Pages

Wednesday, June 08, 2016

கடல்புரத்தில்-1-1 - வண்ணநிலவன்


https://wannanilavan.wordpress.com/2011/11/09/கடல்புரத்தில்-1-1/

கடல்புரத்தில்-1-1 - வண்ணநிலவன்
 இந்தக் கதையைப் பற்றி"

சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஒரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, இவனும் ஏதோ சொல்லுகிறானே என்ற ஒரு நிலையும் ஏற்பட்டு போயிருக்கிறது.

எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர் வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிற தற்கும் ஏதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன்.  ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, 'எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம் என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது.

நானும் எழுதுகிறவர்களில் ஒருத்தனென்று ஆகிப்போனதால், இலக்கியத்தைப் பற்றி மனம்விட்டுப் பேசுகிறேன்.

கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது; உண்மை யோடு நெருங்கிய சம்பந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்க ளிடம் பொய்சொல்ல மாட்டான். கலைக்குப் பொய் ஆகாது. இந்தக் கதையைப் பற்றி நான் சொல்ல வேணுமே?

இந்தக் கதையில் வருகிற மனப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப் படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.

மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது அன்பு வழியைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் போகிறேன்.
இந்நாவலுக்கு முதல் ரசிக நண்பர்கள் கல்யாணியும் (வண்ணதாசன்) நம்பிராஜனுமாவர்.

'கணையாழி பத்திரிகையில் இது தொடராக வெளிவந்தது. அதன் ஆசிரியர் ஸ்ரீ கி. கஸ்தூரிரங்கனுக்கும், இந்த நாவலை என்னிடமிருந்து டெல்லிக்கு எடுத்துச் சென்ற நண்பர் ஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கும் என்னுடைய நன்றி உரியது.
எப்பொழுதும் தமிழ் வாசகர்கள் எல்லோருமே எனக்குச் சம்பந்தமுள்ளவர்கள்தான்.

சென்னை,                                                                                                உங்களுடைய,
  31. I. 1977                                                                                             வண்ணநிலவன்
________________

'அப்பம் நீர் என்னைய ஏன் படிக்க வச்சீர்? ஒம்மப்போல மீன் புடிக்க வல்லங் கெட்டிக் கிட்டு கடலுக்குப் போயிருப்பேனே. ஏன் நீரு என்னையப் படிக்க வச்சீரு...'

செபஸ்திக்கு அவனுடைய அப்பச்சி முன்னால் இருந்து பேசத் தைரியம் கிடையாது. அவனுடைய அப்பச்சி காயப் போட்டுக் கட்டி வச்சிருந்த வலையின் மேலே உட்கார்ந்திருந்தான். அவன் - செபஸ்தி - உள்ளே நடை வாசல்படியில் உட்கார்ந்து கொண்டுதான் அவனிடம் அப்படிக் கேட்டான். வீட்டு முன் முற்றத்தில் மணலில் காயப் போட்டிருந்த நெத்திலிகளைக் கிண்டிவிட்டுக் கொண்டி ருந்தாள் பிலோமி. பிலோமியினுடைய காதுகள் அண்ணனும் அப்பச்சியும் வாயாடுகிறதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் கண்கள் தூரத்தில் தெரு இறக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தன. சாமிதாஸ் வரவில்லை. அவளுக்கு அன்றைக்கு சாமிதாஸிடம் சொல்லுகிறதுக்கு நிறையச் சங்கதிகள் மனசில் கிடந்தன. காய்ந்து கொண்டிருந்த நெத்திலி வாடை, அடிக்கடி காற்றில் வீடு உள்வரை பரவியது.
________________
செபஸ்தியுடைய அப்பச்சி குரூஸ் மிக்கேல், கொஞ்ச நேரம் செபஸ்திக்குப் பதிலே சொல்லவில்லை; மேலே வானத்தில் நீர்க் காக்கைகளும் கழுகுகளும் பறந்து கொண்டிருந்ததையே வெறிக்கப் பார்த்திருந்துவிட்டு கன்னத்தைச் சொறிந்து கொண்டான். கடல் இரைச்சல் சோவென்று மழை பெய்கிறது மாதிரி கேட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சத்தத்திலேதான் பிறந்தார்கள் வளர்ந்தார்கள், செத்துப் போனார்கள். கடல் அம்மை அவர்கள் வழிபடுகிற மரியாளுக்கும் சேசுவுக்கும் சமம். இதை மாற்றச் சொல்கிறான் செபஸ்தி.

