கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதை - Gabriel Garcia Marquez தமிழில் - நாகார்ஜுனன்
1949 அக்டோபர் 29. முக்கிய செய்தியென நிறையாமல் போகத் தெரிந்த நாள். பத்திரிகைக்காரத் தொழிலின் அடிப்படைகளை நான் கற்ற தாளின் பிரதம ஆசிரியர் மாஸ்ட்ரோ க்ளெமென்டெ மானுவல் ஸபாலா. வழக்கமான விஷயங்கள் இரண்டு மூன்றுடன் காலையில் முடித்துக்கொண்டார் நிருபர் யாருக்கும் இன்னதென்று செய்யத் தராமல். சில நிமிஷங்களில் ஸான்டா களாரா பழைய கன்னிகாஸ்திரீ மடத்தின் கல்லறைப்பெட்டகங்கள் காலிசெய்யப் படுவதாக ஃபோனில் வந்தது அவருக்கு. "நின்று அங்கே ஏதும் தேறுமா பாரேன்." கிடைக்கலாம் என்ற மாயமேதிலும் சிக்காமல்தான் கூறினார் என்னிடம்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆஸ்பத்திரியாக்கப்பட்ட, சரித்திரப்பெயர் கொண்ட க்ளாரிஸ்ஸ கன்னிகாஸ்திரீகளின் மடம் விற்பனைக்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டல் அவ்விடத்தில் எழுப்ப, கொஞ்சம் கொஞ்சமாக விதானம் விழுந்ததில் தேவ வாக்கியம் பெறுகிற சிற்றாலயத்தின் அழகிய சந்நிதியான இடமும் பஞ்சபூதங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது நேரடியாக. இருந்தாலும் மூன்று தலைமுறையாக அருட்தந்தைகளும் பிரதம் சகோதரிகளும் பிரபலஸ்தர்களும் என புதைக்கப்பட்டு வந்தனர் மடத்தில் இன்னும். பெட்டகங்களைக் காலி செய்து தமதெனக் குடும்பத்தினராகக் கேட்போருக்கு மாற்றி, எஞ்சியதைப் பொதுக் கல்லறையில் புதைக்க ஏற்பாடு. செயலின் கொச்சைத்தனம் நான் எதிர்பாராதது. கோடாரிகளும் களைக் கொத்திகளும் கொண்டு கல்லறைகளைப் பிளந்தும் நகர்த்தும்போதே நொறுங்கிப்போகிற, துருப்பிடித்த சவப்பெட்டிகளைப் பெயர்த்தும் தூசியும் உடைக்கந்தலும் உலர்ந்துபோன தலைமுடியுமாகக் குழம்பிய கலவையிலிருந்து எலும்புகளைப் பிரித்தவாறிருந்தனர். தங்க, வெள்ளி ஆபரணங்களையும் விலை மதிப்பற்ற மணிக்கற்களையும் மீட்கும் நோக்கத்துடன் எச்சங்களைத் தூர்வாரி இடிபாடுகளைப் பிரித்தார்கள் என்பதால் இறந்தவர்களின் பிரபலஸ்தம் கூடக்கூட வேலையும் சிரமமானது. நடுகல் ஒவ்வொன்றின் மீதான செய்தியை நோட்டுப்புத்தகத்தில் குறித்தும் எலும்புகளைக் கூறுகட்டியும் குவியல் ஒவ்வொன்றின் மீதும் பெயரெழுதிய