Pages

Saturday, January 14, 2017

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் : மொழிபெயர்ப்பு : ஆர். சிவகுமார்



நன்றி
பிரம்மராஜனுக்கும் மீட்சிக்கும் ஆர்.சிவகுமாருக்கும்

www.maamallan.com 

AUTOMATED GOOGLE OCR

GABRIEL GARCIA MARQUES

1928ல் கொலம்பியாவில் பிறந்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 1982 க்கான இலக்கியத்திற்கான நோபல் விருதை பெற்ற பின்னரே தமிழ் எழுத்துலகில் அதிகம் தெரியவந்திருக்கிருர், ஸ்பானிய மொழியில் எழுதப்பட் டிருக்கும் அவரின் 1947-1975 களின் இடைப்பட்ட காலத்திய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மார்க்வெஸ் தவிர இளம் தலைமுறையினரில் குறிப்பிடத்தக்க வர்கள் arlos Fuentes, Manue Puig. Mario Llosa, பழைய தலைமுறை எழுத்தாளர்களான பாப்ல்ோ நெருடா, ஜோர்ஜ் லூயி போர்ஹே போன்ற வர்களிடமிருந்து மாறுபட்டு புதிய உந்துதல் கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிருர்கள் என்பது மார்க்வெஸ்ஸாக்கு அளிக்கப்பட்ட நோபல் விருது உறுதிப்படுத்துகிறது. மார்க்வெஸ்ஸின் கதைகள் நன்கு புரிந்து கொள்ளப்படுவதற்கு லத்தீன் அமெரிக்க மாநிலமான கொலம்பியா (இதிலிருந்துதான் காமிலோ டோரஸ் என்ற புரட்சிப் பாதிரி உருவானுர்) வைப் பற்றிய அறிதல் அவசியம். 1949ல் கொலம்பியா வை ஆட்சி புரிந்த சிறிதும் சமரசம் இல்லாத், LD60TJFIT “ gj யற்ற GOMEZ என்ற சர்வாதிகாரி மார்க்வெஸ்ஸின் Autumn of Patriarch நாவலுக்கு ஒரு முன் மாதிரியாக இருந்திருக்கலாம். ராணுவத் திற்கும், தாராளவாத bandereos களுக்கும் நடந்த கொரில்லா யுத்தங்களி ஞல் கொலம்பிய ரணப்படுத்தப்பட்டது. ܘ

லத்தீன் அமெரிக்க இளம் தலைமுறையினரின்-பயங்கர வாதத்திற்கான அவர்களின் எதிர்வினையானது ஒரு முடிவற்ற இலக்கிய உத்திகளின் வகை களில் உருவெடுத்தது. இந்த எழுத்துக்கள் சில சமயங்களில் முழுமையான கனவுலகிற்கும் Fantasyக்கும் இடமளிக்கின்றன. அதே நேரத்தில் அங்கிருந்து எதார்த்தத்திற்கும் அழைத்து வருகின்றன. மார்க்வெஸ்ஸின் பிரதான இலக்கிய உத்தியாக அறியப்பட்டிருப்பது Magical Realism.

திரைப்படமும், ஆங்கிலேயர்கள் அல்லாத மற்ற இன கதை சொல்பவர் களின் முக்கிய அரங்கும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு இரண்டு பிரதான பாதிப்புக்களாக இருக்கின்றன. மார்க்வெஸ்ஸாம் மற்றவர்களும் Joyce, Kafka, மற்றும் Faulkner போன்றவர்களை பக்தி போன்ற மரியாதை எதுவுமின்றி படித்தனர். எதார்த்தம் மற்றும் Fantasy உலகை இணைக்கும் கலையை திரைப்படத்திற்காக பணியாற்றிய பலல்த்தீன் அமெரிக்க எழுத்தா ளர்கள் கற்றுக்கொண்டனர்.

Lorrifi Glosio of sir No one writes to the colonel, in Evil Hour, Innocent Erendia போன்றவை மார்க்வெஸ்ஸின் முதல்கட்ட எழுத்துக்கள். One Hundred Years of Solitude 905 uuias disor, அழகான நாவலாக லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் தனித்து நிற்கிறது.________________




