Pages

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .284-333 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .284-333  வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

ஆற்றில் குளிக்கவேண்டும்; கொஞ்சம் வில்வமும் துளசியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அவள் நேரே கோயிலை நோக்கி நடந்தாள்.

ஒரு சின்னக் குழந்தை - அதன் கையில் ஒரு சின்ன ஆட்டுக் குட்டி - திருவிழாக் கூட்டத்தில் வழி தவறிவிட்டது. குழந்தையின் அக்கா அதை மரத்தடியில் நிறுத்தி வைத்துவிட்டு ஆற்றில் ஸ்நானம் செய்யப் போயிருக்கிறாள். ஸ்நானம் செய்துவிட்டு வந்ததும் குழந்தையைக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லி இருந்திருக்கிறாள்.

மனிதனுக்குள்ளே ஒரு மனம் இருக்கிறது. அந்தப் பைத்தியக்கார மனம் நதியைக் கண்டால் கும்மாளம் போடத் தொடங்கிவிடும். திருவிழாவில் நிறைய அழகான இந்துப் பெண்களின் கூட்டம். அவர்கள் குளித்துவிட்டு நனைந்த உடையுடன் வெளியே வரும் போது, அந்த உடம்பைக் கருநாகம் போல் கொத்தவேண்டும் என்ற வெறி ஏற்படும்; அந்த அழகைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்காது மனசு.

கோபால்தியைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்துப் பையன்கள் திருவிழாவில் வாலண்டியர்களாகப் பணி செய்தார்கள்.

''ஜனங்களே, கள்ளங்கபடமில்லாமல் பழகுங்கள், சந்தோஷமாக. இருங்கள். ஆனால் விஷமம் செய்தால் கட்டி இழுத்துக்கொண்டு போய்விடுவோம்!"

வாலண்டியர்கள் தண்ணீர்ப் பந்தல் நடத்துகிறார்கள். கூட்டத்தில் தவறிப் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். பாட்ஜ் அணிந்துகொண்டு குதிரைமேல் இங்குமங்கும் சுற்றுகிறார்கள்.

ஓர் இளைஞன் ஒரு பெண்ணின் ஸ்தானத்தைக் கையால் அமுக்கினானாம். அவர்கள் அந்தப் போக்கிரியைப் பிடித்துவிட்டார் கள். அவன் லுங்கி அணிந்திருந்தான் ; கழுத்தில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண் டிருந்தான்; கட்கத்தில் ஒரு தடியை வைத்திருந்தான். ஆற்றங்கரைப் படித்துறையில் நல்ல கூட்டம். 'பழக்கமான பெண் தானே, அவளுடைய ஸ்தனத்தைத் தொட்டால் அவள் வெளியே சொல்லிவிட மாட்டாள்' என்று நினைத்திருக்கிறான் அவன். ஆனால் இந்துப் பெண்; அவளுடைய மானத்தைப் பொறுத்த விஷயம் இது. அவள் அசடுபோல் அழத் தொடங்கிவிட்டாள். இதை வாலண் டியர் ஒருவன் பார்த்துவிட்டான். அவன் அந்தப் போக்கிரியின் முடியைக் கையால் பிடித்துக்கொண்டு அவனுடைய பின்பக்கம் ஓர் உதை கொடுத்தான்.

இந்தச் செய்தி நெருப்புப் போல் திருவிழாக் கூட்டத்தில் பரவி விட்டது. யாருக்கும் எதுவும் சொல்லத் தைரியம் இல்லை. குதிரைகள் தர்கா நிலத்தில் புல் மேய்ந்து கொண் டிருந்தன. சாயங்கால 284மானதும் அவை மைதானத்துக்கு வரும். பரந்த மைதானம். தூரத். தில் சிவப்பு, நீலக்கொடிகள் பறந்தன. ஒரு குதிரை - மூடா பாடாவைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் குதிரையாக இருக்கலாம் - வெள்ளை நிறக் குதிரை அது - அம்புபோல் பாய்ந்து வந்துகொண் டிருந்தது.

ஜப்பரும் அம்புபோல் பாய்ந்து வந்தான். அவனுடைய ஜாதிக் காரன் ஒருவனை எல்லாரும் பிடித்துக்கொண்டு ஆபீஸ் கட்டிடத் துக்கு அழைத்துப் போனார்கள். அவனுடைய ஜாதிக்காரர்கள் தலையைக் குனிந்து கொண்டு அவர்களுடன் போனார்கள். யாருக்கும் வாய் திறந்து பேசத் துணிவில்லை. ஜப்பர் தாவிக்கொண்டு ஓடிக் கூட்டத்துக்குள் புகுந்து, ''எங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்க இவனை ?" என்று அதட்டிக் கேட்டான்.

"ஆபீசுக்கு" என்றான் ஒருவன். “ஏன், என்ன பண்ணினான் இவன் ?'' "ஒரு பெண்னோட ஸ்தனத்தை அமுக்கினான். '' *அமுக்கினா என்ன ?" என்று கேட்டுக்கொண்டே அவன் முன்னேறி வந்தான். அவனுடைய கோஷ்டியும் அவனைத் தொடர்ந்து வந்தது. ஆனால் அவர்களால் அந்த இளைஞனை அணுகமுடியவில்லை. அதற்குள் வாலண்டியர்கள் அவனை - அவன் பெயர் அன்வர் - ஆபீசுக்குள் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவன் மேல் அடிகள், உதைகள், குத்துக்கள் விழுந்தன. "பாவம், அன்வர்! உனக்கு என்னப்பா ஆசை! மலர்ந்த தாமரையைப் போன்ற அந்த அழகான ஸ்தனத்தைப் பார்த்து நீரில் நீந்தும் வெள்ளிமீனைப் பார்ப்ப தாகக் கனவு கண்டாயா? அந்த மீனைப் பிடிப்பதாக நினைத்து ஸ்தனத்தைப் பிடித்துவிட்டாயா ?''

சூரியன் அஸ்தமித்துக்கொண் டிருந்தான். பெரிய கூடாரத்தில் உயர் குடும்பப் பெண்கள் உட்காருவதற்காக ரத்தினக் கம்பளம் விரித்திருந்தது. அழகழகான ஆபரணங்கள் அணிந்திருந்தார்கள் அவர்கள். அவர்களுடைய முகங்கள் அம்மனின் முகம் போல் அழகாய் இருந்தன. வியப்பும் மகிழ்ச்சியும் கண்களில் மின்ன அவர்கள் குதிரைப் பந்தயம் பார்ப்பார்கள். ஆற்றில் வந்துகொண் டிருக்கும் ஆயிரக்கணக்கான படகுகளிலிருந்து வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் வந்து இறங்கிவிட்டால் திருவிழாவில் மகிழ்ச்சி புரண்டோடும்.

குதிரைகள் தர்காவிலிருந்து ஒவ்வொன்றாக வெளியேவர ஆரம்பித்து விட்டன. அவை முதலில் கனவான்களுக்குச் சலாம் செய்துவிட்டுப் பந்தய மைதானத்தில் இறங்கும். 'நாங்க வெகு தூரத்திலேருந்து வந்திருக்கோம். பந்தயம் ஓடி ஜயிக்க. பந்தயத்தை ஜயிச்சுட்டு நாங்க

285திரும்பிப் போயிடுவோம். நீங்க நல்ல மனசு உள்ளவங்க. உங்க மைதானத்திலே நாங்க பந்தயம் ஓடப்போறோம்!' என்று சொல்வது போல் குதிரைக்காரர்கள் தங்கள் தங்கள் குதிரைகளின் திறமையைக் காட்டத் தொடங்கினார்கள். சில குதிரைகள் தங்கள் காலைத் தூக்கி அங்கே கூடியிருந்த சிறு பெண்களுக்கு நடனம் ஆடிக் காண்பித்தன. இப்போது திருவிழாவில் இரண்டு கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. ஆபீஸ் கட்டிடத்துக்குள் இந்து இளைஞர்கள் கூடியிருந்தார்கள். வெளியே முஸ்லீம் இளைஞர்கள். போலீஸ் வந்துவிட்டது. போலீஸ் இந்துக்களின் கட்சியை ஆதரித்தது. சட்டம் இருக்கிறது ; தீர்ப்பு இருக்கிறது ; குற்றம் சாட்டப்பட்ட இளைஞனைப் போலீஸ் ஸ்டேஷ னுக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

ஆனால் யார் சொல்லி யார் கேட்பது ? முஸ்லீம்கள் ஆபீஸ் கட்டிடத்துக்குள் நுழைந்து அன்வரை மீட்க முயற்சி செய்தார்கள். இந்துக்களுடைய துப்பாக்கிகள் வெடித்தன. சற்றுத் தூரத்தில் நடன மாடிக் கொண்டிருந்த குதிரைகள் மிரண்டுபோய் மனம்போன போக்கில் ஓடத் தொடங்கின. அவரவர் எந்த எந்தப் பக்கம் ஓட முடியுமோ அந்த அந்தப் பக்கம் ஓடினார்கள். ஈசம் தர் மூஜ் விற்றுக் கொண்டிருந்தான். சோனா, லால்ட்டு, பல்ட்டு எல்லாரும் சர்க்கஸில் சிங்கம் புலி விளையாட்டைப் பார்த்துக்கொண் டிருந்தார்கள். பாண்டு வாத்தியம் ஒலித்துக்கொண் டிருந்தது. புலி தன் பாதத்தை நக்கிக் கொண்டிருந்தது. உயரே இருந்து தொங்கும் கம்பிகளில் சர்க்கஸ் செய்துகொண் டிருந்தாள் ஓர் அழகான பெண்.

அப்போது திடீரென்று அந்தத் துப்பாக்கிச் சத்தம் திருவிழா முழுவதும் இருளைப் பரப்பிவிட்டது.

கலகத்தில் இரண்டு பிணங்கள் விழுந்துவிட்டன. இருளில் தீவர்த்திகளின் வெளிச்சம் தெரிந்தது. பெண் கள் ஆபீஸ் கட்டிடத் துக்குள் வந்து சேர்ந்துவிட்டார்கள். தர்காவிலிருந்து குதிரைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. காஸ்தாரிகளின் கைகளில் தீவர்த்திகள். திருவிழா மைதானம் எங்கும் தீவர்த்திகள் எரிந்தன. இடையிடையே 'அல்லா ஹோ அக்பர்!' என்ற ஒலி எழுந்தது. ஆபீஸ் கட்டிடத்திலிருக்கும் இந்துக்கள் உரக்கக் கத்தினார்கள், 'வந்தே மாதரம்!' என்று.

யார் எங்கே சிதறிப் போனார்கள் என்று புரியவில்லை. ஈசம், சோனா, லால்ட்டு, பல்ட்டு எல்லாரையும் சர்க்கஸ் கூடாரத்தில் உட்கார வைத்துவிட்டுத் தர்ஜ் விற்கப் போயிருந்தான். சர்க்கஸ் முடிந்ததும் அவர்கள் ஈசம் இருக்கும் இடத்துக்கு வரவேண்டுமென்று ஏற்பாடு. கலகம் ஆரம்பித்ததுமே ஈசம் சர்க்கஸ் கூடாரத்துக்கு ஓடினான், நல்ல இருட்டு, மக்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்

286தார்கள். வழி தவறிப் போயிருந்த அந்தப் பையனையும் அவன் வைத்திருந்த ஆட்டுக் குட்டியையும் யாரோ கூட்டத்தில் மிதித்து விட்டுப் போய்விட்டார்கள். பாவம், அக்காவுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் பையன். அக்கா வந்ததும் அவளுடன் கோவி

லுக்குப் போகப் போவதாக நினைத்துக்கொண் டிருந்தான்.

ஓர் இளைஞன் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் நண்பகலில் நடந்தது. அது முதற்கொண்டே பல புரளிகள் பரவிக்கொண் டிருந்தன. ஜப்பர் தலையிட்டதிலிருந்து களேபரம் அதிகரித்தது. எல்லாரும் நினைத்தார்கள், 'திருவிழா, சந்தை என்றால் இதுமாதிரி ஏதாவது அசம்பாவிதம் நேரத்தான் செய்யும், பெரிய வர்கள் தலையிட்டு நிலைமையைச் சமாளித்துவிடுவார் கள்' என்று. ஆனால் இந்த ஜப்பர்! அவன் தன் ஜாதிக்காரர்களைப் பார்த்துக் கத்தினான் : "உங்களுக்கு மானம், மரியாதை கிடையாதா ? நீங்க இன்னும் எவ்வளவு நாள் தான் இந்தமாதிரி மாடா, குதிரையா வாயில்லாப் பூச்சியா இருக்கப் போறீங்க?''

சாமு சொற்பொழிவு நிகழ்த்தும் பாணியில் பேசினான் ஜப்பர். நிறையக் கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்குக் குஷி பிறந்து விட்டது. அவன் தன் பெரிய மனிதத்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காக, தான் நினைத்தால் என்னென்ன செய்யமுடியும் என்று காட்டுவதற்காக அன்வரை மீட்கும் முயற்சியில் இறங்கினான்,

அவன் தன் சகாக்களுடன் ஆபீஸ் கட்டிடத்துக்குள் நுழைய முற்பட்டபோது துப்பாக்கிகள் வெடித்தன. அவன் இதை எதிர் பார்க்கவில்லை. அவன் கண்முன்னே இரண்டு பேர் பிணமாகக் குப்புற விழுந்தனர். நெருப்புப் பற்றிக் கொள்ள எவ்வளவு நேரமாகும்? கலகக்காரர்கள் ஆளுக்கொரு தீவர்த்தியை எடுத்துக்கொண்டு வருவார்கள்; அவர்கள் இஷ்டம்போல் நெருப்பு வைப்பார்கள். அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்,

ஈசம் சர்க்கஸ் கூடாரத்தை நோக்கி ஓடினான் : "ஐயோ, போச்சு! எல்லாம் போச்சு!'' கூடாரம் சிதைந்து கிடந்தது. அதன் ஒரு பகுதி எரிந்துகொண் டிருந்தது. புலி, சிங்கங்கள் நெருப்பில் சிக்கித் தவித்துக்கொண் டிருந்தன. பக்கத்தில் யாருமே இல்லை. யாரோ எல்லாவற்றையும் சூறையாடிவிட்டுப் போனதுபோல் இருந்தது.

என்ன செய்வது என்று புரியவில்லை ஈசமுக்கு. ''அதிக டம்பமாக சோனாவைக் கூட்டிக்கொண்டு வந்தேனே! இப்போது என்ன செய்வது ?" என்று அவன் தவித்தான். ஆபீஸ் கட்டிடத்துக்குப் போகலாமா என்று நினைத்தான். ஆனால் ஆபீஸ் கட்டிடத்தை நெருங்கியபோது அவனுக்குத் தோன்றியது, இப்போது இருக்கும் நிலைமையில் அவன் லுங்கியை அணிந்துகொண்டு அங்கே போவது

28711111

10)

உசிதமல்ல என்று. அப்புறம் நினைவு வந்தது, மூன்று சிறுவர்களும் அந்தப் பக்கம் ஓடிவந்திருக்க மாட்டார்கள்; அவர்கள் அவன் தர்மஜ் விற்கும் இடத்துக்குத்தான் போயிருப்பார்கள் என்று. இந்த நினைவு வந்ததும் அவன் நிற்காமல் ஓடினான்.

திருவிழாக் கூட்டத்துக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. நாற் புறமும் நெருப்புப் பற்றி எரிந்தது. இந்த நெருப்பு எவ்வளவோ கால மாக மண்ணுக்குள் ஒளிந்துகொண்டிருந்தது. தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியை, அவமானத்தை வெகுகாலமாகப் பொறுத்துக் கொண்டு வந்த மக்கள் இப்போது பொங்கி எழுந்து அந்த அவமா னத்துக்குப் பழிவாங்குகிறார்கள். ஈசமுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவன் நெருப்புக் குவியல்களுக்கு நடுவில் நின்று கொண்டு கத்தினான், "சோனா பாபு! லால்ட்டு பாபு! நீங்க எங்கே இருக்கீங்க? நான் எப்படி ஊருக்குத் திரும்புவேன்? ஊரிலே எப்படி என் முகத்தைக் காட்டுவேன் ?"

அவன் பைத்தியம்போல் கத்திக்கொண்டே இருந்தான். கத்திக் கொண்டே இங்குமங்கும் ஓடினான் அவன். எங்கே பார்த்தாலும், உடைந்த கண்ணாடித் துண்டுகள். உடைந்த பல நிறக் கண்ணாடி வளையல் துண்டுகள் வழியில் சிதறிக் கிடந்தன. அந்த வழியில் ஒடும்போது அவை அவன் கால்களில் குத்தின. அதைப் பொருட் படுத்தவில்லை அவன். அவர்கள் மரத்தடியில் அவனுடைய கடைக் குப் பக்கத்தில் காத்துக்கொண் டிருக்கிறார்களோ, என்னவோ ? ஆனால் அங்கு அவன் வந்து சேர்ந்தபோது ஒருவரையும் காணோம். பெரிய பெரிய தர் மூஜ் பழங்கள் மட்டும் நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடந்தன. யாரோ அவற்றை வாரி இறைத்துவிட்டு ஓடிப்போயி ருக்கிறார்கள். அவற்றின் மேல் ரத்தக்கரை. அவனுடைய உடல் நடுங்கியது. அவன் வெறிபிடித்தவன் போல் கத்தினான், ''என்னோட ஆளுகளை இழுத்துக்கிட்டுப் போனது யாரு?''

திருவிழாக் கூட்டத்தில் யாரையோ கொல்ல முற்பட்டவன் போல் அவனும் ஓடத் தொடங்கினான். மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டு, “'சோனாபாபு. சோனாபாபு! எங்கே போயிட்டீங்க? கொஞ்சம் குரல் கொடுங்க. எங்கே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க, நான் தான் ஈசம், நான் உங்களை வீட்டுக்குக் கூட்டிக் கிட்டுப் போறேன். உங்களை வீட்டிலே கொண்டுபோய்ச் சேர்க் காட்டா என்னோட ஜாதி, மானம், கெளரவம் எல்லாம் போயிடும்!'' என்று கத்தினான்.

தர்காவிலிருந்த குதிரைகளில் பெரும்பாலானவை ஜப்பான் கட்சி யில் சேர்ந்து கொண்டு போராடின, எப்படி ஆரம்பித்த திருவிழா எப்படி ஆகிவிட்டது! கடை கண்ணிகள் சூறையாடப்பட்டன ;

288அலங்காரப் பொருள்கள் விற்கும் கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டங்கள் விற்கும் கடைகள், இரும்புச் சாமான் கடைகள் எல்லாம் நிர்மூலமாகிவிட்டன. இரண்டு மூன்று சர்க்கஸ் பெண் களைக் காணோம். பயத்தால் ஓடி வந்த மனிதர்கள் ஆற்றங்கரையில் குப்புற விழுந்தார்கள்,

தர்மூஜ் ஏற்றி வந்த படகுகளும், வீட்டுப் பாத்திரங்கள் ஏற்றி வந்த படகுகளும் ஆற்றில் நின்றிருந்தன. தண்ணீரிலிருந்து, "ஐயோ! ஐயோ!' என்ற ஓலம் கேட்டது. எல்லாரும் உயிருக்குப் பயந்து கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். குதிரைகளின் கால்களால் மிதிபட்டும் நெருப்பில் அகப்பட்டுக்கொண்டும் எவ்வளவு பேர் உயிர்விட்டார்கள் என்று சொல்வது கஷ்டம். இருகட்சியினருக்கும் சண்டை போட எங்கிருந்துதான் இவ்வளவு ஈட்டிகள், பாக்குமரக் குச்சிகள் எல்லாம் கிடைத்தனவோ ?

திருவிழா மைதானம் யுத்தகளமாகிவிட்டது. குளத்தின் இருகரை யிலும் இருட்டில் இரண்டு கட்சியினரும் தயாராக நின்றிருந்தார்கள், நள்ளிரவில் சண்டையைத் தீவிரமாக நடத்தும் எண்ணத்துடன்,

நடக்கப் போவதை மாலையிலேயே ஓரளவு ஊகித்துவிட்டான் ரஞ்சித். அவன் தன் சகாக்களுடன் ஆபீஸ் கட்டிடத்துக்குப் போய்ச் சேர்ந்தான். இப்போது சோனா, லால்ட்டு, பல்ட்டு, மாலதி எல்லா ரையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். திருவிழாவுக்கு வந்தால் மாலதி பெரும்பாலான நேரத்தைக் கோவிலில் தான் கழிப்பாள். கொஞ்சம் இடிந்த ஒரு மடத்தின் வாசலில் ஒரே கூட்டம். பூஜை செய்வதற்காகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்தாள் மாலதி. ரஞ்சித் அவளுடைய புடைவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு

கேட்டான், "சோபாவும் ஆபுவும் எங்கே ?'' என்று.

