Pages

Friday, November 25, 2022

 https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkaala.subramaniam%2Fposts%2Fpfbid0pbziVhhskDQ4NyeC1uAC6Qd6YGTxukgEdxRv2TdxZJp1pY21K8V4pH3KEG1Xiu6tl&show_text=true&width=500&__cft__[0]=AZUjfYybICpXjdphfDeC6FOzG2kyNzZBJGlKl7zpDjAjiEF4x1wG9XApC_9eY2w8Cerkg0Qq_aLuPA4Lx_PzrXA30_kvT4cW3JrLp6S89eo_4IBk9kzGyVBAZ9wIjB8aWI1k0hqVXFXCWfRRHV_7pV48&__tn__=R]-R

நாரணோ ஜெயராமனுக்குப் பிரமிள் முன்னுரை
முன்னுரை - பிர்மிள் தர்மூஅருப் :சிவராம்
அகத்துறை வாழ்வின் ஸ்திரீலட்சியமாக வாழ்ந்த கண்ணகியை அவளது அன்பின் வீர்யம் தார்மிகத் தின் தீவிரமாக முகம்கொள்ள, புறத்துறையின் சிகர நிகழ்ச்சியான ஒரு புரட்சியின் நடுநாயகியாக உயர்த்தி 'சிலப்பதிகார'மாகப் படைத்தபோது, இளங்கோ, தனிமனித தீபமாக ஜ்வலித்த நியதி பொதுவாழ்வையும்பற்றிப் பெருநெருப்பாகியதைச் சித்தரித்தான். 'சிலப்பதிகாரம்' இந்த நியதியின் ஊற்றுக்கண்ணிலுள்ள தூய்மையை ஒரு கனல்நிலை யாக நிதர்சனமாக்கி ஒரு சமூக தர்சனமாகவே பெருகி, வால்மீகியின் ராமாயண பாத்திரங்களை கம்பனின் தமிழ்ப்படைப்பில் உன்னதமான நியதி களின்பாற்படுத்துமளவு ஒரு நாகரிகத்தின் ஆளுமைக் காவியமாக நிலைத்த வலிமை வாய்ந்த சிருஷ்டி.
ஆனால்,
இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சம கால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன. காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜனவாதமாகியதும் ருசிகரமான காதல்கதை களுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது. நிதர்சனத்தையோ, புத்துணர்வையோ ஆதர்சிக்கா மல், மனோவிகாரத்தைச் சார்ந்த ருசிகரத்துக்கு காலாதீதமான மகுடங்களைத் திருடிச் சூட்டுகிற போது, உக்கிரகிக்கும் கவிஞனது எழுத்து மகு டத்தை அதன் மூலமதிப்புக்கு உருக்கி விகாரங்களை அம்பலப்படுத்துகிறது. உருகிவிட்டது எனினும்
மகுடத்தின் சரித்திரகால ஸ்தானத்தை நினைவில் கொள்வதோடு, பொன் தனது அகமதிப்பை இழக் காமல் புதிய மௌலிகளாகச் சமையக் காத்திருக் கிறது என்பதையும் அறிவுவாதி, கவிஞன் ஆகிய இருவரும் உணர்வார்கள் அத்தகைய உணர்வு அற்றவர்கள் இன்று தமது மண்டைகளின் கிரகிப் புக்கே அப்பாற்பட்ட தத்துவதர்சிகளைக்கூட 'பாப்புலர்' ஆக்கிவிட்ட சமகால 'இஸம்'களின் தளத்தில் நின்று மட்டம்தட்டி சரித்திர உணர்வோ, அடிப்படை மதிப்பீட்டுணர்வோ அற்ற தமிழகத்தில் பவிஷு கொள்கின்றனர். ஒரு ஐம்பது வருஷ காலத்துக்குள் இன்று கடந்துவிட்ட தமிழ் இலக்கி யச் சரித்திரத்தை அந்த அந்த எழுத்தாளர்களின் சமகாலப் பின்னணியை உட்படுத்தி ஆராய்ந்தாலே எவ்வித தரிசனம் உள்ள எழுத்தாளர்கள் மதிப்பீடு களின் அடிப்படைகளை ஆதர்சிக்கும் உக்கிரமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் எனக் காணலாம். வாசகனின் அநுபவத்தில் நிதர்சன சக்தியாகக் கன லும் அந்தப் படைப்பாளிகளின் சிருஷ்டிகள் சாட்சி களாக நிற்கும். அடிப்படை மதிப்பீடுகளைப் புத்து ணர்வுடன் சுயதர்சனமாக அனுபவிப்பதுதான் நிதர் சன உக்கிரம் வாய்ந்த சிருஷ்டிகரத்தை விழித்தெழ வைக்கும் என்ற உண்மையும் புலனாகும்.
