Pages

Sunday, August 25, 2019

கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் :: 5 சிறுகதைகள்

கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் :: 5 சிறுகதைகள்
பைசாசக் கப்பலின் கடைசிப் பிரயாணம் 

தமிழில் - நாகார்ஜுனன் 

வளைகுடாவின் மறுபக்கத்திலே கொள்ளைக்காரர் தாக்குதலைத் தாங்குகிற 'அரண்களுடன் அடிமை வியாபாரம் செய்த பழைய துறைமுகத்துடன் சுழலும் கலங்கரை விளக்கத்தின் சோகம் வெளிறுகிற கதிர்கள் பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறை என உருமாற்றி ஒளிரும் வீடுகளும் எரிகிற பாலைவனச் சாலைகளும் நிறைந்த முகாமெனும் நிலப்பரப்புடன் அமைந்த காலனியக்கால நகரத்தை நோக்கி முழுகிராமத்தை விட நீண்டும் சர்ச்சின் ஊசிக்கோபுரத்தைவிட உயர்ந்தும் யாரும் குடியிருக்காத மாளிகை என்ப சமுத்திரம் போகும் பிரயாணக் கப்பல் வெளிச்சமும் சப்தமுமின்றி கிராமத்தைத் தாண்டிச் செல்லப் பார்த்த மிகப்பல வருஷங்களுக்குப் பின்பு யாரென அவர்கள் தன்னைத் தெரிந்து கொள்ளப்போவதாக புதுமனிதன் குரல்பலத்தில் சொல்லிக் கொண்டான். அந்தக் காலத்தில் குரல்பலமில்லாத சிறுவன் என்றாலும் அம்மாவின் அனுமதியுடன் கடற்கரையில் காற்றின் இரவு சுருதி மீட்டல் கேட்க வெகுநேரம் இருப்பான். சுழலும் விளக்கத்தின் ஒளி பக்கத்தில் படும்போது மறைந்து தாண்டியவுடன் திரும்பத்தோன்றி இடையிடை தெரிந்து பயணப்படும் கப்பலை நினைவு கொள்ளமுடியும். வளைகுடா முகத்துவாரம் குறிக்கும் மிதவைகள் தேடித் துழாவியது கப்பல். திசைமானி முள் தவறிப் போய்விடும் வரை துழாவியதால் மணல் திட்டுகள் அடைந்து தரைதட்டி உடைந்து சத்தமில்லாமல் மூழ்கியது கப்பல். என்ன இருந்தாலும் கடைசியில் கடல்பாறைகள் மீது அப்படி மோதியதில் உலோகம் சிதறி எஞ்சின்கள் வெடித்து கிராமத்தின் கடைசித்தெருவில் தொடங்கி உலகத்தின் மறுபக்கத்தில் முடிகிற ஆதித்தோட்டத்தில் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் யாளிகளும் பயத்தால் உறைந்து போயிருக்க வேண்டும். அது கனவென்று அவனே அடுத்த நாள் நினைத்திருக்க வேண்டும், வளைகுடாவின் ஒளிமிக்க மீன்பரப்பையும் துறைமுகம் தாண்டிய மலைமீதான கறுப்பர் வசிக்கும் குடிசைகளின் வண்ணக் குழப்பத்தையும் கழுத்தில் கட்டப்பட்ட வைரங்கள் உடனான அப்பழுக்கற்ற கிளிகள் அடங்கிய சரக்குகளை கடத்தல்காரர்கள் கயானாவிலிருந்து கொண்டு வருகிற அளவான கப்பல்களையும் அடுத்த நாள் பார்த்தபோது நினைத்தான் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு தூங்கியதாக கப்பலைக் கனவில் காணத்தான். யாரிடமும் சொல்லவில்லை, டால்ஃபின்களின் மின்னலை சமுத்திரத்தில் தேடியபோது திசைதவறியதாகப் பார்த்த முதல்முறை போலவே சோக வெளிறலுடன் இடையிடையே ஒளிர்ந்த மாயக்கப்பலைக் கண்ட அடுத்த மார்ச் மாத அதே இரவு வரை தரிசனமதை நினைவு கொள்ளவும் இல்லை. தூக்கம் விழித்து அம்மாவிடம் சொல்ல ஓடியது மட்டும் நிச்சயம். ஆர்வம் குறைந்த அம்மா மூன்று வாரமாக முனகியதும். காரணம் அவள் நினைப்பில் எதிர்த்திசையில் செய்யப்படும் பல காரியங்களால் மூளை அழுகிக் கொண்டிருந்ததால். பகலில் தூங்கி திருடனைப்போல் அவள் இரவில் உலவச் செல்வதால், மரணமடைந்த கணவனை யோசிக்க உட்கார ஓர் இடம் கிடைக்கும் என நகரத்தை அப்போதுதான் சுற்றுவதால். வருஷம் பதினொன்றை விதவையாகக் கழித்ததில் நாற்காலியின் ஆடும் மரக்கால்கள் தேய்ந்து போன சமயத்தை அவள் பயன்படுத்திக் கொள்ள விழைவதால். மணல் திட்டுகள் அருகில் போக வைத்து கண்ணாடிக் கடற்பரப்பில் 

படகுக்காரன் பார்த்த வசந்த காலத்தின் பாசிஒளிக் கலவையில் கடல் வெளவால்களின் கூடலையும் வெளிர் சிகப்புக் கடலாமைகளையும் கடலடியில் மிருதுவான பிற கிணறுகள் நோக்கித் தாவிய நீலநிற நீர்க்காகங்களையும் ஏன் காலனியக்கால கப்பல் நொறுங்கலின் போது மூழ்கியவர்களின் அலையும் முடிக்கற்றைகளையும் மகனும் காணட்டும் என முயன்றபோதும் எச்சம் ஏதும் தெரியவில்லை மூழ்கிய கப்பலின் இருந்தாலும் முரண்டுபிடித்த அவனால் அடுத்த மார்ச் மாதம் சேர்ந்து சமுத்திரம் பார்க்க ஒப்புக்கொண்டாள் அம்மா. துருக்கிக்காரன் கடையில் ஏலம் எடுத்த ஸர் ஃப்ரான்ஸிஸ் ட்ரேக் என்ற கடற்கொள்ளைக்காரன் காலத்து சாய்வு நாற்காலி ஒன்றே எதிர்கால நிச்சயம் அவளுக்கு என தெரியாத மகன். அதே இரவு நாற்காலி வெல்வெட் உறைமீது சாய்ந்து, "ஒலபெர்னோஸ், ராணிக்குச் சொந்தமான நகைப்பெட்டியின் சல்லாத் துணி மீது அமர்ந்து உன்னை நினைப்பதில்தான் எவ்வளவு சுகம்" என மரணித்த கணவனின் ஞாபகம் கொள்ளக்கொள்ள அவள் இதயத்து ரத்தம் குமிழெனப் பொங்கிப் பொங்கி ஆனது சாக்லேட் அமர்வதற்குப் பதிலாக ஜுரவேகக் குளிரில் தோய்ந்து மூச்சில் மண்கலந்து ஓடுகிறவளாக இன்னும் நான்கு பெண்கள் அடையபோகும் விதியாக, உஷ்ணத்துடன், பாம்பு கடித்தபின் பாதி அழுகியதைப்போல, சாய்வு நாற்காலியில் கிடந்தாள் அதிகாலை திரும்பியவன் கண்டுபிடிக்கும்வரை. கெடுதி யாருக்கும் இனி செய்ய இயலாதபடி தூரத்தில் தூக்கி சமுத்திரத்தில் கொலைகார நாற்காலியதைப் போட்டது அப்புறம்தான். நூற்றாண்டுகளாய்ப் பயன்பட்ட நாற்காலியின் ஓய்வுதரும் திறன் தீர்ந்துபோனதும் துரதிருஷ்டத்தின் அரியணையை கிராமத்தில் நிர்மாணித்த விதவையின் மகன் என எல்லோராலும் அழைக்கப்பட்டு, படகுகளிலிருந்து திருடிய மீன்கள் தருமமாய்க் கிடைத்ததைவிட அதிகமாக இருக்க, அனாதையின் தினசரி அவலம் பழக்கப்பட்டு வாழ்ந்ததும் இப்படியாக. கர்ஜனையாகக் குரல் மாறிவிட, கடந்த காலம் பற்றிக் கனவுகள் வராமல் போனதெல்லாம் எதேச்சையாகக் கடற்புறம் நோக்கிய மார்ச் மாத இன்னொரு இரவு வரைதான். "கடவுளே, திடீரென்று, இதோ அஸ்பெஸ்டாஸ் திமிங்கலம், யானையொத்த மாபெரும் மிருகம்." பித்தம் கொண்டோ என்னவோ "வந்து பாருங்களேன்" எனக்கூவினான். எனவே உடன் குரைத்து எழுந்தன நாய்கள், பயந்து ஓடினர் பெண்கள் என்ப வில்லியம் டாம்பியர்தான் வந்துவிட்டனோ என்ற கொள்ளுத்தாத்தாக்களின் பயத்தால் தாக்குண்டு படுக்கையடியில் தவழ்ந்து ஒளிந்தனர் வயோதிகர்கள். கீழ்த்திசையில் மறைந்து தன் புருஷாந்திர விநாசத்தில் சிக்கி ஒருமுறை எழுந்து மீண்டும் தொலைந்துவிட்ட, செயல்படாது தெரிந்த, எந்திரத்தைத் தெருவில் ஓடியவர்கள் யாரும் பார்க்க முயலவில்லை. இருந்தாலும் யாரெனத் தன்னை உணரத்தான் போகிறார்கள் என வலியில் கறுவிக்கொள்கிற வரையில் அவனை அடித்து முடித்தார்கள். முறுக்கிய அவர்கள் போட்டபோது ஆங்காரத்தால் பிதற்றியவன் முடிவு கொண்டு உறுதிமனத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் கவனமாக வருஷம் ஒன்றைக் கழித்தான், அந்த மாயத்தோற்றம் வரும் நாளுக்கென. காத்திருந்தது போலவே படகைத் திருடி வளைகுடா கடந்து பழைய அடிமைத் துறைமுகத்தின் வாயில்களுள் சென்று மனித உப்புக்கரைசலான கரீபியப்பிரதேசத்தின் மாலைப்பொழுதைக் கண்டான். வழக்கம்போல் ஹிந்துக் கடைகள் முன்பு யானைத்தந்தத்தில் கடைந்த சிலைகளைப் பார்க்க நிற்காமலும் 

துரித விசை சைக்கிள்கள் பயிலும் டச்சுக்காரப் கறுப்பர்களைப் கிண்டல் செய்யாமலும் ப்ரேஸிலியப் பெண்களை வறுத்து அக்கறித்துண்டுகளை விற்கும் ரகஸிய விடுதியெனும் கனவுமிருகத்தில் சிக்கி உலகம் பூராவும் சுற்றிய மலாயாக்காரர்களை செம்புநிறத்துக்காக இதர சமயங்களின் வழக்கம்போலக் கண்டு பயந்துவிடாமலும் தன் சாகஸத்தில் லயித்திருந்தான். கார்டெனியாப்பூக்களின் வாசமும் நெருப்பில் அழுகி ஒளிரும் ராட்சஸப் பல்லிகளின் இனிய வாடையும் கானகம் மூச்சுவிட, நட்சத்திரங்களின் கனத்துடன் இரவு மேலே கவியும் வரை ஏதுமறியாது போனான். கலங்கரை விளக்கத்தின் பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறையான இறகுமடிப்பில் பிரகாச ஒருமுகமாகி அடுத்துவந்த இருளால் மனிதம் திரும்புகிற சுங்க அதிகாரிகளின் கவனம் குவியாதபடி லாந்தர் விளக்கை அணைத்து வளைகுடா முகம் வரையில் திருட்டுப் படகில் துடுப்புப் போட்டான். விளக்கத்தின் கொடூரமான மினுங்கல் இன்னும் அடர்த்தியானதால் மட்டுமின்றி, தண்ணீரின் மூச்சு துயரமாகிப் போனதாலும் தன்னில் சுருண்டு அசைத்தான், கால்வாய் குறிக்கும் மிதவைகள் நோக்கி நகர்வதாக அறிந்து. திடீரென்று வந்தடைந்த பயங்கர சுறாமீனின் சுவாசம் எங்கிருந்து, சட்டென்று மரணித்த நட்சத்திரங்களால் இரவு இன்னும் அடர்ந்துகொண்டது ஏன் எனத் தெரியாமல் போக, கற்பனைதாண்டி உலகில் எதைவிடவும் பெரிதாகவும் நீலம் நீர் எதிலுமுள்ள இருட்டைவிட இருண்டதாகவும் மூவாயிரம் டன் சுறாமீன் நெடியாக ஆழம் காணச் செய்கிற மலைமுகட்டின் விளிம்பொத்த பக்கவாட்டில் எஃகுச்சுருள் வளையங்களுடன் விளக்கேதுமற்ற கணக்கிலடங்கா துவாரங்களுடன் எஞ்சின்களின் பெருமூச்சும் ஆன்மாவுமின்றி மரணமுற்ற காற்றையும் நின்றுபோன காலத்தையும் மூழ்கிவிட்ட விலங்கினங்களின் முழு உலகமும் மிதப்பதான எல்லைமீறிய சமுத்திரத்தையும் கொண்டு தன் மௌனத்தின் சுழற்சியைச் சுமந்து படகருகில் வந்த கப்பல்தான் காரணம். அத்தனையும் விளக்கத்தின் மின்னலில் திடீரென மறைய, மீண்டும் ஒருகணம் ஊடுருவிப் பார்க்கத்தக்க கரிபியப்பிரதேசமும் மார்ச் மாத இரவும் பெலிக்கன் பறவைகளின் தினசரிக்காற்றும் தெரிய, மிதவைகளின் நடுவே இருப்ப செய்வதறியாது அதிர்ச்சியில் விழித்தான். இதர சமயங்களிலும் தூக்கம் விழிப்பக் கண்டது இப்போது மட்டுமன்றி பிற சமயங்களிலும் கனவோ எனக் கேட்டுக்கொண்ட உடனே முதல் மிதவை தொடங்கி கடைசிவரை மாய மூச்சால் அழிய விளக்கத்தின் ஒளி திரும்பும்போது திசைமானிகள் செயல்படாமலும் தானிருக்கும் சமுத்திரத்தின் பகுதி அறியாமலும் கண்ணுக்குத் தெரியாத கால்வாய் தேடி ஆனால் மணல் திட்டுக்களை நோக்கிச் செல்வதாகத் தோன்றியது கப்பல். மிதவைகளின் கதிதான் வினோத லயிப்புக்கான தன் கடைசி வாய்ப்பு என்ப தன்னை மூழ்கடித்த தரிசனத்துக்குப் பின் கண்காணிப்புத்தூண்களில் இருப்போர் கலவரம் அடையாதபடி கூட்டிச்செல்லத்தான் திசைகாட்டும் சூரியனான படகின் சிகப்புச்சிறு லாந்தரை அந்த மாலுமி ஏற்றியதன் விளைவாக வழியைத் தானே சரிசெய்து கால்வாயின் பிரதான வாயிலை அதிர்ஷ்டவசமான புத்துயிர்ப்பின் திரும்பலில் மாட்டி அடைந்தது கப்பல். ஒரே சமயத்தில் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றதால் பேரடுப்புகள் கனன்று எரிய, நட்சத்திரங்கள் தம்மிடங்களில் பொருந்திக்கொள்ள, பிணவிலங்குகள் சமுத்திரத்தின் அடிச்செல்ல இரும்புப்பாளங்கள் களகளவென உராய்ந்து கொள்ள, வளைகுடாக் 

