Pages

Sunday, July 31, 2016

சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள் : வழக்குரை காதை

Silappathikaaram – Oor Soozh Vari: 53-58

Are there wise men here? Are there wise men here?
Are there wise men here? Are there wise men here
who nurture and care for others’ child?
Is there a God? Is there a God?
In this *town whose King unjustly killed (my husband)
Is there a God? Is there a God?
*Madurai
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? 
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் 
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? 
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? 
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் 
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’
This is the searing accusation of Kannaki on seeing her husband Kovalan’s body. Kovalan was wrongly accused of stealing the Queen’s anklet and was ordered to be killed by the Pandiya King without an enquiry. Kannaki learns of this and comes and laments over her husband’s dead body and curses the town. She asks “What sort of town is this? Are there wise men here who take care of even others’ children? In this high storeyed town (Madurai), whose King unjustly ordered my husband to be killed is there a God?”
After this she goes to the King’s court and proves with her other anklet that her husband was innocent. When the King learns that he has made a mistake, he dies instantly. Kannaki’s anger does not abate yet. She curses Madurai to be burnt down and Madurai burns.
சான்றோர் – Wise men
ஈன்ற குழவி – Birthed Child – Child born to others
கை வாளின் தப்பிய – cut with sword
கூடல் – நான்மாடக் கூடல் – Town with four towers – Madurai

சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள் : வழக்குரை காதை
வழக்குரை காதைஎழுத்தாளர்: இளங்கோ அடிகள்

http://ilakkiyam.com/iyal/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1128-vazhakuraikathai--

ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா 5
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா


கருப்பம்


செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்
நங்கோன்றன் கொற்றவாயில் 10
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற் கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் 15
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென
ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் 20
கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்,
வாயி லோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 25
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே; என
வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி 30
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்வ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 35
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் 40
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என
வருக மற்றவள் தருக ஈங்கென 45
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்
தேரா மன்னா செப்புவ துடையேன் 50
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 55
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு 60
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை 65
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகெனத் தந்து தான்முன் வைப்பக் 70
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன் 75
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று 80
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.


வெண்பா




அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் 1
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் 2
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் 3
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

Thursday, July 28, 2016

ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ : கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 4 : ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ - எம்.டி.முத்துக்குமாரசாமி


கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 4
எம்.டி.முத்துக்குமாரசாமி


Poetry/prose/etc.,. © M.D.Muthukumaraswamy

Sunday, January 6, 2013



ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016)


ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ .....

.................

கவிதைகளையோ கவிஞர்களையோ பட்டியலிடுவது எனக்கு ஒப்புதலில்லாத ஒன்று. இவரை விட அவர் சிறந்தவர் என்றபடிமுறையை இலக்கியத்திலும் நிறுவுவதற்காக பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டியலிடும் காரியத்தினை நான்செய்வதாக இல்லை.


கவிதையின் உள் இயங்கு தளத்தினை அறிய நான் அதிகமும் நம்புவது கவிதையில் இயங்கும் கவிக்குரல்களை அல்லதுகவிதைப் பிரதிகளுக்குள் கவிஞர்கள் தங்களுடையதாய் ஏற்று பேசும் குரல்களை அவற்றின் பாவனைகளை.காட்சிப்படிமமாய் கவிதை வடிவம் பெறுமாயின் அதிலுள்ள பார்வையினை அது தொகுக்கும் தகவல்களை. ஒரேஉள்ளீட்டினை பாடுபொருளாய்க் கொண்டு பலர் எழுதியிருக்கின்ற கவிதைகளை ஒப்பிட்டுப்படிப்பதும் கவிதையின் உள்இயங்கு தளத்தினை தெளிவாகக் காட்டும் என்பது என் துணிபு. மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிஞர்கள் தங்கள்வாழும் காலம் சார்ந்து என்ன நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள், எடுக்கிறார்கள் என்பதினையும் ஒப்பீடு காண்பித்துக்கொடுத்துவிடும்.


ஆகச்சிறந்த எளிமையை நோக்கி நகர்வதாகவே என் எழுத்து இப்போதெல்லாம் இருக்கிறது. வாசிப்பையும் வாசிப்பிற்கானபல தள சாத்தியப்பாடுகளையும் ஆலோசனைகளாக, முடிந்த முடிவுகளாக அல்ல சொல்லவே நான் விருப்பப்படுகிறேன்.


---------------------------------------------






ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ என்ற கவிதையில் வரும் மேடைப் பேச்சாளர் இப்போதைய கவிதைகளில்காணக்கிடைக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். கவிதையின் எதிர்ப்பு வடிவங்களுள் ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’, ‘சினிமாச் சோழர்’, ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’, ‘ஆகஸ்ட் 15’, ஆகிய கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்புகவிதையின் வடிவத்தினை கட்டமைத்தவை. இவற்றில் ‘காலவழுவமைதி’யும் ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’ கவிதையும்பேச்சு முறைகளை போலி செய்து பெரும் மக்கள் எழுச்சிகளான திராவிட இயக்கமும், இந்திய விடுதலைப் போராட்டமும்பொய்த்துப்போன வெற்று பேச்சுக்களாகிவிட்டன என்பதை பூடகமின்றி சொல்லின என்றால் ‘ஆகஸ்ட் 15’ இந்திய விடுதலைப்போராட்டத்தின் கனவு பொய்த்ததையும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தினையும் ஆழமாகப் பதிவு செய்தது; ‘சினிமாச் சோழர்’திராவிட இயக்கத்தின் கனவு பொய்க்கும் திசையை நோக்கி நகர்வதை காட்சிப்படுத்திக் காட்டியது. தமிழ் சமூக வரலாற்றில்நடந்த மூன்று பெரிய மக்கள் எழுச்சிகளான பக்தி இயக்கம், இந்திய விடுதலைப் போராட்டம், திராவிட இயக்கம் மூன்றுமேவர்க்கபேதமொழித்த, ஆண்-பெண் சமநிலை எய்திய, சாதி ஒழிந்த சமூகத்தினை லட்சிய இலக்காக முன் வைத்தவை.அவைகளுக்கான தேவை தமிழ் சமூகத்திற்குள் தீராத் தாகமாய் இருந்தபடியால்தான் அவை பெரிய மக்கள் திரட்சிஇயக்கங்களாக உருப்பெற்றன. மூன்று மக்கள் பேரியக்கங்களுமே பெரும் சாதனைகள் பல நிகழ்த்தியிருந்தாலும் அவைஉறுதி அளித்த லட்சிய சமூகத்தினை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டன. பக்தி இயக்கம் வெற்றுக் கலைவடிவங்களாகவும் கடவுளுடன் பேரம் பேசுகிற கொடுக்கல் வாங்கல் சடங்குகளாகளாகவும் இன்று எஞ்சியிருக்கிறது.திராவிட இயக்கம் சினிமாவும், தொலைக்காட்சியும் உருவாக்கிய மெய்நிகர் உலகில் அமிழ்ந்து போய் பெருந்திரள்பண்பாடுக்கென்று விழுமியங்களும் சமூக ஒத்திசைவும் இல்லாத குடிமைப் பொதுவெளியாய் நிற்கிறது. இந்திய விடுதலைப்போராட்டத்தின் மதிப்பீடுகள் தமிழ்ப் பொதுவெளியில் வெளி வேஷங்களாகவும் பொய்மைகளாகவும் மாறிஓரங்கட்டப்பட்டுவிட்டன. இந்தச் சூழலின் மனசாட்சியின் குரலாக, லட்சியங்களையும் உள்ளார்ந்த ஆன்மீகத்தையும்காதலுக்கான சாத்தியப்பாடுகளையும் இழந்துவிட்ட நவீன கவிதைகளை நாம் ஞானக்கூத்தனிடமே வடிவம் பெறுவதை நாம்வாசிக்கிறோம். அவ்வடிவங்களின் தொற்றுதலும் நீட்சியும் ஆத்மாநாமிடம் தீவிரம் பெறுகின்றன. ஞானக்கூத்தனைஅவருடைய நகைச்சுவை காப்பாற்றியது, ஆத்மாநாமுக்கு நகைச்சுவை செறிவாகாதது அவர் கரணம் தப்பிவிடக்காரணங்களுள் ஒன்று..


பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980களில்தான். ஈழத் தமிழ் பிரச்சினையும், மௌனி, சுந்தரராமசாமி,ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன் ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்களுமே பிரமிளின் சமூக அரசியல்பார்வையினைக் கூர்மைப்படுத்தின. பிரமிளே மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் தமிழ் சமூகத்திற்கு அளித்த விலைமதிப்பில்லா பண்பாட்டு பங்களிப்புகளைதுல்லியப்படுத்தும் வழிகாட்டி ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியும் தந்தை பெரியாரும் இணைந்ததத்துவார்த்த அரசியல் நோக்குகொண்ட பகுத்தறிவின்பாற்பட்ட, தன் விடுதலையை சமூக விடுதலையோடுஇணைத்துக்கொண்ட தனி நபர்களைக் கொண்ட குடிமைச் சமூகத்தை உருவாக்கும் என்று பிரமிள் கருதியதாக நாம்இன்றைக்கு வாசிக்கலாம். மகத்தான கவி ஒருவரின் மகத்தான கனவு அது. ஆனால் கருத்தியல்/ அரசியல் கனவுகளினால்படைப்புகள் ஆக்கம் பெறுவதில்லை என்றும் அவர் உறுதியாக நம்பினார். ஆகையால் ‘அதிரடிக் கவிதைகள்’, ‘ஸ்கூட்டரில்வந்த தோழர்’ போன்ற உதிரிக்கவிதைகளின் உள்ளடக்கம் தவிர்த்து எதிர்ப்பு கவிதை வடிவத்திற்கு பெரிய பங்களிப்புகள்எதுவும் அவர் செய்யவில்லை.


‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’, ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ ஆகியதிருநாவுக்கரசரின் வெளிப்படையான பிரகடன வடிவங்களே தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எதிர்ப்பு வடிவங்கள்.தமிழ் இலக்கியத்தில் எதிர்ப்பு வடிவங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம் அதிலும் கவிதையில் எதிர்ப்புவடிவங்களை உருவாக்குவது இன்னும் கடினமான காரியமாகும். அனுபவத்தை சீராக வடிவமைக்கும் இசையமதிபொருந்திய கவிதை அரசின் ரகசிய மறு அதிகார வடிவமே என்றுதான் மேற்கத்திய விமர்சகர்கள் கோல்ரிட்ஜிலிருந்துஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் வரை, கதேயிலிருந்து அமெரிக்க புது விமர்சகர்கள் வரை சொல்கிறார்கள். இந்திய மரபுகளிலும் கவிதைஅரசின் அங்கம்தான். மேற்கத்திய மரபிலோ வெகு எளிதாக பாலியல் வெளிப்பாடுகளை மதத்தின் புனிதங்களோடுஎதிரிணைவு செய்யும்போது எதிர்ப்பு வடிவங்களை எளிதாக உருவாக்கிவிடலாம் ஆனால் இந்திய மரபிலோ கோவில்சிற்பங்களிலேயே பாலியல் வெளிப்பாடுகள் இருக்கின்றன. புனிதங்களும் பாலியலின் சகல வெளிப்பாடுகளும் கலவையானகலைகளாக மரபாக்கம் பெற்றுவிட்ட நம் சரித்திரத்தில் எதிர்ப்பின் கவிதை வடிவம் என்ன? ஜூலியா கிறிஸ்தவா ஃபிரெஞ்சுகவிதை மரபில் அனுபவத்தை வடிவமைக்கின்ற கவிதை என்ற கருத்தினைத் துறந்து மொழி நிகழ்வே கவிதை அதனுள் தாய் -சேயின் கூவல் கொஞ்சு மொழியினை அடையாளம் கண்டால் கவிதையின் புரட்சிகர மொழியினை அடையாளம் காணலாம்என்கிறார். ஒரு வகையில் பேச்சு மொழியினை கவிதைக்குள் கொண்டு வருவதும் அக்காரியத்தினை செய்யக்கூடும். பேச்சுமொழியினை பகடியாகக் கொண்டு வருதல் அதன் நல்ல தொடக்கம்.


கவிதைக்குள் பகடியையும் நகைச்சுவையையும் கையாள்தல் எளிதில் சாதிக்கக்கூடியதுமில்லை. பகடியில் இழை தப்பினால்அர்த்தம் சீரழியும். பேச்சு மொழியின் காலம் பிணைத்த தன்மை காலம் கடந்து நிற்கவேண்டிய கவிதையை எழுதவிழைபவனுக்கு உறுதுணையாகாது; அதன் குழுத்தன்மையும் பிராந்தியத்தன்மையும் எளிதில் வெறுப்பு அரசியலுக்குஉரமாகும். பேச்சின் தொனிகளை கவிதைக்குள் பாவனை காட்ட வைப்பதில் எதிர்ப்பின் கவிதை வடிவத்தை மொழிநிகழ்வாகவே நிகழ்த்திக்காட்டுவதே உசிதமாகும் இதையே ஞானக்கூத்தனின் மூன்று கவிதைகளும் சாதித்தன. அவற்றினைகீழே தருகிறேன். மீதிக் கவிதைகளை அவருடைய தளத்தில் வாசிக்கலாம்.






