Pages

Tuesday, May 15, 2018

எலும்புக்கூடுகள் - சுரேஷ்குமார இந்திரஜித் ::: சுபமங்களா ஆகஸ்ட் 1992

எலும்புக்கூடுகள் - சுரேஷ்குமார இந்திரஜித்
சுபமங்களா ஆகஸ்ட் 1992 . ________________

என் பெயர் லூயி பெர்டினாண்ட். நான் 1875-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி பாரிஸில் பிறந்தேன், என் படிப்பு மானிட இயல்  சம்பந்தப்பட்டிருந்தாலும், அந்த இயலில் நான் ஆர்வம் கொண்டிருந்ததாலும், 1897-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்று, பின் அங்கிருந்து கரேஷியா சென்றேன். என் ஆராய்ச்சி நீக்ரோ-ஆஸ்திரேலிய இனம் சம்பந்தப்பட்ட தாக இருந்தது. ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்களால், நீக்ரோ - ஆஸ்திரேலிய இனத்தினர் வாழும் ஆஸ்திரேலியா, கரேஷியா, மரேலியா நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டி ருந்தன.

கரேஷியாவிலேயே நான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். 1901-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி ஜெனிஃபரை நான் மணந்தேன். அதே நாளில்தான்,  பிரிட்டனின் ராணி விக்டோரியா இறந்தார் என்பதை என் மனைவி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். எங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. மானிட இயல் பற்றிய என் ஆர்வங்கள் அவளுக்கு ஏனோ வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. என் னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஒரு நாள் எங்கள் மகன் பெர்னார்டு ரேன்ஸையும் அழைத்துக் கொண்டு பிரிட்டன் சென்று விட்டாள்.

நான், என்னுடைய இரண்டு உதவியாளர்களுடன், நீக்ரோ-ஆஸ்திரேலியா இனம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். நீக்ரோ-ஆஸ்திரேலிய இனம் பின் வரும் அடையாளங்களை இயல்பாகக் கொண்டது. தோல், மயிர். கண்கள், ஆகியவற்றின் கருமை நிறம், புரிவடிவாகச் சுருண்ட  அல்லது அலை படிந்த தலைமுடி. முகத்தின் மேலும், உடம்பின் மேலும் மிகவும் அருகிய, ஆனால் சிலருக்கு அடர்த்தியான மயிர். முகம், தாடைப்புறம் ஓரளவு அகன்றிருக்கும். மூக்குத் துவாரங் களின் கிடை நீள் அச்சு ஓரளவு விட்ட வடிவானது. மேல்தாடை கொஞ்சம் துருத்தியிருக்கும். தடித்த உதடுகள், முன் துருத்திய மேலு தட்டுடன் வாய்ப்பிளவு. முகத்தில்' நீண்ட தாடை பெரும்பாலோருக்கு கால்கள் உடலுடன் ஒப்புநோக்கும் போது நீளமானவை.

நீக்ரோ-ஆஸ்திரேலியா வகைத் தன்மைகொண்ட  குழு இந்தியாவிலோ, இந்தோ சீனாவிலோ, தெற்கு ஆசியாவின் ஒரு பகுதியிலோ அல்லது இன்னும் மேற்கேயோ பின் தொன்மைக் கற்காலத்தின் ஆரம்பத்தில் வசித்தது என்றும் பிற்காலத்தில் இது மேற்குக் கிளையாகவும், கிழக்குக் கிளையாகவும் பிரிந்தது என்றும், பின்னர் இந்தக் கிளைகள் பிரதேசத் தொடர்பை தமக்குள் இழந்து விட்டன என்றும் நான் அபிப்பிராயம் கொண்டிருந்தேன்.

