Pages

Thursday, May 03, 2018

பயணம் - 1 & பயணம் - 2 ::: அம்பை

பயணம் - 1
அவளை மட்டுமே ஏற்றிக் கூட்டிக்கொண்டு போக வந்த வானூர்திபோல் நின்றுகொண்டிருந்தது அந்தப் பேருந்து. புதிது. ஓட்டுனர் அருகில் ஒற்றை இருக்கை போடப்பட்டது. மற்ற பேருந்து களிலிருந்து சற்றுத் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. பதினைந்து நிடங் களில் புறப்படும் என்றார்கள். இன்னும் யாரும் ஏறியிருக்கவில்லை . பயணச் சீட்டு இருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டு ஏறினாள். அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தாள். அந்த ஒற்றை இருக்கைக்காக அவள் வேறு பல பேருந்துகளைத் தவறவிட்டிருந்தாள். திரும்பும் வழியிலாவது அவள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் போக வேண்டும். மற்ற பயணிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். அவள் வாயைத் திறந்து எதுவும் சொன்னால், அவள் வாழ்க்கையையே பிட்டு அவர்கள் முன் வைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அவர்கள். இந்த ஒற்றை இருக்கை அவள் அமைத்துக் கொள்ளும் வியூகம். இதற்குள் யாரும் நுழைய முடியாது. நுழையும் எந்த அபிமன்யுப் பயலும் வீழ்த்தப்படுவான். ஏதோ போருக்குச் செய்யும் முஸ்தீபுகள் போல் இருக்கையில் அமர்ந்துகொண்டு திட்டம் தீட்டினாள். வரும் வழியில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்காததால் அவள் நிரம்பச் சிரமப்பட்டிருந்தாள். அதன் விளைவாக அவள் புடவையில் ஒரு குழந்தையின் மூத்திர ஈரமும், ரவிக்கையின் தோள்பட்டையில் ஒரு களைத்துப்போன மனைவியின் உறக்கவேளை வாய் எச்சிலும், இடதுபுறத் தலைப்பில், முன்னால் இருந்த இருக்கையினின்றும் காற்றில் வந்த புகையிலைச் சாற்றுத் துப்பலின் கறைகளும் இருந்தன. இதற்கெல்லாம் தயாராக அவள் கிளம்பியிருக்கவில்லை. எந்தவிதக் கேடயமும் இல்லாமல் நிராயுதபாணியாகக் கிளம்பியதால் அலைக் கழிக்கப்பட்டிருந்தாள்.
அன்றையப் பொழுது நன்றாகத்தான் விடிந்திருந்தது. கிழக்குப்புறச் சன்னலருகே அவள் படுத்துத் தூங்கியதால், கதிரவனின் முதல் கிரணத்தின் ஒளி ஊசி இவள் முகத்தைத் தொட்டிருந்தது. மெல்லக்
+
296
+
அம்பை
________________
கண் விழித்தபோது எட்ட இருந்த வேப்ப மரத்தின் பின்னாலிருந்து சிவப்பு நூல் பந்திலிருந்து விடுபடுவதுபோல் நீள்ச்சரமாய் ஒளிக் கீற்றுக்கள். கண்களை மூடிக்கொண்டு ஒளியை எதிர்கொண்டபோது கண்ணுக்குள் சிவப்பு வெள்ளம் ஓடியது. அதன் பிறகு ஒளியை எதிர்த்துத் திரும்பிக் கண்களைக் கையால் மூடிக்கொண்டதும், மயில் கழுத்துப் பச்சை கண்களை நிரப்பியது. நான்கைந்து முறைகள் செய்தபின் உடம்பு உலகை ஏற்றுக் கொண்டது. அதில் நடமாடத் தயாரானது.
கீழே தண்ணீர் அடிக்கும் சத்தம் கேட்டது. வள்ளியாக இருக்கும். காலையிலேயே வந்து தண்ணீர் அடித்துத் தரும்படி அவளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அன்று திருச்சி போக வேண்டிய நாள். அங்கு சந்திக்கப்போகும் நபருக்குத் தகவல் அனுப்பியாகிவிட்டது. தண்ணீர் அடித்துத் தந்துவிட்டு, வீட்டைச் சுத்தம் செய்து, மூலையில் உள்ள ஆப்பக் கடைக்காரப் பெண்மணியிடமிருந்து இட்லியும் தோசையும் வாங்கி வந்து அவள் பங்கைச் சாப்பிட்டுவிட்டு வள்ளி கிளம்பிவிட்டாள்.
"திருச்சிலேந்து வரப்ப என்ன வேணும் வள்ளி ?” என்று கேட்ட போது, "மலைக் கோட்டப் புள்ளையார் பிரசாதமா வாங்கிட்டு வரப் போறீங்க?'' என்று வள்ளி பதில் கேள்வி கேட்டிருந்தாள். இவள் கோயிலுக்குப் போகமாட்டாள் என்று தெரியும். இவள்
அதற்கு ஒன்றும் சொல்லாமல் சிரித்து வைத்தாள்.
குளித்து முடித்தபின், மாம்பழ வண்ணத்தில் கறுப்புக் கரையிட்ட சுங்கடிச் சேலையும், கறுப்பில் மஞ்சள் கட்டமிட்ட கைத்தறித்துணி ரவிக்கையும் அணிந்துகொண்டாள். கஞ்சியில் மொடமொடக்கும் சேலை. இவளுக்குக் கஞ்சி போட்டால் பிடிக்காது. ஆனால் வள்ளிக்குப் பிடிக்கும். "அதுதான் நல்லாயிருக்குது" என்று தீர்மான மாய்க் கூறிவிடுவாள். இந்த மாதிரி விஷயங்களில் வள்ளிதான் அவள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போனாள். இந்த அன்றாடத் தீர்மானங்களின் சுமையை ஏற்றுக்கொண்டு, வேப்பமரம், அதிலுள்ள குயில், வீதி, வானம் இவற்றை இவளுக்குத் தந்திருந்தாள். வள்ளி தந்த சீர் வகை.
