16. கி.ராஜநாராயணன் [கி.ராஜநாராயணன் கதைகள். அகரம்]
258 Top Shorts: Fiction picks by Jeyamohan
https://10hot.wordpress.com/tag/best/page/3/
1. கன்னிமை
2. பேதை
3. கோமதி
4. கறிவேப்பிலைகள்
5. நாற்காலி
6. புவனம்
7. அரும்பு
8. நிலைநிறுத்தல்
2. பேதை
3. கோமதி
4. கறிவேப்பிலைகள்
5. நாற்காலி
6. புவனம்
7. அரும்பு
8. நிலைநிறுத்தல்
புவனம்
மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத, அந்தப் பெண்பிள்ளை.
வீடு மாறிவிட்டதோ என்று திகைத்தபோது, "வாங்க” என்று மலர்ச்சியுடன் விரியத் திறந்தாள் கதவை.
அவளுக்குப் பின்புறம் கண்களால் துழாவினான்.- தையல் மெஷினிலிருந்து அவள் எழுந்து வந்திருக்கவேண்டும்,
“நீங்க வருவீகண்ணு இந்நேரவரைக்கும் காத்துக்கிட்டிருந்தாக; அவசரமா ஒரு இடத்துக்குப் போயிருக்காக. வந்திருவாக இப்பொ ; உக்காருங்க.”
தயங்கி, மேலும் வீட்டினுள் பார்த்தபோது நண்பனும் அவன் மனைவியும் சிரித்துக்கொண்டு நின்றார்கள் போட்டோவில்.
"வந்ததும் உங்களெ சாப்பிடச் சொன்னாக. சாப்பிடுதியளா; எலை போடட்டுமா?"
சட்டையைக் கழத்தியதும் ஹேங்கரை நீட்டியது அந்தக்கை. இவனுக்கு பாத்ரூம் போகணும்போலிருந்தது. அங்கே என்று காட்டிக் கொடுத்தாள்.
குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி மேலே இறைத்துக்கொண்டான். தண்ணீருக்குள்ளேயே தவளையாகிவிடனும் போலிருந்தது.
- பாத்ரூம் கதவைத் திறந்தபோது கையில் டவலுடன் நின்று கொண்டிருந்தாள். வாங்கி விரித்து முகத்தில் ஒத்திக்கொண்டபோது
ஒரு நல்ல சலவையின் மணம்.
டவலை முகத்திலிருந்து எடுத்துவிட்டு அவளைப் பார்த்தான். நேசப் புன்னகையுடன் இவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். "குழந்தை அந்நியனுடன் பழகிவிட்டது; சகஜம் வந்துவிட்டது' என்று நினைத்தான்.
இவன் அவளைக் கவனித்தான். பதினோரு வயசுக்கான உடம்பு. ஒல்லி. கொஞ்சம் உயரம். சட்டையும் பாவாடை மட்டும்.
மேஜையில் போடப்பட்ட இலையின் முன் உட்கார்ந்துகொண்டு புறங்கைகளையும் துடைத்துக்கொண்டே கேட்டான்.
"உன் பேர்??? “புவனா” பாதி நாணத்தோடு பாதிச் சிரிப்பு. கொஞ்சம் தலை கவிழ்ப்பு .
________________
240 0 புவனம்
"மனோகருக்கு நீ என்ன வேணும். சொந்தமா?” இல்லை என்ற மெதுவான தலையசைப்பு.
மேலேயிருந்து வந்துகொண்டிருந்த கண்ணாடி வெளிச்சத்தை ஒரு மேகம் கடந்தபோது ஏற்பட்ட வெளிச்சக் குறைவு.
“நீ சாப்ட்டாச்சா?”
முடிந்தது என்று தலையசைப்பு, முகத்தில் பழைய நாணம் சிரிப்பு தலைகவிழ்ப்பு வந்துவிட்டது! இனியும் மேகம் கடக்காமல் பார்த்துக் கொள்ளணும்! -
ஜன்னல் வழியாக, பக்கத்துவீட்டுப் பசுவின் மடியில் தண்ணீர் அடித்து கழுவிக்கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்தது. காம்புகள் விறைப்பாகிவிட்டன. இப்பொழுது கறக்கத் தொடங்கலாம்.
"நீ பள்ளிக்கூடத்து லீவுக்கு இங்கே வந்திருக்கயா?” களுக்கென்று சிரிப்புடன் ஒரு தலைகவிழ்ப்பு. "இப்போ ஏது பள்ளிக்கூடத்துக்கு லீவு !"
அது இவனுக்கும் தெரியும்! ரசம் உண்மையிலேயே நன்றாய் இருந்தது. "ரசம் ரொம்ப நல்லா இருக்கே; நீதான் வச்சயா?”
"ஹுக்கும் சும்மா சொல்றீக”. இவளேதான்; இவள் வைத்ததுதான்! “என்ன வகுப்பு படிக்கிறே நீ?”
கால் பெருவிரலால் தரையில் அரைக்கால் வட்டம் போட்டுக் கொண்டு, "நா பள்ளிக்குடம் போகலே; படிப்பை நிறுத்தியாச்சு."
இது நம்ப கேஸ் என்று நினைத்துக்கொண்டான். “எதுவரைக்கும் படிச்சே?” "ஆறாவது வரை"
கொஞ்சங் கொஞ்சமாய் அவள் தன்னைப்பற்றி சொல்லிக் கொண்டு வந்தாள். - சோபாவில் இவன் உட்கார்ந்துகொண்டே கேட்டான். அவள் தையல் மெஷினில் உட்கார்ந்து தைத்துக்கொண்டே சொன்னாள்.
அவள் மனோகரின் மனைவிக்கு ஏதோ ஒருவகையில் தூரத்து உறவாம். தாயும் தகப்பனும் கண்ணை மூடிவிட்டார்கள். இவளோடு மொத்தம் நாலு உடன்பிறப்புகள். இவளே மூத்தாள். குடும்பத்தைக் காப்பாத்தியாக வேண்டும்! குடும்பத் தலைவன் பிடித்த செங்கோலைத் தைரியமாக ஏற்றுக்கொண்டாள்.
இந்த நகரத்தில் நடக்கும் ஒரு தையல் ஸ்கூலில் சேர்ந்து படிப்பை முடித்துக்கொண்டாள், தவணை முறையில் ஒரு தையல் மெஷின் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள் இவர்கள்.
ஊரில் போய், துணிகள் தைத்துக் கொடுத்து அதிலிருந்து வரும் வருமானத்தைக்கொண்டு முறைப்படி மெஷினுக்கும் பணம் கட்டிக் குடும்பத்தையும் காப்பாற்றவேண்டும்,
இவன் மூச்சை உள்ளுக்கு இழுத்து வேகமாக வெளியே விட்டு 'யப்பா, குருவி தலையிலெ பனங்காயெ வச்சிட்டயே' என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான்,
________________
கி. ராஜநாராயணன் 0 241
“உனக்கு என்ன வயசாகுது?”
வலதுகைப் பக்கமுள்ள வீலில் உள்ளங்கை பதிந்து வேகமாக ஓடிய மெஷினை மெதுவாக்கி, “பதினாலு,” என்றாள்.
மனசுக்குள், 'பதினாலு!' என்று சொல்லி வியந்தான். இந்த நாட்டின் வளர்ச்சியைப்போல் இவளும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். ஊட்டம் நிறைந்த உணவும் மனநிறைவும் கொண்டிருந்தால் இப்போது
இவள் ஒரு பறவையைப் போலிருப்பாள் என எண்ணினான்.