அரைத்குழம்பு வெற்றியைச் சுட்டும் வகையில் வாசத்தை சமையலறையிலிருந்து பரவவிட பயணியறை நிழல்களில் ஆழ்கடல்க காதலர்களின் தமனிகளும் நிலவுப்பரப்பாய் விரிந்து மேல்தளத்தில் குழுவினரின் சங்கீதமும் துடிக்கக் கேட்க பொங்கும் கோபம் அவனிடம் எஞ்சியிருக்க "உணர்வெழுச்சியாலோ அதிசய வேகத்தாலோ குழம்பிப் போக மாட்டேன் பயப்படமாட்டேன்" என உறுதியுடன் நிற்க, நினைத்தான் யாரெனத் தன்னை அடையாளம் காணப் போகிறவர்கள் கோழைகள் என. எந்திர பயங்கரம் தன்னுள் பாய்ந்து விடுமாறு பக்கவாட்டில் செல்லாமல் அதன் முன்னரே துடுப்புப்போடத் துவங்கினான், யாரெனத் தன்னை இப்போதாவது அவர்கள் உணரட்டும் என. கப்பல் கீழ்ப்படியும் என்ற நிச்சயம் வரும்வரையில் லாந்தர் விளக்கால் வழிகாட்டிச்சென்று துறைகளின் திசை மாற்றி கண்ணுக்குத் தெரியாத கால்வாயினின்றும் பிரித்து அந்த சமுத்திர மிருகமதை மூக்கணாங்கயிற்றில் பூட்டித் தூங்கும் கிராமத்தின் விளக்குகள் நோக்கி இழுத்துப்போனான். 

கலங்கரை விளக்கத்தின் ஒளி இனியும் மறைத்துக் கட்டுப்படுத்தாததால் பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறையென அலுமினியமானது அந்த வாழும் கப்பல். கிராமத்து சர்ச்சின் சிலுவைமரங்களும் வீடுகளின் ஏழ்மைத் துயருமான மாயத் தோற்றம் தெரிய, இருதயம் தரையில்படத் தூங்கும் கப்பல் தலைவனும் சமையலறை மஞ்சில் பொருந்தும் காளைகளும் மரத் தனியறையில் ஒரேயொரு நோயாளியும் இருக்க, தொட்டிகளில் அனாதைத் தண்ணீருடனும் மலைத்தொடரை துறையாக நினைத்துக்கொண்டாதால் மீளவே முடியாமல்போன அந்த மாலுமியுடனும் சென்றது கப்பல். விஸிலின் பெரும் கர்ஜனை பீறிட்ட அக்கணம் நீராவி மழை பொழித்து அவனை நனைத்துவிட யாருக்கோ சொந்தமான படகு மூழ்கிப் போக இருப்ப நேரம் கடந்தே விட்டது. கடற்கரையின் சிப்பிகளும் தெருக்களின் கல்பதித்த பரப்பும் நடந்ததையெல்லாம் நம்பவே முடியாமல் போனவர் வீடுகளும் பயங்கரக்கப்பலின் விளக்குகளால் வெளிச்சமடைந்த முழுகிராமமும் வந்துவிட வழிவிலகச் கொஞ்சமே நேரம் அவனுக்கு. விநாசக்கப்பல் செய்த குழப்பத்துக்கு நடுவிலும் "பாருங்கள், கோழைகளே" எனக் கத்திய ஒரே நொடியில் பிரம்மாண்டமான எஃகுப்பீப்பாய் தரையில் நொறுங்க தண்டிலிருந்து விளிம்புவரை ஒவ்வொன்றாக உடைந்த தொண்ணூறாயிரத்தைந்நூறு ஷாம்பென் கிண்ணங்களின் துல்லிய அழிவைக் கேட்க முடிந்தது. மார்ச் மாத அதிகாலை இனியும் அல்லாது புதன்கிழமை உச்சிப்பகலாக ஒளிவர், நம்ப முடியாமல் போனவர்கள் வாய்பிளந்து கொண்டிருப்பதைப் பார்ப்பதில் சுகம் அவனுக்கு. உலகிலேயே மிகப்பெரிய சமுத்திரக்கப்பல் தரைதட்டிப் போயிருந்தது சர்ச்சின் முன்பாக. சர்ச்சின் ஊசிக்கோபுரத்தைவிட இருபது மடங்கு பெரிதாகவும் கிராமத்தை விட தொண்ணூற்றியேழு மடங்கு பெரிதாகவும் எதைவிடவும் வெளிறியதாகவும் இரும்பு எழுத்துக்களில் ஹலால்க்ஸில்லாக் எனும் பெயர் பொறிக்கப்பட்டும் மரண சமுத்திரங்களின் புராதனத்தண்ணீர் தளர்ந்து அலையுற்றும் பக்கவாட்டில் பொங்கி வழியவும் நின்றது கப்பல். 

தமிழில் - நாகார்ஜுனன் 

66 

மிகப் பெரும் சிறகுகளுடன் வயோதிகன் -  தமிழில் - ஆர் சிவகுமார் 

வீட்டுக்குள் அவர்கள் கொன்ற ஏராளமான நண்டுகளைக் கடலில் எறிவதற்காக மன.. தொடங்கி மூன்றாவது நாள் பெலயோ நனைந்த முற்றத்தைத் தாண்டிப் போனான். இறந்த நண்டுகள் உண்டாக்கிய துர் நாற்றம்தான் பிறந்த குழந்தைக்கு இரவு முழுவதும் காய்ச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உலகமே சோக மயமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே சாம்பல் வண்ணத்தில் இணைந்து போயின. மார்ச் மாத இரவுகளில் ஒளித்துகள்களாக மின்னிய கடற்கரை மணல், சேறும் அழுகிய சிப்பியின் நண்டுகளும் கலந்த குழம்பாக மாறியிருந்தது. நண்டுகளை எறிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்தபோது நடுப்பகல் வெளிச்சம் மிகக்குறைவாக இருந்ததால் முற்றத்தின் பின்பகுதியில் அசைந்து கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தது எது என்று பார்ப்பது கடினமாக இருந்தது. மிக அருகில் போய்ப்பார்த்தபோதுதான் வயதான மனிதன் என்பதை பெலயோ கண்டான். மண்ணில் முகம் பதிய படுத்துக் கிடந்த வயோதிகனால் கடும் முயற்சி செய்தும் எழ முடியவில்லை; அவனுடைய பெரிய சிறகுகள் முயற்சிக்குத் தடையாக இருந்தன. 

கோரக்காட்சியால் பயந்துபோன பெலயோ குழந்தையின் காய்ச்சலைக் குறைப்பதற்காக மீது ஈரத்துணியைப் போட்டு எடுத்துக்கொண்டிருந்த மனைவி எலிஸென்டாவைக் கூட்டிக்கொண்டு வர ஓடினான். அவளை முற்றத்தின் பின்பகுதிக்கு அழைத்துப் போனான். இருவரும் பேச்சற்ற திகைப்புடன் தரையிலிருந்த உடலைப் பார்த்தார்கள். குப்பை பொறுக்குபவனைப் போல் வயோதிகன் உடையணிந்திருந்தான். வழுக்கை மண்டையில் சில வெளுத்த முடிகளும் வாயில் மிகக்குறைந்த பற்களுமே இருந்தன. இருந்திருக்கக் கூடிய பெருமித உணர்வு நனைந்திருந்த குடுகுடு கிழவனின் பரிதாப நிலையால் மறைந்துபோய் விட்டது. அழுக்காகவும் பாதி பிடுங்கப்பட்டும் இருந்த பெரிய பருந்துச் சிறகுகள் சேற்றில் சிக்கிக் கொண்டிருந்தன. பெலயோவும் எலிஸென்டாவும் நீண்டநேரம் மிக அருகில் பார்த்ததால் சீக்கிரத்திலேயே ஆச்சரியம் நீங்கி சகஜமாக பாவிக்க ஆரம்பித்தார்கள். பேசக்கூட முற்பட்டார்கள். மாலுமியின் வலிமையான குரலில் புரிந்து கொள்ளமுடியாத மொழிவழக்கில் பதில் சொன்னான். கணவனும் மனைவியும் சிறகுகள் ஏற்படுத்திய அசெளகரிய உணர்வை இப்படியாகத்தான் ஒதுக்கிவிட்டு சூறாவளியால் உடைந்து போன வெளிநாட்டுக் கப்பலிலிருந்து வீசியெறியப்பட்டவன் என்று விவேகமாக முடிவு செய்தார்கள். இருந்தாலும் வாழ்வையும் சாவையும் பற்றி எல்லாம் தெரிந்த அண்டைவீட்டுப் பெண்ணைக் கூப்பிட்டு அவனைக் காண்பித்தார்கள். ஒரே பார்வையில் அவள் அவர்களுடைய தவறைச் சுட்டிக் காட்டினாள். "தேவதூதன். குழந்தைக்காகத்தான் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். வயோதிகம் காரணமாக மழை அவனைக் கீழே வீழ்த்தி விட்டது" என்று சொன்னாள். 

பெலயோவின் வீட்டில் உயிருடன் தேவதூதன் பிடிபட்டிருக்கும் விஷயம் அடுத்தநாள் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. விண்ணுலக சதியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களே அந்த நாளைய தேவதூதர்கள் என்று அபிப்பிராயம் கொண்ட அண்டை வீட்டுப் ெ படுப் பெண்ணின் கருத்துக்கு மாறாக வயோதிகனை அடித்துக் கொல்ல மனம் வரவில்லை 

மாவட்ட நிர்வாகியின் உதவிக்காரனான பெலயோ தன் குண்டாந்தடியைக் கையில் ப"+?? சமையலறையிலிருந்து பிற்பகல் முழுக்க கண்காணித்துக் கொண்டிருந்தான். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக சேற்றிலிருந்து இழுத்துக்கொண்டு போயா பால் போட்ட கூண்டுக்குள் கோழிகளோடு அடைத்தான். மழை நடுஇரவில் நின்ற பிறகும் பெலயோவும் எலிஸென்டாவும் நண்டுகளைக் கொன்று கொண்டிருந்தார்கள். சிறது ?? கமித்து காய்ச்சல் நீங்கிக் கண்விழித்த குழந்தைக்குப் பசித்தது. தோணய" 94 நாளைக்குத் தேவையான குடிநீரும் உணவும் வைத்து தேவதூதனை ஏற்ற வா"2" * நடக்கட்டும் என்று பெருங்கடலுக்குள் அனுப்பி விட கணவனும் மனைவியும் பெருந்தன்மை பொங்க தீர்மானித்தார்கள். ஆனால் விடிந்தவுடன் முற்றத்துக்குப் போய்ப்பார்த்தபட சுற்றுவட்டத்தார் அனைவரும் கோழிக்கூண்டுக்கு முன்னால் திரண்டிருந்ததைக் கவனித்தார்கள். கூட்டம் கொஞ்சமும் பயமின்றி கம்பிவலை வழியாக தின்பண்டங்களை எறிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தது. தெய்வீக உயிரினம் என்று கருதாமல் சர்க்கஸ் மிருகத்தைப் போல நடத்தினார்கள். 

