Pages

Wednesday, September 20, 2017

சதுரச் சிறகு - பிரமிள்

very sorry for errors

சதுரச் சிறகு

ரயில் ஜன்னல் இப்போது பாறைச் சுவர்களைக் கடந்து பறந்து கொண்டிருந்தது. ரயில்வே ஸ்டேஷன்களின் பெயர்களை அவள் படிக்க வேண்டுமானால் ரயில் நின்றால்தான் உண்டு. இப்போது ஒரிரு எழுத்துக்கள்தான் அவள் மனதில் தைத்தன. அவளால் வேகமாகப் படிக்க முடியாது. அவன் எழுதிய கடிதங்களை வெகு சிரமத்தோடு படித்து அவற்றின் கசப்பையும் அசிரத்தையையும் தன்னுள் எங்கோ கேட்கும் ஊளையாக புரிந்து கொண்டிருக்கிறாள். அவளைப் படிக்கச் சொல்லி அவளது பெற்றோர் கேட்டனர். அவர்கள் புரிந்து கொண்டு அவளையும் விதியையும் கடிந்தனர். அவன் எழுதிய கடிதங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவையும் ஒரு கனவன் மனைவிக்கு எழுதியவை யாகவோ ஒர் ஆண் ஒரு பெண்ணுக்கு எழுதியவையாகவோ கூடத் தொனிக்கவில்லை. அவளுக்கென்று எழுதப்பட்டவை என்றும் சொல்ல முடியாது. அவளை ஊடுருவி பெற்றோரிடம் சென்றன. பணம் கேட்டு லேசாக மிரட்டின. உறவில் தீயிட்டு விட்டு, பற்றி எரிகையில் பிடுங்கியது லாபம் என அவன் எழுதிய கடிதங்கள் அவை.

முதலில் பணத்தையும் பிறகு அவளையும் அனுப்பினர். அவளது தகப்பனார் இந்த இரண்டு காரியங்களையும் அங்கீகரிக்காமலேதான் செய்தார். மகளை ஐந்நூறு மைல் தூரத்திலிருந்த நகரில், அன்று காலை அவன் வீட்டில் கொண்டு போய் தனியே இருந்த அவனிடத்தில் விட்டு விட்டு ஒரு கனமும் தரிக்க மனம் கொள்ளாமல் திரும்பி விட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை. கதவோரத்திலேயே பையுடன் நின்றிருந் 5 Gussisi a sir Gsi sujj Ga Tsis GyuÁlsösenst).

உள்ளிருந்து மற்றவள் வந்தாள். போயிட்டாரா என்று அவளது தகப்பனாலரப் பற்றி விசாரித்தாள். இந்தக் கேள்வியின் அலட்சியம், கேட்டவளின் திடீர் பிரசன்னத்தை ஒரு இயல்பாக்கியது. பூமாவின் கண்களில் ஏளனமும் கண்லரும் ஒருமித்து மடை திறந்தன. மற்றவள் பரிகாசமாக அவளைத் தேற்றுவதைப் பார்த்தபடி ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைக்க ஆரம்பித்தான் மற்றவளின் பரிவு ஒரு நீண்ட பரிகாசத்தின் ஆரம்பமாக அவள் மீது விழுந்து வெறுப்பூட்டிற்று. செயலற்று வேடிக்கை பார்க்கும் தனது கணவனை பூமா ஏறெடுத்து நோக்கினாள் அந்தக் கணம், தனது பார்வை அவனைத் தீண்டாது திரும்பியதில் 5STS531/பிரமிள் படைப்புகள்



