Pages

Sunday, March 27, 2016

யசுனாரி கவபத்தா (1899–1972) அறிமுகம், நோபல் பரிசு உரை & சிறுகதைகள் : புனைகளம் 2

automated google ocr
(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)

padippakam
யசுனாரி கவபத்தா (1899–1972)


அறிமுகம் : ராஜகோபால்
 புனைகளம் 2 : இதழ் 2 / 2002

ஜப்பானிய நாவலாசிரியரான யசுனாரி கவபத்தா இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானியர். ஒசாகாவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்ததால் பாட்டியிடம் வளர்ந்தவர். குறுகிய காலத்திலேயே பாட்டியையும் தன் ஒரே தமக்கையையும்கூட இழந்துவிட்டார். நெருங்கிய கடைசி உறவாக நீடித்து இருந்த பாட்டனாரின் இழப்பை அவருடைய பதினாறு வயதுக்காரனின் குறிப்பேடு (Diary of Sixteen year - old, 1925) என்ற ஆரம்ப காலப் படைப்பில் காணலாம். அதற்குப் பிறகான சில வருடங்கள் ஒசாகாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள பள்ளி விடுதியில் அவர் வாழ்ந்து வந்தார். 1911இல் டோக்கியோவிலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சேர்ந்தார். 1920இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டார். ஒரு வருடத்திற்குப் பின்பு ஜப்பானிய இலக்கியத்துறைக்கு அவர் மாற்றப்பட்டதால் 1924இல்தான் பட்டப்படிப்பை அவரால் முடிக்க முடிந்தது. மாணவராக இருந்தபோது வெளிப்பட்ட அவருடைய இலக்கிய செயல்பாடுகள் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமையான கிகுச்சிகானின் கவனத்தை அவர்மீது திருப்பியது. கிகுச்சிகானின் பத்திரிகையான புன்சி வீன்ஜிவிற்கு கவபத்தா ஒர் ஆரம்பகால பங்களிப்பாளர். அன்றைய வீன்கான்காகு பள்ளியின் இலக்கியக் குழுவிலும் கவபத்தா ஒர் அங்கத்தினர்.

ஜப்பானின் மிக முக்கிய இலக்கிய கலாச்சார அளுமையான நாவலாசிரியர் யுகியோ மிஷிமா, கவடத்தாவை நித்திய பயணி என்று வருணிக்கிறார். பயணம் என்றுமே படைப்பிற்கு உத்வேகம் அளித்து வருகிறது என்பதைத் தான் நம்புவதாகவும், தொலைதூரக் கடலிலுள்ள தீவுகள் தன்னை எப்பொழுதும் வசீகரித்து வருவதாகவும் கவபத்தா கூறுகிறார். தெற்கு டோக்கியோவிலுள்ள இசு என்னும் தீபகற்பத்திற்கான பயணமே அவரது இசு நடனக்காரி (The Dancer, 1955) என்னும் நாவலுக்குப் பின்புலம், 1926இல் இரண்டு

இதழ் 2 / 2002
படிப்பகம்
35


padippakam
தவணைகளில் வெளியான அந்நாவல் அவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத்தந்தது. நாவல், தீபகற்பத்திற்கு மனச்சோர்வடைந்த ஓர் உயர்நிலை பள்ளி மாணவன் மேற்கொள்ளும் பயணம் பற்றியது அங்கு ஒர் இக நடனக்காரியோடு கொள்ளும் சிநேகம் அவன் மனஊக்கம் பெற ஏதுவாகிறது. நாவல் வெற்றி பெற்றதற்குக் காரணம் துயரம், மனச்சோர்வு பற்றிய கவபத்தாவின் பிரேத்யேக பார்வையே.

கவபத்தாவின் பெரும்பான்மையான படைப்புகள் முழுமையுறாமல் இருக்கின்றன. மிகுந்த பிரக்ஞையோடுதான் அவற்றை அவ்வாறு படைத்திருப்பதாக கவபத்தா கூறுகிறார். முடிவை விட தீர்மானத்திற்கு வந்து சேரும் வழிமுறைக்கே தான் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறுகிறார். இதுவே வடிவம் பற்றிய அவருடைய பார்வையாக இருந்து வந்திருக்கிறது. கவபத்தாவிற்கு ரெங்கா எனப்படும் சீரான உரைநடையில் / செய்யுளில் மிகுந்த விருப்பமிருந்திருக்கிறது. அவ்வடிவத்தில் சீரிய பயிற்சி எடுத்திருக்கிறார். கவபத்தாவின் நாவல்களில் கதாபாத்திரங்களுக்கும் நிகழ்வுகள் நடக்கும் பின்புலத்திற்கும் இடையிலான மென் ஒத்திசைவு ஆச்சரியமூட்டும் அம்சமாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. நித்தியத்துவமற்ற பலவீனமான மனித வாழ்வு இயற்கையின் முன் எவ்வாறு சிறிது சிறிதாக மங்கி மறைகிறது என்பது கவபத்தாவின் நாவல்களில் மற்றொரு முக்கிய அம்சம்
கவபத்தா டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது இருந்தே நவீன எழுத்துகள் பற்றி பல விமர்சனக் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். விமர்சனக் கட்டுரைகளோடு சூழலில் புதிய இளம் படைப்பாளிகள் பற்றிய அவருடைய கண்டுபிடிப்புகளும் தீர்க்கமானவையே. அவருடைய முக்கிய கண்டுபிடிப்பு ஜப்பானின் மிக முக்கிய இலக்கிய கலாச்சார ஆளுமையான நாவலாசிரியர் யுகியோ மிஷிமா, கவபத்தா சினிமாவிலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவருடைய திரைக்கதையான ஒரு பக்க பித்து (A Page of Madness, 1926) கினுகாசா தெயிநோககெவால் இயக்கப்பட்டு ஜப்பானிய பரிசோதனை சினிமா வரலாற்றில் இன்றும் சிறந்து திகழ்கிறது.

1920இன் பிற்பகுதியில் டோக்கியோவின் மாவட்டமான அசாகுசாவில் வாழ்ந்தபோது கவபத்தா கடலில் தனித்திருக்கும் தீவாக தன்னை உணர்ந்தார். அவருடைய முக்கிய படைப்புகளில் gospstant Scarlet gang of asakusa Óñé5 amaljgossair எழுதப்பட்டது. 1929-ற்கும் 1930-ற்கும் இடையில் தொடராக வெளிவந்த அப்படைப்பு ஒரு பாகம் எழுதி முடிக்கப்படாத போதும் 1935இல் புத்தகமாக உருப்பெற்றது. அப்படைப்பை இடோ-கால (600-1868) இலக்கியத்தின் நகல் உரு என்று அழைக்கும் அளவிற்கு இடோ-கால இலக்கியத்தின் பாதிப்பு அதில் அதிகம் இருந்தது. இப்படைப்பு கவபத்தாவின் வழக்கமான படைப்பிலிருந்து மிக மாறுபட்டது. அசாகுசாவின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களான, கவபத்தாவின் மைய ஈர்ப்புகளில் ஒன்றான விலைமாதர்களைப் பற்றிய சித்திரமே அப்படைப்பு அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான கண்கள் அவற்றின் கடைசி விளிம்பில் (Eyes in their last extermity, 1933) at airsp Lao Lulub அக்காலத்தைச் சார்ந்ததே. கவபத்தாவின் மற்றொரு மைய ஈர்ப்பான மரணத்தைப் பற்றிய தியானமே அப்படைப்பு.

கவபத்தா தன் அந்திம பருவத்தில் literature of aged என்று அழைக்கப்படும் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். அதன் சிறந்த உதாரணங்கள் மலையின் குரல், தூங்கும் அழகிகளின் இல்லம் தூங்கும் அழகிகளின் இல்லம் 1960-க்கும் 1961-க்கும் இடையில் வெளியாகியது. வயோதிகர் ஒருவர் தன் நண்பனால் அடையாளங் காட்டப்பட்ட வினோத இரகசிய விடுதிக்குச்
* புனைகளம்
36
படிப்பகம்
செல்கிறார். அங்கு போதை வஸ்துகளின் மூலம் அழகிய இளம் பெண்கள் நிர்வாணமாக உறங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களோடு வயோதிகர்கள் ஓர் இரவைக் கழிக்கலாம். ஆனால் அவர்களை எக்காரணத்தை முன்னிட்டும் தொந்தரவு செய்தல் கூடாது என்பது விடுதியின் விதிகளில் ஒன்று. அப்பெண்களின் முன்னிலையில் அவ்வயோதிகர்கள் அடையும் அவமானமும், சாவின் அருகாமையில் துளிர்க்கும் காமமும், ஞாபகங்களும் என கவபத்தா நாவலை நனவோடை உத்தியில் எழுதிச்சென்றிருப்பார். கவபத்தாவை இந்நாவல் மாபெரும் கலைஞனாக, செவ்விலக்கியவாதியாக அடையாளப்படுத்தியது. தூங்கும் அழகிகளின் இல்லமும் கவபத்தாவின் அந்திம பருவத்தில் உருவாகிய பிற படைப்புகளும் கவபத்தாவின் விலகலை - சமூகத்திலிருந்தான விலகலை - மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. பொதுவாகவே கவபத்தாவின் படைப்புகள் தனிமை பற்றிய தீவிர ஆராய்ச்சியை மேற்கொள்பவை. அதன் மிகச் சிறந்த உதாரணம். 1963, 1964க்கு இடையில் வெளியான 'ஒரு கை (One arm, 1969) என்ற படைப்பு: அக்கதையில் ஒரு மனிதன் துண்டாடப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கையை மடியில் வைத்தபடி ஒர் இரவைக் கழித்துக்கொண்டிருப்பான். கவபத்தாவைப் பொருத்தவரை சமூகம் அழிந்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டபடி அதை உயிர்ப்பிக்க முயலுகிறார்கள்.

1972இல் கருத்த ஏப்ரல் மாத மாலை ஒன்றில் கவபத்தா தன் கமாகுரா இல்லத்திற்கு அருகிலிருந்த தன்னுடைய அப்பாட் மெண்டில் வாயு நிரம்பிய அறையில் இறந்து கிடந்தார். எல்லா தடயங்களும் தற்கொலை என்பதையே உறுதிப்படுத்தின. அவர் தன் கைகளால் தன் முடிவைத் தேடிக் கொண்டார் என்று நம்பப் படுகிறது. அவர் இறந்து கிடந்த அறையில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. ஆனால் அவருடைய நண்பர்களோ அது விபத்தாக இருக்கலாம் என்று அபிப்ராயப்படுகிறார்கள்.
o

கவபத்தா படைப்புலகின் துளிர் பருவத்தில் palm - at-the-hand stories என்னும் இலக்கிய வடிவத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதை சிறு இலக்கியக் குறிப்பு என்றோ சிறிய சிறுகதை என்றோ ஒரு எளிமைக்காக வகைப்படுத்திக் கொள்ளலாம். அவ்வடிவம் பிரத்யேகமாக ஜப்பானியருக்கே உரியது என்றும் ஹைகூ மரபின் தொடர்ச்சியாக அதைக் கொள்ளலாம் என்றும் கவபத்தா கருதினார். அவருடைய சில சிறந்த கதைகள் palm - 0 - the hand storics என்னும் தொகுப்பில் இருக்கின்றன. கவபத்தாவின் பெரிய படைப்புகளில் காணப்படும் பார்வையின் விஸ்தீரணத்தை இச்சிறிய படைப்புகளிலும் வாசகர்கள் உணரலாம். மற்றொரு sAyreu&pi Guö 9jubðlð palm - of - the - hand stories - ggörjölsói சிறிய உருவம்பாற் உள்ள ஜப்பானிய மோகத்திற்கு சிறந்த உதாரணம். இருந்தபோதும் palm - of- the - hand stories- Qaşi வடிவம் பிரத்யேகமாக கவபத்தாவிற்கு உரியது. அவருடைய மெல்லிய தொனியோடிய விவரிப்பும், எதிர் எதிரான படிமங்களின் பிரத்யேக ஒளிர்வும், தீர்க்கமான பார்வையும், விஷேச கதைக் களனும் அவரு ை டைப்புகளை மிகுந்த வசீகரம் உடையதாகவும் மறக்க இயலாதவையாகவும் மாற்றிவிடுகின்றன. "பல எழுத்தாளர்கள் அவர்களுடைய இளமையில் கவிதை எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நானோ கவிதை எழுதுவதற்குப்பதிலாக palmof the hand stories எழுதிக்கொண்டு இருந்திருக்கிறேன். இவற்றில் பல கதைகள் இயல்பாக என்னுள்ளிருந்து வெளிப்பட்டவை. என்னுடைய இளம் பிராயத்து கவித்துவ எழுச்சியை இக்கதைகளில் நீங்கள் காணலாம் என்று இக்கதைகளைப் பற்றி கவபத்தா கூறுகிறார். இத்தகைய ஐந்து கதைகள் இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன.
________________

padippakam

யசுனாரி கவபத்தாவின் நோபல் உரை (டிசம்பர் 12, 1968)

தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

"வசந்த காலத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்
இலையுதிர்காலத்தே நிலவு.
குளிர்காலத்தே பனி, தெளிவாக, சில்லென."

"குளிர்கால நிலவு என்னோடிருக்க
முகிலிலிருந்து வெளிவருகிறது
காற்று முள்ளெனக் குத்துகிறது,
பனி சில்லென்றிருக்கிறது."

இந்தக் கவிதைகளில் முதலாவது மதகுரு தோஜென் (1200-1253) என்பவரால் உள்ளார்ந்த உற்சாகம் என்ற தலைப்பில் எழுதப் பட்டது. இரண்டாவது, மதகுரு மையோ (173-1232) என்பவரால் எழுதப்பட்டது. என்னிடம் எழுத்துக்கலைக்கான மாதிரிகளைத் தரும்படி கேட்கப்பட்டபோது இந்தக் கவிதைகளைத்தான் நான் பல சமயங்களில் தெரிவு செய்து கொள்கிறேன்.

இரண்டாவது கவிதை அதன் மூலாதாரம் பற்றிய வழக்கத்திற்கு மாறான விரிவான விளக்கத்தை அதனுடைய பொருளின் சாரம் பற்றிய விளக்கமாக இருக்கும் பொருட்டு கொண்டிருக்கிறது. 224ஆம் ஆண்டின் பனிரெண்டாம் மாதத்தின் பனிரெண்டாம் நாள் இரவில் நிலவு மேகங்களுக்குப் பின்னே மறைந்திருக்கிறது. காக்யூ கூடத்தில் ஜென் தியானத்தில் நான் அமர்ந்திருந்தேன். நடு இரவுக் காவல் நேரம் வந்ததும் நான் தியானத்தைக் கைவிட்டு உச்சியிலி ருந்த கூடத்திலிருந்து கீழேயுள்ள பகுதிகளுக்கு இறங்கி வந்தேன். அப்படி வந்து கொண்டிருந்தபோது நிலவு மேகத்திலிருந்து வெளிப்பட்டு பனியை தகதகத்து ஒளிரச் செய்தது. நிலவு என்னுடைய நண்பன், சகா. அதன் அண்மையில், பள்ளத்தாக்கில் ஊளையிட்டுக் கொண்டிருந்த ஒநாய் கூட எனக்கு பயமுண்டாக்க வில்லை. சிறிது நேரத்தில், நான் கீழ்ப்பகுதிகளிலிருந்து மீண்டும் வெளியே வந்தபோது நிலவு மறுபடியும் மேகங்களுக்குப் பின்னால் போயிருந்தது. பின்னிரவுக் காவலைக் குறிக்கும் மணியடித்துக் கொண்டிருக்கும் போது நான் மீண்டும் ஒருமுறை கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்குச் சென்றேன். போகும் வழியில் நிலவு என்னைத் திரும்ப சந்தித்தது. நான் தியானக் கூடத்தில் நுழைந்த போது, நிலவு மேகங்களைத் துரத்தியவாறு, தொலைவிலிருந்த மலையுச்சிக்குப் பின்னால் மூழ்கும் எத்தனத்திலிருந்தது. அது என்னோடு ரகசியத்துணையாய் உடனிருப்பதாக எனக்குத் தோன்றியது.

