Pages

Friday, November 25, 2022

 https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkaala.subramaniam%2Fposts%2Fpfbid0pbziVhhskDQ4NyeC1uAC6Qd6YGTxukgEdxRv2TdxZJp1pY21K8V4pH3KEG1Xiu6tl&show_text=true&width=500&__cft__[0]=AZUjfYybICpXjdphfDeC6FOzG2kyNzZBJGlKl7zpDjAjiEF4x1wG9XApC_9eY2w8Cerkg0Qq_aLuPA4Lx_PzrXA30_kvT4cW3JrLp6S89eo_4IBk9kzGyVBAZ9wIjB8aWI1k0hqVXFXCWfRRHV_7pV48&__tn__=R]-R

நாரணோ ஜெயராமனுக்குப் பிரமிள் முன்னுரை
முன்னுரை - பிர்மிள் தர்மூஅருப் :சிவராம்
அகத்துறை வாழ்வின் ஸ்திரீலட்சியமாக வாழ்ந்த கண்ணகியை அவளது அன்பின் வீர்யம் தார்மிகத் தின் தீவிரமாக முகம்கொள்ள, புறத்துறையின் சிகர நிகழ்ச்சியான ஒரு புரட்சியின் நடுநாயகியாக உயர்த்தி 'சிலப்பதிகார'மாகப் படைத்தபோது, இளங்கோ, தனிமனித தீபமாக ஜ்வலித்த நியதி பொதுவாழ்வையும்பற்றிப் பெருநெருப்பாகியதைச் சித்தரித்தான். 'சிலப்பதிகாரம்' இந்த நியதியின் ஊற்றுக்கண்ணிலுள்ள தூய்மையை ஒரு கனல்நிலை யாக நிதர்சனமாக்கி ஒரு சமூக தர்சனமாகவே பெருகி, வால்மீகியின் ராமாயண பாத்திரங்களை கம்பனின் தமிழ்ப்படைப்பில் உன்னதமான நியதி களின்பாற்படுத்துமளவு ஒரு நாகரிகத்தின் ஆளுமைக் காவியமாக நிலைத்த வலிமை வாய்ந்த சிருஷ்டி.
ஆனால்,
இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சம கால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன. காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜனவாதமாகியதும் ருசிகரமான காதல்கதை களுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது. நிதர்சனத்தையோ, புத்துணர்வையோ ஆதர்சிக்கா மல், மனோவிகாரத்தைச் சார்ந்த ருசிகரத்துக்கு காலாதீதமான மகுடங்களைத் திருடிச் சூட்டுகிற போது, உக்கிரகிக்கும் கவிஞனது எழுத்து மகு டத்தை அதன் மூலமதிப்புக்கு உருக்கி விகாரங்களை அம்பலப்படுத்துகிறது. உருகிவிட்டது எனினும்
மகுடத்தின் சரித்திரகால ஸ்தானத்தை நினைவில் கொள்வதோடு, பொன் தனது அகமதிப்பை இழக் காமல் புதிய மௌலிகளாகச் சமையக் காத்திருக் கிறது என்பதையும் அறிவுவாதி, கவிஞன் ஆகிய இருவரும் உணர்வார்கள் அத்தகைய உணர்வு அற்றவர்கள் இன்று தமது மண்டைகளின் கிரகிப் புக்கே அப்பாற்பட்ட தத்துவதர்சிகளைக்கூட 'பாப்புலர்' ஆக்கிவிட்ட சமகால 'இஸம்'களின் தளத்தில் நின்று மட்டம்தட்டி சரித்திர உணர்வோ, அடிப்படை மதிப்பீட்டுணர்வோ அற்ற தமிழகத்தில் பவிஷு கொள்கின்றனர். ஒரு ஐம்பது வருஷ காலத்துக்குள் இன்று கடந்துவிட்ட தமிழ் இலக்கி யச் சரித்திரத்தை அந்த அந்த எழுத்தாளர்களின் சமகாலப் பின்னணியை உட்படுத்தி ஆராய்ந்தாலே எவ்வித தரிசனம் உள்ள எழுத்தாளர்கள் மதிப்பீடு களின் அடிப்படைகளை ஆதர்சிக்கும் உக்கிரமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் எனக் காணலாம். வாசகனின் அநுபவத்தில் நிதர்சன சக்தியாகக் கன லும் அந்தப் படைப்பாளிகளின் சிருஷ்டிகள் சாட்சி களாக நிற்கும். அடிப்படை மதிப்பீடுகளைப் புத்து ணர்வுடன் சுயதர்சனமாக அனுபவிப்பதுதான் நிதர் சன உக்கிரம் வாய்ந்த சிருஷ்டிகரத்தை விழித்தெழ வைக்கும் என்ற உண்மையும் புலனாகும்.
II
வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான் புத்துணர்வு பொங்கும் வெளியீட் டின் வழியே கலையுருவில் நிதர்சனத்தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டி க்கிறான். ஆனால், ருசிகர மான அநுபவமோ, மனசின் முதிர்ச்சியின்மை, விகாரம் ஆகியவற்றைச் சார்ந்தது. ஆழ்ந்துயர்ந் துணராதவர்கள் படைப்பவற்றின் நிரந்தர த்வனி ருசிகரம்தான். இவ்வகையினர் தம்மை உன்னத ஜீவிகளாக வேஷமிட்டுக் காட்ட காந்தீயமும். கண் ணகீயமும் உபயோகமானால், இன்னொருபுறம், திற
னற்ற இலக்கியப் போலிகளுக்கு, புரட்சியும், கட்சி யும், அந்நியத்வமும், 'பாப்புலர்'ஆன 'இஸம்' களும் கிடைக்கின்றன.
நிதர்சன ஊற்றிலே பருகியவனோ வாழ்வின் அவல மதிப்பீடுகளைத் தனது படைப்பில் நிகழ்த்தி நிதர் சனத்தின் குரூர சந்நிதியாக்குவதன் மூலமே உன் னதமான மனச்சலனங்களை எழுப்புகிறவனாவான். இந்த மனச்சலனங்கள் ஆக்கபூர்வமான மனோசக்தி களாக மாறி வாசகனின் வாழ்வையே தொற்றிச் சஞ்சரிக்குமளவு சில அபூர்வ படைப்பாளிகளிட மிருந்து பிறக்கின்றன. இது ஒழுக்கமுறை, புரட் சிக்குரல் என்ற தற்காலிகக் குளிகையோ, தார்க் குச்சியோ அல்ல. தானே வாழ்ந்து கற்றுக்கொள் கிற வகையான நிதர்சனமாக, சிருஷ்டிக்கப்பட்ட கலையுருவமே அமைந்து ஏற்படுத்தும் ஆழ்ந்த பாதிப்பு இது இத்தகைய படைப்புக்களின் பாதிப் பில் நாகரிகங்கள் விழித்தெழுகின்றன, தம்மை விமர்சித்துக்கொள்கின்றன.
வாழ்வின் ரகஸியங்களாக திவ்யம்கொண்டு, உள் ளத்தை ஜீரணம்கொள்ள, புறவயமான குரூரங் களாகி மனிதன்மீது பாய்வதுதான் நிதர்சனம். நிச்சய புத்தியைச் சிதறடிப்பதன் மூலமே நிதர்சனம் மனிதனை உட்கொள்கிறது. இது மனோபங்கம். பழமை சார்ந்த நிச்சயநிலையின் வீழ்ச்சி. இதன் விளைவாக, பழமையின் இழப்பில், துடைக்கப் பட்ட வெறுமை நிகழ்கிறது. இந்த வெற்றுணர் வின் ஒரு சாயல் 'துக்கம்' என்று உணரத்தக்க மன சின் கனல்நிலை. இன்னொரு சாயல் புத்துணர்வு. உன்னதமான கலாசிருஷ்டியில் நிதர்சனத்தை இந்த இருமுகச் சாயல்களாகக் காணலாம்.
உணர்வு நிலையே அனுபவநிலை. பொருள் காணு வது அறிவுபூர்வமாகவே ஆகும். கலை இவ்விரண்டு வகை அணுகுதல்களுக்கும் ஈடு தருவதெனினும்,
வியாக்
நிதர்சன சக்தியாக வெளியீடு பரிணமிக்கிறபோது உணர்வுநிலையிலேயே பொருள் அனுபவமாகிறது. தமிழ் விமர்சனமோ பொருளம்சத்தையே முன் நிறுத்தி நிதர்சனானுபவத்தை இழந்து தனது பாரம் பரியத்தின் தேய்ந்த வலுவிழந்த மதிப்பீடான வியாக்யான வரம்புக்குள் தேங்குகிறது. யானத்துக்கு அகப்படும் பொருள் போதும் என்பது இந்த மதிப்பீட்டின் அடிப்படை. நிதர்சனத்தை அனுபவிக்கிற உணர்வு நிலை, வாழ்வைப் புறநிலை யில் கூட அதன் மெய்மையாகச் சந்திக்கிற அகச் சக்தியை இழந்து, தானும் மங்க, லட்சியங்கள், நியதிகள், கொள்கைகள், நேர்மையின் பவிஷுகள், 'இஸம்'களின் புரட்சிப் பகட்டுகள் என 'பொருள் பண்ணி' இல்லாத பொருளையும் இருப்பதாக மசி யும் இழிவாக இன்று கவிதையிலும் விமர்சனத்தி லும் தமிழ்மூளை வேலைசெய்துகொண்டு வருகிறது. 'பாடை, நாய் போன்ற தீவிரமான பிரத்தியட் சங்கள்கூட இவர்கள் கையில் வீர்யத்தை இழக்கின் என்றும் 'விகடத்தனமான இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப் படாது' என்றும் பிரிதொரு கட்டுரையின் இருவேறு இடங்களில் எனது கருத்தைக் காணலாம். இங்கே பொருள் வீர்யம் பெறுவதும், மனநிலை கவிதை யாக, அதாவது உணர்வினைத் தாக்கும் அனுபவப் பொருளாக வெளியீட்டுக்கு அகப்படுவதும்தான் கவனிப்புக்கு உரியவை. ஆனால், இவ்வரிகளுக்குப் பதிலாக, எவ்விதத்திலும் கலைஞனுடன் ஒப்பிடத் தக்க சூசகம் பெறாத நாயைக் 'கலைஞன்' என்றும், பாடையை விட்டுவிட்டுப் பாடைதூக்கிகளின் கால் களை - அதுவும் ஒரு இழவு வீட்டின் முக்ய கடமை யாக பிணத்தை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள கால் அவை நாயை உதைப்பதை மட்டும் கொண்டு, 'சமூக மதிப்புகள்' என்றும் வாய்க்கு வந்த, 'பாப்புலர்' பொருளைக் கவிதைக்கு ஏற்றும் போது, வியாக்யான சாத்யத்தைக் கவிதையின் மதிப்பீடாக மயங்கும் தமிழ்த்தனம், சொத்தையா
றன
களை
G
...
கிப் போன தனது பல்லைக் காட்டிவிடுகிறது. தெரு வைக் காத்து, திருடர்களை மாட்டி வைத்து, குரல் தரும் நாய், வீசப்பட்ட இலையிலுள்ள உணவை நோக்கித் தாவும்போது, குறுக்கே டப்பாங்கூத்து ஆடுகிற சில காலிகளின் கால்கள் மறித்து உதைப் பது போன்ற ஒரு நிலைமைதான் மேற்படி வியாக் யானத்துக்குப் பொருந்தக் கூடியது. இதைப் படித் ததும் இந்த ரகத்தில் இனி நிறையவே எழுதப் படக்கூடும். ஆனால் அதுகூட கவித்வ வீர்யத் தோடு நிகழ்ந்தால்தான் நிதர்சனானுபவம், சிருஷ்டி, கவிதை என ஆகும்.
III
வியாக்யானங்களுக்குத் தகுதியானது தரிசனப்பிழம் பாகி நிற்கும் உட்பொருளே, அனுபவிக்கும் வாசக உள்ளத்தில் நிதர்சன சக்தியாகக் கவிதையின் உட் பொருளே எரிகிறது. அவனது வாழ்வின் மீதே ஒளி பெய்கிறது. இத்தகைய காலாதீதமான தூய்மைப் பிழம்புகளை வெறும் அறமுறைகளாகத் தேக்கி தமது தயாரிப்புகளுக்கு பவிஷு தரும் மரபாக்கிய தமிழ்ப் பண்டிதத்தனத்தின் தொடரையே இன்று கட்சீயம், புரட்சீயம், இதர பாப்புலரிஸம் என்றெல்லாம் திறனின்மைகள்மீது சவாரி வரக் காண்கிறோம். எனவே இன்று இவற்றை மறுத்து
சுற்றிலும்
இல்லாமை பிரலாபம். ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்
என, இல்லாதவன் என்ற நிலைமையின் அரசியலுரு வையும், இருப்பவனின் நிரந்தரமின்மையையும் எள்ளி நகையாடிவிட்டு, வீழ்ச்சியிலும் உயிர் தணி யாத நிதர்சன வாழ்வின் குழந்தைமையை அனுப விக்கக் கண்கொள்கிறோம். காட்சி புத்துணர்வை மலர்த்தி விரிகிறது :
சாக்கடை ஓரத்தில்
கந்தலில்
சிசுக்கள்
நிலாகண்டு
சிரித்து
மல்லாந்து கிடக்கும்.
வாழ்வின், மனிதநேயத்தின் நுண்ணுணர்வுத்தளங் களை எட்ட இயலாத புரட்சி வைதீகங்களினது காயடித்த மனோபாவத்தைத் திடுக்கிடவைக்கிறதர் சனம் இது. இத்தகைய தர்சனத்தின் பார்வை யிலே 'அலைதல்கள் மகத்தானவை'. இத்தகைய கவிஞனின் தீட்சண்யத்துடன் வாசக மனம் பிணைந் தால் 'வெய்யிலை கைகளால் அள்ளிக் கொள்ள
லாம்'.
அறமுறை ஆலோசனைகளும், புரட்சி அறிக்கை களும், பாப்புலர் 'இஸம்'களும்,
உனக்குள் தடுமாறு பற்றிக்கொள்
குட்டிக்கரணம் போடு வௌவாலாய்த் தொங்கு வெளியில் செங்கல் அடுக்கி
மணல்கலந்து காரை பூசி கட்டிடம் எழுப்பாதே. ஐந்துக்கள் அடையும் நாறும்!
என்ற அலட்சியமான விவேகத்தின்முன் மழுங்கு கின்றன.
இத்தகைய கவியின் வீர்யம், எளிமை கலந்த படிமச் செறிவாகி, 'வெய்யிலை கைகளால் அள்ளிக்' கொள் கிற போது சூர்யஒளி திரவக் கனம் பெறுகிறது.
எஞ்சினின் 'எந்திரத் திருப்தி'யில் மனித மனசின் சௌகர்ய முடக்கமும் ஜடவாதமும் எதிரொலிக் கின்றன.
கவியினுள் காலத்தின் 'நிழல்கள் வேவு பார்க் கின்ற' போது மனோரூபங்கள் கவித்வத்தின் பட்ட றையில் கனல் கொள்கின்றன.
ஒதுங்கி நின்று, அலட்சியமும், தெளிவும், புல னுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து, கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழி யில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயெராமனுடையவை.
வாழ்வின் அவலமாகத் தென்படுகிறவற்றிலே கூட, இங்கே ஏற்கனவே விவரித்த வைதீகமான பாப்புலர் தர்மாவேசங்களுக்கு எட்டாதவற்றை அனுபவித்துக் கனலும் சாந்தபுஷ்டி நா. ஜெயெ ராமனின் தர்சனம்.
இந்தப் பார்வையிலிருந்து எழும் அஸ்திரங்களும் உள. சக்கிலியனைக் கண்கொண்டதோடு, மனித நேயமாகச் செல்லுபடியாகாமல் போய்விட்ட பகட் டுச் சித்தாந்தங்கள் மீது பார்வை விழுகிறது.
கட்சி ஆபீஸில்
தொழிலாளிக்கு கோவணம் கட்ட விரையும் தோழர்
இந்த எந்திரத்திடம் விட்டெறிவது செல்லாக் காசு.
இத்தகைய சுயநோக்கு வாய்ந்த ஒரு விழிப்புணர்வு தான் தவிர்க்க முடியாமலே போலிகளை அம்பல மாக்குகிறக் கவித்வத்தின் இயல்பு; எதிர்ப்பியல்பு. எனவே எத்தகைய விரூபங்களின் எத்தகையத் தாக்குதல்களுக்கு இத்தகையக் கவிஞன் இலக்காக முடியும் என்பதையும் சொல்லவேண்டியதில்லை அல்லவா ?
சென்னை
25 10 1976
பிர்மிள் தர்மூஅருப் :சிவராம்