''அவங்க கோவில்லே இருக்காங்க." "அவங்களைக் கூட்டிக்கிண்டு சீக்கிரம் வா.” மாலதி ஒன்றும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தாள். ''தாமசம் பண்ணாமே சீக்கிரம் போ! நான் சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிட்டு வரேன். ஈசமுக்குத் தகவல் சொல்லணும். எனக்கு நிறைய வேலை இருக்கு. இங்கே கலகம் வரும்போல் இருக்கு." ரஞ்சித் வேகமாக நடந்தான். குளத்தின் இந்தப் பக்கத்தில் ஏராள மான வளையல் கடைகள் ; பூக்கடைகள் ; பழக்கடைகள் ; அவற்றுக் கப்பால் பொரிக் கடைகள் ; தின்பண்டங்கள் விற்கும் கடைகள், அவற்றைக் கடந்தால் திறந்தவெளி. கோபால்தியைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் அங்கே கூடாரம் அடித்துக்கொண்டு தங்கி யிருந்தார்கள். இந்த வெளியையும் கடந்தால் சிறியதும் பெரிதுமாக நிறைய சர்க்கஸ் கூடாரங்கள். ரஞ்சித்தான் சிறுவர்களுக்குச் சர்க்கஸ்

289

19டிக்கெட் வாங்கிக் கொடுத்திருந்தான். ஈசம் அவர்களைச் சர்க்க ஸக்குள் உட்கார வைத்துவிட்டு வந்தான். சர்க்கஸ் முடிந்ததும் அவர்கள் ஈசமின் கடைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று ஏற்பாடு.

ரஞ்சித்தால் அங்கு வெகுநேரம் தாமதிக்க முடியவில்லை. அங்கு அவன் தன்னைக் காட்டிக்கொள்ளக் கூடாது. எதிர்த்தரப்பினர் அவனைத் தேடிக்கொண் டிருந்தார்கள். அவன் சீக்கிரம் சர்க்கஸ் கூடாரத்தை அடைந்துவிட முயற்சி செய்தான்.

ஜிலேபிக் கடையிலிருந்து இனிய நறுமணம் வந்து கொண் டிருந்தது. அந்த மணத்தை நுகர்ந்தவர்கள் திருவிழா இன்னும் சற்று நேரத்தில் அலங்கோலத்தில் முடியும் என்று நினைத்திருக்கவே மாட்டார்கள். ரஞ்சித்தாலும் இன்னும் ஒரு சிலராலுந்தான் வரப் போகும் ஆபத்தை ஊகிக்க முடிந்தது. உடனே வீடு திரும்புவது தான் நல்லது என்று அவர்கள் எண்ணினார்கள்.

திருவிழாவுக்குச் சசீந்திரநாத்தும் வருவதாக இருந்தது. அவர் வந்திருந்தால் ஜப்பரை அடக்கியிருப்பார். ஜப்பருக்கு அவரிடம் ரொம்பப் பயம். காரணம் அவர் ஆபேத் அலியின் இன்பத்திலும் துன்பத்திலும் அவனுக்கு உறுதுணையாக இருந்தார். நடந்து கொண்டே இவ்வாறெல்லாம் நினைத்தான் ரஞ்சித்.

அவன் சர்க்கஸ் கூடாரத்துக்கு வந்தபோது அங்கே சர்க்கஸ் நின்றுபோய் விட்டிருந்தது. வரப்போகும் ரகளைபற்றிச் சர்க்கஸ்காரர் களுக்கும் தெரிந்துவிட்டது போலும்! அவர்கள் எல்லா விளை யாட்டுக்களையும் காண்பிக்காமல் சிங்கம், புலி முதலிய மிருகங்களை கூண்டுகளில் அடைத்துவிட்டார்கள்.

ரஞ்சித் சர்க்கஸ் வாசலில் மூன்று சிறுவர்களையும் பார்த்து, " நீங்க ஈசமோட கடைப்பக்கம் போகவேண்டாம். நான் உங்களை ஆபீஸ் கட்டிடத்துலே கொண்டுபோய் விட்டுடறேன், வாங்க!" என்றான், ரஞ்சித் அவர்களை அங்கே கொண்டுபோய் விட்டுவிட்டு ஈசமிடம் போய்த் தர்முஜ் பழங்களைப் படகில் ஏற்றச் சொல்ல நினைத்தான். ஆனால் அவனால் ஆபீஸ் கட்டிடத்துக்குப் போய்ச் சேரமுடியவில்லை. சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தான். துப்பாக்கிச் சத்தம், ஒரே களேபரம்! மனிதர்கள் கலகத்தில் அகப்பட்டுக்கொண்டு கொண்டிருந்தார்கள்.

ரஞ்சித் சற்றுப் பின்வாங்கினான். தான் சர்க்கஸ் வாசலில் இருப் பதாக மாலதியிடம் சொல்லிவிட்டு வந்தது அவனுக்கு நினைவு வந்தது. அவன் சர்க்கஸ் வாசலுக்குத் திரும்பி ஓடிவந்தான். அதற் குள் யாரோ கூடாரத்துக்குத் தீ வைத்துவிட்டார்கள். அவன் இந்தச் சிறுவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான்? மாலதியை

290இன்னும் காணோம். அவர்களைக் காணாமல் மறுபடி கோவிலுக்குத் திரும்பிப் போய்விட்டாளோ? இப்போதோ உயிருக்கு ஆபத்தான நிலைமை. எப்போது உயிர்போகும் என்று சொல்லமுடியாது. மாலதியைப் போன்ற ஓர் அழகான யுவதியை நினைத்து அவன் கவலையுடன் கோவிலை நோக்கி ஓடினான். சோனாவுக்கு ஒன்றும் புரியவில்லை, இதெல்லாம் ஏன் இப்படி ஆகிவிட்டது ? ஜனங்கள் வெட்டுக்கிளிக் கூட்டம் போல் ஆற்றுப்பக்கம் ஓடினார்கள். ஆபு ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு அழுவதைப் பார்த்துவிட்டுச் சோனா ரஞ்சித்துக்கு அவனைக் காண்பித்தான்.

"உன்னோட அத்தை எங்கே ?" என்று ரஞ்சித் ஆபுவைக் கேட்டான்.

பதில் சொல்லாமல் அழுதான் ஆபு. அவன் திருவிழாச் சந்தடியில் வழி தவறிவிட்டான் என்று ரஞ்சித்துக்குப் புரிந்தது. இனி மாலதியைத் தேடுவதில் பயனில்லை. அவனுடைய நெஞ்சு நடுங்கியது. இவர்களை ஒரு பத்திரமான இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தாலொழிய அவனுக்கு அமைதியில்லை. ஆனால் ஆபீஸ் கட்டிடத்தை அடைவது எப்படி ?

அவன் பின்பக்கம் திரும்பிப் பார்த்தபோது அங்கே நெருப்பு எரிவதைக் கண்டான். ஆற்றுப் பக்கம் போனால்தான் தப்ப முடியும். அங்கே அவர்களுடைய படகு - தர்ஜ் ஏற்றிவந்த படகு இருந்தது. அவன் அவர்களைக் கூட்டிக்கொண்டு அந்தப் பக்கமாக ஓடினான். நல்ல இருட்டாகிவிட்டது. எதிரில் வந்த மக்களை அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. இடையிடையே நெருப்பு ஜ்வாலைவிட்டு எரிந்ததால் ஒரு சில முகங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. கூட்டத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்திருந் தார்கள். எல்லாரும் பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடினார்கள்.

யாரோ படகை அவிழ்த்துவிட்டிருந்தார்கள். அது கரையைவிட்டு விலகிக் கொஞ்சதூரத்தில் மிதந்துகொண் டிருந்தது. ரஞ்சித் தண் ணீரில் குதித்துப் படகை நோக்கி நீந்தினான். அப்போது தண்ணீரில் ஏதேதோ மிதப்பதைக் கண்டான். நெருப்பிலிருந்தும் போக்கிரி களிடமிருந்தும் தப்ப முனைந்த மனிதர்கள்தான் நீந்திக்கொண் டிருந்தார்கள். சில படகுகள் அம்பு போல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. அவன் தாமதம் செய்யாமல் படகுக்குள் ஏறினான் அதில் யாரோ உட்கார்ந்திருப்பது நிழல் உருவமாகத் தெரிந்தது.

"யாரது?" என்று அவன் கேட்டான். பதில் இல்லை . "யாரு நீங்க?''

291பாjil'

அப்போது மறுகரையை நோக்கிப் படகைத் தள்ளிக்கொண்டு போய்க் கொண் டிருந்தான் ரஞ்சித்,

""நான் யாரைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போவேன் ?" என்று ஈசம் இந்தக் கரையில் புலம்பிக்கொண் டிருந்தான்,

மறுகரையை அடைந்து மண்ணில் ஓடிய சோனா தடுக்கிவிழுந்தான். தூரத்திலிருந்து - வெகு தூரத்திலிருந்து - தன்னை யாரோ கூப்பிடுவது அவன் காதில் விழுந்தது. "மாமா, என்னை யாரோ கூப்பிடறாங்க" என்று அவன் ரஞ்சித்திடம் சொன்னான்.

கீழே விழுந்த சோனாவைத் தூக்கி நிறுத்தினான் ரஞ்சித். அவன் சோனாவின் காதில், "பேசாதே! வேகமா ஓடு! பக்கத்திலே இந்துக்கள் குடியிருப்பு இருக்கு. ராத்திரி அங்கே தங்கியிருப்போம்" என்று கூறினான்.

மாலதியையும் கூட்டிக்கொண்டு இருட்டில் நடந்துபோகப் பயமாக இருந்தது அவனுக்கு. ஆகையால் இந்துக் குடியிருப்பில்

இரவைக் கழிக்கத் தீர்மானித்தான் அவன்.

ஈசமின் கூப்பாட்டு ஒலி கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து காற்றில் கலந்து மறைந்துவிட்டது. "சோனா பாபு, நீங்க எங்கே இருக்கீங்க? நான் தான் ஈசம். நான் யாரைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போவேன், சொல்லுங்க!'' என்று கத்தினான்.

ஆற்றின் மறுகரையில் யாரோ தன்னைப் பெயர் சொல்லித் திரும்பத் திரும்பக் கூப்பிடுவது போல் இருந்தது சோனாவுக்கு, யாரோ அவனைத் தேடுகிறார்கள்! கூப்பிடும் குரலை அவ்வளவு தொலைவிலிருந்து இனம் கண்டுகொள்ள முடியவில்லை அவனால். அவன் பயந்துபோய் ஓடினான். அவனைக் கூப்பிடுவது இராப் பிசாசோ என்னவோ? ஆமாம், இராப் பிசாசுதான் அவனைக் கூப்பிடுகிறது!

திருவிழாக் கலகம் திருவிழாவிலேயே முடிந்துவிட்டது. கடைசியாக ஊருக்குத் திரும்பியவன் ஈசந்தான். அவனுடைய முகம் வறண்டு, ஜீவன் இல்லாமல் இருந்தது. உயிர் அவனுடைய உடலிலிருந்து விடை பெற்றுக்கொண்டு விட்டதோ என்று தோன்றியது. அவனு டைய புலம்பலும் கூப்பாடும் ஓயவில்லை. ஏதோ ஒரு பச்சிளங் குழந்தையைக் கொன்றுவிட்டவன் போல அவனுடைய கண்கள் இருண்டு கிடந்தன, ஈசம் ஏரி கரையில் உட்கார்ந்து புலம்பிக்கொண்

294டிருப்பதாக யாரோ வந்து செய்தி தெரிவித்தார்கள். இதைக் கேட்டு ஏரிப்பக்கம் ஓடினார் சசீந்திரநாத்.

திருவிழாக் கலகம் இந்தப் பக்கம் பரவி வரவில்லை. அது இரவிலேயே அடங்கிவிட்டது. ரூப்கஞ்சிலிருந்தும் நாராயண் கஞ்சி லிருந்தும் போலீஸ் படை வந்து அடக்கிவிட்டது. பெரிய மனிதர்கள் ஒன்றுகூடி எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண் டார்கள். ஒரு வழியாக இந்தத் தடவை கலகம் ஓய்ந்தது என்று நிம்மதியடைந்தார்கள் அவர்கள். செய்தி கேட்டு டாக்காவிலிருந்து ஓடிவந்தான் சாமு. அவன் ஏரிக்கு அருகில் வந்த சசீந்திரநாத்தைப் பார்த்து, ''எங்கே போறீங்க ?" என்று கேட்டான்.

"ஈசம் ஏரிக்கரையிலே உட்கார்ந்திருக்கானாம்." "அதுக்குள்ளேயா? இன்னும் பொழுது விடியலையே!'' "'ஈசம் இன்னும் திருவிழாவிலேருந்தே திரும்பல்லியே! அவன் கலகத்திலே செத்துப் போயிட்டானோன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இரண்டு நாளா ஏரிகரையிலேயே உட்கார்ந்துக்கிட்டிருக்கான்னு இப்போ கேள்விப்படறேன்.''

சசீந்திரநாத் ஈசமைப் பலவந்தமாக ஏரிகரையிலிருந்து இழுத்துக் கொண்டு வந்தார். இப்போது அவனைப் பார்த்தால் அவன் தான் பழைய ஈசம் என்று சொல்லவே முடியாது. சிறுவர்கள் மூவரும் அவனுக்கு முன்னால் போய் நின்றார்கள். அவர்களைப் பார்த்து அவனு டைய உடல் நடுங்கியது. அவனுக்கு ஆறுதல் ஏற்படவில்லை. அவர்கள் உயிருடன் திரும்பியிருப்பார்கள் என்று நம்பவே முடிய வில்லை அவனால். அவன் அவர்களுடைய தலையை, முகத்தைத் தொட்டுப் பார்த்தான். "பாபு, பாபு, நீங்க பொழச்சி வந்துட்டீங் களா!" என்று உணர்ச்சி பொங்கக் கத்திவிட்டான் அவன்.

சசீந்திரநாத் அவனை அதட்டினார். "சரி, சரி! எழுந்திரு! போய் ஸ்நானம் பண்ணிச் சாப்பிட்டுத் தூங்கு! நீ இன்னிக்கு வயலுக்குப் போகவேண்டாம். நீங்க போங்க! அவன் கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக்கட்டும்'' என்று சொல்லிச் சிறுவர்களை அங்கிருந்து அனுப்பினார். அவர்கள் நகராவிட்டால் ஈசம் நாள் முழுதும் அவர் களுக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு ஏதேதோ புலம்பிக் கொண்டே இருப்பான், பைத்தியம் பிடித்தவனைப் போல.

திருவிழாவிலிருந்து வந்த பிறகு மாலதியும் ஏதோ பயத்தால் பீடிக் கப்பட்டவளாகக் காலங் கடத்தினாள். இருட்டிவிட்டால் அவள் தன் அறையைவிட்டு வெளியே வருவதில்லை. அறைக்குள் ஒரு சிம்னி விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். இரவில் சோபா, ஆபுவைத் தன்னுடன் அணைத்துக்கொண்டு ஏதேதோ கெட்ட கனவுகள் கண்டுகொண் டிருப்பாள். சில சமயம்

295அவளுக்குச் சொல்லத் தோன்றும், ''சாமி, கடவுளே! இனிமேல் என்னாலே தாங்க முடியாது!''

அவளுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை ; அறைக்கு வெளியில் யாரோ கிசுகிசுப்பதுபோல் தோன்றும். "'சாமி! என் நெஞ்சுக்குள்ளே எவ்வளவு வேதனைன்னு உங்கிட்டே சொல்லத் தெரியலே எனக்கு!''

ஆமாம், ஜாலாலியைப் போல் அவளாலும் அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது ஜ்வாலையாகப் பற்றிக்கொண்டு எரிந்தது. அவளுடைய கை ஜில்லிட்டுப் போயிற்று. கதகதப் பான ஸ்பரிசத்துக்காக ஏங்கினாள் அவள். அவளுக்கு ரஞ்சித்திடம், "டாகுர், என்னை எங்கேயாவது அழைத்துக்கொண்டு போய்விடு" என்று சொல்ல ஆசை. ஆனால் பொழுது புலர்ந்துவிட்டால், தோடார் பாக் மைதானத்தில் கோழிகள் கூவும்போது, சூரியன் கட்டாரி மரத்தின் இடுக்கு வழியே எட்டிப் பார்க்கும்போது இவை எல்லாம் அவளுக்கு மறந்துபோய் விடுகின்றன. அப்போது அவளுடைய மனம் அவனைப் பார்ப்பதற்காக, அவனைப் பார்க்க ஒரு சாக்கைக் கற்பனை செய்யத் துடிக்கும்.

ஒரு நாள் அவள் ரஞ்சித்திடம், "எனக்கு ஒரு கத்தி தரியா, டாகுர் ?" என்று கேட்டாள்,

"கத்தி எதற்கு ?" ""தாயேன்! மரக்கத்தியை வச்சுக்கிட்டு விளையாடப் பிடிக்கல்லே!" "ஒனக்கு இன்னும் கை சரியாப் பழகல்லே, பழகினப்புறம் கத்தி வாங்கித் தரேன்."

அவளுக்குச் சொல்லத் தோன்றும், 'எனக்கு இன்னும் கை பழக லேன்னு சொல்றியா ? நீ எனக்குக் கத்தி வாங்கிக் கொடு! நான் எப்படி விளையாடிக் காண்பிக்கறேன், பாரு!' அவளுக்குச் சாவுடன் விளையாடும் ஆசை ஏற்பட்டுவிட்டது.

இப்போது அமுல்யனின் போக்கிரித்தனமும் அதிகமாகியிருந்தது, ரஞ்சித் வந்தது முதற்கொண்டே அமூல்யனுக்கு வெறி அதிகமாகி விட்டது. அவன் ஒரு சரியான வாய்ப்புக்காகக் காத்துக்கொண் டிருந்தான். மாலதி வயல்வெளியிலோ அல்லது புதருக்கருகிலோ தனியாக அகப்பட்டுக் கொண்டால், அல்லது ஊரில் தெருக்கூத்தோ, கதாகாலட்சேபமோ நடக்கும் சமயத்தில் மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தால், அவளைக் கட்டிப்பிடித்துக் கடித்து விடுவான் போல் இருந்தது.

மாலதி வீட்டுக்குக் காவலாகப் படுத்துக்கொண்டிருப்பாள், கதவுப் பக்கத்தில் ஏதோ சப்தம் கேட்கும். "யாரது ? ஏன் பதில் பேசமாட் டேங்கறே? கதவைத் திறந்துகிட்டு உள்ளே வா ; சந்திரன் மாதிரி அழகு கொஞ்சம் உன் முகத்தைக் காண்பி!'' என்று நினைத்துக்

296கொண்டே அவள் சாவுடன் விளையாடத் தயாராயிருப்பாள். அப் போது தோன்றும், ஜப்பர் மரத்தடியில் நின்றுகொண்டு நோட்டீஸ் வினியோகம் செய்கிறான் ; ''மாலதி அக்கா, வந்தீங்களா?' என் கிறான். அவனுக்குப் பக்கத்தில் நிற்கும் ஆட்கள் பற்களைக் காட்டிக் கொண்டு அவளை வெறித்துப் பார்க்கிறார்கள்.

இந்தக் காட்சிகளை அவள் தன் மனக்கண்ணால் பார்க்கும்போது எல்லாம் ரஞ்சித்திடம் போய் நச்சரிப்பாள் : "எனக்கு ஒரு நல்ல, பெரிய கத்தியாக் கொடு, டாகுர் ! சூரியன் அஸ்தமிச்சப்புறம் என் நெஞ்சு பயத்தாலே உலர்ந்துபோறது."

கலகத்துக்குப் பிறகு இரவின் இருளில் கத்திப் பயிற்சி தொடர்ந் தது. மைதானத்துக்கு அப்பால் ஆள் இல்லாத இடத்தில் ஊர் மக்கள் ஒன்று கூடினார்கள். இப்போதெல்லாம் ரஞ்சித் இந்தப் பயிற்சியை மேற்பார்வை செய்வதில்லை. அவன் எங்கெங்கோ தூர இடங்களுக்குப் போய்விடுகிறான். எங்கே போகிறான், ஏன் போகிறான் என்று யாருக்கும் தெரியாது. வைத்தியரும் கோபாலுந்தான் இப்போது பயிற்சியைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

பால்குன் - சைத்ர மாதங்கள் கழிந்துவிட்டன. பைசாக மாதம் ரொம்ப உஷ்ணமாக இருக்கும். அப்போது நிலவு இருந்தால் காஸ் விளக்கு ஏற்றப்படுவதில்லை. மங்கிய நிலவொளியில் கத்திப் பயிற்சி நடக்கும். மாலதி சோபாவையும் ஆபுவையும் கூட்டிக்கொண்டு டாகுர் வீட்டுக்கு வருவாள். தனமாமியும் பெரிய மாமியும் அங்கே இருப்பார்கள். பால் வீட்டிலிருந்து சுபாஷின் அம்மா வருவாள். ஹாரான் பாலின் மனைவி வருவாள், சந்தா வீட்டுப் பெரிய பெண்கள் மதியும் கனியும் வருவார்கள். விளையாட்டில் சூடுபிடித்த பிறகு சோனா - லால்ட்டு - பல்ட்டுவின் ஆசிரியர் சசிபூஷண் எல்லார் கையிலும் ஊறவைத்த கொத்துக் கடலையும் வெல்லமும் கொண்டு வந்து கொடுப்பார். இந்தத் தேசத்தில் எந்த நேரத்திலும் உள்நாட்டுக் கலகம் ஆரம்பித்துவிடலாம். அவர் சரித்திர மாணவர். சுதந்தரம் வரும்போது இத்தகைய உள் நாட்டுக் கலகங்கள் நிகழ்வது வழக்கம் தான். அப்படி ஏதாவது நேர்ந்தால் தற்காப்புக்கு இந்தக் கத்திப் பயிற்சியும், சிலம்பப் பயிற்சியும் உதவும்.