நிலைமையை மட்டுமே பூமா சந்தித்தாள். அவளது கண்கள் சுயாதீன கொண்டு வெட்கத்தையும் களங்கத்தையும் நீத்தன. மற்றவளையும் தன் கணவனையும் "சீ என நோக்கினாள். தனது ஒரு பகுதி பொடியாக்கிக் கொண்டிருக்கையிலேயே அவளது இன்னொரு பகுதி வியது பூண்டெழுந்தது. அவள் மனதில் ஒரு முதிர்ச்சி தனது தனிமையை கன மெளனத்தில் நோக்கி உணர்ந்து ஒரு முட்பூவைப் போல மலர்ந்தது

அவள் மனதில் நெளிந்த வசவுகள் உச்சரிக்கப்படாத ஒரு பெரிய சாபமாகியிருக்கலாம். அவளது முதிர்ச்சியும் அவளே உணராது அவளிட மிருந்து பிறந்த சாபமும் மற்றவளைப் பின்னடையச் செய்தன. பூமா சிந்திய கண்ணிர்கூட அவளது இந்த அந்தரங்கத்தின் முன்னால் வீர்ய மற்றுத்தான் வழிந்தது. தாவணியை இழுத்து இடையைச் சுற்றி வரிந்து இடுப்பில் முந்தானையைச் செருகிக் கொண்டாள். பளுவான தண்ணிர்க் குடத்தைத் தூக்குமுன் அவள் செய்து கொள்ளும் பூர்வாங்கம் இது. ஆனால் அவள் கொண்டு வந்த மாற்றுப் புடவைப் பை ஒன்றும் பளுவானதல்ல. பேச்சற்று அதைத் தூக்கி வெளியே நடந்தாள். தகப்பனார் கொடுத்த பனம் இருந்தது, வீடு போய்ச் சேர அது போதும், பிறகு? அழுகை, வசவுகள், விவாகரத்து, ஜீவனாம்சம், ஒரு நீண்ட காலத்தினுள் பின் வாங்கிச் செல்லும் நடையும் ஒட்டமும், ரயிலும் பின் வாங்கிக் கொண்டு தான் இருந்தது. முன்னால் இழுத்து வந்த எஞ்சினை அவள் காணத் தவறி விட்டாள். பின்னாடியிருந்து ஒரு எஞ்சின் வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தது. தனது பயணத்தில் எங்கோ இடையில் நேர்ந்து விட்ட ஒரு தண்டவாள மாற்றத்தைச் சரி செய்ய வேண்டி இந்த ரயில் கண வேகமாக வந்த வழியிலேயே ஆயிரக்கணக்கான மைல்கள் பின் வாங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து வண்டியேறினாள் ஜன்னல்களில் நிரம்பி, எரிந்து விழத் தயாராகச் சிரிப்பற்று, தமது நோக்கங்களையும் கெளரவங்களையும் பர்ஸையும் உறுதியாகப் பாதுகாப்பவர்களின் முகங்கள் நடுவே உட்கார்ந்தாள்,

ஜன்னலின் சதுரம் வெளியேயும் உள்ளேயும் ஒரே சமயத்தில் பார்த்துக் கொண்டிருந்தது. ரயில் புறப்படும் சமயத்தில் அவனைப் போன்ற ஒருவன் எனத்தோன்றி ஒரு உருவம் ஓடி வந்து, அவளது பெட்டியில் தொற்றிக் கொண்டு அவனாகி, கதவருகே நின்றது. கதவை முடித் திறந்து அவளைப் புன்னகையற்று நோக்கிவிட்டு முதுகைக் காட்டி நின்று கொண்டது, ரயில் அவன் நிற்கும் இடத்திலிருந்து அவனைப் பின்னே நகர்த்த முயன்று நகர்ந்து, அவறும் தொடர, பொறுமையிழந்து ஓட ஆரம்பித்தது.

