www.padippakam.com படிப்பகம்
தனியொரு பாதையில், தனித்து
என் நினைவு தெரிந்த நாட்களுக்குப் பின்னோக்கிப் போனால், என் முதல் பரிச்சயம் சினிமாவுடன் தான். அந்தச் சிறுபிராய ஆரம்பத்திலேயே. 40க்களின் ஆரம்ப வருடங்களில், நிலக்கோட்டையில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு முன்னாலேயே, ஒரு வண்டிட பேட்டை உண்டு. அங்குதான் டூரிங் டாக்கிள் நிலக்கோட்டைக்கு வரும் போதெல்லாம் கூடாரம் அடிக்கும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். எல்லாம் புராணக்கதைப் படங்கள். புராணம் பற்றியன என்ற காரணத்தாலேயே. அந்தப் படங்கள் ஒன்றைக் கூட என் பாட்டி தவற விடுவதில்லை. என்னையும் இடுப் பில் தூக்கிக் கொண்டு சினிமா பார்க்க கிளம்பிவிடுவாள். இது ஆரம்பம். ஆனால் இப்பழக்கம் தொடரவே 5 வயதிலும், என்னைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் கொட்டகைக்குள் நுழைவாள் எனக்கு டிக்கெட் வாங்கா மலிருக்க, ''பாட்டியம் மா, பையனைக் கீழே விடுங்க, நாங்க டிக்கட் கேக்கலை, ஏன் இப்படி கஷ்டப் படறீங்க" என்பார்கள்.
எதற்காகச் சொல்ல வந்தேனென்றால், அந்த வயதி லேயே சினிமா, மனத்தில் ஆழப்பதிந்தது. என்
பாட்டிக்கு சினிமா மேலிருந்த மோகம் எனக்கும் தொற்றியது. அந்தக்காலத்தில் அதே கொட்டகையில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களும் வந்ததுண்டு. வி. எஸ். செல்லப்பா, டி.பி. தனலெக்ஷ்மி இவர்கள் வரும் ஸ்பெஷல் நாடகங்களும் நான் அக் காலங்களில் பார்த்ததுண்டு. நாடகங்களின் வருகையும் குறைவு, மிகவும் அபூர்வமாகத் தான் இருக்கும். சினிமாக்கள் தான் அதிகம். அதேபோல என் மோகமும் சினிமாவில் தான் அதிகம் இருந்தது.
பின் வருடங்களில், இதே கதியில், இதே தாரதம்யத்தில் தான் என் ஈடுபாடும், பரிச்சயமும் வளர்ந்த ன. ஒரே தாரதம்யத்தில், அதுதான் விசேஷமானது. சிறு பிராயத் தில் சினிமா ஏற்படுத்திய கவர்ச்சி, ஒரு விதமானது. சினிமா அளித்த மாயா ஜாலக்காட்சிகள், நாடகத்தில் இல்லை வயது வந்த பிறகு - தமிழ் சினிமாவை விட்டு விடலாம்-1961-62 வரை, உள்ள காலத்தில் எனக்கு ஸத்யஜித்ரே, ம்ருணால் ஸென், எலியாகஸான் ('' On the Water Front'') ரித்விக் காடக் ("நீல் ஆகாஷேர் நீசே",
அஜாந்ரிக்'') எல்லாம் பரிச்சயமான பிறகு, நாடகம், ஒரு anachronism என்றே எண்ணினேன். அதற்கு ஜீவித நியாயம் ஏதும் கிடையாது என்ற நம்பிக்கை பலமாக வேரூன்றியிருந்தது. தமிழ் நாட்டின் பரிச்சயமான நாடக உலகமும் சரி, ஒரிஸாவில், டெல்லியில் எனக்கு பரிச்சயமான நாடக உலகங்களும் சரி, இதே கருத்தை என்னில் வலியுறுத்தின. காமிரா, புகைப்படச் சுருள் போன்ற சாதனங்கள், நாடகத்தின் பல்வேறு எல்லைக் கட்டுப்பாடுகளை உடைத்து, கால, இட, மன உலக விஸ்தாரங்களை எல்லையற்ற நிலைக்கு எடுத்துச் சென்றுள் ளன என்று நம்பினேன். இந் நிலையில், நாடகத்திற்கு ஏது இடம் என்ற கேள்வி என்னுள் பலம் பெற்றது.
