Pages

Tuesday, May 29, 2018

பயணம் - சுரேஷ் குமார இந்திரஜித் :: நன்றி கொல்லிப்பாவை சிற்றிதழ்

இப்போது நினைத்துப் பார்க்கையில், அவளைத் தவிர, அவள் கூட வந்த தோழியும், சாலையின் மற்ற இயக்கங்களும் கண்ணுக்குத் தெரியாதிருந்த நிலை புலப்பட்டது. அவள் தான். கண்ணுக்குத் தெரிந்திருந்தாள். நான் கருப்பு முகமூடி அணிந்திருந்தோ : டிரைவர் முகம் தெரியவில்லை. ஏற்கனவே திட்ட மிட்டிருந்தபடி, கார் அவளருகில் நின்றதும், நான் இறங்கி அவளை சொட்டு இழுத்து, போராடி, சற்று நேரத்திலேயே காருக்குள் இழுத்துக் கொண்டேன். கார் சீறிக்கொண்டு கிளம்பியது. பின்னால் கூக்குரல் கேட்டது. நான் அவள் கைகளிரண்டையும் திமிராமல் இறுகப் பற்றியிருந்தேன். என்னருகில் அவன்: அவளை ஸ்பரிசித்த, ஸ்பரிசித்துக் கொண்டிருக்கிற உணர்வு என்னைத் தாக்கிக் கொண்டிருந்தது. அவள் , கலவரத்தில் மலையாளத்தில் கத்திக்கொண்டிருந்தாள். எனக்கு மலையாளம் தெரியாததால், அவள் பேசியவை அனைத்தையும் தமிழிலேயே ' நினைவு கூர முடிகிறது.

கார், ஆள் நடமாட்டமற்ற நல்ல சாலையில் பறந்து கொண்டிருந்தது. நான் அவளைப் பிடித்திருந்த என் பிடியை விட்டு, முகமூடியைக் கழற்றினேன். அவள் என்னைப் பார்த்து ""எங்கே என்னைக் கொண்டு போறீங்க'' என்று கேட்டாள். அவள் கலவரம் தற்போது மட்டுப்பட்டிருந்தது. அந்த இடத்தை பற்றிய கற்பனை எனக்கு இருந்ததே தவிர, அது என்ன இடம் என்று எனக் கும் தெரியாது. எனவே ' அது ஒரு இடம்' என்பதைத்தான் பதிலாகக் கூற முடிந்தது.

அவள் அழகின் வசீகரம் விவரிக்க இயலாதது என்னுள் ஊடுருவி அதிர்வு களை தன்னிச்சையாக உருவாக்குவது. உண்மையை ஒளிக்காமல் - சொல்கிறேன். அவள் என்னருகில் இருப்பது விவரிக்க இயலாத சுக உணர்வுகளை எழுப்பிய து. "என்னை ஏன் கொண்டு வந்தீங்க'' என்று அவள் கேட்டாள்.- இக்கேள்விக்கு பதில் சொல்வது சிக்கலான காரியமாக இருந்தது எனினும், நான் உணர்த்ததை சொல்லவும் செய்தேன். இதற்கான பதிலை தெளிவாகக் கூற முடியாதென்றும், எனக்கே சரிவர தெளிவில்லை என்றும் கூறினேன். பிறகு, அவள் அழகின் வசீகரம்' மனதில் அலை களிப்பு இவை இரண்டும் ஆதாரமானகாரியங்கள் என்றேன். அவள் என்னைப் பார்த்தாள். அவள் அழகின் வசீகரம் ருசிகரமாக இருந்தது இந்த நேரத்தில் என்னை ஒர் அல்பன் என்று உணர்ந்தேன்.

சாலை நன்றாகயிருந்ததால், காரில் செல்வதும் சுகமாக இருந்தது. டிரைவரின் முகம் இன்னமும் எனக்குத் தெரியவில்லை அவன் திரும்பிப் பார்த்து விடுவானோ என் றும் தோன்றியது : அவன் முகம் ஒருவேளை குரூரமாக இருந்து அவன் திரும்பிப்பார்த்து அதனால் என் மனோ நிலை சிதைந்து விடுமோ என்றும் பயமாக இருந்த து.