எதிரே ஒரு சீக்கியன் ரயிலின் முரட்டுத்தாலாட்டில் கொண்டதூக்கத்தை அதே தாலாட்டினால் இழந்து எழுந்து உட்கார்ந்தான். தன் மனைவியிடம் புரியாத பாஷையில் ஒரு கசப்போடும் உருக்குலையும் சலிப்புடறும் பேரியபடி தாடியைக் கோதினான். பிரித்தெடுத்து உதறினான். பிறகு பழகிய சடங்கைச் செய்யும் அனாயாசத்தோடு தாடையின் கீழே முடிந்து

பிரமிள் படைப்புகள்/92

கொண்டான். பூமா அவனது இந்தச் சடங்கை நேர்நோக்காக உற்றுப் பார்த்திருக்க வேண்டும், பிற ஆண்களை அப்படி அவள் அதுவரை சிரத்தையாகப் பார்த்ததில்லை. ரத்தியனின் மனைவி பூமாவை பதிலுக்குப் பார்த்தது போல் தோன்றவே, பூமாதிரும்பிஜன்னல் வெளியே பார்த்தாள். பூமி பறந்து கொண்டிருந்தது. தன்னாடி ஜன்னலினூடே தோன்றிய வெளிப்புறத்தின் மீது உட் புறம் பிறந்து, ஒடும் பகைப்புலத்தில் ஓடாது சமைந்து நின்றது. அங்கே ஒரு சக்தியன் தனது தலையைப் பிடரி யிலிருந்து மேல் நோக்திவாரி, உச்சிமுடிச்சின் அடியில் சிப்பைச் சாவதானமாகச் சொருகியபடி, தன் பிரமாண்டமான அழகிய கன்களினால் தனது மனைவியின் பேச்சொழுகும் வாயை ஒரு திருட்டு வெறுப்போடு பார்த்தான், பூமா ஜன்னல் கண்ணாடியைத் தூக்கி வெளிப்புறத்தை மட்டும் பார்க்க நினைத்தவள் மனதை மாற்றிக் G) Ji TaTi Tair.

அவன் கதவருகே நின்று அவள் திடுக்கிடத் திரும்புகிறோம் аталай,

தன்னைப்பற்றியே வியந்தவன் போல் அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான். இன்னொருவனும் மூக்குக் கண்ணாடியூடே தூரத்தில் எதிரிருந்து சாவதானமாகத் தொடர்ந்து பார்த்தபடியிருந்தான். நேற்றும் அதற்கு முந்திய நாட்களினூடும் யார் யாரோ முகமற்ற ஆண்கள் அவளைப் பார்த்தனர். பார்க்கும் அவர்கள் கதவோரத்தில் நிற்கும் அவனாகி கூச்சமின்றி அவளைத் தாண்டும் போதும், அவள் முன் வேறு விவகாரங்களினிமித்தம் நிற்கும்போதும் அற்ப பவிஷ-களைப் பற்களா யணிந்து சிரித்து, பேயாகி இரங்கி, அவளைப் பார்க்காதிருப்பதை மட்டும் மறுத்துச் சென்றனர். சம்பிரதாயமான கொள்கையில் குறுகிய இளமை நீண்டு தொடர்ந்தது. தன்னை நாடும் கண்களினூடே உடல் கூசும் அருவருப்புகள் மங்கி வந்துநின்று வயசாக மாறிக்கொண்டிருந்தன. அவள் கிழவியாகக் காத்திருந்தாள் ரயில் பாலத்தின் மீது போகிறது. எங்கோ தேக்கப்பட்ட ஒரு ஆற்றின் பாலை போன்ற படுகையில் அங்கங்கே குளமாக நின்ற தண்ணிரில் சின்னஞ்சிறு மனிதர்கள் குளித்தனர். வெகு சமீபத்தில் கரையேறி ஈரப் புடவைகளோடு எலும்புகளின் மேல் தொங்கும் திரைத்த தோல்களைக் காட்டியபடி நின்றனர் மூன்று கிழவிகள். நின்று, நீயும் நாங்கதாண்டி என்று அவளைக் காணாதே சொல்லினர். ஆமாமாமா என்று ரயில் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. கதவருகே நின்றவன்