திருச்சியை நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பது காலையில் இலக்காக இருந்ததால், முதலில் கண்ணில் பட்டு, கிளம்பத் தயாரா யிருந்த பேருந்தில் ஏறி, இருவர் அமரும் இருக்கையில் சன்னல் புரத்தில் அமர்ந்தாள். பேருந்து கிளம்பும் சமயம் ஒரு கணவனும் மனைவியும் கைக்குழந்தையுடன் ஏறினர். கணவன் கஞ்சியில் விறைத்து நின்ற சட்டை அணிந்திருந்தான். மொறமொறப்பான புதுப் பட்டு வேஷ்டி. மனைவி அந்தக் காலை வேளையில், அடிக்க வரும் நீலத்தில் சிவப்புக் கரையிட்ட பட்டுச் சேலை அணிந்திருந்தாள். சேலையின் உடலெல்லாம் சரிகைப் புட்டாக்கள். ஈரக் கூந்தலில்
பயணம் - 1
<
297
+
________________
நிறையப் பூ. கழுத்து கொள்ளாமல் நகை. அவள் உடலைப் பிடித்த சரிகை ரவிக்கையின் அக்குள் பகுதி முழுவதும் வியர்வையின் ஈரம். குழந்தை அவள் கையில்தான் இருந்தது. ஏறிய உடனே சேர்ந்து அமர வழியில்லை என்று தெரிந்ததும் குழந்தையுடன் இவள் பக்கம் வந்து அமர்ந்தாள். குழந்தையை இவள் பக்கமாக உள்ள தொடை மேல், இவளைப் பார்த்தபடி இருத்திக்கொண்டாள். ஆண் குழந்தை என்று பிரகடனம் செய்யும் ஆவலாலோ என்னவோ குழந்தைக்குச் சாக்லேட்டு நிறத்தில் மேல் சட்டை மட்டுமே அணிவிக்கப்பட்டி ருந்தது. பேருந்தின் ஓட்டத்திற்கேற்ப, கொலுசு அணிந்த கால்களால், இவளை இடுப்பிலும் தொடையிலும் எற்றியபடி இருந்தது குழந்தை.
| "'சேட்டை பண்ணாதே கண்ணா" என்று அவள் கொஞ்சினாள்.
கண்ணன் என்று அழைக்கப்பட்ட அன்பில் உருகியோ என்னவோ அந்தக் கண்ணன் கால்களை இவள் இடுப்பில் வாகாக வைத்துக் கொண்டு மூத்திரம் விடத் தொடங்கினான். இடுப்பிலும், கையிலும், புடவையிலும் ஈரம் பட்டதும் திடுக்கிட்ட இவள், "புள்ளயக் கவனியுங்க" என்று பதறினாள். அவள் நிதானமாகக் கண்ணனிடம்,
"சேலையை நனைச்சுட்டியே சுட்டிப் பயலே” என்றாள்.
"என்னங்க இது? குழந்தையை உங்க மடில ஒழுங்கா வெச்சுக்கிடக் கூடாதா? நான் திருச்சிக்கு ஒரு வேலயா போறேன். இப்பிடி ஈரச் சேலையோட போக முடியுமா?” என்று சிடுசிடுத்தாள் இவள்.
"என்னம்மா ஆச்சு?'' என்று கேட்டாள் பின்னாலிருந்த கிழவி.
"புள்ள சேலையை நனைச்சதுக்குக் கூவுறாங்க” என்றாள் தாய்.
''என்னது ?' என்று வியப்படைந்தாள் கிழவி. "அப்பிடி நாசூக்குப் பாக்கறவங்க ப்ளெஷர் கார்ல போவணும். பஸ் ஸ ல ஏன் வராங்களாம் ?"
''ஏம்மா, பஸ் ஸ ல வந்தா வர குழந்தை மூத்திரமெல்லாம் சேலையில வாங்கிக்கிடணும்னு ஏதாவது சட்டமா?" என்று இவள் கேட்டாள் கிழவியிடம்.
"ஏன் தாயி, ஒனக்குப் புள்ள குட்டி கிடையாதா? பீ போகாத புள்ளயத்தான் பெத்திருக்கயா?''
"அவுங்க கல்யாணமே கட்டல போலத் தெரியுதே" என்றார் ஒருவர் இவள் கழுத்தைப் பார்த்து.
“ஏன் சார், நான் கல்யாணம் கட்டாததுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? புள்ளய ஒரு துணில சுத்திட்டு வரக்கூடாதா? இப்பிடி மத்தவங்க சேலையை ஈரமாக்கினா எப்பிடி? குழந்தையொட
<
298 +
அம்பை
________________
அப்பா வேட்டி சட்டை கசங்காம போறாரு. நான் கெடந்து அவதிப்படறேன்" என்று இவள் வாதிட்டாள்,
அரைத் தூக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த குழந்தையின் தந்தை திடுக்கிட்டு விழித்தார்.
"என்ன
சமாசாரம் ?''
“ஒண்ணுமில்ல. நீங்க ஒறங்குங்க. கல்யாணம் கட்டாத பொண்ணு ஒண்ணு கோவப்படுது. அதுக்கு என்ன தெரியும் புள்ள சுகம் ?" என்றார் ஒரு முதியவர்.
"யம்மா” என்று இவள் தோளை ஆதுரத்துடன் தொட்டாள் கிழவி. "நான் சொல்லுறேன், புள்ள மூத்திரம் பட்ட வேள ஒனக்கு விடியட்டும். அடுத்த வருஷமே உன் கையில புள்ள வரும் பாரு.'
"உன் வாயால் சொல்லு பாட்டி. அதுக்கு நல்ல காலம் பொறக் கட்டும்.''
