Pages

Sunday, April 03, 2016

தவம் - தி ஜானகிராமன்

 Google-ocr from 
http://www.maamallan.com/2011/01/blog-post_27.html

 மெய்ப்பு பார்க்க இயலவில்லை

தவம் - தி ஜானகிராமன்

"சரிதான் போய்யா என்னமோ அந்தப் பொண்ணு கொஞ்சம் சேப்பாயிருக்கு. நீ அதைப் பார்தது மயங்கறே. உன் மவனுக்குத் தகுந்த பொண்ணா அது சேப்பா இருந்தா ஆயிடிச்சா?"

 "ஏண்ணே, சேப்பு ஒரு அழகு சூடு ஒரு ருசீன்னு சும்மாவா சொல்றாங்க?" -

 "சொல்லட்டுமே, சேப்புத்தான் அழகுன்னு சொல்ல லியே, சேப்பாயிருந்தாப் போதுமா? முகத்துலெ களை குறி ஒண்ணும் வாண்டாமா? நம்ம வகையராவிலே டில்லி மட்டம் மாதிரி பொண்ணுங்கள்ளாம் இருக்கே. அதெல்லாம் விட்டுட்டு, இதைப் போய் எடுக்கிறியே பூன்னு ஊதினா ஒடிஞ்சு விழுந்திடும். குச்சி உடம்பு, கூனல், குச்சிக்காலு, உள்ளங்காலு சப்பை, தண்ணியை மிதிச் சிட்டு அந்தப் பொண் நடந்து வரபோது காலடிய்ைப் பார்த்திருக்கியா? உள்ளங்காலு முளுக்க அப்படியே சொத்துனு தரையிலே பதிஞ்சிருக்கும். என்னமோ செல்லூர்ச் சொர்ணாம்பா கெட்டுப் போயிட்டாப்பலே பேசுறியே!'

அடுத்த மேஜையில உட்கார்ந்து டீ குடித்துக் கொண் டிருந்த கோவிந்த வன்னிக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரும்பிப் பார்த்தான்; அந்தப் பெயரைச் சொன்ன மகாராஜன் யாரென்று ஒரு கூடிணம் பிரமை தட்டினாற் போல உட்கார்ந்திருந்தான். பத்து வருஷம் ஆகிவிட்டன
இந்தப் பெயரைக் கேட்டு. அவள் நெஞ்சை ஆட்கொண்டு அவனை ஊக்கிக் கொண்டிருந்த அந்தப் பெயரை இந்தப் - பத்து வருஷ காலத்தில் இரண்டாவது மனிதன் ஒருவன் சொல்லி அவன் கேட்கவில்லை. இடைவிடாமல் அவனுடைய அந்தரங்கத்தை நிறைத்து நின்ற அந்த

வனப்பு வடிவம் எதிரே நிற்பது போல் இருந்தது. வெண்தாழை முகம், பாதம், கை, முதுகில் தளர்ந்து புரளும் சிற்றலையோடும் கூந்தல், அரக்கு வர்ணப் புடவை வலது கையில் பூஜைத்தட்டு. இடது கையில் முன்றானை வாளிப்பும் வர்ணமும் ஒன்றி வடிந்த அழகு பளிர் என்று தடுத்து நிறுத்தும் தோற்றம். கோயில் திண்ணையில் இருந்த பெரிய பிள்ளையாருக்கு முன் வந்து நின்று மோதிரக் கற்களின் ஒளி சிதற நெற்றியில் குட்டிக் கொள்கிறாள். குருக்கள் விபூதியைக் கொடுத்ததும் வாங்கி நெற்றியில் குங்குமத்தின் கீழ் வைத்துக் கொள்ளுகிறாள். குருக்களின் அழுக்கு வேஷ்டித் தலைப்பில் பழைய தினசரித் துண்டில்கிடந்த அந்தச் சாம்பலுக்கு இப்போது எவ்வளவு பெரிய ஸ்தானம் கிடைத்துவிட்டது. 

கோவிந்த வன்னி ஒரு கணம் இந்த லயிப்பில் ஒன்றி விருந்தான். பிறகு உலுக்கிக்கொண்டு நெஞ்சத்தில் மழை பொழிந்த அந்தப் புண்யாத்மாவைப் பார்த்தான்; இன்னும் ஏதாவது சொல்லப்போகிறாரா என்று. ஆனால் அந்தப் பேச்சு ஏதோ கல்யாணப் பேச்சாக வளரும்போல் இருந்ததே ஒழிய, மீண்டும் சொர்ணாம்பாளின் பெயரே அதில் வரவில்லை.

 அண்ணே, இப்ப ஏதோ பேர் சொன்னிங்களே, ரொம்ப அழகின்னு. அது என்ன?"

'அதுவா? சொர்ணாம்பா, .ெ சல்லூர்ச் சொர்னாம்பா_ 

ஆண்டாள் கோயில் காமாக்ஷிதான் ரொம்ப அழகுன்னு சொல்லுவாங்க தமிழ்ச் சீமையிலேயே அவ காலிலே கட்டி அடிக்கறதுக்குக் கூட பொம்பளை கிடையாதுன்னு பேரு." 

“அதெல்லாம் ஐதர் காலத்துக் கதை. இந்தச் சிங்கப்பூர்லே எத்தினி நாளா இருக்கீங்க?”  

"கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சு.. 

'அதுக்கு முன்னாலே?"

:திருச்சிராப்பள்ளியிலே இருந்தேன்."

திருச்சிராப்பள்ளியிலே யிருந்திட்டா சொர்ணாம் பாளைப் பத்திப் புதிசாச் சேதி கேக்கிறீங்க ஜில்லா தாண்டி ஜில்லா அவ பேர் போயிருக்கே நீங்க சொல்ற காமாச்சி இருபது வருசத்துக்கு முன்னாலே, சமீபத்திலே எப்பவாவது ஊருக்குப் போகப் போறீங்களா?'

 போகப் போறேன். ஒரு வாரத்துலே.' 