த்திற்கு நேரே வரும் கனத்தில் அவள் அவர்களாகி அவனை

அவர்களி நோக்கிப் பொக்கை வாயினால் பயங்காட்டிச் சிரித்தாள். ஆனால் அவள் வாய் திறந்ததும் பருவம் அவளது உதட்டிற்கு வந்து மொய்த்து, உடலா யிற்று. உள்ளுறுத்தும் பிரமையாயிற்று. அவள் பார்வையை மாற்றி ஜன்னலின் அசைவற்ற சவத்திரையில் ஒரு சிக்கியன் தலைப்பாதை கட்டிக் கொள்ளச் செய்யும் ஆயத்தங்களைப் பார்த்தாள்.

கதவருகே நின்றவன் அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தான் கதவு அன்று, வெளியே தாளிடப்பட்டதும் அவள் கதவருகேதான்

33/பிரமிள் படைப்புகள்SSSSSSL


நின்றிருந்தாள். இன்று போலவே அன்றும் அவன் அழைக்கவில்லை. உள்ளே வருவதும் வராததும் அவ அவள் மீது அவளே புரிந்து கொள்ளத் தயாரில்லாத ஒரு *யாதீனத் ஏற்றி விட்டவன் போல் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் இணக்கம் அவனுக்கு ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் எதிர்பா: வியவகாரப் பொறுப்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். தான் அறிந் பெண்களிடம் இருந்ததைப் போன்ற ஒரு சுயாதீனத்துடன் ဒ၇၈'ခြား நடந்திருக்கவேண்டும். நகரத்தில் அவனைக் கவர்ந்த சூழல்கள் இத்தகைய திடீர்த்தத்துவங்களுக்குக் காரணமாயிருந்திருக்கலாம்.

ஆனால் பூமாவின் கூச்சம் அவளது மோகத்தை புதிர் ԼD Ամ ԼDՈ 3:6)լ இயற்கையின் வித்தை, மெளனம் ஒரு சமிக்ஞையாவது போல் திசையின் கூச்சமும் அவளிடத்தில் ஒரு சமிக்ஞையாயிற்று. ஆனால், இயற்கையின் வீர்யத்தை இழந்த அவன் மனம் இந்தக் கவர்ச்சிகளை 2-57 Saltஉருவாக்கிற்று. என்றும்போல் இச்சம்பிரதாயங்கள் வாழ்வின் மீது படிந்து உறிஞ்சும் பிரம்மராக்ஷஸாயிற்று. அவனது பார்வையில் மோகம் இல்லை. பார்வையும் புறத்தே வந்து விழுந்து விடவில்லை. உள்ளே திரும்பும் வீர்யமும் அற்று பிரமை படர்ந்த நிச்சலனத்தோடு அவன் அவளைப் பார்த்தான்.

அவனுக்கு நகரத்தில் ஒருத்தி இருக்கிறாள் என்று ஊர்ஜிதமற்ற செய்தி எங்கோ கேட்டு இப்போது பூதாகாரமாகி வந்து நின்றது. லேசாக அவனை ஒரக்கண்ணால் பார்த்தவளின் பயங்கள் இந்த வதந்தியின் ஞாபகத்தில் நீர்த்து விட்டன. மேஜையின் அலாரத்திலிருந்து கடிகாரக் காலம் எவரை என்றில்லாமல் நெடுநேரமாகக் கண்டித்து, ‘சே, சே என்று சொல்லியபடியிருந்தது. அவளுக்குத்தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை.

