Pages

Thursday, April 14, 2016

அண்டரண்டாப் பிசாசும் ஐஸ்வண்டிக்காரனும் - கோபிகிருஷ்ணன் :காலக்குறி -10

________________
காலக்குறி -10 மார்ச்'99
WWW.padippakam.com
அண்டரண்டாப் பிசாசும் ஐஸ்வண்டிக்காரனும்
கோபிகிருஷ்ணன்
நர்த்தகியின் சுருள்முடி ஊடே கல்லாங்குழல் சென்று காற்றினும் கடுகி விகசித்த ஆனந்தத்தின் அந்தகார இருளில் மறைந்தது சிங்கம். கீரைகிள்ளி நரகத்தில் பைரவனும் பைரவியும் கலவிக்குலாவிக் கொண்டிருக்க நீலச் சாமரக்காரர்களான கிராதகர்கள் சிங்கத்தின்மீது புனிதச் சாம்பலை அள்ளிக் காய்த்து ஆசீர்வதித்தார்கள். அய்யனாரின் ஹயக்கிரீவர் எட்டுகால் பாய்ச்சலின் மத்தியில் வெயிலில் நுழைந்து சுறுசுறுப்புடன் இயங்கிச் சோம்பல் கொள்ளாமல் கெக்கலி கொட்டியழுது மறைதரைப் புல்லின் பசுமைப் பாறையை இடித்துத் தூரத்து இடி நிசப்தத்தைத் துக்கத் துடன் கேட்டுப் பிறந்த சிசுவின் நாமத்தை ஜபித்தது. உயிர் பெற்ற நர்த்தகி நண்டுவளை ஊடாகத் தன் தோழனை நாடிச் செல்ல மயங்கியது கடற்பரப்பு. நான்காவது ஃபில்டர் கோல்ட் ஃபிளேக்கின் முப்பத்தி இரண்டாவது இழுப்பில் கொடுரமான குயிலின் மரண சங்கீதம் மார்படுவாரெட்டி கிராமத்தின் கிராமஃபோன் பிளேட்டில் கீறலில்லாமல் குழப்பத்துடன் பதிவாகதிருந்த அன்னியோன்னிய நேரத்தில் வெண் நாகம் ஒன்று மணற்சாலையைக் கடந்த சுவடு தெரிந்தது. பிம்பத்தின் நாத சொர்க்கத்தில் பிளவுண்ட வெண்மை சிதறிப் பரவிக் கொண்டிருந்தது. மந்தமான குகையை விட்டு நியாண்டெர்தால் மனிதன் ஒருவன் மனிதக்குரங்குடன் போர் புரியக் காலில் கல்லீட்டியுடன் விரைந்த அந்தக் கணத்தில்தான்காடை இனிய கானத்தில் அமிழ மானுட எரெக்டஸ் தனது இணையை அழைக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந் தது. நின்றிருந்த நர்த்தகி நகர, ராட்சத வண்டு ஒன்று அவளின் வலது செவி வழி உட்புகுந்து வாய் வழி வெளிவந்து மண்ணுக்கடியில் நொறுங்கிக் கொண்டிருந்த ஏரோப்பிளேனின் ஏழாவது nட்டில் சோமத்தை அருந்திக் கொண்டிருந்த இளவழகனின் கோப்பையில் விழ அமைதியான அவன் நித்திரை நேத்திரக்கசிவில் அமிழ்ந்து அழிந்தது. அண்டரண்டாப் பிசாசின் ஆரவாரஎக்களிப்பில் மனம் லயித்துப் போன சலீம் லீலா ஐஸ்வண்டிக்காரன்தங்கமாரி டீ ஸ்டாலில் சைனா டீ அருந்திவிட்டு நரம்புகளை முறுக்கேற்றிக் கொண்டு மாக்கல் குல்லாயைத் திறந்து பெரிசிடம் சில்லறை நீட்டிக் கொண்டிருந்தான். மதுரமான இரவுப் பொழுதின் நான்காம் ஜாமத்தின் இரண்டாவது நொடியின் நட்ட நடுவில் நர்த்தகி தன் நான்கா வது சுற்றை முடித்திருந்தாள். பாடையிலிருந்து புயலெனக் கிளம்பிய நான்கு ஆண்விலங்குகள் அவளைத் துரத்த, எதிர் பாய்ந்து வந்த கருங்கட்டு விரியனின் உடற்குள் தஞ்ச மடைந்தாள் நர்த்தகி. ஒய்யாரமாக நர்த்தனமாடி முடித்த சர்ப்பம் ஊர்ந்துசென்று குரங்குப் பிடிக்காரனின் சகதர்மிணியை நாட, விலங்கு கள் ஒடி பாடைக்குள் மறைந்தன. புண்ணிய தம்பிரான் தன் எலும்புக்கூட்டுக் கைகளினால் புஷ் பாஞ்சலி செய்ய அர்த்தநாரீஸ்வரர் அவதரித்தார். ஐயா உன் உதவியை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