எங்கேயோ யுத்தம் நடக்கிறது, பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பிராந்தியத்திலே வசிப்பவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரி யாது. நீர்வளம் நிலவளம் நிறைந்த பிரதேசம் இது. பஞ்சத்தில் அடிபட்ட மக்கள் வேறு இடங்களிலிருந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் தாம் சசிபூஷண். அவர் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக வேலைபெற்று அங்கு வந்தார். சோனா அவரிடம் சரித்திரக் கதைகள் கேட்பான் : டிராய் யுத்தம், அதில் வரும் மரக்

297குதிரை, கிரேக்கர்கள் டிராய் நகர வாயிலுக்கு வெளியே ஒரு பெரிய குதிரையை விட்டுவிட்டுப் போனார்கள். எவ்வளவு பெரிய குதிரை! நகரத்துச் சிறுவர்கள் அந்தக் குதிரையைச் சுற்றிச் சுற்றி வந்து, பாட்டுப் பாடிக் கும்மாளம் போட்டார்கள். சமுத்திர மணலில் நின்றது மரக்குதிரை, அதற்குள்ளே ஆயிரக்கணக்கான போர் வீரர்கள்!

மூடாபாடா ஜமீன்தாரின் மாளிகை நதிக்கரையில், அரண்மனை மாதிரி இருக்கும். நதிக்கரையில் நாணல் மலர்கள் மலர்ந்திருக்கும். நடுப்படுகையைக் கடந்தால் யானை லாயம். அங்கே எப்போதும் யானை கட்டப்பட்டிருக்கும். அமலாவும் கமலாவும் ஜமீந்தார் வீட்டுப் பெண்கள். கமலாவுக்குச் சோனாவின் வயது. அவர்கள் கல்கத்தா வில் வசித்தார்கள். பூஜா சமயத்தில் அவர்கள் மூடாபாடா வருவார்கள். டிராய் நகரத்து மரக்குதிரை நினைவுக்கு வரும்போதெல் லாம் சோனாவுக்கு ஏனோ மூடாபாடா யானையின் ஞாபகம் வரும்; அமலா, கமலாவின் நினைவு வரும்: அரண்மனை போன்ற ஜமீன்தார் மாளிகை ஞாபகம் வரும்.

இந்தக் கதையைக் கேட்கும்போதெல்லாம் சோனாவுக்கு இன்னொரு ராஜாவின் ஞாபகம் வரும். அது அவனுடைய அப்பா சொன்ன

கதை .

ஒவ்வொரு வருஷமும் பூஜைக்கு அவனுடைய தமையன்மார் இருவரும் மூடாபாடா போவார்கள். அவனைப் போகவிடமாட் டார்கள். ஆனால் இந்தத் தடவை, திருவிழாவிலிருந்து வந்த பிறகு அவனுக்குத் தோன்றியது, அவனையும் மூடாபாடா போக அநுமதிப் பார்களென்று.

ஜமீன்தார் வீட்டு யானை, சீதாலக்ஷா ஆறு, யானை லாயமிருக்கும் மைதானம் - அவன் ஆற்றங்கரையில் நின்றுகொண்டு நீராவிப் படகுகள் ஆற்றில் செல்வதைப் பார்ப்பான். அவற்றில்தான் எவ்வளவு விளக்குகள் ! அந்த வெளிச்சம் ஆற்றுத் தண்ணீரின் மேலெல்லாம் பரவி, ஆற்றின் இருகரைகளிலுமுள்ள புல்லையும், நாணல் காட்யுைம், ஆற்று மணலையும் சிறிது நேரத்துக்கு ஒளிவெள்ளமாகத் திகழச் செய்கிறது. திருவிழாவிலிருந்து திரும்பியது முதல் சோனாவுக் குப் பெரியவனாகி விட்டதாக நினைப்பு. இந்தத் தடவை துர்க்கா பூஜை பார்க்க மூடாபாடா போவதற்கு அவனுக்கு அனுமதி கிடைத்துவிடும்.

சசிபூஷண் அதிகாலையில் எழுந்து பலகைக் கட்டிலில் உட்கார்ந்து கொள்வார். உடம்பை ஆட்டிக்கொண்டே ஏதேதோ புத்தகங்கள் ளெல்லாம் படிப்பார். சோனா நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு கால்களை ஆட்டியவாறே பாடப் புத்தகம் படிப்பான். கவனமாகப் படித்தால் கற்றுக்கொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிப்பதில்லை.

298மழைக்காலத்தில் பள்ளிக்கூடத்துக்குப் படகில் போகவேண்டும். சசிபூஷண் படகின் நடுவில் உட்கார்ந்திருப்பார். ஈசம் துடுப்பு வலிப்பான். அந்த வீட்டுச் சிறுவர்கள் மூவரும் கிராமத்தைச் சேர்ந்த இன்னும் நாலைந்து பையன்களுடன் படகில் ஆசிரியரையும் கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் போவார்கள்.

மழைக்காலம் வந்துவிட்டால் எங்கே பார்த்தாலும் அல்லி மலர்ந் திருக்கும். அப்போது இந்தப் பிராந்தியத்துக்குக் குதிரையோ யானையோ வராது. நெல் வயல்கள், சணல் வயல்கள், எங்கும் தண்ணீர். நாடே தண்ணீரில் முழுகிக் கிடக்கும். ஸ்படிகம் போன்ற தண்ணீரில் சிறிதும் பெரிதுமாக வெள்ளி மீன்கள் விளையாடும். நீலம் பச்சை வர்ணங்களில் சிறிதும் பெரிதுமாகப் பூச்சிகள் ; சில பூச்சிகள் மஞ்சளாகக் கூட இருக்கும். சூரியன் உதித்துவிட்டால் இந்தப் பூச்சிகள் இலைகளுக்கடியில் மறைந்திருக்கும்.

சோனா படகில் போகும்போது தங்க நிற வண்டுகளைப் பிடித்து ஒரு டப்பியில் போட்டு வைப்பான். ஒரு தடவை அவனுக்கு ஒரு விசித்திரமான பூச்சி கிடைத்தது. தங்க நிறம் ; பார்த்தால் நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் திலகத்தைப் போல் இருந்தது ; பூச்சி என்றே அதை அடையாளங் கண்டுகொள்ள முடியாது. அதன் நடுப்புறம் முத்தைப் போல் பளபளத்தது. முழுவதும் தங்க நிறம், ஓரம் மட்டும் கறுப்பு. காலே இருப்பதாகத் தெரியவில்லை. அவன் பாதிமாவுக்காக அந்தப் பூச்சியை டப்பிக்குள் எடுத்துவைத்தான். பாதிமா எப்போது வருவாள்? இப்போதெல்லாம் அவளை அதிகமாகப் பார்க்க முடிவதில்லை. மழைக்காலம் வந்துவிட்டால் நினைத்தபோது இந்தக் கிராமத்துக்கு வந்துவிட முடியாது பாதிமாவால்.

சோனா பள்ளியிலிருந்து திரும்பியதும் பூச்சியை எடுத்துப் பெட்டி யில் வைத்தான். மழைக்காலம் முடிந்ததும் அவன் அதை அவளு டைய நெற்றியில் திலகமிட்டு விடுவான்.

சோனாவின் இரண்டாவது பெரியப்பா மூடாபாடாவிலிருந்து படகை அனுப்பியிருந்தார். சிற்றப்பா அவனிடம் சொன்னார்: "நீயும் துர்க்கா பூஜை பார்க்கப் போ! ஆனால் அங்கே போய் அழக்கூடாது."

இந்தத் தடவை துர்க்கா பூஜை பார்க்க வெகுதூரம் போகப் போகிறான் சோனா. துர்க்கா பூஜைக்கான ஏற்பாடுகள் எங்கும் தொடங்கிவிட்டன.

மூடாபாடாவிலிருந்து வந்த படகிலிருந்து அலிமத்தி ஒரு பெரிய மீனைத் தூக்கிக்கொண்டு வந்தான். சோனா, லால்ட்டு, பல்ட்டு மூவரு மாகச் சேர்ந்து சிரமப்பட்டு அதைத் தூக்கிப் போய்ச் சமையல் அறையில் சேர்த்தார்கள். எவ்வளவு பெரிய மீன்! டாயின் மீன். அதைப் பார்த்த தனமாமிக்கும் பெரியமாமிக்கும் ஒரே ஆச்சரியம்.

299"அவ்வளவு பெரிய மீனைப் பார்த்துப் பைத்தியக்கார டாகுர் வீட்டு முற்றத்தில் குதிக்கத் தொடங்கிவிட்டார்.

''நானும் மூடாபாடா வரப்போறேனே!'' என்று சோனா லால்டுவிடம் சொன்னான்.

"நீ வரப்போறேன்னு யாரு சொன்னா ?" "சித்தப்பா ."

அம்மா சொல்லியிருப்பாள் என்று லால்ட்டு நினைத்தான். இந்தக் குடும்பத்தில் அம்மா சொல்வது எதுவும் நடப்பதில்லை. அம்மாவுக்கு ஓர் அதிகாரமும் இல்லை. ஆனால் பெரியப்பா சொல்லிவிட்டதால் சோனாவும் உண்மையாகவே மூடாபாடா வரப்போகிறான் ; யாரும் அவனைத் தடுக்கமுடியாது. இது பற்றி லால்ட்டுவுக்குச் சற்று ஏமாற்றந்தான். அவன் அங்கே போனப்பறம், 'நான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லி அழக் கூடாது தெரியுமா?' என்று சொல்லிச் சோனாவுக்கு அழகு காட்டினான். லால்டுவும் பல்ட்டுவும் இவ்வாறு சோனாவை இளக்காரம் செய்வது வழக்கந்தான். வீட்டிலேயே மிகவும் சிறியவன் என்ற காரணத்தால் சோனாவுக்குச் செல்லம் அதிகம். அதனால் அவன் மேல் அவர்களுக்கு எரிச்சல். சோனா மூடாபாடா வரமாட்டான் என்ற ஆறுதலாவது அவர்களுக்கு இதுவரை இருந்தது. இனி அந்த ஆறுதலுக்கும் வழியில்லை. இந்தத் தடவை சோனாவும் அவர்களுடன் வரப்போகிறான்.

வேறு நாளாக இருந்தால் சோனாவும் பதிலுக்கு லால்ட்டுவுக்கு அழகு காட்டியிருப்பான். ஆனால் இன்று அவனுக்கிருந்த மகிழ்ச்சி யில் அப்படிச் செய்யத் தோன்றவில்லை. அவன் துர்க்கையம்மனைப் பார்க்கப் போகிறான்! வெகுதூரம் பிரயாணம் செய்யப்போகிறான்! போய்ச் சேரவே ஒரு நாளாகிவிடும். எவ்வளவு ஆறுகளை, எவ்வளவு காடுகளை, வயல்களைத் தாண்டிக்கொண்டு போகப் போகிறான்! அவன் மகிழ்ச்சிப் பொங்கத் தன் தமையன்களை, "அண்ணா ! பெரியண்ணா!" என்று கூப்பிட்டுக்கொண்டு திரிந்தான்,

இப்போது அவன் ஒரு கெட்டிக்கார மாணவன். இப்போது அவனால் தனியாக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகமுடியும். சோள வயலில் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடப் பயப் படுவதில்லை அவன்.

தன மாமி சோனாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவனுடைய கண்களில் மைதீட்டி மையை நீளமாக இழுத்து விட்டாள். அழகான முகம் சோனாவுக்கு, அவனுடைய கண் தான் எவ்வளவு அழகு ! அவனுடைய வயதுக்கு உயரம் சற்று அதிகந் தான். உடம்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் சதைப்பற்று இருந்தால் அவனுடைய அழகு பசுமையான தீவைப் போல் கவர்ச்சிகரமாக

300இருந்திருக்கும். அவனுக்கு ஏற்கனவே பெரிய கண்கள். மையிட் டால் அவை இன்னும் பெரிதாகத் தெரியும். அவனுடைய நெற்றியின் ஒரு புறத்தில் விரலால் மையைத் தீற்றிவிட்டாள் தனமாமி; இடக் காலிலிருந்து கொஞ்சம் புழுதியை எடுத்து அவனுடைய தலையில் போட்டாள். கொஞ்சம் எச்சிலைத் துப்பிக்கொண்டு அதை அவனு டைய உடலில் தடவினாள். அதன் பிறகு அவனே மார்புடன் தழுவிக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். சோனாவுக்குக் குறுகுறுப்பாக இருந்தது. யாரோ அவனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல அவன் கலகலவென்று சிரித்தான்.

சோனாவுக்கு அவனுடைய பைத்தியக்காரப் பெரியப்பாவின் முகச் சாயல்தான். அழகு சொட்டும் உருவம். அவனுடைய தேக அமைப் பைப் பார்த்தாலே தெரியும், அவன் பிற்காலத்தில் நல்ல உயரமாக வளர்வான் என்று. தனமாமி அவனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்ச விரும்பினாள். ஆனால் சோனாவுக்கு ரொம்பக் கூச்சம். "நான் உன் இடுப்பிலே உட்காரமாட்டேன். எனக்கு வெட்கமாயிருக்கு" என்று அவன் சொன்னான்.

அருமைப் பிள்ளை தொலை தூரத்துக்குப் பிரயாணம் செய்யப் போகிறான். அவன் இன்னும் ஏழெட்டு நாட்கள் அவனைக் கட்டி யனைத்துக்கொண்டு படுத்துக்கொள்ள முடியாது. நினைக்கவே கஷ்ட மாக இருந்தது அவளுக்கு. "சரி, உன்னைப் படகிலே கொண்டுபோய் விட்டுட்டு வரேன்" என்று சொல்லி அவள் அவனைப் பலவந்தமாகத் தூக்கிக்கொள்ள முயற்சி செய்தாள்.

(சோனா அவள் தன்னைத் தூக்கிக்கொள்ள விடவில்லை. "உன்னைத் தூக்கி இடுப்பிலே வச்சிக்கணும் போல இருக்கே எனக்கு" என்று சொல்லிக்கொண்டே தனமாமி இரு கைகளையும் நீட்டி அவனைத் தூக்கப் போனாள்.

''சீ, என்ன சொல்றே அம்மா ? நீ ஏன் என்னை இடுப்பிலே வச்சுக் கணும்? நான் பெரியவனாகல்லியா?''

"அடேயப்பா ! சோனா - என்னோட சோனா - பெரியவனாயிட்டானா? அண்ணி, இங்கே வந்து கேட்டுட்டுப் போங்க, சோனா என்ன சொல்றான்னு! அவன் பெரியவனாயிட்டானாம்! இடுப்பிலே உட்கார்ந் துக்க வெட்கமாம்.''

படகுத் துறையில் படகு கட்டப்பட்டிருந்தது. சிறுவர் மூவரும் மூடாபாடா போகப் போகிறார்கள், துர்க்கா பூஜை பார்க்க, ஊரில் பிரதாப் சந்தா துர்க்கா பூஜை செய்கிறார். ஆனால் ஏதோ வழக்கு விவகாரம் காரணமாகப் பல வருஷங்களாக யாரும் அவர் வீட்டுக்குப் பூஜை பார்க்கப் போவதில்லை. பூஜை பார்க்க ஏங்கத்தானே செய் வார்கள் சிறுபையன்கள் ! ஆகையால் பூஜை வந்துவிட்டால்

301iiii

பூபேந்திரநாத் மூடாபாடாவிலிருந்து படகு அனுப்பிவிடுவார் அவர் களை அழைத்துவர்.

சோனா, லால்ட்டு, பல்ட்டு மூடாபாடா போகிறார்கள். அவர்களை அழைத்துப் போகிறான் ஈசம், இந்தச் சில நாட்கள் அலிமத்தி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வான். சில நாட்கள் ஈசமுக்கு விடுமுறை. அவன் இந்தக் கோஷ்டியுடன் போய்க் குஷியாகச் சுற்றித் திரிந்துவிட்டுத் திரும்பிவருவான். அவன் எல்லாருக்கும் முன்னால் படகில் போய் உட்கார்ந்தான். தான் உபயோகிப்பதற்காக முன்னதாகவே நல்ல நீளத் துடுப்பு, குட்டைத் துடுப்பு எல்லாம் பொறுக்கி வைத்துக்கொண்டான். பிறருடைய துடுப்புகளை உபயோ கிக்க அவனுக்குப் பிடிப்பதில்லை. பாயின் கயிறுகள் சரியாக இருக் கின்றனவா என்று பார்த்துக்கொண்டான். இது எவ்வளவோ சில்லறை வேலைகள். தூரதேசப் பிரயாணம், போய்ச் சேரவே ஒரு நாளாகிவிடும். ஹக்காக் குழாய், ஹக்காச் சட்டி இவற்றைக்கூடச் சரிபார்த்து எடுத்து வைத்துக்கொண்டான். பத்துக் கோச தூரம் போகவேண்டும். காலையில் புறப்பட்டால் போய்ச் சேர இரவாகி விடும். சுற்றுவழியே போகவேண்டும். ஆற்றிலும் ஏரியிலும் போகும் போது காற்று அடித்தால் பாயை விரித்துக்கொண்டு வேகமாகப் போகலாம். சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிடலாம்,

சோனா தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்தான். "தாத்தா, நாங்க பூஜை பார்க்க மூடாபாடாவுக்குப் போயிட்டு வரோம்" என்று கூறினான்.

தாத்தா சோனாவின் மோவாயைத் தேடிப் பிடித்துக் கையால் தடவினார், "அப்படியா !”

"தாத்தா, உங்களுக்கு என்ன வாங்கிக்கிண்டு வரணும்?'' என்று லால்ட்டு கேட்டான்.

அவர் பதில் சொல்வதற்கு முன்பே பல்ட்டு வேடிக்கையாக, 'கிலுகிலுப்பையும் ஊதலும் வாங்கிக்கிண்டு வரலாம்" என்றான்.

"பாத்தியா, பாத்தியா அம்மா, உன் புள்ளையை! எனக்குக் கிலு கிலுப்பையும் ஊதலும் வாங்கிக்கிண்டு வரானாம்!"

''அவன் சொல்றது சரிதானே! நீங்க சின்ன குழந்தை மாதிரி அழறீங்க! உங்களுக்கு ஒருத்தரும் சாப்பாடு போடலேங்கறீங்க."

"நான் அப்படிச் சொல்றேனா?" “சொல்றதில்லே ..?" "எனக்கு அப்படிச் சொன்னதா ஞாபகமே இல்லை." படகுக்குள் ஏறிக்கொண்ட பல்ட்டு அதன் முனையில் பைத்தியக் கார மனிதர் மெளனமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான், அவன் ஒருபோதும் அவரை அப்பா என்று அழைத்ததில்லை. அவனுக்கு

302எப்போதும் ஓர் அந்நியராகவே தோன்றினார் அவர். அவருடைய பைத்தியக்காரத்தனம் அவனுக்குச் சங்கடத்தை விளைவித்தது. அவன் பெரியவனாக ஆக அவர்தான் தன் தந்தை என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது அவனுக்கு. எதிலும் பட்டும் படாமலும் இருக்கும் வழக்கம் அவனிடம் தோன்றியது. அவரைச் சற்றுக் கட்டுப் படுத்தி வைத்திருக்க விரும்பினான் அவன். அவரை யாராவது இளப்பம் செய்தால் அவனுக்கு வேதனை ஏற்படும். இத்தகைய அவமானங்களிலிருந்து அவரைக் காப்பாற்ற அவன் ஆசைப் பட்டான். ஆனால் அவரைக் கட்டுப்படுத்தி வைக்க அந்தச் சிறுவனால் முடியுமா?

மெளனமாக, படகின் மேற்பலகையில் பத்மாசனம் போட்டுக் கொண்டு அவர் உட்கார்ந்திருந்தார்,

"நீங்க இறங்குங்க! நீங்க எங்கே போகப் போறீங்க?" என்று பல்ட்டு சொன்னான்.

பைத்தியக்கார டாகுர் பதில் சொல்லவில்லை, மெல்லச் சிரித்தார், பல்ட்டுவுக்குக் கோபம் வந்துவிட்டது. ''நீங்க இறங்குங்க! இறங் குங்கறேன்!''

அவர் சற்றும் அசையவில்லை, பேசவும் இல்லை, அவன் சொல்வதை பொருட்படுத்தாமல் தன் உடைகளைச் சரி செய்துகொண்டார். மேலே அணிந்துகொண் டிருந்த அரைக்கைச் சட்டையை இழுத்து விட்டுக்கொண்டார். கையாலேயே தலைமயிரைத் தடவிச் சரி செய்துகொண்டார். ""இதோ பார், நான் எவ்வளவு நன்றாகத் தலையை வாரிக்கொண் டிருக்கிறேன், எவ்வளவு நன்றாக உடுத்துக்கொண் டிருக்கிறேன்! இப்போது நான் உங்களோடு வரலாமே!” என்று சொல்வதுபோல இருந்தது, அவருடைய செய்கை. பிறகு அவர் மறுபடியும் யோகியைப் போலப் பத்மாசனத்தில் அமர்ந்தார். பல்ட்டு அவருடைய கையைப் பிடித்து இழுத்தான். ''இறங்குங்க! அம்மா! அம்மா ! ...ஆ ஆ !"