1962ல் ஒரு நாள் மாலை, இந்த என் எண்ணங்கள் அத்தனையும் பரிதாபகரமாக சரிந்தன. டெல்லியில் National School of Drama, என்று புதிதாக நிறுவப்பட் டிருந்த பயிற்சிப் பள்ளியில் பொறுப்பேற்றிருந்த இப்ராஹீம் அல்காஷியின், தயாரிப்பில் மேடையேற்றப் பட்ட ''அந்தர யுக்'' என்ற நாடகம் முதன் முறையாக என்னில், தாடகத்திற்கு இன்னமும், ஜீவிய நியாயம் உண்டு. அதன் இயங்கு தளங்கள் வேறு, என்பதை எனக்கு உணர்த்தியது. ஜோடனைகள், தந்திரக் காட்சி கள், இவையெல்லாம் நாடகமல்ல. இதை சினிமா வெகு சிறப்பாகச் செய்து விடுகிறது. நாடகம் என்பது, நம்முன் மேடையில் காட்சி தரும் நடிக்க வந்துள்ள மனிதன் தான். அவனது கலைத்துவம், நடிப்பாற்றல், இவற்றிலிருந்து தான் நாடகம் பிறக்கிறது. இதை எந்த விஞ்ஞான முன்னேற்றமும் எதுவும் செய்துவிடமுடியாது
என்று உணர்ந்து கொண்டேன், மிகவும் தாமதமாகத் தான். ஆனால் பெரிய விஷயம் நான் உணர்ந்து கொண் டது. நடிகன், தன் நடிப்பாற்றலால், எந்த உலகத்தை யும் எக்காலத்தையும், எத்தகைய மன உலகையும், எத்தகைய சூழ் நிலையையும், நம்மில் எழுப்பிவிட முடியும். நாடகம் அவனில்தான் இருக்கிறது. இடிந்த பிரோஷ்ஷா கோட்டைச் சுவர்களின் பின்னணியில், சில Suggestive சாதனங்களே கொண்ட மேடையமைப் பில், மகாபாரதச் சூழல் ஒருவாறாக குறிப்புணர்த்தினால் போதுமானது. இதை எனக்குக் கற்றுக் கொடுத்தது, அல்காஷியின் 'அந்தா யுக்".
இது, 'பான்ஸாய் மனிதனின் ஓர் முகம்' எழுதப்பட்ட தற்கு முந்திய சாமிநாதன். பின் வருவன எல்லாம், எல்லா எழுத்துக்களும், கால வாரியாகவே தரப்பட்டுள் ளன. இவையெல்லாம், கால கதியில், அவ்வப்போது, நானும், என் சூழலும் எவ்வாறு பரஸ்பர பாதிப்புக்குள்ளாகியுள்ளோம் என்பதைச்சொல்லும்.
பொதுவாக, நாடகம் என்ற கலையைப் பொருத்து என் பார்வை, 1962-ல் தலைகீழாக மாற்றம் அடைந்தாலும், தமிழ் நாடக உலகைப் பொறுத்த வரையில் என் அபிப்ராயங்கள் ஏதும் மாற்றமடையவில்லை.
ஆனால் எதை நாம், தமிழ் நாட்டில், - அன்றும் இன் றும் - கலையாகக் காணவில்லையோ, அதைக் கலையாக நான் கண்டது ஒரு புதிய கண்டு பிடிப்பு. எனக்கு. 1965 லோ 1966 லோ, சங்கீத நாடக அகாடமியின் அழைப்பில், புரிசை நடேச தம்பிரான் டெல்லிக்கு வந்த போது 'தெருக்கூத்து' பார்த்தேன். என் வாழ்க் கையில் முதன் முறையாக அது எனக்கு ஒரு revelation ஆக இருந்தது. இதுவல்லவா theatre, நாம் சமீப கால மாக இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தோ, அதற்கு முன்னிலிருந்தோ தமிழ் நாடகத்தின் தோற்றம் என்ற சரித்திரம் நாம் தொடங்கும் காலத்திலிருந்து இன்று வரை, எதை எதையோ நாடகம் என்று எண்ணி மாய்ந்து கொண்டிருக்கிறோம். எது உயிர்த்துடிப்புள்ள theatre-ஓ அதை எவ்வளவு பயங்கரமாக உதாசினம் செய்துள்ளோம். செய்து வருகிறோம் என்று தோன் றிற்று. எதை அல்காஷியின் தயாரிப்பில், நாடகம் என்று புதிதாக 1962ல் கண்டேனோ அதை, நான் 'தெருக்கூத்திலே' கண்டேன். தமிழ் நாட்டில், இதைக்காண வாய்ப்பு இருந்திருப்பின் அன்றே இதைத் தெரிந்திருப்பேன். தமிழ் நாட்டுக்கு வெளியில், தமிழ ரல்லாத ஒருவர் (சங்கீத நாடக அகாடமியின் அன்றைய
செயலாளர், சுரேஷ் அவஸ்தி எடுத்துக் கொண்ட அக்கறை காரணமாக டெல்லி வந்தது தெருக்கூத்து) எனக்கு இந்த இன்னொரு revelation ஐத் தந்தார். எனக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்திய வர்கள் எனது மானஸிகக் குருக்கள் இவர்கள் இருவரும்.
