Pages

▼

Sunday, June 26, 2011

எரிகல் - பிரமிள், வழி - பிரமிள்

எரிகல் - பிரமிள்

வெளிவானம் எரிகல்லில்
கிழிபட்டுத் தெரிகிறது
வானக் கடல் முத்து
விழுகிறது இருட்கரியின்
வயிரம் உதிர்கிறத..
இயற்கை தன் இருளைமொழி
பெயர்த்துஉதிர்த்த கவி..
உதரக் குடல்நாடி
உதிரும் சிறு குழவி
   
வழி


வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன -


வானம்
எல்லையில்லாதது.