காலவழுவமைதி


“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…


மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்


எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள

சினிமாச்சோழர்


“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”
மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்தஉடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச் சோழர்.
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?


ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ கவிதையில் வரும் பேச்சாளரை நான் வேறு கவிஞர்களின் படைப்புகளிலும் தேடினேன்என்று சொன்னேனில்லையா அவரை நான் சபரிநாதனின் கவிதையில் கண்டுபிடித்தேன். சபரிநாதனின் கவிதையில் அவர்தூக்கம்போட்டுக்கொண்டிருந்தார்.


சபரி நாதனின் கவிதை


உயர்திரு சண்முகசுந்தரம்



ஷ்…..சத்தம் போடாதீர்கள்
சண்முகசுந்தரம் தூங்கிக்கொண்டிருக்கிறார்
எதையோ சொல்ல வந்து மறந்தது போல ஏறியிறங்குகிற தொப்பை சீராக
கரைவேட்டி தொடைகளுக்கிடையே கசங்கியிருக்க
மயிரடர்ந்த வலதுகை ஆட்காட்டிவிரல் நகம் பிட்டத்தை சொறிகிறது
மீசை மறைவில் அவரது வாய் மூடியுள்ளதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு
சண்முகசுந்தரம் தனது இருபத்தியோராவது வயதில் அரசியலில் குதித்தார்
மொட்டைமாடிலிருந்து தவறி விழுந்த ரப்பர் பந்தைப் போல
பந்து கணந்தோறும் அதிகரிக்கும் வேகத்துடன் பாய்கிறது
துமிகள் தெறிக்க ஈரத்தரையில் மோதி எழும்புகிறது அப்படியே
ஒரு கண்ணாடி சன்னலை உடைத்துவிட்டு சில்லுகளோடு மீண்டும்
குதிக்கிறது நடுரோட்டிலிருந்து
காற்றில் எம்புகிறது தூக்கியெறிந்து விளையாடப்படும் குழந்தையென
சண்முகசுந்தரம் பதறியடித்து எழுந்துகொண்டார்
வேலைக்காரனின் தாயாரை ஒரு கெட்டவார்த்தையால் திட்டியபின்
மினுங்கும் சந்தனநிறச் சட்டையின் கைப்பட்டையை மடித்துக்
கொண்டே படியிறங்குகிறார்
வாசலையொட்டியோடும் மூடப்பட்ட சாக்கடையின் முனையில்
வாளித்தண்ணீரை இறைத்தபடியிருந்தனர் குட்டித் தம்பிகள் சிலர்
எண்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவரின் கார்
புறப்பட்டுவிட்டது
முக்குத் திரும்பும்போதுதான் கைக்குட்டையை எடுக்க மறந்து போனது
ஞாபகம் வந்தது
உயர்திரு சண்முகசுந்தரத்துக்கு
ஒரு பலத்த கைதட்டல்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

https://www.facebook.com/arul.selvan.35762/posts/1266948383315553
 . எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது
- - - - - - — - - — - - - - — - - - — - -
ஞானக்கூத்தனின் இந்தக்கவிதையை நான் படித்தது “நாற்றங்கால்” எனும் கவிதைத்தொகுப்பில். எனக்கு அப்போது பதினாறு பதினேழு வயதிருக்கும். தீவிர நம்பிக்கையாளனாக இருந்து இறை எனும் தர்க்க நிலைபாட்டைப் பற்றி இயல்பாக ஐயங்கள் வரும் வயது. அறிவியலின் ஆச்சரியப் படுத்தும் முன்தோற்றங்கள் கடந்து அதன் உள்ளுறை ஒத்திசைவு மெல்லப் புரியும் வயது. பற்றி நிற்க பல மெய்யியல் சட்டகங்கள் புகைபோலப் புலப்பட்டும் எதுவும் உறுதியாக நிலைநிற்காத தடுமாற்றங்கள் அறியும் வயது. எல்லோரும் பதற்றங்களோடு உடல் உணர்வுகளைக் கடக்கும் வயது.


எதை எடுத்துக் கூறுவது
- - - - — - - — - - - - -

எதை எடுத்துக் கூறுவது நீஙகள்
இடமொன்றைத்
தெரிவிக்க வேண்டுமென்றால்

ஆலமரம் ஒன்றுண்டு
அதற்கு நேரே
கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப்
போகுமொன்றில் தொடர்ந்து செல்லக்
கிட்டும் என்போம்

கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு
மேற்காகப் பிரிகின்ற தெருவில்
என்போம்

தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை
ஆனதற்குப் பக்கத்தில்
உள்ள தென்போம்.

இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம்
இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும்
எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்
எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது




அந்த “நாற்றங்கால்” தொகுதியில் எனக்கு நினைவில் எப்போதும் நிற்பது
“எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்
எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது”

எனும் வரிகள்தாம். இவ்விரு வரிகளைத் தவிர்த்தால், இக்கவிதை அதன் ஒவ்வொரு வரியிலும் துல்லியமான பொருண்மையான காட்சிப் புலச் சுட்டுகளை அடுக்கி அதை ஒழுங்கான தர்க்கத்தில் கோர்த்தெடுத்துச் செல்கிறது.

புலனறிப் பொருண்மையுலகு. அதை அறிய நாம் சேர்க்கும் கோட்பாட்டுச் சட்டகங்கள். அச்சட்டகங்களின் உட்தர்க்கம். அவை வழிகூறாக வெளிப்படும் முற்றுண்மைகள். அவை தரும் ஓரு நிலைப்பாட்டு உறுதி. புற அக வாழ்வின் இருத்தலை சமனப் படுத்தி இசைவித்து நம் அன்றாட உலகின் இயல் வாழ்க்கையின் நடப்புக் காட்சி. கவிதை தன் கடைசி இரு வரிகளில் அனைத்தையும் சிதைத்துச் சுக்குநூறாக்குகிறது. எல்லாமும் அழல்தின்னக் கொள்ளும் போது எனும் ஊழிப் பேரழிவின் பின் என்ன நிலை மிஞ்சும். எங்கும் விரிந்து பரந்த அந்த அர்த்தப் பாழியுள் உறை பொருள்தான் என்ன? பாழ் என்பது இழிநோக்காக பாழ் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. ஏதுமற்ற ஒரு அன்மைத் தன்மையைச் சொல்கிறேன். அந்த அமானுடப் பெருவளியில் சொல் என்றும் பொருள் என்றும் ஏதுமற்ற விரிபுலத்தில் மிதக்கும் கவிதை இது. சதாகாலமும் ஓயாமல் மனம் கோர்த்துக்கொண்டிருக்கும் தர்க்கப் பின்னல்களை இக்கவிதை அறுத்தரிந்து முழுவதுமாக என்னை விடுவித்தது . அதன் முடிவில் தோன்றிய அப்பாழ்வெளி என்றும் என்னை விட்டு அகலவில்லை.

ஞானக்கூத்தனை பல நோக்குகளிலும் காணக்கூடிய கட்டுரைகள் எழுதலாம். இன்னும் ஒன்றை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன்.
அவருடைய இறையியல்தான் என்ன?

வந்தனம் என்றான் ஒருவன்
இளங்காலைக் கதிரைக் கண்டு
நன்றென்றான் ஒருவன் இரவில்
முகிழ்கிற நிலவைக் கண்டு

அவன் நின்றான் கால்கள் ஊன்றி
ஒரு போதில் வருதல் மற்றப்
போதிலே மறைதல் என்னும்
இயல் பில்லா முகிலைப் பார்த்து.

தோன்றி அகல்கின்ற பொருண்மை. ஆனால் கதிரும் நிலவும் ஒழுங்கான வலம் கொண்டவை. சீர்கொண்ட இயல்நின்றவை. முகிலோ எங்கும் எக்கணமும் சிதைந்து பரவும் ஒழுங்கிலிப் போராட்டம். உருவழிந்த நிலைத்தகவு. அதில் நிற்கின்றான் அவன். காலூன்றி. நிலையாக. இம்மனம் கண்ட ஓர் இறையியல் வீச்சு அவர்கவிதைகளில் தொடர்ந்தே வந்துள்ளது.

சென்ற நூற்றாண்டு தமிழ் படைப்பியக்கத்தில் சிறுகதையும் கவிதையும் தான் முதலில் நவீனத்துவத்தைத் தொட்டன. கடந்தன. ஞானக்கூத்தனை தமிழின் ஆகச் சிறந்த அங்கதக் கவிதைகள், பகடிக்கவிதைகள் நிறைய எழுதியவர் என்று சிலர் அறிமுகப்படுத்துகிறார்கள். அனைத்துக்கவிதைகளிலும் அங்கதத்தினூடே இழைபோலப் பின்னிய ஒரு கசப்புடன் எழுதியவர் என்கிறார்கள். அக்கால வழக்குப்படி அபத்தக் கவிதைவின் உச்சம் தொட்டவர் என்கிறார்கள். அவரை இப்படியெல்லாம் படிக்கலாம். இவையனைத்துக்கும் அப்பால் அவர் கவிதைகள் அடுக்காக வைக்கும் பொருண்மைக் காட்சிகள் நமக்குக் காட்டி நம்மை ஏமாற்றும் ஒரு மாயவிளையாட்டு என்றே நான் உணர்கிறேன். அப்பால் ஓர் ஆழத்தில் அவர் சொல்லாமல் சொல்லிச்சென்ற இறையியலும் மெய்யியலும் மட்டுமே எனை ஈர்க்கின்றன. தமிழின் நவீனக்கவிதை மரபில் அவர் யாருடைய வழியில் வருவதாகக் கருதலாம்? என்னைப் பொருத்தவரை அங்கதத்திலும் ,நன்கு அறிந்தே இலக்கணம் மீறிய மொழி விளையாட்டிலும், அலட்சியமாக வீசிச்செல்லும் மெய்யியல் குறும்பார்வைகளிலும் அவர் சி.மணியின் வழியே வந்தவர் என்றே கொள்ளலாம். இவ்விருவரைத்தவிர இவையனைத்தும் அமைந்த மற்றொரு தமிழ்க்கவிஞரை நான் காணவில்லை. கடந்த கால் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் எனக்கு அறிமுகமும் இல்லை என்பதையும் கூறவேண்டும்.

பகடியாக எழுதுபவர் அல்லர் அவர். கசப்போடும் எழுதவில்லை. அவர் நிலையை வெளிப்படையாக அவர் சொற்களில் உரத்துக்கூறாவிட்டாலும் அவரது கவிதைகள் விட்டுச் செல்வது மெய்யியல் சட்டகத்தில் ஒரு ஐயவாத மனச்சார்புதான். அவரது இறைகுறித்தான மத நம்பிக்கைகள் எல்லாம் அவரில் ஒரு பகுதி. ஆனால் கவிதை என்பது மனிதன் தன் தர்க்கபூர்வ வெளித்தோற்றப்படுத்தல்கள், நியாயப்படுத்தல்கள், ஒப்புக்கொடுத்தல்களைக் கடந்தே படைக்கப் படுகிறது. உள்ளிருந்து ஊறிஎழுந்து வெளிப்பாய்கிறது. அனைத்துக் கலைகளின் இயல்பே அதுதான். அதற்காகவே கலைகளின் நம் இடை இருப்பும்.