அவளது கை, திடீரென ஒரு குருட்டு முடிவுக்கு வந்து கதவுக் குமிழைப் பயனற்றுத் திருகிற்று. வெளியே தாழிடப்பட்டிருந்த பூட்டின் உள் ஒலிகள் அருவருப்பைத் தரும்படி விரசமாகக்களுக்கிட்டன. அவன் முகத்தில் ஒரு புன்னகை. ஏளனமோ? அவள் குரல் தேய்ந்து வெறுத்து எதிரொலித்தது. "சே" என்றாள். துணிந்து முகஞ்சுளித்தாள். ஒரு ஆபாச் ஸ்திதியிலிருந்து திடீரென விழித்தவள் போலக் கையைக் கதவுப் பூட்டின் திருகிலிருந்து வெடுக்கென்று எடுத்தாள். அவன் முகம் கடுத்தது. எங்கோ அவனுள் தோன்றிய மோகம் குலைவு பெற்றிருக்க வேண்டும். ‘த்ச என்று படுக்க ஆயத்தமாகிறான். படுத்தான். தூங்கிவிட்டான்.

அவள் அவனுடன் தனித்திருந்தது அவ்வளவுதான். அவனைக் *" அவனது அழகில் அவள் கொண்ட பிரமிப்பு இப்போது ﷽l@Jo”ማ தனிமைக்கு ஒதுக்கிற்று. இப்போது அவன் முதுகு, பாவமற்று

பிரமிள் படைப்புகள்/34

முகமற்று, அங்கங்களின் பிதுக்கமற்று ஒரு வெற்று நிலமாக துரங்கிக் கொண்டிரு ந்தது. அவள் கால் மடிந்து மூடிய கதவோடு சாய்ந்து உட் கார்ந்து விட்டாள். மென்மையாக அழுதாள். அவனது முதுகின் வெறுமை, தாண்ட முடியாத அரணாக அவளை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. மனைவியாகவிட்ட ஒரு சிறு கால எல்லையினுள்ளேயே கணவனின் முதுகு கூடத் தன்னை வேவு பார்க்கத் தொடங்கிவிட்டதா? இருந்த படியே கதவில் சரிந்து தூங்கினாள். திடீர் திடீரென விழித்தாள். அவனது முதுகைப் பார்த்து எங்கிருக்கிறோம் என உணர்ந்தாள். ஒரு முதுகின் பாலை மீது அவள் நடந்து கொண்டிருந்தாள். அவளது பாதத்தின் கீழ், அருவருப்பையும் பயத்தையும் உண்டாக்கி, ஜீவன் மடிந்தபடி மூச்செடுத்துக் கொண்டிருந்தது நிலம், கால் சுட்டது. பயங்கர நா வறட்சி யுடன் தண்ணீர் தேடி பாலையில் சுற்றி நடந்தாள். ஒரு கானல் உருப் பெற்றது. தனது பாலையைச் சுற்றி ஒரு நதி ஆரம்பம் முடிவு அற்று ஓடுவதைக் கண்டாள். அந்த நதியில் ஆயிரக்கணக்கான முதுகுகள் கொண்ட ஒருவன் குளித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முதுகும் அவளை நோக்கி நீர் பூத்து அழுதது. அவள் பரிவுடன் அவற்றை ஒவ்வொன்றாக தடவி விட்டாள். அவள் தொட்டதும் அவை கொண்ட தினவைத் தேய்த்துக் கழுவித் தீர்த்தபடி இருந்த அவளது கைகள் வலியெடுக்க ஆரம்பித்தன. ஒய்வெடுக்க நினைத்துப் பின்வாங்கித் திரும்பியபோது முதுகுகள் தன்னை வளைத்து நிற்பதைக் கண்டாள். ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அவை தன்னை உயிருடன் சமாதி வைக்கும் சவ அறையாக நின்றன. அவள் அவற்றுக்கு உரியவனின் முகத்தைக் கெஞ்சிக்கேட்கத் தேடினாள். காணோம். ஒரு பிரமாண்டமான பூட்டின்  யந்திரஉள்ளீடுகளைப் போன்று ஒவ்வொரு முதுகின் உள்ளிருந்தும் விரசமான 'களுக் ஒலிகள் கிளம்பி அவளை நச்சரித்தன. அவள் பயந்து அழஆரம்பித்தாள். முதுகுகள் பாறைகளாகச் சரிய ஆரம்பித்தன.