1930-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நாங்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடையும் படியாக ஏகப்பட்ட எலும்புக் கூடுகள், 'கம்பக்டி டமரு' என்ற நகரின் வெளிப்பகுதியில் கிடைத்தன. இவற்றின் நீளம், கபாலத்தின் கொள் அளவு, மண்டையோட்டின் சுட்டு எண் ஆகியவற்றைக் கொண்டு இவை கரேஷியர்களின எலும்புக்கூடுகள் என்ற அபிப்பிராயத்திற்கு வந்திருந்தேன். இவ்வளவு எலும்புக்கூடுகள் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதற்கான காரணம் எனக்கு விளங்க வில்லை. தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் வெளிவந்து கொண்டிருந்தன. இன்னதென்று கண்டறிய இயலாத காரணங்களினால் அதிகமானோர் இறந் திருக்கலாம் என்ற பொதுவான அபிப்பிராயத்திற்குத்தான் வர வேண்டியிருந்தது.

ஆஸ்திரேலியா, கரேஷியா, மரேலியா நாடுகள் ஒன்றுக்கொன்று அருகாமையிலுள்ள நாடுகள். பிரிட்டன் மற்றும் ஐரோப்பியர்களின் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன், கரேஷியாவில் விகிதத்தில் மக்கள் தொகை கரேஷியர்களே பெரும்பான்மை யானவர்களாக இருந்தார்கள்.

எனினும் மரேலியர்களின் நெடுங்கால ஆட்சியின் கீழ்தான் கரேஷியா இருந்தது. மரேலிய பிரிவைச் சேர்ந்த நரோமா பரம்பரையே கரேஷியாவை ஆண்டு வந்தது. பிரிட்டனின் ஆட்சி ஏற்பட்ட பின் அரசன் குடும்பே நரோமா பொம்மையாக்கப்பட்டார். இக்கால கட்டத்தில் கரேஷியாவில், பெருமளவு பிரிட்டன் சார்ந்த ஐரோப்பிய குடிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக் கையில் 15% ஆக இருந்தது.

பெருமளவில் எலும்புக்கூடுகள் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. மூன்று நாட்கள் கழித்து, ஒரு ராணுவ அதிகாரி என்னைச் சந்தித்தான். தொப்பியைக் கழற்றியதும் அவனுடைய பொன்னிற முடி பளபளத்தது. அதற்காகவே அவன் தொப்பியைக் கழற்றினானோ என்றும் தோன்றி யது. ராணுவச் செயலகத்தின் உதவி அலுவலர், • என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் கையோடு அழைத்து வரச் சொல்லி உத்திரவு என்றும் கூறினான். நான் உடைகள் மாற்றிக்கொண்டு அவன் கூடச் சென்றேன். பாதுகாப்பு நிலைகளையும், ஆங்காங்கே ஓர் ஒழுங்குக்கு உட்பட்டு நின்று கொண்டிருந்த ராணுவத்தினரையும் தாண்டி அந்த அலுவலரின் அறைக்குச் சென்றோம். உள்ளே நுழைந்து திரும்பிவந்த என்னை அழைத்துச் சென்றவன் அலுவலர் அழைப்பதாகக் கூறினான். நான்
மட்டும் உள்ளே சென்றேன்.