"தக்கிற நேரமும் வீட்டுவேலையும் போக பாக்கி நேரங்கள்ளெ எப்பிடிப் பொழுதெப் போக்குவெ!”
"கதைப் பொஸ்தகம் படிப்பேன்; கதைண்ணா ரொம்பப் பிடிக்கும் எனக்கு.” - 'அப்படியா; எனக்கும் கதைண்ணா ரொம்பப் பிடிக்கும் எழுத
என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.
வாசல் கதவு திறந்தது. மனோகர் தம்பதி கையில் குழந்தையுடன் உள்ளே நுழையும்போதே ஆச்சர்ய ஆனந்தத்துடன் இவனை நெருங்கினார்கள். "நீ வராமப் போயிடுவயோண்ணு நெனைச்சேன்; நீ அப்பிடி செய்யக்கூடிய ஆசாமிதானே,” என்று இவனுடைய தோளைப் பிடித்து நிமிட்டினான்.
பிறகு தனது குழந்தையிடம் “பாத்தியா, இதாரு பாரு சுண்டல் மாமா வந்திருக்கார்,” என்றான் மனோகர்.
முன்பு இவன், தன் நண்பர்கள் இவனிடம் குஷியான சமாச்சாராம் சொன்னால் "அடிரா சுண்டல்!" என்று சொன்னதை இன்னும்
ஞாபகமாய் வைத்துக்கொண்டிருக்கிறானே என்று நினைத்தான்.
குழந்தையை இவன் கைகள் நீட்டித் தன்னிடம் அழைத்தான். அது முகத்தைத் திருப்பிக்கொண்டது.
குழந்தைக்கு வயசு எட்டு மாசம் இருக்கலாம். பெரிய்ய கண்கள். அழகாக இருந்தது.
"அய்யோ, குழந்தைக்கு ஏதாவது விளையாட்டுச் சாமான் வாங்காமல் வந்துவிட்டோமே', என்று வழக்கம்போல் தன்னைக் குறைபட்டுக்கொண்டான்.
“என்ன பேர் வச்சிருக்கே!” "அனுசுயா.”
“அப்போ பொல்லாத பெண்ணாத்தான் இருப்பா; சந்தேகம் வேண்டாம்!” என்றான்.
இவர்களுக்கு காபி வந்தது.
பிறகு அனுசுயாவுக்கு பால் வந்தது. அப்பன் மடியில் அவள் சொகுசாகப் படுத்து அட்ணக்கால் போட்டுக்கொண்டு பாட்டில் பாலைக் கொஞ்சங் கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டே இவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அப்படி இவனைப் பார்த்தது, யாருடா நீ எங்க வீட்டுக்கு வந்திருக்கே என்பது போலிருந்தது!
மனோகர் தன் குழந்தையின் எதிர்காலத் திட்டத்தை இவனிடம் விவரித்தான். "நா இவளுக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுத்து,
மணக்கால் பேசிக்கொண்டே போர்த்தது,
________________
242 0 புவனம் ஆசியாவிலேயே இப்படி யாருமில்லை என்று ஒரு நாட்டிய ராணியாக்கப் போறேன்,” என்றான்.
இவன் அவள் முகத்தைப் பார்த்தான். பாவங்களைக் கொண்டு வரக்கூடிய வசதியான முகம்; அதுக்கு முகம்கூட அதிகம். இந்தப் பெரிய கண்களே போதும் என்று நினைத்தான்.
நாட்டிய ராணி ஆனபிறகு இவள் தன் மடியில் இப்படி உட்காரச் சம்மதிப்பாளா என்று ஒரு நினைப்பு வந்தது இவனுக்கு! இப்போது இவன் மடியில் கதகதப்பாக இறங்கி தொடை இடுக்கு வழியாக 'நாட்டியராணியின் ஒண்ணுக்கு வழிந்துகொண்டிருந்தது.
"வேட்டியை நனைச்சிட்டா," என்று இவன் சொன்னபோது அங்கே ஒரு கூட்டுச் சந்தோஷ ஆரவாரம் எழுந்தது. " அனுசுயாவுக்கு உங்கமேலே ரொம்பப் பிரியம்," என்றாள் புவனா.. கிராமங்களில் இப்படி ஒரு நம்பிக்கை என்று நினைத்தான்.
மனோகர் துணி பீரோவைத் திறந்து இவனுக்கு மாற்றிக்கொள்ள ஒரு புது கைலியை எடுத்துத் தந்தான். அதை வாங்கிக்கொண்டு இவன் பக்கத்து அறைக்குள் போனான். பெற்றுக்கொள்ளும்போதே அந்தக் கைலியின் ஸ்பரிசம் மிருதுவாக இருந்தது. காவி நிறத்திலிருந்த அதை இவன் தனது முகத்தருகே கொண்டுசென்றபோது அந்த நிறத்திற்கே உண்டான ஒரு மணம் இருந்தது. நிறத்துக்கு என்றே - ஒவ்வொரு நிறத்துக்கும் - ஒரு மணம் உண்டு என்று இவன் நண்பர்களிடம் குறிப்பிடும்போது சிரிப்பார்கள்.
கைலி அணிந்துகொண்டு வந்தபோது இதமாக இருந்தது. தன்னைச்சுற்றி ஒரு புனிதம் நிறைந்ததுபோல ஒரு எண்ணம்.
அறையில் தான் கலைந்த வேட்டியை புவனா எடுத்துக்கொண்டு அனுசுயாவையும் இவனையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே குளியலறைக்குப் போனாள்.
மறுநாள் காலை ஆகாரத்துக்கு மேல் மனோகர் தம்பதி ஆபீஸுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். மத்தியானத்துக் கெல்லாம் வந்துவிடுவதாகவும் வந்ததும் ஒரு படத்துக்குப் போகலாம் என்றும், பேசாமல் படுத்துத் தூங்கு என்றும் சொல்லிவிட்டுப் போனார்கள். இவனும் ஒரு சின்னத் தூக்கம் போட்டான்.
பகல் பத்து மணி இருக்கும். இவனுக்கு முழிப்புத் தட்டும்போது, தையல் மெஷினின் கடகட சத்தம் இவனை எழுப்பியது.
அந்த இடத்தில் வந்து பார்த்தபோது ஏகப்பட்ட வீட்டுப் பழைய துணிகளைக் குவித்து வைத்துக்கொண்டு புவனா சுறுசுறுப்பாகத் தைத்துக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் வேகமாகச் சுற்றிய வீலில் கைபொத்தி வேகத்தைக் குறைத்தாள் சிரிப்புக் கலந்த நாணத்துடன்.
இவன் அவளுக்கு எதிரே இருந்த பலகையில் உட்கார்ந்து அவள் தைத்துக் கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான், யார் முதலில் பேச ஆரம்பிப்பது என்ற போட்டி இருப்பதுபோல் தெரிந்தது அவர்கள் மெளனம்.
________________
கி. ராஜநாராயணன் 0 243
அவள் தலையில் வாசனையில்லாத மலிவுவிலைப் பூ இருந்தது. அரக்கு நிறக் குங்குமம் 'உருட்டி விழிக்காமல் சாந்தமாக நெற்றியில் இருந்தது. அவள் நிறத்துக்கு அந்தக் கலர் பொருத்தமாகப் பட்டது.
அவனுடைய மெளனத்தின் தீட்சண்யத்தைப் பொறுக்காமல் அவள் களுக்கென்று சிரித்து அதை உடைத்தாள்.
இப்போது இருவருமே பேசத் தயார்; ஆனால் எப்படி, எதைப்பற்றி ஆரம்பிப்பது!
"நா ஊருக்குப் போகணும்.” அவள்தான் ஆரம்பித்தாள். "அப்புறம் இங்கே வரமுடியாது.”
