Pages

Saturday, May 14, 2016

கருஞ்சுழி - வ.ஆறுமுகம் : காலச்சுவடு ஆண்டுமலர் 1991

கருஞ்சுழி - வ.ஆறுமுகம் : காலச்சுவடு ஆண்டுமலர் 1991

www.padippakam.com
கருஞ்சுழி
வெங்கட் சாமிநாதன்

கருஞ்சுழி தமிழ் நாடக உலகில் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது.
இந்நாடகத்தைப் பொறுத்தவரை மொழி ஒரு தடையல்ல. கருஞ்சுழியில் சொல்ல வந்தவை எல் லாம் காட்சி ரூபமாகவே வெளிப்பட்டன கதைத் தன்மையும், கைவிட்டு, கருத்து காட்சி அனுபவமாக உருக்கொள்கிறது. இந்நாடக இயக்குநர் வ. ஆறுமுகமும் - தமிழ் நாடகமும் - தம் கடந்த காலத்திலிருந்து முழுவதும் விடுபட்டிருப்பது இதன் ஒவ்வொரு அம்சங்களி லும் தெரிகிறது.
சங்கீத விழாவின் ஒரு பாகமாக தில்லி டிரீராம்
நாடக அகாதமியின் நாடக
சென்டரில் மேடையேற்றப்பட்ட கருஞ்சு
சொல்லாடலையும்
இருத்தலுக்கான மனித ஜீவியின்போராட்டம் மற்றும் சகோதரத்துவத்திற்கான தேவை இவை தான் நாடகத்தின் கரு.
மிகப் பெரிய வெள்ளப் பெருககு மனிதர்கள் அதில் தத்தளிக்கிறார்கள் வேகமாக வரும் நீர் அவர்களை அடித்துச் செல்கிறது. நீண்ட போராட் டத்திற்குப் பிறகு, ஒரு சிறிய நிலப்பகுதியில் கரை சேர்கிறான் ஒருவன். மற்றொருவனும் நீரில் தத்த ளிப்பதைப் பார்த்து அவனை கரை சேர்க்கிறான் இவன். இருவருக்குமிடையில் நட்பு தோன்றுகி றது. ஆனால் மூன்றாவதாக ஒரு மனிதன் அவர்க ளோடு சேர்ந்துகொள்ள முயலும்போது, அவர்க ளின் ஒற்றுமை குலைகிறது. இருவரில் ஒருவன் மூன்றாமவனைக் கரை சேர்க்க முயல்கிறான். மற் றவன் அவனைக் கீழே தள்ள முயல்கிறான். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு மூன்றாமவ னுக்கு இடம் கிடைத்து விடுகிறது. நாலாவதாக
காலச்சுவடு
127
ஒருவன் கரையேற முயலும்போது, இந்தப் போராட்டம் மீண்டும் நிகழ்கிறது. சற்று உக்ரமாக
இதன்பின், இந்த நால்வருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு விடுகிறது இருக்கும் இடத்தில் நால்வ ரும் தொற்றிக் கொள்வது என்ற முடிவுக்கு வருகி றார்கள். இந்த சமயத்தில் மேலேயிருந்து ஒருரட்ச கன் தோன்றி, ஒரு நூலேணி வழியாக கீழிறங்கி வருகிறான். தான் வைத்த சோதனையில் அவர் கள் நால்வரும் வெற்றி பெற்றது குறித்து தான் சந்தோஷப்படுவதாகக் கூறுகிறான். அந்த நூலேணி வழியாக, வேறு பிரதேசத்திற்கு அவர் களை அவன் அழைத்துச் செல்கிறான். அது ஒரு பரந்த வெளி அங்கிருந்து அவர்களால் தப்பிச் செல்ல முடியாது. அவர்கள் முயலும்போது எதிரே சுவர் எழுகிறது. அவர்கள் அங்குதான் வாழ்ந்தாக வேண்டும், தங்களால் இயன்றதைச் செய்து கொண்டு. மனிதனின் இருத்தலுக்கான போராட்டம், இதைத் தொடர்ந்து காட்சிகளில், பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது.
நாடகத் தயாரிப்பில் இரண்டு சாதனங்கள் மட் டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நூலேணி மற்றும் இரண்டு துணிகள் காட்சிகளின் தேவைக் கேற்பதுணிகளை மிகத்திறமையாகப் பயன்படுத் தியுள்ளார் இயக்குநர்.
நாடகத்தில் பேச்சு மிகக் குறைவு நாடகத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்நாடகத்தின் பலவீனமான அம்சமே பேச்சு தான். பேச்சின்போது, வார்த்தைகளோடு உடல சைவுகளும் வெளிப்படுகின்றன. நிஜ வாழ்க்கை யில் கூட முக பாவங்களும் உடலசைவுகளும் பேச்சு சொன்னதை தாமும் சொல்வதாக வெளிப்படுபவன அல்ல. இந்நாடகத்தில் உடல சைவுகள் பேச்சு இல்லாமல் வெளிப்படும்போது, அவை வன்மையாகவும் அர்த்தபூர்வமாகவும் வெளிப்படுகின்றன.
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com

கருஞ்சுழி - வ.ஆறுமுகம்
பலத்த இடியோசை கேட்கிறது. காற்றின் வேகம் மேலும் கூடுகிறது. இடது முன்மேடையில் அமர்ந்துள்ள் பெண் பலவிதமான அதீத பாவங்களோடு உடலை முறுக்கி வளைத்து வேதனைகளை வெளிப்படுத்துகிறாள். திடீரென்று உறைநி லையை அடைகின்றாள். ஒருவனை இடது முன் மேடையிலிருந்து பலத்த காற்று வேகமாக அடித்து வருகிறது. அவள் சோர்ந்து விழுந்து பழைய நிலையை அடைகிறாள். அவன் பின்புறமாய் உருண்டு உருண்டு வலது கோடி வரை அடித்து வரப்படுகிறான். காற்றின் ஓசை குறைகிறது. நிற்க முயல்கிறான். ஒசை கூடுகிறது.மிகுந்த போராட்டத்துடன் இவனும் மேடையின் மையத் தில் உள்ள மேட்டை நோக்கி முன்னேற முயற்சிக் கிறான்
கறுப்புத் துணியில் கற்றிக்கொண்டு மேடையில் உருண்டு வந்தவர்கள் மீண்டும் உருண்டு வருகின்றனர். இவன் அவர்களுக்கு இடையில் புகுந்து புகுந்து வர முயல்கிறான். பலசமயம் அவர்களின் அடியில் மாட்டிக்கொண்டு ஓலமிடுகிறான். இரண்டு பேர் சேர்ந்து முட்டிக்கொண்டு அவர்களுக்குகிடையில் அவர்களை விலக்கி குதித்து வருகிறான். ஒரு சமயம் அவர்களின் மேல் கால் வைத்து மிகுந்த சிரமப்பட்டு ஏறி குதித்து வருகிறான். இப்போது அவன் மேடையின் மைய மேட்டின் அடுத்துவருகிறான்.மேலே உள்ளவனை தனக்கு உதவும்படி கையை நீட்டு கின்றான். மேலே உள்ளவன் இவனை கவனித்ததாகத் தெரியவில்லை. இரண்டாமவன் மேட்டை எட்டிப் பிடிக்கும் தருவாயில் கறுப்பு துணியில் உருண்டு கொண்டிருக்கும் ஒருவன் வேகமாக உருண்டு வந்து இவனை இடித்து மோதுகிறான். இருவரும் உருண்டு உருண்டு வலது கோடிக்கு வருகின்றனர். கறுப்புத்துணியில் உருண்டவர்கள் வெளியேறுகின்றனர். இரண்டாமவன் மீண்டும் மேட்டை நோக்கி முன்னேற முயற்சிக்கிறான். பின்னால் பயங்கர ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மேட்டின் அருகில் வருகிறான். மேலே இருப்பவன் இவனைக் கவனிக்கிறான். ஆனால் அவன் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இரண்டாமவன் மேட்டைப் பற்றிக்
கொள்கின்றான். மிகவும் கஷ்டப்பட்டு மேலே ஏறிக்கொள்கிறான். இரண்டாமவனுக்கு இடம் தருவதற்காக முதலாமவன் நகரவோ அசையவோ செய்வதில்லை. தலையை மட்டும் திருப்பி இரண்டாமவனைப் பார்க்கிறான். இரண்டாமவன் கால்களை மட்டும் மேடையில் வைத்தநிலையில் அவனோடு ஒட்டியபடி இருக்கிறான். இருவருக்கும் மெல்லிய உரசல்கள் ஏற்படுகின்றன. இரண்டாமவன் மெள்ள மெள்ள கூடுதல் இடத்தை தன்வசப்படுத்த முயற்சிக்கிறான். முத லாமவன் எதிர்க்க முயற்சிக்கிறான். ஆனால் தன் முடிவை மாற்றிக்கொண்டு அவனுக்கு இடம் அளிக்கிறான். சற்று நேரம் அமைதியில் கடக்கிறது. பின்னால் கேட்டுக் கொண்டிருந்த பயங்கர ஒசைகள் மாறி தனிமையைப் பிரதிபலிக்கும் ஓசை கேட்கத் தொடங்குகிறது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள் கின்றனர். புன்முறுவலுற்றுக் கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதற்கான பாவனைகள் செய்கின்றனர். தங்களின் இயலாமையையும் தனிமையையும் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். மெள்ள ஒருவரை ஒருவர் பிடித்துக் கொள்கின்றனர். இருவரும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். சற்று நேரம் அமைதியில் கடக்கிறது.
