'மலர்மஞ்சம்' ஆய்வு
A
ஜானகிராமன்
படைத்த
யதார்த்த
பாத்திரங்கள்
வெ.சாமிநாதன்
மூன்று வருடங்களுக்கு முன்பு என்று ஞாபகம். தி. ஜானகிராமன் டெல்லிக்கு வந்திருந்தார். டெல்லி தமிழ்ச் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்தது. அவ் வரவேற்புக் கூட்டத்தில், பதிலளிக்கும்போது ''எழுதிப் புகழடையவேண்டும் என்ற ஆசை ஆரம்ப காலத்தில் என்னவோ எனக்கு இருந்ததுண்டுதான். ஆனால் இப் பொழுது எழுதுவதெல்லாம் அத்தகைய எந்தஆசையின் தூண்டுதலாலும் அல்ல. இலக்கியத்தைச் சா தன மாகக்கொண்டு, அதன் மூலம் உண்மையைக் கண்டறிய முயற்சிக்கிறேன்" என்று பொருள்படச் சொன்னார். அவர் எந்த எந்த அர்த்தத்தில் உண்மை என்ற சொல்லை உபயோகித்தார், இலக்கிய சாதனத்தின் மூலம் இது எப்படிச் சாத்தியமாகும்" என்று அவரைக் கேட்கவேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று, அன்று அவருக்கு நேரமோ சந்தர்ப்பமோ இல்லை.
நான் எதற்காக இதைச் சொல்ல வநதேன் என் றால், இலக்கியத்துடன் அவர் எத்தகைய உறவு கொண் டிருக்கிறார், அவ்வுறவின் பிணைப்பில் அவர் இலக்கி யத்தை அணுகும் முறை மற்றவரிடமிருந்து எப்படி மாறு பட்டது என்பன நமக்குத் தெரிய வாய்ப்பு இருப்பதோடு அவரது எழுத்துக்களை இந்த அறிவின் பின்னணியில் புரிந்துகொள்வதும் சாத்தியம் என்பதற்கே.
இந்த லட்சிய நோக்கில் எழுதும் தி. ஜானகிராமனைப்போலவே அவர், 'மலர் மஞ்சம்' நாவலில் (அவரது சிறுகதைகள் அப்படி அல்ல) படைத்து உலவ விட்டுள்ள பாத்திரங்கள் பெரும்பாலானவை, சிறிதும் பெரிதுமான லட்சிய ஜீவன்கள். ஆனால் லட்சிய ஜீவன்களாக முழுமை பெற்றவை தானா? வாழும் காலம், சந்தர்ப்பம் மனித இயல்பு இவற்றின் எல்லைக் கோடுகளால் வரை பட்டு லட்சிய முழுமையில் குறைபட்டவை. இக்குறை களே சிருஷ்டியின் கலைத் தன்மைக்கு அத்தாட்சிக ளாகும்.
ஏனெனில், எந்த லட்சிய உருவுக்கும் யதார்த்த இணக்கம் இருப்பதில்லை யதார்த்த இணக்க மற்றதில் ஜீவத்துடிப்பு இருப்பதில்லை,
ராமையா: 'பொண்ணாயிருந்தா என்ன? நம்ம சொர்ணக்கா மகளுக்குக் கொடுத்துப்பிடறது'
என்று அகிலம் சொல்ல 'இறுதிக் கோரிக்கை' என்ற சொற் களை நாம் வேண்டுமென்றே தான் உபயோகிக்க வில்லை) 'சொர்ணக்கா மகளுக்குத்தானே, அதுக் கென்ன செஞ்சுபிடறது'
என்று பதிலளிக்கிறார்
·
ராமையா. இந்த "அதுக்கென்ன செஞ்சுபிடறது" என்ற வார்த்தைகளை நாம் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தைகளின் கருவில்தான் 'மலர் மஞ்சம் நாவலே உருக்கொள்கிறது. இவ் வார்த்தைகளின் தொனியில், வெளியீட்டில் ஏதும் பீஷ்மப் பிரதிக்ஞை பாவம் இல்லை என்பது சிறப்பாக அமைந்த அம்சங்களில் ஒன்று.
'அப்ப மாமா பச்சை குத்திடுங்க'-'செஞ்சு பிடறது,'
ராமையா, அப்பால் மேலே ஏதாவது பாடுங்க'' 'அதுக்கென்ன பாடறது' 'அவர் (ராமையா) அப்பவே புடிச்சு வாயே தொறக்கலையே' (பாலிக்கு நாட்டியம் சொல்லிக் கொடுப்பது பற்றி).
‘அதுக்கென்ன செஞ்சுபிடறது'.
மூன்று உதாரணங்கள் போதும் என்று நினைக் கிறேன், இந்த உதாரணங்களில் சொல்லப்பட்ட ‘அதுக்கென்ன'க்களுக்கும், 'செஞ்சுபிடறது'க்களுக்கும், அகிலத்திடம் கூறிய, பின்னால் ஒரு சூறாவளியையே எழுப்பப்போகும் 'அதுக்கென்ன, செஞ்சுப்பிடறதுக்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. மற்றவற்றிற்கு எவ்வளவு சாதாரணத் தன்மை(Casualness) உண்டோ, அவ்வ ளவு சாதாரணமாகக் கூறப்பட்டவை. அகிலத்தின் மனச் சமாதானத்திற்குக் கூறப்படும் பாவனையில் என்று
கூடச் சொல்லலாம். இந்தச் சாதாரணத் தன்மையில் தான் பின்வரும் சம்பவங்களின் அவலம் (Tragedy) அடங்கியிருக்கிறது. அதனால்தான் அவலம் மிகுகிறது என்றும் சொல்லவேண்டும்.
குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். மற்ற தொடர் கதை ஆசிரியர்கள் இந் நிகழ்ச்சிக்கு அதன் உள்ளிருக்கும் நாடகப் பண்பை (Dramatic Potentialities) உணர்த்த, அதற்கு வலுவும் அழுத்த மும் தர, இந்நிகழ்ச்சியையே அதீத உணர்ச்சி கொந் தளிக்கும் நாடகமாக (Melodrama)ஆக்கியிருப்பார்கள். இதன் நிகழ்ச்சி இயல்பிலேயே சாதாரண தொனியில் எழுதிவிட்டது ஜானகிராமனின் எழுத்து விசேஷம்.
