ள செய்யுள்களையும் பஜனைகளையும் கூட, இதே விதத்தில் இவர் அநுமதித்துக் கொள்கிறார். இங்கே, அணுவளவு கூச்சமில்லாமல், பெரியோனாக நிற்கிற வேறு ஒருவகை அச்சமின்மையைக் காணலாம்.
விடுதலைப் புலிகளுக்காக, எர்னஸ்டோ செ குவேராவின் வரலாற்றை நான் தமிழ்ப்படுத்திய சந்தர்ப்பத்தில், என் மூலம் ‘செ’ பற்றித் தெரிந்து வியப்படைந்திருக்கிறார் யோகி. தென்னமெரிக்காவின் ‘பறையர்’களான செவ்விந்தியப் பூர்வ குடியினர் போன்றோருக்காகத் தமது மருத்துவக் கல்வியை அர்ப்பணிக்கக் கிளம்பியவர் செ. அவர்களது குஷ்டரோகக் காலனிகளில் சென்று பணியாற்றியவர். இந்தப் பணிக்காகத் தம்முடன் ஒத்துழைக்க முன்வராததால், பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்த தமது காதலியைத் துறந்தவர் செ. ஒரு குஷ்டரோகக் காலனியில் டாக்டர் பதவி ஏற்கப் பயணம் செய்யும் வழியில், தற்செயலாகப் பிடல் காஸ்ட்ரோவுடன் அவருக்கு உறவு ஏற்பட்டு, கியூபாவின் சர்வாதிகாரி யான பட்டிஸ்டாவை வீழ்த்தும் கெரில்லா இயக்கத்தில் சேர்ந்தார். பின்பு, கியூபாவின் வங்கித் தலைமையையும் திட்டச் செயலகத்தையும் கொண்ட அமைச்சரானார். மீண்டும், இவற்றை எல்லாம் துறந்து, பொலீவியாவினுள் கெரில்லாவாக நுழைந்து, பரியண்டோஸுக்கு எதிராகப் போராடி, அமெரிக்க வலதுசாரிகளது திட்டத்தின்படி துராக்கிரமாகக் கொலைசெய்யப்பட்டார். செ குவேராவின் நோக்கம் பதவியல்ல - பாவப்பட்ட ஜனங்களின் விடுதலை மட்டுமேதான். அவர் வன்முறைக்காரரா, மார்க்ஸியவாதியா என்றெல்லாம் யோகி ராம்சுரத்குமார் நோட்டம் போடவில்லை. மேலே சொல்லப்பட்ட செ குவேராவின் சரித்திரச் சுருக்கமே, செ யார் என்று அவருக்குக் காட்டித் தந்துவிட்டது. ‘ஆம், ராமகிருஷ்ணரைச் சந்தித்திருக்காவிட்டால் விவேகானந்தரும் ஒரு செ குவேராவாகத்தான் மாறி இருப்பார். இதற்கு ஆதாரம், விவேகானந்தர் தம்மைப் பற்றிச் சொன்னவற்றிலே உள்ளது,’ என்றார் யோகி. உண்மையான புரட்சிக்காரர்கள் இவர்கள் தாம்.
ஜாதியவாதமும் நுண்ணுணர்வுகளுடன் சம்பந்தமற்ற அரசியல் சித்தாந்தமும் மண்டி இருண்டிருக்கும் தமிழ் இலக்கியச் ‘சூழ’லைக் கிழித்து, அதன் இருட்டில் குடிகொண்டிருக்கும் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுபவனே உண்மையான புரட்சிக்காரன்.

கனவு, அக்டோபர் 1989.

Thursday, August 10, 2017

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - க ரஞ்சகுமார் ; 14 மார்ச் 11 - மார்ச் 24, 1999 சரிநிகர்

