Pages

Saturday, June 25, 2016

அசுரகணம் - க.நா. சுப்ரமண்யம் (1,2 அத்தியாயங்கள்)

அசுரகணம் நாவலில் ராமாயணத்திலிருந்து ஆரம்பித்து ப்ராய்ட் யுங் என்று நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் வரையில் ஏற்றுக்கொண்ட கிளப்பிய சித்தாந்தங்கள் இடம் பெறுகின்றன: கிளப்பப்படுகின்றன. மனித மனதத்துவம் என்பதிருக்கிறதே-அது ஆழமான விஷயம், கனமான விஷயம். ஆழமும் கனமும் கூடக் கூட ஒரு நவீனச் சிக்கலும் கூடுகிற மாதிரி இருக்கிறது. அசுர கணம் என்பது எனக்கும், என்னைப் போலச் சிந்திக்கிற பலருக்கும் திருப்தி தந்த நாவல். அதன் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தன என்பது அதன் ஆழத்தையும் கனத்தையும் அதிகரிக்க உபயோகப்பட்டது.

க.நா.சு.

பதிப்புரை

தமிழின் முன்னோடி எழுத்தாளர் க.நா.சு. அவர்களுக்கு 2012. நூற்றாண்டாக அமைகிறது. க.நா.சு.வின் நூற்றாண்டை ஒட்டி அவரது மிகப்பெரும் இலக்கியப் பங்களிப்பை நன்றியோடு நினைவு கூறும் பொருட்டு அவருடைய சிறந்த நாவல் அசுரகணம் வெளியிடப்படுகிறது.

தமிழ் மொழியின் அடர்த்தியும் ஆழமும் கூடவும், உலக இலக்கியத் தரத்துக்குத் தமிழ்ப் படைப்பு உயரவும், பல உலக நாவல்களை மொழியாக்கம் செய்த கநாசு தானும் உயர்தரத்தில் எழுதிப் பார்த்திருக்கிறார். அவைகளில் ஒன்று அசுரகணம் எழுதப்பட்டு அரைநூற்றாண்டுக்கு மேலாகியும் இன்றைய வாசிப்புக்குப் புத்தம் புதிதாக இருக்கிறது இந்த நாவல் என்பது இந்த நாவலின் பெருமை மட்டுமல்ல, க.நா.சுவின் எழுத்துச்சிறப்பும் அதுதான்.

தமிழ் இலக்கியச் சாதனையாளர்களாகிய நம் முன்னோடிகளின் அருமையான படைப்புகளை இளம் வாசகர்களின் வாசிப்புக்குக் கொண்டு வரவேண்டும் என்கிற நற்றிணைப் பதிப்பகத்தின் பேரவாவின் அடிப்படையில் முதலில் வெளிவரும் படைப்பு

இது.

க.நா. சுப்ரமண்யம் 5

________________

அசுரகணம்

நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமோ?

எனக்கு வருகிறதே! என்ன செய்ய?

அன்று புதன்கிழமை என்று எண்ணுகிறேன். எங்கள் தெருவில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து மேளச் சப்தம் கேட்டது. வழக்கம்போல நேற்றைய உலகத்தை அசை போட்டுக்கொண்டு படுக்கையில் புரண்டுகொண்டே கிடந்த எனக்கு, நாதசுர சப்தம் காதில் விழுந்த மாத்திரத்திலே, ஒன்றன்பின் ஒன்றாகப் பல சாவு ஞாபகங்கள் வந்தன.

நாதசுரம் காதைத் துளைத்தது. மூன்றாவது வீட்டில் தவுல் பிய்ந்துவிடும்போல இருந்தது, என் காதுத் தவுலையும் பிய்த்துக் கொண்டு.

என் சிந்தனை மூட்டம் அச்சப்தம் கேட்டே கலைந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

சாதாரணமாக மேளச் சப்தத்தைக் கேட்பவர்கள் சுபமான காரியங்களுடன் சேர்த்துக் கணிப்பர். அதுதானே மனித சுபாவம்' என் சுபாவம் சற்றே மாறுபட்டது. விசித்திரமானது.

சற்றே என்ற சொல்லும் பிசகுதான். முற்றிலும் விசித்திர மானது என்றுதான் சொல்லவேண்டும்.

இந்தப் பதினெட்டரை வருஷங்களில் நான் அறிந்துள்ள, நேரில் கண்ணுற்ற சாவுகளை எல்லாம் எனக்கு அது நினைவூட்டியது.

ஆமாம். சாவுகளைத்தான்!

க.நா. சுப்ரமண்யம் - 11

________________

முந்திய வாரம் நண்பகல் நடுத்தெருவில் நிர்வாணமாகச் செதது விழுந்து

கிடந்த கிழவி அந்த அனாதை எத்தனை  நாட்கள் அவளுக்கு பிச்சை  போட மறுத்திருப்பேன் நான்! அதற்கு முன் என் தாயின் சாவு.  சாவினும் துளி கோணாத நேர்மை அது! அதற்கு முன் நடுத்தெருவிலே காருக்கடியில் அகப்பட்டு மூளை சிதறி - அல்ப மூளை அது - இறந்த  வாலிபன் - இப்படியாகப் பல சாவுகள

தெருவிலே அதிகாலையில் சாஸ்திரோக்தமாகச் சாணி -தெளித்து கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி ஒருத்தி மேல். அவள் பெயர் வாலம் எனது ஞாபகம எனககு காரணமில்லாமலே ஓடி வந்து மோதிய ஒரு பஸ். அதுதான என முதல் சாவு அப்போது எனக்கு வயது ஏழுதான் இருக்கும் என்று எண்ணுகிறேன்

இப்படியாகத் தெருவிலே கேட்ட மேளச் சப்தத்தால் தூண்டப்பட்டு என் சாவு நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக இன்னமும் மங்காத ஒரு தூர காலத்துக்கு ஒரு தூரப் பிரதேசத்துக்கு என்னையும் மீறியே செல்கின்றன.

நான் என்னவோ மற்றவர்களைப்போல, சாதாரணமான மற்றவர்கனைப்போல, சாதாரணமானவனாக இல்லை என்கிற ஒரு நினைவு சதா என்னுள்ளே தலை தூக்கிக் கொண்டே பிருக்கிறது. சாதாரணமாகச் சிந்திக்கவோ, சாதாரணமாக நடந்து கொள்ளவோ என்னால் இயலவில்லை.

என் சித்தமும் போக்கும் சுருக்கமாகச் சொன்னால், சற்றே முழுவதுமே விசித்திரமானவைதான்.

கல்லூரியில் படிக்கிற என்னை இந்தக் கிராக்கா என்று என சகமானவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும் அது ஒரு வகை மொழியாகக்கூட என் மனத்தில் படுவதில்லை, என் சுபாவத்தை உள்ளபடியே குறிப்பிடுகிற ஒரு சாதாரண அடைமொழியாகத்தான் நானே அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

முதலில் சில நாட்கள், சில வாரங்கள் என்றும் சொல்லலாம். என் காதில் இந்த வார்த்தை விழுந்தால் நான் கோபித்துக்கொள்ளப்போகிறேனே என்று பயந்தவர்களாக, அது காதில் விழாமல் தங்களுக்குள்ளாகவே மறைவாகப் பேசி மறைக்கப் பார்த்தார்கள். கிராக்கு என்று அழைக்கப்படுவதையும் பொருட்படுத்தாத கிராக்கு நான் என்பது அவர்களுக்கு நாளடைவில் தானாகவே தெரிந்து விட்டது. கிராக்கு என்றும், அனுதாபத்துடன் பேசும்போது ஸெமி என்றும் என் காது கேட்கவே சொல்லவும், கூப்பிடவும்கூட அவர்கள் இப்பவெல்லாம் தயங்குவதில்லை.

நான் கோபித்துக் கொள்ளுவதில்லை.

கிராக்கு என்ன, ஸெமி என்ன, பைத்தியம் என்ன?

எல்லாமே வெறும் வார்த்தைகள்தான். வார்த்தைகளைக் கண்டு பயப்படுவதும், கோபித்துக் கொள்வதும், மிரளுவதும் நிழலைக் கண்டு பயப்படுகிற மாதிரித்தான் என்பதே என் நினைப்பு

உலகிலே பயப்படுவதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் உண்டே வெறும் வார்த்தைகளைக் கண்டு மிரளுவானேன் என்றுதான் நான் எண்ணுகிறேன்

வெறும் வார்த்தைகளைக் கண்டு பயப்படுவதும் வெறும் வார்த்தைகளைப் போட்டு உருட்டி மோகித்து மயங்குவதும் பைத்தியக்காரர்கள் செயல் என்றே, பைத்தியமாகிய எனக்குத் தோன்றுகிறது.

பைத்தியமா? யார் பைத்தியம்:

நானா உலகமா!

ஆனால் ஒன்று மிகவும் தெளிவு. உலகிலுள்ள மற்றவர்கள். மக்கள் என்று நடமாடுகிறவர்களில் பெரும்பான்மையோரைப் போல நான் இல்லை. நான் சராசரி மனிதன் அல்ல.

நான் அவர்களைப் போல இல்லை என்று சொல்லுவதா அவர்களில் யாரும் என்னைப்போல் இல்லை என்று சொல்லுவதா இதையே என் முதல் துரதிருஷ்டமாக நான் கருதுகிற சமயங்கள் உண்டு

இதுவேதான் என் அதிர்ஷ்டம் என் பலம் எனறு நான கருதிப் பெருமைப்படுகிற காலங்களும் உண்டு

க.நா. கப்ரமண்யம் 13

________________

என் அசாதாரணத்துவத்துக்கு  ஓர் உதாரணமாகத்தான்  நான் நாதசுர சப்தம் கேட்டால் சாவு நினைவுகள் என்னுள்ளே மண்டுகின்றன. குமிழியிட்டு கும்ளமமிடுகின்றன என்று  சொன்னேன்.