இந்த செயலகக் கட்டிடம், என் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருப்பதாக ஏனோ தோன்றியது. அலுவலர் என்னை வரவேற்று அமரச் சொன்னார். எனது கண்டு பிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் பேரரசின் பெருமையைக் காட்டுவதாகக் கூறினார். பெருமளவில் கிடைக்கும் எலும்புக்கூடுகள் தொடர்பாக விசாரித்தார். நான் உற்சாகமாக விவரிக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சற்றைக்கெல்லாம் அவர் பொறுமையின்றி ஆனால் அதை அடக்கிக் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியதால் நான் விரைவிலேயே நிறுத்திவிட்டேன். இந்த எலும்புக்கூடுகள் எப் படி அந்த இடத்தில் வந்தன என்றும் அந்த எலும்புக் கூடுகளின் பின்னணி பற்றியும் கேட்டார். அந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் கரேஷியர்களுடையது என்று அறிய வந்திருப்பதாகக் கூறினேன். இன்னதென்று அறிய இயலாத இயற்கையின் உற்பாதங்களினால் ஏற்பட்ட அழிவின் காரணமாக இருக்கலாம். பாதுகாப்பு கருதி ஒரே இடத்தில் குழுமியிருந்த போது அழிவு ஏற்பட்டிருக்கலாம். கரேஷியர்களின் வெவ்வேறு குழுக்களிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக அழிவு ஏற்பட்டி ருக்கலாம். அழிவுக்குட்பட்ட  குழுவினர் ஏதோ சதிக்கு உட்படுத்தப்பட்டு அல்லது ஒரே இடத்தில்  பிடிபடவில்லையென்று கூறினேன். நான் கடைசியாகக் கூறிய காரணம் மிக சுவாரஸ்யமாக இருப்பதாகவும், மரேலியர்களால், கரேஷி யர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருதுகோளுக்கு வர சான்றுகள் உண்டா என்றும் | கேட்டார். இந்தக் கருதுகோளுக்கு வரவாய்ப்பில்லை என்றும் மரேலியர்களின் குடியேற்றக் காலம் பிற்காலத்தியது என்றும், அதற்கு முற்பட்ட காலத்தைச்  சேர்ந்தவை இந்த எலும்புக் கூடுகள் என்றும் கூறினேன். இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டா என்று கேட்டார். நான் இல்லை என்றேன்
.
அவர் பேசினார், 'கரேஷி யாவில் நமது அரசுக்கு எதிரான போராட்டங்கள் பற்றி உங்களுக் குத் தெரியும். உங்களுடைய கண்டு பிடிப்புகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சரித்திரப் பதிவுகள் பெற்ற சில சம்பவங்கள் மாறாத தழும்புகளாக மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும். நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள நாம் பல தந்திரங்களிலும் ஈடுபட வேண்டியிருக்கிறது. அதைக் காட்டிலும் நமது பேரரசின் பெருமை மிக முக்கியமானது. மரேலியர்களுக்கும், கரேஷியர்களுக்குமான பிளவை ஆழப்படுத்துவதன் மூலம் | சச்சரவுகள் ஏற்பட்டு மக்களின்  வாழ்வை ஒழுங்கு செய்வதற்கான | சக்தி என்ற தேவையில் நாம்
ஸ்தாபிதம் பெறலாம். மேலும் இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை | நமக்கு எதிரான செயல் என்பதையும் நாம் அறிவித்திருக் கிறோம். நமது பாதுகாப்பிற்காக சில சமயம் நாம் சிலவற்றை  தியாகம் செய்ய வேண்டியிருப்பது, நமது இனத்திற்கு நாம் செய்யும் அஞ்சலி. இவற்றையெல்லாம் | உத்தேசித்து, தேசபக்தியை கணக்கி | லெடுத்துக் கொண்டு யோசித் தால், மரேலியர்களின் தாக்கு தலுக்கு உட்பட்டு இறந்த கரேஷிய ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகளே அவை என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று தோன்றும். நீங்களும். அவ்வாறே செயல்பட | வேண்டும் என்று நான் விரும்புவது நமது நலன் கருதியே என | நீங்கள் விளங்கிக் கொள்ள | வேண்டும்.

சூசகமாக தெரிந்த வலை கண்  முன்னாலேயே வெளிப்பட்டு விட்டது என்னால் அவ்வாறு கூற இயலாது என்றும் மானிட இயலுக்கு உண்மை யானவையாகவே நான் இருக்க விரும்புகிறேன் என்றும் கூறினேன். நாங்கள் அரசுக்கு உண்மை யாக இருக்க விரும்புகிறோம். முடிவை பரிசீலனை செய்யுங்கள் என்றார் அலுவலர். எனது முடிவில் மாற்றம் இல்லை என்றேன், நான்..