பின் நாட்களில், பீட்டர் ப்ருக்ஸ் ரிச்சர்ட் ஷெக்னர், க்ரோட்டோவ்ஸ்கி, முதலிய, இன்றைய நாடக உலக கலை மேதைகளின் உலகங்களுடன், கருத்துக்களுடன் பரிச்சயம் ஏற்பட்ட பொழுது, அவர்கள் கண்ட உலகை நான் நமது பாரம்பரிய தியேட்டரான, நாம் உதாசினம் செய்துள்ள தெருக்கூத்தில் கண்டேன். இதுபற்றி பின்னர் எழுதவேண்டும்.
இவையெல்லாம் இக்கட்டுரைத் தொகுப்பில் இல்லா தவை. இல்லாதவை என்று சாட்டடியாகச் சொல்லிவிட முடியாது. இத்தகைய கருத்துக்கள் கொண்டவன் நான், என்பது இக்கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு, அதிர்ச்சியாக வந்து விழாது. "ஆமாம், அப்படித்தான் இருக்கவேண்டும்" என்றே தோன்றும். ஏனெனில், இக்கட்டுரைகளை அவ்வப்போதைய சந்தர்ப்பங்களின் தூண்டுதலில் எழுதும் போது, இத்தகைய கருத்துக் களின் சாயல், இக்கட்டுரைகளில் வரும்.
நான் இயங்குவது ஒரு சிறிய வட்டத்திற்குள். சிறு பத்திரிகைச் சூழலில் தான் என் இயக்கம் இருந்து வந்துள்ளது. இது ரொம்பச் சிறிய வட்டம். எனக்கும், என் கருத்துக்களுக்கும், இச் சூழலுக்கும் எதிராக உள்ள சூழல் மிக அகண்டது, பிரம்மாண்டமானது, மிகப் பலம் வாய்ந்தது. என் காரியங்கள், சமுத்திர அலைகளுக்கு எதிராக கைவீசுவது போன்றது தான் என்பது எனக்குத் தெரியும். பலமற்றது. வியர்த்தமானது. ஆனால் என்னளவில் இதுதான் அர்த்தம் உள்ள செயல். ஆகவே இதைத்தவிர நான் வேறு எவ்விதமாகவும் செயல் பட்டிருக்கமுடியாது.
ஆனால் இச்சின்ன வட்டத்திற்குள்ளும் பொறாமை, பகைமை, prejudices இவற்றிற்கு நான் ஆளாகியிருக் கிறேன். இது வேடிக்கை. நமது நாடக இயக்கம் எத்தகைய தாக இருக்கவேண்டும், எத்தகைய பாதை
viii
யில் செல்ல வேண்டும். நமது அணுகல் எத்தகை தாக இருக்கவேண்டும் என்று நான் சொல்கிறேனோ அதற்கு எவ்விடங்களிலிருந்து உடன்பாடு காணமுடியும் என்று நமக்குத் தோன்றுகிறதோ, அவர்கள் எதிரொலி கள் வேறு விதமாகத்தான் உள்ளன. நமது பார்வைகள். கருத்துக்கள், நம்மை ஒற்றுமைப்படுத்துவதாகத்தோன்ற வில்லை. தனி நபர் குரோதங்கள், கட்சிக் கட்டுப்பாடுகள், இடையில் வந்து விடுகின்றன. தன் கருத்துக்களுக்கு நேர்மையாக தான் இருப்பதில்லை, தன் கருத்துக்களுக்கு நேர்மையாக இவர்கள் செயல்பாடுகள் இருப்பதில்லை.
எப்படியாயினும், யாரும், வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும். எப்படிப்பட்ட பார்வையில், அணுகல் முறையில் நம் நாடக இயக்கம் ஒரு சிறு உள்வட்டச் சூழ்லில் இயங்கவேண்டும் என்று நான் சொல்கிறேனோ அவ்வகையில், நமது சிறு வட்ட நாடகச் சூழலில் இயக்கம் தோன்றியுள்ளது.