நான் நாதசுர சப்தம் 

நாதசுரம - கொண்டாட்டம் -துக்கம் = T। என்கிற வரிசையில் என் சிந்தனைகள் இயங்கினால் நானும சாதாரண பதைகளில் ஒருவன்தான் என்று." தகுத் தோன்றிவிடும். ஆனால என் சிந்தனைகள் அந்த வரிசையில் இயங்குவதில்லை வரிசையை நாளாக ஞாபகப்படுத்திக் கொண்டால் கோபம் மூளுகிறது. இத்தனை பேர் இறந்துவிட்டதற்காக இப்படி இன்று ஊர்கூடி ஊரெல்லாம் ஒலிக்க நாதசுரம் வாசிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

அனாதை கிழவி ஒருத்தி, துணியில்லாமல் செத்துக் கிடந்தால் அதற்காக உலகம் இசைபாடி மகிழ வேண்டுமா?

ஆனால் இந்த என் கோபத்துக்கு ஆதாரமோ அஸ்தி வாரமோ இல்லை என்பது எனக்குத் தெரியும் என் ஏறுமாறான, கோணலான சுபாவத்தில் தவிர வேறு எங்கும் அஸ்திவாரம் இல்லை

எழுந்து வாசலில் வந்து அன்று எதற்காக மேளதாளம் எல்லாம் என்று எங்கள் வீடு கூட்டிக்கொண்டிருந்த பொன்னம் மானை விசாரித்தேன். அவளை நியூஸ் பேப்பர் என்றுதான் நான் சொல்லுவது வழக்கம் எந்த விட்டில் என்ன நடக்கிறது என்று

அவளுக்குத் தெரியாவிட்டால், வேறு யாருக்குமே தெரிந்

திருக்காது என்பது நிச்சயம்

சின்னப்பையன் ஒருவனைப் படிக்க வைக்கிறார்களாம், அதற்காக மேளம் எல்லாம் தடபுடல் படுகிறது.

- அப்படியே ஒடிப்போய் நான் படித்துக் கண்டுவிட்டதை வலாம் அந்தக் கொண்டாட்டத்திலே எல்லாருக்கும் தெரிய * சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு. உலகில் பதவாகன எல்லாம் எப்படிப்பட்ட அறிவிலிகளாக *24* அகப் பள்ளிக்கூடம் போகும் சாவிலே கூறவேண்டும் "று எனக்குத் தோன்றுகிறது.

ف-سیمه * 14

பைத்தியக்காரத்தனமான சிந்தனைதான் அது, அல்லவா? சாதாரண மனிதன் ஒருவனுக்கு இப்படியெல்லாம் தோன்றுமோ? படிப்பின் வியர்த்தம் மட்டும் என்ன, வாழ்வின் வியர்த்தமே நாதசுரத்தில் ஒலித்தது.

அதனால்தான் எனக்கு அது சாவின் நினைவுகளை எழுப்பியது போலும்!

செத்துப் போய்விட்டவர்களுக்காக மட்டும் ஊதவில்லை, அன்று அதிகாலையில், அந்த நாதசுரம் அந்தத் தவில் டும்டும் என்று அபகரமாகவே செத்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

செத்த பிணமும், சாகும் பிணமும் திருமூலன் வந்து முடிக்கட்டும்.

இப்போது பல வாரங்களுக்குப் பிறகுதான் தெரிகிறது. எனக்காகவும் ஹேமாவின் தாயாருக்காகவும் ஒலித்தது அன்று அதிகாலையில் அந்த நாதசுரம் என்று.

எனக்குக் கதை சொல்லி முன்பின் பழக்கமில்லை என்றாலும், செத்திருந்தால் அல்லவா சுடுகாடு தெரியும் என் கதையை ஒரு வழியாகச் சரியான இடத்திலேயே தொடங்கி விட்டேன் என்றுதான் தோன்றுகிறது.

இது நானாக நினைத்து, ஏற்பாடு செய்து, திட்டமிட்டுச் செய்தது அல்ல. எப்படியோ தானாக நேர்ந்துவிட்டது.

அந்தப் பையனைப் பள்ளிக்கூடம் போட்ட அன்றுதான் என் தகப்பனார் மாலையில் என்னை ஹேமாவின் வீட்டுக்கு அனுப்பினார். அதுதானே என் நாகவேதனையின் ஆரம்பம்: ஹேமாவை நான் நிமிர்ந்து நோக்கிய அந்த நாள், நாதசுரத்தில் பிறந்தது. என் மனசிலே அது எழுப்பிய சாவு நினைவுகள் போலவே சாவிலே முடிந்தது என்று சொல்லலாமா?

டாண்டே என்கிற மகா கவியைக் கையைப் பிடித்து சொர்க்கம் பூராவையும் சுற்றிக் காட்டினானாம் பியாட்ரிஸ் என்கிற அவன் காதலி.

என் காதலி என்னிடமிருந்து சொர்க்கம் என்று ஒன்று உண்டு என்கிற சங்கதியையே மறைத்து விட்டான் இல்லை,

க.நா. சுப்ரமண்யம் 15

________________

அவளுக்கு அது தெரியவே தெரியாதோ சன்னவோ. எனக்குச் சொல்லத் தெரியவில்லை G

நரகலோகத்தில்அவளுடன் கைகோத்து உலாவி வருவதிலே ஒரு இன்பத்தை நான் கண்டேன் என்று தான் நினைக்கிறேன்.

இன்பம் கண்ட இடத்தை சொர்க்கம் என்று சொல்லாமல் நரகம் என்று சொல்லுகிற என்னைய பைத்தியக்காரன் என்றுதானே சொல்லவேண்டும்:

சுற்றி வந்தது நாகம் என்கிற நினைவும், எட்ட இருந்தது இன்பம் என்கிற நினைவும், என் உள்ளத்திலே கால் வீசிக் கைவிசிப் புயல் கிளப்பிவிட்டன. இன்பதுன்பம் தாண்டிய ஒரு நிலையை எட்டினேன் நான் பரப்பிரம்மாவும், பரமஹம்ச னாகவும் ஆகியிருக்க வேண்டியது இம்மியளவில் தப்பியது.

ஆகவேதான் என் கதையைச் சொல்லப் பேனாவும் கையுமாக கன்னித் தாளுக்கு எதிரிலே உட்கார்ந்திருக்கிறேன்.

ஹேமா அப்படியொன்றும் கன்னியல்ல என்றுதான் சொல்ல வேண்டும் என் தகப்பனாரும் எனக்கு என்னவோ வேண்டாதவர்தான் எனினும், இந்த விளைவுகளையெல்லாம் உத்தேசித்தும் என்னை அன்று அவர் அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை

உண்மையில் அன்று அவளைப்பற்றி என் தகப்பனாருக்கு ஒன்றுமே தெரியாது. மாம்பலத்தில் வேங்கடநாராயணா ரோட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள விட்டில் தன் நண்பர் ஒருவர் வந்திருக்கிறார் என்றும், அவரைப் பார்த்து ஒரு செய்தி சொல்லிவிட்டு வா என்றும் என் அப்பா அன்று என்னை அனுப்பி வைத்தார்.

பின் இரண்டாவது வருஷம் படித்துக் கொண்டிருந்த நான் இந்த மாதிரிக் காரியங்களைக்கூட சரிவரச் செய்யத் திறமை அதுபோ என்பது என் தகப்பானாருக்குத் தெரியும் சாதாரண * அவர் என்னை இந்த மாதிரி, காரியங்களுக்கெல்லாம் : *·r அவர் ஏதாவது ஒன்று சொல்லிவிட்டு ாக சொன்னால், அந்த ஒன்றைத் தவிர மற்ற சொல்லாக்கூடாதொன்பதை சொல்லி விட்டு வருகிற பிரகஹஸ்பதி நான் என்பது அவர் அனுபவம்.

"எண்டா இத்தனையும் சொன்னயே! இதையும் சொல்லக் கூடாதோ' என்று அப்பா கேட்டால் அதுதான் மறந்துவிட்டது அப்பா" என்று வழக்கமாகப் பதில் அளிப்பேன்.

அன்று வேங்கடநாராயணா ரோட்டில் அந்த எண்ணுள்ள விட்டுக்கு என்னை அனுப்பி வைத்தது என் தகப்பனாரல்ல; விதிதான் என்று சொல்லவேண்டும்.

ஆனால் எனக்கு விதி என்பதிலும், அதிருஷ்டம் என்பதிலும், காரண காரிய தப்பமுடியாமையிலும் அப்படி ஒன்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கிடையாதுதான். இருந்தாலும் விதி என்று நானே சொல்லவேண்டியதாகத்தான் இருக்கிறது. வேறு வழியில்லை

ஏனென்றால் ஹேமாவை அன்று அந்தச் சந்தர்ப்பத்தில் நான் அறியத் தொடங்கியது தவிர்க்க முடியாதது. தப்பமுடியாது என்றும், அதன் விளைவுகள் என்னை இன்று வரை, இங்கு வரை கொணர்ந்து விட்டிருக்கின்றன என்றும் சொல்ல வேண்டியதாகவே இருக்கிறது.