இறுகிய முகத்துடனிருந்த அலுவலர் என்னை சற்று நேரம் வெளியே இருக்கும்படி கூறினார். நான் வெளியே வந்து ஜன்னல் வழியே வந்த காற்றை சுவாசித் | தேன், பொன்னிற முடிகொண்ட இளைஞன் என்னைப் பார்த்து சிரித்தான். கதவைத் திறந்து கொண்டு அலுவலர் வெளியேறி னார். பொன்னிற முடி இளைஞன், அவரைக் கண்டதும் உடல் விரைப்புற்று, அவர் பின்னாலே சென்றான். நான் என் கவனத் தையும், சிந்தனையையும் கட்டுப் | படுத்தி என் பதட்டத்தை தளர்த்த | முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஜன்னல் வழியாகத் தெரிந்த ராணுவத்தினரின் நடவடிக்கைகளை | சாதாரணமாக பார்க்க முயன்று | கொண்டிருந்தேன்.

சுமார் அரை மணி நேரம் கழித்து அலுவலர் திரும்பி வந்து அறைக்குள் நுழைந்தார். சற்று | நேரத்தில் பொன்னிற முடி இளைஞன், அலுவலர் என்னை அழைப்பதாகக் கூறினான். நான் உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்தேன். மரேலியர்களின் தாக்குதலுக்குட்பட்டு இறந்த ஆண்கள், பெண்கள், குழந்தை களின் எலும்புக் கூடுகளே அவை என்று ஓர் அறிக்கை மானிட இயல் வல்லுநர் லூயி பெர்டி னான்ட் பெயரில் இன்று வெளி யிடப்படும் என்று கூறினார். இது மிகவும் அக்கிரமமானது என்றேன். யாரிடம் பேசுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என்றவர், பொன்னிற முடி இளைஞனை அழைத்து சங்கேத மொழியில் ஏதோ சொன்னார். அடுத்த விநாடி அவன், என்னை கோட்டைப் பிடித்து தூக்கித் தள்ளினான். நான் கீழே விழுந்தேன். அலுவலர் சங்கேத மொழியில் ஏதோ சொன்னார். அந்த இளைஞன் என்னை வெளியே அழைத்துச் சென்றான்.

வன்முறை பற்றிய கற்பனைகள் என்னை பீதியில் உலுக்கிக் கொண்டிருந்தன. தனி அறைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் உங்களிடம் சில வெற்றுத்தாள்களில் கையொப்பம் வாங்க எனக்கு உத்திரவு என்றான். நான் அவனிடம் என் நிலையை விளக்க முயன்றேன். அவன் அதைக் கேட்க விரும்பவில்லை. 'கையொப்பமிடுவது : தான் உங்களுக்கு நல்லது. அதுதான் விவேகம். உங்களை கையொப்பமிட வைப்பது சிரமமான காரியமில்லை . எதற்காக உங்களை துன்பப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள். உங் களை துன்பப்படுத்திக்கொண்டு இந்த சூழலில் எதுவும் சாதிக்க இயலாது' என்றான்.

என்னை துன்பப்படுத்திக் கொண்டு நிர்ப்பந்தத்தினால் கையொப்ப மிடும் நிலை வரை சென்று பார்க்கலாமா என்று தோன்றியது. இப்போதே இருதயத் துடிப்பு அதிகரித்து உடல்  வியர்த்திருந்தது.

தலைச் சுற்றல் வேறு தோன்றி யிருந்தது. எப்படியிருந்தாலும் கையொப்பம் வாங்கித் தருவது என்ற நிலையில், துன்பப்படுத்திக் கொள்ளாமல் கையொப்பமிடுவது. உசிதம் என்றும், பின்னால் சந்தர்ப்பம் வாய்க்கும்போது உண்மையை வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் என் நோஞ்சான் மனதில் எண்ணங்கள் தோன்றின. அவனிடமிருந்த சில வெற்றுத்தாள்களில் கையொப்பமிட்டுக் கொடுத்தேன். கையொப்பமிடும் போது 'மாற்றிக் கையொப்ப மிடக் கூடாது' என்றான் இளைஞன். நான், அவ்வாறு செய்ய வில்லை என்றேன்.