பல வருஷங்களாக என் மனத்தில் துடித்துக் கொண் டிருந்த எண்ணங்களை, தமிழ் நாடகச்சூழல் மாற நாம் கொள்ள வேண்டிய முயற்சிகளை, அதன் அணுகு முறை களைப்பற்றி 1976-ல், சந்தர்ப்பம் கிடைக்கவே எழுதி னேன். அது 1977-ல் பிரசுரமாயிற்று. அதற்கு சில மாதங்களுக்குப்பிறகு, டெல்லியில் நடந்த ஒரு நாடக விழாவில் பாதல் சர்க்காரின் "போமா'' என்ற நாடகத் தைப் பார்த்தேன். அது என் பார்வைகளை, என் அணுகு முறைகளை சரியென்று நிரூபிப்பதாயிருந்தது. இது பற்றி முன்னமே எனக்குத் தெரிந்திருந்தால், பாதல் சர்க்காரின் இயக்கத்தைப்பற்றியும் எழுதி, என் குக்கு பலம் சேர்த்திருப்பேன், பாதல் சர்க்காரை, என் குக்கு சாட்சியாக அழைத்து.
இதன் பின்னர் தான், வீதி நாடகம், நிஜ நாடகம்
ix
பரீக்ஷா என்று பல முயற்சிகள் தோன்றவாரம்பித்தன.
இதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான்.
என் இயக்க சக்தி பற்றி எனக்கு ஏதும் ஊதிய பிரமை கள் கிடையாது. அதுவும் தமிழ் நாட்டில், இந்த இக்கினி பூண்டு சூழலில். ஆனாலும், ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, என் கருத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்த முடிந்திருக்கின்றன, ஒரு மாதிரியான வன்முறை எதிரொலியாகவேணும், என்று தான் நான் நினைக்கி றேன். சூழலின் முக்கியத்வத்தைப்பற்றி, எனக்கு முந்தி யாரும் பேசியது கிடையாது. இன்று எல்லோரையும், அதுபற்றி சிந்திக்க வைத்திருப்பது மட்டுமல்லாமல், என்னைப் பலமாக தாக்குவதே நோக்கமாயிருப்பினும், சூழலைப்பற்றி எதிர்மறையாகவாவது எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தை என் கருத்து நிலைப்பாடுகள் உருவாக்கியுள்ளன. இதேபோலத்தான், தனி மனிதனுக்கும் படைப்புக்கும், சமூகத்தில் ஒருவனது இயக்கத்திற்கும் இடையே இருக்கவேண்டிய, முரண் களற்ற ஒற்றுமை பற்றியும். இது பற்றியும், நான் முதன்முறையாக (சமீபத்து பழமையில்) விவாதங்களை நான் கிளப்ப முடிந்திருக்கிறது. எல்லாக் கலைத்துறை களுக்கும் சிந்தனைத் துறைகளுக்கும் உள்ள பரஸ்பர பாதிப்பு, அவற்றின் அடியோட்ட ஒற்றுமை பற்றி நான் தான் முதலில் பேச ஆரம்பித்தேன். இன்று, எந்த சிறு பத்திரிகையும் இப்பார்வையைத் தவிர்க்க முடியவில்லை. இலக்கிய விமர்சனத்தின் எல்லைகளை என்னால் பல படவாக விஸ்தரிக்க முடிந்திருக்கிறது. இதற்குப் பிறகு, யாரும், பழைய வடிவம் உள்ளடக்கம், அழகுபடுத்து வது என்ற பள்ளி வாத்தியார்த்தனத்தில் விமர்சனத்தை அணுகமுடியாது போயுள்ளது. இவையெல்லாம் நாம் நிதர்ஸமாகக் காணக்கூடிய உண்மைகள். 1960- க்கு முன் இலக்கிய, விமர்சன, சிறு பத்திரிகை, கலைச்
சூழல்கள் எவ்வாறு இருந்தன. அவற்றின் கருத்தோட் டங்கள், பரப்பு. எல்லைகள் என்னவாக இருந்தன. இன்று 1984-ல் எவ்வாறான குணம் கொண்டவை அவை. இம்மாற்றத்திற்கு காரணமாக, இடைபுகுந்து தன் கருத்துக்களை முன்வைத்தது யார் என, பகைமைக் காய்ச்சல் குரோதங்கள், கட்சிவாதங்கள் ஏதும் இன்றி, திறந்த மனத்தோடு பார்ப்பவர்களுக்குப் புரியும்.
எனினும் நான் ஆச்சர்யப் பட்டுபோகிறேன். இது சாம் தியம் என நான் நினைத்ததில்லை. இக்கினியூண்டு வட் டத்தில் இருந்து கொண்டு, இத்தகைய பகைக்குணம் கொண்ட சூழலில், யாருக்கும் உவக்காத கருத்துக் களைக் கூறிக் கொண்டிருக்கும் ... சாத்தியமா? பாதிப்பு களே சாட்சியம்.