போனா, தஞ்சாவூருக்கு ஒரு டிக்கட் எடுத்துக்கிட்டு அவளைப் போய்ப் பாத்திட்டு வாங்க. ரெயிலை விட்டு இறங்கினதும் ஒரு ஒத்தைமாட்டு வண்டி பிடிச்சு செல்லூர்ச் சொர்ணாம்பா விடுன்னாக் கொண்டு விட்டு விடுவான். ஆனால் போறபோது வெறுங்கையோட போங்க இல்லாட்டி இந்தச் சீமையிலே சம்பாரிச்ச தெல்லாம் நீங்களா அவ காலிலே கொட்டிப்புடுவீங்க. ஆனா வெறுங்கையோட போனாத்தான் என்ன? திரும்பி வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போய் அவகிட்டக் கொடுக்கத்தானே போlங்க அதனாலே நீங்க தஞ்சாவூருக்கும் போக வாணாம், அவளைப் பார்க் கவும் வாணாம்.' 

என்ன ஐயா அவ்வளவு அதிசயமான ரதி' 

"ஐயா, ஏன் இந்த வீண் பேச்சு? நான் சொன்னா நம்ப மாட்டீங்க. போய்ப் பாத்திட்டே வந்திடுங்க. எத் தனையோ லகப் பிரபுவெல்லாம் துணியை உதறிக் கொட்டிப்பிட்டான். வடக்கேயிருந்து ஒரு ஜமீன்தார் வந்து ஒரு வருஷம் அவளைச் சுத்திப்பிட்டுப் போதும் போதும்னு ஒடிப் போனான். நீங்களும் போங்க."

"நம்ம வன்னியரு அதுக்கெல்லாம் மசியறவரு இல்லே. செலவழிக்க நல்ல ஆளைப் பாத்தீங்களே. எனக்குத் தெரிஞ்ச நாளா இந்க ஹோட்டல்லே ஒரு டீ, ஒரு சைவச் சோறு, அதுக்குமேலே சாப்பிட்டதில்லையே இவரு' என்று ஹோட்டல் முதலாளி நையாண்டி செய்தார்.
"நானா செலவழிக்கிறதில்லே ஏய், கொண்டா சொல்றேன், மூணு பிரியாணி!" 

உடனே அந்தச் சீனாக்காரப் பையன் உள்ளே ஓடினான். 

"என்னாத்துக்குங்கராத்திரிப்பத்து மணிக்கு மேலே?" 

பரவாயில்லிங்க. சும்மாச் சாப்பிடுங்க." 

"இல்லிங்க." 

"நீங்க சும்மாயிருங்க." 

பிரியாணி வந்துவிட்டது. அவர்கள் சாப்பிட்டார்கள். வன்னியும் பத்து வருஷத்துக்குப் பிறகு புலவை ருசித்தான். 

"இன்னிக்கு என்ன வன்னியருக்கு ஒரே குஷி கிளம் பிடிச்சி' என்றார் முதலாளி. 

"இந்த மாதிரி பேசற ஆளைப் பார்த்தா ஏனையா செலவு செய்யக்கூடாது பெரிய ஆளு இவரு. அந்தப் பொம்பளே அழகா இருக்கோ என்னவோ, இவரு பேசறத் திலேயே அவளை ரதியா அடிச்சிடுவாரு போல் இருக்கு." 

அப்படினா, நான் என்னமோ ஒண்னுமில்லாத தைப் பெரிசு பண்ணி அளக்கிறேன்னு சொல்லுறீங்க. நீங்கதான் போய்ப் பார்க்கப் போlங்களே. நான் சும்மாச் சொல்லிக்கிட்டுக் கிடப்பானேன் 

சரி, பாத்திடறேன்." 

'நீங்க சொன்ன காமாக்ஷி, ஆடினா, பாடினா, நாடக மாடினா. ஆனா சொர்ணாம்பா சும்மா எதிர்க்க நின்னாப்போதும். பதினாலு லோகமும் அவ காலிலே உளுந்திடும். அவ ஒத்தரையும் ஒண்ணும் கேக்கறதில்லே. தானே கொண்டு கொட்டிப்பிட்டுத் தலையிலே துணியைப் போட்டுக்கிட்டு ஒடற கதிக்கு வறாங்க. இத்தனைக்கும் அவளுக்கு ஆடவும் தெரியாது; பாடவும் தெரியாது. சும்மா ஆள்தான். அதுதான் இப்படிப் பம்பரமா ஆட்டி வைக்குது. நல்லவேளையா இத்தோட விட்டான். ஆண்டவன் ஆட்டம் பாட்டமுன்னு ஏதாவது கொடுத் திருந்தான்; இந்த உலகம் தப்பறதா?

அண்ணே. என்ன பேசிக்கிட்டே இருந்தா எப்பப்ಿ போறது?" என்று அவனுடைய நண்பன் குறுக்கிட்டான்.

“மணி என்ன பத்தரை ஆயிடுச்சா. அப்ப நான் போய் வரேங்க." 

“எந்த   ஊர் உங்களுக்கு?”

“எனக்கு சிதம்பரமங்க கோலாலம்பூர்லே இருக்கேன். ”

 “வந்தா ஊர்ப் பக்கம் வாங்க கொ வாசல் தான். கோவிந்த வன்னின்னாச் சொல்லுவாங்க”

 “சரிங்க, நான் வரட்டுமா?" 

அவர்கள் போய்விட்டார்கள். 

ஹோட்டலில் வேறு ஒருவரும் இல்லை. வன்னி, முதலாளி, சீனாக்காரப் பையன் மூவருமே இருந்தார்கள் .கடை கட்டுகிற சமயம் பட்சன அலமாரியைப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போகுமாறு பையனிடம் விட்டு வீட்டுக்கு ப் போகுமாறு பையனிடம் சொல்லிவிட்டு, டிராயரைத் திறந்து சில்லறையை எண்ணத் தொடங்கினார் முதலாளி. - - 

“அண்ணே, இந்த ஆளு எப்படி பேசறாரு, பாத்தியா?" என்றான் வன்னி. 

“அந்தப் பொம்பளை பெரிய ஆளாகத்தான் இருக்கணும், பேரைச் சொன்னதுமே அவங்களுக்கும் ரெண்டு பியாணி கிடைச்சுது எனக்கும் ரெண்டு பிளேட் வியாபாரமாச்சு. 

