(இதை Automated Google OCR மூலம் இந்த வடிவிலாவது கொண்டு வர என் கையும், கண்ணும் பட்டபாடு ...
சிறுகதைகளை கொண்டு வருவது எளிதாயுள்ளது)
காலச்சுவடு 1991
ஆண்டுமலர்
www.padippakam.com
சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போவதில்லை.
எம். டி முத்துக்குமாரசாமி
1. முகாந்திரம்
நிகழ்விடத்தின் பின்னணியில் நீல வானம். வானம் அகன்றும் துயதாகவும் நிர்மலமாயும் இருப்பதால் அதன் இருப்பே பிரதானமாய் நம் மனத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. வானம் கடலோடு போய்விழுந் தாலும் கடலின் இருப்பு நமக்குத் தெரிவதில்லை. வானத்தில் பறவைகளே இல்லை. சூரியன் உச்சியில் இருக்க வேண்டும். நிகழ்விடத்தில் கடற் கரை, மணல் பரப்பி நீண்டிருக்கிறது. அம்மண லில் மனிதளவில் கடைவாய்ப் பற்கள் ஆங்காங்கே முளைத்திருக்கின்றன. நிகழ்விடத்தின் மத்தியில் பற்களின் நடுவில் நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். கால்களை அகட்டித் தலையைத் தோளோடு சேர்த்து, பின்னோக்கி தொங்க விட்டிருக்கிறாள். கூந்தல் தரையைத் தொடுகிறது. அவளிள் முலைகள் பால் சுரக்காத் தன்மையோடு குத்திட்டு நிற்கின்றன. அவள் முகம் நமக்குத் தெரிவதில்லை. அவளின் கைகள் பக்கவாட்டில் உயிரற்று தொங்குகின்றன. அவளின் பின்னே, உட்கார்ந்திருப்பவளின் பிம்பம் நிற்கிறாள். பிம்பத்தின் முகம் உணர்ச்சியற்று பிம்பத்தின்இனி இருக்கிறது.அவள் உட்காந்திருப்பவனின் தலையை கருணையோடு பார்ப்பவளாகவும் பின் எல்லையற்ற சோகத்தோடு உணர்ச்சியற்றவளாக மாறுபவளாகவும் இருக்கிறாள். பின்னே அவளின் பிரதிபிம்பம் நிற்கிறாள். பிரதி பிம்பம் ஏதோ ஒரு ஸ்டுலின் மேல் நின்றிருக்க வேண்டும். ஏனெனில், பிரதிபிம்பத்தின் முகம் மட்டுமே பிம்பத்தின் தலைமேல் உட்கார்ந்திருப்பது போல நமக்குத் தெரிகிறது. ஆக அவள், அவளின் பிம்பம், அவளின் பிரதிபிம்பம் மூவரும் ஏறுவரிசை ஒற்றை அடுக்கில் இருப்பவர்க ளாகக் கொள்ளவேண்டும். இவர்கள் பின்னால் கடலில் ஏதோ இருப்பது லேசுபாசாக ஆங்காங்கே துருத்தித் தெரிந்தாலும் கவனத்தை ஈர்க்கும் அளவு முக்கியமாகப் படவில்லை. கடலலைகளின் இரைச்சல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காற்றே இல்லை. பிரதிபிம்பத்தின் முகத்தில் விகார இளிப்பு பரவுகிறது. நாற்காலியில் பின்னோக்கித் தலை சாய்த்திருப்பவளின் மூச்சு வேகம் அதிகமாகிறது. பிரசவ வேதனையில் துடிப்பவளைப் போல அவளின் உடலசைவுகள் உள்ளன. அவளிடமிருந்து ஹலங்காரங்களும் பெருமூச்சுக்களும் கடலலைகளின் ஒசையை விஞ்சும் விதத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் போது பிரதிபிம்பம் பேசுகிறாள்.
குதம்பாயின் பிரதிபிம்பம்
பேசு.சைபீரியநாரைகள்
இங்கு வரப்போவதில்லை
என்பதைப் பற்றி பேசு
குதம்பாயின் பிம்பம் :
பேசாதே திருநெல்வேலியில்
மருதமரங்கள் வெட்டப்பட்ட
போது காணாமல்போன சிட்
டுக்குருவிகளைப் பற்றிப் பேசாதே.
பிரதிபிம்பம்
பேசு, ஆப்பிரிக்காவின்
இருண்ட மூலையில்
கிடந்த விஷவித்துக்கள்
கருவேல மரங்களாய் செழித்து தமிழக
மெங்கும் வளர்ந்திருப்பதைப் பற்றிப் பேசு.
பிம்பம்
பேசாதே. பொதிகை மலை
யில் மூலிகைக் காடுகள் மெல்ல மெல்ல
செத்துக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசாதே.
பி.பிம்
பேசு. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அருகிப் போன தைப் பற்றிப் பேசு.
பிம்
பேசாதே. கோடைக்குக் கோடை சுடலைக் கோவில்க ளில் கொடுரமாகக் கொல்லப்ப டும் ஆடுகளையும் பன்றிகளை யும் பற்றிப் பேசாதே.
பி.பிம்
பேசு. பாலுக்காகக் கொண்டுவ ரப்பட்ட திமில்களற்ற குளிர்ப் பிரதேச பசுக்களின் முலைக் காம்புகள் வெடித்திருக்கும் வெப்பப் புண்களைப் பற்றிப் பேசு.
பிம்
பேசாதே. முலைப்பாலில்லா மல் இந்தியக் குழந்தைகள் சாவது சகஜம்தான் என்பதைப் பற்றிப் பேசாதே
பி.பிம்
பேசு, வெள்ளை வல்லரக்கி கள் தங்கள் குழந்தைகளை தாங்களே தின்றது பற்றிப்
பேசு
பிம்
பேசாதே. உனக்கு நடந்த கட்
டாயக் கருக்கலைப்பு பற்றிப் பேசாதே.
பி.பிம்
பேசு. உலகெங்கும் முளைத்த அழிவின் பற்களைப் பற்றிப் பேசு.
பிம்
பேசாதே. இக் கடற்கரையில் முளைத்துள்ள கடைவாய்ப் பற்களைப் பற்றிப் பேசாதே.
பி.பிம்
பேசு இயற்கையே பேசு.
பிம்
பேசாதே பெண்ணே, பேசாதே.
பி.பிம்
பேசு.
பிம்
பேசாதே.
பி.பிம்
பேசு
பிம்
பேசாதே
பி.பிம்
பேசு இயற்கையே பேசு.
பிம்
பேசாதே பெண்ணே, பேசாதே.
பி.பிம்
தந்திரத்தின் ஒரே வெளிப் பாடு பேச்சு.
பிம்
அறிவின் ஒரே வெளிப்பாடு
மெளனம்.
பி.பிம்
அறிவு அடிமைக்கே சாத்தியம்.
பிம்
சுதந்திரம் அறிவிலிக்கே சாத்தி யம்.
பி.பிம்
அறிவின் தீட்சண்யம் செய லின்மைக்கே அடிகோலும்
பிம்
விடுதலை வேட்கை மற்றவற் றையெல்லாம் அடிமை கொள் ளும்.
பி.பிம்
இரக்கமுள்ள இயற்கையே, எவ்வளவு காலம் பொறுத்தி ருப்பாய்? சீற்றம் மிகுந்த உன் ஆதி வடிவம் எங்கே?
பிம்
பாடாய்படுத்தப்பட்ட
பெண்ணே, மனிதன் கொடுர
மானவன். மீண்டும் புதிய ஆயுதங்களோடு அவன் வரு
வான், ஜாக்கிரதை.
பி.பிம்
முடிவெடுக்கத் தேவை ஒர் ம நாடகம்
பிம்
உண்மைதான். முடிவெடுக்கத் தேவை ஓர் மன நாடகம்
பி.பிம்
மன நாடகம் எதுக்கடி குதம் பாய், அதோ வந்து விட்டான் விசாரணை அதிகாரி
பிம்
ஐயோ வந்துவிட்டான் விசாரணை அதிகாரி.