கவிதை,ஓவியம், இலக்கியம் எனக் கலைகளின் பரப்புமுழுவதும் நீக்கப்படும் கல்விச்சூழல் நம்முடையது. சமச்சீர்க்கல்வியில் அறிவியல் போதாது கணிதம் போதாது என்று குமுறும் நம் மக்கள் கவிதை போதாது சிற்பம் போதாது என்று கேட்பதில்லை. பத்து ஞானக்கூத்தன் கவிதைகளையாவது படிக்காமல் வளரும் ஒரு தமிழ்க்குழந்தை என்னவாக உருவாகமுடியும்? ஞானக்கூத்தன் ஒரு உதாரணம்தான். புதுமைப்பித்தனில் தொடங்கி பிச்சமூர்த்தியில் தொடங்கி ஒரு பெரும் நவீன இலக்கியப் பரப்பே தமிழில் உண்டு. இன்றைய நவ உலகில் அறிவியலும் பொறியியலும் தன்னால் வளரும். கலையும் மொழியும் மெய்யியலும் அற்ற ஒரு கல்வி எதையும் எதிர்காலத்தில் நிறை செய்ய இயலாது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஞானக்கூத்தன் மறைவுக்கு அஞ்சலி
------------------------------------------------------
தீபம் இதழில் 1973 ஆரம்ப மாதங்களின் இதழ் ஒன்றில் நான் படித்த ஞானக்கூத்தனின் முதல் கவிதை இது.
(தலைப்பற்ற கவிதை)
தெருக்களில் திரிந்தேன்
வானக்
காட்டிலே காலைப்போதின்
குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன்
நான் நின்றால்
தானும் நின்று
நான் சென்றால்
தானும் மேலே
தொடர்கிற நிலவைப் பார்த்தேன்
வானத்தில் வர்ணக்கோலம்
விசிறிடத்
திகைத்த மீனைப்
போய்க் கொத்தும் பறவை போல
ஒரு கேள்வி மனசுக்குள்ளே
என்னடா செய்வாய் தம்பி
பெரியவன் ஆன பின்பு
என்றொரு கேள்வி கேட்டார்
இளமையில் சிலபே ரேன்னை.
அன்று நான் அதற்குச் சொன்ன
பதிலொன்றும் நினைவில் இல்லை
இன்று நான் என்ன சொல்வேன்
அதைக் கேட்க அவர்கள் இல்லை. - ஞானக்கூத்தன்
இதிலிருந்துதான் ஞானக்கூத்தன் அறிமுகம். நான் அப்போது கோவையில் பட்டப்படிப்பில் நுழைந்திருந்த முதலாண்டு. இரவு பகல் குழப்பம் இருந்தாலும், அன்று விசித்திரமாக யாப்பமைதியுடன் விநோதமாகத் தென்பட்ட கவிதை என்பதால் தொடந்து இது ஞாபகத்தில் இருந்தது.
இதற்குப் பிறகு அடுத்ததடுத்த ஒரு தீபம் இதழில் ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்ற ஒரு கவிதை. இந்தக் கவிதை பின்பு வந்த எந்தத் தொகுப்பிலும் இல்லை என்றே நினைக்கிறேன். ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் இந்தக் கவிதை அதில் இருந்ததில்லை. கவிதைத் தலைப்பை மட்டும் புத்தகத்தலைப்பாக்கியதோடு சரி.
சம்பந்தமற்று தர்க்கப்பொறுத்தமற்று இருந்தாலும் (எனவேதான் சேர்க்கவில்லை போலும். தலைப்பை மட்டும் மறுபடியும் ஒரு அபத்தத் தன்மைக்காக சேர்த்தார் போலும்) இதுவும் ஒரு விசித்திர விநோதக் கவிதைதான்.
சூரியனுக்குப் பின்பக்கம்
-----------------------------------
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் உடனே
நான் சொல்வேன் :
அனைத்தும் வல்ல இராட்சதரை.
எதனால் என்றால்
அவரில் சிலரைக்
கனாப் பொழுதில்
அவர்கள் தொகையால்
எண்ணற்று
ஒன்றாய்க் கூடி
சூரியனைப் பாறை கொண்டு தூளாக்கிக்
கையால் இழுக்கும் வண்டிகளில்
அடுக்கிக் கொண்டு சென்றார்கள்
எதற்காம் இந்தப் பாளங்கள் என்றேன்
சொன்னான் ஓரரக்கன்
இன்றைக் கெங்கள் உணவுக்கு.
உடம்பும் பொலிவும் ஒருசேரச்
சோரும் அந்தச் சூரியனை
அள்ளிக் கொண்டு பலர் சென்றார்
நெல்லைத் தூக்கும் எறும்பைப்போல்
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் சொல்வேன் :
இராட்சதரை.
எதனால் என்றால் சூரியனை
யார் இடித்தார் உணவுக்கு? - ஞானக்கூத்தன்.
முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பின்பு பல கூட்டங்களில் மட்டும் பார்த்தும் பேச்சைக் கேட்டுமிருக்கிறேன். அவரைக் கடுமையாக விமர்சித்துப் பிரமிள் எழுதிய கட்டுரைகளை லயத்திலும் லயம் வெளியீடுகளிலும் கொண்டுவந்திருக்கிறேன். நேரில் நெருங்கிப் பேசிப் பழகியதில்லை.
ஞானக்கூத்தன் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.
பிரமிள் ஃபைலில் இருந்த புகைப்படங்களில் இருந்து....
முதல் 3 படங்களில் மௌனி, சிதம்பரசுப்ரமணியன், பிரமிள், சச்சிதானந்தம். அடுத்தவற்றில் பிரமிள், சச்சிதானந்தம், மற்ற ஒருவர் (முதலிலும் இடையிலும்? இருவர்? - இவரை அடையாளம் தெரிந்தோர் கூறவும்) கடைசியில் பிரமிள் ஆகியோருடன் ஞானக்கூத்தன்.

Saturday, July 23, 2016

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா - https://www.facebook.com/j.franciskiruba

Thursday, ‎October ‎13, ‎2016 4.27pm
Kaliya Murthy
3 hrs ·

தெரிந்தோ தெரியாமலோ உன் காலடி மண்ணெடுத்து ஒரு பூமி செய்துவிட்டேன்
உன் ஈரக்கூந்தலை கடலாகச் செய்யுமுன்னே கடந்து போய்விட்டாய்
உயரத்திலிருந்து சூரியனாய் வருத்துகிறது ஒற்றைப்பார்வை
வெப்பத்தில் வறள்கிறது எனது சின்னஞ்சிறிய பூமி
நீரூற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறிட்டடிக்கிறது ரத்தம். கண்ணே,
இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.


- "கன்னி "நாவலில், ஃபிரான்சிஸ்கிருபா.


இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!


24 May · 


'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'










26 April · 


கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.





19 April · 


எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.


15 April · 


சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.






11 April · 


சிறகுகளை விரித்து மிதக்கும்போது பறவைகளுக்கு வாய்க்கிறது வில்வடிவம். அம்புகளுக்கு பதில் வில்லே பாய்ந்து செல்லும் அற்புதம்.


11 April · 


கலைந்து பறக்கும் கூந்தலுக்கு ஒரு கிளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.


10 April · 


அக்காவின் அருகில் சென்று அவள் முறை வருவதற்கு சற்று முன்பு காதோரம் நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டான். "எக்கா, உங் கூட போட்டாவுல நானும் நிக்கட்டா?"

"ம்ஹூம். நான் மட்டும்தான் நிக்கனும்" தணிந்த குரலில் கறாராக மறுத்துவிட்டாள்.

தேவாலயத்தின் கூரையிடிந்து பாண்டி தலையில் மட்டும் விழுந்தது. வலியில் துடித்தான். நெஞ்சு விம்மி கனத்தது. அங்கேயே முழந்தாளிட்டு 'கடவுளே இந்த போட்டோ மிஷின் இப்போதே பணாலாகிப் போக வேண்டுமென்று' பிராத்தனை செய்ய ஒரு வேகம் பொங்கி வந்தது. ஆனால் பாண்டியால் அப்படி நினைக்க முடியவில்லை. அக்காவைப் படமெடுக்க வேண்டுமே.




10 April · 


திண்ணமாகத் தேர் வடம் போல் பிசிறின்றிப் பின்னப்பட்ட கரிய சடையை எடுத்து வானத்தில் வீசினாள். அது 'ம்கூம் நான் போகமாட்டேன்' என்று அவள் முதுகில் போய் அணைந்தது.




9 April · 


ப்யூரிட்டிக்கு ஒரு பவர் இருக்கு, எல்லா விதத்திலயும். வணங்கித் தான் ஆகணும். வேற வழியேயில்லை - குறிப்பா ஆண்களுக்கு.
- அமலா அக்கா







Saturday, 11 October 2014

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

யாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல்  சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் முதலில் சொல்வது ‘பிரான்சிஸ் கிருபாவின் கன்னி’ நாவலாகத் தான் இருக்கும். வேறு எவரின் எந்த வித சாயலும் இல்லாமல் கிருபாவுக்கென்றே  பிரத்யேகமான நடையில் கன்னி நாவலை குழந்தையைப் பத்து மாதம் ஒரு தாய் கருவில் சுமப்பது போல சுமந்து பெற்றெடுத்திருக்கிறார். இந்த நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம் எழுதுவது அவ்வளவு சுலபமாக எனக்குப் படவில்லை. குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி வரும். அது போக வார்த்தைகளில் எழுதிச் சொல்வதை விட அதை நீங்கள் படித்து உணர்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியதால், இந்த நாவலில் நான் ரசித்த பல வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். இதைப் படித்ததும் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் இனி நான் வாசிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன்.



தன் ஆசை நாயகின் மீது விழும் முதற் மழைத் துளியினை வர்ணிக்கிறார்.

'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'

காதலியின் மீது அமர்ந்த வண்ணத்துப்பூச்சியின் துரத்திவிடுகிறான் பாண்டி. அந்த வண்ணத்துப்ப்பூச்சியின் செய்கையை இதை விட அழகாக யாரேனும் சொல்ல முடியுமா என்ன?!

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

கடலைப் பற்றி…!

இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!

மனநலம் பாதிக்கப் பட்ட பாண்டி மண்ணுக்குள் புதைந்து போவது போல கற்பனை செய்கிறான்.

முதலில் சுவாசிக்க காற்றில்லாமல் திணறல் ஏற்பட்டது. பிறகு சிறுகச் சிறுக மண்ணை சுவாசிக்கப் பழகிக் கொண்டான். மண்துகள்கள் நுரையீரலில் நிரம்பி நாசி வழியே வெளியேறின. மேகங்களை விளக்கிக்கொண்டு சூரியன் நம்ப முடியாத இக்காட்சியை எட்டிப்பார்த்தது. முற்றிலும் புதைய ஒரே ஒரு கணம் மீதமிருந்தபோது அவன் உள்ளங்கால்களில் மஞ்சள் வெயில் கடைசி முத்தத்தைப் பதித்தது. அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு போனது சூரியன். அஸ்தமான விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகி வந்தது.

சிறுவயதில் புகைப்படம் எடுக்க செல்லும் பாண்டியின் மனவோட்டம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

குட்டி குட்டியா ரசிச்ச பல இடங்களில் சில.

காப்பியும் அம்மாவும் பாண்டிக்காகக் காத்திருந்தார்கள்.

விஷயம் வெளித்தெறிந்ததும் மக்களில் ஊமைகளைத் தவிர மற்றெல்லோரும் வாய் நோக சபித்தார்கள்.

வேப்பிலைச் சாந்தில் சிறு நெல்லியளவு உருட்டி கையில் எடுத்த பாட்டி ‘ஆ...’ காட்டச் சொன்னாள். அவள் வாயிலும் ‘ஆ’ இருந்தது.

கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.

சின்னப் பொன்னான அவளும் குட்டி சுடிதார் போட்டிருக்கிறாள். அது சுமாராகத் தான் இருந்தது. ஏன்னா, அவளுக்கு நக்கல் ஜாஸ்தி.

கபடி, கள்ளன் போலீஸ், ஐஸ் ஃபால் ரெடி, பிள்ளையார் பந்து, கிளியான் தட்டு, பாண்டி, தட்டாமாலை எல்லாம் கிரிக்கெட் வந்ததும் பெண்கள் விளையாட்டாகிவிட்டது.

ரேடியோ பாடினால் எஸ்.பி.பி, ஜானகி, ஏசுதாஸ் என்று யாரையும் விடாது. குறைத்து விரட்டிவிடும்.

யாராவது பாசத்தோடு ‘ஜிம்மி ஜிம்மி’ என்றழைத்தால் ‘ஆமா… அம்மியும்… ஆட்டு உரலும்…’’ என்று பாட்டி முணுமுணுக்கத் தவரமாட்டாள்.

அவன் சோகமடைந்ததும்  ஜிம்மியும் சோகமாகிவிட்டது. அதன் கண்கள் ‘என்ன என்ன’வென்றன. கட்டளையிட்டால் ஸ்கூலுக்குப் போய் ஜிம்மியே பரிட்சை எழுதி அவனை பாசாக்கி விடுவது போல் பாசத்துடன் சுற்றிவந்தது.

நேரடி சந்திப்புகளில் அவள் வாய் தான் பேசியது, எழுத்தில் அவள் இதயம் ஒலித்தது.

கலைந்து பறக்கும் கூந்தளுக்கு ஒரு க்ளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

ரத்தபந்தகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அன்பு தன்னியல்பா வரணும்.

சற்றேறக்குறைய அது ஒரு காதல் கடிதத்தின் குறை பிரசவம் போலிருந்தது. சிசுக் கொலை போல அதை கிழித்துப் போட்டுவிட்டு தெளிவடைய நாட்கள் பிடித்தன.

இதில் குறிப்பிட்டிருந்த வரிகள் அனைத்தும் மொத்த நாவலில் ஒரு 30% தான். பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம். இந்த நாவலில் அடிக்கோடிடாத வரிகளைத் தான் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கவித்துவமான நடை! உணர்ச்சிகளைத் திணிக்காமல் கதையின் போக்கிலேயே நம்மால் எளிதாக உணர முடியும். ஆனால் புதிதாக வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் உகந்ததா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னை மிகவும் கவர்ந்தது மனநலம் பாதிக்கப்பட்டவனின் உலகத்தைக் காட்டியிருப்பது. அது கற்பனையின் உச்சம்!