இன்னமும், என் பாதை தனிப்பாதை தான். ' நம்ம ஆள்' என்று, என்னை, என் கருத்துக்களை ஆர்ப்பரிக்க, ஒரு கும்பல், ஒரு கு, ஏதும் இல்லை எனக்கு. என்னை எதிர்க்கும் எல்லோருக்கும் உண்டு. யாத்திரீகமான கைதட்டல்கள், கைதூக்கல்கள் அவர்களுக்கு உண்டு. ஆக என்னைத்திட்டவும், கல்லெறியவுமாவது, நான் செல்லும் தனிப்பாதையில்தான் அவர்கள் என்னைப் பின் தொடர்கிறார்கள். அது அவர்களுக்கே தெரிவ தில்லை. ஆதலால் அவர்கள் அதை ஒப்புக் கொள்வது மில்லை .
1963 லிருந்து நேற்று வரை, நான் தமிழ் நாடக உலகைப் பற்றி, சொல்ல நினைத்தவற்றை, பதிப் பித்த ஆவணமாக, பதித்த கால வாரியாகவே, இத் தொகுப்பு தருகிறது. இது, தமிழ் நாடகச் சூழல், உலகம், என்னைப் பாதித்த சரித்திரத்தையும், நான் சென்ற பாதையில், அச்சூழல் பாதிக்கப்பட்டு மாறும், முயற்சிகளாக அது பின் தொடர்ந்த சரித்திரத்தையும்
ஆவணமாகத் தோன்றும் இத் தொகுப்பு தெளிவாக்கும்.
இத்தகைய ஒரு ஆவணம், நாடக உலகத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாகக் கருதப் படுபவர் எவரிடமிருந்தும் கூட, பம் மல் சம்பந்த முதலி யாரின் "நாடக மேடை நினைவுகள் '' நீங்கலாக, வேறு எவரிடமிருந்தும், பிறக்கவில்லை. இப்பார்வையில் பம் மலின் நாடக மேடை நினைவுகள்'' மிகச் சிறப் பான ஓர் நூல். இதன் முக்கியத்வம் உணரப்படவில்லை. 60 வருடகாலம் நாடக மேடையிலேயே தன் ஜீவிதத் தைக் கழித்த டி.கே. ஷண் முகத்தின் சுயசரிதம் கூட நாடகக்கலை பற்றியோ, ஏன், அதன் வளர்ச்சி பற்றியோ, 60 வருடங்களில் நாடகமேடை பெற்ற மாற்றங்கள் பற்றியோ ஏதும் சொல்லவில்லை. காலில் சலங்கை கட்டி கூத்தாடிக் கொண்டும் பாடிக்கொண்டும் மேடையில் பிரவேசம் செய்த சிறுவன் ஷண்முகம், ஒளவையாராக. தடியூன்றித் தள்ளாடிய காலம் வரைய நாடக சரித்திரம், மிக சுவாரஸ்யமானது. ஆனால் இச்சரித்திரம் பற்றிய பிரக்ஞையே டி.கே. ஷண்முகத்திற்கு இருக்கவில்லை. அவர் தந்துள்ளது 60 வருடகால வெறும் நாடக நிகழ்ச்சிப் பட்டியல், ஊர் பிரயாண பட்டியல், வரவு செலவுக் கணக்கு விவரம். வேறு யாரிடமிருந்தும் ஏதும் இல்லை. ஆண்டி ராமசுப்பிரமணியம் எழுதியிருக்கக் கூடும். எழுதவில்லை. அவர் நாடக வாழ்க்கை 30க்களுக்கு முன்னரேயே ஓய்ந்து விட்டது.
இவ்வளவுக்கும் நான் நாடகத்திற்கு என்னை அர்ப்பணித் துக் கொண்டவன் இல்லை. என்னின், என் குடும்பத்தின் ஜீவிதத்திற்காக நான் செய்யும் தேவடியாப் பிழைப்பு எடுத்துக்கொள்ளும் நேரம் போக, மிஞ்சிய நேரத்தில் நான் கொள்ளும் அக்கறைகளிலும் பின்னப்பட்ட பகுதி நாடகம். அவ்வளவே.
இன்னொன்றையும் இன்றையச் சூழலில் சொல்ல
xii
தருகிறது. சிந்தனை
வேண்டும். 1963-லிருந்து இன்று வரைய என் சிந்தனை களை கருத்துக்களை இத்தொகுப்பு தருகிறது.-20 வருட கால சிந்தனைத் தடங்களை. இத்தொகுப்பு என்னைப் பற்றியும் என் சூழலைப் பற்றியும், தமிழ் நாட்டைப் பற்றியும் சொல்லும். இவை எல்லாவற்றின் பரஸ்பர பாதிப்பைச் சொல்லும்.