இன்னும் பேசினால் மாப்பிள்ளையே பார்த்து முடித்துவிடு வார்களோ என்று பயந்து இவள் சன்னல் வெளியே பார்க்க ஆரம்பித்தாள். இவளுக்குத் திருமணமாகிவிட்டது என்பதையும், கணவன் இன்னொரு ஊரில் வேலைபார்க்கிறான் என்பதையும், தாலி போன்ற சின்னங்களில் நம்பிக்கை இல்லை என்பதையும் இவள் விளக்கிக்கொண்டிருக்க முடியாது. அப்புறம், "குழந்தைகள் ஏன் இல்லை?'' போன்ற தொடர் கேள்விகள் எழும். இப்படி யோசனையில் இருந்தபோதுதான் ரவிக்கையின் தோள்பட்டையில் ஈரமும் கனமும் இருப்பதுபோல் பட்டது. கண்ணனைத் தன் மடி யில் நேர் வாட்டில் இருத்திப் பிடித்துக்கொண்டு, இவள் தோளில் தலையைச் சாய்த்திருந்தாள் அந்தப் பெண். கண்ணனும் தலை தொங்கத் தூங்கிக்கொண்டிருந்தது. இரவில் கண்ணன் அவளைத் தூங்கவிடாமல் படுத்தியிருக்கலாம். காலையில் தலைகுளிக்கச் சீக்கிரமே எழுந்திருந்திருக்கலாம் அவள். இடுப்புவரை நீள் விழுது போல் கனத்துத் தொங்கிய கூந்தல். எண்ணெய், சீயக்காய் தேய்ப்பதற்குள் கை ஒடிந்திருக்கும். தான் குளித்து, குழந்தையைக் குளிப்பாட்டிச் சிங்காரித்து, சரிகை ரவிக்கை அணிவதற்குமுன் முலைப் பாலூட்டி என்று காலை நேரம் ஓடியிருக்கும். கல்யாணமோ கோயிலோ போகத் திட்டமிட்டிருந்ததால் வெறும் காப்பியைக் குடித்துவிட்டு அவள் கிளம்பியிருக்கலாம். வாகான தோள் - தலை வழுக்கி விழாத, கைத்தறித்துணி ரவிக்கைத் தோள் - கிடைத்ததும் கண் அயர்ந்து விட்டாளாக இருக்கும். தோளைச் சற்று அசைத்ததும் அந்தப் பெண் எழுந்து கடைவாய் எச்சிலைத் துடைத்துக் கொண்டாள். இவள் தோள்பட்டையைப் பார்த்துவிட்டு, ரவிக்கைக்குள்ளிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்துத் துடைத்து விட முற்பட்டாள்.
பயணம் - 1
+ 299
+
________________
"மன்னிச்சுக்கிடுங்கக்கா..." என்றாள்.
இதற்குள் கண்ணன் கண் விழித்து, தன் அடுத்த கடமை என்ன என்பதைத் தெரிந்து வைத்தவன் போல், இவள் கைப்பையின் தோல் வாரைத் தன் வாயில் போட்டுக்கொண்டு அவனுக்கிருந்த நான்கு பற்களால் முனைப்புடன் கடிக்க ஆரம்பித்தான். இவள் தன் கைப்பையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டாள். உடனே குனிந்து கைக்கடிகாரத்தில் வாயை வைத்தான். இன்னும் சற்றுப் போனால் இவள் "தாயே யசோதா” பாடிவிடுவாள் என்று தோன்றி யது. கண்ணனின் தாக்குதல்களை இவள் தடுத்துக்கொண்டிருந்த போதுதான் புகையிலைச் சாற்றுத் துளிகளின் அபிஷேகம் நடந்தது. பின்னாலிருந்த கிழவியும் இதைப் பார்த்துவிட்டு, "யாரது துப்புறது?” என்று அதட்டல் போட்டு இவளைத் தட்டிக்கொடுத்தாள் - நீ மட்டும் கல்யாணம் செய்து கொண்டு விடு, இந்தத் தொல்லையேதும் உனக்கு இராது என்று சொல்பவளைப் போல.
- திருச்சி நிறுத்தத்தை எட்டியதும் இவள் கட்டணக் கழிப்பிடம் போய் உள் தலைப்பை வெளியில் வைத்துப் புடவையை மாற்றிக் கட்டிக்கொண்டாள் பயணத்தின் சின்னங்களை மறைக்க, தற் போதைய ஒற்றை இருக்கை அமர்வு காலைப் பயணத்தின் துயர் நீக்கும் முயற்சிதான்.
பயணிகள் ஏறத் துவங்கியிருந்தனர். ஓட்டுநர் வந்து அமர்ந்தார். வண்டி நிரம்பிவிட்டது. கிளப்பச் சில வினாடிகள் இருந்தபோது ஒருவர் அவள் பக்கத்தில் வந்து, "அம்மா" என்றழைத்தார் கனிவாக. "என்ன மகனே?" என்று கேட்பது போல் திரும்பினாள்.
"நீங்க இப்பிடி லேடீஸ் பக்கம் வந்திடறீங்களா?” என்று மூன்று பேர்கள் அமரும் இருக்கையின் முனையைக் காட்டினார். அவர் ஒரு பெரிய தவறைச் செய்துகொண்டிருந்தார். இவள் வியூகத்தினுள் நுழைய முயற்சி செய்துகொண்டிருந்தார். இவள் தயாராக இருந்தாள்.
"முடியாதுங்க” என்றாள் தீர்மானமாக. அவர் சற்று திகைத்து, ''லேடீஸ் இதுல உட்காரக் கூடாதும்மா'' என்றார்.
"ஏன் அப்பிடி ஏதாவது ரூல் இருக்குதா?” என்று கேட்டாள் இவள்.
“ரூலு எல்லாம் இல்ல. நான் இப்பிடி உட்கார்ந்திட்டு டிரைவர் அண் ணாச்சிகிட்டப் பேசிட்டே போவேன்.''