பிம்பம் மிரண்டு, கலைந்து ஓடுகிறாள். எங்கு செல்வதென்று தெரியாமல் ஓடி கடைசியில் ஒரு கடைவாய்ப் பல்லின் பின்னால் சென்று நின்று கொள்கிறாள். அந்தப் பல் அவள் கழுத்தளவே உள்ளதால், அவள் தலை வெட்டப்பட்டு பல்லின் மேல் வைக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகி றது. பிம்பத்தின் அவலத்தை சிறிது நேரம் ரசித்து விட்டு பின்னர் மின்னலென ஒடிப்போய் இன் னொரு கழுத்தளவு வளர்ந்துள்ள பல்லின் பின் னால் பிம்பத்தைப் போலவே இவளும் நின்று கொள்கிறாள். பிரதிபிம்பத்தின் தலையும் வெட் டப்பட்டு பல்லின் மேல் வைக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. பிம்பமும், பிரதிபிம்பமும் கலைந்து ஓடியதால் அவர்கள் அதுவரை மறைந் திருந்த உருவம் பார்வையாளர்களுக்குத் தெரிகி றது. கடலில் நிற்கும் கப்பலின் மேல்தளத்தில் நிற் கும்.இசக்கியின் உருவம் அது. இசக்கி வெள்ளைக் காரி விக்டோரியா மகாராணிக்குக் கோரைப்பற் கள் முளைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறாள். அவள் வாயில் பச்சிளம் சிசு ஒன்று கடிபட்டுத் துடிக்க, இசக்கி கொடூர மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறாள். நாற்காலியில் தலையைப் பின்னோக்கித் தொங்கவிட்டிருக்கும் பெண், பிம் பங்கள் கலைந்தோடியபின் வெள்ளை இசக்கி யைக் கண்ணுற்றுப் பயந்து ஆவேசமாக நேராக உட்கார, விசாரணை அதிகாரி உள்ளே நுழைகி றான். விசாரணை அதிகாரி போலிஸ்காரனைப் போல உடையணிந்திருந்தாலும் முகம் சாந்தமாக இருக்கிறது. வெயிலிலிருந்து தப்பிக்க குடை பிடித்திருக்கிறான். கையில் ஒரு டேப்ரிக்கார்டர் இருக்கிறது. சற்று வசதியான கடைவாய்ப் பல் லின் மேல் போய் சாவகாசமாய் அமர்ந்து கொள் கிறான். குதம்பாயின் குத்திட்ட கண்களோ, பிம் பங்களின் மெளன இருப்போ அவனைப் பாதிக்க வில்லை. டேப்ரிக்கார்டரை இயக்கிவிட்டு அவன் அதன் ஒலிவாங்கியினுள் பேசுகிறான்.
விசாரணை அதிகாரி:
வெள்ளை இசக்கியின் பெயரால் நடை பெறும் அறிவு சேமிப்புத் திட்டத்தின் கீழ், மானிடவியல் ஆராய்ச்சிக்கான மூன்றாம் உலகப் பெண் பிரஜையின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்படு கிறது ஆராய்ச்சிக்காக பதிவு செய்யப் பட்டு ஆவணப்படுத்தப்படும் இவ் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய் வதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சே பனை உண்டா அம்மணி?
பிரதிபிம்பம் :
இல்லை
பிம்பம் ;
உண்டு. ஆட்சேபனை உண்டு.
வி.அதி :
குதம்பாய், தயவு செய்து பதில் சொல்லுங்கள். ஜப்பா னிய ஒலிப்பதிவு நாடா வீணா கிக் கொண்டிருக்கிறது.
குதம்பாய்
எனக்கென்று சுயமான முடிவு | களில்லை. முரண்பாடுகளில் லாத கட்டளைக்குக் கீழ்ப்படிப | வள் நான்.
வி.அதி
(டேப்ரிக்கார்டரை நிறுத்தி விட்டு) ஆட்சேபனை ஏது மில்லை என்று சொல்.
குதம்பாய்
ஆட்சேபனை ஏதுமில்லை.
வி.அதி
(டேப்ரிக்கார்டரை இயக்கி விட்டு) இப்போது சொல்லுங் கள்.
|
குதம்பாய்
எனக்கென்று சுயமான முடிவு களில்லை. முரண்பாடில்லாக் கட்டளைக்குக் கீழ்ப்படிபவள் நான்.
வி.அதி
(மீண்டும் டேப்ரிக்கார்டரை நிறுத்திவிட்டு) முட்டாள்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது. அம்மணி தயவு செய்து நான் சொல்லும்போது ஆட்சேபனை இல்லை என்று சொல்லுங்கள். சரியா? (மீண் டும் டேப்பை இயக்கி)
ம்ஹம் சொல்லுங்கள்.
குதம்பாய்
ஆட்சேபனை ஏதுமில்லை.
(விசாரணை அதிகாரி ஆசுவாசமாக சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொள்கிறான். வெள்ளை இசக்கியைப் பார்த்தவன் குடையைக் கீழே வைத் துவிட்டு காமிராவை எடுத்து அவளை புகைப்பட
மெடுத்துக் கொள்கிறான்)
வி.அதி
(பார்வையாளர்களைப் பார்த்து) என் ஆங்கிலப் புத்தகத்தின் அட்டைக்கு இது உதவும் சிசுவைக் கடித்து நொறுக்கும் இசக்கி வேறு எங்காவது பார்க்க முடியுமா என்ன? (குதம்பாயைப் பார்த்து) ம்ஹாம். நீங்கள் உங்கள் கதையைச் சொல்லலாம்
குதம்பாய்
என்ன கதை?
வி.அதி
உங்கள் கதை.
குதம்பாய்
நான் பிறந்த கதை சொல்லவா இறந்த கதை சொல்லவா?
வி.அதி
(பார்வையாளர்களைப் பார்த்து) இறப்பு நவீன இலக் கியக் கதைகளில் ஆரம்பிப்ப தற்கான உத்தி. இது காட்டுப் புறங்களிலும் காணப்படுவது. என்னவொரு விசேஷம்(குதம்பாயைப் பார்த்து) இறந்த கதையே சொல்லுங்கள்.
குதம்பாய்
ஆயிரம் முறை யமித்த நான் சாவை முதலில் கண்ட கதை யைச் சொல்கிறேன். (அவள் மெதுவாக கனவில் நடப்பவ ளைப் போல நடந்து செல்கி றாள்)
பிம்பங்கள் :
ஆயிரம் முறை மரித்தவளின் முதல்ச் சாவு முதல் பிறப்பல் லவா? ஆயிரம் முறை மரித்த வளின் முதல்ச் சாவு ஹா ஹா ஹா ஆயிரம் முறை மரித்தவ ளின் முதல்ச் சாவு.
குதம்பாய்
பிரேமைகளை உருவாக்கும் திருநெல்வேலியின் மதியப் பொழுது வெக்கையை வியர் வையாய் உருமாற்ற அதன் நாற்றம் மாம்பழ அல்வா வாசனைகளோடு கலந்த போது, சாவு பிரமாண்டமான வெள்ளை வண்ணத்துப்பூச்சி யின் இறக்கைத் துடிப்பின் நாதத்தில், வானில் வெளிப் பட்டது. இல்லை இல்லை சாவு பிரமாண்டமான, வெள் ளைத் தட்டானின் இறக்கைத் துடிப்பின் நாரசத்தில் வானில்வெளிப்பட்டது.
பிரதிபிம்பம் :
அப்போது நாங்கள் ஏக்கத்தின் மணற்பரப்பில் காத்திருந் தோம். பிம்பம் தென்மேற்குப் பருவ மழை பொய்த்ததால் குற்றாலத்தில் சாரல் கட்டாததால் சைபீரிய நாரைகள் வராததால் அப் போது நாங்கள் ஏக்கத்தின் மணற்பரப்பில் காத்திருந் தோம்.
பி.பிம்
ஆம் அப்போது நாங்கள் ஏக்கத்தின் மணற்பரப்பில் காத்தி ருந்தோம். இரண்டாம் வெள் ளம் வருமென்று.