"ஏன் வரமுடியாது?” என்று இவன் கேட்டான், அதுக்குப் பதில் சொல்லவில்லை; இவனை மட்டும் பார்த்தாள்.
- "மெஷினையெல்லாங் கொண்டுபோகணும்; சித்தப்பா கூட வருவாக ஊர் வரைக்கும். சித்தப்பா என்றது மனோகரை.
“ அனுசுயாவுக்கு நா ஒரு சட்டை தச்சிருக்கேன். தெரிஞ்சா சித்தி கோபிப்பாங்க. இது ஒருத்தருக்கும் தெரியாது. நா ஊருக்குப் போற அண்ணைக்கி என் அன்பளிப்பா அனுசுயாவுக்குக் கொடுத்துட்டுப் போகணும்.”
தையல் மெஷினில் பொருத்தப்பட்டிருந்த சிறிய 'இழுப்புவை இழுத்து அவள் தைத்து வைத்திருந்த சட்டையை எடுத்துக் காட்டினாள். ரொம்ப நல்லா இருந்தது. - - இவனுக்குத் தன்னுடைய சட்டையில் பாக்கெட் கொஞ்சம் தையல் விட்டிருந்தது ஞாபகம் வரவே எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, தைத்தபிறகு போட்டுக்கொண்டான்.
பின்பும் அவர்கள் கொஞ்சநேரம் சந்தோஷமாக பேசிப் பொழுதைக் கழித்தார்கள். அப்போதும் அவள், மத்தியில் ரெண்டு மூணுதரம் "நா ஊருக்குப் போயிருவேன்; நா இனி இங்கே வர முடியாது,” என்று பிரஸ்தாபித்தாள்.
அதில் அவள் என்ன செய்தி வைத்துச் சொல்கிறாள் என்று மண்டையை உடைத்துக்கொண்டும் புரியவில்லை இவனுக்கு!
தொண்டையில் குரல் எழுப்பிப் பேசுகிறது ஒருவிதம். குரலை எழுப்பாமல் மனசைக்கொண்டு மவுனமாக எதிராளியிடம் பேசச் செய்கிறது ஒருவிதம். இரண்டாவது முறையில்தான் என்னால் பேச முடிகிறது என்று இவன் நினைத்தான்.
மறுநாள் காலையில் இவன் ஊருக்குப் புறப்பட்டான். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டான்; அனுசுயாவிடம்கூட, புவனாவை மட்டும்தான் காணவில்லை.
'அவ எங்கே புவனா?” “மார்க்கெட்டுக்குப் போயிருக்கா காய்கறி வாங்க; வர கொஞ்ச நேரமாகும்.” மனோகரின் மனைவி சொன்னாள்.
இவனோடு பஸ் ஸ்டாண்டுவரை மனோகர் வந்தான்.
டப்பா பஸ்ஸாக இல்லாமல் நல்ல பஸ்ஸாக பார்த்து வைத்துக் கொண்டான். கூட்டம் அதிகமாக இல்லை. பஸ்ஸில் ஏறிக்கொள்ளும்
________________
244 0 புவனம்
முன் ஒருதரம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தான். இடதுகையால் சட்டையின் இடது மார்பைத் தொட்டான்.
“என்ன! வலியா??? மனோகர் கேட்டான்; அவன் முகத்தில் ஒரு சின்னத் திகில்.
= "சே, நீ ஒண்ணு. அதெல்லாமில்லை சும்மாதான்” என இவன் சொன்னாலும் இதயத்திலே யாரோ கல்லை விட்டு எறிஞ்சுட்டாங் கடா' என்று மனசு சொல்லிக்கொண்டது.
இவனையறியாமலேயே இவன் கை தொட்டது, பாக்கெட்டைத் தான் என்று பிறகு நினைத்தான்.
கடா' என்றும் இதயத்தில்தெல்லாமில்
குமுதம் 25 மார்ச் 1976
********************
பேதை
-
WWWWWWWWWWWWWWWww
பேச்சி, ஒரு இன்பமான கனவு கண்டாள்.
இரட்டைக் கதவு போட்ட ஒரு வாசல். ஒரு கதவு மட்டும் திறந் திருந்தது. ஒரு கதவு மூடியிருக்கிறது. மூடியிருக்கும் அந்தக் கதவைப் பிடித்திருக்கும் பிஞ்சு விரல்கள் மட்டும் தெரிகிறது. ஒரு குழந்தையின் தலை மெதுவாக எட்டிப்பார்க்கிறது. திரும்பவும் மெள்ள எட்டிப் பார்க்கிறது. பார்த்தவுடன் சிரித்துக்கொண்டே அது சரக்கென்று தலையை இழுத்துக்கொள்கிறது. திரும்பவும் மெள்ள... ---
பார்வதி அம்மன் கோவிலுக்குமுன் இருந்த வேப்பமர நிழலில் பேச்சி படுத்திருந்தாள். நல்ல நிலா. அவளைத் தொட்டுத் தொட்டு உலுக்குவதுபோல் மேல்காற்று இறைந்து இறைந்து அடித்துக் கொண்டிருக்கிறது. கைகளை அகல விரித்துப்போட்டு மல்லாக்க தன் தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டு கிடந்தாள் அவள். ரவிக்கை அணியாத மாராப்புச் சேலை வயிற்றில் கிடந்தது. ஆடையும்
விலகி 'அலங்கோலமாக' இருந்தது. -
தூங்க ஆரம்பித்தபோது அவள் படுத்திருந்த இடத்தில் இப்பொழுது மரத்தின் நிழல் விலகி நிலவு காய ஆரம்பித்துவிட்டது. முகத்தின்மீது மட்டிலுமே வேப்ப மரத்தின் அடர்ந்த பந்து போன்ற ஒரு கிளையின் நிழல் பேச்சியின் முகத்தில் விழுவதும், காற்றின் தள்ளலால் அது விலகி முகத்தில் நிலவடிப்பதுமாக இருக்கும் போதுதான் பேச்சி மேலே கண்ட கனவைக் கண்டுகொண்டிருந்தாள்.. --- கனவு நீடித்தது. அவள், குழந்தையை எட்டிப்பிடிக்கப் போனாள். குழந்தை மறைந்து கொண்டது. அவள் பிராக்குப் பார்த்துக்கொண்டி ருக்கையில் பேச்சியின் பின்னால் வந்து அவளுடைய சேலையைப் பிடித்து இழுத்தது குழந்தை. பிடிப்பதற்குத்திரும்பினால் குழந்தை மறைந்துவிடும். திடீரென்று குழந்தையைப்பேச்சி சேர்த்துப் பிடித்துக் கொண்டுவிட்டாள். ஆவி சேர்த்துக் கட்டி அணைத்து அதன் முகத்தில் மாறிமாறி முத்தமிட்டாள். குழந்தை திணறித் தன்னை உருவிக்கொண்டு போக உளத்துகிறது. ஆடை நீங்கிய திரண்ட மாரில் அந்த உளத்துதல் சொல்லமுடியாமல் பேரின்பமாக உடம்பு புல்லரித்தது பேச்சிக்கு. - இப்பொழுது அவள் கனவு கலைந்து அரை முழிப்புநிலைக்கு வந்துகொண்டிருந்தாள். தான், சேர்த்துப் பிடித்துக்கொண்டிருந்த, குழந்தை தாங்கமுடியாத கனமாகத் தெரியவே தான் கண்டது கனவு அல்ல, நிழலுக்குப் படுத்திருந்த மரமே தன்மீது சாய்ந்து அமுக்கி விட்டது என்று நினைத்தாள். அடிவயிற்றில் பாரமாக அமுக்கிகி. ராஜநாராயணன் 0 137 நெஞ்சின் மீது விழுந்து கிடந்த மரத்தை சேர்த்துப் பிடித்திருந்த இரு கைகளையும் விட்டுவிட்டு, உயிர்தப்பிக்க நினைத்து விசில் ஸ்தாயையில் கோரமான ஒரு குரல் அவளிலிருந்து வெளிப்பட்டது. வெளிப்பட்ட அந்தக் கணத்திலேயே அவள் தூக்கம் தெளிந்தாள். | - சற்று தூரத்தில் யாரோ ஒரு மனிதன் ஓடுவதுபோல் தெரிந்தது.