"நான்கூட டிரைவர் அண்ணாச்சிகிட்டப் பேசிட்டேதான் போகப் போறேன்” என்றாள் இவள்.
ஓட்டுநர் சற்றுத் திடுக்கிட்டு இவளைப் பார்த்தார்.
*
300
4
அம்பை
________________
“ஒத்தையில போறீங்களா?” என்று கேட்டார் முதலில் கூப்பிட்டவர்.
அவள் தலையசைத்துவிட்டுத் தலையைத் திருப்பிக்கொண்டாள். "விடுய்யா” என்றுவிட்டு ஓட்டுநர் வண்டியைக் கிளப்பினார். அவர் நண்பர் பேருந்து முழுவதும் இந்த அக்கிரமத்தைச் சொல்பவர்போல் பார்த்தார்.
இரண்டு நிறுத்தங்களுக்குப்பின் ஒரு வயதான பெண் மணியும் ஒரு பத்து வயதுச் சிறுவனும் ஏறினர். மூவர் இருக்கையின் முனை யில் அந்தப் பெண்மணி உட்கார்ந்துகொண்டாள். பையன் இவள் இருக்கையின் முதுகைப் பிடித்தபடி நின்றான். சற்றுத் திரும்பிப் பார்த்தாள். காக்கி அரை நிஜார் போட்டிருந்தான். பலமுறை தோய்க் கப்பட்ட, இஸ்திரி இல்லாத பழுப்புநிற டி-ஷர்ட்டின் முன்பக்கம் ஓர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் பெயர் இருந்தது. அதற்காகவே அவன் அதை ஆசையாக வாங்கியிருக்கலாம். எதிரே இருந்த கண்ணாடி வழியே வண்டி போகும் வீதியைப் பார்த்தபடி நின்றி ருந்தான். தலையைப் படிய வாரியிருந்தான். நீள் இமைகளோடு கூடிய கரிய, துளைக்கும் கண்கள். தன் இருக்கையில் சற்று நகர்ந்து, பின்பு அவனைப் பார்த்து, "தம்பி, உக்கார்றியா?” என்று கேட்டாள்.
ஒரு வினாடி தயங்கிவிட்டு வந்து உட்கார்ந்தான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. தந்திக் கம்பியில் கறுப்பு வாலும், மஞ்சள் மார்பும், கூர் அலகுமாய் ஒரு பொடிப் பறவை கண்ணைத் தொட்டுப் போயிற்று. அவளும் பையனும் சேர்ந்து அதைப் பார்த்தனர். பார்த்துவிட்டு அவன் இவளைப் பார்த்து முறுவலித்தான். இவளும் புன்னகைத்தாள்.
"அது பேரு என்ன ?'' என்று கேட்டான்.
அதன் பெயர் தெரியவில்லை என்றும், எல்லா இந்தியப் பறவை களைப் பற்றியும் கூறும் புத்தகம் ஒன்று உண்டென்றும் அவள் அவனிடம் சொன்னாள். அதில் ஒவ்வொரு இடத்தைச் சேர்ந்த பறவைகளைப் பற்றியும் விளக்கங்கள் உண்டு என்று கூறினாள். ஸ்லீம் அலி பற்றிக் கூறினாள். தொலைநோக்குக் கண்ணாடி மூலம் பலமணி நேரம் பறவைகளைப் பார்ப்பது அவருக்குப் பிடித்த வேலை என்று விளக்கினாள்.
“அந்தப் பொஸ்தகம் கிடைக்குமா ?" “உம், உன் ஸ்கூல் லைப்ரரில இருக்கும். பாரு.'' - "எங்க ஸ்கூல்ல வேடந்தாங்கல் கூட்டிட்டுப் போனாங்க, அங்க ரஷ்யாவிலேந்து கூடப் பறவைக வந்திச்சு. அவ்வளவு தூரம் எப்பிடி வருதுன்னு ஆச்சரியமா இருந்திச்சு.”
"அப்பிடியா?” "நான் எங்க அப்பாவோட, வயல்ல காவலுக்குப் படுப்பேன் செல சமயம். அப்ப ராத்திரி ரெண்டு ரெண்டரை மணிக்குக் கண்
பயணம் - 1
4 301
<
________________
முழிப்பு வந்திச்சின்னு வெச்சுக்குங்க, மேல பாத்தா, வெள்ளை வேளேர்னுட்டு ஏழெட்டுப் பறவைக் கூட்டமா, மொள்ளப் பறந்து போறதைப் பார்க்கலாம். செல சமயம் கனால பாத்தேன்னு நெனச்சுக்குவேன்.”
"அப்பிடியா ?'' சிறிது மௌனத்திற்குப் பின், "நான் ஒரு அணிலு வளத்தேன்” என்றான், அவனுடைய ரகசியம் ஒன்றை அவளிடம் பகிர்ந்து கொள்பவன் போல்.
''எப்ப
???)
"நான் நாலாவது படிக்கச் சொல்ல. அது பப்பாளி மரத்துக் கீள விளுந்து கெடந்துச்சு. நான் எடுத்து, அப்பா கடிகாரம் வாங்கிட்டு வந்த அட்டைப் பெட்டில் சின்னத் துணி போட்டு அதை வெச்சேன். பஞ்ச பால்ல முக்கி அதுக்குப் பால் குடுத்தாங்க அம்மா. அப்புறமா இங்கி ஊத்தற பில்டரு இல்ல, அதால பாலு குடுத்தேன். பாலு குடிச்சிட்டு என் கை மேலெல்லாம் ஓடிச்சு."
"ம்,*
"அது செத்துடிச்சு” என்றான் குரலடைக்க. "எப்பிடி?”
"தெரியல.'' “நீ அந்தப் பெட்டில் தொளை போட்டியா?” "போடாம? இல்லாட்டி அது எப்படி மூச்சு விடும்?'' "பின்ன எப்பிடிச் செத்துப்போச்சு ?" “தெரியல.''