Wednesday, October 26, 2022

நாஞ்சில் நாடன் : சதுரங்க குதிரை

 https://nanjilnadan.com/2012/01/11

 “நான் அப்படியெல்லாம் நினைக்கலய்யா... தப்பா எடுத்துக்கிடாதேயும்”.
"தப்பென்னய்யா தப்பு? இல்லேன்னா நீ என்னத்துக்கு அவசரப் படணும்? எனக்குப் புரிஞ்சு போச்சு... நீயும் எல்லாரையும் போல நினைச்சுப்போட்டே...''
“அப்படி எல்லாம் இல்ல, ராவ்..."
“சரி, போகட்டும் விடு... இது என்ன இப்ப? நூறு பாத்தாச்சு... இதொண்ணும் எனக்குப் புதுசில்லே போ.... ஏதோ நம்ம முக விசேஷம். பாக்கறவங்களுக்கு அப்படித் தோணுது. யாராவது ஸ்நேகமாப் பேசினா நானும் சகஜமாப் பழகிடறேன். பெறகு இந்த மாதிரி அவஸ்தை ..."
நாராயணனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, அநாவசியமாக ஓர் நட்பைக் காயப்படுத்தி விட்டோம் என்று. நெடுநேரம்
தூங்காமல் புரண்டு கொண்டிருந்தான். அதிகாலை இரண்டே கால் மணியின் நிசப்தம் சூழ்ந்த இரவு. பவழ மல்லிகை மடல் விரிந்து காற்றில் கரைந்து கொண்டிருந்ததை நாசி உணர்ந்தது.
அதிகாலை ஐந்தரை மணிக்கு ராவ் மூக்கை இறுகப் பிடித்த போது திடுக்கிட்டு விழித்தான். சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை .
"என்ன திருதிருன்னு முழிக்கறே? எந்திரிச்சு பல்லு தேச்சுக்கிட்டு வா.... டிகாக்ஷன் ஆயிரும் இப்ப...''
ஏதோ காரணத்துக்காக அன்று விடுமுறை இருந்தது. குளித்து விட்டு வரும் போது கள்ளத் தொண்டையில் பாடிக் கொண்டு பூஜை முடித்து விட்டு வெளியே வந்தார். ராவுக்கு நன்றாக பாட வரும். முறையாகப் பயின்ற சங்கீதம். மேடையேறிக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது அவர் நீண்ட நாளைய ஆசை.
துவைத்த பனியன், ஜட்டியைக் காயப்போட்டு விட்டு வந்து உட்கார்ந்த போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவைத் தூக்கிப் போட்டார். மணி எட்டரை ஆகியிருந்தது. சற்று உள்வாங்கிய காலனி. ஆகையால் அதிக அரவமில்லை . 'கேலா வாலா' சத்தம் சற்றுத் தூரத்தில் கேட்டது.
காலிங் பெல் சத்தம். ராவ் துள்ளி எழுந்து போனார். சர்வ இயல்புடன் ஒரு பெண் நுழைந்து வந்தாள். இருபத்து மூன்று இருபத்து நாலு வயசிருக்கும். காலையில் குளித்த துலக்கமும் திருத்தமும். தோலின் சிவப்பும் முகத்தின் களையும் ராவின் குடும்பத்துக்குக் கடவுள் செய்த நன்றிக் கடன் போலும். இயல்பான கவர்ச்சியின் கூறுகள்....
ராவ் சொன்னார் - “ஃபிரண்டு... நாராயணன்... என்னய்யா அப்படிப் பார்க்கறீர்? என் அக்கா பொண்ணு தாரா... எல்.ஐ.சி-யிலே இருக்கறா...''
உள்ளே போன தாராவின் பின்னாலேயே ராவ் போனார். உள்ளே பேச்சுக் குரல் கேட்டது.
“அப்பா சொன்னா, ராத்திரி ரொம்ப நேரம் விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருந்ததுன்னு...''
“பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு வாய் காபி சாப்பிடறயா?”
“நான் கலந்துக்கறேன், மாமா... அம்மா கேக்கச் சொன்னா, காத்தால சாப்பிட வருவியான்னு... அவரையும் அழைச்சுண்டுவா..."
"வேணாம். அவன் சங்கோஜப் படுவான். நானே சமச்சுக்கறேன்..."
“நானே சமச்சு வச்சிரவா... லீவுதானே... அம்மாட்ட சொல்லீட்டு வந்திடறேன்...”
“என்னமோ செய்” என்று கூறிக்கொண்டு, ராவ் வெளியில் வந்தார்.
"பயப்படாதே, நாராயணா... தாரா நன்னாச் சமப்பா...''
ஒரு குடும்பத்தினருக்குள் இருந்த நேசமும் நெருக்கமும் சந்தோஷம் தருவதாக இருந்தது. குடும்பத்தின் முறுக்கமான கட்டு இந்த அனுசரணைதான் போலும். ராவின் இன்னொரு அக்காள் மகள் ஒரு கிறிஸ்துவனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. அதனுடனேயே ஒரு அல்பமான எண்ணம் துளிர் விட்டு, கொடி வீசிப் படர்ந்து, மொட்டரும்பி மலர்ந்து மணம் பரப்பி -
ராவ் துரத்தித் துரத்தி அடிப்பார் என்று நினைக்கையில் சிரிப்பு வந்தது.
புல் வெளியில் அமர்ந்திருந்த போது, திடீரெனக் கேட்டான், நாராயணன் -
“உங்க மருமக தாரா இப்ப எங்க இருக்கா?”
“என்னய்யா திடீர்னு தாரா ஞாபகம்? இப்ப பெரிய பூசணிக்காய் மாதிரி பெருத்துப் போயிட்டா... பாத்தா அடையாளம் தெரியாது. யூட்ரஸ் வேற எடுத்தாச்சு... பதினெட்டு வயசிலே அவளுக்கு ஒரு பொண்ணு இருக்க... பார்க்கத் தாராவை விட லட்சணம் போ... கட்டிக்கிறியா?"
ராவ் நுட்பமான ஒரு நரம்பைச் சுண்டியது போல... அலையலையாகச் சிரிப்பும் தோல்வியும் கலந்து முடைந்து பின்னியது போல ஒரு வெளிப்பாடு... சன்னமான ஒரு வேதனை...
ராவ் மறுநாளும் வந்திருந்தார். சினிமா பார்த்து விட்டுப் போரிவிலிக்குப் புறப்படுகையில் சொன்னார். “நாளைக்கு வர மாட்டேன்.... இனி சனிக்கிழமை பார்ப்போம்...."
சர்ச் கேட் ஸ்டேஷனில் போரிவிலி வண்டி பிடித்து, நாராயணன் மாட்டுங்கா ரோடில் இறங்கிக் கொண்டான். இனி சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.
ராவிடம் முதுமை ரேகை போட ஆரம்பித்து விட்டது. எதிலும் ஒரு சுவாரசியமின்மை . ஓய்வு பெற்ற பின் என்ன செய்வதென்ற திகைப்பு தலைகாட்ட ஆரம்பித்திருந்தது. காலையில் எழுந்து, குளித்து பூஜை செய்து, பேப்பர் படித்து, உண்டு, உறங்கி, கோயிலுக்குப் போய், டி.வி.யில் ஆங்கிலச் செய்தி
கேட்டு .... |
ஓய்வு நாளைத் திட்டமிடாத இந்திய நகர வாழ்க்கை . அறுபது முடிந்த சில மாதங்களில் மடிந்து போவது நல்லது போலும். மீதி வாழும் ஆண்டுகள் சோற்றுக்குச் செலவும் பூமிக்குப் பாரமும்தான்.
ராவின் சோர்வும் தனது சோர்வும் ஒன்றுதான் எனப்பட்டது. இதில் குடும்பம், பிள்ளை குட்டிகள். பொறுப்புக்களின் பங்கு என்ன? நாளடைவில் இது இன்னும் சீரழிந்து போகும். இன்னும் பதினைந்து ஆண்டுகள் பொறுத்து வரும் தனது வாழ்நாளைப் பற்றி யோசித்துப் பார்த்தான். ஒன்று, அதற்குள்ளாகவே தற்கொலை செய்து முடிந்து போயிருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு கோயில் திண்ணையில் சிறியதோர் பையைத் தலைக்கு வைத்து உறங்கிக் கொண்டிருக்கலாம். காவியும் தாடியும் ஒரு பாதுகாப்பான, தோட்டா துளைக்காத உள் அங்கி, சக மனிதனின் துன்பத்துக் கெல்லாம் நான் காரணம் இல்லை, எனக்குப் பொறுப்புக் கிடையாது, என் மீது குற்றம் சுமத்துவதோ, தூக்கில் ஏற்றுவதோ நடவாத காரியம்... என்னை விட்டுவிடு... சத்து, சித்து, ஆனந்தம்.
சனிக்கிழமை ராவ் கேட்டார். “எவ்வளவு ரொக்கம் வச்சிருக்கே?" திடீரென்று எதற்குக் கேட்கிறார் என்று புரியவில்லை. “எவ்வளவு வேணும்?"
"அட கைமாத்துக் கேக்கல்லய்யா! எவ்வளவு வச்சிருக்கேன்னு சொல்லு...''
“எதுக்கு? சொல்லும்...'' “சொல்லுய்யான்னா! ரொம்ப பிகு பண்றீரே....”
“கேஷா அதிகம் இருக்காது. பிக்ஸட் டெப்பாசிட்லே எம்பதினாயிரம் இருக்கு... ஷேர்லே சமார் எழுபதினாயிரம்
இன்வெஸ்ட்மென்ட் இருக்கும். இப்ப அதுக்கு மார்க்கெட் வேல்யூ ரெண்டரை அல்லது ரெண்டே முக்கால் பக்கம் இருக்கும்...''
