Pages

Sunday, May 30, 2021

ஷிஹர்சாடே-வின் ஒரு பிள்ளை கார்லோஸ் ஃபுவண்டஸ் + தமிழில் : அ.ஜ. கான்---- காலக்குறி

 காலக்குறி

ஷிஹர்சாடே-வின் ஒரு பிள்ளை கார்லோஸ் ஃபுவண்டஸ் + தமிழில் : அ.ஜ. கான்,
தன் கலை இலக்கிய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருந்தவைகளை குறிக்கும் வகையில் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட விசேசக் கட்டுரையிது.
ஆசிரியரைப் பற்றி : பன்னிரண்டுக்கும் மேலான நாவல்கள், பல சிறுகதைத் தொகுதிகள், நாடகங்கள், இலக்கிய - அரசியல் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றிற்கு சொந்தமானவர். 1984ல் மெக்சிகோ தேசிய இலக்கிய விருதையும் 1987ல் ஸ்பெயினி லிருந்து இலக்கியத்திற்கான செர்வான்டிஸ் விருதையும் பெற்றவர். ஸ்பானிய மொழி எழுத் தாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் மிக உயரிய விருதும் இதுவே. 1974-77ல் பிரான்சில் மெக் சிகோவிற்கான தூதராக பணிபுரிந்தவர். 1986-87ல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராக இருந்தவர். (Arab News 5/96)
நாவல் ஒரு கப்பல் என்றால், சிறுகதை கடலோரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு படகைப் போன்றது. ஒரு நாவலை எழுத ஒலிம்பிக் குழுவொன்று தேவைப்படுகிறது. தனிப்பட்ட ஆணோ, பெண்ணோ நாவலொன்றை எழுத முனையும் போது கிட்டத்தட்ட ஒரு ஓவியக்குழு போன்றோ , நகரத் திட்டக்குழு போன்றோ, பரபரப்புச் செய்தி எழுதும் கட்டுரை யாளர் போன்றோ , நவநாகரிக வல்லுநர்கள் போன்றோ, கட்டிடம் மற்றும் செயற்கைக் காட்சி யமைப்பு வல்லுநர் குழு போன்றோ, அமைதிக் கான நீதி, ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட், மருத்துவச்சி, வெட்டியான் மற்றும் சூனியக்காரன் அல்லது இவை எல்லாமும் சேர்ந்த மனித னாகவோ காணப்படுகின்றனர்,
ஆனால் சிறுகதை எழுத்தாளன் இவையெல்லா வற்றிற்கும் மாறாக வெறும் ஒரு கப்பலோட்டி யாகவே காணப்படுகிறான். ஏன் இந்த மெய்ப் பற்று தனிமைக்கு இட்டுச் செல்கிறது? ஏன் கடலோரத்துப் பார்வை போன்ற ஒன்று தேவைப் படுகிறது? ஏனென்றால், நடு இரவில், கடலோரத்திற்கு அருகில், கடலைக் கடக்கும்போது நேரம் குறிப்பிடாமல் சொன்னால் நாளை என்பது இல்லாமல் போய்விடும் என்பதை ஒருவேளை கதை சொல்லிகள் தெரிந்திருப்பார்களோ? தன் மரணத்தை இன்னொருதரம் தள்ளிப்போட அவசரம் அவசரமாக கதை சொல்லிச் செல்லும் ஷிஹர்சாடேவின் பிள்ளைதான் ஒவ்வொரு கதை சொல்லியும்.
ஒவ்வொரு சிறுகதையும் ஆயிரத்தொரு இரவுகளின் அவசரமும், சுருக்கச் செறிவும் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் சுருக்கச் செறிவு கதையின் ஆழத்தை புறந்தள்ளு வதாகவோ அல்லது அளவீடுகளை பொருத்துவ தாகவோ இருக்கக்கூடாது. சிறுகதை ஒரு குள்ள மான நாவல் என்பதாகாது. முழுமை, ஒழுங்கு, அழகு போன்ற தனக்கேயுரியவைகளுடன் கூடிய ஒரு பொருள்தான் சிறுகதை. அது தனக்கேயுரிய திருவருள் தோற்றங்கள் கொண்டது (ஒருவேளை, ஜாய்ஸ் மற்றும் பிரௌஸ்ட்-டிடம் அரிதாக காணப்படும் வெளிப்பாடுகள்) சிறுகதையில் அதன் அழகு, அர்த்தப்பாடு மற்றும் ஆற்றலின் பரிமாணம் ஆகியவை உடனடியாகவும், வெளிப் படையாகவும் அமைவது அவசியம் என்கிறார் Sean O' Faoliain. அதாவது ஒரு குழந்தையின் பட்டம் வானத்தில் பறப்பதுபோல ! "ஒரு சிறு ஆச்சரியம், ஒரு சுருக்கம், கணநேர ஒளிர்வு”.