தீக்குள் 
விரலை வைத்த 
காதல் இன்பம் 
இப்புதினம்

கன்னி
ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை ரூ 250/-



-த.ராஜன்


தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்


தனக்கென தனி பாணியினாலான கதைகளின், கதை சொல்லலின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்காற்றிக்கொண்டிருக்கும் பா.வெங்கடேசனை இலக்கியப்பரிட்சயம் நன்குள்ள பலரும் அறிந்திராத அவலம் கவலைக்குரியது. கடந்த ஆண்டு காலச்சுவடில் இலவசமாக 'ராஜன் மகள்' தொகுப்பைத் தராமலிருந்திருந்தால் நானும் இவரை அறிந்திருப்பதில் சந்தேகம் தான். 'ராஜன் மகள்' சிறுகதைக்காக வாசகசாலை நடத்திய அமர்வினால் மட்டுமே பா.வெங்கடேசனை வாசிக்க நேர்ந்தது. இவர் தன்னுடைய கதைகளில் இன்னொருவரின் கனவுகளுக்குள் செல்வது, தன்னுடைய கனவில் வேறொருவரைத் தேடுவது, இரு வேறு காலங்களில் வாழ்பவர்கள் ஓரிடத்திற்கு வருவது, பல வருடங்களாய் ஒரே வயதில் இருப்பது,தனது காதலி இறந்து போனது தெரியாமலே பல நூறு வருடங்களாக தனது காதலிக்கு கடிதம் எழுதி அனுப்புவது என அடுக்கடுக்காய் பிரமிப்புகளைத் தந்துகொண்டே கதை சொல்கிறார். கதை சொல்லல் மீது அவருக்கிருக்கும் காதலை அவரது கதைகளில் உணரமுடியும். நமது மூதாதையர்களின் கதை சொல்லலில் ஒளிந்திருக்கும் மாய எதார்த்தமே இவரது கதை சொல்லலிலும் அடிநாதம்.

தாண்டவராயன் கதை. நாவலின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் - தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.

லிட்டில்போர்டில் வாழும் ஹென்றி குடும்பத்தவரை சில நிமிடங்களில் ஓவியம் (அதைப் புகைப்படம் என்று அறியாத காலம்) வரைகிறான் ஒரு மாயச் சைத்ரீகன். தனது மூன்றாம் மகளின் உடை எதேர்ச்சையாக விலகியதை தூரிகையால் மறைக்காமல் அப்படியே வரைந்ததைக் கண்டும் அதை மாற்றி வரைந்து தர மறுத்ததாலும் அந்த மாயச் சைத்ரீகன் கொல்லப்படுகிறான். லிட்டில்போர்டில் சாபக்காடு ஒன்று உள்ளது. அது ஆதாம் ஏவாள் தின்ற பழத்திலிருந்து விழுந்த விதையில் முளைத்த காடு. இந்தச் சாபக்காட்டினுள் நுழைந்தவர்கள் மறுபடி வீடு திரும்ப முடியாது. மாயச் சைத்ரீகனின் உடலை சாபக்காட்டின் எல்லையில் புதைக்கிறார்கள். அந்த நிகழ்வின் பின்பு கேத்தரின் ப்ரிட்ஜெட் (மூத்த மற்றும் இரண்டாம் மகள்) பிறந்த வீடு திரும்பவேயில்லை. ஹென்றியோ வெள்ளப்பெருக்கில் உண்டான கொசுக்கடியால் இறந்து போகிறான். எடித் (மூன்றாம் மகள்) தோடியாஸின் காதலை எடித்தின் புகைப்படம் காரணமாக மறுக்கின்றனர் தோடியாஸின் பெற்றோர். ஆகையால் இருவரும் சாபக்காட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள். இந்த பாவத்தைப் போக்க தோடியாஸின் தம்பி ஆம்ப்ரோஸை ஹெலனுக்கு (நான்காம் மகள்) மணமுடித்துத் தருகின்றனர். ஹெலனின் கணவன் இரத்த சோகையிலும் அதே காரணத்தால் அவள் குழந்தை பிறந்த உடனும் இறந்து போகின்றது. இப்படியிருக்க எலினாரை (கடைக்குட்டி மகள்) முடிந்த வரை படிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். தன் குடும்பத்தின் தரித்திரத்திற்கு காரணமான அந்த ஓவியத்தை (புகைப்படம்) இரண்டாம் முறை காண நேர்கையில் எலினார், ட்ரிஸ்ட்ராமை காதலனாகவும் பின் கணவனாகவும் ஏற்க நேர்கிறது.

எலினார், ட்ரிஸ்ட்ராம் சாபக்காட்டினுள் சல்லாபிக்க நேர்கிறது. அதன் பின்பு காரணமறியாமல் அவள் கண்களில் நோய் வருகிறது. இதற்கு காரணம் தான் தான் என சுயஇரக்கத்தின் காரணமாக பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி எலினாரை மணமுடிக்கிறான் ட்ரிஸ்ட்ராம். பதினாறு ஆண்டுகள் ஆயிற்று. அவளது கண்கள் குணமடையவும் குழந்தைப்பேறு பெறவும் மருந்து தேடி அழைகின்றனர். எந்த பயனும் இல்லை. பின்பு பணி நிமித்தமாக அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறான் ட்ரிஸ்ட்ராம்.

இந்தியாவில் சத்யபாமா, கெங்கம்மா, சொக்க கெளட, முதலியார், ஷெஸ்லர், பூசாரி என பல்வேறு மனிதர்களின் சந்திப்பு நேர்கிறது. கிராமத்தில் வாய்வழியாக உலவி வரும் தாண்டவராயனின் கதையைக் கேட்க நேரிடுகிறது.  தாண்டவராயன் கதைக்கும் ட்ரிஸ்ட்ராம் மருந்து தேடி அழைவதற்கும் துயிலாரின் வரலாற்றிக்கும் ஸ்வப்னஹல்லி அகதிகளுக்கும் என்ன சம்மந்தம் என முடிச்சி அவிழ்வது தான் இறுதி பாகம்.

இதற்கிடையில் உள்ளே நுழைந்தால் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாத இருட்டுச் சத்திரத்தின் கதை, வனமோகினி, ட்ரிஸ்ட்ராமின் சிந்தனைக்குள் கெங்கம்மா நுழைவது, தன்னை எலினாராக ட்ரிஸ்ட்ராம் உணர்வது, பகலில் மரமாயும் இரவில் அரக்கியாயும் உருமாறும் பூதகையின் கதை, தங்கப் புதையலைத் தேடி தோற்ற கதை, கெங்கம்மா கூறும் செல்லியின் கதை, இந்தியாவில் கேட்க நேரும் நீலவேணியின் சர்க்கம் ட்ரிஸ்ட்ராமின் கற்பனையாக இருப்பது, காற்றுப்புலி, கூடு விட்டு கூடு பாய்தல், மருந்து வெளி உலகில் இல்லை கதைகளுக்குள் இருப்பது என ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பரிணாமத்தில் பயணமாகின்றது. மேலும் வரலாறும் நிஜமும் கற்பனையும் கனவும் கதையோடு பின்னிப்பிணைந்து இருப்பதில் இந்நாவல் தனித்துவம் பெறுகின்றது.

முதன் முதலில் ஜெ.பிரான்சிஸ் கிருபா, சு.வேணுகோபால், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன், ரமேஷ் பிரேதன் ஆகியோரை வாசிக்கும் பொழுது அவர்களின் படைப்புகளைத் தாண்டி அவர்கள் மேல் தனி மரியாதை உண்டானதற்கு முக்கியமான காரணம், இன்றில்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் தங்களின் படைப்புகள் வாசகனைச் சென்று சேரும் என்ற நம்பிக்கைத் தவிர வேறெந்த உந்துதலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பது. இவர்களைப் போன்றே பா.வெங்கடேசனின் எந்த படைப்பிற்கும் பெருமளவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரோடு உரையாடுகையில் 'தாண்டவராயன் கதை' பன்னிரெண்டு வருட உழைப்பென்றார்.

ஒரிஜினல் நியூஸ் ரீல் | முன்றில் பதிப்பகம் | விலை ரூ.25/-
ராஜன் மகள் | காலச்சுவடு பதிப்பகம் | விலை ரூ.110/-
தாண்டவராயன் கதை | ஆழி பதிப்பகம் | விலை ரூ.575/-

இது தவிர இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இவரின் அடுத்த நாவலான 'பாகீரதியின் மதியம்' இன்னும் சில மாதங்களில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கின்றது.

- த.ராஜன்


Wednesday, July 20, 2016

என்னைக் கொன்றவனுக்கு - பிரமிள்

என்னைக் கொன்றவனுக்கு - பிரமிள்
----------------------------------------Kaala Subramaniam
4 hrs ·

இன்று நான் ஒரு
மைனஸ்.
பன்னூறு கோடிக்
காலங்களூடே
மின்னல்கள் இந்த
சகதி நீரின்
மூலக விறைப்புக்குள்
மேக முழக்கத்தை
ஆழப் புதைத்து
உழுதன.
ஒளிமின் சாரத்தில்
சேறு திகைத்தது.
எண்ணற்ற காலங்கள்
பெருவெளியில் எங்கும்
விண்மீன் சூரியர்கள்.
முதிர்ந்து கோள்குறுகி
வெண்நீலமாகி
அணுமூலங்கள்
பின்னிப் பின்னி
ஊடுருவித் தொகுத்த
நவமுக மூலகம்.1
மூடிச்சரிந்து விண்
மீன்கள் சிதற
பூமிக்கு இறங்கிற்று,
ஓயாது நிலவிய
ஒளியற்ற மூட்டத்துள்
ஓயாது பிறக்கும்
மின்சாரப் புயல்.
ஒன்பது முகம்கொண்ட
மூலகக் கற்கள்
உயிருள்ள தாதுக்கு
உள் அத்திவாரங்கள்.
நீரில் தோன்றி
நீந்திப் பின் ஊர்ந்து
தரைக்கு வந்து
காற்றில் பறந்து
தாவி மரத்தில்
பாய்ந்து நிமிர்ந்து
மூளைக் கிளை பரப்பி
எழுந்தேன் நான்.
இறப்புப் பிறப்பென்று
சுழன்றது என்னுள்
மறைந்து நின்ற
பேரண்டத்தின் திகிரி.
இவ்வாறு தோன்றி
செத்துப் பிறக்கும்
ஓயாத வட்டத்தில்
மீண்டும் நானின்று
சுத்தமாய் ஒரு
மைனஸ்.
சூரிய உலைகளில்
அணுக்கள் பிணைந்து
இரும்பின் நுண்
துணுக்குகள் பெருகின்
உதிரம்-உதிரத்தை
உதைத்து நடித்து
உடலெங்கும் அனுப்பும்
தசைக்கருவி-
அண்டத்தைப் பிண்டத்தின்
அகத்தில் நடத்தும்
இதயம் - இதற்குமேல்
கபாலச் சிறைக்குள்
புவனத்தை அளாவி
எழும்பும் சிந்தனைக்
கருவி மூளை - இது
எதுவும் உனக்கு
வியப்பில்லை - இவை
சேற்றிலே இயற்கை
விதைத்த விபத்துக்கள்.
உன் பிரக்ஞை?
அதுவா – அது
ஜடத்தின் இலக்கணப்
பகுதியில் ஒருவெறும்
விகுதி - ஆனால்
உயிர்த்தாதுக் கோவையின்2
பூர்வீகமான
நவமுக மூலகம்
ஒன்றைக்கூட - அட
ஒன்றைக் கூட
உருவாக்கும் விபத்துக்கு,
இன்று நாம் காண்கின்ற
அண்டம் முழுதும்
இன்று நாம் அறிந்துள்ள
புவனத்தின் ஆயுட்காலம்
முழுதும் பிறழ்ந்து
மோதித் திரிந்தாலும்
போதாது!
எனவேதான்
பிறப்பிறப்பற்ற
பிரபஞ்சம் ஒன்றுள்
விஞ்ஞானிகளுக்கு
எட்டாத மகா
காலத்தின் சந்நிதியில்
சம்பவித்த மூலகம்
ஒருநவ முகம்.
இது கோடி கோடி
குவிந்து பிளந்து
உடலெடுத்தவையே
அமீபா, ஆப்பிள்
ஜீவித வர்க்கம்,
நீ, நான் யாவரும்
அற்புதம் என்று நாம்
நினைப்பவை யாவும்
அற்பமாய் நிற்கிற
பீடம் இச்சம்பவம்
இதனை
கொலைக்கருவி ஒன்றன்
விசைவில்லில், விரல்
விறைத்த ஒரு
கணத்தில், நிர்மூலம்
ஆக்கிநிற் கின்றாய்
விடுதலை வேட்கை,
சிலுவை, கோபுரம்,
மசூதி, விஹாரை,
மற்றும் சிலைகள்,
உருவ அருவக்
கடவுட் கொள்கைகள்,
உருவற்ற தத்துவங்கள்,
கருத்து மயமான
சித்தாந்த ரூபங்கள்,
உலகத்தை உய்விக்கும்
வேலைவாய்ப்புத்
திட்டங்கள்
எவற்றையும் நீயுன்
சுயமுக வழிபாட்டின்
தீயில் நிற்கும்
பயம் என்ற பாத்திரத்தில்
உலைவைத்து விடுகின்றாய்;
கொலைக்கருவி ஆக்குகிறாய்.
கருவியின் வில்லும்
உன்விரலும் சேர்ந்து
பிளஸ் வடிவம் பெறுகிறது.
சரித்திர நூல்களின்
காகிதத் தெருக்கள்
முழுவதும் ஓடி
வருகின்றன உன்
பிளஸ் குளம்படிகள்.
மூலம் முடிவு என்ற
இருமைக்கு நடுவே
காலம் கருதல் இவை
இல்லாத கணம்
இல்லை உன் பிளஸ்களின்
குளம்படிக் கணக்கில்.
ஆனால் -
வில்லில் உன் விரலின்
விறைப்பை நிகழ்த்திய
கணம் நிற்கிறது
காலம் கடந்து.
மூலம் முடிவற்ற
ஒன்று எரிகிறது
என்னுள் உன்னுள்
எண்ணற்ற விண்மீன்
கோளங்கள் தோறும்.
------------------------------
1. Configuration Nine என்ற மூலகம் ( (Molecule)
2. D.N.A. தாதுக்கோவை.
------------------------------------------------------------------
நவீன விருட்சம், அக். 1992 - மார்ச் 1993.