திடீரென்று பயங்கர இடியோசை கேட்கிறது. இருவரும்பயத்தால் கூச்சலிடுகின்றனர். கட்டித்த ழுவிக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் சப்தம் இடியோசையால் மறைந்து போய் விடுகிறது. சில வினாடிகள் அமைதி, சில வினாடிகள் கழித்து பின்னரங்கில் பலத்த கூச்சல் கேட்கிறது. இருவ ரும் பயத்தால் கட்டித்தழுவிக் கொள்கின்றனர். கற்றும் முற்றும் திரும்பிப் பார்க்கின்றனர். மேலே நோக்குகின்றனர். பின் தலையைக் குப்புற வைத்து உடலைச்சுருக்கி ஒடுங்கி படுத்துக்கொள்கின்றனர். சற்று அமைதி. இரண்டாமவன் மெல்ல தலையைத் துக்கி இடது வசம் பார்க்கிறான். பேரோசை கேட்கிறது. உடனே மயான அமைதி நிலவுகிறது. இரண்டாமவன் மீண்டும் தலையைத் துக்கிப்பார்த்து,
காலச்சுவடு
130
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
WWW.padippakam.com
இர: உலகமே அழிந்து விட்டதா?
முத: அழிந்து விட்டதாக எப்படிச் சொல்வது?
      நாம் உயிரோடு இருக்கும்போது
இர: நாமும் அழிந்துவிட்டால் உலகம் அழிந்து
     விட்டதாக அர்த்தமா?
முத: நம்மைப்போல் யாரேனும் தப்பி
     யிருந்தால்!
இர: முடியுமா?
முத: ஏன் முடியாது?
இர: அவன் எங்கே இருப்பான்?
முத: இருப்பான்!
இர: இருக்கலாம் ஆனால் அதற்கு ஓர் இடம்?
முத: அப்படியானால் எல்லா இடமும் .....?
இர: எல்லாம் அழிந்து விட்டன....
முத: ஒன்றும் பாக்கியில்லை
இர: ஆமாம். ஒன்றும் பாக்கியில்லை
     (அமைதி) (திடீரென்று) ஐயோ. அப்போ....
     இந்த இடம்
முத: இதுவும்.
இர: அழிந்துவிடுமா?
முத; அதற்கான சாத்தியமே அதிகம்
இர: அப்படியானால் நாம்....?
முத: இருக்க மாட்டோம்...
இர: பின் என்ன ஆவது (அமைதி) எங்கே
      போவது?
முத: போவதற்கு ஓர் இடம் வேண்டாமா?
இர: வேறு உலகத்திற்கு...
முத: அது நம்மால் முடியுமா?
இர: அதற்கு புஷ்பக விமானம் வேண்டும்
முத: (அமைதி). இர: புஷ்பங்கள் இங்கே உதிர்ந்துவிடும். 
\முத: கிருஷ்ணனைக் கூப்பிடு. கோவர்த்தன 
     கிரியை குடையாய்ப் பிடித்துக் கொள் வான்.
இர: நின்று பிடிக்க அவனுக்கும் ஓர் இடம் 
    வேண்டாமா? எல்லா இடமும்தான் மூழ்கி 
   விட்டதே! 
திடீரென்று பலத்த இடியோசை கண்ணைப் பறிக்கும் மின்னல்கள். இருவரும் கட்டிப்பிடித்த வண்ணம் தலையைப் புதைத்துக்கொண்டு படுத் துக் கொள்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. இடியோசை கூடுகிறது.
காலச்சுவடு
131 ஆண்டுமலர் 1991
படிப்பகம்

________________
www.padippakam.com
மூன்றாவது ஒருவன் வலக்கோடியிலிருந்து உள்ளே நுழைகிறான். மிகுந்தப் போராட்டங்க ளுக்கு இடையில் மேட்டை நெருங்குகின்றான். ஆனால் பின்னால் அடித்துச் செல்லப்படுகின்றான்.
இர: அதோ.. அதோ...
முத: என்ன... என்ன?
இர: அங்கே பார். ஒருவன்.
முத: யார். ஆலிலைக் கிருஷ்னனா?
இர: அவனும் இங்கேதான் வர முயற்சிக்கி 
    றான்.... ஆனால்.... முடியாது .... அவனை
முதலாமவன் பழையபடியே படுத்துக்கொள்கி றான். இரண்டாமவன் மூன்றாவதாக வருபவ னைக் காணாதவனைப்போல் எதிர்புறம் திரும்பி முதலாமவன் மேலே சாய்ந்து ஒட்டிக்கொள்கி றான். மூன்றாமவன் மெள்ள மேட்டின் அருகில் வருகிறான். அதை எட்டிப்பிடிக்கிறான். மிகுந்த சிரமத்துடன் மேலே ஏற முயற்சிக்கிறான். இரண் டாமவன் அவனைக் காணாதவனைப்போல அவன் ஏறுவதை கால்களால் தடை செய்கிறான். முதலாமவன் எந்தவித சலனமும் இன்றி இருக்கி றான். மூன்றாமவன் எப்படியோ ஏறி கால் வைத் துக் கொள்ளக்கூடிய நிலையில் மெள்ள ஏறி நின்று கொள்கிறான். இரண்டாமவனைப் பிடித் துக் கொண்டு நிற்க முயல்கிறான். மூவரும் நிலைத்து நிற்க முடியாமல் தள்ளாடுகின்றனர். இரண்டாமவன் மூன்றாமவனைப் பிடித்து கீழே தள்ளி விடுகிறான். முதலாமவன் அவனை கோபத்தோடு நோக்குகின்றான். மூன்றாமவன் மீண்டும் ஏற முயற்சிக்கின்றான். இரண்டாமவன் அதை தடை செய்கின்றான்.
முத விடு அவனை. அவனும் வரட்டும்.
இர: இருவருக்கே இடமில்லை! அவனும் வந்
    தால்? 
முத: மூன்று பேர். மும்மூர்த்திகள் போல.
இர: பிறகு மும்மூர்த்திகளுமே அழிய வேண்டி
    யதுதான்!
முத இல்லை அவனும் வரட்டும்.
இர என்னால் அனுமதிக்க முடியாது.
முத இருவர் தப்பித்தோம் என்று இருந்தோம்.
     மூன்று பேர் தப்பித்திருக்கிறோம்.
இர அவனும் வந்தால் மூவருமே பிழைத்திருக்
     கமாட்டோம்.
முத! உன்னைப்பற்றியும் நான் அப்படிநினைத்
     திருந்தால்....
இர: இப்போநானும் அவனும் மட்டுமே இருந்தி
     ருப்போம். -
முத: அப்படியானால் இப்போ அதைச் செய்.
     உன்னுடன் அவனைச் சேர்த்துக்கொள்!
இர: அது என்னால் முடியாது. நீ என் நண்பன்.
    அவன் உன் எதிரி அல்லவே!