அகிலம் இறந்துவிடுகிறாள். இம் மரணம்தான் அவளுக்குக் கொடுத்த வாக்குக்கு புனிதத்வம் அளிப்ப தாக நினைப்பது தவறு. ராமையாவுக்கு, வாக்கே புனி தத்வம் பெற்றதுதான். அவள் மரணம் அவ்வாக்கிற்கு ஒரு நிலைத்த தன்மையைக் கொடுத்துவிட்டது. இதன் பின் அவரது வாழ்க்கையே கொடுத்த சொல்லைக் காப் பாற்றுவதற்காக என்று ஆகிவிடுகிறது. காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம் எழும்போதுதான், அச் சாதாரண சொற்களின் உண்மை சொரூபம் தெரி கிறது. ஒருவர்பின் ஒருவராக நான்கு மனைவிகளைப் பறி கொடுத்து பின் தாள் வாழ ஆசைப்பட என்ன நம் பிக்கை இருக்கிறது என்று அல்லல்பட்டு, அதை மறக்க தனித்தே மீனாட்சி கொல்லையை வளர்க்கிறார். கூத்தும், தடைப்பட்ட பூஜையும் மீண்டும் அவரை அழைக்கின்
ஓரிருவரைத் தவிர ஜானகிராமனின் பாத்திரங்கள் எல்லோருமே நமது அன்பிற்கு உரியவர்கள் உலகத் தில் எல்லோரையுமே குணசீலர்களாகத் தீட்டிப் பார்ப் பதில்தான் ஜானகிராமனுக்குப் பிரீதி. அவர்களது அன்பிலும் சீரிய குணங்களிலும் நமக்கு மூச்சுத் திணறுகிறது. உலகம் ஒன்றும் அப்படியில்லை என்று நினைப்போம் நாம்! ஆனால் இப்பாத்திரங்களின் சிருஷ்டியில்,.றன. இதிலிருந்து அச்சொல் விஸ்வரூபம் எடுத்து முழுக்க முழுக்க நம்பும்படி, உண்மைத் தோற்றம் எழ வைத்திருக்கிறார் ஆசிரியர், தம் எழுத்துத் திறமை யினால்,
அவரது நம்பிக்கையைச் சோதிக்கிறது. அவரது ஒவ் வொரு செய்கையும் தனது உறுதியைக் கேட்டுக்கொள் ளும் கேள்வி தாள், மீனாட்சி கொல்லை அழிந்ததும் தன் உறுதியின் சின்னம் அழிந்ததெனத் தோன்ற, தஞ் சைக்கு ஓடுகிறார்.
இத்தகைய லட்சிய பிரமை பிடித்த ஒரு பிறவியின் குணங்கள் தான் அசாதாரணமாகத் தோன்றுகிறதே தவிர, சிருஷ்டி அல்ல. ராமையா மிகவும் ஒப்புக்கொள் ளக்கூடிய (Convincing) பாத்திரம்.
ஆசிரியரே, இடைபுகுந்து ராமையாவை, பலவேறு கோணங்களில் பார்க்கிறார். ராமையாவாலும், ஒதுங்கி யிருந்து தன்னை உலகத்தின் பார்வையில் பார்த்துக்' கொள்ள முடிகிறது.
'நாலுபேரை ஒண்ணும் பின்னே ஒண்ணாகக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பித்துக்குளித்தனம். அதுக்கு மேலே பித்துக்குளித்தளமாயிடுச்சி நான் அகிலாண்டத் துக்கு சொல்லு சொன்னது." என்று தன்னைப்பற்றி ஒரு இடத்தில் கூறிக்கொள்கிறார்.
மீனாட்சி கொல்லை அழிந்ததும்." என்னைக் கண்டாலே ஏதாவது வம்பு பண்ணனும் போல இருக்கு இவங்களுக்கு” என்று ஊரைப்பற்றிச் சொல்கிறார்.
இன்னொரு முறை தோன்றுகிறது 'இந்தத் தடவை பாரியையும் (தில்லை விளாகத்துக்கு) அழைத்துப் போகவேண்டும். ஆனால், அவளை அழைத்துக் கொண்டு போனால்.. போகிறவர்கள் வருகிறவர்கள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இரண்டுவாரமாக ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு பிராகாரத்தில் பேய் பிடித்து உட்கார்ந்திருக்கும் இவன் யார்; இந்தக் குழந்தை யார்? தனியாகப் போவதுதான் நல்லது..." என்று.
''ஜமீள்தார்களைத் தவிர, மகாராஜாக்களைத் தவிர வேறு யாராவது இந்த மாதிரி கல்யாணத்தைத் தொழி வைத்துக்கொண்டால் உலகம் கேவலமாகச் சிரித்திருக்கும்' என்று ஒருமுறை தோன்றுகிறது.
லாக
“அண்ணன் தம்பியைப் பார்த்து சிரிப்பதுபோல, ஊரார்கள் அவரைப் பார்த்துச் சிரித்தார்கள்... பாலாம்பாள் பிறந்த பிறகு இந்தச் சிரிப்பு அதிகமாயிற்று...இந் தச் சிரிப்பிற்கு அடிப்படையும் அதிகமாயிற்று. பிரசவ அறையில் கிடந்த குழந்தையை நிச்சயம் செய்ததை எதோ புதுமையைக் கேட்கிறாப்போல வியந்தார்கள்.”
''...அந்தக் குழப்பம் அலட்சியமாக நகைக்கத் தொடங்கிற்று. அப்போதுகூட ஏதோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையைப் பார்த்துச் சிரிக்கிறார்போலத் தான் இருந்தது அது.'
இவை ஆசிரியர் கூற்றுகள், இதுபோன்ற பார்வைகள், ஒரு லட்சிய பாத்திரத்தைப் பற்றிக்கூட idolizaton என்பது ஆசிரியருக்கு இல்லை என்பதைக் காட்டுகின்றன. தன் ஈடுபாடற்ற பார்வை,ஆசிரியருக்கு சாத்தியமாகிறது,
வையன்னா தனபாக்கியத்திற்கெதிராக சாட்சியம் சொல்லக் கேட்கிறாள் ராமையாவை. அவர் நடந்ததைப் பார்க்கவில்லை என்ற தைர்யத்தில். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள் என்கிறான். ராமையா தனக்குத் தெரிந்ததென்ன என்று ஏதும் சொல்ல வில்லை. சொல்லியிருந்தால் தன்னைப் பொய்சொல்ல வற்புறுத்துவான் என்றே சொல்லவில்லை என்று பின்னால்
சொல்கிறார். 'அஸ்வத்தாமா ஹதா நரோவா குஞ்சரா' என்ற யுதிஷ்டிரர் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
"
"தனபாக்கியத்தைப் பட்டணத்தில் எங்காவது பார்த்தால் எனக்கு மாத்திரம் ரகசியமாக எழுதவும்’ என்று ராமையா எழுதும்போது நமக்குள் சிரிப்பு எழுகிறது தெரிந்து என்ன செய்யப்போகிறார்? 'அது வல்ல விஷயம். ராமையாவைப் பல நிற பேதங்களில் நாம் காண முடிகிறது.
தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு அடிக்கடி எழுகிறது, கார ணம் அவருக்குத் தெரியவில்லை. எழும் இச் சந்தேகத்தை வெளியிடும் நயத்திற்கு ஜானகிராமனை எவ்வ ளவு புகழ்ந்தாலும் தகும்"... நிர்க்கதியாக விடப்பட்டு சூன்யமான ஒரு நெடிய பாதை முன் நின்று அவர் பதைத்தது நினைவுக்கு வந்தது...வாக்கைக் காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம் புல் அசைவதுபோல அசைந் தது...இருளின் நரையில் இப்போது ஒன்றுமே கேட்கவில்லை. எங்கோ வெகுதூரத்திலிருந்து தம்பட் டச் சத்தம் லேசாகக் கேட்டது...சாகுருவி எங்கோ காறிற்று... என் சொல்லை நிறைவேற்ற முடியுமா?''