Monday, July 18, 2016

பூகோஸ் - தஞ்சை ப்ரகாஷ்



196 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

16 பூகோஸ்

https://archive.org/download/orr-11459_Pookose/orr-11459_Pookose.pdf


அசையாமல் உட்கார்ந்திருந்த மீராவைக் கிட்டே வந்து அவள் அடிவயிற்றைத் தொட்டு, இடையில் கை கொடுத்து மறுகையால் தோளைப் பிடித்து வளைத்து 'இப்படி என்று இருக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டு மகேச்வரின் தவக்கோல சிலையின் அருகே போய் நின்று, மீராவையே பார்த்தார் வித்யாசாகர் கிறங் கிப்போன மீரா ஒரு முரட்டுத்தனம் காட்டினாள். உடலை வளைக்கச் சொல்லித் தரலாம் இந்த முரட்டு விரைப்பின் பாவனையை எப்படிக் குறைப்பது? கொஞ்ச நாளாகவே மீரா இப்படி விரைத்து முறுக்கிக் கொள்வதும் சகஜபாவம் வர ரொம் பவே சிரமப்படுவதும் வழக்கமாகி விட்டது. மீரா என்ன செய்வாள் மராட்டிப் பெண். அவள் எட்டு வயசிலிருந்தே கல்யாணத்துக்குத் தயாரானவள். பத்து வயசு முடிந்து பதினொன்றில் கால் வைத்த போதோ பெரிசாகி விட்டவள். அவள் அம்மா ஜம்னாபாய்க்குப் பத்து வயசில் கல்யாணம் பதின்மூன்று பதி னாலு வயசான போது மீராவைப் பெற்றெடுத்தவள். பத்து பெண்கள். ஒவ் வொரு மாதத்திலும் ஒவ்வொரு பெண் வீதம் பெற்றெடுத்தா மகராசி மீராவை ஏகாப்ஜனா என்கிற கோலாப்பூர்காரனுக்கு கட்டி வைத்தபின் நாலு வருடங்க ளிலும் மீராவின் அம்மா ஜம்னா பாய் நாலு பெண்களைப் பெற்றுக் கொண் டேதான் இருந்தாள்.

அதனால்தான் ஏகாப்ஜனா தனிக்குடித்தனம் என்று கூப்பிட்டதும் ஒடிப் போய் ஐயங்கடைத் தெருவில் புகுந்து கொண்டாள் மீரா ஆடி ஓடி விளையா டிய அவளை மூலையில் போட்டு மராட்டிய கும்டா போட்டு மூடினான் ஏகாப் ஜனா. எங்கிருந்தோ வந்தார் வித்யாசாகர் ஒரே பார்வையில் புரிந்து கொண்ட முதல் மனிதன் வித்யாசாகரன் தோள்களில் புரளும் தலைமுடி ஆனாலும் உச் சியும் முன் தலையும் பின்னும் வழுக்கைத் தலை சிவந்த நிறம் நெற்றியில் நெற்றிப் பிறை, நடுவில் நெற்றிக் கண்ணாய் குங்குமம் சுடர்ந்தது. அலையலை யாய் மார்பில் நீண்டு படரும் வெண்மையும் கருப்புமான சுருள் முடிகளோடு தாடி ஆ. அடித்து உதைத்து பிழிந்து இரவில் நக்கி நக்கி முத்துகிற, கணவனை அவர் முதலில் இணங்கி சம்மதிக்க வைத்ததே ஆச்சர்யம் தடுத்து அவளை அடிக்காமல் காப்பாற்றி மறுத்தார் என்பதற்காகவே அவரைத் துக்கி எறிந்தா ஏகாப்ஜனா மெதுவாய் புழுதியை தட்டிவிட்டு எழுந்து வந்து பொம்பளையெ அடிக்கிற பேடிப்பயலா நீ? மலக்கம்பம் பைல்வான் பரம்பரை இல்லியா நீ? என்று கேட்டபோது வியந்து போனான் ஏகாப்ஜனா. அவன் தோளில் கை போட்டபடியே "நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் இந்த சாமி, பூதம் செலையெல்லாம் செய்கிற ஆசாரி. இப்ப எனக்கு ஒன் பொண்டாட்டியோட மாதிரி வேணும். அதாம்ப்பா மாடல். நான் செல செய்யிறதுக்கு நின்னு ஒரு நாலுமணி நேரம்





________________

பூகோஸ் 197

காட்டுனா போதும். தினம் நாலுமணி நேரம்தான் வாரத்துக்கு ஐநூறு அறுநூறு ரூபாய் தருவேன் நீயும் வந்து கூடவே இருக்கலாம். பயமில்லெ நானு ஓங்க மராட்டி அரமணைலதான் ராஜாவூட்டுக்கு பக்கத்ல தான் தங்கியிருக்கேன் இந்தா' என்று (ஆயிரம் ரூபாய்) நோட்டுச் சுருள்கள் நூறு ரூபாய் தாள்கள்) ஏகாப்ஜனா கையில் கொடுத்ததிலிருந்து ஏகாப்ஜனா மடங்கிப் போனான். அடங்கியும் போனான்.

மீராவுக்கு வியர்த்து வடிந்தது. பழசெல்லாம் மறந்தது. வித்யாசாகர் அறு பது வயதுக்காரர் என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. என்ன பார்வை அப்பப்பா அவர் கண்களைப் பார்க்கவே மாட்டாள். ரெண்டு வாரமாய் அவள் பாடுபட்டு வெட்கத்தில் சிவந்து வெறுத்துப் போவாள். ஒடுங்கிய மருந்துக் கடைச் சந்துக்கு வெகுநேரம் கழித்து பின்னிரவில் திரும்பும்போது மராட்டிய மொழியில் ஏகாப்ஜனாவிடம் தன்னால் இனிமேல் ஓவிய சிற்பத்துக்கு மாட லாய் உட்கார முடியாது என்பாள், ஏகாப்ஜனா நன்றாய் சாராய வெடுப்பில் இருப்பான். ஏன் வித்யாசாகரிடம் போக மாட்டாள் என்று கேட்பான் ஏகாப் ஜனா: "ஆமா அவருகிட்ட ஒக்கார முடியாது" என்பாள் மீரா "ஏன் என்ன செய்கிறான் அந்தக் கிழவன்?" என்பான் ஏகாப்ஜனா, "ஒன்னும் செய்யல்லெ ஆனா என்னமோ அந்தாளுக்கு முன்னாலெ ஒக்கார முடியலெ - மானம்போ வது" என்பாள் கண்ணிருடன் ஏகாப்ஜனா ஆத்திரம் பொங்க "ஏதாவது செஞ் சான்னு சொல்லு? நீய்யி குளிச்சியா' என்று கத்துவான். "ஐயோ பாவம்' அவரு மேலே தப்பே இல்லெ' என்பாள் பரிதாபமாய் மருந்துக் கடை குறுக் கத்தில் பைப்படியைத் தாண்டும்போது ஓங்கி மீராவின் முதுகில் ஓர் அறை வைத்து கதவுப் பூட்டைத் திறந்து அவளை உதைத்து உள்ளே தள்ளி கதவைச் சாத்துவான். 'ச்சீ நீ ஒரு மனுஷனாட்டம் என்று சீறியபடியே உள்ளே போய் விழுவாள் மீரா மீராவின் இந்த வலம் எல்லாம் எப்படியோ தெரிந்து கொண்டு அவளை அந்த சோக மூர்ச்சனைகளை எல்லாம் ஓவியங்களாய் வரைந்து வரும் வித்யாசாகரை அவளால் ஒதுக்க முடியவில்லை. விரலால் கூட தொடாத அவளது உள் உறுப்பு அங்கங்கள் யாவும் உறிஞ்சி வரைந்தெடுத்து விடுகிறார் வித்தியாசாகர்.

ஆரம்ப நாட்களில் ஏறத்தாழ அவர் முன்னால் நிர்வாணப்படுவதுபோல் சொல்லொண்ணா கஷ்ட்டம் தோன்றியது. தினமும் அவள் இல்லாத வேளைக ளில் இரவு முழுவதும்கூட விழித்திருந்து புதிய கோணத்தில் அவளை தினமும் ஒரு ஓவியம் தீட்டி எடுத்திருப்பார் வித்தியாசாகர் தினமும் காலை ஏழுரை மணிக்கெல்லாம் மீரா அங்கே போயாக வேண்டும் என ஆயிற்று. கணவனுடன் வந்தாலும் அவன் அருகில் இருக்கமாட்டான், வெளி வராந்தாவிலோ சாராயக் கடைக்கோ போய் உழண்டு கழண்டு வருவான். வித்தியாசாகர் அரமனை ஆத ரவில் இருந்ததால் அந்தப் பழைய கட்டிடத்தை அவருக்கு விட்டிருந்தார்கள். அதிகம் பேசமாட்டான் பாவி கண்கள் அவளை அப்படியே அள்ளி விழுங்கும் உணர்ச்சி மயமான கண்கள். காலைப் பனிமூட்டம் விலகும் முன்பே ஏகாப்ஜ னாவும் மீராவும் புறப்படுவார்கள். முதலில் பயமாய்த்தான் இருந்தது. படிப்ப டியாய் பயம் போய் இனம் புரியாத கலவரம் மீண்டும் நெஞ்சில் உருண்டது.





________________

198 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

உள்ளே கொண்டு வந்துவிடும் ஏகாப்ஜனா உடனேயே புறப்பட்டுப் போகத் தொடங்கும்போதெல்லாம் "இஞ்சயே இருங்க பாவா போக வேண் டாம் போகாதிங்க' என்று மராத்தியில் கெஞ்சுவாள். மராத்தியிலேயே அசிங் கமான கெட்ட வார்த்தைகளைக் கொட்டி திட்டுவான் ஏகாப்ஜனா. வாரத்துக்கு எழுநூறு ரூபாயில்ல குடுக்றான் கெழவன். சும்மா இருடி ஒண்ணும் துக்கி முழுங்கிட மாட்டான். ஒண்ணும் முடியாது அவனால' என்று கூச்சல் போட்ட படியே படியிறங்கிப் போய்விடுவான் ஏகாப்ஜனா படப்படப்போடு கண்ணி ரோடு வழியில்லாது அப்படியே நிற்கும் அவள் காதருகே குனிந்து வித்தியா சாகர் அவளை நெருங்கி

"ஏன் மீரா என்னெப் பார்த்தா பயம்மா இருக்கா? ம்? தோ இந்த வானத்தை பாரு இன்னைக்கு மழ ஜோவுன்னு கொட்டப் போவுது பறவை யெல்லாம் திசைமாறி கொக்கு எல்லாம் வேகவேகமாக காலையிலியே திரும்பி பறந்துகிட்டு இருக்குல்ல பாத்தியா?" என்று கூறிய படியே அவளது முக்காட் டுக் கும்டாவை உருவி எடுக்கும் அவரது தைர்யத்தை அவரது துணிச்சலை மறுக்காது பயத்திலிருந்து எழும்பியதல்ல அது என்பது புரியுமுன் அவளது மேலாடையையும் அவரே லேசாக விலக்கி நிஜமாக்கும் வித்தை ஆச்சர்யமாய் இருக்கும். போதும் போதும் என்று அவள் அரற்றுவதைப் பற்றி கவலைப்படா விட்டாலும் பாதம் வரை தொட்டு அவர் விரும்புகிற நிலையில் உட்கார வைத்து லேசான அலங்காரமும் கவலைப்படாமல் செய்யும்போது கண்களில் நீர் முட்டும்.