பிம்
ஆம் அப்போது நாங்கள் ஏக் கத்தின் மணற்பரப்பில் காத்தி ருந்தோம். இரண்டாம் வெள் ளம் வருமென்று.
குதம்பாய்
ஆனால் வந்ததென்னவோ அலுமினியப் பறவை வானில் எழுப்பிய சாவின் கீதம் அலுமியத் தட்டானின் சிறக டிப்பின் நாதமாய் சாவு வெளியெங்கும் நிறைய அகிலமே உருண்டது.
பி.பிம்
கல் உருள
பிம்
மண் உருள
பி.பிம்
செடி உருள
பிம்
மரம் உருள
பி.பிம்
மேகம் உருள
பிம்
காற்று உருள
பி.பிம்
மலை உருள
பிம்
கடல் உருள
பி.பிம்
கட்டிடங்கள் உருள
பிம்
அணைகள் உருள
பி.பிம்
உருள உருள
பிம்
வரள வரள
பி.பிம்
உருள உருள
பிம்
வரள வரள
குதம்பாய்
நாதமாய் வெளிப்பட்ட சாவு நாரசமாய் அனைத்து நீரையும் உறிஞ்சி சக்தியின் ஆலையாய் கடற்
கரையில் அமைய ஏக்கத்தின் மணற்பரப்பில் நாங்கள் காத்திருந்தோம் இரண்டாம் வெள்ளம் வரு மென்று. அறிவியலின் வளர்ச்சி என் றார்கள் தொழில்நுட்ப முன்னேற்றம் என்றார்கள் உயர்ந்தது வாழ்க்கைத் தரம் என்றார்கள் அணுசக்தி காலத்தின் கட்டா யம் என்றார்கள் வராத சைபீரிய நாரைகள் வராத இரண்டாம் வெள்ளம் காணாமல் போனச் சிட்டுக் குருவிகள் எங்கள் மணற்பரப்பினை நிறைக்க இன்மையின் இருப்பு உக்கி ரமாக தூக்கமின்மையின் அவலத்தில் பாளம் பாளமாய் பிளவுபட்டது பூமி.
(கெக்கலித்து) பிளவுபட்டது நீயும் தானடி குதம்பாய்!
ஆயிரம் சாவுகளை முன்னறி வித்த முதல் சாவின் முதல் அறிகுறி அல்லவா அது
கதையை விட்டு விலகாதே திரும்பத் திரும்ப சொல்லாதே. (கேலியாக) கதையை விட்டு விலகாதே
திரும்பத் திரும்ப சொல்லாதே.
________________
கரையில் அமைய
ஏக்கத்தின் மணற்பரப்பில் நாங்கள் காத்திருந்தோம் இரண்டாம் வெள்ளம் வரு மென்று.
பி.பிம்
அறிவியலின் வளர்ச்சி என் றார்கள்
பிம்
தொழில்நுட்ப முன்னேற்றம் என்றார்கள்
பி.பிம்
உயர்ந்தது வாழ்க்கைத் தரம் என்றார்கள்
பிம்
அணுசக்தி காலத்தின் கட்டா யம் என்றார்கள்
குதம்பாய்
வராத சைபீரிய நாரைகள் வராத இரண்டாம் வெள்ளம் காணாமல் போனச் சிட்டுக் குருவிகள் எங்கள் மணற்பரப்பினை நிறைக்க இன்மையின் இருப்பு உக்கி ரமாக தூக்கமின்மையின் அவலத்தில் பாளம் பாளமாய் பிளவுபட்டது பூமி.
பிம்பங்கள்

கதையை விட்டு விலகாதே திரும்பத் திரும்ப சொல்லாதே.
பிம்பங்கள்
(கேலியாக) கதையை விட்டு விலகாதே
திரும்பத் திரும்ப சொல்லாதே.
. ________________
குதம்பாய்
பிளவுபட்டதின் அறிகுறி திரும்பச் சொல்லுதல்.

வெள்ளையடிக்கப்பட்ட சவப் பெட்டிகளினுள் ஆணியடித்து இறுத்தப்பட்ட மேட்டுத் தெருவினரின் துக்கமின்மை இரும்புக் கொம்பாய் பெட்டியின் கூரையில் முளைக்க
பிம்பங்கள்
தூக்கமின்மை இரும்புக் கொம் புகளாய் பெட்டிகளின் கூரைகளில் முளைக்க
குதம்பாய்
அக்கொம்புகள் ஈர்த்த பிம் பங்கள் மலக்கரைசலாய் பெட்டியி னுள் ஒழுக
பிம்பங்கள்
அக்கொம்புகள் ஈர்த்த பிம் பங்கள் மலக்கரைசலாய் சவப் பெட்டி களுனுள் ஒழுக
குதம்பாய்
யதார்த்தம் மறந்து
பிம்பங்கள்
யதார்த்தம் மறந்து
குதம்பாய்
தூக்கமின்மையின் இட்லி, துக் கமின்மையின் சட்னி தூக்கமின்மையின் சோறு, துக் கமின்மையின் ஆட்டுக்கறி துக்கமின்மையின் மாட்டுக் கறி, துக்கமின்மையின் கோழிக்கறி
பிம்பங்கள்
(இடைமறித்து) தூக்கமின்மை யின் துக்கமின்மை
கரைசலோடு சாப்பிட்டு, பின் பாகம் பெருத்து
பிம்பங்கள்
பின் பாகம் பெருத்து
குதம்பாய்
உடலெல்லாம் கண்களாகி
பிம்பங்கள்
உடலெல்லாம் கண்களாகி
குதம்பாய்
ஒரு கண் பார்த்தது மறுகண் பார்த்ததோடு பொருந்தாமல்
பிம்பங்கள்
ஒரு கண் பார்த்தது மறு கண் பார்த்ததோடு பொருந்தாமல்
குதம்பாய்
பிம்பங்களின் பிம்பங்களின் பிம்பங்களின்
பிம்பங்கள்
பிம்பங்களின் பிம்பங்களின் பிம்பங்களின்
குதம்பாய்
பிம்பங்களில் வெள்ளை இசக் கியின் மாய காம உறுப்புகளைக் கண்டு

தங்கள் குழந்தைகளை அவள் வாயில்
கடிக்கக் கொடுத்து
பிம்பங்கள்
தங்கள் குழந்தைகளை அவள் வாயில்
கடிக்கக் கொடுத்து
குதம்பாய்
மரபின் வெளிச்சம் காணா வெளவால்களாய் அந்தரத்தில் தொங்கினர்
பிம்பங்கள்
மரபின் வெளிச்சம் காணா வெளவால்களாய்
அந்தரத்தில் தொங்கினர்
குதம்பாய்
பிம்பக் கரைசல் வாய்க்கப்
குதம்பாய்
துக்கமின்மையின் துக்க மின்மை, அனைத்தும் பிம்பக்
பெறாதத் தெற்குத் தெருவினரோ
பிம்பங்கள்
தெற்குத் தெருவினரோ
குதம்பாய்
நாதமாய்ப் பிறந்து நாராசமாய் வழியும் சாவைப் பிடித்து
பிம்பங்கள்
நாதமாய்ப் பிறந்து நாரசமாய் வழியும் சாவைப் பிடித்து
குதம்பாய்
வெண்கல மணியாக்கி
பிம்பங்கள்
வெண்கல மணிகளாக்கி
குதம்பாய்
கண்ணில் கண்ட ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற் றின் கழுத்துகளில் கட்டி
பிம்பங்கள்
கண்ணில் கண்ட ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற்றின் கழுத்துகளில் கட்டி
குதம்பாய்
சுடுகாட்டிலிருக்கும் சுடலை முன் இழுத்துச் சென்று

பரணில் கிடத்தி
பிம்பங்கள்
பரணில் கிடத்தி
குதம்பாய்
சங்கறுத்துக் குடலை வகுந்து குமிழும் ரத்தத்தைக் குளிரக் குடித்து

