Pages

Tuesday, May 03, 2016

பாலாவோடு பணிபுரிந்த நாட்கள். - சத்யஜித்ரே : நிழல் -1

பாலாவோடு
பணிபுரிந்த நாட்கள்.
- சத்யஜித்ரே
www.padippakam.com
(தமிழர் கலைகள், கலைஞர்கள் பலர் இன்றுள்ள ஊடகங்களால் மறைக்கப்பட்டே உள்ளனர். அவர்களில் ஒருவர் பாலசரஸ்வதி. இவர் தஞ்சையின் பாரம்பரிய ஆடலிசை குடும்பத்தின் வாரிசு. இவருடனே தமிழிசை ஆடற்கலை மரபு முடிந்துவிட்டது. இவரைப் போன்று அபிநயம் பிடிக்கவோ, முத்திரைக் காட்டவோ யாரும் இல்லாத சூழலில், இவரை ஆவணப்படம் மூலம் ரே உலகிற்கு விட்டுச் சென்றுள்ளார். இனி அவரே சொல்கிறார்கேட்போம்.)
"அது 1935ம் வருடம். வங்காள இசை பற்றிய ஒரு மாநாடு கல்கத்தா செனட் ஹாலில் அப்போது நடந்து கொண்டிருந்தது. வட்டவடிவிலான முகத் தோடும், நீண்ட கைகளோடும் கூடிய ஒரு நெடிதுயர்ந்த பெண் அரங்கினுள் தன் நடன அசைவுகள் மூலம் எங்கும் வியாபித்து கொண்டி ருந்தாள். செனட் ஹாலில் நான் இதுவரை கண்டிராத அற்புத நடனம் அது. கல்கத்தாவில் நடைபெற்ற முதல் பரதநாட்டிய நிகழ்ச்சியும் அதுதான். ஏகோபித்த பாராட்டு தல்களோடு தன் முதல் நிகழ்வை அற்புதமாய் வெளிப்படுத்திய பாலாவின் அந்த நடனம் இன்றும்
நினைவில் இருக்கிறது. ஒவியம் இயக்குனர் அவித்தன்
அப்போது நான் பள்ளியில் பயிலும் மாணவனாக தெற்கு கல்கத்தாவிலுள்ள மாமா வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தேன். "ஒபேரா போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தும் ஹரீன்கோஷ் என்பவர் மாமாவின் குடும்ப நண்பராயிருந்தார். ஹரீன் கோஷ்தான் வட இந்தியாவில் பாலாவை எல் லோருக்கும் அறிமுகப்படுத்தினார். 3 அல்லது 4 வருடத்துக்கு பிறகு ஹரீன்த்ரா உதயசங்கரின் முதல் நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியை காண்பிப்பதற்காக எங்களை அவர் கல்கத்தாவிற்கு அழைத்து சென்றார்.
அப்போதுதான் அவர் பரதநாட்டியம் பற்றியும் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் கலைஞர் பாலசரஸ்வதி பற்றியும் விரிவாகவே பேசினார். கல்கத்தா நடனநிகழ்ச்சிக்கு முன்னர் சிறிது
காலத்திலேயே, இந்திய சாஸ்திரிய நடனத்தில் பாலா மிகப் பெரிய ஆளுமையாக உருவானார்.
பின்னர் 1966ல் எனது நண்பர் டாக்டர் நாராயணமேனன் பாலசரஸ்வதி பற்றிய குறும்படம் ஒன்றை எடுக்க வேண்டுமென்று என்னிடம்
கூறியபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு துறையில் சிறந்த கலைஞரை பதிவு செய்வது என்பது அக் கலைஞரை மட்டுமின்றி, "கலை" யின் உன்னதத்தையும் பதிவு செய்வதே ஆகும் என்ற நோக்கில் பாலாவைப் பற்றிய "டாக்கு மென்டரி எடுப்பதென முடிவாயிற்று. கல்கத்தாவில் நான் பாலாவை சந்தித்த போது அவரும் படம் எடுக்க வேண்டும் என்ற தனது கருத்தையும் முனைப்புடன் கூறினார். ஏதோ ஒரு சில காரணங்களால் படம் எடுப்பது தள்ளி போய்க் கொண்டேயிருந்தது. எங்கள் திட்டத்தை எது முறியடித்தது என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை. திரைப்பட தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் படைப்பாளிக்கு, ஏற்படும் எத்தனையோ இழப்புகளில் இதுவும் ஒன்றுதான் என அந்த இழப்பை ஒருவித ஞானச் செருக்குடன் தாங்கிக்
கொண்டேன்.