அறைக் கதவைத் திறந்து இரண்டு இராணுவத்தினரை என்னைப் பூார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, இளைஞன் உற்சாகத்துடன் சென்றான். இரண்டு இராணுவத்தினரையும் பார்த்து அறைக்கு வெளியே சற்றுநேரம், ஜன்னலோரமாக நிற்கலாமா என்று கேட்டேன். அவர்கள் ஒரு வரையொருவர் பார்த்துக்கொண்டு, இளைஞன் வரும் வரை காத்திருக்குமாறு கூறினார்கள். இளைஞன் உற்சாகமாக வந்தான். என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினான். நான் உடன் சென்றேன். என் வீட்டைச் சுற்றி இராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் அதுபற்றி விசாரித்தபோது. எனது நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக, இளைஞன் தெரிவித்தான். அத்துடன் எனது ஆராய்ச்சிக் கூடமும், உதவியாளர்களும், பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தான்.

அடுத்த மூன்று நாட்கள் மிகுந்த மனக்குழப்பத்துடன் இருந்தேன்._
என் நிலை பற்றியும், உதவி யாளர்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூடத்தில் நிலை பற்றியும் பீதி அடைந்திருந்தேன். மூளையும், உடலும் சோர்வுற்றபோது உறங்கினேன், விழிப்பு வந்தபோது விழித்துக் கொண்டிருந்தேன். இதனால் , நேரங்கள் எனக்குக் குழம்பிக் கொண்டிருந்தன. நான்காம் நாள் காலை ஒருவன் வந்து | செய்தித்தாள்களை கொடுத்துச்  சென்றான். எனக்கு செய்தித்தாள்களை கொடுக்கும்படி அவனுக்கு உத்திரவாகியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நான்கு நாட்களின் செய்தித்தாள்களை அவன் கொடுத்துச் சென்றிருந் தான்.
செய்தித்தாள்களில் இருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் மேலும் குழப்பங்களையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்துவதாக இருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள், மரேலியர்கள், கரேஷியாவைக் கைப்பற்றிய காலத தைச் சேர்ந்தவை என்றும், ஆண்கள், பெண்கள், குழந்தை கள் கொண்ட கரேஷியர்கள் மக்கள் குழு ஒரே இடத்தில சேர்க்கப் பட்டு மரேலியர்களால் அழிக்கப் பட்டுள்ளது என்றும் இவை லூயி பெர்டினாண்டின் ஆராய்ச்சியில் அறிய வந்துள்ளதாகவும் அதற் கான மானிட இயல், புவி இயல் ஆதாரங்களுடன் முதல்நாள் பத்திரி கைகளில் செய்திகள் வந்திருந்தன.

மற்ற நாட்களில் பத்திரிகைகளில் பல நகரங்களில் மரேலியர்களுக்கும், கரேஷியர்களுக்கும் ஏற்பட்ட மோதல்கள், சொத்து சேதங்கள் மற்றும் உயிர் அழிவு பற்றிய விரிவான செய்திகளும் அரசு அமைதியையும், சட்டத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்துமாறு விடப்பட்ட அறிக்கை களும் இருந்தன. மோதலினால் ஏற்பட்ட மனித அழிவுகள் துக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மோதலில் தாட்சண்யமற்ற தன்மை அதிகரித்துக் கொண்டே போவதைக் காட்டிக் கொண்டிருந் தன. பொறுப்பான தகப்பனின் பாவனையில் அரசு மக்களுக்கு அறிவுரைகள். வழங்குவதும், ஆங்காங்கு காணப்பட்டன. 'கம்பக்டி டமரு படுகொலை' என்ற சொற்றொடர் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. மரேலியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக லூயி பெர்டினாண்டிற்கு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசு அறிக்கை காணப் பட்ட து.