பேசிக்கொண்டிருந்தபோதே, "நிறுத்து வண்டியை, நிறுத்துங்க வண்டியை" என்ற கூக்குரல் வெளியே இருந்து கேட்டது. ஒரு கிராமத்தினர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். சிலர் கையில் கற்கள். "எறிடா கல்லை ” என்ற கத்தல் எழுந்தது. கற்களைப் பிடித்த கைகள் ஓங்கின. -- இவள் சட்டென்று பையனை அணைத்து கொண்டு, குனிந்து கொண்டாள்.
ஓட்டுநர் பதட்டத்துடன் வண்டியை நிறுத்தினார். இறங்கினார்.
“என்னய்யா பஸ்ஸ ஓட்டறீங்க? போற வளில எங்க ஊர்க் காரரை பஸ்ஸால அடிச்சுப் போட்டுட்டு ஓடிட்டு, தப்பிச்சுக்க லாம்னுட்டு பாக்கறியா? விட்டுடுவமா நாங்க?''
"கொளுத்துடா பஸ்ஸை .''
*
302
+
அம்பை
________________
கூக்குரலும், கூப்பாடும் சற்று மட்டுப்பட்டதும், ஓட்டுநர் அவர்கள் குறிப்பிடும் வண்டி இதுவல்ல என்று விளக்கி, பிறகு இன்னும் சிலர் வந்து சமாதானம் செய்துவைத்த பின்னர், வண்டி கிளம்பியது.
பையனின் உடம்பு லேசாக நடுங்கியபடி இருந்தது. அவன் தோள்மேல் இவள் போட்டிருந்த கையின்மேல் கழுத்தைச் சற்றுச் சாய்த்துக்கொண்டான். சிறிது நேரம் பொறுத்துத் தலையைப் பின்னால் சாய்த்தபடி உறங்கிப்போனான். முகத்தில் பய ரேகைகள் இருந்தன.
அவன்மேல் பார்வையை ஓட்டிவிட்டு வலதுபுறம் திரும்பியதும் ஆரஞ்சு வண்ணத்தில், மிதந்தபடி சூரியன் மறைந்துகொண்டிருந்தது. தண்ணென்ற நெருப்பு வட்டம்.
"தம்பி" என்று அவனை எழுப்பினாள்.
அவன் திடுக்கிட்டு விழித்ததும், ''அங்க பாரு” என்று சூரிய அஸ்தமனத்தைக் காட்டினாள்.
அவன் கண்களை விரித்தபடி பார்த்தான். கர்னாடகத்தில் ஆகும்பே எனும் இடத்தில், அவள் சிறு வயதில் பார்த்திருந்த ஒரு விசேஷ சூரிய அஸ்தமனம் பற்றிச் சொன்னாள். மறையும்போது, சூரியன் அங்கு சதுரமாகவும், நீள் சதுரமாகவும், மதுக்கிண்ணம் போலவும் பல வடிவங்கள் கொள்வது போல் கண்ணுக்குத் தோன்று வதைச் சொன்னாள்.
''நிசமாவா?” என்று வியந்தான் பையன்,
வண்டி நிலையத்துக்குள் நுழைந்து நின்றது. பையனுடன் வந்த முதியவள் அவன் கையைப் பற்றிக்கொண்டு இறங்கினாள். இவளும் இறங்கினாள். பையன் தன்னுடன் வந்த கிழவியின் கரத்தைப் பற்றிக்கொண்டு, பேருந்து நிலையத்தின் வெளி வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
வாயிலை எட்டியதும் திரும்பி இவள் பக்கம் பார்த்தான். அந்தி யிருட்டில் அவன் கண்கள் ஒளிர்ந்தன.
'நிகழ்', அக்டோபர் 1995
பயணம் - 1
<
303 4

*********************************************************************************
பயணம் - 2
கருக்கலிலேயே எழுந்து போனால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று சிவப்பிரகாசம் சொல்லியிருந்தார், தயாராகி, பேனா, குறிப்புகள், காகிதம் எல்லாம் பையில் இருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டு, அறையைப் பூட்டிவிட்டு ஓட்டல் வெளியே வந்தால் தினகரன் நின்றுகொண்டிருந்தான். ஒரு நிமிடம் அவனை அடையாளம் தெரியவில்லை. வழக்கம்போல மடித்துக் கட்டிய வேட்டி. அரைக்கைச் சட்டை.
"என்ன சௌக்கியமா?” என்றான். "நான் வந்திருக்கிறது எப்படித் தெரியும்?” "சிவப்பிரகாசம் சொன்னாரு. பஸ்ஸுல பேசிட்டே போலா மேன்னுட்டு வந்தேன்."
"ரொம்பக் காலையில எழுந்திருக்கீங்களே? களைச்சுடப் போறீங்க.” "அதெல்லாம் ஒன்னுமில்ல. பழக்கம்தான்” என்றான். சில நிமிடங்களில் விடிந்துவிடும். பேருந்து நிறுத்தத்தை எட்டியதும் நேரே டீக்கடைப் பக்கம் நடக்க ஆரம்பித்தான். அவள் பழக்கத்தை அவன் மறக்கவில்லை. டீக்கடைக்காரன் இவளைப் பார்த்ததும், மேல்தட்டுக் கூடையிலிருந்து இஞ்சியை எடுத்தான். ஒரு சிறு இஞ்சித் துண்டைத் தோல் சீவி நசுக்கிவிட்டுக் கொதிக்கும் தண்ணீரில் போட்டான்.
தினகரன் இவளைப் பார்த்துப் புன்னகைத்தான், “டெல்லிப் பழக்கம் எல்லாம் விடமாட்டீக போல." இருவரும் டீக்கடை வெளியே போடப்பட்ட மர பெஞ்சில் அமர்ந்த னர்.