மாப்
6.
“எனக்குத்தான் பொறந்த அன்னிக்கே பிள்ளை வந்திட்டாரே" என்ற பாலியின், உதட்டில் புன் ன்கை சிவந்தது. அதற்குப் பின்னால்.-பின்னால் என்று கேட்டுப்பார்த்தார், அது, என்ன நிழலா, நிழலா என்று கேட்டுப்பார்த்தார். இல்லை கண்ணுக்கு அகப்படாத ஒண்ணு... நிழலா அது? என்னவென்று ஒன்றும் புரியவில்லை"...கோவிந்து என்னமோ சொல் லிக்கொண்டிருந்தான். ராமையா அவனைக் கவனித் துக்கொண்டிருந்தார்... வைத்தீஸ்வரர் என்று அலுத் தாற்போல அவர் வாயினின்று ஒரு அழைப்பு எழுந் தது."
இவ்வளவுதான். அவருள்ளும் சூன்யத்தினின்று தோன்றி மறையும் சந்தேகம். மகளின் ஒரு மாதிரியான பதிலைக் கேட்டு அந்த சந்தேகத்தின் நிழலாட்டம் அங்குதான் புறப்பட்டதோ என்ற ஜயம் அலுப்பின் பெருமூச்சில் விடுபடுகிறது.
பாலி கடைசியில் தனது மனத்தைத் திறந்து சொன்னபோது அவர் ஒன்றும் சொல்லவில்லை, 'குழந்தே, நான் பிரகாரத்திலே உட்கார்ந்திருக் கேன். நீபோய் தொழுதுட்டுவா'. அவ்வளவுதான். வெகுநேரம் அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். அவரிட மிருந்து பாலி கேட்பதற்கெல்லாம் "ம்..." அப்படியா' என்ற பதில்கள்தான் வருகின்றன. அகிலத்தின் மறைவிற்குப் பின் தான் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் தன் சொல்லைக் காப்பாற்றும் தவத்தில் கழித்தவர். பிரசவ அறையில் பார்த்த குழந்தையாகத்தொட்டு இன்றுவரை, தன் சொல்லின் நிறைவேற்றத்தை அணு கும் வளர்ச்சியாகத்தான் பாலியைக் கண்டார். ‘குழந்தை எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறது. தோட்டத்தை அழிச்சா ஆயிடுமா... வேரு இப்படியெல்லாம் ஓடியிருக் கிறப்ப... என்று பாலியைப் பார்த்து அன்று நெஞ்சு பூரித்து விம்மிற்று. இன்று அதுவே அல்லவோ சிதைந்து கிடக்கிறது தோட்டம் அழிந்தாற்போல்,
நாயக்கர்மகளுக்கு தன் மகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தன் நிலத்தை விற்க ஓடினார். சென்னை பேரகவேண்டாம் என்றார் பாலியிடம். 'எனக்கு யாரை யும் மனசு கஷ்டப்பட்டு பார்த்துக்கிட்டு இருக்கணும்னு ஆசை கிடையாது" என்று சொன்ன போதிலும் 'ஆனா நான் சொன்ன வார்த்தைக்கு மாற எதாவது நடந் திடப்படாதுங்கற கவலை' அவருக்கு, அவர் சொன்ன சொல் அவரைப் பற்றியதாக இருந்தால் சரி. அவர்
வையன்னா தர்ம ஆராய்ச்சி செய்வதைப் பார்த்து அவருக்கு மனதுக்குள் சிரிப்பு இயற்கையாகவும் படத் தான் செய்கிறது.
L
.
1
சொன்ன சொல்லுக்கு பாலியா பலி, பாலிகேட்பது போல் i அவர் என்னத்தைக் கண்டார்?
நாலை அழைத்து வந்தாரே." அவளைக்கேட்டா வாக்குக் கொடுத்தார். அவர் சொன்ன சொல் என்பதைத் தவிர வேறு ஏதாவது அர்த்தம் உண்டா அதற்கு? அகிலம் பின் பிழைத்திருந்தால்...... தங்கராஜுதான் சிரஞ்சீவி என்று எப்படித் தெரியும்?...தன் மகள் மட்டு மல்ல. தங்கராஜு என்ற இன்னொரு ஜீவனுமல்லவா பலி. அவனுக்கும் மனது என்ற ஒன்றில்லையா? தன் சொல் நிறைவேறவேண்டும் என்ற ஒற்றை நோக்குப் பாதையில், தங்கராஜு பாலி இன்னும் யார் யாரோ, எவருமே அவருக்குப் பொருட்டாகத் தோன்றவில்லை. இந்த லட்சிய ஜீவன்களுக்கு எவ்வளவு சுயநலம்? சுற் றம், ஊர், உலகம் எல்லாம் அவர்களைச் சுற்றிச் சுழல்வ தாகத்தான் நினைப்பு, அவர்களுக்கென்று ஒரு தனி வாழ்வு உண்டு என்ற நினைப்பே அவர்களுக்குக் கிடை யாதுபோலும், இந்த எண்ணமும் அவரை வாட்டுவ தாகத்தான் தோன்றுகிறது, ஆசிரியரின் எழுத்தில் இவை பற்றிய பிரஸ்தாபம் இல்லாவிட்டாலும், ஏனெ னில் பாலியிடம் ராமையா சொல்கிறார், "நீ தங்கராஜு வைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டு மென்று இப்பவும் கட்டாயம் இல்லை. ஆனா இது அவ
ஏக்கம் என்று"
ஆனால்
தங்கராஜு சொல்கிறான்.” அவர் சொல் என்னை எப்படிக் கட்டுப் படுத்தும் என்று "ஆடு மாடு, வீடு, அகப்பை போலவா பாலியும் அவளைக் கட்டுப்படுத்த” என்கிறான் செல்லம். ராமையாவுக்கு என்ன உரிமை தன் சொல்லுக்கு, தன் சொல் என்பதைத் தவிர வேறு அந்த்தம் இல்லாத தன் சொல்லுக்கு, மற்றவர்களைக் கட்டுப்படுத்த, தர்ம சங் கடம்தான். ராமையா "எனக்கு தர்ம சங்கடம் ஏதும் கிடையாது” என்று சொன்னாலும்கூட. 'இந்தச் சின் னக் குழந்தையை நான் இத்தனை காலம் படுத்தியது போதும். எனக்கு இதில் எண்ணமில்லை. இந்த உடல் இருக்கும் வரை இந்தப் பொய்யிலிருந்து தப்ப முடி இதை அழித்துக் கொண்டுதான் கிளம்பவேண் டும்" என்று எண்ணுகிறார் கோயிலின் நிழல் உருவில் அகிலாண்டத்தைப் பார்த்த ராமையா.