"அடேய்... ஒன்னயப் படிக்க வக்யனும்னு ஆசைப்பட்டேன். அதத்தான் செஞ்சேன். இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்லுதா?... ஏட்டீ பிலோமி, மேல நீர்க்காகங்கள் வட்டம் போடுது தெரியலை மெத்தனமா இருந்தீயன்னா... அந்தப் பழய வலையத்துக்கி அந்தாப்பல மேலே போடுட்டீ...'

'அப்பச்சி. ஒம்ம ஆசையெல்லாஞ் சரிதான். அதாலதான் நா இப்பம் வேப்பங்காட்ல வாத்தியா இருக்கேன். இல்லைன்னா ஒம்மகூட வல்லத்து மேலதான் போயிட்டிருப்பேன்."

"அலேய்... என்னலே வல்லத்து மேல போறத எளப்பமாய் பேசுதா நீரு வாத்தியா படிப்பிச்சுக் கொடுக்கிருன்னா அது இந்த மச்சங்கள் கொடுத்த வாழ்வில்லையோ வல்லத்துல போறவனுகளை என்னம்மோ பொன்னஞ் சட்டிகள்ன மாதிரி நெனக்கியே... அடேய் அவிசுவாசி, கடல் அம்ம மடியில் பொறந்துட்டு, அவள ஒதக்ய மாதிரி அது என்னலேய் ராங்கித்தனம்.'

'அடாடா... இது என்ன ரெண்டு நாளாய் இந்த ஆட்ல. இதேய் ரோதன யாக் கெடக்கு, லே, செபஸ்தி அவருக்குத்தான் அங்க வேப்பங்காட்டுக்கு வர இஸ்டம் இல்லன்னா வுடம்லே. உனக்க அக்கா அமலோற்பவமும் அவளுக்க மாப்புள்ள பூச்சிக் காட்டானும் கூப்பிட்டதுக்கே அவரு போலை. வரலைன்னு அடம் பிடிக்யவரை யாருதான் என்ன பண்ண முடியும்லேய்?"

'டி. பிசாக மவளே. போட்டீ. உள்ள வந்திட்டா பெரிய்ய இதும் மயிராப் பேசதுக்கு. வேணும்னா நீ உனக்க மவன் ஆட்டுக்கும் மக வூட்டுக்கும் போ.. அந்தா அந்த ஒடுகாலி பிலோமிக் குட்டியும் கூட்டிட்டுன்னாலும் போ என்னம்போ பெரிய உறுத்து வந்திட்டதுபோல் மவன் கூப்பிட்டுட்டான்னு
________________
அவளுக்கு ஆசையான ஆசை. அந்த ஊர் பள்ளிக்கூடத்து ஹெட்மாஸ்டர் ஆட்டுக்காரியைப்போல கழுத்து நிறைய நகை போட வேண்டும். அதுக்கு இந்த வாத்தி வேலை மட்டும் போதாது என்பது அவளுக்குத் தெரியும். எல்லாரையும் கூட்டிக் கொண்டு வந்தான பின் அவளுடைய அப்பச்சியிடம் பேசி வீட்டையும் வல்லத்தையும் கிரையத்துக்குச் சம்மதிக்க வைக்க வேண்டும். கிரையத்துக்கு வாங்க ஆள்கூடப் பார்த்து வைத்திருந்தான் செபஸ்தி. செபஸ்தி வேப்பங்காட்டுரில் நல்ல கெட்டிக்கார வாத்திதான்.

வல்லம் அவன் பாட்டனார் காலத்தது. அந்த மாதிரியான ஜாதி மரமே இப்போது கிடைக்காது என்பது குரூஸ் மிக்கேலுடைய பேச்சு. அந்த வல்லத்துக்குப் பல இடங்களில் ஒட்டைகளில் தகரம் அடித்து ஒட்டுப் போட்டிருந்தது. தார் எண்ணெயில் ஒரு முனையில் மாதா துணை என்று எழுதி இருக்கும். அது குரூஸ் மிக்கேலுடைய அப்பச்சி தாசையாவுடைய எழுத்து. வல்லம் எப்படியும் இன்றைக்குக் கிரையத்துக்கு அறுநூறு ரூபாய் வரை போகும். வீடும் ஆயிரத்துக்கு மேல் போகும். எல்லாம் அப்பச்சியின் மனசு இறங்க வேண்டும்.

"அப்பச்சியாம். அப்பச்சி...து. எட்டித் தலையை மட்டும் நீட்டி எச்சிலைத் துப்பிவிட்டு ஷேட் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு, "ஏட்டி, பிலோமிக்குட்டி... அடுப்பு யழல்ல இருந்து தீ கொண்டு வாட்டீ. சிகரட்டப் பத்த வக்யட்டும்..." என்றான் செபஸ்தி.