12

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம்
மணற்பாங்கான பாறைகளால் ஆன அதிர்வுறும் சுரங்க வழியிலிருந்து புகைவண்டி வெளிவந்தது சீராக அமைந்த முடிவே இல்லாத வாழைத்தோட்டங்களைக் கடக்க ஆரம்பித்தது; காற்று ஈரமாக மாறியது; அவர்களால் கடற் காற்றை உணர முடியவில்லை. மூச்சுத்திணறவைக்கும் முழு வேகத்தில் பெட்டி யின் ஜன்னல் வழியாக புகை வந்தது. பசும் வாழைத்தார்கள் ஏற்றப்பட்ட மாட்டுவண்டிகள், தண்டவாளங்களுக்கு இணையாகச் செல்லும் குறுகியபாதையில் போய்க்கொண்டிருந்தன. பாதைக்கு அப்பால், விவசாயம் செய்யப்படாமல் அங்கங்கே இருந்த நிலப்பகுதிகளில் மின்விசிறிகள் உள்ள அலுவலகங்களும் சிவப்பு செங்கற்களாலான கட்டடங்களும் இருந்தன. பனைமரங்களுக்கும் ரோஜாச்செடிகளுக்கும் இடையே, நாற்காலிகளும் சிறிய வெள்ளை மேஜைகளும் உள்ள மாடிவீடுகள் இருந்தன. காலை பதினோரு மணி வெப்பம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
'ஜன்னலை மூடிவிடு; புகைக்கரி உன் முடியில் நிறையச் சேர்ந்துவிடும் என்று அப்பெண் சொன்னாள். அந்தச் சிறுமி முயற்சி செய்தாள்; ஆனால் துரு இருந்ததால் ஜன்னல் கதவு நகரவில்லை.
அந்தத் தனிமையான மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அவர்கள் இருவர் மட்டுமே பயணிகள் ஜன்னல் வழியாகத்தொடர்ந்து புகை வந்துகொண்டிருந்ததால், அந்தச்சிறுமி அவர்கள் கொண்டு வந்திருந்த தின்பண்டங்கள் உள். பிளாஸ்டிக் பையையும், செய்தித்தாளில் சுற்றப்பட்ட மலர்க்கொத்தையும் கீழே வைத்துவிட்டு தன் இடத்தை விட்டு நீங்கினாள். ஜன்னலிலிருந்து தள்ளி தன் அம்மாவைப் பார்க்கும் வகையில் எதிர்த்த இருக்கையில் அமர்ந்தாள். அவர்கள் இருவரும் கடுந்துன்பத்தை வெளிப்படுத்தும் எளிய துயர்ச்சின்ன உடையிலிருந்தனர்.
அந்தச் சிறுமிக்கு பன்னிரெண்டு வயது. முதல் முறையாக புகைவண்டியில் பிரயாணம் செய்கிறாள். கண் இரப்பைகள்மேல் தெரிந்த நீல இரத்தக் குழாய்களும் குருமார்களின் நீண்ட உள் அங்கி மாதிரி தைக்கப்பட்டிருந்த ஆடையை அணிந்த அவளின் மென்மையான, சிறிய, சீராக இல்லாத உடம்பும் அந்தச் சிறுமிக்குத் தாயாக இருப்பதை விடவும் கூடுதலான வயதை அப் பெண்ணுக்குக் கொடுத்தன. முதுகு இருக்கையின் பின்புறம் இருக்காமல் பொருந்தும் வணண்ம் அமர்ந்து அப்பெண் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள். மெருகூட்டப்பட்ட தோலால் ஆன பையைத் தன் மடிமீது வைத்து இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டிருந்தாள். வறுமைக்குப் பழக்கப்பட்ட ஒருவரின் மனச்சான்றுள்ள சாந்தம் அப்பெண்ணிடம் இருந்தது.
13
பன்னிரெண்டு மணிக்கு வெப்பம் ஆரம்பித்தது. நகரமில்லாத ஒரு நிலையத்தில் தண்ணீர் நிரப்பிக்கொள்வதற்காகப் புகைவண்டி பத்து நிமிடங்கள் நின்றது. வெளியே, வாழைத்தோட்டங்களின் புதிரான அமைதியில், நிழல்கள் தெளிவாகத் தெரிந்தன. ஆனால் ரயில் பெட்டிக்குள்ளிருந்த சலனமற்ற காற்று தெனிடப்படாத தோல் மாதிரி வாடை வீசியது. புகைவண்டி வேகம் எடுக்கவில்லை. பிரகாசமான வர்ணங்கள் அடிக்கப்பட்ட மரவீடுகளுடைய ஒரே மாதிரி அமைப்புள்ள இரண்டு நகரங்களில் புகைவண்டி நின்றது. அப்பெண்ணின் தலை ஆடியது. அவள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். சிறுமி தன்னுடைய பாதணிகளை அகற்றினாள். பின் மலர்க்கொத்தை நீரில் நனைப்பதற்காக அவள் கழிவறைக்குச் சென்றாள்.
அவள் தன் இருக்கைக்குத்திரும்பியபோது அவள் தாய் சாப்பிடுவதற்குக் காத்திருந்தாள். ஒரு துண்டு பாலாடைக்கட்டி, பாதி மக்காச்சோள அடை, கேக் ஆகியவற்றை அந்தப்பெண் தன் மகளுக்குக் கொடுத்துவிட்டு, அதே அளவு தின்பண்டங்களை பிளாஸ்டிக் பையிலிருந்து தனக்காக எடுத்துக்கொண்டாள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது புகைவண்டி ஓர் இரும்புப் பாலத்தை மிக் மெதுவாகக் கடந்தது. முன் கடந்த நகரங்களைப்போலுள்ள பிறிதொரு நகரத்தைக் கடந்தது புகைவண்டி. ஆனால் இந்நகரத்தின் சந்தைக் கூடுமிடத்தில் கூட்டம் இருந்தது. கடும்வெய்யிலில் ஓர் இசைக்குழு ஒர் இனிய ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தது. நகரத்தின் அடுத்த பக்கத்தில் வறட்சியால் பிளக்கப்பட்ட நிலப்பகுதியின் ஆரம்பத்தில் வாழைத் தோட்டங்கள் முடிந்திருந்தன.
அப்பெண் சாப்பிடுவதை நிறுத்திவிட்டுச் சொன்னாள். 'உன் பாதணிகளை அணிந்துகொள் சிறுமி வெளியே பார்த்தாள். புகைவண்டி மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்து பாழ் நிலத்தைத்தவிர அவளால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. கேக்கின் கடைசித்துண்டை பையில் போட்டுவிட்டு பாதணிகளை அணிந்துகொண்டாள். தாய் அவளுக்கு ஒரு சீப்பைக்கொடுத்து, தலைவாரிக் கொள்" என்றாள்.
சிறுமி தலைவாரிக் கொண்டிருந்தபோது புகைவண்டி ஒலிகொடுக்க ஆரம்பித்தது. கழுத்திலிருந்த வியர்வையையும், முகத்திலிருந்த எண்ணெய்ப்பசையையும் அப்பெண் தன் விரல்களால் துடைத்தாள். தலைவாருவதை அச்சிறுமி நிறுத்தியபோது முன் வந்த நகரங்களைவிட பெரிதாகவும் சோகமாகவும் இருந்த ஒரு நகரத்தின் எல்லையிலிருந்த வீடுகளை புகைவண்டி கடந்து கொண்டிருந்தது.
ஏதாவது செய்யவேண்டுமென்று தோன்றினால் இப்போதே செய்து கொள். பிறகு, தாகத்தினால் நீ இறக்க வேண்டியிருந்தாலும் எங்கேயும் எந்த பானத்தையும் நீ குடிக்கக்கூடாது. எல்லாவற்றுக்கும்மேல் நீ அழக்கூடாது என்று அப்பெண் தன் மகளிடம் சொன்னாள்.
சிறுமி தலையசைத்தாள். பழைய பெட்டிகளின் சப்தம், புகைவண் டியின் ஊதல் ஒலி ஆகியவற்றோடு ஓர் உலர்ந்த வெப்பமான காற்று ஜன்னல் வழியாக உள்ளே வந்தது. உணவின் மீதத்தோடு பிளாஸ்டிக் பையை மடித்து14
அதைத் தன் கைப்பையில் போட்டாள் அப்பெண் பிரகாசமான ஆகஸ்ட்மாத செவ்வாய்க்கிழமையில், அந்நகரத்தின் முழுக்காட்சியும் ஒரு கணத்துக்கு ஜன்னல் வழியாக ஒளிர்ந்தது. நனைந்த செய்தித்தாளில் பூக்களைச் சுற்றிக் கொண்டு அச்சிறுமி ஜன்னலிலிருந்து சற்று விலகி தன் அம்மாவை வெறித்து நோக்கினாள் பதிலாக ஒரு கனிவான பார்வையைப் பெற்றாள். புகைவண்டி ஒலிகொடுக்க ஆரம்பித்து வேகத்தைக் குறைந்தது. சிறிதுநேரம் கழித்து நின்றது.
நிலையத்தில் ஒருவருமில்லை. தெருவின் அடுத்தபக்கம், வாதுமை மரங்களால் நிழலூட்டப்பட்ட பக்க நடைபாதையில் கூட்டுச் சூதாட்டக்கூடம் மட்டும் திறந்திருந்திருந்தது. நகரம் வெம்மையில் மிதந்து கொண்டிருந்தது. அப் பெண்ணும் சிறுமியும் புகைவண்டியிலிருந்து இறங்கி, புறக்கணிக்கப்பட்ட நிலையத்தைக் கடந்து தெருவின் நிழலான பகுதியை நோக்கி நடந்தனர். நிலையத்தின் நடைபாதை ஓடுகள் ஊடே வளர்ந்திருந்த புற்களால் பிளவுபட்டிருந்தன.
பாதுகாப்பான வாதுமை மர நிழலிலேயே நடந்து, மக்களின் தூக்கத்தைக் கலைக்காமல் அப்பெண்ணும் சிறுமியும் நகரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வட்டாரத்திருச்சபை குருமாரின் வீட்டிற்குச் சென்றனர் கதவின் மேலிருந்த இரும்பு வலையைத் தன் விரல் நகங்களால் அப்பெண் பிறாண்டினாள். ஒரு நிமிடம் காத்திருந்து விட்டு மீண்டும் பிறாண்டினாள் உள்ளே ஒரு மின் விசிறி ரீங்கரித்துக்கொண்டிருந்தது. காலடி ஓசை எதையும் அவர்கள் கேட்க வில்லை. கதவு " கீறிச் என்ற சப்தத்துடன் திறக்கப்பட்டதையும், உடனே எச்சரிக்கை உணர்வுடன் ஒரு குரல் யாரது?" என்று கேட்டதையும் அவர்க ளால் தெளிவாகக்கேட்க முடியவில்லை. இரும்புவலை வழியாகப்பார்க்க அப் பெண் முயற்சித்தாள்.
எனக்கு மதகுருவைப் பார்க்வேண்டும்" என்றாள் அப்பெண்.
அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார்
மிகவும் அவசரம்' அப்பெண் வலியுறுத்தினாள் அவள் குரலில் ஒரு தீர்மானம் தெரிந்தது. ஒசையின்றி கதவு லேசாக திறக்கப்பட்டது. இரும்பின் வண்ணத்தோடு கூடிய தலைமயிரையும், வெளுத்த தோலையுமுடைய ஒரு குண்டான பெண் வெளியே வந்தாள். கனத்த லென்ஸ்களுக்குப் பின்னால் அவள் கண்கள் மிகச்சிறியதாகத் தென்பட்டன. கதவை முழுதாகத் திறந்து
உள்ளே வாருங்கள் என்று சொன்னாள்.
பூக்களின் பழைய வாசனை வியாபித்திருந்த ஓர் அறைக்குள் நுழைந்தனர். அந்த வீட்டுப்பெண் அவர்களை ஒரு மரபெஞ்சு அருகே அழைத்துச் சென்று அவர்களே அதில் உட்காருமாறு சைகை செய்தாள் சிறுமி உட்கார்ந்தாள். இரண்டு கைகளிலும் கைப்பையைப் பிடித்த வண்ணம், தன்னை மறந்த நிலையில் அவளின் தாய் நின்றுகொண்டேயிருந்தாள். மின்விசிறியின் ஒசையை மீறி எந்த சப்தமும் கேட்கவில்லை.
15
அறைக்கோடியிலிருந்த கதவு வழியாக அந்த வீட்டுப்பெண் மீண்டும் தோன்றினாள் மூன்று மணிக்குப்பிறகு உங்களை அவர் வரச்சொல்கிறார் என்று தாழ்ந்த குரலில் அவள் சொன்னாள் ஐந்து நிமிடங்களுக்கு முன்தான் அவர் படுத்தார்."
மூன்றரை மணிக்கு ரயில் கிளம்புகிறது என்றாள் வந்தவள். அது ஒரு சிறிய தன்னுறுதி வாய்ந்த பதில். ஆனால் அவள் குரல் இனிமையாகவும் அடங்கிய தொனியோடும் இருந்தது. வீட்டுப்பெண் முதல் முறையாகச் சிரித்தாள். V,
*சரி* என்றாள்.
இரண்டு மணியிருக்கும். அரைத்தூக்க நிலையால் அழுத்தப்பட்டு நகரமே நண்பகல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது, கடைகள், நகர அலுவலகங்கள், அரசுப் பள்ளிக்கூடம் ஆகியவை பதினோரு மணிக்கு மூடப்பட்டு, புகைவண்டி திரும்பிப்போகும் நேரமான நான்கு மணிக்கு சற்று முந்திவரை திறக்கப்படுவதில்லை புகைவண்டி நிலையத்திற்கு எதிராக உள்ள மதுக்கூடமும், கூட்டுச் சூதாட்டக்கூடமும் இணைந்த உணவு விடுதி, சந்தைக்கூடத்தின் ஒருபக்கம் இருந்த தந்தி அலுவலகம் ஆகியவை மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருந்தன வாழைத்தோட்ட நிறுவனத்தின் மாதிரியில் பெரும்பாலும் கட்டப்பட்டிருந்த வீடுகள் உட்பக்கமாய் பூட்டப்பட்டு, அவைகளின் திரைச் சீலைகள் இறக்கி விடப்பட்டிருந்தன. சில வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த வெப்பத்தின் காரணமாக உள்முற்றத்தில் அமர்ந்து சாப்பிட்டனர் மற்றவர்கள், வாதுமை மர நிழலில் நாற்காலிகளை சுவரோரம் போட்டு அமர்ந்துகொண்டு தெருவிலேயே நண்பகல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