அட போங்கண்ணே. அந்தப் பொம்பளெக்காகவா இது அந்த ஆளு பேச்சுக்காகல்ல?" -

 அதிருக்கட்டும். நாலு வருசமா என்னோட பழகிட்டு வரீங்களே, அப்படி இருக்கிறவரு எனக்கு ஒண்ணும் கொடுக்காம. யாரோ முகந்தெரியாத ஆளுக்கு விருந்து பண்ணினிங்களே'

அண்ணே, நீங்கதான் விருந்தாப்பண்ணி எலுலா வயத்தையும் நிரப்புறீங்க. நான் என்னத்தைச் செய்ய உங்களுக்கு?"

உம், சரி.'

'அலுத்துக்காதீங்க. இப்பவே ஒரு பெரிய விருந்தாச் செய்யப்போறேன். உங்களுக்கு."

"என்னாய்யா அது?"

சீனப்பையன் விடைபெற்றுக்கொண்டு போனான். 

"ஒரு உண்மையான சிநேகிதனுக்கு என்னங்க விருந்து செய்யலாம்? இன்னும் நாலு நாளிலே ஊருக்குக் கிளம் பிடப் போறேன். பாஸ்போர்ட்டும் வந்திரிச்சு, உங்களுக் குத் தெரியும் என் ஞாபகம் உங்களுக்கு மறக்காம இருக்கும் படியா ஒண்னு கொடுக்கப் போறேன். சாமான், விருந்து இதெல்லாம் அழிஞ்சு போயிரும் அழியாத சாமானாக் கொடுக்கப் போறேன். இது வரையில் ஒருத் தருக்குமே சொல்லாத, கடவுளுக்கும் எனக்கும் மாத்திரம் தெரிஞ்ச ஒரு ரகசியத்தை உங்ககிட்டே சொல்லப் போறேன். பெட்டியிலே போட்டுப் பூட்டறதுபோல, ஒரு அருமையான சிநேகிதனுக்குத் தான் ஒரு ரகசியத் தைச் சொல்லனும் அதைவிட உசந்த பொருள் கொடுக்க முடியாது.

' வன்னியரே, என்னமோபோல இருக்கீங்க நீங்க இன்னிக்கி. நிதம் பாக்கற வன்னியரா இல்லே. 

'அந்த ஆள் பேசின பேச்சு அத்தனையும், ஒவ்வொரு எழுத்தும் உண்மை. அந்தச் சொர்ணத்துக்கு ஈடா நிக்க ஒரு பொம்பளை இந்த உலகத்திலே இருக்க முடியாது. நானும் இந்தச் சிங்கப்பூர்லே எவ்வளவோ தேசத்துப் பொம்பளைங்களைப் பாத்திட்டேன்; இன்னும் பாக்க றேன், ஜப்பான்காரி, சைனாக்காரி, வெள்ளைக்காரி, பர்மாக்காரி, பஞ்சாப்காரி எவ்வளவோ பாக்கறேன்! ஆனால் அந்தச் சொர்ணாம்பா வீட்டுவாசப்படியிலே கூட இவங்களையெல்லாம் நிக்க வைக்க முடியாது." 

'அப்பன்னா நீங்க பாத்திருக்கீங்களா அவளை' 

'பார்த்தும் இருக்கேன். கிட்டக்க நின்னு பேசியும் இருக்கேன்.' - 

"என்னமோ ஒண்ணுமே தெரியாதது போ ல விசாரிக்ங்ேகளே!_

அவளைப் பத்திப் பேசிப் பேசிக் கேக்கணும்னு நெனச்சேன். பாசாங்கு பண்ணினேன். நீங்க கடையைக கட்டிக்கிட்டு வாங்களேன். இங்கே ரொம்பப் புளுக்கமா இருக்கு பார்க்கிலே போய்க் கொஞ்ச நேரம் உக்காந்துக் கலாமே.'

ஹோட்டல் முதலாளி சில்லறைகளை எண்ணிக் கொண்டிருந்தார். -

கோவிந்த வன்னி எழுந்து வெளியில் போய்க் காற்றாட நின்றான். சிங்கப்பூர் இவ்வளவு அழகாக இரு நாளும் தோன்றியதில்லை அவனுக்கு பார்க்கில் இருளில் ஓங்கி நின்ற மரங்கள். நீல விளக்குகள் ఇఖ வொன்றும் த ன க் கு இன்பம் அளிப்பதற்காகப் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது போல் தோன்றிற்று. சொல்லுக்கு எட்டாத நாளாக யாரிடமும் சொல்லாமல் அவன் இருதயத்தை அழுத்திச் சுமந்து போன அந்த ரகசியம், இப்போது வெடித்து வெளிப் படத்துடித்தது.

முதலாளி ஹோட்டலைப் பூட்டிக்கொண்டு வந்தார். கொஞ்சதூரம் போனதும் வன்னி சொன்னான்.

“நான் இந்தச் சிங்கப்பூருக்கு வந்ததே அந்தச் சொர்ணாம்பாளுக்காகத்தான்.'
என்னது!" -

"ஆமாம். பொண்டாட்டி புள்ளைக்குச் சேர்த்து வைக்கணும்னு வல்லை. அந்தச் சொர்ணாம்பாதான் என் மனசிலே கோயில் கொண்டிருக்கா. அவளுக்காகத்தான் இந்தக் கண் காணாத சீமையிலே வந்து ஒண்டியா நாளை ஒட்டிக்கிட்டு இருக்கிறேன். குண்டு. பீரங்கி, குத்து, வெட்டு இதுக்கெல்லாம் நடுவிலே ஊருக்கு ஓடாமே, உசிரைக் கையிலே புடிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருந்தேன். நல்லவேளையா என் ஆசையும் நெறவேறி டிச்சு. அந்த மனுசன் பேசிக்கிட்டிருந்தாரே, அவரு என் மனசை அறிஞ்சுதான் பேசிக்கிட்டு இருந்தாரோ, என்னவோ போனவுடனே ஒரு டிக்கட்டு எடுத்துக்

கிட்டுத் தஞ்சாவூருக்குப் போன்னாரே' என்னமாத்தான் சொன்னாரோ நான் இந்த ஊரிலே பத்து வருஷம் முன்னாடி காலடி எடுத்து வக்கிறபோதே அப்படிப் போற எண்ணத் தோடதான் வச்சேன். வெறுங்கையாப் போன்னாரே, அப்படிப் போகல்லே. சம்பாதிச்ச தெல்லாம் அங்கேதான் கொண்டுபோகப் போறேன். 