தன் அம்மா வந்தால் இந்தச் சச்சரவைத் தீர்த்துவைப்பாள் என்று நினைத்தவன்போல் அவன் தன் தாயைக் கூப்பிட்டான். ஆனால்

அவளைக் காணோம்.

ஈசம் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. இவர்களுடைய சச்சரவைக் கவனிக்காதவன்போல, பிரம்புப் புதரில் இருக்கும் குளவிக்கூட்டைப் பார்ப்பது போல அவன் வேறுபக்கம் பார்த்துக்கொண் டிருந்தான்.

"இறங்குங்க! படகு கிளம்பப் போறது!" என்றான் பல்ட்டு . யார் யார் பேச்சைக் கேட்பது ?

303 303சரத் காலத்துக் காலை நேரம்; குளிர்ந்த காற்று பயிர் வயல்களி லிருந்து மிதந்து வந்தது. ஆற்றில் படகுகளின் பாய்கள் தெரிந்தன. பாயை விரித்துக்கொண்டு கிராமபோனை முடுக்கி விட்டுக்கொண்டு யாரோ படகில் போனார்கள். ஸோனாலி பாலி ஆற்றின் மீன்கள் பயிர் வயல்களில் பாசியைத் தின்ன வந்திருந்தன. வயல்களுக்கு இருபுறமும் படிகம்போல் தெளிந்த நீர். சணல் அறுவடை முடிந்துவிட்டால் கிராமமும் வயல்களும் தண்ணீருக்கு நடுவில் தீவுபோல் தோற்றம் அளித்தது. நாற்புறமும் தண்ணீர் குளத்து நீர்போல் சலசலத்தது. வீடுகளும் வயல்களும் தண்ணீரில் மிதந்தன. வெகுநாட்களாக மணீந்திர நாத்துக்கு எங்காவது பிரயாணம் செய்ய ஆசை. மழைக்காலம் வந்துவிட்டால் அவர் கட்டுண்ட ராஜகுமாரனைப் போல் மருதமரத்தடியில் உட்கார்ந்து கிடப்பார், மூடாபாடாவிலிருந்து படகு வந்திருக்கிறது என்று கேட்டதுமே அவருக்கு ஒரு நீண்ட பிரயாணம் செய்ய ஆசை ஏற்பட்டுவிட்டது. அவர் உடனே தாம் உடுத்தியிருந்த ஆடைகளுடனேயே புறப் பட்டு வந்து படகில் ஏறி உட்கார்ந்துகொண்டு விட்டார். அழகாகத் தலைமயிரை வாரிக்கொண்டிருந்தார் அவர். கண்ணியமான மனிதர் போல மெளனமாகக் கள்ளங்கபடற்ற குழந்தை போல, அவர் உட்கார்ந்திருந்தார். அவர் இவ்வாறு அசையாமல் உட்கார்ந்திருப் பதைப் பார்க்கப் பார்க்கப் பல்டுவுக்குக் கோபம் அதிகரித்தது. அவன் அவரைப் பயமுறுத்துவதற்காக, "சித்தப்பாவை கூப்பிடட் டுமா?" என்று கேட்டான்,

மணீந்திரநாத் கெஞ்சும் பாவனையில் பிள்ளையைத் திரும்பிப் பார்த் தார். 'கூப்பிடாதே, குழந்தே! நான் சமத்தா உங்ககிட்டே உட்கார்ந்திருக்கேன்' என்று சொல்வது போல இருந்தது அவர் பார்வை, அவருடைய பார்வை ஓர் அபலைப் பிராணியின் பார்வையை ஒத்திருந்தது. அதில் ஓர் அலாதியான சோகம் கப்பியிருந்தது. ' நான் ஒரு பைத்தியம். எவ்வளவோ காலமாக நடந்துகொண் டிருக்கிறேன். அப்படியும் கோட்டைபோல் பிரம்மாண்டமான அந்த மாளிகையை அடைய முடியவில்லை!" இப்படியெல்லாம் அவர் பேச முயன்றார் போலும், "லால்ட்டுவும் சோனாவும் படகுக்குள் நுழைந்தார்கள். பல்ட்டுவின் சின்னச் சிற்றப்பா படகுத் துறைக்கு வந்ததும், "இன்னும் யாரு படகுக்குள்ளே ?'' என்று கேட்டார்.

மணீந்திரநாத் படகுக்குள்ளிருந்து கழுத்தை நீட்டிப் பார்த்தார். சாதுவான பையனைப் போல் வெளியே வந்து நின்றார். பிறகு படகி லிருந்து கீழே இறங்கி வந்தார். பெரிய மாமியும் தன மாமியும் கரை யில் நின்றிருந்தார்கள், படகு கிளம்பியதும் அவர்கள் வீடு

304திரும்பினார்கள். மணீந்திரநாத்தின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை, ஈசம் படகின் முனையில் நீரைத் தெளித்துவிட்டு, படகைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்ததும் மணீந்திரநாத் ஓடிவந்து படகில் ஏறப் பார்த்தார். பெரிய மாமி வழக்கம்போல் தன் இருகை களையும் விரித்து அவரைத் தடுத்தாள். "வாங்க, வீட்டுக்குப் போகலாம், வாங்க !" என்று அழைத்தாள். அவளுடைய முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. அப்படி என்ன வயதாகிவிட்டது அவளுக்கு ! முப்பது அல்லது முப்பத்து மூன்றுதான் இருக்கும். அவளுடைய முகத்தைப் பார்த்து வயதை மதிப்பிட முடியாது. அவளைப் பார்த்த மணீந்திரநாத் அதன் பிறகு அசையவில்லை, படகிலிருந்து கொண்டு சோனா பார்த்தபோது பெரிய மாமி அவரைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்க்கொண் டிருந்தாள். அவ னுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவன் உரக்கக் கூப்பிட் டான், "பெரியப்பா !” என்று,

மணீந்திரநாத் அவனுக்கு ஆசீர்வாதம் செய்வது போல் இரு கைகளையும் உயர்த்தினார். சோனா பலமாகக் கூவினான் : "தசராவிலே இருந்து உங்களுக்கு என்ன வாங்கி வரணும் ?"

அவருக்குச் சொல்லத் தோன்றியது. 'முடிஞ்சா எனக்குப் பழுப்பு நிறப் பசுவோட பால் கொண்டுவா. சீதலக்ஷா ஆற்றங்கரையிலே நாணல் பூப் பூத்திருக்குமே அதைப் பறிச்சு என் பேரைச் சொல்லிக் காத்துலே பறக்கவிடு. 'பாலின்'னு ஒரு பொண்ணு, அவ பேரைச் சொல்லிப் பூவைத் தண்ணீரிலே மிதக்கவிடு!"

ஆனால் அவர் ஒன்றும் பேசவில்லை. பெரிய மாமியும் மௌனமாக இருந்தாள். படகு சென்றுகொண்டிருந்தது. நெல்வயல்களைக் கடந்த தும் ஸோனாலி பாலி ஆறு வந்துவிட்டது. படகு ஆற்றுக்கு வந்த பிறகு ஊர் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. படகின் கூரைக் கடியில் உட்கார்ந்திருந்த சோனாவை, "என்ன பார்க்கறீங்க, சோனா பாபு ?" என்று ஈசம் கேட்டான்.

சோனா மெளனமாக இருப்பதைப் பார்த்து அவனால் சும்மா இருக்க முடியவில்லை.

சோனா கண்கொட்டாமல் ஏரி நீரைப் பார்த்துக் கொண்டிருந் தான். எவ்வளவு தண்ணீர்! கரையே கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கும் தண்ணீர்! இந்தப் படகு தண்ணீரை ஒரு நாளும் கடக்க முடியாது என்று தோன்றியது. ஒரே ஆச்சரியம் அவனுக்கு. இந்த ஏரியில் தான் ஆபேத் அலியின் பீபி முழுகி இறந்துவிட்டாள். இந்த ஏரியில் ஒரு மயில் படகு இருந்தது. தங்கப் படகு, காற்றே அதன் துடுப்பு. 'இந்தத் தண்ணிக்குக் கீழே தங்கப் படகு, மயில் படகு இருக்கே, அதை மேலே எடுத்துக்கிண்டு வருவீங்களா ?

305

20அதிலே நானும் பைத்தியக்காரப் பெரியப்பாவும் உட்கார்ந்துண்டு இந்த ஏரியைக் கடப்போம். அந்த மாதிரி படகு கிடைச்சா அந்தக் கோட்டைக்கே போய்ச் சேர்ந்துடலாம். அந்தப் பொண்ணோட கண் நீலமா இருக்கும், தலைமயிர் தங்கநிறமா இருக்கும்' என்று சோனா சொல்ல விரும்பினான் ஈசமிடம். தண்ணீரில் முழுகி அந்த மயில் படகை மேலே கொண்டுவர விரும்பினான் சோனா.

மாலதி அதிகாலையில் எழுந்து தன் வாத்துக்களையும் புறாக்களையும் கூண்டிலிருந்து வெளியே விடுவாள். பிறகு தன் மற்றக் காரியங் களையும் முடித்துவிட்டுச் சற்று நேரம் மெளனமாக வாசலில் நின்று கொண்டிருப்பாள். அதுபோலவே இன்றும் நின்றுகொண் டிருந்தாள். தூரத்தில் வாத்துக்கள் தண்ணீரில் மிதந்து கொண் டிருந்தன,

இரவு முழுதும் அவள் சரியாகத் தூங்கவில்லை. இரவில் யாரோ அவள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு இருட்டில் கிசுகிசுத்துக் கொண்டே இருந்தாற் போன்ற உணர்வு அவளுக்கு, கலகத்துக்குப் பிறகு அவளை எப்போதும் ஒரு காரணமற்ற பயம் ஆட்கொண் டிருந்தது. "உனக்கு எல்லாம் வீண்பிராந்திதான், உன்னை யாரு தூக்கிக்கிட்டுப் போகப் போறாங்க?'' என்று சொல்வாள், நரேன் தாஸின் மனைவி.

ஆகையால் தான் இரவில் கேட்ட கிசுகிசு ஒலியைப் பற்றிக் காலை யில் யாரிடமும் சொல்ல முடியவில்லை அவளால். பயம் காரணமாக அவள் உண்மையிலேயே தன் அறையைவிட்டு வெளியே வரவில்லை. இரவில் ஓரிரண்டு தடவை தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்திருப்பது அவள் வழக்கம். இப்போதெல்லாம் அவள் இரவு முழுதையும் விழித்துக்கொண்டே அறையை விட்டு நகராமல் கழித்தாள். அவள் இரண்டு மூன்று தடவைகள், "யாரு ? யாரு ?'' என்று கத்தினாள்,

மரத்தடியில் யாருடைய குரல் கேட்கிறது ? அவள் ஒரு தடவை படலைத் தூக்கி வெளியே எட்டிப் பார்த்தாள். கலகத்தில் பற்றிக் கொண்ட தீ தன் கண் முன்னே எரிவதாகத் தோன்றியது அவளுக்கு. அப்போது அவளுடைய உடம்பெல்லாம் நடுங்கும். பிறகு தோன்றும், இது ஒரு கெட்ட கனவுதான், உண்மையல்ல என்று.

வடக்குப் பக்கத் துறையில் ஜப்பர் நிற்பதை மாலதி இரண்டு மூன்று நாட்கள் கவனித்தாள். நரேன்தாஸ் அவனை விரட்டிவிட்டான், ''மியான், உனக்கு இங்கே என்ன வேலை?" என்று. "உன்னோட அப்பன் வந்தால் சொல்றேன்" என்று மிரட்டினான்.

ஜப்பர் அவனுடைய மிரட்டலைப் பொருட்படுத்தாமல் சிரித்தான். சிரித்துக்கொண்டே தன் தாடியைக் கையால் தடவிக்கொண்டான். அவனுடைய நீண்ட தாடியும் அவனும்! இப்போது அவனைப்

306:13:3

பார்த்தால் அடையாளமே தெரியாது. இப்போது ஒரு பெரிய மனித னாகிவிட்டான் அவன். அவன் தன் தாயின் சாவுக்குப் பிறகு வெகு நாட்கள் இந்த ஊரில் தங்கவில்லை. வேறொரு ஊரில் தறி வாங்கித் தொழில் செய்ய முயற்சி செய்தான். அவனுக்கும் அவன் தந்தைக்கும் இப்போது ஒரு சம்பந்தமும் இல்லை. ஆபேத் அலி மறுபடி நிக்காஹ் செய்துகொண்டு தன்னுடைய இடிந்த வீட்டைச் செப்பனிட்டு அதற்குப் புதுக்கூரை போட்டுக்கொண்டு விட்டான். தன் பீபியின் பாதுகாப்புக்காக வீட்டைச் சுற்றி வேலி போட்டுவிட்டான். அவனும் டைய புதிய பீபி கொலுசு ஒலிக்க, வீட்டுக்குள்ளே உட்கார்ந்திருப் பாள் அல்லது படுத்திருப்பாள். ஜப்பர் தன் தகப்பனைப் பொருட் படுத்துவதில்லை. அவர்களிடையே ஒரு நாள் தகராறு முற்றி, தடியடி கூட நேர்ந்துவிட்டது. ஜப்பர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது ஆபேத் அலிக்குப் பிடிக்கவில்லை.

ஜப்பர் இப்போதெல்லாம் ஊருக்கு வந்தால் ஆபேத் அலியுடன் தங்குவதில்லை; பேலு ஷேக்கின் வீட்டுக்குப் போய்விடுகிறான். அங்கேயே சில நாட்கள் தங்குகிறான். பேலுவின் பீபிக்கு அத்தர் வாங்கிக் கொடுக்கிறான். சந்தையிலிருந்து வாசனைத் தைலமும், பெரிய பெரிய இலிஷ் மீனும் வாங்கிக் கொண்டுவந்து நவாப் மாதிரி சில நாட்கள் பணத்தை வாரி இறைக்கிறான். ஜப்பர் வந்துவிட்டால் பேலுவின் பீபிக்கு ரொம்பக் கொண்டாட்டம். பேலுவுக்கு எல்லாம் புரிந்தது. அவன் 'மூதேவி!' என்று அவளைத் திட்டிவிட்டுத் தன் முடமான மணிக்கட்டைப் பார்த்துக்கொள்வான். அவனுடைய வலக்கைப் புண் சற்று ஆறி இருந்தது, ஆனால் இடக்கை மணிக்கட்டு இன்னும் வீங்கியே இருந்தது. கறுப்பாக, முதலையின் தோலைப்போல் சொரசொரப்பாகத் தோல் காய்ந்து கிடந்தது. கையில் ஒரு கறுப்புக் கயிற்றில் வெள்ளைச் சோழி கட்டியிருந்தான். தாரைப் போல் ஒரு கொழகொழா எண்ணெயைத் தடவித் தடவி அந்தக்கை கையாகவே இல்லை .

ஜப்பர் வந்துவிட்டால் பேலுவின் பீபி மகிழ்ச்சி பொங்க ஆடுவாள், பாடுவாள், உற்சாகமாக வளையவருவாள். அவனுடன் ஏதேதோ குசுகுசுப் பேச்சுப் பேசுவாள். அப்போது பேலு நாவல் மரத்தடியில் ஒரு கிழிந்த ஜமுக்காளத்தைப் போட்டுக்கொண்டு படுத்திருப்பான். அவர்கள் இருவரும் குலாவுவதைப் பார்க்கப் பொறுக்காவிட்டால் தன் கறுப்பு - வெளுப்புக் கன்றுக் குட்டியை இழுத்துக்கொண்டு அதை மேய்க்க வயலுக்குப் போய்விடுவான். அங்கே வெயிலில் நின்றுகொண்டு ஆத்திரம் தீரக் கத்துவான், "ராட்சசி! என்கிட்டே உனக்குப் பயமே இல்லே!" என்று.

307ஆனால் சில நாட்களாக அந்தப் பீபிகூட ஜப்பருடன் பேசுவது இல்லை. ஏன் இப்படி அவர்கள் இருவரும் திடீரென்று ஊமையாகி விட்டார்கள் என்று தெரிந்துகொள்ளப் போலுவுக்கு ஆசைதான். ஜப்பர் வந்துகொண்டிரா விட்டால் குடும்பத்துக்குச் சம்பாதித்துப் போடக் கஷ்டமாகிவிடும் பேலுவுக்கு.

ஒவ்வொரு நாள் ஜப்பர் நேரே மாலதியின் வீட்டு வாசலுக்கு வந்து கூப்பிடுவான், "அக்கா, இருக்கீங்களா?'' என்று.

மாலதி வெளியே வந்தால் அவன் அவளிடம், "உங்களுக்கு மாமனார் வீட்டுக்குப் போகணுமின்னு இல்லே? மாமனார் வீட்டுக்குப் போக மாட்டீங்களா, நீங்க ?" என்று கேட்பான்.

''அங்கே ஏன் போகணும்? அங்கே யார் இருக்காங்க எனக்கு ?'' "என்ன சொல்றீங்க நீங்க? உங்களுக்கு ஒருத்தருமே இல்லையா அங்கே ?"

மாலதியின் கண்களில் நீர் நிறைந்துவிடும். ஜப்பர் அவளைவிடச் சிறியவன். எவ்வளவு வயது சிறியவனாக இருப்பான் என்று யோசித்துப் பார்த்தாள் மாலதி. அவனுடைய முகம் அருவருக்கத்தக்கதாக இருந்தது. அவன் அந்தப் பக்கம் அதிகமாகச் சுற்றத் தொடங்கி இருந்தான். காலம், நேரம் பார்க்காமல் அவள் வீட்டு வாசல் வழியே போக ஆரம்பித்திருந்தான். இதனால் தான் இரவில் பயமாக இருந்தது மாலதிக்கு. அவனைக் கண்டதும் அவளுக்குச் சொல்லத் தோன்றியது, ''உன்னோட முழங்காலை முறிச்சுடுவேன்", அல்லது அந்த ஆளிடம் போய்க் கேட்கத் தோன்றியது, "டாகுர் ! எனக்கு ஒரு பெரிய கத்தி வாங்கித் தரியா ?" என்று.

ஜப்பரின் நினைவு வந்தாலே மாலதியின் உடல் ஒரு மாதிரி இறுகி விடும். அவள் அங்கே நிற்காமல் தீனபந்துவின் வீட்டு மரத்தடிக்குப் போய் அங்கே ஒரு மறைவான இடத்தில் நின்றுகொண்டு அந்த ஆளைத் தேடுவாள், ஊஹும், அந்த ஆளைக் காணோம்! தான் அங்கு எலுமிச்சை இலைகளைப் பறிக்க வந்தவள் போல் சில இலைகளைப் பறிப்பாள் மாலதி.

அவள் டாகுர் வீட்டு முன்னறையில் பார்த்தது அந்த ஆள் அல்ல; அவனுக்குப் பதிலாக அங்கே உட்கார்ந்திருந்தது சசிபூஷண்தான், அவர் ஏதோ சாமான்களை மூட்டை கட்டி வைத்துக்கொண் டிருந்தார். பள்ளிக்கூட விடுமுறை. ஆகையால் அவர் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த ஆள் - அவள் தேடிக்கொண்டிருந்த ஆள் - எங்கே போய்விட்டான் ? சாதாரணமாக இந்த நேரத்தில் இங்கேதானே இருப்பான்.

மேஜைமேலே ஒரே புத்தகக் குவியல். புத்தகங்களில் மூழ்கி இருப்பது அவன் வழக்கம். எங்கே போய்விட்டான் அவன்? மாலதி

30811

3113331

மேலும் தாமதிக்கவில்லை. இடுப்பில் தண்ணீர்க் குடம் இருந்தால் தயங்கத் தேவையில்லை. அங்கு வர ஒரு சாக்குக் கிடைத்துவிடும். ஆனால் எதையோ நினைத்துக்கொண்டே டாகுர் வீட்டு வாசலுக்கு வந்துவிட்ட பிறகு இனித் திரும்ப வழியில்லை. அவள் விட்டுக்குள் நுழைந்தாள். பெரிய மாமியும் தானமாமியும் துறையிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். வீட்டில் எல்லாரும் இருந்தார்கள், ரஞ்சித்தைத் தவிர. ரஞ்சித்திடம் ஒன்று சொல்லவேண்டும். அவள் இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் ரஞ்சித் ஒருவனிடந்தான் தெரிவிக்க முடியும். அவள் சோனாவைத் தேடினாள். சோனா இருந்தால் அவனைக் கேட்கலாம், 'அவனுடைய மாமா எங்கே?' என்று. சோனா, லால்ட்டு, பல்ட்டு ஒருவரையும் காணோமே!

பெரிய மாமி மாலதியைக் கண்டதுமே அவள் உள்ளுறப் பயந்து கொண்டிருப்பதை ஊகித்துக்கொண்டு விட்டாள். "உன் முகம் ஏன் இப்படி இருக்கு, மாலதி ? உனக்கு என்ன வந்தது ? உன்னை யாராவது என்னவாவது சொன்னாங்களா ?" என்று அவள் மாலதியைக் கேட்டாள்.

"என்ன நடக்கும்?" "உன்னைப் பார்த்தாலே தெரியறது, நீ ராத்திரி முழுதும் தூங்கல் லேன்னு!"