விசித்திர செய்தியைக் கேள்விப்பட்ட அருட்தந்தை கொன்ஸாகோ பதற்றமடைந்து ஏழு மணிக்கு முன்பாக வந்து சேர்ந்தார். இதற்குள் விடியற்காலை வந்த கூட்டத்தை விட குறைவான விளையாட்டுப் புத்தி கொண்ட பார்வையாளர்கள் வந்து அடைத்து வைக்கப்பட்டவனின் எதிர்காலம் குறித்து பலவகையான யூகங்களில் ஈடுபட்டார்கள். அவர்களிலேயே மிகவும் எளிமையான ஒருவன் வயோதிகனை உலகின் மேயராக்க வேண்டும் என்று நினைத்தான். இன்னும் கொஞ்சம் கண்டிப்புப் பேர்வழிகள் எல்லா யுத்தங்களையும் வெற்றி கொள்வதற்காக அவனை ஐந்து நட்சத்திர தளபதியாக்க வேண்டும் என்று எண்ணினார்கள். பிரபஞ்ச நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கும் சிறகுகள் கொண்ட புத்திசாலிகளின் இனமொன்றை பூமியில் உண்டாக்க அவனை சினைக்கூடத்திற்கு அனுப்பவேண்டும் என்று சில கனவுலகவாதிகள் ஆசைப்பட்டார்கள். அருட்தந்தை கொன்ஸாகோவோ பாதிரியாவதற்கு முன்பு வீரியம் மிக்க விறகுவெட்டியாக இருந்தவர். கம்பிவலை பக்கத்தில் நின்றபடியே சமயத்துறை வினாவிடைப் புத்தகத்தை சில விநாடிகள் மேலோட்டமாகப் பார்த்தார். பிறகு வசீகரமான கோழிக்குஞ்சுகளுக்கு மத்தியில் முதுமையான பெட்டைக்கோழி போலத் தோன்றிய பரிதாபமான வயோதிகனை நெருக்கத்தில் பார்ப்பதற்காகக் கதவைத் திறந்துவிடச் சொன்னார். விடியற்காலையில் வந்த பார்வையாளர்கள் எறிந்த பழத்தோல்கள் மற்றும் காலை உணவின் மிச்சங்கள் ஆகியவற்றுக்கிடையே மூலையில் படுத்துக்கிடந்த அவன் தன் சிறகுகளைச் சூரிய ஒளியில் உலர்த்திக் கொண்டிருந்தான். பாதிரியார் கூண்டுக்குள் நுழைந்து லத்தீனில் காலை வணக்கம் சொன்னபோது மனிதர்களின் துடுக்குத்தனங்களைப்பற்றி கவலைப்படாத அவன் பழமையான கண்களை மட்டும் உயர்த்தி அவனுடைய மொழியில் ஏதோ முணுமுணுத்தான். கடவுளின் மொழியையோ அவருடைய மதகுருமார்களுக்கு எப்படி வந்தனம் சொல்வது என்பதையோ தெரிந்திராத அவனை மோசடிக்காரன் என்று பங்குத்தந்தை சந்தேகப்பட்டார். மிக அருகில் கவனித்தபோது அதிக மனிதச்சாயல் இருப்பதைப் பார்த்தார். அவனிடம் சகித்துக்கொள்ள முடியாத திறந்தவெளி மணம் ஒன்று. சிறகுகளின் பின்புறத்தை புல்லுருவிகள் துடைத்திருந்தன. பிரதான இறகுகள் அண்டவெளியின் WITற்றால் சிரி(கெட்டிருந்தன. அவனைச் சார்ந்த எ துவுமே தேவதூதர்களின் பெருமிக (மேன்மைக்கு ஒத்துவரவில்லை, கோழிக்கூண்டிலிருந்து வெளிவந்த அவர் வயோதிகன் மீது ஆர்வம் கொண்டிருந்தவர்கள் கள்ளங்கபடில்லாமல் அவனை நடத்துவதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து சிறு பிரசங்கம் செய்தார். சூதுவாது தெரியாதவர்களைக் குழப்பத்தில் -ஆழ்த்த பிசாசு சில (கேளிக்கைத் தந்திரங்களைக் கையாளும் என்பதை நினைவுறுத்தினார். பருந்துக்கும் விமானத்துக்கும் உள்ள வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் சிறகுகள் முக்கிய அம்சம் இல்லையென்றால் (தேவ தூதர்களை அடையாளம் காண்பதில் இன்னும் முக்கியத்துவம், குறைந்தவை என்று வாதம் செய்தார். என்றாலும் இதுபற்றி பிஷப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார். பிஷப் அவருடைய தலைமைக் குருவுக்கும் தலைமைக் குரு போப்புக்கும் எழுதி மிக உயர்ந்த மத நீதிமன்றங்களிலிருந்து இறுதித் தீர்ப்பைப் பெற்றுத்தருவார்கள் என்றும் சொன்னார். 

பாதிரியுடைய விவேகம் பாறை மீது தூவப்பட்ட விதை போலானது. பிடிபட்ட தேவதூதன் பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவி சில மணி நேரங்களில் பெலயோ வீட்டு முற்றம் சந்தைக்கடையின் ஆரவாரப் பரபரப்பைப் பெற்றது. வீட்டையே தகர்த்துவிடும் அளவுக்கு சேர்ந்துவிட்ட கும்பலைத் துரத்த முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் எந்திய துருப்புகளை வரவழைக்க வேண்டியதாயிற்று. கும்பல் எறிந்துவிட்டுப் போன குப்பையைப் பெருக்கித் தள்ளியதால் எலிஸென்டாவின் முதுகுத்தண்டு முறிந்து போனதைப் (போல வலித்தது. தடுப்பு போட்டு தேவதையைப் பார்க்க ஐந்து ஸென்ட் அனுமதிக் கட்டணமாக வசூலிக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு அப்போதுதான் உண்டானது. 

மிகத்தொலைவிலிருந்து வித்தை காட்டுபவர்களின் கூட்டம் ஊருக்கு வந்தது. கழைக்கூத்தாடி கூட்டத்தின் மீது சர்சர் என்று சிலமுறை பறந்து போனான். யாருமே அவனைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் சிறகுகள் ஒத்தன தேவதாதனுடையவை அன்றி வெளவாலினதை. உலகிலேயே துயரமிக்க நோயாளிகள் ஆரோக்கியம் நாடி வந்தார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே இதயத்துடிப்புகளை எண்ணிக்கொண்டு வந்து தற்போது எண்களே இல்லாமல் போய்விட்ட ஏழைப்பெண், நட்சத்திரங்களின் சப்தம் தொல்லைப் படுத்துவதால் தூங்க முடியாமல் போய்விட்ட போர்த்துக்கீசியன்; விழித்திருந்தபோது செய்தவற்றை மாற்றிச் செய்ய இரவில் தூக்கத்தில் நடக்கும் ஒருவன் இவற்றை விட ஆபத்து குறைந்த நேரங்களில் அவஸ்தைப்படும் மற்றும் பலர் வந்தார்கள். பூமியையே நடுங்கவைத்த அந்தக் கப்பல்வி நாசம் ஏற்படுத்திய நிர்மூலத்துக்கிடையில் பெலயோவுக்கும் எலிஸென்டாவுக்கும் சுகக்களைப்பு உண்டானது. காரணம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தங்கள் வீட்டின் அறைகளை பணத்தால் நிரப்பியது தான். தேவதூதனைப் பார்க்கக் காத்திருக்கும் யாத்ரீகர் வரிசை தொடுவானத்தையும் தாண்டிப்போயிற்று. 

10 

தன்னுடைய நாடகத்தில் தனக்கே பங்கு இல்லாத நபர் தேவதூதன 999 

ச்சடங்கு சார்ந்த கம்பிவலையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் விளக்குகளும் புனிதச்சி மெகுவர்த்திகளும் உண்டாக்கிய தாங்கமுடியாத வெப்பத்தால் வெறு' 

-டாலும் தன்னுடைய கடன்வாங்கிய கூட்டில் முடிந்த அளவு செளகர்யத? ” முயன்றான். முதலில் அவனை அந்துருண்டைகளை சாப்பிட வைக்க முயற்சி செயஜி" தேவதூதர்களுக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட உணவு அதுதான் என்று புதன்'' அண்டைவீட்டுப் பெண் சொன்னதற்கு ஏற்ப அப்படிச் செய்தார்கள். செய்த தவறு"""9" தமவாய் மேற்கொள்பவர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த, போப்பாண்டவர் '9'??'' உணவை நிராகரித்தது போலவே அந்துருண்டைகளையும் நிராகரித்தான். கடைசியில் கத்தரிக்காய் மசியலைத் தவிர வேறெதையும் சாப்பிடாததற்குக் காரணம் அவன் தேவதூதனாக இருந்ததாலா வயோதிகனாக இருந்தத்தாலா கண்டுபிடிக்கவே முடியவில்லை. அமானுஷ்யமாக அவனிடம் இருந்த ஒரே நற்குணம் பொறுமை?'' குறிப்பாக சிறகுகளில் பல்கிப் பெருகிய நட்சத்திர மண்டல புல்லுருவிகளைத்தேடி கோழிகள் அவனைக் கொத்தியபோதும் உடல் ஊனமுற்றவர்கள் தங்களுடைய ஊனமுற்ற பகுதிகளைத் தொட அவனுடைய சிறகுகளைப் பிடுங்கியபோதும் நிற்கவைத்துப் பார்ப்பதற்காக மேலதிக இரக்க குணம் உடையவர்கள் கூட அவன்மீது கற்களை எறிந்த போதும் அசாத்திய பொறுமையைக் கடைப்பிடித்தான். ஒரு சமயம் பல மணி நேரங்களுக்கு அசைவற்றுக் கிடந்ததால் இறந்துவிட்டானோ என்று சந்தேகப்பட்டு எருதுக்குச் சூடு போடும் இரும்புக்கம்பியால் விலாவை எரித்தபோதுதான் அவர்களால் அவனை எழுப்ப முடிந்தது. திடுக்கிட்டு எழுந்த அவன் தன்னுடைய மாய உலக மொழியில் அவர்களை வசை பாடினான். கண்களில் நீர்வழிய இரண்டுமுறை சிறகுகளை அடித்துக் கொண்டபோது கோழி எச்சமும் நிலாக்கோள தூசியும் கலந்த சூறைக்காற்றும் பீதிப்புயலும் தோன்றின. இந்த உலகைச் சேர்ந்தவையாகத் தோன்றவில்லை. சூடுபோட்டதற்கு அவனுடைய எதிர்வினை கோபத்தினாலன்றி வலியால்தான் உண்டானது என்று நிறைய பேர் நினைத்தாலும் அதன் பிறகு அவனைத் தொல்லைப்படுத்தாமலிருப்பதில் விழிப்பாக இருந்தார்கள். காரணம், அவனுடைய சாத்வீகம் மாவீரனுக்குரிய சாந்தம் அல்ல, பிரளயத்தின் இளைப்பாறுதல் என்பதைப் பெரும்பான்மையோர் புரிந்துகொண்டதுதான். 

அருட்தந்தை கொன்ஸாகோ வேலைக்காரியின் வக்கணையும் பவ்யமும் கலந்த வார்த்தைகளை உபயோகித்து தேவதூதனைப்பார்க்க வந்த கூட்டத்தின் துடுக்குத் தனத்தைத் தடுத்து நிறுத்தினார். அதே சமயம் சிறைப்பட்ட தேவதூதனின் தன்மை பற்றிய இறுதித் தீர்ப்பையும் மேலிடத்திலிருந்து எதிர்நோக்கியிருந்தார். ஆனால் ரோமிலிருந்து வந்த கடிதங்கள் எவ்வித அவசரத்தையும் வெளிப்படுத்தவில்லை. கைதிக்கு தொப்புள் இருந்ததா, அவனுடைய மொழிவழக்கு மேற்காசிய மொழிவகையோடு தொடர்பு ஏதும் கொண்டிருந்ததா, குண்டூசியின் தலைக்கு அவனுடைய உடலின் எத்தனை மடங்கு ஈடாகும், அவன் சிறகுகள் கொண்ட வெறும் நார்வேக்காரன் தானா என்பதையெல்லாம் ஆராய்வதிலேயே மேலிடத்தார் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் சிக்கல்களுக்கு தெய்வீக சம்பவம் ஒன்று முற்றுப்புள்ளி வைக்காம லிருந்திருந்தால் அப்படியான அரைகுறையான கடிதங்களே வந்து போய்க் கொண்டும் இருந்திருக்கும். 

அப்போதிருந்த பலவகையான கேளிக்கை ஈர்ப்புகளுக்கிடையே பெற்றோர் சொல்லுக்குக் கீழ்ப்படியாதததால் சிலந்தியாக மாற்றப்பட்ட பெண் ஒருத்தியைக் காட்சிப் பொருளாக்கும் குழு ஊருக்கு வந்தது. பார்க்க தேவதூதனை விட அவளுக்குக் கட்டணம் குறைவாக இருந்தது மட்டுமின்றி, தன் அபத்தமான நிலைபற்றி அவளைக் கேள்விகள் கேட்கவும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவளுடைய கோரத்தைப் பற்றிய உண்மையை யாரும் சந்தேகிக்க அவசியம் ஏற்படாமலிருக்க அவளை முழுக்கத் துருவி ஆராயவும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆட்டுக்கடா அளவுக்கு உருவமும் சோகமான இளம் பெண்ணின் முகமும் கொண்ட பயங்கரமான சிலந்தி அவள். அசாதாரண உருவத்தை விடவும் துயரத்தை விவரங்களுடன் உண்மையான வேதனையுடன் சொன்ன விதம் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. குழந்தையாக இருந்தபோது நடனமாடுவதற்காக வீட்டைவிட்டு திருட்டுத்தனமாகப் போனாள். அனுமதியின்றி விடிய நடனமாடிப் பின் காட்டு வழியே வீடுதிரும்பிக் கொண்டிருந்த போது பயங்கரமான இடி வானத்தையே இரண்டாகப் பிளந்தது. பிளவின் வழியாக வெளிப்பட்ட கந்தக மின்னல் அவளை சிலந்தியாக மாற்றிவிட்டது. தயாள குணமுடைய சிலர் அவளை நோக்கி எறிந்த கொத்துக் கறி உருண்டைகளே அவளுக்குக் கிடைத்த உணவு. மனித அனுபவ மெய்ம்மையும் பயங்கர படிப்பினையும் கொண்ட இப்பெண்ணின் காட்சி, மனிதர்களை அபூர்வமாகவே அன்புடன் பார்க்கும் இறுமாப்பு கொண்ட தேவதூதனின் காட்சியை எளிதாகத் தோற்கடித்தது. மேலும் தேவதூதனால் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட சில அற்புதங்கள் ஒரு வகையான மனப்பிறழ்வைக் கொண்டிருந்தன. உதாரணமாக பார்வை திரும்பப்பெறாத குருடனுக்கு மூன்று புதிய பற்கள் முளைத்தது. பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் நடப்பதற்கு பதிலாக லாட்டரியில் ஜெயித்தது. தொழுநோயாளியின் புண்களிலிருந்து சூரியகாந்திப் பூக்கள் முளைவிட்டது போன்றவை. இதுமாதிரியான கேலிக்கிடமான, ஆறுதல்பரிசு போன்ற அற்புதங்கள் தேவதூதனின் புகழை சிதைத்திருந்தன. சிலந்தியாக மாறியிருந்த பெண் அவனை வென்றுவிட்டாள். இப்படியாகத்தான் அருட்தந்தை கொன்ஸாகோவின் தூக்கமின்மை பூரணமாக நீங்கியது. மூன்று நாட்கள் மழை பெய்தபோது இருந்ததைப் போல பெலயோவின் முற்றம் வெறுமை அடைந்தது. படுக்கையறைக்குள் நண்டுகள் நடந்து திரிந்தன. 

