Pages

Sunday, April 10, 2016

முரண்பாடு - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. பிரமிள்)

google-ocr
முரண்பாடு - ஜே.கிருஷ்ணமூர்த்தி
(மொ.பெ. பிரமிள்)
லயம் 13

அவர் பிரபலமான, ஸ்திரமான ஒரு அரசியல்வாதி. ஒரளவுக்கு முரட்டுத்தனமான தன்முனைப்பும் அதன் விளைவான ஒரு பொறுமையின்மையும் அவரிடம் இருந்தன. மிக உயர்ந்த கல்வியைப் பெற்றவராதலால் அவரது விளக்கம் நிரடலாகவும் பெரிதாகவும் இருந்தது. திருப்திகரமான முடிவையே நாடுபவராதலால் சூட்சுமத்தை மேற்கொள்ள அவரால் முடியவில்லை. அவ்ர்தான் மக்கள், அவர்தான் அரசு, அவர்தான் ஆட்சி. அவர் பேச்சு அருவிபோல் விழுந்துகொண்டிருந்தது. இந்த அருவிப்போக்கே அவரது பேச்சை முறியடித்தும் கொள்கிறது. ஊழல் வசப்படாதவர் அவர். மக்களின் மீது அவரது செல்வாக்கு அதில்தான் தங்கியிருந்தது. இந்த அறையில் அவர் விசித்திர மான ஒரு அசெளகர்யத்துக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தார். இப் போது அவரிடத்திருந்த அரசியல்வாதி வெகுதுரத்துக்கு விலகிப்போய்விட்டான். ஆனால் மனிதன் எஞ்சியிருந்தான். சிறு கலக்கத்துடன் தன்னைத் தானே உணர்ந்த நிலையில், படபடப்பும் அடித்துப்பேசும் தன்மையும் போய்விட்டன. எஞ்சி விருத்தவை கலக்கம் சேர்ந்த விசாரணையும், அதுசரணையும், சுய ரகசியங்களை வெளிக்காட்டும் மனப்பான்மையும்தான்.

முன்மாலைச் சூர்ய னின் ஒளி ஜன்னலினூடே வந்தபடி யிருந்தது. அதோடு வாகன இரைச்சலும், அன்றையத் தினத்தை முடித்துக்கொண்டு, கிளிகள் - பச்சை மின்னொளிகள் நகரின் மரங்களில் பத்திரமாக அடங்குவதற்குப் பறந்து வந்துகொண்டிருந்தன. நகரின் தெருவோரங்களிலும் பிரத்யேகமான தோட் உங்களிலுமிருந்த பெருமரங்களை நோக்கிப் பறந்து வந்துகொண் டிருந்தன. பறக்கும்போதே அக் கி ளிகள் குருபமாகக் கிறிச் சிட்டன. அவை நேர்க்கோட்டில் பறக்கவில்லை. கீழ்பதிந் தெழுந்து, பக்கவாட்டுகளிலும் அப்படியும் இப்படியுமாகப் பறந் தபடி இடைவிடாமல் கூக்குரலிட்டுப் பேசிக் கொட்டியபடிதான் பறந்தன. அவற்றின் சீரற்ற பறப்பும் பேச்சும் அவற்றின் அழகிற்கு முரண்பட்டிருந்தன. வெகுதூரத்தில், கடலில் ஒற்றை பாய்மரத்துணி ஒன்று வெண்மைாகத் தெரிந்தது. முரண்பட்ட


உள்ளே வந்தது. சுற்றிலும் நோட்டம் விட்டது. உடனே வெளி யேறிவிட்டது. யாராலும் கவனிக்கப்படாமலே, ஒர் ஆலயத்தின் மணி ஒலித்தது. -