அம்மை அடுக்களை உள்ளிருந்து ஏதோ புலம்பிக் கொண்டி ருந்தாள். அம்மைக்கும் மகனோடு போய் இருக்கத்தான் ஆசை அதிகம். அம்மைக்கு இன்னும் ஆசைகள் செத்துப் போக வில்லை. போன வாரம் அவர்கள் வீட்டுக்கு தூத்துக்குடி யிலிருந்து அம்மையின் பெரியம்மா மகள் லிஸி வந்திருந்தாள். அவளுக்க புருஷனுக்கு கஸ்டம்ஸில் வேலை. இரண்டே இரண்டு குழந்தைகள். எல்லோரும் வந்துவிட்டுப் போன ஒரு நாளைக்குள் நேரத்துக்கு ஒரு உடையில் அலைந்தார்கள். அந்த மாதிரி சிங்காரித்துக்கொண்டு கோயிலுக்கும் கடை கண்ணியளுக்கும் சினிமாவுக்கும் போகிறதைவிட்டு, நாத்தம் பிடிச்ச இந்த மீனுகளையே தொட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தால்? உடன்குடியில் தியேட்டர் இருக்குது. அடிக்கடி படம் பார்க்கலாம். வேப்பங்காட்டுரிலிருந்து உடன்குடிக்கு ஒரு ஒரேயடியாத்தான் பொளந்துக்கிட்டு நிக்யா இங்க பறையக் குடியில் மவன் ஆட்டுக்கும் மவ ஆட்டுக்கும் போயி செப்பெடுத்துக்கிட்டு வந்தவனுக ரொம்பப் பேர இந்த குரூஸ் அடியானுக்கும் தெரியும்ட்டீ. போடீ, போ... போக்கத்தவளே, ஒனக்கு லோல் படனும்னிட்டிருந்தா அவங்கூடப் போ. மிக்கேலுக்கு இன்னும் காலுங் கையும் தெடமாட்டு இருக்கு. வல்லத்தை ஒத்தை ஆளா நின்னு கடல்ல தள்ளிவுடப் பெலமிருக்கு... எல்லாத்துக்கும் மேல மாதா இருக்கா. இந்த குரூஸ்-க்குக் கடல் அம்மயும் மச்சங்களுந்தான் விசுவாசத்துட னிருக்கு. நீங்களெல்லோரும் அவிசுவாசிகள். போங்கள்... போங்கள். ஏட்டி, பிலோமிக்குட்டி, உள்கொடியில் கெடக்ய அந்த வாலத்தை எடுட்டீ; நா கடத்தெருவுக்குப் போயிட்டு வரட்டு..." என்றான் கோபத்துடன் குரூஸ் மிக்கேல். பிலோமி நடை வாசல்படியிலிருந்த அண்ணனைத் தாண்டிப் போவதற்குள் அவள் அம்மை உள்ளே போய் வாலத்தை எடுத்து மகளிடம் தந்தாள். பிலோமியிடம் வாலத்தை வாங்கித் தோளில் போட்டுக் கொண்டு மூங்கில் படலிக் கதவை ஓங்கித் திறந்துகொண்டு வெளியில் தெருவிலிறங்கிப் போனான் குரூஸ் மிக்கேல். பிலோமி பயத்துடன் நடை வாசல்படியில் அண்ணனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அப்பச்சி போவதையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இதைவிடப் பெரிய கவலை, இன்னும் சாமிதாலைக் காணவில்லையே என்று. அவளுக்கு இதையெல்லாம் அவனிடம் சொல்ல வேண்டும். "எங்கே போயிட்டுது இந்த சாமிதாஸ்? கள்ளுக் கடைக்கிப் போவலைன்னு சத்தியம் பண்ணி இருக்கே போயிருமா என்னய மீறி, அப்படியும் போனால் என்னிடம் பிரியம் இல்லைன்னுதான் அர்த்தம். நினைக்க நினைக்க அழுகை வரும்போல இருந்தது. உடனே உள்ளே ஓடிவிட்டாள். செபஸ்தியான் இன்னும் அந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவே இல்லை.