பிறகு ஒரு 10 வருடம் கழித்து அதே நண்பர் மூலம் பாலாவைப் பற்றி அரை மணி நேர குறும்படம் எடுக்கும்படியான வாய்ப்பு வந்தது. நான் எனது குழுவினருடன் சென்னைக்கு வந்தேன்.
பாலாவின் வீட்டை நோக்கி அன்று காலை நாங்கள் பயணப்படும் போது, அவர் வாழ்வின் முதற்கட்ட வளர்ச்சியை தவறவிட்டு விட்டோமோ என்ற ஒரு லேசான வருத்தம் மனதை நெருடிக் கொண்டேயிருந்தது. "58 வயதில் பாலாவை படம் எடுப்பது என்பது, பாலாவை பற்றி படமே எடுக்காமல் இருப்பதைவிட எவ்வளவோ மேல் என்று எனக்கு நானே சமாதானம் கூறி தேற்றிக் கொள்கிறேன். உள்ளே துழையும் போது, அவ்வீட்டு நுழைவாயில் என்னை வியப்பிலாழ்த்துகிறது. அப்போது நீரழிவு நோய் காரணமாக பாலா எடை குறைந்து காணப்பட்டாலும், ஜீவிதத் துடிப்பும் பேரமைதியும் ததும்பும் முகத்துடனேயே காட்சியளித்தார். பாலா குடும்பத்தின் புகழ்மிக்க மூதாதையர்களின் புகைப்படங்கள் வரவேற்பரை சுவரை அலங்கரித்து கொண்டிருந்தன. மிகுந்த உற்சாகத்துடன் காற்றோட்டமிக்க அந்த அறையில் "காபி' அருந்தியவாறே திரைப்பட விவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தோம்.
பாலாவால் நாங்கள் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும், அவரால் பேச முடியாததால் அவருடைய மகள் லட்சுமி வாயிலாகவே நாங்கள் கருத்து பறிமாற்றம் செய்து கொண்டோம். பாலா பேசிக் கொண்டிருக்கும் போதும், அமைதியாய் கேட்டு கொண்டிருக்கும் போதோ, அல்லது ஒரு மோன நிலையில் உட்கார்ந்திருக்கும் போதும் நீண்ட கரங்களிலிருந்து அவரது விரல்கள் மட்டும் இடைவிடாது நர்த்தனம் புரிவதை நான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தேன்.
நடனத்தின் உச்சத்தை நோக்கி விரிந்து பரவும் ஒரு பேரமைதியின் தொடர்ந்த வடிவாகவே அக்காட்சியை என்னால் உணர முடிந்தது.
காட்சிகளை அமைப்பது பற்றி பாலாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, லட்சுமிபாலா சம்பந்தப்பட்ட அனைத்து போட்டோ ஆல்பங்களையும், பத்திரிகைகளில் வெளிவந்த பேட்டிகள், கட்டுரைகள் குறிப்புகள் அடங்கிய
தகவல்களை சில நிமிடங்களிலேயே மேஜை மேல் வைத்து விட்டு சென்றாள். பலமணி நேரம் அவற்றை நாங்கள் ஆராய்ந்து தேவையானவற்றை தேர்வு செய்து கொண்டோம்.
நடனத்திற்கு அப்பால் பாலாவின் வீட்டில் நடைபெறும் சில காட்சிகளையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் எனது விருப்பத்தை அவரிடம் கேட்டேன்.