அறைக்கோடிக் கதவு மீண்டும் மூடப்பட்டபோது, அப்பெண் தன் மகளருகில் உட்கார்ந்தாள் குறுகலான காத்திருக்கை அறை வறியதாகவும் சுத்தமாகவும் இருந்தது. அறையைப் பிரித்த மர அடைப்பின் அடுத்த பக்கம் மெழுகுத்துணி விரிக்கப்பட்ட ஒர் அலுவல் மேஜை இருந்தது மேஜையின் மேல் ஒரு பழங்கால டைப்ரைட்டரும், ஒரு மலர் ஜாடியும் இருந்தன. அடுத்து வட்டாரத் திருச்சபையின் பதிவேடுகள் இருந்தன. திருமணமாகாத ஒருபெண்ணால் சீராக நிர்வகிக்கப்படும் ஓர் அலுவலகம் அது என்பதைக்காண முடிந்தது. அறைக்கோடிக்கதவு திறக்கப்பட்டது. கைக்குட்டையால் தன கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு மதகுரு வெளிப்பட்டார். அவர் தன்னுடைய கண்ணாடியை அணிந்த பிறகுதான், கதவைத்திறந்த பெண்ணின் சகோதரர் தான் அவர் என்பது தெரிய வந்தது. ད།
"நான் உங்களுக்கு எவ்வகையில் உதவமுடியும்? என்று அவர் கேட்டார். "சுடுகாட்டின் சாவி என்றாள் அப்பெண், لي"
மலர்களை மடியில் வைத்துக்கொண்டு, பெஞ்சின் அடியில் கால்களைக் குறுக்காக வைத்து சிறுமி அமர்ந்திருந்தாள். மதகுரு சிறுமியைப் பார்த்தார்; பின் அப்பெண்ணைப் பார்த்தார். பிறகு ஜன்னலில் கம்பிவலை வழியாக பிரகாசமான மேகங்களற்ற வானத்தைப் பார்த்தார்.16
இந்த வெப்பத்தில். என்றார் அவர் சூரியன் மறையும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்
அப்பெண் அமைதியாக தலையசைத்தாள் மதகுரு மரத்தடுப்பின் மறுபக்கம் சென்றார், அலமாரியிலிருந்து மெழுகுத்துணி உறையோடுள்ள ஒரு புத்தகம், ஒரு மர எழுதுகோல் கைப்பிடி, ஒரு மைப்புட்டி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மேஜையருகில் அமர்ந்தார். தலையில் அவருக்கு இல்லாதிருந்த முடியை ஈடுகட்டுவது போலவும் அதற்கு மேலாகவும் அவர் கைகளில் நிறைய முடி இருந்தது.
எந்தக் கல்லறையைப் பார்க்கப்போகிறீர்கள்' என்று கேட்டார்.
கார்லோஸ் சென்ட்டினோவின் கல்லயை என்றாள் அப்பெண்
யார் அது?
போன வாரம் இங்கு கொல்லப்பட்ட திருடன்தான் அவன்' என்று அதே குரலில் சொன்னாள் நான் அவனுடைய தாய்
மதகுரு அவளை ஆராய்ந்தார். அமைதியான சுய கட்டுப்பாட்டோடு அவள் அவரை உற்றுப்பார்ததாள். மதகுரு வெட்கப்பட்டார். அவர் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டு எழுத ஆரம்பித்தார். அந்தப்பக்கத்தை எழுதி நிரப்பியவுடன், அவர் அப்பெண்ணை அவளைப்பற்றிய விவரங்களை சொல்லச் சொன் னார் அவள் தன்னைப்பற்றி துல்லியமான விவரங்களைத் தயக்கமின்றி வாசிப்பதை போல சொன்னாள் மதகுரு வியர்க்க ஆரம்பித்தார். சிறுமி தன்னுடைய இடது பாதணியின் கொக்கியை அவிழ்த்து விட்டு, குதிகாலை வெளியே எடுத்து அதை பெஞ்சின் சட்டத்தின்மீது வைத்தாள். வலது குதிகாலையும் அதேமாதிரி செய்தாள்.
போன வாரம் திங்கட்கிழமை காலை மூன்று மணிக்கு அங்கிருந்து சில வளாகங்கள் தள்ளி அது ஆரம்பித்தது உபயோகமற்ற பல உதிரிச்சாமான் கள் நிரம்பிய ஒரு விட்டில் வசித்து வந்த ரெபக்கா என்னும் தனியான ஒரு விதவை, வெளிப்பக்கத்திலிருந்து முன்கதவைத் தள்ளித் திறக்கும் முயற்சியில் யாரோ ஈடுபடும் சத்தத்தைக் கேட்டாள் அச்சத்தம் மழைத்தூறலின் ஒலியையும் மீறிக்கேட்டது அவள் எழுந்தாள் கர்னல் ஆரிலியானே ப்யூண்டியா காலத்திற்குப்பின் யாருமே சுடாத ஒரு பழங்காலத்து ரிவால்வாரைத் தன்னு டைய சிறிய தனியறையில் துருவித்தேடி எடுத்துக்கொண்டு, விளக்குகளைப் போடாமல் புழங்கும் அறைக்குள் சென்றாள் பூட்டில் ஏற்படும் ஒலியைக் காட்டிலும், இருபத்தெட்டு வருடத் தனிமை அவளுள் உண்டாக்கிய பயம், கதவு இருக்குமிடத்திற்கும், பூட்டின் உயரத்திற்கும் அவளை அதிகம் பழக்கப்படுத்தி யிருந்தது. ஆயுதத்தை இரண்டு கைகளாலும் இறுகப்பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டு துப்பாக்கியின் விசையிழுப்பை நெரித்தாள். அவள் வாழ்வில் முதல் தடவையாக அப்போதுதான் துப்பாக்கியால் சுட்டாள். துப்பாக்கி வெடித்தபின் உடனடியாக, துத்தநாகக் கூரையின்மேல் விழும் மழைத்தூறலின் ஒலியைத் தவிர வேறு எதையும் அவள் கேட்கவில்லை. பின் உலோகத் தனமான ஒரு மோதல் சப்தத்தை சிமெண்ட்டுத்திண்ணையில் கேட்டாள்;
இனிமையான ஆனால் பயங்கரமாக முற்றும் சோர்வடைந்த குரலொன்று தணிந்த தொனியில் "ஐயோ, அம்மா என்று அலறியதையும் கேட்டாள். அந்த விட்டின் முன் இறந்து கிடந்தவனைக் காலையில் பார்த்தபோது அவன் மூக்கு தூள்தூளாக சிதறியிருந்தது வண்ணக்கோடுகள் போட்ட சணல்துணியிலான சட்டையும், கயிறு ஒன்றை பெல்ட்டிற்குப் பதிலாகவும் அணிந்திருந்தான். அவன் பாதணிகள் அணிந்திருக்கவில்லை. நகரத்தில் யாருக்கும் இவனைத் தெரியவில்லை.
எழுதி முடித்தபோது, எனவே அவன் பெயர் கார்லோஸ் ஸென்டனோ' என்று மதகுரு முணு முணுத்தார்.
ஸென்டனோ ஆயலா' என்றாள் அந்தப்பெண். "அவன் என்னுடைய ஒரே மகன் மதகுரு தனியறைக்குச் சென்றார் கதவின் உட்புறத்தில் துருப்பிடித்த இரண்டு பெரிய சாவிகள் தொங்கின; சிறுமி, அவளுடைய தாய் சிறுமியாக இருந்தபோது நினைத்த மாதிரி, அச்சாவிகள் புனித பீட்டரின் சாவிகள் என்று நினைத்தாள், மதகுரு கூட ஏதோ ஒருகட்டத்தில் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். அவர் அச்சாவிகளை எடுத்து, திறந்திருந்த நோட்டுப்புத்தகத்தின் மீது வைத்து, அப்போதுதான் எழுதிமுடிக்கப்பட்ட பக்கத்தின் ஒர் இடத்தைத் தன் ஆட்காட்டி விரலால் காண்பித்து இங்கே கையெழுத்திடு என்று அப் பெண்ணிடம் கூறினார்,
கைப்பையை கைக்குக்கீழ் வைத்துக்கொண்டு அப்பெண் தன் பெயரைக் கிறுக்கினாள் சிறுமி பூக்களைப்பறித்துக்கொண்டு, கால்களைத்தேய்த்து நடந்து மர அடைப்பை அடைந்தாள்; தன் தாயைக் கவனத்துடன் பார்த்தாள். மதகுரு பெருமூச்சு விட்டார்.
அவனைச் சரியான வழிக்குத்திருப்ப நீ எப்போதும் முயற்சித்ததில்லயா? அவன் மிகவும் நல்ல மனிதன்' ܨܠܐ மதகுரு முதலில் அப்பெண்ணையும் பின் அச்சிறுமியையும் பார்த்தார். அவர்கள் அப்போது அழப்போவதில்லை என்பதை அவர் ஒரு மதம்சார்ந்த ஆச்சரியத்தோடு உணர்ந்தார். அப்பெண் அதே தொனியில் தொடர்ந்தாள்
* யாருடைய உணவையும் திருடாதே" என்று அவனுக்குச் சொன்னேன் அதைக் கேட்டுக்கொண்டான். ஆனால் அதற்கு முன்பு, அவன் குத்துச்சண்டை போடும்போது குத்தப்பட்டதன் காரணமாக மிகவும் சோர்வடைந்து படுக்கை யில் மூன்று நாட்கள் கழிப்பது வழக்கம்'
"அவனுடைய எல்லா பற்களையும் எடுக்க வேண்டியதாயிற்று' என்று இடைமறித்தாள் சிறுமி.
அது உண்மை என்று அப்பெண் ஒப்புக்கொண்டாள்.
நான் சாப்பிட்ட ஒவ்வொரு வாய் உணவும், அவன் சனிக்கிழமை இரவுகளில் வாங்கிய அடிகளின் சுவையோடு இருந்தது.'18
"கடவுளின் விருப்பம் ஆராய முடியாதது என்றார் மதகுரு. இதை அவர் அதிக நம்பிக்கையற்றே சொன்னர், இதை அவர் சொன்னதற்கு அனுபவம் அவரை சந்தேகமுறுபவராக ஆக்கியிருந்தது ஒரு காரணம் வெப்பமும் ஒரு காரணம் சூரிய வெப்பத்தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள அவர்கள் தலைகளை மூடிக்கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினார், மிகுந்த தூக்கக்கலக்கத்தோடு கொட்டாவி விட்டுக்கொண்டு கார்லோஸ் ஸென்டனொவின் கல்லறையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அவர்களுக்கு விவரங்கள் சொன்னார், திரும்பி வரும்போது அவர்கள் கதவைத்தட்ட வேண்டியதில்லை. கதவுக்குக்கீழ் சாவிகளை வைக்கவேண்டும் அதே இடத்தில் அவர்களால் முடிந்தால், மாதா கோயிலுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் அவருடைய கட்டளைகளை அப் பெண் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டாள். ஆனால் சிரிக்காமலேயே அவருக்கு நன்றி சொன்னாள்.
உலோக வலையில் மூக்கைப் பதித்தவண்ணம் யாரோ உள்ளே பார்த்துக் கொண்டிருப்பதை, தெருக் கதவைத் திறக்குமுன்னே அவர் கவனித்தார். வெளியே குழந்தைகளின் கும்பலொன்று இருந்தது கதவு முழுதாகத்திறக்கப் பட்டபோது குழந்தைகள் சிதறி ஓடின. சாதாரணமாக அந்த நேரத்தில் தெருவில் யாரும் இருக்கமாட்டார்கள். இப்போது குழந்தைகள் மட்டுமின்றி வேறு பலரும் வாதுமை மரங்களின் கீழ் இருந்தனர். வெப்பத்தில் நீந்திக் கொண்டிருந்த தெருவை மதகுரு ஆராய்ந்தார். பின் புரிந்து கொண்டார். மென்மையாகக் கதவை மீண்டும் மூடினர்.
அந்தப்பெண்ணைப் பார்க்காமலேயே "கொஞ்சம் பொறு' என்றார், அவருடைய சகோதரி அறைக்கோடிக் கதவு வழியாகத் தோன்றினாள். தன்னுடைய இரவுச்சட்டையின்மேல் ஒரு கறுப்புநிற சிறுசட்டை அணிந்திருந் தாள்; தலைமுடி தோளின் மேல் இறங்கியிருந்தது. அவள் மதகுருவை அமைதியாகப் பார்த்தாள்.
* அங்கே என்ன?’ என்று கேட்டார்.
மக்கள் பார்த்து விட்டனர்" என்று அவருடைய சகோதரி முணுமுணுத்தாள்.
*உள் முற்றத்திற்குச் செல்லும் கதவு வழியாக நீ போவது நல்லது என்றார் மதகுரு.
* அங்கும் அதேதான். எல்லாரும் ஜன்னல்களின் பக்கம் உள்ளனர் என்றாள் அவர் சகோதரி
அதுவரை அந்தப்பெண் எதுவும் புரிந்துகொண்ட மாதிரி தோன்றவில்லை. கம்பிவலை வழியாக தெருவைப்பார்க்க அவள் முயற்சித்தாள். பின் சிறுமியிடமிருந்து மலர்க்கொத்தை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நகர ஆரம்பித்தாள். சிறுமி அவளைத் தொடர்ந்தாள்.
* சூரியன் மறையும்வரை காத்திருஎன்று மதகுரு சொன்னார், *நீ உருகிவிடுவாய் கொஞ்சம் பொறு. நான் உனக்கு ஒரு குடை தருகிறேன்" என்று அறையின் பின்பக்கமிருந்து அசையாமல் நின்ற வண்ணம் அவரின் சகோதரி கூறினாள்.
நன்றி. இதில் எங்களுக்கொன்றும் சிரமமில்லை" என்றாள் அப்பெண் சிறுமியின் கையைப் பிடித்தவண்ணம் அவள் தெருவிற்குள் சென்றாள்.