வீட்டுச் சொந்தக்காரர்கள் கவலைப்பட காரணமேயில்லை. குளிர்காலத்தில் வண்டுகள் நுழையாதபடி இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்ட ஜன்னல்களும் தோட்டங்களும் பலகணிகளும் நிர்மாணிக்கப்பட்ட இரண்டடுக்கு மாளிகை ஒன்றை சேமித்த பணத்தில் கட்டினார்கள். நகரத்துக்கு அருகில் பெலயோ முயல் பண்ணை அமைத்து வேலையையும் நிரந்தரமாக விட்டுவிட்டான். அந்த நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அழகான பெண்கள் அணியும் வானவில் வண்ணங்களைக் காட்டும் பாட்டு 

அவடைகளையும் குதி உயர்ந்த ஏராட்டின் காலணிகதாயம் எதிபென்டா வாங்கினாள் (கோழிக்கூண்டைப் பற்றி மட்டும் அவர்கள் நினைக்கவேயில்லை, கிருமிநாசினி 

உபயோகப்படுத்திக் கழுவி அடிக்கடி நறுமணப் பிசினை வைத்து அவர்கள் எாதத்து தன் நாதனை வழிபாடு செய்வதற்கு அல்ல. பூதத்தைப்போல எல்லா இடங்கள் அம்பர 42 வீட்டைப் பழையதாக மாற்றிக் கொண்டிருந்த கழிவுக்குவியலின்'துர்நாற்றத்தைப் போக்கத் தான். முதலில் குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டபோது கோழிக்கூண்டு அருகில் (போகா தவாறு கவனமுடன் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் பிறகு பயம் நீங்கி நாற்றத்துக்குப் பழகிப் போனார்கள். இரண்டாவது பல் முளைப்பதற்கு முன்பாக குழந்தை (கோழிக்கூண்டுக்குள் நுழைந்து விளையாடினான். கூண்டின் கம்பிகள் இற்று விழ ஆரம்பித்தன. மற்ற மனிதர்களிடமிருந்து ஒதுங்கியிருந்ததைப் போலவே குழந்தையிடம் இருந்தும் தேவதூதன் ஒதுங்கியே இருந்தான், ஆனாலும் ஏற்பட்ட பெருத்த அவமானங்களை மாயத்தோற்றங்களால் மயங்காத நாயின் பொறுமையோடு சகித்துக் கொண்டான். அவனுக்கும் குழந்தைக்கும் ஒரே சமயத்தில் தட்டம்மைவந்தது. குழந்தையைக் கவனித்த டாக்டருக்கு தேவதூதனுடைய இதயத்தின் சப்தத்தைக் கேட்கும் ஆவலை அடக்க முடியவில்லை. இதயத்திலிருந்து விஸில் சப்தத்தையும் சிறுநீரகங்களிலிருந்து பலவகையான சப்தங்களையும் கேட்ட டாக்டருக்கு அவன் இனி உயிர் வாழ்வது முடியாத காரியம் என்று பட்டது. அவருக்கு அதிக ஆச்சரியத்தை அளித்தது சிறகுகள் மனித உருவத்துக்கு மிக இயல்பாகப் பொருந்தியிருந்ததுதான். மற்ற மனிதர்களுக்கும் ஏன் சிறகுகள் இல்லை என்பதைத்தான் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

மழையும் வெய்யிலும் கோழிக்கூண்டை முற்றிலும் சிதைத்த சில நாட்களுக்குப் பிறகு குழந்தை பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. மரணத் தறுவாயில் இருக்கும் திக்கற்றவனைப் போல தேவதூதன் இங்கேயும் அங்கேயும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தான் படுக்கையறையிலிருந்து துடைப்பத்தால் அவனை அவர்கள் துரத்திய சில விநாடிகளில் சமையலறையில் இருப்பதைப் பார்ப்பார்கள். ஒரே சமயத்தில் பல இடங்களில் அவன் இருப்பதைப் போல உணர்ந்த அவர்கள், தன்னை இரட்டிப்பாக்கிக் கொண்டானோ. தன்னை இனப்பெருக்கம் செய்து கொண்டானோ என்றும் சந்தேகப்பட்டார்கள். எரிச்சலும் மனநலக் கேடும் அடைந்த எலிஸென்டா தேவதூதர்கள் நிரம்பிய அந்த நரகத்தில் வாழ்வது பயங்கரமானது என்று கத்திச் சொன்னாள். அவனால் அரிதாகவே சாப்பிட முடிந்தது. மூப்புற்ற கண்களில் திரை விழுந்ததால் கம்பங்களில் மோதிக் கொண்டான் இறகுகள் உதிர்ந்து போனதால் நாணற புல் போன்ற எலுமப் 

மனதால் நாணற் புல் போன்ற எலும்பமைப்பை சிறகுகள் பெற்றன. பெலயோ இரக்கம் கொண்டு அவன் மீது கம்பளியைப் போட்டு கொட்டகையில் படுத்துக் தூங்க அனுமதித்தான். பிறகுதான் இரவில் அவனுக்குக் காய்ச்சல் வந்தகையும் 2 +2+, சிரமமான வார்த்தைகளை அவன் பிதற்றுவதையும் கவனிக்க முடித்தது. அவர்கள் கலவரமடைந்த சில தருணங்களில் அதுவும் ஒன்று. காரணம் இறந்து விடப் போகிறான் என்று அவர்கள் நினைத்ததும் இறந்துபோன தேவதூதர்களை என்ன செய்வது என்று புத்திசாலியான அண்டை வீட்டுப் பெண் 

- 'பெண்ணால் கூட சொல்ல முடியாததும்தான். 

இருந்தும் மோசமான குளிர்காலத்துக்கு ஈடுகொடுத்து வாழ்ந்தது மட்டுமன்றி வெயில் காயும் நாட்கள் ஆரம்பித்தவுடன் உடல்ரீதியாக முன்னேறவும் செய்தான். முற்றத்தில் யாரும் பார்க்காத மூலையில் அசைவின்றிப் பல நாட்கள் இருந்தான். டிசம்பர் மாத ஆரம்பத்தில் சிறகுகளில் சோளக் கொல்லைப் பொம்மைக் காக்கையின் இறகுகளைப் போன்ற விரைப்பான இறகுகள் வளர ஆரம்பித்தன. முதுமையின் இன்னொரு துயரமாக தோன்றியது. மாற்றங்களுக்கான காரணம் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் மாற்றங்களை யாரும் பார்க்கக்கூடாது என்பதிலும் நட்சத்திரங்களுக்குக் கீழே சமயங்களில் அவன் பாடிய கடலோடிகளின் பாடல்களை யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிக கவனமாக இருந்தான். ஒரு காலையில் எலிஸென்டா மதிய உணவுக்காக வெங்காயங்களை நறுக்கிக் கொண்டிருந்தபோது நடுக்கடலிலிருந்து வந்ததைப் போன்ற காற்று சமையலறைக்குள் வீசியது. ஜன்னலருகே போன அவள் பறப்பதற்காக தேவதூதன் செய்த முதல் முயற்சிகளைப் பார்த்தாள். முயற்சிகள் அலங்கோலமாக இருந்ததால் விரல் நகங்கள் காய்கறிப் பாத்தியில் பள்ளத்தை உண்டாக்கின. சிறகடித்து மேலெழும்பி காற்றில் நிலைகொள்ள முடியாமல் கொட்டகையை இடித்துத் தள்ளி விடுபவன்போல திணறினான். ஆனால் விரைவில் உயரே பறக்க முடிந்தது. வயோதிக வல்லூறின் ஆபத்தான சிறகடிப்போடு அவன் கடைசி வீடுகளைக் கடந்து போனதைப் பார்த்த எலிஸென்டா அவனுக்கும் தனக்குமான நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். வெங்காயங்களை நறுக்கிக் கொண்டிருந்தபோது அவனைக் கவனித்தபடியே இருந்தாள். கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்தாள். ஏனென்றால் அவளுடைய வாழ்க்கையில் இனிமேல் தொல்லையாக இல்லாமல் கடலின் தொடுவானத்தில் கற்பனைப் புள்ளியாக மட்டுமே இருக்கப் போகிறான். 

தமிழில் - ஆர் சிவகுமார் 


-- 

14 
**************************

நீல நாயின் கண்கள் - 
தமிழில் - அப்பண சாமி 
அதன்பிறகு அவள் பார்வை என் மேல் விழுந்தது முதல் பார் ஓயாத, அது சாதா' பார்த்தாள் என நினைத்தேன். ஆனால் தாக்கம் கலந்த கலா கயூடுரா ரி சாத்தி னு பாடமாக கற்றிவந்து நின்றபோது பார்வை தோள்களின் மேலாகப் பாய்ந்தது தான் பின்னே பதித்தது என்பதைப் புரிந்து கொண்டேன். அவள் (யேன்) முதல் பார்வை கொண்டது நான் தான்" என்பதையும். 

சிகரெட் பற்ற வைத்தேன். ஆழ்ந்து புகைதர உள்ளிழுத்தேன். பின் தாக்கம் தந்த நாற்காலியில் சமன் சரியாமல் காலால் தாங்கி ஆடிக் கொண்டிருந்தேன் பார்த்தவாறே நின்றிருந்தாள். அதே விளக்கின் பக்கவாட்டில் இரவுதோறும் நின்று கொண்டிருந்தாள் போலும். முந்தைய இரவுகளைப் போலவே இமைகளின் படபடப்பின் இவரா..அவளி பில் கண்கள் பிரகாசமடைந்ததைக் கண்டேன். வழக்கமான நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது கே. நாயின் கண்கள்." விளக்கின் மீதிருந்த கரங்களை அகற்றாமலேயே "அவைதாம் என்றுமே மறக்க முடியாது" என்றாள் 

அலங்கார மேஜையை நோக்கி நகர்ந்ததால் என்மேல் பார்வை பதித்தவாதிருத்த அவள் பிம்பம் வட்டக் கண்ணாடியில் பிரதிபலித்ததைக் கவனித்தேன் ஜொதிக்கும் கரித்துண்டுக் கண்களுடன் தொடர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான் மேஜை மீதிருந்த முத்துச் சரங்களால் போர்த்திய சிறிய பெட்டியைத் திறந்த போதும் அலங்காரத்தின் போதும் என் பிம்பத்தின் மீதிருந்த பார்வை அகலவில்லை, மூக்கு நுனியிது படிந்திருந்த பௌடரைத் துடைத்தாள் சிறிய பெட்டியை மூடி. சிந்து நின்று பின் வந்த வழியே நடந்தாள். "இந்த அறையில் நிகழ்ந்து கொண்டிருப்பதை கனவின் மூலம் யாரோ கவனித்துக் கொண்டிருப்பதான பயம் கனவின் மூலம் என் ரகஸியத்தை அறிந்து கொண்டிருக்கிறார்கள்" என்றாள். மீண்டும் வட்டக் கண்ணாடி முன் அமருமுன் அமைதியான நீண்ட கரங்களை விளக்கொளிமேல் விரித்து உஷ்ணப்படுத்திக் கொண்டான் 

"பனியில் உனக்குக் குளிரவில்லையா." 

10 SE] 

"சில நேரங்களில்" என்றேன். "இப்போது உனக்கு குளிராய் இருக்கணுமே." 

ஏன் தனிமையில் இருக்க முடிவதில்லை என்பதை உடனே புரிந்து கொண்டாள் நிலவிய உறையும் பனிதான் தனிமையின் உண்மையைப் புலப்படுத்தியது. 

"இப்படி உணர்கிறேன்." 

"அவ்விந்தைதான். காரணம் இரவின் அமைதி. நாற்காலியின் இருக்கை காரணமாக இருக்கலாம்" என்றாள். 

13 

அவள் பேசவில்லை. மீண்டும் கண்ணாடியை நோக்கி நகர்ந்தாள், நாற்காலி திருப்பி முதுகைக் காட்டியபடி சுவர் நோக்கி அமர்ந்தேன். நேராகப் பார்க்காமலோ என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை உணர முடிந்தது. மீண்டும் வட்டக் கண்ணாடி முன் அமர்ந்தாள். அதில் பிரதிபலித்த என் முதுகுப் பகுதியைப் பார்த்தாள். விரல்களால் பிம்பத்தைத் தீண்ட முயன்றாள். விரல்கள் பிம்பத்தை ஒருமுறை தீண்டும் கால அவகாசத்துக்குள் அவள் பார்வையானது பிரதிபலித்த பிம்பத்தின் பல ஆழங்களைக் தீண்டி மீண்டது. பிம்பத்தை நோக்கி மீண்டும் கரங்களைச் செலுத்தும் முன் அவள் உதடுகள் ரத்தச் சிகப்பாகி இருந்தன என் முன். இருட்டுக் கண்ணாடி போன்ற சுவர்தான் இருந்தது. அதில் அவள் பிம்பத்தைக் காண முடியாது. எதையும் பிரதிபலிக்காது. ஆனால் கண்ணாடி என நினைத்து அதனுள் அவள் பிம்பப் பிரதிபலிப்புகள் கற்பனையில் சிருஷ்டி கொள்ள முடிந்தது "உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். முகத்தை உயர்த்துவதாகவும் கண்ணாடியில் பிரதிபலித்த என் பின்பகுதியில் பார்வையைச் செலுத்தியதாகவும் என் இருட்டுக் கண்ணாடியில் கண்டேன். அவள் பார்வை மார்புக் கச்சையில் பதிந்தது. பிம்பத்தின் ஆழத்தில் சுவர் மீது நோக்கியிருந்த என் முகம் பிரதிபலிப்பதைக் கண்டேன். இமைகளைக் கீழிறக்கி ஸ்தனங்களில் பார்வை பதித்ததைக் கண்டேன். அமைதி காத்தாள். 