இர: அவனும் வந்தால் மூவரும் அழிவது
     உறுதி.
முத: இல்லை என்றால் மூவரும் காப்பாற்றப் 
     பட்டு விடுவோமா?

இர இருவர் காப்பாற்றப்படுவது உறுதி.
அப்படியானால் அவன் காப்பாற்றப்படட் டும்?
இர: நீ என் நண்பனாகிவிட்டாய்.
முத:
முத: அவனையும் நீ நண்பனாக்கிக் கொள்ள
     லாம்.
இர: நான் உன்னுடன் பழகி விட்டேன்.
முத: அவனுடனும் நீ பழகிக் கொள்ளலாம்.
இா: அவனும் வந்தால் அழிவது நிச்சயம்
முத அழிவது எப்பொழுதுமே நிச்சயம்!
மூன்றாமவன் முயற்சி செய்து ஏறுகிறான். முத லாமவன் அவனுக்குக் கை கொடுத்து உதவுகி றான். இரண்டாமவன் மெளனமாக இருக்கிறான் மூன்றாமவன் ஏறியதும் அவர்கள் இருந்த நிலை யில் மாற்றம் ஏற்படுகின்றது. ஒருவராலும் நிலை
காலச்சுவடு
132
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
WWw.padippakam.com
யாக நிற்க முடியவில்லை. ஒருவரையொருவர் அனுசரணையாகப் பிடித்துக் கொண்டும் கட்டிக் கொண்டும் கால்களால் பின்னிக்கொண்டும் பல நிலைகளில் மாறி மாறி தத்தளிக்கின்றனர். ஒரு வன் அடியில் உட்கார்ந்தும் ஒருவன் அவன் மீது ஒட்டியபடி கவிழ்ந்தும் மற்றவன் நின்றும் இப்படி பல நிலைகளில் நிற்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கின்றனர். பின்னால் கேட்டுக் கொண்டிருக்கும் ஒலியில் ஒருவிதமான அமைதி யைக் குறிக்கும் ஓசை எதிரொலித்துக் கொண்டி ருக்கிறது. மூவரும் அந்த நிலையிலேயே அசை யாமல் இருக்கின்றனர். (நிறுத்தம்) ஒளி மங்குகி றது. மீண்டும் பலத்த ஓசைகள் கேட்கத் துவங்குகி றது. ஒளி மெல்ல அவர்கள் மேல் விழுகின்றது.
இர: இது ஒயவே ஓயாதா? 
முத: எல்லோரையும் அழித்து விட்டுத்தான்
     நிற்கும்
இர: எத்தனை நாள் இப்படியே? 
மூன்: இதற்கு ஒரு முடிவே இராதா? 
முத: நாம் முடிந்துவிட்டால் அதுவும் முடிந்துவி
      டும். 
இர: பின் உலகில் மனித இனமே அழிந்துவிடும் 
முத; பரிணாமத்தால் மனிதன் மீண்டும் உண்
     டாகிக் கொள்வான்
இர: அதற்கான சூழ்நிலை அப்போதுநிலவுமா? 
முத: யுகப்பிரளயம் முடியும். மீண்டும் ஜீவராசி
      கள் ஓரறிவாய்
இர: ஈரறிவாய்,
மூன்: மூவறிவாய,
முத: நாலறிவாய், இர: ஐயறிவாய்,
மூன்: ஆறறிவாய்.
முத: (திடீரென்று அலறலுடன்) வேண்டாம், வேண்டாம் ஆறறிவு:இனி உலகில்         எந்த
காலச்சுவடு
133
     ஜீவராசிக்கும் சிந்திக்கத் தெரிய வேண் 
     டாம். இதுவரை சிந்தித்ததே போதும், சிந் 
     திக்கத் தொடங்கும் முன்பே மீண்டும் 
     யுகப் பிரளயம் நிகழட்டும். மீண்டும் உயிர்கள்
ஓரறிவாய், ஈரறிவாய், மூவறிவாய், நாலறிவாய், ஐயறிவாய்...... 
இர: மீண்டும் ஓர் யுகப்பிரளயம், 
மூன்: இப்படி முடிவேயில்லாது.
இர : அப்போ நாம்?
முத: நாம் வாழ்வதற்கான சூழல் இனி இவ்வுல
கில் ஒரு போதும் வராது. ஒளிமங்கி மீண்டும் வருகிறது. பின் அரங்கில் பலவிதமான ஒலங்கள் கேட்டுக்கொண்டே இருக் கிறது. மூவரும் தங்கள் நிலைகளில் மாற்றம் இன்றி அசையாது இருக்கின்றனர். வலது பின் மேடையிலிருந்து மீண்டும் இன்னொருவன் உள்ளே நுழைகின்றான். அவனும் மைய மேட்டை நோக்கி முன்னேற முயற்சிக்கிறான். அவனும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறான். மீண் டும் மீண்டும் பின் நோக்கியும், சுழற்றியும் அடித் துச் செல்லப்படுகிறான்.
இர: அதோ..... அதோ...
மூன்: என்ன? இர: அதோ இன்னொருவன். முத: யார் ஆல் இலைக் கிருஷ்ணனா? யுகப்
பிரளயத்தில். ஆல் இலை மேலே.... இர: ஆல் இலை கிருஷ்ணன். முத: ஓர் இலையும் பாக்கி இல்லை. இர: எல்லாம் அழிந்து விட்டன.
மூன்: இவனை?
இர: அவனும் வரட்டும்.
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com
முத: மூவர் இல்லை. நால்வர்.
நான்காமவன் மேட்டை நெருங்கும் முயற்சி யில் வட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றான். மற்ற மூவரும் தங்கள் நிலைகளில் மாற்றம் இன்றி இருக்கின்றனர். நான்காமவன் மேட்டின் மீது ஏற முயற்சிக்கிறான். அது அவனுக்கு மிகுந்த சிரம மாக உள்ளது. மீண்டும் மீண்டும் கீழேத் தள்ளப்ப டுகிறான். மற்ற மூவரும் அவனுக்கு உதவத் தொடங்குகின்றனர். ஒருவன் மெல்லத் தன் கையை நீட்டுகிறான். அவன் எட்டிப்பிடிக்க முயல்கிறான். வேறு ஒருவன் தன் ஒருக்காலை நீட்டுகிறான். அவன் அதைப்பிடித்துக் கொண்டு மேட்டின் மேலே ஏறுகின்றான். நால்வரும் அங்கே நிற்பது என்பது மிகவும் கஷ்டமாக உள் ளது. ஆனாலும் ஒருவரை ஒருவர் சேர்த்துப் பிடித்த வண்ணம் ஒருவர் மேல் ஒருவராகவும் காலின் அடியில் குனிந்தும் பல நிலைகளில் மாறி மாறி நால்வரும் நிற்க முயற்சிக்கின்றனர். மீண் டும் காற்றின் ஒசையும்புயலின் சீற்றமும் அதிகரிக் கிறது. நால்வரும் தத்தளித்தபடி மேட்டின் மேலேயே காலம் கடத்துகின்றனர்.