மாலதிக்கு வெட்கமாக இருந்தது. அவள் எவ்வளவோ சொல்லி இருக்கலாம், அவள் தூங்காமல் இருப்பானேன் ? அவள் ஒரு விதவை; யாருக்காகத் தூங்காமல் விழிக்கவேண்டும் அவள்? ஆனால் பெரிய மாமியின் பேச்சுக்குப் பிறகு, 'ரஞ்சித் எங்கே, அண்ணி?' என்று கேட்க முடியவில்லை அவளால்,

அவள் வெளியே வந்தாள். டாகுர் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பவழமல்லிகைச் செடிக்கருகே வந்து நின்றாள். செடி முழுதும் வெள்ளை மலர்களால் மூடியிருந்தது. பூப்பறித்துக்கொண்டு செல்ப வர்கள் அதிகாலையிலேயே பூப்பறித்துக்கொண்டு போய்விட்டார் கள். அதன் பிறகும் ஏராளமான பூக்கள் பூத்துக் கீழேயும் சிதறிக் கிடந்தன.

மாலதி ஏதோ நினைத்துக்கொண்டு பூப்பறித்துத் தன் மடியில் நிரப்பிக்கொள்ள ஆரம்பித்தாள். அவளுக்கு அந்த நேரத்தில் வேறு வேலை இல்லாதிருக்கலாம்; அல்லது அந்த இடத்தில் இன்னுங் கொஞ்ச நேரம் இருக்க அவளுக்கு ஒரு சாக்குத் தேவைப்பட்டிருக்கலாம். ரஞ்சித் இந்தப் பக்கத்தில் எங்கேயாவது இருந்தால் அவள் பூப்பறித்து முடிவதற்குள் அங்கே வந்துவிடுவான் என்று நினைத்து அவள் பூப்பறிப்பதாகப் போக்குக் காட்டினாள். அவளுடைய கொண்டை அவிழ்ந்திருந்தது. ஆபரணங்கள் அற்ற வெள்ளைப் புடைவை

309அணிந்திருந்த அவள் ஒரு பெண் துறவியைப் போல் தோற்றம் அளித்தாள், அவளுடைய தோள்கள்தாம் எவ்வளவு வாளிப்பாக இருக்கின்றன! இவ்வளவு வாளிப்பான தோள்களையும் உடம்பையும் வைத்துக்கொண்டு அவள் என்ன செய்யப் போகிறாள் ? இந்தக் கேள்வியைக் கேட்கத்தான் அவள் ரஞ்சித்தைத் தேடி வந்தாளோ?

''நான் என்ன செய்யவேண்டும் ?" வீட்டு வாசலில் ஏதோ காலடிச் சத்தம் கேட்டது. ரஞ்சித் வந்துவிட்டான் என்ற நினைப்பில் அவள் திரும்பிப் பார்த்தாள். சின்ன பாபு. அவருக்குப் பின்னால் அலிழத்தி. எங்கோ புரோகிதத் துக்குப் போகிறார் சின்ன பாபு, பூஜைகள், விர தங்களுக்கான பருவம் இது. துர்க்கா பூஜை - சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி பூஜைகள், தசமி பூஜைக்கப்புறம் சில நாட்கள் ஒரு வெறுமை. பூர்ணிமை வந்ததும் அது தீர்ந்துவிடும். அஸ்வின் மாதத்துப் பூர்ணிமை. இரவில் பூர்ணிமை நிலவு வெள்ளை வெளேரென்று பரவியிருக்கும். மாலதிக்கு அந்த நிலவில் என்னவெல்லாம் செய்ய ஆசை! நிலவில் தர்ஜ் வயலில் அவனுக்கருகில் மெளனமாக உட்கார்ந்து, இரண்டு கைகளையும் குவித்துக்கொண்டு அவனிடம் 'நான் பரிதாபத்துக்கு உரியவள், என்னை ஆற்றங்கரைக்கு அழைத்துப் போ! தண்ணீரில் படகைச் செலுத்து!' என்று சொல்ல ஆசை. தனிமையில் அவனுடன் ஸோனாலி பாலி ஆற்று நீரில் நீந்திக் களிக்க ஆசை!

அவள் ரஞ்சித்துக்காகக் காத்திருந்தாள். அவன் வரவில்லை, இரண்டு தடவை பெரிய மா மி அந்தப் பக்கம் வந்தாள். 'ரஞ்சித் எங்கே?' என்று அவளைக் கேட்க ஒவ்வொரு தடவையும் நினைத்தாள் மாலதி. ஆனால் கேட்க சங்கோசமாயிருந்தது. அவள் வாயைத் திறவாமல் மனசுக்குள்ளேயே கெஞ்சினாள், 'அண்ணி, அண்ணி! நான் நிஜமாப் பூப்பறிக்க வரல்லே, அண்ணி , நான்!'

''உனக்கு ஏதாவது சொல்லணுமா?" என்று பெரிய மாமியே கேட்டுவிட்டாள்.

""ரஞ்சித்தை எங்கே காணோம், அண்ணி ?" "அவன் டாக்கா போயிருக்கான்." "டாக்காவுக்கா?'' வியப்புடன் கேட்டாள் மாலதி. ''ஆமா. நேத்துச் சாயங்காலம் ஒருத்தன் வந்தான். நாடோடிப் பாடகன். இந்த வீட்டுக்குத்தான் நாடோடி, பைராகி மாதிரி யாராவது வந்துகொண்டே இருக்காங்க.. வருவாங்க, சாப்பிடு வாங்க. இங்கே படுத்துக்கிண்டு இராப் பொழுதைக் கழிப்பாங்க விடிஞ்சதும் தோணின திக்கிலே புறப்பட்டுப் போயிடுவாங்க. நேத்து. வந்தவனும் அந்த மாதிரி ஒரு ஆளாக்கும்னு நினைச்சேன். அடே யப்பா! ராத்திரிப் பூரா அவனும் ரஞ்சித்தும் ஏதோ குசுகுசுன்னு

310பேசிக்கிண்டே இருந்தாங்க. என்னதான் பேசினாங்களோ? ரஞ்சித் என்கிட்டே சொன்னான், 'நான் டாக்கா போறேன். எப்போ திரும்பி வருவேன்னு நிச்சயமில்லே ; திரும்பி வருவேனான்னும் நிச்சயமில்லே' என்றான்." மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டு போனாள் பெரிய மாமி.

அதற்கு மேலும் பெரிய மாமிக்கு முன்னால் நிற்க முடியவில்லை, அவளால். நின்றுகொண் டிருந்தால் அவளுடைய ரகசியம் வெளியாகிவிடும். அவள் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டாள். 'ரஞ்சித், நீ இப்படிப்பட்டவனா?' அவளால் பொறுக்க முடியவில்லை. எங்கேயாவது போய் விழுந்துவிடத் தோன்றியது அவளுக்கு.

அவள் புளியமரத்தைத் தாண்டி, குளத்தங்கரையில் நிழல் பரப்பிக்கொண் டிருந்த நாவல் மரத்தடிக்கு வந்தாள். இங்கு அவள் தயக்கமின்றி, ஆசைதீர அழலாம். யாரும் அவளைப் பார்க்க மாட்டார்கள். அவள் பூக்களைத் தண்ணீரில் எறிந்துவிட்டு அவை நீரில் மிதப்பதைப் பார்த்தவாறு நின்றாள். இரவின் இருளில் கிசு கிசுப்பது யார் ? 'டாகுர்! நான் எங்கே போவேன்?' மாலதி உரக்கக் கூவ விரும்பினாள், ஆனால் முடியவில்லை. ஏமாற்றத்தில் அவளது கண்கள் நீரைப் பொழிந்தன.

பிரியிலிருந்து படகைத் தள்ளிச் சீ தலக்ஷா ஆற்றுத் தண்ணீரில் இறக்கும்போது ஈசம் கூவினான், "எசமான் களா! ஜாக்கிரதையா உட்காருங்க. தண்ணியிலே விழுந்தா அடிச்சிக்கிட்டுப் போயிடும். பெரிய நதி, சீதலக்ஷா வந்துடுத்து."

பெரிய நதியின் பெயரைக் கேட்டதும் சோனா படகுக் குடிசைக்குள் போய் உட்கார்ந்துகொண்டான். இவ்வளவு நேரம் கூரைமேல் உட்கார்ந்திருந்த லால்ட்டுவும் பல்ட்டுவும் படகின் மேல்தட்டுக்கு இறங்கி வந்தார்கள். ஆற்றின் வேகத்தில் படகும் வேகமாகச் செல்லத் தொடங்கியது. படகு குறைந்த நேரத்தில் வெகு தூரம் வந்துவிட்டது. படகின் பாயைக் காற்று அழுத்தியதால் துடுப்பை உபயோகிக்க அவசியம் ஏற்படவில்லை.

ஆச்சரியம், படகு நதியில் இறங்கியதுமே மத்தளங்களின் ஒலியும் கேட்கத் தொடங்கியது. பூஜைக்கு ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன. நதியின் இருகரைகளிலும் மரஞ்செடிகொடிகள், பறவை கள் இவற்றினிடையே வரிசை வரிசையாக மாளிகைகளைக் கற்பனை

311செய்துகொண்டு உணர்ச்சி வசப்பட்டான் சோனா. ஏரி பூராவையும், சோனாலி பாலி நதியின் மணல்வெளி முழுதையும், கிராமங்களையும் வயல்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு பெரிய மாளிகை! அரண்மனை போல் எவ்வளவு பெரிய மாளிகை! அவனால் படகின் குடிசைக்குள் முடங்கியிருக்க இயலவில்லை. மண்டியிட்டவாறே வெளியே வந்த அவன் செல்வச் செழிப்பு வாய்ந்த அம்மாளிகையின் பிரதிபிம் பம் நீரில் மிதப்பதைக் கண்டான். தண்ணீருக்குள் வேறொரு பட்டணமே உருவாகியிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. சோனா தன் கிராமத்தைவிட்டு வெளியே வெகுதூரம் சென்றதில்லை இதுவரை. அவன் அதிகத் தூரம் சென்றது திருவிழா பார்க்கப் போனதுதான். இத்தகைய மாளிகையை எங்கும் பார்த்ததில்லை அவன். அவன் எழுந்து நின்றான். படகு கரைப் பக்கம் திரும்பியது. எதிரில் ஸ்டீமர் நிற்கும் துறை தெரிந்தது. அதற்குப் பக்கத்திலேயே படகும் நிற்கும் போலும்.

ஆற்றங்கரையில் பனை மரங்கள். பாதையின் இருபுறமும் வெகு தொலைவுவரை பனைமர வரிசை தெரிந்தது. பாதையின் வலப் பக்கம் ஆற்றங்கரை ; அதில் நாணற் பூக்கள் பூத்திருந்தன. வடக்குப் பக்கம் யானை லாயம்; அதைக் கடந்தால் கடைவீதி. ஆனந்தமயி காளி கோவில், அவர்களை அழைத்துச் செல்லப் படகுத் துறைக்கு வந்திருந்த ராம்சுந்தர்தான் இவற்றையெல்லாம் அவர்களுக்கு விளக் கினான்.

ஆற்றில் அவர்கள் வந்துகொண் டிருந்தபோது அந்த மாளிகைகள் வெகு அருகில் இருப்பதாக, ஆற்றங்கரையிலேயே இருப்பதாகத் தோன்றின. ஆனால் இப்போது படகிலிருந்து இறங்கிவந்த பிறகு அவை அவ்வளவு அருகில் இல்லை என்று தெரிந்தது. பாதையை ஒட்டினாற்போல் முழங்கால் உயரத்துக்கு ஒரு நீண்ட சுவர். அதன் மேல் இரும்புக் கம்பிகள் பதிக்கப்பட்டிருந்தன.

தூரத்தில் சிறிதும் பெரிதுமாகச் சில கோபுரங்கள் தெரிந்தன. கோபு ரங்களின்மேல் சிவப்பு, நீலநிறச் சலவைக் கல் தேவதைகள் பறந்து கொண்டிருந்தார்கள். இரண்டு பக்கமும் சவுக்குமர வரிசை. வரிசை களின் இடுக்கு வழியே குளம் கண்ணுக்குத் தெரிந்தது. குரோட் டன்ஸ் செடிகள், பலவித மலர்ச் செடிகள், மரங்கள், விதவிதமான மலர்கள் மலர்ந்திருந்தன, பிருந்தாவனத்தைப் போல. குளத்தில் தாமரை பூத்திருந்தது. அதன் கரைகளுக்குக் கல்தளம் போட்டிருந் தார்கள். அருவி நீர் கொட்டுவது போன்ற ஒலி கேட்டு நிமிர்ந்து பார்த்தான் சோனா. அருகில் இரும்பு வேலியால் சூழ்ந்த ஒரு புல் வெளி இருந்தது. பசுமையான இளம்புல் செழிப்பாக வளர்ந்து

312இருந்தது அங்கே. மான்கள் அந்தப் புல்லில் விளையாடிக்கொண் டிருந்தன.

லால்ட்டுவும் பல்ட்டுவும் இந்த மான்களைப் பற்றியும் சிறுத்தை களைப் பற்றியும் சோனாவுக்குப் பல கதைகள் சொல்லியிருந்தார்கள். அவற்றைக் கேட்டு அவன் தன் மனசுக்குள் ஓர் அற்புத உலகத் தைச் சிருஷ்டித்து வைத்துக்கொண் டிருந்தான். ஆனால் இவ்வளவு அருகில் மான்குட்டிகள் உண்மையிலேயே விளையாடிக்கொண் டிருப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ராம் சுந்தர் அவனுக்குப் பக்கத்தில் இருந்தான். லால்ட்டுவும் பல்ட்டுவும் பின்னால் வந்தார்கள். அவன் ஓட்டம் ஓட்டமாக முன்னதாக வந்துகொண் டிருந்தான். இனிமேல் சிறுத்தை வரும், மயில்கள் வரும். அவன் ஊருக்குத் திரும்பும்போது மயிலிறகு கொண்டு போக வேண்டும். வெண்மையான கூழாங்கற்கள் பதித்த மிருதுவான, வழுவழுப்பான பாதை அது. கூழாங்கற்களின்மேல் குதிரைக் குளம்புகள் படும் ஒலி கேட்டது.

அவன் இரண்டு மூன்று கூழாங்கற்களை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான், ஓர் அழகிய இளைஞர் இந்த மாலை வேளையில் குதிரைமேல் மெதுவாகச் சவாரி செய்துகொண் டிருந்தார். அவருக்குப் பின்னால் ஒரு துடி துடிப்பான பெண். அவள் ஜரிகை வேலைப்பாடு செய்த வெள்ளை ஃபிராக் அணிந்திருந்தாள். கழுத்துவரை நறுக்கிய வழுவழுப்பான கேசம் அவளுக்கு. ஏறக் குறைய சோனாவின் வயதே இருக்கும். இரும்புக் கிராதியில் செதுக்கி யிருந்த குட்டித் தேவதை ஒன்று பறந்து வந்து குதிரையின் மேல் உட்கார்ந்திருப்பது போன்ற தோற்றம். ஒரு விநாடி சோனாவுக்குக் காட்சியளித்துவிட்டு மறைந்துவிட்டது அந்த உருவம். மாளிகையின் முன் கதவு திறந்தது. அந்த இளைஞர் குட்டித் தேவதையுடன் குளத்தங்கரை வழியே சென்று மறைந்துவிட்டார். பிரமித்துப் போய் நின்றான் சோனா.

அவன் குதிரை சென்ற திசையில் ஓடினான். ஓடிக்கொண்டே மாளிகையின் பிரதான வாயிலுக்கு வந்து சேர்ந்தான். பெரிய இரும்புக் கதவுகள். அதன் பின்னால் விசித்திர உடையணிந்த ஒரு மனிதன். அவனுடைய கையில் துப்பாக்கி, இடையில் கத்தி, தலையில் நீலநிறத் தலைப்பாகை. இதற்குள் வாயில் மூடப்பட்டுவிட்டதால் சோனாவால் உள்ளே போகமுடியவில்லை. குதிரை எப்படிக் காணாமல் போய்விட்டது? சோனாவுக்குப் பயமாக இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தான். பின்னால் ராம்சுந்தர், லால்ட்டு, பல்ட்டு எல்லாரும் வந்துகொண் டிருந்தார்கள்.

31311

சோனா அவ்வளவு பெரிய மாளிகைக்கு அருகில் ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவியைப் போல் நின்றுகொண் டிருந்தான். அவன் ஒரு ராஜாவின் அரண்மனைக்கு வந்தான். பிரதான வாயில் வழியாக மக்கள் அதிகமாக உள்ளே போகவில்லை. குளத்தின் தெற்கு பக்கமாகத்தான் அவர்கள் போய்வந்தார்கள். சோனா பேசாமல் நிற்பதைப் பார்த்து ராம்சுந்தர் அவனிடம் வேகமாக வந்தான்.

அந்தக் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர்கள் தான் அந்த வாயில் வழியே உள்ளே போகலாம். அந்த ஜமீந்தாரியில் நீண்ட காலமாக அலுவல் செய்யும் சிலருக்கும் இந்த உரிமை உண்டு. அம்மாதிரி உரிமை பெற்றவர்களில் பூபேந்திரநாத்தும் ஒருவர். அந்தக் குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், அதன் சுகதுக்கங்களில் பங்கு கொள்பவர்.

மாளிகையின் வாயில் வழியே நுழைய முடியாத சோனா இரும்புக் கம்பிகளின் இடுக்கில் தலையைவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே வெகு தூரத்திலிருந்து யாரோ பாடும் ஒலி கேட்டது. அவன் கண்ணுக்கு நேரே வரிசை வரிசையாகத் தூண்களும், வேலைப்பாடுகள் செய்த மரச்சுவர்களும் தெரிந்தன. உயரே லஸ்தர் விளக்குத் தொங்கியது. சோனாவுக்கு வண்ணத்துப் பூச்சி போல் பறந்து உள்ளே நுழைந்துவிட ஆசை.

எங்கோ ஒரு பெண் நடனமாடினாள். அவளுடைய கால் சதங் கையின் ஒலி கேட்டது. எங்கோ மத்தளம் ஒலித்தது. மாளிகையின் மாடியில் வரிசை வரிசையாகப் பளிங்கு த தேவதைகள் பறந்து கொண்டிருந்தன. காற்றில் அவர்களுடைய ஆடைகள் நெகிழ்ந்து அசைவது போலிருந்தன, அந்தக் காட்சிகள். அவர்கள் நடனமாடு கிறார்களோ, என்னவோ!

நாற்புறமும் மிருதுவான புல்வெளிகள். அவற்றில் அங்கு வளர்க்கப்படும் புல்புல் பறவைகள் உட்கார்ந்திருந்தன. அழகாகக் கத்தரித்து விடப்பட்ட சின்னச் சின்னச் செடிகள் ; அவற்றில் பூக்கள் பூத்திருந்தன. தெற்குப் பக்கத்திலிருந்து சில பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டே பறந்து வந்தன, சிவப்பு, மஞ்சள் உடைகள் அணிந்த சின்னஞ்சிறு பெண்கள் கண்ணாமூச்சி விளையாடினார்கள். “கதவைத் திறங்க. காரியக்கார எசமான் வீட்டு ஜனங்க வந்திருக் காங்க" என்றான் ராம்சுந்தர்.

உடனே இரும்புக் கதவுகள் கடகட சப்தத்துடன் திறந்து கொண்டன. காவலிருந்த இரண்டு வீரர்களும் சோனாவுக்குச் சலாம் போட்டார்கள். லால்ட்டுவும் பல்ட்டுவும் தங்கள் முகத்தை 'உம்' மென்று வைத்துக்கொண்டார்கள். அவர்களுடைய முகபாவத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.

314அவர்கள் ஒரு நீர் ஊற்றைப் பார்த்தார்கள். பார்க்கப் பார்க்கச் சோனாவுக்கு வியப்பு அதிகரித்தது. காவல் வீரர்கள் தங்கள் துப்பாக்கி களைப் போட்டுவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு கொஞ்ச முயன்ற போது அவன் ராம்சுந்தருக்குப் பின்னால் ஓடிவிட்டான். அவர்களால் அவனைத் தோள்மேல் தூக்கிக்கொள்ள இயலவில்லை. இந்தச் சோனா, சின்னஞ்சிறு சோனா, காரியக்காரர் வீட்டுப் பையன். அவனுடைய முகத்திலும் கண்களிலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்தது. காவலர்கள் சோனாவைத் தோள் மேல் தூக்கி வைத்துக்கொண்டு பூபேந்திரநாத் திடம் கூட்டிச் செல்ல விரும்பினார்கள். அழைத்துச் சென்றால் அவர் களுக்கு ஏதாவது இனாம் கிடைக்கும். சோனா அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தான். அவனுக்கு ஏதோ பயம். பலவந்தம் செய்தால் அவனுக்கு அழுகை வந்துவிடும்.