இதழ் 2 / 2002 : 37
படிப்பகம்
________________
புனைகளம்
padippakam
இதன்பின், நான் மேற்கோள் காட்டிய கவிதை வருகிறது. கூடவே, மலைக்குப் பின்னால் சந்திரன் மறைவதைப் பார்த்த பிறகு மையோ தியானக் கூடத்திற்குள் நுழைந்தபோது அந்தக் கவிதை இயற்றப் பட்டது என்ற விளக்கமும் தரப்படுகிறது. அதனோடு இன்னொரு கவிதையும் வருகிறது:

"நான் மலைக்குப் பின்னால் போவேன். நீ அங்கேயும் செல், ஒ நிலவே
ஒவ்வொரு இரவும் நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம்."

இங்கே இன்னொரு கவிதைக்கான சூழமைவு இருக்கிறது - அதாவது மையோ தியானக் கூடத்தில் மிச்சமுள்ள இரவு முழுவதையும் கழித்து விட்ட பிறகு அல்லது விடியலுக்கு முன்னால் அவர் அங்கே போயிருந்திருக்கக் கூடும்.

தியானத்திலிருந்து என் கண்களைத் திறந்ததும் நான் விடியலி லான நிலவைப் பார்த்தேன். அது ஜன்னலை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நானே ஒரு இருண்ட இடத்தில் இருக்கும் நிலையில், ஏதோ என்னுடைய மனமே நிலவின் ஒளி போன்ற ஒரு வெளிச்சத்தில் பளபளத்துப் பொலிந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

"என் மனம் மின்னுகிறது. ஒரு தூய்மையான ஒளிப்பரப்பு:
நிச்சயமாக அந்த ஒளியை நிலவு தன்னுடையதாக எண்ணிக்
கொள்ளும்."

பின்வரும் வெறும் திடீர் ஆச்சரியக் கூவல்களின் வெகு இயல்பான, நிர்மலமான ஒருங்கிணைப்புகளால் மையோ நிலவுக் கவிஞராக அழைக்கப்பட்டு வருகிறார்.

"பளிர் வெளிச்சம், பளிர் வெளிச்சம், பளிர், பளிர், பளிர் வெளிச்சம்
பளிர் பளிர் வெளிச்சம் மற்றும் பளிர் பளிர் நிலவு"

குளிர்ப்பருவ நிலவைப் பற்றிய தனது மூன்று கவிதைகளில் பின்னிரவிலிருந்து விடியலுக்குள்ளான நாழிகை வரை, இன்னொரு கவி - மதகுருவான சாய்கியோ என்பவரின் கவி மனோபாவத்தையே கடைப்பிடிக்கிறார். சாய்கியோ 118 முதல் 190 வரை வாழ்ந்தவர். நான் கவிதையை இயற்றுகிறேன். என்றாலும் அதை இயற்றப்பட்ட கவிதையாகக் கருதுவதில்லை. ஒவ்வொரு கவிதையின் முப்பத்தி யொன்று அட்சரங்களும். ஏதோ நிலவையே அழைத்துப் பேசுவது போல் நேர்மையாகவும், நேரிடையாகவும் இருப்பவை, நிலவைப் பார்ப்பதில் அவரே நிலவாகிறார். அவரால் காணப்படும் நிலவு அவராகிறது. அவர் இயற்கையுள் அமிழ்ந்து, இரண்டறக் கலக்கிறார். அந்த மதகுருவின், உதயத்திற்கு முன்பான இருளில் தியானக் கூடத்தில் அமர்ந்திருக்கும் அவருடைய தெளிந்த மனதின் வெளிச்சம் அந்த விடியல் நிலாவுக்கு அதனுடையதேயான ஒளியாகிறது.

குளிர்ப்பருவ நிலவு நட்புறவாக மாற, மதம் மற்றும் தத்துவ விசாரணைகள் கூடிய தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மதகுருவின் மனமானது நிலவுடன் ஒரு நுட்பமான தொடர்புறவாடலிலும், பரிமாற்றத்திலுமாய், அந்த மலைக்கூடத்தில் ஈடுபட்டிருப்பதை, மேற்குறிப்பிட்ட மையோவின் கவிதைகளில் முதலாவதாகக் காணப் படுவதற்குத் தரப்பட்ட நீண்ட விளக்கத்திலிருந்து நம்மால் அறிய முடிகிறது. கவிஞர் பாடுவதும் இதைத்தான். என்னுடைய எழுத்துக் கலை பற்றிய ஒரு மாதிரியைத் தரும்படி என்னிடம் கேட்கப்பட்ட போது இந்த முதல் கவிதையைத் தெரிவு செய்ததற்கான காரணம் அதனுடைய அற்புதமான மென்னுணர்வும், நேயவுணர்வும்தான். குளிர்ப்பருவ நிலவு, மேகங்களுக்குப் பின்னால் மறைந்து பின் மீண்டும் வெளி வருவது நான் தியானக்கூடத்திற்குப் போகும் போதும், அங்கிருந்து மீண்டும் இறங்கிப் போகும்போதும் என்னுடைய காலடிகளை ஒளிமயமாக்குவது என்னை ஒநாயைக் கண்டு அஞ்சாமல் இருக்கும்படியாக்குவது காற்று உங்களுக்குள் ஆழ இறங்கவில்லையா? பனி இறங்கவில்லை. நீங்கள் குளிராக உணரவில்லையா? இந்தக் கவிதையை ஒரு இதமான ஆழமான, நுட்பமான பரிவுணர்த்தும் கவிதையாக, ஜப்பானியர்களுக்கே உரித் தான, ஜப்பானின் அடிநாதமாய் விளங்கும் ஆழ்ந்த அமைதியைத் தன்னகத்தே கொண்ட கவிதையாக நான் தெரிவு செய்கிறேன். கீழைய மேலைய நாடுகளின் கடந்தகால நிகழ்காலக் கலைவடிவங் களில் ஆழ்ந்த அறிவு வாய்ந்த டாக்டர். யூவிரோ யூகியோ ஒரே யொரு கவித்துவம் வாய்ந்த வாக்கியத்தில் ஜப்பானியக் கலையின் விசேஷத் தன்மைகளை வெகு சிறப்பாகப் புலப்படுத்துகிறார்.

பனி நிலவு மற்றும் பூக்களின் காலம். அவ்வேளை மற்றெல்லா சமயங்களையும் விட நாம் நமது தோழர்களை அதிகம் நினைவு கூர்வோம். பனியின் அழகை நாம் பார்க்கும்போது, பூத்துக் குலுங்கும் நிலையிலான செர்ரியின் அழகைப் பார்க்கும்போது, சுருக்கமாகச் சொல்லப்போனால் நாம் நான்கு பருவங்களின் அழகோடு உரசும்போது, அதனால் தட்டியெழுப்பப்படும் போது, அந்தத் தருணத்தில்தான் நாம் நம்முடைய மனதுக்கு நெருங்கியவர் களைப் பற்றி மிகவும் அதிகமாக நினைக்கிறோம்; அந்த ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ள அவர்களும் நம்மோடு இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைக்கிறோம். அழகின் பரவசம் வலுவான சகமனித உணர்வுகளை அழைத்துக் கொண்டு வருகிறது. தோழமைக்கான ஏக்கத்தையும் வலுவாக ஏற்படுத்துகிறது. இங்கே தோழர் என்ற வார்த்தை மனிதவுயிரைக் குறிப்பதாகக் கொள்ள லாம். பனியும், நிலவும், மலர்களும், வார்த்தைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குள் இடம் பெயர்ந்து கொள்ளும் பருவங்களை எடுத்துரைப்பதாய் இயங்கும் ஜப்பானியக் கலாச்சாரமானது, மலைகளின் அழகையும், ஆறுகள், புல்வெளிகள் மற்றும் மரங்களின் அழகையும், இயற்கையின் எண்ணிறந்த வெளிப்பாடுகளையும், கூடவே மனித உணர்வுகளின் அழகையும் இரண்டறக் கலந்து வைக்கிறது.


பனியிலும், நிலவொளியிலும், மலர்களின் கீழும் ஒருவர் மனதில் ஏற்படக் கூடிய நட்பினர் குறித்த ஏக்கமும் விழைவும், தேனீர் விழாவுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. தேனீர் விழா என்பது மனப்பூர்வமாக எண்ணங்களின் ஒத்திசைவில் மனிதர்கள் ஒன்று கூடுவதாகும். நல்ல தோழர்களும் நல்ல சகமனிதர்களும் ஒரு நல்ல பருவத்தில் சந்திப்பது என்னுடைய 'ஆயிரம் நாரைகள் புதினத்தை தேனீர் விழாவின் மரபார்த்தமான மற்றும் ஆத்மார்த்தமான அழகைப் போற்றும் ஒரு படைப்பாகப் பார்ப்பது தவறான வாசிப்பு என்று இங்கே சொல்லத் தோன்றுகிறது. அது ஒரு எதிர்மறைப் படைப்பு மற்றும் தேனீர் விழா இன்று அடைந்துள்ள கொச்சைத் தனத்திற்கு எதிரான எச்சரிக்கை பற்றிய ஐயப்பாட்டின் வெளிப் பாடும் ஆகும்.

"வசந்தத்தில் செர்ரிப் பூக்கள். கோடையில் குயில்,
 இலையுதிர்காலத்தே முழுநிலவு குளிர்காலத்தே பனி, துல்லியமாக சில்லென."

தோஜெனின் கவிதையில் நான்கு பருவங்களின் அழகை, வழக்கமான, சராசரியான, சம்பிரதாயமான, நான்கு பருவங்களின் பிரதிநிதித்துவம்கூடிய பிம்பங்களை ஏனோதானோவென்று சேர்த்திருக்கும் ஒருங்கிணைப்பாக மட்டுமே ஒருவர் காண முடியும்

'உண்மையில் இது ஒரு கவிதையே இல்லை என்பதாகக்கூட இதை ஒருவர் பார்க்கக் கூடும் இருந்தும் மதகுரு ரியோகான்
படிப்பகம்
________________

padippakam
(1758-1831) எழுதிய மரணப்படுக்கைக் கவிதை இந்தக் கவிதையை வெகுவாக ஒத்திருக்கிறது:

"நான் விட்டுச் செல்லும் உயில் அல்லது சொத்துடைமை
என்னவாக இருக்கும்: வசந்தகாலப் பூக்கள்.
குன்றுகளில் இருக்கும் குயில், இலையுதிர்கால இலைகள்"

இந்தக் கவிதையில், தோஹன் கவிதையில் காணப்படுவதே போல், மிகச் சாதாரணமான உருவங்களும், மிகச் சாதாரணமான வார்த்தைகளும் எந்தவிதத் தயக்கமுமின்றி ஒன்று சேர்க்கப்பட்டுத் தரப்பட்டிருக்கின்றன. அப்படிச் சொல்ல முடியாது, அதைவிட ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை வாசிப்போன் மனதில் ஏற்படுத்தும் பொருட்டு என்று சொல்லலாம். ஆக, அவ்விதமாய் அவை ஜப்பானின் சாரம் அல்லது ஆன்மாவையே வெளிப்படுத்துகின்றன. நான் மேற்கோள் காட்டியது ரியோகானின் கடைசிக் கவிதையே யாகும்.

"வசந்தத்தின் ஒரு நீண்ட பனிமூட்டம் நிரம்பிய நாள்:
குழந்தைகளோடு பந்து விளையாடியபடி, அந்த நாளை வழியனுப்பிக் கொண்டிருந்தேன் நான்"

 "தென்றல் புத்தம்புதிதாய் வீசுகிறது. நிலா துல்லியமாய் ஒளிர்கிறது.

 இணைந்திந்த இரவு முழுக்க நடனமாடுவோம்.
முதுமையின் இன்னமும் எஞ்சியுள்ளவற்றோடு."

"உலகின் வேறெவரும் வேண்டாம் என்று நான் விரும்புகிறேனில்லை.
 தனியாகத் துய்க்கையில் என்னால் அந்த ஆனந்தத்தை
அதிகம் உள்வாங்க முடிகிறது. அவ்வளவே."

ரியோகான், தனது காலத்தின் நவீன கொச்சைத்தனத்தை உதறியெறிந்தவர்; முந்தைய நூற்றாண்டுகளின் நயத்திலும், நளினத்திலும் தீர மூழ்கியிருந்தவர். அவருடைய கவிதையும், எழுத்துக்கலையும் இன்றளவும் ஜப்பானில் பெரிதும் பாராட்டப் பட்டு வருகிறது. இந்தக் கவிதைகளின் ஆன்மாவில் அல்லது அடிநாதத்தில் அவர் வாழ்ந்தார். கிராமப்புறப் பாதைகளினூடே செல்லும் நாடோடி வசிக்க புல்லாலானா குடிசை, உடுத்த ந்தல் துணிகள், கூடிப் பேச விவசாயக் குடிமக்கள். அவரைப் பொறுத்தவரை மதம் மற்றும் இலக்கியத்தின் மகத்துவம் மறை பொருளில் இல்லை. அதைவிட பெளத்தமதச் சொற்றொடரான, 'ஒரு மென்னகை கூடிய முகமும், இன்சொற்களும் என்பதில் கச்சிதமாகப் புலப்படுத்தப்பட்டு விடும் நலன் விளைவிக்கும் ஆத்மார்த்தத்தில் இலக்கியத்தையும், இறை நம்பிக்கையையும் தொடருவதையே அவர் விரும்பினார். அவருடைய கடைசிக் கவிதையில் உயிர் என்று எதையுமே அவர் தரவில்லை. ஆனால், தன்னுடைய இறப்பிற்குப் பிறகும் இயற்கை அழகாகவே இருந்து வரும் என்று அவர் நம்பினார். அதுவே அவர் விட்டுச் செல்லும் சொத்தாகும். இந்தக் கவிதையில் பழைய ஜப்பானின் உணர்ச்சிக் குமுறல்களையும், அதேபோல் மதஞ்சார் நம்பிக்கையொன்றின் இதயத்தையும் உணர முடிகிறது.

"அவள் எப்பொழுது வருவாள் என்று எண்ணியெண்ணி
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது இருவரும் ஒன்றிணைந்து விட்டதில்,
இனி எனக்கு என்ன எண்ணங்கள் வேண்டியிருக்கும்?"

 ரியோகான் காதல் கவிதைகளும் எழுதியுள்ளார். இங்கே நான் குறிப்பிடும் உதாரணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அறுபத் தொன்பது வயது முதியவரான இதே வயதில்தான் நான் நோபல் விருது பெற்றது என்பதையும் இங்கே குறிப்பிடலாமென்று தோன்றுகிறது) ரியோகான் இருபத்தியொன்பது வயதான தெய்ஸின் என்ற பெண்துறவியிடம் காதல் வயப்பட்டார். அத்தகையதோர் பெண்ணை சந்தித்ததிலான சந்தோஷத்தை மிக நீண்ட காலமாக யாருக்காகக் காத்திருந்தாரோ அவரைச் சந்திக்கக் கிடைத்ததன் மனநிறைவை இந்தக் கவிதை பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். கடைசி வரி எளிமையே உருவானது.