II
வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான் புத்துணர்வு பொங்கும் வெளியீட் டின் வழியே கலையுருவில் நிதர்சனத்தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டி க்கிறான். ஆனால், ருசிகர மான அநுபவமோ, மனசின் முதிர்ச்சியின்மை, விகாரம் ஆகியவற்றைச் சார்ந்தது. ஆழ்ந்துயர்ந் துணராதவர்கள் படைப்பவற்றின் நிரந்தர த்வனி ருசிகரம்தான். இவ்வகையினர் தம்மை உன்னத ஜீவிகளாக வேஷமிட்டுக் காட்ட காந்தீயமும். கண் ணகீயமும் உபயோகமானால், இன்னொருபுறம், திற
னற்ற இலக்கியப் போலிகளுக்கு, புரட்சியும், கட்சி யும், அந்நியத்வமும், 'பாப்புலர்'ஆன 'இஸம்' களும் கிடைக்கின்றன.
நிதர்சன ஊற்றிலே பருகியவனோ வாழ்வின் அவல மதிப்பீடுகளைத் தனது படைப்பில் நிகழ்த்தி நிதர் சனத்தின் குரூர சந்நிதியாக்குவதன் மூலமே உன் னதமான மனச்சலனங்களை எழுப்புகிறவனாவான். இந்த மனச்சலனங்கள் ஆக்கபூர்வமான மனோசக்தி களாக மாறி வாசகனின் வாழ்வையே தொற்றிச் சஞ்சரிக்குமளவு சில அபூர்வ படைப்பாளிகளிட மிருந்து பிறக்கின்றன. இது ஒழுக்கமுறை, புரட் சிக்குரல் என்ற தற்காலிகக் குளிகையோ, தார்க் குச்சியோ அல்ல. தானே வாழ்ந்து கற்றுக்கொள் கிற வகையான நிதர்சனமாக, சிருஷ்டிக்கப்பட்ட கலையுருவமே அமைந்து ஏற்படுத்தும் ஆழ்ந்த பாதிப்பு இது இத்தகைய படைப்புக்களின் பாதிப் பில் நாகரிகங்கள் விழித்தெழுகின்றன, தம்மை விமர்சித்துக்கொள்கின்றன.
வாழ்வின் ரகஸியங்களாக திவ்யம்கொண்டு, உள் ளத்தை ஜீரணம்கொள்ள, புறவயமான குரூரங் களாகி மனிதன்மீது பாய்வதுதான் நிதர்சனம். நிச்சய புத்தியைச் சிதறடிப்பதன் மூலமே நிதர்சனம் மனிதனை உட்கொள்கிறது. இது மனோபங்கம். பழமை சார்ந்த நிச்சயநிலையின் வீழ்ச்சி. இதன் விளைவாக, பழமையின் இழப்பில், துடைக்கப் பட்ட வெறுமை நிகழ்கிறது. இந்த வெற்றுணர் வின் ஒரு சாயல் 'துக்கம்' என்று உணரத்தக்க மன சின் கனல்நிலை. இன்னொரு சாயல் புத்துணர்வு. உன்னதமான கலாசிருஷ்டியில் நிதர்சனத்தை இந்த இருமுகச் சாயல்களாகக் காணலாம்.
