Pages

Friday, September 27, 2019

மரணமும் கவராயமும் ஜோர்ஜ் லூயி போர்ஹே தமிழில் : ரவிசங்கர் ஜெர்லேஸ் :: பவளக்கொடி

மரணமும் கவராயமும் 
ஜோர்ஜ் லூயி போர்ஹே 
விளைவுகளைப்பற்றி அக்கறையின்றி பகுத்தறிந்து லோன்ரோ எடுக்கும் முடிவுகளைப் பயன்படுத்திக்கொண்ட பல பிரச்சனைகளில் பக்கவிப்டஸ்களின் முடிவேயில்லாத மணத்தினூடாக ட்ரிஸ்ட் - லி-ராய் தோட்ட வீட்டில் முடிவடைந்த சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக நடந்த ரத்தமயமான சம்பவங்களைப்போல வினோதமானது - கடுமையான வினோதமானது எனலாம் நாம் - வேறெதுவுமிருக்க வில்லை. எரிக் லோன்ரோ கடைசிக் கொலையைத் தடுக்க தவறினான் என்பது உண்மை. ஆனால் அதை முன்பே எதிர்பார்த்திருந்தானென்பது வேறுபாட்டுக்கிடமில்லாதது. யார்மோலின்ஸ்கியின் அதிர்ஷ்டமற்ற கொலைக்காரனின் அடையாளத்தைப்பற்றி மட்டும் அவன் யூகிக்கவில்லை, ஆனால் ஆடம்பர ஷார்லாக் என்ற மற்றொரு பட்டப்பெயர் கொண்ட ரெட் ஷார்லாக்கின் பங்கையும் அந்த பிசாசுத்தனமான தொடருக்குப்பின் இருந்த ரகசிய வெளியுருத் தோற்றத்தையும் கண்டுபிடித்தான். அந்த குற்றவாளி எண்ணற்ற மற்றவர்களைப்போல்) லோன்ரோவைக் கொல்வதாகத் தன்மேல் சபதமிட்டிருந்தான். ஆனால் பின்னவனைப் பயமுறுத்த என்றும் முடியாது லோன்ரோ தன்னை ஒரு சுத்தமான காரணவாதி என்று நம்பினான் ஒரு அகஸ்ட் டூப்பின் போல் ஆனால் ஒரு சாகஸக்காரனில் கொஞ்சமும் சூதாடியில் கொஞ்சமும் கூட அவனில் இருந்தன 
பாலைவனத்தின் நிறங்கொண்ட தண்ணீரையுடைய முகத்துவாரத்தை ஆக்கிரமித்திருக்கும் அந்த உயர்ந்த முப்பட்டையான ஹோட்டல் டு நார்டில் முதல் கொலை நடந்தது. அந்தக் கட்டிடத்துக்கு (மருத்துவமனையின் வெறுக்கத்தக்க வெண்மையையும் சிறையின் எண்களிட்ட வகுபாட்டையும் bordella வின் பொதுவான தோற்றத்தையும் ஓரளவு தெளிவாகவே இணைக்கும் அதற்கு  டிசம்பர் மூன்றாம் நாளில் மூன்றாவது டால் முடிய மகாசபைக்குபொடோல்ஸ்க்கிலிருந்து பிரமுகராக டாக்டர் மார்ஸெல் யார்மோலின்ஸ்கி வந்தார், சாம்பல் நிறக் கண்களும் சாம்பல் நிறத் தாடியும் கொண்ட மனிதனாக. ஹோட்டல் டுநார்ட் அவரைத் திருப்த்திப்படுத்தியதா என்று நமக்கு என்றும் தெரியவராது, மூன்று வருடக் கார்பேத்தியப் போர்களையும் மூவாயிரம் வருட ஒடுக்கு முறையும் யூதக் கொலைகளையும் தாங்கிக்கொள்ள அனுமதித்திருந்த அதே பழம் எதிர்ப்பின்மையுடன் அதை ஏற்றுக்கொண்டார் 'தளத்தில் அவருக்கொரு அறை தரப்பட்டது. அதற்கு எதிராக இருந்த அறைத்தொகுதி - அபாரத் தன்மையுடையதாயில்லாமலில்லை கலிலியின் நாற்தலைவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டடிருந்தது. யார்மோலின்ஸ்கி இரவு உண்டார், தெரியாத நகரமொன்றைப் பற்றி நிகழ்த்த வேண்டிய ஆராய்ச்சியை அடுத்தநாள் தள்ளிவைத்தார். ஒரு சுவரொட்டியில் அவரது பல புத்தகங்களையும் சில தனிப்பட்ட பொருட்களையும் அடுக்கிவைத்து பிறகு நள்ளிரவுக்கு முன்பாக விளக்கை அணைத்தார். (இப்படியாக அறிவித்தான் பக்கத்து அறையில் தூங்கிய நாற்தலைவர்களின் காரோட்டி) நான்காம் தேதி காலை 11:03 மணிக்கு பிடிஷ் ஸைடுங் கின் ஆசிரியர் அவருக்கு ஒரு அழைப்புக் கொடுத்தார். டாக்டர் பார்மோலின்ஸ்கி பதிலளிக்கவில்லை . முகம் ஏற்கனவே சற்றுக் கறுத்திருக்க அவரது அறையில் ஒரு பெரிய புழக்கத்திலில்லாத கையற்ற மேல்கோட்டுக்குக் கீழாக கிட்டத்தட்ட நிர்வாணமாய்க் கண்டெடுக்கப்பட்டார். முகப்பு கூடத்துக்குத் திறந்த கதவுக்கு அதிகத் தூரத்திலில்லாமல் அவர் கிடந்தார். ஒரு கூரிய கத்திக் காயம் அவரது மார்பைப் பிளந்திருந்தது. சிலமணி நேரங்கள் கழித்து அதே அறையில் பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்படக்காரர்களுக்கு, மற்றும் போலீஸ்காரர்களுக்கு நடுவில் இன்ஸ்பெக்டர் ட்ரெவிரானளபம் லோன் ரோவம் பிரச்சனையைப்பற்றி அமைதியாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். 
- "இங்கே மூன்றுகால் பூனைக்காகத் தேடவேண்டிய அவசியமில்லை" என்று கொண்டிருந்தான் ட்ரெவிரான்ஸ் ஒரு அதிகாரந்தொனிக்கும் சுருட்டை உயர்த்திக் காட் டியவாறு " நமக்கெல்லாம் தெரியும் உலகத்தின் மிகச்சிறந்த நீலக்கற்கள் கலிலீயின் நாற்தலைவர்களுக்குச் சொந்தமானவை. அதைத் திருகும் நோக்கமுள்ள யாரோ தவறுதலாக இங்கே நுழைந்திருக்கவேண்டும். யார்மோலின்ஸ்கி எழுந்தார், கொள்ளைக்காரன் அவரைக் கொல்லவேண்டியதாயிற்று. இது எப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு?" 
_ " இருக்கலாம் ஆனால் சுவாரசியமாயில்லை "பதிலளித்தான் லோன்ரோ" சுவாரசியமாயிருக்க உண்மைக்கு சிறிதளவு கூட கட்டாயமில்லை என்று நீங்கள் பதிலளிப்பீர்கள். உண்மை அந்தக் கட்டாயத்தைத் தவிர்க்கலாம் ஆனால் அந்த தற்காலிக கருத்துக்களை தவிர்க்க முடியாதென்று அப்புறம் நான் உங்களுக்குப் பதிலளிப்பேன். நீங்கள் முன்வைக்கும் தற்காலிகக் கருத்தில் சாத்தியக்கூறு எக்கச்சக்கமாகக் குறுக்கிடுகிறது. இங்கே நம்மிடமிருப்பது ஒரு இறந்த யூத குரு, நான் ஒரு சுத்தமான யூத குருமார்களுக்குரிய விளக்கத்தை விரும்புவேன், ஒரு கற்பனைத் திருடனின் கற்பனை அசாத்தியங்களை அல்ல ". 
நகைச்சுவை உணர்வின்றி ட்ரெவிரானஸ் பதிலளித்தான். யூத குருமார்களுக்குரிய விளக்கங்களில் எனக்கு ஆர்வமில்லை. இந்தத் தெரியாத ஆசாமியைக் குத்திய மனிதனைப் பிடிப்பதில்தான் என் ஆர்வம் இருக்கிறது". 
"அவ்வளவு தெரியாத மனிதனல்ல " திருத்தினான் லோன்ரோ " அவருடைய மொத்த படைப்புகளும் இங்கே இருக்கின்றன. சுவர் அலமாரியிலிருந்த உயரமான புத்தகங்களின் வரிசையைச் சுட்டிக்காட்டினான். "a Vindicatin of the Cabala: An examination of the philosophy of Robert Fludd; sepher yezia" வின் நேர்ச் சரியான மொழிபெயர்ப்பு Biography of the Bal Shem; a History of the Hasidic Hasidic Sec நான்கெழுத்துச்சொல் பற்றிய ஆய்வுப்பிரதி ஜெர்மனியில்) மற்றொன்று பென்ட்யூக்கின் இறைப்பெயர்கள் பற்றியது. அதைப் பயத்துடன் கிட்டத்தட்ட வெறுப்புடன் அணுகினான் இன்ஸ்பெக்டர் பிறகு சிரிக்கத் தொடங்கினான். 
""நான் ஒரு பாவப்பட்ட கிறிஸ்துவன்" என்றான் அவன் உனக்குத் தேவையென்றால் அந்த வீச்சமடிக்கும் தொகுப்புகளை எடுத்துப்போ; யூத மூடநம்பிக்கைகளில் வீணாக்க என்னிடம் எந்த நேரமுமில்லை '', 
" குற்றம் யூத மூடநம்பிக்கைகளின் வரலாற்றுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் " 'முணுமுணுத்தான் லோன்ரோ. 
" கிறிஸ்துவத்தைப் போல என்று மேலும் கூடித் துணிந்தார் பிடிஷ் ஸைடுங் " கின் ஆகிரியர். கிட்டப்பார்வை கொண்ட அவர், கடவுள் நம்பிக்கையற்றவர் மற்றும் சங்கோஜமுடையவர். 
யாரும் அவருக்குப் பதிலளிக்கவில்லை . சிறிய டைப்ரைட்டரிலிருந்த துண்டுக்காகிதத்தில் பின்வரும் முடிவடையாத வாக்கியம் எழுதப்பட்டிருந்ததைப் பிரதிநிதிகளில் ஒருவன் கண்டுபிடித்திருந்தான். 

பெயரின் முதல் எழுத்து கூறப்பட்டுவிட்டது. 
லோன்ரோ புன்னகைப்பதை நிறுத்தினான். திடீரென்று புத்தகப்புழுவாகவோ ஹீப்ரக்காரனாகவோ மாறி இறந்த மனிதனின் புத்தகங்கள் மூட்டைக்கட்டப்பட்டுத் தன் இருப்பிடத்துக்கு கொண்டுசெல்லப்படுமாறு உத்தரவிட்டான் , போலீஸ் விசாரனையைப் பற்றிக் கவலைப்படாமல் அவைகளைப் படிப்பதில் தன்னை அர்பணித்துக்கொண்டான், ஒரு பெரிய எட்டடித் தொகுதி பக்தி சமயக்குழுவை தோற்றுவித்த இஸ்ரேல் பால் ஷெம் டோப்பின் போதனைகளை அவனுக்கு வெளிப்படுத்தியது, மற்றொன்று உச்சரிக்க கூடாத கடவுளின் பெயரான நான்கெழுத்து சொல் பற்றிய பெருமைகளையும் பயங்கரங்களையும், மற்றொன்றில் கடவுள் ஒரு ரகசியப் பெயர் கொண்டிருக்கிறார் என்றும், அதில்தான் (மாஸிடோனியாவின் அலெக்ஸாண்டருக்கு படிகக்கல் கோளத்தை பாரசிகர்கள் காரணமாக கூறுவது போல) ஒன்பதாவது குணக்கூறான அமரத்துவம் - அதாவது பிரபஞ்சத்தில் இருப்பதும் இருந்ததுமாக இருக்கும் அனைத்துப் பொருட்களையும் பற்றிய உடனடி அறிவும் சுருக்கமாக உள்ளது என்ற கோட்பாடும் இருந்தன மரபு, கடவுளின் தொண்ணூற்றொன்பது பெயர்களைக் கணக்கிடுகிறது இரட்டைப்படை எண்கள் மீதுள்ள மாய அச்சத்தினால் அந்த ஒழுங்கற்ற எண்ணைக் கொள்கிறார்கள் ஹீரோயிஸ்டுகள், ஹாஸிடிம்பள், வரிசையின் வெற்றிடம் நூறாவது பெயரான ஒன்றை - முழுமையான பெயர் - குறிக்கிறதென்று காரணங் கூறுகின்றார்கள். 
சில நாட்கள் கழித்து பிடிஷ் ஸைடுங்கின் ஆசிரியர் வந்ததால் இந்தப் பண்டிதக் கூற்றுகளிலிருந்து லோன்ரோதிசை திருப்பப்பட்டான் முன்னவர் கொலையைப்பற்றி பேச விரும்பினார். லான்ரோகடவுளின் பல்வேறு பெயர்களைப்பற்றி விவாதிக்க விரும்பினான். கொலைகாரனின் பெயரைக் கண்டுபிடிப்பதற்காக எரிக் வோன் ரோ கடவுளின் பெயர்களைப்பற்றி படிப்பதற்குத் தன்னை அர்பணித்துக் கொண்டிருக்கிறானென்று மூன்று பத்திகளில் அறிவித்தார் பத்திரிக்கையாளர், பத்திரிக்கையிலின் எளிமைப்படுத்தல்களுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் லோன்ரோ (கோபப்படவில்லை. பழக்கப்பட்டுவிட்ட எந்த மனிதனும் மறுப்பின்றி எந்தப் புத்தகமென்றாலும் வாங்கி கொள்ள வருவானெ என்பதைக் கண்டுபிடித்திருந்த ஒரு வசதியான கடை உரிமையாளன் History of Haridic sect - ன் ஒரு பிரபலமான பதிப்பை வெளியிட்டான். 
இரண்டாவது கொலை ஜனவரி மூன்றாம் தேதி மாலையில் தலைநகரின் மேற்கு புறநகரின் ஏகத்துக்கு ஆளற்ற வெறுமையான மூலையில் நடந்தது. விடியும் நேரத்தில் இந்தத் தனிமையான பகுதிகளில் குதிரையில் ரோந்து போகும் படைவீரன் ஒருவன் மேலங்கியணிந்து ஒரு மனிதன் முகம் தரையில் படும்படி நெடுஞ்சாண்கிடையாகப் பழைய பெயிண்ட் கடையொன்றின் நிழலில் கிடப்பதைக் கண்டான். கரடுமுரடான முகவெட்டு ரத்தத்தில் முகமூடியணிந்திருப்பது போலத் தோன்றியது. ஒரு ஆழமான கத்திக்குத்துக்காயம் அவன் மார்பைப் பிளந்திருந்தது, சுவரில் மஞ்சள் மற்றும் சிவப்பு வைரங்களுக்கு குறுக்காகச் சில வார்த்தைகள் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன. காவலன் அவைகளை எழுத்துக் கூட்டினான். அந்த மதியம் லோன்ரோவும் ட்ரெவிரானஸும் குற்றம் நடந்த தனிமையான இடத்துக்குச் சென்றனர். வாகனத்துக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் நகரம் சிதைந்தது, ஆகாயம் வளர்ந்தது. மேலும் வீடுகள் ஒரு செங்கல் சூலையை விடவோ பாப்லர் மரத்தைவிடவோ 'முக்கியத்துவம் குறைந்ததாக இருந்தன. அவர்களது பரிதாபமிக்க இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள் பிரமாதமான அஸ்தமனத்தை எப்படியோ பிரதிபலிப்பதாகத் தோன்றும் ரோஜா நிறச் சுவர்கள் கொண்ட ஒரு முட்டுச்சந்தின் முடிவு. இறந்த மனிதன் ஏற்கனவே அடையாளங்காணப்பட்டிருந்தான். வடக்குப் புறநகர்களில் சற்று புகழ்பெற்றிருந்த வாகன ஓட்டுநரிலிருந்து அரசியல் அடியாளாக உயர்ந்து பின்பு திருடனாகவும் காட்டிக் கொடுப்பவனாகவும் தேய்ந்து போய் விட்ட அவன் டேனியல் சைமன் அஸிவடோ. (அவர்களுக்கு பொருத்தமாகத் தோன்றியது அவன் சாவின் தனித்துவமான பாணி கத்தியை உபயோகிக்கத் தெரிந்த ரிவால்வரைப்பற்றித் தெரியாத அந்தக் குற்றவாளித் தலைமுறையின் இறுதிப் பிரதிநிதி அஸிவடோ) சாக்பீஸில் இருந்த சொற்கள் பின்வருமாறு. 
பெயரின் இரண்டாவது எழுத்து கூறப்பட்டுவிட்டது 
மூன்றாவது கொலை ஃபிப்ரவரி மூன்றாம் தேதி இரவில் நடந்தது. ஒரு மணிக்கு சற்று முன்பாக இன்ஸ்பெக்டர் ட்ரெவிரானஸின் அலுவலகத்திலிருந்த தொலைபேசி ஒலித்தது. ஒரு ஆவலான ரகசியத்தன்மையுடன் ஒரு கரகரத்த குரலுடைய மனிதன் பேசினான் தன் பெயர் கின்ஸ்பெர்க் எனவும் தக்க சன்மானத்தைப் பொறுத்து அஸிவடோ மற்றும் யார்மோலின்ஸ்கி பலிகள் தொடர்பான சில சம்பவங்களைப்பற்றி தொடர்புகொள்ளத் தயாராயிருப்பதாயும் கூறினான் சீரற்ற சீட்டியொலிகளின் ஒரு சப்தமும் ஹார்ன் ஒலிகளும் தகவல் தருபவனின் குரலை மூழ்கடித்தன. பின்பு தொடர்பு அறுந்துபோனது. குறும்புக்கான (ஏனென்றால் அது கேளிக்கைக் காலம்) சாத்தியத்தை நிராகரிக்காமல், Cosmorama வும் காஃபிக் கடையும், விபச்சாரவிடுதியும், பைபிள் விற்பனையாளர்களும் பக்கத்துப்பக்கத்தில் இருக்கும். அசுத்தமான தெருவான ரூடி டூலோனிலிருக்கும் அந்த வழிப்போக்கர் விடுதியான லிவர்பூல் ஹவுசிலிருந்து தனக்கு அழைப்பு வந்திருக்கிறதென்று கண்டுபிடித்தான். ட்ரெவிரானஸ் உரிமையாளனுடன் பேசினான். பின்னவன் (பணிவில் மூழ்கிப்போன கிட்டத்தட்ட தோல்வியுற்ற பழைய ஐரிஷ்குற்றவாளியான ப்ளாக் ஃபின்னிகன்) இறுதியாகத் தொலைபேசியை உபயோகித்து அங்கே தங்கியிருந்தவன் ஏதோ ஒரு க்ரைஃபியஸ் என்றும் சற்று முன்தான் சில நண்பர்களுடன் சென்றான் எனவும் அவனிடம் கூறினான் பின் வருபவற்றை நினைவு கூர்ந்தான் உரிமையாளன். எட்டு நாட்களுக்கு முன்பாக விடுதியின் மேலுள்ள அறையொன்றை க்ரைஃபியஸ் வாடகைக்கு எடுத்திருந்தான். மேகம் போல் தாடியும் கூர்மையான வெட்டுடைய அவன் கருப்பின் அலங்கோலமாக உடையணிந்திருந்தான். ஃபின்னிகன் (அவன் அந்த அறையை உபயோகப்படுத்தியத்தற்கான ஒரு நோக்கத்தை ட்ரெவிரானஸ் யூகித்தான் கேட்ட வாடகை சந்தேகத்திற்கிடமில்லாமல் அதிகமானது. கூறப்பட்ட பணத்தைத் தயக்கமில்லாமல் செலுத்தினான் க்ரைஃபியஸ். அவன் கிட்டத்தட்ட அறையைவிட்டுப் போகவே இல்லை, மதிய இரவு உணவுகளை அறையிலியே உண்டான், மதுக்கூடத்தில் அவன் முகம் அரிதாகவே அறியப்பட்டிருந்தது கேள்விக்குரியதான அந்த இரவில் ஒரு தொலைபேசி அழைப்பு செல்வதற்கான அவன் கீழ்தளத்துக்கு இறங்கி பின்னிகனின் அலுவலகத்திற்கு வந்தான் ஒரு மூடப்பட்ட வண்டி உணவு விடுதிக்கு முன்பாக நின்றது. வண்டியோட்டி அவன் இருக்கையை விட்டு அசையவில்லை. அவன் ஒரு கரடி முகமூடி அணிந்திருந்தான் என்று பல வாடிக்கையாளர்கள் நினைவு கூர்ந்தார்கள் - வண்டியிலிருந்து கேலிக்கூத்தில் வசனம்பேசா நடிகர்கள் இரண்டுபேர் இறங்கினார்கள். அவர்கள் குள்ளமான உருவமைப்புடனிருந்தார்கள். மேலும் அவர்கள் எக்கச்சக்கமாக குடித்திருந்தார்களென்பதையும் யாரும் கவனிக்கத் தவறவில்லை. கொம்புகளை முழக்கிக்கொண்டு அவர்கள் ஃபின்னிகனின் அலுவலகத்திற்குள் புகுந்தார்கள் அவர்கள் க்ரைஃபியஸைத் தழுவிக்கொண்டார்கள் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரிந்தாலும் கடுமையுடனேயே பதிலளித்தான். யூத மொழியில் சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டார்கள் அவன் கீழ்ஸ்தாயில் கரகரத்த குரலிலும் அவர்கள் போலிக் குரலில் மேல்ஸ்தாயினும் - பின்பு அறைக்குச் சென்றார்கள். கால்மணி நேரத்துக்குள்ளாக மூவரும் இறங்கி வந்தார்கள் மகிழ்ச்சியுடன் தடுமாறிய க்ரைஃபியஸ் மற்றவர்கள் அளவுக்குத் குடித்திருப்பது போல் தோன்றினான். கஷ்டத்துடனும் கிறுகிறுப்புடன் அந்த முகமூடியணிந்த நடிகர்களுக்கு நடுவில் அவன் நடந்தான். (மதுக்கடையிலிருந்த ஒரு பெண் மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை வைரங்களை நினைவு வைத்திருந்தாள் ) இரண்டு முறை தடுமாறினான். இரண்டு முறை நடிகர்களால் பிடிக்கப்பட்டு தாங்கிக் கொள்ளப்பட்டான். சதுரமான தண்ணீர் தேக்கத்தைச் சுற்றியிருந்த உள்துறைமுகத்தை நோக்கி நகர்ந்தவாறு மூவரும் வண்டியில் ஏறி மறைந்தனர். வண்டியின் படி கட்டிலிருந்து நடிகர்களில் கடைசியானவன் பாலம் தாங்கிக் கூடத்திலிருந்த கற்பலகை ஒன்றில் ஆபாசமான படம் ஒன்றையும் ஒரு வாக்கியத்தையும் கிறுக்கினான். 
ட்ரெவிரானஸ் அந்த வாக்கியத்தைப் பார்த்தான் செயலளவில் உண்மையாகத் தோன்றுமளவு அது யூகிக்ககூடியதாயிருந்தது. அது சொன்னது. 

பெயரின் எழுத்துக்களில் இறுதியானது கூறப்பட்டுவிட்டது 
பிறகு அவன் க்ரைஃபியஸ் - கின்ஸ்பெர்க்கின் அறையை ஆராய்ந்தான் ஒரு சீரற்ற நட்சத்திரமாகத் தரையில் ரத்தம் இருந்தது, மூலைகளில் ஒர ஹங்கேரிய பிராண்டு சிகரெட்களின் மிச்சங்கள், ஒரு அலமாரியில் லத்தீனில் ஒரு புத்தகம் லூஸ்டெனின் Philogus HebraCO - GraeCUS (1739) பல் கையெழுத்துப் பிரதிகளுடன் ட்ரெவிரானஸ் அவைகளை வெறுப்புடன் 'பார்வையிட்டு லோன்ரோவைக் கவனிக்கச் செய்தான். பின்னவன் தன் தொப்பியைக் கழற்றாமல் வாசிக்கத் தொடங்கியபோது இன்ஸ்பெக்டர், சாத்தியமுள்ள கடத்தலுக்கான வேறுபாடுள்ள சாட்சிகளை விசாரித்துக் கொண்டிருந்தான். நான்கு மணிக்கு அவர்கள் அகன்றார்கள் இறந்த சூழ்ச்சித் தன்மைகளின் மேல் அவர்கள் மிதித்துச் சென்று 'கொண்டிருந்தபோது ட்ரெவிரானஸ் சொன்னான். 
"இந்த இரவின் விசயங்கள் வெறும் கேலிக்கான ஒத்திகையாயிருந்தால் ?" 
எரிக்லோன்ரோ புன்னகைத்தான், பின்பு PhiloguIS ன் முப்பத்து மூன்றாவது நீண்ட சொற்றொடர் கொண்ட (அது அடிக்கோடிடப்பட்டிருந்தது) பகுதியை வாசித்தான். Dies Judacorum incipit ad solis occasu usque ad solis occasum diei sequentis. 
"இதன் அர்த்தம் அவன் மேலும் கூறினான். "ஹீப்ரூநாள் அஸ்தமனத்தில் தொடங்கி மறு அஸ்தமனம் வரை நீடிக்கிறது. 
இன்ஸ்பெக்டர் ஒரு வஞ்சப்புகழ்ச்சியை முயன்றான். இந்த இரவு உங்களுக்கு கிடைத்ததிலேயே மிக முக்கியமான தகவல் அதுதானா? 
இல்லை. கின்ஸ்பெர்க் உபயோகித்திருந்த ஒரு வார்த்தை இன்னும் மதிப்புமிக்கது. " 
சீரான மறைவுகளை மத்தியான செய்தித்தாள்கள் கண்டுகொள்ளாமல் விடடுவிடவில்லை. லா க்ரூஸ் டி லா எஸ்படா சென்ற மறைபொருட் குறியீட்டமர்வு மகாசபையின் விரும்பத்தக்க ஒழுங்கையும் சீர்மையையும் அவைகளுடன் வேறுபடுத்திக் காட்டியது. எல் மார்டிரில் எர்ன்ஸ்ட் பலாஸ்ட், மூன்று யூதர்களைக் கொலை செய்ய மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டுவிட்ட இந்த ரகசியமான மற்றும் சிக்கனமான யூதக் வாருமுறையும் அத்தான். எதிரெதிர் கண்ணாணங்களிலிருந்தும் : 
*********
அதைத்திறந்தான். 