சீட்டைப் பிரிப்ப வைத்தும் சென்றான் மேஸ்திரி. நுழைந்தவுடன் தேவாலயத்தில் நான் பார்த்தது கூரை ஓட்டைகள் ஊடே கொட்டிய அக்டோபர் மாதக் கொடூர சூரியனால் சூடாக்கப்பட்ட எலும்புகளாக அடுக்கிய நீள்வரிசைதான். விநாசமென வருஷங்கள் கழிந்ததன் அந்த பயங்கர சாட்சியம் என்னில் உண்டாக்கிய குழப்பத்தை உணர முடிகிறது அரை நூற்றாண்டுக்காலம் தாண்டி 248 இன்னும், தம் ரகஸியக் காதலியுடன் பெரு நாட்டின் ராஜாதிகாரி ஒருவரும் " மாவட்டமதன் அருட்தந்தை டான் டோரிபியோ டி கெஸரெஸ் ஒய் விாகு
உயரப்பீடத்தின் முன்றாம் குறுகலான பிறையில் தேவகுமாரனின் செய்திகள் வைக்கும் பக்கத்தில் இருந்தது ஆச்சரியம் எனக்கு. கோடாரியின் முதல் வெட்டில் கல் நொறுங்கியதும் உயிர்ப்ப பிரவாகமான கூந்தல் தீவிரச்செம்பு நிறத்தில் நிரம்பி வழிந்தது பெட்டகத்திலிருந்து. பிறருடன் சேர்ந்து மேஸ்திரி கூந்தலை விரிக்கும் முயற்சியில் இழுத்துப்போட நீளமாகவும் பெருகிச் செல்லவும் தோன்றியது இளம்பெண் ஒருத்தியின் கபாலத்துடன் இன்னும் பொருந்தியிருந்த இழைகள் தெரியும் கடைசிவரை. சிதறிய சிறு எலும்புகள் சில தவிர எஞ்சவில்லை ஏதும் பிறையதில். பாறையுப்பு அரித்திருந்த அலங்காரக் கல்லில் தெளிவாகத் தெரிந்தது வம்ச அடையாளமன்றி இட்ட பெயர் மட்டுமே. ஸியர்வா மரியா டி தோடோஸ் லாஸ் ஏஞ்செலஸ். தரையில் விரிப்பப் பெருகும் கூந்தல் பிரம்மாண்டமாய். அவர்களும் அன்னை ஜோஸஃபா மிராண்டா உட்பட மடத்தின் நிறைய ? சகோதரிகளும் பெட்டகங்கள் கொண்ட உத்திரங்கள் அமைப்பதில் வாழந்த' பாதியை அர்ப்பணித்த டான் க்ரிஸ்டோபல் டி எராஸோ என்ற க க பட்டதாரியும் இன்னும் பலரும் அங்கே. கஸால்டுவரோவின் இரண்டாம் பிரபு (Marquis) டான் இக்னேஷியா டி அல்ஃபாரோ ஒய் குயனாஸ் என்ற பெயர்க் கல்லால் மூடியிருந்த கல்லறையோ திறந்தபோது காலி. பிரபுவின் சீமாட்டி டோனா ஒலால்லா டி மெண்டோஸாவின் எச்சங்களோ தமக்கான பிரத்தியேகக் கல்லுடன் அடுத்த பெட்டகத்தில், அமெரிக்கக் கண்டத்தில் பிறந்த பிரபுக்கள் தமக்கென்று தயாரித்த கல்லறைகளில் அன்றி வேறில் புதைபடும் வழக்கம் அறிந்த மேஸ்திரி இதைப் பொருட்படுத்தவில்லை. அளந்தது மீட்டர் இருபத்திரண்டு, ஸென்டிமீட்டர் பதினொன்று.