மரணத்தைத் தள்ளிப் போடுவதில் இதுவரை, ஆலன் போ, கோகல், செகாவ், மாபசான் அல்லது ஃபிளான்னரி ஓ கன்னோர் போன்றோரின் கலையிலிருந்து முற்றிலும் வேறுபடும் ஒரு கலையைப் போல சிறுகதையைக் காட்ட இயலும். இருபெரும் இலத்தீன் அமெரிக்க இலக்கிய மேதைகளான ஜார்ஜ் லூயி போர்ஹே மற்றும் ஜீலியோ கோர்த்தசார் ஆகியோரையே நான் எனது நினைவில் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஆலன் போ-வின் அனைத்து படைப்புகளையும் ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்த கோர்த்தசார், கதையில் உள்ள போவின் துரிதத்திற்கான கட்டளைகளை மிக நுட்பமாகவே உணர்ந்திருந்தா துரித உணர்வை தன் கதைகளில் வெளிப்படுத்துவதில் எல்லோரையும் மிஞ்சி நின்றார் கோர்த்தசார். ஒரு பார்வையாளன் மீன் காட்சிய கத்திற்கு சென்றிருக் கையில் தன் முகத்தை சாலமண்டர் என்ற புராண சவ்வுப்பல்லி பெற்றிருப்பதை பார்க்கி றான்; அவ்வீடு கண்ணுக்குப் புலப்படாத சக்திகளால் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கிச் செல்லப் படுகிறது; நவீன மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகவும் அதே நேரம்(0) அஸ்டெக் மனிதனொருவன் பிரமிடு ஒன்றில் பலியிடப்படுவதாகவும் கனவு காண்கிறான். ஆக கனவில், அறுவை சிகிச்சைக்கு உட்படுவதும், பிரமிடில் பலியிடப்படுவதும் ஒரே மனிதன் தான் என்பது உணரப்படுகிறது. கோர்த்தசாரின் சிறுகதைகள் அனைத்தும் தன்னகத்தே மறைத்துக் கொள்ளும் பகுப்பாய்வு தொகுதிகளாகவே காணப்படுகின்றன.
இன்னொருபுறம் பார்த்தால் போர்ஹேவின் சிறுகதைகள் - கருக்கொண்ட கதைகள் மற்றும் அதன் திறவுகளின் மூலம் உருவாக்கப்படும் பிறகதைகள் போன்ற இவைகளுக்கிடையே உண்டாக்கப்படும் அகத் தொடர்புள்ள கதைகளின் தொகுப்பாகவே காட்சியளிக்கின்றன - இவரின் அனைத்துப் படைப்புகளுமே கிளைப் பரப்பிய பாதைகள் அடங்கிய தோட்டமாகவே காட்சியளிக்கிறது. பெரும் கதையம்சங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் இவரின் இலக்கியங்கள் ஒன்றையொன்றை மறைத்து நிற்கும் தன்மை கொண்டதாகும். அதாவது "தலோன், உக்பர், ஆர்பிஸ், டெர்டியஸ்" போன்ற வைகளின் புனைவு நகரங்கள் காலத்திரைகளின் பின்னால் மறைக்கப்படுவது, நினைவுகளினால் தாங்கிப் பிடிப்பது போன்ற அனைத்தும் மொழியின் மூலம் மட்டுமே உருவாக்கப்படுகிறது. இவ்வகை யில் மறைத்து, காலங்கடத்தும் பாணிக்கு சிறந்த உதாரணம், "Pierre menard Author of the Quixote" என்ற போர்ஹேவின் கதை. Menard என்பவர் பிரான்சு மாகாணப் பகுதி யொன்றில் வாழ்ந்த ஒரு, ஆவணப் பரிசோதகர். இவர் செர்வான்டி ஸ் . நாவலை திரும்ப எழுத முடிவெடுத்து, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே காப்பி அடித்து எழுதுகிறார். அப்படி மீள் எழுதுதலுக்கு ஆளாகியும் கூட அது ஒரு புதிய படைப்பாக காணப்படுவதற்குக்கு காரணம் டான் கெஹாட்டே - வை நாம் புதிய முறையில் வாசிக்க நமக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல இருப்பதுதான். நாவல் 1665ல் வெளியிடப்பட்ட கால கட்டத்தில் அனைத்தும் நிகழ்வதாக ) இருந்தாலும் அதன் இன்றைய வாசிப்பானது கதையாடலின் புதிய பொருளடக்கமாகவே உள்ளது. கடந்த காலம் அதற்கேயுரிய புத்துருவாக்கங்கள் பெறுவதையும், டான் - கெஹாட்டே-வின் அடுத்த வாசிப்பானதும்கூட அந்நாவலுக்கு புத்தம் புது வாசகனாக மாறுவதையும் தனது உத்தியினூடாக வெளிப்படுத்துகிறார் போர்ஹே.