நிசப்தம், ஒளி மங்கி மீண்டும் வருகின்றது. விடியலைக் குறிக்கும் இசை ஒலித்துக் கொண்டி ருக்கின்றது. நான்கு பேர்களும் விழித்து எழுகின் றனர். ஆகாயத்தினை நோக்குகின்றனர். மேலே இருந்து ஒரு கயிறு இறங்கி வருகின்றது. மெல்ல மெல்ல வருகின்றது. இவர்களின் கைகளில் தட்டு கின்றது. இவர்கள் அதனை ஆவலுடன் பிடித்துக் கொள்கின்றனர். அதைப் பிடித்துக் கொண்டு மேலே ஏற முயற்சிக்கின்றனர். கயிறு கீழே வந்து கொண்டேயிருக்கின்றது. நான்கு பேர்களும் இழுத்து இழுத்து மேலே ஏற முயற்சிக்கின்றனர். வேகமாக ஏற முயற்சிக்கின்றனர். கயிறு வந்து கொண்டே இருக்கின்றது. திடீரெனக் கயிற்றின் மற்றமுனை வந்து விழுந்து விடுகின்றது. கயிற் றின் மறுமுனையை எடுத்துப் பார்க்கின்றனர். கயிறு முடிவுற்றுவிட்டது அவர்களுக்கு நம்பிக் கையின்மையைத் தருகின்றது. விரக்தியடைந்து தங்களை நோக்குகின்றனர். கயிற்றுக்குள் தாங்கள் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்கின்றனர். தங் கள் மேல் சுற்றியுள்ளக் கயிறுகளை எடுத்து தங்
களை விடுவிக்க முயற்சிக்கின்றனர். ஒருவன் விடுவிக்கும் கயிறு அடுத்தவன் மேல் சுற்றிக் கொள்கிறது. அடுத்தவன் விடுவிக்கும் கயிறு அடுத்தவனை. இது தொடர்ந்து சிக்கல்கள் இன் னும் அதிகமாகிக் கொள்கின்றன. இவர்கள் செய் வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மேடையில் இருள் பரவுகின்றது. மேட்டின் மீது மட்டும் இலேசான ஒளி. மீண்டும் மேடை முழுவதும் பிரகாசமான ஒளி தோன்றி உடனே மறைகின்றது. எங்கும் இருள். இவர்கள் மீது இலேசான ஒளி. நால்வரையும் மேலே இருந்து ஏதோ ஒன்று அழுத்துவதாகஉணர்கின்றனர். அத னால், அவர்களில் நிலை நிற்பு மேலும் மோசம் அடைகின்றது. நால்வரும் சேர்ந்து எதிர்கொள்ள முயல்கின்றனர்
இர: என்ன இது? இப்படி அழுத்துகிறது மூன்: தலைக்கு மேலே. (ஏதாவது அழுத்து
கிறதா என்று பார்க்கிறான்) முத: வெட்டவெளி நான் இந்த அழுத்தம்? இர: இந்த காரிருள் ? மூன்: கருஞ்சுழி அண்டங்களை விழுங்கி.
ஆகாயத்தையே விழுங்கி ... இப்போது பூமியை, இன்னும் சற்று நேரத்தில் கருஞ்சுழியின் வாய்க்குள் பூமி பிறகு, நாம்.
விஷ்ணுவராக அவதாரமாய் கோரைப்பற் களிலே பூமியை ஏந்திக் கொண்டு.
முத:
இர: அப்போ நாம் காப்பாற்றப்பட்டு
விடுவோம்.
மூன்: இந்த அழுத்தத்தையும் தாங்கிக்
கொண்டு பிழைத்திருந்தால்: நான்: தாங்குங்கள்!
இர: பிடித்துக் கொள்
காலச்சுவடு
134
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com
மூன்: விட்டுவிடாதே....
முத: விழுந்தால் நால்வரும்.
மூன்: தப்பிப் பிழைத்திருந்தால்....?
இர: நமக்காக மிஞ்சுவது ஏது?
நான்: உலகமே நமக்குத்தான்
இர: எல்லாம் அழிந்துவிட்டது.
முத: யாரேனும் பிழைத்திருக்கலாம்
இர: எங்கே? (அழுத்தம் அதிகரிப்பதாக உணர்ந்து தாங்கிப் பிடித்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்ற னர்.)
இர: ஆகாயம் இடிந்து விழுகின்றதா?
எல்லோரும் கைகளை உயர்த்தி மேலே இருந்து அழுத்துவதைத் தாங்கிப் பிடிப்பதாகப் பாவித்துக்கொண்டே ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் உள்ளனர். அப்போது மேலே இருந்து ஓர் நூல் ஏணி இறங்கி வருகிறது. இது அவர்கள் கைகளில் தட்டுகிறது. எல்லோரும் அதைப் பிடித் துக்கொள்வதா வேண்டாமா என்ற ஐயத்துடனும் அதிசயத்துடனும் பார்த்துக் கொள்கின்றனர். அப் போது மேலே இருந்து ஒருவன் படிகளில் இறங்கி வருகிறான். பாதிப்படிகள் இறங்கியதும் அங் கேயே நின்று கொள்கிறான். நால்வரும் அவனை மிகுந்த ஆச்சரியத்துடன் நோக்குகின்றனர். மேலே உள்ளவன்: நீங்கள் நால்வரும் காப்பாற்றப் பட்டுள்ளீர்கள். ஒருவன் மட் டுமே காப்பாற்றப்படுவதாக இருந்தது. அதற்காகவே இந்த இடம். ஒருவன் மட்டும் பாது காப்புடன் தங்குவதற்கு, அதை நால்வர் பகிர்ந்து கொண்டிர்கள். அதனால் நீங் கள் நால்வருமே காப்பாற்றப் பட்டுள்ளீர்கள். நான்: நீங்கள் யார்? அவன்: அதை காலம் வரும்போது உணர்ந்து
கொள்வீர்கள்
காலச்சுவடு
135
இர: நாங்கள எபபடிக் காப்பாற்றப்பட்டோம்?
அவன்: எந்தவிதமான நிபந்தனையும் இன்றி
முத: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்.
அவன்: எங்கு செல்லவேண்டுமோ அங்கி
(......
மூன்: அப்படியானால் நீங்கள்...?
இர: நீங்கள் யார்? (அமைதி)
அவன்: சூத்திரதாரி
நால்வரும்: சூத்திரதாரியா?
அவன்: இந்நாடகத்தின் சூத்திரதாரி
முத: அப்படியானால், இவையனைத்தும் நாட கம் தானா? (பிரபஞ்சத்தையே சுட்டிக் காட்டுகிறான்)
அவன்: எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்
கள்.
முத: இல்லை. இது நாடகம் இல்லை. எவ்வ ளவு இன்னல்?... எவ்வளவு கஷ்டம். எல்லாம் வெறும் நடிப்பா? வெறும் நாட கமா...?
அவன்: காலம் வரும்போது உணர்ந்து
கொள்வீர்கள்
இர: எப்போது?
அவன்: நாடகம் முடியும்போது
f
ன்: எப்போ முடியும்?
அவன்: காண ஆட்களே இல்லாதபோது
நான்: இதில் என்னால் நடிக்க முடியாது. எனக்கு
வேண்டாம் இந்த வேடம். (முகத்தைக் கைகளால் துடைக்கின்றான்.)
நான் செல்கிறேன்.
அவன்: எங்கே?
நான்: அணியறைக்கு (இறங்கிச் செல்ல முயல்கி
றான்)
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
-
WWW.padippakam.com
அவன் அது உன்னால் முடியாது. வேடம் தரித்து
விட்டால் நடித்துத்தான் தீரவேண்டும்.
நான்: இவ்வளவு கஷ்டப்பட்டா? என்னால் முடி
யாது. நான் செல்கிறேன்!
அவன்: உன்னால் முடியாது!
நால்வரும் வலதுபுறம் நோக்கிக் செல்கின்ற னர். அங்குள்ள இரண்டு பெண்களும் கறுப்புத் துணியைத் துக்கிப் பிடித்து வழியை மறைத்து விடுகின்றனர். மேற்பக்கம் செல்கின்றனர். அங் குள்ளப் பெண்கள் கறுப்புத்துணியைத் துக்கிப்பி டித்துக் கொள்கின்றனர். இடப்புறம் ஓடி வருகின் றனர். கறுப்புத்துணியைத் துக்கிப் பிடித்து வழி மறைக்கப்படுகிறது. முன் பக்கம் ஓடி வருகின்ற னர். கறுப்புத் துணி மேலே எழும்புகிறது. அவர் கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். கற் றும் பார்க்கின்றனர்.
நான் எப்படி இங்கு வந்தேன். இந்த வேடம் எப்ப
டிப் போட்டுக் கொண்டேன்?
அவன் ஆராய்ச்சி வேண்டாம். உங்கள் பிரச்
ögöGT, (நால்வரும் மீண்டும் பழைய நிலைக்கே வருகின்றனர்.) நீங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
நான்: எப்படி?
அவன் நான் சொல்கிறபடி கேளுங்கள்
இர கேட்டால்?
அவன் காப்பாற்றப்படுவீர்கள். இதைப்பிடித்துக்
கொண்டு மேலே ஏறி வாருங்கள்
முத: உங்களை எப்படி நம்புவது?
(அவர்கள் ஒவ்வொருவராக ஏணியைப் பிடித்துக் கொள்கிறார்கள்)
அவன் மரணத்தின் பிடியில் சிக்கியிருந்தும் உங் களுக்கு என்மீது நம்பிக்கை வரவில்லை.