அவனுடைய திட்டங்கள் மிகப் பெரியவை. அந்த ஒலைப்புரை வீடு, வல்லம் எல்லாவற்றையும் விற்று உடன்குடியூரில் ஒரு சாயபுடன் பார்ட்னராகச் சேர்ந்து சைக்கிள் ஸ்பேர் பாட்ஸ் கடை ஆரம்பிக்க வேண்டுமென்று ஆசை. சாயபுவுக்கு வாக்கும் சொல்லிவிட்டான். அதற்கு முதல் நடபடியாக அப்பச்சி, அம்மை, பிலோமிக்குட்டீ மூணு பேரையும் தன்னுடன் வேப்பங்காட்டுரில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு அவனுடைய ஆட்டுக்காரி தெரெஸா ச்ம்மதித்திருந்தாள்.
________________
மைல்தான். நடந்தேகூடப் போயிட்டு வந்திரலாம். அம்மை மகன் வீட்டுக்குப் போக நினைத்ததே இதற்காகத்தான்.
பிலோமி குட்டிக்குப் போறதில் கொஞ்சங்கூட இஷ்டமே கிடையாது. இந்த மணல்பாட்டிலிருந்து போயிட்டால் பிறகு சாமிதாலை எப்படிப் பார்க்க முடியும்? சாமிதாஸைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியுமா? தீ எடுக்கப் போன பிலோமி அம்மையிடம் மெதுவாகக் கேட்டாள்:
'அம்மைக்கி அண்ணன் கூடப் போக ஆசையோ?"
பொரிக்காஞ் சட்டியில் கருவாடு வறுத்துக் கொண்டிருந்த மரியம்மை சட்டென்று திரும்பினாள். எரிகிற தீயின் வெம்மை அவள் முகத்தில் ஏறியிருந்தது. தன்னை ரொம்பச் சரியாகக் கணக்குப் போட்டுவிட்டதில் பயமும் கோபமும் அவளை ஆட்டுவித்தன.

"ஆமாண்டி. ஆசைதான். நீ இங்க கெடக்கப் போறியோ? கெட. கெட. ஒன் அப்பச்சியோட கெட. நீ ஏன் இங்க இருக்க ஆசைப்படுதன்னு எனக்குல்லா தெரியும். ஒனக்கு அந்தக் கருவாலிப் பெய சாமியோடயும் அவந் தங்கச்சி டாரதிச் சிறுக்கி யோடயும் கடல் காட்ல சுத்தின மாதிரி அங்க வேப்பங்காட்ல சுத்த ஆள் கெடக்யாதுன்னு பாக்க. ஒன் சேதியெல்லாத் தெரியாதுன்னிட்டு நெனச்சிருக்கியோ சிறுக்கி இரி. இரி ஒன் அப்பச்சியே வரட்டு. என்று பிலோமியைச் சாடி, அவள் பலவீனத்தை அசைத்தாள் அம்மை. பிலோமி தீயிடுக்கியுடன் அப்படியே பொங்கிப் பொங்கி அழ ஆரம்பித்துவிட்டாள். முன்னாலிருந்து செபஸ்தி கத்தினான். "ஏட்டி. எவ்வளவு நேரமாத்தான் தீ எடுக்கா?" s

'ஏய். பிசாக மவளே, என்னட்டி கள்ள அழுக... வந்து தீயை எடுத்திட்டுப் போ. அவன் கேக்கானில்லா...' என்றாள் மரியம்மை.

பிலோமி கண்ணைத் துடைத்துக்கொண்டே தீ எடுத்துக்கொண்டு போனாள். திமிர்ந்து அவளிடமிருந்து தீயிடுக்கியை வாங்கியவன், அவள் அழுவதைப் பார்த்ததும் பொறுக்க முடியாமல், 'அடி. பிலோமி, எதுக்காவ அழுதா?" என்றான்.

பிலோமி ஒன்றும் பேசவில்லை.
________________
'சரி... சரி. அழுவாத, நா, வெளியே போயிட்டு வாரேன். இன்னைக்கி எப்பிடியும் ரெண்டுல ஒண்னு தெரிஞ்சாகணும்' என்று சொல்லிக்கொண்டே போய்விட்டான், செபஸ்தி.
பிலோமி பின்னும் அழுதுகொண்டிருந்தாள்.
'இந்த அடம் பிடிச்சுப் போவாள் என்னைக்கி அழுவையை நிறுத்துதாளோ அன்னைக்கித்தான் வீடு உருப்படும். வயசு என்ன? காரியங் கணக்கு என்ன? சொரணை கேட்ட மூதி. அந்தப்பெய சாமிகிட்டப் பேசும்போது என்னமா இளி இனின்னு இளிச்சுக்கிட்டும் சிலுப்படங் காட்டிக்கிட்டும் பேசுதா... செறுக்கி மவளே. இரி, இரி, இன்னம அவங்கிட்டப் பேசுதக் கண்டேன். ஒங்க அப்பச்சிக்கிட்டச் சொல்லிக் குடுத்திருவேன். அவரு காதுல விழுந்திச்சின்னா வெட்டிப் பொங்கலிட்டிருவாரு. முண்டைச்சி. இன்னும் என்னடி ஈளாக்கம்...?' என்று கோபத் துடன் அடுப்படியிலிருந்து ஓடி வந்து பிலோமியின் தலை மயிரைப் பிடித்து சுவரோடு வைத்து ஓங்கி அறைந்தாள்.
'அம்மை... அம்மை அடிக்காத அடிக்காத, ஐயோ... அடிக்காத..." என்று அலறினாள் பிலோமி. அலறல் தெரு வரைக்கும் கேட்டது.