"உன்னைப் பார்க்கிறேன்." 

பார்வையை மீட்டு "சாத்தியமில்லை" என்றாள். ஏனென்று கேட்டேன். 

மீண்டும் பார்வையை ஸ்தனங்களில் பதித்து "உன் கண்கள் சுவரை நோக்கியுள்ளன" என்றாள். 

சிகரெட்டை வாயில் கவ்விக் கொண்டேன். கண்ணாடியை நோக்கித் திரும்பிய போது விளக்கின் பின்பக்கமாக நின்று கொண்டிருந்தாள். கைவிரல்களை விளக்கொளியின் மீது விரித்திருந்தாள். சேவலின் இறக்கைகள் போலப் புலனாயிற்று. சூடேறிய விரல்களால் முகத்தைக் கதகதப்பாக்கினாள். "பனியில் முழுவதும் விறைத்துவிடப் போகிறேன்" என்றாள். 

"இது பனி நகரமாகத்தான் இருக்க வேண்டும்." முகத்தைப் பக்கவாட்டாகத் திருப்பினாள். செம்பொன் நிற முகம் கவலையால் கறுத்திருந்தது. 

"ஏதாவது செய்" என்றாள். 

ஆடைகள் ஒவ்வொன்றாகக் களையத் தொடங்கினாள். "மீண்டும் சுவர் நோக்கி அமரப் போகிறேன்" என்றேன். 

"இல்லை. எப்படியானாலும் நீ பின்புறமாகத் திரும்பி இருந்தாலும் என்னைப் பார்க்காமலிருக்க முடியாது." இப்போது முழு நிர்வாணமானாள். செம்பொன் நிற உடலில் ஒளி நெளிந்து பரவியது. 

16 

"தாக்குதலால் ஏற்பட்டது போன்ற தழும்புகள் நிறைந்த அடிவயிற்றை இந்நிலையில் பார்க்க விருப்பம் தான்." நிர்வாணக் கோலத்தில் சிக்குண்டவன் அதை அறியுமுன்பே வார்த்தைகளைக் குளறினேன். அசைவற்றிருந்தாள். கைவிரல்களை கூம்பு போல் அமைத்து ஒளியில் சூடேற்றிக் கொண்டிருந்தாள். 

"உலோக மூலகத்தால் படைக்கப்பட்டவளோ நான் என சில நேரங்களில் நினைப்பதுண்டு" சிறிது சலனமற்று நின்றிருந்தாள். விளக்கொளியின் மீது விரிந்த கரங்கள் அசைந்து கொண்டிருந்தன. "காட்சியகங்களில் உள்ள சிறிய பித்தளைச் சிலையோ நீ என மற்ற கனவுகளில் சிலநேரம் நினைப்பதுண்டு. பனியில் உறைவதாக நீ உணர்வதற்கு அவகூடக் காரணமாக இருக்கலாம்." 

"சில நேரங்களில் ஆழ்ந்து தூங்கும் போது என் உடல் வெற்றுக் கூடாக மாறுவதாகவும் தோல் உலோகத்தகடு போல் இறுகுவதாகவும் உணர்கிறேன். எனக்குள் ரத்தம் துடிப்பதை இரைப்பைக்குள் யாரோ தட்டி அழைப்பதாக படுக்கையில் உணர்கிறேன் - உலோகம் போர்த்திய - என நீ அழைப்பது போல" என்றாள். 

"அந்த சப்தத்தை உணர விரும்புகிறேன்" என்றேன். 

"கொடுத்து வைத்திருந்தால் நான் இடப்பக்கமாகப் படுத்துறங்கும்போது உன் முகத்தை என் இடுப்பு வளைவில் பதித்து எனக்குள் எதிரொலிக்கும் உலோகத்துடிப்பை உணரலாம். நீ அவ்வாறு செய்யவே என்றும் விரும்புவேன்." பேசியதால் அவள் சுவாசம் சிறிது திணறியது. பல ஆண்டுகளாக வேறு எதையும் செய்யவில்லை என்றாள். சூட்சும வார்த்தைகள் மூலம் என்னை அடையாளம் காண்பதற்காக அவள் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. நீல நாயின் கண்கள். அவள் நடவடிக்கைகளை ஒருவன் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய பகல் பொழுதுகளில் அந்த வார்த்தைகளை உரக்கக் கூவியபடியே தெருக்களில் திரிந்தாள். 

"நான் மட்டுமே உன் கனவுகளில் தினமும் பிரசன்னமாகிறவள்" சூட்சுமம். "நீல நாயின் கண்கள்." உணவு விடுதிகளுக்குச் சென்று ஆர்டர் கொடுக்கும் முன்பு வெயிட்டர்களிடம் நீல நாயின் கண்கள் எனக் கூறுவதாகச் சொன்னாள். ஆனால் அவள் கனவில் ஒரு போதும் வராத அவர்கள் மரியாதையாக தலை குனிந்தபடி நின்றனர். உணவு மேஜையின் மீது சாப்பாட்டுக் கத்தியினால் கீறினாள். நீல நாயின் கண்கள். தங்கும் விடுதிகளின் உஷ்ணமேறிய ஜன்னல்கள், ரயில் நிலையங்கள், அரசாங்கக் கட்டிடங்களின் தூசு படிந்த சுவர்களில் ஆள்காட்டி விரலால் எழுதினாள். நீல நாயின் கண்கள். கனவில் நான் பிரசன்னமான ஓரிரவுக்குப் பின்பு அவள் அறையில் பரவிய அதே மணம். அவள் பார்மஸிக்குச் சென்றபோது அங்கும் அதே மணம் வீசியதாகக் கூறினாள். 

அருகில்தான் இருக்க வேண்டும் நான் என நம்பினாள். பார்மஸியின் விற்பனை மேஜை சுத்தமாக புத்தம்புதிய பளிங்குகளால் பளபளத்ததைக் கண்டாள். கணக்கு எழுதிக் கொண்டிருந்தவனிடம் சொன்னாள். "நீல நாயின் கண்கள் எனக்கூறும் ஒருவனை தினமும் கனவு காண்கிறேன்." அவள் கண்களை ஊடுருவி நோக்கினான். 

"உண்மையில் உன் கண் தான் போல் இருக்கிறது." 

"என் கனவுகளில் சூட்சுமம் அவிழ்க்கும் அவனை நான் கண்டாக வேண்டும்" என்றாள் அவன் சிரிப்பை அடக்க மாட்டாமல் எதிர்ப்பக்கமாகச் சென்று விட்டான். மேஜை மீது உதட்டுச் சாயத்தால் கிறுக்கினாள், நீல நாயின் கண்கள். திரும்பி வந்த அவன் மேஜையை அசுத்தப்படுத்தியதாகக் கோபித்தான். கத்தை பழைய துணியைக் கொடுத்து "மரியாதையாக சுத்தமாக்கி விடுங்கள்" என்றான். விளக்கின் அருகில் நின்று சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பகல்பொழுதில் நீல நாயின் கண்கள் என மீண்டும் முணுமுணுத்தபடி நான்கு மணி நேரம் பார்மஸி மேஜையை சுத்தம் செய்ததை கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துப் பைத்தியம் என்றது. 

இப்போது பேசி முடித்திருந்தாள். அந்த மூலையில் நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தேன். "உன்னை அடையாளம் காணும் சூட்சும் வார்த்தைகளை நினைவு கொள்ள முயற்சிப்பேன் காலை தோறும்" என்றேன். 

"இப்போது வார்த்தைகள் நாளையும் மறந்து விடும் என்ற அவநம்பிக்கை இல்லை. ஆனால் காலையில் கனவு கலைந்து விழித்தெழும் போது வார்த்தைகளை ஒரு நாளும் நினைவு கூர முடிவதில்லை ." 

அவள் சொன்னாள். "அந்த முதல் நாளில் அவற்றை நீயாகவே கண்டு கொண்டாய்." 

"ஆம். உனது அந்தக் கண்களைக் காணும் போது நினைவு கொள்ள முடியும். ஆனால் மறுநாள் விழிப்பில் கண்டு கொள்ள முடியாமல் போகிறது." 

கை முஷ்டிகளை இறுகக் கோர்த்தபடி விளக்கின் பக்கவாட்டாக வந்து சொன்னாள். "குறைந்த பட்சம் அவற்றை எந்த நகரத்தில் எழுதினேன் என்றாவது நினைவு கொள்ளப் பார்." 

சரம் போன்ற அவள் பல்வரிசை விளக்கொளியில் மின்னியது. "உன்னைத் தீண்ட ஆவலாக உள்ளேன்." 

முகம் சுடரொளியின் மீது உயர்ந்தது. செம்பொன் நிற மேனி போல் சுழல ச ஜொலிக்கும் சுடரை நோக்கினாள். அவள் உடல் போன்றே சுய ஒளி கொண்டிருந்த, அமைதியான நீண்ட கரங்கள் போல் உயர்ந்து எரிந்தது. அந்த மூலை நாற்காலியில் கொண்டிருந்த என் மீது பார்வை விழுவதை உணர்ந்தேன். "நீ அதைப் வேண்டியதில்லை" என்றாள். 

"இப்போது சொல்கிறேன். இதுதான் உண்மை" என்றேன். 

விளக்கின் மறுபக்கமிருந்த அவள் சிகரெட் கேட்டாள். என் விரல்கள் கவ' சிகரெட்டைக் காணோம். கரைந்து உதிர்ந்திருந்தது. சிகரெட் 1 கொண்டிருந்ததையே மறந்து போனேன், 

கரெட் புகைத்துக் 

18 

"வார்த்தைகளை எந்த நகரத்தில் எழுதினேன் என்பதைக் கூட ஏன் நினைவு மல'' '' முடிவதில்லை ." 

"அதே காரணத்தினாலேயே விழிப்பின் போது என்னாலும் அவற்றை நினைவுபடுத்திக் கொள்ள முடிவதில்லை" என்றேன். 

"இல்லை. சில நேரங்களில் அதிகமாக கனவு காண்கிறேன்" என்றாள் சலிப்புடன். 

எழுந்து விளக்கு நோக்கி நகர்ந்தேன். அதனருகில் இருந்தாள். கையில் தீப்பெட்டி, சிகரெட்டுடன் அணுகினேன். சிவந்த உதடுகளால் சிகரெட்டைக் கவ்விக் கொண்டாள். தீப்பெட்டியால் அவளுக்கு உதவுமுன்பே குனிந்து விளக்குச்சுடரில் பற்ற வைத்துக் கொண்டாள். 

"இந்த உலகின் சில நகரங்களின் அனைத்து சுவர்களிலுமே அந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கக் கூடும்" என்றேன். 

"நாளை அவை நினைவுக்கு வந்தால் நிச்சயம் உன்னை அடையாளம் காண்பேன்' என பதிலளித்தாள். முகத்தை மீண்டும் உயர்த்தினாள். இப்போது கனல் உதடுகளுக்கு இடையில் "நீல நாயின் கண்கள்." "இப்போது என்னை உஷ்ணப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று ஏதோ சொன்னாள். அரைத் தூக்கத்தில் குரல் உறைந்து போன நிலையில் பேசினாள். காகிதத்தில் ஏதோ எழுதி ஜ்வாலையின் மீது படித்தாள். 

"உஷ்ணப்படுத்திக் கொள்ள-" 

காகிதம் முழுதும் சாம்பல் ஆகுமுன் படித்து முடித்தேன். "-வேண்டும்." சாம்பல் தரையில் உதிர்ந்தது. 

"மிக்க நன்றி." 

"அதிக ஒளியில் உன்னை இன்னும் நன்றாகக் காண முடிகிறது. சுடரின் பக்கவாட்டில் நடுங்கிக் கொண்டிருக்கிறாய்." 

ஒருவரை ஒருவர் பல வருஷங்களாகச் சந்தித்துக் கொண்டிருந்தோம். சில நேரங்களில், கூடியருந்த நிலையில், வெளியே, ஒரு கரண்டி கீழே விழுவது வழக்கமாயிருந்தது. உடனே விம்மித்துக் கொண்டோம். எளிமையான சிறு நிகழ்வுகள் மூலம் நட்பு பிணைக்கப் பட்டிருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டோம். அதிகாலையில் கரண்டி எழுப்பும் சப்தத்துடன் எங்கள் சந்திப்புகள் முடிந்து போய்க் கொண்டிருந்தன. 

இப்போது ஒளியில் தீவிரமாக என்னை நோக்கிக் கொண்டிருந்தாள். கடந்த காலத்திலும் சாம்பல் பூத்த கண்களும் ஆவல் நிறைந்த முகமும் கொண்டு பின் கால்கள் சிதைந்த நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்ததை இவ்வாறுதான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். 

இந்தக் கனவில்தான் முதல் கேள்வியாகக் கேட்டேன். "நீ யார்." "எனக்கு ஞாபகம் இல்லை ." "முன்பே சந்தித்ததுண்டு என நினைக்கிறேன்." "என்ன விந்தை ." 