- மொழிபெயர்ப்பு: ஆர். சிவகுமார்

TUESDAY SIESTA
Gabriel Garcia Marquez

Translated from the Spanish by J. S. Bernstein



The train emerged from the quivering tunnel of sandy rocks, began to cross the symmetrical, interminable banana plantations, and the air be-came humid and they couldn't feel the sea breeze any more. A stifling blast of smoke came in the car window. On the narrow road parallel to the railway there were oxcarts loaded with green bunches of bananas. Beyond the road, in uncultivated spaces set at odd intervals there were offices with electric fans, red-brick build-ings, and residences with chairs and little white tables on the terraces among dusty palm trees and rosebushes. It was eleven in the morning, and the heat had not yet begun.

"You'd better close the window," the woman said. "Your hair will get full of soot."

The girl tried to, but the shade wouldn't move because of the rust.

They were the only passengers in the lone third-class car. Since the smoke of the locomo-tive kept coming through the window, the girl left her seat and put down the only things they had with them: a plastic sack with some things to eat and a bouquet of flowers wrapped in newspaper. She sat on the opposite seat, away from the window, facing her mother. They were both in severe and poor mourning clothes.

The girl was twelve years old, and it was the first time she'd ever been on a train. The woman seemed too old to be her mother, because of the blue veins on her eyelids and her small, soft, and shapeless body, in a dress cut like a cassock. She was riding with her spinal column braced firmly against the back of the seat, and held a peeling patent-leather handbag in her lap with bothhands. She bore the conscientious serenity of someone accustomed to poverty.

By twelve the heat had begun. The train stopped for ten minutes to take on water at a station where there was no town. Outside, in the mysterious silence of the plantations, the shadows seemed clean. But the still air inside the car smelled like untanned leather. The train did not pick up speed. It stopped at two identi-cal towns with wooden houses painted bright colors. The woman's head nodded and she sank into sleep. The girl took off her shoes. Then she went to the washroom to put the bouquet of flowers in some water.

When she came back to her seat, her mother was waiting to eat. She gave her a piece of cheese, half a corn-meal pancake, and a cookie, and took an equal portion out of the plastic sack for herself. While they ate, the train crossed an iron bridge very slowly and passed a town just like the ones before, except that in this one there was a crowd in the plaza. A band was play-ing a lively tune under the oppressive sun. At the other side of town the plantations ended in a plain which was cracked from the drought.

The woman stopped eating.

"Put on your shoes," she said.

The girl looked outside. She saw nothing but the deserted plain, where the train began to pick up speed again, but she put the last piece of cookie into the sack and quickly put on her shoes. The woman gave her a comb.

"Comb your hair," she said.

The train whistle began to blow while the girl was combing her hair. The woman dried the sweat from her neck and wiped the oil from her face with her fingers. When the girl stopped combing, the train was passing the outlying houses of a town larger but sadder than the ear-lier ones.

"If you feel like doing anything, do it now," said the woman. "Later, don't take a drink any-where even if you're dying of thirst. Above all, no crying."

The girl nodded her head. A dry, burning wind came in the window, together with the locomotive's whistle and the clatter of the old cars. The woman folded the plastic bag with the rest of the food and put it in the handbag. For a moment a complete picture of the town, on that bright August Tuesday, shone in the window. The girl wrapped the flowers in the soaking-wet newspapers, moved a little farther away from the window, and stared at her mother. She re-ceived a pleasant expression in return. The train began to whistle and slowed down. A moment later it stopped.

There was no one at the station. On the other side of the street, on the sidewalk shaded by the almond trees, only the pool hall was open. The town was floating in the heat. The woman and the girl got off the train and crossed the abandoned station—the tiles split apart by the grass growing up between—and over to the shady side of the street.