முத: மரண பயத்தால் மட்டுமே எல்லோரையும்
காலச்சுவடு 136
ஆண்டுமலர் 1991
படிப்பகம்

________________
www.padippakam.com
நம்பவைத்துவிட முடியுமா?
அவன்: உங்களுக்கு என்மீது என்ன சந்தேகம்?
இர: நீங்கள் யாரென்பது தெரியவில்லை.
அவன்: பாதுகாப்பான இடத்தில் இருந்து வருகி றேன். உங்களைப் பாதுகாக்கும் நிலை யில் இருக்கிறேன். இது போதாதா? உங் கள் செயல் என்னை உங்கள் அருகில்
இறக்கிக் கொண்டு வந்துவிட்டது. இல்லை! நீங்கள் அவ்வளவு உயர்ந்துவிட்
டீர்கள்.
மூன்: நீங்கள் கடவுளா?
அவன்: உங்களைக் காப்பாற்றும் வல்லமை
படைத்தவன்.
நான்: காப்பாற்றி எங்கே கொண்டு செல்லப்போ
கின்றீர்கள்?
அவன்: இப்போது உங்களை என்னுடன்
கொண்டு செல்வது இயலாத காரியம்.
அப்படியானால் எப்படிக் காப்பாற்றுவதா கச் சொல்கிறீர்கள்?
(UPÉE :
உங்களுக்கென்று ஓர் தனி இடத்தை ஏற்ப டுத்திக் கொடுக்கின்றேன். தற்சமயம் நீங் கள் அங்கே இருக்கலாம். பிறகு உங்க ளைப் பழைய இடங்களுக்கேத் திருப்பிக் கொண்டு விடுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. இர: நிபந்தனை இல்லாமல் காப்பாற்றுவத்ாகச்
சொன்னீர்கள்?
அவன்:
அவன்: நிபந்தனைக் காப்ப்ாற்றுவதற்கு அல்ல. அங்கிருந்து செல்வதற்குத்தான்.
இர: அப்படியானால், காப்பாற்றப்படுதல் என்ப
தன் அர்த்தம் என்ன?
(அமைதி) நான் என்ன நிபந்தனை?
அவன்: உங்களிடம் ஒப்படைக்கப்படும் அந்த இடத்தை பயன் உள்ளதாக மாற்றும்
காலச்சுவடு
அன்று, பழைய இடங்களுக்குக் கொண்
டுவிடப் படுவீர்கள்
முத: இது என்ன திறந்த வெளிச்சிறையா?
அவன்; வேறு வழியில்லை.
: அந்த சிறையிலிருந்து விடுதலை?
அவன் . அது உங்கள் கையில், சம்மதமா?
(நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்)
இர: எங்களுக்கு சிந்திக்கச்சற்றுநேரம்கொடுங்
களேன்.
அவன்: மரணத்தின் பிடியில் சிந்தனையா?
மூன்: நாங்கள் கலந்து ஆலோசிக்க
அவன்: அதற்கெல்லாம் நேரம் இல்லை. காப்பாற் றப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இன்னும் பலர் காத்துக் கொண்டிருக்கி றார்கள். அவர்களையும் நான் உடனே சென்று காப்பாற்ற வேண்டும்.
நான்: உங்கள் விருப்பப்படியே நடக்கிறோம்.
அவன்: சரி, எல்லோரும் மேலே ஏறிக்கொள்ளுங்
&6ss, அவன் வேகமாக நூல் ஏணியில் ஏறி மறைகி றான், நால்வரும் ஒவ்வொருவராக ஏணியைப்பி டித்துக் கொண்டு ஏறிக் கொள்கிறார்கள், விளக்கு நால்வரை மட்டும் காட்டுகிறது.
நால்வரும் ஏறி மறைகின்றனர். அவர்கள் பய ணம் செய்வதைக் குறிக்கும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கிறது. பூரண இருள் சற்று நேரத் திற்கு நீடிக்கின்றது. மீண்டும் ஒளி வரும்போது அவர்கள் பழையபடி ஏணியில் ஏறிக்கொண்டே காட்சி தருகிறார்கள். சற்று அமைதிக்குப்பின் நால் வரும் கீழே ஆவலுடன் பார்க்கிறார்கள். ஒன்றும் நிகழவில்லை. மீண்டும் மேலே பார்க்கிறார்கள். மீண்டும் கீழே நோக்கி பார்க்கிறார்கள். ஒன்றும் நிகழவில்லை. மீண்டும் மேலே பார்க்கிறார்கள்.
இர: அவர் போய்விட்டாரே.....?
மூன்: இப்போது நாம் என்ன செய்வது?
ஆண்டுமலர் 1991
—"
படிப்பகம்
________________
--- www.padippakam.com
நான் இன்னும் சற்றுமேலே
(சற்று மேலே ஏறுகிறார்கள்) முத: (திடீரென்று மேலேப் பார்த்தவண்ணம் கையை மேலேக் கட்டிக்காட்டி) அங்கே
பார்: ஏணி அறுந்துபோய்த் தொங்குகிறது: இர: கீழே விழப்போகிறோம். முத இல்லை
இர: இனிமேலேப் படிகள் இல்லை
(அவன் தலையை மட்டும் மேல் திரைக் குள் விட்டுப்பார்க்கிறான்).வெறும் குனி யம்தான் மூன்: நம்மை ஏமாற்றி விட்டாரோ? இர: நாம் ஏமாற்றப்பட்டோம். நான் இனி எங்கே செல்வது?
முத: நமக்காக ஓர் இடம் ஏற்படுத்திக்கொடுப்ப
தாகக் கூறினாரே? மூன்: சொர்க்கத்திலா? நரகத்திலா? முத: நாம் சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்ல முடியாது. நாம் இன்னும் உயி ரோடு இருக்கிறோம்.
இர: எங்கே இருக்கிறோம்?
நான் அந்தரத்தில்
முத: திரிசங்கு போல், விசுவாமித்திரனால் உட லோடு சொர்க்கத்திற்குள் புக முயன்றதிரி சங்கு போல் ஆனால் அவனுக்கு சொர்க் கத்திற்குத்தான் போகிறோம் என்று ஒரு தீர்மானம் இருந்தது. நாம் சொர்க்கத் திற்கோ நரகத்திற்கோ போக முடியாது. ஏனென்றால் நாம் இன்னும் உயிரோடு இருக்கின்றோம்.
இர: எங்கே இருக்கின்றோம்?
நான் முடிவிலாப் பயணத்தில்
காலம் இல்லா ஒரு கணத்தில்
இடம் ஒன்றில்லா ஓர் இடத்தில் திறந்த கண்களோடு கனவுகளோடு மூடிய கண்ணுக்கும் திறந்த கண்ணுக்கும் வித்தியாசம் இல்லாமல் காரிருளில் காலம் கடந்த ஓர் தூரத்தில் இடம் கடந்த ஓர் காலத்தில் கருஞ்சுழியின் கருவுக்குள் காலம் இடம் எல்லாம் கரைந்து போகும் ஓர் கனவில் எல்லாமே வெறும் கனவுகளாய் திறந்த கண்களின் கனவுகளாய் (மெளனம்)
இர: அதோ கனவுகளை நனவாக்கும் ஓர் ஒளி மூன்: புள்ளியாய் முத: பூரண வெண்மையாய் நான் நம்மை நோக்கி
முன்னோக்கி. முன் நோக்கி புதியதோர் உலகம் கடவுள் நமக்காக உண்டாக்கிய உலகம் நம் காலடியில்.
ஒரு அதிசய ஒலி கேட்கத்துவங்குகிறது. அது மெல்ல பரவி அரங்கம் முழுதும் வியாபித்துநிற்கி றது. நூல் ஏணியில் உள்ள நால்வரும் கீழே ஆவ லுடன் நோக்குகின்றனர். அவர்கள் மீதிருந்த ஒளி மங்கலாகிறது.