அந்த உக்கிரப் பெருந்தேவதை இருபத்து ஐந்து ஆண் சிரசுகளைக் கொய்து உதிரம் சொட்டச் சொட்ட மணிமாலையில் கோர்த்து இடுப்பில் பெல்ட்டாக அணிந்திருந்தாள். நசுக்கப்பட்ட விரல்கள் அவளது கழுத்தாரமாக ஆரோகணித் தன. குருதி வருவிப்பில் தேவதையுடன் நர்த்தகி கைகோர்த்து சிநேகம் செய்துகொண்டு சுழல பிரபஞ்சத்தில் முதல் பிரளயத்தின் ஆரம்பம் தோன்றியது. ஒன்பது தீர்த்தங்களில் பதினோரு வாரங்கள் இடைவிடாது இஷ்டதேவதையான நடனகோபால நாயகியின் வலது கரத்தில் விரதம் இருக்க சாப விமோசனம் கிடைத்தது.

எரிமலையின் லாவாக் குழம்பை இரண்டாகப் பிளந்து நான்கு ஸ்ட்ரிப் நஞ்சை வெளியே எடுத்து ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு அமரகபால நரம்புகளும் நேத்திர இமைகளும் தாக்கப்பட்டு அவன் தாற்காலிக மரண அவஸ்தையுடன் அஸ்தமித்தான். நீலவானத்தை அண்ணாந்து பார்த்த நர்த்தகி சேவலின்கூவலில் மதிமயங்கி ஆலிலை தோளழகாதிருமாவிலை மால்முருகாவில் வெதுவெதுப்பானதிரவத்தை உள்ளிழுக்க தேகத்தில் உஷ்ணம் பரவப் பொழுது புலர்ந்த நிலையில் அவனை உயிர்ப்பித்தாள். புத்துயிர்ப்பு பெற்ற அவன் பற்றுரிகையும் வழவழப்புமாய்ப்பத்து நிமிடத் தியாலத்தைக் கழிக்கப் பிறந்தது புத்துணர்ச்சி. நர்த்தகியின் ஆண்டோழந்தானென்றாலும் வைகறை யாமத்தின் அவ்வளவு சீக்கிரம் வாழ் கொண்ட அவன் நிறையத் தடுமாறித்தான் போனபோதும் மாவிலை மால் முருகனின் உஷ்ண திரவத்திலும் அரை போத்தல் சிகப்பு ஒயினிலும் மலர்ந்து ஒதுங்கி கழுவி ஷவரின் தாரைகளில் அசைந்து ஆடிச் சிலிர்த்து உடற்றேய்த்துப் பூத்துவாலையால் திரேகத்தை ஒற்றியெடுத்து விரேஜை இறுக்கமாகத் தூக்கி விட்டுக் கொண்டு வஸ்திரமணிந்து வெளிப் பட்ட போதுதான் அது நிகழ்ந்தது. -