சிகரெட்டிலிருந்து இரண்டு முறை புகையை இழுத்தாள். நின்று கொண்டிருந்தே பார்வை அவள் மீது பதிந்திருந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையில் பதிவு பெற்றது. செம்பொன் நிறம் மாறவில்லை. உறைந்த உலோக மினுமினுப்பில் வேறுபாடில்லை. மஞ்சள் பாரித்த மிருதுவான ஒளி கசியும் சிறிய சிலை. 

"உன்னை ஸ்பரிசிக்க ஆவலாயுள்ளது." 

"நீ எதையும் அப்புறப்படுத்தலாம்." 

"அதுவல்ல விஷயம். நான் செய்கிற செய்த காரியங்கள் தலையணையில் புகுந்து கொண்டு அடுத்த கனவில் நினைவூட்டுகின்றன." 

ஒளியின் மீது இப்போது கைகளை விரித்தேன். அவளிடம் அசைவில்லை. விரல்களால் அவளைத் தீண்ட முயன்றேன். விரல்கள் கீறும் இடைவெளியில் "நீ எதையும் அப்புறப்படுத்தலாம்" என்றாள். 

"விளக்கைச் சுற்றி பின்புறமாக இங்கு நீ வந்தால் உலகின் எந்தப் பகுதியிலும் போல் துயில் எழலாம்." 

"அதுவல்ல விஷயம்." 

"தலையணைகள் மீண்டும் சந்திப்புகளை ஏற்படுத்தத்தான் செய்யும். ஆனால் மறு உதயத்தின் போது யாவும் உன் நினைவிலிருந்து மறையும்." 

மீண்டும் உஷ்ணப்படுத்திக் கொண்டாள். என் மூலைக்கு நகர்ந்தேன். நாற்காலியை அடையுமுன் அவள் குரலைப் பின்னால் உணர்ந்தேன். "நடுநிசியில் விழிப்பு ஏற்பட்டு படுக்கையில் புரண்டு முட்டிகள் நோகம் அளவு அழுந்தி விடியும் வரை சூட்சும் வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பேன்." 

என் முகத்தின் எதிரே மீண்டும் சுவர். அவளைப் பார்க்கவில்லை. "உதயம் ஆரம்பமாகிவிட்டது" என்றேன். 

இரண்டடிக்கும் போது விழித்துக் கொண்டாள். "நீண்ட தனிமை மிஞ்சும்" என்றாள் 

கதவை நோக்கி எழுந்தேன். கதவின் கைப்பிடியைப் பற்றிய போது அம்? மாற்றமில்லாத குரல். "திறக்காதே. பாதை முழுதும் சிக்கலான கனவுகள்." 

80 

"உனக்கு எப்படித் தெரியும்." 

"இதயத்தில் ஆழும் துக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் கணம் ஒன்று. விழிப்பு நெருங்கும் போது கணத்தை உணர்வேன்." கதவைப் பாதி திறந்திருந்தேன். மேலும் சற்று நகர்த்தினேன். தோட்டத்து மண் மணம் சில்லென்று நூலிழையாகத் தீண்டியது. மன்" பேசினாள். கைப்பிடியிலிருந்து கரங்களை அகற்றாமல் திரும்பினேன். "அறைக்கு வெள்ளம் முற்றமோ தோட்டமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கிராமத்தின் காற்று தொடுகிறது" என்றேன். 

"உன்னை விட எனக்கு நன்றாகத் தெரியும். கனவுக்கு வெளியே ஒருத்தி காத்திருக்கிறாள்" என்றாள். தீயின் உஷ்ணத்தை உள்ளங்கையால் அள்ளியவாறே "நகரத்துடன் பிணைக்கப் பட்டவள். அவளாசை கிராமத்தில் வீடு. ஆனால் நகரத்தை விட்டு நகரவே முடியாதவள்" எனத் தொடர்ந்தாள். 

முந்தைய கனவுகளில் கண்டவள் தான். அரைமணி நேரமே உள்ளது கீழே சென்று காலை உணவை முடிக்க என்பதை அறிவேன். 

(HTTI 

"விடை பெறும் நேரம் வந்து விட்டது. விழிப்புத் தட்டும் நேரம்." 

வெளியே காற்று சுழன்றது. சிறிது அமைதி. ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தவளின் மூச்சுக் காற்றின் சலனத்தை உணர முடிகிறது. வயலில் இருந்து வந்து கொண்டிருந்த காற்று நின்றது. எதன் மணமும் இல்லை. புன்னகை எதுவும் நிகழவில்லை. "நாளை அடையாளம் காண்பேன்." "தெருவின் எங்கோ மூலையில் ஒருத்தி சூட்சும மந்திரத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது நிச்சயம் உன்னை அடையாளம் காண்பேன்" என்றேன் மீண்டும். 

அடைய முடியாததன் தவிப்பு, இயலாமை இவற்றால் பூத்த சிறு புன்னகையுடன் சொன்னாள்: "மேலும் பகல் பொழுதுகளில் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டாய்." 

விளக்கின் மீதிருந்த கரங்களை அகற்றிவிட்டு மேகங்கள் மறைத்த இருளில் கரைந்தாள். "கனவில் கண்ட எதையும் விழிப்புக்குப் பின் கொள்ளாத ஒரே ஆள் நீ." 

தமிழில் - அப்பண சாமி 
*******************88


அசையும் மொழி ஏதோ ஆடியில் -
தமிழில் - பால் பிரகாஷ் 

விடிகாலைப் பிரச்னைகளும் குழப்பங்களும் பற்றிக் கவலைப்படாது அறைன. ஆக்கிரமித்த மனிதன் நீண்ட தூக்கம் கழிந்து கடந்துவிட்ட காலை நகரத்தின் அடி சப்தங்கள் பாதி திறந்துவைக்கப்பட்ட அறைக்காற்றோடு கலந்தபோது விழித்தான். 

நினைத்திருப்பான் - வேறெந்த நினைவும் மனதைக் கொள்ளை கொள்ள வில்லை - சகோதரனின் நாவுக்குக் கீழ் - புதையுண்ட் பிடிமண்ணில் தன்உருக் காண மரணத்தின் கூட்டங்களுக்குள் நடுங்கினான். வெளியில் தோட்டத்தைச் சுத்திகரித்துக்கொண்டிருந்த கரி அவன் தன்னிருப்பின் பயத்தை விடவும் சற்று லேசான வாழ்வின் புறநிகழ்வுக்கு இட்டுக் சென்றது. 

சாதாரண மனிதனாக வாழ்வை நோக்கி ஜந்துவாக மாறிவிடும் வாழ்முறையில் பூர்ஷ்வாவாக என்றுமே உறங்க முடியாது என நரம்பு மண்டலத்தின், மாற்றப்படக்கூடிய ஈரலின் துணையின்றியே புலப்பட்டது. அலுவலகத்தின் பொருளாதாரப் புதிர்கள் பூர்ஷ்வாக் கணிதமுறையின் நாப்பிறழவைக்கும் எண்களுடன் சம்பந்தப்பட்டவைதாம் என நினைத்தான், 

8:12. நிச்சயம் தாமதம். விரல் நுனிகளை கன்னத்தின் மேல் ஓடவிட்டான். கட்டை முடிவிதைத்த முரட்டுக்கன்னத்தின் முரட்டு முடிகளை டிஜிட்டல் உணர்கொம்பு விரல்கள் மூலம் நீவினான். உடல்கட்டியின் கருவை அமைதியாக ஆராயும் ரண சிகிச்சை மருத்துவராக பாதிதிறந்த உள்ளங்கையில் குழப்பமான முகத்தை உணர்ந்தான். அதிலிருந்து உள்நோக்கி மழிக்கப்பட்டிருந்த பரப்பிலிருந்து அழுத்தமான பொருளின் உண்மை எழுந்தது. சமயங்களில் பதற்றத்துடன் அவனை வெளிறச் செய்தது. விரல்நுனிகளுக்கு அடியில் பின்னால் எலும்போடு எலும்பாக எலும்புகளின் இயற்கையான முடிவுகளின் உயரத்தில் இல்லாமல் சற்று தாழ்வாகவே சதைக் கவசங்கள் இறுகப் பின்னப்பட்ட பிரபஞ்ச இழைகளால் - என்றுமே மாறாத உடல்வாகின் நிலை - ஒழுங்கான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. 

ஆம். மென்மையான தலையணைக்குமேல் புதைந்து உடல் உறுப்புகளின் ஓய்வில் உறங்கி வாழ்வு கடைக்கோடான சுவையுடன் தன் கோட்பாடுகளை வெகுவாக அரவணைத்தது. அவனுக்குத் தெரியும் சிறு முயற்சியுடன் கண்களைச் சற்று மூடினால் எந்தத் தேவையுமின்றி அதை எட்டும்போது ரசாயன சாகஸம் உடலில் சிறு ஊனம் ஏற்படுத்தும். காத்துக் கொண்டிருக்கும் முடிவற்ற சலிப்பூட்டும் வேளைகள் குழப்பமில்லாமல் காலம் வெளியுடன் சமரசம் கொள்ளா நிலையில் தீர்மானிக்கப்படும். இதற்கு மாறாக கண்களை மூடும்போது சக்தியெல்லாம் பாதுகாக்கப்பட்டு உறுப்புக்களின் தேய்மானம் இல்லாமல் உடல் கனவு நீரில் மூழ்கி மிதப்பதும் வாழ்வதுமாக இருப்பின் மற? வடிவங்கள் நோக்கி நகர்த்தும் எதார்த்த உலகின் அளவுக்கு ஆழ்ந்த தேவையுடன் சேதமின்றி வாழ்வுக்கான அசைவுகளின் கனத்தோடு லகுவாக நீந்திச் சென்றது. 

அவ்வாறிருக்கும்போது மற்றவர்களுடன் வாழ ஏற்படும் வேளைக' 

-ன் வாழ ஏற்படும் வேளைகள், சங்கடங்கள், அசைவுகள் எதார்த்த உலகில் எப்படி நடந்து கொள்கிறோமோ அது இப்போது மிக லகுவாக அமையும் சவரம் செய்வதும் பஸ் பிடிப்பதும் அலுவலகப் புதிர்களும் கனவுகளில் லேசாகவும் குழப்பம் எதுமின்றி தெளிவான விடைகளுடன் இறுதியில் மிகுந்த மன நிம்மதியைத் தரும். 

ஆம். இப்பொழுது இருக்கும் செயற்கைவழியில் செல்வது நல்லதாகும் - விளக்கு ஒளிரும் அறையில் பார்வை கண்ணாடியின் திசை நோக்க. கன எந்திரத்தின் முரட்டு அபத்த சத்தம் * சைக்கிடா விட்டால் அவ்வாறே கனவாரம்பத்தில் வெதுவெதுப்பான குழம்பில் நந்தி கொண்டிருப்பான். மரபுவாழ்க்கைக்குத் திரும்பும் போதெல்லாம் பிரச்னை பொறுமையின் கறுகளை அதிகம் கொண்டமைந்தது. இருப்பினும் இந்த விந்தையான தத்துவம் அவனுக்குள் எற்படுத்திய மென்மையின் காரணமாகப் புரிதலின் தளத்திற்கு இட்டுச் சென்று உடம்பிலிருந்து சற்றே வாய் விலகி சிறுபுன்னகை ஓரத்தில் மலர்ந்தது. 

இருபது நிமிஷங்களுக்குள் என் புத்தகங்களை முடிக்க வேண்டிய தருணத்தில் சவரம் செய்ய வேண்டியிருந்தது. குளிக்க எட்டு நிமிஷம். முயன்றால் ஐந்து நிமிஷம். காலை உணவுக்கு எழு நிமிஷம். ருசியற்ற பழைய ஸாஸேஜ். மேபலின் கடை மளிகை சாமான், இரும்பு, மருந்து, மதுவகை. யாருடைய பெட்டியைப் போலவோ இருந்தது. நான் அந்தப் பெயரை மறந்து விட்டேன் செவ்வாய்க்கிழமை பஸ் பிரேக்டவுன் ஆகும், ஆகவே ஏழு நிமிஷம் தாமதமாகும். பெண்டோரா. இல்லை.. பெல்டோரா. அதுவுமில்லை. மொத்தத்தில் அரைமணி நேரமாகி விட்டது. நேரம் எதுவும் பாக்கியில்லை. எல்லாவற்றையும் உள்ளடக்கிய பெயரை மறந்துவிட்டேன். பெடோரா. அப்பெயர் P எழுத்தில்தான் ஆரம்பமாகும். 

தலைவாராமல் சவரம் செய்துகொள்ளாமல் குளியல் உடையில் வா பேசின் முன்னால் சென்றபோது கண்ணாடியுள்ளிருந்து சலிப்பூட்டும் பார்வையைப் பெற்றான். அவ்வுருவத்திலிருந்து இறந்துபோன சகோதரன் புதிதாக எழுவதுகண்டு உடம்பை உலுக்கியது. அதே சோர்வுற்ற முகம் முழுவதும் விழிப்படையாத அதே பார்வை. 

புதிய அசைவு கண்ணாடிக்குச் சற்று வெளிச்சத்தை அனுப்பியது. உருவத்தில் லாகவ முகத்தோற்றத்தை ஏற்படுத்தியது. ஒளிதிரும்பிச் சென்றவுடன் திட்டங்களுக்கு எதிராக முகம் சுழித்த உருவம் காணப்பட்டது. தண்ணீர். விசையுடைய நிறைவான வெப்ப நீரோட்டத்தின் மூலம் எழும்பிய வெள்ளலை, அடர்ந்த நீராவி அவனுக்கும் கண்ணாடிக்குமான இடத்தை நிரப்பியது. வேகமான அசைவின் மூலம் இடைஞ்சலைப் பயன்படுத்திக்கொண்டு பாதரசத்திற்குள் மறைந்திருக்கும் காலத்தை வைத்துத் தன் காலத்தையும் சரிசெய்து கொண்டான். சவரக்கத்தி மாட்டப்பட்டிருந்த தோள்பட்டைக்கு மேல் எழுந்து கண்ணாடியை காதின் நுனிகளாலும் குளிர்ந்த உலோகத்தினாலும் நிரப்பினான். நீராவி மேகம் உடைந்து பனிபடர்ந்து தெளிவற்ற பௌதீகக் குழப்பங்கள் நிறைந்த முகத்தை காட்டியது அவனுக்கு. கணித விதிகளை வைத்து ஜியோமிதி வெளிச்சத்தின் கொள்ளளவுக்கு தெளிவான சூத்திரத்தைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்து கொண்டிருந்தது. எதிரில் நீராவி குளிர்ந்து சற்று 

தெளிவாக்கிய நீர்த்துளிகளுடன் இருந்த கண்ணாடியில் தன்னிருப்பால் துடித்துக் கொண்டிருக்கும் அந்த முகம் அதே சமயத்தில் தீவிரமான புன்னகையுடன் காணப்பட்டது. 