 'அம்மை... அம்மை அடிக்காத அடிக்காத, ஐயோ... அடிக்காத...” என்று அலறினாள் பிலோமி. அலறல் தெரு வரைக்கும் கேட்டது.

மறுபடியும் ராத்திரி எல்லோரும் படுக்கப் போகும்போது செபஸ்தி காலையில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

"அப்பச்சி, நா காலையில ஊருக்குப் போவனும் என்று திண்ணையில் ஒருக்களித்துப் படுத்தவாறு கையால் தலையைத் துக்கி வைத்துக்கொண்டு சொன்னான் செபஸ்தி.


குரூஸ் மிக்கேல் வானவெளி முற்றத்தில் கயிற்றுக் கட்டிவில் படுத்திருந்தான். நிலா வெளிச்சம் படலில் கம்புகளின் மேலே பட்டு அவன் முகத்தில் கோடு கோடாய் நிழல் விழுந்திருந்தது. பிலோமி நடைவாசலில் தலைவைத்துப் படுத்திருந்தாள். மரியம்மை செபஸ்திக்கு மேற்காமல் சுவரோடு சுவராய் ஒட்டிப் படுத்திருந்தாள். மிக்கேல் திரும்பிப் பார்த்தான். பெட்ரூம் லைட் வெளிச்சத்தில் பிலோமி படுத்திருந்தது தெரிந்தது. அழகாக, அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
________________
எவ்வளவுபோல இருந்தது இந்தப் பிள்ளை. இப்போ எத்தா பெரிசா வளந்திட்டது. ஹகும். தெருப்புள்ளயளோட கடல் கரையில் சுப்பியும் சோழிகளும் பொறுக்கிக்கிட்டிருந்த குட்டியில்லா இது - குரூஸ்-டைய ஞாபகங்களை செபஸ்தி அறுத்துவிட்டான்.

அப்பச்சிட்டேயிருந்து பதிலைக் காணலையே. நாளைக்கி ஊருக்குப் போகணுமின்னேனே' என்றான் மறுபடியும் மெதுவாக,
"ம். என்ன சொன்னா... ஊருக்கா?... எல்வேய். நாளைக்கு லீவுதான?. ராத்திரி வண்டிக்கிப் போனா என்ன?"

அவர்களுக்குள் எப்போதும் பேச்சு இப்படித்தான் ரொம்ப மெதுவாக ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பிக்கும். ஆனால், போகப் போக எப்படியோ சூடேறிவிடும்.

"அதுக்கில்ல. அங்க அவட்ட ஞாயித்துக்கெழம வாரேன் னிருக்கேன். அங்க கொஞ்சம் வேவயிருக்கு."

"சரி. பின்னப் போயிட்டு வா. அம்மக்கிட்ட யாபகமாட்டுக் கொஞ்சம் கருவாடு கேட்டு வாங்கிக்கிட்டுப் போலே."

"அது சரி. காலயில நாங் கேட்டது."

'எது... எது..." என்று வேகமாகக் கேட்டான் குரூஸ் மிக்கேல்.

''காயல்பட்டனத்து சாயபு, சைக்கிள் கடையும் ரேடியோக் கடையும் வைக்கப் போறார். நானும் பணம் போடுதேன்னு சொல்லியாச்சு இந்த வல்லத் தொழில் இன்னமையும் அப்பச்சி செய்ய வாண்டாம். எல்லாரும் எங்கூட வேப்பங்காட் டுருக்கு வாங்க. இந்த பிலோமிக் குட்டிக்கி நல்ல எடம் ஒண்ணு பார்த்திருக்கேன். அதுதான் என் ஆட்டுக்காரியோட அண்ணன் மவன் ஒருத்தனிருக்கானில்ல, அவந்தான் இதுக்கு பொருத்த முன்னு படுது. அவ்வோட்டையும் கேட்டாச்சு சம்மதிச்ச மாதிரிதான். இந்த ஆட்டையும் வல்லத்தையும் வித்துட்டு..."