இலத்தீன் அமெரிக்காவைப் பொறுத்த வரை - போர்ஹே-வையும், கோர்த்த சார் - ஐயும் நினைவில் கொள்ளாமல்
சிறுதை எழுதுவது மிகுந்த சிரமமே. ஒவ்வொரு கதையையும் சுயம் கலந்த ஒற்றுமையை நுட்பமான முறை மூலம் எழுதுவது ஒருவர், மற்றொருவரோ தன் ஒவ்வொரு சிறுகதைக்கும் முன்னும் பின்னும் குசு குசுத்தவாறு உள்ள பிற கதைகளை அத்திரமற்ற முறையில் எழுதுகிறவர். ஆனால், போர்ஹே அல்லது கோர்த்தசாரின் எழுத்துப்பாணியைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அந்த எழுத்தாளன் தன் படைப்புகளை “யதார்த்தவாத" அல்லத “புனைவுவர்த" முறையில் தருவதற்கு கவர்ந்திழுக்கப்படுகிறார். என் விஷயத்தைப் பொறுத்தமட்டில், நான் என்றுமே தினசரி நிகழ்வுகளில் புனைவுகளை கண்டுபிடிக்கும் சாத்தியப்பாடுகளில் அல்லது அதீத புனைவுருவாக்கக் கதைகளில் படிந்திருக்கும் யதார்த்தத்தைத் தோண்டியெடுப்பதில்தான் கவரப்பட்டிருக்கிறேன். ஆரம்பகாலங்களில் செர்வாண்டிசை படித்ததால் இப்போக்கு எனக்குள் ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். புனை வுக்கும், யதார்த்தத்திற்குமிடையே எல்லை யிடுவதை மறுத்த அவர், மொழிகளைக் கலப்பதி னால் உண்டாகும் ஒரு பாணிக்கு முற்றிலும் சம்பந்தப்படாத நிலையான முழு முற்றான ஒரு நவீனத்துவாதியாக இருந்தார் என்பதை மீண்டும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். காற்றா லைகள் உண்மையில் பூதங்களா என்ன? விவசாயப் பெண் அல்டேன்சா உண்மையில் ராணி டல்சினியாவா? ஸ்பானியர்களை பொம் மைகள் பயமுறுத்திவிடுமா? மற்றொரு எழுத்தாளரின் படைப்பை முன்பு படித்திருந்தேன். அதுவும் என்னிடம் பாதிப்பு களை உருவாக்கியது. அந்த படைப்புகளுக் குரியவர் பால்சாக். குறிப்பாக, அவரது Wild Ass's Skin. இதன் கதை சொல்லி பிரெஞ்சு சமூக வர்க்கங்களுக்கு தான் ஒரு சான்றுறுதி அலுவலராக ஆக வேண்டுமென ஆசைப்பட்டு "ஒட்டுமொத்த சமூக"த்தையும் தன் தலைமீது சுமப்பது மட்டுமல்லாமல் பூத கணங்கள், புராணங்கள், அச்சம் மற்றும் விவரிக்க முடியாத நிகழ்வுகளையும் சுமக்கிறார். நாவலில் வரும் Wild Ass's skin கதைசொல்லியின் விருப்பங் களை நிறைவேற்றினாலும் ஒவ்வொரு தடவையும் அவைகளை வழங்கும் போது சுருங்கிவிடுகிறது. கடைசியில் மகிழ்ச்சியற்ற தன் முதலாளியின் உயிரைப் பறித்துக்கொண்டு மறைந்துவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, புனைவுரு கொண்ட பெரும்பாலான கதைகள் கிட்டத்தட்ட பொது விடங்களின் அவதானிப்புகளாகவே உள்ளன.