எனக்கு ஆயாசமும், தலைச் சுற்றலும் ஏற்பட்டன. உண்மையை கண்டுபிடிக்க முடியாத படி சிக்கல்கள் மறைந்து விட்டன என்று தோன்றியது. உண்மை வெளிப்பட்டாலும், மரேலியர்களுக்குச் சாதகமாக இட்டுக் கட்டப்பட்ட பொய் என்ற பெயரையே அது அடையும் என்றும் தோன்றியது. இவ்வாறு தோன்றியதும் எனக்கு பீதி ஏற்பட்டது.

என் உதவியாளர்களின் நிலை பற்றி ராணுவத்தினரிடம் நான் விசாரித்து அறிந்துகொள்ள செய்த முயற்சி பயனளிக்கவில்லை .
பிறகு எனக்கு பத்திரிகைகள் அளிக்கப்படவில்லை. பொன்னிற முடி இளைஞனுக்கு பதிலாக, கன்னத்தில் தழும்பு கொண்ட இளைஞன் வந்திருந்தான். அவன் தற்போது இருக்கும் இடம் பற்றி இவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சுற்றியுள்ள மனிதர்கள் உத்திரவுகளுக்கு உட்பட்டு யந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். கடிகாரம் இருந்தாலும் நேரங்களைப் பற்றிய குழப்பங்களும், நாட்களைப் பற்றிய குழப்பங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

சிறிது__நாட்களாக என் ம . பெர்னார்டு ரேன்ஸைப் பற்றிய நினைவுகள் ஏற்பட்டுக் கொண்டு ருந்தன. அவனைப் பார்த்துவிட்ட வேண்டும் என்றும் ஏனோ தோன்றி: கொண்டிருந்தது.
நாளாவட்டத்தில், தலைச்சுற்ற லும், வாந்தியும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. நான் சந்தித்த அந்த அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி வாளால் சரித் திரத்தில் காயங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ஒரு பிம்பம் எல்லா நேரங்களிலும் அச்சுறுத் திக் கொண்டிருந்தது. சரித்திரம் அலற, மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களுக்குள் தாட்சண்யமற்று சண்டையிட்டு மடிவது எங்கோ பார்த்த ஓவிய அல்லது படக்காட்சி போல தோன்றிக் கொண்டிருந்தது. பிம்பமும், காட்சியும் என் சிந்தனையை சக்தியுடன் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. தூக்கம் ஏற் படுவது சிரமமாக இருந்தது. நேரங்கள், நாட்கள் பற்றிய குழப் பங்கள் அதிகரித்துக் கொண்டே போயின. பகல் மூன்று மணிக்கு ஏன் இருட்டாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை . நான் தான் நேரங்களைக் குழப்புகிறேன் என்று நினைப்பு ஏற்பட்டு, நான் மேலும் பீதியடைந்தேன். அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி என்னை அச்சுறுத்திக் கொண்டேயிருந்தார். என் செயல், என் மனம், மாந்திரீகவாதியின் கட்டளைக்கு உட்பட்டது என்று தோன்றியது. மாந்திரீகவாதி கட்டிலுக்கு கீழே படு என்று உத்திரவிட்டதும், நான் அவ்வாறே கட்டிலுக்குக் கீழே படுத்தேன். காகிதங்களைத் தின்ன உத்திர விட்டதும், காகிதங்களைத் தின்ன ஆரம்பித்தேன். தலைகீழாக நிற்க உத்திரவிட்டதும் நான் அவ்வாறு நிற்க இயலாமல், உத்திரவிற்குப் பணிய வேண்டும் என்ற நினைப்பில் பலமுறை மன்னிப்புக் கேட்டு கொண்டு, கீழே விழுந்து கொண்டிருந்தேன். வார்த்தைக் உருவாகி என்னைக் குழப்ப கொண்டிருந்த நேரத்தில் மாந்திரீகவாதி என்னை வார்த்தைகளை விழுங்க உத்திரவிட, அவ்வாறே நான் செய்ய ஆரம்பத்தேன். எப்போது  நான்  இல்லாமல் போனேன் என்பது என் நினைவில் இல்லை .