சாமியாடி சங்கல்பமெடுத்து
பிம்பங்கள்
சாமியாடி சங்கல்பமெடுத்து
________________
குதம்பாய் ;
பெண்களை அடக்கிப் பொங்க
லிட வைத்து
பிம்பங்கள் :
பெண்களை அடக்கிப் பொங்க லிட வைத்து
குதம்பாய்
வில்லடித்து வீறு கொண்டெ ழுந்து
பிம்பங்கள் :
வில்லடித்து வீறு கொண்டெ ழுந்து
குதம்பாய் ;
வானத்தை நோக்கினால்
பிம்பங்கள் :
வானத்தை நோக்கினால்
குதம்பாய் ;
வானத்தை நோக்கினால்
) பிம்பங்கள் :
வானத்தை நோக்கினால்
குதம்பாய்
வானத்தை நோக்கினால்
பிம்பங்கள் :
வானத்தை நோக்கினால்
குதம்பாய் ;
வானத்தை நோக்கினால்
பிம்பங்கள் :
வானத்தை நோக்கினால்
குதம்பாய் ;
ஒயவில்லை சாவின் இறக் கைகள்
பிம்பங்கள் :
ஒயவில்லை சாவின் இறக் கைகள்
குதம்பாய்
வரவில்லை சைபீரிய நாரைகள்
பிம்பங்கள்
வரவில்லை சைபீரிய நாரைகள்
குதம்பாய்
வரவில்லை இரண்டாம் வெள்ளம்
பிம்பங்கள்
வரவில்லை இரண்டாம் வெள்ளம்
(ஒரு வகையான நடனத்துடன் பேசிக் கொண்டிருந்த குதம்பாயும் அவளின் பிம்பங்களும் சோர்ந்து கவிழ்ந்து விழுகின்றனர். விசாரணை அதிகாரியை ஆரம்பத்திலிருந்தது போலவே இப்போதுவரை பிம்பங்களின் இருப்பு பாதிப்பதில்லை. அவன் குதம்பாயின் அருகே ஒடிச் சென்று பார்க்கிறான். சோர்வின் மிகுதிதான் வேறொன்றுமில்லை என்பதை உறுதி செய்த பின் னரும் பீதிவசப்பட்டவனாய் ஓடிவிடயத்தனித்து பின் மறுயோசலை செய்து நின்று திரும்பி வந்து அவள் எழும்வரைக் காத்திருக்கிறான். இந்த இடைவெளியைத் தன் நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகள் எழுதப் பயன்படுத்திக் கொள்கிறான்)
குதம்பாய்
'முதல் வெள்ளம் கண்ட முதி யோரே'
'முதல் வெள்ளம் கண்ட முதி யோரே'
என்ற கேவல்கள் எழுந்தன ஊரெங்கும்
பிம்பங்கள்
அக்கேவல்களில் பீறிட்ட சோகம் ஊரெல்லையை கடந்து மலை கடந்து - கடல் கடந்து காற்றில் கரைந்த நறுமணமாய்ப் பரவியது
குதம்பாய்
சோகத்தின் நறுமணம் முகர்ந்த மூதாதையர்கள் கல்லறை விட்டெழும்பி செய் வதறியாது நின்றனர். காய்ந்த சருகுகளின் முணு முணுப்பில் வெளிப்பட்டன அவர்களது அபிலாஷைகள்
பிரதிபிம்பம்
வராத இரண்டாம் வெள்ளத்தின் தடம் பற்றி மலையேறுங்கள் என்றது ஒரு ஆதி குரல்.
பிம்பம்
தாகவிடாயின் மூர்க்கம் கானலின் ஜலவேளையமாய் தூரத்தில் ஜொலிக்க அயர்ச்சியில் வரும் கனவின் இரவில் ஆதிகாரணம் கண்டுபிடிப்பீர்' என்று கூவியது இன்னொரு குரல்.
________________
குதம்பாய்
இவ்வாறாகக் கிளம்பியது
எங்கள் பயணம்
வராத வெள்ளத்தின் ஆதி
காரணம் கண்டறிய
இன்றைய துக்கத்தினை
நிவர்த்தி செய்ய,
பிம்பங்கள் :
அப்போதுதான் வந்தார்கள்
குதம்பாயின் காதலர்கள்
நிழல்களாக,
நிழல்களின் நிழல்களாக
உடல்களாக,
ஆதிகாரணத்தின் உடல்களாக
புதிர்களாக
புதிர்களை அவிழ்க்கும் புதிர்களா க
அப்போதுதான் வந்தார்கள்
குதம்பாயின் காதலர்கள்.
(பிம்பங்கள் பேசப் பேச இரு ஆண் உருவங் கள் நிகழ்விடத்தினுள் நுழைகின்றனர். ஒருவன் நெட்டையாகவும் மற்றவன் குட்டையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நிகழ்விடத்தினுள் நுழையும் விதம் கம்பீரமாக இருப்பினும் அவர்க ளுடைய முகங்களில் சோகம் அப்பிக் கிடக்கிறது. அவர்களுடைய உணர்ச்சிக்கும் உடலசைவுக ளுக்குமிடையே உள்ள எதிரிடைத்தன்மை கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் வருவதைப் பார்த்து விசாரணை அதிகாரி ஒரமாய் ஒதுங்கி நிற்க, குதம்பாய் அவர்களிருவரையும் காதலுடன் பார்க்கிறாள். பிம்பங்கள் வெட்கத்துடன் ஒதுங்கி நிற்கின்றனர்.)
ஆண்கள்
மீண்டும் சிக்கிக் கொண்டோம்
உன்னிடம், குதம்பாய்
மீண்டும் சிக்கிக் கொண்டோம்
உன்னிடம்
அந்த்ரங்கமாய் நடந்த நாட
கத்தை
மீண்டும் நிகழ்த்துவது தகாது.
அதுவும் இத்தனை பேருக்கு
மத்தியில்
வேண்டாம் குதம்பாய்
வேண்டாம்
டன் நிகழ்விடத்தின் ஒரு மூலையில் நிற்க, மறுமூலையில் விசாரணை அதிகாரி கூனிக் குறுகி உட் கார்ந்திருக்கிறான். வெள்ளை இசக்கியைக் காண வில்லை. கப்பல் கிளம்பிப் போய்விட்டது போலும், வனாந்தரத்தில் தனித்து விடப்பட்ட அனாதைகளைப் போன்ற முகபாவத்துடன் இரு ஜோடிகளாய் கடற்கரையையே மலையாகப் பாவித்து மேலேறத் தொடங்குகின்றனர். நெட்டையன், பலசாலியாகவும் படபடவென்று முன் னேறுபவனாகவும் இருக்க, குட்டையன் மூச்சி ளைத்து மெல்ல மெல்லவே ஏறுகிறான். பிரதிபிம் பம் நெட்டையனின் உடல்ச் செழுமையையும் செயல் வேகத்தையும் வெளிப்படையாகவே ரசிக் கிறாள். அவளின் பார்வைகளைக் காதல் பார்வை கள் என்றே சொல்லிவிடலாம். பிம்பத்தின் முகம் இறுக்கமாக இருக்கிறது. குதம்பாய் தனது பிம்பங்களின் உள்மனக் குமுறல்களை ரசிப்பவள்போல அந்த ஜோடிகளின் செயல்களுக்கு ஏற்ப பிம்பத் தின் அல்லது பிரதிபிம்பத்தின் முகபாவத்தினைப் பிரதிபலிப்பவளாக இருக்கிறாள். நடப்பது ஏற்க னவே நடந்ததன் நாடகம்தான் என்ற நிச்சயத்தன் மையில் இருப்பதால் அவளின் செயல்கள் அனைத்தும் விதூஷக சூத்ரதாரியின் செயல்களா யிருக்கின்றன.