மார்ச் 11 - மார்ச் 24, 1999




இது வாழ்வின் வெக்கையில் புழுங்கிப் போன மனிதன் எவனுமே இன்னுமொரு * km)cm)。தன்னுள் படைப்பதில் சுகம் காணர்கின்றான் கலைஞன் இக்காரியத்தை மிகவும் இலாவகமாக ரசானுபவத் துடன் செயது அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றான். அதுவே கலை இலக்கியம் அரசியல் விடுதலை எனப் பல தளங்களில் விரிகின்றது. ஆனால் படைப்பாளி கள எல்லோருமே தமது அனுபவ மெயம்மைகள் காரணமாக தாம் படைத்த கனவுலகை பூரணப்படுத்தி மற்றவர்களுக்குத் தருவதில்லை. அவ்வாறு தருபவனே நல்ல படைப்பாளியாக இனங் காணப்பட்டு காலத்தை சில பொழுதுகளேனும் கடந்து செல்கின்றான தமிழில் அவ்வாறானவர்கள் சொற் பம் ஆற்றல் மிக்க பலரை காலம் அற்பாயுளில் கவர்ந்து சென்று விட்டது பலர் கை சோர்ந்துவிட்ட நிலையில் காலத்துடன் சேர்ந்து இழுபடு கின்றார்கள் நீந்திக் கரை சேர்பவர்கள் மிகச் சிலரே ஒரு உதாரணமாக அமரர் தி ஜானகிராமனை நாம் சுட்டலாம். ஈழத்திலோ ஒற்றை விரலைத் தானும் மடக்க முடியாத பாக்கியசாலிகள் நாம்! காரணங்கள பல ஆராயவது இங்கு பொருத்தமற்றது.

சுந்தர ராமசாமியின் படைப்புக்களுள் அவர் கடைசியாக நமக்குத் தந்திருக்கின்ற குழந்தைகள் பெண்கள் ஆண்களில் பெரும்பாலானோர் படைப்பாளியையே பெரிதும் நினைவூட்டுகின்றனர். பாலு என்கின்ற சிறுவன் சுந்தர ராமசாமியின் இளம் பிராயம் எனத் தோராயமாகக் கூறலாம் எனப் ஆர் எளப் தனது வியாபாரத்திலும் குடும்பத்தலைவன என்ற ரீதியிலும் மிகவும் கணிடிப்பான கறார் பேர்வழி சுந்தர ராமசாமி தமிழிலக்கிய உலகில் மிகவும் கறார் பேர்வழி இது எளப் ஆர். எஸ் இடமிருந்து அவருக்கு முதுசொமாக கிடைத்த குணாம்சமெனக்

லச்சம பூரீதரன வள்ளி ஆகியோர் நிகழ்காலத்தின் சீரழிவுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு துலமாகவும், குக்குமமாகவும் அழிக்கப்படுகின்றனர். பாலு முடமாக்கப்படுகின்றான். எளப் ஆர். எளப் லட்சுமி சாமு, சீதை, பங்கஜா

பிஷாரடி சுகன்யா, சேது அய்யர் முதலியோர் சாறு பிழியப்பட்ட சக்கைகளாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

நாவல் முழுக்க இலேசான மலையாள மணம் கமழ்கின்றது. அது இந்த நாவலுக்குப் பிரத்தியேகமான ஒரு கவர்ச்சியை அளிக்கின்றது. நாவலை துக்கி நிமிர்த்தும் பிரதானமான காரணிகளுள் ஒன்று இங்கு கையாளப்படும் மொழியாகும் சு ரா வின் பிற படைப்புக்களிலிருந்து இந்த நாவலின் மொழி நுணர்மையாக வேறுபடுகின்றது. ஜே.ஜே. சில குறிப்புக்கள்" போன்று அடிவயிற்றிலிருந்து பீறிடும் ஓங்காரத் தொனி இங்கில்லை. அவரது சிறுகதைகளில் காணப்படும் மின் வெட்டுப் போன்ற பளிரிடல்களும் இங்கில்லை. மழை மூட்டம் போன்றதொரு மொழி இது அமைதியாக இதமாகச் செல்கின்றது.

நாவலில் இன்னுமொரு வள மான அம்சம் இதில் வரும் பெனர்கள் விதம் விதமான பெண்கள் ஆனந்தம் மனதைக் கவவுகின்ற பெண லட்சுமி சுய இரக்கம் கொனட் பெண சுகன்யா, கோமதி, வள்ளி போன்றோர் முற்போக்கானவர்கள் மீள வழி இருந்தும் செயல்பட முடியாத சூழலில் மாட்டிக் கொண்டவர்கள் அதனால் சுயவெறுப்புக் கொண்டவர்கள் சீதை சாவித்திரி போன்றோர் சகல தளைகளாலும் கெட்டியாகக் கட்டப்பட்டு நீரில் மூழ்கித் தத்தளிப்பவர்கள் மீள வழி தெரியாதவர்கள்