ஒரு வட்டமான மஞ்சள் நிலவு சோகமான தோட்டத்திலிருந்த இரண்டு மௌனமான நீரூற்றுகளை விவரித்தது. லோன்ரோ வீட்டை ஆராய்ந்தான். சிறிய அறைகள் வழியாகவும் நடைபாதைகள் வழியாகவும் போலி உள்முற்றங்களுக்குச் சென்றான். ஒவ்வொருமுறையும் அதே உள்முற்றத்துக்கு தூசிபடிந்த மாடிப்படிகளில் ஏறி வட்டமான சிற்றறைகளை அடைந்தான். எதிரெதிர் கண்ணாடிகளில் எண்ணற்றுப் பெருக்கமடைந்தான். பல்வேறு உயரங்களிலிருந்தும் பல்வேறு கோணங்களிலிருந்தும் அதே தனியான தோட்டத்தைக் காண்பிக்கும் ஜன்னல்களைத் திறப்பதற்கோ, பாதி திறப்பதற்கோ 
அவன் களைப்படைந்தான். உள்ளே தூசிபடியாமல் தாள்களால் மூடப்பட்ட மேஜை நாற்காலிகளும் பருத்தித் துணியால் பிணைக்கப்பட்ட ஷாண்ட்லியர்களும். ஒரு படுக்கையறை அவனைத் தயங்க வைத்தது அதில் சீனக்களிமண் பூந்தொட்டியில் ஒரு பூ முதல் தொட்லில் பழங்கால இதழ்கள் உதிர்ந்துபோயின . இரண்டாவது தளத்தில் மேல்தளத்தில் வீடு முடிவற்றதாகவும் விரிந்து கொண்டே போவதாகவும் தோன்றியது. வீடு இவ்வளவு பெரிதில்லை, அவன் நினைத்தான். மற்றவைகள்தான் அவற்றைப் பெரிதாக்கி காட் டுகின்றன. மங்கலான ஒளி, ஒத்திசைவு, கண்ணாடிகள், பல வருடங்கள், என் பழக்கமின்மை , தனிமை. 
சுழற்படிக்கட்டுகள் வழியாக அவன் பலகணிக்கு வந்தான். ஜன்னலின் வைரங்கள் வழியாக ஆரம்பச் சாயங்காலத்தின் நிலா ஒளிர்ந்தது. அவை மஞ்சளாக சிவப்பாக, பச்சையாக இருந்தது. ஒரு பிரமிக்க வைக்கும் கிறுகிறுக்கவைக்கும் மறுநினைவு அவனைத் தாக்கியது. 
வலிமையாகவும் ஆக்ரோஷமாகவுமிருந்த இரண்டு குள்ளர்கள் அவன் மேல் பாய்ந்து அவனிடமிருந்த ஆயுதங்களை அகற்றினார்கள், வெகுஉயரமாயிருந்த மற்றொருவன் வெகு தீவிரத்துடன் அவனுக்கு வணக்கம் செலுத்திச் சொன்னான். 
நீ கருணைமிக்கவன் எங்களுக்கு ஒரு இரவையும் பகலையும் மிச்சப்படுத்திவிட்டாய். 
அது ரெட் ஷார்லாக் அவர்கள் லோன்ரோவுக்கு விலங்கிட்டார்கள். பின்னவன் பின்பு தன் குரலை மீட்டெடுத்தான். 
"ஷார்லாக் நீ ரகசியப் பெயரைத் தேடிக்கொண்டிருக்கிறாயா? 
ஷார்லாக் வித்தியாசமின்றி நின்று கொண்டடேயிருந்தான் இந்த சிறு சண்டையில் அவன் பங்கெடுத்திருக்கவில்லை. மேலும் லோன்ரோவின் ரிவால்வரை வாங்க கையை சற்றுக் கூட நீட்டவில்லை அவன் பேசினான். அவன் குரலில் ஒரு களைத்த வெற்றியை பிரபஞ்சமளவு வெறுப்பை வெறுப்புக்கு குறைவில்லாத சொகத்தை கண்டான் லோன்ரோ. இல்லை என்றான் ஷார்லாக் இன்னும் தற்காலிகமனதும் அழியக்கூடியதுமானதை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் எரிக் லோன்ரோவைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பாக ரூடிடுலோனில் ஒரு சூதாட்ட விடுதியில் என் சகோதரனைக் கைது செய்து அவனை ஜெயிலுக்கு அனுப்பினார். என் வயிற்றில் ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கிக் குண்டோடு என் ஆட்கள் என்னை நழுவவைத்தார்கள். ஒன்பது பகல்களும் என்பது இரவுகளும் இந்தத் தனிமையான ஒத்திசைவுள்ள தோட்ட வீட்டில் வேதனையுடன் படுத்துக்கிடந்தேன். காய்ச்சல் என்னை அழித்துக்கொண்டிருந்தது. விடியல்களையும் அஸ்தமன ஒளியையும் கவனிக்கும் இரட்டை முகங் கொண்ட யானஸ் என் கனவுகளுக்கும் விழிப்புக்கும் பயங்கரத்தை தந்தவன் எள் உடலை வெறுக்கத்தொடங்கினேன். இரண்டு கண்கள் இரண்டு முகங்கள் இரண்டு நுரையீரல்கள் என்பது இரண்டு முகங்கள் அளவுக்கு 
பவளக்கொடி 22 
இருந்திருந்தான், நான்காவது பலி ஷார்லாக்காகவே இருக்கலாமென்ற தூரமான சாத்தியத்தையும் எண்ணினான், லோன்ரோ. பின்பு அந்தக் கருத்தை ஒதுக்கினான். சிக்கலைக் கிட்டத்தட்டத் தீர்த்துவிட்டான் அவன் வெறும் சந்தர்பங்கள் நிஜம் (பெயர்கள் சிறை ஆவணங்கள், முகங்கள், நீதி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள்) இப்போது அவனை ஆர்வங்கொள்ள வைக்கவில்லை. அவன் சற்றுப் பிரயாணிக்க விரும்பினான். மூன்று மாதங்களாக உட்கார்ந்தவாறே நடந்த விசாரணையிலிருந்து ஓய்வெடுக்க விரும்பினான். கொலைகளுக்கான விளக்கம் ஒரு பெயரற்ற முக்கோணத்திலும் ஒரு தூசி படிந்த கிரேக்க வார்த்தையிலும் இருக்கிறதென்று அவன் நினைத்தான் மர்மம் இப்போது ஸ்படிகம் போல் தெரிந்தது அவனுக்கு. அதற்காக நூறு நாட்களை அவன் அவமானத்துடன் செலவழிக்கவேண்டியிருந்தது. 
ஒரு அமைதியான நரப்பும் நிலையத்தில் ரயில் நின்றது. வோன்ரோ இறங்கினான். அது விடியலைப்போலத் தோன்றும் ஆளற்ற மத்தியானங்களில் ஒன்று. கலங்கலான மழைத்தண்ணீர் தேங்கிய சமவெளியின் காற்று ஈரமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கிராமப்புறத்தினோடாக நடக்கத்தொடங்கின் லோன்ரோ. அவன் நாய்களைப் பார்த்தான் ஒரு பக்கமாகப் பிரிந்து சென்ற இருப்புப்பாதையில் கார் ஒன்றைப் பார்த்தான், தொடுவானத்தைப் பார்த்தான் தேங்கிய மெலிதான மழைநீரைக் குடித்துக்கொண்டிருந்த வெள்ளி நிறக்குதிரையைப் பார்த்தான் கறுப்பு யூகலிப்டஸ்களால் கிட்டத்தட்ட அதே உயரத்துக்குச் சூழப்பட்டிருந்த ட்ரிஸ்ட்-லி-ராயின் நீள் சதுர நிலாமேடையைப் பார்த்தபோது இருண்டுக்கொண்டிருந்தது. பெயரைத் தேடுபவர்களிடமிருந்து அவனை கிட்டத்தட்ட ஒரு விடியலும் ஒரு இரவு கவிழும் நேரமுமே (கிழக்கிலுள்ள ஒரு பழங்கால ஜொலிப்பும் மேற்கிலுள்ள இன்னொன்றும்) பிரித்ததென்று நினைத்தான். 
ஒரு துருப்பிடித்த இரும்பு வேலிதோட்ட, வீட்டின் சுற்று எல்லையை விவரித்தது. பிரதானக் கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே நுழைவதற்கு அவ்வளவாக நம்பிக்கையின்றி லோன்ரோ இடத்தைச் சுற்றி வந்தான். ஏறமுடியாத கதவுக்கு மறுபடி வந்து கம்பிகளுக்கூடாக இயந்திரத்தனமாகத் தனது கையை வைத்துத் தாழ்பாளைச் சந்தித்தான் . இரும்பின் கிரீச்சிடும் ஒலி அவனை ஆச்சரியப்படுத்தியது. ஒரு வலிமிகுந்த எதிர்ப்பின்மையுடன் கதவு பின்னோக்கிச் சென்றது. 
'ஒத்திருந்து பாட குழிவுகசைவுகளாலும் அருகிலிருந்துகளின்மேல் 
- குழப்பமான தலைமுறைகளின் இறுகிய நொறுங்கிய இலைகளின் மேல் மிதித்து லோன்ரோ யூகலிப்டஸ்களினூடாக முன்னேறினான். அருகிலிருந்து பார்த்தால் ட்ரிஸ்ட் லி-ராய் தோட்டவீடு நோக்கமற்ற ஒத்திசைவுகளாலும் வெறித்தனமான பிரதிகளாலும் நிரம்பியிருந்தது. ஒரு இருண்ட குழிவுக்குள்ளிருந்த டயானா மற்றொரு குழிவுக்குள்ளிருந்து டயானாவுடன் ஒத்திருந்தது. ஒரு பால்கனிஇன்னொரு பால்கனியில் பிரதிபலிக்கப்பட் டது. இரட்டை மாடிப்படிகள் இரட்டைக் கைப்பிடி தாண்டும் கட்டைகளுக்கு அழைத்துச்சென்றன. இரட்டை முகம் கொண்ட ஹெர்மிஸ் ஒரு அரக்கத்தனமான நிழலைச் செலுத்தினான். மேல்தளத்துக்குக் கீழாக ஒரு குறுகிய வெனிஷியத் திரையை அவன் பார்த்தான். அதை தள்ளினான், சில பளிங்குப் படிக்கட்டுகள் ஒரு சுரங்க அறைக்குள் இறங்கின. இப்போது கட்டிடக்கலைஞனின் விருப்பங்களை உணர்ந்து கொண்ட லொன்ரோ: எதிர்த்த சுவரில் மற்றொரு மாடிப்படி இருக்குமென்று யூகித்தான். அதைக் கண்டுபிடித்தான் ஏறி தன் கைகளை உயர்த்தி பொறிக் கதவைத் திறந்தான். 
ஒரு பிரகாசமன ஒளி அவனை ஒரு ஜன்னலுக்கு அழைத்துச்சென்றது 
மரணமும் 23 
கொலைகளிலுள்ள சகித்துக்கொள்ள முடியாத தாமதங்களைப்பற்றி விமர்சித்தார். பல கூர்மையான பகுத்தறிவாளர்கள் இந்த மும்மர்மத்தில் வேறெந்தத் தர்வையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பிடிஷ் ஸைடுங் எதிர் செமிட்டிய சதி இருக்ககூடுமென்ற கொடுமையான யூகத்தை நிராகரித்தது. தெற்கின் புகழ்பெற்ற துப்பாக்கிக் காரனான நாகரீக ரெட் ஷார்லாக் தன் மாவட்டத்தில் இதுபோன்ற குற்றங்கள் என்றும் நடக்காதென்று உறுதியிட் டுக் கூறினான். மேலும் தண்டிக்கப்படத்தக்க கவனமின்மைக்காக இன்ஸ்பெக்டர் ஃப்ரான்ஸ் ட்ரெவிரானஸ் மேல் குற்றம் சாட்டினான். 
மார்ச் முதலாம் தேதி இரவில் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் ஒரு சீலிடப்பட்ட உறையை இன்ஸ்பெக்டர் பெற்றான். அதைத் திறந்தான் பாருக் ஸ்பினோஸா என்று கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதமும் தெளிவாக Bacdelker லிருந்து கிழிக்கப்பட்ட ஒரு நகரத்தின் விவரமான வரைபடமும் உறையில் இருந்தன. பெயின்ட் கடைமேற்கிலும் ரூ டி டூலோனி 'லிருந்த வழிப்போக்கர் விடுதியும் ஹோட்டல் டு நார்த்தும் ஒரு புராணீகச் சமபக்க முக்கோணத்தின் மூன்று மூலை உச்சிப்புள்ளிகளாக இருப்பதால் மார்ச் மூன்றாந் தேதி நான்காவதாக ஒரு கொலை நடக்காது என்று யூகித்தது கடிதம். முக்கோணத்தின் சீர்மையை எடுத்துக்காட்டி யது வரைபடம். அந்த மிக ஜியோமிதமான வாதத்தைச் சோர்வுடன் படித்த 'ட ரெவிரான்ஸ், கடிதத்தையும் வரைபடத்தையும் - கேள்வியின்றி இந்தப் பைத்தியக்காரத்தனங்களுக்குப் பொருத்தமான லோன்ரோவுக்கு அனுப்பினான். 
எரிக் லோன் ரோ அவைகளைப் படித்தான் உண்மையில் மூன்று இடங்களும் சமதூரத்தில் இருந்தன. காலத்தின் ஒத்திசைவு (டிசம்பர் மூன்று, ஜனவரி மூன்று ஃபிப்ரவரி மூன்று) தூரத்திலும் ஒத்திசைவு ...... திடீரென்று மர்மத்துக்குத் தீர்வு காணும் புள்ளியில் இருப்பதுபோல் உணர்ந்தான் ஒரு செட் அளவுகோல்களும் ஒரு கவராயமும் அவனது விரைவான உள்ளுணர்வைப் பூர்த்தி செய்தன. அவன் புன்னகைத்தான் நான்கெழுத்துச்சொல் (சமீபத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட ) என்ற வார்த்தையை உச்சரித்து பின்பு இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்தான் . 
"போன இரவு நீங்கள் அனுப்பிய சமபக்க முக்கோணத்துக்கு நன்றி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அது எனக்கு உதவியுள்ளது. இந்த வெள்ளிக்கிழமை குற்றவாளிகள் ஜெயிலில் இருப்பார்கள் நாம் ஆசுவாசத்துடன் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். 
அப்போது அவர்கள் நான்காவது கொலைக்குத் திட்டமிடவில்லை? 
அவர்கள் நான்காவது கொலைக்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதால்தான் துல்லியமாக நாம் ஆசுவாசத்துடன் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். 
'லோன்ரோ தொலைபேசியை வைத்தான் ஒரு மணி நேரத்துக்குப் பின்பாக தென்னக ரயில்வேயின் ரயிலொன்றில் பிரயாணித்துக்கொண்டிருந்தான். ஆளரவமற்ற தோட்டவீடான ட்ரிஸ்ட் - லி - ராயை நோக்கிய திசையில். நம் கதையின் நகரத்துக்குத் தெற்காக கலங்கலான தண்ணீருடன் ஒரு சிறிய குருட்டு ஆறு ஓடுகிறது, கழிவாலும் சமையலறைக் குப்பைகளாலும் பெருமையிழந்து, ஒரு அரசியல் தலைவனின் பாதுகாப்பின் கீழ் ப்பாக்கிக்காரர்கள் வாழும் தொழிற்சாலைகளாலான புறநகர் மறுபக்கத்திலிருக்கிறது இருப்பதிலேயே பிரபலமான துப்பாக்கிக் காரனான ரெட் ஷார்லாக் தன் வருகையைப்பற்றித் தெரிந்து கொள்வதற்கென்றால் நிறையச் செலவழித்திருப்பான் என்ற நினைப்பில் லோன் ரோ புன்னகைத்துக்கொண்டான். அவடோ ஷார்லாக்கின் கூட்டாளியாக 
பவளக்கொடி 124 
அரக்கத்தனமானவைதான் என்று உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டேன். ஒரு ஐரிஷ்காரன் என்னை ஏசுமேல் நம்பிக்கை கொண்டவனாக மாற்ற முயன்றான். கோயிமம் சொற்றொடரை என்னிடம் திரும்பச் சொன்னான். அனைத்து சாலைகளும் ரோமுக்கே செல்கின்றன. இரவில் என் பிரமை அந்த உருவகத்தில் சக்தி பெற்றது. வடக்கே தெற்கே செல்வதாக அனைத்து சாலைகளும் நடித்தாலும் உண்மையில் என் சகோதரன் இறந்து கொண்டிருந்த ஜெயிலாகவும் ட்ரிஸ்ட் - லி- ராய் தோட்ட வீடாவுமேயான ரோமுக்கே செல்வதால் உலகம் ஒரு சுழல் பாதை என்றும் அதிலிருந்து தப்பிச் செல்வது முடியாததென்றும் நினைத்தேன். அந்த இரவுகளில் இரண்டுமுகங்களால் பார்க்கும் கடவுள்கள் காயச்சலின் அனைத்தக் கடவுள்கள் மற்றும் கண்ணாடிகளின் கடவுள்கள் பெயரால் என் சகோதரனைச் சிறைப்பிடித்த மனிதனைச்சுற்றி ஒரு சுழற்பாதைநெப்வேனென்று ஆணையிட்டேன். அதை நெய்துவிட்டேன். அது உறுதியாக உள்ளது : கச்சாப்பொருட்கள் -ஒரு சிறந்த முரண் கோட்பாட்டாளன் ஒரு கவராயம், ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு இனக்குழு, ஒரு கிரேக்க வார்த்தை, ஒரு கத்தி, பெயிண்ட் கடையின் வைரங்கள். 
முடியாததே உலகம் வும் ட்ரிஸ்டடித்தாலும் , 
இணையிட்டேன். அப்பிடித்த மனற்றும் கண்ணாடிகள் 
- வரிசையின் முதல் விஷயம் எனக்கு தற்செயலாக வாய்த்தது சில கூட்டாளிகளுடன் அதிலொருவன் டேனியல் அஸ்வடோ நாற்தலைவர்களின் நீலக்கற்களைத் திருடத் திட்டமிட் டிருந்தேன் அஸிவடோ எங்களுக்கு துரோகம் செய்தான். நாங்கள் அவனுக்கு கொடுத்த முன்பணத்தில் குடித்துவிட்டு ஒரு நாள் முன்னதாகவே அந்த வேலையை செய்யத் தலைப்பட்டான் ஹோட்டலின் பிரம்மாண்டத்தில் அவன் வழிதவறிப்போனான் காலை இரண்டுமணி, வாக்கில் யார்மோலின்ஸ்கியின் அறைக்குள் நுழைந்தான். தூக்கமின்மையால் அவதிப்பட்ட பின்னவன் எழுதத் தொடங்கியிருந்தான் உண்மையில் கடவுளின் பெயர் பற்றிய கட்டுரைக்கான சில குறிப்புகளில் ஈடுபட்டிருந்தான் பெயரின் முதல் எழுத்து கூறப்பட்டுவிட் டது என்ற வார்த்தைகளை அவன் ஏற்கனவே எழுதியிருந்தான். அவனைச் சப்தம் போடாமலிருக்குமாறு அஸிவடோ எச்சரித்தான் யார் மோலின்ஸ்கி ஹோட்டலின் பணியாளர்களை எழுப்பக்கூடிய மணியை நோக்கிக் கையை கொண்டுசென்றான். மார்பில் ஒரு குத்தின் மூலம் அஸிவடோ எதிர்கொண்டான். அரை நூற்றாண்டு வன்முறை மிகவும் சுலபமானதும் நிச்சயமானதும் சொல்லுவதுதான் என்று அவனுக்குப் போதித்திருந்தது.. பத்து நாட்கள் கழித்து யிடிஷ் லைடுங் வழியாக பார்மோலின்ஸ்கியின் மரணத்துக்கான சாவியை அவன் எழுத்துக்களில் நீ தேடுவதாக அறிந்தேன். எtoty (t the Fastic 32 - 2 வாசித்தேன். கடவுளின் பெயரை உச்சரிப்பதிலுள்ள புனிதப் பயம் அனைத்திலும் வலிமை வாய்ந்ததும் ரகசியமானதும் பெயர்தான் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறதென்று அறிந்தேன். ரகசியப் பெரைத் தேடி சில ஹாஸிடிம்கள் நரபலி கொடுக்குமளவு சென்றிருக்கிறார்களென்று கண்டுபிடித்தேன். ஹாஸ்டிம்கள் தான் யூத குருவை பலி கொடுத்தார்களென்று நீ யூகிப்பாய் என்று எனக்கு தெரிந்திருந்தது.யூகத்தை நிருபிப்பதை என் வேலையாக எடுத்துக்கொண்டேன். 
மார்ஸெல் யார்மோலின்ஸ்கி டிசம்பர் மூன்றாம் மேதி இரவில் இறந்தான் இரண்டாவது பலிக்காக நான் ஜனவரி மூன்றாம் தேதி இரவைத் தேர்வு செய்தேன். அவன் வடக்கில் இறந்தான் . இரண்டாவது பலிக்கு மேற்கு பொருத்தமாயிருந்தது. தேவையான பலி டேனியல் அணிவடோதான். அவனுக்கு மரணம் தேவைப்பட்டது. அவன் யோசனையற்றவன் ஒரு துரோகி அவனுடைய பயம் மொத்த திட்டத்தையும் அழித்துவிடக்கூடும். எங்களில் ஒருவன் அவனைக் குத்தினான் அவனுடைய பிணத்தை மற்றதுடன் இணைக்க பெயின்ட் கடையின் வைரங்களில் எழுதினேன் - பெயரின் இரண்டாவது எழுத்து உச்சரிக்கப்பட்டுவிட்டது. 
மரணமும் 23 
போலித், விருந்து உச்சரிக்க்க 
ப் பொதய நீ 
மூன்றாவது கொலை ஃபிப்ரவரி மூன்றாம் தேதி தயாரிக்கப்பட்டது ட்ரெவினாஸ் யூகித்தது போல் அது வெறும் ஏமாற்றே. நான்தான் க்ரைஃபியஸ் கின்ஸ்பெர்க் கின்ஸ்பர்க் என் நண்பர்கள் என்னை கடத்தும் வரை ரு டி நீலோனின் மோசமான அறையில் (மெலிதான போலித் தாடியுடன்) முடிவடையாத ஒரு வாரத்தைப் பொறுத்துக்கொண்டேன். வாடியின் படிக்கட்டிலிருந்து அவர்களில் ஒருவன் ஒரு காணில் எழுதினான் = 

பெயரின் எழுத்துக்களில் கடைசியானது உச்சரிக்க்பட்டுவிட்டது. அந்த வாக்கியம் தொடர் கொலைகள் மூன்று என்று வெளிக்காட்டியது. இப்படியாகப் பொது மக்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். இருந்தாலும் காரணவாதியான எரிக்லோன்ரோவாகிய நீ தொடரின் எண்ணிக்கை நான்கு எனப் புரிந்து கொள்ள அனுமதிக்கும் தடயங்களை நான் அங்குமிங்குமாக வைத்தேன். வடக்கில் ஒரு மர்ம எச்சரிக்கை மற்றவை கிழக்கிலும் மேற்கிலுமாக நீ தேடுமாறு நான்காவது மர்ம எச்சரிக்கை தெற்கில், நான்கெழுத்துச்சொல் கடவுளின் பெயர் tெh நான்கு எழுத்தக்களால் நடிகர்களும் பெயிண்ட் கடை தலையமும் நான்கு பள்ளிகளை சுட்டிக்காட் டின. லூஸ்டனின் சஞ்சிகையில் நான் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடிக்கோடிட்டேன் ஹிப்ருக்கள் அஸ்தமனத்திலிருந்து அஸ்தமனம் வரை நாளை கணக்கிடுகிறார்களென்று அந்தப்பகுதி தெரிவிக்கிறது. அந்த நாளை அந்தப்பகுதி மாதத்தின் நான்காம் தேதியில் மரணங்கள் நிகழ்கின்றன என்று அறியப்படுத்துகிறது. நான் சமபக்க முக்கோணத்தை ட்ரெவிரானஸீக்கு அனுப்பினேன். விடுபட்டுபோன புள்ளியை நீ சேர்த்துக் கொள்வாய் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டேன் ஒரு துல்லியமான சாய் சதுரத்தை உருவாக்கும் புள்ளி உனக்காகக் காத்திருக்கும் நேரந்தவறாத மரணத்தை முன் கூட்டியே தீர்மானிக்கும் புள்ளி அனைத்தையும் முன்பே யோசித்துவிட்டேன். எரிக் லோன்ரோ உன்னை ட்ரிஸ்ட் --லி- ராயின் தனிமையை நோக்கி ஈர்ப்பதற்கு. 
- லோன்ரோ ஷார்லாக்கின் கண்களைத் தவிர்த்தான். மரங்களும் வானமும் கலங்கலான மஞ்சள் பச்சை சிவப்பாகப் பிரிக்கப்பட்டுக்கொண்டிருந்ததை அவன் பார்த்தான் மெலிதான குளிரை உணர்ந்தான். மேலும் ஒரு சொந்தமற்ற கிட்டத்தட்ட பெயரற்ற சோகத்தையும். ஏற்கனவே இரவாகியிருந்தது. தூசிபடிந்த தோட்டத்திலிருந்து ஒரு பறவையின் பிரயோஜனமற்ற குரல் வந்தது. கடைசி முறையாக ஒத்திசைவுள்ள மற்றும் தொடர்ச்சியான சாவுகளின் பிரச்சனையைப்பற்றி லோன்ரோ யோசித்தான். 
உன் சுழல் பாதையில் மூன்று கோடுகளுள்ளது அதிகப்படியானது என்றான் இறுதியில் ஒரு தனி நேர்க் கோடாயிருக்கும் ஒரு கிரேக்கச் சூழற்பாதையைப்பற்றி எனக்குத் தெரியும் அந்தக் கோட்டின் வழியாகப் பல சிந்தனையாளர்களும் தங்களைத் தொலைத்திருப்பதால் ஒரு சாதாரண துப்பறிவாளனும் செய்யலாம் தான். ஷார்லாக் இன்னொரு பிறவியில் நீ என்னை வேட்டையாடும் போது ஒரு குற்றத்தை A யில் செய்வதாக வைத்தக்கொள் (அல்லது செய்) பின்பு இரண்டாவது குற்றத்தை 8 - யில் A யிலிருந்து எட் டு கிலோமீட்டர் தூரத்தில் பின்பு மூன்றாவது குற்றத்தை 0 யில் A லிருந்தும் B யிலிருந்தும் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் செய், பிறகு எனக்காக 2 யில் காத்திரு -A-யிலிருந்தும் யிேலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், மறுபடியும் இரண்டக்கும் இடைப்பட்ட பாதி தூரத்தில் மறுபடி இரண்டுக்கும் நடுதல் பாதி வழியில் என்னை 0 யில் கொல், இப்போது என்னை நீ ட்ரிஸ்ட் லி ராயில் கொல்லப்போவது போல, 
- அடுத்த தடவை உன்னைக் கொல்லும் போது பதிலளித்தான் ஷார்லாக் உனக்கு அந்தச் சுழற்பாதையைத் தருகிறேன், பார்க்கமுடியாததும் முடிவடையாததுமான ஒரு ஒற்றைக் கோட்டால் ஆனதை 
அவன் சில அடிகள் பின்னால் நகர்ந்தான். பிறகு வெகு ஜாக்கிரதையுடன் சுட்டான் 
தமிழில் : ரவிசங்கர் ஜெர்லேஸ் 
பவளக்கொடி 0 26

குறுக்குவெட்டுப் பாதைகளாலான தோட்டம் -ஜோர்ஜ் லூயி போர்ஹே :: கல்குதிரை தமிழில் : நாகார்ஜுனன்

0 அர்ஜென்டினா 0 
குறுக்குவெட்டுப் பாதைகளாலான தோட்டம்  -ஜோர்ஜ் லூயி போர்ஹே :: கல்குதிரை 
தமிழில் : நாகார்ஜுனன்