மேகாட்டிலிருந்து பருத்தி வெடிக்கும் காலத்தில் மட்டும் வந்து, பருத்தி எடுக்க வரும் வலசைக்காரர்களில் ஒருத்தியே பேச்சி. அந்தக் கிராமத்துக்கு அந்த சீஸனில் நூற்றுக்கணக்கான வலசைப் பெண்கள் வருவார்கள். அவர்களில் சிலர் சம்சாரிகளின் தொழுக்களில் தங்கிக் காய்ச்சிக் குடிப்பார்கள். இடம் கிடைக்காதவர்கள் பொது இடங் களிலும் வசிப்பார்கள். பகிர்ந்துகொண்டு வருகிற பருத்தியில் ஒரு பகுதியை சம்சாரிகளின் வீடுகளிலேயே ஒரு சாக்கில் போட்டுக் கட்டி
வைத்துவிட்டு மீதிப் பருத்திக்குக் கடைகளில் சீனிக் கிழங்கும், மொச்சைப் பயறும், கருப்பட்டியும் வாங்கித் தின்பார்கள். முக்கியமான உணவு அவர்களுக்கு மூன்று வேளையும் சீனிக்கிழங்குதான்.
- அவர்கள் குளித்து யாரும் பார்த்ததில்லை. பருத்தி எடுத்துக் கொண்டு வெயிலோடு வெயிலாக வந்ததும், தெருக்களில் இருந்து கொண்டு மாராப்புச் சீலையை மட்டும் நீக்கி இடுப்பில் சுற்றிக் கொண்டு ஒரு போகிணித் தண்ணீரினால் முகம், கக்கம், முதுகு, மார்பு; கைகள் முதலியவைகளை மட்டிலும் கழுவிக்கொள்வார்கள், போகிணியில் மீந்த தண்ணீர் இருக்குமானால் பாதங்களையும் நனைப்பது உண்டு.
- தகரக் குப்பிகளில் ஊரிலிருந்து அவர்கள் கொண்டுவந்திருக்கும் விளக்கெண்ணெயைத் தலையில் பூசிக்கொள்வார்கள். தெருக்களில் போனாலே ஒருவித துர்வாடை அவர்களிடமிருந்து வீசும். அழுக் கடைந்த குட்டையான பறட்டைத் தலைமயிரும், கைகளில் கனமான கல்வெள்ளிக் காப்புகளும், காதுகளில் வெள்ளி பித்தளைக் குணுக்கு களும், ஊத்தை நிறைந்த மஞ்ச மஞ்சேரென்ற பெரிய மாட்டுப் பற்களும், அழுத்தமான நிறங்களுள்ள கண்டாங்கிச் சேலைகளும், ரவிக்கை அணியாத உருண்ட மார்புகளும், நீட்டி நீட்டிப் பேசுகிற ஒரு
விதத் தமிழுடனும் அவர்கள் இலங்குவார்கள்.
பேச்சியை அவர்கள் அவள் எதிரிலேயே 'ஏ கோட்டிக் கழுதை என்றுதான் கூப்பிடுவார்கள். அவள் ஒருமாதிரி சுபாவம். உடைமரத் தைப் போன்ற பறட்டை மயிர்த்தலை. வாயின் உதட்டோரங்களில் “நீண்டு வெளிவந்திருக்கும் சிங்கப்பல்கள். தூங்கும்போது வழிந்தோடிக் காய்ந்த கொடுவாய்க்கறை, இடுங்கிய, பூளைதள்ளிய இல்லிக் கண்கள். அடர்ந்த புருவங்கள், மழை பெய்து நனைந்த பனைமரத்தைப்போன்ற கருப்பு நிறம். கருங்கோரைப் புற்களைப்போல் மயிர் நீண்டிருக்கும் வியர்வை ஓடும் கக்கங்கள். திட்டுத்திட்டாய்ப் பூராவும் அழுக்கு படிந்து உறைந்துபோன மேல். வங்குபடிந்த வெளிர் நிறங்கொண்ட கால்கள். அதில் குனிந்து நின்று மூத்திரம் பெய்வதால் விழுந்த தெறிப்புகள். நைந்துபோன, அழுங்கல் சிகப்பு நிறக் கண்டாங்கிச் சேலை; இவ்வளவு பிறவிக்கோரங்களுக்கும் மத்தியில், இயற்கை அவளுடைய மேலில் ஒரு138 0 பேதை விளையாட்டைக் காட்டியிருந்தது. கோயில் சிலைகளையெல்லாம் விஞ்சக்கூடிய ஒரு அப்சரஸின் ஸ்தன்யங்களைப் பெற்றிருந்தாள் அவள். அவள். - - - - - -
- 1 | பேச்சி இப்பொழுதெல்லாம் பருத்தி எடுக்கப் புஞ்சைக்கு சரியாகப் போகிறதில்லை. ராத்திரிநேரங்களில் அந்த மரத்தின் அடியில் இருட் டான இடமாகப் பார்த்துப் போய்த் தனியாக உட்கார்ந்து எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பதாகத் தோன்றும். தாங்கமுடியாத சந்தோஷத்தினால் அழுவது போலவும், தாளமுடியாத துக்கத்தினால் சிரிப்பதுபோலவும் செய்வாள் அவள். மீண்டும் மீண்டும் எத்தனையோ தரம் அந்த வேப்பமரத்தின் அடியில் கொடுவாய் வழிய அசிங்கமாக, மரக்கட்டையாய் உறங்கினாள். அதற்குப்பிறகு அந்த மாதிரிக்கனவு ஒன்றை அவள் காணவே இல்லை. -
மூணு மாதங்களுக்கெல்லாம் ஒருநாள் பருத்திப் புஞ்சையில் பேச்சி வாந்தி எடுத்தாள், கூடியிருந்த பொம்பளைகள், அவளுக்கு மசக்கை - என்று கேலி செய்தார்கள். அதில் எவளுடைய நாக்கு, கருநாக்கோ, பேச்சி நிஜமாகவே மசக்கையாகி இருந்தாள். அவளுடைய முகத்தில், பைத்தியங்களுக்கே இருக்கும் ஒருவித முகக்களைத் தோற்றத்திலிருந்து ஒரு மாறுதல் தோன்றுவதுபோல் இருந்தது. - - - பேச்சி இதுவரை கன்னிகழியாத, கல்யாணமாகாதவளாக இருந்தவள். ஆகவே இப்பொழுது இந்த சமாச்சாரம், காட்டுத்தீ மாதிரி ஊருக்குள் பரவியது. பலர் அதை நம்ப யோசித்தார்கள். முக்கியமாக அந்த ஊரில் அது கன்னிப்பெண்களை திடுக்கிடவைத்தது. பேச்சியின் ஊருக்கும் தகவல் எட்டி அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆம்பிளைகள் பலர் வந்தார்கள், அவர்கள் பேச்சியை அடித்துக் கேட்டார்கள்.''