It was almost two. At that hour, weighted down by drowsiness, the town was taking a si-esta. The stores, the town offices, the public school were closed at eleven, and didn't reopen until a little before four, when the train went back. Only the hotel across from the station, with its bar and pool hall, and the telegraph of-fice at one side of the plaza stayed open. The houses, most of them built on the banana com-pany's model, had their doors locked from in-side and their blinds drawn. In some of them it was so hot that the residents ate lunch in the patio. Others leaned a chair against the wall, inthe shade of the almond trees, and took their siesta right out in the street.

Keeping to the protective shade of the al-mond trees, the woman and the girl entered the town without disturbing the siesta. They went directly to the parish house. The woman scratched the metal grating on the door with her fingernail, waited a moment, and scratched again. An electric fan was humming inside. They did not hear the steps. They hardly heard the slight creaking of a door, and immediately a cau-tious voice, right next to the metal grating: "Who is it?" The woman tried to see through the grating.

"I need the priest," she said. "He's sleeping now." "It's an emergency," the woman insisted. Her voice showed a calm determination. The door was opened a little way, noise-lessly, and a plump, older woman appeared, with very pale skin and hair the color of iron. Her eyes seemed too small behind her thick eye-glasses.

"Come in," she said, and opened the door all the way.

They entered a room permeated with an old smell of flowers. The woman of the house led them to a wooden bench and signaled them to sit down. The girl did so, but her mother re-mained standing, absent-mindedly, with both hands clutching the handbag. No noise could be heard above the electric fan.

The woman of the house reappeared at the door at the far end of the room. "He says you should come back after three," she said in a very low voice. "He just lay down five minutes ago." "The train leaves at three-thirty," said the woman.

It was a brief and self-assured reply, but her voice remained pleasant, full of undertones. The woman of the house smiled for the first time.

"All right," she said.

When the far door closed again, the woman sat down next to her daughter. The narrow wait-ing room was poor, neat, and clean. On the other side of the wooden railing which divided the room, there was a worktable, a plain one with an oilcloth cover, and on top of the table a primitive typewriter next to a vase of flowers. The parish records were beyond. You could see that it was an office kept in order by a spinster.

The far door opened and this time the priest appeared, cleaning his glasses with a handker-chief. Only when he put them on was it evident that he was the brother of the woman who had opened the door.

"How can I help you?" he asked.

"The keys to the cemetery," said the woman.

The girl was seated with the flowers in her lap and her feet crossed under the bench. The priest looked at her, then looked at the woman, and then through the wire mesh of the window at the bright, cloudless sky.

"In this heat," he said. "You could have waited until the sun went down."

The woman moved her head silently. The priest crossed to the other side of the railing, took out of the cabinet a notebook covered in oilcloth, a wooden penholder, and an inkwell, and sat down at the table. There was more than enough hair on his hands to account for what was missing on his head.

"Which grave are you going to visit?" he asked.

"Carlos Centeno's," said the woman.

"Who?"

"Carlos Centeno," the woman repeated.

The priest still did not understand.

"He's the thief who was killed here last week," said the woman in the same tone of voice. "I am his mother."

The priest scrutinized her. She stared at him with quiet self-control, and the Father blushed. He lowered his head and began to write. As he filled the page, he asked the woman to identify herself, and she replied unhesitatingly, with pre cise details, as if she were reading them. The Father began to sweat. The girl unhooked the buckle of her left shoe, slipped her heel out of it, and rested it on the bench rail. She did the same with the right one.

It had all started the Monday of the previous week, at three in the morning, a few blocks from there. Rebecca, a lonely widow who lived in a house full of odds and ends, heard above the sound of the drizzling rain someone trying to force the front door from outside. She got up, rummaged around in her closet for an ancient revolver that no one had fired since the days of Colonel Aureliano Buendia,1 and went into the living room without turning on the lights. Ori-enting herself not so much by the noise at the lock as by a terror developed in her by twenty-eight years of loneliness, she fixed in her imagi-nation not only the spot where the door was but also the exact height of the lock. She clutched the weapon with both hands, closed her eyes, and squeezed the trigger. It was the first time in her life that she had fired a gun. Immediately after the explosion, she could hear nothing ex-cept the murmur of the drizzle on the galva-nized roof. Then she heard a little metallic bump on the cement porch, and a very low voice, pleasant but terribly exhausted: "Ah, Mother." The man they found dead in front of the house in the morning, his nose blown to bits, wore a flannel shirt with colored stripes, everyday pants with a rope for a belt, and was barefoot. No one in town knew him.

"So his name was Carlos Centeno," mur-mured the Father when he finished writing.

"Centeno Ayala,"2 said the woman. "He was my only boy."

The priest went back to the cabinet. Two big rusty keys hung on the inside of the door; the girl imagined, as her mother had when she was a girl and as the priest himself must have imagined at some time, that they were Saint Peter's keys.3 He took them down, put them on the open note-book on the railing, and pointed with his forefin-ger to a place on the page he had just written, looking at the woman.

"Sign here."

The woman scribbled her name, holding the handbag under her arm. The girl picked up the flowers, came to the railing shuffling her feet, and watched her mother attentively.

The priest sighed.

"Didn't you ever try to get him on the right track?"

The woman answered when she finished signing.

"He was a very good man."

The priest looked first at the woman and then at the girl, and realized with a kind of pious amazement that they were not about to cry. The woman continued in the same tone:

"I told him never to steal anything that any-one needed to eat, and he minded me. On the other hand, before, when he used to box, he used to spend three days in bed, exhausted from being punched."

"All his teeth had to be pulled out," inter-rupted the girl.

"That's right," the woman agreed. "Every mouthful I ate those days tasted of the beatings my son got on Saturday nights."

"God's will is inscrutable," said the Father.

But he said it without much conviction, partly because experience had made him a little skeptical and partly because of the heat. He sug-gested that they cover their heads to guard against sunstroke. Yawning, and now almost completely asleep, he gave them instructions about how to find Carlos Centeno's grave. When they came back, they didn't have to knock. They should put the key under the door; and in the same place, if they could, they should put an offering for the Church. The woman listened to his directions with great attention, but thanked him without smiling.

The Father had noticed that there was some-one looking inside, his nose pressed against the metal grating, even before he opened the door to the street. Outside was a group of children. When the door was opened wide, the children scattered. Ordinarily, at that hour there was no one in the street. Now there were not only chil-dren. There were groups of people under the almond trees. The Father scanned the street swimming in the heat and then he understood. Softly, he closed the door again.

"Wait a moment," he said without looking at the woman.

His sister appeared at the far door with a black jacket over her nightshirt and her hair down over her shoulders. She looked silently at the Father.

"What was it?" he asked.

"The people have noticed," murmured his sister.

"You'd better go out by the door to the patio," said the Father.

"It's the same there," said his sister. "Every-body is at the windows."

The woman seemed not to have understood until then. She tried to look into the street through the metal grating. Then she took the bouquet of flowers from the girl and began to move toward the door. The girl followed her.

"Wait until the sun goes down," said the Fa-ther.

"You'll melt," said his sister, motionless at the back of the room. "Wait and I'll lend you a parasol."

"Thank you," replied the woman. "We're all right this way."

She took the girl by the hand and went into the street.

another OCR

செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் - கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

மணற்பாங்கான பாறைகளால் ஆன அதிர்வுறும் சுரங்க வழியிலிருந்து புகைவண்டி வெளிவந்தது; சீராக அமைந்த முடிவே இல்லாத வாழைத்தோட் டங்களைக் கடக்க ஆரம்பித்தது; காற்று ஈரமாக மாறியது; அவர்களால் கடற் காற்றை உணர முடியவில்லை. மூச்சுத்திணறவைக்கும் முழு வேகத்தில் பெட்டி, யின் ஜன்னல் வழியாக புகை வந்தது. பசும் வாழைத்தார்கள் ஏற்றப்பட்ட மாட்டுவண்டிகள், தண்டவாளங்களுக்கு இணையாகச் செல்லும் குறுகியபாதை யில் போய்க்கொண் டிருந்தன. பாதைக்கு அப்பால், விவசாயம் செய் யப்படாமல் அங்கங்கே இருந்த நிலப்பகுதிகளில் மின்விசிறிகள் உள்ள அலு வலகங்களும் சிவப்பு செங்கற்களாலான கட்டடங்களும் இருந்தன. பனை மரங் களுக்கும் ரோஜாச்செடிகளுக்கும் இடையே, நாற்காலிகளும் சிறிய வெள்ளை மேஜைகளும் உள்ள மாடி வீடுகள் இருந்தன. காலை பதினோரு மணி வெப்பம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. 

'ஜன்னலை மூடிவிடு; புகைக்கரி உன் முடியில் நிறையச் சேர்ந்துவிடும்' என்று அப்பெண் சொன்னாள். அந்தச் சிறுமி முயற்சி செய்தாள்; ஆனால் துரு இருந்ததால் ஜன்னல் கதவு நகரவில்லை. 

