Pages

Tuesday, December 17, 2013

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது .... - காளமேகம்.

நன்றி Riyas Quarana


தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி

                                                           - காளமேகம்.

அந்தக் காலத்திலே காதலுக்கு துாது அனுப்புவது பிழை என்கிறார். காளமேகம்.


மந்திரம் போல் காதல் பெயரை ஓதுவதே ஒரே வழி இதுவும் அவரே.

தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண் ) செல்லும் தூது தீயது

தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது(சொல்லாது)

தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்

தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது

தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும்

தீதே தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!