'' தத்துவ அறிவு தூங்கும்போது பூதங்களை இடறிவிடுகிறது'' என்றார் ஹெகல். போர்ஹெவின் ரகசிய அற்புதக் கதைகளில் இந்த பூதங்கள் பேசுகின்றன. பின்வரும் கதையில் ட்ஸ்யுய்பென்னின் ''களைப்படையாத நாவலைப் பற்றிப் பேசும் போது, தன்னுடைய கதையைத்தான் போர்ஹெ 'சொல்ல வருகிறார். கதைகளின் உருவங்கள் அடைந்து தீரும் அலைச்சல்களைக் குழப்பியடிக்க போர்ஹெ அந்த உருவங்களை முரண் -எழுத்துருக் களாக மாற்றித் திரியவிடுகிறார். சாதாரணத் துப்பறியும் உளவாளியின் அலைச்சல், இலக்கியக் கோட்பாடு பற்றிய தத்துவார்த்த விவாதமாக வரலாறு என்ற அடையாளம் குறித்த போதையாக உருமாறும் விந்தை போர்ஹெ-வின் இக்கதையில் நடக்கிறது. உலகின் இதுவரை சொல்லப்பட்ட, சொல்லப்படாத கதைகள் அத்தனையும் போர்ஹெவின் உறைவாள் என்ற பேனாவின் வழி இறங்கக் கூடிய சாத்தியப்பாடு உள்ளது. 
தன்னுடைய வாசகனை எந்த நேரத்திலும் ஏமாற்றி இழக்கத் தயாராக உள்ள போர் ஹெ, 1921-இல் எழுத ஆரம்பித்தார். மூன்று கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு எழுதிய சிறுகதைகள் Inqusitons, A Universal History of Infamy, Labyrinths, The Aleph என்று பல தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 1950-களில் நூலகத்தில் தனது வேலையையும் கண் பார்வையையும் இழந்த பின்பு அவருடைய கதைகள் உலக மொழிகளில் வெளியிடப்பட்டு, பரபரப்பாகப் பேசப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன போது, போர்ஹெவை விவாதிக்காத விமர்சகரே இல்லாத நிலை இருந்தது. 
The Garden of Forking Paths என்ற பின் வரும் கதை 1941-இல் எழுதப்பட்டது. சக எழுத்தாளரான விக்டோரியா ஓகாம்போவுக்கு போர் ஹெ கதையை அர்ப்பணிக்கிறார். 
குறுக்குவெட்டுப் பாதைகளாலான தோட்டம் -ஜோர்ஜ் லூயி போர்ஹே 
தமிழில் : நாகார்ஜுனன் 
303 | கல்குதிரை 

லிட்டெல் ஹார்ட் எழுதியுள்ள முதல் உலகப் போரின் வரலாறு புத்தகத்தின் 22-ஆம் பக்கத்தில், 1916 ஜூலை 24-ஆம் தேதி நடப்பதாகத் திட்டமிடப்பட்டு அப்புறம் 29-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டு குறிப் பிட்ட ஒரு தாக்குதலைப் பற்றி நீங்கள் படிக்கலாம். 13 பிரிட்டிஷ் பட்டாளங் களும் 1,400 காலாட் படையினரும் ஸெர்ரே-மாண்டபான் அணிமீது தொடுத்த பெரும் தாக்குதல் அது. தாக்குதல் தள்ளிப் போடப்பட்டதற்கு அப்போது பெய்து விட்ட பேய்மழைதான் காரணம் என்று ஹார்ட் குறிப் பிடுகிறார் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. 
ட்ஸிங் - டாவ் நகரத்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக கொஞ்சக் காலம் பணியாற்றிய டாக்டர் யு சுன் சொல்லி எழுதப்பட்டு அவராலேயே சரிபார்க்கப் பட்டு கையெழுத்து இடப்பட்ட அறிக்கையானது, இதே தாக்குதல் ஒத்திப் போடப் பட்டதற்கான வேறொரு விளக்கத்தை முன்வைத்துப் புதிய ஒளியை அளிப்பதாக இருக்கிறது. முதல் இரண்டு பக்கங்கள் காணாமல் போய் விட்ட அந்த அறிக்கை பின்வருமாறு: 
தொலைபேசியை அப்படியே வைத்துவிட்டேன். அதில் ஜெர்மானிய மொழியில் என்னிடம் பதில் பேசிய குரல் கேப்டன் ரிச்சர்ட் மாடெனுடையது என்று உடனே எனக்குத் தெரிந்துவிட்டது. விக்டர் ருன பெர்க்சின் அறைக்கு கேப்டன் ரிச்சர்ட் மாடென் வந்துவிட்டான் என்றால் அந்நிகழ்வு எங்களுடைய தற்போதைய பதற்றங்களுக்கும் ஏன், எங்கள் உயிர்களுக்குமேயான-ஒரு முடிவாக அமையப் போகிறது என்று எனக்குப் புரிந்து விட்டது. எங்கள் உயிர்கள் போகப்போகும் காலம் வந்துவிட்டதை மிக இரண்டாம் பட்சமான ஒரு விஷயமாகவே நான் கருதினேன். அல்லது கருதிக்கொண்டிருக்க வேண்டும், என்பதுதான் இங்கே முக்கியம். 
ஆக, ருனபெர்க் கைது செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப் பட்டிருக்கலாம். சூர்யாஸ்தமனத்துக்குள் என் கதியும் அப்படித்தான் ஆகப் போகிறது  ஏனென்றால், கேப்டன் ரிச்சர்ட் மாடென் தன் இலக்கை அடையாமல் திருப்தி அடையப் போவதில்லை. அப்படிப்பட்ட கடமை வெறியானது அவனுள்ளே இயங்கிக் கொண்டிருந்தது. ஐரிஷ்காரனாகப் பிறந்து பிரிட்டில் உணவுத்துறையில் பணியாற்றி வந்த அவன் மீது திறமையின்மை மற்றும் 
-1. விக்டர்ருனபெர்க் என்கிற ஹான்ஸ் ராலெனர் ஒரு ஜெர்மானிய உளவாளி. தன்னைக் கைது செய்ய வாரண்ட் கொண்டுவந்தவனை ருனபெர்க் துப்பாக்கியுடன் எதிர்கொண்டான். வாரண்ட் கொண்டு வந்த கேப்டன் ரிச்சர்ட் மாடென் சுயபாதுகாப்பு கருதி சுட அதில் ருனபெர்க் குண்டடி பட்டு இறந்தான். (ஆ-ர்) 

தேசத்துரோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வீசப்பட்டு வந்ததால், தன்னை நிரூபித்துக் கொள்ள உதவிடும் எந்த ஒரு வாய்ப்பையும் அவன் நழுவவிடப் போவதில்லை! அதுவும் ஜெர்மானிய பேரரசின் இரண்டு உளவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து, மரணத்துக்கு அனுப்பும் அருமையான வாய்ப்பை அவன் நிச்சயமாக நழுவவிட மாட்டான். 
படியேறி என் அறைக்குச் சென்றேன். அபத்தமாகக் கதவைத் தாழிட்டு விட்டு அந்தக் குறுகலான இரும்புக் கட்டிலில் மல்லாந்து விழுந்தேன். ஜன்னலின் ஊடே பழக்கப்பட்டுப்போன கூரைகளையும் கலங்கலான மாலை ஆறுமணிச் சூரியனையும் பார்த்தேன், 
- எந்தவித சகுனங்களும் குறியீடுகளும் அற்று நிர்மலமாக இருந்த அந்த நாள் தவிர்க்க முடியாத என் மரணத்துக்கான நாளாக இருப்பது எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. தந்தையின் மரணத்தைச் சந்தித்திருந்த போதிலும் ஹைஃபெங் என்ற அமைப்பொப்புமை கொண்ட தோட்டத்தில் சிறுவனாக அலைந்திருந்த போதிலும் இப்போது நான் மரணத்தை தழுவத்தான் போகிறேனா? இப்படி மரணத்தின் வாசலில் நிற்கும் ஒருவனுக்கு அந்தக் குறிப்பிட்ட கணத்தில் என்னவெல்லாம் சாத்தியமாகும் சித்திக்கும் என்று யோசித்தேன். இப்படியெல்லாம் நடந்து நூறு நூறாண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்வு புதியதான ஒன்றாகவே நடந்தேறுகிறது. விண்ணிலும் மண்ணிலும் கடலிலுமாக ஏகப் பட்ட மனிதர்களுக்கு இதுவரை நடந்துவிட்ட இதே நிகழ்வு புதியதாகவே எனக்கு நடக்கிறது.... 
'தேப்டன் ரிச்சர்ட் மாடெனின் குதிரை மூஞ்சி நினைவுக்கு வந்து இந்த எண்ணங்களைத் தடை செய்து வெளியேற்றுகிறது. வெறுப்பும் பயமும் என்னைச் சூழ்ந்து கொண்டன, கேப்டன் ரிச்சர்ட் மாடெனை நான் ஏமாற்றி விட்ட படியால், என் தொண்டை இப்போது தூக்குக் கயிறுக்காக ஏங்குகிறபடியால், இந்த பயத்தைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமிருப்பதாகத் தெரிய வில்லை. இருந்தாலும் வெறுப்புக்கும் பயத்துக்கும் இடையில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. எனக்கு அந்த முக்கிய ரகசியம் தெரிந்து போய் விட்டதை கேப்டன் ரிச்சர்ட் மாடென் என்ற உற்சாகமான அந்த வீரன் அறிந்து கொள்ள சாத்தியமில்லை. ஆங்க்ர நதியோரத்தில் பிரிட்டிஷாரின் புதிய ராணுவதளம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் பெயர் தான் அந்த ரகசியம். 
சாம்பல்நிற வானத்தின் குறுக்கே பாய்ந்த பறவையைக் குருட்டாம் போக்கில் விமானமாக்கி, அந்த ஒரு விமானத்தைப் பலவிமானங்களாக ஆக்கினேன். பிரெஞ்சு வானத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த அவலமான செங்குத்தான குண்டுகளைப் பொழிந்து அந்த பிரிட்டிஷ் ராணுவதளத்தை அழித்தொழித்தன. இதற்கிடையில் குண்டொன்று என் வாயைத் துளைத்துக் கிழிப்பதற்குள், எப்படியாவது அந்த ரகசியப் பெயரை, ஜெர்மனி வரை கேட்குமளவுக்கு, இரைந்து கத்திவிட முடியாதா என்று பார்த்தேன். மனித ரீதியான என் குரல் அப்போது மிகவும் பலவீனமடைந்திருந்தது. இந்த நிலையில் எங்கள் மேலதிகாரிக்குக் கேட்கிறாற்போல் கத்த எப்படி என்னால் முடியும்? சோகை பிடித்த அந்த வெறுக்கத்தக்க மனிதருக்கு, ருனபெர்க்கும் நானும் ஸ்டாஃபோர்ட்ஷயரில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் தெரியும். எங்கள் அறிக்கைக்காகக் காத்துக் கொண்டு, செய்தித் தாள்களைப் புரட்டிக் கொண்டு, பெர்லினில் வறண்டு போன அந்த அலுவலகக் கட்டிடத்தில் அவர் உட்கார்ந்து கொண்டிருப்பவர் 
தப்பித்தாக வேண்டும்'' என்று உரக்க சொல்லிக் கொண்டேன். சப்தமின்றி, அர்த்தமற்ற அந்த மெளனத்தின் துல்லியத்தில், எழுந்து கொண்டடேன். கேப்டன் ரிச்சர்ட் மாடென் எனக்காகக் காத்திருப்பதை உணர்ந்தவனைப் போல் உட்கார்ந்து கொண்டேன். என்னிடமிருந்த உபகரணங்கள் எதுவும் பயனளிக்கப் போவதில்லை என்பதை நிரூபித்துக் கொள்வதற்காகவோ என்னவோ என் சட்டைப்பைகளைத் துழாவிப் பார்த்துக் கொண்டேன். எதிர்பார்த்ததைப் போலவே சில சமாச்சாரங்கள் இருந்தன - அமெரிக்க கைக்கடிகாரம் ஒன்று, நிக்கல் செயின் ஒன்று, சதுர நாணயம் ஒன்று, ருனபெர்க்கின் அறைக்கான இப்போது என்னை மாட்டிவிடக் கூடிய, பயனற்ற - சாவிகள் அடங்கிய கொத்து, அந்த போலி பாஸ்போர்ட், ஒரு கிரவுன் இரண்டு ஷில்லிங்குகள் ஒரு சில பென்ஸ் நாணயங்கள், ஒரே ஒரு குண்டு அடங்கிய அந்தக் கைத்துப்பாக்கி... என் தைரியத்தை மிகைப் படுத்திக் கொள்வதற்காக அபத்தமாக அதைக் கையிலெடுத்து எடைபார்த்துக் கொண்டேன். துப்பாக்கிச் சப்தம் நீண்ட தூரம் வரை கேட்கும் என்று குழப்பமாக யோசித்தேன். பத்தே நிமிடங்களில் என் திட்டம் தயாராகி விட்டது. என்னிடமிருந்த ரகசியத்தை சரியான இடத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கக்கூடிய சக்தி கொண்ட ஒரே ஒரு மனிதனின் பெயர் அந்த தொலைபேசி அட்டவணையில் காணப்பட்டது. அரைமணி நேரம் ரயிலில் சென்றால் அடையக்கூடிய ஃபென்டன் என்ற புறநகர்ப்பகுதியில் அவன் வீடு இருந்தது. 
நான் ஒரு கோழைதான். என் திட்டம் அபாயகரமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்ற போதிலும் அது நிறைவேற்றப்படப் போகிற இக்கட்டத்தில் தான் ஒரு கோழைதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஜெர்மனிக்காக இத்தகைய செயலில் நான் ஈடுபடுவதாக நினைக்கக் தேவையில்லை. என்னை உளவாளி என்கிற அடிமைத்தனத்துக்குள் சிக்க வைத்துவிட்ட காட்டுமிராண்டி நாடாகிய ஜெர்மனியைப் பற்றி யாதொரு கவலையும் எனக்கில்லை. அதுமட்டுமின்றி, பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவருடன் ஒருமணிநேரம் மட்டுமே பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை அந்த பிரிட்டிஷ் நாட்டவர் , ஜெர்மானியக் கவிஞன் கதேயைப் போலத்தான் நடந்து கொண்டனர். அந்த ஒரு மணி நேரத்தில் அவர் ஒரு கதேதான். 
என் இனத்தவர்களை - என்னுள் கலந்து போய் விட்டிருந்த மூதாதையர்களை என் மேலதிகாரியானவர் மோசமாக நினைத்ததுதான் இத்தகைய திட்ட நிறைவேற்றலில் நான் ஈடுபட்டதற்கான காரணம். 'மஞ்சள் இனத்தவன் ஒருத்தனால் அவருடைய ராணுவங்களைக் காப்பாற்ற முடியும்' என்று நிரூபித்துக்காட்ட நான் விரும்புகிறேன். இப்போது கேப்டன் ரிச்சர்ட் மாடெனிடமிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும். திடீரென்று இப்போது அவன் வந்து என் கதவில் தட்டி என்னைக் கலவரப்படுத்திவிட முடியும்..... மெதுவாக உடைகளை அணிந்து கொண்டேன். கண்ணாடிமுன் நின்று எனக்கு விடை கொடுத்துவிட்டுக் கீழே சென்று அமைதியான அந்தத் தெருவைக் கண்காணித்தேன் 
ஸ்டேஷன் வீட்டிலிருந்து அதிக தூரம் இல்லை. நடக்க முடியும் என்றாலும் டாக்ஸியைப் பிடிப்பதே உசிதம் என்று கருதினேன். ஆளரவமற்ற தெருவில் என்னை அடையாளம் கண்டுபிடிப்பது சுலபம்; அப்போது, அந்த அளவற்ற நிலையில், அடையாளம் காணப்பட்டு மாட்டிக் கொண்டும் விடுவேன் என்பதால் டாக்ஸியிலேயே சென்றேன். இருந்தாலும் ஸ்டேஷனின் பிரதான வாசலுக்குக் கொஞ்சம் முன்னரே டாக்ஸியை நிறுத்தச் சொன்னேன். வேண்டுமென்றே வலியான நிதானத்துடன் இறங்கினேன். ஆஷ்குரோவ் கிராமத்துக்கே நான் சொல்ல வேண்டும் என்றாலும் அதைத் தாண்டிய வேறொரு ஸ்டேஷனுக்கு பயணச்சீட்டு வாங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் அதாவது சரியாக எட்டுமணி ஐம்பது நிமிடத்துக்கு - வண்டி புறப்பட இருந்தது. அடுத்த வண்டி ஒன்பதரைக்குத்தான் என்பதால் ஓடினேன். பிளாட்ஃபாமில் ஓர் ஆத்மாவும் இல்லை. பெட்டிகளுடே ஓடும்போது சில விவசாயிகள், யாருடைய மரணத்துக்காகவோ துக்கம் அனுஷ்டிக்கும் ஒரு பெண், டாஸிடஸின் Annals படித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் மற்றும் காயமடைந்துவிட்ட, சந்தோஷமான சிப்பாய் ஒருவன் ஆகியோரை எதிர் கொண்டேன்... வண்டி ஒருவழியாகக் கிளம்பியவுடன், எனக்கு அடையாளம் தெரிந்த ஒருவன் வேகமாக பிளாட்ஃபார்மின் எல்லையில் ஓடிவந்து கொண்டிருந்தான். அவன்தான் கேப்டன் ரிச்சர்ட் மாடென் என்று தெரிந்தவுடன், பயத்தைத் தருவித்துவிட்ட அந்த ஜன்னலிலிருந்து விலகி இருக்கையின் மூலை யில்போய் அப்படியே சுருங்கிக் கொண்டு விட்டேன் நான். 

அழித்தொழிக்கப்பட்ட நிலையிலிருந்து சந்தோஷமிக்க நிலைக்குத் தாவினேன். எங்கள் இருவரிடையேயான யுத்தம் தொடங்கிவிட்டதையும் 
பெ ன தாக்குதலை விதிவசத்தால் நாற்பது நிமிடம் வரையிலாவது தள்ளிப் போட்டுவிட்டதையும் எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது சிறிய வெற்றிதான் என்றாலும் நான் அடையப்போகும் இறுதிக்கட்ட வெற்றிக்கான குறியீடு என்று கூறிக்கொண்டேன். வண்டி புறப்படும் நேரத்தைக் காட்டிய அந்த அட்டவணை என்னைத் தப்புவித்தது என்றும் அந்தத் துல்லியமான அவகாசம் கிடைத்திராவிட்டால் நான் கைது செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப் பட்டிருக்கலாம் என்றும் எனக்குள் கூறிக்கொண்டேன். என் கோழைத்தனமான சந்தோஷம் எங்களை இன்னும் அதிக சாகசங்களுக்கு உந்தித்தள்ளுவதாக இருந்தது. வீர தீர சாகசங்களை வெற்றிகரமாக நிகழ்த்திவிடுபவனாக என்னைக் கருதிக்கொள்ள அது இடமளித்தது. எனது இந்த பலவீனத்திலிருந்து நான் உருவாக்கிக்கொண்ட பலம் என்னைவிட்டு அகலாத ஒன்றாயிற்று. ஒவ்வொரு நாளும் மனிதனானவன் இன்னும் மோசமான திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவனாக ஆவது இப்படித்தான். இதேகதியில் மனித இனம் போனால் போராளிகளையும் கொள்ளைக்காரர்களையும் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றிய என் கணிப்பு பின்வருமாறு: மோசமான திட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வரும் அத்திட்டத்தை ஏற்கனவே நிறைவேற்றி சாதனை புரிந்துவிட்டவராக தம்மை எண்ணிக்கொள்ளவேண்டும். இறந்தகாலத்தைப் போலவே, மாற்றிக் கொள்ள முடியாத, எதிர்காலம் ஒன்றைத் தம்மீது திணித்துக்கொண்டிருக்க வேண்டும். 
- என் கடைசி நாளான அந்த நாள் மங்கி மறைந்து கொண்டிருப்பதையும் இரவானது பரவிக்கொண்டிருப்பதையும் ஏற்கனவே மரணித்து விட்டிருந்த என் கண்கள் பதிவு செய்து கொண்டிருக்க, நான் பயணித்தேன். சாம்பல் மரங்களிடையே வண்டி ஓடிக்கொண்டிருந்தது. வயல்களின் நடுவே ஓரிடத்தில் நின்றது, ஸ்டேஷனின் பெயரை யாரும் சொல்லவில்லை. (ஆஷ்குரோவ் தானே?'' என்று பிளாட்ஃபாரத்தில் இருந்த சிறுவர்களைக் கேட்டேன். "ஆஷ்குரோவ் தான்.'' என்றனர். இறங்கினேன். 
- அப்போதுதான் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் ஒளி பிளாட்ஃபாரத்தை மூழ்கடித்தது. ஆனால் சிறுவர்களின் முகங்கள் நிழல்களில் தங்கிவிட்டன. அவர்களில் ஒருவன் ''டாக்டர் ஸ்டீபன் ஆல்பர்ட்டின் வீட்டுக்குத்தானே போகிறீர்கள்' என்று கேட்டான். என் பதிலுக்குக் காத்திராமல் இன்னொருவன் சொன்னான்: ''அவர் வீடு இங்கிருந்து தூரம்தான். ஆனால் இடதுபுறமாகவே சென்று, வருகிற ஒவ்வொரு சந்திப்பிலும் இடதுபுறமாகத் கரும்பினால், காணாமல் போகாமல் அந்த வீட்டைச் சென்று அடைவீர்கள். 1

என்னிடமிருந்து கடைசி நாணயத்தை அவர்களிடம் வீசி எறிந்துவிட்டு படியிறங்கி, ஆளற்ற அந்தத் தெருவில் நடக்கலானேன். மெதுவாக இறங்கிச் சென்றது தெரு. குப்பையாக இருந்தது. மேலே இலைகள் பின்னிப்பிணைந்து கொண்டன. நிலவு வட்டமாகத் தொங்கி என்னுடன் வருவதாகத் தெரிந்தது. 
- எப்படியோ கேப்டன் ரிச்சர்ட்_மாடென் என் திட்டத்தைத் தெரிந்து கொண்டு விட்டான் என்று ஒருகணம் நினைத்தேன், அது சாத்தியமில்லை என்று உடனே எனக்குத் தெரிந்துவிட்டது. எப்போதுமே இடதுபுறமாகச் செல்லவேண்டும், என்று அந்தச் சிறுவன் என்னிடம் கூறியது, புதிர்வழிகள் (labyrinths) சிலதின் மையத்தை அடைவதற்கான பொதுஉபாயம் ஒன்றையே எனக்கு நினைவுபடுத்தியது, புதிர் வழிகள் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். யுனான் மாகாண ஆளுனராக இருந்த ட்ஸ்யுய் பென் என்பவரின் பேரன் நான். பதவியைத் துறந்துவிட்ட அவர், ஹங் ஓ மெங் நாவலில் காணப் படுவதைவிடவும் அதிகப்பாத்திரங்கள் கொண்ட ஒரு நாவலை எழுத முற்பட்டார், அந்த நாவலிலுள்ள ஒரு புதிர் வழியில் அத்தனை பாத்திரங்களும் காணாமல் போய்விடுவார்கள். பதின் மூன்று வருடங்கள் இத்தகைய செயல் பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால் யாரோ ஓர் அந்நியன் அவரைக் கொன்றுவிட்டான். நாவல் அரைகுறையாக நிற்கிறது. அதன் புதிர்வழி இன்னும் விடுவிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் மரங்களின் அடியில் தொலைந்துபோன அந்தப் புதிர் வழியைக் கொஞ்சம் தியானித்தேன் நான். மலையொன்றின் ரகசிய நகரத்தில் அந்தப் புதிர் துல்லியமாக உறைந்திருப்பதாகவும் - நெல்வயல்களால் அழிக்கப்பட்டு தண்ணீரில் அந்தப்புதிர் மூழ்கிவிட்டதாகவும் - எண்கோணச் செவ்வகங்களாலும் நின்றுபோய்விடும் பாதைகளாலும் அமைந்திருந்த அந்தப் புதிர் அவற்றைத்தாண்டி நதிகளாலும் பிரதேசங்களாலும் பேரரசுகளாலும் உருவாவதாகவும் இன்னும் எப்படி யெல்லாமோ தான் கற்பனை செய்து கொண்டேன்... புதிர் வழிகளாலான புதிய புதிர் வழி ஒன்றைக் கற்பனை செய்து கொண்டேன். இறந்தகாலத்தையும் எதிர் காலத்தையும் உள்ளடக்கி நட்சத்திரங்களையும் ஏதோ ஒரு வகையில் ஈடுபடுத்தும் அந்தப் புதிர் வழியைக் கற்பனை செய்து கொண்டேன். இந்த மாயபிம்பங்களில் உழன்று கொண்டிருந்த எனக்கு, யாராலோ பின்தொடர் வதற்காகச் சபிக்கப்பட்டவன் நான் என்ற உண்மை மறந்தே போய்விட்டது. உலகை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஓர் அரூபப் பார்வையாளனாக நிர்ணயமற்ற காலகட்டம் வரையிலும், என்னை நான் உணர்ந்துகொண்டி ருந்தேன். குழப்பமான, வாழ்ந்து கொண்டிருந்த, அந்த கிராமப்புறமும் நிலவும் அந்த நாளின் எஞ்சியிருந்த நேரமும் என்னைப் பாதித்துக்கொண்டிருந்தன தெருவின் இறக்கம் நான் களைப்படைவதற்கான சாத்தியப்பாட்டை மறுதலித்தது. அந்த மாலைப்பொழுது சுகந்தமாகவும் அளவிடற்கரியதாகவும்  ஆகிக்கொண்டிருந்தது. தெருவானது இறங்கி வெளிறித்தெரிந்த பசும்புல்டையே குறுக்குவெட்டாகப் போனது. உச்சஸ்தாயியில் எதுகை மோனையுடன் காற்றுடன் கலந்து வந்துகொண்டிருந்த சங்கீதம் இலைகளா 
பட துாரத்தாலும் உருமாறிக்கொண்டிருந்தது. ஒரு மனிதன் இதர மனிதர் "ககு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம்; இதர மனிதர்களின் ஒரு சில கணங்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம்; ஆனால்ஒரு தேசத்துக்கோ மின்மினிப்பூச்சிகளுக்கோ வார்த்தைகளுக்கோ தோட்டங்களுக்கோ நதிச்சுழல் களுக்கோ சூர்யாஸ்தமனங்களுக்கோ அவன் எதிரியாக இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன். இப்படியாக, துருப்பிடித்த உயரமான ஒரு கேட்டின் முன்பு வந்து நின்றேன். அந்த கேட்டின் இரும்புக்கிராதிகளுக்கு இடையே உயரமான மரங்களடங்கிய ஒரு சோலையையும் அதன் நடுவில் ஒரு மரவீட்டையும் கண்டேன். சட்டென்று இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடிபட்டன. முதலாவது ஒரு சாதாரணமான விஷயம்; இரண்டாவது விஷயத்தை என்னால் நம்பவே முடியவில்லை! நான் கேட்ட சங்கீதம் அந்த மரவீட்டியிருந்துதான் வந்து கொண்டிருந்தது; ஆனால் அது சீனதேசத்து சங்கீதம் என்பது தான் ஆச்சர்யம்! சீனதேசத்து சங்கீதமாக அது இருந்ததால்தான் கேள்வி கேட்காமல் நான் அதை ஏற்றுகொண்டிருக்க வேண்டும். அங்கே இருந்த மணியையோ பித்தானையோ அழுத்தி நான் கூப்பிட்டேனா, அல்லது கைகளைத் தட்டி ஒலி எழுப்பி யாரையாவது அழைத்தேனா என்று எனக்கு நினைவில்லை. ஆனால் துல்லியமான அந்த சங்கீதம் மட்டும் தொடர்ந்துகொண்டிருந்தது. 
- பிரதான வீட்டின் பின்புறத்திலிருந்து கைவிளக்கு ஒன்று என்னை நெருங்கியது. தாளவாத்தியக்கருவியின் வடிவத்திலும் நிலவின் வண்ணத்திலுமாக அமைத்த அந்த விளக்கை சில சமயங்களில் மரங்கள் மறைத்து ஒளியிழக்கச் செய்தன. உயரமான ஒரு மனிதன் அதைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். ஒளிவெள்ளத்தில் அவன் முகம் எனக்குத் தெரிய வில்லை. கேட்டைத் திறந்துவிட்டு என் தாய்மொழியிலேயே அவன் மெதுவாகக் கூறினான்: 
ஹ்ஸி மெங் என் தனிமையைச் சீராக்க இன்னும் முயன்று கொண்டிருக்கிறார் போலும்! தோட்டத்தைப் பார்க்க உங்களுக்கு இஷ்டம் தானே?'' 
- எங்கள் தாதரக அதிகாரிகளின் பெயரொன்றை அடையாளம் கண்டு கொண்ட நான் பதிலளித்தேன், கொஞ்சம் கலங்கிப்போய்;  தோட்டமா? 
''குறுக்கு வெட்டுப்பாதைகளாலான தோட்டம், ஆம்!'' 
  என் நினைவை ஏதோ கலக்கிவிட்டபடியால் புரிந்துகொள்ள முடியாத நிச்சயதன்மையுடன் கேட்டேன் : ''என் மூதாதையர் ட்ஸ்யுய் பென்னின் தோட்டமா?'' 