ரியோகான் தனது 73ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் எச்சிகோ என்ற பகுதியில் பிறந்தார். இந்தப் பிராந்தியம், தற்போது நில்கதா என்று அழைக்கப்படுகிறது. என்னுடைய பணிதேசம் என்ற புதினத்தின் சூழமைவு, ஜப்பானின் மறுபக்கம் என்று அழைக்கப்படும் இடத்திலான வடக்கு முக பிராந்தியமாகும். இங்கே குளிர்க்காற்று லைபீரியாவிலிருந்து ஜப்பானியக் கடலைக் கடந்து வந்து கீழிறங்குகிறது. அவர் தனது முழு வாழ்வையும் இந்தப் பணி பிரதேசத்தில் கழித்தார். கண்கள் அவற்றின் கடைசி விளிம்பு நிலையை எய்திவிட்ட அவருடைய இறுதி நாட்களில், முதுமையும் களைப்பும் அவர்மேல் கவிந்து விட்ட நிலையில் மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர்ந்து அதன் வழி ஆன்மவொளியை எட்டி விட்ட நேரத்தில், பணிதேசம், அவருடைய கடைசிக் கவிதையில் காணப்படுவதே போல் இன்னமும் அழகாக இருந்திருக்கும் என்று எனக்குப் படுகிறது. கண்கள் அவற்றின் கடைசி விளிம்பில் என்ற தலைப்பில் நான் கட்டுரையொன்று எழுதியிருக்கிறேன்.

இந்தத் தலைப்பு சிறுகதை எழுத்தாளர் அகுதகாவா ரியுனோசுகே (1892-1927)ன் தற்கொலைக் குறிப்பிலிருந்து கிடைக்கப் பெற்றது. நான் பனிக்கட்டியாய் குளிர்ந்து தெளிந்திருக்கும் நோயுற்ற மனங்களினலான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னில் வீச்சு மிக்க தாக்கத்தை ஏற்படுத்திய சொற்றொடர் அது. வாழ்வதற்கான வலுவாற்றல் என்றறியப்படும் அந்த விலங்கார்ந்த உணர்வை, தான் படிப்படியாக இழந்து வருவதாகத் தோன்றுவதாக அகுதகாவா கூறுகிறார். தொடர்ந்து "எப்போது என்னைக் கொன்றழித்துக் கொள்ளும் துணிவை நான் வரவழைத்துக் கொள்வேன் என்று தெரியவில்லை. ஆனால், இயற்கை எனக்கு முன்னெப்போதையும் விட மிக அழகாக இருக்கிறது. இந்த முரணை நீங்கள் கேலி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அதாவது தற்கொலை செய்து கொள்வது பற்றித் தீர யோசித்துக் கொண்டிருக்கும்போதே நான் இயற்கையையும் நேசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இயற்கை மிக அழகாக இருப்பதற்குக் காரணம் அவை தமது கடைசி விளிம்பில் இருக்கும் என் கண்களால் காணப்படுவதுதான்."

1927இல், தனது முப்பத்தைந்தாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய கண்கள் அவற்றின் கடைசி விளிம்பில் என்ற கட்டுரையில் நான் இவற்றையெல்லாம் சொல்லியாக வேண்டி யிருந்தது. ஒருவர் உலகிலிருந்து எவ்வளவுதான் அந்நியப்பட்டு நின்றாலும், தற்கொலை என்பது ஆன்மவிளக்கம் பெறும் வழியில்லை. எத்தனைதான் போற்றப்படத்தக்கவனாக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்கிறவன் துறவிகளின் ராஜ்யத்திலிருந்து தொலைவிலேதான் இருக்கிறான். நான் தற்கொலையை சிலாகிக்கவும் இல்லை எனக்கு அது குறித்த எந்தப் பரிவுணர்ச்சியும் இல்லை. எனக்கு இன்னொரு நண்பர் இருந்தார். புதிதாக ஓவியக்கலையில் ஈடுபட்டிருப்பவர். அவரும் இள வயதிலேயே இறந்துபோனார். அவரும் வருடக்கணக்காக தற்கொலை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவர். அவரைப் பற்றி நான் இதே கட்டுரையில் இப்படி எழுதினேன். மரணத்தை விட மேலான எந்தவொரு கலையும் இல்லையென்றும், இறத்தலே வாழ்தல் எனவும் அவர் திரும்பத் திரும்பக் கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், ஒரு பெளத்தக் கோயிலில் பிறந்து, பெளத்தப் பள்ளி
இதழ் 2 / 2002 : 8.9
படிப்பகம்
________________

padippakam
ஒன்றில் பயின்று வந்த அவருக்கு மரணம் என்பது பற்றி மேற்கத்திய நாடுகளின் கண்ணோட்டத்திலிருந்து மிகவும் மாறுபட்ட அளவிலான கண்ணோட்டம் இருந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பொருட்களுக்குப் பதிலாய் எண்ணங்களைத் தருபவர் மத்தியில் தற்கொலை பற்றி நினைக்காதவர் யார்தான் இருக்க முடியும்? அந்த நபர் இக்கியு (1994 - 148) இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்ற விவரம் எனக்குத் தெரிந்திருந்தது. நான் அந்த நபர் என்ற பதத்தை உபயோகிக் கிறேன். ஏனெனில் மதகுரு இக்கியு குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடித்த மனிதர். தவிர அவருடைய முடிவேயற்ற விசித்திர நடவடிக்கைகள் நமக்குப் பல பல கதைகளாகத் தரப்பட்டிருக் கின்றன. குழந்தைகள் அவருடைய முழங்கால் மேல் தொத்தி எறிக் கொண்டு அவருடைய தாடியை நீவி விடுவார்கள் என்றும் காட்டுப் பறவைகள் அவருடைய உள்ளங்கைகளில் உணவு கொறிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தவிதமான கதைகளிலிருந்து அவர் புத்திபேதலிப்பின் முழுமொத்த வடிவம் என்றும் அவர் அணுகத் தக்க மென்மையான துறவி எனவும் தோன்றும். ஆனால், உண்மையில் அவர் ஜென் துறவிகளிலேயே மிகவும் அருமையான வராகவும், மிகவும் குறிப்பிடத்தக்கவராகவும் இருந்தார். ஒரு மன்னரின் மகனாகப் பிறந்ததாகச் சொல்லப்படும் அவர் தனது ஆறாவது வயதிலேயே கோயிலுக்குள் இடம்பெற்று, வெகு இளம் பிராயத்திலேயே கவித்துவத்தில் தனது புலமையை வெளிப் படுத்தினார். அதேசமயம் அவர் மதம், வாழ்க்கை குறித்த மிக ஆழமான சந்தேகங்களினாலும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். "கடவுள் என்று ஒருவன் இருக்கிறானென்றால், அவன் எனக்கு உதவி செய்யட்டும். அப்படி யாரும் இல்லை யென்றால் நான் என்னை ஏரியின் ஆழத்தில் வீசியெறிந்து கொண்டு மீன்களுக்கு உணவாவேன். இந்த வார்த்தைகளை வீசி விட்டு அவர் தன்னை ஏரியொன்றிற்குள் வீசிக் கொள்ள முயன்றார். ஆனால், தடுத்து நிறுத்தப்பட்டார். மற்றொரு சமயம் அவருடைய தாய்தோ குஜி கோயிலில் ஒரு துறவி தற்கொலை செய்து கொண்டபோது அவருடைய சகாக்கள் பலர் அதற்குக் காரணமாகக் குற்றஞ்சாட்டப் பட்டனர். இக்கியு கோயிலுக்கு மீண்டும் சென்றார். மேற்குறிப்பிட்ட தற்கொலை அவர் தோள்களில் பாரமாக அழுத்திக் கொண்டிருக்க, பட்டினி கிடந்து சாவது என்று தீர்மானித்தார். தனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் புரள்மேகத் தொகுதி (Collection of the Rolling Clouds) என்று பெயரிட்டு புரள்மேகம்' என்பதைத் தனது புனைபெயராகவும் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய இந்தக் கவிதைத் தொகுதியிலும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த தொகுப்பிலும் சீனமொழியில் ஈடு இணையற்ற அற்புதக் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தவிர, ஜப்பானிய மத்திய காலகட்டத்தைச் சேர்ந்த ஜென் கவிதைகளும், பாலியல் சார் கிளர்ச்சிக் கவிதைகளும், படுக்கையறை ரகசியங்களைப் பற்றிய கவிதைகளும் இடம்பெற்று ஒருவரை பிரமிப்பில் திக்குமுக்காட வைக்கின்றன. மீன் உண்டு, மதுவருந்தி, பெண்களோடு பரிவர்த்தனை நடத்தி அவற்றின் மூலம் தனது நாளின் ஜென் வகுத்து வைத்திருந்த எல்லைகள், நியமங் களைக் கடந்து போகவும் அவற்றிடமிருந்து விடுதலை பெறவும் நினைத்தார். இவ்வாறாக, நிறுவப்பட்ட மதஞ்சார் வடிவங்கள். வழிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதன் மூலம் ஜென்னைத் தொடர்ந்து செல்வதில் உள்நாட்டுப் போர்களும், ஒழுக்கத்தின் வீழ்ச்சியும் நிலவும் தற்காலத்தில் மறுபடியும் உயிர்வாழ்க்கையின், மனித வாழ்க்கையின் சாரத்தையும் ஆன்மாவையும் மீட்டுயிர்ப்பித்து நிலைநாட்ட முயன்றார் அவர்,

கயாதோவிலுள்ள முராஷகினோ என்ற பகுதியில் அமைந்த அவருடைய தாய்தோ குஜி கோயில் இன்றளவும் தேனீர் விழாவின் மையமாக இருந்து வருகிறது. அவருடைய எழுத்துக் கலைப்படைப்புகள் இன்றும் தேனீர் அறைகளின் தனிமாடங்களில் அலங் காரப் படங்களாய் பெரிதும் பாராட்டிற்குரியதாக விளங்குகின்றன.

என்னிடமே கூட இக்கியுவின் எழுத்துக் கலைப்படைப்பைப் பற்றிய இரண்டு மாதிரிகள் இருக்கின்றன. ஒன்று வெறும் ஒற்றை வரியாலானது. "புத்தரின் உலகத்திற்குள் நுழைவது எளிது, சாத்தானின் உலகத்திற்குள் நுழைவது சிரமம்" இந்த வார்த்தை களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவனாய் என்னுடைய எழுத்துக்கலை பற்றிய மாதிரி ஒன்றைத் தரும்படி கேட்கப்படும் போதெல்லாம் இந்த மாதிரிகளை நிறைய முறை பயன்படுத்தியிருக்கிறேன். பயன் படுத்தி வருகிறேன். இவற்றை பல்வேறு பொருள்களில் வாசிக்கலாம். வாசிப்போன் எத்தனை கடினவாசிப்பை விரும்புகிறானோ அந்த அளவுக்கு கடினவாசிப்புக்கும் இந்த வரிகளை உட்படுத்த முடியும். ஆனால், புத்தரின் உலகத்தோடு சேர்க்கப்பட்ட அந்த சாத்தானின் உலகத்தில் ஜென்னின் இக்கியு எனக்கு மிகவும் உடனடியாக அர்த்தமாகிறார். ஒரு கலைஞனுக்கு உண்மை, அழகு மற்றும் நல்லதைத் தேடுதல் என்பதும், சாத்தானின் உலகம் பற்றிய அந்த வரிகளில் ஒரு பிரார்த்தனையே போல் வெளிப்படும் அச்சமும், கோரிக்கையும். மேற்பரப்பில் அங்கே வெளிப்படையாக இருக்க வேண்டியது. பின்னால் மறைந்திருப்பது ஒருக்கால் விதியின் தவிர்ககமுடியாத் தன்மையைப் பேசுவதாயிருக்கலாம். சாத்தானின் உலகம் இல்லாமல் புத்தரின் உலகம் ஒருபோதும் எங்கேயும் இருக்கவியலாது. தவிர, சாத்தானின் உலகம் நுழைவதற்கு மிகவும் சிரமமான இடம். அது பலவீனமான இதயங்களைக் கொண்டவர்களுக்கானது அல்ல.

"நீ ஒரு புத்தனை சந்திப்பாயெனில், அவனைக் கொன்றுவிடு
நீ சட்டத்தின்படியான ஒரு தலைவனை சந்திப்பாயெனில்
அவனைக் கொன்றுவிடு."

இது ஒரு மிகப் பிரபலமான ஜென் கொள்கை, பெளத்தம் என்பது நம்பிக்கை விசுவாசத்தின் மூலம் நற்கதியடையலாம் என்று நம்பும் ஒரு பிரிவும், ஒருவர் தனதேயான முயற்சிகளில் நற்கதி எய்தலாம் என்று நம்பும் ஒரு பிரிவுமாக இரண்டாகப் பகுக்கப் பட்டிருக்கிறது என்னும்போது அவரவர் முயற்சிகளின் வழிதான் நற்கதி கிட்டும் என்று தீர்மானமாக வலியுறுத்தும் ஜென்னில் இத்தகைய வன்முறைகூடிய கூற்றுகள் இருந்தாகத்தான் வேண்டும் மறுபக்கத்தில், அதாவது நம்பிக்கை, விசுவாசத்தின் மூலம் நற்கதியடையலாம் என்று நம்பும் பிரிவைப் பொறுத்தவரை 'வின் பிரிவின் நிறுவனரான ஷின்ரான் (173-1262) ஒருமுறை கூறினார்: "நல்லவர்கள் சொர்க்கத்தில் மீண்டும் பிறப்பார்கள். அப்படியெனில் தீயவர்கள் விஷயத்தில் அது இன்னும் எத்தனை கூடுலாகப் பொருந்தும் என்பதை எண்ணிப் பாருங்கள்." பிறப்பு முதலான விஷயங்களைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டம் இக்கியுவின் புத்தரின் உலகம் மற்றும் சாத்தானின் உலகங்களோடு ஏதோ ஒரு விதத்தில் ஒத்திருக்கிறது. இருந்தாலும் மனதிற்குள் அவர்களிரு வருக்கும் அவர்களுக்கேயுரிய வேறுபட்ட சாய்வுகள் இருக்கின்றன. ஷின்ரான் மேலும் கூறினார்: "நான் சீடனென்று ஒருவரையும் கொள்ள மாட்டேன்."

"நீ ஒரு புத்தனை சந்திப்பாயெனில், அவரைக் கொன்றுவிடு.
நீ சட்டத்தின்படியான ஒரு தலைவரை சந்திப்பாயெனில்
அவரைக் கொன்று விடு"
"நான் சீடனென்று ஒருவரையும் கொள்ள மாட்டேன்."

இந்த இரண்டு கூற்றுகளில் கலையின் கடினவிதி அடர்ந் திருக்கிறது எனலாம்.