ளாட
யாது
யின் ஊ
பின்
•
‘அதுக்கென்ன, செஞ்சுபிடறது” என்று சொன்ன நேரத்திலிருந்து இதுவரையில் அவரது வளர்ச்சி தர்க்க ரீதியான வளர்ச்சி இந்த முறையான வளர்ச்சி ஊடே மனித குணத்தின் இயல்பான பலவீனம்,
வையன்னாவின் புத்திரபாசம்,
விரோதம் ஊராரின் கேலி இன்னும் பலவேறு சக்திகள் மோதுண்டு முரண் விளைவிக்கின்றன. இவ் வளர்ச்சியின் பாதையில் ஒரு தவிர்க்க முடியாமை இருப்பதையும் காண்கிறோம். இது முழுக்க முழுக்க நாம் ஒப்புக்கொள்ளும் (Convincing) வளர்ச்சி. அதன் ஸித்தியின் போக்கில், இடை நிகழும் தடுமாற்றங்கள், மனிதனின் புனித உணர்ச்சிக்கு ஏற் படும் இடையூறுகள். சிறு சிறு ஏமாற்றங்கள். ஜானகி ராமன் கையில், லட்சியம் மனித குணங்களை மீறி பேயாட்டம் ஆடும் ராட்சதரூபம் பெறவில்லை.
பாலிதான் கடைசியில் சம்மதித்து விடுகிறாளே. லட்சியம் நிறைவேறிற்றா? வாக்கு காப்பாற்றப்பட்டு விட்டதா? உண்மையில்? ராமையாவுக்கு அப்படித்தான் தோன்றிற்று, அதனால்தான் குழந்தே பொய் சொல் லிட்டா செத்துப்போயிடுவேன்னு பயத்தேன். நீதான் காப்பாத்திட்டே" என்று கூறினார். அவள் காப்பாற்றி யது எதை? வெறும் சொல்லின் நிறைவேற்றத்தை முழுதும் அதன் அர்த்தத்திலா? ராமையாவுக்கு இந்த
சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை. நாயக்கர் சொன்னது போல, "அவரைப் போலவே உலகம் இருக்கும் என்று நினைப்பவர். அதனால்தான் “மனசிலே அந்தப் பிள்ளை யும் வந்து போகுமில்லே அதுதானே. எங்கியும் நடக் குது.. மனசிலே ஒரு படுக்கை போட்டிருக்கே அது அடிக்கடி
என்று தெரியும்'
கேட்டதற்கு அது கேட்டார். உண்மையை கேள்வி. இந்த
என்று
எப்படி நடக்கும் எதிர்நோக்க விரும்பாத மின்மை "இதைத்தானா
சொல்லக்
இந்த விருப்ப கூப்பிட்டீங்க'
என்றுதான் கேட்க முடிந்தது. பின் லட்சியம் நிறை வேறிற்று. அல்லது அது போர்த்திருக்கும் வெற்றுச் சொல் நிறைவேறிற்றா?
எல்லாம் "சுபம்" என்று சொல்லும் பொய்யான முடிவைக்கூறும் முறை ஜானகிராமனதல்ல. அவரது எழுத்துக்களின் யதார்த்த இயல்பை (realism) இத்தகைய முடிவுகளில் காண்கிறோம். தாவல் ஒன்றுமே இல்லாத ஒன்றிலிருந்து ஆரம்பித்து போராட்டம்
டை நிகழ்ந்து பின் எல்லாம் சுபமாக முடிந்து ஒன் றுமே இல்லை என்று ஆவதல்ல. நாவலின் ஆரம்ப மும், மனித வாழ்க்கையின் தொடர்ந்த ஓட்டத்தில் நடு வில் பிடித்த பிடிப்பாகவும் முடியும்போது ஒரு பகுதியின் முடிவாகவும், அம் முடிவு மனிதப் போராட்டத்தின் வள ரும் தொடர்ச்சியை உணர்த்துவதாகவும் இருக்கவேண் டும். மனிதனின் போராட்டங்கள் முடிவுறுவதில்லை. ராமையாவின் லட்சிய நிறைவேற்றத்தின் முடிவில் இப்போராட்டம் முடிவுறாது தொடரும் உணர்வைப் பெறுகிறோம். ராமையாவின் லட்சியம் நிறைவேறிய வகையில் மனித சரித்திரத்தில் அவரது லட்சியங்கள் குறை நிறைவேற்றங்கள் மேலுக்கான, மனச்சாந்திக் கான, ஒப்புக்கு என்பார்களே அத்தகைய நிறைவேற் றங்கள்.
பாலி : ராமையாவைப்போல் நாவல் முழுதும் நிறைந்து வியாபித்திருக்கும் ஒரு பாத்திரம். எவ்வளவு சிக்கலான பாத்திரம்! மற்ற தொடர் கதை ஆசிரியர்கள் கையில் எவ்வளவு மட்டரகமாக முடிந்திருக்கும் என் பதை, நமக்குத் தெரிந்திருக்கும் தொடர் கதைகளின் அறிவு நமக்குத் தெரிவிக்கிறது. ஜானகிராமன் எவ் வளவு நயத்துடன் அதே சமயம் பூசி மெழுகாமல், மைக்கு மாறாமல், நாம் அறிய விரும்பாத அடித்தல் சொரூபங்களையெல்லாம் மேலுக்குக் கொணர்ந்து எழுது
கிறார்,
"
உண்
குழந்தை பாலியின் சித்தரிப்பில் அவருக்குப் பிரத் யேக ஈடுபாடு, ஏன்? எந்தக் குழந்தையின் பாத்திரத்தி லும் அவருக்கு ஈடுபாடு அதிகம் என்று நினைக்கிறேன். அவற்றைப் பற்றி எழுதும்போதெல்லாம் அவருக்கு அளவுமிக்க பூரிப்பு. அந்தப் பூரிப்பையும் ஈடுபாட்டை யும் அவரது குழந்தை பாலியைப் பற்றிய சித்தரிப்பில் காணமுடிகிறது, பஞ்சு போன்ற மெத்துச் சதையின் உடலில் பட்டுச் சொக்காய் அணிவித்து அதன் வழுக் கும் மிருதுவில், பூவுடலின் மென்மையை அனுபவிக்கும் ஆநந்தம் குழந்தை பாலியைப் படிக்கும்போது ஏற்படு கிறது.
வெறும் வர்ணனை அல்ல; ஜானகிராமனின் வெளி யீட்டுத் திறன். எப்படிச் சொல்வது? பார்த்துப் பார்த்து மாளாது பூரிக்கும் பெண்கள் தோரணையிலேயே "பாலி ஓயாது பேசிக்கொண்டே இருப்பாள், ஓயாத பேச்சு ஒழியாத பேச்சு”...‘சதா புலம்பிக்கிட்டே இருப்பியா. உன் வாய்தான் வலிக்காதா குழந்தே...'' ''...மொலு மொலுவென்று ஓயாத பேச்சு, சிரிப்பு, கோபம், அதட்டல், தாஜாப்படுத்தல் எல்லாம் சூன்யத்தில் வடி வடி வெடுத்து நிற்கும் யாரோ குழந்தையுடன்” என்று ஜானகிராமனைத் தவிர வேறு யார் எழுதமுடியும்? இன் மவன் னோர் இடத்தில்: 'இரு இரு சொர்ணக்கா கிட்டே சொல்லி உன் வாயைத் தைக்கச் சொல்றேன்' என்பார் ராமையா. 'ஊசியும் நூலும் போட்டா", பேசும் அது''. "அப்புறம் யார்கிட்டே ‘“ஆமாம்” ''அடி காளி' போப்பா, நீதான் கதையே சொல்ல மாட்டேங்கறே".