சோனாவுக்கு இந்த வீட்டில் நடந்து மாளாது என்று தோன்றியது. தான் எங்கிருக்கிறோம் என்று அவனுக்குப் புரியவில்லை. தலைக்கு மேலே உயரமான விதானம், அதிலிருந்து லஸ்தர் விளக்குகள் தொங்கின. நீண்ட வராந்தா, சுவரின் மேல் விளிம்பில் புறாக்கள், சதுர இடைவெளியுள்ள கம்பிவலைத் திரை, வேலைக்காரர்கள், வேலைக் காரிகளின் குரல்கள். இவை முடிவற்றதாகத் தோன்றின சோனாவுக்கு. ராம்சுந்தர் அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு மாளிகையின் ஒவ்வொரு பகுதியாகக் காட்டிக்கொண்டு வந்தான். இந்த நேரத்தில் பைத்தியக்காரப் பெரியப்பா அவன் அருகில் இருந்தால் சோனாவுக்கு எவ்விதப் பயமும் இருக்காது. ஜமீன்தாரின் முன்னோர்களின் உருவங்கள் தீட்டிய ஓவியங்கள் மாளிகையின் சுவர்களில் தீட்டப் பட்டிருந்தன. பிறகு அவர்கள் நடனசாலைக்கு வந்து சேர்ந்தார்கள். இங்கேதான் சோனாவால் ஆகாயத்தைப் பார்க்க முடிந்தது. இப்போது தான் அவனுக்குச் சற்றுப் பயம் தெளிந்து தெம்பு வந்தது.

பூபேந்திர நாத் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து பூஜைக்கான சாமான்கள் வாங்கிய கணக்கைப் பார்த்துக்கொண் டிருந்தார். ஒரு தடிமனான, பெரிய மெத்தையின்மேல் உட்கார்ந்திருந்தார் அவர். அதன்மேல் வெள்ளை வெளேரென்று ஒரு விரிப்பு விரித்திருந்தது. பெரிய பெரிய திண்டுகள் போட்டிருந்தன. கீழே குடிமக்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

சோனா வந்துவிட்டான் என்று கேட்டதும் பூபேந்திரநாத் வேலையை அப்படியே வைத்துவிட்டு எழுந்தார். இந்தத் தடவை பூஜை பார்க்க சோனா வருவதாக இருந்தது. ஆனால் கடைசிவரை சசி அவனை அனுப்பச் சம்மதிப்பாரா என்பது சந்தேகமாக இருந்தது. ஆகை யால் காலையிலிருந்தே அவருக்கு வேலையில் மனம் செல்லவில்லை. நடுப்பகலிலிருந்தே ராம்சுந்தரைப் படகுத் துறையில் உட்கார்த்தி

315வைத்திருந்தார் அவர். சிறுவர்கள் எப்போது வருவார்கள். எப்போது வருவார்கள் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்,

அவர் ஓடிவந்தபோது நடன சாலையில் சோனா அம்மனுக்கு நமஸ் காரம் செய்துகொண் டிருப்பதைக் கண்டார். அவன் நீல நிறப் யாண்ட், அரைக்கை சில்க் சட்டை, ரப்பர்ச் செருப்பு இவற்றை அணிந்திருந்தான். அவனுடைய முகம் வற்றிக் கிடந்தது. காலையில் புறப்படுவதற்கு முன் சாப்பிட்டிருப்பான். பூபேந்திரநாத் வேகமாக வந்து சோனாவைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டார். அம்மனுக்கு முன் நின்றுகொண்டு இந்தச் சிறுவனுக்காக என்ன என்னவோ வேண்டிக்கொள்ளத் தோன்றியது அவருக்கு. ஆனால் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அகன்ற கண்களுடன் அபய மளிக்கும் கையுடன் தேவி அவர்கள் முன்னே நின்றுகொண் டிருந்தாள். திடீரென்று, "அம்மா! அம்மா!" என்று கூவினார் பூபேந்திர நாத். இந்தத் திடீர்க் கூவலில் சோனா பயந்துவிட்டான். பூபேந்திர நாத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

பூபேந்திரநாத்துக்குத் தேவியிடம் உறுதியான பக்தி. அவர் செய்வது வெறும் பூஜையல்ல ; அவருடைய உள்ளத்துக்குள் ஆழ்ந்த நம்பிக்கை பறவைபோல் எப்போதும் விளையாடிக்கொண் டிருந்தது. சோனாவை மார்புடன் அணைத்தவாறே பூபேந்திர நாத் தேவியின் முன் நின்று அவளுடைய எல்லையற்ற பெருமையை எண்ணினார், அவளுடைய கருணை இல்லாவிட்டால் மனிதன் எப்படிப் பிழைப் பான், எப்படிச் சாப்பிடுவான்? இவ்வளவு செழிப்பு எங்கிருந்து வரும்? இந்தச் சோனாவும் தேவியின் பெருமையின் அடையாளம் தான். துர்க்கை அன்னை பூஜையை ஏற்றுக்கொள்ள நாட்டுக்கு வந்திருக்கிறாள். சோனாவும் வந்திருக்கிறான்.

சரத் காலம்; நாணல் மலர்கள் எங்கும் மலர்ந்திருக்கின்றன. லஸ்தர் விளக்குகள் எரியும். மணல்வெளியில் யானை உலவும். அதன் கழுத்திலுள்ள மணி ஒலிக்கும். அதற்கு வெள்ளைச் சந்தனமும் சிவப்புச் சந்தனமும் இட்டு அலங்கரிப்பார்கள். தேவியின் வருகைக் காக இவ்வளவு ஏற்பாடுகளும் நடக்கும்.

பூபேந்திரநாத் தேவியின் முன்னால் நின்று சிறுவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். தேவியின் கண்கள் பெரிதாக இருந்தன, மூக்கில் ஒரு பெரிய வளையம் : கைகளில் இருந்த சங்கு, பத்மம், கதை எல்லாமாகச் சேர்ந்து பக்தர்களுக்கு அபயம் அளித்துக்கொண் டிருந்தன.

ஆனந்தமயீ கோவிலுக்கு அருகிலுள்ள நிலத்தில் முஸ்லிம் குடியானவர்கள் தொழுகை செய்வார்கள். அது மசூதி இல்லை. அங்கு ஒரு பழைய இடிந்த கோட்டை இருந்தது. அது ஈசாகானுடைய

316தாக இருந்திருக்கலாம், அல்லது சாந்தராய், கேதார்ராய் கட்டிய தாகவும் இருக்கலாம். அந்த இடிந்த கோட்டையில் தொழுகை நடத்தும் உரிமை பற்றி ஒரு கிளர்ச்சி ஆரம்பித்திருக்கிறது.

இன்று காலையில் ஆபீசுக்குச் செய்தி வந்தது - முஸ்லிம்கள் குறிப்பாக பஜாரில் வசிக்கும் மெளல்வி சாயபு, இந்துக்களுக்கு இடைஞ்சல் செய்ய முனைந்திருப்பதாக. மெளல்வி சாயபு இரண்டு பெரிய நூல் கடை வைத்திருந்தார். அவருக்கு ஆற்றுப் படுகையில் சொந்தமாக ஆயிரம் பீகா நிலம் இருந்தது.

தேவியின் மகிமையால் இந்தக் கிளர்ச்சி யெல்லாம் அடங்கிவிடும். தேவியின் விருப்பத்துக்கு மாறாக யாரால் நடக்கமுடியும் ? மகிஷா சுரனைக் கொல்லத் தயாராக இருக்கிறது, தேவியின் கையிலுள்ள சூலம். மகிஷாசுரவதக் கற்பனை பூபேந்திரநாத்தின் மனத்தில் தோன்றியது. "அம்மா! அம்மா! உன் பெருமைதான் என்னே!' என்று கூவத் தோன்றியது. ஆனால் அவருடைய வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. பெரியப்பாவின் கண்களில் நீர் தளும்புவதைக் கண்ட சோனா, அவர் தங்களைக் கண்ட மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு விட்டதாக நினைத்துக்கொண்டான்.

சோனா மாளிகைக்குள் இவ்வளவு தூரம் வந்தும் அந்தச் சிறிய பெண்ணை - அவள் பெயர் கமலா - பார்க்க முடியவில்லை. அவள் எங்கே போய்விட்டாள் ? உள்ளே வந்ததும் அவளைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தான் அவன். ஆனால் அவளைக் காணோம். சாப்பிட உட்கார்ந்தபோதுகூட அவள் பக்கத்தில் எங்காவது உட்கார்ந்திருக்கிறாளா என்று நாற்புறமும் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். எவ்வளவோ சிறுவர்களும் சிறுமியரும் இங்குமங்கும் ஓடிக்கொண் டிருந்தார்கள். குதிரைச் சவாரி கற்றுக்கொள்ளும் அந்தப் பெண்ணை மட்டும் எங்கும் காணவில்லை. இவ்வளவு சிறிய பெண் குதிரை மேல் ஏறிச் சவாரி செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவளைக் கண்டுபிடிக்கும் ஆசையில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக்கொண்டே யிருந்தான் சோனா.

சசீந்திரநாத் காலையிலிருந்தே வேலையில் மும்முரமாக இருந்தார். குழந்தைகள் எல்லாரும் பூஜைக்குப் போய்விட்டார்கள். பிற்பகலில் மன்சூர் அவரிடம் ஒரு புகாரைக் கொண்டு வந்தான். அவனுக்கும் ஹாஜி சாயபுவுக்கு மிடையே விரோதம் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஹாஜிசாயபுவின் பெரிய பையன் மன்சூரின் சொற்ப நிலத்தில் வாய்க்கால் வெட்டிவிட்டான், சென்ற கோடையில். மழைக் காலத்தில் சணல் அறுவடையாகும்போது மன்சூரின் சணல் பயிரைத் தானே பலவந்தமாக அறுவடை செய்து கொண்டு போய்விட்டான்.

317ஹாஜிசாயபுவுக்குப் பெரிய குடும்பம், மூன்று பிள்ளைகள். கரும்பு, -சணல் விவசாயம். இருந்தும் சொற்ப நிலத்துக்காகக் கொலை கூட நடந்துவிடும். ஆகையால் சசீந்திர நாத் அன்று மாலை முழுதும் இந்தச் சச்சரவுக்கு முடிவு காண்பதற்காக ஹாஜி சாயபுவின் வீட்டில் உட்கார்ந்திருந்தார். சுமுகமான முடிவு ஏற்பட்டுவிட்டால் வீடு திரும்பிவிடுவார்.

ஹாஜிசாயபுவின் வீட்டுத் திண்ணையில் பலகைமேல் உட்கார்ந் திருந்தார் சசீந்திரநாத். வெற்றிலை புகையிலை அவருக்காக வந்தன. ஆனால் அவர் அவற்றைச் சாப்பிடவில்லை. இப்போது இஸ்மத் அலியும், பிரதாப் சந்தாவும் வந்தார்கள், பெரிய மியானும் வரலாம். ஆனால் சசீந்திரநாத்தான் எல்லாம். சசீந்திரநாத் ஹாஜிசாயபுவின் இரண்டாம் பிள்ளையைத் தேடினார். அமீர் எங்கே போயிருக்கிறான்? அவன் பெரிய மியானை அழைத்துவரப் படகு எடுத்துக்கொண்டு போயிருந்தான்.

அப்போது துறையிலிருந்து வந்த பெரிய மியான் சசீந்திர நாத்துக்கு சலாம் செய்தார். ''எசமான், சௌக்கியமா இருக்கீங்களா?''

"ஏதோ இருக்கேன். ஏன் உனக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு?" " அதை ஏன் கேட்கறீங்க? ஆத்துமணல்லே யாரோ ஒரு பெரிய படகைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்காங்க."

''யாரோட படகு?'' "தெரிஞ்சுக்க முடியல்லே. ரெண்டு படகோட்டி இருக்காங்க, நீளத் துடுப்பு ஒண்ணு இருக்கு. பாய் இருக்கு. அதைப் பார்க்கத் தான் போயிருந்தேன்.''

"படகோட்டிகள் என்ன சொல்றாங்க ?" “ஒண்ணும் சொல்லமாட்டேங்கறாங்க. எங்கேயிருந்து படகு வந்திருக்கு. எங்கே போயிக்கிட்டிருக்கு - ஒண்ணும் சொல்லமாட் டேங்கறாங்க."

"ஒண்ணும் சொல்லல்லியா ?" "ஊஹும்! ராத்திரி வேளையிலே அவங்களோட பாட்டு மட்டும் கேக்குது.''

"என்ன பாட்டு ?" "குனாயி பீபியோட பாட்டு மாதிரி இருக்கு, ராப்பூரா 'ஜில் ஜில்' சத்தம் கேக்குது."

"ராத்திரி வேளையிலே போய்ப் பார்த்தியா ?" "பயமாயிருக்கு, எசமான்! ராத்திரிவேளை பாட்டுக் கேட்கப் போனேன். கிட்டப் போய்ப் பார்த்தா, படகு ஆத்து நடுவிலே நிக்குது. பகல் வேளையிலே போய்ப் பார்த்தா, ரெண்டு படகோட்டி

318களும் உட்கார்ந்திருக்காங்க. ரெண்டு பேரும் ஊமை. ஜாடை யாலேதான் பேசறாங்க."

''யாரோட படகு, ஏன் வந்திருக்கு? ஒண்ணுமே தெரியல்லியா?'' "இல்லை ." ''ஆச்சரியமா இருக்கே ." “ஆமாங்க, ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு." மன்சூர் வந்ததும் சசீந்திர நாத் பேச்சை மாற்றினார். ஹாஜிசாய்பு தொழுகை செய்யும் பாணியில் ஜமுக்காளத்தில் வந்து உட்கார்ந்தார். அவர் கையில் வெள்ளிப் பூண் போட்ட தடி. அவர் புகாரை ஏற்றுக் கொண்டார் ; பலவந்தமாக அறுவடை செய்த சணலைத் தந்துவிட ஒப்புக்கொண்டார். நிலத்திலிருந்து தண்ணீர் வடிந்தபிறகு எல்லாரு மாகச் சேர்ந்துகொண்டு வாய்க்காலைச் சரி செய்வதென்று முடிவாகியது.

சசீந்திரநாத், "என்ன மன்சூர், ஆத்திலே ஒரு பெரிய படகு நிக்குதாமே?" என்று மன்சூரைக் கேட்டார். "ஆமாங்க, நானும் கேள்விப்பட்டேன்." "ஆத்திலே எந்தப் பக்கம் ?" "ரொம்பத் தூரத்திலேங்க...'' ஆமாம், உண்மையிலே அதிக தூரந்தான். ஆறுகளும் கால்வாய் களும் நிறைந்த நாடு அது. மழைக் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் ஒரு தீவுபோல் காட்சியளிக்கும். அவற்றைச் சுற்றி ஒரே தண்ணீர். ஆறுகளின் கரைகளே கண்ணுக்குப் புலப்படா. பெரிய பெரிய அன்னாசித் தோப்புகள். காடுகள் தண்ணீருக்குள்ளிருந்து மூக்கை நீட்டிக்கொண் டிருக்கும். தெற்குப் பக்கம் சாலமரக் காடு. அதில் புலி இருக்கும். விரும்பினால் அந்தப் படகு சாலமரக் காட்டுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டு விடலாம், மறைந்துபோய் விடலாம். அதைக் கண்டுபிடிக்க முடியாது. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி தான். ஏரிகள், கால்வாய்கள், பத்து இருபது கோச தூரத்துக்குச் சாலமரக் காடு, காட்டில் இந்தப் பருவத்தில் விபத்துக்கள் ஏற்படுவது இயற்கைதான்.

பட்குத துறைக்குப் போகுமுன் சசீந்திரநாத், "'அலிமத்தி, வா ஒரு தடவை பார்த்துட்டுப் போகலாம்" என்றார்.

"எங்கே போகணும்?" ''ஆத்துப் படுகைக்கு. அங்கே ஒரு பெரிய படகு வந்திருக்காம்." அலிமத்தி துடுப்பு வலித்துக்கொண்டு வயல் பகுதிக்கு வந்தான், இங்கே தண்ணீர் குறைவாக இருந்ததால் படகை நடுப்பகுதியில் லேயே ஓட்டிக்கொண்டு போகவேண்டி யிருந்தது. ஆற்றை யடைந்ததும் அவன் துடுப்பை எடுத்துவிட்டுப் படகின் பாயை

319விரித்தான், பிறகு நாற்புறமும் உற்றுப் பார்த்தபடி, "படகு ஒண்ணையும் காணோமே, எசமான்!" என்றான்.

"படகு இல்லே ?" "இல்லியே! இருந்தாக் கண்ணுக்குத் தெரியாதா?" சசீந்திர நாத் படகின் மேற்பலகையில் எழுந்து நின்று பார்த்தார். ஆமாம், உண்மையில் அங்கே படகு ஒன்றும் இல்லை. பெரிய படகு கிடக்கட்டும், சந்தைக்குப் போகிற சிறிய கோஷாப் படகைக்கூட அங்கே காணோம்! அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்போது வீட்டுக்கு வீடு விளக்கு எரிந்தது. ஆஸ்வின் மாத மாதலால் இரவு நேரம் குளிராக இருக்கவேண்டும். ஆனால் இன்னும் வெப்பம் தணியவில்லை. பாத்ர மாதத்தில் இருப்பதைப் போன்ற இறுக்கமான வெப்பத்தால் சசீந்திரநாத்துக்கு உடம்பெல்லாம் வேர்வை, அலிமத்தி மாட்டுக் கொட்டகையில் புகை போட்டான். அங்கே ஒரு பெரிய கொசுவலை கட்டியிருந்தது. புகை போட்ட பிறகு கொசு வலையைத் தொங்க விட்டுவிட்டு வந்துவிடுவான்

அலிமத்தி.

சசீந்திரநாத் பெரிய அறையில் நுழைந்தபடி, "அப்பா, ஆத்துலே ஒரு பெரிய படகு வந்திருக்காம்" என்றார்.

''யாரோட படகு ?" "தெரியல்லே ." ""விசாரி, விசாரித்துப் பாரு! நல்ல ஆளாவும் இருக்கலாம், போக்கிரியாவும் இருக்கலாம். நன்னா விசாரித்துப் பாரு."

கொலம்பற பெரிய மியானோட படகு, ஹாஜி வீட்டுப் படகு, சந்தா வீட்டுப் படகு இதையெல்லாம் எடுத்துக்கிண்டு போய்த் தேடிப் பார்க்கறேன், அந்தப் படகு எங்கே ஒளிஞ்சுக்கிட்டிருக் குன்னு ."

மழைக் காலம் வந்துவிட்டால் கொள்ளைக்காரர்களிடமிருந்து ஆபத்து அதிகரிக்கும். ஒரு படகு வந்திருக்கிறது, அது பகல் வேளையில் எங்கோ மறைந்திருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எல்லாரும் இரவானதும் பயத்துடனேயே பொழுதைக் கழித்தார்கள். கிராமத்தில் வீடுகள் ஒன்றுக்கொன்று வெகுதூரத்தில் இருந்தன, இரவாகிவிட்டால் ஒவ்வொன்றும் தண்ணீராலும் மரஞ்செடிகளாலும் சூழப்பட்டுத் தனித் தனியாகத் துண்டுபட்டிருக்கும். ஊரே ஒரு சொப்பன உலகம் போல் நிசப்தமாக இருக்கும். நரேன்தாஸின் வீடு, தீனபந்துவின் வீடு, டாகுர் வீடு இவை மூன்றுந்தான் ஒன்றை யொன்று ஒட்டினாற்போல் இருக்கும். அவற்றுக்கப்புறம் பால் குடும்பத்தினரின் வீடு. ஹாரான் பாலின் இரண்டு பிள்ளைகளும்

320வெவ்வேறு பக்கங்களில் வாசல் வைத்து இரண்டு இரண்டு அறைகள் தங்களுக்காகக் கட்டிக்கொண் டிருந்தார்கள்.

இரவாகிவிட்டால் எங்கும் நிசப்தம். அப்போது மாலதிக்குத் தூக்கம் வருவதில்லை. இவ்வளவு நாட்கள் ரஞ்சித் ஊரில் இருந்ததால் பயம் குறைந்திருந்தது. அவன் போய்விட்ட பிறகு இப்போது என்ன செய்வது ? 'நடப்பது நடக்கட்டும், தூக்கம் வந்தாலும் வரா விட்டாலும் சீக்கிரமாகவே படுக்கப் போக வேண்டியதுதான்!' என்று தீர்மானித்தாள் மாலதி.

ஆஸ்வின் மாத இரவு வெப்பமாக இருந்தது. கதவைச் சாத்தி வைத்திருந்ததால் ஒரே இருக்கமாக இருந்தது. நரேன் தாஸ் இன்னும் விழித்துக்கொண் டிருந்தான். நெசவு அறையில் ஏதோ வேலை செய்தான். ஆபாராணி பாத்திரம் தேய்க்கத் துறைக்குப் போயிருந் தாள். ஆபு விளக்கை எடுத்துக் கொண்டு அவளுடன் துணைக் குப் போயிருந்தான். மாலதி காற்றுக்காக அறையின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஜமுக்காளத்தை விரித்துப் படுத்தாள், இறுக்கத்திலும் வேர்வையிலும் உடம்பு நனைந்துவிட்டது. இந்த இறுக்கமும் இருளும் சேர்ந்து அவளைச் சோர்வில் ஆழ்த்தின. வாழ்க்கையில் ஒன்றுமே மிஞ்சவில்லை அவளுக்கு. எல்லாம் ஒவ்வொன்றாக அவளுடைய வாழ்க்கையை விட்டுப் போய்க்கொண் டிருந்தன. தான் இறுகக் கட்டியிருந்த உள்பாவாடையையும் ரவிக்கையையும் காற்றுக்காகச் சற்று நெகிழவிட்டவாறே இவ்வாறு நினைத்தாள் மாலதி. அந்த ஆள் எங்கே இருக்கிறான், என்ன காரியம் செய்துகொண்டு திரிகிறான், என்ன காரியத்துக்காக விதவிதமான வேஷங்கள் போட்டுக்கொண்டு நடமாடவேண்டி யிருக்கிறது

அவனுக்கு ?