ஜென்னில் உருவ வழிபாடு கிடையாது. ஜென்னிலும் பிம்பங்கள் உண்டுதான் என்றாலும், தியானம் என்ற பயிற்சி நாடப்படும்
படிப்பகம்
________________

padippakam
கூடத்தில் புத்தரின் பிம்பங்களோ, படங்களோ எதுவும் கிடையாது. எந்தவித வேதாகம நூலும் கிடையாது. ஜென் சீடன் நீண்ட மணி நேரங்கள் மெளனமாகவும், அசையாமலும், கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கிறான். அவ்வாறிருக்கையில் அவன் எல்லாவித எண்ணங்களிலிருந்தும், கருத்தோட்டங்களிலிருந்தும் விடுபட்ட நிலையை ஒருவித உணர்ச்சியற்ற நிலையை எட்டுகிறான். அவன் தான் என்ற ஒன்றிலிருந்து, தன்னிலிருந்து விடுபட்டு இன்மை என்ற ராஜ்ஜியத்திற்குள் நுழைகிறான். இது, மேற்கின் இன்மை அல்லது வெறுமையை ஒத்ததல்ல. அதற்கு நேரெதிர் என்று சொல்லலாம். இந்த இன்மை என்பது ஆன்மாவின் அல்லது மனிதமன ஆதார ஸ்ருதியின் பிரபஞ்சமாக, இதில் எதுவும் எதுவோடும், எல்லாமும் பிற எல்லாவற்றுடனும் எந்தவித இறுக்கங்களுமற்று இயல்பாக, சுதந்திரமாகப் பரிவர்த்தனை நடத்துவது சாத்தியமாக இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் எல்லைகளைக் கடந்ததாய், எல்லையற்றதாய் இருக்கிறது. ஜென்னைக் கரைத்துக் குடித்த அறிஞர்களும் இருக் கிறார்கள். தனது குருவாக இத்தகைய அறிஞர்களில் ஒருவரை வரித்துக் கொள்ளும் சீடன் அவரிடம் மேற்கொள்ளும் விவாதங்கள், கேள்வி - பதில் அமர்வுகள் முதலியவற்றின் உதவியுடன் ஞான விளக்கத்திற்கு அருகில் இட்டுச் சொல்லப்படுகிறான். தவிர அவன் ஜென் தத்துவ நூல்களையும் படித்துத் தேர்கிறான். ஆனாலும், சீடன் எப்பொழுதும் அவனே அவனுடைய எண்ணங்களின் ஆண்டை யாக இருக்க வேண்டியதும், தன்னுடைய சொந்த முயற்சிகளின் மூலமே ஞானவிளக்கம் அடைய வேண்டியதும் அவசியம். மேலும் இதில் உள்ளுணர்வு. உடனடி உந்துதல் முதலியவற்றிற்கே பகுத்தறிவு மற்றும் தர்க்கம் ஆகியவற்றைக் காட்டிலும் அதிக அழுத்தம் தரப்படுகிறது. ஞானம் என்பது கற்பித்தலால் வருவ தில்லை. உட்கண்ணின் விழிப்பினால் ஏற்படுவது அது. உண்மை என்பது, வார்த்தைகளை உதறியெறிவதில்தான் அடங்கியுள்ளது. அது வார்த்தைகளுக்கு வெளியே அமைந்திருப்பது. எனவே 'விமலகீர்த்தி நிர்தேச சூத்திரத்தில், இடியொத்த அமைதி என்ற தீவிரமுனை நமக்குத் தரப்படுகிறது. போதிதர்மா என்ற தென்னிந்திய இளவரசர் ஒருவர் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவர் என்றும் அவர்தான் சைனாவில் ஜென்னின் நிறுவனர் என்றும் போதிதர்மா ஒன்பது வருடங்கள் ஒரு குகையில் சுவரை நோக்கி அமர்ந்தபடி மெளனம் அனுஷ்டித்தார் என்றும் இறுதியாக அவருக்கு ஞானம் கைகூடியது என்றும் வழிவழியாகக் கூறப்பட்டு வருகிறது. உட்கார்ந்த நிலையில் அமைதியாக தியானம் செய்தல் என்ற ஜென் வழக்கம் போதிதர்மரிடமிருந்து பெறப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது.

இங்கே இக்கியுவின் இரண்டு மதஞ்சார் கவிதைகள் தரப்பட்டுள்ளன:

"பிறகு உன்னை பதிலளிக்கும்படி கேட்கிறேன். நான்
தராதபோது நீ தருவதில்லை.
அப்படியெனில் உங்கள் நெஞ்சில் என்னதான்
 இருக்கிறது. ஒ போதிதர்மரே?"
"அதுதான் என்ன, இதயமா?
 அது மையோவியத்திலுள்ள பைன் மரக் காற்றின்
ஒலியாகும்."

இங்கே கீழையுலக ஒவியக்கலையில் ஜென்னின் ஆன்மாவை அல்லது சாரத்தை நாம் பெறுகிறோம். மையோவியத்தின் இதயம் அல்லது மையம், வெளியில் உள்ளது. சுருங்கியதாய், இன்னும் வரையப்படாமலிருப்பதாய். சீன ஓவியக்கலைஞர் சின் நுங்கின் வார்த்தையில் சொல்வதென்றால், "நீ கிளையை நன்றாக வரை. உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்" மறுபடியும் மதகுரு தோஜெனை மேற்கோள் காட்டலாம்:

"இந்த விஷயங்கள் அங்கே இருக்கின்றனவல்லவா? மூங்கிலொலியில் ஞானவிளக்கம். பீச் மலரில் மனதின் பிரகாசம்."

பூவலங்கார வித்தகரான இகெனோபோ ஷெனோ ஒரு முறை கூறினார் (இந்தக் கூற்று அவர் சொன்னவற்றின் தொகுப்புகளில் காணப்படுகிறது: "பூக்களின் தெளிப்பிலும், சிறிது நீரிலுமாய் ஒருவர் நதிகள் மற்றும் மலைகளின் அகன்ற பரப்பை அழைத்து வருகிறார். ஜப்பானியப் பூங்காவும் இயற்கையின் அகன்ற பரப்பை உருவகப் படுத்துகிறது. மேற்கத்திய பாணித் தோட்டம் நீள, அகல, நிர்மாண அமைப்பில் ஒரே சீராக அமைந்திருக்கும். ஜப்பானியத் தோட்டத்தில் இத்தகைய சீர்மை காணப்படுவதில்லை. ஏனெனில் சீர்மை யின்மைக்கு பன்மை மற்றும் விரிவு முதலியவற்றை வெளிப்படுத்து வதில் கூடுதல் ஆற்றலும் சக்தியும் உண்டு. மேலும், இந்த சீர்மை யின்மை என்பது நுட்பமான உணர்வுநிலைகளால் கொண்டுவரப் பட்ட ஒரு சமநிலை மேல்தான் அமைந்திருக்கிறது. இயற்கைத் தோட்டமிடல் என்ற ஜப்பானியக் கலையைக் காட்டிலும் வேறுபட்ட பாணியிலானதாய், சிறுசிறு விவரங்களுக்கும் அதிக கவனம் செலுத்தும் கலை வேறெதுவும் இல்லை. இதில் வறண்ட இயற்கைக் காட்சி என்ற ஒரு இயற்கைத் தோட்ட வகை இருக்கிறது. இது முழுக்க முழுக்க குன்றுகளால் கட்டப்பட்டது. இவ்வகைத் தோட்டத்தில் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்கமைதியின் மூலம் அங்கே தூலமாக இல்லாத மலைகள், நதிகளுக்கும் வடிவம் தருவதோடு அந்த அகன்ற சாகரத்தின் அலைகள் குன்றின் உச்சிகளில் மோதிச் சிதறுவதையும் குறிப்பாலுணர்த்தி நிற்கிறது. முழுநிறைவாய் இறுக்கமாகக் கட்டப்பட்ட அளவில் இந்த ஜப்பானியத் தோட்டம் பொன்ஸாய், சித்திரக்குள்ளத் தோட்டமாக, அல்லது அதனுடைய வறட்சி கூடிய வடிவான பொன்ஸ்ெகியாகிறது.

கீழைத்தேயத்தில் நிலக்காட்சிக்குரிய வார்த்தையில், நேரிடை யான அர்த்தத்தில் மலை - ஒடை என்று வருவது, நிலக்காட்சி ஒவியம் மற்றும் நிலக்காட்சித் தோட்டம் முதலியவை குறித்த குறிப்புணர்த்தலோடு பார்க்கும் அளவில் சருகாகி உதிர்ந்து போனதும், விரயமாகிப் போனதும், துயரமானதும் மற்றும் நைந்துபோனதும் அதில் அர்த்தமாகின்றன. ஆனால், தேனீர் விழாவில் பெரிதும் மதிக்கப்படும் துயரந்தோய்ந்த இறுக்கமான இலையுதிர்காலப் பண்புநலன்களில் "மென்மையான மதிப்பார்ந்து, தூய்மையான அமைதியோடு" என்ற விவரணையில் திருத்தமாகவும், சுருக்கமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதிலேயே ஒரு அற்புதச் செழுமை வாய்ந்த ஆன்மா அல்லது மனப்போக்கு ஒளிந்து கொண்டிருக்கிறது; மேலும், மிக விறைப்பாக எல்லைகள் கூடியதாகவும், எளிமையாகவும் இருக்கும் தேனீர் அறை தன்னுள் எல்லையற்ற இடத்தையும், முடிவேயில்லாத அழகையும் ஏந்திக் கொண்டிருக்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாசத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் பூவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலரை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. குளிர்காலத்தில் அந்தப் பருவத்திற்கே பிரத்யேகமாகவுள்ள பூ கமெலியா என்று வைத்துக் கொள்வோம். வெண்நகை, அல்லது தனிமையில் துணை' என்ற பொருளைத் தரக்கூடிய வாபிஸ்யூக் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அல்லது தனது வெண்ணிறத்திற்கும், நுண்ணளவிற்கும் பெயர் போன வகையைச் சேர்ந்த கமெலியா பூக்கள் தெரிவு செய்யப்படுகின்றன. ஆனால்
இதழ் 2 / 2002 : 41
படிப்பகம்
________________
புனைகளம்
padippakam
ஒற்றையரும்பு மட்டுமே மாடத்தில் அலங்காரமாக வைக்கப்படுகிறது. வெள்ளை என்பது நிறங்களிலேயே மிகவும் தூய்மையானது. தவிர அது தனக்குள் மற்ற எல்லா நிறங்களையும் கொண்டிருக்கிறது. தவிர, எப்பொழுதும் அரும்பின்மீது பனித்துளி கட்டாயம் இருக்க வேண்டும். அரும்பு நிலையிலுள்ள பூமீது சில நீர்த்துளிகள் தெளிக்கப்பட்டு ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. தேனீர் விழாவிற்கான மிக அற்புதமான அலங்கார ஏற்பாடுகள் மே மாதம் இடம்பெறுகின்றன. அச்சமயம் பியோனி மலர் இளம்பச்சை பூஞ்சாடியொன்றில் பளிச்சென்ற சிவப்பு அல்லது ஆழ்ந்த ரோஜா நிறத்திலிருக்கும் அகன்ற அலங்காரப் பூக்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இங்கும் ஒற்றை அரும்பு மட்டுமே. எப்பொழுதும் அதன்மீது பனித்துளி இருக்கும்படியாக வைக்கப்படுகிறது. பூவின் மீது நீர்த்துளிகள் படர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல், பூஞ்சாடியும் அடிக்கொரு தரம் ஈரப்பதமாக்கப்படுகிறது.

பூஞ்சாடிகளை எடுத்துக்கொண்டால், மிக உயர்ந்த இடத்தைப் பெறுவது பதினாறாம் அல்லது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான இகாவாகும். இதுவே மிக அதிகமான விலைக்குப் போகிறது. பழம் இகா ஈரப்பதமுடையதாக்கப்பட்டவுடன் அதனுடைய வர்ணங்களும், பளபளப்பும் புதிய அழகைப் பெறுகிறது. இந்த அற்புத அழகு மறுபடியும் புதிதாய்ப் பிறந்ததான உணர்வை நல்குகிறது. மிக அதிக தட்பவெப்பநிலைகளில் இகா எரியூட்டப்படுகிறது. எரிபொருளிலிருந்து வெளிக்கிளம்பும் சாம்பலும் புகையும் மேற்பரப்பின்மீது விழுந்து வழிந்தோடுகிறது. தட்பவெப்பநிலை இறங்கியதும், அவை ஒருவகையான கனலும் தணலாகின்றன. வர்ணங்கள் செயற்கையாகப் புனையப்பட்டதாக இல்லாமல், சூளையில் நடந்தேறும் வேலையின் தன்மை காரணமாக ஏற்படும் விளைவாக இருப்பதனால் நிறங்களின் வேலைப் பாடுகளும், பின்னலமைப்புகளும் வியப்பூட்டும் விதங்களில், சூளையின் விசித்திரங்கள் மற்றும் நெளிவுகளிவுகள் என்று அழைக்கும்படியாக வெளிப்படுகின்றன. பழைய இகா வின் கரடு முரடான, விறைப்பும் வலுவும் கூடிய மேற்புறங்கள் ஈரமாக்கப் படும்போது கிளர்ச்சியூட்டும்படியான செழிப்பான பளபளப்பைக் கொள்கின்றன. அது பூக்களின் மேல் உள்ள பனியின் தாளலயத்திற் கேற்ப மூச்சு விடுகிறது.

மேலும், தேனீர் விழாவின் ரசனையும், நயமும், தேனீர்ப் பாண்டமும் பயன்படுத்தப்படுவதற்குப் பதில் ஈரப்பதமாக்கப்பட்டு அதன்வழி அதற்கேயுரிய மென்மையான பளபளப்பைப் பெறும்படி செய்ய வேண்டும் என்று கோருகிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இகெனோபோ ஷெனோ கீழ்வருமாறு கூறுகிறார். இதுவும் அவருடைய கூற்றுத் தொகுப்பில் இடம் பெறுகிறது). "மலைகளும், கடற்கரைகளும் தத்தமது இயல்பான பிரத்யேகமான வடிவங்களிலேயே தோன்றுவதுதான் அழகு. எனவே பூவலங்காரம் பற்றிய தனது அணுகுமுறையில் புதியதொரு ஆன்மாவைக் கொண்டு வருவதன் பொருட்டு அவர் மலர்களை உடைந்த பாண்டங்களிலும், உலர்ந்த கிளைகளிலும் கண்டுகொண்டார். அவற்றிலிருந்தும் கூட மலர்களிலிருந்து வரும் ஞானத்தையும் கண்டுகொண்டார். "பண்டைய மக்கள் பூக்களை நேர்த்தியாக அலங்கரித்து அவற்றின் வழி ஞானத்தைத் தேடிச் சென்றார்கள்." இங்கே ஜென் தாக்கத்தின் கீழ் உள்ள ஜப்பானிய 'சாரம் அல்லது பிரதான குணாம்சத்தின் இதயம் ஞானவிளக்கம் பெறுவதை நாம் காண்கிறோம். ஒருக்கால், அதில் கூட நீண்ட உள்நாட்டுப் போர்களினாலான பேரழிவில் வாழ்ந்து வரும் மனிதனின் இதயம் இருக்கக்கூடும்.

10ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இசே பழமரபுக் கதைகள், ஜப்பானிய இசைக்கதைகளின் மிகத் தொன்மையான தொகுப்பாகும். அவற்றில் சில சிறுகதைகள் என்று பெயரிட்டு அழைக்கப் படத்தக்கதாயிருக்கலாம். அந்தக் கதைகளில் ஒன்றில் விருந்தினர்களை வரவழைத்திருந்த நிலையில் கவிஞர் அரிவாரா நோ யுகிஹிரா மலர்களை அலங்கரித்து வைப்பதாக வருகிறது:

"உணர்ச்சிகளாலான மனிதனாக இருப்பதால் அவர் ஒரு பெரிய ஜாடியில் மிக அபூர்வமான விஸ்தாரியாவை வைத்திருந்தார். அந்த அசையும் பூங்கிளைகள் மூன்றரை அடி நீளம் மேலெழும்பி யிருந்தன."