கைக்குட்டையால் கண்களை அவரே துடைத்து ஒற்றியபடி "ச்சீ அழக்கூ டாது நீ பரமேச்வரி அம்மன் அழுவுமா? நான் என்ன செஞ்சுடுவேனாம்? உன் னோட பரிசுத்தம் தான் என்னோட சிலையும் கலையுமாக போவது உன்னெ என்னமோ பண்ணிப்புடுவேன்னு பயப்படாதே பயம் ஒண்ணுமேயில்லெ. உன்னோட ஒடம்புதான் பெரிய்ய கலை அழகு ஆச்சர்யம். இந்த அழகெ யாருமே பார்க்க மாட்டாங்க ஆனா நான்தான் இதை கண்டு பிடிச்சேன். உன் னோட இந்த சுகமான துய்மைதான் இந்த அழகு, கலை, ஆச்சரியம். இதையும் யாருக்கும் புடிக்காது. இதுல இருந்து என்ன புழிஞ்சு எடுக்க முடியும்? இதெ வித்தா என்ன வெலைக்கி வாங்கலாம்னு என்னையும் ஒன்னையும் கசக்கி எடுக் கத்துக்குத்தான் எல்லோரும் அலைவாங்க. இதெல்லாம் உன்னைத் தாண்டாது நீ அப்படியே இரு உன்னை உனக்கே தருவேன்? புரியாது புரிய வெய்கவும் முடியாது உன்னெ வெறும் பொண்ணா ஏகாப்ஜனா கட்டிகிட்டான். எல்லோ ரும் உன்னெ கும்புட்டு வழப் போறாங்க பாரேன்'

இன்னது என்று சொல்லத் தெரியாத பரவசம் மீராவின் உடம்பில் பரவியது. அவள் கண்களில் தெரிந்தபோது அவளது உள் ஆடை இறுக்கத்தை ரவிக்கை முடிச்சுகளை அவரே அவிழ்த்து தளர்த்தியபோது வெட்கத்தால் வெகுண்டு போனாளேயொழிய விலக்கவோ விலகவோ தெரியாது அவரையே பார்த் தாள். தழுதழுத்த குரலில் முதன் முறையாக வித்யாசாகரின் முன் துணிந்து

அவர் கால்களைக் கட்டிக் கொண்டு 'வேண்டாங்க வாண்டாங்க வாண்





________________

பூகோஸ் 199

டாங்க" என்றாள். அவள் துடைகளைப் பிடித்து நகர்த்தி கால்களை அழகாக துக்கி ஒரு மனைமேல் வைத்தபடி "என்னமா மீரா? எது வாண்டாம்? இப்போ நான் ஒன்னை என்ன செஞ்சேனாம்? எதுக்கு இப்படி நடுங்கி நீய்யி? உன் னோட ஒடம்பு ஒன்னோடது தான். இல்லென்னா ஏகாப்ஜனாவோடதுதான். நான் அது தெரிஞ்சுதான் இப்டி ஏற்பாடு பண்ணியிருக்கேன். இது நீ சொல்றது தான் விரசம் நம்ப பொண்ணுகளே இப்டி முட்டாள்தனமாத்தான் ஏமாந்து போகுது ஒன்னெ ஒன்னோட விருப்பம் இல்லாமெ எவனும் என்னவும் பண் ணிடமுடியாது ஒன்னோட புருஷன் ஏகாப்ஜனா கூட ஆம்மா அப்டி நீ சுதந் திரமா இருக்கணும். இது என்ன வெறும் சதை பிடிச்சு தொங்கலாம். உனக்கு சந்தோஷம் வருமா? நீ யாரு கூடயும் அசிங்கம் பண்ணிக்குவியா? மாட்டெ அப்ப ஏன் பயம்? நான் ஒரு சிற்பாசாரி ஒன்னோட அற்புதமான ஆச்சர்யமான அழகெ அநுபவிச்சு ரசிச்சவன் ஆமா ஒன்னோட ஒடம்பெ படைச்சவனைப் போல.. ஒங்க அம்மா பெத்தப்ப பட்ட வலியெல்லாம் நானும் பட்டு உன்னெ ரஸிச்சு அநுபவிச்சு படைச்சுகிட்டு இருக்கவம்மா பயப்புடாதெ கேவலம் ஒடம்பு ஒடம்போட ஒராசி ஒராசி சந்தோஷப்பட்ற லெக்ஸ்க்கே மனசு கார ணமா இருக்குன்னா மனஸ்லம் மனஸ்லம் ஒட்டித்தட்டி உடைச்சு கலக்காமெ உன்னெ நான் எடுத்துக்க முடியுமா? புரியுதா ஒனக்கு உன்னெ கசக்கி ஏறி மிரு கம் பண்ணமாட்டே பா...' 'பாவி அப்ப ஏன் துணியெல்லாம் எடுத்துட்டு இப்டி அரை முண்டமா ஆக்கிப் பாக்கிறீங்க?" - "உன்னோட ஆச்சர்யமான மனசு உனக்கும் தெரியல்லெ உன் புருஷன்காரனுக்குமே தெரியலை

அந்நியன் தொட்டாலே சம்மதிக்காத ஒன்னோட அற்புதமான மனசு அவ னுக்கு கொடுத்தும் கூட அவனுக்கு தெரியல்லெ. நான் தொட்டாலே அவதிப் படுற ஒன்னோட மனசு பயப்படுது ஏகாப்ஜனா உன்னெ தெரிஞ்சுக்காத மாதிரி நீயும் உன்னெ தெரிஞ்சுக்கல்லெ' என்று சிரித்தார் வித்யாசாகர். பேச்சிடையில் தன்னை மறந்து அவர் போட்ட பாதையில் நடந்து கொண்டிருந்தாள் மீரா அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முதல் வகுப்பு கூடப் போகாத மாணவி பட்டப்படிப்புப் பாடங்களும் புரிந்து போவதான அதிசயம் போல அவருடன் இணங்கி மனசு மகிழ்ச்சியில் ஆழ்ந்து தவித்தது. நாணம் படரப்படர அவள் அவர் கால்களைக் கட்டிக் கொண்டாள். 'எனக்கு உங்க முன்னால இப்படி இருக்க முடியாது. என்னெ படமெல்லாம் வரையாதிங்க வேணும்ன்னா வேற என்னமும் பண்ணுங்க. என்ன படம் வரயாத்ங்க' என்று கண்ணிர் உகுத்தாள். அப்படியே அவளை விட்டு விட்டு "இப்படியே இரு மீரா ரெண்டு ஸ்கெச் எடுத்துடுவேன்' என்றபடி கரித்துண்டு கூர் முனையால கெட்டிக் காகிதத்தில் நீளநீளமான கோடுகளால் அவளை கீறக்கீற அவர் உடல் சிலிர்த்தது அவளுக்கு ஆச்சர்யமாய்ப் புரிந்தது. சிவப்பு சிமிட்டிப் பால் ஊற்றி சலவைக்கல் போல் பளபளப்பாகத் தேய்த்தக் கண்ணாடி போல் வழவழத்த அந்தத் தரையில் சுருண்டு அமர்ந்திருந்த அந்தப் பேரழகு அப்படியே பலப்பல ஸ்கெட்சுகளாய் வித்யாசாகர் கீறிக்கிறித் தள்ளினார். அவர் விரல்கள் ஸ்கெட்ச்சை வரையும் போதெல்லாம் சுரதம் கனிந்தது அவளுக்கு மீரா தன்னை இழக்க ஆரம்பித்தாள்.





________________

200 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

"...ஆமா ஏகாப்ஜனா ஒன்னை டாக்டர் கிட்ட எப்பவாவுது கூட்டிகிட்டுப் போயிருக்கானா?" என்று கேட்டபோது, மீண்டும் வெட்க முற்றாள் மீரா, தினமும் அந்த மருந்துக் கடைச் சந்தின் மூலையில் ஈரநைப்பான அந்த இருண்ட மராட்டியப் பழம் வீட்டின் உள்ளறைக்குள் அவளைத் தினமும் ஏகாப் ஜனா மல்க்கம்பத்தில் ஏற்றும் கோரம் நினைவு வந்து இம்சித்தது. முகம் வாடி யது அவளுக்கு

"ஏம்மா? என்ன ஆச்சு? முகம், வாடுதே இப்டி? ம்? ஏகாப்ஜனா சந்தோ ஷமா வெச்சுக்கிறானா?"

"-" - முகத்தைக் கவிழ்த்துக் கொண்ட அவளது அந்த நிலையும் விடாமல் ஸ்கெட்ச் செய்து கொண்டார் வித்யாசாகர் அவள் பயமும் வெட்கமும் கூட பதி வாகிறது. "ஏகாப்ஜனா உன்னை வுடமாட்டான் நீ கவலைப்பட வேண்டியதே யில்லை. அத்தனை ஆசை அவனுக்கு' என்றார் வித்யாசாகர் தங்கச்சிலை போல் அவளும் பரமேச்வரியான மீராவும் ஒன்றிய காட்சி அவளுக்கு மட்டும் புரிந்தது. மறுபடியும் வந்து அவளைத் திசைமாற்றி நிறுத்தியபோது அவள் திரை அறுந்துபோனது அவளுக்கே தெரிந்தது.

“மீரா மல்கம்பம் பாத்திருக்கியா? விளக்கெண்ணையும் கெட்டியாள வழு வழுப்பான கிரீஸும் பூசி வெச்ச தூண் வானம் முட்ட ஒயரமான வழுப்பான சலவைக் கல் மாதிரி நிக்குமே?!"

மீரா நிமிந்து அவரைப் பார்க்கவில்லை. குனிந்தபடியே மெல்லிய குரலில் சொன்னாள் "இனிமே என்னால இங்கே வரமுடியாது வரமாட்டேன்'

"மல்க்கம்பத்தெப் பத்தில பேசினீங்க போல இருக்கு எங்க மல்கம்பம் எப்ப மல்க்கம்பம்?"

யாருடைய பதில் பற்றியும் கவலைப்படாமல் உள்ளே வந்தான் ஏகாப் ஜனா? அவன் பேசியது இருவருக்குமே புரிய ஞாயமில்லை. ஏகாப்ஜனா அவ ளையே பார்த்துக் கொண்டு நின்றான். நன்றாக குடித்துவிட்டு வந்திருந்தான். அவள் அருகே போய் 'போலாமாடி!' என்று கேட்ட போதுதான் மீரா மண்ணு லகம் வந்தாள். ஒரு கணம் அவன் வராமல் ஒரு கணம் கடந்திருந்தால் வித்யா சாகருடைய மார்பில் இறுகத் தழுவிக் கொண்டு கதறியிருப்பாள். இப்போது உள்ளே அடக்கவும் மூடவும் மறைக்கவுமாய் பாடுபட்டாள்.

வித்யாசாகர் ஏகாப்ஜனாவைப் பார்த்து 'மீரா அற்புதமான பொண்ணு - பொண்ணே இல்லெ! அத்தனை அம்சமும் உள்ள தெய்வம் இந்த மண்ணுல கிடைக்காத அம்மன் பராசத்தி' என்றார் பரவசத்தோடு.

ஹெஹ், ஹெஹ் ஹெஹ் ஹேய்ன்னானாம் மட்டக்குதிரை மாதிரி கனைத் தான் ஏகாப். கவலைப் படவேயில்லை. வித்யாசாகர் "சிரிக்காதே, உனக்கு அவ பொண்டாட்டி அவளெ உனக்கு தெரியாது அவ்வளவுதான். வேற யாருக்கும் கூட புரியாது. தெய்வம்ன்னா என்னாங்கற? மனுவிதான் தெய்வம் மனுவி யிலயே ஒஸ்தியான் மனுவியதான் தெய்வம் தெய்வம்ன்னாதான் என்ன? ஒஸ்த்தியான தெய்வம்தான் மனுஷனா மனுவியா வர முடியும் உங்களுக்கு





________________

பூகோஸ் 201

புரியாது.டா, ஆனா மீராவ பத்திரமா வெச்சுக்கோ வுட்டுடாதே பசிக்கும் பட்டினிக்குமா பறக்கவுடாதே தெருவுல கட்டி இழுக்காதெ ஜாக்கரதை' உன்னெ கம்மா வுடமாட்டேன்!"