"என்ன என்ன பண்ணப் போறீங்க'' என்றாள், அவள். அவளருகில் நான் இருப் பது எனக்குப் பிடித்திருப்பதாகவும், என்ன செய்வது என்பது பற்றி முடிவு எதுவும் தற் போது என்னிடத்தில் இல்லை என்றும், ஆனால் அபாயகரமானதாக ஒன்றும் பண்ணப் போவதில்லை என்றும் கூறினேன்.. அவள், குழப்பத்துடன் என்னைப் பார்த்து விட்டு நீங்கள் ஒரு முட்டாள்', என் றாள். பிறகு அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். மரங்களைத் தவிர, வெளியில் எதுவும் தெரிய வில்லை ,

- கார், நான் தேர்ந்தெடுத்த இடத்தில் நின்றது. அருமையான சோலை. நிழல் தரும் பெரிய மரங்களும், கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்களுடன் சிறுசிறு செடிகளும், கொடிகளும் (மல்லிகையும், பிச்சிப்பூவும் கூட இருந்தன. சிற்றோடை யும், கொஞ்சும் பறவைகளுமாக, அருமையான இடம். காரிலிருந்து இறங்கியிருந்த அவன், இந்த இடத்தைப் பார்த்ததும் குதூகலம் அடைந்தாள். " அய்யோ , எவ்வளவு நல்ல இடம் என்று தன்னிச்சையாக  கூறியபடி ஓடையில் ஓடும் தண்ணிரில் சேலையை மிகக் கொஞ்சமாக தூக்கி காலை நனைத்தாள். ' கால் பளீரிட்டது. தான், என் வாழ்க்கையில் ஒரு செளந்தர்யமான கட்டத்தில் இருப்பதாகத் தோன் றியது. ஓடும் நீரின் ஸ்படிகத் தன்மையும் அடியில் தெளிவாகத் தெரியும் கூழாங்கற்களையும் காட்டி, வாய்விட்டுக்கூறி சந்தோஷப்பட்டாள். நீர், அப்படி ஒரு தெளிவு, ஓடாமல் தேங்கியிருந்தால் முகம்பார்க்கலாம். மரங்களில் இந்த பறவைகளில் இரண்டு கிளியைப் பார்த்து என்னிடம் சுட்டிக் காட்டினாள் மலர்களுக்கு அருகில் சென்று அவைகளைப் பார்த்து களித்தாள், சில 'மலர்களைப் பறித்து தலையில் சூடிக் கொண்டாள். மலர் சூடிக் கொண்ட நிலையில் அவள் வடிவம் அழகாக இருநந்தது.

இந்த இடம் எப்படி உங்களுக்குத் தெரியும்'' என்று அவள், .அதிசயித்தாள். நான், இது தான் சாக்கு என்று அவளை த் தொட்டு, இன்னொரு மரத்தில் இருந்த கிளியைக் காட்டினேன், அவள், நான் தொட்டதைப் பொருட்டுத்தாமல் கிளியைக் கவனித்தாள், நான் அவளிடம், அவ ளுடைய இந்த மனோநிலையை  எ னக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளத் தோன்றுகிறது என்றும், எனக்கு அவள் கையுடன் கை கோர்த்துச் செல்ல வேண்டும் எச்று தோன்றுவதாகவும் கூறினேன். ''முட்டாளே, இதையெல்லாம் சொல்லிச் செய்யக் கூடாது என்றாள் அவள். திட்டமிட்டதை, த.னிச்சையாக நடப்பதாக நினைத்து நானோ மற்றவர்களோ ஏமாறுவது உண்மையை மறைக்கும் செயல் தானே என்றேன். நீங்கள் இப்படிப் பேசினால் வாழ்க்கை பை இழந்து போவீர்கள்.'' என்றாள். நான், அதுவும் ஒரு  வகையில்ல் உண்மை தான்  என்றேன்.