2

மாம்பலத்தில் வேங்கடநாராயணா ரோட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள விட்டில் போய் ஸார்" என்று கூப்பிட்டேன்.

உள்ளேயிருந்து ஒரு பெண் குரல், யார் அது." என்று அதட்டலாகக் கேட்டது.

நான் தேடிவந்தவர் பெயரை, அது நல்லவேளையாக மறந்து விடவில்லை எனக்கு "அவர் இங்குதான் இருக்கிறாரா என்று கேட்டேன்.

பதில் சொல்லாமலே அந்த அதட்டல் குரலின் சொந்தக் காரி உள்ளேயிருந்து அலங்காரத் திரையை விலக்கிக் கொண்டு உள்வாசற்படி தாண்டி வெளியே வந்துவிட்டாள். நாகரிகமாக மிகவும் ஸ்டைலாகத்தான் இருந்தாள் அவள் என்பது இதுபற்றி எதுவுமே தெரியாத எனக்கும்கூட அவளைக் கண்டவுடனேயே



க.நா. கப்ரமண்யம் 17

தெரிந்தது. இவ்வளவு பகட்டாக, ஒருங்கே கண்ணையும் மூக்கையும் கவரும் படியாக ஒருத்தி இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று என்னையே கேட்டுக்கொண்டு நின்றேன் 

நீங்களா ? என்றாள் அவள் என்னை நன்றாக அறிந்தவள் போல.

திடுக்கட்டு ஆமாம், நான்தான் என்றேன் மீண்டும் ஒருதரம் அவளை நிமிர்ந்து பார்த்தேன் முன்ஹால் சுவரில் மாட்டியிருந்த காலண்டர் அழகியைப் பார்த்தேன் மூன்றாவது முறையாக அவள் முகத்தைப் பார்த்தேன்.

உண்மையில் அவளை எனக்குத் தெரியவில்லை. எனினும் நானும் அவளை அறிந்துகொண்டவன்போல நீயா" என்றேன்.

முந்திய ஜன்மத்தில் அவளை அறிந்திருந்தேனோ நான்?


இந்த ஜன்மத்தில் போலவே அவள் பல ஜன்மங்களில் என் மனைவியாக இருந்தவள்தானோ!

காதல் என்று சொல்லுகிறார்களே. அது பூர்வஜன்ம வாசனைதானோ

என் நீயா என்று அவளை அறியாத நான் அவளை நன்றாக அறிந்து பழகியவன் மாதிரிக் கேட்டு விட்டேன்.

"நீ யார்' என்று கேட்கத் தொடங்கி, பலவீனத்தினால் "நீயா என்று நிறுத்திவிட்டேனோ

என்னாலேயே இதெல்லாம் பற்றி ஒன்றும் தீர்மானிக்க முடியவில்லை

அசட்டுத்த்னமான கேள்விகள் கேட்பதும், அசட்டுத்தனமான பேச்சுக்கள் பேசுவதும் அப்படி ஒன்றும் எனக்குப் புதியவிஷயம் அல்ல.  தத்துப்பித்தென்று. இன்னதை எதற்காகச் சொல்லுகிறோம் என்று அறியாமல், வார்த்தை போதையிலே, கவிதையாக, பைத்தியத்தின்  பேத்தலாக ஏதாவது சொல்லி விடுவேன் நான். எனக்கே ஏன் எதற்காக எப்படி என்றெல்லாம் தெரியாது

 இந்தப் பேச்சும், பரவசமும், பார்வையும், பித்தமும், கிறக்கமும் எங்கே போய் முடிந்திருக்குமோ, தெரியாது.

* * *

ஆனால் நல்ல வேளையாக அச்சமயம் யாரோ அது அந்தப் பெண்ணின் தாயாராகத்தான் இருக்க வேண்டும் என்று அவள் உருவத்தையும் முகத்தையும் பார்த்தால் தெரிந்தது. உள்ளே வந்தாள். யாரடி அது. ஹேமா என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

ஹேமாவா அவள் பெயர் தாயார் ஹேமா என்று கூப்பிட்டாள். முழுப்பெயர் ஹேமாங்கினியாகவோ, ஹேமலதாவாகவோ இருக்கலாம் கல்கத்தாவில் எந்தக் காலத்திலாவது வங்காளிகள் மத்தியிலே இருந்த குடும்பமாக இருக்கும் என்று எண்ணினேன் நான

ஹேமா தன் தாயாரிடம் சொன்னாள். இவர் என்னோடு என் வகுப்பில் படிக்கிறார் அம்மா. ராமன் என்று பெயர். மாமாவைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார். எங்கள் வகுப்பில் நாலு சப்ஜெக்டிலேயும் இவர்தான் முதல் என்றாள்

ஓஹோ ஹேமா என்னோடு என் வகுப்பிலே படிப்பவனா? சரிதான்.

அப்படியானால் என்னை என் சகமாணவர்கள் ஸெமி. கிராக்கு என்றெல்லாம் சொன்னதும் அவளுக்கும் தெரிந்திருக்கும். அதையும் அவள் தன் அம்மாவிடம் என் எதிரிலேயே சொல்லியிருக்கலாம் எனக்கு ஓர் ஆட்சேபமும் இல்லை. ஆனால் அதைப் பின்னர் சொல்லலாம் என்று வைத்திருப்பாள். போகட்டும் என் லூஸ்தனங்கள் அவளுக்குப் புதுசாக இருக்க நியாயமில்லை என்கிற நினைப்பு எனக்கு ஆறுதல் தருகிற மாதிரித்தான் இருந்தது.

"யார் நீ" என்று அவளைக் கேட்டுவிட்டு, அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளாதிருந்தேனே, அந்த மட்டில் நல்லதுதான் என்று எண்ணினேன். எனக்குக் கிராக்காக இருக்க ஓர் ஆட்சேபமும் இல்லை. பைத்தியக்கார உலகிலே பைத்தியக்காரன் என்றால் பைத்தியம் அல்லாதவன் என்றுதான் அர்த்தம் ஆனால் அசடு என்கிற பட்டத்துக்கு உரியவனாக இருக்க மட்டும் எனக்கு என்றும் விருப்பம் கிடையாது.

நான் தேடிவந்தவர் அவளுடைய மாமாவாம். என் தகப்பனாருடைய நண்பர், அவர் அப்பொழுது வெளியே

க.நா. கப்ரமண்யம் 19



துதே என்று அம்மா பெண் இருவருக்குமே - சயில் நான் அங்கேயே

ஹேமாவின் தாயார்

அங்கேயே இருக்க வேண்டி"சி"யிற்று.

G அதேயோ ஏதோ வேலை இருப்பதாகச் சொல்வி வறு பவளவுக்கு அச்சமயம்

விட்டுப் போயிருக்கலாம்தான். ஆனால் அவ என் கற்பனை ஓடவில்லை

இப்போது எண்ணிப் பார்க்கும்போது எனக்கு அப்படிப் போய்விட விருப்பம் இல்லையோ என்றுகூடத் தோன்றுகிறது!

எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை

"நீயா என்ற ஹேமாவை ரொம்பவும் தெரிந்தவன் மாதிரிக் கேட்ட நான் அந்த விட்டுக்கு மிகவும் பழகியவன் மாதிரி, ஹேமாவின் தாய் காட்டிய ஆசனத்திலே நல்ல பின்னையாக உட்கார்ந்துவிட்டேன்.

ஹேமா அறைக்குள்ளும் வெளிக்கூடத்துக்குமாகக் காரணம் எதுவுமில்லாமலே போய்ப் போய் வந்து கொண்டிருந்தாள். இப்படித் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் பழக்கம் என் தங்கை ருக்குவுக்கும் உண்டு. ஆனால் ருக்குவிடம் எனக்கு அசாத்தியக் கோபம் வரும் தொலைந்து போயேன். கண் எதிரில் வராதே" என்று கத்துவேன்.

ஹேமா மாதிரியே பின்னலைக் கைவிரலால் சேஷ்டை செய்து கொண்டு என்ன அண்ணா என்ன சொல்றே" என்று கேட்டுக் கொண்டு என்முன் வருவாள் ருக்கு

ஹேமா செய்தது என்னையும் அறியாமலே எனக்குப் பிடித்

சிகண்மூட்டுவதற்குப்பதில் அது எனக்கு அமைதிய்ைத

_கப்பாக இருந்தது. நான் உட்காாத்திருந்த ஆசனாமா மெத்தென்று எனக்குப் பிடிப்பாகவே இருந்தது.

ഷ്.. என்ற மனோதத்துவ நிபுணர் கற்பனையால் - சான்ன ஒரு விஞ்ஞானக் கொள்கை ாக்கு ஞாபகம்

0ே அக

வந்தது. மனிதர்களாகப் பிறந்து விட்டவர்கள் எல்லாருக்குமே கவலையற்ற, மெத்தென்ற, சுகமான, தாய் வயிற்றுக் கர்ப்பப்பை நினைவு அற்றுப்போவதேயில்லை. அந்த சுகத்தை நாடியே மனிதர்கள் செயல்படுகிறார்கள், ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள் என்று கண்டு சொன்னான் அவன்,

அது உண்மையாகவும் இருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

அந்த அறையும் அந்த ஆசனமும் எனக்கு நான் அறியாத ஆனால் ஃப்ராய்ட் தத்துவப்படி நினைவில் வைத்திருந்த என் தாயின் கர்ப்பப் பையை எனக்கு நினைவூட்டியிருக்கலாம்தான்.