"அப்ப மூணுக்குக் குறையாம எடுக்கலாம் இல்லியா?" - "ஆமா ..."
* என் போரிவிலி ஃப்ளாட்டை டிஸ்போஸ் பண்ணப் போறேன்..."
“பண்ணீ ட்டு ...'' “கல்கத்தாவிலே செட்டில் ஆகப் போறேன்..." *ஏன்? இது கெடந்துட்டுப் போகுது!”
“என்ன பிரயோஜனம்? எவ்வளவு நாளா பூட்டிப் போட்டு வைக்கறது? வெளீல விசாரிச்சேன். ஒரு பார்ட்டி மூணுக்குக் கேக்கறா... எனக்கு உன் ஞாபகம் வந்தது...''
"எனக்கு என்னத்துக்கு இப்பப் போயி வீடும் இன்னொண்ணும்..."
“ஏன்? மசானக் குழியிலே 'போய் உக்கார வயசாயாச்சா?".
“அதுக்கில்ல.... சாமியாருக்கு யானை பரிசு கொடுத்தது போல...”
“நடந்து போறதுக்குப் பதில் யானை மேல போறது. என்ன கெட்டுப் போச்சுங்கறேன்..."
“கொஞ்ச நாள்தானே.... இப்படியே ஒட்டீரலாம்னு..."
“எப்படி வேணும்னாலும் ஓட்டு. அதுக்கு சொந்தமா வீடு இருக்கப்படாதுன்னு இருக்கா... வேணும்னா கூட ரெண்டு பேயிங் கெஸ்ட் வச்சுக்கோ... ஊர்லே யாராம் ஒரு வயசான பொம்பளையைக் கொணாந்து சமச்சுப் போடச் சொல்லு...''
ராவ் இவ்வளவு தீர்மானமாக யோசித்து வைத்திருப்பார் என்று எண்ண ஆச்சரியமாக இருந்தது.
“இந்தா பாரு... கூடுதலா யோசிக்காதே... மூணு லெட்சம் ரெடி பண்ணு... டாக்குமென்டேஷன் கொஞ்சம் செலவாகும். எழுதிப் போட்டுட்டுப் போறேன்'.
"கொஞ்சம் யோசிக்கட்டும்..."
“ஒரு மண்ணாங்கட்டியும் யோசிக்கவேண்டாம். பணத்தை ரெடி பண்ணு ..."
குட்டினோவைக் கேட்டான். அவன் மிகுந்த உற்சாகமாக இருந்தான். பணம் பத்தவில்லை என்றால், தானும் கொஞ்சம் தருவதாகச் சொன்னான். அடுத்த வாரம் மும்முரமாக வேலை நடந்தது.
ராவ் சொன்னார் - “இன்னா பாரும், மொத்தப் பணமும் தயாராகலைன்னா அதுக்காக உசிரை விடணும்னு இல்லே. ரெடியானதைக் குடு. மீதியைப் பொறவு டி.டி. வாங்கி அனுப்பு....''
ராகவேந்திரராவ் பார்த்த நல்ல நாளில் பத்திரம் பதிவாகியது. அன்று நாராயணன் விடுமுறை எடுத்தான். அந்த முறையும் ராவ் கல்கத்தா மெயிலில் ஊருக்குப் புறப்பட்ட போது ஸ்டேஷன் போயிருந்தான். ரயில் கிளம்பிக் கையசைக்கையில் கண்கள் பொங்குவது போலிருந்தது.
அந்த மாத வாடகையைக் கொடுத்து விட்டு, அறையைக் காலி செய்து, போரிவிலி ஃப்ளாட்டுக்கு வந்தான். சொந்தச் சாமான்களை இரண்டு நடையாக லோகல் ரயிலிலேயே கொண்டு வந்து சேர்த்தான். வீட்டைத் தூத்து வாரித் துப்புரவு செய்து, துடைத்துக் கழுவ ஒரு நாளாயிற்று. இரண்டு சீலிங் ஃபேன்கள். ட்யூப் லைட்டுகள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார் ராவ். ஐந்நூறு சதுர அடிகள் கொண்ட ஒன் ரூம் கிச்சன் வீடு சாமான்கள் எதுவுமின்றி 'ஹோ' எனக் கிடந்தது.
நாடக ரிஹர்சல் நடத்தத் தோதான இடம். ஒரு காலத்தில் 'ஆதே அதுரே' யும், 'ஏவம் இந்திரஜித்'தும் 'ஜுலுஸ் 'ம் பார்த்த மோகத்தில், தமிழில் நவீன நாடகங்கள் நடத்த அலைந்து திரிந்தது ஞாபகம் வந்தது. திரைக்குப் பின்னாலான வேலைகள் பல நாராயணன் மேற்பார்வையில். ரிஹர்சல் நடத்த இடம் கேட்டு அலைந்ததில் தமிழ் சங்கத் தலைவர் அனுமதி மறுத்து விட்டார். அவர் எழுதி இயக்கும் 'பாசச் சுவர்' நாடக ரிஹர்சல் அங்கு நடக்கப் போவதாகச் சொன்னார். இரவு ஏழு மணிக்கு மேல் ஆந்திர மகாசபாவில் இடம் தந்தார்கள். ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் மெஸ்ஸில் கேட்டரிங் ஆபீசராக இருந்த கணேஷ் ஒவ்வொரு நாளும் சிற்றுண்டிக்காக நாற்பது வடை அல்லது போண்டா அல்லது சமோசா மடக்கிக் கொண்டு வருவார். இந்தியன்
ஏர்ஃபோர்சில் கிளார்க்காக இருந்த தாணப்பன் ஜெராக்ஸ் வேலை எல்லாம் இலவசமாகச் செய்து கொடுத்தார்.
நட்பு கொடி கட்டிப் பறந்த காலம். நேரம் போனது தெரியாது. இரவு பன்னிரண்டரை மணிக்கு மேல் மாட்டுங்கா போஸ்ட் ஆபீசின் முன்புறம் சாலையோர இட்லிக் கடையின் முன்னால் பெஞ்சில் அமர்ந்து ஊத்தப்பம் தின்றது. இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து பாவ்பாஜி, வடாபாவ், பாவ் புர்ஜி தின்று தண்ணீர் குடித்து விட்டு மேலும் இரண்டு கிலோ மீட்டர் நடந்த நாட்கள்.
இப்போது யாரை எங்கு போய்த் தேடுவது? ராவ் நிறையப் புத்திமதிகள் சொல்லிவிட்டுப் போனார்.
“ஒரு கட்டில் வாங்கு... டேபிள், செயர் வாங்கு... கேஸுக்கு அப்ளை செய்... ஒரு குக்கர், சில பாத்திரங்கள் வாங்கு. சாயங்காலம் ஒரு வேளை சமச்சுச் சாப்பிடு... சிஸ்டர் வீட்ல சொல்லீட்டுப் போறேன், ஏதோம் உதவி வேணும்னா சங்கோஜப் படாமக் கேட்டுக்கோ ..."
வீட்டுச் சாவி தருகிற அன்று, ராவ், அவர் அக்கா வீட்டுக்குக் கூட்டிப்போய் மேலும் சில பரிந்துரைகள் செய்தார். ஒரு சாவியைக் கழற்றி, ராவின் அக்கா வீட்டில் கொடுத்தான் நாராயணன்.
“இது பேருக்குத்தான் என் வீடு... பசங்களுக்குப் படிக்க படுக்க, எதுக்கானாலும் நீங்க யூஸ் பண்ணிக்கிடுங்கோ... நான் காலம்பற போனா ராத்திரி படுக்கத்தான் வருவேன்”.
ராவிடம் சொன்னான் - - “இது என்னைக்கு ஆனாலும் உம்ம வீடுதான். எப்பத் திரும்ப வேணும்னாலும் சொல்லுங்கோ..."
“போமய்யா... நீர் பெரிசாத் தத்துவம் பேசாண்டாம்”.
மாட்டுங்காவில் இருந்து வந்த பிறகு, சிறிது சிரமமாக இருந்தது. ஒரு பிரம்மசாரிக்கு மாட்டுங்கா போலத் தோதான இடம் கிடையாது. இது முற்றிலும் தனியான ரெசிடென்ஷியல் காலனி. காலையில் சாயா குடிக்க அரை கிலோ மீட்டர் போக வேண்டும். அங்கு போல, நாற்சந்தியில் நின்று கொண்டே சில மணி நேரம் கொல்ல முடியாது.
இரவு பத்து மணிக்கு மேல், போர்வை ஒன்றை விரித்துப் படுத்த போது, வாழ்க்கை சிமெண்ட் தரை போலத் தட்டையாக, கடினமாக, செயற்கைக் குளிர்ச்சியுடன் இருப்பதாகப் பட்டது. ஒருவேளை ராவின் சில யோசனைகள் நேரம் கொல்ல ஏதுவாக இருக்கக்கூடும்.
ராவின் அக்கா வீட்டில் உபயோகம் அற்றுக் கிடந்த ஸ்டவ் ஒன்று தந்தார்கள். அவர்கள் ரேஷன் கார்டில் மண்ணெண்ணெய் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.
காலையில் ஆங்கிலத் தினசரியுடன் இப்போது கறுப்புக் காப்பி சுவையாக இருந்தது.
ஊருக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பம்பாயில் சொந்தமாக வீடு வாங்கி விட்டான் என்று பெரிய மாமா ஒருவேளை பெருமைப் படலாம். கல்யாணி கட்டாயம் சந்தோஷப் படுவாள். பிள்ளைகளுக்கு விடுமுறை விடும்போது பம்பாய்க்கு வரச் சொல்லலாம். தங்குவதற்கு இடமுண்டு என்ற உறுதியுண்டு இப்போது.
கல்யாணி எழுதிய கடிதத்துக்கு தான் இன்னும் பதில் எழுதவில்லை என்பது ஞாபகம் வந்தது.
என்ன எழுதுவது என்று தெரியவில்லை . என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்பதன் அர்த்தம் என்ன? வேண்டாம் என்று எழுதத் துணிவில்லை என்பதுதானே! வேண்டாம் என்று எழுதத் துணிவில்லை என்றால், மனம் வேண்டும் என்ற திசையில் யோசிக்கிறது என்பதுதானே! முடிவெடுக்கத் தைரியம் போதவில்லை , கூச்சம் கொள்கிறது என்பதுதானே!... மனம் சலனம் கொள்கிறது என்பதுதானே! குழப்பம் அதிகரிக்கும் போலத் தோன்றியது நாராயணனுக்கு.