கன்னியும் மீமனிதக் கிழவியின் காதகப் பார்வையும்
எரிந்திராவைக் கதையாக்க மாயாவசீகர இயக்கம் தேவை. ஆனால் நாவலாக அன்றி திரைக்கதையாக எழுதினார் முதலில். காணாமல் போனதால் மீண்டும் வேண்டியதாயிற்று எழுத. எழுத்தின் கற்பனை காட்சிப்படிமங்களை இயக்குவது இதனால்தான். படிமங்கள் அடுக்கப்பட்ட பக்கம்பக்கமாக இழுத்துக்கொண்டுவாக்கிய அமைப்பில் நூல்ரப்பராகச் சென்று மாறாத உண்மையொன்றை உணர்த்தும். காட்சிகளை மறக்கவியலாதபடி அடுக்கடுக்காகப் பளீரிடும் வகையில் கொண்ட படத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம். பீறிடும் வார்த்தைகள் கொண்ட நடை வாசகனின் கற்பனைக்கும் வர்ணனையிலிருந்து படிமங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்திக்கும் சவால். ஒளிர்கிற கண்ணாடியின் காட்சிகளில் கற்பனை தூண்டும் பிம்பங்களைப் பார்க்கச் செய்கிற கடினமான வாக்கியங்கள், படிமக் கணைகள், வித்தைக்காரன் சுழற்றிப்போடுகிற மின்னும் கற்பளிங்குகள். பார்க்கும் கண்கள் மருள், அவள் துயரம், அவள் கண்ணியம் உச்சத்திலிருந்து அடைகிற வீழ்ச்சி, எள்ளல், அழிவு, வெகுளித்தனம், பகட்டு இப்படிப் பலவித உணர்வுகள் மனிதமாகக் கலந்து போகின்றன.மரணம் தாண்டியும் மனிதருக்கு தலைமுடி மாதம் ஸென்டிமீட்டர் ஒன்றாக வளரும். இருபத்திரண்டு மீட்டர் என்றால் வருஷம் இருநூறுக்கான சராசரி வளர்த்தியாக இருக்கலாம் தான் என்றான் உணர்வேதும் காட்டாத மேஸ்திரி. விஷயம் அத்தனை சாமான்யமானதென நினைக்கவில்லை நான். மணப் பெண்ணின் உடைரயிலாகப் பின்தொடர்ந்த கூந்தல் கொண்ட பன்னிரண்டே வயது சீமாட்டி ஒருத்தி வெறிநாய் கடித்து மரணமுற்றதையும் நிகழ்த்திய விநோதங்களுக்காக கரீபியக் கடற்கரைப்பிரதேச ஊர்களில் அவள் புனிதராகக் ொண்டாடப்பட்டதையும் சிறுவனாக இருந்த போது என்னிடம் பாட்டி சொல்லியிருந்த புராணிகம் தான் காரணம். கல்லறை அந்தச் சீமாட்டியுடையதாயிருக்கும் என்ற ஹேஷ்யம்தான் என் அன்றைய செய்தியும் இந்தப் புத்தகத்தின் மூலமும். தமிழில் - நாகார்ஜுனன் E கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் கன்னியும் மீமனிதக் கிழவியின் காதகப் பார்வையும் சிதானந்த தாஸ்குப்தா எரிந்திரா, அவளை விற்றுவிடும் காதகிப்பாட்டி, பாட்டியிடமிருந்து காப்பாற்ற விழைகிற இளைஞன் யுலிளஸ் என்று திரைக்கதை சுழல்கிறது. பாலைவனத்தில் படமாகிய வசீகர நாடகத்தில் ஓவிய-எழுத்துத் திறமைகள் சங்கமிக்கின்ற. ஆதார உணர்வுகளின் நடனத்தில் இயங்குகிற பாத்திரங்களை எழுதி இயக்கத்தை ரை குவேரா என்ற ப்ரேஸிலிய இளைஞரிடம் விடுகிறார் மார்க்வெஸ்.