பாலி
சொர்ணக்கா புருஷன் 'இப்படி வந்து உட்காரு பாலி'' என்று மடியில் உட்காரச் சொன்னான். மழுப்பல் சிரிப்புடன் சாலையைப் பார்த்தது.
இது போதாதா, இவ்வளவு அழகாக எழுதும் ஜானகிராமனை ஒரு வேண்டாத ஆசை பற்றிக் கொள் கிறது. தன் கதைப் பொருளுக்கு ஏற்ப, பாலிக்கும் இயல்புக்கு மீறிய ஒரு லட்சிய உரு ஏற்ற விழைகிறார். பாலிக்கு தனது 5-ம் வயதிலேயே தன் தந்தை யின் சொல்காக்கும் லட்சியத்திலே பங்கு கொடுத்துவிட வேண்டும் என்று முயல்கிறார். அந்தப் பிஞ்சுப் பருவத்தி லேயே தனது அவதார நோக்கத்தின் லட்சணங்களை வெளிப்படுத்தவேண்டும்
என்று
ஆசைப்படுகிறார். விளக்கெண்ணெய் குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தை சொர்ணக்கா வந்தவுடன் கஷ்டப் பட்டு. பதில் சொல்லாமல் முகம் சுளித்து விடுக்கென்று குடித்துவிடுகிறது. சொர்ணக்கா மாமியாரல்லவா? ராமையாவுக்கு வெகு சந்தோஷம் இராதா? 5 வயதுச் சிறுவனாக கண்ணன் காளிங்க நர்த்தனம் செய்ய வில்லையா. கம்ச நிக்கிரகம் செய்யவில்லையா? தேவர் கள்தான்
பூமாரி பொழியவில்லையா? 5 வயதில் தன் அவதார மகிமையை
உணர்ந்தால், பாலி மட்டும் விதிவிலக்கா என்ன? இதையெல்லாம் தூக்கி யடிப்பது, பாலி 'நீ இப்பவே போகப்படாதுப்பா (வைகுண்டத்துக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுட் டுத்தான் போகணும்” என்று கேட்டுக்கொள்வதும், "இனிமே பண்ணலென்னு சொல்லுங்கப்பா' என்று ராமையாவை வேலய்யாவிடம் மன்னிப்புக் கேட்கும்படி சொல்வதும் இவையெல்லாம் ஜானகிராமனின் மித மிஞ்சிய உற்சாகத்தைக் காட்டுகின்றன,
கண்ணன்
இவற்றைத் தவிர, பாலியின் பின்னைய குணச்சித் திரம் பூராவும் மிக உன்னதமான சித்திரம் என்பதில் இரண்டாவது அபிப்ராயம் இருக்கமுடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு தூரம் சிக்க லான குழம்பிய ஒரு பாத்திரம் கலைநயத்துடன், அதன் உண்மைத் தோற்றத்தில் வெற்றியுடன் உருவாகியிருக் கும் இரண்டாவது உதாரணம் உண்டா என்பதும் சந் தேகம்தான். பண்பாடு, பண்பாடு என்ற பொய்யான வரட்டுக் கத்தல் மிகுந்திருக்கும் இக் காலத்தில் எவ்வ ளவு தைரியத்துடன் பாலியின் மனது சில சமயங்களில் அல்லலாடுவதை திறந்து காட்டியிருக்கிறார்.
சென்னை போகும்வரை நாம் கண்ட பாலியைப் பற்றி ஏதும் குழப்பமில்லை. இல்லைதானா உண்மையில்? அப்படித்தான் நமக்கும் பாலிக்கும் தோன்றுகிறது. அதுவரைத்திய பாலி, சொர்ணக்காவை மாமியாராக இனம் கண்டு கொள்ளும் பாலி. சொர்ணக்கா புருஷன் மடியில் உட்கார மறுக்கும் பாலி 'இக்கினியூண்டு பையனை' 'வந்திருக்காரு' என்று சொல்லும் பாலி, 'யாரு இந்தக் கருப்பணசாமி' என்ற ராஜாவை அழ வைத்து மன்னிப்புக் கேட்கச் செய்யும் பாலி. தங்க ராஜை புருஷனாக (உள் மனத்துள்ளும் புறமனத்துள்
ளும்) எண்ணும் பாலி,
'நான் படிக்கப் போகலாமா?" என்று தங்கராஜு வைக் கேட்கிறாள்.
"போய் வரட்டுமா ராஜு?" என்று ராஜாவிடம் விடை பெறுகிறாள்.
"ம்" என்று தலையசைக்கிறான் ராஜா.
பாலி எட்டிப் பார்த்துக் வண்டி நகர்ந்துவிட்டது கொண்டே போனாள். இதில் நாம் சந்தேகப்படுவதற் குண்டானாலும், பாலிக்கு இல்லை. அவளுள் இருப் பதை அவள் அறியாதவள். அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு “என்மேல் கோபமா, எனக்குப் படிக்கப் போகணு மேன்னுருக்கு” என்று தங்கராஜிடம் அழாக் குறையாகச் சொல்லி தலைகுனிகிறாள். கும்ப கோணம் ஸ்டேஷன் வருகிறது. இருவரும் பேசாமல் இருக்கிறார்கள், பாலி மனதுக்குள் அவனை இறுகத் தழுவிக்கொள்கிறாள். இத்தனை பெரிய மார்பு. முரட்டு பலம். ஆனால் அதோடு மென்மையும் பூசிய உடல். அவள் இறுக்கின இறுக்கில் அவன் மனதையே அணைத் துக் கொண்டாற்போலிருந்தது' . அவன் இறங்கிப் போய்விட்டான். பாலி அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்' வந்த அழுதை வாயைத் திறந்து மெளனமாக அழுதாள்.
கையை
C.