Saturday, August 13, 2022

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் ஸல்மான் ருஷ்டி

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் ஸல்மான் ருஷ்டி****தமிழில் - தேவதாஸ்

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் 

ஸல்மான் ருஷ்டி 

காப்ரியேல் என்கிற மனிதர் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவர் என்ற சந்தேகம் நெடுங்காலமாக இருந்து வந்தது தான். இதனால் அச்சகங்களில் அற்புதங்கள் நடந்தபோது காத்திருந்தவர்களாகத் தலையசைத்தோம். ஆனால் அவருடைய மாயாஜால வித்தைகளை அறிந்து வைத்திருந்ததால் அவற்றின் வசியத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்றால் முடியவில்லை. வசப்பட்டு மரப்பெஞ்சுகளிலிருந்தும் தோட்டத்து ஊஞ்சல்களிலிருந்தும் எழுந்து வந்து ஈக்களைக் காட்டிலும் வேகமாகப் புத்தகங்களை வெளித்தள்ளும் அச்சகங்களுக்கு மூச்சிறைக்க ஓடிப் போனோம். கைகளை நீட்டுவதற்குள் புத்தகங்களும் தாவி வந்தன. கிளம்பிய புத்தக வெள்ளம் சந்துபொந்துகளிலும் வீதிகளிலுமாகப் பாய்ந்து மைல்பல் தூரத்திலுள்ள வீடுகளின் தரையெல்லாம் நிறைப்ப கதையிலிருந்து யாரும் தப்பமுடியாதபடிக்கு. பார்வை இல்லாமல் இருந்தாலா கண்களை இறுக்க மூடிக் கொண்டாலோ காதருகே உரத்துப் பேசும் குரல்கள் கேட்டவாறு. "உங்களுடைய சுயசரிதம் தான்" என்று ஒவ்வொருவரையும் திருப்திப் படுத்துகிற திறன் கொண்டிருக்கும் இவற்றிடம் கன்னிகாஸ்திரீகளைப் போல மயங்கிப் போயிருக்கிறோம். எங்களுடைய தேசத்தை நிரப்பிவிட்டு புத்தகங்கள் சமுத்திரத்தை நோக்கிப் போகின்றன. மாயமிக்க அச்சகங்களிலிருந்து கிளம்பும் முடிவற்ற புத்தகங்களால் சமுத்திரங்களும் மலைகளும் சுரங்க ரயில்பாதைகளும் பாலைவனங்களும் அடைபட்டுத் திணறுகிற வரை, பூமியின் பரப்பு முழுதுமாக நிரம்புகிற வரை ஓயாது என்பதைப் புரிந்து கொள்கிறோம். 

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலை எழுதிப் பதினைந்து வருஷங்கள். நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. மூல ஸ்பானிய மொழியில் மட்டும். மொழிபெயர்ப்புகளாக எத்தனை விற்பனை தெரியவில்லை. புதிய புத்தகம் வருகிறதென்றால் ஸ்பானிய அமெரிக்க தினசரிகளில் செய்தி முதல்பக்கம். தள்ளுவண்டிப் பையன்கள் தெருவில் பிரதிகளை விற்கிறார்கள். பாராட்டுவதற்கு வார்த்தைகளின்றி விமர்சகர்கள் மாய்ந்து போகின்றனர். ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை சமீபத்திய நாவலின் முதல் பதிப்பு பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் போனது. 

கற்பனையை இயக்குகிற மாபெரும் சக்தி பாட்டியின் நினைவு. எழுத்துக்கான உத்வேகத்தை அளித்தவர்களாக அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் ஃபாக்னர், ஜோர்ஜ் லூயி போர்ஹெ அப்புறம் Epitaph of a Small Winner, Quincas Barba மற்றும் Dom Casmuno நாவல்களை எழுதிய மச்சாடோ டி ஆஸிஸ் போன்றவர்கள். ஃபாக்னரின் தாக்கத்தை ஒப்புக்கொள்கிறார். 308 


குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலில் லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றின் சர்வாதிகாரியை கடனுக்குப் பதிலாக நாட்டின் சமுத்திரத்தைத் தருமாறு அமெரிக்க அரசாங்கம் நிர்ப்பந்திக்கிற ஆச்சரியத்தைப் பார்க்க முடிகிறது. "ஏப்ரல் மாதத்தில் அவர்கள் கரீபியக் கடலை எடுத்துச் சென்றனர். தூதுவர் எவிஸ்கின் கடற்படைப் பொறியாளர்கள் இலக்கமிடப்பட்ட துண்டுகளாக கடலை எடுத்துச் சென்று அரிஸோனாவின் குருதிச்சிகப்புவிடியல்களில் பதித்து வைத்தனர்" என்று எழுதுவதற்கு வருஷக்கணக்காக திரைக்கதை எழுதிய அனுபவம் உதவியிருக்கும். இவற்றையெல்லாம் விட பாட்டிதான் கதைகளுக்கான முக்கிய உந்துசக்தி. 