ஜோடிகளோ மிகவும் களைத்துப் போய்விட் டனர். மலையின் மேலே ஏற ஏற அவர்களின் மூச்சுச் சத்தம் இரையெடுக்கும் பாம்புகளின் சத்த மாய் இருக்கிறது. வெக்கை வியர்வையாய் வழிந் தாலும் நெட்டையன் களைப்படைந்தது.போலத் தோன்றவில்லை. குட்டையன் இளைப்பாற அமர்ந்துவிடுகிறான். பிம்பங்கள் அவன்மேல் அலட்சியப் பார்வையை வீசியபடி உட்காருவதா நெட்டையனோடு நடப்பதா என்ற நிச்சயமின் மையில் நிற்க, நெட்டையன் மூவருக்காகவும் நிற் கிறான். பிம்பங்களும் அமர்கின்றனர். நெட்டை யன் அமைதியற்றவனாய் சுற்றியுள்ள செடிகொடி களைச் செதுக்கியவாறு இருக்க பிம்பங்கள் தங்க ளுக்குள் முணுமுணுத்து சிரித்துக்கொள்கின்றனர். குட்டையனின் பார்வையோ குதம்பாயின் மேலுள்ளது. அப்பார்வையிலுள்ள ஏக்கம், தாபம், விரகம் இப்போதும் குதம்பாயை நிலைகுலையச் செய்கிறது. அவள் ஏதோ ஒரு குற்ற உணர்வின்பாற்பட்ட அவமானத்தினால் தலைகு னிகிறாள். அவள் வெட்கத்தினால் தலை குனிந்தி ருக்கிறாள் என்று புரிந்து கொள்ளும் குட்டைய னின் இதழ்களில் புன்னகை விரிய முகம் மலர்ந்து கள்ளமற்ற குழந்தைபோல நிற்கிறான். பிம்பங் களோ நெட்டையனின் உடலழகில் தங்களை மறந்து நிற்கின்றன. குட்டையன் தனக்கேயுரிய மகிழ்ச்சியில் வெகு இயல்பாகப் பாட ஆரம்பிக்கி றான்.)
குட்டையன்
காடுவெட்டி, மலையை
வெட்டி
தில்லாலங்கடி லேலேலம்
நாரை தேடி, வெள்ளம் தேடி
தில்லாலங்கடி லேலேலம்
மண் மறித்து, கல்லுடைத்து
தில்லாலங்கடி லேலேலம்
தடம் மறந்து திசை மறந்து
தில்லாலங்கடி லேலேலம்
மூச்சு வாங்கி, உயிரை விட்டு
தில்லாலங்கடி லேலேலம்
காத்திருந்த குதம்பாய்க்கு
தில்லாங்கடி லேலேலம்
காதல் மணம் வீசிடிச்சு
தில்லாலங்கடி லேலேலம்
தாபப் பார்வை வந்திடுச்சு
தில்லாலங்கடி லேலேலம்
உடல்த் தினவு தோன்றிடிச்சு
தில்லாலங்கடி லேலேலம்
தில்லாலங்கடி லேலேலம்
(குதம்பாயின் பிம்பங்களிருவருமே குட்டை யனின் முதல் தில்லாலங்கடி லேலத்துடன் இயல் பாக இணைந்து கொள்கின்றனர். கள்ளமற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஆரம்பித்த பாடல் நடனமாக மாற மூவரும் கைகோர்த்து ஆடுகின்ற னர். தனித்துவிடப்பட்ட நெட்டையன் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல ஆடுப வர்களை இகழ்ச்சியாகப் பார்த்தபடி நிற்கிறான். ஆடுபவர்களை நெட்டையன் இவ்வாறு பார்த்து நிற்பதை குதம்பாய் இரக்கத்துடனும் பச்சாதாபத்
துடனும் பார்த்தபடி நிற்கிறாள். தான் விதுஷக சூத்ரதாரிதான், பார்வையாளர்தான் என்பதை மறந்து, எந்த நேரமும் நடக்கின்ற நாடகத்தினுள் நுழைந்து கதாபாத்திரமாகி விடுவாள் என்பது போல இருக்கின்றன குதம்பாயின் செய்கைகள். நடனமாடி முடித்தவுடன் குட்டையனும் பிம்பங்க ளும் கலகலவென்று சிரிக்க, அச்சிரிப்பில் நெட் டையனும் தர்மசங்கடத்துடன் கூடிய செயற்கையு டன் கலந்து கொள்கிறான்.
ஏதோ இனிய சுற்றுலாவிற்கு வந்தவர்கள் போல அனைவரின் மனநிலையும் இருக்க பிம் பங்கள் உணவு சமைத்துப் பரிமாறுகின்றனர். குட் டையன் சமைத்த உணவினை மறுத்துவிட்டு காய் கனிகளை மட்டும் குறைவாகச் சாப்பிடுகிறான். நெட்டையன் அகோரப் பசியில் சமைத்த உணவை வெறி கொண்டவன் போலச் சாப்பிட, அவன் ரசித்து சாப்பிடுவதை பிம்பங்களிருவரும் திருப்தியுடன் பார்த்து நிற்கின்றனர். நெட்டையன் அவர்களை அடிக்கடி நன்றியுடன் பார்க்க அம்மூ வரிடமும் ஒருவகையான மெளனமான இன்பப் பரிமாற்றம் நிகழ்கிறது. குட்டையன் ஒருவித மான பொறாமையுடன் அம்மூவரிடமிருந்தும் தனித்து நிற்கிறான். குதம்பாய், குட்டையனை இப்போது மிகுந்த பச்சாதாபத்துடன் பார்க்கி றாள். குதம்பாயின் பிம்பங்களிருவரையும் ஆண் களிருவரும் குதம்பாயாகவே கருதுகின்றனர் என் பது அவர்களுடைய செயல்களினால் வெளிப்ப டுகிறது. நெட்டையன் கொண்டிருக்கும் குதம்பா யின் மனப்படிமமாகப் பிரதிபிம்பமும், குட்டை யன்கொண்டிருக்கும் குதம்பாயின் மனப்படிமமா கப் பிம்பமும் விளங்குகின்றனர்.)
நெட்டையன்
எப்படி இந்த கலகலப்பான
சூழல் உண்டாயிற்று?
வந்த காரணத்தை மறக்கடிக்கச்
செய்தவன் இந்த அஸ்தமனச் சூரியன் என்று
தான் நினைக்கிறேன்.
(குட்டையனைப் பார்த்து)
ஆனந்தா எவ்வுடம்பின் தொடை சக்தி
எம்மிதிவண்டியில் உருமாறி
இவ்வாறு
சூரியனாய் ஒளிர்கிறதோ
பிம்பங்கள்
(இவனுக்கெல்லாம் எதற்கு
இம்மாதிரியான சிந்தனை
என்று கேலி செய்யும் தோனி
யில்) ஆனந்தா எவ்வுடம்பின் தொடை சக்தி
எம்மிதிவண்டியில் உருமாறி
இவ்வாறு
சூரியனாய் ஒளிர்கிறதோ
ஆனந்தன்
(பிம்பங்களின் தொனியைப்
பின்பற்றுபவனாக)
சுந்தரா
என்னவொரு மணியான சிந்
தனைl
என்னவொரு இந்திரமயமான
கண்ணோட்டம்.
இச்சிந்தனைக்காக மட்டும்
தமிழ்நாட்டின் தலைவர்க
ளைப் போல
சாவிற்குப் பின்னர் பேருந்து நிலையமாகவோ
விமான நிலையமாகவோ
புகைவண்டி நிலையமாகவோ
குறைந்த பட்சம்,
பாலமாகவோ
மாறக் கடவாய் ... (சிரிக்கி
றான்)
பிம்பங்கள்
இல்லை இல்லை
குறைந்தபட்சம்
பல்கலைக் கழகமாகவோ
மாறக் கடவாய்!
சுந்தரன்
கேலி பொறுக்காதவனாய்)
தர்க்கத்தின் அடிப்படை பிர
பஞ்சத்தைக் காரண காரியத்
தொடர்புடைய இயந்திரமாகப்
பார்த்தல்
ஆனந்தன்
ஒஹோ
பிம்பங்கள் :
(கூவுகின்ற குரல்களில்)
ஒஹோ ஒஹோ
சுந்தரன்
கேலிக்கும் ஓர் அளவுண்டு
ஆனந்தன் :
திமிருக்கும் ஓர் அளவுண்டு
சுந்தரன் ;
எனக்கென்ன திமிர்?
