Pages

Friday, May 16, 2014

சாமுண்டியைக் குறித்து சிநேகிதிக்கு கவிஞன் சொன்ன கவிதை - சாரு நிவேதிதா


சாமுண்டியைக் குறித்து சிநேகிதிக்கு கவிஞன் சொன்ன கவிதை - சாரு நிவேதிதா

மரணித்துக் கிடந்தவனின்
சூன்ய வெளியை
நிரப்பிய மொழி
அவன் தசைத் திணுக்களை
கவிதையாய் மாற்றி விட்டு
மௌனப் பாறையாய்
உறைந்து போயிற்று
நூற்றாண்டு வாதை
நெருப்புக் குழம்பாய்
மௌனப் பாறையுள்
மையங்கொண்டிருந்தது
சூன்ய மொழி
சீழ் பிடிக்க
ஒற்றைக் கண்ணிலிருந்து
ஒழுகியது
கவிதை
விருச்சிகம்
வயிற்றில் கவ்வ
மரண வாதையின்
விளிம்பில் நின்று
ஒற்றைக் கண்ணைப்
பிடுங்கி எறிந்தான்

தூள் தூளாய்
வெடித்துச் சிதறியது
பாறை

பாறைக் குடைவின்
இருள்களினூடே
ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த
சோதிடன் சொன்னான்
அவள்
இந்த உலகத்திற்கு
கடவுளால் வழங்கப்பட்ட
கொடை
என.