கதகதப்பும், மிருதுத் தன்மையும், ஹேமாவின் தாயின்

தாய்மையும் அந்த நிமிஷத்து நித்தியமான சொர்க்கமாகவே எனக்குத் தோன்றின.

தானாக எதுவும் செய்து அவதிப்பட வேண்டாத நிலை அது அனுபவிக்கலாம்.

சும்மா இருப்பது என்கிற சுகத்தைத் தாயுமானவருடன் நானும் கண்டவன்தான்.

ஹேமா இரண்டு மூன்று தரம் உள்ளே போய்விட்டு வந்து, கடைசியாக என் பக்கத்து ஸோபாவில் உட்கார்ந்து கொண்டு ஏதோ சொன்னாள். அவளுடைய அழகிய குருவி வாய் திறந்து மூடுவதைப் பார்த்துக்கொண்டே அவள் என்ன சொன்னாள் என்பதைக் காதில் வாங்காமலே ஆனந்தமாக பரப்பிரும்மமாக வீற்றிருந்தேன் தான்.

அர்த்தமுள்ள விஷயமாக கல்லூரிப் பெண்ணாகிய அவனால் என்ன பேசிவிட முடியும்:

நான் பதில் எதுவும் தரவேண்டும் என்று அவன் எதிர்பார்த்ததாகவும் தெரியவில்லை

இதை நான் என் தங்கை ருக்கு விஷயத்திலும் கவனித் திருக்கிறேன். அவள் பாட்டுக்கு மணிக்கணக்காகப் பேசிக் கொண்டேயிருப்பாள். அவள் சொன்னதை நான் காதில் வாங்குகிறேனா என்கிற கவலையே அவளுக்குக் கிடையாது

க.நா. அப்ரமண்யம் 21

________________

ஹேமாவையும் சன் தங்கையையும் r ஏன் இபடி திமிஷத்துக்கு நிமிஷம் இரண்டு தடவை ug: பானை என்பது எனக்கே தெரியவில்லை என ജങ് "" பதினைந்து பதினாறு வருஷங்களாக இருபவ. ஹேமா என o இந்த அலங்காரி என்னோடு இரண்டு மூன்று வருஷங்கள

படித்திருக்கிறான் எனினும் அவன் பெயர் கூட எனக்கு இன்று

துக்கு முன் வரையில் தெரியாக ஹேமா என்கிற இவள் யார்: படிப்பிலேகூட அவள் எப்படி என்பது எனக்குத் தெரியாது. நான் என் வகுப்பில பெண்கள் வீற்றிருக்கும் பக்கம் என் கண்களைத் திருப்பிக்கூடப் பார்த்ததில்லை.

பெண்கள் என்கிற விழிப்பு எனக்கு இன்னும், அன்றுவரை ஏற்பட்டதில்லை. காக கொடுத்து வாங்கிய ஓர் அனுபவம் உண்டு. ஆனால் அதைப் பெண்மை என்றோ, விழிப்பு என்றோ சொல்ல முடியாதே!

என்னைப்பற்றிய வரையில் பெண்கள் தேவதைகளும் அல்ல ராட்சசிகளும் அல்ல.

கால் மணியாயிற்று அரைமணியும் ஆயிற்று. ஹேமாவின் மாமா திரும்பி வரவில்லை.

ஹேமாவின் தாயார் வெளியே வந்து எதிரில் இருந்த ஆசனத்தில் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டாள்.

விசுவநாதன் சிக்கிரம் வந்துவிடுவான்" என்றாள். வாட்டுமே" என்றேன் நான். எனக்கு என்னவோ அந்த அறைக் கதகதப்பும், கர்ப்பப்பை இதமும் பிடித்துப் போய்விட்டன. அது மாறாமலே இருந்து விட்டால் நல்லது என்றுதான் தோன்றிற்று பாழாய்ப் போன :* வந்தால் விஷயத்தைச் சொல்லிவிட்டு நான் கிளம்ப

நான கம்மா இருப்பதுவே சுகம் என்கிற நம்பிக்கையுள்ளவன் ക് S. : கெட்டிக்காரா என்கிறாள். ஹேமாவின் தாயார். டன் என்கிறேனே" என்றாள்

ف--ایسی * 22

நான் கெட்டிக்காரன் என்று ஹேமா தன் தாயாரிடம் சொன்னாளாமே? எப்பொழுது சொன்னாளோ தெரியவில்லை. போகட்டும்.

"பேசாமல் இருக்கத் தெரிந்தவனைத்தான் சாதாரணமாக எல்லாரும் கெட்டிக்காரன் என்று மதிக்கிறார்கள்" என்றேன்.

"உண்மைதான்" என்றாள் ஹேமாவின் தாயார் உண்மையைக் கண்டவள் மாதிரி!

அந்த வினாடி அவள் உண்மைதான்! என்று சொன்ன வினாடியிலிருந்து அவளிடம் ஒரு வெறுப்புத் தோன்றி வளர்ந்தது என்னுள்ளே.

என்னோடு ஒத்து, ஆமாம் போடுகிறவர்களைக் கண்டால் எனக்கு எப்பவுமே பிடிக்காது.

என்னோடு ஒத்துப் போகிறவர்கள், ஆமாம், ஆமாம் என்று நான் சொல்லுவதற்கெல்லாம் தலையை ஆட்டுபவர்கள் ரகசியத்தில் எனக்குக் குழி பறிக்கப் பார்க்கிறார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதுவும் என் அசாதாரணத்துவங்களில் ஒன்றுதான் என் பைத்தியக்காரத்தனமான போக்குகளில் ஒன்றுதான் என்றே சொல்ல வேண்டும்.

எனக்கே நான் பைத்தியக்காரன் என்பது சிந்திக்கும்போது விளங்குகிறது. ஆகவேதான் பிறர் என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லுகிறபோது எனக்குக் கோபம் வருவதில்லை.

பைத்தியக்காரனாகவும் இருக்க எனக்கு உரிமையுண்டு.

அந்த உரிமை உனக்குக் கிடையாது என்று யாராவது சொன்னால்தான் எனக்கு உண்மையில் கோபம் வரும் என் உரிமைகள் எதையும் பறிகொடுக்க நான் தயாராக இல்லை

பிறர் என்னைப்பற்றி எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன நினைப்பார்கள் என்று எண்ணிப்பார்த்து அதற்காகத் தயங்குகிற சுபாவம் அல்ல என்னுடையது.

என் உள்ளத்தில் எழுந்து அலைமோதி, பாய்ந்து ஓய்ந்து அடங்குகிற சிந்தனைகளை, எல்லைகள் வரை தொடர்ந்து

க.நா. சுப்ரமண்யம்  ே

________________

- - னக்குத் தைரியமும்,

சென்று முக ". : o: .ே இரண்ட tu,

:: :: நினைப்பார்கள் என்று எண்ணிக் . எனக்கு நேரம் எது? நிம்மதி ്യ *. - எனக்

இந்தப் பதினெட்டு வருக ங்களில் ஒன்று ககு

- ாவர்களைப் போல ----- உலகத்திலுள்ள மற்றவி - - மாகிவிட்டது யுமானால் அதுதான நலனது

செளகரியமானது என்று

நிச்சய 3. . சராசரி மனிதனாக இருந்துவிட முடி

- - -! அதுதான் தவபாது அதுதா - - o எனக்கு திசயமாகிவிட்டது. அப்படியிருக்கவே நானும் ஆசைப்

முடியவில்லை. பழக்கப்பட்ட சுவட்டிலே, தேய்ந்துபோன தட தலை மனித மந்தை றிலே நானும் ஒரு மந்தை ஆடாக, யார் கண்ணிலும் தனியாகப் படாமல் எப்படியும் எந்தக் கவனத்தையும் கவராமல், இருந்த சோடு தெரியாமல் போய்விடுவது நல்லது.

அது தெரியாமல் மனிதர்கள் நினைவுச் சின்னங்கள் நிர்மாணிக்கிறார்கள்! பாவம்!

கறையெல்லாம் அழுக்குத்தான். நினைவுச் சின்னங்கள் எல்லாம் மறதியையே சுட்டிக் காட்டுகின்றன. நேர் நின்று நோக்கத்தான் யாருக்கும் தெம்பில்லை.

சுலபமாக சிரமப்படாமல், யாரையும் சிரமப்படுத்தாமல் வாழ்ந்துவிட்டு இறப்பவனே சிறந்த மனிதன்.

மற்றவர்களைப் போல இருக்கவும் சிந்திக்கவும் அறியாத வன் தனிமையை நாடி காட்டிலே விலங்குகளுக்கிடையே ஒரு விலங்காக அல்லது ரிஷிகளுக்கிடையே ஒரு ரிஷியாக உருமாறி அது விடுவது நல்லது உலகில் நடமாடுவது பிசகு என்றுதான் தோன்றுகிறது ெ எண்ணப்போன்றவன் மனிதர்களிடையே மனிதன் என்று ...” பிறரை ஏமாற்றிக் கொண்டு மனத்திலே . அவாழ்வது பிசகு என்றுதான் தோன்றுகிறது. பிசகு '''அது நடக்காத ஒரு காயம். 1. "ம் நம் ஒருவன் விஷயத்தில் மட்டும் நடந்துவிடும் " என்ன ஏமாறுவது சரி.

في-سيسه * **

"கெட்டிக்காரன் என்பதற்கு அழகு பேசாமல் இருப்பது தான்" என்கிற ரீதியில் ஹேமாவின் தாயக்கு நான் பதில் அளித்துச் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டேன். அது சரிதான் ஆனால் கெட்டிக்காரனுக்கு அழகு சிந்திக்காமல் இருப்பது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும் "'இயம யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

ஒரன் .