லூயி ஹார்ஸ் மற்றும் பார்பரா டோமன் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் பாட்டிதான் மொழிவளத்துக்குக் காரணமானவள் என்கிறார். "அப்படித்தான் பேசினாள். பெரிய கதைசொல்லி." பாராட்டுகிறார். இந்திய துணைக்கண்டத்திலும் கதைகளைச் சுழல் விடுபவர்களாகப் பெண்கள் இயங்குவதை எழுத்தாளர் அனிதா தேசாய் சுட்டிக்காட்டுகிறார். லத்தீன் அமெரிக்காவில் இதே நிலைமைதான். தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட மார்க்வெஸ் அம்மாவைச் சந்திக்கும்போது எட்டு வயதாகி விடுகிறது. எட்டு வயதுக்குப் பிறகு தம்முடைய வாழ்க்கையில் சுவாரசியமாக ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடுவது முக்கியமானது. "ஆவிகள் நிறைந்த பெரிய வீடு தாத்தா பாட்டியுடையது. மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். சட்டென்று மனதில் பதிந்துவிடக் கூடியவர்கள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எலும்புக்கூடுகளும் நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன. மாலையில் மணி ஆறுக்குப் பிறகு அறையை விட்டுக் கிளம்ப தைரியம் வராது. மாயத்தன்மை கொண்ட, திகில்களாலான உலகம்" என்கிறார் பேட்டியில், 

வீட்டைப் பற்றிய நினைவைக் கொண்டும் பாட்டியின் கதைசொல்கிற முறையைக் கொண்டும்தான் மக்காந்தோவைக் கட்டமைக்கத் துவங்குகிறார். பாட்டிக்கு அப்புறமாகவும் அவரிடம் நிறைய விஷயங்கள். குழந்தைப்பருவத்தில் அரக்காடக்கா ஊரில் வசித்துவிட்டு இளைஞனாகும் முன்பு கிளம்பி நகர உலகத்துக்கு வந்துவிடுகிறார். நகர எதார்த்தம் குறித்த இலக்கணம் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் உலகத்தின் பேரழகி ரெமெடியோஸ் சொர்க்கத்தை அடைவது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாக விவரிக்கப்பட, மக்காந்தோவுக்கு முதன்முதலில் ரயில் வருகிற செய்தி கிராமத்துப்பெண் ஒருத்தியை அலறியடித்துக்கொண்டு ஓடவைக்கும் அளவுக்கு பயடிமுட்டுகிறது. "சமையல் அறை ஒன்று ஊரையே இழுத்துக்கொண்டு வருவதாக" ரயிலைச் சொல்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகள் பற்றியதான நகர மனிதர்களின் விவரணையும் எதிர்வினையும் தலைகீழாக ஆகிப்போகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிராமத்தின் பிரபஞ்சப் பார்வையை நகரத்தின் நோக்கத்துக்கு மேலானதாக வைத்துக்காட்ட இங்கே முயற்சிக்கிறார். இதுதான் கதைகளின் மாயத்துக்கான ஆதாரம். 

309 


லத்தீன் அமெரிக்காவின் எதார்த்தத்துக்கு ஏற்பட்ட அபாயம் கலாச்சாரம் சார்ந்த அளவுக்கு அரசியல் சார்ந்ததும். என்னவென்று கொள்ளமுடியாத படிக்கு எதார்த்தம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மார்க்வெஸின் அனுபவம், நிஜம் எப்போதும் கூறப்படும் பொய். தீவிரமான அரசியல் கண்ணோட்டம் கொண்ட மார்க்வெஸிடம் புறநிகழ்வுகள் பெரும் உருவகங்களாக மாறிப்போவது இதனால்தான். ராணுவ வாழ்க்கையை மேற்கொள்கிற கர்னல் அவ்ரலியனோ புண்டியாவும் எதிரி ஒருத்தனை விருந்தாக விழுங்கிய பின் வெகு தூங்கிப் பிறகு மாலைநேரத்தைக் காலை என்று தீர்மானித்து சூரிய வடிவத்திலான அட்டைகளை ஏந்தியவாறு இரவெலாம் ஜன்னலோரங்களில் ஜனங்களை நிற்க வைத்த சர்வாதிகாரியும் நாவல்களில் இப்படித்தான் முடிகிறது வாழ. 

ஸர்ரியலிஸத்திலிருந்து உருவாகி மாற்றம் பெற்றுள்ள அற்புத எதார்த்தம் மார்க்வெஸினுடையது. மூன்றாம் உலகப் பிரக்ஞையை வெளிப்படுத்துவதாகும். அசாத்தியமான, பழமை திகைக்க வைக்கிற நவீனத்தை எதிர்கொண்டு விடுகிறதும் ஊழல்களும் தனிப்பட்ட கவலைகளும் மேற்கத்திய உலகத்தைக் காட்டிலும் உறுத்தும் வகையில் காணப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்கிற பரப்பின் மீது நூற்றாண்டுக்கால் சொத்தாகிய நினைவும் அதிகாரமும் கெட்டிதட்டிப் போன அழுக்குகளை உண்டாக்கியுள்ள அரைகுறை சமுதாயங்கள் என்று வி எஸ் நைப்பால் குறிப்பிடுவதுடன் நாவல்கள் ஒத்துப்போகின்றன. நம்பமுடியாத பட்டப்பகலில் சம்பவங்கள். இலக்கிய உலகத்தை மார்க்வெஸ் பிரத்தியேகமாகக் கண்டுபிடித்த ஒன்றாகவோ சுயசரிதைக் குறிப்புகளாகவோ மூடுண்ட அமைப்பாகவோ அணுகுவது தவறு. அந்தரத்தில் தொங்கும் உலகத்தைப் பற்றி அல்லாமல் வாழ்கிற உலகத்தையே இப்படியெல்லாம் எழுதுகிறார். மக்காந்தோ இருப்பது அதன் மாயத்தன்மை. "கார்சியாப் பிரதேசம்" என்பதான தொல்கதையை உருவாக்க தொடர்ந்து முயல்வதாகக்கூடத் தோன்றுகிறது. உதாரணமாக ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலின் முதல் வாக்கியத்தைப் பார்க்கலாம். 

மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தனது மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நிற்கிற துப்பாக்கிக்காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில்தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதன்முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன தூரத்து மத்தியானப்பொழுதானது நினைவுக்கு வரத் துவங்கியது. 

ஏற்கனவே கொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலின் முதல் வாக்கியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. 

310 


தன்னைக் கொல்லப்போகிற நாளில் அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்ட ஸான்டியாகோ நஸ்ஸர் பிஷப் வந்துகொண்டிருந்த படகுக்காகக் காத்திருந்தான். 


இரண்டு நாவல்களும் வரப்போகிற மரணத்தைச் சுட்டிக்காட்டி அசாதரணமான பழைய சம்பவத்தை விவரிப்பதில் தொடர்கின்றன. குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலும் மரணத்தில் துவங்கி வாழ்க்கையைச் சுற்றிப் பரவுகிறது. நாவல்களை இணைத்தே வாசிக்கும்படியும் நாவல் ஒன்றை அடுத்ததன் ஒளியில் பரிசீலிக்குமாறும் யாசிக்கிறார். வகைசில பாத்திரங்கள் திரும்ப வருகின்றன. மாஜி சிப்பாய், ஒழுக்கம் கெட்ட பெண், அம்மா, சமரசத்துக்கு முயலும் பாதிரியார், வேதனை கொள்ளும் மருத்துவர். இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். பலர் சேர்ந்து செய்த குற்றத்துக்குப் பொறுப்பாக இன்னொருத்தனைப் பலிகடா ஆக்குவதை அனுமதிக்கும் தீவினைக்காலம் நாவலின் கதை, நம்பவியலாத சோம்பல் வியாதியால் பீடிக்கப்படுகிற, அறிவிக்கப்படுவதும் முன் அறிவிக்கப்படுவதுமான கொலையைக் கூடத் தடுக்கத் தவறுகிற, நகரத்துப் பிரஜைகளை விவரிக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலை எதிரொலிக்கிறது. கதைகளின் நோக்கங்கள், சாதனைகள் வெவ்வேறாக இருந்தாலும் ஒப்புமைகளும் உள்ளன. 

பாட்டியை விடவும் பிரம்மாண்டமான கதையாகிருதி கொண்டவர். படைத்த மக்காந்தோவை விட பூதாகரமாகிவிடுகிறார். ஆரம்பக்கால எழுத்துக்கள் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலுக்கான ஆயத்தங்களாகவே தெரிகின்றன. முதலில் எழுதியபோதும் இரண்டு நகரங்களைப் பற்றித்தான். ஒன்று மக்காந்தோ. அடுத்தது பெயரற்ற ஏதோ நகரம். அந்த நகரம் மக்காந்தோவைப் போலன்றி தொல்கதைத்தன்மை குறைந்ததது. இயற்கையானது. பெரியம்மாவின் நல்லடக்கம் கதையில் வருகிற நகரத்தைப் போல. 

குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் முடிவற்ற வாசகங்கள் வருகிற எல்லையற்ற கொடுங்கோன்மையின் வெளிப்பாடாகின்றன. நவீன வளர்ச்சியின் சாத்தியப் பாடுகளும் மாற்றங்களும் மறுக்கப்பட்டதான சர்வாதிகாரத்தை நாவல் வளைத்துச் சொல்கிறது. சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை காலத்தைக் கட்டிப் போடுகிறது. நாவல் சர்வாதிகாரியின் ஆட்சிக்காலத்துக் கதைகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்கிறது. நாவலின் வளைகோட்டு வடிவம் ரத்த ஓட்டம் நின்றுபோனதை உணர்வதற்கான சரியான உவமை. 