"ஏஞ்சார் பணந்தாரேன், படம் வரயனும் உம் பொண்டாட்டிய மாதிரியா வெச்சுதாம் படம் எழுத முடியும்ன்னிங்க. இப்ப என்னாமோ சொல்றீங்க? இவளெ நான் வெச்சு வடிக்கிறதுக்கே இவப் பூ போட்டுக் கும்புடனு ஐநூறு ரூபா வாங்கிட்டு தான் கட்டிக்கிட்டேன். இவள அடிப்பேன் மிதிப்பேன் உதைப்பேன். எவனாவது தடுத்தா அவனையும் மிதிப்பேன்! ஹெ! நீங்க பாவம் ஒண்ணும் தெரியாது. பொம்பளெ நம்பளுக்கு சொந்தன்னு பூப்போட் டுக்கும்படமுடியுமாங்க இவளெ இன்னும் ஒரு வாரம் படத்தெ வரஞ்சு முடிச் சு நீங்க சொன்னமாதிரி செலயும் செதுக்கி எடுத்திட்டிங்கன்னா எனக்கு ஒரு நாலாயிரம் ரூபா கிடைக்கும். இவளுக்கு இத்தனை ரூபா கிடைக்கும்?! இவளை எனக்கு வுட முடியாது! கோலாப்பூர்ல போய் ஒரு மிட்டாய் கடைபோட்டா யாபாரம் நல்ல நடக்கும். கும்புட்டு வுளுந்தா காரியம் ஆவுமா? வேண்ணா இவளெ வச்சுக்குங்க பணந்தானே? இவளுக்கு வேற எவன் பணம் தருவான்? இவுங்க அப்பனே தள்ளிவுட்றதுக்குத்தான் வரதட்சணைன்னு ஐநூறு ரூபாய் கொடுத்தான் வேற என்ன? கும்புடவெல்லாம் முடியாது" என்று கேலியாய்ச் சிரித்தான்.

மீரா மெல்ல எழுந்து மூடிக் கொண்டு முட்டாக்கு துணியால் மூடியபோது சிரித்தான் ஏகாப்ஜனா மணி நிறையத்தான் ஆகியிருந்தது. இனி இவனுடன் முக்க முக்க முழுக வேண்டும். வித்யாசாகரை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் இனியும் வித்தியாசாகரைக் காத்து எதிர்பார்த்தாள் என்பது அவருக்குத் தெரிந் தது. ஏகாப்ஜனாவுக்குத் தெரியவில்லை அது என்றாலும் "வர்றேங்க நாளை காலையில ஏழு மணிக்கே கொண்ணாந்து வுட்டுருவேன்' என்றபடியே மீரா வின் முன் கையில் பற்றி இழுத்துக் கொண்டு போனான். வாயில் வரைக்கும் இழுபட போகும் அவளைப் பச்சாதாபத்துடன் பார்த்த வித்யாசாகருக்கும் அவளை விடுதலை செய்ய வேண்டுமென்று தோன்றத்தான் இல்லை. யாருக்கு யார் யார் விடுதலை தரக்கூடும்? சுதந்திரம் விடுதலை போன்ற வார்த்தைகளை நம்புகிறவர் வித்தியாசாகர் அல்ல. மீரா மட்டுமா அடிமைச்சுகத்தில் இருக்கி றாள்? அவளை மீட்டெடுக்க முடியுமா? தன்னை மீட்டெடுக்கவே தவித்துக் கொண்டிருப்பவர் வித்யாசாகர் அவளை விடமாட்டான் ஏகாப்ஜனா? அவன் உறிஞ்சி எறியத்தான் அவள். அவன் தானும் மீதியாகி என்னவாகி எஞ்சப் போகிறான்?

அதன் பின்பு வினோதம் ஏழு மணி விடியலில் ஏகாப்ஜனா அவளைக் கொண்டு வந்து சேர்த்தான். அறுந்து விழுந்த திரைகளின் பின்னிருந்து பாய்ந்து வந்த மான்போல் தாவினாள் மீரா கண்கள் அவருக்காகவே விரிந்தன. ஒவி யங்களைப் பார்த்துப் பார்த்து மாய்ந்து போனாள் மீரா ஏகாப்ஜனா அவளை விட்டு விலகியதும் தாவிப் பாயும் மானை தாங்கத்தான் விலகி விலகி வடித் தார் வித்தியாசாகர் சிற்பத்துக்கான தயார் எடுப்பில் அவளைக் காத்து காத்து





________________

202 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

நின்று முன்பு ஒத்துழைக்காது கண்ணிரும் கம்பலையுமாய் நின்றவளா இந்த மீரா? திரைகள் அறுந்து விழவிழ நெய் போல வந்து வித்யாசாகரின் மார்பில் படிந்த இந்த பெண் மீரா அல்ல-புயல்

தனிமை கொண்டதும் வித்யாசாகர் அவளை எழுப்பினார். "வாண்டாம்மா பொண்ணே நான் கிழவன் இதெல்லாம் உதவாது. நான் செய்யிற வேலை கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவும். ஏகாப்ஜனா செத்துப் போவான். அவன் திரும்பி கோலாப்பூர் போகும்போது உன்னெ கொண்டு போகாம வுடுவானா? வாண்டாம். ரெண்டு நாள்ள அலுத்துப் போவும். ஸெக்ஸ்ங்கிறது இனிமேயா? பொண்ணுங்கிறது எனக்கு ராசியே இல்லெ வாண்டாம்.'

"நாம் போக மாட்டேங்க ஆமா" "ஏன்னது போக மாட்டியா? என்ன எழவு இது? ஏகாப் வுடுவானா? கொன்னுடுவான்." -

"கொல்லட்டும், அந்த மிருகத்தோட புரள இனிமே முடியாது மாட்டேன்." "மாட்டியா? அப்ப என்ன ஆவும் பாரு மீரா, உன்னெ வெச்சுகிட்டு நானு என்ன பண்ண? பாவம் ஏகாப் அவ்வளவுதானா?"

லேசாக சிரித்தபடி அவரையே பார்த்த பார்வை அவரை நுழைத்து அறுத் தது பார்ப்பவள் மீரா அல்ல லோகத்தின் ஈச்வரி சாயாத பொற்குடங்களும், மேடான தொப்புள் வட்டமும் நித சுடரச் சிற்றிடையும் சீரான துடைகளும் இருண்ட முக்கோணமுமாகிச் சிரிக்கும் தலைவி? லோகேச்வரி குருடாக்கும் ஒளியைப் பார்ப்பது போல மூர்த்தி சிறிதாகிப் போனார் வித்யாசாகர்.

இருண்ட வானத்தில் இருவரும் ஆகிபறந்து விடிந்தனர். மூலை முக்கோ ணத்தில் ஈஸ்வரியின் ஆழத்தை சுட்டும் சுடர் அவருக்குள் எழுந்தது. அதற்கு முன்பாகவே அவரைக் கட்டிக் கொண்டு இறுகினாள் மீரா முரட்டுத்தனமான நட்சத்திரங்கள் அவர் கண்களுக்குள் வெடித்தன. வித்யாசாகரின் ஒளி அகண்டு அவளை அள்ளிக் கொண்டது. ஒளி வெள்ளத்தில் சிதைந்து அவருடன் பிணைந்த அந்தப் பெண் ஈச்வரி அல்லாமல் வேறு யார் நரைத்த மார்பின் முடி களுக்குள் முலைகள் இரண்டு புதைந்து இறுகிச் சிதைந்து போனது. வித்யாசா கரின் கரங்களில் தேவி ஈச்வரியின் முழுச்சிற்பமும் மீண்டும் மீண்டும் செதுக் குண்டு ஆழ்ந்து அனல் சூளையில் வெந்து மலர்ந்தது. வித்யாசாகரின் வேதனை அவளெ எட்டவேயில்லை.

பெரியதொரு பூ அவரை அவளது அல்குல்லுக்குள் புகவிடாது மோதி எதிர்த்தது. இரண்டாம் முறையும் பூ எதிர்த்து மறைத்தது. ரத்த நாளங்கள் விம்மி விம்மி புடைத்தன. உடலை வாட்டி இறுக்கி நியமங்களை அலட்சியப் படுத்தி இஷ்டம் போல் அநுபவித்த உடல் அல்லவா வித்யாசாகரின் உட்ல் ஆயினும் சதை சதையாய்ப் பிளந்து மீராவின் உள்ளே குறியாகிப் புகுந்து மோதினார். அவள் அண்ட சராசரங்களும் உதிரக் கசங்கி வியர்த்து அழலானாள் மீரா. காட்டு மான்போல் அவர் மீதேறி பாய்ந்த அவள் சுகத்தை வாரி வாரி வழங்கி





________________

பூகோஸ் 203

யும் அவளது ஆழ்ந்த மலருக்குள் அவரால் கலந்து நுழைய முடியவில்லை என் பது கோரமாய் எதிர் கொண்டது. வித்யாசாகருக்கு ஒன்று புரிந்தது. இது இவ் வளவுதான் என்பதுதான். அது தொடர்ந்து விடாமல் முனைந்து முனைந்து பார்த்தார். அவருக்கு தடை முதுமையில்லை. ஆயினும் ஏதோ குறுக்கில் வளர்ந் திருக்கிறது என்பது நிச்சயமாய் தெரிந்தது. அதுவும் கதையாய் எதிர்த்தது மோத லுக்கு விரிவதாய் தெரியவில்லை. மீராவின் துணிச்சலும் அவள் உடம்பின் முழு வலுவும் வெளிப்பட்ட நேரம் இது ஆனாலும் கூட அவரது மனம் எங்கோ வாலடித்துப் பறந்தது.

மீராவிடவேயில்லை. அவரைத் தழுவி இயக்கினாள். அவருக்கு தெரியாத வித்தைகளையெல்லாம் வித்யாசாகருக்குச் சொல்லிக் கொடுத்து வழங்கிய விசித்திரம் அவருக்கே நம்ப முடியவில்லை. அவளது உயர் நிலைக்குறிக்குள் பூத்த அந்த பூவை வித்தியாசகரின் ராட்சதக் கலவியில்தான் உணர்ந்தாள். அவர் வழுவிப் பிரிய முயன்றபோது மீரா வித்யாசாகரை முறுக்கித் தழுவி தழுவி பாய்ந்து. வியர்வை ரத்தமாய் வடிய வடியப் பாய்ந்து மோதி மோதி.

வித்யாசாகர் வெகு நேரம் அவளை மிருகம்போல் இணக்கி மடக்கி முழு வதுமாய் வீழ்த்த வெகு பாடுபட்டார். இப்போது கோஸ் பூமிருதுவாகி உணர்ச் சியில் ஆழ்ந்து மிருதுவாகியது என்பது அவருக்குப் புரிந்தது. மறுபடியும் முனைந்தபோது கண்ணிர் மீரா ஈச்வரியாய் உலகின் கொடுமுடிகளில் மேலே பறந்தாள். திகிலான சந்தோஷமும் அதிர்ச்சியான பயமும் கொடுரமான திருப் தியும் ஏற்பட்டது. ரத்தம் கசிவதும் புரிந்தது அவளுக்கு மறுபடியும் மறுபடியும் அவர் மேல் புரண்டு கசங்கித்தான் எட்டினாள் மீரா வித்யாசாகரின் மூச்சு முட் டியது. வியர்வை ஆறாக புரண்டது. ரத்தமாக

அதே இரவில் - அன்று அவனுக்கு மறுத்து மறுத்து வித்யாசாகருக்குத் தந்த இது கோஸ் பூவாய் முன் தள்ளி வருவதன் விபரீதம் அவளுக்குத் தெரியாம லேதான் பிளந்தது. கால்களின் நடுவில் அல்குலின் ஆழத்தில் ஏதோ நெருடு வது புரிந்தது. ஏகாப்ஜனா நன்றாக குடித்து வெறித்திருந்தான். மீராவுக்குப் பய மும் கலவரமும் இன்னதென்றறியாத அசிங்கமான கோரமான கடந்த காலம் எல்லாம் எட்டாத ஒரு இருண்ட துக்கத்துக்குத் தயாராக நின்றாள். அவளது மென்மையும் தெய்வீக நுணுக்கமான பேரழகும் அர்த்தமற்றுப் போய்விட்டது. ஏகாப்ஜனா அவளை நிர்வாணமாக ஆக்கியபோது அவள் சங்கிலியில் கட் டுண்டு பொருந்தினான். அவளது மார்பகங்களின் வளைந்த எட்டாத பேரழகு ஏகாப்ஜானாவின் முரட்டு புனையலில் விரசமாகி விழுந்தது மாட்டேன் என்று மறுத்து உதறியும் ஏகாப்ஜனா விடவில்லை கோஸ்பூ எதிர்த்தது. ஏகாப்ஜனா விபரீதமான ஏமாற்றத்துடன் முறுக்கி வெறியுடன் மீராவின் அல்குலின் ஆழத் தில் புதைக்க பதிந்து பொருகினாள்.