உணர்வு நிலையே அனுபவநிலை. பொருள் காணு வது அறிவுபூர்வமாகவே ஆகும். கலை இவ்விரண்டு வகை அணுகுதல்களுக்கும் ஈடு தருவதெனினும்,
வியாக்
நிதர்சன சக்தியாக வெளியீடு பரிணமிக்கிறபோது உணர்வுநிலையிலேயே பொருள் அனுபவமாகிறது. தமிழ் விமர்சனமோ பொருளம்சத்தையே முன் நிறுத்தி நிதர்சனானுபவத்தை இழந்து தனது பாரம் பரியத்தின் தேய்ந்த வலுவிழந்த மதிப்பீடான வியாக்யான வரம்புக்குள் தேங்குகிறது. யானத்துக்கு அகப்படும் பொருள் போதும் என்பது இந்த மதிப்பீட்டின் அடிப்படை. நிதர்சனத்தை அனுபவிக்கிற உணர்வு நிலை, வாழ்வைப் புறநிலை யில் கூட அதன் மெய்மையாகச் சந்திக்கிற அகச் சக்தியை இழந்து, தானும் மங்க, லட்சியங்கள், நியதிகள், கொள்கைகள், நேர்மையின் பவிஷுகள், 'இஸம்'களின் புரட்சிப் பகட்டுகள் என 'பொருள் பண்ணி' இல்லாத பொருளையும் இருப்பதாக மசி யும் இழிவாக இன்று கவிதையிலும் விமர்சனத்தி லும் தமிழ்மூளை வேலைசெய்துகொண்டு வருகிறது. 'பாடை, நாய் போன்ற தீவிரமான பிரத்தியட் சங்கள்கூட இவர்கள் கையில் வீர்யத்தை இழக்கின் என்றும் 'விகடத்தனமான இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப் படாது' என்றும் பிரிதொரு கட்டுரையின் இருவேறு இடங்களில் எனது கருத்தைக் காணலாம். இங்கே பொருள் வீர்யம் பெறுவதும், மனநிலை கவிதை யாக, அதாவது உணர்வினைத் தாக்கும் அனுபவப் பொருளாக வெளியீட்டுக்கு அகப்படுவதும்தான் கவனிப்புக்கு உரியவை. ஆனால், இவ்வரிகளுக்குப் பதிலாக, எவ்விதத்திலும் கலைஞனுடன் ஒப்பிடத் தக்க சூசகம் பெறாத நாயைக் 'கலைஞன்' என்றும், பாடையை விட்டுவிட்டுப் பாடைதூக்கிகளின் கால் களை - அதுவும் ஒரு இழவு வீட்டின் முக்ய கடமை யாக பிணத்தை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள கால் அவை நாயை உதைப்பதை மட்டும் கொண்டு, 'சமூக மதிப்புகள்' என்றும் வாய்க்கு வந்த, 'பாப்புலர்' பொருளைக் கவிதைக்கு ஏற்றும் போது, வியாக்யான சாத்யத்தைக் கவிதையின் மதிப்பீடாக மயங்கும் தமிழ்த்தனம், சொத்தையா
றன
களை
G
...
கிப் போன தனது பல்லைக் காட்டிவிடுகிறது. தெரு வைக் காத்து, திருடர்களை மாட்டி வைத்து, குரல் தரும் நாய், வீசப்பட்ட இலையிலுள்ள உணவை நோக்கித் தாவும்போது, குறுக்கே டப்பாங்கூத்து ஆடுகிற சில காலிகளின் கால்கள் மறித்து உதைப் பது போன்ற ஒரு நிலைமைதான் மேற்படி வியாக் யானத்துக்குப் பொருந்தக் கூடியது. இதைப் படித் ததும் இந்த ரகத்தில் இனி நிறையவே எழுதப் படக்கூடும். ஆனால் அதுகூட கவித்வ வீர்யத் தோடு நிகழ்ந்தால்தான் நிதர்சனானுபவம், சிருஷ்டி, கவிதை என ஆகும்.
III
வியாக்யானங்களுக்குத் தகுதியானது தரிசனப்பிழம் பாகி நிற்கும் உட்பொருளே, அனுபவிக்கும் வாசக உள்ளத்தில் நிதர்சன சக்தியாகக் கவிதையின் உட் பொருளே எரிகிறது. அவனது வாழ்வின் மீதே ஒளி பெய்கிறது. இத்தகைய காலாதீதமான தூய்மைப் பிழம்புகளை வெறும் அறமுறைகளாகத் தேக்கி தமது தயாரிப்புகளுக்கு பவிஷு தரும் மரபாக்கிய தமிழ்ப் பண்டிதத்தனத்தின் தொடரையே இன்று கட்சீயம், புரட்சீயம், இதர பாப்புலரிஸம் என்றெல்லாம் திறனின்மைகள்மீது சவாரி வரக் காண்கிறோம். எனவே இன்று இவற்றை மறுத்து
சுற்றிலும்
இல்லாமை பிரலாபம். ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்
என, இல்லாதவன் என்ற நிலைமையின் அரசியலுரு வையும், இருப்பவனின் நிரந்தரமின்மையையும் எள்ளி நகையாடிவிட்டு, வீழ்ச்சியிலும் உயிர் தணி யாத நிதர்சன வாழ்வின் குழந்தைமையை அனுப விக்கக் கண்கொள்கிறோம். காட்சி புத்துணர்வை மலர்த்தி விரிகிறது :
சாக்கடை ஓரத்தில்
கந்தலில்
சிசுக்கள்
நிலாகண்டு
சிரித்து
மல்லாந்து கிடக்கும்.