அத்தனை நீளப் பூக்கள் என்பது உண்மையிலேயே மிக அரிதான விஷயம் என்பதால் அதைத் தன் எழுத்தில் கொண்டு வருபவரின் படைப்பாக்க நம்பகத்தன்மை குறித்து நமக்கு சந்தேகம் எழ வழியுண்டு. இருந்தும் இந்த அற்புத பூந்தெறிப்பில் ஹெயான் கலாச்சாரத்தின் அடையாளத்தை என்னால் உணர முடிகிறது. விஸ்தாரியா என்பது வெகு பிரத்யேகமான ஜப்பானிய மலர். அதற்கென்று ஒரு பெண்மைத்தனமான நளினம் உண்டு. விஸ்தாரியா பூங்கிளைகள் காற்றில் அசையும்போது, மென்மை, மிருதுத்தன்மை மற்றும் சந்கோஜ பாவம் முதலியவற்றைக் குறிப்பாலுணர்த்தும் உறைந்து போய் கோடையின் தொடக்கத் திலான பசுமையில் மீண்டும் காட்சியளிக்கும் அவை, பல காலமாகவே ஜப்பானியர்களால் மோனோ நோ விழிப்பாகப் பகுக்கப்பட்டிருக்கும், துல்லிய, நுட்பமான அழகிற்கான அந்த உணர்வை தங்களிடம் உள்ளார்ந்த அளவில் கொண்டிருக்கின்றன. மூன்றரையடி நீளத்தில் மேல்நோக்கிக் காட்சியளிக்கும் அந்த பூங்கிளைகளில் ஒரு தனித்துவமான ஒளிர்வும் அழகும் இருந்தன. என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஹெயான் கலாச்சாரத்தின் பேரொளிர்வுகளும், ஒரு பிரத்யேகமான ஜப்பானிய அழகின் எழுச்சியும் இந்த மிக அபூர்வமான 'விஸ்தாரியா அளவு அத்தனை அற்புதமானவை, ஏனெனில், தியாங் சைனாவின் கலாச்சாரம் காலப்போக்கில் உள்வாங்கப்பட்டு ஜப்பானியக் கலாச்சாரமாக மாறியது. கவிதைத் துறையில், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மன்னராட்சியின் பொறுப்பில் கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. அவற்றில் முதன்முதலாக வெளிவந்த தொகுப்பு கோக்கின்ஷ புனைகதையில், 'இசே பழமரபுக் கதைகள் வெளிவந்தது. அவற்றைத் தொடர்ந்து தொன்மை வாய்ந்த ஜப்பானிய உரைநடையின் அதி உன்னதப் படைப்புக்களான, லேடி முராஸாகியின் Tale of Genji, மற்றும் ஷேய் ஷோனாகான் எழுதிய Pillow Bookம் வெளியாகின. இந்த இரு படைப்பாளிகளும் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினோறாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி வரை வாழ்ந் திருந்தவர்கள். இவ்வாறான ஒரு படைப்பாக்க மரபு நிறுவப்பட்டு அது எண்ணுறு ஆண்டுகள் ஜப்பானிய இலக்கியத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக ஜெஞ்ஜி கதை ஜப்பானிய இலக்கியத்தின் உச்சபட்ச சாதனை எனலாம். இன்று நாமிருக்கும் காலம் வரையும் கூட அதற்கொப்பான ஒரு புனைகதை எழுதப் படவில்லை என்று உறுதியாகக் கூறலாம். இத்தகைய நவீன படைப்பு காலத்தால் அத்தனை முந்தி, பதினோறாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டு விட்டது என்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்தான். அதேபோல் அதிசயத்திலும் அதிசயமாக இந்தப் படைப்பு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டும் இருக்கிறது. பண்டைய ஜப்பானிய இலக்கியங்கள் பற்றிய என்னுடைய அறிதலும், புரிதலும் தெளிவற்றதாகவே இருக்கிறது என்பது உண்மையே என்றாலும் ஹெயான் காவியங்கள் என்னுடைய சிறுவர் பிராயத்து வாசிப்பில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தன. ஜெஞ்ஜிக் கதைதான் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். அது எழுதப்பட்டு பல நூற் றாண்டுகள் ஆன பின்னும் ஜெஞ்ஜி மீதிருந்த ஈர்ப்பு குறையவே
படிப்பகம்
________________

padippakam
யில்லை. அந்தக் கதையை ஒற்றி எழுதப்பட்டவைகளும், அப் பட்டமான நகலெடுப்புகளும், அதன் மறு உருவாக்கங்களுமாய் அதை வழிபட்டு வந்தன. ஜெஞ்ஜிக் கதை கவிதைக்கான ஆழமும் அகலமும் வாய்ந்த வள ஆதாரமாகவும் திகழ்ந்தது. மேலும் நுண்கலைகள், கைவினைப் படைப்புகள் முதலியவற்றிற்கும், இயற்கைத் தோட்டமிடலுக்கும் கூட ஆதாரமாகவும் தூண்டுத லாகவும் இருந்தது.

முராசாகி மற்றும் ஷெய் சோனாகான் மற்றும் இஷ"மி விகிபு போன்ற பிரபல கவிஞர்கள், ஏறத்தாழ பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மடிந்திருக்கக் கூடியவர்கள். தவிர, அகஷோம் எமோன் என்ற, ஏறத்தாழ பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில் மரணமடைந்திருக்கக் கூடிய கவிஞர் ஆகிய எல்லோருமே அரண்மனையில் பணிப்பெண்களாக இருந்தவர்கள். ஜப்பானியக் கலாச்சாரம் என்பது அரண்மனைக் கலாச்சாரம். அரண்மனைக் கலாச்சாரம் என்பது பெண்மைத்தன்மையானதாக இருந்தது. "ஜெஞ்சி கதை, மற்றும் பில்லோ புக் ஆகிய இரண்டும் அந்தக் கலாச்சாரத்தின் உச்சமாக, பழுத்த நிலை என்பது அழுகும் நிலைக்கு நகர்ந்து வரும் போதிலான உச்சமாய் அமைந்தது. அளப்பரிய பெருமைக்குப் பிறகு வரும் வீழ்ச்சியின் வலியை, உயர்ந்த புகழின் முடிவில் பெறக் கிடைக்கும் துயரத்தை அதாவது ஜப்பானிய அரண்மனைக் கலாச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் உணரலாகும் இழப்பை அதில் உணரக் கிடைத்தது. அரசவை வீழ்ச்சியடைய, அரண்மனையைச் சார்ந்த அரசர்கள், பிரபுக்கள் கைகளிலிருந்து ஆட்சியதிகாரம் இராணுவ அதிகாரவர்க்கத்தினர் கைகளுக்குப் போன்து. 192இல் காமாகுரா ஷோகுந்தே நிறுவப்பட்டதிலிருந்து 1867 மற்றும் 1868இல் நடந்தேறிய மெய்ஜி மீட்பு வரை ஏறத்தாழ ஏழு நூற்றாண்டு காலம் ஜப்பானின் ஆட்சியதிகாரம் இராணுவத்தின் கைகளிலேயே இருந்து வந்தது. ஆனால், ராணுவ ஆட்சியின் போதும் அரசவை என்ற அமைப்போ அல்லது அரண்மனைக் கலாச்சாரமோ அடியோடு அழிந்து விட்டதாய் சொல்ல முடியாது. அரச ஆதரவோடு வெளிவந்த தொகுப்புகளில் எட்டாவது தொகுப்பு பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்ககால 'வின்கோகின்ஷ கோகின்ஷாவின் தொழில்நுட்ப ஆற்றல் திறன் இன்னுமொருபடி மேலே சென்றது. சில சமயங்களில் வெற்று வார்த்தை ஜாலங்களாகச் சரிந்தும் விழுந்தது. ஆனால் புதிர்த்தன்மை, மர்மமுடிச்சு, குறிப்பாலறிதல், வழிபடல் மற்றும் பாலுணர்வுக் கிளர்ச்சியூட்டும் கற்பனாதீதங்கள் முதலிய ஆக்கக் கூறுகள், நவீன உருவக பாணிக் கவிதையோடு ஒத்திசைவுகளைக் கொண்டு விளங்குகின்ற அம்சங்கள் கோகின்ஷவில் சேர்க்கப் பட்டன. முன்னர் குறிப்பிட்டுள்ள தொய்கோ, ஹேயான் மற்றும் காமகுரா ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் வாழ்ந்த அவற்றைத் தன் படைப்புக்களில் பிரதிபலித்த கவிஞராகத் திகழ்ந்தார்.

"நான் அவனைக் கனவு கண்டேன்; அவனையே
நினைத்திருக்கும் காரணத்தால்,
அது ஒரு கனவு என்று எனக்குத் தெரிந்திருந்தால்
விழிக்கவே விரும்பியிருக்க மாட்டேன்."

"என்னுடைய கனவுகளில் ஒவ்வொரு இரவும் தவறாமல்
அவனிடம் செல்கிறேன்.
ஆனால் இது நனவிலான நோக்கலொன்றை விடவும்
மிகவும் குறைவே."

இவை ஒனோ நோ கோமாசி என்ற கோகின்ஷாவின் முன்னணிப் பெண்கவிஞர் ஒருவரால் இயற்றப்பட்டது. இவர் ஒரு நேரிடையான யதார்த்தத்தின் துணையோடு கனவுகளைப் பாடுகிறார். இக்கியுவின் சமகாலத்தவராய், முரேமாச்சி காலத்தில்
ஷின்கோகின்ஷிக்குப் பிற்காலத்தவராய் வாழ்ந்த அரசி எஃபி யுக்யுவின் பின்வரும் கவிதைகளுக்கு வரும்போது யதார்த்தம் என்பது நேரிடையாக அல்லாமல் துயர்கூடிய குறியீடாகி விடுகின்ற நுண்மை வாய்ந்த எதார்த்தமாய், வெகு நுட்பமாய் ஜப்பானியத் தன்மை கூடியதாய் மாறுவதைக் காண்கிறோம். இந்தக் கவிதைகள் எனக்கு அதிக நவீனத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன.

"குருவிகள் கீச்சிடும் மூங்கிற்புதருக்கு
மேலாய் ஒளிர்ந்து கொண்டிருப்பதில் சூரியவொளி இலையுதிர்காலத்தின்
நிறத்தை ஏற்கிறது."

"இலையுதிர்காலக் காற்று, தோட்டத்திலுள்ள புதர்ப்
புற்களை இறைத்துக் கொண்டிருப்பது
எலும்புகளுக்குள்ளாய் மூழ்கிச் சமைகிறது.
சுவரின் மீது, மாலைச்சூரியன் மறைகிறது."

துல்லியமாக, சில்லென்றிருக்கும் பனி பற்றி நான் மேற்கோள் காட்டியிருந்த கவிதையை எழுதிய தோஜெனும் மற்றும் குளிர்கால நிலவைத் தன் துணையாக, தோழனாக எழுதிய மையோவும் ஷின்கோகின்ஷ காலத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப் படுகிறார்கள். மையோ தன்னுடைய கவிதைகளை ஷாய்க்யோவுடன் பகிர்ந்து கொள்வார். இருவரும் கவிதை பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கீழே, மையோவின் சீடர் சிகாய் எழுதிய மையோவின் சரிதையிலிருந்து ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.

ஷாய்க்யோ அடிக்கடி விஜயம் செய்து கவிதை பற்றிய பேச்சில் ஈடுபடுவார். கவிதை பற்றிய தன்னுடைய பார்வை அல்லது கவிதையைத் தான் பார்க்கும், பாவிக்கும் விதம் வழக்கமான அணுகுமுறையிலிருந்து மிகவும் மாறுபட்டது என்று அவர் கூறுவார். செர்ரிப் பூக்கள், குயில், நிலவு, பனி இயற்கையின் இந்தப் பலதரப் பட்ட உருவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததில் அவருடைய கண்களும் காதுகளும் வெறுமையால் நிரம்பின. மேலும், வெளிக்கிளம்பிய அத்தனை வார்த்தைகளும் உண்மையான வார்த்தைகள்தானே? அவர் பூக்களைப் பாடிய போது அவர் மனதில் பூக்கள் இருக்கவில்லை. அதேபோல், நிலவைப் பற்றிப் பாடியபோது அவர் நிலவை நினைத்துக் கொண்டிருக்கவில்லை. எழுதுவதற்கான சம்பவம் அல்லது நேரம் தானாக வாய்த்தபோது, தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டபோது, எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டபோது, அவர் கவிதை எழுதினார். வானத்தின் குறுக்காய் காணும் செந்நிற வானவில் ஆகாயம் நிறமணிந்து கொள்வதாய்க் கண்டது. வெண்ணிற சூரியவொளி ஆகாயம் பிரகாசமாகிக் கொண்டே வருவது போல் இருந்தது. இருந்தும் வெற்று ஆகாயம், அதன் இயல்பில், நிறத்தைத் தரித்துக் கொள்வதும் அல்ல, பிரகாசமாகிக் கொண்டே போவதும் அல்ல. வெற்று ஆகாயம் போன்ற ஒரு மனப்பாங்கில் அவர் பல்வகையான காட்சிகளுக்கு நிறமளிக்கிறார். ஆனால், அவற்றின் ஒரு சுவடும் எஞ்சவில்லை. இத்தகைய கவிதையில்தான் புத்தர், உச்சபட்ச முடிந்த முடிவான உண்மையின் வெளிப்பாடாக இருக்கிறார்."

இங்கே நாம் கீழைத்தேயத்தின் வெறுமையை, இன்மையை அடைந்திருக்கிறோம். என்னுடைய படைப்பாக்கங்களும்கூட வெறுமையின் படைப்பாக்கங்களாக வர்ணிக்கப்பட்டு வந்திருக் கின்றன. ஆனால் இந்த வெறுமை என்பதை மேற்கத்திய உலகின் நிகிலிசம் என்பதாகக் கொள்வது சரியில்லை. இரண்டிற்குமான ஆன்ம அடித்தளம் திட்டவட்டமாக வேறு வேறானது. தோஜென், பருவகாலங்கள் பற்றிய தனது கவிதைக்கு உள்ளார்ந்த மெய்ம்மை என்று தலைப்பிட்டார். அந்தப் பருவகாலங்களின் அழகைப் பாடிய பொழுதும்கூட அவர் ஜென்னில் ஆழ்ந்து மூழ்கியிருந்தார். D
இதழ் 2 / 2002 : 49
படிப்பகம்
________________
 இரண்டு பக்கங்கள் தவறிவிட்டன

padippakam
*******
......
வேண்டாம். மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும் வேண்டாம். நீங்களிருவரும் வீட்டிலுள்ள கடிகாரங்களைக்கூட ஒசையெழுப்ப அனுமதிக்கக் கூடாது."

"நீங்களிருவரும், நீங்களிருவரும், நீங்களிருவரும்" - அந்தப் பெண் கிசுகிசுப்பாகக் கூறிக் கொண்டபோது அவள் கண்களி லிருந்து கண்ணிர்த்துளிகள் விழுந்தன.

பிறகு அவர்களிருவரும் எந்தவொரு ஓசையையும் எழுப்பவில்லை. மிக மிகச் சன்னமான ஒலியைக்கூட அவர்கள் என்றுமே எழுப்பவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தாயும் மகளும் இறந்து போனார்கள். கூடவே, மிக வினோதமாக, பெண்மணியின் கணவனும் அவர்களருகில் படுத்துத் தானும் இறந்து போய்விட்டான்.

கடவுளின் எலும்புகள்

திரு. கஸ்ஹாரா ஸெய்ச்சி, புறநகர்ப்பகுதி நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநர் தகமுரா தோகிஜீரோ சரித்திரத் திரைப் படங்களில் நடிகர்; nஜிமோரோ, தனியார் பல்கலைக்கழக மொன்றில் மருத்துவம் பயிலும் மாணவர் மற்றும், திரு. ஸ்குமா பென்ஜி, கேண்டோன் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளர் - இவர்கள் ஒவ்வொருவருக்கும் நீல நாரைக் காப்பிக்கடையின் பணிப்பெண் பூமிக்கோவிடமிருந்து ஒரேமாதிரியான கடிதம் வந்தது:

"நான் உங்களுக்கு எலும்புகளை அனுப்பிவைத்துள்ளேன். அவை கடவுளின் எலும்புகள். என்னுடைய குழந்தை ஒன்றரை நாள் வாழ்ந்தது. பிறந்தது முதலே அதற்குக் கொஞ்சமும் சக்தியிருக்க வில்லை. செவிலிப்பெண் அதன் பாதங்களைப் பிடித்தபடி தலைகீழாகத் தொங்கவிட்டு உலுக்கியபோது நான் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அது வீலென்று அழ ஆரம்பித்தது. நேற்று மதியம், இரண்டு கொட்டாவிகளை வெளியேற்றி விட்டு அது இறந்து விட்டதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும், என் படுக்கையை அடுத்திருந்த கட்டிலில் பிறந்திருந்த குழந்தை அது ஏழாம் மாதத்திலேயே பிறந்து விட்டது என்றாலும் - பிறந்தவுடன் சிறுநீர் கழித்து அந்த இடத்திலேயே இறந்து விட்டது.