"லேய். செபஸ்தி, மறுவடியும் அந்தப் பேச்ச எடுத்தியோ இருக்கு அதத்தவுர வேற எதுன்னாலும் பேசு. எல்லாரும் இங்க இருந்து போனாலுஞ் சரி, இந்த மணப்பாட்டு ஊரவுட்டு நா வரமாட்டேன். குரூஸ் கோயில் கல்லறத் தோட்டத்துலதான்
________________
இந்த மிக்கேல் அடியான் பொணத்தப் பொதைக்யணும். ஆமா என் ஒடம்புல உசிர் இருக்க வரைக்கும் வல்லந் தள்ளிக்கிட்டு வல வீசத்தான் போவேன். எனக்கு வல்லந்தா பெரிசுலே...' என்றான் கோபத்துடன் ஆவேசம் வந்த மாதிரிச் சத்தம் போட்டான்.

அம்மை தூக்கத்தில் அரைகுறையாகக் கேட்டு முணுமுணுத்தாள். பிலோமி எழுந்து படுக்கையில் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள்.
மரியம்மை சத்தம் போட்டதால் அன்றைக்கு சாமிதாலைப் பார்க்கப் போக முடியவில்லை. அவளுக்கு ஏதோ அந்தப் பிராயத்தினுடைய நினைப்புகள்.
'அப்பம். ஒமக்கும் எனக்கும் உள்ள ஒறவு இன்னயிலருந்து வுட்டுப் போச்சின்னு நெனச்சிக்கிடும்."

குரூஸ் மிக்கேலுக்கு மேலே தீயை அள்ளிக்கொட்டினது மாதிரி இருந்தது. அவனுடைய பிரியமான வல்லத்துக்கு இப்படி ஒரு சோதனையா வலை வீசப் போகாமல் அவனால் எப்படி இருக்க முடியும்?

"லேய், இப்பிடிப் பேசதுக்குத்தானாலேய் ஒன்னயப் படிக்க வச்சது. வாத்தி வேலயவுட வேற என்னலே பெரிசாப் போச்சி. துலுக்கங்கூட வெயாபாரம் பண்ணப் போறேங்கிறே. கட்ட நெட்டயாப் போச்சினா என்ன பண்ணுவா சொல்லு?" என்று ரொம்பவும் இறங்கி வந்து பேசினான். செபஸ்தி அவன் பிள்ளை. அவன் ரத்தமில்லையா?

"அதெல்லாம் எதுக்குப் பேசுதீரு? எல்லாத்தையும் வித்துட்டு வாரும், ஒம்ம ரோட்லயா நிக்ய வக்கப் போறேன். பெத்த புள்ள மேல நம்பிக்கை இல்லாமப் போச்சாக்கும்?"
"லேய்... வேணுமின்னா ஒண்னு செய்யி. இந்த ஆட்ட வேணும்னா வித்துக்க வல்லம் என் ஜீவியமட்டும் இருக்கட்டு. இந்த வூடு இப்ப வந்தது. வல்லம் நம்ப பரம்பரைச் சொத்து. வல்லத்தயும் என்னய்யும் வுட்டுட்டுப் போங்க, பறையன் வெயபாரஞ் செய்யப் பொறந்தவன் இல்ல; வல்லம் வலிக்கப் பொறந்தவன். பறையன் கடல்ல பொறந்து கடல்லதான் சாகாைம். காள் செக்கா சாமியார் சொல்லிவுடுவாரு வங்க
________________
பொதைச்சிட்டுப் போங்க... போங்க... எல்லாரும் நாளக்கியேன் னாலும் போங்க எனக்குப் பொறவு வல்லத்த என்னமுஞ் செய்யி..." என்று சொல்லிவிட்டு மறுபக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டான். அவன் கண்களில் கண்ணிர் தேங்கி இருந்தது.

செபஸ்தி அதற்கப்புறம் அவனிடம் ஒன்றும் பேசவில்லை. தனக்குள்ளாகத் தீவிரமாக எதையோ யோசிக்கிறவனைப்போல மோட்டைப் பார்த்துக்கொண்டு மல்லாக்கப் படுத்துக் கிடந்தான். அவன் யோசனையின் தீவிரம் கண்களில் இருந்தது. பிலோமி துங்கவில்லை. அவள் அருகே அம்மை அடிச்சுப் போட்ட வளைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தாள். மேலச் சுவரிலிருந்த சின்ன ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் உள்ளே விழுந்து கிடந்தது.