வகளை
நான் தனியன். எல்லோராலும் வசை பாடப்படுபவன். என்னை வசை பாடுபவர்களில் ஒருவராவது தம் எழுத் துக்கள் அனைத்தையும், திரும்ப அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன், தம் எழுத்துக்கள் அனைத்தையும்; இவ்வாறு தொகுத்து முன் வைக்கும் திராணி கொண்ட வர்தாமா? தமது நேற்றைய முந்திய மாதத்திய , முந்திய வருடங்களைச் சேர்ந்த தம் எழுத்துக்களில், தம் இன்றைய முகம் பார்த்துக் கொள்வார்களா? அவற்றை வெளியுலகின் முன் வைப்பார்களா? அந்த நேர்மை அவர்களுக்கு உண்டா ? இது வரைக்கும் இது நிகழ வில்லை. நிகழவேண்டும் என்பது என் விருப்பம். அது தான் நியாயம். அவர்கள் உண்மை , நேர்மை, சார்ந்த வர்களாயிருந்தால் செய்யவேண்டும். மாங்கொட்டை கன்றாகி, செடி ஆகி மரமாகிய வளர்ச்சி எங்கு? மனிதன் குதிரையாகி, கழுதையாகி. ஓநாயாகி...... இந்த விசித்திரங்கள் நிகழ்வது எங்கு என்பது அப்போது தெரியவரும். பின்ன தன் சரித்திரம் எங்கும் முன் வைக்கப்படுவதில்லை.
என் வேறு ஒரு தொகுப்புக்கு (எதிர்ப்புக் குரல்) சுந்தர ராமசாமி சொன்ன வார்த்தைகளை திரும்பச் சொல்வ தென்றால்.
"......கட்டுரைகளை வரிசையாக ஊன்றிப்படிக்கும் ஒரு வாசகன் சிந்தனை உலகில் நிகழ்ந்துள்ள ஒரு தொடர்ச்சி யான யாத்திரையைப் பார்க்க முடியும். இந்த யாத்திரை
xiii
காலப் போக்கில் ஆசிரியர் தன் பார்வையில் பெற்றுள்ள விகாசங்களையும். இவ்விகசிப்பு புதிய பரிமாணங்களைத் தொட்டு நம் கலாச்சார நோய்களுக்கு முன்னர் கூறப் பட்டுள்ள எளிய விளக்கங்கள் வெளிறிப் போகும்படி, ஆழமான காரணங்களை முன்வைப்பதையும் காண லாம்..... இவ்வாறு தனித்தும், ஒன்றை யொன்று தாங்கியும், ஒன்று மற்றொன்றுக்கு வலுத்தந்து செழுமைப்படுத்தியும், - அங்கங்களும் உடம்புமாக எழுந்துள்ள இவ்வுலகம் முன் கூட்டிப் போட்ட ஒரு திட்டத்தின் வெற்றி அல்ல-சாமர்த்தியம் அல்ல. தன் பார்வையில் வெகு ஆத்மார்த்தமாக ஒட்டி நின்று உண்மை உணர்வுடன் தன் கலாச்சாரப் பிரக்ஞையை விரித்தபோது எழுந்த ஆகிருதி இது''. பவர் மோகன்
இத்தொகுப்பும், இந்த ஆவணமும் கூட, சுந்தர ராம சாமியின் கருத்துக்களை சாட்சியப் படுத்தும்.
கடைசியாக ஒன்று: உபநிஷத ரிஷிகள் காலத்திலிருந்து, கிரேக்க தத்துவ ஞானிகள் காலத்திலிருந்து இன்று வரைய சரித்திர கதியில் காலவோட்டத்தில், நமது இன்றைய கருத்துலக பிரவாஹத்தில், எண்ணெற்ற தத்துவ ஞானிகள், சிந்தனை மேதைகள், தம் கருத் துலகத்தை - உபநதிகளாக, இப்பிரவாஹத்தில், இன்றைய பிரவாஹத்தில், சேர்த்துள்ளனர். இப்பிரவா ஹத்தில 150 வருடங்களுக்கு முன் ஓர் உபநதியாகச் சேர்ந்தவர் மார்க்ஸ். அந்த அளவில்,20ம் நூற்றாண்டில், 1984-ல் வாழும் எந்த கருத்துலகவாதியும், அறிவார்ந்த உலகில் வாழ்பவனும், மார்க்ஸ்க்கு , இன்று நாம் நின்றிருக்கும் இடத்தின் இப்பிரவாஹப்புள்ளியில், மார்க்ஸ் ஒன்று கலந்துள்ள அளவிற்கு, குணத்திற்கு, யாரும் வாரிஸு. இதுவேறு. ஆனால், மார்க்ஸை , ஒரு mummyயாக பாதுகாத்து, மாதாக்கோயிலில் வைத்து, வழிபடுவது வேறு. அதுவும், தன் சீரழிவுக்கெல்லாம்,
xiv
பாதுகாப்பாக மார்க்ஸின் mummy பாதுகாப்பாக ஆகிப் போகும் அவலம், இந்தப் புது மதவாதிகளிடம் காணப் படும் பரிதாபம்.