"குழந்தை யாருடைய சாயலிலும் இருக்கவில்லை. என் சாயல் அதனிடம் துளியும் காணப்படவில்லை. ஒரு அழகான பொம்மை போல் மட்டுமே இருந்தது அது உலகத்திலேயே மிக அழகான முகத்தைக் கொண்ட ஒரு குழந்தையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன்மேல் எவ்வித அடையாளங் காட்டத்தக்க குறிகளோ அல்லது குறைகளோ இருக்கவில்லை. கொழுகொழுக் கன்னங்களைக் கொண்டிருந்தது. அதனுடைய உதடுகள் மூடியிருந்தன. இறந்த பிறகு அவற்றின்மீது லேசாக சிறிது ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தது. அதைத் தவிர, எனக்கு வேறெதுவும் நினைவுக்கு வரவில்லை. அருமையான குழந்தை எவ்வளவு அழகான நிறம் என்று செவிலிப்பெண் அதை மிகவும் பாராட்டினாள்.

"அது ஒரு அதிர்ஷ்டங்கெட்ட குழந்தையாக விதிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில், வாழ்ந்திருந்தாலும்கூட நோஞ்சானாக இருந்திருக்கும் பட்சத்தில் அது என் பாலைக் குடிப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டது நல்லது என்றே நான் நினைத்துக் கொள்கிறேன். யாரையுமே ஒத்திராத சாயலோடு பிறந்த இந்தக் குழந்தைக்காக நான் அழுதேன். கருவிலிருந்த காலத்தில் இந்தக் குழந்தை அதனுடைய குழந்தை மனதில் நான் யார் சாயலிலும் இருக்க இயலாது என்று தனக்குத் தானே கூறிக் கொண்டிருந் திருக்க வேண்டும். அந்த வகையான ஒரு அவலமான சிந்தனை யோடு அது இந்த உலகத்திற்குள் வந்தது. மேலும், நான் யார் சாயலையும் ஒத்திருக்கத் தொடங்குமுன் இறந்து போக வேண்டியது அவசியம் என்று எண்ணியபடியே தான் அது இந்த உலகிலிருந்து வெளியேறியிருந்திருக்க வேண்டும்.

 "நீங்கள் - இல்லை, இன்னும் தெளிவாகச் சொல்வது உசிதம் - நீங்கள் எல்லோரும், நான் நூறு ஆண்களோடு படுத்திருந்தாலும், ஆயிரம் பேரோடு படுத்திருந்தாலும், தெருவிலுள்ள மரத்தாலான தளம் பாவும் கற்களின் எண்ணிக்கையை விட அதற்கு எந்த விதத்திலும் அதிக முக்கியத்துவம் இல்லை என்பது போல நீங்களெல்லோரும் எதுவும் - அறியாத பாவந்தாங்கிய முகங்களைத் தான் இதுவரை அணிந்து கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால், நான் கர்ப்பமானதும், கடவுளே நீங்களெல்லாம் அது குறித்து எத்தனை களேபரம் செய்தீர்கள். நீங்களெல்லோரும் கனவான்களே கனவான்கள் என்ற வார்த்தைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் அளவில் ஒரு பெண்ணின் ரகசியங்களைத் தோண்டித் துருவ ஆண்மைத்தனமாக பூத க்கண்ணாடியோடு வந்தீர்கள்.

"பூசாரி ஹாகுயின் - அது பழங்காலத்திலிருந்து வழங்கி வரும் கதைதான் என்றாலும் கல்யாணமாகாத பெண்ணின் குழந்தையைக் கையிலேந்தி, 'இது என் குழந்தை' என்று கூறினார். கடவுள் என்னுடைய குழந்தையையும் காப்பாற்றி விட்டார். கருவிலிருந்த குழந்தையிடம், தான் யார் சாயலை ஒத்திருப்பது என்று அது வருத்தத்தோடு சிந்தித்துக் கொண்டிருக்கையில், கடவுள் கூறினார்: 'என்னுடைய நேசத்திற்குரிய அன்பார்ந்த குழந்தையே என் சாயலை ஒத்திருப்பாயாக ஒரு கடவுளாகப் பிறந்திருப்பாயாக. ஏனெனில், நீ கடவுளின் குழந்தை'

"இந்தக் குழந்தையின் மனதை உடைக்கும் சிந்தனை காரணமாக உங்களில் யாரைப் போல் என் குழந்தை இருப்பதை நான் விரும் பினேன் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சொல்லவும் முடியவில்லை. எனவே அதன் சாம்பலில் உங்களெல்லோருக்கும் ஆளுக்கொரு பங்கு அனுப்பி வைத்துள்ளேன்."

அவசர அவசரமாக அந்தச் சிறிய வெள்ளைப் பொட்டலத்தைத் தனது காற்சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்ட அந்த நிர்வாக இயக்குநர் காருக்குள் அதைக் கபட நெஞ்சோடு திறந்து பார்த்தார். அலுவலகத்தை அடைந்த பிறகு தனது அழகான தட்டெழுத்துப் பணியாளரை வேலை நிமித்தம் உள்ளே அழைத்தவர் ஒரு சிகரெட் புகைக்கத் தீர்மானித்தார். காற்சட்டைப் பைக்குள் கையை விட்டதும் 'ஹாப்பி ஹிட்ஸ் கட்டோடு அந்த சாம்பல் பெட்டியும் வெளியே வந்தது.

சிற்றுண்டிச் சாலையின் உரிமையாளர், சாம்பலை வாசனை பிடித்தபடி, தனது பாதுகாப்புப் பெட்டகத்தில் அந்தப் பெட்டியை வைத்துவிட்டு, பின், வங்கிக்கு அனுப்பி வைப்பதற்காக முந்தைய நாள் ரசீதுகளை வெளியே எடுத்தார்.

மருத்துவ மாணவன் அரசாங்க ரயில் இருப்புப்பாதை வழியே பயணமாகிக் கொண்டிருந்தபோது, தள்ளு வண்டியின் குலுக்கலி னால் அவன்மீது விழுந்து அழுத்திய பள்ளி மாணவியொருத்தியின் தடித்த, பூ வெள்ளைத் தொடையினால் அவன் காற்சட்டைப் பைக்குள்ளிருந்த சாம்பல் பெட்டி அப்பளமாக நொறுங்கியது. 'இவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று தனக்குள் கூறிக் கொண்டான் அவன். வாழ்வுச்சூடு ததும்பிய வேட்கையொன்று அவனுக்குள் கிளர்ந்தெழுந்தது.

 திரைப்பட நடிகன், மீன்தோல்களும், ஸ்பானிய ஈக்களும் சேகரித்து வைத்திருந்த தனது ரகசியப் பணப்பைக்குள் அந்த சாம்பல் பொட்டலத்தை நுழைத்துவிட்டு அவசர அவசரமாகப் படப்பிடிப்புக்குச் சென்றான்.

ஒரு மாதம் கழித்து, கஸாஹரா ஸெய்ச்சி நீல நாரைக்கு வந்து யூமிக்கோவிடம் கூறினார்: "நீ அந்தச் சாம்பலை ஒரு கோயிலில் புதைத்துவிட வேண்டியது அவசியம். இன்னும் ஏன் அவற்றை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாய்?" "யார் நானா? எல்லா சாம்பலையும் உங்கள் எல்லோரிடமும் தந்து விட்டேன் நான் என்னிடம் எதற்கு அதை வைத்துக்கொள்ள வேண்டும்?"

மரணக் கவசம்

அவனுக்கு முன்னால் அவளுக்கு எத்தனை காதலர்கள் இருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், எப்படியும் அவன்தான் அவளுடைய கடைசிக் காதலன் என்பது வெளிப்படை ஏனெனில் ஏற்கனவே மரணம் அவளை அணுகிக்கொண்டிருந்தது.

"இத்தனை சீக்கிரமே இறந்து விடுவேன் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நானும் அந்த சமயத்திலேயே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்பியிருந்திருப்பேன்." ஒளிரச் சிரித்தாள் அவள். அவன் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாலும், அவளுடைய கண்களிலிருந்த பார்வை, அவள்

இதழ் 2 / 2002 : 47
படிப்பகம்
________________

padippakam
வாழ்க்கையில் எதிர்ப்பட்ட ஏராளமான ஆண்களை அவள் மனதிற்குள் திரும்ப வரவழைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றச் செய்தது.

அவளுடைய முடிவு எந்தக் கணமும் நிகழ்ந்துவிடலாம் என்ற நிலையிலும்கூட அவளால் தன்னுடைய அழகை மறக்க முடிய வில்லை. அப்படியே தன்னுடைய அநேக காதல்களையும் மறக்க முடியவில்லை. அந்த ஞாபகங்கள் அவளைத் தற்போது வேதனை கூடிய தோற்றத்துக்கு ஆளாக்குவதை அவள் உணரவில்லை.

"அந்த ஆண்கள் எல்லோருமே என்னைக் கொன்றுவிட விரும்பினார்கள். அப்படி அவர்கள் வெளிப்படையாகச் சொல்ல வில்லையென்றாலும்கூட அவர்களுடைய மனங்களில் அப்படிப் பட்ட விருப்பம் இருந்தது."

அவளைத் தற்போது கையில் தாங்கிக்கொண்டிருந்த மனிதன், அவள் அப்போது இறந்துவிடப் போகிறாள் என்பதால், தான் அவளை இன்னொருவனிடம் இழந்து விடுவோம் என்ற கவலையோ, கிலேசமோ இல்லாமல் இருந்தான். எனவே, அவள் கைவிட்டுப் போய் விடுவாளோ என்ற கிலியால் அலைக்கழிக்கப்பட்ட அவளுடைய இதயத்தைத் தனக்கே தனக்காய் எப்போதும் தக்க வைத்துக்கொள்ள அவளைக் கொன்றாலொழிய வேறு எப்படியும் இயலாது என்பதை நன்குணர்ந்தவர்களாய் நிச்சயமின்மையால் பீடிக்கப்பட்டிருந்த அவளுடைய முந்தைய காதலர்களோடு ஒப்பிடும்போது, அவன் அதிர்ஷ்டம் செய்தவனாக இருக்கலாம். ஆனால், அவளைத் தாங்கிக் கொண்டிருப்பதில் அவனுக்குக் களைப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் எப்போதுமே தீவிரமாகக் காதலைத் துரத்தித் தேடினாள். நோய்வாய்ப்பட்ட பிறகும்கூட ஒரு ஆணின் கரங்களைத் தனது தோளைச் சுற்றியோ அல்லது மார்பகத்தின் மீதோ உணர முடிந்தாலொழிய அவளால் அமைதியாகத் தூங்க முடியவில்லை.

"என் பாதங்களைப் பிடித்துக்கொள். என்னுடைய கால்கள் மிகவும் தனிமையாக இருக்கின்றன. என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை."

ஏதோ மரணம் அவளுடைய கால்விரல் நுனிகளின் வழியாக மெதுமெதுவே ஊர்ந்து மேலேறிக் கொண்டிருப்பதைப் போல அவளுடைய கால்கள் தனிமையாக உணர்ந்தன. அவன் அவளுடைய படுக்கையின் கால்மாட்டில் அமர்ந்துகொண்டு அவளுடைய பாதங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். அவை சாவைப் போன்று குளிர்ந்திருந்தன. பின், எதிர்பாராமல் அவனுடைய கைகள் வினோதமான வகையில் நடுங்கின. அந்தச் சிறிய கால்களினூடாய் அடிநாதமான உயிர்ப்பு கூடிய பெண்ணை அவனால் கண்டுணர முடிந்தது. சிறிய, குளிர்ந்த பாதங்கள், அவை கதகதப்பாகவும், வியர்வைப் பிசுபிசுப்போடும் இருந்தபோது அவன் அந்தப் பாதங்களின் உட்பகுதிகளைத் தொட்டுணர்ந்தபோது கிடைத்த அதேயளவான சந்தோஷத்தைத் தந்தன. அவளுடைய மரணத்தின் புனிதத்தை மாசுபடுத்துவதான இந்த உணர்வு குறித்து அவனுக்கு அவமானமாயிருந்தது. ஆனால், அவன் தனது பாதங் களைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவள் விடுத்த வேண்டுகோள் காதல் சூழ்ச்சிகளுக்கான அவளுடைய கடைசிப் புகலிடமோ என்ற எண்ணம் ஏற்பட்டபோது, அவளுடைய இழிந்த பெண்மை குறித்து அவனுக்குள் அச்சம் பரவத் தொடங்கியது.

"இனி பொறாமைக்கு இடமில்லை என்பதால் நம்முடைய காதலில் ஏதோ ஒன்று விடுபட்டுப் போயிருப்பதாய் உன்னுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நான் இறந்துபோன பின்பும் உன்னுடைய பொறாமையின் விதை முளைக்கும்.

நிச்சயமாக, எங்கிருந்தாவது தோன்றும்" என்று கூறினாள் அவள். பின், தன் இறுதி மூச்சை விட்டாள்.

அவள் சொன்னவாறே நடந்தது.

புதிய நாடக அரங்கிலிருந்த ஒரு நடிகன் விடிகாலையில் வந்து அவள் முகத்திற்கு ஏதோ அவள் அவனோடு காதல் வயப்பட்டிருந்த சமயத்தில் அவளிடம் குடிகொண்டிருந்த அந்த புத்தம் புதிய, உயிர்ப்பார்ந்த அழகை புனருத்தாரணம் செய்வது போல் ஒப்பனை செய்தான்.

சற்று நேரம் கழித்து ஒரு கலைஞன் வந்து அவள் முகத்திற்கு சாந்து பூசினான். முன்னதாக அந்த நடிகன் அந்தப் பெண்ணின் முகத்தில் செய்திருந்த ஒப்பனை அவள் முகத்தை மிகவும் உயிர்ப்பு கூடியதாகத் தோன்றச் செய்திருந்ததில் அந்த நடிகன் மீதான பொறாமையில் இந்தக் கலைஞன் சாந்துப் பூச்சால் அவளை மூச்சுத் திணற வைப்பதாகத் தோன்றியது.

அந்தப் பெண்ணைச் சூழ்ந்திருந்த காதல் போர்கள் அவளுடைய மரணத்தோடு முற்றுப் பெறவில்லை என்பதைக் கண்டதில் அவள் தன்னுடைய கைகளில் இறந்து போனாள் என்பதுகூட ஒரு கண நேர வெறுமை கூடிய வெற்றி மட்டுமே என்ற உண்மை அந்த மனிதனுக்கு உறைத்தது. அவன் அந்தக் கலைஞனிடமிருந்து மரணக் கவசத்தை எடுத்துக் கொண்டு வர அவனுடைய இடத்திற்குப் போன போது இதைப் பற்றித் தீவிரமாக சிந்தித்துக் கொண்டேயிருந்தான்.