அந்தத் தனிமையான மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அவர்கள் இருவர் மட்டுமே பயணிகள். ஜன்னல் வழியாகத்தொடர்ந்து புகை வந்துகொண்டிருந் ததால், அந்தச்சிறுமி அவர்கள் கொண்டு வந்திருந்த தின்பண்டங்கள் உள்ள பிளாஸ்டிக் பையையும், செய்தித்தாளில் சுற்றப்பட்ட மலர்க்கொத்தையும் கீழே வைத்துவிட்டு தன் இடத்தை விட்டு நீங்கினாள். ஜன்னலிலிருந்து தள்ளி தன் அம்மாவைப் பார்க்கும் வகையில் எதிர்த்த இருக்கையில் அமர்ந்தாள். அவர்கள் இருவரும் கடுந்துன்பத்தை வெளிப்படுத்தும் எளிய துயர்ச்சின்ன உடையிலிருந்தனர். 

அந்தச் சிறுமிக்கு பன்னிரெண்டு வயது. முதல் முறையாக புகைவண்டி யில் பிரயாணம் செய்கிறாள். கண் இரப்பைகள்மேல் தெரிந்த நீல இரத்தக் குழாய்களும் குருமார்களின் நீண்ட உள் அங்கி மாதிரி தைக்கப்பட்டிருந்த ஆடையை அணிந்த அவளின் மென்மையான, சிறிய, சீராக இல்லாத உடம் பும் அந்தச் சிறுமிக்குத் தாயாக இருப்பதை விடவும் கூடுதலான வயதை அப் பெண்ணுக்குக் கொடுத்தன. முதுகு இருக்கையின் பின்புறம் இருக்கா மல் பொருந்தும் வண்ணம் அமர்ந்து அப்பெண் பிரயாணம் செய்து கொண்டிருந் தாள். மெரு கூட்டப்பட்ட தோலால் ஆன பையைத் தன் மடி மீது வைத்து இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டிருந்தாள். வறுமைக்குப் பழக்கப்பட்ட ஒருவரின் மனச்சான்றுள்ள சாந்தம் அப்பெண்ணிடம் இருந்தது. க 

13 

பன்னிரெண்டு மணிக்கு வெப்பம் ஆரம்பித்தது. நகரமில்லாத ஒரு நிலை யத்தில் தண்ணீர் நிரப்பிக்கொள்வதற்காகப் புகைவண்டி பத்து நிமிடங்கள் நின்றது. வெளியே, வாழைத்தோட்டங்களின் புதிரான அமைதியில், நிழல் கள் ப்தளிவா கத் தெரிந்தன. ஆனால் ரயில் பெட்டிக்குள்ளிருந்த சலன மற்ற காற்று தெனிடப்படாத தோல் மாதிரி வாடை வீசியது. புகைவண்டி வேகம் எடுக்கவில்லை. பிரகாசமான வர்ணங்கள் அடிக்கப்பட்ட மரவீடுகளுடைய ஒரே மாதிரி அமைப்புள்ள இரண்டு நகரங்களில் புகைவண்டி நின்றது. அப்பெண் ணின் தலை ஆடியது. அவள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். சிறுமி தன்னுடைய பாதணிகளை அகற்றினாள். பின் மலர்க்கொத்தை நீரில் நனைப்பதற்காக அவள் கழிவறைக்குச் சென்றாள். 

அவள் தன் இருக்கைக்குத் திரும்பியபோது அவள் தாய் சாப்பிடுவதற்குக் காத்திருந்தாள். ஒரு துண்டு பாலாடைக்கட்டி, பா தி மக்காச்சோள அடை, கேக் ஆகியவற்றை அந்தப்பெண் தன் மகளுக்குக் கொடுத்துவிட்டு, அதே அளவு தின்பண்டங்களை பிளாஸ்டிக் பையிலிருந்து தனக்காக எடுத்துக்கொண் டாள். அவர்கள் சாப்பிட்டுக்கொண் டிருக்கும்போது புகைவண்டி ஓர் இரும்புப் பாலத்தை மிக மெதுவாகக் கடந்தது. முன் கடந்த நகரங்களைப்போலுள்ள பிறிதொரு நகரத்தைக் கடந்தது புகைவண்டி. ஆனால் இந்நகரத்தின் சந்தைக் கூடுமிடத்தில் கூட்டம் இருந்தது. கடும் வெய்யிலில் ஓர் இசைக்குழு ஒர் இனிய ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தது. நகரத்தின் அடுத்த பக்கத்தில் வறட் சியால் பிளக்கப்பட்ட நிலப்பகுதியின் ஆரம்பத்தில் வாழைத் தோட்டங்கள் 

முடிந்திருந்தன. 

அப்பெண் சாப்பிடுவதை நிறுத்திவிட்டுச் சொன்னாள். 'உன் பாதணிகளை அணிந்துகொள்' சிறுமி வெளியே பார்த்தாள். புகைவண்டி மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்து பாழ் நிலத்தைத்தவிர அவளால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. கேக்கின் கடைசித்துண்டை பையில் போட்டுவிட்டு பாதணிகளை அணிந்துகொண்டாள். தாய் அவளுக்கு ஒரு சீப்பைக்கொடுத்து, 'தலைவாரிக் கொள்' என்றாள். 

சிறுமி தலைவாரிக் கொண்டிருந்தபோது புகைவண்டி ஒலிகொடுக்க ஆரம் பித்தது. கழுத்திலிருந்த வியர்வையையும், முகத்திலிருந்த எண்ணெய்ப்பசை யையும் அப்பெண் தன் விரல்களால் துடைத்தாள். தலைவாருவதை அச்சிறுமி நிறுத்தியபோது, முன் வந்த நகரங்களைவிட பெரிதாகவும் சோகமாகவும் இருந்த ஒரு நகரத்தின் எல்லையிலிருந்த வீடுகளை புகைவண்டி கடந்து கொண் - டிருந்தது. - 'ஏதாவது செய்யவேண்டுமென்று தோன்றினால் இப்போதே செய்து கொள். பிறகு, தாகத்தினால் நீ இறக்க வேண்டியிருந்தா லும் எங்கேயும் எந்த பானத்தையும் நீ குடிக்கக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேல் நீ அழக்கூடாது' என்று அப்பெண் தன் மகளிடம் சொன்னாள். 

சிறுமி தலையசைத்தாள். பழைய பெட்டிகளின் சப்தம், புகைவண்டியின் ஊதல் ஒலி ஆகியவற்றோடு ஓர் உலர்ந்த வெப்பமான காற்று ஜன்னல் வழி யாக உள்ளே வந்தது. உணவின் மீதத்தோடு பிளாஸ்டிக் பையை மடித்து 

அதைத் தன் கைப்பையில் போட்டாள் அப்பெண். பிரகாசமான ஆகஸ்ட் மாத செவ்வாய்க்கிழமையில், அந்நகரத்தின் முழுக்காட்சியும் ஒரு கணத்துக்கு ஜன்னல் வழியாக ஒளிர்ந்தது. நனைந்த செய்தித்தாளில் பூக்களைச் சுற்றிக் கொண்டு அச்சிறுமி ஜன்னலிலிருந்து சற்று விலகி தன் அம்மாவை வெறித்து நோக்கினாள். பதிலாக ஒரு கனிவான பார்வையைப் பெற்றாள். புகைவண்டி ஒலிகொடுக்க ஆரம்பித்து வேகத்தைக் குறைந்தது. சிறிதுநேரம் கழித்து நின்ற து. , 

நிலையத்தில் ஒருவருமில்லை. தெருவின் அடுத்த பக்கம், வாதும்ை மரங்க ளால் நிழலூட்டப்பட்ட பக்க நடைபாதையில் கூட்டுச்சூதாட்டக்கூடம் மட்டும் திறந்திருந்திருந்தது. நகரம் வெம்மையில் மிதந்து கொண்டிருந்தது. அப் பெண்ணும் சிறுமியும் புகைவண்டியிலிருந்து இறங்கி, புறக்கணிக்கப்பட்ட நிலையத்தைக் கடந்து தெருவின் நிழலான பகுதியை நோக்கி நடந்தனர். நிலை யத்தின் நடைபாதை ஓடுகள் ஊடே வளர்ந்திருந்த புற்களால் பிளவுபட்டிருந் தன். 

பாதுகாப்பான வாதுமை மர நிழலிலேயே நடந்து, மக்களின் தூக்கத் தைக் கலைக்கா மல் அப்பெண்ணும் சிறுமியும் நகரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் வட்டாரத்திருச்சபை குருமாரின் வீட்டிற்குச் சென்றனர். கதவின் மேலிருந்த இரும்பு வலையைத் தன் விரல் நகங்களால் அப்பெண் பிறாண்டினாள். ஒரு நிமிடம் காத்திருந்து விட்டு மீண்டும் பிராண்டினாள். உள்ளே ஒரு மின் விசிறி ரீங்கரித்துக்கொண்டி ருந்தது. காலடி ஓசை எதையும் அவர்கள் கேட்க வில்லை. கதவு ' கீ றீச்' என்ற சப்தத்துடன் திறக்கப்பட்டதையும், உடனே எச்சரிக்கை உணர்வுடன் ஒரு குரல் 'யாரது?' என்று கேட்டதையும் அவர்க ளால் தெளிவாகக் கேட்க முடியவில்லை. இரும்புவலை வழியாகப்பார்க்க அப் பெண் முயற்சித்தாள். 