ஆனந்தன்
கதாபாத்திரமாகிவிட்டோம்
என்ற திமிர்
பெயர் பெற்றுவிட்இேiம் என்ற திமிர்
தனிநபர் என்ற திமிர்
தர்க்கத்தினால் இயந்திர இயற்
கையை ஆளலாம் என்ற திமிர்
சுந்தரன்
(சுவாரஸ்யமடைந்தவனாய்)
திமிரற்ற
பெயரற்ற
தனிநபராகாத
கதாபாத்திரமாகாத
நீ
யார்?
பிம்பங்கள் :
சொல்லாதே சொல்லாதே நீ
யாரென்று
சொல்லாதே
சொல்லாதே சொல்லாதே நீ
யாரென்று
சொல்லாதே
ஆனந்தன் ;
(பிம்பங்களை அலட்சியம்
செய்து) இக்கணத்தில்
இச்செடியின், இக்கொடியின்
இம்மரத்தின், இம்மலையின்
இச்சூரியனின், இப்பிரபஞ்
சத்தின்
உள்ளார்ந்த சூன்யத்தின்
பல முடிச்சுகளில்
ஒரு முடிச்சு
நான்
பிம்பங்கள் :
சூன்ய முடிச்சு ஹேய் ஹேய்
சூன்ய முடிச்சு.
________________
குதம்பாய்
உஷ் பேசாதிருங்கள்
கிண்டலடித்தால் இவனும் கதா
பாத்திரமாகிவிடுவான்
கதாபாத்திரங்களற்ற கதையே
நம் மன நாடகம் என்பதை
மனத்தில் வையுங்கள்.
ஆனந்தன்
(முன்னர் நடந்த உரையாட
லைக் கவனியாதவனாகத் தன்
போக்கில்)
முன் முடிச்சிற்கும்
பின் முடிச்சிற்கும்
தொடர்பற்று, கணந்தோறும்
இறந்து பிறக்கும்
சூன்ய முடிச்சு
நான் ஆனந்தன்
பிம்பங்கள் :
(கோலாகலமாக) சூன்ய
முடிச்சே நானென அறியும்
அறிவே ஆன்மா.
சூன்ய முடிச்சே நானென அறி
யும் அறிவே ஆன்மா
சூன்ய முடிச்சே நானென அறி
யும் அறிவே ஆன்மா
சூன்ய.
சுந்தரன்
(இடைமறித்து) நிறுத்துங்கள்
(பார்வையாளர்களைப்
பார்த்து) இம்மாதிரியான
பண்டார
பரதேசிகளின் ஆட்டபாட்ட
ஆன்மாக் கூச்சலினால்தான்
பகுத்தறிவும், அறிவியலும்
இங்கே வளராமல்ப் போய்
விட்டது. இந்த மதவாதக் கூச்சலுக்குச்
செவி சாய்க்காதீர்.
வெகு எளிமையான நோக்கத்
துடன் புறப்பட்டது
எங்கள் பயணம் வெள்ளம்
வராத காரணம்
காண மலையேறி வந்தோம்.
________________
காரணத்தைக் கடவுளின்
தலையில் சுமத்த நடக்கும்
அற்ப மதவாத சதியே
இந்த ஆன்மாக் கூச்சல், நம்பா
தீர்! தயவு செய்து
நம்பாதீர்.
(குதம்பாயின் பின்னால் பிம்
பங்களிருவரும் பயந்து ஒளி
கின்றனர்)
குதம்பாய்
கதாபாத்திரங்களற்ற கதை
யைச் சொல்லும் நாம் பார்வை
யாளர்களையும் உள்ளே
இழுக்கக்கூடாது. அவர்களை
மேலும் கொடுமைப்படுத்தக்
கூடாது.
பிம்பங்கள்
பார்வையாளர்களை உள்ளே
இழுக்கும் பட்சத்தில் உண்மை
யைச் சொல்வதே உத்தமம்.
குதம்பாய்க்காக நடக்கும் சண்
டையை அற்ப தத்துவ விசா
ரத்திற்குள் மறைக்கப் பார்க்கி
றார்கள். பார்வையாளர்களே!
கபர்தார் ஜாக்கிரதை.
ஆனந்தன் :
பார்வையாளர்களிடம் பேசு
வது என்றாகிவிட்டபின் நான்
மட்டும் விலகியிருப்பது முறை
யல்ல. பார்வையாளர்களே!
அற்ப மேற்கத்திய கல்வியின்
வெளிப்பாடே இவனுடைய
பகுத்தறிவும் அறிவியலும்,
அவை வெள்ளைக்காரனுக்கு
விளக்குப் பிடிக்கவே இது
வரை பயன்பட்டுள்ளன.
சுந்தரம்
பெயரிடுவதும், பகுப்பதும்,
பிரிப்பதும், ஆள்வதும், மேற்
கத்திய கல்வி மட்டுமே என்று
யார் சொன்னது? புல் பூண்டு
முதல் குதிரை யானை முதல்
மனிதர்கள் கிரகங்கள் வரை
பெயரிட்டு, பகுத்து, பிரித்து
சேர்க்கை விதிகளை உருவாக்
குவது நமது மரபில் இல்
லையா என்ன?
ஆனந்தன்
அகண்ட யதார்த்தத்தின் ஒரு
பகுதியாய்
ஒத்திசைந்து வாழும் மனித
னுக்கு
பரவச நிலையினுள் ஆட்பட்ட
மனிதனுக்கு
பெயரிடுவதும், பகுப்பதும்,
பிரிப்பதும்
தேவையற்ற செயல்கள்
சுந்தரன்
ஆள்கையற்ற மனிதன்
கொடுர இயற்கையின் அடிமை
ஆனந்தன்
ஒத்திசைந்த மனிதன்
அழகிய இயற்கையின்
அங்கம்
சுந்தரன்
வெற்றுக் கனவுகளை முன்
வைத்து
செயலின்மையை போதிக்கும்
அபத்த ஆத்மீகம் உன் பேச்சு
ஆனந்தன்
உயிரின் வதை அறியாது
மூர்க்கச் செயலினை
போதிக்கும்
ஆபாச அரசியல் உன் பேச்சு
சுந்தரன்
இயந்திர ரீதியான் காரண
காரியத்
தொடர்ச்சியை மறுத்து
ஆத்மீகம் பேசுகின்ற நீ
வராத வெள்ளத்தின் காரணம்
தேடி
மலையேறியது ஏன்?
ஆனநதன
நடந்த நாடகத்தை மீண்டும்
நிகழ்த்துகிறோம்
என்பதை மனத்தில் வை.
சுந்தரன்
நாடகம் நடந்தபோது எங்கே
போயிற்று
உன் ஆத்மீகக் குரல்?
எங்கே போயிற்று உன் உபதே
சம்?
ஆனந்தன்
அதுவே நாம் ஏறிய மலை.
யின் கதை
பகுதியாய் -
அதுவே நாம் ஏறும் மலையின்
கதை னுககு,
அதுவே நாம் ஏறப்போகும்
மலையின் கதை
உன்னுள் இருக்கிறது
என்னுள் இருக்கிறது
இவர்களினுள் இருக்கிறது.
அவர்களினூடே இருக்கிறது.
எங்கும் இருக்கிறது
சுந்தரன்
கர்ப்பம் சுமந்து சுமந்து
ஜீவிதத்தை நகர்த்தி நகர்த்தி
எல்லையிலா பொறுமையுடன்
விளங்கும் குதம்பாய்
நீ சொல்
மனிதனின் ஆளுகைக்கு
இயற்கை உட்பட்டதுதானா?
குதமபாய
உட்படடதுதான.
பிம்பங்கள்
(மகிழ்ச்சியுடன்) உட்பட்டது
தான் உட்பட்டதுதான் உட்பட்
டதுதான.
