Pages

Thursday, April 24, 2014

ஜோஸப் பிராட்ஸ்கி எழுதிய வஸந்த கீதம்

ஜோஸப் பிராட்ஸ்கி எழுதிய  வஸந்த கீதம்
(மொ.பெ. - பிரமிள்)

இந்த குளிர்காலத்திலும் எனக்குப்
பைத்யம் பிடிக்கவில்லை.
பூமியின் பசுமை எழுந்து
பனிக்கட்டிகளைச் சிதறடிக்கிறது.
எனவே இன்னும் நான் என்
புத்தி சுவாதீனத்தை இழக்கவில்லை.
என்னை நானே
டஜன் கணக்குத் துகள்களாகப்
பிளந்து கொண்டிருக்கிறேன்.
என் மூளைமீது பனித்துகள் படிகிறது.
மரங்களிடையே பனிபெய்கிறது.
நமது அதிருப்திகளுக்கு
எல்லை இல்லை. ஆனால்
குளிர்காலங்களுக்கு முடிவு உண்டு
நினைவின் விருந்தாளியாக
கவிதை பிரவேசிக்கும் போதுதான்
உலகம் மாறுகிறது.