காடுவெட்டிக் கருப்பாயி ஏகமாய்த் தவித்துப் போய் சாலையோரமாய் நின்றிருந்த அவனை அணுக அவன் அவளின் கவலையை விரட்டி விரைந்து உட்சென்று அப்போலோவிலிருந்து ஒரு மக்குளிரை அவளுக்குத் தரச்சாந்தியடைந்த அவள் ஐயா!உன் உதவியை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேனுடன் காடு நோக்கித் திரும்ப நர்த்தகி அவனை மென்னகையுடன் தள்ள அவன் உட்சென்று இயந்திரத்தில் மீண்டுமமர ஐஸ் வண்டிக்காரன் சாலையின் வேறு. கோடியிலிருந்துதன் குழலை ஊத வண்டியைச் சுற்றிச்சிறார்கள் குழுமினார்கள். காடுவெட்டிக் கருப்பாயி மானிட்டரில் தோன்ற மிகுந்த பீதியடைந்து அவன் வியர்வையில் வெல வெலத்து நசிந்து கொண்டிருக்க அவனில் நர்த்தகி கலந்து அல்ஸோலாம் நட்சத்திரக் கிரணங்களைச் சுட்டி நெஞ்சை நீவிவிட பயம் தெளிந்த அவன் நீலச் சூன்யத்தைக் கண்டு மீண்டும் அமைதியுடன் ஆழ்ந்துவிட விரல்கள் பொத்தான்கள் மீது நர்த்தனமாடத் தொடர்ந்தன.

ஜகதாம்பிகையில் தன் வேதாந்தச் சொற் பொழிவை முடித்துக்கொண்ட மகான் வழிக் கல்லை மிதிக்க பிளந்தெழுந்த பேரழகியை ஆலிங்கனம் செய்ய யத்தனிக்க ஒரு கணம் நிலைதடுமாறிய அழகி சிலிர்த்துக் கொண்டு சுதாரித்து அவரைச் சபிக்க அவர் கல்லாய்ச்சமைந்த அத்தருணத்தில் செளந்தரி தன் முனிவருடன் குலாவச் சென்று கொண்டிருந் தாள் யுக இடைவெளிக்குப் பின். நான் கடவுள், ஐந்து கிலோமீட்டர்துரத்தைச்சமீபத்தில்தான் கடந்தவன், கடந்தவன் கடவுள் என்ற மன்றாட்ட்க் குரல் கல்லிலிருந்து பரிதவிப்புடன் ஒலித்துக் கொண்டிருந்த சூழலில் முனிவரின் தாடியை வருடிக்கொண்டிருந்தாள் சிங்காரி. கல்லின் மீது ஆடித் தன் எட்டாம் சுற்றை முடித்துக் கொண்டாள் நர்த்தகி பரவசத்துடன். 

தலையாலங்கானத்து அரசனின் தூதுவன் அவனை நோக்கிக் குதிரையில் வந்து அரசர் கலஹாரிக்குப் பயணம் மேற்கொள்ளப் போகிறார் ஒட்டகப்பட்சியில் என்றும் உமது துணை தேவை என்றும் கூற, லீயையும் தவோரையும் நர்த்தகியையயும் கலக்காமல் எதுவும் சொல்வதற்கில்லை என்று அவன்பதில் கூற தூதுவன் குடிலில் இளைப்பாற தோல் பையில் இருந்த ரம் அவனுக்கும் கொள் குதிரைக்கும் இதமளித்தன.

உளுந்தூர்பேட்டையிலிருந்து வந்திருந்த அறியாத வயசுப் பையனை க்ராண்டில் இரவில் ஸ்ட்ரிப்டீஸ்-க்கு அழைத்துச் சென்றிருந்த மொட்டைப் பையன்கள் அவனுக்குப் பேய் பிடித்ததுபோல் ஆக ஒருவழியாகத் தேற்றிக் கைத்தாங்கலாக வசிப்பிடம் திருப்ப இரண்டு நாள் படவட்டம்மன் கோயிலின் சக்தி பூண்ட பூசாரி குழையடித்து நர்த்தகியின்துணையுடன் தான் அவனைச் சரி செய்ய வேண்டி வந்தது. நிர்வாண தீட்சை பெற்ற புங்கரர்களை ஷோ பாதிக்கவில்லை என்றது ஒர் உரை. இனிமாநகருக்கே வரக்கூடாது என்ற முடிவுடன் திருநிறைச்செல்வியே உனது உதவியை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேனுடன் பையன் உளுந்துர்பேட்டைக்கு அவசரப் பயணமானான்.