ஊருக்கு வெளியே பல பேருக்கு அவனுடைய உண்மைப் பெயர் தெரியாது. அவள் ரஞ்சித்தின் படம் ஒன்றைப் பார்த்திருக்கிறாள். அது ரஞ்சித்தே என்று யாராலும் சொல்ல முடியாது! நீண்ட தாடி, தலையில் பெரிய முண்டாசு, கழுத்தில் ருத்ராக்ஷ மாலை - ஒரு துறவியின் படம் அது. இந்த வேடம் ரஞ்சித்துடையதுதான் என்று மாலதியாலேயே நம்ப முடியவில்லை.

ஒரு நாள் சிலம்பப் பயிற்சியும் கத்திப் பயிற்சியும் முடிந்த பிறகு எல்லாரும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். நிலவில் நடந்து போய்க்கொண் டிருந்த மாலதியின் முன்றானையைப் பிடித்து யாரோ இழுத்தான். திரும்பிப் பார்த்தால் ஒரு துறவி! பயத்தில் அவள் மயங்கிவிழ இருந்தாள், "நான் தான் மாலதி. என்னைத் தெரியவில்லையா?' என்றான் துறவி.

321

21தன் புடைவைத் தலைப்பை எடுத்து நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டபோது அவளுக்கு இந்த நினைவு வந்து அதன் காரணமாக ஓர் உற்சாகம் ஏற்பட்டது. மயங்கி விழப்போன அவளை ரஞ்சித், அந்த ஒரு தடவை மாத்திரம், இரண்டு கைகளாலும் பிடித்துத் தாங்கிக்கொண்டு சொன்னான், "என்னைத் தெரியல்லியா, மாலதி? நான்தான் ரஞ்சித்!"

தான் அப்போது முட்டாளாக இருந்துவிட்டதாக இப்போது தோன்றியது மாலதிக்கு. அவள் உண்மையிலேயே மயக்கமாகி இருந்தால் அவன் அவளை அப்படியே வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்திருப்பான், அவள் மயக்கம் தெளிந்து கலகலவென்று சிரித்துக் கொண்டு அவனை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு அவனைத் திகைக்க வைத்திருப்பாள். அந்த நிலையில் அவனால் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டிருக்க முடியாது.

இவ்வாறு நினைக்கும்போதே உணர்ச்சி மிகுதியில் அவளுடைய உடல் நடுங்கியது. அவள் இப்போது தன் உள்ளாடையை நன்றாகத் தளர்த்தி விட்டுக்கொண்டு துறைப் பக்கம் பார்த்தாள். இருள் காரணமாக அங்கு ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. கட்டாரி மரத்தடி வரையில் தண்ணீர் வந்திருந்தது. தண்ணீரில் மீன் குதிக்கும் போது ஏற்படுவது போன்ற அரவம் அந்தப் பக்கம் கேட்டது. இப்போது அமூல்யன் இருந்தால் தூண்டிலில் மீன் சிக்கிவிட்டது என்று நினைத்து ஓடிப் போய்ப் பார்ப்பான். ஆனால் நரேன்தாஸ் தூண்டில் போட்டு வைத்திருக்கவில்லை என்று மாலதிக்குத் தெரியும். நாள் பூராவும் தன்னந்தனியாக ஏதோ வேலை செய்துகொண்டே யிருக்கிறான் நரேன் தாஸ். இப்போதும் இரவில் கண் விழித்துக் கொண்டு நூலைக் கஞ்சியில் நனைத்துக்கொண் டிருக்கிறான். நாளை அமூல்யன் திரும்பி வந்துவிடுவான். நரேன் தாஸின் வேலைப் பளுவும் சற்றுக் குறையும்.

சோபா முன்னிரவிலேயே படுத்துக்கொண்டு விட்டாள். அவளுக்கு ஜூரம். ஆபு வந்ததும் கதவைத் தாழிட்டுவிடலாம் என்று நினைத் தாள் மாலதி. துறையில் அரிக்கேன் விளக்கு இன்னும் எரிந்தது. ஆபு கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று விளக்கு அணைந்து விட்டாற் போலத் தோன்றியது. பாத்திரங்கள் கீழே விழும் ஓசை கேட்டது. துறையில் தரை வழுக்கி அண்ணி கீழே விழுந்து விட்டாளோ என்று நினைத்தாள் மாலதி. அதே சமயத்தில் யாரோ நெசவறையில் நுழைந்து... மாலதி எழுந்து உட்கார்ந்தாள். இந்தக் காலத்தில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் உபத்திரவம் உண்டு, "அண்ணா, உன் அறையிலே என்ன சண்டை?" என்று கேட்டாள்.

322என்ன ஆச்சரியம்! இப்போது அங்கேயிருந்து ஒரு சப்தமும் வரவில்லை. ஒரே நிசப்தம், அவள் தன் ஆடைகளைச் சரி செய்து கொண்டாள். விளக்கேற்றுவதற்காக அரிக்கேன் விளக்கை எடுக்க அவள் முனைந்தபோது அவளுக்கு இருபுறமும் இரண்டு நிழல் உருவங்கள் தோன்றின. அவள் கூக்குரலிட வாயைத் திறப்பதற்குள்

அந்த உருவங்கள் அவளைப் பிடித்து அவளுடைய வாயில் துணியை அடைத்துவிட்டன. அவள் தன்னை விடுவித்துக்கொள்ள திமிறினாள். அவர்களிடையே நிகழ்ந்த போராட்டத்தின் ஒலிகள் இருட்டில் கேட்டன, சோபா விழித்துக்கொண்டு பயந்துபோய், "அத்தை, அத்தை !" என்று கூவினாள். அதன் பிறகு நிசப்தம். அந்த யுவதியை யாரோ வீட்டிலிருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

மசானா சாப்பிட்டபின் நடனசாலையின் மாடிப்படிகள் வழியே இறங்கி வந்தான். லால்ட்டுவும் பல்ட்டுவும் அந்த ஊர்ச் சிறுவர் களோடு சேர்ந்து விளையாடிக்கொண் டிருந்தார்கள். சோனாவுக்கு இந்த இடத்தில் யாரையும் தெரியாது. இப்போது அவனுடைய தலைக்கு மேல் ஆகாயம் தெரிந்தது. இந்த இடத்துக் காட்சிகள் புதியவை, முகங்களும் புதியவை. அவன் எப்போதும் பெரியப்பா வுடனேயே சுற்றினான். அவன் வெள்ளை அரைக்கைச் சட்டையும் நீல நிறப் பாண்டும் அணிந்திருந்தான், குட்டையாக வெட்டப்பட்ட தலை மயிர்.

அவனுடைய பெரிய பெரிய கண் களைப் பார்த்து அவற்றால் கவரப் பட்டு அங்குள்ளவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள் ; அவனு டைய பெயரைக் கேட்டார்கள். பெரியப்பா சிரித்தார். அவனைப் பெயர் சொல்லச் சொன்னார். அவன் சந்திரநாத் பெளமிக்கின் சிறிய பிள்ளை என்ற செய்தி பரவியது. நடன சாலையிலிருந்த புரோகிதர் அவனுக்கு இரண்டு சந்தேஷ் சாப்பிடக் கொடுத்தார். அவன் அவற் றைச் சாப்பிடாமல் பெரியப்பாவிடம் கொடுத்து வைத்தான். அவரை விட்டுவிட்டு எங்கும் போகத் துணிவு ஏற்படவில்லை அவனுக்கு.

லால்ட்டுவும் பல்ட்டுவும் அவனை தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பினார் கள். குளத்தங்கரையில் பாட்மின்டன் விளையாட்டு நடக்கப் போகிறதாம். சோனா போகவில்லை. அவனுக்குப் போகத் துணிவு வரவில்லை. ஈசம் வந்தால் போகத் துணிந்திருப்பான் அவன்.

323ஈசம் இப்போது ஆற்றிலேயே படகில் தங்கியிருந்தான். இந்தச் சில நாட்களுக்கு ஈசம் படகிலேயே வசிப்பான். அவன் ஆற்றில் தூண்டில் போட்டுப் பேலே மீன், பூன்ட்டி மீன் இவற்றைப் பிடித்துக்கொண்டு பொழுதைக் கழிப்பான். படகில் தானே சமையல் செய்து சாப்பிடுவான்.

தன் தந்தையுடன் குதிரையில் சவாரி செய்துகொண்டு சென்ற அந்தப் பெண்ணின் நினைவு சோனாவுக்கு அடிக்கடி வந்தது. அவ ளுடைய உலகத்தில் நுழைய ஆசையாக இருந்தது அவனுக்கு. ஜரிகைத் தொப்பியணிந்த சிறுவர்களும் சில்க் ஃபிராக் அணிந்த பெண்களும் பெரிய முற்றத்தில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண் டிருந்தார்கள். பூக்கள் மலர்ந்திருப்பதுபோல் மகிழ்ந்து விளையாடும் அந்தக் குழந்தைகள் இருக்குமிடத்துக்குப் போக ஆசையாக இருந்தது அவனுக்கு. அவன் பெரியவனாயிருப்பதால் அவர்கள் அவனைத் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார் களென்று அவனுக்குத் தெரியும். அவன் விளையாடப் போவதில்லை ; ஒரு பக்கமாக நின்றுகொண்டு அவர்களுடைய விளையாட்டைப் பார்க்கப் போகிறான்,

அப்போது அவன் முகத்தில் கதையில் வரும் ராஜகுமாரனுக்கேற் பட்டதுபோல் சோகம் படரும். அப்போது ஒரு சிறு பெண் வந்து அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவனை விளையாட அழைப்பாள்! கண்ணாமூச்சி விளையாட்டு! அந்த உலகத்துக்குள் நுழைய ரொம்ப ஆசையாக இருந்தது சோனாவுக்கு. தேவதை மாதிரி ஒரு பெண் குதிரைமேல் சவாரி செய்துகொண்டு அவன் முன்னால் போனாள் என்ற விஷயத்தைத் தவிர, வேறெதுவும் அவனுடைய மனத்தில் நிலைக்கவில்லை. அந்தப் பெண்ணின் முகமே அவனுக்கு

அடிக்கடி நினைவுக்கு வந்துகொண் டிருந்தது, அவன் ஆபீஸ். அறையில் உட்கார்ந்திருந்தபோது.

"சோனா, வா போகலாம்!'' என்று அப்போது அவனைப் பெரியப்பா கூப்பிட்டார்.

'எங்கே போகப் போகிறார் பெரியப்பா' என்று சோனாவுக்குப் புரியவில்லை. அவர் தம் வேஷ்டியை நன்றாக மடிப்பு வைத்துக் கட்டிக் கொண்டார். ஒரு சட்டையை அணிந்துகொண்டார். பிறகு அவனைக் கூட்டிக்கொண்டு, அவர்கள் சாப்பிடப் போனார்களே அந்தப் பக்கம் போகாமல் இடப் பக்கத்தில் வராந்தாவை ஒட்டினாற்போல் இருந்த பூந்தோட்டத்துக்குள் நுழைந்தார்.

மாளிகையின் இந்தப் பகுதிக்குள் நுழைவதற்குத் தோட்டம் வழி யாகத்தான் போகவேண்டும். அங்கே பலவிதச் செடிகளும் மரங். களும் பூத்தும் பழுத்தும் இருந்தன. எவ்வளவு நீளமான பாதை! 324வீட்டுக்குள்ளேயே இவ்வளவு பெரிய பாதையா என்று ஆச்சரிய மாக இருந்தது சோனாவுக்கு. சோனா வாழ்ந்தது ஒரு பட்டிக்காட்டில். அங்கே காரை பூசிய செங்கல் வீடு பிரதாப் சந்தாவின் வீடு ஒன்று தான். மற்ற வீடுகளெல்லாம் தகரத்தாலும் மரத்தாலும் ஆனவை. சந்தா வீட்டுச் சுவர்கள், தரை எல்லாம் சிமெண்ட் பூசப்பட்டவை.

அவர்கள் வீட்டில் ஒவ்வோர் அறைக்கும் ஒரு பெயர் - தெற்கத்தி அறை, கிழக்கத்தி அறை என்பதுபோல் - உண்டு. இங்கு அறை களுக்குத் தனித் தனிப் பெயர் இல்லை. ஒவ்வோர் அறையும் ஹால் மாதிரி விசாலமாக இருந்தன. பெரியப்பா அவனுக்கு ஒவ்வோர் அறையையும் காண்பித்து விளக்கிக்கொண்டு வந்தார். சுவர்களில் பெரிய பெரிய ஓவியங்கள். அவற்றில் தீட்டியிருப்பவர்கள் யார் யார், அவர்கள் எப்போது பிறந்தார்கள், எப்போது இறந்தார்கள், யானை எப்போது வாங்கப்பட்டது என்பதையெல்லாம் பெரியப்பா அவனுக்குக் கதை கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.

பிறகு மாடிப் படி வந்தது. படிகளில் ரத்தினக் கம்பளம் விரித் திருந்தது. அது மிருதுவாக, காலுக்கு இதமாக இருந்தது. சோனா வெறுங்காலுடன் இருந்தான். அவன் மிக மெதுவாக - வேகமாக நடந்தால் கம்பளம் தேய்ந்துவிடுமோ என்று பயப்படுபவன் போல - படிகளின் மேல் ஏறினான், இரு பக்கமும் கம்பியாலான கைப்பிடிச் சுவர். இங்கே எங்கே பார்த்தாலும் பெண்கள். பூபேந்திரநாத்துக்கு அந்த வீட்டில் அந்தப்புரத்தில்கூடத் தடை இல்லை. அவர் ஒரு திரைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, "அம்மா, நான் வந்திருக் கிறேன்" என்று சொன்னார்.

சோனா அவருக்கு அருகில் மெளனமாக, பயந்துகொண்டு நின்ற வாறே இந்தப் பகுதியின் அலங்காரங்களையும் செல்வச் செழிப் பையும் பார்த்து வியந்தான். இங்கே வசிப்பவர்கள் மனிதர்கள் அல்ல, தேவதைகள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் தன்னால் முடிந்த வரையில் பெரியப்பாவின் உடைக்குள் தன்னை மறைத்துக்கொள்ள முயன்றான்.

அவன் காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றான். பெரியப்பா கூப்பிட்டதற்கு 'யார் குரல் கொடுக்கிறார்கள், எந்தப் பக்கத்துக் கதவு திறக்கிறது. அந்தப் பெண் எங்கே இருக்கிறாள்?' என்றெல்லாம் பார்க்கத் தயாராக இருந்தான் அவன். திரை அசைந்ததாகத் தோன்றியது அவனுக்கு, திரைக்கு மறுபுறத்தில் யாரோ நடந்துவரும் அரவம் கேட்டது. பூபேந்திர நாத்துக்கு இன்னும் காத்திருக்கப் பொறுமை இல்லை. "அம்மா, சோனா வந்திருக்கான்!" என்று அவர் சொன்னார்.

325எசமானியம்மாளுக்குப் பக்கத்தில் சிவப்புத் துணியணிந்த ஒரு சிறு பெண் நின்றிருந்தாள். அவள் அவனை உற்றுப் பார்த்தாள். அவளுக்கு ஒரு சின்னக் குருவிக் குஞ்சு வேண்டுமாம். அவள் தன் பொம்மை வீட்டை அலங்கரிக்கப் போகிறாளாம். பூஜை சமயமென்று சிவப்புத் துணி உடுத்தியிருந்தாள் அவள். காலில் செம்பஞ்சுக் குழம்பும், நெற்றியில் சிவப்புத் திலகமும் இட்டுக்கொண் டிருந்தாள். குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிர். கண்களில் மைதீட்டி இருந்தது. கைகளில் வேலைப்பாடுகள் செய்த தந்த வளையல்கள். பூஜையை முன்னிட்டு விதவிதமான நகைகள் அணிந்திருந்தாள்

அவள் - அவள் தான் கமலா.

"சோனா வந்திருக்கிறான், அம்மா!'' என்றார் பூபேந்திரநாத் மீண்டும். எசமானியம்மாள் இங்குமங்கும் திரும்பிப் பார்த்தாள். எங்கே அந்தப் பையன் ? சோனா பெரியப்பாவின் பின்னால் ஒளிந்து கொண் டிருந்ததால் அவளால் அவனைச் சட்டென்று கண்டுபிடிக்க முடிய வில்லை. "பெரியப்பா, சோனா எங்கே?'' என்று கமலா கேட்டாள்.

பூபேந்திர நாத் சோனாவைப் பலவந்தமாக வெளியே கொண்டு வந்து நிறுத்தி, 'இவன் தான் சோனா!'' என்றார்.

"சோனா! எங்கே உன் முகத்தைக் காட்டு பார்ப்போம்!'' என்றாள் கமலா.

'எவ்வளவு அழுத்தம் திருத்தமாப் பேசறா இந்தப் பொண்ணு!' சோனா சங்கோசத்தால் இன்னும் குறுகிப் போனான்.

எசமானியம்மாள் வைத்த கண் வாங்காமல் சோனாவைப் பார்த்துக் கொண்டு நின்றாள். பூபேந்திரநாத் சோனாவைப் பற்றிப் பெருமை யாகப் பேசியதில் மிகையில்லை. அவருக்கு அவன் மேல் ரொம்பப் பிரியம் என்று பார்த்தாலே தெரிந்தது. சந்திர நாத்தின் சிறிய பையன் சோனா. சந்திர நாத் தினம் அங்கே வருவார். அநேகமாகக் காலை வேளையில் ஒரு தடவை வந்து எசமானியம்மாளைப் பார்த்துவிட்டுப் போவார். இப்போது பூஜை சமயத்தில் வேலை அதிகமாதலால் இன்று காலையில் வரவில்லை.

இந்தத் தடவை சசீந்திர நாத் சோனாவைப் பூஜை பார்க்க வர அனுமதித்ததில் பூபேந்திர நாத்துக்கு மிக்க மகிழ்ச்சி. பூஜை சமயத்தில் அவருக்கும் வேலைப் பளு அதிகந்தான். இருந்தாலும் தம்முடன் ரத்த உறவுகொண்ட இந்தச் சிறுவர்களின் வருகையில் அவருக்குச் சந்தோஷம் தாளவில்லை. அவருடைய முகத்தைப் பார்த்தாலே அவருடைய மன நிலையை ஊகிக்க முடிந்தது.

முன்பெல்லாம் அவர் தம் சொந்த ஊருக்குப் போய்விட்டு வந்ததும் தன் எசமானியம்மாளிடம், ''சோனா எவ்வளவு அழகாய் இருக்கான், தெரியுமா ? அவன் சிரிச்சா எவ்வளவு அழகாயிருக்கும்,

326தெரியுமா? அவன் கண்ணு ரொம்பப் பெரிசு! உங்களுக்கு எப்படி விளக்குவேன், போங்க! அவன் பெரியவனானதும் இங்கே கூட்டிக் கிண்டு வரேன்" என்று கூறுவார்.

அவர் இப்போது எசமானியம்மாளிடம், "சோனாவைக் கூட்டிக் கிண்டு வந்திருக்கேன், பாருங்க!'' என்றார்.

எசமானியம்மாள் சோனாவைப் பார்த்துவிட்டு நினைத்துக்கொண் டாள், 'பூபேன் பையனைப் பற்றிக் கூறியதில் மிகையில்லை. பையன் ராஜா மாதிரி இருக்கிறான்!' என்று.

''பையனுக்கு ஜாதகம் கணிச்சாச்சா?'' என்று அவள் கேட்டாள். "சூரியகாந்த்கிட்டே ஜாதகம் கணிக்கக் கொடுத்திருக்கேன்" என்று சொன்ன பூபேந்திரநாத், "இவங்க உனக்குப் பெரியம்மா முறை. இவங்களுக்கு நமஸ்காரம் பண்ணு'' என்று சோனாவிடம் கூறினார். சோனா குனிந்து நமஸ்காரம் செய்ததும் எசமானி அம்மாள் அவன் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு அவனுடைய மோவாயைத் தொட்டுக் கொஞ்சிவிட்டு அவனுடைய கையில் ஒரு பளபளப்பான ரூபாயைக் கொடுத்தாள். அதை வாங்கிக்கொள்வதா கூடாதா என்று சோனாவுக்குத் தெரியவில்லை, அவன் தன் பெரியப்பாவைப் பார்த்தான், ரூபாயை எடுத்துக்கொள்ளும்படி அவனுக்கு ஜாடை காட்டினார் பெரியப்பா,

எசமானி அம்மாள் இப்போதுதான் முதல் தடவையாகச் சோனாவைப் பார்த்தாள். அதற்காகத்தான் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாள். அவளுடைய கையில் ஒரு ரூபாய். அவளுடைய புடைவைத் தலைப்பில் எவ்வளவோ ரூபாய்கள் முடிந்து வைத் திருந்தாள். கமலாவுக்காக ஒரு மைனாக் குஞ்சோ அல்லது குருவிக் குஞ்சோ வாங்கிக் கொடுக்க ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அவள் தற்செயலாகச் சோனாவைப் பார்த்துவிட்டாள், சுப் சூசகந்தான். அப்படியே அந்த ரூபாயை அவன் கையில் கொடுத்து விட்டாள் எசமானி அம்மாள்.