அப்ப ஒரு முதலாளிகிட்ட வேலை செஞ்சிக் கிட்டிருந்தேன்; சுப்பையா உடையாருன்னு பேரு. பெரிய மிராசுதாரு நூத்தைம்பது வேலி நிலம்: காவேரிப் பாசனம் மோட்டார் வெச்சுக்கிட்டிருந்தாரு தஞ்சாவூருக குப் போறபோதெல்லாம் இந்தச் சொர்ணாம்பு வீட்டிலேதான் தங்குவாரு முதல் தடவை  என்னை அளச்சிக்கிட்டுப் போனாரு காரை வாசல்லே நிறுத்திட்டு உள்ளே நுழைஞ்சாரு. பின்னாலே பெட்டி யைத் தூக்கிட்டுப் போனேன் நான். 

வாங்கன்னு குரல் கேட்டது. நிமிந்து பார்த்தேன். இப்ப நினைக்கறப்பவே உடம்பெல்லாம் புல்லரிக்குது. பளிர்னு மின்னல் அடிச்சாப்பலே இருந்தது. அந்த மாதிரி நிறமே நான் பார்த்ததில்லே. கொன்னைப்து பத்து ரெண்டு நாள் ஆணப்புறம் அந்த மஞ்சள் வெள்ளையாப் போயிடுமே. அதுவும் காலை வெயில்லே அதைப் பாத்தா எப்படி இருக்கும்? அந்த நிறம்: தலைமயிர் கரு கருன்னு மின்ன, சுருட்டை சுருட்டை யாகத் தொடை மட்டும் தொங்கிக்கிட்டிருந்தது. நடந்து வராப்பலே இல்லே. மிதந்து வரமாதிரி இருந்தது. கண்ணு, முக்கு. கைவிரல், கால்விரல்மனுஷப் பிறவி இவ்வளவு அழகா இருக்கமுடியுமா? எனக்கு ஒரு சந்தேகம் நிழலாடிச்சு. ஏதோ மோகினியா இருக்குமோன்னு கூட அச்சமாயிருந்திச்சு பூ அழகர யிருந்தா அது சகஜம். பழம் அழகாயிருந்தா அதுவும் தட்ப்புத்தான். ஆனா மனுசப் பிறவி இப்படி இருந்தார். நம்பவே முடியலே. கொஞ்சநாழி எனக்கு ஒண்னும் புரியலே. மண்டையிலே அறஞ்சாப்பலதான் இருந்தது.

"அதே கண்ணோட முதலாளியையும் பார்த்தேன். போய்ச் சோபாவிலே உட்கர்ர்ந்திருந்தாரு இந்த மாதிரிக் கறுப்பை இனிமே பார்க்கவும் முடியாது. பண்ணவும் முடியாது. பள பளன்னு. எண்ணெய் வழியற கறுப்பு. வழுக்கைத்தலை, வாய் நிறைய வெத்திலைக் காவி. புல புல-ன்னிட்டு, பள்ளமும் மேடுமாச் சேனைக்கிளங்கைப் போட்டு முட்டை கட்டினாப்பலே உடம்பு. அவ வீட்டுப் பங்கா இளுக்கக் கூடலாயக்கு இல்லாத லச்சணம். காதிலே வைரக் கடுக்கனும் கை நிறைய வைர மோதிரமும் இல்லாட்டி ஏதோ மூட்டை தூக்கின்னுதான் நெனைக்கனும். அதுவும் மகாராஜன் குடிச்சிப்பிட்டாரோ, அந்த அழகைக் கண்ணைப் பிடுங்கி வச்சிட்டுத்தான் பார்க்கணும்.' 

"அதே கண்ணோட என்னையும் பார்த்துக்கிட்டேன், நிலைக் கண்ணாடியிலே. மூட்டை தூக்க அவரைப் போட்டு, அந்த ஸோபாவிலே என்னைத் தள்றதுக்குப் பதிலா, கடவுள் எதோ அவசர அடியிலே கைப்பிசகா மாத்திப்பிட்டாரோன்னு தோணிச்சு. 

"சொர்ணாம்பா கீளே விரிப்பிலே உக்காந்துக் கிட்டா, நீவாசல்லே போன்னாரு முதலாளி. சிவனேன்னு வாசலுக்குப் போனேன். ஒரு மணி நேரம் களிச்சுச் சமையற்காரி சாப்பிடக் கூப்பிட்டா. அவதான் சோறும் போட்டா. கீழே வேற ஒருத்தரும் இல்லே. 

'மறுநாளும் அங்கேதான் இருந்தோம். அன்னிக்கி வெள்ளிக் கிழமை. காமாஷி அம்மன் கோயிலுக்குப் போனோம். நடந்துதான். முதலாளியும் அம்மா கூடவே வந்தாரு என்னமோ கட்டின புருசன் மாதிரி. கோயில்லே நல்ல கூட்டம், நாங்க நுழஞ்ச உடனேயே கலகலப்பு, சத்தம் எல்லாம் ஒஞ்சு போச்சு. நானும் பார்த்தேன். ஒரு ஆளாவது அந்த அம்மனைப் பாக்கனுமே. பொம்பளைங் களெல்லாம் நேரா அந்த மோகினியைப் பார்த்தாங்க. ஆம்பிள்ளைங்க பயப்பட்டுக்கிட்டே பாத்தாங்க, திருட்டுத் தனமாப் பாத்தாங்க வேறே எதையோ பாக்கறமாதிரி