சாயந்தரம் போட்டிருந்த பவுடருடைய மணம் அவள் முகத்துக் குள்ளிருந்து வீசியது. பிலோமி சின்னப் பிள்ளையாயிருக்கையில் அம்மையுடைய மடியில் படுத்துக்கொண்டு படுத்த உடனேயே துங்கிப் போய்விடுவாள். இப்போதெல்லாம் அப்படித் துரங்க முடியறதில்லை. அவளால்.

சாமிதாஸ் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்?

அன்றைக்கு முழுவதும் அவள் அவனைப் பார்க்க முடியாம லேயே ஆகிவிட்டது. அவனும் பிலோமியைப் போலவே விழித்துக்கொண்டுதானிருப்பானா விழித்துக்கொண்டிருப்பான் என்று எண்ணுவதுதான் அவளுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. ஆம், அவனும் அவளைப்போல விழித்துக்கொண்டுதான் இருப்பான். அவனும் தூங்க முடியாது. அவனும் பிலோமியைச் சந்திக்கவில்லையே. இவள் தவித்ததைப்போல, அவனும் அன்று முழுவதும் தவித்திருப்பான். ஆனால் அவன் ஆண் பிள்ளை. நினைத்திருந்தால் பிலோமி வீட்டுப் பக்கம் வந்திருக்கலாம். வரவில்லை. அவன் வராமல் போனதுக்காக அவன் பிலோமியை நினைத்திருக்க மாட்டான் என்று எப்படிச் சொல்லமுடியும் நினையாமலிருப்பானா? ஆனால், முடியாமல் போய்விட்டது.

ஒரேயொரு கொக்கு தன்னந்தனியே வானத்தில் சத்தமிட்டுக் கொண்டு போனது. அதனுடைய கூட்டை அது தவற விட்டிருக்கிறது. பிலோமி எழுந்துபோய் ஜன்னலருகே நின்றுகொண்டு வெளியே பார்த்தாள். பஞ்சுப் பொதிகள்போல மேகங்கள் கடலிலிருந்து மேற்கே நகர்ந்துகொண்டிருந்தன. பிலோமியின் மார்பு புரண்டது. புறவாசல் கதவைத் திறந்துகொண்டு போனாள். மரியம்மைக்கு வேறு எந்தச் சத்தம் கேட்டாலும் விழிப்புத் தட்ட வாய்ப்பில்லை. கதவு திறந்தால் மட்டுமே விழிப்புத் தட்டிவிடுகிறது.

"ஆாது...?"

"நாந்தான்ம்மை. பின்னாலே போறேன்.'

"போயிட்டு ஒர்மையாகதவைக் கொண்டி போட்டுதானே படு."

"சரிம்மா..."

புறவாசலில் கொல்லைப்புறம் ரொம்பவும் நீளமானது. நடைப்படியைவிட்டு இறங்கினதுமே மணலில்தான் காலை வைக்க வேண்டும். மேலக் கடைசியில் வேலி ஒரத்தில் கிணறு. கிணற்றுக் கைப்பிடிச் சுவரடியில் வாளி, கயிறுடன் இருந்தது. கிணற்றடி சுத்தமாகக் காய்ந்து போயிருந்தது. சுற்றியிருந்த சின்னதான சிமெண்டு ஒடையில், காற்றடித்துப் போட்டிருந்த குறுமணல் படிந்திருந்தது. நாலைந்து வாகை மரங்கள். வேலி முடிகிற இடம்வரை ஓரமாய்த் தென்னை மரங்கள். எல்லாம் நிலா வெளிச்சத்தில் பார்க்க அழகாயிருந்தன. அவளுடைய தாத்தா தாசையா இருந்த வரையில் அந்தத் தென்னைகள் அவருடைய பிரியமான குழந்தைகள். இப்போது எப்போதாவது மரியம்மை சத்தம் போட்டால் பிலோமி தண்ணீர் ஊற்றுகிறதுண்டு. ஆனால் தண்ணிர் ஊற்றினாலும் ஊற்றாவிட்டாலும் அந்த மரங்கள் இன்னும் விசுவாசத்துடன் காய்த்துக் கொண்டிருக்கின்றன. மரங்களுக்கு நடுவே தாத்தா தார் பாய்ச்சிக் கட்டிக்கொண்டு, தண்ணிர் வாளியைத் தூக்கியபடி சாய்ந்து சாய்ந்து நடந்து போகிறதுபோல இருந்தது.