"எனக்குக் காப்பியே குடுங்க அண்ணாச்சி. காலேல இஞ்சி சுரசமெல்லாம் சாப்பிட முடியாது” என்றான்.
*
304 4
அம்பை
________________
"இந்த எடக்குதானே வேணாங்கறது” என்றாள். சிரித்தான். அவனுக்குக் காபியும் இவளுக்கு டீயும் வந்தது. நிறுத்தத்தில் நடமாட்டம் இல்லை அந்த வேளையில். சூரியன் இன்னும் முழுதாக மேலே எழவில்லை . விடியலின் மங்கிய ஒளியில் அந்த நிறுத்தத்தின் பேருந்துகள் ஓட்டுக்குள் அடங்கிய ஆமைகள்போல நின்றிருந்தன. இஞ்சி போட்ட டீயை அருந்தியபடி மெளனமாக இருந்தாள். "லிஸ்ஸிகூட மஸாலா டீ போடுவா, குஜராத்திக்காரங்க சாப்பிடு வாகளே அது மாதிரி. அவங்கப்பா ஒரு வருஷம் பரோடால இருந்தாரு.”
“எந்த லிஸ்ஸி ?'' "எங்க தூரத்து ஒறவு,”
''ஓ."
அவள் போக வேண்டிய இடத்துக்கான முதல் பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டனர். தினகரன் களைத்திருந்தான் போலும். பேருந்து ஓட ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இருக்கையின் பின் உள்ள உலோகத் தண்டில் தலையைச் சாய்த்துச் சிறிது வாய் திறந்து உறங்கிப்போனான்.
வேலை தொடர்பாக அவள் மேற்கொண்ட பல பயணங்களில் தினகரன் அவளுடன் இருந்தான். வர முடியுமா என்று இவள் கேட்டவுடன் துண்டையும் சோப்பையும் எடுத்துக்கொண்டு ஆற்றில் குளிக்கக் கிளம்பிவிடுவான். தாமிரவருணி ஆற்று விசேஷக் குளிய லுக்குப் பின் தான் அவனால் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மகிழ்ச்சியுடன் காண ஆரம்பிக்க முடியும். அதுவரை படுக்கையில் புரண்டபடி அல்லது சுவரில் சாய்ந்தபடி உற்சாகமின்றி இருப்பான். அவன் நடத்தும் சிறிய புத்தகக் கடையைப் பெரும்பாலும் நடுப் பகலுக்கு மேல்தான் திறப்பான். ஒரு நாளுக்கு இரு புத்தகங்கள் விற்று விட்டால் மகிழ்ச்சி கரை புரண்டோடும். "படிக்கிற பழக்கம் இன்னும் போகல" என்று சந்தோஷப்பட்டுக்கொள்வான்.
பல முறை ஏதாவது ஒரு சிற்றூருக்கு வெளியே, அமைதியாக நீண்டு கிடக்கும் வீதியில், இரவு வேளையில், ஒரு பேருந்தை எதிர்பார்த்து அவளுடன் நின்றிருக்கிறான். விளக்குகள் இல்லாத, இருபுறமும் மரங்கள் உள்ள, நீண்டு கொண்டே போகும் வீதியில் பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்தபோது பல விஷயங்களைப் பேசியதுண்டு. ஜன நடமாட்டம் இல்லை என்ற தைரியத்தில் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை உரக்கப் பாடியதுண்டு, "இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள் ளாடே” என்று
பயணம் - 2
4
305 +
________________
இருட்டைத் துளைத்துக்கொண்டு குரல் எழுப்பியதுண்டு. சில சமயம் அந்த வழியாகப் போகும் சைக்கிள்காரரோ, கட்டை வண்டிக்காரரோ இவர்களது இரைச்சலைக் கேட்டு இவர்களை முறைத்துப் பார்த்த துண்டு. டெல்லியில் உள்ள அவளும், தாமிரவருணிக் கரையில் உள்ள தானும் இப்படி ஒரு யாருமில்லாப் பிரதேசத்தில் பட்டுக்கோட்டை யாரை எப்படி நினைக்க முடியும் என்று வியப்பான். "எப்படி நீங்க இப்படி ஆயிட்டீக?'' என்பான். "இப்படினா எப்படி ? ஏதோ எனக்கு ஒட்டுவாரொட்டி வியாதி இருக்கிறாப்பல இல்ல பேசறீங்க?''
"அப்படி இல்ல வந்து . . .'
"பின்ன எப்படி? எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தஞ்சாவூர் மண்ணுல பிறந்தாத்தான் எதுக்கும் ரசனை வரும்பாரு. நீங்க என்னடான்னா தாமிரவருணில முங்கினாத்தான் ரசனை இருக்கும்கற மாதிரி சொல்லறீங்க. இப்படி அவர் ஒரு மண்ணு நீங்க ஒரு மண்ணுனு ஆளுக்கு ஒரு மண்ணு பிரிச்சுகிட்டா, ஊரெல்லாம் சுத்துற என்ன மாதிரி இருக்கறவங்க புறம்போக்குல நிக்க வேண்டியதுதானா?''
"யப்பா, இப்படிக் கோவிக்கிறீகளே?'' தினகரன் ஏதோ வேலையாய் டெல்லி வந்திருந்தபோது இவள் வீட்டில் தங்கியிருக்க வந்தான். இவளும், இன்னொரு பெண்ணுமாய் ஒரு பெரிய வீட்டின் பின்பகுதியில் குடியிருந்தனர். காலையில் ஆறரை மணிக்குக் கல்லூரியில் காலை முதல் வகுப்பு எடுக்க ஓட வேண்டும். நிறைய ரொட்டி, வெண்ணெய், பழங்கள் எல்லாம் வாங்கி வைத்து, "தினகரன், நான் சாயங்காலம்தான் வருவேன். ரொட்டி, பழம் எல்லாம் இருக்கு” என்றதும், “ரொட்டியா?” என்று திகைத்தான். இட்லி, தோசை, பொங்கல் நினைவு வந்து அலைக்
கழித்தது போலும்.