பாத்தாங்க.. கடாசியிலே சரிதான் போன்னு துணிச்சலாக் கண்ணெடுக்காமலும் பாத்தாங்க. அந்தச் சொர்ணாம் பாளைத் தவிர வேறு ஒரு கண்ணாவது அம்பாளைப் பாக்கலே அவதான் ஒரேயடியா அம்பாளைப் பாத்துக் கிட்டிருந்தா. அந்த அம்மன் லேசாகச் சிரிக்கிறாப்பலே பட்டுது. இத்தனை பேர் தவிக்கிறப்போ, ஒண்ணுக்கும் அசையாம, கண் எடுக்காம, ஒண்னுமே தெரியாதது போல நம்மைப் பார்த்துக்கிட்டிருக்காள்ே என்ன நெஞ்சுரப்பு என்ன துணிச்சல்ன்னு அந்த அழகைப் படைச்சலோக மாதா சிரிக்கிறாப்பலே இருந்தது. அர்ச்சனைத் தட்டுகளை குருக்கள் மார் வாங்கிட்டுப் போனாங்க. ஆனா எல்லாருக்கும் என்ன கொடுக்கிறோம். என்ன வாங்குகிறோம் என்ன செய்கிறோம் என்கிற ஞாபகமில்லாமலே செஞ்சிகிட்டிருந்தாங்க. நானும் சொர்ணத்தைப் பாக்கற போது என் நெஞ்சு குறுகுறுன் னுது அந்த அம்மாவோ அம்மனை விட்டுக் கண்ணெடுக் கலே மனுசர்களை மதிக்கிறதாகவே படலெ. -

ராத்திரித் திண்ணையிலே படுத்துக்கிட்டிருந்தேன். ஒரே நெனப்புனாலேயோ என்னமோ ஒரு கனாக் கண் டேன். அந்தச் சொர்ணம் ரோஜாப்பூ மாலையா மாறிட் டாப்லேயும், முதலாளி பன்னிக்குட்டி ரூபமா மாறி ஊர்ச் சகதியிலே எல்லாம் புரண்டுட்டு, அந்த மாலையைக் களுத்திலே சுத்திக்கிட்டு விளையாடறாப் போலெயும் இருந்திச்சு. 

மறுநாள் காலமே நானும் சமையக்காரியும் கறிகாய் வாங்கறதுக்காக மார்க்கெட்டுக்குப் போனோம். ஒருத்தருக் கொருத்தர் ஊரு, பேரு, குலம், கோத்ரப் எல்லாம் விசாரிச்சுக்கிட்டே. அவளுக்கு மாசம் ஆறு ரூபா சம்பளமாம். சாப்பாடு போட்டு. இதுக்கு முப்பது நாளும் துங்கற வரையில் ஒய்ச்சல் ஒழிவு கிடையாது. இதே கணக்கிலே சம்பாதிச்சுக்கிட்டுப் போனா, அம்மா ஒரு நாளைக்குச் சம்பாதிக்கிற பணத்தை, ஏழெட்டு வருசத் திலே சம்பாதிக்க முடியும்னு ஒரு கணக்குச் சொன்னா அவ. எனக்கும் முதலாளி சாப்பாடு போட்டு ஏழு ரூபா கொடுத்து வந்தாரு நானும் கணக்குப் போட்டேன். எம்பொஞ்சாதியும் ரெண்டுகுழந்தைகளும் சாப்பிடாமலே பட்டினி கிடக்கிறதா இருந்தா, நானும் ஆறேழு வருஷத் திலே அத்தனை பணம் சம்பாதிக்க முடியும். ஒருதரம் நெனச்சுப் பார்த்தேன். எனக்கும் ஒண்னும் புரியலே. ஒரு நாளைக்கா இவ்வளவு சம்பாதிக்கறா அம்மான்னு மறு படியும் கேட்டேன் அவளை. ஆமாமையா, ஆமாம், ஒரு நாளைக்குத்தான் இவ்வளவு. இல்லாட்டி உங்க முதலாளிக்கு இங்கே என்ன வேலை அதுவும் உங்க முதலாளி ராஜ வடிவு பாரு அவருக்கு ரெட்டைப் பங்கு வரி இருக்கும்னு சொன்னா அவ. பொண்டாட்டி பிள்ளை களைக் காப்பாத்தியாகணும். அப்படீன்னாப் பத்துப் பிறவி எடுத்தாலும் நாம் காலனா மிச்சம் பிடிக்கப் போறதில்லே. பாத்தேன். ஒரு மாசமா என் மனசு ஒரு நிலையா இல்லே. தூக்கம் பிடிக்கல்லே. முதலாளிகிட்டே யிருந்து களட்டிக்கிட்டு ஊருக்குப் போனேன். ஊட்டுப் பொம்பளையைச் சமாதானப்படுத்தி நல்ல வார்த்தை சொல்லி, நாலு பவுன்லே அட்டிகை, ஒரு மோதிரம் எல்லாத்தையும் வித்தேன். இங்கே வந்து சேந்துட்டேன்.

'அக்கரைச் சீமைக்கு வந்தா என்ன, சாக்குச்சாக்காவா பணம் கட்ட முடியும் மூட்டை தூக்க எவ்வளவு தெம்பு வேணுமோ அவ்வளவுதான் சாப்பிட்டேன் பெண்டாட்டி பிள்ளைக்கும் துரோகம் பண்ணல்லே. மாசம் பத்து ருவா மேனிக்கு அனுப்பிச்சுக்கிட்டு வந்தேன். சண்டை வந்தது. ரொம்பப் பேர் பயந்துக்கிட்டு ஓடினாங்க. பீரங்கி,குண்டு, குத்து, வெட்டு ஒண்ணும் பெரிசாப் படலே எனக்கு. உசிரைக் கையிலே புடிச்சுக்கிட்டு இங்கியே ஒட்டிக்கிட் டேன். ஜப்பான்காரன் ராஜ்யத்தையும் பாத்தாச்சு. மறு படியும் நெஞ்சிலே சம்மட்டி அடிக்கிறாப்போல வெடியும் குண்டும் வெடிச்சுது. ஆனா என் உசிரு நின்னுது. குருவி சேக்கறாப்பலே சேத்த பணமும் நின்னுது ஏ அப்பா பத்து வருசம் நான் இங்கே வந்து பத்து வருசம் ஆயிடிச்சு.