"நமது வாழ்வில் ஏன் இந்த முரண்பாடு? அவர் கேட்டார், _சமாதான லட்சியத்தைப் பற்றிப்பேசுகிறோம், அஹிம்சையைப் பற்றிப் பேசுகிறோம். இருந்தும் போருக்கே அடிக்கல்லை நாட்டு கிறோமே! நாம் யதார்த்தவாதிகளாக அ ல் ல வ இருக்க வேண்டும்? கனவு காணக்கூடாது. நமக்கு சமாதானமே லட்சியம் இருந்தும் தமது நாளாந்தச் செய்கைகள் நம்மை யுத்தத்துக்கே இட்டுச் செல்கின்றன. நமக்கு வேண்டியது ஒளி: ஆனால் நாம் ஜன்னலை மூடி விடுகிறோம். நமது எண்ணங்களின் இயக்க்மே ஒரு முரண்பாடுதான் வேண்டும், வேண்டாம். இந்த முரண்பாடு நமது இயற்கையோடிணைந்ததாகத்தான் இருக்கிறது போலும். ஆகையால் நாம் முழுமையடைய முடியுமென்று நம்புவதற்கில்லை. அன்பும் வெறுப்பும் இணைந்தே நடக்கின்றன போலும். ஏன் இந்த முரண்பாடு? இது தவிர்க்கமுடியாத ஒன்றி. இதை விலக்க முடியுமா? நவீன அரசு முற்றிலும் சமாதானத்துக்கே என இயங்க முடியுமா? ஒன்றே ஒன்றாக அது ஆவது சாத்தியமா? அது சமாதானத்துக்காக தொழிற்பட்டபடியே பு த் தத்துக் கு ஏற்பாடு செய்தாக வேண்டியுள்ளது. எப்போதும் யுத்த சந்ந்த் தராக இருந்தபடியே சமாதானத்தை லட்சியமாகக் கொண்டிருக்கவேண்டியுள்ளது."

ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து, லட்சியத்திலிருந்து, மாறுபடுவது முரண்பாட்டை விளைவிக்கும் பட்சத்தில் ஏன்தான் அந்த குறிப்பிட்ட புள்ளி நமக்கு? ஏன் அந்த லட்சியம்? இதுதான் முடிவு, இதுதான் லட்சியம் என்ற நிலை நமக்கு இல்லையானால் முரண்படுவதற்கு எதுவும் இராதே. நாம் ஒரு புள்ளியை நிர்மா ணிக்கிறோம். பிறகு அதிலிருந்து விலகி அலைகிறோம். இது முரண்பாடு என்று கருதப்படுகிறது. பல்வேறுபட்ட வகைகளில் நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். பல்வேறு தளங்களால் ஒரு முடிவுக்கு வருகிறோம். அதன் பிறகு அந்த முடிவுக்கு அல்லது லட்சியத்திற்கு இணங்கி வாழ்ந்துவிட முயற்சிக்கிறோம். இது நம்மால் முடியாததாகும்போது ஒரு முரண்பாட்டை உண்டாக்கி விடுகிறோம். இதற்குப் பிறகு நமது லட்சியத்துக்கும் அதற்கு முரண்பட்ட, எ ண் ண ம் அ ல் ல து செய்கைக்கும் இணைப்பு ஏற்படுத்த ஒரு பாலம் கட்டுகிறோம். இப்படி பாலம் கட்டும்________________