"மதியத்துக்குச் சோறு ?” என்றான். "சோறு வடிச்சுவெச்சிருக்கிறேன். நீங்க தயிர் ஊத்திச் சாப்பிடுங்க.” "நானேவா?'' "இல்லல்ல. ஒரு மணியானதும் இந்தச் சன்னல் வழியா ஒரு தேவதை வந்து சோத்தைப் பிசைஞ்சி உங்க தட்டுல போடுவா. பாட்டிலைத் தொறந்து ஊறுகாய் வெப்பா. கை கழுவத் தண்ணி தருவா. தட்டை எடுத்துக் கழுவி வெச்சுடுவா. சாப்பிட்ட இடத்தைத் தொடைப்பா."
"கேலி பேசுறீகளா?''
''பின்ன ?''
+
306 <
அம்பை
________________
இரண்டொரு நாட்கள் பேயறைந்தவன் போல் வளைய வந்தான். பின்பு கரோல்பாகில் தென்னிந்தியர்கள் வழக்கமாகத் தங்கும் விடுதி ஒன்றில் தங்க இடம் தேடிக் கொண்டான். எட்டு பத்து இட்லிகள், தோசைகள், வடைகள் எல்லாம் உள்ளே போன பின்பு, சோறும், ரசமும், பொரியலும், முட்டையும், கோழியும், மீனும், சாம்பாருமாய்ச் சாப்பிட்ட பின்னர்தான் இறந்தபின் உயிர்ப்பிக்கப் பட்டவன் போல் ஒளிர்ந்தான்.
அப்போது ஒரு வார இதழில் ஒரு பிரபல எழுத்தாளர் பயணக் கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருந்தார். அவர் உலகத்தின் எந்தக் கோடிக்குப் போனாலும் ஒரு தமிழ்க் குடும்பத்தினர் இவரை அழைத்து, விருந்தோம்பல் செய்து, மல்லிகைப்பூ போன்ற இட்லிகளை இவர் முன்வைத்து விடுவார்கள். அந்த அன்பில் திக்குமுக்காடி இவருக்குப் புல்லரித்துவிடும். தினகரனுக்கு அவர் உறவா என்று இவள் பரிகசித்தாள் அவனை.
தாமிரவருணி மண்காரர்களுக்கு வயணமாகச் சாப்பிட வேண்டும் என்றான் அவன். தான் இப்படி இருப்பதற்கான முழுப் பொறுப்பை யும் அறுபத்து நாலு வகைப் பச்சடிகளைப் பற்றி அறிந்திருந்த தன் தாத்தாவின் மேல் போட்டான்.
"சாப்பாட்டுல ஒரு கல் உப்புக் கொறஞ்சா அவருக்குத் தெரிஞ் சுடுங்க. அப்படி ஒரு நாக்கு. அவரு காய்கறி வாங்கிட்டு வந்தாருன்னா எதெதை எப்படிச் சமைக்கணுமின்னிட்டு சொல்லிப் போடுவாரு. ரசனை உள்ளவரு. பாண்டிச்சேரில அவர் தம்பி வீட்டுக்குப் போன வருக்கு மீன் ருசி கண்டுட்டுது. ஒரு நாள் பூண்டும், மஞ்சளும், மி ளகாத்தூளும், இஞ்சியும் போட்டு அரைச்சுத் தடவி மொள்ள மொள்ளத் திருப்பித்திருப்பிப் போட்டுப் பொரிச்ச மீனைச் சாப்பிட்டுட்டுக் கை கழுவிட்டு, "அப்பனே முருகா”ன்னாரு. அவ்வ ளவுதான். உசிரு பிரிஞ்சிட்டு. 'யாருக்கு நான் இனிமே ஆக்கிப் போடுவேன்'ன்னுட்டு எங்க பாட்டி அப்படியே குன்னிப் போயிட்டாக
“அப்புறம் வயணமாச் சாப்பிடப் பேரன் நீங்க வந்தீங்களாக்கும்?” “இத பாருங்க, சாப்பாட்டு விஷயத்துல கேலி பேசாதீக” என்று முறைத்துக்கொண்டான்.
இவ்வளவு பழகியும் தினகரன் என்ற தனிமனிதன் யார் என்று தெரியவில்லை . பேருந்துப் பயணங்களும், நீண்ட நடைகளும், பட்டுக்கோட்டையார் பாட்டுகளும் மட்டுமே பிரதானமாகத் தெரிந்தன.
திருவனந்தபுரத்தை எட்டும்வரை தினகரன் கண் திறக்கவில்லை. இவள் வந்த வேலை முடிவதற்குள் மாலையாகிவிட்டது. கட்டணக் கழிப்பிடம் எங்காவது உண்டா என்று இவள் தேட முற்பட்டபோது,
பயணம் - 2
+
307
+
________________
"'லிஸ்ஸி வீடு இங்கிட்டுத்தான் இருக்கு. வாங்களேன்” என்றான்.
"சொல்லாம கொள்ளாம் . . . எப்படி? தூரத்து உறவுன்னு சொன்னீங்க ?'' என்றாள்.
"இல்லல்ல. போலாம். அது தப்பா நெனக்காது'' என்றான். ஒரு ஆட்டோ பிடித்து லிஸ்ஸி வீட்டுக்குச் சென்றனர். இவர்களைக் கண்டதும் லிஸ்ஸியின் முகம் மலர்ந்தது.