நான் சிறுவனாக இருந்தபோது, மெக்சிகோ நகரத்திலிருக்கும் சினிமா கிளப்பிற்கு வாரமிருமுறை செல்வேன். அங்கு புனுவல், பாப்சட், மர்னாவ் போன்றவர்களின் மர்மக் கிளர்ச்சியூட்டும் பார்வைகளை அப்படங்களில் கண்டுபிடித்தேன். அப்படி ஒருநாள் பார்த்துவிட்டு திரும்பும்பொழுது, பாழடைந்த ஒரு பச்சைக் குடியிருப்பின் முதல்தள ஜன்னலின் வழியாக கண்ட காட்சியின் ஆச்சரியத்தால் தடுக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டேன். கவிதைப் போலொரு காட்சியைக் கண்டேன் - ஜெர்மனி வெளிப்பாட்டு வாத சினிமாவில் காணப்படும் நெகிழ்வு மற்றும் கனவியல் அம்சங்கள் அக்காட்சியில் இருப் பதைப் பார்த்தேன். அவ்வீட்டுக் கூடத்தின் நடுவே சிறுபெட்டி வைக்கப்பட்டு அதில் சின்னப் பெண்ணொருத்தி படுக்க வைக்கப்பட்டிருந்தாள் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பளிங்குச்சிலை போல காணப்பட்டாள். சுற்றிலும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது. அச்சவப் பெட்டியின் மீது ரோஜா மலர்கள் தூவப்பட்டி ருந்தன. அப்பெண்ணின் கைகளிரண்டும் இறை வழிபாட்டில் வைத்திருப்பதுபோல வைக்கப்பட்டி ருந்தன. இக்காட்சி உண்மையானதாகக்கூட இருந்திருக்கலாம். மறுநாள் காலை, அவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தால் தூண்டப்பெற்ற நான் மீண்டும் அந்தக் குடியிருப்புக்குச் சென்றேன். ஆனால், அவ்வறை இப்பொழுது முற்றிலும் மாறியிருந்தது. அந்தச் சவப்பெட்டியும் அதில் இருந்த பெண்ணும் காணப்படவில்லை. ஒரு வேலைக்காரி மட்டும் தானியங்கி கூட்டும் எந்திரத்தின் மூலம் அவ்விடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். மரச்சாமான்கள் அலங்கோலப் பட்டிருந்தன. அன்று மாலை அந்த ஈமச்சடங்கு காட்சி மீண்டும் என் நினைவில் தோன்றியது .... இரவு - பகல் எனத் தொடர்ந்து அடிக்கடி தோன்றிக் கொண்டேயிருந்தது, நான் கதை எழுதும் வரை. அக்கதைதான் "The Doll Queen" அதில் ஒரு இளைஞன் அச்சிறுமையைத் தேடி 15 வருடத்திற்கு முன்பு தான் விளையாடிய பூங்காவை நோக்கி புறப்படுகிறான். அதன் மூலமாக கதையொன்று சொல்ல வேண்டியதாகிவிடுகிறது.