களான விடாமுயற்சி க்காரர்களை எ வ் வ ளவு   தூரம் நாம் மதிக்கிறோம்! அத்தகையவனை நாம் உந்நத மனிதன், பெரியவன், புனிதன் எனக் கொள்கிறோம். ஆனால் பைத்தியங்கள் கூட விடாப் பிடிவாதக் காரர்கள் தாம் அவர்களும் தாங்கள் கட்டிய முடிவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள் தாம். தன்னை நெப்போலியன் என்று முடிவு கட்டிக்கொண்டவனிடத்தில் முரண்பாடு இல்லை. அவன் தனது முடிவின் உருவம் தான் கட்டிய முடிவோடு முற்றிலும் பிடிவாதமாக ஒட்டி நிற்பவன் நிதானம் தவறியவன்தான்.
-
என்று நாம் கூறும் முடிவு எந்தத் தளத்திலும் திர்மானிக்கப்படக்கூடும் வெளிமனத்திலும் அது தீர்மானிக்கப்படும் உள்மனத்திலும் நிர்மானிக்கப்படலாம். நிர்மா னித்ததும், நமது செய்கைகளை அதற்கு ஏற்றது ஆக்க முயற்சிக் கிறோம். இதன்விளைவாக, இதில் தோல்வி காணும்போது முரண்பாடு உண்டாகிறது. ஆனால் முக்கியமான விஷயமோ, எப்படி லட்சியத்துக்கு இனங்க விடாப்பிடிவாதமாக" நடப்பது என்பதல்ல. எதற்காக இந்த லட்சியத்தை, முடிவை நாம் தயாரித்தோம் என்பதை அறிவதுதான் முக்யம். ஏனெனில் இந்த லட்சியம் இல்லையாயின் நம்மிடமுள்ள முரண்பாடும் இல்லை யாகும். எனவே, ஏன் நமக்கிந்த லட்சியம்? ஏன் முடிவுகட்டு கிறோம் லட்சியம் செயலாற்றுதலுக்கு தடையிடுவதல்லவா?செயலாற்றலை வளைத்து நெளித்து அதை ஆதிக்கம் கொள்வதற்காக அல்லவா லட்சியம் வந்து நிற்கிறது: லட்சியமே இல்லாமல் செய.
லாற்ற முடியாதா என்ன? லட்சியம் என்பது மனித மனத்தினது பின்னன் விருந்து பிறக்கும் திரொலியாகும். சிறுவயதிலிருந்து பழக்கப்படுத்தப்பட்ட ஒரு மனப்பழக்கத்திலிருந்து பிறக்கும் எதிரொலியே எமது முடிவும் லட்சியமும், எனவே அது மனித அக்கு குழப்பத்திலிருந்து விடுலையளிக்க மாட்டாதது. மனித லுக்கும் மனிதனுக்குமிடையே பிளவை அதிகப்படுத்துவதைத் தான் பிளவின்மூலம் வீழ்ச்சியை உண்டா க்குவதைத்தான் லட்சி பத்தினாலும் முடிவுகட்டப்பட்ட கொள்கையினாலும் செய்ய முடியும் o

ஒரு ஸ்திரமான புள்ளி விலகுவதற்கென்று ஒரு குறிக்கோள் இல்லையானால், விடாப்பிடிவாதம் முரண்பாடு ஏதும் இராது அப்போது அந்த அந்தக்கணத்துக்கான செயலாற்றல் பிறக்கும் உண்மையாக உள்ளதுதான் உண்மை. நேர்முக உண்மை தையும் புரிந்துகொண்டு அதற்கு நாம் ஈடுகொடுக்க முடியும். நேர்முக உண்மையைப் புரிந்துகொள்வதன்மூலம் விரோதம் பிறக் இாது. ஆனால் லட்சியங்களே விரோதங்களை உண்டாக்கு இன்றன. லட்சியங்கள் அடிப்படைப் புரட்சியை உண்டாக்க மாட்டா. அவை உண்டாக்கக்கூடியது எதுவும் இன்னொரு வகையில் தொடரும் பிழையாகவே முடியும். அடிப்படையான, இப்போதும் நிகழ்கிற புரட்சி கணந்தோறும் நிகழும் புரட்சிதான். இந்தக்கணம் எந்த லட்சியத்திலும் தங்கியதல்ல. எனவே முடிவு கட்டப்பட்ட கொள்கையிலுமிருந்து விடுபட்டுள்ள ஒன்று இது.

:இந்த அடிப்படையில் ஒரு அரசை நடத்த முடியாதே! அரசை நடத்துவதற்கு ஒரு குறிக்கோளுடன் ஒரு வரைபடத்திற் இகற்பவே செயலாற்ற வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி ஒன்றுதிரட்டப்பட்ட முயற்சி வேண்டும். நீங்கள் சொல்வது ஒரு தனிமனிதருக்கு ஒத்துவருகிறது என்னைப்பொறுத்தவரையில் என்வாழ்வுக்கு அது பெருத்த உபயோகங்ளைத்தரும் எனக் காண் கிறேன். ஆனால் பொது வாழ்விற்கு மக்கள் தொகையினரின் செயலாற்றலுக்கு இது உதவாது.