வெகுநேரம் மிருகங்கள் முரண்டு பொருகின. இவனது அருவெறுப்பும் அவளின் அருவெறுப்பும் கோரமாய் மோதின. அவனைவிட பலம் மிக்க இளமை அவளுடையது. முண்டி முண்டிப் பார்த்தும் கோஸ் பூ வழி மறித்தது. கையாலாகாத வெறுமையில் எழுந்து அவளைப் போய் அறைய ஆரம்பித்





________________

204 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

தான். ஏன் அடிக்கிறோம் என்று தெரியாமல் அவளை அடித்து நொறுக்கினான். வித்யாசாகரின் நினைவோடு மிதிகளையும் அடிகளையும் கடுமையாக வாங் கிக் கொண்டு கிடந்தாள் மீரா அவள் பழகியது அப்படித்தான். கோஸ் பூவின் ஸ்பர்ஸ்த்தை விரல்களால் தடவியபடியே விரல்களை மீண்டும் மீண்டும் உட் செலுத்திப் பார்த்தாள். நாலே நாட்களில் கோஸ்பூ முட்டிக் கொண்டு வந்து அடைத்துவிட்டது என்பதே அவளுக்கே விபரீத கோரமாய் புரிந்தது. ஏகாப் ஜனா அவள் சொன்னதையும் கேட்காமல் காலை விரித்துப் பார்த்தபோது அவ னுக்கும் புரியத்தானில்லை. உள்ளே ஆழத்தில் கை விரல்களோடு விரிந்து வரும் பூ கோஸ் போன்ற ஏதோ ஒரு சதை வெண்படலம் அங்கு முழுமையு டன் வியாபிக்கிற வெறியோடு முளைத்திருந்தது. மறுபடி மறுபடி விலக்கிப் பார்த்துவிட்டு அவளை நோக்கி, "என்னடியிது? ஹ? நேத்து முந்தாநாள் எல் லாம் ஒண்ணுமில்லெ இப்பமட்டும் எப்படியிது? ஹ?" என்று மராத்தியில் கத் தியபடியே காலைத் தூக்கி கோஸ் பூவை மிதித்தான்.

ஆ வென்று அலறினாள் மீரா. மீண்டும் மீண்டுமாய் மயிரைப் பிடித்து நாலைந்து அறைகளை அறைந்து வாயில் ரத்தம் வடிய விட்டு உருட்டிவிட்டு ஏகாப்ஜனா கதவைத் திறந்து கொண்டு சாராயக் கடைக்கு நடந்தான்.

அடுத்த மூன்று நாட்களும் உடம்பின் எல்லா உபாதைகளையும் அநுபவிக்க வேண்டி வந்தது மீராவுக்கு இருண்ட பாதையில் ஒடிக் கொண்டே இருக்க முடி யுமா?

விடியற்காலை எழுந்து தனியாகவே வித்யாசாகரைப் பார்க்கப் போனாள் மீரா காலையில் நீண்ட ஜிப்பாவுடன் கையில் நியூஸ் பேப்பருடன் அரண்மனை சிவகங்கை தோட்டத்தின் வெளியே நின்ற அவரைப் பார்த்ததும் தாங்க முடிய வில்லை. சுற்றிலும் மறந்து மறைத்தது. யாரைப் பற்றியும் கவலைப்படாது கண் ணிர் சிதற ஓடிப்போய் வெட்கம் இழந்து அங்கேயே வித்யாசாகரை கட்டித் தழுவி கொண்டு தொங்கினாள். அவரது கரங்களும் மூன்று நாட்களும் இதற் காகவே காத்திருந்த பசித் தீயுடன் அணைத்து இறுகத் தழுவிக் கொண்டன. சுற் றும் முற்றும் இருவரும் பார்த்து பார்த்தபடியே முத்தம் உறிஞ்சினார்கள். அவளது தாபம் தணியவேயில்லை. வித்யாசாகருடன் வெறியுடன் கழுத்தை சுற்றி இறுகிக் கொண்டாள். முலைகள் இரண்டும்கூட இடைஞ்சலாய் எதிர்த்தன. அவைகளின் தீ அவரது கைகளுள் பொதிந்து கொண்டது. உடம்பு வழியே அவர் மனசுக்குள் சித்தம் ஏறுகின்ற விந்தை அவளுக்கும் நேர்ந்தது. பிதுங்கிய அவளைப் பரிவுடனும் உடம்பு கொள்ளா அன்புடனும் முத்தமிட்டு, "என்ன ஆச்சு? என்ன ஆச்சுடி மீரா?" என்று அவளது காதுக்குள் முணகியபடி நின்றார். மனசின் முண்டல்களும் மோதல்களும் இன்னொரு மனசின் இணக்கத்தில் தாங்கி தாங்கி கலப்பது புரிந்தது. பெருமூச்சுகளுடன் ரெண்டு பேரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள் ஆளர்வற்ற மெளனம் இன்னும் அவளை அவரை விட்டு பிரிக்கவில்லை. பிடுங்கித்தான் பிரிக்க வேண்டி வந்தது வித்யாசாகருக்கு அப் படியே அழலானாள் மீரா.





________________

பூகோஸ் 205

பெரிய ஆலமரங்கள் கிளிகளின் கீச்சொலிகளின் துரத்தல்கள் விரசமான இந்த அணைப்பும் முனகலும் அவர்கள் இருவருக்குமே போதுவதாய் இல்லை. ஆனால் வித்யாசாகர் கேட்டார் பறவைகளின் கூச்சலும் உறைத்தன. "ஆமா என்ன ஆச்சு? டாக்டர் வீட்டுக்கு கூட்டிகிட்டு போனானா ஏகாப் ஜனா'

"நான் அந்தாளோட எஞ்சயும் போகமாட்டேன்' "உங்கம்மா அப்பாகிட்டயாவது போயேன். இவன் கொல்றதுக்கு மிந்தி!" 'கொல்லட்டுங்க கொல்லட்டும் உங்க காலடில்ல சாவேன்ல? ஆமா!' "ச்சீ நான் இனிமே இங்க இருக்கப் போறிதில்லை! சிலை கண் திறந்து வுட் டுட்டா வேலை தீர்ந்தது எங்கிட்ட இருக்க பணமெல்லாம் ஒங்க ரெண்டு பேருக்குத்தான். பம்பாய்க்கு போய் பொழைச்சுக்குங்க. முரடன்தான் ஆனா ஏகாப்ஜனா நல்ல ஆம்பளை உனக்கு புடிக்காத வாழ்க்கைதான். என் வாழ்க்கை எனக்கும் தான் பிடிக்கவில்லை. யாருடைய வாழ்க்கைதான் திருப்தியா எல்லோ ருக்குமே புடிச்சவாழ்க்கையா இருக்கு? நானும் என்னோட வீடு வாசல் குடும் பம் மனைவி பொண்டாட்டி எல்லாத்தியும் வாரித் துத்திபுட்டு மண்ணுல எறங்கி நடந்தவன்தான். டாக்டர்கிட்ட போயி புள்ளெ இல்லியே இது ஏன் இப் படி இருக்கு? அப்படின்னு ஒடம்பெக் காட்டி சரி பண்ணிகிட்டின்னா போதும். நானு இப்புடி தெருவோரமாதிரிஞ்சிகிட்டே போயிடுவேன். இன்னும் ரொம்ப நாளு இல்லடி மீரா ஒன்னெ மறக்க மாட்டேன் போய் சேந்துடுவேன் கெழவன வுட்டுட்டு போயிதொலை இதெல்லாம் அசிங்கம்!"

"அசிங்கமா?' என்று கண்ண அகட்டி அவரையே உற்றுப் பார்த்தாள். "நீங்கோ என்னா சாமியாரா இல்லெ பகவானா? நீங்கோ சொல்றதல்லாம் கேக் கறதுக்கு இனிமே ஒங்களெவுட்டு நானு போறதா இல்லெ அசிங்கமா இருந்தா இருக்கட்டும். மூணு நாளா அவன் என்னெப் போட்டுப் போட்டு துவச்சி எடுக் கிறான். இன்னக்கி டாக்டர் அம்மா கிட்ட போயி காட்டுனோங்கோ'

"அப்புறம்?" "எனக்கு புத்துநோயாம் ஆப்ரேஷன் ஒண்ணும் பண்ண முடியாதாம்ல்லெ உதடு கிழிஞ்சாப்ல ரெண்டு பக்கமும் பெரிசா பூகோஸ் மாதிரி வளர்ந்திருக்கு. வலி உயிர் போவது புருஷங்காரரு இன்னும் போட்டு மிதிக்கிறான். அதுலியே மிதிக்கிறான்'

-

"என்ன பேசச் சொல்றே மீரா? பேசறதுக்கு என்ன இருக்குங்கறே? ஒன் னால, எனக்கோ அல்லது என்னால ஒனக்கோ எந்தவிதமான நன்மையும் கிடை யாது. எதுக்கு துடிச்சமோ அதுவும் ஆய்ட்டுது. இந்த உடம்ப பத்திரமா நானு யாருக்கும் குடுக்க வேண்டியதில்லெ ஏகாப்ஜனா தராத, எதையும் நான் ஒனக்கு புதுசா தந்திறல. ஏதோ நான் பெரிய இவன்’னு நெனச்சிகிடற. ஒனக்கு





________________

206 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

கேன்சர் ஆதரவில்லாமெ ஒன்னை என்னோட அழச்சுகிட்டு ஒன்னையும் சீர ழிக்க நான் தயாரா இல்லெ. எந்த ஆம்பளையும் தரக்கூடியதுதான் இது வாங் கிக்கிறதுக்குத்தான் நமக்கு தைர்யமில்லை ஏகாப்ஜனா என்னைவிட ரொம்ப நாள் உனக்கு உபயோகம் ஆவான். இந்த ஒலகம் நம்ப ரெண்டு பேரையும் சம் மதிக்காது. சம்மதிக்காட்டி கூட பரவாயில்லெ. வாழவுடாது. நம்மளை பழி வாங்கிவிடும்."

"நல்லா பழி வாங்கட்டும். நா விட்றதால்லெ, அவனோட கோலாப்பூர் போவமாட்டேன். ஓங்களோட வாழ்ந்துதான் சாவேன் டாக்டர் அம்மா சொல் லிடுச்சு இன்னும் ஒரு வருஷமோ ஒன்னர வருஷமோ உயிரோட இருக்கப் போற, ஒரு வேளை மூணே நாள்ள கூட கோஸ் பூ குலை தள்ளிடுச்சுன்னா அநேகமா அப்பவே சாவும் இருக்கும். நீங்க எனக்கு காட்டின ஆசையும் ஒடம் பையும் விட நீங்க காட்ன இந்த ஆகாயம், இந்த சூரியன், யாராலியும் அடக்க முடியாத அடங்க அவசியமில்லாத காத்து, தண்ணி, இன்னும் ராத்திரி முழு இருட்டான வெட்ட வெளியான ராத்திரி. யாருடைய இம்சையும் இல்லாமெ தன்னந்தனியா உயிரோட நானே - எனக்கே எனக்க வாழக் கத்து தந்த நீங்க இதெல்லாம் எவ்வளவு பெரிசுன்னு உங்களுக்கு தெரியாதுங்க படுத்து-ஒருத் தர் மேலே ஒருத்தர் ஏறி, கடிச்சு, நக்கி, ஒருத்தர ஒருத்தர் மிதிக்கிறதா சந்தோ ஷம்? வாழ்க்கை கடவுள்? நீங்க என்ன காப்பாத்திட்டீங்க ஆனா, நீங்க சொல்ற மனுஷன், கடவுள் என்னை வாழவுட மாட்டாங்க" என்று மிருதுவான குரலில் சொல்லிக் கொண்டே போனாள். மேலே அவள் பேசியது எதுவும் காதில் விழவில்லை. அவர் எதை வேண்டாமென்று சொல்லிக் கொடுத்தாரோ அதையே தெரிந்து கொண்டு அவளை அகன்ற கண்களோடு பார்த்துக் கொண் டிருந்தார். அவர் கண்களில் இருந்தும் கண்ணிர் வடிந்தது.

தெரு முனையில் சிவகங்கை பூங்காவின் வாசலில் ஆளரவமற்ற விடியற் காலை ஏழுமணி பனியில் விதியை நாலு சுக்காக கிழித்து அந்த கோஸ் பூவை வெட்கம் ஏதுமின்றி இறுகக் கட்டி அணைத்து அந்த பூவின் உள்ளே நுகர்ந்தார். அவருக்கு மட்டும்தான் அந்த கோஸ் பூ தேன் வடிக்கும். அந்தப் பூ மட்டும் தான் வித்யாசாகருக்கு ரத்தப் பூவாய் வழி திறந்து கொடுத்தது. அந்த பூ அவரை மட்டுமே ஏற்றுக் கொண்டது. அது அந்த பூவுக்கும் அவருக்குமே அதிர்ச்சி. காதல் நோயாகலாம், நோய் காதலாகக் கூடாதா? துரத்தில் லோகேஸ்வரி மீரா வின் அழைப்பு பூவாய் மலர்ந்து கொண்டிருந்தது. வானளாவ விரியும் அந்தப் புற்றுநோய் மலர் கடைசி வரை அவருக்கு மட்டுமே மணக்கும், ருசிக்கும், ரத் தம் சிந்தும்.

(குயுக்தம், 1994)