சிந்தனைகளின் முடிவு என்ன ?

மனிதச் சிந்தனைகள் எ தற்குமே ஒரு முடிவுமே கிடையாது என்பதுதான் சிறப்பான மனிதச் சிந்தனை

புத்தனுக்குப் பிறகும், சாக்ரடிஸுக்குப் பிறகும், ஒரு குங்கிற்குப் பிறகும், ஜராதுஷ்டிரனுக்குப் பிறகும், சங்கரனுக்குப் பிறகும் சிந்தனை தேவையாகத்தான் இருக்கிறது.

சிந்தனைகளை முடித்துவைத்து. மனித குலத்துக்கு வைட்டமின் சிந்தனை மாத்திரைகள்ைகி கண்டுபிடித்துத் தரத்தான் எல்லாச் சிந்னையாளர்களுமே முயன்று வந்திருக்கிறார்கள்.

டானிக் சாப்பிட்டு உடம்பு தேறியவன் இல்லை டானிக்குகள் நோயாளிக்குத் தேவையில்லை. ஆனால டாக்டர்களுக்கு அவர்கள் பிழைப்புக்குத்தான் முதல் தேவை

எனக்கு ஜாதகம், ஜோசியம் என்பதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால் நான் என் ஜாதகப்படி என் ஐம்பத்தி ரெண்டாவது வயதில் ஒரு லோக குரு ஆவேன் என்று சொல்லி என் தகப்பனார் பெருமைப்படுவதுண்டு.

லோக குருமார் எத்தனை பேரோ வந்து போனது உண்மை தான் எனினும், உலகம் இன்னமும் லோகமாகத்தான் இருக்கிறது. கடைசி லோககுருவாக இருக்க முடியுமானால் அது மிகவும் நல்ல காரியம் என்று சொல்லலாம். ஆனால் எனக்குப் பின்னும் லோககுருமாருக்கு அவசியம் ஏற்படும்தானே?

அதுபற்றி என் ஜாதகம் எதுவும் என் தகப்பனாருக்குக் கூறியதாகத் தெரியவில்லை.

க.நா. சுப்ரமண்யம் 25

________________

ட-1 யோ என் டி.பதிரெண்டாக வயது இன்னு' எத்தனைக்

துரத்தில் இருக்கிறது.

--- இதரிவாள் உண்டு: _ _ . நோயுண்டு ககு" - உலகிலே . ஒருமிகள் உண டு அரசியல்

. .ன்ை உண்டு அணு க" ஒன்று பத்தொன்பது அது பத்திரெண்டு வயது வரை இருக்க

இருந்தால் பார்த்துக் கொள்ளலாம். - இருப்பேன் என்றும் ஓர் உள்ளுணர்வு தோன்றுகிறது. இத்தனையும் மட்டுமல்ல. பட்டினி பசியையும் மீறி வாழ்க்கைப் போராட்டத்தின் தினசரிக் ఇఙ4ణ 44 தாண்டி இருப்பேன் என்றுதான் ஓர் உள்ளுணர்வு சொல்லுகிறது.

ஆனால் அந்த உள்ளுணர்வு உலகத்துக்கே, குலத்துக்கே பொதுவானது. எரிமலையின் சாரலிலே வசிக்கிறவன்தான் மனிதன்.

ஆனால், ஆனால்எதை மீறி வாழ்ந்தாலும் வாழ்ந்துவிடலாம்.

காதல் எனும் சாவிலே வாழ்வு சாத்தியமல்ல,

இதுதானே காதல்: "நீயா" என்று ஹேமாவை பூர்வஜென்ம வாசனை என்று நான் ஏற்றுக் கொள்ளாத ஒன்றைக்கொண்டு அறிந்து கேட்ட

துடன் காதல் உதயமாகிவிட்டது என்று தான் எண்ணினேன் நாள்

பைத்தியக்காரச் சிந்தனைகள் எனக்குப் புதிதல்ல. எனினும் இந்தக் காதல் சிந்தனை புதிதுதான்.

மூன்று வருஷங்களாக என்னுடன் என்னைக் கெட்டிக் அரனாக அங்கீகரித்துப் படித்து வரும் ஹேமாவை இன்று _தும் தான் காதல் கொள்ளுவானேன், என்று என்னையே கேட்டுக்கொண்டு லோபான். விற்றிருந்தேன் நான்

قسمتی

சுக செளக்கிய உணர்வும், ஒரு பரவச நினைப்பும் மட்டும் நீடித்தது.

அந்த உணர்வையும், நினைப்பையும் நீடித்துக் கொண்டே கல்ப காலங்கள் யுகப் பிரளயம் வரை இருந்து விடலாம் என்று எனக்குத் தோன்றியது. -

நான் நிமிர்ந்து ஹேமாவைப் பார்த்தேன். அவளுடைய மூன்று கூர்மையான பற்கள் தேங்காய்க் கீற்றுக்கள் போலத் தெரிந்தன. மேலுதட்டில் அரும்பி இருந்த வியர்வை இவளும் ஏதோ ஒரு அசாதாரணமான உணர்ச்சி வசப்பட்டிருப்பதைக் காட்டியது.

"வீடு தேடி வந்துவிட்டான். தப்ப விடக்கூடாது. என்று எண்ணினாளோ அவள்: அல்லது.

"வீடு தேடி வந்துவிட்டான். நான் தப்புவது எப்படி என்று எண்ணினாளோ?

எப்படி அவள் எண்ணினால் நல்லது என்று என்னைப்

பற்றிய வரையில் என்னால் எனக்குள் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

அவளைப் பெண் உருவாக, கவர்ச்சியே உருவாக அறிந்து கொண்டேன். இருந்தும் அவள் என்ன நினைத்தாள் என்பதைப் பற்றி எனக்கு என்ன கவலை என்று சொல்ல முடிந்தது. அவள் என்னைப்பற்றி என்ன நினைத்தால் என்ன என்று அவளைக் கவர்ச்சியாக அறிந்த மூச்சிலேயே என்னால் நினைக்க முடிந்தது என்பது எனக்கு மட்டும் தனியாக விசேஷமான ஒரு மனப்பக்குவமாக எனக்குத் தோன்றியது.

நான் மற்றவர்களைப்போல இல்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்தான். மாறுபட்டு, வேறுபட்டு யாரோடும் ஒட்டாதவனாக இருந்தேன் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு என்ன வேண்டும்:

நான் இப்படி இருக்க விரும்புகிறேனா என்பது வேறு விஷயம். இதில் என் விருப்பத்தைத் துளியும் கவனியாமல் என்னைத் தனிப்பட்டவனாகச் செய்துவிட்ட பாழும் விதி. பாழும் மனப்போக்கு பாழும் கடவுள் என்ன பெயர்

கூநா. கப்ரமண்யம் 27

________________

என் சக்தியை மீறிய ஏதோ ஒன்று என்னை

உணர வைத்து அந்த அறிவிப்பிலிருந்து தப்ப முயலுவதில்லை நான்.

சொன்னால் என்ன வேறுபடுத்தி வைத்து. அந்த வேடிக்கை பார்க்கிறது. - * - - --- எனக்கும் வேடிக்கை பார்க்கப் 蠶 ரோட்டில் மாலை நேரத்தில் கூட்டம Ti: 4..." விழுத்தடித்துக்கொண்டு Gura L பா தது பிரியமுண்டு மனிக்கணக்காக ஒதுங்கி நிற்பதில் తాత్ర விடச் சி து. னிைமாப் பார்க்க எனக்குப் பிடிக்காக | - றந்த சினிமா வேறு ஒன்றும் தேவையில்லை எனககு ம ககனசுகாது திறபேன். நின்றதுண்டு.

நான் இப்படி பட்டும் படாமலும் இருப்பது வேதாந்தியின்

காரியம் என்பார்கள்.

வேறுபாட டையும்

அத அறிவின் அசையாமையின் பலாபலன்களை நான் அனுபவித்தேதான் தரவேண்டும் தப்பிவிட முடியாது.

r மாளன் கூறியது உண்மைதான் நான் எங்கு சென்றாலும், எச்சிறையில் கொண்டு பாடி என்னை அடைத்தாலும் சரிதான், என் சிந்தனைச் சாட்டையும், அறிவுச் சாட்டையும் என்னைத் தொடர்ந்தேதான் வரும் சொரோ, சொரோ என்று கொடுக்கும் சாட்டைகள் அவை,

காலம் ஒரு கல்லுளிமங்கன்.

கல்லுளிமங்கனின் சாட்டைச் சொடோ சப்தம் பயங்கர

என்னால் பூரணமாகப் படாமலே இருக்க முடிந்ததுண்டு என்பதில் எனக்குப் பெருமைதான்.

ஒரு வாலிபன் சைக்கிள்காரன். ஒரு பூதாகரமான லாரிக்கடியில் அகப்பட்டுக் கொண்டான். பத்தடி எடுத்து

மானது.

அந்தச் சாட்டை அடி வலிக்காது என்றுதான் உலகம் நம்புகிறது. அப்படியே நம்ப நானும் தயார்தான்.