>
பின் இருமுறை ராஜா வந்துபோகிறான். இதில் நமக்கொன்றும் தெரிவதில்லை. 'அவன் வந்தாத்தான் உம் மூஞ்சியெல்லாம் கல்யாண முருங்கை பூத்தாப்பலே ஆயிடறதே." என்று செல்லம் சொன்னதும் முகம் சிறுத்தாலும் "இவள் எப்படிக் கண்டுபிடித்தாள்?” என்று தாள் முதல் கேள்வி எழுகிறது, பின் தன்னைத் திருத்திக்கொள்கிறாள்" இவளுக்கு இந்த எண்ணம் எப் படித் தோன்றிற்று?" என்று. தன்னைத்தானே ஏமாற்
ே றிக் கொள்ளவா? தஞ்சாவூரில் இருக்கும்பொழுது ராஜா தன் வீட்டிற்கு வந்துபோனதெல்லாம் ஞாபகம் வருகிறது, அப்பொழுதெல்லாம் அவன் அதிகம் பேசி யதுகூடக் கிடையாது. தங்கராஜன் கூடக்கேட்டானே, 'நீ படிக்கிறதைப்பத்தி ராஜா என்ன சொல்றான்” என்று. இப்படி சந்தேகம் வரும்படியாகவா இருந்தது அவனுடன் பழகியது. சே பொய் என்று தான் தோன்றுகிறது. 'தங்கராஜின் நினைவு அவள் நினைவு முழுவதையும் வியாபித்துக்கொள்கிறது. மோக நினைவாக வந்து பற்றி நெஞ்சையும் உடலையும் வந்து அணைந்து கொள்கிறது, பின் அவளுக்குப் புரிகிறது. தன் மன தில் தங்கராஜுக்கு மட்டுமல்ல, ராஜாவுக்குக் கூட இடம் கொடுத்திருக்கிறாள், இதுநாள் வரையில் அது பற்றி அறியாமலேயே என்று. அவ்விடத்திலிருந்து அவளால் அவனை விரட்ட முடியவில்லை என்றும் சொல் கிறாள் செல்லத்திடம் தனது உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டதால் பிறந்த நிம்மதியின் தைரியத்தில் அதன்பின் ராஜாவைப் பற்றிய நினைப்பு, அவனுடன் பழக்கம் இவை அதிகமாகின்றன. கோவிலினுள் நடந்து செல்லும்போது அவனிடமிருந்து சற்றுத் தூரவே பின் தொடரவேண்டுமென்று நினைத்தாலும் நெருங்கியே நடக்கிறாள்.
கொஞ்சம் கொஞ்சமாக ராஜா பற்றியிருந்த இடம் விஸ்தரிக்கிறது. தங்கராஜுவை நினைத்துக் கழிவிரக் கம் கொள்கிறாள். தனது தவறுகளுக்கெல்லாம் பிராயச் சித்தமாக தன் தனித்த நினைவுகளிலே அவனது காலடியிலேயே காலம் காலமாக கழிவிரக்கத்திலே - கழிக்க விரும்புகிறாள். அவனது அணைப்பின் ஆனந்த ஸ்பர்ஸத்தில் தான் எவ்வளவு நிம்மதி. ஆனால் இதெல் லாம் தனிமையில் தன் நிறைகளில் தான். ராஜாவுடன் செல்லம் தனித்துப் போவதை தொடர்ந்து பல நாட்க ளாகப் பார்த்ததும் ராஜா தன்னைவிட்டுப் போவதைப் பார்க்க மனம் தாளுவதில்லை. இதுவும் நல்லதுக்குத் தான் என்று ஏன் இருப்பதில்லை? ராஜாவை தனது சிந்தையிலிருந்து விரட்ட அவளுக்கு மன தில்லை. செல் வத்தைக் கண்டு அவளுக்கு எவ்வளவு ஆத்திரம். ஆங் காரம்? செல்லம், ராஜா இவர்களைக் கண்டு பாலி பொருமும் பொருமல் மனத்தில் அலையாடும் கோரத்தை யெல்லாம் வெளிக் கொணர்கிறது.
அக்கோபத்தின் சீறல் இரண்டு மூன்று பக்கங்களை நிறைக்கிறது. படிப்பவர்களுக்கு நயமற்றதாகத் தோன்றலாம். ஆனால் அவற்றின் உண்மையைப் பற்றி யாருக்கும் சந்தேகம் எழுவதில்லை. ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரத்தில்கூட இதைவிட சற்று அதிக மாகவும் அப்பட்டமாகவும் ஒரு பகுதி குமுறல்கள் வசைப் படலங்கள் வருகின்றன. இவை கலை நயமற்று இல்லையா என்றுகூட எனக்குத் தோன்றிற்று ஒரு சமயம். உண்மையை மறைத்து வெளிப்பூச்சுக் கொடுத்து இல்லாத ஒரு பொய்த் தோற்றத்தை எழுப்பு வதா கலை நயம்? லாரென்ஸ் ஒரு நாலெழுத்து வார்த் தையை எழுதிவிட்டாரென்று முப்பது வருடங்களாகத் தடைபட்டிருந்த புத்தகம் இன்று தடை நீக்கப்பட்டிருக் கிறது. ஆபாசம் என்று நாம் கூறும் காரியங்கள் ஆசை களில் நாம் எவ்வளவு ஈடுபாடுடன் விழைகிறோம். அவற்றைப்பற்றி எழுதுவது மாத்திரம் ஆபாசம் ஆகி விடுமா என்ன? இதேபோல மீனாட்சி கொல்லை அழிந்த தும் சுப்பிர மணியம் 'கோவிந்து முதலியோர் தெருவில் நின்று கூச்சலிடுகிறார்கள். அவர்கள் வசவுகளையெல் லாம் கோடிட்டு இப்படிப்பட்டவை என்று எழுதி விடு கிறார் ஜானகிராமன். தாராளமாக பச்சையாகவே எழுதி யிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்படிப்பட்டவை என்று அவற்றின் தன்மையைப் பற்றி நினைவெழுப்பும் போது அதே சொற்களை உபயோகித்தால் என்ன? எப் படியும் அந்த நினைவெழுப்பவேண்டும் என்ற தேவை இருக்கத்தானே செய்கிறது. சொற்கள் என்றால் என்ன? ஒரு நினைவை எழுப்ப நாம் உபயோகிக்கும் வரி வடிவங்கள் அல்லது சப்தச் சேர்க்கைக் குறியீடுகள். கடைசியில் நாம் பண்பாடு, நயம் என்று சொல்லச் சொல்லி செய்வதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிவடிவம் சப்தச் சேர்க்கைக் குறியீட்டிற்குப் பதில் இன்னொன்றை உபயோகிக்கிறோம். ஒரு நினைவை அருவருப்பான தாக நாம் கருதினால் அந்த நினைவை எழுப்பும் எந்த வரிவடி வமும் சப்தச் சேர்க்கையுமே அருவருப்பானதுதான், ஒன்றைவிட்டு மற்றதைப் பொறுக்குவதற்கிடமில்லை. இந்த இலக்கிய சம்பிரதாயம் அறிவிற்கும் தர்க்கத்திற் கும் இணங்காத சம்பிரதாயம். மூடநம்பிக்கை என்று சொன்னாலும் தவறில்லை.