| 'யார்; சொல்லு சொல்லு', என்று உதைத்தார்கள். தாங்கமுடியாத அடி அவள் மேலில் விழும்போது மாத்திரம் அவள் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்ததுபோல் சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்து “என்ன?” என்று மட்டும் கேட்பாள். அது, என்னைப்போட்டு ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்; பேசாமல் போங்களேன் ஜோலியைப் பார்த்து என்று சொல்வதுபோலிருக்கும். சில சமயம் அடி பொறுக்கமுடியாமல் போகும்போது, 'எனக்குத் தெரியாது; சத்தியமாய் எனக்குத் தெரியாது. ஐயோ கடவுளே எனக்குத் தெரியாது; தெரியாது' என்று கீச்சுக்குரலில் கூக்குரலிட்டு அழுவாள். --- வந்தவர்களுக்கு அவளுடைய காரியம், அவர்களுக்குத் தாங்க முடியாத அவமானமாகப்பட்டது. தங்கள் சக்தியை எல்லாம் செலவழித்து அவளை அடித்து நொறுக்கி எடுத்தார்கள். பல தடவை களில் பேச்சி மூர்ச்சையானாள். ஆனாலும் அவளிடமிருந்து அவர் களால் எதையுமே தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தோற்று விட்டார்கள். வந்தவர்களில் இரண்டு ஆண்கள், தங்கள் முகத்தில் தாங்களே அறைந்து கொண்டு தலையை இரண்டு கைகளிலும் தாங்கி அந்த இடத்திலேயே உட்கார்ந்துகொண்டு அழுதார்கள். அவர்களைச் சேர்ந்த பொம்பிளைகள் அவளை வைத வசவுக்கு கணக்கு வழக்கில்லை, அவர்களில் ஒருத்தி கடேசியாகச் சொன்னாள்,கி. ராஜநாராயணன் 0 139 'இந்த முண்டையை கண்டங்கண்டமா நறுக்கினாலும் மனசு ஆறாது' --- ஆறாது' --- --- - ------- ------
இன்னொருத்தி சொன்னாள், "ஒரு குழியைத் தோண்டுங்க. இவளை இங்கேயே உயிரோடெ புதைச்சிட்டுப் போயிறுவோம்;' - - ஊருக்குள் தினமும் காலையிலும் ராத்திரியும் சம்சாரி வீடுகளில் சோத்துக்கு வரும் குடிமகளும் வண்ணாத்தியும் இந்த விஷயம்பற்றி வீட்டுப்பெண்களுடன் நின்று நின்று, மூக்கின்மேல் விரலை வைத்து இப்படி உண்டுமா என்று தொடங்கி பேச்சியைப்பற்றி தாங்கள் அறிந்த விஷயங்களோடு கொஞ்சம் கற்பனையையும் கூட்டிச் சேர்த்துப் பேசினார்கள். சோத்துப்பெட்டியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு குடிமகள் காளி சொன்னாள்.
- 'அம்மா இனிமெ சின்னஞ்சிறுசுகள் வேனல்காலத்திலே வெளியில், முத்தத்திலே படுத்துத் தூங்க நீதி இல்லை தாயே நீதி இல்லை'
_ 'எனக்கும் இவ்வளவு வயசாச்சி; இப்படி ஒரு வங்கொடுமை நடந்து இந்தக் கண்ணாலே பார்த்ததில்லை தாயே' -- 'என்ன செய்யமுடியும்; அவளும் நம்மளைப்போல் பொம்பிளை தானே; அடி பாதகத்தி' என்று சொல்லி உணர்ச்சிவசமாகிக் கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைக்காமல் வைத்துக்கொண்டே பளீரென்று சிரித்து,
--- 'ஆமம்ம, அப்பவும் ஒரு பொம்பிளைக்கு 'இதுகூடத் தெரியாமலா | போய்விட்டது?' என்று கேட்டு மேலும் சிரித்தாள். அந்த நேரத்துக்கு
அதே வீட்டுக்கு சோறு வாங்கிக்கொண்டு போக ஏகாலி சுடலியும் கையில் பனைநார்ப்பெட்டியுடன் வந்தாள். வந்தவள் காளி சொன்ன கடேசி அடியைக் கேட்டுக்கொண்டு சொல்லுவாள், -- 'தெரியாதா! அப்படியா வரும் தூக்கம் ஒரு பொம்பிளைக்கு? திருட்டுச் சிறுக்கிங்கே. கோட்டியில்லை அவ. கோட்டிக்காரி மாதரி வேசம் போடுதா.?"----
ஆனால் காளியும் மற்றவர்களும் இதை நம்பமுடியவில்லை. 'ஏதோ மோசம் போய்விட்டது, அவ்வளவுதான் கதை' என்று சொன்னார்கள். அதை நினைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு வயிறு 'பகீர்' என்றது.
அந்த வருஷ ஆடி மாசம் மேல்காற்று அமோகமாய் அடித்ததால் கோடைப்பருத்தி வெடிப்பு ஓய்ந்த பருவமாய்விட்டது. வலசைக்காரர் கள் அவர்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். பேச்சி அவர்களோடு போகமுடியாது என்று சொல்லிவிட்டு இந்த ஊரிலேயே இருந்துவிட்டாள்,
- மாசம் ஆக ஆக வயிறு பெரிசாகிக்கொண்டே வந்தது. வீடுகளில் குதிரைவாலி குத்திக்கொடுக்கிறது முதலிய காரியங்களை கூப்பிட்ட பேர்களுக்குச் செய்துகொடுத்து அவர்கள் ஊத்திய கஞ்சியைக் குடித்து வயிற்றை வளர்த்து வந்தாள் அவள்.
ஒரு வேலையும் இல்லாத தினங்களில் சில பொம்பிளைகள் ஐய்யோ பாவம்; வாயும் வயிறுமாய் இருக்காளே என்று இரக்கப்பட்டு140 0 பேதை வடிதண்ணி கொடுக்கிறது உண்டு. திட்டி வைத்தவர்களும், இளக்கார மாய் பேசினவர்களுங்கூட இப்போ பேச்சியின் பெரிய சரிந்த வயத் தர தைப் பார்த்து இரக்கப்பட்டு உதவினார்கள். - வேளை வந்துவிட்டது. வெங்கா நாயக்கரின் மாட்டுத்தொழுவில் பேச்சியின் பேறுகாலத்திற்கு ஒரு மூலையில் நெறசல் வெத்து ஏற்பாடு செய்துகொடுத்தார்கள் பொம்பிளைகள். ஒருபக்கம் குஷி அவர்களுக்கு; ஒருபக்கம் இரக்கம். ஊர் கூடிப் பிரசவம் பார்த்தது இதுவரையில் இல்லை. நடுவீட்டு ரங்கம்மாள் தன் பேறுகாலத்துக்கு இடித்து வைத்தி ருந்த மிச்ச மருந்து உருண்டைகளைக் கொண்டுவந்து கொடுத்தாள். - - ஏகாலி நவரட்ணம் மாத்துத் துணிகள் கொடுத்து உதவினாள். குடி - மகள் காளி பண்டுகம் பார்க்க வந்தாள்,
- சுகப் பிரசவம்.