ஆனால், அந்த மரண முகமூடி ஒரு பெண்ணைப் போலவும் இருந்தது. அதேசமயம் ஒரு ஆணைப் போலவும் இருந்தது. அது ஒரு யுவதியைப் போலவும் இருந்தது. அதேசமயம் ஒரு மூதாட்டியைப் போலவும் இருந்தது. அந்த மனிதனின் குரல் ஏதோ அவனுடைய நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நெருப்பு அணைந்து விட்டதைப் போல் ஒலித்தது. "இது அவள்தான். ஆனாலும் அவளல்ல. முதலில், இது ஆணா, பெண்ணா என்றே என்னால் கூற முடியாமல் இருக்கிறது."

"அது சரிதான்." கலைஞன், துயரே வடிவான முகத்துடன் பேசினான். "இறந்தது யாரென்று தெரியாத நிலையில் நாம் ஒரு மரணக் கவசத்தைப் பார்ப்போமானால் பொதுவாக நம்மால் இறந்தவரின் பால் இன்னதென்று கூறமுடியாது. உதாரணமாக, பீத்தோவனுடைய தீட்சண்யம் வாய்ந்த முகம்கூட அவருடைய மரண முகமூடியை நாம் உற்று நோக்கும்போது ஒரு பெண்ணின் முகம் போல் காட்சியளிக்க ஆரம்பிக்கிறது. இருந்தாலும், இவளைப் போன்ற பரிபூரணப் பெண்ணின் மரணக் கவசம் பெண்மை கூடி இருக்குமென்று நினைத்தேன். இவளைவிட அதிகம் பெண்மை ததும்பும் பெண் வேறு யாருமே கிடையாதே. ஆனால், இவளுடைய மரணக்கவசமும் மற்றவற்றைப் போலத்தான் இருக்கிறது. இவளால் மரணத்தை வெல்ல முடியவில்லை. பால் சார்ந்த பாகுபாடு மரணத்தோடு முற்றுப்பெறுகிறது."

"அவளுடைய மொத்த வாழ்க்கையும் பெண்ணாக இருக்கின்ற சந்தோஷத்தின் சோக நாடகமாகவே இருந்தது. கடைசித் தருணம் வரை, அவள் அளப்பரிய பெண்ணாகவே இருந்தாள். அவன் ஏதோ ஒரு கெட்ட கனவு மறைந்து விட்டதைப் போன்று தன்னுடைய கையை வெளியே நீட்டினான். "அவள் இறுதியில் ஒரு வழியாக அந்த சோகத்திலிருந்து மீண்டு விட்டாளென்றால் நாம் இப்போது, பெண்ணை ஆணிலிருந்து பிரித்தறிய முடியாத இந்த மரணக்கவசத்தின் முன்னிலையில் கைகுலுக்கிக் கொள்ளலாம்."
படிப்பகம்
________________

padippakam

அமரத்துவம்

ஒரு வயோதிகரும் ஒரு இளம் பெண்ணும் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர்.

 அவர்களிருவர் தொடர்பாகவும் ஆர்வக் குறுகுறுப்பைத் தூண்டும் விஷயங்கள் நிறையவே இருந்தன. இருவரும் தங்களுக் கிடையேயான அறுபது வயது வித்தியாசத்தை உணராதவர்களாய், அத்யந்தக் காதலர்கள் போல் நெருக்கமாக இணைந்து நடந்து கொண்டிருந்தனர். வயோதிகருக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. பெண் கூறியதில் பெரும்பாலானவற்றை அவரால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் பெண் பழுப்புச் சிவப்பு நிறத்திலான ஹகாமாவும், அதனோடு அம்பு வடிவிலான ஊதாவும் வெள்ளையும் சேர்ந்த அருமையான கிமோனோவும் அணிந் திருந்தாள். அவளுடைய உடையின் சட்டைக்கைகள் அதிக நீளமாக இருந்தன. அந்த வயோதிகரின் ஆடைகள் அரிசி வயலிலிருந்து களைகளைப் பிடுங்கும் வேலையில் ஈடுபடும்போது பெண்கள் அணியக்கூடிய உடைகளை ஒத்திருந்தன. ஆனால், கித்தானிலான முழங்கால் சராய்கள் மட்டும் இல்லை. அவருடைய இறுக்கமான கைச்சட்டைகளும், கணுக்காலில் குவிந்திருந்த கால்சராயும் ஒரு பெண்ணின் ஆடைகளைப் போல் காணப்பட்டன. அவருடைய துணிகள் அவருடைய மெல்லிய இடுப்பில் தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்தன.

அவர்கள் ஒரு புல்வெளியினூடாக நடந்தார்கள். அவர்களின் முன்னால் ஒரு உயரமான கம்பிவலை நின்று கொண்டிருந்தது. தாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அதில் இடித்துக் கொள்வோம் என்பதை அந்தக் காதலர்கள் கவனித்ததாகவே தெரிய வில்லை. அவர்கள் நிற்கவில்லை. மாறாக, தொடர்ந்து முன்னேறி அந்தக் கம்பி வலைக்குள்ளாக, அதனுடாக ஒரு வசந்தத்தென்றல் வீசுவது போல் வெகு இயல்பாக ஊடுருவி நடந்து சென்றார்கள்.

 அவ்வாறு கம்பி வலையினூடாக அவர்கள் கடந்து சென்ற பிறகு பெண் அந்த வலையைக் கவனித்தாள். "ஹோ" என்றபடி அவள் வயோதிகரை ஏறிட்டு நோக்கினாள். "விண்டாரோ, நீங்களும் அந்த வலைக்குள்ளாக ஊடுருவி வந்தீர்களா?"

 வயோதிகருக்கு அவள் கூறியது கேட்கவில்லை. ஆனால் அவர் அந்தக் கம்பி வலையை இறுகப் பற்றினார். "தேவடியாப்பய மகனே. தேவடியாப்பய மகனே" என்று கூறியவாறே அதைப் பிடித்து உலுக்கினார். அந்தக் கம்பி வலையை அவர் மிக வேகமாகப் பிடித்து இழுக்க, மறுகணம் அந்தப் பெரிய வலை அவரிடமிருந்து அப்பால் சென்றது. அந்த வயோதிகர் நிலை தடுமாறி அதைப் பிடித்தவாறே கீழே விழுந்தார்.

"பார்த்து. பார்த்து ஷிண்டாரோ! என்ன நடந்தது?" பெண் தன்னுடைய கைகளை அவருடைய தோளைச் சுற்றிப் போட்டு அவரை மெதுவாக மேலே நிமிர்த்தினாள்.

 "அந்த வலையை விடு. ஹோ, நீ மிகவும் இளைத்துவிட்டாய்" என்றாள் பெண். வயோதிகர் ஒருவழியாய் எழுந்து நின்றார். பேசும்போது அவருக்கு மூச்சு வாங்கியது. "நன்றி" மறுபடியும் அந்த வலையைப் பிடித்துக் கொண்டார். என்றாலும், இந்த முறை ஒரு கையால் மட்டும் இலேசாகப் பிடித்துக் கொண்டார். பின், காது கேளாதவர் களின் உரத்த தொனியில், "ஒரு காலத்தில் ஒவ்வொரு நாளும் நான் பந்துகளைக் கீழேயிருந்து எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிலை.பதினேழு நீண்ட வருடங்கள் அதைச் செய்து கொண்டிருந்தேன்."

"பதினேழு வருடங்கள் நீண்ட காலமா? அது குறுகியதுதான்."

இதழ் 2 / 2002 : 49
படிப்பகம்
________________

padippakam
"அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் பந்துகளை அடித்துத் தள்ளுவார்கள். பந்துகள் கம்பிவலையை அடித்துவிட்டதென்றால் அவர்கள் தாங்க முடியாத கூச்சலை எழுப்புவார்கள். அந்தச் சூழ்நிலைக்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் வரை, அந்த சப்தத்தைக் கேட்டு பயந்து பின்வாங்குவேன் நான். அந்தப் பந்துகளின் சப்தத்தால்தான் நான் செவிடாகி விட்டேன்."

கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் பந்துச் சிறுவர்களைப் பாதுகாக்க என்றமைந்த ஒரு உலோக வலை அது. பந்து பொறுக்கும் சிறுவர்கள் அதை முன்னாடியும் பின்னாடியும் இடப் பக்கமும் வலப்பக்கமும் நகர்த்துவதற்குத் தோதாக இரும்பு வலையின் அடிப்பக்கத்தில் சக்கரங்கள் இருந்தன. அதனை அடுத்திருந்த கோல்ஃப் விளையாட்டுக் களமும், பந்துகளின் வீச்சுப் பரப்பும் சில மரங்களால் பிரிக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் அனைத்து வகையான மரங்களையும் கொண்ட தோப்பாக அந்த இடம் இருந்து வந்திருக்கிறது. ஆனாலும், அவையெல்லாம் வெட்டப் பட்டு ஒழுங்கற்ற வரிசையிலான மரங்கள் மட்டுமே எஞ்சின.

அவர்கள் இருவரும் கம்பிவலை அவர்களுக்குப் பின்னால் செல்ல, தொடர்ந்து நடந்தார்கள்.

"சமுத்திரத்தின் ஒசையைக் கேட்பது எத்தனை இனிமையான ஞாபகங்களைத் திரும்பக் கொண்டு வருகிறது."

இந்த வார்த்தைகளை வயோதிகர் கேட்க வேண்டும் என்று விரும்பியவளாய் பெண் தன் வாயை அவர் காதருகே வைத்துப் பேசினாள்."என்னால் சமுத்திரத்தின் ஒசையைக் கேட்க முடிகிறது."

"என்ன வயோதிகர் தனது கண்களை மூடிக் கொண்டார். ஹா, மிஸாகோ, அது உன்னுடைய இனிய மூச்சு பல காலம் முன்னால் இருந்ததைப் போலவே அதே இனிமையோடு இருக்கிறது"

"சமுத்திரம். நீ சமுத்திரம் என்றா சொன்னாய் பிரியமான ஞாபகங்கள்? நீ உன்னை மூழ்கடித்துக் கொண்ட இடமான சமுத்திரம் எனக்கு எப்படி இனிமையான ஞாபகங்களைத் திரும்பக் கொண்டு வர முடியும்?"

"ஆனால், அது கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை. ஐம்பத்தைந்து வருடத்தில் இப்போதுதான் நான் முதன்முறையாக என்னுடைய சொந்தமண்ணுக்குத் திரும்பி வந்திருக்கிறேன். மேலும், நீயும் கூட இங்கே வந்திருக்கிறாய். இது ஞாபகங்களை திரும்பக் கொண்டு வந்து தருகிறது. வயோதிகரால் அவள் கூறுவதைக் கேட்க இயலவில்லை. ஆனால், அவள் தொடர்ந்து பேசினாள். "நான் என்னை மூழ்கடித்துக் கொண்டேனென்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் அந்த விதத்தில் உன்னைப் பற்றி என்னால் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க முடியும் - நான் மூழ்கிக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் செய்து கொண்டிருந்தது போலவே. தவிர, எனக்கிருக்கும் ஞாபகங்கள், திரும்பிப் பார்த்தல்கள் எல்லாமே என்னுடைய பதினெட்டு வயது வரைக்குமானவைதான். உனக்கும் அப்படித்தான். நான் என்னை மூழ்கடித்துக் கொள்ளாமல் இப்போது உன்னைப் பார்க்க இந்தக் கிராமத்திற்கு வந்திருப்பேன் என்றால் நான் ஒரு கிழவியாக இருந்திருப்பேன். அந்த நினைப்பையே சகிக்க முடியவில்லை. நீ அப்படியொரு கோலத்தில் என்னைப் பார்ப்பதை நான் விரும்ப மாட்டேன்."

வயோதிகர் பேசினார். காது கேளாத மனிதனின் தனிமொழி அது: "நான் டோக்கியோவுக்குப் போய் அங்கேயும் தோற்றுப் போனேன். இப்போது, முதுமையில் தளர்வடைந்து, கிராமத்திற்குத் திரும்பி வந்திருக்கிறேன். நாங்கள் பிரியும்படி நிர்ப்பந்திக்கப் பட்டதற்காய் வருந்திய பெண்ணொருத்தி அங்கே இருந்தாள். அவள் தன்னை சமுத்திரத்தில் மூழ்கடித்துக் கொண்டாள். எனவே, கடலைப் பார்த்தபடியிருந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் வேலை கேட்டேன். என்மீது பரிதாபப்பட்டாவது எனக்கு அந்த வேலை வாய்ப்பைத் தரும்படி அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்."

"நாம் இப்போது நடந்துகொண்டிருக்கும் இந்தப் பகுதி உங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான காட்டுப்பகுதியாக இருந்தது."

 "பந்துகளை பொறுக்கித் தருவதைத் தவிர்த்து என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. எல்லா நேரமும் குனிந்து குனிந்து என்னுடைய முதுகு எப்போதும் வலித்துக் கொண்டிருக்கும் படியாகியது. ஆனால், எனக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட பெண் அங்கே இருக்கிறாள். அந்தக் குன்று உச்சிகள் எனக்குப் பக்கத்தில்தான் இருந்தன என்பதால் என் கால்களில் தள்ளாட்டமிருந்தாலும் என்னால் குதிக்க முடியும். அப்படித்தான் நான் நினைத்தேன்."

"கூடாது. நீ தொடர்ந்து வாழ வேண்டும். நீ இறந்து போவாயானால் பின் என்னை நினைவு கூர்பவர் என்று யாருமே இந்த பூமியில் இருக்க மாட்டார்கள். நான் முழுமையாக இறந்து போய் விடுவேன்" பெண் அவரை இறுகப் பிடித்துக் கொண்டாள். வயோதிகரால் அவள் கூறுவதைக் கேட்க இயலவில்லை. ஆனால் அவர் அவளைத் தழுவிக்கொண்டார்.

"அதுதான் சரி. இருவருமாக இறந்து விடுவோம். இந்த முறை. நீ எனக்காக வந்தாய். அப்படித்தானே?"

"இணைந்தா? ஆனால், நீ வாழ வேண்டும். எனக்காக வாழத்தான் வேண்டும். விண்டாரோ" - அவள் அவருடைய தோளுக்கு மேலாய் பார்வையைச் செலுத்தியபோது மூச்சுத் திணறியது அவளுக்கு "ஹோ, அந்தப் பெரிய மரங்கள் இன்னமும் அங்கே இருக்கின்றன. மூன்றுமே. நெடுங்காலத்திற்கு முன்பிருந்தது போலவே பெண் கட்டிக்காட்ட வயோதிகர் தன்னுடைய விழிகளை அந்த மரங்களை நோக்கித் திருப்பினார்.

"கோல்ஃப்காரர்களுக்கு அந்த மரங்களைக் கண்டால் பயம். அவர்கள் அந்த மரங்களை வெட்டி விடும்படி கூறிக் கொண்டே யிருக்கிறார்கள். பந்தை அடித்தால் அது ஏதோ அந்த மரங்களின் அமானுஷ்ய சக்தியால் உறிஞ்சப்பட்டது போல் வலப்பக்கமாக வளைந்து சென்று விடுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்."

"இந்த கோல்ஃப்காரர்கள் உரிய நேரத்தில் இறந்துபோய் விடுவார்கள் - இந்த மரங்களுக்கு வெகுகாலம் முன்பாகவே இந்த மரங்களுக்கு ஏற்கனவே பலநூறு வயதாகி விட்டது. அந்த கோல்ஃப்காரர்கள் அப்படிப் பேசுகிறார்களேயொழிய அவர்கள் மனித வாழ்க்கையின் கால அளவு பற்றிப் புரிந்துகொள்ளவில்லை" என்றாள் அந்தப் பெண்.

 "அவையெல்லாம் என்னுடைய முன்னோர்கள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்துப் பராமரித்து வந்த மரங்கள். எனவே நிலத்தை விற்றபோது மரங்களை விற்க மாட்டேன்' என்று வாங்கியவர்களிடமிருந்து சத்தியம் வாங்கிக் கொண்டேன்."