''ட்ஸ்யுய் பென் உங்கள் வணக்கத்துக்குரிய மூதாதையரா! உள்ளே வாருங்கள்.'' 
- அந்த ஈரப்பாதை என் சிறு பிராயத்தில் கண்டவற்றைப்போல் குறுக்கும் நெடுக்கும் சென்றது. கீழைத்தேச, மேலைத் தேச புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகத்தை இருவரும் வந்தடைந்தோம். மஞ்சள்பட்டில் வைத்துத் தைக்கப் பட்டிருந்த அந்தப் புத்தகங்களை உடனே அடையாளம் கண்டுகொண்டேன், ஒளிமிக்க அரச வம்சத்தில் வந்த மூன்றாவது பேரரசரால் தொகுக்கப்பட்ட அந்தத் தொலைந்துபோன கலைக் களஞ்சியம் அதுவரை அச்சேறாமலேயே இருந்தது. வெண்கல ஃபீனிக்ஸ் பறவையை அடுத்து ஒரு கிராமஃபோன் தட்டு சுழன்றுகொண்டிருந்தது. ரோஜாப்பூக் கொத்து அடங்கிய ஜாடி ஒன்றையும் அதை அடுத்து எங்கள் கைவினைஞர்கள் பாரசீகத்திலிருந்து பிரதி செய்து வைத்திருந்த குறிப்பிட்ட நீல நிறத்தாலாகிய இன்னொரு ஜாடியையும் கூட நான் அடையாளம் கண்டேன். 
புன்முறுவலுடன் ஸ்டீபன் ஆல்பர்ட் என்ற அந்த மனிதன் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தான். நான் ஏற்கனவே கூறியபடி உயரமாயிருந்த அவன், செதுக்கினாற்போன்ற முக அம்சங்களைக் கொண்டு, சாம்பல் கண்களையும் சாம்பல் நிற தாடியையும் உடையவனாயிருந்தான். ஒரே சமயத்தில் மதபோதகரைப் போலவும் மாலுமியைப் போன்றும் தோற்றமளிப்பவனாக இருந்தான். சீனதேசக் கலாச்சாரத்தைப் படித்து அறிஞனாவதற்கு முன்பு டியன்ஸ்டின் நகரத்தில் மதபோதகராக இருந்ததாக அப்புறம் என்னிடம் 
அவன் கூறினான். 
_ தரையை ஒட்டிய நீளமான இருக்கையில் இருவரும் அமர்ந்தோம். ஜன்னலுக்கும் சுவரிலிருந்த உயரமான வட்டக் கடிகாரத்துக்கும் முதுகைக் காட்டிக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். என்னைத் துரத்துகிற கேப்டன் ரிச்சர்ட் மாடென் அங்கு வந்துசேர இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும் என்றும் என் திட்டம் செயலாக்கப்படுவதை அதுவரை ஒத்திப்போடுவதில் தவறில்லை என்றும் கணித்துக்கொண்டேன். 
- ('ட்ஸ்யுய் பென்னின் தலைவிதி ஆச்சர்யகரமாக அமைந்து போய் விட்டது,'' ஸ்டீபன் ஆல்பர்ட் , என்னிடம் கூறினான்: ''தன் சொந்த மாநிலத்துக்கு ஆளுநரான அவர், வான சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் வல்லுனராக இருந்தவர். மரபு நூல்களுக்கு ஒயாமல் உரை எழுதுவ தில் தலைசிறந்தவர். அதுங்க ஆட்டத்தில் புலி. கையெழுத்துக் கலையில் (Calligraphy) கரை கண்டவர். இந்தத் துறைகளையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு புத்தகத்தையும் ஒரு புதிர்வழியையும் தயாரிப்பதில் தமது எஞ்சிய வாழ்நாளையெல்லாம் அவர் செலவிட்டார். ஆளுனராக இருந்தவர், அந்தப் பதவியைத் துறந்ததன் மூலம் ஒடுக்குமுறையையும் அதை எதிர்த்த நீதிச்செயல் பாட்டையும் ஒருசேரக் கைவிட்டார். அடிக்கடி தாம் இளைப்பாறிய படுக்கையையும் அனுபவித்துச் சாப்பிட்ட விருந்துகளையும் தமது உலக ஞானத்தையும் ஒருசேரத் துறந்துவிட்டார். பதின்மூன்று வருடங்களாக ஊடுருவிப் பார்க்கப்படக் கூடிய தனிமையான கொட்டகையில் தன்னைத் தாழிட்டுக்கொண்டு அந்தப் புத்தகத்தையும் புதிர் வழியையும் தயாரிக்க முற்பட்டார். அவர் இறந்தபோது விட்டுச் சென்ற குழப்பமான கையெழுத்துப் படிகளைக் கண்டு அவருடைய வாரிசுகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவற்றை எரித்துவிடவே அவருடைய குடும்பத்தார் விரும்பினர் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அவருடைய உயிலைச் செயலாக்கும் உரிமை பெற்ற ஒருவர் மட்டும் - அவர் ஒரு தாவோயிசத் துறவியோ, பௌத்த பிட்சுவோ நினைக்கிறேன் - அவற்றைப் பதிப்பித்தாக வேண்டும் என்று கூறிவிட்டார்." 
 அந்தத் துறவியை இன்றுவரை ட்ஸ்யுய் பென்னின் வாரிசுகளான நாங்கள் திட்டிக்கொண்டிருக்கிறோம். அவற்றைப் பதிப்பித்தது அர்த்தமற்ற செயல். முரண்பட்ட பிரதிகளின் நிச்சயமற்ற ஒரு குவியல்தான் அந்தப் புத்தகம்! ஒருமுறை மட்டுமே அதைப் படித்துப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக, மூன்றாம் அத்தியாயத்தில் இறந்துபோகும் நாயகன், நான்காம் அத்தியாயத்தில் உயிருடன் இருப்பான்... இப்படிப்பட்ட புத்தகத்தைத்தான் ட்ஸ்யுய் பென் எழுதினார்! அவர் அமைக்க முற்பட்ட அந்த புதிர்வழியும்கூட, '' 
அரக்குக் கோலமிட்ட உயரமான ஒரு மேஜையைக் காட்டி ஸ்டீபன் ஆல்பர்ட் சொன்னார் : ''இதோ அந்தப் புதிர்வழி!'' 
அட, தந்தத்தில் செய்யப்பட்ட புதிர் வழியா? இதைவிடச் சிறிதாக ஒரு புதிர் வழியை அமைக்க முடியுமா என்ன?'' 
குறியீடுகளான ஒரு புதிர் வழி!'' ஆல்பர்ட் என்னைத் திருத்தினான் : காலத்தினால் அமைந்த கண்ணுக்குத் தெரியாத புதிர் வழி அது. காட்டு மிராண்டித்தனமான பிரிட்டிஷ்காரனாகிய எனக்கு, இந்த ஊடுருவிப் பார்க்கத் தக்க மர்மத்தை விடுவிக்குமாறு விதிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி! இந்தப் புதிர் அமைக்கப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டன. இதன் விவரங்கள் இப்போது யாரிடமும் சிக்கவில்லை. இருந்தாலும் 
ஸ்யய் பென் இந்தப் புதிர் வழியை எப்படி அமைத்திருப்பார் என்பது பற்றி சில உண்மைகளை இன்றும் சொல்லிவிட முடியும். அவற்றை உங்களுக்கு விளக்குகிறேன்.'' 
ஸ்டீபன் ஆல்பர்ட் தொடர்ந்தான் : 'ட்ஸ்யுய் பென் தமக்குள் என்ன சொல்லிக்கொண்டிருப்பார் தெரியுமா - 'இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக  வாழ்க்கையிலிருந்து விலகப் போகிறேன்' என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்பார். இன்னொரு சமயத்தில், இந்தப் புதிர் வழியை அமைப்பதற்காக வாழ்க்கையிலிருந்து விலகப்போகிறேன்' என்று கூறிக்கொண்டு சென்றிருப்பார். ஆக, புத்தகமும் புதிரும் இருவேறு விஷயங்கள் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். யாருக்குமே புத்தகமும் புதிரும் ஒன்றேதான் என்ற உண்மை புலப்பட்டிருக்காது! 
'ட்ஸ்யுய் பென் தஞ்சம் புகுந்த ஊடுருவிப் பார்க்கத்தக்க தனிமையான வீடானது ஒரு தோட்டத்தின் நடுவில் அமைந்திருப்பது தற்செயலான ஒரு விஷயம் என்று நான் நினைக்கவில்லை. பௌதிக ரீதியான ஒரு புதிர்வழியை அந்தச் சூழல் குறிப்பிடுகின்றது. ட்ஸ்யுய் பென் இறந்தபின்பு அந்தப் புதிர் வழி இருந்த இடத்துக்கு யாருமே வரவில்லை! நாவலின் புதிரான அமைப்பைக் கண்டறிந்த எனக்கு, நாவல்தான் ட்ஸ்யுய் பென்னின் புதிர்வழி என்பது சட்டென்று புலப்பட்டுவிட்டது'' என்ற ஸ்டீபன் ஆல்பர்ட் மேலும் என்னிடம் கூறினான் : 'இத்தகைய முடிவை அடைய இரண்டே இரண்டு சான்றுகள் எனக்குப் போதுமானதாக இருந்தன. ட்ஸ்யுய் பென் அளவிட முடியாத புதிர் வழியொன்றை அமைக்க முற்பட்டார் என்று ஒரு பழங்கதை சொல்வது ஒரு சான்று. அப்புறமாக நான் கண்டுபிடித்த கடிதத்தின் துண்டுப்பகுதி இன்னொரு சான்று.'' 
ஆல்பெர்ட் எழுந்தான். எழுந்து முதுகை எனக்குக் காட்டியவாறு நின்று கொண்டு கறுப்பும் தங்க நிறமும் கலந்த மேஜையின் இழுப்பறைகளைத் திறந்தான். அரக்கு நிறத்தில் ஒரு காலத்தில் இருந்திருந்த காகிதத்தை என் முன் நீட்டினான். இப்போது அக்காகிதம் பிங்க் நிறத்தில் குறுக்குவெட்டாய் பல மடிப்புகளுடன் இருந்தது. ட்ஸ்யுய்பென்னின் பிரபலமான கையெழுத்தை அங்கே கண்டேன். அது பிரபலமானதற்கான காரணமும் எனக்குப் புரிந்தது, புரியாதபோதும் ஆவலுடன் என் ரத்தத்தைக் கொண்ட அந்த மனிதனின் எழுத்தை நிதானமாகப் படித்தேன் : குறுக்கு வெட்டுப் பாதைகளாலான என் தோட்டத்தை பல்வேறு எதிர்காலங்களுக்கு - எல்லா எதிர் காலங்களுக்கும் அல்ல விட்டுச் செல்கிறேன் என்று எழுதியிருந்தது. பேசாமல் காகிதத்தைத் திருப்பிக் கொடுத்தேன். 
-ஆல்பெர்ட் தொடர்ந்து பேசினான்: "இந்தக் கடிதத்தைக் கண்டெடுக்கு முன் எனக்கு ஓர் அடிப்படைக் கேள்வி இருந்தது. ஒரு புத்தகம் அளவிடற்கரியதாய் இருக்குமானால் அதற்கான வழிமுறைகள் எத்தகையவை என்பது தான் அக்கேள்வி. அப்போது அந்தப் புத்தகம் வட்ட வடிவமாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். அதாவது, அதன் கடைசிப் பக்கமும் முதல் பக்கமும் ஒன்றேயானதாக இருக்க வேண்டும். அப்போது தான் நிற்காமல் அப்புத்தகமானது சுற்றிச்சுற்றி வரமுடியும்; தொடர்ந்து கொண்டே செல்ல முடியும்!'' 
- ''இப்படி யோசித்துக் கொண்டிருந்த அந்த இரவில் திடீரென்று ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதை நினைவுக்கு வந்தது. கதையின் நடுவில் வீரஸாத் ராணி ஒரு தவறைச் செய்துவிடுகிறாள். அவள் கதை சொல்லுவதை எழுதிக் கொள்ளும் அடிமையின் மாயக் குழப்பத்தால் இத்தவறு நடந்து விடுகிறது. அதாவது, ராணி ஷீரஸாத் தன்னுடைய கதையையே சொல்ல ஆரம்பித்துவிடுகிறாள். அவளுடைய கதைதான் ஆயிரத்தோரு அரேபிய இரவுகளின் மூலக்கதை. இப்படிச் சொல்வதால் கதை சொல்லும் செயலானது முடிவற்று நீண்டுகொண்டே போகும் அபாயம் ஏற்பட்டுவிடு வதையும் அவள் உணர்கிறாள்.'' 
''இன்னுமொரு கதை சொல்லும் உத்தியையும் நான் யோசித்தேன் : குறிப்பிட்ட ஒரு கதையை ஒவ்வொரு புதிய தலைமுறையினரும் தங்களாலான அளவு திருத்திச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது தங்கள் மூதாதையர்களின் பக்கங்களுடன் ஒரு புதிய அத்தியாயத்தை ஒவ்வொரு புதிய தலைமுறையினரும் சேர்த்து விடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இதில் புதிய விஷயம் ஏதோ இருக்கிறது என்றாலும் ட்ஸ்யுய் பென்னின் முரண்பட்ட அத்தியாயங்களுக்கு நிகராக இவ்வுத்தியில் ஏதும் இல்லை என்றே கூறுவேன்!'' 
ஆல்பெர்ட் தொடர்ந்து கூறினான். ''இக்குழப்பங்களுக்கு இடையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து நீங்கள் இப்போது படித்த கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. நீங்கள் வாசித்த அதே வாக்கியத்தை நான் அலசிப் பார்த்தேன். உடனே எனக்கு ஓர் உண்மை புரிந்து விட்டது: குறுக்கு வெட்டுப் பாதைகளாலான தோட்டம் என்பதுதான் குழப்பமான அந்த நாவல்: பல் வேறு எதிர்காலங்கள் - எல்லா எதிர்காலங்களும் அல்ல 
வாசகம். காலத்தில் வெளியில் (Space) அல்ல -ஏற்பட்டுள் ள குறுக்கு வெட்டுத் தன்மையைக் குறிக்கிறது என்று புரிந்து கொண்டு விட்டேன்!! 
- 1 ட்ஸ்யுய் பென்னின் எழுத்துகளைத் திரும்ப வாசித்தவுடன் பின்வரும் கோட்பாடு எனக்கு நிரூபணமாகி விட்டது. ஒவ்வொரு கதையிலும் மனிதனானவன் பல்வேறு சாத்தியப்பாடுகளை எதிர் கொள்கிறான்; அவற்றில் ஏதோ ஒன்றை மட்டும் தேர்ந்து கொண்டு மற்றவற்றை விலக்கி விடுகிறான் 
புரிந்துகொள்ள முடியாத, ஆழங்காணவியலாத ட்ஸ்யுய் பென்னின் நாவலில் அதே மனிதன் அத்தனை சாத்தியப்பாடுகளையும் ஒருசேரத் தேர்வு செய்து கொண்டு விடுகிறான். ஆக, பல்வேறு வகைப்பட்ட எதிர்காலங்களை அம்மனிதன் உருவாக்குகிறான் இவ்வெதிர்காலங்கள் ஒன்றையொன்று குறுக்காக வெட்டிக் கொண்டு பல்கிப் பெருகுகின்றன.'' 
* ஆக, ட்ஸ்யுய் பென்னின் நாவலில் காணப்படும் முரண்பாடுகள் இப்போது சட்டென்று நமக்கு விளங்கிவிடுகின்றன. ஃபாங் என்பவனிடம் ஒரு ரகசியம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். யாரோ ஒர் அந்நியன் அறைக்கதவைத் தட்டுகிறான்; ஃபாங் அவனைக் கொல்வது என்று முடி வெடுக்கிறான்! இந்தக் கதைக்கு பல்வேறு முடிவுகள் சாத்தியமாகின்றன. ஒருவேளை, ஃபாங் அறைக்குள் நுழைபவனைக் கொல்லலாம்; அல்லது அறைக்குள் வருபவன் ஃபாங்கைக் கொல்லலாம்; இல்லையென்றால் இரு வருமே தப்பித்துக் கொண்டுவிடலாம்; இருவருமே செத்தும் போய்விடலாம். இத்யாதியாக வேறு முடிவுகளும் ஏற்பட்டுவிடலாம். 
ட்ஸ்யுய் பென்னின் நாவலில் எல்லா சாத்தியப்பாடுகளும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. இவற்றில் ஒவ்வொரு சாத்தியப்பாடும் இதர சாத்தியப் பாடுகளுடன் குறுக்கு வெட்டாகச் செல்கின்றன! சில சமயங்களில் இந்து நாவல் புதிரின் பாதைகள் சங்கமிக்கின்றன என்பதையும் பார்க்கலாம்: உதாரணமாக, நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா? நமக பொதுவான ஒர் இறந்தகாலத்தில் நீங்கள் என் எதிரி. இன்னொரு இறந்தகால சாத்தியப்பாட்டில் நீங்கள் என் நண்பன். இப்படி நான் தவிர்க்க இயலாதபடி சொல்வதை நீங்கள் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்வீர்கள் என் நாவலின் இன்னும் சில பக்கங்களை இங்கே படிக்கலாம்.'' 
ஸ்டீபன் ஆல்பர்ட் தொடர்ந்தான். விளக்கொளியின் துல் வட்டத்தில் அவன் முகம் வயதாகிப் போய் இருந்தது தெரிந்தது. அதே சமயம் அந்த முகம் கலங்காமலும் அமரத் தன்மையுடனும் இருந்ததையும் கவனித்துக் கொண்டேன். நாவலின் குறிப்பிட்ட ஓர் அத்தியாயத்தின் இருவேறு சாத்தியப்பாடுகளை அவன் நிதானமாக வாசித்துக்காட்டினான். முதல் சாத்தியப் பாட்டில், பாலைவனமாகக் கிடக்கும் மலைப்பகுதி ஒன்றினூடே ராணுவம் முன்னேறிச் செல்கிறது; பாறைகளும் அவற்றின் நிழல்களும் மனித யத்தனங்களையும் தம் உயிர்கள் மீது அவர்கள் வைத்திருந்த ஆசையையும் என்று  தில்லாக தாக்கி அவர்களை வெற்றியடையச் செய்கிறது. இரண்டாவது சாத் தியப்பாட்டில், அதே ராணுவமான து கேளிக்கை விருந்து நடந்து கொண்டிருக்கும் அரண்மனையின் தளிடே அணிவகு), தும் செல்கிறது. விருதுநகர் தொடர்ச்சியாகவே நடக்கும் அந்த யுத்தத் தலம் அந்த ராணுவம் என்று பெறுகிறது. இந்த இரண்டு பழங்காலக் கதைகளையும் மிக்சி, மதுப்புடன் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அக்கதைகளை எழுதியவர்கள் அது ரத்தத்தைப் பகிர்ந்து கொண்ட என் மூதாதையர்கள், என் றாலும் இவற்றை மீட்டு எனக்கு வாசித்துக் காட்டுபவன் வேறொரு போர்சைச் சேர்ந்த ஒரு) மனிதன் என்ற உண்மை , இக்கதைகளின் மீதான சுவாரசியத்தை அதிகப் படுத்தியது. அதுவும் மேற்கத்திய உலகின் ஏதோ ஒரு தீவில் எங்கோ ஓரிடத்தில் பயங்கரமான சாகசம் ஒன்றை நிறைவேற்றும் கட்டத்தில் இக்கதைகளை நான் கேட்க நேர்ந்தது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைத்தேன் , கதைகளின் இறுதி வார்த்தைகள் ஒவ்வொரு சாத்தியப்பாட்டிலும் ரகசியம் கட்டளையாக ஒலித்ததை நினைவு கூர்கிறேன் : நாயகர்களைப்போல் அவர்கள் சண்டையிட்டபோது, அவர்களின் போற்றத் தக்க இதயங்கள் அமைதியாகவும் வாள்கள் வன்முறை - கொண்டும் இயங்கின. சாகவும் கொல்லவும் அவர்கள் எப்போதோ தயாராகி விட்டிருந்தார்கள். 
இதைக்கேட்ட கணத்திலிருந்து என்னைச் சுற்றியும் என் கறுத்த உட லுள்ளும் புலப்படாத, அளக்கவியலாத குமைச்சல் ஏற்பட்டது. அந்தக் குமைச்சல், விலகிச்சென்று இறுதியில் ஒன்றாகக் கலக்கும் இரு ராணுவ அணிகளின் குமைச்சல் அல்ல; மாறாக, ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஆனால் பிடிபடாத, கலக்கம் ஒன்றின் அறிகுறிதான் அந்தக் குமைச்சல், 
ஸ்டீபன் ஆல்பர்ட் தொடர்ந்து கூறினான்: ''உங்கள் மூதாதையரான ட்ஸ்யுய் பென் ஏதோ சோம்பேறித்தனமாக இந்த சாத்தியப்பாடுகளை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. உரைவீச்சின் பரிசோதனைக்காக பதின் மூன்று வருடங்களாக சும்மா செலவழித்தார் என்று நம்ப நான் தயாராயில்லை. ட்ஸ்யுய் பென் எழுதிக் கொண் டிருந்த அன்று உங்கள் நாட்டில் நாவல் என்பது கீழ்த்தரமான எனர் க்ய வடிவமாக, ஏன் வெறுக்கத்தக்க ஓர் இலக்கிய வடிவமாகவே கருதப்பட்டது. ஆனால் ட்ஸ்யுய் பென்னோ பிரமாதமான நாவல் - ஆசிரியர்; அதே சமயத்வல் மெத்தவும் எழுதப்படிக்க தெரிந்த அவர் நாவல் - ஆசிரியன் என்ப 3)த விடவம். மேலான வர் அந்தஸ்தை தமக்கு விரைந்தார். அவருடைய சகாக்கள் சொன்ன விவரங்களிலிருந்தும் அவருடைய வாழ்க்கையின் சில அம்சங்களிலிருந்தும், அவருக்கிருந்த மாயாவாத, மாயாஜால விழைவுகள் நிரூபணமாகியுள்ளன. 

தத்துவார்த்தப் பிரச்சினைகள் அவருடைய நாவலைப் பெருமளவு ஆக்கிர மித்திருந்தன. அப்பிரச்சினைகள் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவே இன்று புரிகிறது. அதுவும் காலம் என்கிற நீசத்தனமான தத்துவார்த்தைப் பிரச்சினையே அவரை வாட்டி வதைத்த பிரச்னைகளில் தலையாயதாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால், குறுக்கு வெட்டுப் பாதைகளிலான தோட்டம் நாவலின் பக்கங்களில் ஒருமுறை கூட பேசப்படாத பிரச்னை இதுதான் எனலாம்! காலம் என்பதைக் குறிப்பிடும் எந்தவொரு வார்த்தையையும் ட்ஸ்யுப் பென் இந்த நாவலில் பயன்படுத்தவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வேண்டுமென்றே காலத்தை ட்ஸ்யுய் பென் விட்டு விடுவதற்கான விளக்கம் ஏதேனும் உள்ளதா என்று யோசித்துப் பார்த்தேன். உங்களால் விளக்க முடியுமா?'' 
ஏகப்பட்ட பதில்களைச் சொல்லிப் பார்த்தேன். அத்தனையுமே போதுமான பதில்களாக இல்லை. கடைசியில் ஸ்டீபன் ஆல்பர்ட் என்னிடம் கேட்டான் : சதுரங்கம் என்ற பதிலைக் கொண்டுள்ள புதிரின் ஒரே விலக்கப்பட்டுள்ள வார்த்தை என்ன என்று உன்னால் கூற முடியுமா?'' 
ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவனிடம் சொன்னேன் : "சதுரங்கம் என்பதுதான் அந்த ஒரே விலக்கப்பட்ட வார்த்தை!" 
சரியான பதில்!'' என்று என்னைப் பாராட்டிய ஸ்டீபன் ஆல்பர்ட் -- -- து க நி ன ான் : "குறுக்கு வெட்டுப் பாதைகளாலான கோட்டம் என்பது ஒரு பெரும்புதிர், அல்லது புதிர்த் கதை. அதன் சூட்சுமப் பொருளானது காலம். காலம் என்பது சூட்சுமப் பொருளாக இருப்பதால் தான் அந்த வார்த்தை கதையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இது உனக்குப் புரியம் என்று நினைக்கிறேன்! உதாரணமாக, எப்போதும் என் வார்த்தையை விலக்கி வைத்துவிட்டு அர்த்தமற்ற உருவகங்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்துகிறோம் என்றால், எப்போதும் என் நாம் அழுத்திச் சொல்கிறோம் என்று அர்த்தம், களைப்படையாக தமது நாவலின் அலைச்சல்கள் ஒவ்வொன்றிலும் ட்ஸ்யுய்பென் - வளைத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறை இது தான். புரிகிறதா? 
ஸ்பன் ஆல்பர்ட் தொடர்ந்தான் : '' நூற்றுக்கணக்கான கைப்பிரதி களை நான் ஒப்புநோக்கிப் பார்த்திருக்கிேறன். பிரதி செய்தவர்களின் தப்பு 
தவறுதளையும் திருத்தியிருக்கிறேன். எனவே, நாவல் என்ற இக்குழப்பத்தின் அடிப்படைத் திட்டத்தைப் புரிந்துகொண்டு விட்டத்தாகவெ நினைக்கிறேன். இந்த நாவலின் அதி ஒழுங்கைக் கண்டறிந்துவிட்டதாகவே நம்புகிறேன். அதை மீண்டும் நிறுவிவிட்டதாகவே எண்ணுகிறேன். இந்த முழு நாவலையும் மொழிபெயர்த்துவிட்ட எனக்கு, இதில் ஒருமுறைகூட கா லம் என்ற வார்த்தை இல்லை என்பதும் புரிந்துவிட்டது. இந்த வார்த்தை இல்லாததற்கான விளக்கத்தை நான் சொல்லவா?'' 
ஸ்டீபன் ஆல்பர்ட் இன்னும் சொன்னான் : இந்த விளக்கம் ரொம்ப சுலபமானது தான். குறுக்கு வெட்டுப் பாதைகளாலான தோட்டம் என்பது, பிரபஞ்சம் பற்றிய முடிவற்ற -அதே சமயம் பொய்யற்ற பிம்பம். அத்தகையதொரு பிம்பத்தைத்தான் ட்ஸ்யுய்பென் கற்பனை செய்து வைத்திருந்தார். பிரிட்டிஷ் இயற்பியல்வாதி ஐஸக் நியூட்டனும் ஜெர்மானியத் தத்துவவாதி ஆர்தர் ஷோப்பன் ஹீரும் நினைத்தது போல உங்கள் மூதாதையர் காலம் என்பது ஒழுங்கானது, நிச்சயமானது என்று நம்பவில்லை! காலங்களின் எண்ணற்ற அணி வரிசைகளை, குறுக்கேயும் இணையாகவும் வெட்டியும் பிரிந்தும் செல்லும் காலங்களின் பாதைகளை அவர் கற்பனை செய்து வைத்து இருந்தார். அவர் கண்டுகொண்ட காலச்சிடுக்குகளில் காலங்கள் ஒன்றை யொன்று வெட்டும்; பிரியும்; நூற்றாண்டுகளாக ஒன்றிருப்பது தெரியாமல் மற்றது கழியும்? எல்லாவித சாத்தியப்பாடுகளையும் காலம் தழுவும். இத்தகைய காலங்களில் பெரும்பாலானவற்றில் நாம் இருப்பதில்லை. சில நீங்கள் இருக்கிறீர்கள்; நானிருப்பதில்லை. சிலதில் நான் இருக்கிறேன்; நீங்கள் இருப்பதில்லை . சில தில் இருவரும் இருக்கிறோம். சிலதில் இருவரும் இல்லை . புரிகிறதா?'' 
பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த என்னிடம் ஸ்டீ5பன் ஆல்பர்ட் இன்னும் கூறினான் : ' 'விதி எனக்கு நல்கியிருக்கும் நமது இப்போதைய கதையில், நீங்கள் இதோ என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். சரிதானே: இதே கதையின் இன்னொரு சாத்தியப்பாட்டில், தோட்டத்தைக் கடக்கும்போது செத்துவிழுந்துள்ள என்னைக் கவனிக்கிறீர்சுள், வேறொரு சாத்தியப்பாட்டில் இதே வார்த்தைகளைச் சொல்பவனாக இருந்தாலும் என் இருப்பே ஒரு தவறாகிவிடுகிறது; அதாவ து, அங்கே நான் ஒரு பேய்...'' 
கதையின் ஒவ்வொரு சாத்தியப்பாட்டுக்கும் நான் உங்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்'' என்று நடுங்கும் குரலில் அவனிடம் நான் கூறினேன்: மேலும் ட்ஸ்யுய்பென்னின் தோட்டத்தை மீட்டுக் கொடுத்ததற்காக நான் உங்களை மிகவும் மதிக்கிறேன்,'' 