எத்தனை ஆபத்து, நடுவிலே எத்தனை அதிரல் ஆனா இந்த உசிருக் கவலை பூதம் காக்கிற மாதிரி பணம் காக்கிற கவலை; இத்தனைக்கும் நடுவிலே நான் சேந்தாப் போல் அஞ்சு நிமிஷம் சொர்ணாம்பாளை நெனைக்காம இருந்ததில்லே. எனக்கே ஆச்சரியமா இருக்கு உசிருக்கு ஆபத்து வரப்போ பொண்டாட்டி, பிள்ளை ஞாபகம் உங்களுக்கு வராதா எனக்கு வல்லை அண்ணே. நான் அவளைத்தான் பளிச்சுப் பளிச்சினு நெனச்சுக்கிட்டிருந் தேன். ஒரு பிராணிகிட்ட இதை நான் சொல்லலே இன்னிக்கு அந்த ஆளு வந் த ப் புற ம் எனக்குப் பொங்கிப் பொங்கி வந்திச்சு என் நெஞ்சு வெடிச்சுப் போகும் போல ஆயிடிச்சு. இப்ப கவணையைத் திறந்து விட்டிட்டேன். அப்பாடா!' 

வன்னி பெருமூச்சு விட்டான். பத்து வருஷச் செய்தி வெளியே பாய்ந்து ஓடியதும் சலசலப்பு ஒய்ந்து அவன் நெஞ்சு அமைதியாக நின்றது. பார்க் விளக்குகள் மெளன மாக எரிந்து கொண்டிருந்தன. இலைகள் ஒய்ந்து உறங்கின.

 ம்!' என்று உடல் விரிய ஒரு பெருமூச்சு விட்டார் ஹோட்டல்காரர். 

'அம்மாடா!' என்று சோர்வைக் கழித்தான் வன்னி. ஏழெட்டு மைல் நடந்துவிட்டாற்போல் அவனுக்கு உடல் களைத்து விட்டது. 

வன்னியரே, இது ரொம்ப வேடிக்கையான செய்தி. ஒரு நாள் செலவழிக்கிற பணத்துக்காக, பத்து வருஷம் ராப்பகலா உழைச்சு வயத்தை ஒடுக்கி ஓடாப் போறத் துக்கு என்ன முடை? நீங்க மனுஷப் பொறவி இல்லையா? வித்தியாசமா நெனச்சுக்காதீங்க. எனக்கு ஒண்னும் புரியல்லே. நானும் யோசிச்சு யோசிச்சுப் பாக்கறேன்." 

வன்னி பேசவில்லை.

'அந்த ஒரு நாளிலே எல்லாத்தையும் தீத்துப்பிட்டு, மறுபடியும் உடம்பை வேலைக்குப் பூட்டித்தானே ஆக னும் பிழைக்கனுமே, உசிர் வாழனுமே."

ஹோட்டல்காரர் சரியாகத் தன்னைப் புரிந்துகொன்ன வில்லை என்று சந்தேகப்பட்டுக் கொண்டே மேலும் அழுத்திச் சொன்னான் வன்னி:

அப்புறம் உசிர் வாழனும்னுதான் என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா'

o o o

கப்பல் கரையை விட்டு விலகி நடுக்கடலுக்கு வந்து விட்டது.

ஹோட்டல்காரர் மனைவியுடன் கப்பலுக்கு வந்து வன்னிக்கு விடை கொடுத்தார்.

சிங்கப்பூர் மெல்ல மெல்ல மறைந்தது.

முதல் நாள் முழுவதும் கைலியும் நீலக்கோட்டும் அணிந்திருந்தான் வன்னி. மறுநாள் பொழுது, விடித்ததும் கூட்டத்தோடு கூட்டமாகக் குளித்துவிட்டு, மல்வேஷ்டியை எடுத்து மூலக் கச்சம் கட்டிக்கொண்டு, ஒரு ஜிப்பாவைப் போட்டுக்கொண்டான். கப்பல் டீக்கடை பிரோவின் கண்ணாடிக் கதவில் தன்னை ஒருமுறை பார்த்துக்கொண் டான். காய்கறிவிற்று, மூட்டை தூக்கி, ஹோட்டல் மேஜை துடைத்து இட்லி மாவு அரைத்து, கொத்தனுக்குத் சுண்ணாம்புச் சட்டி தூக்கின.ஆள் என்று அவனை யாரும் சொல்ல முடியாது. உயரமும் அகன்ற முதுகும் லட்சிய சித்தியும் உடைய அவனுக்கு அந்த உடை வெகுநாள் பழக்கப்பட்டது மாதிரி ஒரு தோற்றம் அளித்தது. அவனுக் குத் தான் அந்தப் புதுஉடை முதலில் என்னவோபோல், உடலில் ஒட்டாதது போலக் குறுகுறுத்தது. சுப்பையா உடையார் மாதிரி தன்னை யும் நி  ைன த் து க் கொண் டு, பழಿ இரண்டு நாள் பிடித்தது. நீள முக்கு ஒட்ட வெட்டிய கிராப்பு எதிரே உள்ளதைப் பார்க்காத பார்வை எல்லாம் அந்தஸ்தை உயர்த்திவிட்டன. கம்பியின்மீது சாயநது. வாரி மோதி விழுந்த அலைகளையும் வான வெளியையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வாரம் ஆயிற்று.

காற்று சரியாக இல்லையாம். மதராஸ் இன்னும் இரண்டு நாள் ஆகுமாம். நினைத்த நினைப்பில் எங்கும் போய், எல்லாம் தெரிந்து, எல்லாம் செய்யவேண்டும்போல வாணவெளி அவன் ஆசையைக் கிளப்பிற்று. ஆனால் கப்பலுக்கு அவன் துடிப்புத் தெரியவில்லை. நின்று நின்று, தட்டித் தட்டிச் சென்னையை அடையப் பத்து நாட்கள் ஆயின. 

ஒரு நாள் இரவு ரெயில் பிரயாணம். காலையில் பஸ் ஏறிக் குடவாசலை அடைந்தான்.

 சாமான்களை மாட்டுவண்டியில் ஏற்றும்போது, பொம்மலாட்டம் வெங்கட்டா ஐயர் ஒரு மூட்டை நெல்லைத் தலையில் தூக்கிக்கொண்டு நெல் மிஷினுக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுதே அ வ ரு க் கு ஐம்பத்தாறு ஐம்பத்தேழு வயது எப்படியும் இப்பொழுது அறுபத்தைந்துக்குக் குறையாது. தலையில் இரண்டு கலம் நெல் அந்த நாளில் பொம்மலாட்டத்துக்குப் பாடும் போது, பக்கத்தில் ஒரு செம்பு ஆமணக்கெண்ணெயை வைத்துக்கொண்டு, பாட்டுக்குப் பாட்டு அரைச்சேர் குடித்துத் தீர்த்துக்கட்டுவாராம் வலுவுக்கு என்ன பஞ்சம்! 