தாத்தாவுக்குத்தான் அவள் மேலே எவ்வளவு பிரியமிருந்தது. பிலோமிக்கு அந்த வீட்டிலே பிடித்தமானவர் தாத்தாதான். தாத்தாவோடுதான், அவளுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குப் போய் வந்து கொண்டி ருந்தாள். சின்ன வயசில் அவருடைய காய்ப்பேறியிருந்த முரட்டுக் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்திருந்தாள். அவருடைய கருப்புத் திரேகத்தில் கைகள், கால்கள், தலையில் உள்ள முடிகள் எல்லாம் நரைத்துப் போயிருந்தன. ஆனால், அவைகள் ரொம்பவும் அடர்த்தியானவை: கை கால், மார்பிலெல்லாம் சுருண்டு கிடக்கும். போன வருஷம் டிசம்பரில் கிறிஸ்துமஸ் கோயிலுக்குக் கடைசியாய் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்து வந்தார். வரும்போதே அடிக்கொருதரம் "பிலோமிக் குட்டிக்கி தாத்தாவால் கயிஸ்டமில்லையா?" என்றார்.

அதெல்லாங் கெடையாது தாத்தா."

'நீ மவராசியா இருப்பே..."

அவளுடைய தாத்தா எவ்வளவு அன்பானவர்.

தோட்டத்தின் கடைசியில் போய் நின்றுகொண்டு பரந்து கிடந்த கடலைப் பார்த்தாள். பாசிப் பிடித்த கரும்பாறைகள் கரையில் மணலுக்கு மேலே துருத்திக் கொண்டிருந்தது, வெளிச்சத்தில் பளபளவென்று தெரிந்தது. தென்னை மரங்கள்; பார்வை மேயும் துரம் வரை தென்னை மரங்கள். மரங்களுக்கிடையே காயப் போட்டிருந்த வலைகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. யாரோ ஒரு பறையன் ஏதோ பாடிக்கொண்டே கோயில் முன்னால் தடுமாறித் தடுமாறிப் போய்க்கொண்டிருந்தான். அவன் வருகிற பக்கத்தில்தான் கள்ளுக்கடை இருக்கிறது. வெகுநேரமாக வேலிக் கம்புகளில் கையை வைத்துப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு மெதுவாகத் திரும்பி நடந்தாள். திடீரென்று ரொம்ப சேர்வாக இருக்கிறதுபோல உணர்ந்தாள்.

'இப்போது அவன் என்ன செய்துகொண்டிருப்பான்? அவளுக்கு மீண்டும் அவனுடைய ஞாபகம் வந்தது. -

புறவாசல் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழையும் போதுதான் வீட்டில் அண்ணன், அம்மா, அப்பா எல்லோரும் படுத்திருக்கிறார்கள் என்பது நினைவுக்கு வந்தது. இவ்வளவு நேரமும் தனியே இருந்ததுபோல, இனம் சொல்லத் தெரியாத துயரம் நெஞ்சில் கதவை அம்மை சொன்னபடியே தாழ் போட்டுக்கொண்டு வந்து படுத்தாள். துரக்கம் வருமென்றே தோணவில்லை.

இந்த அண்ணனுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? அப்பச்சிக்குத் தான். அண்ணன் பெரிசாகச் சொப்பணம் கண்டுக்கிட்டிருக்கு.

அம்மைக்கி அண்ணன் கூடப் போகத்தான் இஷ்டம், சை... இவ்வளவு வயசுக்கப்புறமும் அம்மைக்கி சீவிச் சிங்காரிக் கிறதில் ஆசையொன்றும் குறைந்துவிடவில்லை. பாடிஸ் கயிறு வெளித் தெரிய சட்டைக்கி கழுத்து வைத்திருக்கிறாள். அருவருப்புடன் திரும்பிப் பார்த்தாள் அம்மையை, அம்மை அலங்கோலமாகப் படுத்துக்கிடந்தாள். எதையோ நினைத்தபடி வாசலில் கட்டிலில் படுத்துக் கிடந்த அப்பச்சியையும் பார்த்தாள். அப்பச்சி எவ்வளவு நல்ல மனுஷர். முணுக்முணுக்கென்று கோபம் வரும். வந்த புத்தடியில் தடந் தெரியாமல் போய்விடும். அப்படியே எழுந்துபோய்க் கட்டிலில் அப்பச்சியுடன் கழுத்தைக் கட்டிக்கொண்டு படுத்துத் துங்க வேண்டும்போல இருந்தது.


......................