ருசித்துச் சாப்பிடுகிற யாரும் கலிஸியாவின் பதார்த்தங்களை நினைக்காமல் போக முடியாது. "வீட்டின் நினைவு ஏக்கமானது சாப்பாட்டில் துவங்குகிறது" என்றார் சே குவேரா. நினைவு கலிஸியாவுக்குப் போகுமுன்பே வந்துவிட்டது. ஆவிகள் பற்றி முதன்முறையாக அறிய நேரிட்ட அரக்காடக்காவின் பெரிய வீட்டில் பாட்டி சந்தோஷமாக ரொட்டி செய்து விற்று வந்தாள். ஆற்றுவெள்ளம் பெருகி வீட்டை நாசமாக்கி அடுப்பை சரிசெய்ய யாரும் முன்வராத வரையில் வியாபாரம் நடந்தது. தொழில் பெருகிவிட்டதால் ரொட்டி செய்ய முடியாமல் போன பின்பும் பன்றி இறைச்சியில் பதார்த்தம் செய்தாள். சுவையாக இருந்தாலும் குழந்தைகளாகிய எங்களுக்குப் பிடிக்காமல் போனது. பெரியவர்களுக்குப் பிடித்தவற்றைக் குழந்தைகள் விரும்புவதில்லை. ஆனால் பதார்த்தத்தின் முதன்முதலான ருசி நாக்கில் தங்கிவிடுகிற ஒன்று. பிற்பாடு அதை ருசித்ததே இல்லை. நாற்பது வருஷங்கள் கழித்து பார்ஸிலோனாவில் அதே ருசியுடன் குழந்தைப் பருவத்தின் குதூகலங்களும் நிச்சயமின்மைகளும் தனிமைவாசம் கொண்ட உணர்வும் வந்து சேர்கின்றன. படம் முடிந்து வரும்போது தூக்கம் விழித்த கனவாகிறது. கோர்வையற்றும் இடம்பெயர்ந்தும் தலைகீழாகவும் நினைவுகள் - பாலைவனமும் க்யூ வரிசைகளும் சார விளக்குகளும் காதல்வசப்பட்ட பெயர்களான எரிந்திராவையும் யுலிஸ்ஸையும் பிடிக்கத் துரத்தும் கார்களும் அலங்கார நாற்காலியில் பாட்டியும் தங்கிவிட,இருந்தும் வார்த்தைகளின் மந்திரசக்தி படத்திலன்றி எழுத்தில்தான். மொழி தந்த போத்தல்களிலிருந்து பூதங்களை உலவ விட்டிருப்பதில் தான். படிமங்கள் மூலம் வருகிற பூதங்கள் ஒளிந்து விளையாடுகின்றன. வாசக மூளையாகிய கண்ணாடியில் பிரதிபலித்து திரும்பவும் வார்த்தைகளாகின்றன. திரைக்கதையை நாவலாக அவர் எழுதும்போது கூடுதலான கிளர்ச்சி வாசகனுக்கு நிச்சயம். தமிழில் - ரமோலா நடராஜன்
பார்க்கிற மழையில் கலிஸியாவின் கதை - காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் *****தமிழில் - தேவதாஸ்******** கல்குதிரை சிற்றிதழ் காமிராக்காரர்கள் மற்றும் பத்திரிக்கை நபர்கள் சூழ்ந்திருக்க வெகுநாள் கழித்து மாட்ரிட் நகரத்தில் என்னைப் பார்க்க நேரிட்ட போது கவிஞனும் ஓவியனும் நாவலாசிரியனுமான ஹெக்டர் ரொஜஸ் ஹெராஸோ கருணை நிரம்பி நடுக்கம் கண்டு போயிருப்பான், "நாளாக ஆக உனக்கு நீ நல்லவனாகிவிட வேண்டும் என்பதை ஞாபகம் கொள்" என்று அருகே வந்து கிசுகிசுத்தான். நல்லதொரு பரிசை வழங்கிக்கொண்டு வருஷக்கணக்காகிறது. ஆகவே கனவுகளில் ஒன்றான கலிஸியாவுக்குப் போய்வருவதை வழங்கிக்கொண்டுவிடத் தீர்மானித்தேன். எனக்கு.