புன்முறுவலுடன் ஸ்டீபன் ஆல்பர்ட் என்னிடம் சொன்னான்: " " நன்றி செலுத்துதல் என்பது கதையின் ஏதோ ஒரு சாத்தியப்பாட்டில் சாத்தியப் படாது. ஏனென்றால், காலம் என்பது எண்ணிலடங்காத எதிர்காலங்களை நோக்கி குறுக்குவெட்டாகச் செல்கிறது என்றாலும், அந்த எதிர் காலங்களின் ஒன்றில் நான் உனது எதிரி, தெரியுமா?'' 
மீண்டும் ஏற்கனவே சொல்லப்பட்ட குமைச்சல் என்னைத் தாக்கியது - வீட்டைச் சுற்றியிருந்த ஈரத் தோட்டம் கண்ணுக்குப் புலப்படாத ஏகப்பட்ட பேரால் அளவற்று நிறைந்திருந்ததாக உணர்ந்தேன். அவர்கள் வேறு. யாருமல்ல, ஸ்டீபன் ஆல்பர்ட்டும் நானும்தான் காலத்தின் பல்வேறு பரிமாணங்களில் ரகசியமாக, சுறுசுறுப்புடன் உலவிக்கொண்டிருந்தோம். கண்களை உயர்த்திப் பார்த்தவுடன் அந்த இறுகலான தீக்கனவு கரைந்து போனது. அந்தக் கறுப்பு மஞ்சள் தோட்டத்தில் ஒரே ஒருவன் தான் நின்றிருந்தான். ஆனால் அவன் சிலைபோல வலிவுடன் இருந்தான். இருந்த பாதை வழியாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவன் தான் கேப்டன் ரிச்சர்ட் மாடென். 
''எதிர்காலம் என்பது ஏற்கனவே இருக்கும் ஒன்றுதான்'' என்று அப்போது ஸ்டீபன் ஆல்பர்ட்டுக்கு நான் பதில் சொன்னேன் : 'நான் உன் நண்பன்தான்; எதிரியில்லை. அந்தக் கடிதத்தை இன்னொரு முறை நான் பார்க்க முடியுமா?'' 
ஆல்பர்ட் எழுந்தான். உயரமான அவன் மேஜையின் இழுப்பறையைத் திறந்தான். அப்போது அவன் முதுகு என்னைச் சந்தித்தது. கைத் துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்த நான் கவனமாகச் சுட்டேன். சத்தம் போடாமல் ஆல்பர்ட் உடனே விழுந்தான். அவன் சாவு மின்னலென அந்த ஒரு கணத்தில் நிகழ்ந்தது. அதற்கப்புறம் நடந்தவற்றுக்கு அர்த்தமோ முக்கியத்துவமோ, கிடையாது. கேப்டன் ரிச்சர்ட் மாடென் கதவை உடைத்துக் கொண்டுவந்து என்னைக் கைது செய்தான். தூக்கிலிடுவதற்காக என்னைச் சபித்திருக்கிறார்கள் ஆனால் மிக நீசத்தனமாக நான் வெற்றியடைந்துவிட்டிருந்தேன் : எந்த நகரம் தாக்கப்படவேண்டுமோ அந்த நகரத்தின் ரகசியப் பெயரை பெர்லினுக்குத் தெரியுமாறு செய்துவிட்டேன் நான். அந்த நகரம் நேற்றுத்தான் குண்டு வீசி அழிக்கப்பட்டதை செய்திக் தாளில் படித்துத் தெரிந்து கொண்டேன். அதேபோல் இன்னொரு செய்திக்தாளில் சீன தேசத்தை ஆய்வு செய்த அறிஞர் ஸ்டீபன் ஆல்பர்ட்டை யு சுன் என்ற யாரோ ஓர் அந்நியன் சுட்டுக் கொன்ற மர்மத்தைப் படித்துக் கொண்டேன். என்  மேலதிகாரி இந்த மர்மத்தைப் புரிந்துகொண்டு விட்டிருந்தார். 
ஆல்பர்ட் என்ற நகரத்தின் பெயரை-யுத்தத்தின் இரைச்சலையும் மீறி எப்படியாவது தெரிவித்துவிடவேண்டும் என்ற என் பிரச்சனையை அவர் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டிருந்தார். அதனால்தான் அதே பெயர் கொண்ட ஒரு மனிதனைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. ஆனால் என்னுடைய அளவற்ற களைப்பையும் பிராயச்சித்த உணர்வையும் பற்றி அவருக்கெங்கே தெரியப்போகிறது. 0

Thursday, September 19, 2019

நீரைப் போன்றது ஒளி - Gabriel Garcia Marquez ----தமிழில் - கோபிகிருஷ்ணன்

நீரைப் போன்றது ஒளி - Gabriel Garcia Marquez ----தமிழில் - கோபிகிருஷ்ணன் 
கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
கிறிஸ்துமஸின் போது பையன்கள் துடுப்புகளால் இயங்கும் படகை வாங்கித் தருமாறு கேட்டார்கள் மீண்டும். 
"சரி கார்டஜெனாவுக்குத் திரும்பியதும் வாங்குவோம்" என்றார் அப்பா. 
ஒன்பது வயதான டோடோவும் ஏழுவயதான ஜோயெல் லும் அப்பா நினைத்திருந்ததை விட தீவிரமாக ஒரே குரலில் "படகு இங்கே இப்பொழுதே வேண்டும்" என்றனர். 
ஷவர் தண்ணீரில்தான் இங்கு படகுவிடமுடியும்" என்றாள் அம்மா.சரிதான்.கார்டஜெனா டி இண்டியாஸில் அவர்கள் வீட்டு முற்றம் கப்பல்துறை போன்றது. கொட்டகை இரண்டு நாவாய்கள் பிடிக்கும். மாட்ரிட் நகரத்திலோ அவர்கள் பாஸியோ டி லா காஸ்டெல்லானா வீதியில் இலக்கம் நாற்பத்தேழில் ஐந்தாவது மாடியில் நெருக்கடித்து இருந்தனர். 
வகுப்புப் பரிசுகளை ஜெயித்தால் படகுகளை குழந்தைகளுக்கு மறுக்க முடியாது போகும். திசைமானி கோணமானி உட்பட்ட துடுப்புப்படகை வாங்கித் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தது தான் காரணம். ஜெயித்ததால் வாங்கிவிட்டு, சூதாட்டக் கடன்களை அடைக்க அவரைவிட ஆவல் கொண்டிருந்த அம்மாவிடம் ஏதும் சொல்லத் தயங்கி நின்றார் அப்பா. நீர்படும் இடத்தில் தங்கக்கோடு விழ இருந்த அலுமினியப்படகு. "இருக்கும் கொட்டகையில் அதிக இடமில்லை. லிஃப்டிலோ படிக்கட்டிலோ கொண்டுவர இயலாது" என்றார் மதிய உணவின் போது அப்பா, 
சனிக்கிழமை மதியம் வகுப்புத் தோழர்களை உதவிக்கு அழைத்திருந்தனர். இருந்தாலும் படகை வேலைக்காரி அறை வரைதான் கொண்டுவர முடிந்தது. 
"பாராட்டுகள். இனி என்ன" என்றார் அப்பா. 
"ஒன்றுமில்லை. படகை அறையினுள் கொண்டுவர விரும்பினோம். வந்தாயிற்று." 
பதன்தோறும் பையன்களை விட்டுவிட்டு சினிமாவுக்கு சென்றது போல அன்றும். வீட்டின் பிரபுக்களான பையன்கள் கதவு, ஜன்னல்களை மூடி வசிப்பறையின் மின்குமிழை உடைத்தார்கள். குமிழ் உடைந்து பாய்ந்த தண்ணீரின் குளுமையான, தங்க ஒளியை மூன்று அடி ஆழம் வரை செல்ல வைத்தனர். மின்சாரத்தை நீக்கி படகை எடுத்து வீட்டுத் தீவுகளுக்கு விருப்பம்போல் விட்டனர். 


வீட்டுச்சாமான் கவிதை அரங்கில் நான் சொல்லியிருந்த என் முக்கியமற்ற கருத்தின் விளைவுதான் பையன்களின் சாகசம். விசையை அழுத்தி விளக்கு எரிவது ஏன். டோடோ கேட்டான். அதை நினைக்க பயமாகத்தான் இருந்தது. 
நீரைப் போன்றது ஒளி. குழாயைத் திறந்ததும் வெளியே வருவதுபோல" என்றேன். 
புதன் இரவுகளில் படகு ஓட்டியது இப்படியாகத்தான். கோணமானி திசைமானிகளைக் கையாளக் கற்றுக் கொண்டதும் இப்படித்தான். சினிமாவிலிருந்து திரும்பும்போது உலர் நிலத்தில் தேவதைகளாகக் குழந்தைகள் துயில்வதைக் கண்டனர். மாதங்கள் பல சென்றதும் தூரம் போக விரும்பி நீர்ச்சறுக்கும் பிரத்தியேக உடைகள், அழுத்தத் துப்பாக்கி, முகமூடி, துடுப்பு, டாங்கிகளையும் கேட்டார்கள். 
"பயனற்ற படகை வேலைக்காரி அறையில் போட்டு வைத்திருப்பதே தவறுதான். இப்போது நீர்ச்சறுக்கு உடைகளைக் கேட்கிறீர்களே" என்றார் அப்பா. 
"முதல் செமஸ்டரில் கார்டெனியா தங்கப்பரிசை ஜெயித்தால்" என்று கேட்டான் ஜோயல். 
"போதும், போதும்" என அலறினாள் அம்மா. 
அவள் கண்டிப்பதைக் கடிந்துகொண்டார் அப்பா. "வேண்டியவற்றைச் செய்யாமல் விரும்பியதை அடைய எதையும் செய்வார்கள், ஆசிரியரின் நாற்காலியில் அமரக்கூடச் செய்வார்கள்" என்றாள் அம்மா. 
ஏதும் சொல்லவில்லை பெற்றோர்கள். 
சொல்லியிருந்த பரிசுகளை ஜெயித்து ஆசிரியத் தலைமையின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள் பையன்கள். அன்று மதியமே நீர்ச்சறுக்கு உடைகளின் பார்சலைப் படுக்கையில் கண்டார்கள். 
அடுத்த புதன் Last Tango in Paris சினிமா. 
வீட்டிலோ பன்னிரண்டு அடி ஆழத்தை படுக்கை நாற்காலிகளுக்கு அடியில் சுறா மீன்களாக நீந்தி இருட்டில் வருஷக்கணக்கில் தொலைந்திருந்தவற்றை ஒளி ஆழத்திலிருந்து மீட்டனர். அந்த வருஷம் சிறந்த மாணவர் பரிசும் சான்றிதழ் பெற்றதால் கேட்காமலேயே வேண்டியதும் வகுப்புத் தோழர்களுக்கு விருந்து வேண்டியும் கிடைத்தன. 
269 

தனிமையில் அம்மாவுடன் உற்சாகமடைந்தார். "வளர்ந்து வருவதற்கு நிரூபணம் என்றார் அப்பா. 
"இந்த வார்த்தைகள் ரட்சகரின் காதில் விழட்டும்" என்றாள் அம்மா. 
புதன் கிழமை The Battle of Algiers சினிமா . 
காஸ்டெல்லானா வீதிவழியே நடந்து சென்றவர்கள் கண்ட, மரங்களில் மறைந்த, கட்டிடத்திலிருந்தோ ஒளி நீர் பொங்கி உப்பரிகைகளில் பாய்ந்து முகப்பில் பொழிந்து நிழற்சாலையில் தங்க வெள்ளமென ஓடி காடரமா வரையிலும் நகரத்தை தழல்விடச் செய்தது. 
வந்த தீ அணைப்புக்காரர்களோ ஐந்தாவது மாடிக் கதவை உடைத்து திறந்த போது கூரைவரை நிரம்பியிருந்த ஒளியைப் பார்த்தார்கள். குடித்துப் போட்ட போத்தல்களுக்கும் பாதி மூடியிருந்த கப்பலின் கொடியாக, தங்க மினுப்பிலான போர்வையைக் கொண்ட பழைய பியானோவுக்கும் இடையில் சிறுத்தைத் தோல் போர்த்திய நாற்காலிகள் மிதந்து கொண் டிருந்தன. வீட்டுச் சாமான் கள் கவித்துவம் பொங்கி சமையலறையில் இறக்கைகளுடன் பறந்து சென்றன. குழந்தைகள் நடனத்துக்கான இசைக் கருவிகள் அம்மாவின் மீன் தொட்டியிலிருந்து விடுபட்ட ஒளிச்சகதியில் சந்தோஷத்தில் துடிதுடித்த ஒரே ஜீவிகளான மீன்களுக்கு இடையே நீந்தின. 
குளியலறையில் பல் துலக்கும் பிரஷ்களும் அப்பாவின் ஆணுறைகளும் அம்மாவின் க்ரீம் பாட்டில்களும் பொய்ப்பல்லும் படுக்கை அறை டிவியில் வயது வந்தவர்களுக்கான நள்ளிரவுப் படத்தின் கடைசி அத்தியாயமும் மிதந்து கொண்டிருந்தன. 
அறையின் மூலையில் நீர் ஓட்டத்தில் துடுப்புப் போட்டுக் கொண்டு முகமூடியுடன் கலங்கரை விளக்கத்தைத் தேடிக் கொண்டு டோடோ. படகின் கூரான முன்பகுதியில் துருவ நட்சத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டே ஜோயல். 
பள்ளிக்கூடப் பாடலுடனும் தலைமை ஆசிரியரைக் கேலி செய்ய அதன் வார்த்தைகளை மாற்றிப் போட்டுக் கொண்டும் அப்பாவின் போத்தலில் இருந்து கோப்பை பிராந்தி திருடிக் கொண்டும் ஜெரேனியப் பூத்தொட்டியில் ஒன்றுக்கு இருந்துகொண்டும் அந்தக் கணத்தின் அமரத்துவத்தில் வீடு பூராவும் மிதந்திருக்கிற முப்பத்திஏழு வகுப்புத் தோழர்கள். 
பல விளக்குகள் எரிவதால் வீடு முழுக்க வெள்ளம். 
270 

இலக்கம் 47 காஸ்டெல்லானா வீதியின் ஐந்தாவது மாடியில் புனித ஜூலியன் ஹாஸ்பிடாலர் ஆரம்பப் பள்ளியின் இரண்டு முழுவகுப்புகளும் மூழ்கித்தான் போனார்கள் எரியும் கோடைகளையும் வாடைமிக்க பனிக் காலங்களையும் கொண்டதும் சமுத்திரமும் ஆறும் அற்றதும் ஒளியில் கப்பல் விடும் கலை அறியா தரைசார் மனிதர்கள் வசிப்பதுமான ஸ்பானிய மாட்ரிட் நகரத்தில் இது நடந்தது இப்படியாகத்தான். 
தமிழில் - கோபிகிருஷ்ணன் 

Friday, September 06, 2019

கனவுகளை விற்பவள் நான் - மார்க்வெஸ் தமிழில் - நாகார்ஜுனன் .

கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
கனவுகளை விற்பவள் நான் 
அந்த நாள் மணி ஒன்பது. ஹவானாவில் ரிவேரா ஹோட்டல் மொட்டை மாடி. சூரிய வெளிச்சத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது பிரம்மாண்டமான அலை. கரையோர நிழல்சாலையில் வந்த அத்தனை கார்களையும் பெயர்த்தெடுத்து ஹோட்டலின் பக்கச் சுவர் ஒன்றில் மோதி அறைந்தே விட்டது. 
வெடித்ததும் இருபது மாடிகளிலும் ஓங்கிய பீதியில் கட்டிட முகப்பு தூளாக வரவேற்பு வட்டத்திலிருந்த நாற்காலிச் சுற்றுலாக்காரர்கள் தூக்கி வீசப்பட, நொறுங்கிய கண்ணாடியின் சூறாவளி சிலரைக் கிழித்தே சென்றது. கரைச் சுவரையும் ஒட்டிய இருவழிப் பாதையையும் தாண்டி முகப்பை சிதறடித்துவிட்ட பயங்கரமான அலைதான். 
மலர்ச்சியான க்யூப் இளைஞர்களும் தீயணைக்கும் வீரர்களும் ஆறுமணி நேரத்தில் இடிபாடுகளை அகற்றி சமுத்திரம் பார்த்த முகப்பையும் மூடி இன்னொடு கதவைப் பொருத்தியவுடன் சகஜநிலை திரும்பியது. ஆனால் பக்கச்சுவருடன் அறையப்பட்டது நிழல்சாலையில் நிறுத்தியிருந்த கார்களில் ஒன்று என நினைத்தவர்களுக்கோக்ரேன் வண்டி பெயர்த்து எடுத்தவுடன் தான் ஒட்டிக் கொண்டிருந்த உடலைப் பார்க்க முடிந்தது. அலை அறைந்து எலும்புகள் நொறுங்கியதால் சிதைந்த முகமும் அறுந்த பூட்ஸ்களும் கிழிந்து தொங்கிய ஆடைகளுமே எஞ்சின. நீலக்கல் கண்கள் கொண்ட மோதிரப்பாம்பை அணிந்திருக்கிறாள். போர்த்துக்கீசிய புதிய தூதரின் வீடு பராமரிக்க வந்தவள். மனைவியுடன் தூதர் வந்து இரண்டு வாரம் ஆகியிருக்க அந்தக் காலை மார்க்கெட் செல்ல புதுக்கார் ஒட்டியிருக்கிறாள். செய்தியாக வாசித்த போது பெயர் முக்கியத்துவம் பெறாவிட்டாலும் மோதிரப் பாம்பும் அதன் நீலக்கண்களும் என்னவோ செய்கின்றன. இருந்த விரல் எது தெரியவில்லை . 
கடைசியில் முக்கிய விவரம் ஆனதும் அது. மறக்க முடியாதவள். பெயரோ தெரியாத ஒன்று. ஆள்காட்டும் வலது விரலில் அணிந்திருப்பவளோ, அஞ்சுகிறேன். இன்றைக்கு விடவும் அபூர்வமாக, அந்தப் பழக்கம் முப்பத்து நான்கு வருஷங்களுக்கு முன்பு வியன்னா நகரத்தில். லத்தீன் அமெரிக்க மாணவர்கள் ஆக்கிரமிக்கிற உணவிடத்தில் கூஜாபீருடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ஸாஸெஜ் துண்டுகளுடன் சந்தித்திருக்கிறேன். பாடுகையில் விம்முகிற மார்பகத்தையும் கோட் காலரில் தொங்கும் நரிவால்களையும் எகிப்திய மோதிரம் பாம்பையும் ரோம் நகரத்திலிருந்து வந்திருந்த காலை நேரத்தில் கண்டது இன்றும் ஞாபகமிருக்கிறது. ஸ்பானிய மொழியில் உலோகத் தொனியில் மூச்சிரைக்காமல் பேசிய போது மரமேஜையில் இருந்த ஒரே ஆஸ்திரியப் பெண்ணோ என யோசித்தேன். இல்லை. கொலம்பியாவில் பிறந்தவள். உலக யுத்தங்களுக்கு இடையில் குழந்தையாக இசை கற்க 

வந்தவள், முப்பது வயதில் இழந்த அழகை, வசீகர லயிப்பில் கிறங்கடிஒசி' ' 
கர லயிப்பில் கிறங்கடித்து, ஈடுசெய்த அவள் உண்டுபண்ணியது வருவித பயம் இரண்டாம் உலக யுத்தம் விட்டுச்சென்ற இனெ ' உலகங்கள் ரெண்டுக்கிடையில் மாட்டிக் கொண்ட வியன்னா ராஜாங்க நக? '2° கறுப்புச் சந்தைச் சொர்க்கமாகவும் சர்வதேச உளவிடமாகவும் மாறிக் கெ'' செ#9 தொலைந்துபோய் வந்திருந்த என் சிநேகிதியால் மேஜையில் இருந்த அத்தனை' 99 வாங்கித் தர முடியும் என்றாலும் தன் ஊர்மலத்துக்கு விசுவாசமாக இருக்கத்தானே' நினைத்து அங்கே வருகிறாள். வியன்னா நகரத்தில் லத்தீன் அமெரிக்க ' அவளுக்காக ஜெர்மன் மொழியில் கண்டுபிடித்திருந்த நாக்கைச் சுழற்றும் பெயர்"?" அவளைத் தெரிகிறது. ஃப்ரௌ ஃப்ரைடா. க்விண்டியோவின் காற்றுச் சிகரங்களிலிருந்து கிளம்பி மிகவும் வெளிறிப்போன இந்த உலகத்துக்கு வந்ததெப்படி எனது 
இந்த உலகத்துக்கு வந்ததெப்படி என்று விளையாட்டாக, அறிமுகம் ஆனதும், கேட்டபோது என்னை அழித்து விடுவதாக சொன்ன பதில் இது. 
"கனவுகளை விற்பவள் நான்." 
நிஜத்தில் அவள் தொழில் அது தான். பழைய கால்டாஸ் ஊரில் கடைக்காரர் ஒருவருக்கு சௌகரியமாகப் பதினொரு பேரில் மூன்றாவதாகப் பிறந்து காலை உணவுக்கு முன்பு தூய்மையாகவும் அசரீரியாகவும் இருக்கும் போதே கனவுகள் சொல்லும் பழக்கத்தை குடும்பத்திலிருந்து கற்றவள். 
ஏழுவயதில் தன் சகோதரனை வெள்ளம் கொண்டு போகும் என்றாள். 
மலைப்பள்ளத்தாக்கில் வழக்கமாக நீந்தப் போகும் அவனை கூடாது என்று மூட நம்பிக்கையில் அம்மா தடுத்தபோது தன் ஆரூடம் தனித்துவமானது என்றாள் ஃப்ரைடா. 
"மூழ்கிப் போவான் என்பதல்ல கனவின் அர்த்தம். இனிப்புகள் அவன் சாப்பிடக் கூடாது" என்றாள். 
ஞாயிற்றுக்கிழமை இனிப்புகள் இல்லாமல் வாழ முடியாத ஐந்து வயது சகோதரனுக்கு அவள் ஆரூடம் கசந்தது என்றாலும் அவள் அசரீரித் தன்மைகளை உணர்ந்த அம்மா ஜாக்கிரதையாக இருக்க விரும்பினாள். ரகஸியமான முதல் சாக்லெட்டை சாப்பிட்டவுடன் புரையேறிப் போனவனைக் காப்பாற்றத்தான் யாருமில்லை. 
வியன்னாவின் கொடூரமான பனிக்காலங்கள் தாக்கும் வரையில் அசரீரித் தன்மைகளை வைத்து வாழமுடியும் என்று அவள் நினைத்ததேயில்லை. வாழ விரும்பிய முதல் வீட்டுக்குச் சென்று வேலை கேட்ட போதும் உண்மையைத்தான் கூறினாள். 

"கனவுகள் சொல்பவள் நான்" என்றவளை மாதச் சம்பளத்துக்கு வேலையில் வைத்து வசிக்க அறையும் மூன்று வேளை உணவும் கொடுத்தார்கள். காலையில் மட்டும் குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்து மேஜையில் வைத்துச் சொல்ல வேண்டும். அவர்களில் அப்பா வங்கிக்காரர். அம்மாவுக்கு கற்பனாவாத அறையிசையில் வேட்கை. குழந்தைகள் இரண்டு. வயது பதினொன்று, ஒன்பது. மத நம்பிக்கைகள் கொண்ட அவர்களுக்கு புதைந்துபோன ரகஸியங்களை ஆரூடங்களாக ஏற்றுத் தினசரி விதியை அவள் மூலமாகத் தெரிந்து கொள்வதில் ஆர்வம். 
நீண்ட காலமாக, அதுவும் குறிப்பாக, தீக்கனவுகளை விடவும் கொடூரமான எதார்த்த நிலையை யுத்த காலங்களில் கதைசொல்லி வருகிறாள். தினம்தினம் யார் என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் பொறுப்பும் அதிகாரமும் வந்து சேர்ந்தது. குடும்பத்தின் மீதான அவள் பிடி இறுகியது. மெலிதான பெருமூச்சும் அவள் கட்டளையின் படிதான் யாரும் விடமுடியும். வியன்னாவில் நான் இருந்த காலத்தில் அவள் வீட்டுச் சொந்தக்காரர் மரணமடைந்தார். கனவுகள் முடிவுக்கு வரும் வரையிலும் தம் குடும்பத்துக்குக் கதைகள் சொல்லிவர அவளை நியமித்து சொத்தில் பகுதியை விட்டுச் சென்றிருந்தார். 
ஒருமாதம்வரை வியன்னாவில் இருந்தேன். எதிர்பார்த்த பணம் வராத நிலையில் ஏழ்மையைப் பகிர்ந்து கொண்ட ஏழ்மை ராஜாங்கத்தில் அவள் வருகை விழாவாக இருந்தது. பீரின் தூக்கலில் ஓரிரவு தயக்கத்திற்கு இடம் கொடாமல் காதருகே சொன்னாள். 
"கனவில் நேற்று நீ. ஐந்து வருஷங்கள் இனி இங்கே நீ வரக்கூடாது." 
அவள் தீர்மானம் தாக்கிய நிஜத்தில் அன்றிரவே ரோமுக்கு கடைசி ரயிலில் ஏறினேன். அனுபவித்திராத பேரழிவு ஒன்றிலிருந்து தப்பிப் பிழைத்தவனாகக் கருதிக் கொள்ளும் அளவுக்கு அவள் ஆரூடம் என்னைத் தாக்கியிருந்தது, இன்றுவரை வியன்னாவுக்குப் போகவே இல்லை. 
ஹவானாவில் அலையறைந்த தினத்துக்கு முன்பு எதிர்பாராத மர்ம முடிச்சின் விளைவாக பார்ஸிலோனா நகரத்தில் அவளைக் கண்டேன். 
உள்நாட்டுப்போருக்குப் பின் முதல் முறையாக வால்பாரைஸோவுக்குப் கடல் பயணம் மேற்கொள்ளும் வழியில் பாப்லோ நெருடா ஸ்பெயினில் கால் வைத்தது அன்றுதான். பழைய புத்தகக் கடைகளில் வேட்டையாடிக் கொண்டே அன்று காலை எங்களுடன் இருந்தார். போர்ட்டர் கடையில் உலர்ந்து போன புத்தகத்தைக் கிழிந்த உறையுடன் ரங்கூன் தூதரகத்தில் வாங்கிய இரண்டு மாதச் சம்பளத்தைக் கொடுத்து கண்டெடுத்தார். 