இறந்த காலத்தின் மீதான கனவு

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலின் மீதான சில மனப்பதிவுகள்

குழந்தைகள் பெனகள ஆணிகள்" என்னும் நாவல் முக்கியமானது அவரது இதர படைப்புக்களுக்கான (கட்டுரைகள் உட்பட) மூல ஊற்றும் அச்சும் இந்த நாவல் தான் இந்த நாவலிலிருந்து முன்னோக்கி நகர்வது சற்றுக் கடினம் ஆனால் பின்னோக்கி ஒரு எல்லை வரை நாம் நகரலாம் அவ்வாறு நகர்ந்தால் அவரது சிறுகதைகள் ஏனைய இரண்டு நாவல்கள் கட்டுரைகள் ஆகியவற்றினுள் நாம் போய்ச் GFUG1) TLÓ.

சுந்தர ராமசாமியின் உறவினர் ஒருவர் இதை எழுத எத்தனை வருடம் எடுத்தது?" என்று அவரிடம் கேட்டாராம் அவர் எழுதத் தொடங்கிய கணத்திலிருந்து இந்த நாவல் சிறுக சிறுக எழுதப்பட்டிருக்கிறது என்பதே உணர்மை யென எனக்குத் தோன்றுகிறது.

இது தரும் முக்கிய செய்தியை ஒரு வரியில் சொல்" என்றும் கேட்டாராம் உறவினர் நாவலை ஒரு வரியில் சொல்ல முடியாது தான் ஆனால் ஒரு வரியில் வர்ணிக்க முடியும் என்னுர்க் கோயிலின் தீர்த்தக்கேணியை பார்த்துக் கொணர்டிருப்பது" போன்ற அனுபவத்தை இது தருகின்றது.

இந்தியாவிலிருந்து அந்நியர் வெளியேறுவதற்கு ஏறத்தாழ பத்தானர்டுகளுக்கு முன்னரான மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு காரியார்த்தமான வியாபா ரியின் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கொணடு பின்னப்பட்ட கதையைச் சொல்கின்றது இந்த நாவல கதை மாந்தர்களுள் பலரை ஏற்கெனவே சுந்தர ராமசாமியின் இதர படைப்புகளில் கண்டிருக்கிறோம். ஆனால் இந்நாவலின் மூலம் அவர்களை நெருங்கி வருகின் றோம். இந்த நாவல் அவரது படைப் புகளின் மூல அச்சு என்று ஏலவே கூறியதன் அர்த்தம் இது தான் தனது அகவுலக சலனங்களின் முழுமையை அவதானித்து நெறிப்படுத்தி வெளிப்படுத்த சுந்தர ராமசாமிக்கு நிறைய காலம் பிடித்திருக்கிறது. தனது குடும்பத்தின் கதையைப் புனைய அவர் தனது படைப்புலக வாழ்வின் பிந்திய காலகட்டத்தை தேர்ந்தெடுத்திருக் கிறார். ஆனால் நீல பத்மநாபன் போன்றோரிடம் இது மறுதலையாக நிகழ்ந்திருப்பதும் அவதானிக்கத் தக்கது.

நாவலில் வரும் ஆண கதை மாந்தர்

GA, Italian Cint2

சம்பத் கருநாகப்பள்ளி ரீதரன் செல்லப்பா ஆகியோரிடமும் சுந்தர ராமசாமியின் முகம் தெரிகின்றது கருநாகப்பள்ளி பரீதரன் ஆகியோரில் மார்க்சியத்தின் பாலி சுரா வுக்குள்ள அக்கறையை விமர்சனத்தைக் காணலாம் காந்தியத்தின்பால் சுரா வுக்குள்ள பற்றுதல் செல்லப்பாவாக உருவெடுத்திருக்கிறது. சம்பத் இதர கோட்பாடுகளை திறந்த மனதுடன் அணுக முற்படுபவர் அதேசமயம் நம்பிக்கையினம் தொனிக்கப் பேசுபவர் இதுவும் கூட சுந்தர ராமசாமியின் பணிபுகளுள் ஒன்றெனப் படுகின்றது.