ஆரம்பகால எழுத்துமுறைக்குத் திரும்புவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் எற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை மீண்டும் புதிய எழுத்து வழி காணும் 

311 


முயற்சியே. நாவல் மரியாதை, அவமரியாதை மற்றும் அவமானம் தொடர்பானது. பயார்டோ ஸான் ரொமானுக்கும் ஏஞ்செலா விக்காரியோவுக்கும் திருமணம். ஆனால் ஸான்டியாகோ நஸ்ஸரைத் தன்னுடைய காதலன் - மாஜி என்று அவள் குறிப்பிடுவதுடன் முதலிரவு முறிந்துபோகிறது. பெற்றோர் வீட்டுக்குத் திரும்புகிறாள். அவள் சகோதரர்களான இரட்டையர்கள் குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற ஸாண்டியாகோ நஸ்ஸரைக் கொலைசெய்ய வேண்டிய நிலையில், தங்கள் செயல்பாட்டில் இரட்டையர்கள் காட்டும் தயக்கத்தில்தான் சின்ன நாவலின் மறக்கமுடியாத முக்கியத்துவம். நோக்கம் பற்றி ஓயாமல் பீற்றிக்கொள்ளும் இரட்டையர்கள். ஸான்டியாகோ நஸ்ஸர் பற்றி அறியாமலிருப்பது ஆச்சர்யம்தான். நகரத்தின் அமைதியே இரட்டையர்களை பீதியூட்டும் கொலையைச் செய்யத் தூண்டுகிறது. நிச்சயிக்கப்பட்டவளை மறுக்கவேண்டிய நிலையிலுள்ள பயார்டோ ஸான் ரொமான் பயங்கரமான வீழ்ச்சிக்கு உள்ளாகிறான். "கெளரவம்தான் அன்பு" என்கிறது ஒரு பாத்திரம். அவனைப் பொறுத்தவரையோ அது உண்மையல்ல. இதற்கெல்லாம் மூல காரணமாயிருக்கும் ஏஞ்செலா நிதானமாகத் துயரத்தை எதிர்கொள்கிறாள். 

நாவலின் கதைவெளிப்பாட்டுமுறை மார்க்வெஸுக்குப் புதிது. கொலை நடந்து இடத்துக்குப் பல வருஷங்கள் கழித்து பெயரற்ற நிழலுருவான கதைசொல்லி வருவதும் கடந்த காலம் குறித்த விசாரணை மேற்கொள்வதுமான உத்தி. கதைசொல்லி மார்க்வெஸ்தான் என்று நாவல் குறிப்பால் சொல்கிறது. வருகிற பெயர்கொண்ட அத்தை ஒருத்தி அவருக்குண்டு. கொலை நடக்கும் இடம் மக்காந்தோவை எதிரொலிக்கிறது. ஜெரினால்டோ மார்க்வெஸ் அங்கே வந்து போகிறார். இன்னொரு பாத்திரத்துக்கு கோட்டஸ் என்று பெயர். 

இடம் மக்காந்தோவோ, இல்லையோமுன்போலன்றி வெகுதூரத்திலிருந்து எழுதுகிறார். நாவலும் கதைசொல்லியும் அரைகுறை நினைவுகள், புதிர்கள் மற்றும் முரண்பட்ட தகவல்களின் பனிமூட்டத்தின் ஊடாக நடந்தது என்ன, ஏன் என்பதை நிறுவ முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் கிடைப்பது தற்காலிக விடைகள் மட்டுமே. வேர்களிலிருந்து விலகிப் போய் சம்பிரதாயமும் சிரமமும் மிக்க திரைகளின் ஊடே எழுதிச் செல்வதனால் இரங்கற்பாவின் தொனியை நாவல் பெறுவது இப்படித்தான். முந்தைய நாவல்கள் உள்ளடக்கம் மீதான கட்டுப்பாடு கொண்டிருக்க, இந்த நாவலில் சந்தேகத்துடன் உள்ளடக்கத்தை அணுகுகிறார். ஒலிம்பஸ் மலையை விட்டு விலகிவந்த தன்னிலை ஒன்றின் பிரமாதமான விவரிப்பாக புதிய தயக்கம் உருக்கொள்கிறது. இதுதான் நாவலின் வெற்றி. நிச்சயமின்மையுடனும் கூறுகாண் வாசிப்புடனும் எழுத்துமுறை இதுவரை எழுதியவற்றையெல்லாம் விட தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. 

312 


மம்தா 

நாவலில் ஒருவித நீதி போதிக்கப்படுவதையும் லேசாக உணர முடியு முந்தைய நாவல்களில் அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் மட நிலைப்பாட்டை எடுப்பார். கதைகளில் வருகிற  வாழைத்தோட்ட அதிபர்களில் நல்லவர்கள் இருக்க முடியாது  குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் கதை பத்திகளிலாவது ஜனங்கள் பற்றிய புனைவு இருக்கும். பற்றி எழுதும் போது குறை 6)சால்வதை இதுவரை தவிர்த்திருக்கிறார். ஏற்கனவே சொல்லப்பட " நாவலில் தம்மை வேறொரு தொலைவான இடத்தில் நிறுத்திக்கொள்கிறார். கனவுக'' தவிர்க்க இயலாமல் போய் கொடூரமான சம்பவங்கள் நிகழக்கூடிய, குறுகிப்போன சமுதாயத்தின் மீது தாக்குதல் கொடுத்த உதவுகிறது. இத்தகைய எதிர்ப்புணர்வுடன் முன்பு இப்படி எழுதியதில்லை. நாவல் நெடுங்கால மெளனத்துக்குப் பிறகே சிறிதுகாலம் கற்பனைப் படைப்பைக் கைவிட்டிருந்தார். மேதைமை பாதிக்கப்படாமல் பாதை மாறியதற்கு நன்றி பாராட்டியாக வேண்டும். இந்த வருஷம் இங்கிலாந்தில் இதைவிடப் பிரமாதமான புத்தகம் வெளிவரப் போவதில்லை .. 

தமிழில் - தேவதாஸ்


at 8/29/2019 09:54:00 pm No comments: 

Email This

BlogThis!

Share to Twitter

Share to Facebook

Share to Pinterest

Saturday, August 13, 2022

பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ் ஸல்மான் ருஷ்டி

 


பனிமூட்டத்தில் சொல்லக் கதைதேடும் மார்க்வெஸ்

ஸல்மான் ருஷ்டி

காப்ரியேல் என்கிற மனிதர் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியவர் என்ற சந்தேகம் நெடுங்காலமாக இருந்து வந்தது தான். இதனால் அச்சகங்களில் அற்புதங்கள் நடந்தபோது காத்திருந்தவர்களாகத் தலையசைத்தோம். ஆனால் அவருடைய மாயாஜால வித்தைகளை அறிந்து வைத்திருந்ததால் அவற்றின் வசியத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்றால் முடியவில்லை. வசப்பட்டு மரப்பெஞ்சுகளிலிருந்தும் தோட்டத்து ஊஞ்சல்களிலிருந்தும் எழுந்து வந்து ஈக்களைக் காட்டிலும் வேகமாகப் புத்தகங்களை வெளித்தள்ளும் அச்சகங்களுக்கு மூச்சிறைக்க ஓடிப் போனோம். கைகளை நீட்டுவதற்குள் புத்தகங்களும் தாவி வந்தன. கிளம்பிய புத்தக வெள்ளம் சந்துபொந்துகளிலும் வீதிகளிலுமாகப் பாய்ந்து மைல்பல தூரத்திலுள்ள வீடுகளின் தரையெல்லாம் நிறைப்ப கதையிலிருந்து யாரும் தப்பமுடியாதபடிக்கு. பார்வை இல்லாமல் இருந்தாலா கண்களை இறுக்க மூடிக் கொண்டாலோ காதருகே உரத்துப் பேசும் குரல்கள் கேட்டவாறு. "உங்களுடைய சுயசரிதம் தான்" என்று ஒவ்வொருவரையும் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலை எழுதிப் பதினைந்து வருஷங்கள். நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. மூல ஸ்பானிய மொழியில் மட்டும். மொழிபெயர்ப்புகளாக எத்தனை விற்பனை தெரியவில்லை. புதிய புத்தகம் வருகிறதென்றால் ஸ்பானிய அமெரிக்க தினசரிகளில் செய்தி முதல்பக்கம். தள்ளுவண்டிப் பையன்கள் தெருவில் பிரதிகளை விற்கிறார்கள். பாராட்டுவதற்கு வார்த்தைகளின்றி விமர்சகர்கள் மாய்ந்து போகின்றனர். ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை சமீபத்திய நாவலின் முதல் பதிப்பு பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் போனது.

கற்பனையை இயக்குகிற மாபெரும் சக்தி பாட்டியின் நினைவு. எழுத்துக்கான உத்வேகத்தை அளித்தவர்களாக அமெரிக்க நாவலாசிரியர் வில்லியம் ஃபாக்னர், ஜோர்ஜ் லூயி போர்ஹெ அப்புறம் Epitaph of a Small Winner, Quincas Barba மற்றும் Dom Casmuto நாவல்களை எழுதிய மச்சாடோ டி ஆஸிஸ் போன்றவர்கள். ஃபாக்னரின் தாக்கத்தை ஒப்புக்கொள்கிறார்.

திருப்திப் படுத்துகிற திறன் கொண்டிருக்கும் இவற்றிடம் கன்னிகாஸ்திரீகளைப் போல மயங்கிப் போயிருக்கிறோம். எங்களுடைய தேசத்தை நிரப்பிவிட்டு புத்தகங்கள் சமுத்திரத்தை நோக்கிப் போகின்றன. மாயமிக்க அச்சகங்களிலிருந்து கிளம்பும் முடிவற்ற புத்தகங்களால் சமுத்திரங்களும் மலைகளும் சுரங்க ரயில்பாதைகளும் பாலைவனங்களும் அடைபட்டுத் திணறுகிற வரை, பூமியின் பரப்பு முழுதுமாக நிரம்புகிற வரை ஓயாது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலல லத்தான் அமெரிக்க நாடு ஒன்றன சாவாதிகாரியை கடனுக்குப் பதிலாக நாட்டின் சமுத்திரத்தைத் தருமாறு அமெரிக்க அரசாங்கம் நாபபந்திக்கிற ஆச்சரியத்தைப் பார்க்க முடிகிறது. "ஏப்ரல் மாதத்தில் அவர்கள் கரீபியக் கடலை எடுத்துச் சென்றனர். தூதுவர் எவிஸ்கின் கடற்படைப் பொறியாளர்கள் இலக்கமிடப்பட்ட துண்டுகளாக கடலை எடுத்துச் சென்று அரிஸோனாவின் குருதிச்சிகப்பு விடியல்களில் பதித்து வைத்தனர்" என்று எழுதுவதற்கு வருஷக்கணக்காக திரைக்கதை எழுதிய அனுபவம் உதவியிருக்கும். இவற்றையெல்லாம் விட பாட்டிதான் கதைகளுக்கான முக்கிய உந்துசக்தி.