வாழ்வின், மனிதநேயத்தின் நுண்ணுணர்வுத்தளங் களை எட்ட இயலாத புரட்சி வைதீகங்களினது காயடித்த மனோபாவத்தைத் திடுக்கிடவைக்கிறதர் சனம் இது. இத்தகைய தர்சனத்தின் பார்வை யிலே 'அலைதல்கள் மகத்தானவை'. இத்தகைய கவிஞனின் தீட்சண்யத்துடன் வாசக மனம் பிணைந் தால் 'வெய்யிலை கைகளால் அள்ளிக் கொள்ள
லாம்'.
அறமுறை ஆலோசனைகளும், புரட்சி அறிக்கை களும், பாப்புலர் 'இஸம்'களும்,
உனக்குள் தடுமாறு பற்றிக்கொள்
குட்டிக்கரணம் போடு வௌவாலாய்த் தொங்கு வெளியில் செங்கல் அடுக்கி
மணல்கலந்து காரை பூசி கட்டிடம் எழுப்பாதே. ஐந்துக்கள் அடையும் நாறும்!
என்ற அலட்சியமான விவேகத்தின்முன் மழுங்கு கின்றன.
இத்தகைய கவியின் வீர்யம், எளிமை கலந்த படிமச் செறிவாகி, 'வெய்யிலை கைகளால் அள்ளிக்' கொள் கிற போது சூர்யஒளி திரவக் கனம் பெறுகிறது.
எஞ்சினின் 'எந்திரத் திருப்தி'யில் மனித மனசின் சௌகர்ய முடக்கமும் ஜடவாதமும் எதிரொலிக் கின்றன.
கவியினுள் காலத்தின் 'நிழல்கள் வேவு பார்க் கின்ற' போது மனோரூபங்கள் கவித்வத்தின் பட்ட றையில் கனல் கொள்கின்றன.
ஒதுங்கி நின்று, அலட்சியமும், தெளிவும், புல னுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து, கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழி யில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயெராமனுடையவை.
வாழ்வின் அவலமாகத் தென்படுகிறவற்றிலே கூட, இங்கே ஏற்கனவே விவரித்த வைதீகமான பாப்புலர் தர்மாவேசங்களுக்கு எட்டாதவற்றை அனுபவித்துக் கனலும் சாந்தபுஷ்டி நா. ஜெயெ ராமனின் தர்சனம்.
இந்தப் பார்வையிலிருந்து எழும் அஸ்திரங்களும் உள. சக்கிலியனைக் கண்கொண்டதோடு, மனித நேயமாகச் செல்லுபடியாகாமல் போய்விட்ட பகட் டுச் சித்தாந்தங்கள் மீது பார்வை விழுகிறது.
கட்சி ஆபீஸில்
தொழிலாளிக்கு கோவணம் கட்ட விரையும் தோழர்
இந்த எந்திரத்திடம் விட்டெறிவது செல்லாக் காசு.
இத்தகைய சுயநோக்கு வாய்ந்த ஒரு விழிப்புணர்வு தான் தவிர்க்க முடியாமலே போலிகளை அம்பல மாக்குகிறக் கவித்வத்தின் இயல்பு; எதிர்ப்பியல்பு. எனவே எத்தகைய விரூபங்களின் எத்தகையத் தாக்குதல்களுக்கு இத்தகையக் கவிஞன் இலக்காக முடியும் என்பதையும் சொல்லவேண்டியதில்லை அல்லவா ?
சென்னை
25 10 1976
பிர்மிள் தர்மூஅருப் :சிவராம்