ஒரு நாட் பொழுதை எவ்வாறு கழிக்கிறீர்கள்? என்று கேட்ட போது, பெரும்பாலான நேரங்களில் தனக்கு பிடித்த மலர்கள் நிரம்பிய தோட்டத்திலும், மீதி நேரங்களில் சமையலறையிலும் செலவிடுவதாக கூறினார். (சமையலிலும் அவர் கைதேர்ந்தவர் என்பதை நாங்கள் அன்று உணர்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது).
இதுதவிர தினமும் பூஜை செய்வது, லட்சுமிக்கு நாட்டிய வகுப்பு எடுப்பது, "பாஷா என்ற அவளுக்கு பிடித்த விளையாட்டை அவளுடன் சேர்ந்து விளையாடுவது, எப்போதாவது நண்பர்களுடன் பொழுது போக்குவதையும் குறிப்பிட்டார்.
நீங்கள் குறிப்பிட்ட சிலவற்றை படத்திற்காக பதிவு செய்யலாமா என அவரிடம் கேட்டபோது, சமையல் காட்சியைத் தவிர "நீங்கள் விரும்பிய எதையும் செய்யலாம்' என்று அனுமதித்தார். சமையலறையில் என்னை நீங்கள் போட்டோ எடுப்பதை அனுமதிக்கவே மாட்டேன் என்று உறுதியாகவும் கூறினார்.
உங்கள் மகளோடும், இரண்டு சகோதரர்களோடும் சேர்ந்து நீங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை படம் எடுக்கலாமா..? (ரங்கா, விஸ்வா என்ற இரு சகோதரர்களும் விடுமுறையில் அப்போதுதான் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள்)
தாராளமாக எடுக்கலாமே என்று அனுமதித்தார். அப்போது லட்சுமி கண்சிமிட்டியவாறே என்னிடம் வந்து "நீங்கள் மிகவும் யதார்த்தமாக படம் அமைய வேண்டுமென விரும்பினால், அம்மாவின் சாப்பிடும்
தட்டுக்கருகே இருக்கும் இன்சுலின் நிறைந்த சிறுகுப்பியையும் படம் எடுங்கள்" என்று அம்மா கூறியதாக தன் விருப்பத்தை என்னிடம் மொழிபெயர்த்தாள்.
பாடலோடு கூடிய இசையின் நுட்பங்களை உணர்த்தும் வண்ணம் 'பதம்' நடனத்தின் உச்சஸ்தாயியை வெளிப்படுத்தும் வர்ணம் ஆகிய
இரண்டு இசையுலகின் கூறுகளையும் சூட்டிங்கிற்காக தேர்வு செய்தோம். 40 வருடங்களுக்கு முன்பு நான் கல்கத்தாவில் கேட்ட எல்லோராலும் பாராட்டப்பட்ட "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" என்ற பதத்தையே படத்திலும் சேர்க்க முடிவு செய்தோம்.
சென்னையிலிருந்து 20 மைல் துரத்தில் மகாபலிபுரம் செல்லும் வழியில் மிக ரம்மியமான சூழலில் யாருமற்ற தனிமை சூழ்ந்த அக் கடற்கரை பகுதியை சூட்டிங்கிற்கான இடமாக தேர்வு செய்தோம். திறந்த வெளியும், இயற்கை வெளிச்சமும் கூடுதல் பலமாக இருந்தது. வர்ணம் பகுதியை மட்டும் ஸ்டுடியோவின் செயற்கை வெளிச்சத்தில் கருப்பு பின்புலத்தில் எடுப்பதாக திட்டமிட்டிருந்தேன்.
சூட்டிங் நாளன்று நாங்கள் கடற்கரைக்கு சென்றபோது சற்று கடுமையாகவே தென்றல் காற்று வீசியதை உணர்ந்தேன். (அன்றுதான் எங்களுக்கும் சென்னையில் கடைசிநாள்)
நான் மிகுந்த மனக்கலக்கத்துடன், பலத்த இந்த காற்றினால் உங்கள் நடனத்திற்கு ஏதும் இடையூறு ஏற்படுமா என வினவியபோது, பரவாயில்லை. என்னால் சமாளித்து கொள்ள முடியும் என்றார்.