ஊரில் ஒன்றும் அப்படி மாறுதல் இல்லை. இரண்டொரு சைக்கிள் வாடகைக் கடைகள் அதிகமாயிருந்தன. ஹோட்டல்கள் இடம்மாறியிருந்தன. அவ்வளவுதான். கடைத்தெருக் கோடியில் தேரைக் காணவில்லை. யுத்த முடையில் வெட்டி விறகாக்கி விட்டார்களாம்.

அவன் பெண் பதினாலு வயது பூரித்துப் பரிசத்திற்குக் காத்துக் கொண்டிருந்தது. கைக்குழந்தை இப்போது ஹைஸ்கூலில் சேர்ந்துவிட்டது. அவளும் அப்படியேதான் இருந்தாள். கொஞ்சம் வயது, சதை வைத்திருந்ததைத் தவிர வேறு ஒன்றும் மாறிவிடவில்லை. தாரை தாரையாக அவள் கன்னத்தில் வழிந்த கண்ணிர் அவனை மறுபடியும் குடும்பஸ்தனாக்கிற்று. அணைத்து அவள் முதுகைத் தடவினான். கப்பலில் ஓரிரண்டு தடவைக்கு மேல் அவள் நினைவே வரவில்லை. இதுவா மனுஷத் தனம் என்று கேட்டுக்கொண்டான். நெஞ்சு குழம்பிற்று. ஊசலாடினான்; தயங்கினான். 

சாப்பிட்டதும் தூக்கம் பிடிக்க நேரமாயிற்று. அதுவும் மூன்று மணிக்குக் கலைந்து விட்டது; உதறிக் கொண்டான். உலுக்கிச் சஞ்சலத்தைச் சிலிர்த்து எறிந்து விட்டுக் கும்பகோணம் போகிறதாகக் கிளம்பிவிட்டான். 

அக்கரைச் சீமையிலிருந்து வந்தவனுக்கு எவ்வளவோ வேலை இருக்கும். அவள் பேசாமல் இருந்துவிட்டாள். 

o - o 

தஞ்சாவூர் வரும்போது இருட்டி இரண்டு நாழிகை யாகிவிட்டது. ரெயிலடி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வன்னி வேகமாக நடந்தான். மாறுதல் ஒன்றும் தெரிய வில்லை. மணிக்கூண்டுக்கு அப்பால் புதிதாக முனிசிபல் ரேடியோ நிலையம் முளைத்திருந்தது. பெயர் தெரியாத வாத்தியம் ஒன்று. சாகிற பூனை மாதிரி முனகிக்கொண் டிருந்தது அப்போது. எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு புதுச்சினிமாக் கொட்டகை. இன்னும் கொஞ்ச தூரம் நடந்ததும் பழகின குரல் ஒன்று கேட்டது. ராமர், கிருஷ்ணர் படம் எழுதும் எதிராஜு, இடிந்து பொக்கை விழுந்த திண்ணையில், அழுக்கும் கி ழி ச லு மாக உட்கார்ந்து, ஒட்டி உலர்ந்த ஒரு நோஞ்சான் குழந்தை யைக் கொஞ்சிக்கொண்டிருந்தான். வருஷம் தவறினா லும் அவனுக்குப் பிள்ளை தவறுகிறதில்லை. 

புதிது புதிதாக லாண்டரிகள்: தஞ்சாவூர் பெரிய ஊராகத்தான் போய்விட்டது. 

இன்னும் சற்றுத் தூரம் வந்தான் வன்னி. நெஞ்சு படபடத்தது. வயிற்றில் இருந்தாற்போல் இருந்து ஒரு கணம். நீலச் சுண்ணாம்பு அடித்த அந்த வீடு அதோ வந்துவிட்டது. அவன் உடல் முழுதும் சூடேறி நிலை கொள்ளாமல் பரந்தது. கால் இற்றுப் பலம் இழந்து விட்டது. எப்படியோ.நடந்தான்.
இரும்புக் கேட் திறந்திருக்கவே சரேலென்று உள்ளே நுழைந்தான்.

"யாரது?" 

'அம்மா இருக்காங்களா?"

 இருக்காங்க"

 'வன்னி உள்ளே நுழைந்தான்.

"யாரு?" - 

'இன்னும் யார் இருக்காங்க?"
 
“வேறே ஒருத்தரும் இல்லை, ஏன்?" 

'பார்க்கணும்.' 

"யார் ஐயா அது? 

"ஆமாம்.' 

'அட, வன்னியரல்லே ஆளே மாறிப்போயிட்டியே 

வன்னி திரும்பினான். நடை விளக்கு குப்பென்று எரிந்தது. திண்ணையிலிருந்து கேட்டுக்கொண்ணடிருந்தவள் நடைக்கு வந்தாள்.

 என்ன ஐயா, இதோ நிற்கிறேனே தெரியல் - - தெரியல்லியா? கணணுதான தெரியலே, காது கூடவா கேக்கல்லே?" என்றாள். - 

"யாரு, அம்மாவா?" வன்னி பதறிவிட்டான். கண்ணை  அகற்றிப் பார்த்தான் அவன் வாய் அடைத்துவிட்டது.

கொன்னைப்பூ நிறம் அப்படியே அற்றுப்போய் உடல பச்சை பாய்ந்து கறுத்திருந்தது. கூனல், வெகுநாள் கூனல் போல் தோள்பட்டையிலும் க ன் ன த் தி லும் எலும்பு முட்டிற்று தலை முக்கால் நரைத்து விட்டது. வகிட்டுக் கோட்டில் வழுக்கை தொடங்கி அகன்றிருந்தது. 