அந்நியர் வெளியேறிய பிறகு கொஞ்ச காலம் ஏதாவது நல்லது நிகழலாம்" என்ற நப்பாசையில் சிறிது காலம் கழிந்து விட்டது அதன்பின் சீரழிவுகளை தொடர்ந்து கணடு கண்டு மூச்சடைத்துப் போய் விட்டோம் சுணை கெட்டு விட்டது. அரசியல் தளத்தில் எம்முன்னால் நிற்பது ஒரு குனியம் இந்த நிலை இன்று தமிழில் சிந்திப்பவனுக்கும் எழுதுபவனுக்கும் முன்னால் உள்ள ஒரு சவால்

ஆஹா கிருதயுகம் எழுகின்றது வாரீர்" என்று பொய் பேச நெஞ்சைத் தொட்டுக் கொண்டு எழுதுகின்ற எவராலும் முடியவில்லை.

இதற்கு சுந்தர ராமசாமியும் விதிவி லக்கு அல்ல. அவரது படைப்புக்களுள் ஒரு எல்லை வரை மட்டுமே பின்னோக்கிச் செல்லலாம் என்று முதலில் குறிப்பிட்டது இந்த அர்த்தத்தில் தான் முன்னால் உள்ள குனியத்தை எதிர்கொள்ள அவரிடம் திராணி இல்லை. தனது இயலாமையை ஜே ஜே. சில குறிப்புக்கள்" என்னும் நாவலில் பிறரையும் தன்னையும் பரிகசித்து வெளிப்படுத்துகின்றார் அதன் பின்னர் இறந்த காலத்தின் மீதான கனவுலகினுள் அவர் புகுந்து கொண்டதன் அடையாளம் தான் குழந்தைகள் பெண்கள் கனவுகள் என்னும் நாவல்

நாவல் காந்தியவாதிகள் உயிர்ப்புடன் இயங்கிய காலத்தில் நிகழ்கின்றது செல்லப்பா எலிசபெத் டீச்சர் ஆகியோர் அக்கால கட்டத்தின் குறியீடு அனாதையாக ஆனால் உறுதியானவராக இருக்கின்றார் செல்லப்பா ஆனந்தத்துக்கும் செல்லப் பாவுக்கும் இடையேயுள்ள உறவுநாவலின் ரம்மியமான பகுதிகளுள் ஒன்று.

சில கதைமாந்தர்கள் பல வின புட்போட்டில் தொங்கிக் கொணர்டி ருப் பவர்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள் சிலர் தங்களை நாவலுக்குள் திணித்துக் கொள்ள முயலுகிறார்கள் சிலர் அக்கறை பற்றுத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாவலின் பலவீனமான அம்சம் இது

வேனல் பந்தலில் எளப் ஆர் எஸ். அவரது சகபாடிகள் ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்களும் மாந்தோப்பில் பரீதரனுக்கும் அவனது சகாக்களிடையேயும் நடைபெறும் உரையாடல்களும் வாசகன் அவர்களிடையே புகுந்து நாலு கேள்விகள் கேட்க ஏதுவாக அமைந்திருக்கின்றன

பாலு லச்சம் ஆகியோரது மன அவசங்கள் விஞ்ஞானரீதியாக அலசப்படுகின்றன லச்சம் மூர்க்கமான ஒரு போராளி. ஆனால் குழலின் குரூரம அவனை அடித்து வசக்கி கொன்று விடுகின்றது. பாலு நொய்ந்து போன மனமுடையவன ஆனால் கூருணர்வு உள்ளவன் காலத்தின் மீதான அதிருப்தியுடன் அவனை மீண்டும் ஜே ஜே சில குறிப்புக்களில்" சந்திக்கின்றோம்.

முன்னரே கூறியது போல குழந்தைகள் பெண்கள், ஆணிகள்" என்னும் இந்த நாவலை படித்தபின் மீண்டும் அவரது இதர படைப்புக்களைப் படித்தால் கூடுதல் துலக்கம் பெறலாம் ஜே ஜே சில குறிப்புகள் இதன் நீட்சி சன்னல் கிடாரி எங்கள் டீச்சர் பக்கத்தில் வந்த அப்பா விகாசம் முதலிய சிறுகதைகள் இந்த நாவலுடன் நேரடித் தொடர்பு கொண்டவை அவரது இதர சிறுகதைகளும் இந்த நாவலில் ஒளிவீச்சினுள் அகப்படுபவை தான தமிழின் நல்ல நாவல்களுள் குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்பதும் அடங்குகின்றது. ஆனால் தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக இதனை கொள்ள முடியாது தமிழில் உன்னத நாவல் களைப் பெற நாம் இன்னும் காத்திருக்க வேண்டும் சுந்தர ராமசாமி எமது அந்தத் தேவையை நிறைவேற்றுவார் என்று தோன்றவில்லை.