- திட்டமிட்ட செயலாற்றல் இடைறாத மாற்றங்களை வேண்டு
வதாகும். மாறிக்கொண்டே போகும் சூழ்நிலைகளுக்கேற்ப மாற் றங்கள் செய்யப்பட்டே ஆகவேண்டும். ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கேற்ப செயலாற்றுவதென்பது, ஸ்தூல உண்மைகளையும் மனப்போக்குகளையும் நிராகரிப்பதாகும் என்பதால் அது தோல்வியடையவே செய்யும். ஒரு பாலம் கட்டும்போது பாலத்துக்கான வரை படம் மட்டும் போதாது. பாலம் நிற்கப்போகும் நிலத்தின் தன்மையையும் நாம் அவதானித்தாக வேண்டும். பரிபூரணமான செயலாற்றல் பிறக்கவேண்டுமானால் எல்லா ஸ்துல உண்மை களையும், மனித மனத்தின் எல்லாவிதமான அழுத்தங்களின் போக்கையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப் புரிந்துகொள் வதென்பது எந்த ஒரு வரை படத்திலும் தங்கியிருக்கும் ஒன்றல்ல. அப்படிப் புரிந்துகொண்டு செயலாற்ற வெகுவேகமாக ஈடுகட்டும் சக்தி வேண்டும். இதுதான் தீட்சண்யம் வாய்ந்த அறிவாகும். இத்தகைய அறிவு இல்லாத பட்சத்தில்தான் லட்சியங்களையும் குறிக்கோள்களையும் முடிவுகட்டிய கொள்கைகளையும் பற்றிக் கொள்கிறோம். அரசு என்பது ஒரு ஜடமன்று. அதன் தலை வர்கள் ஒன்றைப்பற்றிக்கொண்டு நின்றுவிடலாம். ஆனால் அரசு தனி மனிதனைப்போன்று `ಿಲ್ಲ! இயங்குவது, உயிர்ச்சக்தி
....................................................
அரசைச்சுற்றிச் சுவர்களை எழுப்புகிறோம். லட்சியங்கள் என்ற சுவர்களை எழுப்புகிறோம். முடிவுகட்டப்பட்ட கொள் கைகள் என்ற சுவர்களை-இவற்றின்மூலம் அரசைக்கட்டிப் போட்டுவிடலாம் என்ற நம்பிக் கையில் எழுப்புகிறோம். ஆனால் உயிருள்ள ஒன்றை எதோ ஒருவகையில் கொல்லாமல் கட்டிப் போட முடியாது. எனவே நாம் அரசை ஒவ்வொரு வகை assifใs) கொன்றுவிடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறோம். பிறகு அதை நமது வரை படத்திற்கு ஏற்ப, நமது லட்சியத்திற்கு ஏற்ப திருகிவளைக்கிறோம். செத்துப்போன ஒன்றைத்தான் ஒரு வரை யறைக்குள் திணிக்கலாம். ஆனால் வாழ்க்கை இடையறாது மாறியபடி இருப்பதால் அதை ஒரு குறிப்பிட்ட வர்ையறைக்குள் அல்லது முடிவுக்குள் பலாத்காரமாகத் திணித்ததும் உடனே முரண்பாடு பிறக்கிறது. ஒருவரையறைக்குள் நிர்ப்பந்தப்படுத் துவது தனி மனிதனைத் தவிடுபொடியாக்கி அதன் விளைவாக அரசையும் வீழ்சியடையச் செய்கிறது. லட்சியம் எதுவும் வாழ் வைவிட உந்நதமானதல்ல. வாழ்வைவிட உந்ததமானதென லட்சியத்தைப்பற்றி நாம் நினைத்தால் மிஞ்சுவது குழப்பமும், போராட்டமும், பெரிய துன்பமும்தான்.
(Contradiction’, Commantaries on Living, 1956.)
நன்றி : அஃக், 1973.

ஊற்று

டிஸம்பர்,3, 1961, சென்னை. -

ரம்யமான அந்தத் தெருவில், ஒரு எண்ணெய் விளக்கு எரிகிற சிறு குடிசையினுள், அவனும் அவளும் வாய்ச்சண்டை போட்ட வண்னம் இருக்கிறார்கள். கிறிச்சிடும் குரலில் அவள் பணம் சம்பந்தமாக ஏதோ உச்ச ஸ்தாயியில் கூக்குரலிடுகிறாள். அரிசி வாங்குவதற்கு அளவாக ஏதும் மீதி இல்லை. அவன் ஒடுங்கி, தாழ்ந்த தொனியில் ஏதோ முணுமுணு என்கிறான். அவளுடைய குரல் ரொம்ப துரத்துக்குக் கேட்கிறது. ஜனநெரிசல் நிறைந்த பஸ்சின் ஒலிமட்டுமே அவள் குரலை மூழ்கடிக்கிறது. பனைகள் மெளனித்து நிற்கின்றன. சவுக்கு மரங்களின் இறகு நுனிகளில் கூட் அசைவில்லை. சிறிதுநேரத்துக்கு முன்பு சூர்யன் அஸ்தமித்து________________