அவன் சிரித்தான் (அது சிரித்தது). தனக்குத்தானே நாக்கைக் காட்டிக் கொண்டான் (நிஜமானதுக்கு நாக்கைக் காட்டிக்கொண்டது). கண்ணாடியில் இருந்தவனுக்கு மஞ்சள் நிறப்பசை நாக்கு இருந்தது. "உனக்கு வயிற்றுக் கோளாறு உள்ளது" என கணித்தான் (வார்த்தையற்ற பாவனை). மீண்டும் சிரித்தான் (மீண்டும் சிரித்தது). திருப்பி அளிக்கப்பட்ட சிரிப்பின் செயற்கை, முட்டாள், போலித்தனங்கள் இருப்பதைப் பார்க்க முடிந்தது. வலதுகையால் தலையை வருடினான் (இடதுகை தலையை வருடியது). நாணமுள்ள சிரிப்பை வெளிப்படுத்தினான் (மறைந்தது). கண்ணாடி முன் நின்று முட்டாள்தனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நடவடிக்கையை எண்ணி வியப்படைந்தான். இருப்பினும் எல்லோரும் கண்ணாடி முன் நடந்து கொள்வார்கள், கோபம் மடத்தன உலகத்தைக் காட்டிலும் சரியென எண்ணி மலினத்துக்கு ஈடாக செய்கைகளை அள்ளி வழங்கினான். 

8.17, ஏஜன்ஸியில் வேலைபார்க்க வேண்டுமென்றால், விரைவாகச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தான். ஏஜன்ஸியே சிறிது காலமாக இவனின் தினச் சவ ஊர்வலத்திற்க்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. பிரஷ்ஷில் ஒட்டிக்கொண்ட சவரக்களிம்பு நீலநிற வெண்மைக்கு மாறியதும் அவனைக் கவலையிலிருந்து மீட்டு வந்தது.ரத்தக் குழாய்களின் மூலம் உடலிலிருந்து வெளிப்பட்ட நுரைகள் சகல உறுப்புகளையும் சரியாக இயங்க வைத்தன. மீண்டும் சாதாரண நிலைக்கு வந்து குழம்பிப்போன மூளையில் மேபில் கடையை ஒப்பிட்டுப்பார்க்க வார்த்தையைத் தேடினான். பெல்டோரா. மேபிலின் தேவையற்ற பொருட்கள் நிறைந்த கடை பால்டோரா.தேவையான உணவுப்பொருட்கள் அல்லது போதை வஸ்துகள் அல்லது எல்லாமே ஒரே நேரத்தில்.. பெண்டோரா. 

குவளை நிறைந்த நுரை. சந்தோஷத்துடன் பிரஷ்ஷைத் திரும்ப உரசிக் கொண்டிருந்தான். சோப்புக்குமிழ்கள். பெரிய குழந்தைக்குச் சந்தோஷத்தைத் தருவதான கடினமான இறுகிப்போன மலிவான மதுவேயான அவன் இதயத்தைப் பற்றியன. வார்த்தை நழுவும் நினைவுகளின் அவ்வேளையில் குழப்பமான நீரிலிருந்து எழுந்திருக்க முடியும். ஆனால் அந்நேரமற்ற நேரங்களை சிதறுண்ட ஒழுங்கமைப்பு ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபடாமல் சிதறிப்போய் நின்று அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்கும் எண்ணத்தையே கைவிடச் செய்தது. பெண்டோரா! 

பயனற்ற சோதனையை விட வேண்டிய நேரமும் வந்தது. விழிகளை உயர்த்தி பரஸ்பரம் இரட்டைச் சகோதரனை சந்தித்துக்கொண்டதுதான் காரணம். பிரஷ் நுரையால் தடையை வெளிர் நீலத் தன்மை கொண்டு மூட இரட்டைச்சகோதரனின் இடதுகை நகர தன் வலதுகை துல்லியமாக வழுக்கிக்கொண்டு குறிப்பிட்ட பிரதேசம் முடிய பாவனை செய்தது. திரும்பிப் பார்த்தபோது கடிகாரத்தின் ஜியோமிதிக் கைகள் துயரத்தின் புதுச்சூத்திரத்தைக் காட்டுவதாகத் தோன்றின. 8.18... ரொம்பவும் மெதுவாக இயங்கினான். இயங்கும் 

11 

கண்டுவிரலின் கைப்பிடிக் கொம்பு சட்டென மதிக்க முடிக்கும் இலக்கு. சிலர் """"""""" பற்றினான். 

முடிய மூன்று நிமிஷம் எனக் கணக்கிட்டு வலதுபுறத்தை (இடதுபுஜம்) வலது காது அளவுக்கு (இடதுகாது) தூக்கினான். செய்கையில் கண்ணாடி, உருவம் சவரத்துக்கு க டப்படுவதாக தான் படக்கூடாது என்பதைக் கவனித்தான். 

முன் பின் அசைவுகொண்டு அசைவை உடன் நகல்செய்யும் ஒளியின் வேகத்தை சோதித்துப்பார்க்கும் இலக்குடன் சிக்கலான கணிதமுறைகளை தொடராகக் கணித்தான். சோதித்தறிந்த வேகத்தின் வர்க்க மூலத்தின் அளவோ என நடந்த போராட்டத்தின்பின் உள்ளிருந்த அழகியக்கம், கணிதவியல் மற்றும் கலைச்சிந்தனை தாண்டி.. மெல்லிய ஒளியின் பல்வித ஸ்பரிசங்கள் பச்சை நீல நிறமடித்த கத்தியின் அசைவுகளை நோக்கி நகர்கின்றன, கணிதவியல் நிபுணனும் அழகியல்வாதியும் இப்படியாகத்தான் சமாதான மா னார்கள். விளிம்பை வலது கன்னத்துக்குக்கீழ் (இடது கன்னம்) உதட்டின் நடுக்கோட்டுக்கு கொண்டு வந்து பிம்பத்தின் இடது கன்னம், நுரைமுனைகளுக்கு இடையில் பளிச்செனத் தெரிவதால் திருப்தி அடைந்தான். 

கத்தியைக் கழுவி உதறுமுன்பே புகையுடன் கறிவறுக்கும் வாசனை கசப்பாக வளரத் துவங்கியது. நா அடியில் துடிப்பையும் சூடான கொழுப்பின் சுவைசக்தி வாயை நிரப்புகிற உமிழ்நீர் ஊற்றைக் கொணர்ந்தான். வறுத்த சிறுநீரகங்கள். * இறுதியாக மேபலின் வெட்கம் கெட்ட கடையில் மாற்றம். பெண்டோரா. அதுவுமல்ல, ஸாஸின் மத்தியில் சுரப்பியிலிருந்து காதைக் கிழித்த சத்தம் பெய்தடிக்கும் மழையின் நினைவை அன்றுள்ள காலைப்பொழுதேயான தாக மூட்டியது. ரப்பர் காலுறைகளையும் மழைக்கோட்டையும் மறக்கக்கூடாது ஆகவே, மிதக்கும் குழம்பில் சிறுநீரகங்கள் தான், சந்தேகமில்லை. 

எல்லாப் புலன்களின் மோப்பத்தின் மீதுதான் அவநம்பிக்கை அவனுக்கு ஐம்புலன் தாண்டி சுரப்பியின் உற்சாகத்தைவிட அப்படியொன்றும் பிரமாதமில்லாமல் விருந்து போய்விட்டபோதிலும் உடன் முடிக்க வேண்டியதே ஐம்புலன் காட்டிய நோக்கமாக இருந்தது. 

உள்ளிருந்த கணிதவியல் நிபுணனும் கலைஞனும் தன் திறமையை துல்லிய லாகவத்துடன் காண்பிக்க கத்தியின் பின்னால் (முன்னால் முன்னாலும் பின்னால்) வலது கடைவாயை (இடது) இடதுகையில் (வலதுகை) கன்னத்தை வருடி உ.லோகத்தின் கூர்முனை செல்லும் பாதையை அமைத்து முன்னிருந்து (பின்னிருந்து பின்னும் முன்னும் மேலும் (மேலும்) கீழும். உடன் முடித்தான் மூச்சுத்திணறலுடன் முடிக்கும்போதுதான் வலது 65கயால் இடது கன்னத்தில் கடைசி வருடலை செய்ய முழங்கை கண்ணாடிக்கு எதிரில் இருப்பதைக் கண்டான். பெரிதும் விந்தை கொண்ட தெரியாததை வியப்புடன் பார்க்கையில் பெரிதான கண்கள் அறியாதவையாய் கத்தியின் திசைநோக்கி வெறிகொண்டு (தேடி.ன யாரோ 

இரட்டைச்சகோதரனைத் தூக்கிலிடமுயல்கிறார்கள். சக்தி வாய்ந்தபுஜம். ரத்தம்! அவசரக்.. கிளம்புகையில் நடந்து விடுவதுதான். 

முகத்தில் தொடர்பான இடத்தைத் தேடினான். ஆனால் விரல்கள் சுத்தமாக, ஸ்டரி... தொடர்ச்சியின் தீர்வு ஏதுமின்றி இருந்தனவே. தோளில் காயம் இல்லை. கண்ணாடியிலே ரத்தம் கசிந்தவன், 

கடந்த இரவின் பதற்றம் திரும்பவும் எரிச்சல் உள்ளே நிஜமாக, விரியும் பிரக்ஞையாக ஆனால் தாடையிலிருந்து (ஒன்றேயான உருண்டை முகங்கள் ) உருவத்தின் அவசர பாவனையின் மீது கவலைத்திரை மேகம் கவிந்ததை கவனிக்க உணர்ந்தான். செயலின் வேகத்தால் - கணிதவியலாளன் சூழலைக்கைப்பற்ற - அசைவுகள் அத்தனையும் பதிவாகும் நிலையில் ஒளியின் வேகம் தூரத்தைக் கடக்கவும் முடியாமல் போனதோ. வெளிச்சத்தின் உத்வேகம் அங்கு நடக்கும் எல்லா அசைவுகளையும் பதிவுசெய்ய முடியாமல் விட்டதோ? அவசரத்தில் கண்ணாடியைவிட ஓர் அசைவு முன்பே முடித்து விட்டேனோ. உள் போராட்டத்தில் கணிதனைக் கலைஞன் விழ்த்தி விட்டதால் கண்ணாடியில் உயிர்கொண்டு குழப்பமற்ற காலவெளியில் வாழ்ந்து வெளியான தன்னிலையை விடவும் மெதுவாக முடிக்க முனைந்ததோ. 

எண்ணங்கள் நிரம்ப குழாயைத் திறந்து வரும் சுடுநீரில் அடர்ந்த ஆவி பெருக காதுகளை தொண்டைக்குழியில் இருந்து எழும் சத்தம் நிரப்ப தூயநீர் முகத்தில் அடித்தது. வெளுத்த துண்டு சுகமாக நிரடியபோது மூச்சில் சுத்த மிருகத்தின் ஆழ்ந்த திருப்தி. படோரா! அதுவே வார்த்தை ... பண்டோரா. 

துண்டை ஆச்சரியமாகப் பார்த்து குழப்பத்தில் கண்களை மூட கண்ணாடியில் அதே பெரிய முட்டாள் கண்களுடன் யோசிக்கும் முகத்தில் வெளிர் சிவப்புக்கீற்று. கண்களைத் திறந்து சிரிக்க, சிரித்தது. எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. மேபலின் கடை பண்டோரா பெட்டி. 

லெ. 

குழம்பில் வேகும் சிறுநீரகங்கள் வாசனை அவசரத்துடன் மூக்கைத் துளைத்து கெளரவிக்க ஆத்மாவின் உள்ளே பெரிய நாய் ஒன்று ஆட்டும் வாலை திருப்தியுடன் உணர்ந்தான். 

தமிழில் - பால் பிரகாஷ் 
***********************



கலைத்துக்கொண்டே இந்த ரோஜாக்களை யாரோ - தமிழில் - பெருந்தேவி 



கல்லறை எனது. ரோஜாப்பூங்கொத்தொன்றை ஞாயிறு என்பதாலும் மழை நின்றுவிட்டதாலும் கொண்டு செல்ல எண்ணம். ரோஜாக்கள் பீடங்களையும் வளையங்களையும் அலங்கரிக்க அவள் வளர்க்கும் சிவப்பு, வெள்ளை நிறங்க'' நகரவாழ்வினர் விட்டுத்துறந்த மரித்தவர்களின் சிதைமேடுகளுக்கு ஞாபகம் செல்லச் செய்வதாய் காலையைச் சோகம் தோய்க்கும் மெளனித்த மூச்சு மூழ்க கார்காலம். காற்று செல்ல மீண்டும் படியும் தெய்வாதீனமான ரொட்டித்துகள்களால் மட்டுமே தாய்மையாக்கப்பட்ட மரங்களற்ற வெற்றிடம். மழை நின்றிருக்கிறது இப்போது வழுக்குச்சரிவுகளை ஒருக்கால் நண்பகல் வெயில் கெட்டிப்படுத்த, வேர்களுக்கும் நத்தைகளுக்கும் இடையே விரவிப்பரவியிருக்கிற என் குழந்தையின் உடல் ஓய்வு கொள்ளும் கல்லறையை அடையமுடிய வேண்டும். 