பாறைகள், கற்குவியல்கள், மண் திடல்கள். திடீரென ஜன்னலில் வெளியே வயல் வெளிகள். இடையிட்டு முளைத்து, பெருவெளிகளின் தூரத்தில் பெருமரங்கள் குச்சிகள் போல வியர்த்தமாய்த் தோன்றின. எப்போதாவது அபூர்வமாய் மனிதர்கள் தோன்றினர். கண்ணுக்கெட்டிய தூரம் தரை, குடில்கள் கூட அற்ற ஒரு அமானுஷ்யத்தில் இவர்கள், தாம் தோன்றிய இடத்திலேயே மறைந்து குடி கொள்பவர்களாகக் கவலை யற்று நடந்து ஒன்றினர். தன்னை ஏமாற்றும் மனப் பிரமைகளிலிருந்து வெளிக்குதித்து உலவும் தோற்றங்களோ இவை என, அவற்றை தொடர்ந்து நோக்கி அவற்றின் உண்மையான ஸ்திதியை விசாரிப்பவளாக ஜன்னல் கண்ணாடியோடு தலையை ஒட்டி ரயில் அவர்களைத் தாண்டி விலகி அகலும் வரை பார்த்தாள். அவளது கண்கள் தங்கள் மீது பட்டுள்ள வரை மறைய மறுத்து அவர்கள் தோன்றி நிலைத்தனர். புதிதாக மீண்டும் தோன்றிப் பின் அகன்றனர். கறுத்து, ஒல்லியாகி, பயந்து வியர்த்த ஒரு நாடு ஆதரவு தேடி ஒடும் காற்றாக அலறியபடி சதுரமான பாலை35/பிரமிள் படைப்புகள்

ஒன்றின் மீது பிறந்து கொண்டிருந்தது. ரயிலோரத்திலிருந்து திடீரென மேடிட்டு எழுந்த ஒரு அகாரணமான வரப்பின் மீது குப்பையா, மாறிக் கொண்டிருக்கும் வைக்கோல் சுமைகளுடன் மனிதர்கள் பிறந்த ரயில் அவர்களைக் கடக்கும்வரை மறைய மறுத்து நிலைத்து (b1 ју, алi. விவசாயிகளாயினர். தலைகுனிந்து வெய்யிலை உதாசீனம் செய்தபடி உடலோடு ஒட்டி வாழ்ந்தனர். தாழ்வைக்கூட இழந்து உழைக்கும் நிர்பந்தத்தில் வறுமை கொண்டனர். விளைவும் காரணமும் «ՓԱԳծl o)ւմ)/a»)լը தோள் மீது குடி கொள்ள வெறிச்சிட்ட ஒரு சதுர உலகின் மீது குனிந்து, ரயிலின் வேகம் நிர்ணயித்த ஒரு சிறுகால எல்லையில் வாழ்ந்து மறைந் தனர். சேலை தரித்துப் பெண்களாகி வெறித்து நோக்கினர். அவள் தன் மீது சரியும் முதுகுப் பாறைகளை ஒதுக்கி ஊடுருவிக் கொண்டிருந்தாள். 