ஒரு சூட்சுமமான கணத்தில் அபிநயம் செய்த அதே கைகள் காற்றில் மேலெழும்பி வரும் தனது ஆடையையும் ஒரு சேர சரி செய்தவாறே நடனமாடியது. இவ்விதம் பாலாவைப் போல் வேறு யாரும் பரிணமிக்க முடியுமா என்று தெரியவில்லை.
படத்தின் இறுதிக் காட்சிக்காக "மோகமானாஎன்ற வர்ணத்தை அவரே தேர்ந்தெடுத்திருந்தார். இந்த வர்ணம் மூலம் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களை அவரால் மெய் மறக்கச் செய்ய இயலும் என்பதை நான் அறிவேன். இதற்காக வீட்டில் அவர் ஒத்திகை பார்த்து வருவதையும் அறிந்திருந்தேன். லட்சுமியிடம் குறிப்பிட்ட இந்த வர்ணம் எவ்வளவு நேரம் வரும் என்று கேட்டபோது, "படத்திற்காக அம்மா இதை வெறும் 12 நிமிடத்திற்கு சுருக்கியுள்ளார் என்றும், மேலும் அவரால் இதை குறைக்க முடியாது என்றும் கூறினாள்.
நான் மிகுந்த எதிர்பார்ப்புடன், நடனத்தை ஒரே ஒரு ரீலில்தான் பதிவு செய்ய முடியுமென்றும், இல்லாவிடில் தொழில் நுட்ப வரையறை காரணமாக தவிர்க்க முடியாமல் இசையில் சிறிது தடங்கலும் ஏற்படும் என்பதை உணர்ந்து வர்ணத்தின் காலஅளவை இன்னும் சற்று குறைத்தால் நல்லது என்று அவரிடம் கூறி விடலாமா என்ற யோசனையில் இருந்தேன்.
இப்படித்தான் சில தொழில்நுட்ப காரணங்களினால் (78 RPM கிராமபோன் ரெக்கார்டு) புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் கூட தங்களின் 3 நிமிட காயல் (Khayals) இசை நிகழ்ச்சியை முழுவதுமாக இயலாமல் போனதுண்டு.
கடைசியாக நான் பாலாவிடம் காமிராவிலுள்ள ஃபிலிமை ஒவ்வொரு 5 நிமிட இடைவெளியிலும் சீர் செய்ய வேண்டுமாதலால் அவர் தனது நடனத்தைபகுதிகளாக பிரித்தால் நன்றாயிருக்கும் என்றேன். ஆனால், அவர் அதற்கு முன்பாகவே தனது நடனத்தை பல்வேறு யூனிட்டுகளாக பிரித்து வகைப்படுத்தியிருந்தார்.
காமிராவுக்கு ஏற்றார் போல் வளைந்து கொடுக்காமல் தனது நிகழ்ச்சியின் தரம் நன்றாக அமைய வேண்டுமே என்ற ஒரே நோக்கிலேயே அவர் இதை செய்திருந்தார்.
மேன்மையை அடைவதற்கான அவரது அயராத உழைப்பு சிறுவயதிலேயே அவரது தாயார் மூலம் வித்தாக ஊன்றப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
"பார்வையாளர்களில் குறைந்தபட்சம் ஆர்வமுடைய யாரோ ஒருவனாவது "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதை எப்போதும் கவனித்து கொண்டே இருக்கிறான்"இதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் என்று பாலா கூறுகிறார்.
'வர்ணம்' பகுதியை நான் படமாக்கி கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் அக்கலை நிகழ்வால் உந்தப்பட்டு படிப்படியாய் பரவச நிலையை அடையும் போது, காமிராவும் பாலாவின் பிரகாச முகத்தை பதிவு செய்த சுகானுபவத்தில் மூழ்கி திளைத்து கொண்டிருந்தது...!
O தமிழாக்கம் - மு. இசக்கியப்பன் நன்றி சங்கீத் நாடக அகாடமி (தேசிய நிகழ் கலை மையத்தின் (NCPA) காலாண்டு இதழில் டிசம்பர் 1976 ல் சத்யஜித்ரேயால் பாலாவின் நினைவாக எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்)

O