இருப்பினும், எஸ்.வி. ராஜதுரையிடம் எனக்கு மதிப்பு உண்டு. தமிழ் கருத்துலகில் அவர் தோற்றத்திற்கும் பிறகு, அவரது கருத்துக்களின் தாக்கத்தால் தான், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், ஒரு குறிப்பிடும் அளவு மாற்றம் நிகழ்ந்துள்ளது கட்சி தரும் கோஷங்களையே', மார்க்ஸிஸம் என்று ஆடிய கோமாளிக் கூத்தாட்டத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது. இதில் மாறியவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மாற்றத்தையும் சரி, மாற்றத் திற்குக் காரணம், ராஜதுரை என்பதையும் சரி. ஆனால் உண்மையும் வரலாறும், ராஜதுரையின் பக்கம். இந்த மாற்றமும் முழுமாற்றமல்ல. முன்பு ஒரே மாதாக் கோயில் இருந்த இடத்தில் இன்று பல மாதாக் கோயில் கள்.. மாதாக் கோயில்கள் மாறியுள்ளனவே தவிர, ஆராதனை நிற்கவில்லை. ஆனால் முன்னைய கோஷங் களின் வறட்டுத்தனம் குறிப்பிடக்கூடிய அளவு குறைந்துள்ளது.
இரண்டாவது. ராஜதுரையின் மீது எனக்குள்ள மதிப் பின் மிகமுக்கிய காரணம், அவர் சார்ந்துள்ள மார்க்ஸிஸ தத்துவத்தின் மீது அவருக்குள்ள ஆத்மார்த்த பற்று, நம்பிக்கை. அடித்தளத்தில் உள்ள வலுவான மனிதாபிமானம். இவையெல்லாம் நான் வெகுவாக கௌரவிப்பவை. இதன் மற்றொரு பக்கம் தான், எந்த அரசியல் சக்திகளிடமும், இலக்கிய, கலைப் போர்வை போர்த்து லவும். கடைத்தர அரசியலார்களான, மற்ற எல்லோரிடமும் நான் காணும் வேஷதாரித்தனம். என் மதிப்பை அவர்கள் பெற முடியாது போகும் காரணம் நான் காணும் மற்ற எவரிடமும் இஞ்சித்தும் காணப்படாத குணங்கள். ஆத்மார்த்த பற்று, நம்பிக்கை, அடியோட்ட
XV
மனிதாபிமானம். இந்த மற்ற ஒவ்வொரிடமும், மார்க் ஸிஸம் தரித்துக் கொள்ளப்படும் வேஷம். இவர்கள் எல்லாரிடமும், இது சுயலாபத்திற்காகச் சேர்ந்த கட்சிப் பணி. அல்லது கும்பல் தன சௌகரியங்களுக்கான சார்பு. ஒரு Careerism, ஆத்மார்த்தமாக, உன்ளார்ந்த நம்பிக் கைகளில் இவர்கள் கடைந்தெடுத்த பூர்ஷ்வா அபிலா ஷைகள் கொண்டவர்கள். இவர்கள் உதிர்க்கும் கோஷங்களும், வெளிச் செயல்பாடுகளும். - இவர்களது அந்தரங்க அபிலாஷைகளுக்கும் வாழ்க்கைக்கும் முரண் பட்டவை. |
இந்தக் கூட்டம் அனைத்திலிருந்தும் வேறுபட்டவர் தனித்தவர் ராஜதுரை. தன் நம்பிக்கைகளுக்காக, தன் வாழ்க்கை சௌகரியங்களைத் துறக்கும் மனோபாவத் தவர். தன் மார்க்ஸிஸ நம்பிக்கைகளுக்காக தன் வாழ்க் கையை அர்ப்பணிக்கும் மனோபாவத்தவர்.