"வாங்க, வாங்க, எனக்கு உங்களைத் தெரியும்” என்று வரவேற்றாள். சின்ன வரவேற்பறையில் சுவரில் ஒரு ஏசுவின் படம் தொங்கியது. அதன் முன் சுவரில் பதித்திருந்த சின்ன மரத்தட்டில் இரு மின் சார மெழுகுவர்த்திகள். ஒரு முக்காலியில் அவளும் அவள் கணவனு மாய் நிற்கும் திருமணப் புகைப்படம். ஒரு குழந்தையின் இரண்டு மூன்று புகைப்படங்கள். குழந்தையின் முகம் எங்கோ பார்த்த முகமாகப் பட்டது.
லிஸ்ஸி இரண்டு கண்ணாடித் தம்ளர்களில் தண்ணீர் கொண்டு வந்தாள்.
"லிஸ் ஸி, முதல்ல எனக்குப் பாத்ரூம் போகணும்" என்றதும், அதற்கு வழியைக் காட்டினாள். திரும்பிவந்ததும், "என்ன பலகாரம் செய்யட்டும்?'' என்றாள். "கிளம்பணுமே லிஸ்ஸி. அப்புறம் நேரமாயிடும்” என்றாள். "ஐயோ யேசுவே! இவ்வளவு தூரம் வந்திட்டு எதுவும் சாப்புடாமப் போவாகளா?'' என்றாள்.
"எனக்கும் வயத்தைப் பசிக்கி" என்றான் தினகரன். "இதோ இப்ப வாரேன்" என்று உள்ளே ஓடினாள் லிஸ்ஸி. இவளும் அவள் பின்னால் சென்று, "உங்க ஹஸ்பெண்ட் ஆபீஸ் விட்டு வர நேரமில்லையா லிஸ்ஸி ?'' என்று வினவினாள்.
"இல்லக்கா. அவரு ஊர்ல இல்ல. அவரு மெடிகல் ஸேல்ஸ் மென். மாசத்துல இருபது நாள் வெளிலதான் இருப்பாக,”
"ஏதாவது உதவி செய்யவா?'' என்றதும், "வேணாம்கா. தோசைக்கு மாவாட்டி இருக்கு. சுட்டுடறேன்” என்றாள்.
சமையலறை மூலையில் இரு அலங்காரப் பிடிகள் கொண்ட ஒரு பெரிய பித்தளை அண்டா இருந்தது. இவள் அதன் பிடியைத் தொட்டுப் பார்த்தாள்.
4
308
+
அம்பை
________________
தோசை சுட்டவாறே திரும்பி இவளைப் பார்த்து, "அது தினகரன் அம்மாது. சின்னப் புள்ளைலேந்து எனக்கு அவங்க வீட்டுல எல்லாரையும் பழக்கம்" என்றாள். - இவர்கள் தோசை சாப்பிட்டதும், லிஸ்ஸி மஸாலா டீ போட்டுத் தந்தாள்.
"கிளம்பலாமா தினகரன் ?" என்று இவள் கேட்டதும், "இருங்கக்கா. பையன் வரட்டும்” என்றாள். பத்து நிமிடங்களில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் சிறு சைக்கிளைத் தள்ளியபடி வந்தான். இவளைப் பார்த்ததும் தயங்கி நின்றான்.
"இங்க வா” என்றான் தினகரன். சிறுவன் தினகரன் அருகில் வந்து அவன் மடியில் முகம் புதைத்துக் கொண்டான். தினகரன் அவன் தலையைத் தடவி, "இந்த ஆன்ட்டி " கிட்ட உன் பேரச் சொல்லு” என்றான்.
தலையைத் தூக்கி, "ரவிகுமார்'' என்றான்.
பின்பு தினகரனின் இடுப்பைச் சுற்றிக் கைகளைப் போட்டு அணைத்தபடி அண்ணாந்து அவனைப் பார்த்துச் சிரித்தான்.
தினகரன் முகத்தில் அதீத அன்புடன் கூடிய புன்னகை ஒன்று தோன்றியது. பையனின் முகத்தைத் தடவினான். பையன் எம்பி அவன் மடியில் ஏறி அவன் முகத்துடன் தன் முகத்தைப் பதித்துக் கொண்டான்.
சிறிது நேரம் சென்று கிளம்ப முற்பட்டதும், லிஸ்ஸி உள்ளே சென்று ஒரு வட்ட டப்பாவில், அன்று புதிதாகச் செய்தது என்று தெரிவிப்பது போல் மணம் வீசிய கேக் வைத்துக் கொண்டுவந்தாள். இரு சிறு துண்டுகளை வெட்டி, பையன் கையில் தந்து இவள் வாயிலும், தினகரன் வாயிலும் போடவைத்தாள். டப்பாவை மூடி, தினகரன் கையில் தந்தாள்.
பேருந்தில் வரும் வழியில் தினகரன் கண்களை மூடியபடி வந்தான். வெளியே இருட்டியிருந்தது. விரையும் பேருந்தின் சன்ன லூடே மரங்கள் கரிய நிழலுருவமாய்த் தெரிந்தன. திடீரென்று சில சமயம் மரங்களினூடே ஆந்தையின் ஒளிரும் கண்கள் பளிச் சிட்டுப் போயிற்று. தெருவில் நடந்து போகும் ஒருவனின் வேட்டி அல்லது தலை முண்டாசின் வெள்ளையோ, ஏதாவது சரிகைப் புடவையின் மினுமினுப்போ கடந்து போயிற்று சில சமயம்.
பயணம் - 2
* 309 +
________________
தினகரனின் கண்கள் மூடியபடி இருந்தன. வட்டப் பெட்டியைக் கையினின்றும் நழுவி விடாதபடி பிடித்துக்கொண்டிருந்தான்.
நிறுத்தத்தில் வண்டி நின்றதும் கண் விழித்தான். ஓட்டல் வாயிலில் இவளை விட்டுவிட்டுப் போகும்போது இவளை நேராகப் பார்த்துச் சிறிது வெட்கத்துடன் சிரித்தான்,
'மஞ்சரி', ஜனவரி 1997
4
310
4
அம்பை