உறுப்பிழந்த யானையாகக் கூட்டத்தில் புகுந்து, பாா?? ? 
-டத்தில் புகுந்து, பார்த்த ஒவ்வொன்றின் உள்இயக்கத்தையும் குழந்தையாக வியந்து கொண்டிருந்தார். தனக்காக்க கமெடு' "Y?" கொண்ட பிரம்மாண்டமான விளையாட்டுப் பொம்மையாக சாவிமுனையா" "*" கொண்டிருந்தது உலகம் அவருக்கு. மறுமலர்ச்சிக்காலப் போப்பாண்டவராக இப்படி யாரையுமே பார்த்ததில்லை. ராட்சஸப்பசி கொண்டும் நாகரீகமாகவும் நெருடாவால் நடந்து கொள்ள முடிந்தது. விருப்பமின்றியும் அவர்தான் மேஜையில் முதலிலிருப்பார். சலூன் துணிபோல் ஒன்றை மனைவி மாத்தில்டெ கழுத்தில் போட்டவுடன் தான் தக்காளி சாஸில் குளிக்காமல் அவரைத் தடுக்க முடியும். 
கார் வல்லரஸ்ஸில் அந்த நாளும் அப்படித்தான். மூன்று முழுநண்டுகளை திறமையுடன் அறுத்து சாப்பிட்டவாறே அடுத்தவர் தட்டையும் பார்த்த அவர் ருசி எங்களைத் தொற்றிக் கொண்டது. கலிஸியாவின் சிப்பி மீன்கள், காண்டப்ரியாவின் நத்தைகள், அலிஷான்டேவின் இறால்கள், காஸ்டாப்ரவாவின் கடல் வெள்ளரிகள் இப்படி ஃப்ரெஞ்சுக் காரர்களைப் போல வகை வகையாக பேசினார். சிலி நாட்டின் சரித்திரத்திற்கு முந்திய சிப்பிமீன்களை இதயத்தில் வைத்திருந்தார். திடீரென்று சாப்பிடுவதை நிறுத்தி நண்டின் தம் உணர்கொம்புகளை நீட்டி மெலிதாக என்னிடம் "பின்னாலிருந்து யாரோ பார்க்காமல் என்னை விடப் போவதில்லை" என்றார். நிஜம்தான் என அவர் தோளுக்குப் பின் பார்த்து உணர்ந்தேன். 
நுரைமெத்தைத் துணித் தொப்பியும் வெளிர் சிகப்பு ஸ்கார்ஃபும் அணிந்து அவசரமின்றி நோக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நடுங்கும் அந்த உருவத்தைப் பார்த்தேன். காட்டும் ஆள்விரலில் மோதிரப்பாம்பும் வயதாகிக் கொஞ்சம் பருத்திருந்தாலும் உட்ரெள ஃப்ரைடா தான். நெருடா அவர் மனைவியுடன் கப்பலில் நேப்பில்ஸ் நகரத்திலிருந்து வந்திருந்தாலும் சந்தித்துக் கொள்ளவில்லை. 
காப்பி அருந்தக் கூப்பிட்டு கவிஞரை ஆச்சரியப்பட வைக்க அவள் கனவுகளைப் பேசச் சொன்னேன். ஆரூடக்கனவுகளில் நம்பிக்கை தாம் கொள்ளாதவர் என்ற நெருடா கவனிக்கவே இல்லை "கவிதை மட்டுமே ஆரூடம்" என்றார். உணவுக்குப்பின் வருகிற நிச்சயமான நடையின் போது யாரும் கேட்காதபடி ஞாபகங்களைத் கொண்டுவா தங்கினேன். ஆஸ்திரியாவில் சொத்துக்களை விற்ற பின் போர்ச்சுகல் வந்து அமெரிக்கக் கண்டம் வரையிலும் சமுத்திரம் தாண்டிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஒப்போர்ட்டாவில் மலைமீதான கோட்டைப்போலி ஒன்றில் தங்கிவிட்டதாகத் தெரிவித்தாள், 
கவியன்னாக் குடும்பத்தின் சொத்துக்களை அபகரித்து கனவு தோறும் என புகழ்மிக்க வியன்னாக் குடும்பத்தின் சொத் விட்டிருப்பதைப் புரிந்து கொண்டேன். கனவுகள் வெறும் பிழைப்புக்காகத்தான் என்று நினைத்திருந்தால் ஆச்சரியம் அடையாமல் அதைக் கூறியும் விட்டே 

அடக்க மாட்டாமல் சிரித்தாள். "வெட்கம் அறியாமல் தான் இப்போதும் இருக்கிறாய்" என்றவள் சிலியின் பேச்சு மொழியில் அங்கிருந்த கிளிகளுடன் நெருடா கொஞ்சுவதற்காகப் பிறரைப் போலக் காத்திருந்தாள். மீண்டும் வந்தபோதும் பேச்சை மாற்றினாள். 
"இப்போது நீ வியன்னா திரும்பலாம்" 
முதல் சந்திப்பு பதிமூன்று வருஷங்கள் கழிந்து ஆகியிருப்பதை உணர்ந்தது அப்போது தான். 
"கனவுகள் பொய்த்து விடும் என்றாலும் போக அங்கு போவதில்லை ஒருவேளை." 
மூன்று மணிக்கு நெருடா புனிதமாகக் கருதிய தூக்கத்துக்காக அவளைத் தவிர்த்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். ஜப்பானிய தேனீர்ச்சடங்கை நினைவுறுத்தும் வகையில் காரியங்கள் நிகழ்த்தி தூங்கப் போனார். ஜன்னல்கள் சில திறந்தும் பிற மூடியும் சிலாக்கியமான வெம்மை கூடிவர குறிப்பிட்ட திசையிலிருந்து ஒளியும் நிச்சய மெளனமும் அவருக்குத் தேவை. எதிர்பாராதபோது எழுந்து விடுகிற குழந்தையாக பத்து நிமிடத்தில் கன்னத்தில் தலையணையின் அச்சுடன் புதிதாகத் தோன்றினார். 
"கனவுகள் சொல்லும் அவளைக் கனவில் கண்டேன்." 
கண்ட கனவைச் சொல்லுமாறு மனைவி வற்புறுத்த "என்னைக் கனவில் கண்டதாக அவளைக் கண்டேன்" என்றார். 
"போர்ஹே கதையிலிருந்து தான்" என்றேன். 
"எற்கனவே எழுதிவிட்டாரா" என்று எழுத்தாளனின் வருத்தத்துடன் கேட்டார். 
"இல்லாவிட்டால் என்றாவது புதிர்ப்பாதைகளில் ஒன்றாக வைத்து எழுதி விடுவார்" என்றேன். கப்பலில் ஒளியுடன் மாலை ஆறு மணிக்கு தனிமையான மேஜையில் அமர்ந்து பக்ககங்களை அவர் படிக்கும் போது மலர்களையும் மீன்களையும் பறவைகளையும் வரைவதற்கு பயன்படுத்தும் பச்சை இங்க்கால் பிரவாகக் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அடுத்த கரை வந்தவுடன் பார்த்துக் கொள்ளாமலேயே பிரிவோமோ என்றிருந்தபோது தேடி அவளை சுற்றுலா மேஜையில் கண்டுபிடித்தோம். 
தூக்கம் அவளுக்கும் கலைந்திருந்தது. 

"கவிஞரைத்தான் கனவு கண்டேன்" என்றாள். 
ஆச்சரியம் தாக்கி "கனவில் என்ன" என்று கேட்டேன். 
என்னைக் கனவில் கண்டதாக அவரைக் கண்டேன் கனவில் எடுறை''''' 
என் ஆச்சரியம் அவளைப் பாதித்திருக்க வேண்டும். 

"ஏன் அப்படிப் பார்க்கிறாய். என் கனவுகளுக்கு நடுவில் எதார்த்த உலகுக்குத் தொடர்பில்லாமல் ஒன்று சில சமயம் நுழைந்து விடுவது இப்படித்தான்" என்றார். 

ஹவானா ஹோட்டலை அலைதாக்கி மோதிரப்பாம்பைக் கண்ட அன்றுவரையில் அவளைப் பார்க்கவோ நினைக்கவோ இல்லை. சில மாதங்கள் தாண்டி விருந்தில் போர்த்துக்கீசிய தூதரைச் சந்தித்தபோது கேட்காமலும் இருக்க முடியவில்லை. "என்ன ஆச்சரியமான பெண்" என்றவர் புகழ்ந்து உற்சாகத்துடன் பேசினார். 
"கதையாக அவளை எழுதியிருப்பீர்கள்" என்றவர் அதே தொனியில் சொல்லிய விபரங்களில் நான் முடிவெடுக்க வேண்டிய அந்த ஒரு விபரம் மட்டும் இருக்கவில்லை. 
"என்னதான் செய்வாள்" என்று கேட்டே விட்டேன். 
ஒருவித லயிப்பின்றிச் சொன்னார். "ஒன்றுமில்லை. கனவுகள் காண்பாள்." 
------ 
தமிழில் - நாகார்ஜுனன் . 
-

Monday, September 02, 2019

மாய மந்திரங்கள் அன்றாட வாழ்வின் அங்கம் Gabriel Marquez மார்க்வெஸ் பேட்டி - மானுவல் ஒஸாரியோ தமிழில் - நடராஜன்காஃப்கா வாக்கியம் கதைப்பரப்புக்குள் வீசியது பேட்டி - பீட்டர் ஹெச் ஸ்டோன் தமிழில் - சி மோகன்

கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
மாய மந்திரங்கள் அன்றாட வாழ்வின் அங்கம் பேட்டி - மானுவல் ஒஸாரியோ 
தமிழில் - நடராஜன்


லத்தீன் அமெரிக்காவில் பல்வேறு கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்து புதிய வளமையான கலாச்சாரம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கலப்பை லத்தீன் அமெரிக்கா உணர்ந்திருக்கிறதா. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்ற முறையில் பல்வேறு சமுதாயங்களுடனும் அரசியல் அமைப்புமுறைகளுடனும் அடிக்கடி நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறேன். இதனால் லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரத்தின் பிற அம்சங்களை நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் இந்தக் கலப்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் உணர்ந்து கொள்ளலானேன். 

ஆப்பிரிக்காவில் பயணம் செய்தபோது அங்குள்ள பாமரக்கலையின் சில வடிவங்களுக்கும் பல்வேறு கரீபியப்பிரதேசங்களிலுள்ள கலைவடிங்களுக்கும் இடையே ஒற்றுமைகளைக் கண்டேன். என் சொந்தக் கலாச்சாரச் சூழலையும் பொதுவாகப் பல்வேறு கலாச்சார அம்சங்களுக்கு இடையிலான தொடர்பையும் அறிந்துகொள்ள வாய்ப்பானது. 

இத்தகைய நுட்பமான நோக்கைக் கொண்டு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் தனித் தன்மையையும் காணப்படுகிற உலகளாவிய அம்சத்தையும் புரிந்து கொள்ள முடியும். ஜனத் தொகுதிகளிடையே எத்தனையோ தொடர்புகள் இப்படி. அவர்களே அறிந்து கொள்ளாத நிலை. 



0 அதுதான் உங்கள் நாவல்களின் தொடக்க முனையாக அமைந்துள்ளது அல்லவா. கருக்களே இத்தகையவை அல்லவா. 

எழுதும்போதெல்லாம் பன்முகக் கலாச்சாரச் செல்வாக்கு பற்றி யெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. தாமாகவே வெளி வந்தவை. எழுதிய பிறகுதான் நாவல்களில் கலாச்சார அம்சங்கள் இடம் பெற்றிருப்பதை உணர்ந்தேன். அம்சங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது நாவல்களில் படிப்படியாகப் புகுந்திருக்க வேண்டும். 

லத்தீன் அமெரிக்காவில் பல்வேறு செல்வாக்குகள் கலந்து கண்டம் முழுவதும் பரவின. மேற்கத்திய, ஆப்பிரிக்க, கிழக்காசியக் கலாச்சாரங்கள் அத்தனையும் கொலம்பஸுக்கு முந்திய காலத்துக் கலாச்சாரத்துடன் கலந்து போயின. இதனால்தான் மெக்ஸிகோவின் கொலம்பியக் கலாச்சாரம் என்றெல்லாம் யாரும் தனித்துப்பேச இன்று முடியவில்லை. என்னைக் கொலம்பியன் என்று இதுநாள்வரை கருதியதில்லை. லத்தீன் அமெரிக்கன் என்பதில்தான் பெருமை கொள்கிறேன், 

0 ஆக லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரம் என ஒன்று இருக்கிறதை ஒப்புக்கொள்கிறீர்களா. 

ஒருசீரான லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரம் ஏதும் இருப்பதாக உறுதியாகக் கருதவில்லை . மத்திய அமெரிக்காவிலும் கரீபிய நாடுகளிலும் ஆப்பிரிக்கச் செல்வாக்கைக் காண்கிறேன்.மெக்ஸிகோ, பெரு போன்ற நாடுகளில் அமெரிந்தியக் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டதொன்றைக் கொண்டவர்கள் கணிசமான அளவில். வேறு பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதே நிலைதான். 

தென்னமெரிக்காவில் வெனிஸ்லாவிலும் கொலம்பியாவிலும் அமெரிந்தியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தபோதும் அந்த நாடுகளில் ஆண்டியன் அமெரிந்தியர்களைவிட கரீபிய மக்களுடன் அதிக ஒற்றுமை உடையவர்களாக இருக்கிறார்கள். பெருவிலும் ஈக்வடாரிலும் கடலோர மண்டலத்துக்கும் மலைப்பிரதேசத்துக்கும் பெருமளவு வேறுபாடு காணப்படுகிறது. தென்னமெரிக்கக் கண்டம் முழுவதிலும் இதே நிலைமை. இந்த வகையான செல்வாக்குகள் ஒருங்கிணைந்து லத்தீன் அமெரிக்க நாகரீகத்துக்கு தனிச்சிறப்பியல்பைக் கொடுத்து உலகின் மற்ற கலாச்சாரங்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்றன. 

0 சூழலில் ஸ்பானியச் செல்வாக்கின் பங்களிப்பு. 

லத்தீன் அமெரிக்காவில் ஸ்பானியச் செல்வாக்கின் திண்மையும் பிரேஸிலில் போர்த்துக்கீசிய செல்வாக்கின் வன்மையையும் மறுப்பதற்கில்லை. அவை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும். காஸ்டிய ஸ்பானிய மொழியைப் பேசுகிறோம். சர்ச்சைக்குரியதாயினும் செழுமையுடையது அந்தச் செல்வாக்கு என்பதில் ஐயமில்லை. கலாச்சாரத்தின் பகுதியாக அமைந்துள்ள போதும் லத்தீன் அமெரிக்காவின் ஸ்பானிய அம்சங்கள் அத்தனையையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் போக்கு காணப்படுகிறது. இப்போக்கு தேவையற்றது, ஆபத்தானது என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை அந்தக் கலாச்சாரத்தை மரபாகப் பெற்றதில் வெட்கமடையாமல் பெருமையே கொள்கிறேன். ஸ்பானியக் குடியேற்ற ஆதிக்கம் இன்று பிரச்னையாக இல்லை. ஐரோப்பியர்கள் வருகையால் உருவான உண்மை நமதானாலும் ஐரோப்பாவின் வார்ப்பாக இருக்கவில்லை. லத்தீன் அமெரிக்கா இன்று ஐரோப்பாவிலிருந்து மாறுபட்டதாகத்தான் இருக்கிறது. 

0 எழுதுவதற்கான அகத்தூண்டுதல் எங்கிருந்து. 

எல்லாமே அசைபோடும் நினைவுகளிலிருந்துதான் தோன்றுகின்றன. 

0 தாத்தாவானவர் உங்கள் குடும்பத்தின் புராண ஏடாக இருந்திருப்பாரோ. அவர் உங்களுடைய குழந்தைப்பருவத்தில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறாரோ. 

மிக அதிசயமான முதியவர். காலத்திலும் நினைவாற்றலிலுமாக ஊசலாடிக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. அவரை வெகுவாக நேசித்தேன். எட்டாவது வயதில் இறந்தபோது கலங்கிப் போனேன். வாழ்க்கை பற்றியும் கிராமத்தில் நடந்த அத்தனை நிகழ்ச்சிக் பற்றியும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆதிகாலந்தொட்டு நடந்த வரலாறுகளையும் கதைப்ட் கூறுவார். பங்கு கொண்ட யுத்தங்களை வர்ணிப்பார். நான் பிறந்த வருஷத்தில் வாழைத்தோட்டங்களில் நடந்த பயங்கரமான படுகொலைகளையும் கொலம்பியாவின் வரலாற்றில் அழியாச்சுவடுகளாக அமைந்த அத்தகைய நிகழ்ச்சிகளையும் விளக்கிக் கூறுவார். 

ப எழுத்தாளன் என்ற முறையில் அம்மாவின் செல்வாக்கு பாதித்திருக்கிறதா. 


அம்மா மனங்கவரும் பெண்மணி. யாரோ ஒரு முறை "மகன் இவ்வளவு திறமைசாலியாக இருப்பதற்கு என்ன காரணம்" என்று கேட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்காட் மேல் தான் காரணம்" என்று பதிலளித்திருக்கிறாள். குடும்பம் முழுவதும் எனக்கு முக்கியமானது. குடும்ப உறுப்பினர் அனைவரும் நாவல்களில் ஏதாவதொரு வடிவில் தோன்றிவிடுகிறார்கள். அரக்காடக்கா தபால்காரர் மகன் என்பதை ஒருபோதும் மறப்பதில்லை. 

ப நீங்கள் முதலில் கரீபியப்பிரதேசத்தில் இருந்தவர். எழுத்துக்களில் அந்த மண்டலத்தின் அடிநாதமான வாழ்வு பிரதிபலிக்கிறது. நாவல்கள் உலகெங்கும் செல்வாக்கு பெறுவதற்குக் காரணமான மயக்கும் கதையாடல்களை அங்குதான் காண்கிறீர்களா. 

முழுமையான ஒருங்கிணைப்பைக் காணமுடியும். அன்றாட வாழ்க்கை, இயற்கை உலகம் இவற்றிடையே வேறெங்கும் விட மிகுந்த இணக்கம். கொலம்பியாவின் வடக்குக் கடற்கரையோரம் சதுப்பு நிலத்தில் மனிதன் காலடிபடாத காடுகளின் மத்தியில் மறைந்துள்ள கிராமத்தில் வளர்ந்தேன். அங்குள்ள தாவரங்களின் மணமே வயிற்றைக் கலக்கிவிடும். மூலை முடுக்கிலும் கடல் ஊடுருவிச் செல்லும். சூறாவளியில் கூரைகள் அடிக்கடி பறந்துவிடும். காற்று நுரையீரலை எரியச் செய்யும். கரீபியப்பிரதேச மக்களுக்கு இயற்கை உற்பாதங்களும் மனிதரின் கொடுந்துயரங்களும் அன்றாட வாழ்வின் அங்கங்கள். அமெரிந்தியர்களின் புராணக்கதைகளும் ஆந்துலூசியக் கற்பனைக் கதைகளும் ஏராளமாக வழங்கி வந்தன. அவற்றுடன் அடிமைகள் கொணர்ந்த புராணக்கதைகளும் இரண்டறக் கலந்தன. விளைவாக எதையும் தனிக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மனப்போக்கும் வாழ்வின் அம்சங்கள் ஒவ்வொன்றிலும் ஒருவகை அதிசயத்தைக் காணும் மனப்பான்மையும் உருவாகின. இவற்றை என்னுடைய நாவல்களில் மட்டுமின்றி குவாடமாலாவின் மிகைல் ஏஞ்சல் அஸ்தூரியாஸ், க்யூபாவின் அலேயோ கார்பென்டியர் போன்றோரின் படைப்புகளிலும் காணலாம். 

ப படைப்புகள் நெடுகிலும் காணப்படும் அதிசயத்தைக் கவனத்தில் கொண்டு magical realist என்று விமர்சகர்கள் கூறுவது நியாயமா. 

கரீபியப்பிரதேசத்தில், பொதுவாக லத்தீன் அமெரிக்காவில், வேறெந்த இயல்பான அம்சத்தையும் போலவே மாய மந்திரங்களையும் அன்றாட வாழ்வின் அங்கமாகக் கருதுகிறோம். நிமித்திகம் தொலையுணர்வு, முன்னுணர்வுகள், மூடநம்பிக்கைகள், இயற்கை பற்றிய கற்பனைப்புனைவுகள் இவற்றை நம்புவது இயல்பாகப் போய்விட்டது. இத்தகைய நிகழ்வுகளை படைப்புகளில் நியாயப்படுத்தவோ விளக்கவோ முயன்றதில்லை. இப்படியான எழுத்தில்தான் நகர்ந்து நாம் கொண்டிருக்கிறோம். 

&& ஐரோப்பாவுக்கும் லத்தீன் அமெரிக்கா வுக்குமிடையிலான தொடர்பு தவறாள் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்து வந்துள்ளது. இந்தத் தவறான கருத்துகளை நீக்கு சீரான சமநிலையை உருவாக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறீர்களா. 

கண்டத்தை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் எண்ணற்றவை. சூழலில் நினைப்பது சரியாக இருந்தாலும் நிலைமையை தெளிவாகக் கொள்வதற்கு சிக்கல்கள் தடையாக இருக்கின்றன. தன் கலாச்சாரத்தையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐரோப்பா நம்மைப் புரிந்து கொள்ளாமலிருப்பதில் வியப்பில்லை. ஐரோப்பியர்கள் பெரும் பகுத்தறியும் பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெற்றவர்கள். மற்ற பகுதிகளில் நிலவும் வேற்றுமைகளின் சொந்தக் கண்ளோட்டத்திலேயே எப்போதும் நம்மை மதிப்பிடுவது இயற்கையே. ஒருகாலத்தில் ஐரோப்பாவில் வளமைப் பெருக்கம் தேவைப்பட்டது. அதே வளமைப் பெருக்கம் லத்தீன் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் தேவைப்படுகிறது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். உலகின் ஒருபகுதிமக்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு பகுதி மக்களின் நிலையை மதிப்பிட முயல்வது பயங்கரமான தப்பெண்ணங்களுக்கு வழிவகுக்கும். மக்களிடையே பிரிவினையை மேலும் வளர்த்து அவர்களைத் தனிமைப்படுத்தவே செய்யும். ஐரோப்பிய உலகம் கடந்த தன் காலத்தைப் பார்க்க வேண்டும்; அதே கண்ணோட்டத்தில் நம்மை நோக்க முயல வேண்டும். தன் வரலாற்றில் ஏற்பட்ட சூழ்நிலை மாறுபாடுகளை அது மறந்துவிடலாகாது. லண்டனைச்சுற்றி சுவர் எழுப்பி300 வருஷங்கள் தான் ஆயின என்பதை நினைவில் வைத்திருக்கிறார்களா. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை, பல நூற்றாண்டுகள் பிடித்தன என்பதை நினைத்துப் பார்க்கிறார்களா. ரோமுக்கு சரித்திரத்தில் இடம் தேடியவன் எட்ரூஸ்க அரசன் என்பதை அறிவார்களா. படையெடுப்பாளர்கள் இங்கு வந்தபோது அஸ்டெக் தலைநகரம் டெனோக்டிக்லான், பாரிஸை விடப் பெரிய நகரமாக இருந்தது தெரியுமா. ஐரோப்பியக் கண்டத்தில் நீதியும் மனித நேயமும் நிலவும் சமுதாயத்தை நிறுவுவதில் ஆர்வங்கொண்ட பரந்த கண்ணோட்டமுடைய நம்மை நோக்கும் முறையை மாற்றிக் கொண்டால் உண்மையில் உதவலாம். மானுடச் சகோதரத்துவம் உண்மையிலேயே நிலவும் உலகில் சொந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே கண்டத்து மக்களின் வேட்கை. கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் காட்டப்படும் பரிவு வேட்கை ஈடேற உதவும் வடிவத்தில் வர வேண்டும். 

0 சிக்கல்கள் லத்தீன் அமெரிக்கக் கண்டத்துக்குள்ளே யே தோன்றுகின்றனவா, வெளியிலிருந்து வருகின்றனவா. 



உலக வல்லரசுகளின் கருணையில் வாழ்கிறோம் எனக் கற்பனை செய்து கொண்டு லத்தல் அமெரிக்காவைப்பாதிக்கும் வன்முறை அவலம் பிரிவினை அனைத்தும் பல்லாயிரம் கிலோமீட்டரு” அப்பால் செய்யப்படும் சதிகளின் விளைவு எனக் கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஏற்றத்தி" அடக்குமுறை சுரண்டல் புறக்கணிப்பை எதிர்நோக்கும் நமக்கு வாழ்க்கைதான் மறுமொழி வேண்டும். பல நூற்றாண்டுகளாக நடைபெறும் யுத்தங்கள், கொடூரங்கள் குறையவில்லை. "மன்? அற்றுப் போகும் என்பதை எண்ணிக் கூடப் பார்க்க மாட்டேன்" என்று நாற்பது வருஷங்கள்" 

• ஏற்றத்தாழ்வு மறுமொழியளிக்க 

ல். "மனிதகுலம் "ங்களுக்கு முன் 

46வில்லியம் ஃபாக்னர் கூறினார். அவர் அஞ்சியது இன்றைய அறிவியல் உலகில் நிகழக்கூடிய ஒன்றாக இருப்பதைக் காண்கிறோம். நாடுகளிடையிலான தொடர்புகள் முன் எப்போதையும் விட இப்போது வலுவாக இருக்கின்றன என்பதையும் புதிய சகாப்தம் பிறந்து வருகிறது என்பதையும் பார்க்கும் அது எந்த தனிநபரும் மற்றவர்களுக்கென்று முடிவுகள் எடுக்காது இணைந்து வாழ அனுமதிக்கும் கற்பனையுலகை உருவாக்கக் காலம் கடந்துவிடவில்லை என்று நம்புகிறேன். 

ப லத்தீன் அமெரிக்காவுடனும் அதன் பிரத்தியேக குணத்துடனும் உங்களுக்குள்ள பிணைப்பை, வேட்கையைப் படைப்புகள் பிரதிபலிக்கின்றன. 

உண்மைதான். பழைய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்க முடியும் எனக் கருதவில்லை. கண்டத்துடனும் அதன் மூலம் உலகம் முழுவதுடனும் ஆழ்ந்த பிணைப்பு இல்லாமல் நாட்டை 

அல்லது கண்டத்தை விவரிக்க நெடுங்காலம் முயலவும் கூடாது. 

பேட்டி - மானுவல் ஒஸாரியோ 

தமிழில் - நடராஜன்
****************************
காஃப்கா வாக்கியம் கதைப்பரப்புக்குள் வீசியது பேட்டி - பீட்டர் ஹெச் ஸ்டோன் 

தமிழில் - சி மோகன் 

0 டேப் ரிக்கார்டர் பயன்படுத்துவது பற்றி என்ன மாதிரி உணர்கிறீர்கள். 

பதிவு செய்யப்படுகிற பேட்டி என்று உணர்ந்த மாத்திரத்திலேயே மனோபாவத்தில் மாற்றம் வருகிறது. உடனடியாக தற்காப்பு நிலையில் என்னை உணர்கிறேன். பேட்டிக்காக டேப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பது நமக்கு இன்னமும் தெரியவில்லை; பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படித்தான் உணர்கிறேன். குறிப்புகள் எடுக்காமல் நீண்ட நேரம் உரையாடுவதுதான் சிறந்த வழி. பிறகு உரையாடலை நினைவுகொண்டு மனப்பதிவாக, அதே வார்த்தைகளின்றி, எழுதலாம். குறிப்புகளை, பேட்டி காணப்பட்டவர் சொன்னதற்கு நேர்மையுடன், விளக்கிப் பார்ப்பது இன்னொரு பயனுள்ள முறை. அத்தனையையும் பதிவு செய்கிறது என்பதாலேயே பேட்டி காணப்படுபவருக்கு டேப்பானது நேர்மையாக இருக்காது. காரணம், உங்களை நீங்களே மடையனாக்கிக் கொள்வதைப் பதிவு செய்கிற டேப் அதை நினைவுபடுத்தவும் செய்கிறது. இதனால்தான் டேப் ரிக்கார்டர் என்னைப் பேட்டியின்போது உறுத்துகிறது. இல்லாத போது தன்முனைப்பில்லாமல் இயல்பாகப் பேசுகிறேன். 