“எனக்கு மதகுருவைப் பார்க்வேண்டும்' என்றாள் அட்பெண். 'அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார்' 

'மிகவும் அவசரம்' அப்பெண் வலியுறுத்தினாள். அவள் குரலில் ஒரு தீர் மானம் தெரிந்தது. ஓசையின்றி கதவு லேசாக திறக்கப்பட்டது. இரும்பின் வண்ணத்தோடு கூடிய தலைமயிரையும், வெளுத்த தோலையுமுடைய ஒரு குண்டான பெண் வெளியே வந்தாள். கனத்த லென்ஸ்க ளுக்குப் பின்னால் அவள் கண்கள் மிகச்சிறியதாகத் தென்பட்டன. கதவை முழுதாகத் திறந்து 'உள்ளே வாருங்கள்' என்று சொன்னாள். 

- பூக்களின் பழைய வாசனை வியாபித்திருந்த ஓர் அறைக்குள் நுழைந் தனர். அந்த வீட்டுப்பெண் அவர்களை ஒரு மரபெஞ்சு அருகே அழைத்துச் சென்று அவர்களை அதில் உட்காருமாறு சைகை செய்தாள். சிறுமி உட்கார்ந் தாள். இரண்டு கைகளிலும் கைப்பையைப் பிடித்த வண்ணம், தன்னை மறந்த நிலையில் அவளின் தாய் நின்று கொண்டேயிருந்தாள். மின்விசிறியின் ஓசையை மீறி எந்த சப்தமும் கேட்கவில்லை. 

அறைக்கோடியிலிருந்த கதவு வழியாக அந்த வீட்டுப்பெண் மீண்டும் தோன்றினாள். ' மூன்று மணிக்குப்பிறகு உங்களை அவர் வரச்சொல்கிறார்' என்று தாழ்ந்த குரலில் அவள் சொன்னாள். “ஐந்து நிமிடங்களுக்கு முன் தான் அவர் படுத்தார்.' 

* மூன்றரை மணிக்கு ரயில் கிளம்புகிறது' என்றாள் வந்தவள். அது ஒரு சிறிய தன்னுறு தி வாய்ந்த பதில். ஆனால் அவள் குரல் இனிமையாகவும் அடங்கிய தொனியோடும் இருந்தது. வீட்டுப்பெண் முதல் முறையாகச் சிரித்தாள். 

* சரி' என்றாள். 

இரண்டு மணியிருக்கும். அரைத்தூக்க நிலையால் அழுத்தப்பட்டு நகரமே நண்பகல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது, கடைகள், நகர அலுவலகங்கள், அரசுப் பள்ளிக்கூடம் ஆகியவை பதினோரு மணிக்கு மூடப்பட்டு, புகைவண்டி திரும்பிப்போகும் நேரமான நான்கு மணிக்கு சற்று முந்திவரை திறக்கப்படுவ தில்லை. புகைவண்டி நிலையத்திற்கு எதிராக உள்ள மதுக்கூடமும், கூட்டுச் சூதாட்டக்கூடமும் இணை ந்த உணவு விடுதி, சந்தைக்கூடத்தின் ஒருபக்கம் இருந்த தந்தி அலுவலகம் ஆகியவை மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருந்தன வாழைத்தோட்ட நிறுவனத்தின் மாதிரியில் பெரும்பாலும் கட்டப்பட்டிருந்த வீடுகள் உட்பக்கமாய் பூட்டப்பட்டு, அவைகளின் திரைச்சீலைகள் இ ற க் கி விடப்பட்டிருந்தன. சில வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த வெப்பத்தின் காரண மாக உள்முற்றத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். மற்றவர்கள், வாதுமை மர நிழலில், நாற்காலிகளை சுவரோரம் போட்டு அமர்ந்துகொண்டு தெருவிலேயே நண்பகல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். 

அறைக்கோ டிக்கதவு மீண்டும் மூடப்பட்டபோது, அப்பெண் தன் மகளரு கில் உட்கார்ந்தாள். குறுகலான காத்திருக்கை அறை வறியதாகவும் சுத்த மாகவும் இருந்தது. அறையைப் பிரித்த மர அடைப்பின் அடுத்த பக்கம் மெழுகுத்துணி விரிக்கப்பட்ட ஓர் அலுவல் மேஜை இருந்தது மேஜையின் மேல் ஒரு பழங்கால டைப்ரைட்டரும், ஒரு மலர் ஜா டி யும் இருந்தன. அடுத்து வட்டாரத் திருச்சபையின் பதிவேடுகள் இருந்தன. திருமண மாகாத ஒரு பெண் ணால் சீராக நிர்வகிக்கப்படும் ஓர் அலுவலகம் அது என்பதைக் காண முடிந்தது. 

அறைக்கோ டிக்கதவு திறக்கப்பட்டது. கைக்குட்டையால் தன கண்ணாடி யைத் துடைத்துக்கொண்டு மதகுரு வெளிப்பட்டார். அவர் தன்னுடைய கண்ணாடியை அணிந்த பிறகு தான், கதவைத் திறந்த பெண்ணின் சகோதரர் தான் அவர் என்பது தெரிய வந்தது. 

'நான் உங்களுக்கு எவ்வகையில் உதவமுடியும்?' என்று அவர் கேட்டார். ‘சுடு காட்டின் சாவி' என்றாள் அப்பெண். 

மலர்களை மடியில் வைத்துக்கொண்டு, பெஞ்சின் அடியில் கால்களைக் குறுக்காக வைத்து சிறுமி அமர்ந்திருந்தாள். மதகுரு சிறுமியைப் பார்த்தார்; பின் அப்பெண்ணைப் பார்த்தார். பிறகு ஜன்னலில் கம்பி வலை வழியாக பிரகாச மான மேகங்களற்ற வானத்தைப் பார்த்தார். 

'இந்த வெப்பத்தில் ......' என்றார் அவர். 'சூரியன் மறையும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்' - 

அப்பெண் அமைதியாக தலையசைத்தாள், மதகுரு மரத்தடுப்பின் மறுபக் கம் சென்றார். அலமாரியிலிருந்து மெழுகுத்துணி உறையோ டுள்ள ஒரு புத்த கம், ஒரு மர எழுதுகோல் கைப்பிடி, ஒரு மைப்புட்டி ஆகியவற்றை எடுத்துக் கொ ண்டு மேஜையருகில் அமர்ந்தார். தலையில் அவருக்கு இல்லாதிருந்த முடியை ஈடுகட்டுவது போலவும் அதற்கு மேலாகவும் அவர் கைகளில் நிறைய முடி இருந்த து. 

"எந்தக் கல்லறையைப் பார்க்கப்போகிறீர்கள்?' என்று கேட்டார். 'கார்லோஸ் சென்ட்டி னோவின் கல்லறையை' என்றாள் அப்பெண். 'யார் அது?' 

“போன வாரம் இங்கு கொல்லப்பட்ட திருடன் தான் அவன்' என்று அதே குரலில் சொன்னாள் 'நான் அவனுடைய தாய். 

மதகுரு அவளை ஆராய்ந்தார். அமைதியான சுய கட்டுப்பாட்டோடு அவள் அவரை உற்றுப்பார்த்தாள். மதகுரு வெட்கப்பட்டார். அவர் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டு எழுத ஆரம்பித்தார். அந்தப்பக்கத்தை எழுதி நிரப்பிய வுடன், அவர் அப்பெண்ணை அவளைப்பற்றிய விவரங்களை சொல்லச் சொன் னார். அவள் தன்னைப்பற்றி துல்லியமான விவரங்களைத் தயக்கமின்றி வாசிப் பதை போல சொன்னாள். மதகுரு வியர்க்க ஆரம்பித்தார். சிறுமி தன்னுடைய இடது பாதணியின் கொக்கியை அவிழ்த்து விட்டு, கு திகாலை வெளியே எடுத்து அதை பெஞ்சின் சட்டத்தின் மீது வைத்தாள். வலது கு திகாலையும் அதேமாதிரி செய் தாள். 