ஓடை நீரைக் காண்பித்து குடிக்கலாம் என்றாள், நான் தலை பாட்டினேன். அவள் இரண்டு கைகளினாலும்  ஏந்திச் குடித்து விட்டு  இனிப்பாக இருக்கிறது என்றாள். நானும் நீரைக் குடித்து விட்டு, கைகளினால், நீரை ஏந்தி அவள் மேல் தெளித்தேன். உடனே, அவளும் குனிந்து கைகளி ல் நீரை எடுத்து என் மீது தெளித்தாள். இந்த ஜல விளையாட்டு விபரீதத்திற்கு கொண் டு சென்று விடும் தன்மை வாய்ந்தது என்று உணர்ந்ததால், மேற் கொண்டு தொடாமல் . நிறுத்திக் கொண் டேன். நீரில் நனைத்து ம், திவலைள் சூரிய ஒளியில் பிரசாசித்திருந்ததுமான நிலையில் அவள் வசீகரம் மேலும் கூடியது. எனக்கு. இந்நிலையில் அவளைக் கட்டிக் ெகாள்ள வேண்டும் என்று ஆசை உந்தியது. அவள் "என்ன யோசனை? என்றாள், நான், என்னை உத்தி தள் ளு ம் ஆசை என்னவென்பதைக் கூறினேன். அவள், ஒன்றும் கூறாமல் சுற்றி யிருந்த மரம், செடி கொடிகளை வேடிக்கை பார்த்தாள்.

இந்த இடத்தில் ஒரு ஊஞ்சல் அமைக்கப்பட்டிந்ததை அப்போதுதான் நாங்கள் பார்த்தோம். அவள், உற்சாகத்துடன், ஊஞ்சலில் ஏறி அமர்ந்துகொன்டு ஆடலானாள். நான் சற்றுத் தொலைவில் கையைக் கட்டிக் கொண்டு அவள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்; அவள் ஆடுவது, எனக்கு தலை கிறுகிறுத்தது. ஆட்டவேகம் அதிகரிக்க, போதை ஏறியது போல் என் சிந்தையெங்கும் அவள், ஆட்டதோற்றம் பலவாய் பெருகி நிறைந்தது: அவள், ஆட்ட வேகத்தை மி தப்படுத்தி, கால்களினால் ஊஞ்சலை நிறுத்தி இறங்கியபாது தள்ளாடினான். தள்ளாட் டம் ஏற்படுத்திய சிரிப்புடன், என்னைப் பற்றி நின்று. பிறகு தரையில் அமர்ந்தாள் எனக்கும் சிரிப்பாய் வந்து, பின் திடீரென சிரிப்பை நிறுத்தினேன்: அனால், அவள் சிரித்துக் கொண்டே, என்னைப் பார்த்து நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை. நீங்கள் நினைப்பதையும் கூற வேண்டம். நீங்கள் பேசிய விரயமாக்கிற ஆள் என்றாள்.:

எனக்கு உண்மையில் ஒரு இக்கட்டான நிலை இப்போது தோன்றியது. அவள் கூறிய வார்த் கைகள் என்னை சீண்டியிருந்த து. இந்த இக்கட்டான நிலையில் நான் எதை த்தேர்வது? என்ன அப்படி பார்த்துக் கொண்டேயிருக்கிறீர்கள்' என்றாள், அவள் உடனே, நான் அவளு டைய மனோ நிலை என்ன வென்பதை என்றால் ஊகிக்க முடிய வில்லை யென்றும், அவளது வார்த்தைகளி லிருந்து நான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியவில்லை யென்று ம், அவள் என்னை எடை போட பொறி வைக்கிர மாதிரியும், இல்லாத மாதிரியும் தோன்றுகிறது என்றும் கூறினேன்.