ஆனால் எனக்கு வலிக்கிறதே நான் என்ன செய்ய:

வைத்துப் பார்த்திருந்தால் அந்தச் சம்பவத்தின் ரத்தமும் தசையும் எனக்கும் தெரிந்திருக்கும் போலீஸ் ஊதல்கள் ஊதின. கூட்டம் கூடிற்று ஐயையோ த்ளொ த்ளொ என்றார்கள் ஒரு ஐந்து பேர் லாரிக்காரன்மேல் பிசகு என்று கட்சியாடினார்கள் சிலர் சைக்கின்காரன்தான் தவறு செய்தான் என்று கட்சியாடினார்கள் சிலர் ஆம்புலன்ஸ் வந்தது. சைக்கிள்காரன் பிழைத்துவிட மாட்டானா லார்" என்று, அவன் உயிர்போய் ஒண்ணரை நாழிகை நேரங்கழித்துத் தெருவோடு போகிறவர்கள் அனுதாபத்துடன் கேட்டார்கள்,

நான் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை.

சாவைப்பற்றியும் "ழ்வைப்பற்றியும் எனக்கு சகலமும் தெரியும் எதுவும் என்னை அசைக்கமுடியாது என்கிற உறுதியிலே

"ளை இருந்த இடத்திலேய்ே ஊன்றிக் கொண்டு *யாமல் மரமாகவே நின்று கொண்டிருந்தேன்.

சிந்தனைச் சவுக்கடிகளைத் தவிர்க்கலாம்தான். நான் சிந்திக்கவே மறந்துவிடலாம்தான். ஒதுங்கி வாழ்கிற காரியத்தை ஒதுங்கி நின்றே பிரக்ஞையில்லாமலே செய்யலாம்தான்.

நான் காட்டுக்குப் போய்விட விரும்பவில்லை. காட்டு விலங்காகவோ மஹரிஷியாகவோ வாழ விரும்பவில்லை. ஐம்பத்திரெண்டாவது வயதில் நான் லோக குருவாகப் போகிறேன் என்று என் ஜாதகம் சொன்னால் அதுபற்றி உலகம் கவலைப்பட்டுக் கொள்ளட்டும், அல்லது கவலைப்படாமலே இருந்து நாசமாகப் போகட்டும். அதுபற்றி அந்தக்காலம் வரும்வரையில் நான் கவலைப்பட விரும்பவில்லை.

இந்தப் பதினெட்டாவது வயதில் கல்லூரியில் மாணவனாக, பி.ஏ. வகுப்பில் இரண்டாவது வருஷம் படித்துக் கொண்டிருக்கும் நான் சாதாரண வாலிபனாக, மற்றக் கல்லூரி மாணவர்களைப் போல ஒரு மாணவனாக இருக்கவே விரும்புகிறேன். சகமாணவிகளைப் பார்த்துச் சீட்டியடித்துக் கொண்டு, மூன்றுமணி சினிமாவுக்குப் பன்னிரெண்டு மணிக்கே

** நி1 ஆகும். எப்படி நடக்கும். ஏன் நடக்கும் என்று கூடச் சில சமயங்களில் எனக்குத் தெரிவதுபோவ இருக்கும்.

25 - -

* அகரகம் க.நா. அப்ரமண்யம் 29

________________

ஒதுகளைப் பெரியவர்கள்

* - - [* ..வலை என்று இருக்கத்தான்

போய் க்யூ நின்றுகொண் தந்துவிடுவார்கள் iണ நானும் விரும்புகிறேன்

என்னால் அபபடி @తాతతో முடி பெரியதோர் உற்பாதம் விளையப்போ

க்கடி தோன்றும் - அடி க்யூவில் போய்ப் பன்னிரண்டு :: நின்று ്.ു என்று சொல்லமுடியாது. திணறிகு நன ஒரு தரம். ஆனால் பன்னிரண்டு ఫ్రోత్స ఖ ஒம்பத்தைத்து வரை நின்று விட்டு 4.* " o .. : பத்து நிமிஷம் இருக்கும் போது கியூவை *—ே நக நது டேன். எனக்கு முந்தி நின்றவர்கள் நாது பெரும் தி நின்ற நானூறு பேரும் அட பைத்தியமே " என்று கண்ணால்

யாததனால் உலகத்துக்கே கிறது என்றுதான் எனக்கு

சொன்னார்கள்

ஆமாம் ஜன்னல் திறக்கிற சமயத்தில் வெளியேறிய நான் பைத்தியம்தான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட சினிமாப் படத்தைப் பார்த்தவர்களும் அப்படி ஒன்றும் புத்திசாலிகள் அல்லர், விளம்பரங்களில் தவிர வேறு எங்கும் எவ்விதச் சிறப்பும் இல்லாத படம் அது என்பது பார்த்தவர்களுக்குத்தானே தெரிய முடியும்?

நான் ஹேமாவின் மாமா திரும்பிவிடுவார். திரும்பி விடுவார் என்று முக்கால் மணிக்கும் அதிகமாகக் காத்திருந்தேன். சினிமா க்யூ அல்ல அது தாயின் கர்ப்பப்பையை நினைவூட்டிய கதகதப்பான பங்களா முன்னறையிலே, மெத்தை போட்ட னோபாவிவேதான் உட்கார்த்திருந்தேன். நானே என் தாயின் காப்பத்தில் பிறக்கக் காத்திருப்பது போல இருந்தது அது என்று சொல்லலாமா?

ஆமாம் எதுவேண்டுமானாலும் சொல்லலாமே. எது :அாதும் சொல்லுவதே .ெ

மனோதத்துவ நிபுணர்கள் இன்று சாத்தியமாக்கி விட்டார்கள்.

- 4ణత ஆத்மா உடல் என்கிற வலையில் சிக்கி, மாயை எனவு திக்குத் தெரியாத காட்டிலே அகிலவது உண்மையோ என்னவோ எனக்கும் தெரியாது. வேதாந்திகளுக்கும் நிச்சயமாகத்

تقسیمای

தெரியாது. ஆனால் நாம் தினசரியும் வார்த்தை வலைப் பின்னல்களில் சிக்கித தவிக்கிறோம் என்பது தெரிகிறது.

அனுதாபம் அனுபவம் அன்பு, இரக்கம், கருணை, ஆன்மா, வலை உளளம், உலகம் எல்லா, வார்த்தைகள் தானே !

பெரிய பெரிய வா ாத்தைகளை எல்லாம் படித்திருக்கிற தோஷம், நானும் அவற்றை எல்லாம் சரளமாக, சகஜமாக உபயோகப்படுத்தி விடுேைறன். அந்த வார்த்தைகளின் பூரணமான அர்த்தங்களையும் அந்தர ார்த்தங்களையும் அறிந்து கொள்ள எனக்கு அறிவு போகாது. அனுபவம் போதாது. வயது போதாது. தெம்பு போதாது. -

என்னைப் பற்றியோ என் உள்ளத்தை ஆன்மாவை என் சிந்தனைகளைப் பற்றியோ என் சிந்தனைகளின் தனிப்போக்கைப் பற்றியோ எனக்கு என்னதான் நிச்சயமாகத் தெரியும்? நிச்சயமாக ஒன்றுமே தெரியாது என்பதுதான் நிச்சயம் மற்ற எதுவுமே நிச்சயம் அல்ல.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒன்றும் தெரியாது என்கிற முடிவுக்கு வர இவ்வளவு சிந்தனை எதற்கு சிந்தனையே தேவை யில்லை என்று சாதாரண மக்கள் மாதிரி, லட்சத்தில் ஒருவர் நீங்கலாக மற்றவர்கள்போல் இருந்துவிடுவது நல்லது அல்லவா?

அந்த வித்தை ஒன்றுதான் எனக்குக் கைவரமாட்டேன் என்கிறது.

ஹேமா தன் தாயாரிடம் சொன்னாளாமே அது மாதிரி நான் என் பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரன்தான். பி.ஏ. வகுப்புக்கென்று நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நான்கு ஸப்ஜெக்ட் களிலும் என்னால் வகுப்பில் முதல்வனாக இருக்க முடிந்தது. சுலபமாகவே இருக்க முடிந்தது. கவனத்துடன் படித்தேன் என்று கூடச் சொல்ல முடியாது. என் முயற்சி எதுவும் அதிகமில்லாமலே நான் வகுப்பில் முதல்வனாக இருந்தேன்.

அதுபற்றி என் தகப்பனாருக்கும். என் வகுப்புப் பேராசிரியர்களுக்கும் பரம திருப்திதான்.

எனக்கென்னவோ அது போதாது, அது போதாது. இது வெறும் ஏமாற்று, புரளி என்று ஒரு உள்ளுணர்வு என்னுள்ளே

க.நா. கப்ரமண்யம் + 31

________________

- o தா ன் சித்துக்கொ அா! to- வாடவிருத்தது ' அரித்துக் கொக' -

கெங்கியது. - - இரு * த ஐம்பத்தை முடிங்களில் ஒரு "க - :് ് பகைகொண்டுதா" இருந்தாள

புதுங்கா - -* நிமிடி ானக்குத் தெரியாது. அவள்

ாம் வாங்று - - பரிாள் தொடர்ச்சியாக நான காதில்

--- - சதையும - - --

::::::: அங்கொன்றும் *..."..." ே: விழுந்த வார்த்தைகள் * : துண்டவில்லை. தவிர, அவளுக்குப பதில் தர என் நா -

பெண்கள் பாலியாலிகள் அவர்கள் வாய் ஒபதியாக விலை விதிக வேண்டிய அவசியம் அவர்களுககு மிகவும்

குறைவு

கதாவை மட்டுமேதான் பார்த்துக் கொண்டு உட்கார்ந் திருதேவ நான் என்று சொல்ல முடியாது. எங்களிருவரையும் தனியாக விட்டுவிட்டுப் போய விடக்கூடாது என்கிற கண்ணத்தியே அங்கு வந்து அசையாது உட்கார்ந்திருந்த அவள் தாயாரையும் அடிக்கடி நிமிர்ந்து பார்த்தேன்.