போனவாரம் திங்கட்கிழமை காலை மூன்று மணிக்கு அங்கிருந்து சில வளாகங்கள் தள்ளி அது ஆரம்பித்தது உபயோகமற்ற பல உதிரிச்சா மான் கள் நிரம்பிய ஒரு வீட்டில் வசித்து வந்த ரெபக்கா என்னும் தனியான ஒரு விதவை, வெளிப்பக்கத்திலிருந்து முன்கதவைத் தள்ளித் திறக்கும் முயற்சியில் யாரோ ஈடுபடும் சத்தத்தைக் கேட்டாள் அச்சத்தம் மழைத்தூறலின் ஒலியை யும் மீறிக்கேட்டது அவள் எழுந்தாள்; கர்னல் ஆரிலியானோ ப்யூண் டியா காலத்திற்குப்பின் யாருமே சுடாத ஒரு பழங்காலத்து ரிவால்வாரைத் தன்னு டைய சிறிய தனியறையில் துரு வித்தேடி எடுத்துக்கொண்டு, விளக்கு களைப் போடா மல் புழங்கும் அறைக்குள் சென்றாள். பூட்டில் ஏற்படும் ஒலியைக்காட் டி லும், இருபத்தெட்டு வருடத் தனிமை அவளுள் உண்டாக்கிய பயம், கதவு இருக்கு மிடத்திற்கும், பூட்டின் உயரத்திற்கும் அவளை அதிகம் பழக்கப்படுத்தி யிருந்தது. ஆயுதத்தை இரண்டு கைகளாலும் இறுகப்பிடித்தபடி கண்களை 

மூடிக்கொண்டு துப்பாக்கியின் விசையிழுப்பை நெரித்தாள். அவள் வாழ்வில் முதல் தடவையாக அப்போதுதான் துப்பாக்கியால் சுட்டாள். துப்பாக்கி வெடித்தபின் உடனடியாக, துத்த நாகக் கூரையின்மேல் விழும் மழைத்தூ ற லின் ஒலியைத் தவிர வேறு எதையும் அவள் கேட்கவில்லை. பின் உலோகத் தனமான ஒரு மோதல் சப்தத்தை சிமெண்ட்டுத்திண்ணையில் கேட்டாள் ; 

இனிமையான ஆனால் பயங்கரமாக முற்றும் சோர்வடைந்த குரலொன்று தணிந்த தொனியில் 'ஐயோ, அம்மா' என்று அலறியதையும் கேட்டாள். அந்த வீட்டின் முன் இறந்து கிடந்தவனைக் காலையில் பார்த்தபோது அவன் மூக்கு தூள் தூளாக சிதறியிருந்தது; வண்ணக்கோ டு கள் போட்ட சணல்துணி யிலான சட்டையும், கயிறு ஒன்றை பெல்ட்டிற்குப் பதிலாகவும் அணிந்திருந் தான். அவன் பா தணிகள் அணிந்திருக்கவில்லை. நகரத்தில் யாருக்கும் இவனைத் தெரியவில்லை. 

எழுதி முடித்தபோது, 'எனவே அவன் பெயர் கார்லோஸ் ஸென்டனோ' என்று மதகுரு முணு முணுத்தார் 

'ஸென்டனோ ஆயலா” என்றாள் அந்தப்பெண். 'அவன் என்னுடைய ஒரே மகன்' 

மதகுரு தனியறைக்குச் சென்றார். கதவின் உட்புறத்தில் துருப்பிடித்த இரண்டு பெரிய சாவிகள் தொங்கின; சிறுமி, அவளுடைய தாய் சிறுமியாக இருந்தபோது நினைத்த மாதிரி, அச்சாவிகள் புனித பீட்டரின் சாவிகள் என்று நினைத்தாள்; மதகுரு கூட ஏதோ ஒருகட்டத்தில் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். அவர் அச்சாவிகளை எடுத்து, திறந்திருந்த நோட்டுப்புத்தகத்தின் மீது வைத்து, அப்போதுதான் எழுதிமுடிக்கப்பட்ட பக்கத்தின் ஓர் இடத்தைத் தன் ஆட்காட்டி விரலால் காண்பித்து 'இங்கே கையெழுத்திடு' என்று அப் பெண்ணிடம் கூறினார். 

கைப்பையை கைக்குக்கீழ் வைத்துக்கொண்டு அப்பெண் தன் பெயரைக் கிறுக்கினாள். சிறுமி பூக்களைப்பறித்துக்கொண்டு, கால்களைத் தேய்த்து நடந்து மர அடைப்பை அடைந்தாள்; தன் தாயைக் கவனத்துடன் பார்த்தாள். மதகுரு பெருமூச்சு விட்டார். 

அவனைச் சரியான வழிக்குத் திருப்ப நீ எப்போதும் முயற்சித்ததில்லயா?' 'அவன் மிகவும் நல்ல மனிதன்' 

மதகுரு முதலில் அப்பெண்ணையும் பின் அச்சிறுமியையும் பார்த்தார். அவர்கள் அப்போது அழப்போவதில்லை என்பதை அவர் ஒரு மதம்சார்ந்த ஆச்சரியத்தோடு உணர்ந்தார். அப்பெண் அதே தொனியில் தொடர்ந்தாள் 

“ யாருடைய உணவையும் திருடாதே' என்று அவனுக்குச் சொன்னேன் அதைக் கேட்டுக் கொண்டான். ஆனால் அதற்குமுன்பு, அவன் குத்துச்சண்டை போடும்போது குத்தப்பட்டதன் காரணமாக மிகவும் சோர்வடைந்து படுக்கை யில் மூன்று நாட்கள் கழிப்பது வழக்கம்” 

“ “ அவனுடைய எல்லா பற்களையும் எடுக்க வேண்டியதாயிற்று'' என்று இடை மறித்தாள் சிறுமி. 

'அது உண்மை' என்று அப்பெண் ஒப்புக்கொண்டாள். 

' நான் சாப்பிட்ட ஒவ்வொரு வாய் உணவும், அவன் சனிக்கிழமை இரவு களில் வாங்கிய அடிகளின் சுவையோடு இருந்தது.' 

18 

'கடவுளின் விருப்பம் ஆராய முடியாதது' என்றார் மதகுரு. இதை அவர் அதிக நம்பிக்கையற்றே சொன்னார். இதை அவர் சொன்னதற்கு அனுபவம் அவரை சந்தேகமுறுபவராக ஆக்கியிருந்தது ஒரு காரணம்; வெப்பமும் ஒரு காரணம், சூரிய வெப்பத்தாக்கு தலிலிருந்து காத்துக்கொள்ள அவர்கள் தலை களை மூடிக்கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினார். மிகுந்த தூக்கக்கலக் கத்தோடு கொட்டாவி விட்டுக்கொண்டு கார்லோஸ் ஷென்டனோவின் கல்ல -றைைய எப்படிக் கண்டுபிடிப்பது என்று அவர்களுக்கு விவரங்கள் சொன்னார். திரும்பி வரும்போது அவர்கள் கதவைத்தட்ட வேண்டியதில்லை. கதவுக்குக்கீழ் சாவிகளை வைக்கவேண் டும்: அதே இடத்தில் அவர்களால் முடிந்தால், மாதா கோயிலுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் அவருடைய கட்டளைகளை அப் பெண் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டாள். ஆனால் சிரிக்காமலேயே 

அவருக்கு நன்றி சொன்னாள். 

உலோக வலையில் மூக்கைப் பதித்தவண்ணம் யாரோ உள்ளே பார்த்துக் கொண்டிருப்பதை, தெருக்கதவைத் திறக்குமுன்னே அவர் கவனித்தார். வெளியே குழந்தைகளின் கும்பலொன்று இருந்தது கதவு முழுதாகத் திறக்கப் பட்டபோது குழந்தைகள் சிதறி ஓடின. சாதாரணமாக அந்த நேரத்தில் தெருவில் யாரும் இருக்கமாட்டார்கள். இப்போது குழந்தைகள் மட்டுமின்றி வேறு பலரும் வாதுமை மரங்களின் கீழ் இருந்தனர். வெப்பத்தில் நீந்திக் கொண்டிருந்த தெருவை மதகுரு ஆராய்ந்தார். பின் புரிந்து கொண்டார். மென்மையாகக் கதவை மீண்டும் மூடினார். 

அந்தப்பெண்ணைப் பார்க்காமலேயே 'கொஞ்சம் பொறு' என்றார். 

அவருடைய சகோதரி அறைக்கோ டிக்கதவு வழியாகத் தோன்றினாள். தன்னுடைய இர வுச்சட்டையின் மேல் ஒரு கறுப்பு நிற சிறுசட்டை அணிந்திருந் தாள் ; தலைமுடி தோளின் மேல் இறங்கி யிருந்தது. அவள் மதகுருவை அமைதி யாகப் பார்த்தாள். 

“அங்கே என்ன?' என்று கேட்டார். 

" மக்கள் பார்த்து விட்டனர்' என்று அவருடைய சகோதரி முணுமுணுத் தாள். 

'உள் முற்றத்திற்குச் செல்லும் கதவு வழியாக நீ போவது நல்லது என்றார் மதகுரு. 

* அங்கும் அதேதான். எல்லாரும் ஜன்னல்களின் பக்கம் உள்ளனர் என்றாள் அவர் சகோதரி. 

அதுவரை அந்தப்பெண் எது வும் புரிந்துகொண்ட மாதிரி தோன்றவில்லை. கம்பிவலை வழியாக தெருவைப்பார்க்க அவள் முயற்சித்தாள். பின் சிறுமியிட மிருந்து மலர்க்கொத்தை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நகர ஆரம்பித் தாள். சிறுமி அவளைத் தொடர்ந்தாள். 

'சூரியன் மறையும்வரை காத்திரு' என்று மதகுரு சொன்னார். - * நீ உருகிவிடுவாய். கொஞ்சம் பொறு. நான் உனக்கு ஒரு குடை தருகி றேன்' என்று அறையின் பின்பக்கமிருந்து அசையாமல் நின்றவண் ணம் அவரின் சகோதரி கூறினாள். 

' நன்றி. இதில் எங்களுக்கொன்றும் சிரமமில்லை' என்றாள் அப்பெண் சிறுமியின் கையைப் பிடித்தவண்ணம் அவள் தெருவிற்குள் சென்றாள். 

- மொழி பெயர் ப்பு : ஆர். சிவகுமார்