ஜூலி அவுஸ் பா வுடன் பச்சையும் பச்சையு மாக அவள் செல்ல இன்னும் ஐந்து ஆண்டுகளை எப்படிச் சகிக்கக் கவலையில் அவன் பல்லைக் கடித்துக் கொண்டான். அந்த அன்றாட நிகழ்வை நினைக்கவே பதட்டமாக இருந்தது அவனுக்கு என்றாலும் மணற் பரப்பிலும் புதரிலும் புல்லிலும் பறந்த மஞ்சள் வயலெட் பிரவுண் வெள்ளைப் பட்டாம் பூச்சிகளிலும் தவிட்டுக் குருவிகளிலும் மண்ணுருண்டையை உருட்டிச் சென்ற இரண்டு வண்டுகளிலும் சிகப்பு ஊர்வது ஒன்றிலும் தாழப் பறந்த தும்பிகளிலும் லயித்துத் துயரத்தைத் தணித்துக்கொண்ட அவன் பேறடைய பரந்த சோம்னா ஆகாயத்தில் பிறைச் சந்திரனிலிருந்த அழகி அவனை ஆனந்தத்தில் ஆழ்த்த அனைத்தையும் மறந்த அவன் அன்றைக்கு மிருதுவுடன் மரித்துப் போனான். அண்டரண்டாப் பிசாசின் கடைசி எக்களிப்பில் களிகூர்ந்த சலீம் லீலா ஐஸ் வண்டிக்காரனின் குழலோசையும் அவனைப் பின்தொடர்ந்து சென்ற சிறார்களின் பேச்சொலியும் சிரிப்போசையும் தூரத்தில் சன்னமாக ஒலிக்க, திருவினும் அழகான நர்த்தகி தன் பத்தாம் சுற்றை முடித்துப் பூவுலகில் தன் பணியை நிறைவேற்றிவிட்டு மேல் ஏகி விண்ணுலகி லிருந்து அவனுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டிருந்தாள்.
--------------------------------------------------------------------------------------------------
காலக்குறி வெளியீடுகள்
பனைமுனி - சிறுகதைத் தொகுப்பு
'அபிமானி கதைகளில், இத்தொகுப்பில் மட்டுமல்ல, இதற்குமுன் வெளியான 'நோக்காடு' தொகுப்பிலும் தலித்துகளின் ஊற்றுக்கண்ணிலிருந்து பீச்சியடிக்கிற வாழ்க்கை இருக்கிறது; வாழ்வனுபவங் களில் முக்கி எடுத்தவைகள்: ஊடுசரடாய் ஒரு அடக்குமுறை இருப்பது வெளிச்சமாகிறது. உயர்சாதி அடக்குமுறை, வன்மம், உயர்குடித்தனம் என இதனுடைய காட்டாற்றுச் சூழலில் தலித் சிக்கி சுழற்றி எடுக்கப்படுகிறான்." - பா. செயப்பிரகாசம்
விலை ரூ.30/
காலக்குறி பதிப்பகம்

பார்வையிலிருந்து சொல்லுக்கு - கவிதைத் தொகுப்பு - ப. கல்பனா
'மூன்றாவது வகை பெண் என்ற சமூக மதிப்பீட்டை உணர்ந்து அந்த வலியைப் பற்றிப் புலம்பிவிட்டு மட்டும் போகாமல், பழையதை அடையாளம் கண்டு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு, புதிய அடையாளங்களுக்கான கூறுகளை உருவாக்க முயலும் படைப்புகள். இந்த மூன்றாவது வகைப் படைப்புகள்தான் இன்றைய பெண்ணின் தேவை." - பத்மாவதி கண்ணம்மா
விலை ரூ.25/
18, அழகிரி நகர் 2-வது தெரு, வடபழனி, சென்னை-26.
________________