இருட்டிவிட்ட பிறகு எழுந்து அறுபது வாட் விளக்கைப் போட்டாள் ஹேமா ஹேமாவின் தாய்க்குப் பின்னால் பிரம்மாண்டமான நிழல் எழுந்தது. ஏதோ ஒரு ரகசியத்தை மர்மமான ஒரு காட்டுமிருகத்தைப் போர்வையிட்டு மறைத்து வைப்பது போல இருள் குன்றாக அவள் நிழல், அந்த அழகான கவரிலே விழுந்தது. ஹேமாவின் தாயைவிட அவள் நிழல் என் மாத்தைப் பங்கரபாக, கவர்ந்தது

-ா-ாா

நாநகரத்தியே சாவு துலத்தைச் செவிகளில் வா ங்கும் நான், இகளில் கவர்சியைக் காண்பதில் ஆச்சாயம் என்ன? அழகான, வதாக கொண்டிருந்த கவர்ச்சிகரமான ஸ்திரியையும் விட அவள் திமுஸ்தான் அழகானதாக காலத்தால் அழியாததாக, காசிகரமானதாக எனக்குத தோன்றியது

அதில் எனக்கு வியப்பு ஒன்றும் இல்லை

இப்படிெ or 1படியெல்லாம் காரண காரியம் ஏதுமில்லாமலே

வித்தசையில் அதுவிடப் பழகியவன்தான் நான் இதனால்தான்

மற்றவர்களைப்போவ வான் னான். இருக்க முடிவதில்லை சம்பாவிக்க முடிவதில்லை என்பதும் எனக்குத தெரிகிறது

- or "a

நான் பைத்தியக்காரன்தான் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை ஆனால் உலகின் கன்ன jī. பைத்தியக்காரர்கள்தானோ என்கிற சந்தேகம் o, சில சமயங்களில் ஏற்படுவதுண்டு - -

- ஆனால் இந்தச் சிந்தனையும் எனக்குத் திருப்தியளிக்கிற சிந்தனை அல்ல.

பைத்தியா உலகில் மாறுபட்டவனாக இருப்பதும், பைத்தியம் அலலாத உலகில் மாறுபட்டவனாக இருப்பதும் முடிவில் ஒன்றுதானே : -

நா * ബം பைத்தியக்கார உலகில் புத்தி சுவாதின. s முள்ளவன என்று வைத்துக கொண்டாலும், அதுவும் பிசகுதானே என்று என்னையே நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

மணி ஏழரை அடித்ததும் ஏதோ மாயத்திலிருந்து விடுபட்டவன் போல எழுந்து நின்றேன்.

காலக்கோழி சுவர்க்கடிகாரம்தான். இது கலியுகத்து. பட்டணத்து நியதி.

"விசுவநாதன் வர நேரமாகும் போல இருக்கிறது. நான் வரேன் நடந்து திருவல்லிக்கேணிக்குப் போக வேண்டும்" என்றேன்.

தாயும் பெண்ணும் எழுந்து நின்றார்கள். "கிளம்பிவிட்டீர்களா? சாதாரணமாகப் பார்க் வரை போய்விட்டு ஏழுமணிக்கெல்லாம் வந்து விடுவான். இன்று என்னவோ தெரியவில்லை" என்றாள் ஹேமாவின் தாய்.

"நாளைக் காலையில் அவரை என் வீட்டுக்கு வரச் சொல்லுங்கள்" என்று விலாசத்தைச் சொன்னேன்.

"மறந்துவிடப் போகிறது" என்று ஹேமா கடிதம் எடுத்து வந்து தங்கக் குல்லாய் போட்ட பேனாவினால் எழுதி வைத்துக் கொண்டாள். பேனாவை ரவிக்கைக்குள் சொருகிக் கொண்டான்.

எனக்கும் ஒரு தங்கக் குல்லாய் இருந்தால் தேவலையே என்றிருந்தது எனக்கு!

க.நா. கப்ரமண்யம்  ே

________________

. வைத்தபோது எனக்குக் னிந்து விட்டார்கள். .., சரிகை தைத்திருந்தது.

து விடாமல் சி டும் போலத்

அதிலே ஒரு அங்கு” ,ைால்லவேண் அதைப்பற்றி ஹே தான்றியது எனக்கு

அசட்டு எண்ணந்தானே'

- - ரி அ ஆனால் இத்த மாதி __. 1." ം് பலவுண்டு என்று ண்ப ...ாது நமக்குக் கற்றுதி ''. :് நமக்கெல்லாம தெம்

வெளி வராண்டா தா" படியிறங்கி வாசல കേു வரையில் அழகான தோட்டப் பாதையில் என்னுடன வந்தாள ஹேமா. -

முல்லைய புதர் கண்ணில் படவில்லை. ஜவ்வத்திக் கசப்பும் லேசாகத் தெரிந்தது.

... வரும்போது நான் தோட்டத்தைக் கவனிக்க

சட்டு எண்ன ங்களுக்கும்கூட ராய்ட் கோஷ்டியார்

பு போதவில்லை.

வாசனை விசிற்று.

வில்லை.

நடந்த போகப் போகிறீர்கள்" என்றாள் ஹேமா வாசல் கேட்டை அணுகும்போது

ஆமாம் என்றேன் சுருக்கமாக "சில்லறை கொண்டுவராவிட்டால்" என்று தயங்கினாள் ஹேமா.

நான் சிரித்தேன். நடக்க எனக்குப் பிடிக்கும் என்பதனால் சில்லறை எடுத்து வரவில்லை என்றேன்.

"நீயும் என்னுடன் வழிநெடுக நடந்தால் இன்னும், அதிகமாகப் பிடிக்கும் என்று சொல்லவேண்டும்போல இருந்தது. சொல்லத் தைரியம் வரவில்லை. என்ன நினைத்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது.

கேட்டைத் திறத்தாள் ஹேமா. 'நிலா இருக்கிறது. நடப்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். நானும் வா வாால்." என்றான் ஹேமா உறும வரமுடியுமானால்

ف-rسی * 34

ஆட்டார்கள். எனினும் அந்த

"சி" என்று கிளம்பினேன். குமட்டன.

விறுவிறுவென்று நடந்தேன்.




என் நடையும் வேகத்தான், இரண்டே

என் சிந்தனையும் வேகம்தான் - - - - --- இரண்டு கால்கள்தான் இருக்கின்றன நடபபதறகு, சிந்தனைக் கருவியான மூளைக்கோ எத்தனை கால்கள் உண்டு என்று அறிந்து சொன்னவர்கள் யாருமில்லை.

எட்டுக்கால் பூச்சி அது நூறுகால் ஜலமண்டலி அது, ஆயிரங்கால புரான அது எதுவானால் என்ன ? விஷ ஜந்து என்பது வெளிப்படை சிந்தனை என்கிற பூச்சி பிடித்துக் கொண்டு விட்டதனால் மனிதன் அதன் பிடியிலிருந்து தப்புவது என்னவோ மிகவும் சிரமமான காரியம்தான்.

மற்றவர்கள் முயற்சி செய்யாமலே தப்பிவிடுகிற மாதிரி இருக்கிறது. நான் தப்பவே முயற்சி செய்வதில்லை.

தப்ப முயற்சி செய்ய விரும்புவதுமில்லை.

செயலாளியாக இருக்க நான் விரும்பவில்லை. சிந்தனையாளனாகவே இருக்கத்தான் எனக்கு விருப்பம் இருக்கிறது. சில சமயம் செயல்களிலும் ஈடுபட்டுவிட வேண்டியதாக இருக்கிறதே அதிலேதான் தகராறு வந்து விடுகிறது. செயல்பட வேண்டிய அவசியமே ஏற்படாவிட்டால், நான் உலகத்தையே வென்று விடுவேன். லட்சியத்தை, அகல்யையை, தன்னையே ஒரு சுற்றிச் சுற்றி வென்று கைப்பிடித்த கோதமன் என் லட்சிய புருஷன், இந்திரன்போல ஐராவதம் ஏறி உலகைச் சுற்றி வரவேண்டிய அவசியம் மனிதனாகப் பிறந்துவிட்டவனுக்கு ஏற்பட்டு விடுகிறதே அதைத்தான் மனித குலத்தின் சாபக்கேடு என்று சொல்ல வேண்டும்.

அகல்யைகளுக்கு என்னவோ செயலாளிகணைத்தான், ஐராவதத்தின் மேல் ஆராஹனித்து வீறாப்புப் பேசிப் புறப்படும் இந்திரன்களிடம்தான் சபலம் ஏற்படும்போல இருக்கிறது. அது நியாயம் என்றுகூடத்தான் எனக்கும் தோன்றுகிறது.

செயல்களின் வியர்த்தம் தெரிகிற அதே வினாடியிலேயே செயலின்மையின் பலவீனமும் தெரியத்தான் தெரிகிறது.