'கோட்டிக்காரி வயித்திலே முத்துக்குட்டி போல இப்படி ஒரு ஆம்பிளைக் குழந்தை பிறந்திட்டதே!' என்று மூக்கின்மேல் விரல் வைக்காதவர்கள் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த முகங்களை யெல்லாம் அவரவர்கள் மனசுக்குக் கொண்டுவந்து பிறந்த குழந்தை யின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். ஒன்றும், ஒரு நிதானமும் பிடிபடவில்லை அவர்களுக்கு. --
- அங்கு கூடி இருந்தவர்கள் கேட்டுக்கொண்டபடி, குடிமகள் காளியே குழந்தைக்குச் சேனை வைத்தாள். 5. பிரசவத்துக்குப் பிறகு பேச்சியின் முகத்தில் ஒரு ஆச்சரியமான மாறுதல் உண்டானது. அந்த மீதிப் பைத்தியக்களை பூர்ணமாக விலகி ' விட்டதுபோலத் தெரிந்தது. - - - - - சிரசிலடிக்கும்படியாக அவள் மடுவில் வேகத்தோடு நிறையப் பால் இருந்தது. ஒருபக்கம் குழந்தை வாய்வைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்ததில் வெள்ளை நூல்களாக பால் பீச்சி அடித்துக் கொண்டே இருக்கும். மறு கையினால் மாராப்புத்துணியோடு சேர்த்து, காயத்திலிருந்து பீறிடுகிற இரத்தத்தை அமுக்கிப் பிடித்துக்கொள்கிற மாதிரி அமுக்கிப் பிடித்துக்கொள்வாள். வசதியான வீட்டுப் பொம்பிளைகள் இதைப் பார்த்து அதிசய ஆனந்தங்கொள்வார்கள். பேச்சி தொலைவில் வரும்போதே மனிதப் பாலின் கொச்சை நெடி கொல்லும். -- செழிக்கச் செழிக்கத் தாய்ப்பாலையே குடித்து வளர்ந்த குழந்தை யின் ஆரோக்கியம் வர்ணிக்கமுடியாத ஒன்று. கனவில் கண்ட அதே அழகு நிறைந்த குழந்தை போலவே இருந்தது அது. - - பேச்சி இப்பொழுது, வேலைசெய்து சாப்பிடுகிற வீடுகளில் போடுகிற சோறு காணாமல் வீடுவீடாகப் பிச்சை எடுத்தும் சாப்பிட்டு வந்தாள். அழுங்குரலில் சொல் இன்னதென்றே விளங்காத தாலாட்டுப் பாடுவாள் குழந்தைக்கு, அந்தியும் வெள்ளனும் அவள், நடுத்தெருவின் சுவர் நிழலில் உட்கார்ந்து குழந்தையை மடியில் உட்காரவைத்துக் கொண்டு, போகிற வருகிற இளவட்டங்களின் முகங்களை அவர் களுக்குத் தெரியாமல் கூர்ந்து பார்க்கிறதும், பிறகு தன் மடியிலுள்ள குழந்தையின் முகத்தைப் பார்க்கிறதுமாகவே இருப்பாள்.கி. ராஜநாராயணன் 0 141 திருஷ்டி என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியாது. பேச்சியின் குழந்தையை அது தைத்துவிட்டது என்று சொன்னார்கள். திடீரென்று ஒருநாள் 'டிப்தீரியா' கண்டு குழந்தை இறந்துபோய்விட்டது. ஊர்க் காரர்கள் பேச்சை அவள் நம்பத் தயாராயில்லை; தன் குழந்தை இருப்ப தாகவே அவள் மனப்பூர்வமாக நம்பினாள். வழக்கம்போலவே அதனுடன் கொஞ்சினாள், முத்தமிட்டாள், சிரித்தாள், படுத்துக் கொண்டு பக்கத்தில் கிடத்திப் பீச்சும் இரு ஸ்தனங்களின் அமிர்தப் பாலினால் அதைத் தெப்பமாக நனைத்துக்கொண்டே அந்த
சொகத்தில் கண்களைச் சொருகி உறங்கினாள். :)
அவளுக்குத் திரும்பவும் கோட்டி வந்துவிட்டது என்று சொன்னார் கள். அவள் அதை இடுக்கிக்கொண்டே வீடு வீடாய் பிச்சை எடுத்தாள். பேச்சியின் ஊருக்குச் சமாச்சாரத்தைச் சொல்லி அனுப்பினார்கள். அவளுடைய ஊரிலிருந்து ஆட்கள் வந்தார்கள்.
இப்போது ஒரு புதிய போராட்டம் நடந்தது. பேச்சி குழந்தையைப் புதைக்கக் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி ஓட ஆரம்பித்தாள். மூணு நாலு நாளாகிவிட்டதால் குழந்தை உப்பி சில இடத்தில் சதை வெடித்துவிட்டிருந்தது. மறித்து மடக்கி அவளைத் துரத்திப் பிடித்து மல்லுக்கட்டி அவளுடைய குரங்குப் பிடியிலிருந்து பிடுங்கி எடுத்தார் கள். குழந்தையின் ஒரு கைகூட கொஞ்சம் பிய்ந்துபோய்விட்டது. அவளிடமிருந்து குழந்தை மீட்டது வீல் என்று விசில் ஸ்தாயையில் கத்திக்கொண்டே மூர்ச்சையானாள். பின் - குழந்தையைப் புதைக்கக் கொண்டுபோனார்கள். மூர்ச்சை தெளிந்த பேச்சி சுடுகாட்டுக்கு ஓடினாள். புதைத்து மூடிக்கொண்டி ருக்கும்போது அங்கு வந்து சேர்ந்து, ஆர்ப்பாட்டம் செய்தாள். செம்மையாய் உதைத்துக் கைகால்களைக் கட்டிப்போட்டு ஒரு வண்டி யில் அவளை அவள் ஊருக்குக் கொண்டுபோய்விட்டார்கள்.
அங்கே அவளை ஒரு வீட்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந் தார்கள். அன்ன ஆகாரம் எதையும் அவள் தொடவில்லை . முழங் காலில் கைகளைக் கட்டிக்கொண்டு அண்ணாந்து வீட்டின் கைமரங் களையே பார்த்துக்கொண்டிருந்தாள். எப்பவாவது சில சமயம் பூட்டிய கதவில் வந்து தலையை பலமாக 'ணங்ணங்' என்று முட்டுவாள். "ஐயோ....உன் முகத்தைக்கூட நான் பார்க்கலையடா பாவி...' மாரில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொள்கிற சப்தம் கேட்கும்.
ஒரு நாள் அந்த வீட்டின் ஓடுகளைப் பிரித்துக்கொண்டு ராத்திரியே தப்பி ஓடிப்போய்விட்டாள் அவள்.
- மறுநாள் எல்லா ஊர்களிலும் அவளைத் தேடினார்கள். யார் கண்ணிலும் தட்டுப்படவில்லை. 1.
அவள் ராவோடு ராவாக ஓடினாள். உடம்பில் ஆடை என்பதே இல்லை. அவள் மங்கம்மா சாலையை கடந்து ஓடும்போது ஏர் வெள்ளிகள் வானத்தில் உச்சியைக் கடந்து வெகுதூரம் இறங்கி விட்டிருந்தது. வரிசையாகக் கூடார வண்டிகள் சாலையில், வண்டியின் அடியில் லைட்டைக் கட்டிக்கொண்டு போவது கொள்ளிவாய்ப் பிசாசுகள் நீளமாகப் போகிறதுபோல் இருந்தது. மாடுகளின் கிணுமணி ஓசையும், உள்வாயில் மசக்கை இல்லாததால் அச்சின் உராய்தலால்142 0 பேதை ஏற்படும் நீண்ட கீச்சு ஒலிகளும், சக்கரங்கள் சாவியிலும் தெப்பக் கட்டையிலும் மாறிமாறித் தட்டுவதினால் உண்டாகும் சத்தங்களும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தன. அந்தக் கூடார வண்டி கள் இலஞ்சியிலிருந்தும், செங்கோட்டையிலிருந்தும் மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டிக்குப் போய்க்கொண்டிருந்தன. அதில் ஒரு வண்டிக்காரன் சோகமான தெம்மாங்குப் பாட்டுப்பாடிக் கொண்டே போனான். அந்த அர்த்த ஜாம இருட்டில் அந்தக் குரல் மனசை அறுப்பதுபோல் இருந்தது. - பேச்சி நேராகத் தன் குழந்தையைப் புதைத்த மயானத்தைப் பார்த்து ஓடினாள். அங்கே ஒரு பிரேதம் சிதையின் மூட்டம் விரிந்து நன்றாய்க் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் தன்னு டைய குழந்தையைப் புதைத்த இடத்தைத் தோண்டினாள். தோண்டித் தோண்டி எடுத்துவிட்டாள். சதை அழுகி நீர் வடியும் அதை மார்புடன் அணைத்துக்கொண்டு கலகல என்று உரத்துச் சிரித்தாள். அப்படி சிரிக்கும்போதே அவள் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் வடிந்தது.