லூயி ஹார்ஸ் மற்றும் பார்பரா டோமன் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் பாட்டிதான் மொழிவளத்துக்குக் காரணமானவள் என்கிறார். "அப்படித்தான் பேசினாள். பெரிய கதைசொல்லி," பாராட்டுகிறார். இந்திய துணைக்கண்டத்திலும் கதைகளைச் சுழல விடுபவர்களாகப் பெண்கள் இயங்குவதை எழுத்தாளர் அனிதா தேசாய் சுட்டிக்காட்டுகிறார். லத்தீன் அமெரிக்காவில் இதே நிலைமைதான். தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட மார்க்வெஸ் அம்மாவைச் சந்திக்கும்போது எட்டு வயதாகி விடுகிறது. எட்டுவயதுக்குப் பிறகு தம்முடைய வாழ்க்கையில் சுவாரசியமாக ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடுவது முக்கியமானது. "ஆவிகள் நிறைந்த பெரிய வீடு தாத்தா பாட்டியுடையது. மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். சட்டென்று மனதில் பதிந்துவிடக் கூடியவர்கள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எலும்புக்கூடுகளும் நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன. மாலையில் மணி ஆறுக்குப் பிறகு அறையை விட்டுக் கிளம்ப தைரியம் வராது. மாயத்தன்மை கொண்ட, திகில்களாலான உலகம்" என்கிறார் பேட்டியில்.

வீட்டைப் பற்றிய நினைவைக் கொண்டும் பாட்டியின் கதைசொல்கிற முறையைக் கொண்டும்தான் மக்காந்தோவைக் கட்டமைக்கத் துவங்குகிறார். பாட்டிக்கு அப்புறமாகவும் அவரிடம் நிறைய விஷயங்கள். குழந்தைப்பருவத்தில் அரக்காடக்கா ஊரில் வசித்துவிட்டு இளைஞனாகும் முன்பு கிளம்பி நகர உலகத்துக்கு வந்துவிடுகிறார். நகர எதார்த்தம் குறித்த இலக்கணம் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் உலகத்தின் பேரழகி ரெமெடியோஸ் சொர்க்கத்தை அடைவது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாக விவரிக்கப்பட, மக்காந்தோவுக்கு முதன்முதலில் ரயில் மற்செய்தி கிராமத்துப்பெண் ஒருத்தியை அலறியடித்துக்கொண்டு ஓடவைக்கும் அளவுக்கு பயமட்டுகிறது. "சமையல் அறை ஒன்று ஊரையே இழுத்துக்கொண்டு வருவதாக" ரயிலைச் சொல்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகள் பற்றியதான நகர மனிதர்களின் விவரணையும் எதிர்வினையும் தலைகீழாக ஆகிப்போகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிராமத்தின் பிரபஞ்சப் பார்வையை நகரத்தின் நோக்கத்துக்கு மேலானதாக வைத்துக்காட்ட இங்கே முயற்சிக்கிறார். இதுதான் கதைகளின் மாயத்துக்கான ஆதாரம்.

குலத்தநதையின் இலையுதிர்காலம் நாவலல லத்தன் அமெரிக்க நாடு ஒன்றன சாவாதிகாரியை கடனுக்குப் பதிலாக நாட்டின் சமுத்திரத்தைத் தருமாறு அமெரிக்க அரசாங்கம் நாபபந்திக்கிற ஆச்சரியத்தைப் பார்க்க முடிகிறது. "ஏப்ரல் மாதத்தில் அவர்கள் கரீபியக் கடலை எடுத்துச் சென்றனர். தூதுவர் எவிஸ்கின் கடற்படைப் பொறியாளர்கள் இலக்கமடப்பட்ட துண்டுகளாக கடலை எடுத்துச்சென்று அரிஸோனாவின் கருகிச்சிகப்பு விடியல்களில் பதித்து வைத்தனர்" என்று எழுதுவதற்கு வருஷக்கணக்காக திரைக்கதை எழுதிய அனுபவம் உதவியிருக்கும். இவற்றையெல்லாம் விட பாட்டிதான் கதைகளுக்கான முக்கிய உந்துசக்தி,

லூயி ஹார்ஸ் மற்றும் பார்பரா டோமன் ஆகியோருக்கு அளித்த பேட்டியில் பாட்டிதான் மொழிவளத்துக்குக் காரணமானவள் என்கிறார். "அப்படித்தான் பேசினாள். பெரிய கதைசொல்லி." பாராட்டுகிறார். இந்திய துணைக்கண்டத்திலும் கதைகளைச் சுழல விடுபவர்களாகப் பெண்கள் இயங்குவதை எழுத்தாளர் அனிதா தேசாய் சுட்டிக்காட்டுகிறார். லத்தீன் அமெரிக்காவில் இதே நிலைமைதான். தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட மார்க்வெஸ் அம்மாவைச் சந்திக்கும்போது எட்டு வயதாகி விடுகிறது. எட்டுவயதுக்குப் பிறகு தம்முடைய வாழ்க்கையில் சுவாரசியமாக ஏதும் நிகழவில்லை என்று குறிப்பிடுவது முக்கியமானது. "ஆவிகள் நிறைந்த பெரிய வீடு தாத்தா பாட்டியுடையது. மூட நம்பிக்கை மிகுந்தவர்கள். சட்டென்று மனதில் பதிந்துவிடக் கூடியவர்கள். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் எலும்புக்கூடுகளும் நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன. மாலையில் மணி ஆறுக்குப் பிறகு அறையை விட்டுக் கிளம்ப தைரியம் வராது. மாயத்தன்மை கொண்ட, திகில்களாலான உலகம்" என்கிறார் பேட்டியில்.

வீட்டைப் பற்றிய நினைவைக் கொண்டும் பாட்டியின் கதைசொல்கிற முறையைக் கொண்டும்தான் மக்காந்தோவைக் கட்டமைக்கத் துவங்குகிறார். பாட்டிக்கு அப்புறமாகவும் அவரிடம் நிறைய விஷயங்கள். குழந்தைப்பருவத்தில் அரக்காடக்கா ஊரில் வசித்துவிட்டு இளைஞனாகும் முன்பு கிளம்பி நகர உலகத்துக்கு வந்துவிடுகிறார். நகர எதார்த்தம் குறித்த இலக்கணம் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் உலகத்தின் பேரழகி ரெமெடியோஸ் சொர்க்கத்தை அடைவது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றாக விவரிக்கப்பட, மக்காந்தோவுக்கு முதன்முதலில் ரயில் வருகிற செய்தி கிராமத்துப்பெண் ஒருத்தியை அலறியடித்துக்கொண்டு ஓடவைக்கும் அளவுக்கு பயமூட்டுகிறது. "சமையல் அறை ஒன்று ஊரையே இழுத்துக்கொண்டு வருவதாக" ரயிலைச் சொல்கிறாள். இந்த இரண்டு நிகழ்வுகள் பற்றியதான நகர மனிதர்களின் விவரணையம் எதிர்வினையும் தலைகீழாக ஆகிப்போகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிராமத்தின் பிரபஞ்சப் பார்வையை நகரத்தின் நோக்கத்துக்கு மேலானதாக வைத்துக்காட்ட இங்கே முயற்சிக்கிறார். இதுதான் கதைகளின் மாயத்துக்கான ஆதாரம்.

வத்தீன் அமெரிக்காவின் எதார்த்தத்துக்கு ஏற்பட்ட அபாயம் கலாச்சாரம் சார் அளவுக்கு அரசியல் சார்ந்ததும், என்னவென்று கொள்ளமுடியாத படிக்கு எதார், கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மார்க்வெஸின் அனுபவம். நிஜம் எப்போதும் கூறப்படும் பொ தீவிரமான அரசியல் கண்ணோட்டம் கொண்ட மார்க்வெஸிடம் புறநிகழ்வுகள் பெ! உருவகங்களாக மாறிப்போவது இதனால்தான். சாணுவ வாழ்க்கையை மேற்கொள் கர்னல் அவ்ரலியனோ புண்டியாவும் எதிரி இருத்தனை விருந்தாக விழுங்கிய பின் கெ தூங்கிப் பிறகு மாலைநேரத்தைக் காலை என்று தீர்மானித்து சூரிய வடிவத்திலா அட்டைகளை ஏந்தியவாறு இரவெலாம் ஜன்னலோரங்களில் ஜனங்களை நிற்க வை! சர்வாதிகாரியும் நாவல்களில் இப்படித்தான் முடிகிறது வாழ,

ஸர்ரியலிஸத்திலிருந்து உருவாகி மாற்றம் பெற்றுள்ள அற்புத எதார்த்த மார்க்வெஸினுடையது. மூன்றாம் உலகப் பிரக்ஞையை அசாத்தியமான, பழமை திகைக்க வைக்கிற நவீனத்தை எதிர்கொண்டு விடுகிறதும் ஊழல்களு தனிப்பட்ட கவலைகளும் மேற்கத்திய உலகத்தைக் காட்டிலும் உறுத்தும் வகையி காணப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்கிற பரப்பின் மீது நூற்றாண்டுக்காக சொத்தாகிய நினைவும் அதிகாரமும் கெட்டிதட்டிப் போன அழுக்குகளை உண்டாக்கியுள்ள அரைகுறை சமுதாயங்கள் என்று வி எஸ் நைப்பால் குறிப்பிடுவதுடன் நாவல்கள் ஒத்துப்போகின்றன. நம்பமுடியாத பட்டப்பகலில் சம்பவங்கள், இலக்கிய உலகத்தை மார்க்வெஸ் பிரத்தியேகமாகக் கண்டுபிடித்த ஒன்றாகவோ சுயசரிதைக் குறிப்புகளாகவோ மூடுண்ட அமைப்பாகவோ அணுகுவது தவறு. அந்தரத்தில் தொங்கும் உலகத்தைப் பற்றி அல்லாமல் வாழ்கிற உலகத்தையே இப்படியெல்லாம் எழுதுகிறார். மக்காந்தோ இருப்பது அதன் மாயத்தன்மை, 'கார்சியாப் பிரதேசம்" என்பதான தொல்கதையை உருவாக்க தொடர்ந்து முயல்வதாகக்கூடத் தோன்றுகிறது. உதாரணமாக ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலின் முதல் வாக்கியத்தைப் பார்க்கலாம்.

மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தனது மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நிற்கிற துப்பாக்கிக்காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில்தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதன் முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன தூரத்து மத்தியானப்பொழுதானது நினைவுக்கு வரத் துவங்கியது.

ஏற்கனவே கொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலின் முதல் வாக்கியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது, தன்னைக் கொல்லப்போகிற நாளில் அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்ட ஸான்டியாகோ நஸ்ஸர் பிஷப் வந்துகொண்டிருந்த படகுக்காகக் காத்திருந்தான். இரண்டு நாவல்களும் வரப்போகிற மரணத்தைச் சுட்டிக்காட்டி அசாதரணமான பழைய சம்பவத்தை விவரிப்பதில் தொடர்கின்றன. தலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலும் மரணத்தில் துவங்கி வாழ்க்கையைச் சுற்றிப் பரவுகிறது. நாவல்களை இணைத்தே வாசிக்கும்படியும் நாவல் ஒன்றை அடுத்ததன் ஒளியில் பரிசீலிக்குமாறும் யாசிக்கிறார். வகைசில பாத்திரங்கள் திரும்ப வருகின்றன. மாஜி சிப்பாய், ஒழுக்கம் கெட்ட பெண், அம்மா, சமரசத்துக்கு முயலும் பாதிரியார், வேதனை கொள்ளும் மருத்துவர். இன்னொரு உதாரணத்தையும் கூறலாம். பலர் சேர்ந்து செய்த குற்றத்துக்குப் பொறுப்பாக இன்னொருத்தனைப் பலிகடா ஆக்குவதை அனுமதிக்கும் தீவினைக்காலம் நாவலின் கதை, நம்பவியலாத சோம்பல் வியாதியால் பீடிக்கப்படுகிற, அறிவிக்கப்படுவதும் முன் அறிவிக்கப்படுவதுமான கொலையைக் கூடத் தடுக்கத் தவறுகிற, நகரத்துப் பிரஜைகளை விவரிக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவலை எதிரொலிக்கிறது. கதைகளின் நோக்கங்கள், சாதனைகள் வெவ்வேறாக இருந்தாலும் ஒப்புமைகளும் உள்ளன.

பாட்டியை விடவும் பிரம்மாண்டமான கதையாகிருதி கொண்டவர். படைத்த மக்காந்தோவை விட பூதாகரமாகிவிடுகிறார். ஆரம்பக்கால எழுத்துக்கள் ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலுக்கான ஆயத்தங்களாகவே தெரிகின்றன. முதலில் எழுதியபோதும் இரண்டு நகரங்களைப் பற்றித்தான். ஒன்று மக்காந்தோ. அடுத்தது பெயரற்ற ஏதோ நகரம். அந்த நகரம் மக்காந்தோவைப் போலன்றி தொல்கதைத்தன்மை குறைந்ததது. இயற்கையானது, பெரியம்மாவின் நல்லடக்கம் கதையில் வருகிற நகரத்தைப் போல,

குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் முடிவற்ற வாசகங்கள் வருகிற எல்லையற்ற கொடுங்கோன்மையின் வெளிப்பாடாகின்றன. நவீன வளர்ச்சியின் சாத்தியப் பாடுகளும் மாற்றங்களும் மறுக்கப்பட்டதான சர்வாதிகாரத்தை நாவல் வளைத்துச் சொல்கிறது, சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை காலத்தைக் கட்டிப் போடுகிறது, நாவல் சர்வாதிகாரியின் ஆட்சிக்காலத்துக் கதைகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்கிறது. நாவலின் வளைகோட்டு வடிவம் ரத்த ஓட்டம் நின்றுபோனதை உணர்வதற்கான சரியான உவமை,

ஆரம்பகால எழுத்துமுறைக்குத் திரும்புவதுபோலத் தோன்றினாலும் உண்மையில் ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை மீண்டும் புதிய எழுத்து வழி காணும் முயற்சியே. நாவல் மரியாதை, அவமரியாதை மற்றும் அவமானம் தொடர்பானது. பயார்டேர் ஸான் ரொமானுக்கும் ஏஞ்செலா விக்காரியோவுக்கும் திருமணம். ஆனால் ஸான்டியாகோ நஸ்ஸரைத் தன்னுடைய காதலன்-மாஜி என்று அவள் குறிப்பிடுவதுடன் முதலிரவு முறிந்துபோகிறது. பெற்றோர் வீட்டுக்குத் திரும்புகிறாள். அவள் சகோதரர்களான இரட்டையர்கள் குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற ஸாண்டியாகோ நஸ்ஸரைக் கொலை செய்ய வேண்டிய நிலையில், தங்கள் செயல்பாட்டில் இரட்டையர்கள் காட்டும் தயக்கத்தில்தான் சின்ன நாவலின் மறக்கமுடியாத முக்கியத்துவம், நோக்கம் பற்றி ஓயாமல் பீற்றிக்கொள்ளும் இரட்டையர்கள். ஸான்டியாகோ நஸ்ஸர் பற்றி அறியாமலிருப்பது ஆச்சர்யம்தான். நகரத்தின் அமைதியே இரட்டையர்களை பீதியூட்டும் கொலையைச் செய்யத் தூண்டுகிறது. நிச்சயிக்கப்பட்டவளை மறுக்கவேண்டிய நிலையிலுள்ள பயார்டோ ஸான் ரொமான் பயங்கரமான வீழ்ச்சிக்கு உள்ளாகிறான். "கௌரவம்தான் அன்பு" என்கிறது ஒரு பாத்திரம். அவனைப் பொறுத்தவரையோ அது உண்மையல்ல. இதற்கெல்லாம் மூல காரணமாயிருக்கும் ஏஞ்செலா நிதானமாகத் துயரத்தை எதிர்கொள்கிறாள்.

நாவலின் கதைவெளிப்பாட்டுமுறை மார்க்வெஸுக்குப் புதிது. கொலை நடந்து இடத்துக்குப் பல வருஷங்கள் கழித்து பெயரற்ற நிழலுருவான கதைசொல்லி வருவதும் கடந்த காலம் குறித்த விசாரணை மேற்கொள்வதுமான உத்தி, கதைசொல்லி மார்க்வெஸ்தான் என்று நாவல் குறிப்பால் சொல்கிறது. வருகிற பெயர்கொண்ட அத்தை ஒருத்தி அவருக்குண்டு. கொலை நடக்கும் இடம் மக்காந்தோவை எதிரொலிக்கிறது. ஜெரினால்டோ மார்க்வெஸ் அங்கே வந்து போகிறார். இன்னொரு பாத்திரத்துக்கு கோட்டஸ் என்று பெயர்.

இடம் மக்காத்தோவோ, இல்லையோ முன்போலன்றி வெகுதூரத்திலிருந்து எழுதுகிறார். நாவலும் கதைசொல்லியும் அரைகுறை நினைவுகள், புதிர்கள் மற்றும் முரண்பட்ட தகவல்களின் பனிமூட்டத்தின் ஊடாக நடந்தது என்ன, ஏன் என்பதை நிறுவ முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் கிடைப்பது தற்காலிக விடைகள் மட்டுமே. வேர்களிலிருந்து விலகிப் போய் சம்பிரதாயமும் சிரமமும் மிக்க திரைகளின் ஊடே எழுதிச் செல்வதனால் இரங்கற்பாவின் தொனியை நாவல் பெறுவது இப்படித்தான். முந்தைய நாவல்கள் உள்ளடக்கம் மீதான கட்டுப்பாடு கொண்டிருக்க, இந்த நாவலில் சந்தேகத்துடன் உள்ளடக்கத்தை அணுகுகிறார். ஒலிம்பஸ் மலையை விட்டு விலகிவந்த தன்னிலை ஒன்றின் பிரமாதமான விவரிப்பாக புதிய தயக்கம் உருக்கொள்கிறது. இதுதான் நாவலின் வெற்றி, நிச்சயமின்மையுடனும் கூறுகாண் வாசிப்புடனும் எழுத்துமுறை இதுவரை எழுதியவற்றையெல்லாம் விட தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.

நிஜத்தில் நாவலில் ஒருவித நீதி போதிக்கப்படுவதையும் லேசாக உணர முடியும் முந்தைய நாவல்களில் அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் மட்டும் தமதான்

எடுப்பார். கதைகளில் வருகிற வாழைத்தோட்ட அதிபர்களில் நல்லவர்கள் இருக்க முடியாது. குலத்தந்தையின் இலையுதிர்காலம் நாவலின் - பத்திகளிலாவது ஜனங்கள் பற்றிய புனைவு இருக்கும். பற்றி எழுதும்போது சொல்வதை இதுவரை தவிர்த்திருக்கிறார். ஏற்கனவே சொல்லப்பட்ட மரணத்தின் கதை நாவல்ல தமமை வேறொரு தொலைவான இடத்தில் நிறுத்திக்கொள்கிறார். கனவுகளை தவிர்க்க இயலாமல் போய் கொடூரமான சம்பவங்கள் நிகழக்கூடிய, குறுக "| சமுதாயத்தின் மீது தாக்குதல் தொடுக்க உதவுகிறது. இத்தகைய எதிர்ப்புணர்வுடன் இதற்கு முனபு இப்படி எழுதியதில்லை. நாவல் நெடுங்கால மௌனத்துக்குப் பிறகான போன சிறிதுகாலம் கற்பனைப் படைப்பைக் கைவிட்டிருந்தார். மேதைமை பாதிக்கப்படாமல் பாதை மாறியதற்கு நன்றி பாராட்டியாக வேண்டும். இந்த வருஷம் இங்கிலாந்தில் இதைவிடப் பிரமாதமான புத்தகம் வெளிவரப் போவதில்லை.

தமிழில் - தேவதாஸ்