க.நா. கப்ரமண்யம் 35

(((((((((((((((((((((((((((((((((((((((((

________________



பெரியவர்கள் பேசும்

கட்டி வந்த கோட்டை

ருக்கு காத்திருந்தாள் எனக்காக கல்யாணம் நிச்சயமானால், ஜாதகங்கள் பொருந்தினால்,

அவர்கள் பேசுகிற லெளகீகம் ஒத்துக்கொண்டால், வருங்காலத்தில் ஹேமா காத்திருப்பாள். என் அசாதாரணத்துவம் என்று நான் இதுவரை மனசில்

ந்த கோட்டை கொத்தளங்கள் எல்லாம் ஆகாசக் கெடைகள்தான். என் நினைப்பே வெறும் ஆதாரமற்றவைதான் போலும், இனிக்கிறது என்ற சுவைத்த அப்பாயசம் மனப் பாயசம்தான். | நானும் சாதாரண மனிதர்களிலே ஒரு சாதாரண

சிதன்தான்! தானாக விரும்பிச் சிறைச் சுவர்களை வரவேற்று கதவை நானே இழுத்துத் தாளிட்டுக் கொண்டு, அடைபட்டுக் கிடக்க நானும்தான் தயாராக இருந்தேன் என்பது எனக்கே இப்போது தெளிவாகி விட்டதே!

அசாதாரணமனவன் என்று கதைத்து என்ன லாபம்!________________



மூக்கரையன் கதை உண்மையான மனோதத்துவ அடிப்படையில் எழுந்தது. ஊர் பூராவையும் மூக்கரையர்களாக்க ஒரு மூக்கரையன் முயலுவது நியாயம்தான். அதேபோல நான் அசாதாரண மானவனாக இருந்தால் ஊரையெல்லாம் அசாதாரணமானவர்களாக்க முயலமாட்டேனா? அதற்கு மாறாக ருக்குவை, “என்ன வேடிக்கை இது? உள்ளே போ” என்று அதட்டினேன். விசித்திரம்தான்.

- மனிதன் விடுதலையை வேண்டுகிறான் என்பது உண்மையல்ல என்றுதான் தோன்றுகிறது. விடுதலையை வேண்டியவனாக இருந்தால் வீடு என்று ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பானா?

அரண்மனையாகத்தான் இருக்கட்டுமே, அது ஒரு சிறைச் சாலையில்லாமல் வேறு என்ன?

பல நாடுவதாகச் சொல்ல மனிதன் என்றுமே விடுதலையை நாடுவதாகச் சொல்ல, முடியாது. ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்குத் தப்ப "ரும்புகிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.________________



வாழும்போது சாவுதான் விடுதலையோ என்று தோ, கிறது. செத்தபின் வாழ்வேதான் விடுதலையோ என் தோன்றலாம், இல்லையா? அப்படியில்லை என்று யார் மீனம் வந்து நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்?

பகற்பொழுதிலிருந்து இரவுக்கும், இரவிலிருந்து பகலுக்கும் விழிப்பிலிருந்து தூக்கத்துக்கும், தூக்கத்திலிருந்து விழிப்புக்கும் உண்மை நடப்பிலிருந்து கனவுக்கும், கனவிலிருந்து உண்மை நடப்புக்கும், நீர்க் குளத்திலிருந்து கானல் நீருக்கும், கானல் நீரிலிருந்து நிஜ நீர்நிலைக்கும் மாறி மாறித் தாவுகிறானே மனிதன் - அது எதற்காக? பட்டி மாதிரிக் காடாறுமாதம் நாடாறுமாதம் வாழ்ந்து வாழ்நாட்களைப் பெருக்கிக் கொள்ளவா? அது உண்மை என்று கடைசியிலாவது தெரிகிறதா பார்த்து விடுவோமே என்கிற வீறாப்பா,

எது சிறை?

எது விடுதலை?

எது சுதந்திரம்? எது அடிமைத்தனம்?________________



எது அடிமைத்தனம்? யாராவது நிச்சயமாகச் சொல்லிவிட முடியுமோ? சாவுதான் விடுதலை என்றால், வாழ இத்தனை முயற்சிகள்

ஏன்?

ஆனால் இன்னொன்றும் இருக்கிறது. மனிதர்கள் விடுதலையைத்தான் வேண்டுவார்கள், வேண்டுகிறார்கள் என்று யார் நிச்சயமாகச் சொல்ல முடியும்?

சிறை என்பது பழகிப் போய்விட்ட இடமாகிவிட்டால், அதிலே அணில் குஞ்சின் நட்புக் கிடைத்துவிட்டால், சிறை வாழ்வும் சுலபமாகிவிடும். சிறை வாழ்வென்பது சுவடு தேய்ந்த பாதையிலே வளைய வருவதாகி விடும்,

விடுதலை நாடுபவன் எப்போதும் புது விதிகளை நாடவேண்டும். புதுப் பாதைகள் வகுத்துக் கொள்ள வேண்டும். புதுச் சிந்தனைகள் சிந்திக்க வேண்டும். யாருக்குப் போதுமான தெம்பிருக்கிறது இதற்கெல்லாம்,________________



விடுதலையின் சி சொல்பமானவை அல்ல விஷயம்தான். ம. எப்படியோ கால

இலையின் நிர்ப்பந்தங்கள், கட்டாயங்கள் அல்ல,

வை அல்ல, விடுதலை என்பது தொல்லைதரும் டான். மனிதன் சிறையிலேயே இருந்து வாழ்ந்து வா காலத்தைத் தள்ளிவிட முயலுவதும் நியாயம்

என்றேதான் சொல்ல வேண்டும்,

என் வீட்டுச் சிறையிலே அன்றிரவை எப்படியோ கழித்து

விட்டேன்.

ஒரு டூமாஸ் |

பகலில் கல்லூரிச் சிறைக்குள் போக இஷ்டமில்லை. ஏதோ

மோஸ் நாவலைப் பத்தாவது தடவையாகப் படித்துக் கொண்டு மத்தியானம் காபி சாப்பிடுகிற வரைக்கும் பொழுது போக்கிவிட்டேன். | பக்கத்துவீட்டு மக்கு ஜக்குவைப் பெண் பார்க்க யாரோ வா இருந்தான் என்பதற்காக ருக்குகூட அன்று அவ்வளவாகக் கலகலவென்றில்லை. என் ருக்குவையும் பெண் பார்க்க இப்படித்தான். யாராவது என்றாவது வருவானோ? வரட்டும். பார்க்கிறேன் என்று உறுமினேன்.________________



சாத்தியம் அல்லாததையும் சாத்தியம் என்று எண்ணுகிற போதுதான், செயலில் ஈடுபடுவது சாத்தியம் என்று எனக்குத் தோன்றுகிறது. ருக்குவைத் தேடிக்கொண்டு ஒருவன் வரட்டுமே பார்க்கலாம் என்று உறுமுகிறேன் நான். இதை வெளிப்படை யாகவே நான் ருக்குவிடம் சொன்னபோது அவள் எல்லாம் தெரிந்த ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு வார்த்தையே பேசாமல் போய்விட்டாள்.

நான் வார்த்தைச் சிறைக்குள் அகப்பட்டவன். என்னால் வார்த்தைகளை விட்டுத் தப்பிவிட என்ன செய்தாலும் முடிவதில்லை .

வார்த்தைகளை நம்பியே உயிர் வாழ்கிறேன் நான்.

வார்த்தைகளே சிந்தனைகள் என்கிற நித்தியமான கொள்கையுடன் காலந்தள்ளுபவன் நான்.

ஆகாசக்கோட்டைகள் அஸ்திவாரமற்றவை, ஆனாலும் என் ஆகாசக்கோட்டைகளைச் சாத்தியமாக்குபவை வார்த்தைகள்தான்.

ந. சுப்ரமண்யம்________________



கொண்டே நான்

வார்த்தைகளை ஊன்றுகோல்களாகக் கொண்டே இந்தப் பதினெட்டு வருஷ ங்களையும் தள்ளி விட்டேன்

மூடு இனியுள்ள ஒரு பதினெட்டோ இரு பதினெட்டோ பதினெட்டோ - அப்படித்தான் போகும்.

கல்யாணத்துக்கு எனக்கு என்ன அவசரம்?

நான் நாலரை ரூபாய் கொடுத்து வாங்கிய அந்த அனுபவம் என் அப்பாவுக்குத் தெரிந்துவிட்டது என்பது எனக்குத் தெரியும். அவரும் அதற்குப் பக்கத்துக் குச்சுக்குப் போக்குவரத்தா: இருப்பவர்தானே?

அதனால்தான் அவசரப்பட்டதா?

அல்லது ஹேமாவைக் கண்டதும் எனக்குக் காதல் வந்துவிட்டது. இனி சும்மா இருந்தால் காரியம் கெட்டு விடும் என்று எண்ணினாரா அவர்?

அல்லது அவர் நண்பரின் மருமகள், என் வயதுள்ளவள் கிடைத்துவிட்டாள். காலதாமதம் செய்வானேன் என்று எண்ணி________________



னாரோ?

எப்படி எந்தக் காரணமானால் என்ன? விஷயம் முற்றி விட்டது. ருக்கு சொன்னதிலிருந்து ஜாதகப் பரிவர்த்தனை வரையில் வந்துவிட்டது.

கல்யாணம் செய்து கொள்ளுவதில் எனக்கொன்றும் தடையில்லை, ஒருநாள் பூராவும் நாதசுரம் வாசிப்பான் என்பதைத் தவிர எனக்குக் கல்யாணம் செய்து கொள்வதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை.

அதுவும் ஹேமாவைப் போன்ற ஒரு பெண் கிடைத்தால் நான் அதிருஷ்டசாலிதான்.

ஆனால் அவள் தாயார், அந்தச் சூர்ப்பனகையின் விஷயம்

என்ன

?


அதுதான் என் மனத்தைக் கலக்கியது.