திடீரென்று அவளுக்குத் தாளமுடியாத பசி எடுத்தது நெருப்பில் வாட்டிய சீனிக்கிழங்கை எடுத்துத் தின்பதுபோல் வெகுசாதாரணமாக, எரிந்து கொண்டிருந்த பிரேதத்தின் ஒரு பகுதியை ஒரு குச்சியின் உதவி யால் இழுத்து, சூடு ஆறுவதற்காக ஊதி ஊதிப் பற்களால் கடித்து இழுத்து வெந்த பிரேதத்தின் மாமிசத்தை ஆவலோடு தின்றாள். தன் னோடும், தன் குழந்தையோடும் எதையோ சிரித்துப் பேசிக்கொண்டே தின்றாள்.
ஊர் அடங்கி, நல்ல தூக்கத்திலிருந்தது. சீந்தரிப்பு மிகுந்த சோனைக் காற்று மேல் திசையிலிருந்து அலை அலையாய்த் தன் முழு வேகத் தோடு பிய்த்து வாங்கியது. மற்ற காலங்களில் அந்த, அவ்வளவு மேல் காற்று எங்கேதான் போய்ப் பதுங்கிக்கொண்டு கிடக்குமோ என்று கிராமத்துக்காரர்கள் பேசிக்கொள்வார்கள். சித்திரை பத்துக்குமேல் ஐப்பசி பத்துவரைக்கும் அதன் பேயாட்டம் நடத்தி முடியும். ஒரு நதி யின் வேகமான நீரோட்டத்தின் மத்தியில் வாழும் மீன் ஜீவராசி களைப்போல் சம்சாரிகள் வாழும் இந்தக் கரிசல் பிரதேசத்தில் காற்று, பொங்கப் பொங்கச் சுழியிட்டு, படும் பொருள்களில் எல்லாம் உராய்ந்துகொண்டு சப்தமிட்டவாறு அந்தப் பிரதேசத்தை இரவும் பகலும் கடந்து ஓடிக்கொண்டே இருக்கும். மேற்குக் கருமலையில் ஒரு பெரிய கணவாய் இருக்கிறது. அதில் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு பிரமாண்டமான ராக்ஷச மதகுப் பலகையால் அடைக்கப்பட்டிருக் கிறது. சித்திரை மாசம் பத்தாம் தேதி அதை யாரோ திறந்து விடுகிறார் கள்! கடல் மடை திறந்ததுபோல் உடனே காற்று ஒஹோ என்று கொந்தளித்துக்கொண்டு ஒரு நதி ஓட்டமாக அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தைக் கடந்துகொண்டு ஓடி வருகிறது. கொஞ்சங்கொஞ்சமாக அந்தப் பகுதி மனிதர்கள், வீடுகள், படப்புகள், மரங்கள் யாவும் காற்று வெள்ளத்தில் மூழ்குகிறது. மூழ்கடித்துக் கிழக்குநோக்கி அது இரைச்ச லிட்டு நகர்ந்து வேகமாக ஓடுகிறது.கி. ராஜநாராயணன் 0 143 உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களைத் திடுக்குற்று விழிக்கச் செய்யும் ஒரு துர்நாற்றம் அந்தக் கிராமவாசிகளை உலுப்பி எழுப்பியது. யாரும் எப்பவும் அப்படி ஒரு நாற்றத்தை அனுபவித்ததில்லை. அதே போதில் உடம்பு புல்லரிக்கும்படியாக ஒரு குலவைச்சத்தமும் கேட்டது. அதைக் கேட்டவர்களின் உடலிலுள்ள சர்வாங்க மயிர்களும் நட்டக் குத்தலாக நின்றது. - -
அது ராப்பாடியான காலவீரனின் குலவைக் குரல் இல்லை . வரப் போகிற காலத்தைப்பற்றிச் சொல்லும் ஏதோ ஒரு சமிக்ஞை. இந்தப் பூமியில் யாருக்கு யாரோ ஒரு அநீதி இழைத்துவிட்டார்கள். மீண்டும் அதோ அந்தக் குலவைக் குரல் கேட்கிறது. குழந்தைகள் பதறிவிழித்துத் தங்கள் பெற்றவர்களை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். கே கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்த மரண நாற்றமும் குலவைச் சத்தமும் தூரத்தில் எங்கேயோ கேட்டு, குறைகிறது. துக்கத்தினால் தொண்டை வலிக்க வீட்டுக்குள் அடைந்துகிடந்த மக்கள் ஒருவரை ஒருவர் பீதியோடு பார்த்துக்கொண்டார்கள். அதன்பிறகு அவர்களுக் குத் தூக்கம் பிடிக்கவே இல்லை . ரகஸியக் குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
ஊருக்குத் தொலைவிலுள்ள பெரிய உடங்காட்டில் பேச்சி நிலை கொண்டிருந்தாள். பகலில் கூகையைப்போல் அவள் வெளிப்பட மாட்டாள். பாம்புப்புற்றுகள் சூழ்ந்த உடை மரத்தின்மேல் அவள் இருக்கையாக வெயிலென்றும் மழையென்றும் பாராமல் அதன்மீது கிடந்தாள்.
நரகத்தின் நாற்றம் கொண்ட சிறிய எலும்புக் கோர்வையை இடது கையினால் மாரோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு பயங்கரமாகக் குலவையிட்டுக்கொண்டு வலது கையை வேகமாக வீசி அந்தக் கிராமத்தின் தெருக்களில் நடுராத்திரிக்குமேல், திட் திட் திட்டென்று அதிரும் சத்தத்துடன் குதிகாலைத் தரையில் இடித்து ஊன்றி நடந்து செல்லும் பேச்சியை இன்னசெய்வதென்று தெரியாமல் செயலிழந்து உட்கார்ந்திருந்தார்கள் ஊர்வாசிகள்.
பகலில் அவள் எங்கே போகிறாள், எங்கே இருக்கிறாள் என்பது யாருக்கும் புரியவில்லை . சுடுகாட்டில் எரியும் பிரேதத்தின் மாமிசத் தைத் தின்பதும், அது கிடைக்காத நாட்களில் உடங்காட்டில் முளைத் துக் கிடக்கும் கத்தாழையையும் தின்று ஜீவித்தாள் அவள். இந்த உலக மனுசர்களின் சங்காத்தமே வேண்டாம் என்பதுபோலிருந்தது அவளு டைய காரியம். - காத்தடிக்காலம் போய், மழைக்காலம், பனிக்காலமும் போய், வேனிற்காலம் வந்தது. கோட்டிக்காரிக்குப் பயந்துகொண்டு ஜனங்கள் வெளியே படுத்து உறங்கமுடியாமல் கஷ்டப்பட்டார்கள்.