1953ல் வெளியிடப்பட்ட என் முதல் சிறு கதை - மெக்சிகோவின் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பிலிபெர்டோ என்பவரைப் பற்றியது. இவர் ஸ்பெயினின் புராணச் சிற்பங்களைச் சேகரிப் பதில் ஆர்வம் கொண்டவர். பழம்பொருட்கள் விற்கும் கடையொன்றில் சக் மூல் (Chac Mool)+ என்ற மாயா நாகரிக வீரனின் சிலையொன்றை பார்த்து அதனை வாங்கிச் சென்று தன் வீட்டின் கீழ்ப்பகுதியில் வைத்துவிடுகிறார். உடனடியாக பருவகாலமற்ற மழை பொழியவாரம்பிக்கிறது. வீட்டின் கீழ்தளம் தண்ணீரால் நிறையவே அச் சிலை உணர்வு பெற்று அசைந்து தன் தேவை யைக் கோருகிறது. அப்பணக்கார பிலிபொடோ அதற்காக அகாபுல் கடற்கரைக்கு ஓடுகிறார். அங்கு அவர் நீரில் மூழ்கிவிடுகிறார். அவரின் நண் பரொருவர் அச்சவப்பெட்டியை பிலிபெர்டோ-வின் வீட்டுக்கு கொண்டுவந்து சேர்க்க, ஆடை முழுவதும் நறுமணம் கமழும் மெக்சிகோ இந்திய மனிதன் கதவைத் திறந்துவிட்டுக் கூறுகிறார். "உனக்காகத்தான் காத்திருந்தேன்”. 1951ல் அட்லாண்டிக் பகுதியில் மிகப்பெரிய மெக்சிகோ கலைக்கண்காட்சி நடந்த சமயம் தின சரியில் படித்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்ட எழுதப்பட்டதுதான் இக்கதை. அக்கண்காட்சியில் வைக்கப்பட்டி ருந்தவைகளில் சக் மூல் சிலையும் ஒன்று. ஹென்றி மூர் பல்வேறு சிலைகளை உருவாக்க அகத் தூண்டுதலாய் இருந்தது. சாய்வான இந்த அழகுமிக்க சக் மூல் சிலைதான்,
சிறிது காலமே இருந்த ஆஸ்திரிய மன்னர் மாக்சிமிலியனின் இராஜ்யம் மற்றும் அவர் மனைவி, மெக்சிகோவில் வாழ்ந்த பெல்ஜியக்காரர் கார்லோட்டா ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் என் ஆரம்பகாலம் சிறுகதைகளில் ஒன்றான "A Garden in Flanders", மெக்சிகோ நகரில் கைவிடப்பட்ட விடுதியொன்றில் உலாவும் கார்லோட்டா-வின் பேய் அங்குள்ள காப்பாளரை
மாக்சிமிலியனாக நினைத்து அடிக்கடி பேயாட்டம் பப் நடத்துகிறது. - வெளியில் மெக்சிகோச் சூரியன்
ஒளிப்பிழம்பாய் காட்சியளிக்க, உள்ளேயோ தொடர்பனி தூவ நீண்ட குளிர்காலத்தில் பிளமியத் தோட்டம் அமிழ்ந்து கிடக்கிறது. இந்த கற்பனையுரு பரிமாணம் மூடி மறைக்கப் படவில்லை. மெக்சிகோவின் சமகாலப் பார்வை கள்தான் என் சிறுகதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். என் மெக்சிகோவின் தலைவிதி கார்லோட்டாவின் பேய் போல தொடர்ந்து என்னுள் பேயாட்டம் நிகழ்த்துகிறது. "ஒரு நகரத்தின் இரவுகள் புலற் பொழுது வருவதற்கான உறுதியை தன்னிடம் கொண்டுள்ள" இரங்கற்பாடல் ஒன்று. பரந்த, அடர்ப்புகை சூழ்ந்த, மேலதிக மக்கள் பெருக்கம் கொண்ட, குப்பைகள் சிதறிய இன்றைய பெருநகரம் பற்றியான வலியின் அழுகுரல் ஒன்று - இவைகள்தான் என் பல கதைகளினூடே ஓடுகிறது. இவற்றிற்கிடையே, பணிவின் சித்திரமும், மதிப்பிறக்கமும் மற்றும் அவமதிப்பும் அந்நகரத்தை முகமற்றதாக மாற்றிவிட்டது.
ஆனால், அதன் ஆன்மாவை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.
இன்றும், கதை மென்மையானதாகவோ அல்லது கோபமானதாகவோ மற்றும் “உண்மை " அல்லது ''புனைவு'' இதில் எதுவாக இருந்தாலும் இறுதியில் ஒரு கேள்வி மட்டும் அவசியம் அதன்மீது தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நறுமணம் அதைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். கதை முற்றுப்பெற அனுமதிக்கக் கூடும். ஆனால் தடுப்பற்றதாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மரணத்திற்கு எதிரான அறிவிப்பாக ஒரு சிறுகதை இருக்கமேயானால் அக்கதையாசிரியன் நானற்றுப்போகிறான். அப்படியில்லையெனில் நோய் குறைந்து குணம் , பெறும் ஒரு மனிதனாகிறான்.
* Chac Mool- மாயா இன மக்களின்
இடி - மழைக்கான தெய்வம்.