வன்னி பார்த்தான். - 

அந்த உடலில் சதையே மறந்துவிட்டது. மணிக்கட்டு முண்டு தோலை முட்டிற்று. புறங்கை நரம்பு புடைத்து இநளிந்தது. தோலில் பகையற்று வற்றி உலர்ந்த சுருக்கம் சிரிக்கும்போது தேய்ந்த பல்வரிசை தெரிந்தது. எத்தனை பழகின குரலா இருக்கு."நிமிஷம் ஆயிற்று அவனுக்கு

எங்கேருந்தையா வரே'

சிங்கப்பூரிலிருந்து.'

சிங்கப்பூரிலிருந்தா 

ஏ. அப்பா அங்கே எங்கையா போனே?"

உனக்காகத்தான்."

எனக்காகவா? அந்த ஏகவசனமான அழைப்புத்தான் அவளுக்கு வியப்பைத் தந்தது.

ஆமாம். உனக்காகத்தான் போனேன். ஆனா உன்னை இப்படிப் பார்க்கணும்னு இல்லே. அன்னிக்குப் பார்த்த மாதிரி பார்க்கனும்னு போனேன். சமையற்காரி சொன்னா, அம்மா அறுநூறு துதி ஒரு நாளைக்குச் சம்பாதிக்கிறான்னு, கிளம்பிட்டேன். பத்து வருஷமா மனலை எண்ணிப் போடறாப்பலே சேர்த்தேன். குண்டு பிரங்கிக்கெல்லாம் அசையலே, தூங்கலே, மாடு மாதிரி பாடுபட்டேன். நாலுநிமிஷம் சேர்ந்தாப்போல உன்னை குந்த கடுதாசிக் கவரை எடுத்துப் பிரித்து ஏழெட்டு நூறு ருபாய் நோட்டுகளை வைத்தான். அவன் கை நடுங்கிக் கொண்டிருந்தது.

அந்த அழகு போன இவன் விக்கிப்போய் அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே நின்றது. வன்னி அந்தத் தேய்ந்த பல்லையும் மஞ்சளிட்ட கண்ணையும் பச்சை பூத்த தோலையும் வெறித்துப் பார்த்துக்கொண்டே கல்லாக நின்றான்.

என்ன உடம்பு உனக்கு'

உடம்புக்கென்ன? ஒன்றும் இல்லை. வயசு கொஞ்சமா ஆச்சு' 


வயசாடிச்சா" என்று அவளைப் பார்த்தான் அவன் அழகில்லாதது கோரமாகலாம். அழகு கோர மானால்? பயங்கரமாக இருந்தது அவளுடைய தோற்றம்.

"ஆமாம்" என்றாள் அவள். முப்பதுக்கப்பாலே வருஷம் பத்தாகக் கூட்டியாகணும். நாற்பது ஐம்பது, அறுபது எழுபது என்பது தொண்ணுாறு அடுத்த ஆடிக்கு நூறு பிறந்திடும். நான் தரசி ஒரு வருவம் எனககு பதது வருஷம் என்னைப் போல அழகே இல்லேன்னு ஆயிரம் வாய் சொல்லிக் கேட்டிருக்கிறேன். முகத்துக்குத் சொன்னதில்லே அது. இந்த நிலைக் கண்ணாடியே சாட்சி. பார்த்த பேரெல்லாம் மடங்கி மடங்கி நெருப்பிலே விழுகிற மாதிரி விழுந்தாங்க. நெருப்பு எரிய எரியக் குப்பையும் கரியும் அதிகமாகத் தானே இருக்கும்?"

வண்ணி அதிர்ந்துபோய், நினைவிழந்த மாதிரி நின்றான். பேசத் தோன்றவில்லை.

 இழந்த மாதிரி "நானும் மல்லுக்கு நின்னுதான் பார்த்தேன், முடியலே. போனது வராட்டாலும் இருக்கிறதை வச்சுக் கலாம். அதுவும் முடியலே. இந்த மாதிரி விஷயங்களிலே யாரால சண்டைபோட முடியும் பணமா? காசா?' 

பஹ்ம்?' என்றான் வன்னி. 

தலங்கிடக்குறதுக்கு முறை உண்டு. கண்டதுக் கெல்லாம் தவங்கிடந்தா மனசுதான் ஒடியும் தண்டனை தான கிடைக்கும். இப்படி வா' என்றாள் அவள். 

இந்தா என்று அவனைத் தழுவி முத்தமிட்டாள். அவன் கண் முடியிருந்தது.

 "இதை அறுபது வருவத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தா, நீ படற சந்தோஷமே வேறே. ஆனா...நான் இந்த மாதிரி எப்பவும் நெறைஞ்சு ஆனந்தப்பட்டதே கிடையாது. இவ்வளவு மனசோடே நெறஞ்சு எதையும் பாத்ததில்லே. இப்ப எப்படி இருக்கு தெரியுமா? நான் ரொம்ப இளமையா ரொம்ப அழகா இருக்கிறாப் போல இருக்கு: -

புருவத்தைச் களித்துக்கொண்டே ஒரு நிமிஷம் அவள் அண்ைப்பில் கண்னை மூடிக்கொண்டு நின்றான் அவன். பிறகு கீழே கிடந்த நோட்டுக்களைச் சேர்த்து அடுக்கி அவன் சட்டைப்பைக்குள் வைத்தாள் சொர்ணம்.

சாப்பிட்டாச்சா'

ஆச்சு..

காலமே ஆறேகாலுக்குக் கும்பகோணத்துக்கு வண்டி இருக்கு."

இல்லை. போட்மெயிலிலே போகப் போறேன். இப்பப் போனாச் சரியா இருக்கும்.

ஆனால் உடனே போக முடியவிலலை அவனால். கால்மணி நேரம் பேசாமல் சோபாவில் உட்கார்ந்தான். பிறகு அவள் கொடுத்த பாலையோ எதையோ சாப்பிட்டு விட்டு வாசல்படி இறங்கினான்.

யாரோ வெகுநாள் திட்டமிட்டு அவனை முட்டாளாக அடித்து விட்டதுபோல் அவனுக்குத் தோன்றிற்று.

தெருக்கோடியில் வெற்றிலை பாக்குக் கடையில் வெற்றிலை, சீவல் வங்கிப் போட்டுக்கொண்டு, அங்கேயே சோடா பாட்டில்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, பத்து வருஷங்களை அசைபோட ஆரம்பித்தான்.

 கலைமகள்
அக்டோபர். 1952