"சரி, நாம் போகலாம்," பெண் வயோதிகரின் கையைப் பற்றியிழுத்தாள். அவர்களிருவரும் அந்த பிரம்மாண்டமான மரங்களை நோக்கித் தட்டுத் தடுமாறி நடந்தனர்.

 பெண் மரத்தின் உடற்பாகத்தினூடாய் எளிதாகக் கடந்து சென்றாள். வயோதிகரும் அப்படியே செய்தார்.

 "என்ன?" பெண் வயோதிகரை வியப்பும் திகைப்புமாக வெறித்துப் பார்த்தாள். "நீயும் இறந்து போய்விட்டாயா, ஷிண்டாரோ? அப்படியா? எப்போது இறந்து போனாய் நீ?"

அவர் பதிலுரைக்கவில்லை.

"நீ இறந்து போய்விட்டாய். அப்படித்தானே? இறந்தோர் உலகத்தில் நான் உன்னை சந்திக்காதது எத்தனை விசித்திரம் சரி,
படிப்பகம்
________________

நீ உயிரோடிருக்கிறாயா அல்லது இறந்து விட்டாயா என்பதைப் பரிட்சித்துப் பார்க்க மீண்டும் ஒருமுறை அந்த மரத்தினுடாய் செல் பார்க்கலாம். நீ இறந்து விட்டவன்தான் என்றால் நாம் இருவரும் மரத்திற்குள் சென்று அங்கேயே தங்கலாம்."

அவர்கள் அந்த மரத்தினுள் மறைந்து போனார்கள். வயோதிகரோ அல்லது இளம்பெண்ணோ மீண்டும் காட்சி அளிக்கவேயில்லை.

மாலையின் நிறம் அந்த பிரம்மாண்ட மரங்களுக்குப் பின்னால் இருந்த சிறிய மரக்கன்றுகள் மீதாய் நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. அப்பாலிருந்த ஆகாயம், சமுத்திரம் ஒசையெழுப்பிய இடத்தில் மங்கலான சிவப்பு நிறமாகியது.
******

பனி


கடந்த நான்கைந்து வருடங்களாக நோதா சாங்கிச்சி ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் மாலையிலிருந்து மூன்றாம் நாள் காலை வரை தன்னை டோக்கியோவின் உயரமாக எழுந்து நிற்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டு வந்தார். அந்த ஹோட்டலுக்கென்று கம்பீரமான பெயர் ஒன்று இருந்தபோதிலும் சாங்கிச்சி அதற்குத் தந்திருந்த பெயர் கனவு விடுதி!

 "அப்பா கனவு விடுதிக்குச் சென்றிருக்கிறார்" - அவர்கள் வீட்டிற்கு வருகைதரும் புது வருட விருந்தாளிகளிடம் அவருடைய மகனோ, மகளோ அப்படித்தான் கூறுவார்கள். சாங்கிச்சி எங்கே சென்றிருக்கிறார் என்ற உண்மையான விவரங்களை மூடி மறைப்பதற்காக உதிர்க்கப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு என்று அதை விருந்தினர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

"அது ஒரு நல்ல இடம் அவர் அங்கே புது வருடப் பிறப்பை ஆனந்தமாக இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பார்." விருந்தினர்களில் சிலர் இப்படிக்கூடக் கூறியதுண்டு.

என்றாலும் கனவு விடுதியில் உண்மையான கனவுகளை சாங்கிச்சி கண்டு வந்தார் என்பதை சாங்கிச்சியின் குடும்பம்கூட அறியாது.

ஹோட்டலிலிருந்த அவர் அறை ஒவ்வொரு வருடமும் அதே அறையாகத்தான் இருந்தது. பனி அறைதான் அது. அது எந்தஅறையாக இருந்தாலும் தான் அதை எப்போதுமே பணி அறை என்று அழைத்து வந்ததும் சாங்கிச்சிக்கு மட்டுமே தெரியும். ஹோட்டலை வந்தடைந்ததும் அவர் அறையின் திரைச்சீலை களை இழுத்துவிட்டு உடனடியாகப் படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்டு கண்களை மூடிக் கொள்வார். இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாக அப்படியே படுத்திருப்பார். பரபரப்பான, அலைச்சலும் உளைச்சலும் நிறைந்த வருடத்தின் எரிச்சலிலிருந்தும் அயர்விலிருந்தும் அவர் ஒய்வு தேடுகிறார் என்பது உண்மைதான் என்றாலும் அத்தகைய எரிச்சலூட்டும் அயர்வு போன பிறகும் அதைவிட ஆழமான களைப்பு அவருக்குள் நிறைந்து பரவும். இதைப் புரிந்து கொண்டவராய், சாங்கிச்சி தன்னுடைய களைப்பு அதன் முழு வீச்சையும் எட்டுவதற்காகக் காத்திருந்தார். அப்படி அந்தக் களைப்பின் அடியாழத்திற்கு அவர் இழுத்துப் போடப் பட்டதும், அதன் தாக்கத்தில் அவருடைய தலை உணர்வற்றுப் போன நிலையில் அந்தக் கனவு மெதுவாக மேற்பரப்பு நோக்கி மேலெழுந்து வரத் தொடங்கும்.

அவருடைய கண்ணிமைகளுக்குப் பின்னாலான அந்தகாரத்தில், சின்னச் சின்னத் தினையளவு நுண்தணிகளாக ஒளி நடனமாடிப் பாய்ந்து வர ஆரம்பிக்கும். அந்த நுண்மணிகள், ஊடுருவித் தெரியும் படியான வெளிர் பொன்னிறத்தில் இருந்தன. அவற்றின் நிறம்
இதழ் 2 / 2002 : 51
படிப்பகம்
________________

padippakam
மங்கிய வெண்மைக்குக் குளிர்ந்ததும் அவை எல்லாம் ஒரே திசையில் ஒரேயளவான வேகத்தில் பெருகியோடும் பனிச் சீவல் களாக மாறும் அவை தொலைவில் துகள் சீவல்களாகப் பொழிந்து கொண்டிருக்கும்.

 "இந்தப் புதுவருடமும் பணி வந்தாகி விட்டது." இந்த நினைப் புடன் பனி சாங்கிச்சிக்கு சொந்தமாகிப் போகும். அது சாங்கிச்சியின் மனதில் பொழிந்து கொண்டிருந்தது.

அவருடைய மூடிய கண்களின் இருளில் பனி அவரை இன்னும் நெருங்கி வந்தது. அடர்த்தியாகவும் வேகமாகவும் பொழிந்த வண்ணம் இருந்த அது கருஞ்சிவப்பு நிறத்தாலான ஒரு வகைத் தோட்டப் பூவான பியோனி பூம்பனிச்சீவல்களாக மாறின. பெரிய பூவிதழ் போன்ற பணிச்சீவல்கள். துகள்பனிச் சீவல்களை விட அதிக நிதானமாக விழுந்தன. மெளனமான நிதானமான பனிப்பிரளயம் சாங்கிச்சியை முற்றிலுமாகச் சூழ்ந்து கொண்டது.

இப்போது அவர் கண்களைத் திறந்துகொள்ளலாம்.

சாங்கிச்சி தனது கண்களைத் திறந்ததும் அறையின் கவர் ஒரு பனிக்காட்சியாகியிருந்தது. அவருடைய கண்ணிமைகளுக்குப் பின்னால் அவர் கண்டதெல்லாம் பனி பொழிந்து கொண்டிருப்பது மட்டுமே சுவரின் மீது அவர் பார்த்ததோ பணி விழுந்துவிட்டிருந்த ஒரு நிலக்காட்சி

வெறும் ஐந்தாறு பட்டமரங்கள் மட்டுமே நின்று கொண்டிருந்த ஒரு விரிந்தகன்ற வயலில் பியோனி பூம்பனிச் சீவல்கள் பொழிந்து கொண்டிருந்தன. பனி அதிக உயரமாக மேலெழுந்து அலைந்த போது பூமியும் சரி, புல்லும் சரி கண்களுக்குத் தென்படாமல் போயிற்று. அங்கே வீடுகளே இல்லை. மனிதத் தடயம் எதுவுமே இல்லை. அது வெகு தனிமையான காட்சி என்றாலும், மின்சார உதவியோடு சூடேற்றப்பட்ட படுக்கையிலிருந்த சாங்கிச்சி பனி வயலின் குளிர்வை உணரவில்லை. பனிப்பொழிவு நிலக்காட்சி மட்டுமே அங்கே இருந்தது. சாங்கிச்சி அங்கே இருக்கவில்லை.

"நான் எங்கே போவது? யாரை அழைப்பது?" என்ற எண்ணம் அவருள் எழுந்தபோது, அது அவருடையதல்ல. அந்தப் பணியின் குரல் அது.

பொழிந்து கொண்டிருக்கும் பனியைத் தவிர வேறெதுவும் அசையாத அந்தப் பனிவெளி மெதுவாக விலகியோடி ஒரு மலைக்கணவாய்ப் பகுதி இயற்கைக்காட்சிக்கு இடம் பெயர்ந்தது. அதன் மறுகோடியில் மலை உயரமாக மேலெழுந்திருந்தது. அதன் அடிப்பகுதியில் ஒரு நீரோடை வளையமிட்டிருந்தது. அந்தக் குறுகலான நீரோடை பனியால் மூச்சடைத்திருப்பதுபோல் தென்பட்டாலும் அது சிற்றலை ஏதுமின்றி ஒடிக்கொண்டிருந்தது. கரையிலிருந்து அதில் விழுந்திருந்த பனித்திரள் ஒன்று கூடவே மிதந்து கொண்டிருந்தது. நீர்ச்சுழலுக்கு வெளியே துருத்தி நின்ற பாறையொன்றினால் அது துருத்தி நிறுத்தப்பட்டதில், நீருக்குள் உருகிக் கலந்தது.

அந்தப் பாறை பிரம்மாண்டமான ஊதாவண்ணப் படிகக் கல்திரளாய் இருந்தது. அந்தப் படிகப் பாறையின் உச்சியில் சாங்கிச்சியின் தந்தை தோன்றினார். அவருடைய தந்தை மூன்று அல்லது நான்கு வயதான சாங்கிச்சியைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டிருந்தார்.

"அப்பா, இது அபாயகரமானது. இப்படியான கூர்த்த குத்து முனைப் பாறைமீது நின்று கொண்டிருப்பது உங்கள் குதிகால்கள் வலிக்கும். ஐம்பத்திநான்கு வயதான சாங்கிச்சிபடுக்கையிலிருந்தபடியே அந்தப் பணிநிறை நிலத்திலிருந்த தனது தந்தையிடம் பேசினார்.

பாறையின் முனை, எந்த நேரமும் அப்பாவின் பாதங்களைத் தங்களால் குத்திக் கிழித்துவிட முடியும் என்பது போல் காட்சியளித்த கூர்முனை ஊதாப் படிகங்களடங்கிய தொகுதியாயிருந்தது. சாங்கிச்சி யின் வார்த்தைகளைக் கேட்டதும் அவருடைய தந்தை கால்களை நன்றாகப் பதித்துக் கொள்ளும் பொருட்டு தன்னுடைய உடல் கனத்தை மற்றொரு காலுக்கு மாற்றினார் அப்படிச் செய்ததும், பாறையின் உச்சியிலிருந்து பனி நொறுங்கி நீரோடைக்குள் விழுந்தது. அதனால் அச்சுறுத்தப்பட்டோ என்னவோ சாங்கிச்சியின் தந்தை அவனை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார்.

"இவ்வளவு பனியில் இந்தச் சின்ன நீரோடை புதையுண்டு போகாதது விந்தையாயிருக்கிறது" என்று அவருடைய தந்தை கூறினார்.

தந்தையின் தலையிலும் தோள்களிலும் மற்றும் சாங்கிச்சியைப் பிடித்துக் கொண்டிருந்த அவருடைய கரங்களின்மீதும் பணி படர்ந்திருந்தது.

கவரின் மீதிருந்த பனிக்காட்சி மாறி வந்தவாறே நீரோடையின் எதிர்ப்புறமாய் நகர்கிறது. ஒரு ஏரி கண்ணின் பார்வைப்பரப்பிற்குள் வருகிறது. மலைகளின் அடியாழங்களிலுள்ள சின்ன ஏரி அது. என்றாலும், ஒரு குறுகலான சிறிய நீரோடையின் பிறப்பிடம் என்ற அளவில் அது மிகப் பெரிதாகத் தோன்றியது. தொலைதூரமாயிருந்த பியோனி பூம்பனிச்சீவல்கள் ஒருவகை சாம்பல் நிறம் பூண்டன. தொலைவில் அடர்மேகங்கள் கவிந்திருந்தன. தொலைதூரக் கரை யிலான மலைகள் தெளிவாக அடையாளம் தெரியாதபடியிருந்தன.

சாங்கிச்சி சிறிது நேரம் ஒரே சீராகப் பொழிந்து கொண்டிருக்கும் பியோனி பூம்பனிச் சீவல்களையே. அவை ஏரியின் மேற்பரப்பிற்குள் உருகி மறைவதையே பார்த்துக் கொண்டிருந்தார். தொலைதூரக் கரையிலான மலைகள் மீது ஏதோ நகர்ந்து கொண்டிருந்தது. சாம்பல் வானின் வழியாக அது நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. அது ஒரு பறவைக் கூட்டம். அவை அற்புதமான பனி வண்ண இறக்கைகளைக் கொண்டிருந்தன - ஏதோ பணியே அவற்றின் இறக்கைகளாகி விட்டது போல, அவை சாங்கிச்சியின் கண்களைத் தாண்டிப் பறந்தபோதிலும் சிறகடிப்பொலி சற்றும் எழவில்லை. அவற்றின் சிறகுகள் மெளனமான, மெதுவான அலை களுக்குள் நீட்டிக்கப்பட்டனவோ? பொழிந்து கொண்டிருக்கும் பனிதான் அந்தப் பறவைகளை மேலுயர்த்திப் பிடித்திருக்கிறதோ?

அவர் அந்தப் பறவைகளை எண்ணிப் பார்க்க முயன்றபோது அங்கே ஏழு. பதினொன்று. அவருக்கு எண்ணிக்கை மறந்து போயிற்று. ஆனால், அதை சாங்கிச்சி ஆனந்தமாகத்தான் உணர்ந்தாரே தவிர ஒரு புரியாப் புதிராக பாவிக்கவில்லை.

"அவை என்ன பறவைகள்? அந்த இறக்கைகள் என்ன?"

"நாங்கள் பறவைகளல்ல. இறக்கைகளின் மேல் யார் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வில்லையா?" - பனிப்பறவைகளில் ஒன்றன் குரல் பதிலளித்தது.

"ஹா, அப்படியா?" என்றார் சாங்கிச்சி.

பனிப்பொழிவின் ஊடாய் பறவைகளின்மீது சவாரி செய்த வண்ணம் சாங்கிச்சியை நேசித்த அத்தனை பெண்களும் அவரிடம் வந்தாகிவிட்டது. அவர்களில் யார் முதலில் பேசியது?

அவருடைய கனவில் கடந்த காலத்தில் தன்னை நேசித்த எல்லாரையும் சாங்கிச்சியால் சரளமாக நினைவுபடுத்த முடிந்தது.

புத்தாண்டு தினத்தின் மாலையிலிருந்து அதையடுத்த மூன்றாம் நாள் காலை வரை, கனவு விடுதியின் பனி அறையில் திரைச்சீலைகளை இழுத்து மூடி, தனது உணவுகளை அறைக்குக் கொண்டு வரச் செய்து, ஒருபோதும் படுக்கையை விட்டு நீங்காமல் சாங்கிச்சி அந்த ஆத்மாக்களுடன் நெருக்கமாக உறவாடிக்கொண்டிருந்தார். D