இதன் காரணத்தாலேயே, இவரது கம்யூனிஸ சகபாடி களுக்கு (கவனிக்கவும், இவர்களைக் குறிப்பிடும்போது, '' மார்க்ஸிஸ'' என்று சொல்லவில்லை நான். மார்க் ஸிஸத்துக்கும் இவர்களுக்கும் ஆத்மார்த்தத்தில் ஏதும் உறவு கிடையாது) இவர், காலைச்சுற்றிய பாம்பு. வெளிச் சொல்ல முடியாத பகை. மெல்லவும், விழுங் கவும் முடியாது, துப்பவும் முடியாது, தொண்டையில் சிக்கிய ஒன்று ராஜதுரை. இதை ராஜதுரையும் உணர்ந் தவர் தான். ஆனால் அவருக்கும் வெளிச் சொல்ல முடியாத நிர்ப்பந்தம். ராஜதுரையின் நிர்ப்பந்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவரது ஆளு மையில் உள்ள நேர்மை. இது காறும் சென்றுள்ள தூரத்திற்கு மேலும் சென்று, இன்னும் மிஞ்சியுள்ள வறட்டுத்தனத்தையும் உணரவேண்டும். தான் உள்ளூற உணரும் உ.ண்மைகளை நிர்த்தாக்ஷண்யமாக வெளிக்
xvi
-
கொணர வேண்டும் என்பது என் ஆசை. அதுதான் அவர் ஆளுமைக்கு இயல்பானது, அவர் எதற்குப் பயப் படுகிறார், ஏன் என்பது தெரியவில்லை .
ஆகவே, என் கருத்துலகத்தை குறைந்த வறட்டுத்தனம் கொண்ட ராஜதுரையின் கருத்துலகம் எவ்வாறு எதிர் கொள்கிறது என்று பார்க்க எண்ணி, ராஜதுரையை, இத்தொகுப்பிற்கு முன்னுரை எழுத வற்புறுத்தினேன், அவர் சுதந்திரமாக எழுதும் முன்னுரை எனக்குக் காட்டப்பட வேண்டாம் என்றும் நேரே அச்சகம் செல்லும் என்றும் அவர் எப்படியும் எழுதலாம் என்றும் சொன்னேன். நாடக உலகம் பற்றிய அவரது பரிச்சய மின்மை என்று சொன்னதை நான் ஏற்கவில்லை. ஏனெ னில் அவர் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளது. பரிச் சயம் இல்லை என்று அவர் சொல்லிக் கொள்ளும் இன்னும் பல விஷயங்கள் பற்றி எழுதியுள்ளதும் எனக்குத் தெரியும்.
இவ்வாறு தான், எனது முந்தைய தொகுப்புகளுக்கும் முன்னுரைகள் எழுதப்பட்டன. எனக்கு எதிர் முனையில் இருப்பவராக உள்ளவரை அழைத்து எழுத சுதந்திரம் கொடுத்து நேராக அச்சிற்கு அனுப்பச் சொல்வதே என்வரையில் இதுகாறும் நடந்துள்ளது. என் விமர் சனக் கருத்துலகை பெருவாரியாக நிராகரித்து போகும் இடங்களில் எல்லாம் பிரசாரம் செய்து கொண்டிருந்த கட்டத்தில் தான் சி. சு. செல்லப்பா, 'பாலையும் வாழையும்' தொகுப்பிற்கு முன்னுரை எழுத கேட்டுக் கொள்ளப்பட்டார். என்னுடன் தீவிர பகைமையும், பொறாமையும் கொண்டிருந்த கட்டத் தில் தான் ' அக்கிரகாரத்தில் கழுதை' திரைநாடகத் திற்கு தருமு சிவ ராமு முன்னுரை எழுதினார். ஏதோ காரணங்களுக்காக என்னுடன் தீவிர மனஸ்தாபம்
xvii
கொண்டு, சிநேகிதம் முறிந்து விட்டதோ என்று என்னை எண்ணவைத்த நிலையில் தான், சுந்தரராமசாமி * எதிர்ப்புக்குரலுக்கு' முன்னுரை எழுதினார். இவையெல் லாம், நான் அச்சிட்ட புத்தகத்தில் வந்த பிறகுதான் படித்தவை. இந்த வரிசையில் நான்காவது நபர் ராஜதுரை. ஒருவரை ஒருவர் நேரில் அறிந்ததில்லை. பழகியதில்லை .
என் விமர்சன கருத்துலகை முற்றாக நிராகரித்தவர், பல சமயங்களில் எரிமலையாக கொந்தளித்தவர் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் என் கருத்துலகத்துடன் மோத அவருக்கு சுதந்திரம் தந்திருந்தேன்.
அந்த சுதந்திரத்தின் விளைவு, இங்குள்ள அவரது பின்னுரை. மார்க்ஸிய கருத்துலகத்தின் மோதலாக-- நான் விரும்பியது- இப்பின்னுரை அமையவில்லை என்பதிலும், அவர், வேறுவகை வண்ணங்கள் கொண்ட கட்சியின் நிர்ப்பந்தங்களின் வசப்பட்டே இன்னும் உள்ளார். என்பதிலும், எனக்கு வருத்தமே.
இருப்பினும், நான் கொடுத்த வாக்குப்படி, அவர் பின்னுரை. அதை இங்கு நான் எதிர்கொள்வது முறையல்ல.
15-12-84
aviji