ஆனந்தன்
சாவுடன் போராடிப் போராடி
உயிரினைக் காப்பாற்றிக் காப்
பாற்றி
எல்லையில்லா பொறுப்பு
ணர்ச்சியுடன் திகழும் குதம்
பாய்! - - - - - - -
நீ சொல்
மனிதனின் ஆளுகைக்கு
இயற்கை உட்பட்டதுதானா?
குதமபாய
உட்படாததுதான
பிம்பங்கள்
(அதே மகிழ்ச்சியுடன்) உட்ப
டாததுதான் உட்படாததுதான் உட்படாததுதான்.
ஆனந்தன்
(வெற்றியுடன்) உட்படாதது மட்டுமல்ல உட்படக் கூடாத தும்கூட.
சுந்தரன்
உட்படாதது என்று எது மில்லை.
ஆனந்தன்
மனிதன் என்ற மாயையின் சுயபிம்பப் பால்வினைநோய் அது.
சுந்தரன்
மனிதனை மீறிய மாயையின் நபும்சகம் உன்னுடையது.
ஆனந்தன்
மனிதனை மீறிய யதார்த்தம் நோக்கிய
விந்தின் அடக்கம் வீரியமே யன்றி
நபும்சகமில்லை.
சுந்தரன்
உயிரின் பெருக்கத்தை உத்தே
சித்த விந்தின் நாசத்திற்கு முன்னால்
சமாதியை உத்தேசித்த விந்தின் அடக்கம்
நபும்சகமே.
ஆனந்தன்
மேற்கத்திய முட்டாள்த்தனத் திற்கும் ஒரு
எல்லை வேண்டும். சமாதியோ, நிர்வாணமோ பிரபஞ்சப் பேருணர்வே அன்றி வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட செயலின்மை அல்ல.
சுந்தரன்
(கேலியாக) அப்பாற்பட்ட பிர
பஞ்சம் பேருணர்வின் அவசியம் யாதோ?
ஆனந்தன்
அப்
பிரபஞ்சப் பேருணர்வின் அவசியமே, கருணையின் அவசியம்.
கருணையே நேர்த்தியான மனித வாழ்க்கையின் ஆதார உணர்ச்சி.
சுந்தரன்
கருணையில் பிறக்கும் பிரபஞ்ச ஒருமையே கடவுள் இல்லையா?
ஆனந்தன்
மடக்கிவிட்டாயோ மடக்கி? பிரபஞ்ச ஒருமையை கடவுள் என்பது மதம் சூன்யம் என்பது ஞானம்.
சுந்தரன்
இரண்டிற்கும் என்ன வித்தியா சமோ?
ஆனந்தன்
நிறுவனங்களை உருவாக்கு வது மதம் நிறுவனங்களைத் தகர்ப்பது சூன்யம்.
சுந்தரன்
(சற்றே திகைத்துப் போனவ
னாய் சில வினாடிகள் நிற்கி
றான். பின் புதிதாய்க் கண்டுபி
டித்துவிட்டவனாய்) பெண்களுக்கு சாத்தியப்படாத சமாதி
ஆணாதிக்க கருவி,
ஆனந்தன்
(அலட்சியமாக) பெண்ணின் சமாதி தாய்மை
சுந்தரன்
தாய்மையைப் போற்றுதல் அடக்குமுறையின் மற்றொரு உத்தி.
ஆனந்தன்
விந்தின் அடக்கமும் விந்தின் நாசமும் ஆணின் முடிவுக்கு உட்பட்ட தெனில்
கர்ப்பம் சுமப்பதும் கர்ப்பம் கலைப்பதும் பெண்ணின் முடிவுக்கு உட்பட்
டது.
சுந்தரன்
கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்
திரம்
உயிரின் நாசத்திற்கே அடிகோலும.
அவ்வளவு தெரிந்தால் போதும்.
சுந்தரன்
அப்படியென்றால் கட்டுப்பாடுகள் வேண்டாமென்கிறாயா?
ஆனந்தன்
சூன்யத்தின் முன்னிலையில் கட்டுப்பாடுகள் அர்த்தமற்றவை.
சுந்தரன் :
போகட்டும் விடு. இப்போது பிம்பங்கள்
பதில் சொல். உன்னுடைய கருணையின்
மொழியில் தீமையின் இருப்
காரணம் என்ன சொல்.
ஆனந்தன்
கருணையின் மொழி அறியா
நீதான் சொல்லேன்.
தீமையின் இருப்பிற்குக் கார
ணம் என்ன?
(சுந்தரன் தர்க்கத்தில் தோற்று
விட்டதுபோல உணர்கிறான். னங்கன் முகம அவமானத்தில் குன்றிப்
ஆனந்த தாநத போகத் தனித்து நிற்கிறான்)
குதம்பாய்
அறிவார்ந்த உரையாடல்களை
வி
உணர்ச்சித் கொந்தளிப்பாய் வெளிப்படும்
கிறீச்சு சப்தமொன்றையே
நான் பெரிதாய்
மதிக்கிறேன்.
(ஏதோ ஒரு சாக்குக்காக காத் இதற்கு திருந்தவர்கள் போல, கோலாகலமாய்) கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு பிற்குக் கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு கிறிச்சு
(பிம்பங்கள் சுந்தரனைச் சுற்றிக் கும்மாளமிட அவனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. கொலைவெறி கண்களில் தெரி
கந்தரன் (ஒரு முடிவுக்கு வந்தவனாத)
கட்டுப்பாடற்ற உறவுகளைபபிரஸ்தாபிக்கும்
சுந்தரன் : மனித ஆளுகைக்கு உட்படாத கிறது) இயற்கையின் கொடூர முகம் னங்தன் : ட்டாள். பிறவி ஊனர்க ஆனந்த - . அடைக்கலமளிப்பது நீ - - - இயற்கை, மனிதக் கூட்டத்தின் நான உன மனைவி குதம்பா வரலாறும், யுடன - பொருளாதாரமுமே செல்ல அனுமதிப்பாயா? தீமையின் இருப்பிற்கு ஆனந்தன் இதைக் கேட்பதற்காகத்தானே காரணங்கள் இவ்வளவு நேரம் சுந்தரன் தீமையின் முகம் அறியாத வாதாடினாய்? குழந்தை நீ சுந்தரன் கொச்சைப்படுத்தாதே. நடை முறை வாழ்க்கையை ஆனந்தன் (இயல்பாக நகைத்து) தீய மையமாகக் கொண்டது என் தென்று ஒன்று சிந்தனை' என்று தனித்திருப்பதாகக் கருதாதி பெருமையடித்தாயே. பதில் ருப்பதே நம் மரபு. சொல் இதற்கு.
ஆனந்தன்
உன்னுடன் வருவதும் வராததும். குதம்பாயின் இஷ்டம்
.
குதம்பாய்
நாக்கூச்சமின்றி, வெளிப்படையாக உந்தன் மனைவியை ஒருத்தன் அழைத்தால் வெட்டிப்போட வேண்டாமா நீ?
சுந்தரன்
ஹாஹா வெட்டிப் போடுகின்ற ஆளைப் பார்த்தாலும்!
ஆனந்தன்
உன்னிஷ்டம் மீறி யார் உன்னைத் தொந்தரவு செய்தாலும் என்னிடம் சொல்
குதம்பாய்
என்னிஷ்டத்தை யாரே அறிவர்?
சுந்தரன்
(இளநகையுடன்) பந்தம் கண்ட பெருச்சாளி போல திகைத்து நிற்காதீர்கள். சும்மா விளையாட்டாய்ச் சொன்னேன்.
(அனைவரும் ஒருவரை ஒருவர் வெறித்து நிற்க மெளனமும் இருளும் கவிகின்றன.)