0 டேப் ரிக்கார்டர் உபயோகிப்பதில் குற்ற உணர்வு கொள்ள வைத்துவிட்டீர்கள். பேட்டிக்குத் தேவைப்படும் ஒன்று என்றுதான். 

எப்படியிருந்தாலும் உங்களைத் தற்காப்பு நிலையில் வைக்கத்தான் கூறி 

0 பேட்டி எடுக்கும் போது டேப் ரிக்கார்டர் பயன்படுத்தியதே இல்லையா. 

பத்திரிகைக்காரனாக உபயோகப்படுத்தியதில்லை. நல்ல ரிக்கார்டர் இருக்கிறது. பாட்டுப்போட்டுக் கேட்கப் பயன்படுத்துகிறேன். மேலும் பேட்டியே எடுத்தது கிடையாது. கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கேள்வி-பதில் பேட்டி ஊஹும். 

o விபத்து கண்ட கப்பலின் மாலுமியை பேட்டி கண்டு பிரசித்தி பெற்றிருக்கிறதே. 

கேள்வி-பதில் பேட்டி அல்ல. மாலுமி சாகசங்களைக் கூறினார். பெரும்பாலும் அதே வார்த்தைகளில் திரும்ப எழுதிப்பார்த்தேன் அவரே எழுதுவது போல. தினசரித் தொடராக இரண்டு வாரங்கள் பத்திரிகையில் அவருடைய ஒப்பத்துடன் வெளியானது. பிரசுரமாகி இருபது வருஷங்களுக்கு அப்புறம்தான் நான் எழுதியதாக அடையாளம் கண்டார்கள். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவல் வெளியாகிற வரை அந்த எழுத்தை யாரும் மதிக்கவில்லை . 

0 பல காலமாக நாவல்கள் எழுதிவிட்டு மீண்டும் பத்திரிக்கைக்காரனாக இருப்பது எப்படியிருக்கிறது. 

43பத்திரிக்கைத்தொழிலை நிஜமான என் தொழிலாக நம்புகிறேன். தொழிலின் சூழல் பிடித்ததாக முன்பு இல்லை. பத்திரிகைகளின் ஈடுபாடுகளுக்கு ஏற்ப எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நாவலாசிரியனாக மாறி பொருளாதார மாற்றத்தையும் கண்டபடியால் ஈடுபாடுள்ள விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும் என் கருத்துகளுடன் அவற்றைத் தொடர்புபடுத்தவும் இப்போது முடிகிறது. என்ன இருந்தாலும் பத்திரிகை மூலமாக மகத்தான படைப்பை உருவாக்க முடிகிற வாய்ப்பு சந்தோஷத்தையே தருகிறது. 

0 அப்படியான மகத்தான படைப்பு. 

ஜான் ஹெர்ஸேவின் Hiroshima தனித்துவம் கொண்ட படைப்பு. 

0 குறிப்பாக நீங்கள் சொல்ல வேண்டிய கதை என்று மிஞ்சியிருப்பது. 

நிறைய. சிலதை எழுதியிருக்கிறேன். போர்த்துக்கீசியம், க்யூபா, அங்கோலா, வியட்நாம் பற்றி. போலந்து பற்றி எழுத விரும்புகிறேன். அங்கே நடப்பதை விவரிக்க முடிந்தால் சரியான கதையாக அமையும். ஆனால் போலந்தில் மிகக்குளிராக இருக்கும்; சிரமம்தான். ஆக வசதிகளை விரும்புகிற பத்திரிகைக்காரன் நான். 


0 பத்திரிகைத்துறையால் இயலாத விஷயங்களை நாவல்கள் தர முடியும் என்று நினைக்கிறீர்களா. 

வித்தியாசம் இருப்பதாக நினைக்கவில்லை . டானியல் டிஃபேவின் Journal of the Plague Year சிறந்த நாவல். Hiroshima பத்திரிகைக்கு ஏற்ற படைப்பு. ஆக, இரண்டின் மூலங்களும் விஷயங்களும் ஒன்றுதான். 

0 நிஜத்துக்கும் கற்பனைக்கும் சமநிலையை உருவாக்குவதில் பத்திரிகைக் காரனுக்கும் நாவலாசிரியனுக்கும் வித்தியாசமான பொறுப்புகள் இருக்கின்றன என்று சொல்லலாமா. 

பத்திரிகைத்துறையில் ஒரு செய்திப்பொய் கூட எழுத்தை வளைத்துவிடும். புனைகதையில் வரும் நிஜம் ஒன்றும் முழுப்படைப்புக்கும் நியாயம் சேர்த்துவிடும். இதுதான் ஒரே வித்தியாசம். எழுத்தாளனின் பொறுப்புணர்வைச் சார்ந்திருக்கிறது. மக்களை நம்பிக்கை கொள்ள வைக்கும் வரையில் நாவலாசிரியன் விரும்பும் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ள முடிகிறது. 

0 சில வருஷங்களுக்கு முன் பேட்டிகளில், பத்திரிகைக்காரனாக இருந்த காலத்தை பின்னோக்கிப் பார்த்து, எவ்வளவு வேகமாகச் செயல்பட முடிந்தது என்று வியந்திருக்கிறீர்கள். 

பத்திரிகைக்கு எழுதுவதும் சரி. நாவல் எழுதுவதும் சரி. இப்போது சிரமம். பத்திரிக்கைக்கு எழுதும் போது ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் குவிக்க வேண்டி இருக்கவில்லை. இப்போதோ அப்படி இல்லை. EI Espectador பத்திரிக்கைக்காக போகோட்டாவில் இருந்த 

49போது வாரத்திற்கு மூன்று படைப்புகள் செய்துவிடுவது வழக்கம். தினமும் இரண்டு மூன்று ஆசிரியர் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள் எழுதுவேன். இரவில், வீடு திரும்புவோரை அனுமதித்துவிட்டு, தங்கித்தான் நாவல்களை எழுதுவேன். லினோடைப் எந்திர மழை இரைச்சல் மிகவும் பிடிக்கும். நின்று போனால் தனிமைப்பட்டு விடுவேன். எழுத முடியாது. அந்த நாட்களோடு ஒப்பிடும்போது நான் எழுதிக் கொண்டிருப்பது குறைவு. சாதாரணமாக காலை மணி ஒன்பதிலிருந்து மதியம் இரண்டு மூன்று வரை எழுதுவதெல்லாம் நான்கைந்து வரிகள் மட்டுமே. அந்தப் பத்தியையும் மறுநாள் கிழித்துப் போட்டு விடுவேன். 

&& மாற்றம் ஏற்பட்டது புகழினாலா, ஒருவித அரசியல் ஈடுபாட்டாலா. 

இரண்டினாலும்தான். யாருக்காக எழுதுகிறேன் என்று நினைத்திருந்தேனோ, அதை விட கணக்கற்ற பேர் எழுத்தைப் படிக்கிறார்கள் என்ற நிதர்சன விநோதம் என்மீது எதிர்பாராத இலக்கியம் மற்றும் அரசியல் தொடர்பான பொறுப்பை சுமத்துகிறது. இதுநாள்வரையிலான படைப்புகளின் தரத்திலிருந்து தலைகுப்புற விழக்கூடாது என்ற பெருமிதமும் எனக்கு உண்டு. 

0 எழுத ஆரம்பித்தது எப்படி. 

கார்ட்டூன்கள் வரைவதிலிருந்து. படிக்கவும் எழுதவும் ஆரம்பிப்பதற்கு முன்பே வீட்டிலும் பள்ளியிலும் காமிக்ஸ் வரைந்து கொண்டிருப்பேன். உயர்நிலைப்பள்ளியில் இருக்கும் போது எதுவுமே எழுதியிருக்காவிட்டாலும் அந்தஸ்து கிடைத்திருந்தது வேடிக்கை தான். கடிதமோ துண்டறிக்கையோ எழுதியது நான்தான். எழுத்தாளன் ஆயிற்றே. கல்லூரிக்குப் போனபோது சராசரி நண்பர்களை விடவும் குறிப்பிடத்தக்க இலக்கியப் பின்னணி இருந்தது. போகோட்டாவில் தற்கால எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிற புதிய நண்பர்களை பரிச்சயப்படுத்திக் கொண்டேன். குறிப்பிட்ட இரவில் ஃப்ரான்ஸ் காஃப்காவின் சிறுகதைத் தொகுதியை ஒருவர் தந்து சென்றார். அறைக்குத் திரும்பி The Metamorphosis கதையைத் தொடங்கினேன். முதல் வரி படுக்கையிலிருந்து தூக்கி எறிந்தது. "தொல்லை மிகுந்த கனவுகளிலிருந்து க்ரகோர் ஸாம்ஸா காலை விழித்த போது படுக்கையில் ராட்சஸப் பூச்சியாக தான் மாறியிருப்பதைக் கண்டு" என்ற வரியை வாசித்தவுடன் வியப்படைந்து, போல எழுத யாருக்கும் அனுமதியுண்டு என அறிந்து, ஒருவித லயிப்பில் ஆழ்ந்து போனேன். அறிந்திருந்தால் எப்போதோ எழுதத் தொடங்கியிருப்பேன். ஆக சிறுகதைகள் எழுதத் தொடங்கியது இப்படித்தான். முற்றிலும் அறிவார்ந்த சிறுகதைகள். இலக்கிய அனுபவங்களின் அடிப்படையிலேயே அவற்றை எழுதினேன். அப்போது இலக்கியத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயான உறவை அறிந்திருக்கவில்லை. . போகோட்டாவிலிருந்து வெளியான பத்திரிகையின் இலக்கிய இணைப்பில் பிரசுரமாகி நல்ல வரவேற்பையும் பெற்றன. கொலம்பியாவில் அறிவார்ந்த சிறுகதைகள் எழுதியிருக்க யாருமில்லையோ. நாட்டுப்புற வாழ்க்கை, சமூக வாழ்நிலை பற்றியே எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆரம்பச் சிறுகதைகளை படித்தவர்கள் ஜேம்ஸ் ஜாய்ஸின் பாதிப்புகள் இருந்ததாக என்னிடம் சென்னார்கள். 

0 ஜாய்ஸை அப்போது படித்திருந்தீர்களா.அதுவரை படித்திருக்கவில்லை. ஆகவே Ulysses நாவலைப் படிக்கத் தொடங்கினேன். இருந்த ஒரே ஸ்பானியப் பதிப்பை வாசித்தேன். அப்புறம் ஆங்கிலத்திலும் சிறந்த ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பிலும் படித்தேன். ஸ்பானிய மொழிபெயர்ப்பு மிக மோசமானது என்று புரிந்தேன். ஆனால் எதிர்கால எழுத்துக்கு பயன்படக்கூடிய தனிமொழி உத்தியை அறிந்து கொ எடேன், வெர்ஜீனியா வுல்ஃப் எழுத்துக்களில் அதைக் கண்டேன். என்றாலும் Lazarillo ! de Termes எழுதிய பெயர் தெரியாதவர் தான் தனிமொழி உத்தியைக் கண்டுபிடித்தவர் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன். 

0 எழுத்தின் ஆரம்ப கட்டத்தில் பாதித்தவர்கள் யார். 

அமெரிக்காவில் தொலைந்து போன தலைமுறை எழுத்தாளர்கள் தான் சிறுகதை மீதான அறிவுபூர்வமான மனோபாவத்திலிருந்து விடுபட எனக்கு உதவியவர்கள். இலக்கியம் அவர்களுடைய வாழ்க்கையுடன் உறவு கொண்டிருப்பதையும் என் சிறுகதைகளில் அது இல்லாதிருப்பதையும் உணர்ந்தேன். இந்த மனோபாவம் தொடர்பான முக்கிய சம்பவமொன்று நடந்தது. 1948 ஏப்ரல் ஒன்பதாம் தேதி அரசியல் தலைவர் கெய்தான் சுடப்பட்டார். ஜனங்கள் பைத்தியம் பிடித்தாற் போல் கூச்சலிட்டபடி வீதிகளில் சென்றனர். விடுதிகளில் மதியவுணவு சாப்பிட உட்கார்ந்த போது செய்தியைக் கேள்விப்பட்டேன். நடந்த இடத்துக்கு ஓடினேன். டாக்ஸியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். விடுதிக்குத் திரும்பும் வழியில் ஜனங்கள் கூடி ஆர்ப்பரித்து கடைகளைச் சூறையாடி கட்டிடங்களை 

எரித்தனர். அவர்களுடன் இணைந்தேன். என்ன மாதிரி நாட்டில் வாழ்ந்திருக்கிறேன். சிறுகதைகள் துளியும் தொடர்பு இல்லாமல் அதனுடன் இருப்பதையும் அன்று மதியத்தில், மாலையில் உணர்ந்தேன், 

குழந்தைப்பருவத்தில் வாழ்ந்திருந்த கரீபியப்பிரதேச பாரன்க்வுல்லாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டபோது அத்தகையதோர் வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருந்தான் என்பதையும் எழுத விரும்பினேன் என்பதையும் உணர்ந்தேன். 

1950-51 வாக்கில் எழுத்துக்கு அடுத்த பாதிப்பு. அரக்காடக்காவில் பிறந்த வீட்டை விற்பதற்காக அம்மா கூட்டிச் சென்றாள். இடத்தை அடைந்தபோது அதிர்ச்சியடைந்தேன். இருபத்திரண்டு வயதாகியிருந்த நான் எட்டு வயதுக்குப் பிறகு போகவே இல்லை. அங்கு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போலன்றி வாசிப்பதாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். சும்மா உட்கார்ந்தபடி ஏற்கனவே இருப்பதை நான் வாசித்துக் கொண்டிருப்பதை எழுதினால் போதும் என்று உணர்ந்தேன், எல்லாமே இலக்கியமாக உருப்பெற்றிருந்தன. வீடுகளும் ஜனங்களும் நினைவுகளும். ஏற்கனவே வில்லியம் ஃபாக்னரைப் படித்துவிட்டிருந்தேனா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவருடைய எழுத்துமுறை மட்டுமே பார்த்ததை எழுத்தாக்க உதவியிருக்கும் என்று இப்போது பரிகிறது. கிராமத்தின் சூழலும் வெக்கையும் வீழ்ச்சியும் கிட்டத்தட்ட ஃபாக்னரிடம் உணர்ந்ததைப் போல. வாழைத்தோட்டப் பிரதேசமான அங்கே பழக்கம்பெனிகளால் குடியேற்றப்பட்ட ஏகப்பட்ட அமெரிக்கர்கள் வாழ்ந்தது தொலைதூரத் தெற்கத்தி 

51அழுத்தாளர்களின் சூழலை ஒத்திருந்தது. என் எழுத்தில் ஃபாக்னர் செலுத்தும் பாதிப்பு பற்றி எழுத்தாளர்களின் . விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை எதேச்சையானதாகக் கருதுகிறேன். ஃபாக்னர் கையாள்கிற அதே மாதிரியான விஷயத்தைக் கையாள்கிறேன். 

இலைப்புயல் என்ற முதல் நாவலைத் திரும்பியதும் எழுத ஆரம்பித்தேன். குழந்தைப்பருவத்தில் நடந்த அத்தனையும் இலக்கியத்துவம் கொண்டவை என்பதை உணர்ந்துகொண்டு போற்றவும் தொடங்கினேன். நாவல் எழுதிய சமயத்தில் எழுத்தாளனாக விரும்பியதையும் உணர்ந்தேன். யாரும் தடுத்துவிடப் போவதில்லை. செய்ய வேண்டியது எல்லாம் உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளன் ஆக முயல்வதுதான் என்று உணர்ந்தேன். 1903 ஆம் வருஷம் இதெல்லாம் நடந்துவிட்டாலும் என் எட்டுப்புத்தகங்களில் ஐந்தை எழுதிமுடித்த பிறகு 1967-ஆம் வருஷத்தில்தான் முதல் ராயல்டித் தொகையைப் பெற முடிந்தது. 

&& குழந்தைப்பருவ அனுபவங்களின் மதிப்பை உதாசீனப்படுத்துவதும் அறிவு பூர்வமாக செயல்படுவதும் உங்களிடம் இருந்தைப் போல எழுத்தாள இளைஞர்களிடம் அதிகமாக இருக்கின்றன என்று சொல்ல முடியுமா. 

இல்லை. எழுத்தாளனின் வளர்ச்சிக்கிரமம் நீங்கள் சொல்வதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஆனால் எழுத்தாள இளைஞர்கள் தங்களுக்கு நடப்பவை பற்றி எழுதுமாறுதான் வேண்டுமென்றால் ஆலோசனை சொல்வேன். தனக்கு நேர்வதைப் பதிகிறானா, படிப்பதையோ கேள்விப்படுவதையோ மாற்றி முன்வைக்கிறானா என்பதை சுலபமாகச் சொல்லிவிடலாம். "நான் பாடும்போது ஏதும் கற்பனை செய்துவிடாதபடி கடவுளே காப்பாற்றுங்கள்" என்று பாப்லோ நெருடாவின் கவிதை வரி செல்கிறது. கற்பனைப் புனைவுக்காக பாராட்டுப்பெறுகிற என் எழுத்து நிஜத்தில் நிற்பதுதான் உண்மை . பாராட்டுகள் எனக்கு வேடிக்கையாகப் படுகின்றன. கரீபியப் பிரதேசத்தின் எதார்த்தம் மிக மூர்க்கமான கற்பனையை ஒத்திருப்பதுதான் பிரச்னை. 

0 அந்தக்கால கட்டத்தில் உங்கள் வாசகர்கள் யார்யார். 

புத்தகங்களை இரவல் தந்து என் எழுத்து வேகம் மீது உற்சாகம் காட்டிய நண்பர்களுக்காக இலைப்புயல் நாவல் எழுதினேன். குறிப்பிட்ட யாருக்காகவோ எழுதுவதாகத்தான் பொதுவில் நினைக்கிறேன். எழுதும்போது எந்தெந்த நண்பர்கள் எந்தெந்த வரிகளை விரும்பக்கூடும் என்ற லயிப்புடன் செயல்படுகிறேன். எழுதும் புத்தகங்களெல்லாம் கடைசியில் நண்பர்களுக் காகத்தான். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவல் எழுதிய பிறகு லட்சக்கணக்கில் உள்ள வாசகர்களில் யாருக்கு எழுதுகிறேன் என்ற பிரச்னை வருவது சங்கடப்படுத்துகிறது. லட்சக்கணக்கில் கண்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க அவற்றின் சொந்தக்காரர்கள் மனதில் இருப்பது தெரியாத நிலை. 

0 பத்திரிகை எழுத்து கதைகளைப் பாதித்திருக்கிறது பற்றி. 

பாதிப்பு என்பது பரஸ்பரம். கதைகள் பத்திரிகையில் வருகிற என் எருக்கம் 

வருகிற என் எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தருகின்றன. பத்திரிகை எழுத்து எதார்த்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ள கதைகளுக்கு உதவுகிறது. 

52ப இலைப்புயல் எழுதிய பின்பும்  ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் எழுதும் பின்பும் எழுத்து நடையைக் கண்டடைவதற்காகக் கடந்த நிலைகளை விளக்கலாமே. 

இலைப்புயல் நாவல் எழுதிய பிறகு கிராமம் பற்றியும் குழந்தைப்பருவம் பற்றியும் எழுதுவதென்பது அரசியல் எதார்த்தத்தை எதிர் கொள்வதிலிருந்து தப்பிச்செல்வதாகத் தீர்மானித்துக் கொண்டேன். அரசியல் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக நினைவுலகில் பதுங்கிக் கொள்வதாகத் தப்பெண்ணம் கொண்டேன். இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவு குறித்து விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலம். இரண்டுக்குமான இடைவெளியை இட்டு நிரப்புவதாக எழுத்தை முயன்று பார்த்தேன். முதலில் 60பாகனான பாதிப்பு, அடுத்து ஹெமிங்வே. யாரும் கர்னலுக்கு எழுதுவதில்லை, தீவினைக்காலம், பெரியம்மாவின் மரணச்சடங்கு போன்றவற்றைக் கிட்டத்தட்ட அந்தக்காலத்தில் எழுதிப்பார்த்தேன். இவற்றில் பொதுவான தன்மைகள் உண்டு. இலைப்புயல் மற்றும் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவல்களின் கிராமத்திலிருந்து வேறுபட்ட கிராமத்தில் இக்கதைகள் நடக்கின்றன. மந்திர தந்திரங்கள் அற்ற கிராமம் இது. பத்திரிகை எழுத்தைச் சார்ந்ததொரு வகை இலக்கியம். 

ஆனால் தீவினைக்காலம் நாவலை முடிக்கும்போது என் அத்தனைக் கருத்துகளும் மீண்டும் தப்பிதங்களாகி விட்டதை உணர்ந்தேன். குழந்தைப்பருவம் தொடர்பான எழுத்துகள் கூடுதலான அரசியல் தன்மை கொண்டிருந்ததையும் நினைத்திருந்ததை விடவும் நாட்டின் எதார்த்தம் அவற்றில் அதிகமாக இருப்பதையும் புரிந்துகொண்டேன். தீவினைக்காலம் முடிந்து ஐந்தாண்டுகள் எதுவும் எழுதவில்லை. எழுதவேண்டியது குறித்து இதுதான் என்ற கவனம் இருந்தாலும் ஏதோ நழுவிப்போய்க் கொண்டிருந்தது. பிடிபடாத இந்தத் தொனியை அடைந்து ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் பரவ விட்டேன். பாட்டி கதைசொல்கிற வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அற்புதமானதும் அமானுஷ்யமானதுமான விஷயங்களை இயல்பாகச் சொல்லுவாள். தொனியை எய்தியதும் பதினெட்டு மாதங்கள் வரை தினமும் எழுதுவேன். 

0 அற்புதமானதை பாட்டி இயல்பாக வெளிப்படுத்தியது எப்படி, 

முகபாவம்தான் முக்கியமானது. மாற்றவே மாட்டாள். கேட்பவர்களோ வியப்பில் அமிழ்ந்து போவார்கள். பாடடி போல கல்முகத்துடன் ஒரே பாவத்தில் எழுதிச் செல்வதை தொனியாக கண்டுபிடித்துத்தான் எழுதப்பட்டது. தொனியில் பத்திரிகைத்தன்மை உண்டு. அற்புதத்தைத் துல்லியமாக விவரிக்கும்போது அதற்கென்றே வரும் எதார்த்தம் உண்டு. இலக்கியத்தில் பிரயோகிக்கக்கூடிய பத்திரிகைக்கார வித்தை. ஆகாசத்தில் பறக்கும் யானைகள் என்றால் யாரும் நம்பப் போவதில்லை. வானத்தில் 425 யானைகள் இருந்தன என்றால் நம்பிக்கை வரலாம். நாவல் முழுவதும் இப்படித்தான் 

0 நாவலில் வரும் தூக்கமற்றுப்போகும் தொற்றுநோயை எங்கே பிடித்தீர்கள். 

ஈடிபஸ்ஸில் ஆரம்பித்து வருகிற நோய்கள் பற்றி பயங்கர ஆவல். மத்தியக்காலத்து ப்ளேக் வகைகள் பற்றியும் நிறைய வாசித்ததுண்டு. டிஃபே சொல்ல வருவதை விந்தை யாக்கி விடுபவர். லண்டன் நகர நோயைக் கவனித்து எழுதினார் என பல வருஷங்கள் நினைத்து, நாவலின் ப்ளேக் நடந்தபோது ஏழு வயது கூட நிரம்பாத குழந்தை டிஃபே என பிறகு அறிந்தேன். வெவ்வேறு வடிவங்களில் தாக்குகிற ப்ளேக் நோய்கள் திரும்ப எழுத்தில் பரவுகின்றன. தீவினைக்காலம் நாவலில் துண்டறிக்கைகளாக, கொலம்பியாவில் அரசியல் வன்முறை என்ற அரூபமாக, சனிக்கிழமைக்கு அடுத்தநாள் சிறுகதையில் எல்லாப் பறவைகளும் தாக்குண்டு சாகிற நோயாக, அப்புறம் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் இலக்கிய வித்தையாக. தூக்கமற்றுப் போகும் தொற்றுநோய்க்கு எதிரான ஒருவித தச்சுத்தொழில்தான் இலக்கிய வித்தை. 

0 விளக்க முடியுமா. 

எழுதுவதும் மேஜை செய்வதும் அளவில் சம கடினம். எதார்த்த மரத்தின் ஊடே வேலை. உத்திகளும் வித்தைகளும் நிறைய. மாயாஜாலம் கொஞ்சம், கடின உழைப்பு ஏராளம் - ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னது போல - அவர்தானோ. பத்து சதவீதம் உத்வேகம், மிச்சம் உழைப்பு கொண்டு உருவாகின்றன. ஒருபோதும் செய்திருக்கவில்லை என்றாலும் மதிப்பது தச்சுத்தொழில். காரணம், செய்ய எப்போதுமே யாராவது கிடைக்கப்போவதில்லை. 

0 நாவலில் வரும் வாழைக்காய்ச்சலின் அடிப்படை ஐக்கியப் பழக் கும்பனியார்கள் செய்ததில் இருக்கிறதோ. 

காய்ச்சல் எதார்த்தத்தின் நெருக்கடி மிக்க மாதிரி. சரித்திர நிரூபணம் அற்ற விஷயங்கள் சிலதும் இலக்கிய வித்தைகள் ஆகின. சதுக்கத்துப் படுகொலை நிஜம். ஆதாரங்களை வைத்து எழுதியபோது எண்ணிக்கையோ தெரியாது. 3000 என எழுதியது மிகை, குழந்தைப் பருவத்தில் நீள ரயில் தோட்டத்திலிருந்து உத்தேசமாக வாழைப்பழங்களை மட்டுமே கொண்டு செல்வதை வைத்து, 3000 பேர் இறந்து முடிவாக சமுத்திரத்தில் போய்க்கொண்டு தள்ளியிருக்கவும் முடியும் என எழுதினேன். இறந்தது மூவாயிர மனிதர்கள் என சட்டசபையிலும் பிறிது களங்களிலும் இயல்பாக நினைவு கொள்கிறார்கள். சரித்திரத்தின் பாதியும் இப்படித்தானோ. குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் சர்வாதிகாரி சொல்கிறான். "விஷயம் ஒன்று. நிஜமாக இன்றில்லை என்றென்ன, என்றாவது நிஜம் ஆகிவிடும். எழுத்தாளர்களை இன்றில்லை என்ன, நாளை அரசாங்கத்தை விட நம்புவார்கள்." 

0 எழுத்தாளனின் பலம் இது. 

குணாவம் செய்கிறேன். உயர்ந்த பொறுப்புணர்வை அது தரும். முற்றிலும் நிஜமானதும் 

சாரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் போல அற்புதமான எதார்த்தமானதும் ஒரு நூற்றாண்டுக்காலத் கனி ஆகப்போகும் படைப்பை எழுத விரும்புகிறேன். 

0 குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலில் அயல்கடனுக்காக சமுத்திரத்தை விட்டுக் கொடுப்பதான நாடு பற்றி. 

54நடந்த ஒன்று. பலமுறை நடக்கப்போவது. ஆக நாவல் சரித்திர ரீதியில் எதார்த்த நிஜங்களை கண்டறியவும் செய்கிறது. தீர்க்க தரிசனமாகவும் சுழல்கிறது. அற்புதக்கதையாளி எனப் பெரும்பாலோர் நினைக்கும் நான் இப்படியான எதார்த்தம் என்று நம்புவதை எழுதுகிறேன் பாருங்கள். 

0 எதார்த்த ம் கனவுலகமா. 

கனவுலக வார்த்தை குறிப்பது எதார்த்தமா, லட்சியமா நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கனவுலகம் எதார்த்தம் தான் நினைக்கிறேன். 