மேடையின் வலது புறத்திலிருந்து ஒரு பிரகா சமான ஒளிக்கற்றை மேடையின் மையத்தை நோக்கிப்பாய்கிறது. ஒரு பிரம்மாண்டமான பரப் பளவு கொண்ட சதுரமான வெள்ளைத் துணியை அதன் ஒரு பக்கத்தின் மையத்தில் தலையில் முக் காடுபோலப் போட்டுப் பிடித்துக் கொண்டு அந்த துணியிலே தன் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு ஒருவன் மிக மெல்ல வானவெளியில் நடப்பவன் போல நடந்து அதை இழுத்துக் கொண்டு வருகிறான். அவன் முன்பு ஏணியில் வந்தவனாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஒரு
காலச்சுவடு
138 ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
WWW.padippakam.com
வனாகவும் இருக்கலாம். அவன் நேரே மேடை யின் மையத்தை நோக்கி வெள்ளைத் துணியை இழுத்துக் கொண்டு
செல்கிறான். அவன் இழுத்துச் செல்லச் செல்ல
துணி மேடை முழுவதும் அலை அலையாகப்
பரவிக்கொண்டே வருகிறது. நான்கு மூலைகளில் அமர்ந்திருக்கும் பெண்களின் மேல் ஒளி விழுகி றது. அவர்கள் தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். வலதுபுறம் உள்ள இரு பெண்கள் துணியின் இரு மூலைகளைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அவன் வெள்ளைத் துணியை மேலும் மேலும் முன்நோக்கி இழுத்துக் கொண்டே செல்கிறான். இடதுபுறம் வரை செல்கி றான். இடதுபக்க திரைகளுக்குள்ளே சென்று மறைகின்றான். மற்ற இரண்டு பெண்களின் கைக ளுக்கும் வெள்ளைத்துணிகளின் மற்ற இரு முனை களும் செல்கின்றன. அந்தப் பெண்களும் துணி யைப் பிடித்துக் கொள்கின்றனர். ஏணியில் இருக் கும் நால்வரும் கீழே இறங்கிவருகின்றனர். வெள் ளைத் துணிமேல் இறங்கி நிற்கின்றனர். கூர்ந்து நோக்குகின்றனர். ஏணி மேலே சென்று மறைகின் றது.
நால்வரும் வெள்ளைத் துணியின் மீது பல நிலைகளில் நின்று கூர்ந்து நோக்கியும் நடந்தும் தவழ்ந்தும், அதில் படுத்துப் புரண்டும் பல விதங் களில் புதிய வெள்ளை உலகத்தோடுத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். பல திசைகளுக்குமாக ஓடுகின்றனர். குதிக்கின்றனர். நால்வரும் ஒன்று கூடுகின்றனர். மீண்டும் வெவ் வேறு திசைகளுக்கு ஓடுகின்றனர். அது ஓர் சந் தோஷ நடனமாகத் திகழ்கின்றது.
இர: சூழ்ந்து. சூழ்ந்து. மூன்: அகன்று. அகன்று.
நா: உயர்ந்து. உயர்ந்து..... முத: தாழ்ந்து. தாழ்ந்து நா: நம் காலடியில் மூன்: விரிந்து.... விரிந்து இர: பரந்து...பரந்து
நா: நீண்டு. நீண்டு முத: முடிவில் வெறும் பாழாய்.... இர: நாம் காப்பாற்றப்பட்டு விட்டோம் மூன்: நாம் காப்பாற்றப்பட்டு விட்டோம் முத: இல்லை சிறை
வைக்கப்பட்டிருக்கிறோம். கம்பிகள் இன்றி... கதவுகள் இன்றி... சுவர்கள் இன்றி.
மதில்கள் இன்றி...
நாம் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம். திறந்த வெளிச்சிறை
நா: நிபந்தனைகளை நாம் நிறைவேற்றி
விட்டால்
மூன்: (கீழே சுட்டிக்காட்டி) இதைப் பயனுள்ள
தாக மாற்றி விட்டால்
முத: யாருக்குப் பயனுள்ளதாக?
நா: எல்லோருக்கும்
மூன்: எப்படி பயன் உள்ளதாக மாற்றுவது?
இர: நாம் சிந்திக்கத் தொடங்குவோம்.
திடீரென பூரண இருட்டு. சில வினாடிகள்
கண்ணைப் பறிக்கும் மின்னல் போன்ற ஒளி. நால் வரும் பயந்து பின் வாங்குகின்றனர். ஒரு மூலை யில் ஒன்று சேர்ந்து பயந்து நோக்குகின்றனர். வெளிச்சம் வரும்போது எதிர்மூலையில் புதிய தாக மூவர் நிற்கின்றனர். அவர்களும் சுற்றும் முற் றும் பார்த்த வண்ணம் முன் நால்வரையும் சந்திக் கின்றனர். இரு குழுக்களும் தம்மில் தம்மில் பார்த் துக் கொள்கின்றனர். பயந்து பின் வாங்கிய நிலை யில் முன்னோக்கி வருகின்றனர்.
மூன்: நீங்கள்? புதியவர்: காப்பாற்றப்பட்டவர்கள்
புதியவரில் ஒருவர்: நீங்கள்?
நா: நிபந்தனையுடன் காப்பாற்றப்பட்டவர்கள்
புதிய ஒருவன்: இதனைப் பயனுள்ளதாக மாற்ற
வேண்டும்
காலச்சுவடு
139
ஆண்டுமலர்'1991
படிப்பகம்
________________
www.padip
(இரு குழுக்களும் மாறி மாறி)
இதை... பய.ணுள்ள....தாக. மாற்ற வேண்டும்!
மூன்: சோலைகளாய்
பு:ஒருவன்: சாலைகளாய் இர: வீடுகள்
பு:ஒருவன்: வீதிகள் இர: குளங்கள்
பு, ஒருவன்: கோயில்கள் மூன். குப்பைத்தொட்டிகள்
பு. ஒருவன்: சாக்கடைகள்
நா: பாதாளச் சாக்கடைகள்
பு. ஒருவன்: அரண்மனைகள் இர அந்தப்புரங்கள்
பு. ஒருவன்: சட்டசபைகள் மூன்: வாக்குச் சாவடிகள் பு, ஒருவன்: நாற்காலிகள் நா. கத்திகள்
பு. ஒருவன்: கோடாரிகள்
இர: ஈட்டி
பு. ஒருவன் வில்
மூன்: அம்பு
பு, ஒருவன்: தேர்
நா: கார்
பு: ஒருவன்: விமானம்
இர ராக்கெட்
பு. ஒருவன்; ஏவுகணை
மூன்: அணுகுண்டு முத: போதும், சிந்திப்பதை நிறுத்துங்கள்
திடீரென ஒரு பயங்கரமான அதீத ஓசை கேட் கிறது. ஏழு பேர்களும் அசைவற்று நிற்கின்றனர்.
pakam.com
வெள்ளைத்துணி மெல்ல மெல்ல மேல் நோக்கி உயர்கின்றது. நான்கு மூலையில் இருக்கும் பெண் களும் காற்றைத் துணிக்குள் வேகமாக செலுத்து கின்றனர். ஏழு பேர்களும் பின்வாங்கி மேடை யின் மேல்தளத்திற்குச் செல்கின்றனர். வெள் ளைத் துணி உயர்ந்து கொண்டே செல்கின்றது. ஏழுபேரும் வெள்ளைத்துணிக்குள் சென்று மறை கின்றனர்.