இந்த மனக் குமுறல்கள் ஜானகிராமனின் எழுத்தில் வேறொரு நிகழ்ச்சிக்கும் வகை பெரியசாமியின் ஞாபகம் எழுகிறது. "கஷ்டத்தைப் போட்டு மிதி. மகிஷனைக் கொன்ற மகாசண்டியைப் போல'' என்றாரே அவர். ஆடத் தொடங்குகிறாள். 'இனி எந்தக் கஷ்டத்தையும் மறக்கமுடியும்" என்று தைரியம் பிறக்கிறது. பின் பெரியசாமியிடம் தன் மனப் போராட்டத்தைப் பற்றிச் சொன்னபோது பெரியசாமி யும் அவர்களையெல்லாம் மறந்து தினம் இரண்டு மணி நேரம் சாதகம் செய்யச் சொல்கிறார். இதற்கு இரண்டு போராட் விதங்களில் நாம் விளக்கம் கொள்ளலாம். டத்தைத் தன் மனதினின்று அகற்றும் வடிகாலாக (outlet) அல்லது தன் முனதை இக்குழப்ப நினைவுகளி லிருந்து போக்குக் காட்டி ஏமாற்றும் வகையாக, நாட் டிய சாதகத்தில் தன் மனத்தை ஈடுபடுத்திக்கொள்வ தாக இந்த இரண்டு விளக்கங்களும் சரி என்று தோன்ற வில்லை. பரதம் மட்டுமென்ன? எந்த நாட்டியத்தின் பிறப்புமே சில பாவங்களால், முத்திரைகளால், அபிநயங்களால் ஒரு உணர்ச்சிக்கு, நிகழ்ச்சிக்கு உரு வம் கொடுப்பதுதான். இது வெறும் உடலை வருத்தும் தேகப்பயிற்சி அல்லவே. ஜம்மு தெருக்களில் பங்ரா நாட்டியத்தை
பார்த்திருக்கிறேன். அது வெறும் கிராமிய நடனம். அதில் ஒரு ஒழுங்கு, நியமம், கால அளவு என்பதெல்லாம் கிடையாது.. மனம் போன போக்கில் தனது மகிழ்ச்சியின் பெருக்கை அங்க அசைவுகளின் வேகத்திலும் விரைவிலும் வெளிப் படுத்துவதுதான். பரதநாட்டியம் அப்படி அல்ல. மிக வளர்ச்சி அடைந்ததொன்று அது. அதற்கு ஒரு ஒழுங்கு, மரபு,உத்தி வகைகள் மிக உண்டு. உணர்ச்சி வெளியீட்டுக்கு ஒரு கலை நயமும் உருவமும் கொடுத்து அமைந்த சாதகம், தன்னிஷ்டத்திற்கு என்கிற விவ காரம் அதில் இல்லை. கற்பனைக்கு இடம் உண்டு என்றா லும் ஒரு மரபை ஒட்டி ஒழுங்கு நயம், இவற்றுடன் ஆடப்படுவது. அது - இவற்றின் காரணமாக அதன் சாதகத்திற்கு ஒருமைப்பட்ட, கட்டுண்ட, அமைதி கொண்ட மனம்வேண்டும். gay abandon என்று சொல்வார்களே அது பரதநாட்டியத்திற்கில்லை. Rock in rollக்கு இருக்கலாம். பங்ராவுக்கு இருக்கலாம்.
தாக
நான்
எப்பொழுது மகிழ்ச்சிப் பெருக்குக்கு இல்லையோ அப் பொழுது துக்கக் குமுறலுக்கும் இல்லை. ஆகவே நாட் டிய சாதகத்திற்கு முன் தேவையான மன அமைதி, ஒருமைப்பட்ட நினைவு ஆகிய இவற்றைப் பெறுவதற் காக நாட்டியம் ஆடினாள் என்பது, காரணம் காரியம் இவற்றின் ஒழுங்கைத் தலைகீழாக மாற்றுவதாகத் தோன்றுகிறது. ஆசிரியரின் 'மறதி' என்ற சிறு கதை யில். ஓய்ச்சல் ஒழிச்சல் அற்ற அலைச்சலை, தான் வாழ்க் கையில் கண்ட ஏமாற்றத்தை மறக்கக் கைக்கொள்வ ஒரு பாத்திரம் உண்டு. அது வெறும் உடலை வருத்தும் பயிற்சி. உடலை வருத்தும் ஈடுபாட்டில் மனத் தைப் பற்றிய சிந்தனை அற்றுவிடுகிறது. தினம் இருபது மைல்கள் வெயிலில் அலைவதும் அறையைத் தாளிட்டு உள்ளிருந்து நாட்டிய சாதகம் செய்வதும் ஒன்றல்ல. ஊழி இறுதியில் பிரளய தாண்டவம் செய்தவன் மன்மத தகனத்திற்குப்பின் தன் ரௌத்திரத்தின் சாந்திக்கு மோன நிஷ்டையில் அல்லவா ஈடுபட்டான். கைலாய மலைக் குகைகளில் தனித்திருந்து நாட்டிய சாதகமா செய்தான்?
(அடுத்த இதழில் முடியும்)செய்கின்றன,மலர்மஞ்சம்' ஆய்வு 2
ஜானகிராமன்
படைத்த
யதார்த்த
பாத்திரங்கள்
வெ. சாமிநாதன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(சென்ற ஏட்டின் தொடர்ச்சி)
ஆனால் இதைப்பற்றிய உண்மை எதுவாக இருந்தா லும்பாலியின் மனப்போராட்டங்களுக்கிடையில் நாட்டிய சாதகத்தைப் புகுத்தியது மிக அழகான தொன்று. நான் இப்படிக் கூறுவதில் முரண் ஏதும் இல்லை. சற்று யோசித்தால் தான் இந்த சந்தேகங்கள் வருகின் றனவே தவிர கதைப் போக்கின் அழகுக்கு இவை ஏதும் குந்தகம் விளைவிப்கில்லை.
மனதுக்குள் வைத்துக்கொண்டு குமைந்து கொண் டிருந்த ரகசியத்தை வடிவக்காளுக்குச் சொல்லியாய் விட்டது. ராமையாவுக்கும் சொல்லியாயிற்று. வக்கீல் மாமா, நாயக்கர், ஏன் தங்கராஜுக்குமே இது தெரிந்து விட்டது. சாதாரண விஷயமா? தன் சொல்லைக் காப் பாற்ற ஒரு யந்திர வாழ்வு வாழும் ராமையாவுக்கு எத் தகைய பேரிடி,
லக்ஷியக்கனவுகளெல்லாம் அழிந்து
ஒரு
விட்டனவே, தனக்கும் இந்தப் பேரதிர்ஷ்டம் கிடைக் குமா என்று உள்ளினுள் எழுந்த ஐயம் வெறும் காரண மற்ற பிரமையல்ல. உண்மையின் பிரதிபலிப்புதான் என்று தங்கராஜாவுக்குத் தெளிவாகியிருக்கும். சொல், சாதாரணச் சொல் என்னபாடு படுத்தி வைத்து விட்டது. எவ்வளவு பேர் வாழ்க்கைகள் அதைச் சுற்றிச் சுழன்று வந்தன. அவ்வளவும் என்ன ஆயிற்று? யாரு மற்ற கூடத்தின் தூணில் சாய்ந்தவாறே நின்றிருந்த பாலிக்கு நினைவு செத்த நிலையில் ஓர் உணர்வு எதற் குமே அர்த்தமில்லை போன்ற நினைவு சுற்றம் உறவு, சுற்றியுள்ள பொருட்கள் வாழ்ந்த வாழ்வு, பல்லாயிரம் நிறைகளைத் தன்னுள் அடக்கிச் சுழன்று சென்ற காலம் எதற்குமே அர்த்தமில்லாதது போல ஓர் உணர்வு, பிச்சைக்காரி பாடும் மோகன ராகம் அதற்கும் கூடத் தான் என்ன அர்த்தம்? இப்பொழுது மட்டுமா? இதைப் பற்றி நினைக்கும் தோறும் வகுப்பில் உட்கார்ந்திருந்த போது கூட “எதற்காகப் படிக்கிறேன். எதற்காக இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன்” என்று தோன்றுகிறது.