ஒன்றடுத்து ஒன்றாக பஸ்களும் கார்களும் திரும்பிக்கொண்டிருக் கின்றன. அவை மறைய தெரு மீண்டும் நிசப்தமாகிறது. ஒரு முழு நாளின் வேலைத்ந்த அசதியுடன் செல்கிற சில கிராமத்துக் காரர்கள் தாழ்ந்த குரலில் பேசியபடி கடந்து செல்கிறார்கள்; அப்போது அறிமுகமற்ற அந்தப் பிரமாண்டம் நெருங்கி, நம்ப முடியாத மென்மையுடனும் பரிவுடனும் அங்கே சம்பவிக்கிறது. மிக எளிதில் அழிக்கக்கூடிய புதிய வஸந்தத்துத் தளிர் இலையின் பாதுகாப்பற்ற தன்மையுடன், அதே சமயத்தில் எல்லையற்ற அழிவின்மையுடன் அந்த பிரம்மாண்டம் சம்பவித்து நிற்கிறது. எல்லா எண்ணங்களும் உணர்ச்சிக்ளும் மறைந்து, எவர் எது என்று அடையர்ளம் கண்டு அறிகிற இயக்கம் ஒடுங்குகிறது.

பணம் எவ்வளவு முக்கியமானதாகிவிட்டது என்பது விசித்திரம் தான். கொடுப்போனுக்கும் வாங்குவோனுக்கும். அதிகாரத்திலிருக்கிற மனிதனுக்கும் ஏழைக்கும் சதாசர்வமும் பணத்தைப் பற்றியே பேச்சு இன்றேல் பணத்தைப் பற்றிப்பேசுவது இங்கித மல்ல என்ற நிலையில், பேச்சில்லாவிட்டால் பணத்தைப்பற்றியே பிரக்ஞை- நல்லது செய்ய, கட்சிக்காக, கோவிலுக்காக, அரிசிக்காக ஒருவருடைய மதிப்பு என்ன என்பதை அவருடை" சமூக நிலைமை, பட்டங்கள், அவருடைய புத்திசாலித்தனம், திறன் ஆகியவற்றுடன் அவர் எவ்வளவு பணம் பண்ணுகிறார் என்பதன் மூலமும் அறிமுகம் செய்துவைக்கிறார்கள். ಆರ್ಎಹಿತ களின் பொறாமை, ஏழ்மையின் பொறாமை, பகிரங்கத்தின் கவனத்தைப் பெறும்போட்டி, கல்வியறிவு, துணிமணிகள். சம்பா ஷணைத்திறன். ஒவ்வொருவருக்கும் எவரையாவது கவரும் நோக்கம். கவரப்படுவது எவ்வளவு பெரிய கும்பலாக இருக்கிற தோ அவ்வளவுக்கு தேவ்லை. அதிகார சக்தி நீங்கலாக பணம் தான் மற்றைய எல்லாவற்றையும்விட முக்கியமானது. அதிகார சக்தியும் பணமும் அபாரமான சேர்க்கைதான். சாமியாரிடம் பண மில்லை, ஆனால் அதிகாரம் இருக்கிறது. சாமியார் பணக் காரனையும் ஏழையையும் சேர்த்து வசக்கிவிடுகிறார். அரசியல் வாதியோ, தேசத்தையும் சாமியாரையும் இருக்கிற கடவுள்மார் களையும் ஏணிப்படிகளாக்கி உச்சியில் ஏறிநின்று, அதிகாரத்தின் மூர்க்கம், ஆவல் ஆகியவை எவ்வளவு அபத்தமானவை என்ற விஷயத்தை எடுத்துரைக்கிறான். பணமும் அதிகாரமும் எவ்வள வுக்குத் தேவை என்பதற்கு எல்லையில்லை. எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அதைவிட அதிகம் தேவைப்படுகிறது-முடிவற்று. ஆனால் பணத்துக்கும் அதிகாரத்துக்கும் அடியில் மறுத்துவிட இயலாத துயர் குடிகொண்டுள்ளது. அதைக் கொஞ்சம் அந்தப் ...........

பக்கங்கள் விடுபட்டுள்ளது