இப்போது துணிக்குள் உள்ள ஏழு பேரும் கால்களை மண்டியிட்டுகுனிந்து உடலைச்சுருக்கி மேடையின் பலபகுதிகளிலுமாகப் படுத்துக் கொள்கின்றனர். காற்று உட்புகுந்ததால் துணி அதன் போக்கில் பலவிதமான சுருக்கங்களும், மேடுகளும், பள்ளங்களும் நிறைந்ததாக மெல்ல மேடையில் படிகிறது. துணி பூரண் சலனத்தையும் நிறுத்தும் வரை அதன் அசைவுகளுக்குத் தகுந்த வண்ணம் ஒருவித அதிசய ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. நான்கு மூலையில் உள் ளப் பெண்கள் வெள்ளைத் துணியை நான்கு மூலைகளிலும் இழுத்துப்பிடித்துத் துணியை மேடை மீது சுருக்கங்கள் இல்லாமல் பிடித்துக் கொள்கின்றனர். கேட்டுக்கொண்டிருந்த ஒலி மெல்ல மெல்லக் குறைந்து நின்றுவிடுகிறது. சலன மற்ற நிசப்தம் டிக்.டிக்.டக்.டக்.டிங்.டிங்.டங் என்னும் ஓசைகள் மாறி மாறிக் கேட்கத் துவங்கு கின்றன. அந்த ஓசைகளுக்குத் தகுந்தவண்ணம் ஏழு பேரும் மாறி மாறி துணிக்குள்ளாகவே தலையைத் துக்குகின்றனர். இவ்வாறு பல முறை செய்து உட்கார்ந்த நிலையை அடைகின்றனர். ஆனாலும், எல்லோரும் ஒரே உயரத்தில் இல்லா மல் பல ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வண்ணம் உள்ளனர். மீண்டும் ஒலியில் மாற்றம் ஏற்படுகின் றது. எல்லோரும் புழுக்களைப் போல துணிக்குள் ளாகவே நெளிந்து நெளிந்து பலத் திசைகளில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றனர். மீண்டும் உட்கார்ந்து கொண்டு தலையைத் துணியில் முட்டி முட்டி அதிலிருந்து வெளிவரத் துடிக்கின்றனர்.
நான்கு மூலைகளில் உள்ளப் பெண்கள் துணியை மிதமாக இழுத்துப் பிடித்துக்கொண்டே துணிக்குள் இருக்கும் எழுவரும் செய்யும் செயல் களுக்குத் தகுந்த இழுபபில் வைத்துக் கொண்டுள் üsf
துணிக்குள் இருப்பவர்கள் அடுத்தநிலையாக சற்று உயர்ந்து தலையை முட்டுகின்றனர். சிலர்
காலச்சுவடு
140 ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
WWW.padippakam.com
படுத்த நிலையிலும் சிலர் உட்கார்ந்த நிலையிலும் சிலர் பாதி எழுந்த நிலையிலும் தலையைத் துணி யில் அழுத்தி முட்டிக் கொண்டு இருக்கின்றனர். உடனே ஒருவன் சற்று எழுந்த நிலையில் தலை யைத் துணியில் தேய்த்தபடி வேகமாக ஒடி வேறு ஒரு இடத்தில் அமர்கின்றான். உடனே அடுத்த இன்னொருவன் அதேப்போலப் புறப்பட்டு சுற்றி வேறு இடத்தை அடைகிறான். இவ்வாறு மாறி மாறி குறுக்கும் நெடுக்குமாகவும் வட்டமாகவும், பலரும் சுற்றி வருகின்றனர். இவையனைத்தும் அவர்கள் துணிக்குள் இருந்து வெளியே வர முயற்சிக்கும் முயற்சிகள் எனத் தோன்றச் செய் யும் வண்ணம் உள்ளன. இவர்களின் இயக்கங்க ளுக்குத் தகுந்தபடி இசையும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அவை ஒரு முக்கல் முனகல்களை ஒத்திருக்கின்றன.
மீண்டும் வெள்ளைத் துணிக்குள்ளே இயங்க ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொருவரும் துணியை தங்கள் முகத்தில் நன்றாக அழுத்திய வண்ணம் சேர்த்துப் பிடித்து தலையின் வடிவத்தையும், முகத்தின் மேடு பள்ளங்களையும் காட்டுகின்ற னர். அந்த நிலையிலேயே தலையை பலவிதமாக அசைத்து சுற்று முற்றும் பார்க்கின்றனர். அப்ப டியே மெல்ல நகர்ந்து இருவராகவும் மூவராகவும் தலைகளை அருகில் அருகில் வைத்து ஏதோ உரையாடுவதற்கான பாவனைகளை வெளிப்ப டுத்துகின்றனர். இவையெல்லாம் அதிசயம் நிறைந்ததாகவும் ஆச்சரிய பாவத்தை வெளிப்ப டுத்துவதாகவும் அமைந்துள்ளன. அவர்கள் ஒவ் வொருவரும் மிகுந்த ஆச்சர்யப்பட்டுக் கொள்கி றார்கள். தங்களின் உடல் முழுவதும் துணி பதிந்த வண்ணம் முன்னோக்கி வர முயற்சிகள் நடைபெ றுகின்றன.
இப்போது மூன்றுபேர் ஒன்று சேருகின்றனர். மற்ற நால்வரும் ஒன்று சேருகின்றனர். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதாகப் பாவங்கள் நிகழ்கின்றன. மூவரும் மற்ற நால் வரை நோக்கியபடி உள்ளனர். தங்கள்தலைகளை ஆட்டிக்கொண்டும், கைகளைத் துணிக்குள்ளே வீசிக் கொண்டும் பலவிதமான சப்தங்கள் எழுப்பு கின்றனர். அவைகள் வார்த்தைகள் அல்ல. இப் போது நால்வரில் இருந்து ஒருவன் தன் தலையை வெள்ளைத் துணியில் முட்டிய வண்ணம் மூவர்
காலச்சுவடு
141
இருக்கும் இடத்தின் அருகில் வருகிறான். அவன் பயந்தபடி காணப்படுகிறான்.
இந்த மூவரும் பயந்தபடியே காணப்படுகின் றனர். இவர்கள் தாழ்ந்த நிலையில் இருக்கிறார் கள். நால்வரிலிருந்து வந்தவன் அவர்களுடன் ஏதோ பேசுகிறான். அவைகள் வார்த்தைகள் அல்ல. ஆனால் சப்தங்கள். சில அமானுஷ்யத் தன்மையைப் பிரதிபலிக்கின்றன.
அவன் அவர்களிடம் ஏதோ கேட்பதாகவும், அவர்கள் அவனைத் திருப்பிக் கேட்பதாகவும், அவன் பதில் அளிப்பதாகவும் அவர்கள் ஏதோ விவரிப்பதாகவும் இப்படி பல அசைவுகள் நிகழ் கின்றன. முடிவாக அவன் அவர்களைவிடதுள்ளி குதித்து ஏதோ கேட்கின்றான். அவர்கள் தலையை ஆட்டுகின்றனர். அது சந்தோஷமான தாக இருக்கிறது. அவனும் அவர்க" போலவே அவர்களுடன் சேர்ந்து தலையை ஆட் டுகிறான். இது ஒரு சந்தோஷ நடனமாக நிகழ்கி றது.
பின் திடீரென நிற்கிறது. அவள் மற்ற மூவரி டம் செல்கின்றான். இவனும் மற்ற மூவரும் பேசிக் கொள்கின்றனர். தன் கைகளை ஆட்டியும் வீசியும் தலையை பலவிதமாக திருப்பியும் குதித் தும் அவன் இவர்களுக்கு விளக்குகிறான். அவர் கள் புரிந்துகொண்டது போல் தலையை ஆட்டு கின்றனர். பின் நால்வரும் திருப்பி மூவர் இருக் கும் திசையை நோக்கி உக்கிரத்தோடு முன்னேறு கின்றனர். மூவரும் நால்வரை நோக்கி முன்னேறு கின்றனர். இவர்களின் முன்னேற்றம் உக்கிரமான தாள கதியில் காணப்படுகின்றது.
இரு குழுக்களும் சந்தித்துக் கொள்கின்ற" ஏழு பேரும் சேர்ந்து ஒரே குழுவாக மாறு"2 னர். எல்லோரும் கலந்துவிடுகின்றனர் (TV தாண்டவமாக ஆடுகின்றனர். இவர்கல் படிபடி பாக துணியை மேல்நோக்கி முட்டிவி-இமு' விட்டு திடீரென அமர்ந்துகொள்கின்றனர். மேன்டயில் சிறுச்சிறுக சிவப்பு ஒளிபடர்கிறது: அப்போது துணியின் பல பகுதிகளிலும் மாறி மாறி பல மலை மேடுகள் தோன்றுவதான பாவங் கள் வெளிப்படுத்தப்படுகிறது. இப்போது பலரும சேர்ந்து ஒருள் மேல் ஒருவராக ஏறி நின்று பெரிய ப்ெரிய மலைகள்வளர்வதாகக் காட்டுகின் றனர். இவைகள் எல்லாமே அவர்கள் துணியிலி
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com
ருந்து வெளிவருவதற்கான முயற்சிகள் எனத் தெரிகின்றன. மீண்டும் துணிக்குள் பரவலாக நிற் கின்றனர். சிவப்பு ஒளி மறைந்து பச்சை ஒளி படர்கிறது. பின்னரங்கில் பாடல் ஒலிக்கின்றது. புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப்பேயாய் கணங்களாய் வல்லகரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் பாடலுடன் சேர்ந்து பின்வரும் செயல்கள் அரங் கில் நிகழ்கின்றன.