ஜன்னலில் வெளியே பாறைகள் பறந்து கொண்டிருந்தன. கதவருகே நின்றவன் கதவைப் பூட்டினான். கதவில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான். அவளது திசையில் அவனது நீண்ட நடை ஆரம்பித்தது போலிருந்தது. சீக்கியன் தலைப்பாகை கட்டிக் கொண்டிருந்தான். வெளியே தோற்றங்கள் ரயிலின் வேகத்தில் மங்கி புகைச் சீறல்களாகப் பறந்த படியிருந்தன. அவன் நடந்து வர ஆரம்பித்தான். வேண்டாத ஒரு சிதைவு, உயிர்விட மறுத்து ஆடி உருக்குலைந்து உருப்பெற்றுப் பெற்று வெளி யேயும் உள்ளேயும் தோன்றி மறுக்க முடியாத ஒரு தந்திரமான பிரமை யாகப் பிறந்து கொண்டிருந்தது. அவள், தன் மனசின் கடுமையைப் பிடிவாதமாக்கி, தன்மீது விழும் சவ அறை, உள்ளிருந்து வெளியாகி, ஒரே திசையில் விழும் சாபங்களாவதைப் பார்த்தபடி வாளாவிருந்தாள். சீக்கியன் துணியை, தலையிலிருந்து பிறந்த ரத்த மயமான பெரிய குடல் ஒன்றை இழுத்தெடுப்பவன் போல் பிடித்தபடியே, வெகு வெகு சாவதானமாக ஒரு கையின் விரல்களால் தலையைச் சுற்றி விழும் துணியின் பவித்திரச் சுருக்கங்களை ஸ்பரிசித்துத் திருத்தியபடி தலைப்பாகை கட்டிக் கொண்டிருந்தான். ரயிலின் வீறிட்டேகும் வேகத்தில் குறுகிய தன் வாழ்நாளை உருக்குலைத்துத் தலையைச் சுற்றிக் கட்டுவதிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவனாகத் தோன்றினான். தலை ஒரு ரோஸ் நிறத்துணி குழ்ந்து கரடுமுரடான ஒரு லிங்க முனையாகிக் கொண் டிருந்தது. அவனுக்கும் அவனது மனைவிக்குமிடையே ரகசியமான வெறுப்புகள் உறுமிக் கொண்டிருந்தன. இருவரும் பேச்சுக்கு பேச்சு குடும்ப உணர்வுகளின் கொடுக்கல் வாங்கல்களை சம ாளித்தபடியிருந்தனர். அந்த சிக்கிய பெண்ணின் முகத்தில் தேஜஸ் உள்வாங்கி அவளது கடுகடுப் பையும் ஊடுருவிய ஒரு திருப்தியாகப் பூத்திருந்தது என்பதனால்தான் போலும் பூமாவுக்கு அவள் ஒரு கர்ப்பிணியாகத் தோன்றினாள். 

வந்து கொண்டிருந்தவன் இடையறாது தடுமாறி, பூமாவைத் தன் பார்வையால் மோதி தன்னையே நிறுத்தி நிறுத்தி, பார்வையால் ரயிலில் உள்ளவர்களின் தோற்றங்களை அளவிட்டபடி வந்து கொண்டிருந்தான். பின்னே கழியும் சாபத்தோற்றங்களின் போராட்டம் பிரதிLit JEDI Lorral ஒரு உலகாகி, தலைப்பாதையைக் கட் டுவதும், கர்ப்பம் தரித்துக் கடுகடுப்பதுமாக இழந்து உறைந்தபடி இருந்தது.அவன் அவள் முன் நின்றான். 

இடையறாது பின்வாங்கிக்கொண்டிருந்த ரயில் நிற்பதற்கு வேகம் தணிந்துகொண்டிருந்தது. அவன் அவள் முன்திடீரென்று காலியான எபீட்டில் சாவதானமாக உட் கார்ந்து விட்டான். ரயில் நின்றது. Fih 616) I J air yuyan) av ut unaow கட்டி முடித்து விட்டான். 

பூமாவுக்கு திடீரென தான் என்ன செய்ய வேண்டும் என்பது இன்னும் தான் தெரியவில்லை என்ற உணர்வு தோன்றிற்று தான் அவனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. 

அவன் அவளைப் பார்த்தபடியே ஒரு சிகரெட்டை எடுத்து உதடுகளில் இடுக்கிப் பிடித்தபடி சீக்கியனிடம் தீப்பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தான்.

ஞானரதம், அக்டோபர் 1973
37/பிரமிள் படைப்புகள்