கமலாவுக்கு உள்ளுற ஒரே எரிச்சல், அவள் பூபேந்திர நாத்தைப் பெரியப்பா உறவு வைத்து அழைப்பாள். பெரியப்பா அவளைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை சோனாவுக்கு ?

அவள் இந்த வீட்டின் இரண்டாவது பிள்ளையின் பெண், அவளும் அவளுடைய அக்கா அமலாவும் தங்கள் தந்தையோடு பூஜை சமயத்தில் கல்கத்தாவிலிருந்து வருவதுண்டு என்பதையெல்லாம் அவர் ஏன் சொல்லவில்லை? அவளுடைய அப்பா பெரிய சர்க்கார் வேலை பார்க்கிறார் ; வெளி நாடுகளில் பல வருடங்கள் இருந்திருக்கிறார்.

அவளுடைய அம்மா சில சமயம் தன் ஊரைப் பற்றியெல்லாம் சொல்லுவாள். அங்கே தேம்ஸ் என்று ஒரு நதி இருக்கிறதாம்,

327லுஜான் என்ற பெயருள்ள ஒரு கிராமம் இருக்கிறதாம். அங்கே செயின்ட் பால் மாதாகோவில் இருக்கிறதாம். அதன் இரண்டு பக்கமும் வில்லோ மரங்கள். அதற்கு அருகிலுள்ள தோட்டத்தில் மாலை நேரத்தில் லிலாக் மலர்கள் மலருமாம். அம்மா சொல்லும் கதைகளை அமலாவும் கமலாவும் மெய்ம்மறந்து கேட்பார்கள்.

எதிரில் இருக்கிறானே, சோனா என்ற பையன், அவனுக்கு இந்தக் கதையெல்லாம் சொல்லவிட்டால், அவனுடன் ஓடி விளையாடா விட்டால் அவள் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்தது, இவ்வளவு பெரிய நதியைக் கடந்து வந்தது, இவ்வளவு பெரிய மாளிகையில் வசிப்பது எல்லாமே வீணான மாதிரிதான்.

அவள் அவனுக்குத் தன்னைப் பற்றிச் சொல்லவேண்டும், தன் அம்மா வேறு தேசத்துப் பெண் என்பதைச் சொல்லவேண்டும், தாத்தாவுக்கு, அப்பாவையும் அம்மாவையும் பிடிக்கவில்லை. அவர் அப்பாவுக்காகக் கல்கத்தாவில் ஒரு தனி வீடு கட்டிக் கொடுத்து விட்டார். அப்பா அவளுடைய அம்மாவைக் கூட்டிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய முடியாது. ஊஹும், இதையெல்லாம் அவள் சோனாவிடம் சொல்லக் கூடாது! அவளுடைய அக்கா சொல்லியிருக்கிறாள், எல்லாரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லக் கூடாது என்று. 'நான் உனக்கு எல்லாம் சொல்லமாட் டேன்! எனக்குப் பாட்டி மைனாக் குஞ்சு, குருவிக் குஞ்சு வாங்கித் தருவாள். நான் பொம்மை விளையாட்டு விளையாடுவேன். உன் முகத்தைப் பார்த்தால் எனக்குப் பொம்மை விளையாட்டு விளையாடத் தோன்றுகிறது.'

சோனா ரூபாயைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண் டான். கமலாவால் பொறுக்க முடியவில்லை. இப்போது சோனாவும் பூயியான் பெரியப்பாவும் போய்விடுவார்கள். சோனா தன் முழுப் பெயரைப் பாட்டியிடம் சொல்லியிருக்கிறான் : 'அதீஷ் தீபங்கர் பெளமிக்!' அப்பா, எவ்வளவு பெரிய பெயர்!

அவளுடைய அம்மாவின் தேசத்தில் ஜான், மாத்யூ என்றெல்லாம் பெயர் உண்டு. அவளுடைய மாமாக்களின் பெயர்களெல்லாம் அவளுக்கு நினைவில் இல்லை. சோனாவின் பெயரும் அந்த மாதிரி தான். அவள் பொறுமையிழந்து கேட்டாள். "பாட்டி, சோனா என்னை எப்படிக் கூப்பிடுவான்?''

கமலாவின் கேள்வியை அவளுடைய பாட்டி கவனிக்கவில்லை, அவளும் பூபேந்திர நாத்தும் ஏதோ குடும்ப விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய தூரத்து உறவினர் ஒருவர் நீண்ட காலத்துக்குப் பிறகு பூஜை பார்க்க வந்திருக்கிறாராம். தனியாக ஆள் போட்டு அவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்படி

328சொன்னாள் எசமானி அம்மாள். சோனா கமலாவின் பக்கம் திரும்பி உதட்டை மடித்துக்கொண்டு புன்சிரிப்புச் சிரித்தான். 'நீ இத்த னூண்டுப் பொண்ணு. உன்னை வேறே என்ன சொல்லிக் கூப்பிட ணும் ? கமலான்னு கூப்பிடறேன்' என்று சொல்வது போல இருந்தது அவன் சிரிப்பு.

"பெரியப்பா! என்னைச் சோனா, கமலா அத்தைன்னு கூப்பிட வேண்டாம்" என்று கூறிவிட்டுக் கர்வத்தோடு அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள் கமலா.

இப்போதுதான் சோனா கவனித்தான், கமலாவின் கண்கள் கறுப் பும் இல்லை, நல்ல நீலமும் இலலை ; கறுப்பு அல்லது நீலத்துடன் மஞ்சள் கலந்த ஒரு நிறம் - அது என்ன நிறம் என்று புரிந்து கொள்வது கஷ்டம். அது பிரப்பம்பழ நிறமோ என்று அவனுக்குத் தோன்றியது. பழுத்த பிரப்பம்பழத்தின் தோலை உரித்துவிட்டால் சுளை இந்த நிறமாகத்தான் இருக்கும். கமலா தன்னை உற்றுப் பார்ப் பதைக் கவனித்தான் சோனா. அவள் தன் கன்னங்களை உப்ப வைத்துக்கொண் டிருந்தாள். சோனா அவளைக் கேலி செய்து பாட்டுப் பாட விரும்பினான் -

கால் பூலா கோபிந்தேர் மா,

சால்தா தலா ஜாயிஓ நா ! ஆனால் இந்தப் பிரம்மாண்டமான மாளிகையும் அதன் ஆடம்பர மும் அவனைப் பயப்படச் செய்தன. அவன் ஒன்றும் சொல்லவில்லை.

"ஆமா, சோனா உன்னைக் கமலா அத்தைன்னு கூப்பிடட்டும், கமலா சோனாவைவிடப் பெரியவளாத்தானே இருப்பா, என்ன சொல்றீங்க அம்மா ?" என்றார் பூபேந்திர நாத்.

''ஆமா, ஏழெட்டு மாசம் பெரியவளா இருப்பா." சோனாவின் உற்சாகம் சற்றுக் குறைந்துவிட்டது. "அம்மா இல்லாமே தனியா இருப்பியா?" என்று எசமானி அம்மாள் அவனைக் கேட்டாள்.

"இருப்பேன்.'' "பையனாலே இருக்க முடியல்லேன்னா அவனை இங்கே அனுப் பிடு" என்றாள் அவள் பூபேந்திர நாத்திடம்.

"சரி." பூபேந்திர நாத் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர் போல் வேண்டியவர். ஆகவே அவர் வீட்டுப் பையன்கள் அக் குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தாம். லால்ட்டுவுக்கும் பல்ட்டு வுக்கும் சமவயதில் அந்த அம்மாளுக்கு இரண்டு பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒருவன் பெரிய பிள்ளையின் பிள்ளை, மற்றவன் சிறிய பிள்ளையின் மைத்துனன். லால்ட்டுவும் பல்ட்டுவும் வந்துவிட்டால்

329எல்லாச் சிறுவர்களும் சேர்ந்து கொண்டு வீட்டுக்கு முன்னுள்ள புல்வெளியில் அல்லது குளத்தங்கரையில் பாட்மிண்டன் விளையாட

ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்த மாளிகையில் பணி புரியும் மற்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்குச் சமவயதுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் இந்தப் பூஜைத் திருநாளில் எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு கொட்ட மடிப்பார்கள். அவர்களுடைய உற்சாகம் கரை புரண்டோடும். நாள் முழுதும் வாத்தியங்கள் ஒலிக்கும். மத்தளமும், தம்பட்டமும், சேகண்டியும் ஒலித்துக்கொண்டே யிருக்கும். மத்தியதரக் குடும் பங்களில் அஷ்டமியன்று ஆட்டுப் பலி நடக்கும். சீதாலக்ஷா நதியின் இருகரைகளிலும் ஒரே கோலாகலம். நவமியன்று எருமைப் பலி.

விடியற்காலை முதலே கமலா பிருந்தாவனியுடன் தோட்டத்தில் பூப்பறிக்கப் போய்விடுவாள். தேனீ போல் பூவுக்குப் பூ தாவுவாள். கல்கத்தாவாசியான கமலா இந்தச் சில தினங்களுக்குத் தன்னிச்சை யாகப் பறந்து திரியும் பறவையாகிவிடுவாள்.

அவள் சோனாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் அவனுக்கு அந்த வீட்டின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தாள் ; ஹோஹோவென்று சிரித்தாள். சிரிக்கும்போது அந்தச் சிரிப்பொலி ஹாலில் எப்படி எதிரொலிக்கிறது என்று காது கொடுத்துக் கேட்டாள்.

அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினாள். பல அங்கணங் கள் கொண்ட நீளமான வராந்தா. ஓடும்போது சட்டைப் பையைக் கையால் அழுத்திக்கொண்டான் சோனா. அதில் ரூபாய் இருக்கிறதே! ஓடிக்கொண்டே அவர்கள் பின்பக்கம் போய்விட்டார்கள். அங்கே பெரிய பெரிய மரங்கள். எங்கும் நிசப்தம். வரிசை வரிசையாகப் பாக்கு மரங்கள். அவர்கள் அங்கெல்லாம் சுற்றிவிட்டுத் திரும்பி வந்தபோது, “அதோ பாரு, எங்க அக்கா நிக்கறா! அங்கே வரியா ?" என்று கேட்டாள் கமலா.

சோனா மெளனமாகத் தலையசைத்தான். பிறகு அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். இதுவரை அவன் அவளைக் கமலா என்றோ, கமலா அத்தை என்றோ கூப்பிடவில்லை.

கமலாவின் அக்கா வராந்தாவின் கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்துகொண்டு அவர்களைப் பார்த்தாள். அவளுடைய பெயர் சோனாவுக்குத் தெரியும். அமலா, முழங்கால்வரை வரும்படி நீள ஃபிராக் அணிந்திருக்கிறாள். கழுத்து வரைக்கும் வெட்டப்பட்டிருந் தது தலைமயிர். தலை மயிர் பொன்னிறம். அவளுடைய கண்களும் நல்ல நீலம் என்பதை அவள் அருகில் வந்த பிறகு சோனா கவனித் தான்.

''இவன் தான் சோனா" என்றாள் கமலா.

330அப்போதுதான் தூங்கியெழுந்தவள் போல் கண்களை மெதுவாக உயர்த்தி அவனைப் பார்த்தாள் அமலா.

"எவ்வளவு அழகான பெயர் !" என்று கமலா சொன்னாள், கமலா சொன்னது தன் காதில் விழாதது போல் அமலா, ''உன் பேரு என்ன ?" என்று அவனைக் கேட்டாள்.

அவள் பேசும் முறை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனும் அவளைப் போலவே பேச முயற்சி செய்தான் : "என் பெயர் ஸ்ரீ அதீஷ் தீபங்கர் பெளமிக்."

"நீ என்னை எப்படிக் கூப்பிடுவே?'' "சோனா, இவ உனக்கு அத்தை முறை. அமலா அத்தைன்னு கூப்பிடு!" என்றாள் கமலா.

சோனா நிதானமாக, வார்த்தைகளை அவர்களைப் போல் சரியாக உச்சரித்துச் சொன்னான். ''நீ கமலா அத்தை, இது அமலா அத்தை."

கமலாவுக்கு ரொம்பச் சந்தோஷம். அமலா கைப்பிடிச்சுவரின் மேல் சாய்ந்துகொண்டு எதையோ பார்த்தாள்.

“ கமலா, உனக்குக் குதிரை சவாரி பண்ணத் தெரியுமா?” என்று சோனா கேட்டான்.

"நீ என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடறியா! நான் பெரியப்பா கிட்டே சொல்லிடுவேன், ஆமா!''

சோனாவுக்குக் கோபம் வந்துவிட்டது. ''நான் பெரியப்பா கிட்டே போறேன்" என்றான் அவன்.

கமலா அவனைச் சமாதானப்படுத்தினாள். "எனக்குக் குதிரை மேலே ஏறத் தெரியுமே!' பிறகு அவனைத் தன்னருகில் இழுத்துக்கொண்டு சொன்னாள், ""பட்டிக்காட்டான் மாதிரி வார்த்தைகளை உச்சரிக் காதே!"

அவனுக்குத் தன் பைத்தியக்காரப் பெரியப்பாவைப் பற்றி அவளிடம் சொல்லத் தோன்றியது ; இருந்தாலும் சொல்லவில்லை. ''மேல் மாடியிலே பெரிய பெரிய பொம்மையெல்லாம் இருக்கு" என்றாள் அவள்.

''ஆத்தங்கரையிலே நாணல் காட்டிலே பூப் பூத்தா இந்தப் பொம்மையெல்லாம் பறக்கப் பார்க்கும். அதுகளோட துணிகளெல் லாம் நழுவிப் போயிடும். அதுக்கள் ஆத்தங்கரைக்குப் பறந்து போகத் துடிக்கும். அந்தப் பொம்மையெல்லாம் தேவதையாக்கும்" என்றாள் கமலா.

தேவதைகளைப் பற்றிய பேச்சைக் கேட்டதும் அமலா அப்போது தான் தூங்கி விழித்தவளைப் போல் சோனாவைப் பார்த்தாள், இப்போதுதான் அவனை முதல் தடவையாகப் பார்ப்பது போல. அவனுடைய தலைமயிருக்குள் தன் கையை விட்டு அளைந்தாள்,

331பகல்

தான் முன்பு கேட்டதை மறந்துவிட்டவள் போல, "நீ யார் வீட்டுப் பையன்?" என்று கேட்டாள்.

''உனக்குத் தெரியாதா, அமலா ? இப்பத்தானே சொன்னேன்! இவன் தான் சோனா! சந்திர நாத் பெரியப்பாவோட பையன்."

“அப்படியா! அப்படீன்னா நம்ம ஆள் தான்" என்று சொல்லிக் கொண்டே அவள் அவனைத் தன் மார்புடன் சேர்த்துக் கட்டிக் கொள்ள வந்தாள். சோனா சற்று நகர்ந்துகொண்டான். தோட் டத்தில் மல்லிகைப் பூ மலர்ந்தால் ஒரு நல்ல மணம் வருமே அது போன்ற ஓர் இனிய வாசனை அமலாவின் உடம்பிலிருந்து வந்தது. ஆகாயத்தையே தோற்கடிக்கும்படி அவ்வளவு நீலம் அவளுடைய கண்கள். அந்தக் கண்களை ஒரு தடவை தொட்டுப் பார்க்கத் தோன்றியது சோனாவுக்கு. ரோஜாவின் இதழ்கள் உதிர்ந்து விழுந்தபின் அதன் காம்பு பரிதாபமாகக் காட்சியளிக்குமே, அது போலத்தான் தோன்றினாள் அமலா. அவள் கொட்டாவி விட்டாள். "நீ கிட்டே வா, சோனா" என்று சொல்லிக்கொண்டே அவனைக் கட்டிக்கொள்ள முற்பட்டாள்.

"நான் பெரியப்பாகிட்டே போகப் போறேன்" என்றான் சோனா. " நீ ஏன் அக்காகிட்டே பயப்படறே ?'' அமலாவின் முகம் உற்சாகத்தால் மலர்ந்தது. சோனாவின் அழகான, ஆகாயம் போல் பிரகாசமான, முகம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. "கிட்டே வாயேன். ஏன் பயப்படறே? கமலா மாதிரிதான் நானும். நீ என்னை அமலா அத்தைன்னு கூப்பிடு ,

வா!'' என்றாள் அவள்,

''வா! பயம் என்ன ?" என்றாள் கமலா.

அவர்கள் மாடிப்படிகளின் வழியே இறங்கும்போது, "யாரோட புள்ளே இது ?" என்று அவர்களுடைய பெரியம்மா கேட்டாள்.

"இது சோனா, சந்திரநாத் பெரியப்பாவோட பையன்." "அட! இது யாரு ?" என்று வேலைக்காரிகள் கேட்டார்கள். கமலா கர்வத்துடன் பதில் சொன்னாள், "உனக்குத் தெரியாது ? இவன் தான் சந்திர நாத் பெரியப்பாவோட பையன்.''

"இந்தப் பையன் பேசவேமாட்டேங்கறானே! இவன் என்ன பையன்டீ !” என்று சிரித்தாள் அமலா.

"நான் பெரியப்பாகிட்டே போறேன்.'' கமலா தான் சோனாவை விட வயதில் மிகப் பெரியவள் போல் பாவனை செய்துகொண்டு, "சோனா! நீ சமத்து இல்லையா? வா, என் கிட்டே, அக்கா, ஏண்டி நீ அவனைப் பயமுறுத்தறே ?'' என்று

அவனைக் கொஞ்சினாள்.

" நான் எங்கே பயமுறுத்தினேன் ? சோனா, இங்கே வாப்பா!"

12

332கூட்டத்தில் நுழைந்து அவர்கள் பாட்டியின் அறைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அதுவும் ஹால் மாதிரி விசாலமாக இருந்தது. பெரிய பெரிய மரக்கட்டில்கள் போடப்பட்டிருந்தன. அங்கே வராந்தாவில் ஒரு கூண்டில் ஒரு மைனா இருந்தது. போகும்போது அமலா கூண்டை ஆட்டிவிட்டுப் போனாள். கமலா அதனிடம் போய், "இவன் பெயர் சோனா" என்றாள். மைனா கூண்டின் நடுக் கம்பியிலிருந்து கீழே இறங்கி, "கமல், கமல், சோனா, சோனா!" என்று கூவியது. பறவை தன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் சோனா. அவனைப் பார்த்துவிட்டுக் கூண்டிலிருந்து வெளியே வர முயற்சி செய்தது மைனா.

அந்தப் பெரிய அறைக்குள் நுழைந்ததும் அமலா கட்டிலின் மேல தாவி ஏறினாள். அலமாரியிலிருந்து ஒரு தோல் பெட்டியை இறக்கினாள். கமலா அதைத் திறந்தாள். சோனாவுக்கு எதையோ காண்பிப்பதற்காக அவர்கள் அந்தப் பெட்டியிலிருந்த சாமான்களை வெளியே எடுத்தார்கள். அமலாவுக்குப் பதினொன்று பன்னிரண்டு வயது இருக்கும். கமலாவுக்கு வயது ஒன்பது பத்திருக்கும். இதற்குள் இவர்கள் இருவரிடையே சோனாவுக்கு மகிழ்ச்சியளிப்பதில் எவ்வளவு போட்டி! "இதோ பாரு சோனா கண்ணாடிக்கல் மாலை, கிளிஞ்சல், சின்னச் சின்னக் கூழாங்கல்!''

"உனக்கு என்ன வேணும்?" என்று கமலா கேட்டாள். ''எனக்கு ஒண்ணும் வேண்டாம்.'' "இதோ பாரு எவ்வளவு அழகான படம்! நீ இதை எடுத்துக் கறியா?" என்றாள் அமலா.

"ஊஹும், எனக்கு வேண்டாம்.''

அமலா ஆசை காட்டினாள் ; "இதோ பாரு மயிலிறகு! இதனாலே பேனா பண்ணி எழுதலாம்."

"கமல்! நான் பெரியப்பாகிட்டே போறேன்." "ஐயையோ! என்னை இவன் கமல்னு பேர் சொல்லிக் கூப்பிட றானே! கமலா அத்தைன்னு கூப்பிடல்லியே!'

அமலாவுக்குச் சிரிப்பு வந்தது. 'இத்துனூண்டுப் பொண்ணுக்கு இப்பவே எவ்வளவு பெரிய மனுஷத்தனம்!' அவள் இப்போது தன்னிடமிருந்த கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தாள் : "சோனா நீ இந்த பயாஸ்கோப்பை எடுத்துக்கோ. உள்ளே பாரு, எவ்வளவு ஜோரான படமெல்லாம் தெரியறது! இதோ பாரு, மாதுள மரத் துக்குக் கீழே ஒரு பொண்ணு கொண்டையிலே பூ வச்சுண்டு நிக்கறா! இதோ பாரு, ரெண்டு சிப்பாய்கள் தொப்பி வச்சுண்டு நிக்கறாங்க ! ரெண்டு குரங்கு ஒண்ணை யொண்ணு கட்டிக்கிண்டு ஆடறது!"

333