புனிதர்களின் முன் மண்டியிட்ட அவள். பிரகாசமான அன்றலர்ந்த ரோஜாக்களை, பீடத்தை நெருங்கி எடுக்கும் முதல் முயற்சி தோற்று அறையில் என் இயக்கம் நிறுத்தியதிலிருந்து லயித்திருந்தாள் வேறெதிலோ. சுடர்த்தீபம் இமைத்ததுடன், பரவசத்திலிருந்து மீண்டு தலையுயர்த்தி நாற்காலிகொண்ட மூலையை அவள் நோக்காமலிருந்தால் ஒருவேளை என்னால் முடிந்திருக்கும் இன்று. பீடத்தின் அருகாமையில் " ஏதோ கிறீச்சிட்டதாலும் காலம்கண்ட தேங்கிய நினைவுகளின் தளம் பெயர்ந்தாற்போலே அறை கணம் அதிர்ந்ததாலும் காற்று மீண்டும் என அவள் நினைத்திருக்க வேண்டும். விழிப்புற்று நாற்காலியை நோக்கியபடி இன்னமும் அவள் இருக்கவும் முகத்தருகே என் கரங்களின் ஓசையைக் கேட்டிருப்பாளாதலாலும் ரோஜாக்களைச் சென்றடைய வேறொரு தருணத்துக்காக காத்திருக்க வேண்டும் என்று எனக்குப் புரிந்தது அப்போது. அவகாசம் சிறிதில் அவள் வெளியேறி ஞாயிற்றுக்கிழமையின் அளவான வழக்க நிச்சயமான மதியத்தூக்கத்துக்காக கதவு அடுத்ததை அடையப்போகும் வரை நான் காத்திருக்க வேண்டும், இந்நேரம். மீண்டும் அறைதிரும்பி நாற்காலியை அவள் நோக்கிக் கொண்டிருக்கும் முன் ரோஜாக்களுடன் வெளியேறி விட்டு திரும்பிவிடவும் முடியலாம் என்னால். 

சென்ற ஞாயிறு பட்ட இடர் அதிகம். பரவச நிலைக்கு அவள் செல்ல இரண்டுமணி காக்க வேண்டியதாயிற்று. இருப்பிடத் தனிமைவாசத்தின் அடர்த்தி குறைந்த நிச்சயம் வதைத்ததே போன்று அமைதியற்றும் கவனம் வேறெதிலோ கொண்டும் தென்பட்டாள். பீடத்தில் வைக்கும் முன்னர் ரோஜாப்பூங்கொத்தோடு அறையைச் சுற்றியவாறிருந்தாள் பலமுறை. தாழ்வாரம் அடைந்த வளைவில் அடுத்த அறைக்குச் சென்றாள் பிறகு. விளக்கை எடுக்கத்தான் எனத் தெரியும். வெளிச்சத்தில் நிறமாழ்ந்த சிறிய ஜாக்கெட்டில் வெளிர் சிகப்பு காலுறைகளில் கதவைக் கடந்தவளைக் காண, அதே அறையில் நாற்பது வருடங்களுக்கு முன் என் படுக்கையில் சாய்ந்தவாறே "பல்குத்திகளை இப்போது வைத்திருக்கிறார்களாதலால் திறந்தும் கடினமாயும் உன் கண்கள்" எனக் கூறியவளாகத் தென்பட்டாள். "சகோதரனைப் போல உனக்கு, அழேன்" என தொலைவுகண்ட அந்த ஆகஸ்ட் மதியம் அறைக்குள் அவளை 

அழைத்து வந்த பெண் கள் சடலம் காட்டிச் சொன்னதும் இன்னமும் மழையில் முட்!-,தி(தோய்ந்தும் அழுதும் பணிந்தும் சுவர்மீதாகச் சாய்ந்து நின்றவளைப் போல காலம் {நகராத பாவனையில் இப்பவும். 

(ரோஜாக்களின் இடம் அடையும் முயற்சியில் கடந்தன மூன்று நான்கு ஞாயிறுகளாகவே, வருடம் இருபதாக வீட்டில் வாசம் செய்யும் அவளோ இதுவரையில் நான் கண் டிராத அச்சம்கவிந்த சுறுசுறுப்புடன் ரோஜாக்களைக் கண்காணித்தபடி எச்சரிக்கை கொண்டு பீடம் முன். சென்ற ஞாயிறு விளக்கையெடுக்க அவள் செல்கையில் சிறந்த ரோஜாக்களை பூங்கொத்தாக இணைக்கவும் முடிந்தது என்னால். நிறைவேற விருப்பத்துக்கு வேறெப்போதும் விட மிக அருகில் நான். நாற்காலிக்குத் திரும்பயத்தனிக்கும் (போதோ காலடியோசையைச் செவி கொண்டேன் மீண்டும். பீடத்தில் ரோஜாக்களை உடனே ஒழுங்கு செய்ய தூக்கிப்பிடித்த விளக்கோடு வாயில்நிலையில் காணத் தோன்றினாள், 

நிறமாழ்ந்த ஜாக்கெட்டும் வெளிர் சிகப்பில் காலுறைகளும் கொண்டிருந்த அவளுடைய முகத்திலோ தரிசன ஒளிமினுங்கல் போல ஏதோ. தோட்டத்தில் இருபது வருடங்களாக ரோஜாச் செடிகளை வளர்த்து வருகின்ற பெண்ணாகத் தெரியாமல், வருடம் நாற்பது செல்ல உடல்பருத்து வயது முதிர்ந்து சுமந்த விளக்குடன் திரும்பிக் கொண்டிருக்க அந்த ஆகஸ்ட் மதியம் உடைகளை மாற்றவென அறை அடுத்ததில் அழைத்துவரப்பட்ட அதே குழந்தையாகத் தோன்றினாள். 

நிஜத்தில் நாற்பது வருடங்களாய் அவிந்த அடுப்பின் அண்மையில் உலர்ந்தவாறு இருந்தும் அன்று மதியம் படிந்த களிமண்ணின் கடினப்பூச்சு இன்னமும் என் அக்களில். எடுக்கச்சென்றேன் அவற்றை ஒரு நாள். ரொட்டியையும் கற்றாழைக்கிளையையும் நுழைவாயிலிலிருந்து கீழிறக்கி இந்நேரம் வரை நான் அமர இருக்கையான மூலைநாற்காலியைத் தவிர மற்றெல்லா மேஜை நாற்காலிகளை எடுத்துப் போய் கதவுகளை அவர்கள் இழுத்துப் பூட்டியதற்குப் பிறகு. வீட்டைத் துறந்துதறிச் செல்கையில் ஞாபகம் கூட அவர்களுக்கு இல்லையென்றாலும் உலர்வதற்காக வைக்கப்பட்டிருந்தன மூக்கள் என எனக்குத் தெரியும். அவற்றை எடுக்கச் சென்றது அதனாலேயே. 

வருடம் பல சென்று திரும்பிய அவள். காலம்பல கழிந்தபடியால் அறையில் கஸ்தூரி வாசனையோடு கலக்க தூசிப்புழுதியின் மணமும் பூச்சிகளின் வறண்ட, மெல்லிய மூச்சுக்காற்றும். காத்திருந்தபடிக்கு மூலையில் அமர்ந்து வீட்டில் நான் தனியாக. மக்கள் மரக்கட்டைகளின் ஒலியும் மூடிய படுக்கையறைகளில் பழமைப்பட்டுக் கொண்டிருந்த காற்றின் சிறகடிப்பும் உணரவும் கற்றேன். அப்போது தான் வந்தாள். கை சிறு பெட்டியுடன் பச்சைத்தொப்பியோடு அன்றிலிருந்து எப்பவும் கழற்றாத் அல்?? பருத்தி ஜாக்கெட் அணிந்தவளாய் நின்றாள் கதவருகே. இன்னமும் சிறுமிதா பருக்கத் தொடங்காமலும் காலுறைகளடியில் கணுக்கால்கள் இப்போது போக 

88 

ஊதி வழியாமலும். சிலந்திவலைகளும் தூசிப்புழுதியும் என்மேல் போர்த்திருக்கையில் கதவை அவள் திறக்க இருபது வருடங்களாக எங்கோ அறையில் இசைத்துக் கொண்டிருந்த சில்வண்டு மெளனமுற்றும் சிலந்திவலைகள், தூசிப்புழுதி, சில்வண்டின் திடீர்த் தயக்கம், புதுயுகத்தின் முன்னெப்போதுமில்லாத வருகை எல்லாம் இருந்தும் புயலார்ந்த அந்த ஆகஸ்ட் மதியம் தொழுவத்தில் என்னோடு கூடுகளைச் சேகரிக்க வந்த சிறுமி காணக் கிடைத்தாள் அவளில், திடீரென்று கூக்குரலிடப் போகிறதாக, உடைந்த படிக்கட்டுகளின் கைப்பிடியைப் பற்றியபடியே வைக்கோல் மூடிய தொழுவத் தரையில் என் முகம் அண்ணாந்திருக்க அவர்கள் கண்டுபிடித்த போது அவள் சொன்னதையே மீண்டும் சொல்லப் போகிறதாகத் தோன்றியது, வாயில் நிலையில் கைகொண்ட சிறுபெட்டியோடு தலையில் பச்சைத்தொப்பியோடு அவள் நின்ற விதம். கூரைமுகட்டில் சம்மட்டியால் யாரோ அடிக்கத்தொடங்கினாற்போல, கீல்கள் கிறீச்சிட கூரையிலிருந்து தூசிப்புழுதி குவியல்களாக விழ கதவை அவள் அகலத்திறந்து நிலைவாயிலைக் கடக்க "மகனே, மகனே" என்று அறையின் வழிபாதி வரை பிறகு வந்தழைக்கையில் தூங்குபவரை எழுப்பும் யாருடையதையோ ஒத்தது அவள் குரல். நாற்காலியில் கால்களை நீட்டியவாறு நானோ இறுக்கத்துடன் அசையாமல்.' 

வந்திருப்பாள் அறையைக் காணவே என்று நினைத்தேன். அவளோ எனில் வீட்டில் வாசம் செய்யத் தொடங்கினாள். பெட்டியைத் திறந்திருந்து அவளுடைய பழமைகண்ட கஸ்தூரியின் வாசனை வெளிப்பட்டாற்போல காற்றை வியாபித்தாள் அறையில். மேஜை நாற்காலிகளையும் பெட்டிகளில் துணிமணிகளையும் மற்றவர்கள் எடுத்துச் செல்ல அறையின் வாசனைகளை மட்டுமே தன்னோடு கொண்டு சென்றவள். வருடம் இருபது செல்ல திரும்பக் கொணர்ந்து அவற்றின் இடத்தில் வைத்ததோடு சிறிய பீடத்தை முன் பிருந்த வகையில் மீண்டும் கட்டினாள். தளர்வுறாத காலமெனும் தொழிற்சாலை அழித்தவற்றை மீட்க அவளுடைய இருப்போன்றே போதுமானதாக இருந்தது. பகலில் புனிதர்களோடு மெளனமாக அவள் உரையாடிக் கழிக்க அறை இதுவும் உண்ண உறங்க அடுத்ததும் அன்றிலிருந்து ஆயிற்று. அறைக்கடுத்த ஆடும் இருக்கையில் அமர்ந்து துணிமணிகளைச் செப்பனிட்டுக் கொண்டிருப்பாள் மதியப்பொழுதுகளில். ரோஜாப் பூங்கொத்தை வாங்க யாரும் வந்தாலோ அவர்கள் அளிக்கும் பணத்தை பெல்ட்டோடு அவள் இணைத்திருக்கும் கைக்குட்டையின் மூலையிலிட்டபடி தவறாமல் சொல்லுவாள். "வலதுபுறம் இருப்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இடதுபுறத்தில் இருப்பவை புனிதர்களுக்காக." 

குழந்தைப்பருவ மதியங்களை எந்தச் சிறுவனோடு பகிர்ந்துகொண்டாளோ அவனை இப்போது பேணாதது போல, அவனுடைய பாட்டியின் ஐந்து வயதிலிருந்தே இம்மூலையிலேயே அமர்ந்திருக்கும் உடம்பு இயலாத பேரனுக்காக என்பது போல, இருபது வருடங்களாக அதே வகையில் ஆடும் இருக்கையில் தன் பொருட்களைச் செப்பனிட்டுக்கொண்டே ஆடியபடி நாற்காலியை நோக்கியபடி அவள்.', 

தலையை அவள் தாழ்த்துவதால் ரோஜாக்களை அ டைய இயலுதல் எனக்கு சாத்தியம் இப்போது, செய்ய அதை முடியுமானால் சிதை (மேட்டுக்குச் சென் று கல்லறையில் அவற்றை வைத்துவிட்டு அவள் திரும்பாத எல்லா துறைகளிலும் ஓசைகள் அற்றுப்போகும் நாளுக்காக நாற்காலியில் காத்திருக்கத் திரும்பிவருவேன் அறைக்கு. 

தகர்ந்து பாழ்பட்ட வீட்டில் வாசம் செய்யும் ரோஜாப் பெண்மணிகள் சிதைமேட்டுக்கு அழைத்துச்செல்ல நாலுபேர் தேவையென யாரிடமாவது சொல் திரும்பவும் நான் வீடு நீங்க வேண்டியிருக்கும் என்பதால் யாவற்றிலும் மாறுதல் இருக்கும் அந்நாளில். எப்போதைக்குமாக அறையில் தனியாக இருப்பேன் பிறகு. எனில் மாறாக அவள் மனம் நிறைவுறும், ஞாயிறு தோறும் அவளின் பீடம் வந்து ரோஜாக்களைக் கலைத்தது கண்ணுக்குப் புலனாகாத காற்றல்ல என்று அவளுக்குக் தெரிய வரும் அந்நாளில். 

தமிழில் - பெருந்தேவி 


-