சுற்றுலாப் பயணியாக இருப்பதிலுள்ள அவமானம் எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. சதா அலைந்து கொண்டிருக்கும் நண்பர்களும் சுற்றுலாப் பயணிகளுடன் கலந்து விடுவதை விரும்பாததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். கலக்காமல் போனாலும் தாங்களும் சுற்றுலாப் பயணிகளே என்பதை உணராத நண்பர்கள். போதிய அளவு அறிந்து கொள்வதற்கு நேரமில்லாமல் ஒரிடத்துக்குப் போகும்போது வெட்கத்துக்கு இடமின்றி என் பாத்திரம் சுற்றுலாப் பயணியுடையதாகி விடுகிறது. "உங்கள் இடதுபுறத்திலும் வலதுபுறத்திலும்...." என்று வழிகாட்டிகள் ஜன்னல் ஊடாக விளக்கம் தருகிற மின்னல்வேக சுற்றுலாக்களில் இணைய விரும்புகிறேன். பார்க்க விரும்பாத இடங்களை சந்தேகமில்லாமல் தெரிந்து கொள்ளத்தான். அந்த ருசியுடன் ஆதியந்தத்தை ஆராயும் லயிப்பு பெருகி அந்தப்போக்கில் சென்று மே மாதத்துக்கு கீரைவகைகளிலும் சமுத்திரத்திலும் மழையிலும் கலிஸிய நாட்டுப்புறத்தில் வீசுகிற நித்தியக் காற்றிலும் ஈடுபட்டேன். அறிவார்ந்த விளக்கங்கள் எடுபடாமல் போய் அமானுஷ்ய உலகத்தில் எதுவும் சாத்தியமாகக் கூடியதாக பாட்டி வாழ்வதை அப்போது புரிந்து கொண்டேன். உத்தேசமாக வரப் போகிற பயணிகளுக்காக அவள் பதார்த்தத்தைத் தயாரித்துக் கொண்டு நாள் பூராவும் பாடிக் கொண்டிருப்பதையும் புரிந்துகொண்டேன். "சாப்பிட வரும்போது அவர்கள் எதைக் கேட்பார்களோ. மீன், ஆட்டுக்கறிப் பதார்த்தங்கள் செய்ய வேண்டுமே" என்று ரயிலின் கூ சப்தம் கேட்ட போதெல்லாம் சொல்லிக் கொள்வாள். வயது போய்ப் பார்வை மங்கி எதார்த்தம் பற்றிய உணர்வு விலகி நினைவுகளை தற்போதைய நிகழ்வுகளுடன் கலந்துவிட்டு குழந்தைப் பிராயத்தில் பரிச்சயமாகி மரணமடைந்தவர்களுடன் உரையாடியவாறே பாட்டி போய்ச் சேர்ந்தாள். போன வாரம் கலிஸிய நண்பன் ஒருத்தனுடன் ஸான்டியாகோ டி கம்போஸ்டெலாவில் இதைச் சொல்லப்போக "அப்படியானால் பாட்டி கலிஸியக்காரியாகத்தான் இருக்க வேண்டும், சந்தேகமில்லை. பித்துப் பிடித்தவள்" என்றான். நிஜத்தில் எனக்குத் தெரிந்திருந்த கலிஸியக்காரர்களும் சந்தித்துப் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்களும் மீனராசியில் பிறந்தவர்களே. எந்த வகையிலும் இத்தகைய விபரங்களுக்கு இடம் தராத நகரம் ஸான்டியாகோ. அங்கேயே பிறந்து விட்டதைப் போல உடனடியாகவும் முழுமையாகவும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளும் நகரம். ஸயானாவில் உள்ள சதுக்கத்தை விடவும் அழகானது பூமியில் இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அதைவிட அழகானதா என்ற சந்தேகத்தைக் கொண்டு வருவது ஸான்டியாகோ சதுக்கமே. பொலிவும் முனைப்பும் அதன் வயதை யோசிக்க வைக்காமல் செய்யும். காலப்பிரக்ஞையை இழந்து போன யாரோ நேற்றுத்தான் அதை நிர்மாணித்திருக்க வேண்டும். சதுக்கத்தை வைத்து மட்டும் இந்த மனப்பதிவு உண்டாவதில்லை. நகரத்தின் மூலை முடுக்குகளைப் போலவே தினசரி வாழ்க்கையில் ஆழ்ந்து தோய்ந்திருப்பதிலிருந்து உண்டாகிறது. துடிப்பான நகரத்துக்கு வயதேற உற்சாகமும் குதூகலமுமாக ஆர்ப்பரிக்கும் மாணவர்கள் வாய்ப்பளிப்பதில்லை. கெட்டியாகிப் போன சுவர்களிலிருந்து எழுகிற செடிகொடிகள் விநாசத்தையும் விஞ்சி நிற்கும். காலடி ஒவ்வொன்றிலும் பூமியின் இயல்பான கற்கள் முழுமலர்ச்சியுடன் படும்,