ப நாவலின் பாத்திரங்கள் அதுவும் சர்வாதிகாரிகள் நிஜ மனிதர்களின் மாதிரிகளா. ஃப்ராங்கோ, பெரோன் மற்றும் ட்ரூஜில்லோ ஆகியோருடன் ஒப்பிட முடிகிறதே. 

நாவல் எதிலும் பாத்திரம் கூட்டுக்கலவையே. அறிந்த கேள்விப்பட்ட படித்த பாத்திரங்களின் கலவை, கடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த சர்வாதிகாரிகள் பற்றி வாசித்தேன். சர்வாதிகாரம் கண்ட பலருடன் பேசினேன். பத்து வருஷம் செய்து பாத்திரத்தெளிவு எய்தியவுடன் வாசித்ததும் கேட்டதுமான அத்தனையும் மறக்க முயன்றேன். நிஜவாழ்வுடன் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தாமல் அப்போதுதான் நானாகக் கண்டடைய முடியும். சர்வாதிகாரத்தை நேரடியாக அனுபவிக்கிறேன் இந்த நான். ஸ்பெயினில் வைத்து நாவலை எழுதினால் கெட்டிதட்டிப் போன சர்வாதிகாரத்தை அறிய முடியும் என யோசித்தேன். ஃப்ராங்கோவின் ஆட்சியை விடவும் கரீபியப்பிரதேச சர்வாதிகாரம் வித்தியாசமானது. ஏதோ ஒன்று அகப்படாமல் எழுத்து ஒரு வருஷம் நின்றுவிட்டது. என்னதென்று தெரியாமல் போனாலும் திடீரென கரீபியப்பிரதேசத்துக்குத் திரும்புவது என முடிவெடுத்து கொலம்பியாவில் உள்ள பாரன்க்வுல்லாவுக்குத் திரும்பினோம். திரும்பி ஒரு விஷயத்தைத் தெரிந்தவுடன் பத்திரிகைக்காரர்கள் கேலி செய்வதாக நினைத்தார்கள். மறந்து போன கொய்யாப் பழத்தின் வாசனையை மீட்கத்தான் திரும்பியதாகக் கூறினேன். எழுத அதிகத் தேவையாக இருந்தது வாசனையின் நினைவுதான். நாவல் இழக்கவிருந்த கூறுகளைக் கரீபியப்பிரதேசத்தின் தீவுகளில் தாவிப் பயணித்த போது மீட்டுக் கொண்டேன், 

0 அதிகாரத் தனிமைவாசம் நாவலில் அடிக்கடி வரும் ஒன்று. 

அதிகாரம் அதிகப்படும் அளவுக்கு சொல்பவர்களில் பொய்யர்களையும் பிறரையும் பிரித்தறிவது சிரமமாகி விடுகிறது. பரிபூரண அதிகாரம் எதார்த்தத்துடனான தொடர்பை அறுத்துவிடுகிறது. அதைவிட மோசமான தனிமைவாசம் இல்லை. அதிகாரமிக்க சர்வாதிகாரியை சுயநலக்காரர்கள் சூழ்ந்து இசைவுடன் தனிமைப்படுத்த முயன்று பார்க்கிறார்கள். 

0 தனிமைவாசம் எழுத்தாளனுக்கு வேறொன்றா. 

அதிகாரத் தனிமைவாசத்துடன் ஒத்துக் கூடிப் போவது தான். எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் முயற்சி எதார்த்தத்தின் சிதறுண்ட உலகத்துக்கு இழுத்துச் சென்று விடுகிறது. 

55எதார்த்தத்தை மொழிக்கு மாற்ற முயற்சிக்கும் போது அத்துடன் உள்ள தொடர்பை இழக்கும் கட்டம் உருவாகி சமகால விவகாரங்களிலிருந்து ஒதுங்க நேர்வதை எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். இதற்கான தற்காப்பு பத்திரிகைத்துறை என்பதால் அந்த உலகில், குறிப்பாக அரசியல் எழுத்துடன், தொடர்ந்து உறவு கொண்டு வருகிறேன். ஒரு நாவலுக்குப் பிறகு எழுத்தாளனுடைய தனிமை அன்றி புகழின் தனிமை அச்சுறுத்தியதை உணர்ந்தேன். அதிகாரத் தனிமைவாசத்துடன் ஒத்துக் கூடிப் போன இதையடுத்து பிற நண்பர்கள் துணை புரிந்தார்கள், இன்றும் உடன் இருக்கிறார்கள். 

0 எப்படி. 

வாழ்நாள் பூராவும் அவர்களையே தொடர முடிந்திருக்கிறது. எப்போதும் தரையில் கால்பாவிக் கொண்டிருப்பவர்கள். பரபரப்பற்ற இவர்கள் பூமிக்குத் திரும்பவும் என்னை அழைத்தார்கள். 

0 குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் அரண்மனையில் திரும்ப பசுக்கள் வருகிற படிமங்கள் நிஜமானவையா. 

பழைய காமிராப் படப்புத்தகம் ஒன்றை உங்களுக்குக் காட்டுகிறேன், பாருங்கள். நாவல்களின் முதல் வரியில் ஒரு படிமம் வருவது நிஜம்தான். இந்த நாவல் எழுதியபோது கிழவன் வசிக்கும் ஆடம்பரமான அரண்மனைக்குள் புகுந்த பசுக்கள் திரைச்சீலைகளைத் தின்று கொண்டிருப்பது முதலில் கிடைத்த படிமம், காமிராப்படத்தைப் பார்க்கும் வரை ஸ்தூலமற்று இருந்த படிமம். ரோம் நகரத்தில் பழைய கடை ஒன்றில் படத்தைக் கண்டவுடன் படிமம் முற்றுப் பெற்றது. அறிவுஜீவிகளில் நான் இல்லை என்பதால் படைப்புகளிலிருந்து அல்லாமல் தினசரி சமாச்சாரங்களிலிருந்து படிமங்களைப் பெறுகிறேன். 

0 நாவல்களின் திருப்பங்கள் எதிர்பாராது போனதுண்டா . 

ஆரம்பத்தில் உண்டு. அப்போது எழுத்தின் மனோலயம் பற்றி பொதுவான அபிப்பிராயம் மட்டுமே கொண்டிருப்பேன். எழுத்தின் போதான அதன் வாய்ப்புகளுக்கு இடம் கொடுப்பேன். உத்வேகம் பெருகும் இளம் வயதில் தவறல்ல, நிறைய உத்திகளைக் கற்றுக் கொள்ளாவிட்டால் உத்வேகம் போய்விடும், பிற்காலத்தில் சிரமப்பட வேண்டியிருக்கும், அப்போது உத்திகளே உத்வேகத்தை ஈடுகட்டும் என்றெல்லாம் ஆலோசனை வழங்கப்பட்டது. சரியான சமயத்தில் அதை ஏற்றுக்கொண்டு இருக்காவிட்டால் எழுத்தின் வெளிக் கட்டமைப்பை முன்னதாகவே உருவாக்கிக் கொள்ள வாய்த்திருக்காது. கட்டமைப்பு என்பது முற்ற முழுதான தொழில் நுட்பப் பிரச்னை. ஆரம்பத்தில் கற்காவிட்டால் முடியாது. 

0 எழுதும்போது கட்டுப்பாடு முக்கியமாகி விடுகிறது. 

சாதாரணக் கட்டுப்பாடு இல்லாமல் நாவல் எழுத முடியுமென்று நினைக்கவில்லை. 

0 செயற்கையான தூண்டுதல்கள் பற்றி. 

எழுத்து தமக்குக் குத்துச்சண்டை போன்றது என ஹெமிங்வே எழுதியது மிகவும் பிடித்திருக்கிறது. உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை கொண்டவர். குடிகாரர் என பெயர் பெற்ற போதிலும் குடித்திருக்கும்போது வரி கூட எழுத முடிந்ததில்லை என ஃபாக்னர் கூறியுள்ள ஒவ்வொரு பேட்டியும் நினைவுக்கு வருகிறது. எழுதும்போது சில சமயம் போதை மருந்து உள்போனதா என விவாதிக்கும் மோசமான வாசகர்களுக்கு இலக்கியம், போதைப் பொருள் பற்றி எதுவும் தெரியாது எனவும் ஹெமிங்வே கூறியிருக்கிறார். எழுதும்போது தெளிவாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும், அப்போது நன்றாக எழுத முடியும் என் நினைக்கிறேன். எழுத்து தியாகம் என்றும் பொருளாதார மற்றும் உணர்வு நிலைகள் மோசமாகப் போகும் அளவுக்கு சிறப்பது எழுத்து எனவும் முன்கூறும் மிகையான கோட்பாடுகளை எதிர்க்க வேண்டும். படைப்பாக்கம் வேண்டி நிற்கும் ஆரோக்கியத்தை வாழ்க்கையை நேசித்த சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் அறிந்தவர்கள். 

0 எழுத்து ஒரு சலுகை, படுகிற இன்னல்களை மிகைப்படுத்தும் மனிதர் கள் எழுத்தாளர்கள் என ப்ளெய்ஸ் ஸென்ட்ரார்ஸ் கூறுகிறார். 

கவனமாகச் செய்யப்படும் கடினமான பணி எழுத்து. சுய திருப்தி மட்டும்தான் சலுகை. எழுத்தில் மிதமிஞ்சி எதிர்பார்ப்பவன் நான். தவறுகளைப் பொறுக்க முடியாததால் பரிபூரண தரம் எய்துவதும் சலுகையாகி விடுகிறது. பிரபஞ்சத்தின் மையம், சமூகத்தின் மனசாட்சி என எழுத்தாளர்கள் வளைய வருகிறார்கள் ஆனால் செவ்வனே செய்யப்பட்ட எதையும் மதிப்பேன். உதாரணமாக விமானத்தில் போகும்போது எழுத்தாளனை விடவும் பைலட்களே முன்னோடிகள். 

0 எழுத்துக்கான உங்கள் நேரம் எது. இன்னதென்று வைத்திருக்கிறீர்களா. 

தொழிலாக எழுதும்போது நேரம் பிரச்னைதான். பத்திரிக்கைக்காரனுக்கு இரவில் தான் வேலை. முழு நேரம் எழுத ஆரம்பிக்கும்போது நாற்பது வயது. காலை ஒன்பது மணிக்குத் துவங்கி பையன்கள் வீட்டுக்கு வருகிற இரண்டு மணி வரை எழுதுவேன். கடின வேலைக்குப் பழகியிருந்ததால் காலையில் மட்டும் உழைப்பது குற்ற உணர்வைத் தந்தது. மதியங்களிலும் அதனால் எழுத முயன்றேன். எழுதியதைக் காலையில் மீண்டும் எழுத வேண்டியதாயிற்று. ஆக ஒன்பது மணி வரை வேலை மட்டுமே செய்வதென்றும் அப்புறம் சந்திப்புகளை மேற்கொள்வது என்றும் தீர்மானித்தேன். 

பரிச்சயம் அடைந்த இடங்களில் எழுத முடிகிறது. ஓட்டல் அறைகளிலும் இரவல் டைப்ரைட்டர்களிலும் இயங்க முடிவதில்லை. பயணங்களின் போதுகூட, வேலையை குறைவாக்க நிறைய சாக்குப்போக்குகள் உள்ளன. எனவே சுய நிபந்தனைகள் அதிகமாக தேவைப்படுகின்றன. எந்த இடத்திலும் உத்வேகம் வரக்கூடும் என்று இருக்கிறேன். இந்த நிலையை மிகைப்படுத்தி விடுகிறார்கள், மார்க்சீய தோழர்களுக்கும் இதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எப்படி, இருந்தாலும் பிரத்தியேகமான மனநிலையில்தான் சரளமாக முடிகிறது என்று நம்புகிறேன். வீட்டில் மட்டும் முடியும் என்பதான சாக்குப்போக்குகள் மறைந்து விடுகின்றன. சரியான கருவையும் முறைகளையும் எழுதும்போது தருணமும் மனநிலையும் வாய்த்து விடும். 



எழுதச் சிரமம் அளிப்பது முதல் வாக்கியம்தான். பல மாதங்கள் போராடுவேன். கிடைத்தவுடன் அடுத்தவை சுலபம். புத்தகத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு முதல் வாக்கியத்தில். கருப்பொருள், நடை, தொனி அத்தனையும் வரையறை பெற்றுவிடுகின்றன. அடுத்தவை அமைவதற்கான மாதிரி முதல் வாக்கியம். நாவலைவிட எழுதுவதற்கு சிறுகதை தொகுப்பு சிரமம் அளிப்பது இதனால், சிறு ஒரு கதைக்கும் கூட தொடக்கம் முதலில் இருந்து. 

0 தூண்டுதலுக்கு கனவுகளினதா உதவி. 

ஆரம்பத்தில் கனவுகளை ரொம்ப கவனித்தேன். தன் அளவில் வாழ்க்கை தூண்டுவதை பிறகு உணர்ந்தேன். வாழ்க்கை ஓட்டத்தில் சிறு பகுதி கனவு. அவை பற்றிய கோட்பாடு விளக்கங்களில் ஈடுபாடு கொண்டவன் என்பது எழுத்தைப் பொருத்த என் உண்மை . எதார்த்தம் பிரதானமானது என்பதற்கு என் கனவுகள் அவ்வளவு விசேஷம் இல்லாமல் போவது காரணமாக அமையலாம். 

0 உத்வேகமும் உள்ளுணர்வும் மாறுபடுவன. 

தேர்ந்த கருப்பொருளை அடையும்போது உத்வேகம் எழுத்தை சரளமாக்கும். விஞ்ஞான அறிவோ வாசிப்போ இன்றி உண்மையைக் கசக்கும் ரகசிய விசேஷம் கொண்டது உள்ளுணர்வு. புவியீர்ப்பு விசை விதிகள் எதையும் விட உள்ளுணர்வு வழி எளிதில் விளங்கலாம். ஊடாகப் போராடாமலேயே அனுபவத்தை அடைவது இது. கதையாளிக்கு உள்ளுணர்வு அத்தியாவசியம். உலகில் அதிகமாக எரிச்சல் தரும் அறிவுவாதத்துக்கு மாறானது எனக்குப் பிடித்த உள்ளுணர்வு. அதுவா இதுவா என்பதில் உள்ளுணர்வு உதவும். சதுரக் குழியில் வட்ட முளையைத் திணிக்கத் தேவையில்லை அப்போது. 

0 கோட்பாட்டாளர்களை வெறுக்கிறீர்களா. 

பரிந்துகொள்ள முடியாததால் அப்படி ஆகிவிடுகிறது. சின்னஞ்சிறிய கதைகள் வழியாக விளக்கிக் கொண்டு போவதற்குக் காரணம் சாரப்படுத்தும் திறமை எனக்கில்லாததுதான். நாகரீகமற்ற நபர் என்று மேற்கோள்கள் அதிகம் காட்டாததால் பெயர் வாங்கியிருக்கிறேன். 

0 இன்னவகை இனம் என்று பிரித்துக் காட்டுகிறார்களா. 

எப்படியான எழுத்தாளன் என்ற கோட்பாட்டில் பொருத்தி, பொருந்தாவிட்டால், இன்னும் திணிப்பார்கள். அறிவுவாதம் இப்படி இவர்களாக உதாரணிக்கிறது. என்பற்றிய அவர்கள் தீர்ப்பில் ஆர்வமில்லையென்று இங்கே மட்டும் ரகசியமாய் சொல்வேன். அவர்களைப் படித்து வருஷங்களாகி விட்டது. படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதை பொறுப்பாக அவர்கள் எடுத்துக் கொண்டாலும் துல்லியமாக எழுதி நேரடியாக வாசகனை அடையவே செய்வேன். 

0 மொழிபெயர்ப்பாளர்களை எப்படிப் பார்க்கிறீர்கள். 

53அடிக்குறிப்புகள் தருபவர்கள் தவிர இவர்கள் மீது மரியாதைதான். படைப்பாளி நினைத்திராதவற்றை வாசகர்களுக்கு விளக்க முற்படுகிறார்கள் என்பதால் மரியாதை. தந்து விடுவதனாலேயே வாசகன் இவற்றை ஏற்க வேண்டி வருகிறது. சன்மானமற்ற கடினமான வேலை மொழிபெயர்ப்பு. நல்ல பெயர்ப்பு அடுத்த மொழியில் மறு படைப்பு. இருபத்தோரு மொழிகளில் பெயர்க்கப்பட்டவை என் புத்தகங்கள். இருந்தாலும் க்ரகரி ரபஸ்ஸா மீது என் மதிப்புக்குக் காரணம் அடிக்குறிப்பு தர வசதியாக அவர் விளக்கம் கேட்டதில்லை. ஆங்கிலத்தில் அடுத்த படைப்பாக அவை ஆகிவிட்டன. சில புத்தகங்களில் பகுதியில் புதிய சிரமம் தரும். வாசித்து விட்டு நினைவுகளிலிருந்து பெயர்த்திருப்பாரோ. தர்க்கபூர்வமாக அன்றி உள்ளுணர்வில் சிக்கியவர்கள் மொழி பெயர்ப்பாளர்கள். பதிப்பாளர்கள் தரும் சம்பளம் பரிதாபம்தான். பெயர்ப்பதைப் படைப்பு என்று செய்பவர்கள் கருதாதது அதைவிட பரிதாபம். ஸ்பானிய மொழியில் பெயர்த்து எழுத விருப்பமுண்டு. சுயமாக எழுதும் அளவு உழைக்க வேண்டும். சாப்பாட்டுக்கு பணம் கிடைக்காமல் போகும். 

0 பெயர்த்து எதை எழுத விருப்பம். 

ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஆத்ரே மால்ரோ. ஜோஸப் கான்ராட். ழான் எக்ஸ்பரி. வாசிக்கும்போதே பெயர்க்கும் விருப்பத்தை உணர்வேன். மகத்தான படைப்புக்களைத் தவிர பிறதை சாதாரண பெயர்ப்பில் கூட பரவாயில்லை என்று வாசிப்பேன். ஸ்பானிய மொழி தவிர இன்னொன்றில் வாசிப்பது செளகரியம் அளிப்பதில்லை. ஸ்பானிய மொழி என்னைப் பாதுகாக்கிறது. இத்தாலிய, ஃப்ரெஞ்ச் மொழிகளிலும் பேசுகிறேன். டைம் வாரப்பத்திரிகை இருபது வருஷங்கள் வாசித்துப் பாழாகிப் போனதால் ஆங்கிலமும் வருகிறது. 

0 மெக்ஸிகோவை இல்லமாக உணர்கிறீர்களா. எழுத்தாள இனத்தை சேர்ந்தவராகக் கருதிக் கொள்கிறீர்களா. 

நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் உண்டு. அவர்களில் எழுதுபவர்களும் கலைஞர்களும் உண்டு. எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்பதற்காக மட்டும் நட்புக் கொள்வதில்லை. 

லத்தீன் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எந்த நாட்டிலும் குடிமகனாக உணர்கிறேன். வேறு இடங்களில் அப்படி இல்லை. லத்தீன் அமெரிக்கர்கள் ஸ்பெயின் நாட்டில் மட்டும் கவனம் பெறுவதாக உணர்கிறார்கள். சரித்திரப்பாதை அதுதான் எனினும் நான் அப்படி உணரவில்லை. லத்தீன் அமெரிக்காவில் எல்லைகள் எனக்கு கிடையாது. நாடுகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் அறிந்தவன் என்றாலும் நாடுகள் இதயத்தில் சேர்ந்து அமைந்துள்ளன. கரீபியப்பிரதேசத்தை அடையும்போது வீடு வந்து சேர்ந்ததாகத் தோன்றுகிறது. 

உட்ரெஞ்ச், டச்சு, ஆங்கிலக் கரீபியப்பிரதேசம் எதுவாக இருந்தாலும் சரி. பாரன்க்வுல்லாவில் விமானம் ஏறும் போது நீல உடையணிந்த கறுப்புப் பெண்மணி பாஸ்போர்ட்டில் முத்திரை இடும்போதாகட்டும், ஜமைக்காவில் இறங்கும் போது நீல உடையில் கறுப்புப் பெண்மணி ஆங்கிலத்தில் முத்திரை இடும்போதாகட்டும் - மகிழ்ச்சி கொள்கிறேன். 

மொழி, கலாச்சார வித்தியாசங்களை இங்கு வைத்திருப்பதாக நம்ப முடியவில்லை. ஆனால் உலகின் இதர பகுதிகளுக்குப் போகும் போது அயலானாக உணர்வதால் பாதுகாப்பு போய்விடுகிறது. பயணத்தின் போது தனிப்பட்ட உணர்வு எனினும் சிறுபான்மைக்காரன் என்பதாகத் தோன்றிவிடுகிறது. 

&& கொஞ்சக் காலம் ஐரோப்பாவில் வசிப்பது லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்குத் தேவையா. 

புறத்திலிருந்து நிஜத்தைச் சந்திக்க வாய்ப்பாக அமையலாம். இவர்கள் ஐரோப்பா போய் வசிப்பது பற்றி சிறுகதைத் தொகுதி கொண்டுவர இருபது வருஷங்களாக எண்ணி வருகிறேன். முடிவு என்று இவற்றிலிருந்து வந்தால் லத்தீன் அமெரிக்கர்களால் குறிப்பாக மெக்ஸிகோ நாட்டவர்களால் ஐரோப்பாவில் வசிக்க முடிவதில்லை எனலாம். நான் ஐரோப்பாவில் சந்தித்த 
அத்தனை மெக்ஸிகோக்காரர்களும் அடுத்த புதன்கிழமை கிளம்ப இருப்பவர்கள். ஊருக்கு. 

0 லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் க்யூபப் புரட்சி ஏற்படுத்திய விளைவுகள். 

இதுவரை எதிரிடைதான். அரசியல் முனைப்பு கொண்டதாக நினைத்துக் கொண்டவர்கள் விருப்பத்தைத் துறந்து கடமையை எழுதினார்கள். திட்டமிடப்பட்ட இலக்கியம். உள்ளுணர்வு, அனுபவம் என மேலே பேசியவற்றுடன் உறவு எதுமில்லை . புதுவகை இலக்கியம், கலை இவற்றின் படைப்பெல்லையை நோக்கி இது வளர்ச்சி பெறவில்லை. அவகாசம் தேவைப்படலாம். 

லத்தீன் அமெரிக்காவில் நிலவிவந்த ஒருவகை இலக்கியத்தை வெளியில் பரவச்செய்ய க்யூபா அருமையான பாலமானது. இந்த வகை இலக்கியம் குறித்து எழுச்சி ஏற்பட க்யூபப் புரட்சி காரணமானது. இத்தகைய எழுத்தாளர்கள் இருபது வருஷங்களுக்கு மேலாக எழுதியுள்ள போதிலும் ஐரோப்பிய அமெரிக்கப் பதிப்பகங்கள் அதுவரை அக்கறை கொள்ளவில்லை. புரட்சி தொடங்கியதும் வந்த அக்கறைதான். புரட்சி செய்தித் தீனியாகிறது. லத்தீன் அமெரிக்கா மோஸ்தர் ஆகியது. உலக இலக்கியத்துடன் ஒப்பிடத் தக்கவையாகவும் மொழிகளில் பெயர்க்கப்படும் அளவு செறிவாகவும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. வெளி ஆட்கள் சொல்லும் வரை நாவல்கள் சிறந்தவை என்று உணராத அளவில் கலாச்சார ஏகாதிபத்தியம் இருப்பது நிஜமான சோகம். 

0 புறத்தில் தெரியவராத சிலாகிக்கப்படுகிற எழுத்தாளர்கள் இங்கு. 

இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. லத்தீன் அமெரிக்க எழுத்தின் மீதான திளர்ச்சியின் விளைவாகப் புதிய கொர்த்தஸர்கள் வருகையை தவறவிடக்கூடாது என்று கவனத்துடன் இருக்கிறார்கள். எழுத்தை விடவும் புகழின் மீது இளம்வயதில் எழுதுபவர்கள் அக்கறை கொள்வது வருத்தம்தான். லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி ஒலோஸ் பல்கலைக்கழக ஃப்ரெஞ்சுப் பேராசிரியர் புத்தகம் எழுதப்போக, என்னைப்பற்றி எழுத இனி அவசியமில்லை, தங்களுக்கு அது தேவை என்று கடிதம் போட்ட இளைஞர்கள் உண்டு. அவர்கள்' வயதுக்காரனென இருந்த போதில் என்னை அன்றி மிகைல் எஞ்சல் அஸ் தூரியாஸ் பற்றித்தான்பேசப்பட்டது. எழுத்தில் நோக்கத்தை அன்றி விமர்சகர்களுக்கென எழுதி செலவிடும் போக்கு வருத்தம் தருகிறது. எழுதுவது எழுதப்படுவதைவிட முக்கியம். நாற்பது வயதில் ஐந்து புத்தகங்கள் எழுதியிருந்த போதும் உரிமைத்தொகை ஏதுமின்றி வாழ்ந்ததை மறக்கமாட்டேன் 

0 எழுதுபவன் வாழ்க்கையில் ஆரம்பத்திய கிட்டும் புகழ் மோசமானதா. 

ஆரம்பத்திலென்ன, எப்போதும் மோசம்தான். மரணத்திற்குப் பிறகு எழுத்து அங்கீகாரம் பெறுவதைத்தான் விரும்புகிறேன். அதுவும் எழுத்து பண்டமாக மாறிவிடும் சமுதாயங்களில்.... 

0 பிடித்தது, தவறி வாசிப்பது எதை எதை, 

அமானுஷ்யமான எதையும் வாசிப்பேன். முகமது அலியின் நினைவுக் குறிப்புகள். ப்ராம் ஸ்டோக்கரின் Dracula கதை வாசிப்பதை வீண் என நினைத்த வருஷங்கள் உண்டு. நம்பிக்கை கொள்ளும் யாராவது சொல்லாதவரை புத்தகம் ஒன்றில் நிஜ ஈடுபாடு கொள்ள முடிவதில்லை. புனைகதைகளை வாசிப்பதே இல்லை. நினைவுக்குறிப்புகளையும் ஆவணங்களையும் வாசிப்பேன். 

இலக்கியத்தை மட்டும் வாசிப்பது என்ற பரிசுத்த எண்ணத்தை மீறுவேன். உலகத்தின் மூலைகளில் இருந்து வருகிற பலவகை பத்திரிகைகளை டெலிடைப் எந்திர வாசிப்புக் காலத்திலிருந்து தேடிப்படிக்கிறேன். அப்போதும் மெர்ஸிடஸ் கேள்விப்பட்ட செய்திகளை வந்து சொல்லுவாள். ஒப்பனைக் கடையில் கிடைத்த பத்திரிகை ஆக மோஸ்தர் பத்திரிகைகள், வம்புப்பத்திரிகைகள் என்று எதையும் வாசிப்பேன். பிடித்த புத்தகங்களை எங்கே வேண்டுமானாலும் தொடங்கி திரும்பவும் வாசிப்பேன். 

0 புகழ் எழுத்தாளனை அழிக்கும் என்று நினைப்பது ஏன். 

நிஜ உலகிலிருந்து தனிமைப்படுத்தி தலையிடுவது புகழ். தொடர்ந்து எழுத விரும்புபவர் யாரும் புகழ்ச்சிக்கு எதிரான தற்காப்பில் நிற்க வேண்டும். விருப்பமில்லாமல் சொல்கிறேன் கேளுங்கள், மரணத்துக்குப் பிறகு புத்தகங்கள் வெளியிடப்படுவதையே விரும்புவேன். புகழை அப்படித் தவிர்க்க முடியலாம். புகழால் எனக்கு சாத்தியமான விஷயம் அரசியல் பயன்பாடுதான். மற்றபடி அசௌகரியம்தான். நாள் முழுவதும் பிரபலமாக இருந்து நாளையிலிருந்து கிடையாது என்று பொத்தானை அழுத்திச் சொல்லிவிட முடியாதே. 

பேட்டி - பீட்டர் ஹெச் ஸ்டோன் 

தமிழில் - சி மோகன்