அவர்களின் கைகள் துணியைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகின்றன. அவை ച്ച് அசைந்து பல வடிவங்களை படிமங்க எாகக் கொடுக்கின்றன. அவைகள் செடி கொடி ... லவும், மரங்கள் போலவும் பலவிதமான பறவைகள் போலவும் பலதரப்பட்ட வடிவங்க ளாக இருக் இன்றன. அவர்கள் காட்டும் வடிவங்க ளுக்குத் தகுந்: பலவிதமான ஒலிகள் ஒலித் துக்கொண்டே இருக்கின்றன. ஒளி மங்குகிறஓசையில் மாற்ற ஏற்படுகிறது. அவர்களின் கைகள் துணிக்குள் சென்று மறைகின்றன.
மீண்டும் இவர்கள் ിഖിഥേ வருவதற்கான சிறுசிறு முயற்சிகள் நடக்கின்றன. எல்லோரும் தங்கள் உடலோடு துணியை சேர்த்துப் பிடித்த வண்ணம், ஒரு தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருப்பதான பாவத்தோடு பிடித்துக கொள்கிறார் கள். விலங்குகளின் பறவைகளின் ஒசையிலி ருந்து மாறி குழந்தைகள் அழும் ஒ:ை Ga-ಹಿಲಿ இனியைப் பிளந்து கொண்டு ಆ೮. காங்கே தங்கள் தலைகளை மட்டும் நீட்டிப்பார்க்க கின்றனர். மெல்ல குழந்தைகள் Lಣ್ಣು Qaಿಗಿಜಿ வருகின்றனர். துணி அவர்களின் இடுப்பு பகுதி வரை இறங்கி நிற்கிறது. இவர்கள் குழந்தைகள போன்று பாவனை செய்கின்றனர். அசைதது அசைந்து ஆடுகின்றனர். മഴി தாலாட்டு 3. ஒன் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களின் அசைவுகள் படிப்படியாக ஒரு தாள கதிக்குள் வருகின்றன. ஒரு முதிர்ந்த நடனமாக மாறுகிறது. பலவிதமாக நடனமாடுகின்றனர். சந தோஷத்துடன் நடனமா டுகின்றனர்.
இசை முறுக்கம் பெறுகிறது. அவர்களின் நட னம் தீவிரமடைகிறது. படிப்படியாக அது வளர்ந்து ஓர் கோரத் தாண்டவமாக மாறுகிறது. இப்போது நடனம் அவர்கள் சண்டை செய்து கொள்வது போன்ற பாவத்தை அடைகிறது. இசைமாறி பலவிதமான சப்தங்களாகவும் அவர்க ளின் கர்ஜனைகளாகவும் மாறுகிறது.
இப்போது அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகத் தோன்றுகி றது. பலவிதமான நவீன வாகனங்களின் ஒலிக ளும் நவீன ஆயுதங்களின் ஒலிகளும் பலவும் கலந்து ஒலிக்கத் துவங்குகிறது. அவர்களின் உடல் மெல்ல மெல்ல துணிக்குள் மறைந்து கொண்டு இருக்கிறது. அவர்களின் தலைகள் துணிக்குள் சென்று மறைந்து விடுகின்றது. இப் போது கைகள் மட்டும் தெரிகிறது. யுத்தத்தின் சப் தங்கள் தீவிரமடைகின்றன.
கைகளும் மெல்ல மெல்ல துணிக்குள் செல்ல அவர்கள் துணிக்குள் இருந்து தீவிரமாக சண்டை போடுகின்றனர். சப்தங்கள் உச்சத்தை அடைந்து பெரிய ஓசையுடன் திடீரென்று நிற்கிறது. துணிக் குள் உள்ள எழுவரும் துணிக்குள் சாய்ந்து விழு கின்றனர். நிசப்தம், துணி உயர்ந்த நிலையிலி ருந்து மெல்ல மெல்ல தாழ்ந்து அவர்கள் மேல் படிகிறது. சலனமற்ற நிலையை அடைகிறது. நான்கு பெண்களும் ஆகாயத்தை நோக்குகிறபடி கைகளை மெல்ல உயர்த்துகின்றனர். உறை நிலையை அடைகின்றனர். அமைதி.
துணியை பிளந்து கொண்டு ஓர் சிறுவனின் தலை மட்டும் தெரிகிறது. பின் மெல்ல மெல்ல அவன் அதிலிருந்து வெளிவருகிறான். முழுது மாக வெளியே வந்து விடுகிறான். சுற்றும் முற்றும் மெல்ல பார்க்கிறான். மேடையின் மையத்தில் உள்ள மேட்டை நோக்கி மெல்ல செல்கிறான். அதன்மீது ஏறி அமர்ந்து கொண்டு ஆகாயத்தை நோக்குகிறான். அவன் மீது மட்டும் ஒர் ஒளிக் கற்றை மேலே இருந்துவந்து விழுகிறது. துரத்தே குதிரை ஒன்றின் குளம்பொலி சப்தம் கேட்கிறது. அருகில் அருகில் வருகிறது. குதிரை கனைக்கி றது. மீண்டும் குளம்பொலி சப்தம் துரத்தே சென்று மறைகிறது.
(திரை)
| காலச்சுவடு
142
ஆண்டுமலர் 1991
படிப்பகம்
________________
www.padippakam.com
மாலினி புவனேஷ்
பிரதிபலிப்பு
மகிழம் பூப்போல 
உறுத்தாமல் முகத்தில் விழும் 
குளிர் மழைச்சாரல், 
ஜன்னல் கம்பிகளுக்குப் பின் 
எட்டிப் பார்க்கும் அணில் குஞ்சு 
கால் மேல் கால் போட்டு 
மோனத்தில் சிரிக்கும் குழந்தை, 
அகல் விளக்கின் மெல்லிய 
தீஞ்சுடர் 
இவைகள் எனக்கு உன்னை 
ஞாபகப்படுத்துவது போல, 
நீ எனக்கு இவைகளை.

O
ஏதோ இருக்கிறதென்றுதான் 
போய் கொண்டிருக்கிறோம். 
மின்னல் வெட்டின் க்ஷணமேனும் 
அது புரிபடலாமென்று. 
ந (ா )ம் கடந்த பாதையை 
அடையாளம் காட்டும் 
உரித்து விழுந்த 
வெங்காய அடுக்குகள்
|
பா. வெங்கடேசன்
காலச்சுவடு
வெற்றி 
யாவற்றிலிருந்தும் தரையை விடுவிக்கலாம் 
எதையும் எளிதாக்குகிறது உன் காலம் 
சிலைகளுக்கு பதில் படங்களை மாட்டு. 
வளையங்களில் விளக்கைப் பொருத்து. 
விதானத்தில் தொங்கட்டும் மின் விசிறி. 
அண்ணாந்து பார்க்கச் சுவரில் 
சுவர் கடிகாரம் பொருத்து. 
தட்டு முட்டு சாமான்களுக்கு பரண் செய்து 
கொள். 
சற்று யோசித்தால் தரை வசப்படலாம் 
சகிக்க முடியாததாயிருக்கும் கூரையின் முணு 
முனுப்பு.

மஞ்சள் 
திருவிழா கூட்டத்தில் ஒருவனாக 
அசலூர் நண்பனைப் பார்க்க நேர்ந்த போது 
வியப்புடன் கூவி கை 
யசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தால் 
பதிலுக்கு கை 
அசைக்கால் வேகமாய்ச் சென்று 
விட்டான். என்ன கவலையோ சொந்தமாய்? ஆனால் 
திருவிழா சமயத்தில் 
தெருவில் போகிற யாரும் 
திருவிழாவுக்கு வந்தவர்கள் போலத்தான் 
தெரிந்து தொலைக்கிறார்கள்.
146 ஆண்டுமலர் 1991

படிப்பகம்