ஒரு நாள் பஜனை மடத்தின் எதிரிலுள்ள வேப்பமர வரிசையின் நிலா நிழலில், அந்த ஊருக்கு விருந்தாடி வந்திருந்த இளவட்டம் ஒருவன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காடி வண்டிகளில் ஒன்றில் இருப்புச் சட்டங்களில் படுத்திருந்தவாறே தூங்கிவிட்டான்.144 0 பேதை
நிலா உச்சியிலிருந்து இறங்க ஆரம்பித்துவிட்டது. வேப்ப மொட்டு கள் ஏடவிழ்ந்து வாசனையைக் கொட்டிக்கொண்டிருந்தது. உப்பங்காற்று தென் கிழக்கிலிருந்து சொகமாக வீசிக்கொண்டிருந்தது. கழுத்தடியில் வியர்வை துளிர்க்க அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு, பேச்சி அந்த இடத்துக்கு வந்ததோ அவள் தன்னை நெருங்கி வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறதோ அவனுக்குத் தெரியாது. அவளுடைய கை அவனுடைய முகத்தை நோக்கி மெதுவாகப் படர்ந்து சென்றது; பட்டென்று பின்னுக்குச் சுதாரித்துக்கொண்டான் கையை. திடீரென்று தன் உயிர்ஸ்தலத்தில் ஏற்பட்ட பிடியின் சிலிர்ப்பு வேதனையால் பதறி விழித்தான். எதிரே விரிந்த கண்களுடன் சிரித்துக்கொண்டு ஆடை தவிர்ந்து நிற்கும் பெண் உருவத்தைப் பார்த்ததும், கோரமாகக் கூக்குரலிட்டு அலறினான். பயத்தினால் அவன் கண்கள் நிலைக்குத்த ஆரம்பித்துவிட்டது. |
கிராமத்துக்காரர்கள் ஓடிவந்து, பாய்ந்து வண்டியிலுள்ள ஊணுக் கம்புகளை உருவி அடிக்குமுன்பு அவள், விசில் ஸ்தாயையில் கூக்குர லிட்டுக்கொண்டே ஓடி மறைந்துவிட்டாள்.
ஒருநாள் பின்இரவில் கிராமத்தார்கள், பேச்சியின் ஊர்க்காரர் களோடு சேர்ந்துகொண்டு, கம்புகள் சகிதம் ஒரு பன்றியை விரட்டி வேட்டையாடுவது போல் அவளை மறுக்கி மறுக்கி, விரட்டி, அடித்துப் - பிடித்து அவர்கள்வசம் ஒப்படைத்தார்கள்.
பேச்சியை அவளுடைய ஊருக்குக் கொண்டுபோய் கை கால் களைக் கட்டி ஒரு மச்சு வீட்டுக்குள் போட்டு அடைத்துவிட்டார்கள். பிறகு என்னவெல்லாமோ வைத்தியம் மீண்டும் நடந்தது அவளுக்கு. என்ன செய்தும் பிரயோஜனம் இல்லை. ஒருநாள் ராத்திரி யாருக்கும் தெரியாமல் சுவரில் ஓட்டை போட்டு வெளியேறிவிட்டாள். -
திரும்பவும் அவள், அந்த அடர்ந்து வளர்ந்த உடங்காட்டிலுள்ள பாம்புப்புற்றுகள் சூழ்ந்த உடை மரத்தின்மேல் வந்து அடைக்கல மானாள்.
அந்த ராத்திரிகளில் அதுவும் நல்ல நிலாக்காலங்களில் மட்டுமே அவள் அங்கிருந்து வெளிப்படுவாள். வேட்டையாடும் வெருகுப் பூனை போல் பதுங்கிப் பதுங்கி வருவாள். முந்திமாதிரி அவள் இப்பொழுது 'ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. பார்வதியம்மன் கோவிலுக்கு முன் னுள்ள வேப்பமரத்தின் நிலா நிழலில் கொஞ்ச நேரம் வந்து தங்கி விட்டுப் போவாள். உறக்கத்தையே அநேக நாட்கள் கண்டிராத அவளுக்கு அந்த வேப்பமரத்தடிக்கு வந்ததும் ஒரு மாதிரிக் கிறக்கம் நிறைந்த அசதியான தூக்கம் வந்து அப்பும். அப்படியே சிறிது நேரம் போர்க்களத்தில் கிடக்கும் ஒரு பிரேதம்போலக் கையையும் காலையும் அகல விரித்துப் போட்டுக்கொண்டு சற்றே சவமாய்த் தூங்குவாள். 1. தூங்கி முழித்ததும் அவளுக்குத் தன் குழந்தையின் அழகான சிரித்த முகம் ஞாபகம் வரும். அப்படியே கொஞ்சநேரம் அந்த வேப்ப மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சப்தமில்லாமல் குலுங்கிக் குலுங்கி அழுவாள்.கி. ராஜநாராயணன் 0 145 அந்த வேப்பமரம் அவளுக்கு எந்தவித ஆறுதலும் சொல்ல முடியாத நிலையில் நின்றது, தன் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, குமுறி வரும் துக்கத்தால் குலுங்கும் பேச்சிக்குப் பல திசைகளிலும் விரிந்த அதனுடைய பல கைகளை வானத்தில் அங்கு மிங்கும் ஆட்டி உஸ் என்ற சத்தத்தை வெளியிடும். தாங்கமுடியாத ஒரு பெருமூச்சை அது வெளியிடுவதுபோலிருக்கும்.
பூமியில் ஜீவராசிகள் இதோ, இப்பொழுது ஒவ்வொன்றாய் விழிக்க ஆரம்பிக்கப்போகிறது என்று சொல்லுவதுபோல விடிகாலையின் முதல்க்குரலாக அக்காக் குருவி கூவ ஆரம்பிக்கும். அக்காக் குருவியின் குரல் கேட்டதும் பேச்சி திடுக்கிட்டு எழுந்து, உடை மரத்தை நோக்கி விரைவாள்.
தூக்கங்கள் வரவர, உணர்வுகள் திரும்பத் திரும்பப் பேச்சி தன் குழந்தையின் நினைவே ஆனாள். கனவிலாவது குழந்தையைக் காண மாட்டோமா என்று ஏங்கினாள். அதேமாதிரி அவளுடைய குழந்தை ஒருநாள் அவள் கனவில் நிஜமாகவே வந்தான். பகபகவென்று சிரித்தான். அவளைத் தொட்டு விளையாடினான். அவள் தன்னை மறந்து சிலிர்த்தாள்.
- பல மாசங்கள் கழித்து ஒருநாள் அந்தக் கிராமத்தில் பட்டப்பகலில் தீடீரென்று மனிதர்கள் தெருக்களில் கலைந்து பதறித் தங்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டார்கள். ஊருக்குள் புலி வந்து நுழைந்துவிட்டதுபோல் ஒரு நிலை. தாங்கள் பாதுகாப்பாக இருந்துகொண்டு, ஜன்னல் கதவுகளை மட்டும் பாதி திறந்து கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். -
பிறந்த மேனியாக மீண்டும் நிறைமாச கர்ப்பிணியாய் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அந்தக் 'கோட்டிக்காரி' ஸ்தனங்கள் ஆட, ஒரு ஆணைப்போல் கைகளை முன்னும் பின்னும் வீசிக்கொண்டு திட் திட் என்று பூமி அதிர அந்தக் கிராமத்தின் நடுத்தெருவே நடந்து சென்று கொண்டிருந்தாள்.
சாந்தி ஜூலை - 1966