3. பிரம்மை நிகழ்வு
(மீண்டும் நிகழ்விடம் ஒளிபெறும்போது கடற் கரைக்கு இரவு வந்துவிட்டது. ஆனந்தன், சுந்த ரன், குதம்பாய் மற்றும் பிம்பங்கள் தொடர்ந்து மலையேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனந்தன் களைப்பு மேலிட்டதால் வெகுவாகப் பின்ன டைந்து விட மற்றவர்கள் சுலபமாக முன்னேறுகி றார்கள். சுந்தரனிடம் ஏராளமான மலையேறும் உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பகுதி பகுதி யாக மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறான். மற் றவர்கள் ஒருவித தாழ்வு மனப்பான்மையில் சதா உழ்ல, அவன் தானே அதிபதி என்ற போக்கில் நடந்து கொள்கிறான். எல்லோரும் களைத்து நிற் கையில் அசாதாரணமான நிதானத்துடன் மின்னல் பளிடுகிறது. காய்ந்த சருகுகளை அள்ளிக் கொண்டு வரும் காற்று கடற்கரையை நிறைக்கி றது. ஐவரும் பீதி வசப்பட்டவர்களாய் ஒருவ ரோடு ஒருவர் கையைப் பிணைத்துக் கொண்டு, முதுகோடு முதுகு ஒட்ட, சீரழிவில் சிக்கிய ஐந்து இதழ் மலர் போல நிற்கிறார்கள். வால் நட்சத்திர மொன்று ஆகாயத்தில் மின்னி ஓடுகிறது. பெருந் துயருக்கான அறிகுறிகளென பறவைகள் அலறு கின்றன. ஆனந்தன் மற்றவர்களிடமிருந்து பிரிந்து தரையை உற்று நோக்குகிறான். தரை கடற்கரை மணலாய் இருக்கக்கண்டு திகைக்கிறான். பேதலித்துப் போனவனாய் 'மலை கரைந்து உவர் மன லாய் ஆனது எப்போது எப்போது' என்று கூக்குர லிட புதிதாய் ஒரு கடைவாய்ப் பல் பூமி பிளந்து, மனித அளவில் முளைக்கிறது. மீண்டும் அவன் 'மலை கரைந்து வெளியெங்கும் உவர் மணலாய் ஆனது எப்போது எப்போது' என்று கதற ஆகா யத்திலிருந்து உடலற்ற வெள்ளை இசக்கியின் முகம் வாயில் பச்சிளம்சிசுவைக் கடித்துத்துண்டா டியபடி பறந்து வந்து ஒரு பல்லின் மேல் கச்சித மாய் அமர்கிறது. ஐவரின் அசைவுகளிலும் அமா னுஷ்ய நிதானம் சேர்கிறது. ஐவரும் தாகம், தாகம் என மந்திரம் போல முனக ஆரம்பிக்கின்ற னர். தா.கவிடாயின் மூர்க்கம், கானலின் ஜலவளை யமாய் தூரத்தில் ஜொலிக்க அயர்ச்சியில் வரும் கனவின் இரவில் ஆதிகாரணம் கண்டுபிடிப்பீர் என்று முனகுகிறாள் பிம்பம். பிம்பத்தின் முனகல் கேட்டு ஈரம் உறிஞ்சி மரிப்பேன் என்று நினைத்த தில்லையே, ஈரம் உறிஞ்சி மரிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லையே' என்று கூறும் ஆனந்தன் மயங்கிச் சரிய, தொழிற்சாலைகளில் இயங்கும் பெரும் இயந்திரங்களின் ராட்சசஒலிக ளுக்கு ஏற்ப மேலும் இரண்டு வெள்ளை இசக்கி முகங்கள் பறந்து வந்து மேலும் இரண்டு பற்களின் மேல் அமர்கின்றன. இயந்திரங்களின் கர்ணகரே சப்தம் தொடர, பிம்பமும், குதம்பாயும் ஆனந்த னைப் பார்த்து நிற்கும் நேரத்தில் பிரதிபிம்பமும் சுந்தரனும் மறைவிடம் தேடிச் செல்கின்றனர். அவர்கள் திரும்பி வரும்போது தொழிற்சாலை இயந்திர சப்தங்கள் குறைந்து பொது மருத்துவம னையின் நெடி, பூச்சிக் கொல்லி மருந்துகளின் ________________
வாடை இரண்டும் கலந்த நாற்றம் நிகழ்விடமெங் கும் பரவுகிறது. மேலும் இரண்டு வெள்ளை இசக்கி முகங்கள் பறந்துவந்து பற்களில் அமர்கின் றன. தொழிற்சாலை சப்தங்களுடனும், விசித்திர நெடியுடனும் ஆங்கிலக் குழந்தை பாடல்கள் பல தும் சேர்ந்து கொள்ள, பிம்பம் சுந்தரனுடன் செல் கிறாள். ஆனந்தன் இறந்துவிட்டதாகவேத் தோன் றுகிறது. இப்போது வெள்ளை இசக்கியின் முகங் கள் சரமாரியாகப் பறந்து வர ஆரம்பிக்கின்றன. பற்களின் மேல் இடங்கள் நிரம்பி வழிய வெள்ளை இசக்கியின் முகங்கள் கடற்கரையிலும் : உட்காரத் தலைப்படுகின்றன. வெள்ளை இசக்கி யின் முகங்களை நாரைகள் என ஒரு கணம் நம்பி : விடும் குதம்பாயும் பிரதிபிம்பமும் குதூகலித்துப் பின்னர் துக்கிக்கின்றனர். அமானுஷ்ய நடன அசைவுகளுடன் சுந்தரனும் பிம்பமும் திரும்ப வர கடல்நீர் பஞ்சுப் பொதியாய் நுரைக்கிறது. பயந்து நடுங்கும் குதம்பாயை அணைத்து பல்லின் பின் னால் மறைத்து வைக்க, மின்னலின் ஒளியுடன் நுரைத்த கடல் உயரே உயரே உயரே நாய்க்குடை போன்று எழுந்து பிரும்மாண்டமாய் நிகழ்விடப் பின்னனி முழுவதும் வியாபிக்கிறது. அந்நாய்க்கு டையின் உள்ளிருந்து மீண்டும் ஒரு வெள்ளை இசக்கியின் முகம் வெளிப்பட, ஒளிக்கூச்சம் தாங் காது நால்வரும் கண்களை மூடிக்கொள்கின்றனர். நாய்க்குடைநிலைத்து நிற்க, குதம்பாயும், பிம்பங் களும் கையோடு கை பிணைத்து. முதுகோடு முது கிணைந்து மூவிதழ் மலராய் நின்று தாகம் தாகம்' என முனகுகின்றனர். செய்வதறியாது திகைத்து நிற்கும் சுந்தரன் சற்று யோசனைக்குப் பின் கடற் கரை மணலைத் தண்ணீருக்காகத் தோண்ட ஆரம் பிக்கிறான். நீண்ட நேரம் தோன்றியபின் அவன் முகத்தைச் சுந்தரன் முகமுடி கையில் ஏதோ அகப்படுகிறது. அதைக் குழிக் _ அணிந்து கொள்கிறான். சுந்தரனின் சிரிப்புகுள்ளே வைத்துப் பார்க்கும் சுந்தரன் அதை உள்ளே போட்டுவிட்டு பைத்தியம் பிடித்தவன் போல சிரிக்கிறான். அக்குழியை மற்றவர்களுக் குக் கையால் சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி சிரிக்கி இப்போதுவெள்ளை இசக்கியின் சிரிப்பாய் இருக் கிறது. அச்சிரிப்பினை கடற்கரையெங்கும், பற்க ளின் மேலே எல்லாம், கடல்நுரையின் மேலிருக் கும், வெள்ளை இசக்கிகள் வெறித்தனமாய் எதி
றான். மற்றவர்களுக்கு அலுத்துப்போகும் வரை ரொலதிக்கின்றனர். அச்சிரிப்புகளினூடே யாரோ சிரிக்கிறான். சிரித்துக் கொண்டே சென்று அக்குழி யிலிருந்து வெளியே எடுக்க அப்பொருள் மெல்லிய குரலில் 'சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப்போதில்லை' என்கின்றனர்.
வெள்ளை இசக்கியின் முகமாயிருக்கிறது. சிரித் (திரை)
காலச்சுவடு
ஆண்டுமலர் 1991
படிப்பகம்