அவள் "அடக்கடவுளே' என் று உட்கார்ந்த நிலையிலேயே தலையில் கை வைத்து கொண்டாள். "

எனக்கு, இப்போது நிலை இன்னும் தர்ம சங்கடமாயிற்று. நான் அவளைக் குழப்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இதிலிருந்து அவளை எப்படி விடுவிப்பது என்றும் எனக்கு வழி புலப்பட வில்லை. அவளைக் குழப்பவேண்டும் என்பது என்னுடைய விருப்பமில்லை என்றும், உளநிலையை சித்தரிப்பது, சமயங்களில் இப்படித் தான் சிக்கலில் கொண்டு வந்து விட்டு விடும் என்றும், எனினும் உண்மை இதில் தான் காணக்கிடக்கிறது என்றும் நயமாகக் கூறி னேன். அவள் முகம் வெடவெடத்துப் போனது எனது நிலை பரிதாபமாகிக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. நான். மேலும் பேசுவது சரியல்ல என்றும்,  கவனத்தை ' வேறு திசைகளில் திருப்ப வேண்டும் என்றும் தோன்றியது. யோசித்துப் பார்த்த தில், ஓடையும், கிளியும், மலர்களும், ஊஞ்சலு ம் பழகிப் போய் விட்டதாகவும், கவனத்தைத் திருப்ப புதிதாக எதுவும் இல்லாதது போலவும் தோன் றியது.

அவள் வாங்க, கிளம்புவோம் - என்று எழுந்தாள். நானும் அவளைப்பின் தொடர்ந்தேன். நல்ல வேளையாக, அப்போது, சற்று தள்ளி என் பார்வையில் ஒரு மான் தெரிந்தது. நான் அவளிடம் "அதோ மான்" என்றேன், அவள் மானைப் பார்த்து அதனருகில் சென்றாள். நல்ல வேளையாக அது, ஓடாமல் நின்றது. அதைத் தடவிக் கொடுத்தாள். எனக்கு சகுந்தலை ஞாபகம் வந்தது . அவள், 'மான் அழகா இருக்கு'' எ ன் ற ள் . நான் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். அ வ ள் கொஞ்ச நேரத்தில் சிரித்துக் கொண்டே 'போகலாம்'' என்றாள், நானும் சிரித்த முகம் மாறாது பின் தொடர்ந்தேன்,நாங்கள் இருவரும் காரினுள் ஏறிக் கொண்டோம். ஏற்கனவே அமர்ந்திருந்த டிரைவர், காரைக்கிளப்பினான்: 'இந்த இடம் நன்றாக இருந்தது. எவ்வளவு ரம்யமான இடம்' என்றாள். நான் “•தேங்ஸ் '' என்றேன். நான் இவ்வளவு நேரம் உங்களோடு இருந்ததில் மகிழ்ச்சிதானே? என்றாள். மகிழ்ச்சிதான் என்றேன். உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், அதற்குமேல் நாம் இருவரும் நெருங்கும் சாத்தியமில்லை'' என்றாள், நான் மெளன மாக இருந்தேன். அவள் ஒரு இடத்தில் காரை நிறுத்தச்சொல்லி நான் இப்படியே நடந்து போய்க் கொள்கிறேன் என்று இறங்கினாள், நானும் இறங்கினேன். அவள் சிறிது தூரம் சென்று, திரும்பிப் பார்த்து, கையசைத்து விட்டு, மீண்டும் நடந்தாள் நான் மீண்டும் காருக்குள் நுழைய திரும் பினேன். டிரைவரின் முகம், சட்டென என்னை நோக்கித் திரும்பியது. நான் அதிர்ந் தேன். முகம் அவ்வளவு குரூரமாக இருந்தது.
________________

பிரமைகள் - ராஜமார்த்தாண்டன்

புலிவாய் சிக்கிய மானுக் கனுதாபம்
தப்பி விட்டால் சந்தோஷம்
தவற விட்ட புலிப்பசிக்கு
புல்லும் இரையாமோ?
 தப்பியதும் இன்னொன்றிடம் சிக்காதோ?
தவற விட்டதும் இன்னொன்றைக் கவ்வாதோ?
 காட்டிலும்
நாட்டிலும்
காணும் இயற்கையன்றோ
 யாரிடம் அனுதாபம்?
யாருக்காய் சந்தோஷம்?