தமிழில் - தேவதாஸ் மூன்று நாட்களாக மழை புயலுடன் இல்லை. இடையிடையே கடும் வெயில் இருந்தாலும் கலிஸிய நண்பர்கள் பொன்மயமான இந்த இடைவெளிகளைக் கண்டதாகத் தெரியவில்லை. மழைக்காக சதா என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். மழையற்ற கலிஸியா தரும் ஏமாற்றத்தைக்கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை...ஏனென்றால் கலிஸியர்களின் உலகம் அவர்களின் அதுபற்றிய உணர்வைக் காட்டிலும் புராணிகமானது. புராணிகப் பிரதேசங்களில் சூரியன் தலைகாட்டுவதில்லையே. "போனவாரம் வந்திருந்தால் சீதோஷ்ணம் பிரமாதமாக இருந்திருக்கும்" என்றார்கள் அவமானம் படிந்த முகங்களுடன் நண்பர்கள். "பொருத்தமில்லாமல் வருஷத்தின் இந்த சமயத்தில் பெய்கிறது" என்றும் வலியுறுத்திச் சொன்னார்கள். வாலி இங்க்லான், ரொஸாரியோ டி காஸ்ட்ரோ மற்றும் கலிஸியக் கவிஞர்கள் ஒவ்வொருவரின் எழுத்துக்களில் எல்லாம் பார்த்தால் பிரபஞ்சப்பிறப்புக் காலம்தொட்டே பொழிகிறது மழை என்றிருப்பதை மறந்துவிட்டிருந்தார்கள். மழைக்கிடையே ஓயாது வீசும். காற்றுதான் ஏகப்பட்ட கலிஸியர்களை மகிழ்வான வகையில் வித்தியாசப்படுத்தி வைத்திருக்கிற விதையைத் தூவியிருக்க முடியும். நகரத்தில் மழை. வயல்களில் மழை. அரோஸாவின் ஏரிகள் நிறைந்த சொர்க்கத்திலும் விகோ முகத்துவாரங்களிலும் மழை. பாலத்தின் மேலும். மாயத்தன்மை மிக்க ப்ளாஸா டி கம்படாஸ்ஸாவிலும் மழை. வேறுஉலக காலத்தைச் சார்ந்த ஹோட்டல் உள்ள லா டொஜாவிலும் மழை. மழை நிற்கவும் காற்று ஓயவும் மறுபடியும் உயிர்ப்பு வர சூரிய ஒளி தென்படுவதற்காகவும் ஹோட்டல் காத்திருப்பதாகக் தோன்றியது. நாசமாக்கப்பட்டிருக்கும் பூமியில் கிடைக்கிற ஒரேவகை சிப்பிமீன் பதார்த்தத்தைத் தின்றவாறே பொலிவுடனான உலகில் போவதாக மழையில் நடந்து போனோம். ஓயாத மழையால் கிட்டிய நன்மையென இதையெல்லாம் அறிந்துகொண்டோம். எப்போதோ பார்ஸிலோனா விடுதி ஒன்றில் எழுத்தாளர் அல்வாரோ கான்க்யுரர்ஸ் கலிஸிய உணவு பற்றிக் கூறியதைக் கேட்டிருக்கிறேன். விவரிப்பு அற்புதமானதால் கலிஸியக்காரனின் பிதற்றலான நினைவுகளாகக் குறித்தும் கொண்டேன். கலிஸிய அகதிகள் சொந்த ஊர் பற்றி பேசுவதை ஞாபகப் படுத்திக் கொள்ள முடிகிற வரையில் அவை கடந்த கால ஏக்கம் கலந்தவையாகத் தெரிகின்றன. கலிஸியாவில் கழித்த எழுபத்திரண்டு மணி நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கிற போது அதெல்லாம் நிஜம்தானா, பாட்டியின் பித்துப் பிடித்த பிதற்றலுக்கு ஒருவேளை பலியாகிவிட்டேனோ என்று ஆச்சரியத்துடன் யோசிக்க வேண்டியிருக்கிறது. கலிஸியர்களைப் பொறுத்த வரை இந்த சந்தேகத்துக்கு பதில் ஏதும் கிட்டாமல் தான் போகப் போகிறது.