இந்த எண்ண அலைகள், இதற்குக் காரணமான புற நிகழச்சிகள் உருவங்கள் எல்லாவற்றையும் கடந்து அவற்றின் பின்னிருக்கும் தத்துவப் பொருளைப் பற்றிய நிறைக்கு இழுத்துச் செல்கின்றன. இம்மாதிரியான ஜானகிராமனின் எழுத்தைப் பற்றித் தர்க்கித்து, விளக் கம் கூறிப் பயனில்லை. படிப்பவர்களுக்கு இச்சிந்தனை ஓட்டத்தின் நியாயமும், உண்மையும் புரிய வேண்டும். இவ்வகையில் புற நிகழ்ச்சிகளுக்கு அப்பால் அதன் உள்ளர்த்தத்திற்கு, இவை பிறப்பெடுத்த மூலதத்துவத்ச திற்கு இழுத்துச் செல்வது என்பது ஜானகிராமனிடமே காணும் சிறப்பு. இதை மனதில் கொண்டு தானோ என் னவோ ஜானகிராமன் அன்று தான் இலக்கிய சாதகத்
தின் மூலம் உண்மை காண் விரும்புகிறேன் என்று சொன்னார் என்று எண்ணத் தோன்றுகிறது.
தஞ்சை போகும் போது வழியில் பார்த்த தூக்க ணங்குருவிக் 'கூடுகள் தனக்கு வேண்டு
மென்று குழந்தை கேட்கிறது. கோவிந்து கொணர்ந்து தருகி றான். அக்கூடுகள் அவளுக்குக் ( கருப்பணசாமி' யை நினைவுக்குக் கொணர்ந்தன. சென்னையிலிருந்து தஞ் சைக்கு வந்திருந்த அன்று அக்கூடுகள் தென்பட அவற் றையே பார்த்துக் கொண்டிருந்தாளே' எவ்வளவு சின் னக்குருவி. ஆனால் எவ்வளவு உறுதியான கூடு, தனக்கா? மற்ற குருவிகள் வாழ. அப்பா தியாகம் எவ் வளவு ஆழ்ந்த போதை. பிறருக்காக உழைக்க ஆரம் பித்து விட்டால் தன் நினைவெல்லாம் எப்படிச் செத்து விடுகின்றன. தஞ்சைக் கோயிற் கோபுரமும் அப்படித் தான். இந்த ரண்டு காக்காய் குடியிருக்கிறதுக்காக இத்தனை பெரிய கோபுரம் கட்டணுமா? என்று ஒரு முறை தோன்றிற்று. 'ஆனால் ஒன்று மட்டும் செய்து விட்டுப்போய் விட்டான். வருகிற ஒரு பிராணி பாக்கி யில்லாமல் கழுத்து வலிக்க வலிக்க மேலேயே பார்க்கும் படி செய்துவிட்டான். அத்தனை உயரத்தில் வைத்த கண்ணை கீழேயே திருப்ப முடியாமல் செய்து விட்டான்' என்று செல்லம் சொன்னபடி கோபுரமும தூக்கணங்குரு விக் கூடுகளும். இது எதற்காக, இதன் அர்த்தம் என்ன? யாருக்காகச் செய்கிறோம் என்ற நினைவற்றுச் செய்யும் லட்சிய சாதனைகளின் பிம்பங்கள். ராமையா காப்பாற்ற போராடும் சொல்லைப் போல. அச்சொல்லிற் கான குறியீடுகள் (Symbols) வலிந்து புகுத்தியது போல தனித்து நிற்காதவாறு கதைப் போக்கில் ஒன்றச் செய்திருப்பது ஜானகிராமனின் எழுத்துத்திற
னுக்கு உதாரணம்.
கடைசியில் கோபுரம் தானே பிரசினைகளுக்கு ஒரு வித முடிவை அளிக்கிறது. முடிவை நெருங்கு முன் பாலியின் மனத்தில் எழுந்த போராட்டத்தின் வளர்ச் சியை ஒரு பின் நோக்குப் பார்வை கொடுக்கவேண்டும். அவள் மனதில் பதிந்த தங்கராஜின் சித்திரம் அழிந்ததே கிடையாது. சிறுவயதிலிருந்து பதிந்த சித்திரம். அச் சித்திரத்திற்குக் கோடுகள் வரைந்தது ராமையாவாயி னும் அதற்கு நிறங்கொடுத்து உருவாக்கியது பாலிதான். அதன் மேலெழுந்த ராஜாவின் உருவம் ஒரு நாளில் திடீரெனத் தோன்றியதல்ல. அவனறியாது குடி புகுந் தது அது, அதை அவளறிய வந்ததே செல்லம் சுட்டிக் காட்டியபின் தான்.அதை அகற்ற அவள் முயன்றதுண்டு. அது முடியாது போகவே அதை அவள் வளர்த்தது முண்டு. அதன் வளர்ந்த நிலைபெற்ற நிலையைக் கண்டு, இருவர்க்கிடமுண்டா இது நடக்குமா என்று கலங்கு கிறாள். தனக்குள்ளே நினைந்து குழம்பியதும் பெரியசாமி யிடம் முதல் முதல் கூறியதும் "இந்தப் பிள்ளையை எத் தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறோம் என்றல்ல இரு. வர்க்கு இடமிருக்கமுடியுமா?" என்று தான். பின் தான் தங்கராஜின் உருவம் மறைய ஆரம்பிக்கிறது. ராஜாவின் உருவம் பளிச்சிடுகிறது.
வாக்குக்கொடுத்தது தன்தந்தை. பெற்று வளர்த்த கடனுக்காக நன்றியறிதலுக்காகத்தானே,தாள் சம்பந்தப்படாத ஒரு வாக்குக்கு தன் இஷ்டத்தை, தன் வாழ்வை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. என்று நியாயமாகத்தான் 'எண்ணமிடுகிறான். இந்த நன்றி கடமை தொல்லைகள் இல்லாது மிருகமாக வாழலாம். என்று தோன்றுகிறது. ஓடிப்போய் விடலாம்
எழுத்து - 197
என்று
ராஜா சொன்ன போது சற்றுத் திகைத்தாலும் பிள் இந்தத் திணறலிலிருந்து விடுபடத்தானே வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால்
7
அப்படித்தானே? 'அப்பர சொல்கிறது சரிதான்னு படுது என்ற போதிலும் நாயக்கர் சொன்னது போல அவள் மனப்படுக்கையில் ராஜா வந்து போவதை 'பாலி,
அல்லது யார்
தான் மறுக்க முடியும்? மேலுக்கு, நாவலுக்கு ஒரு லட்சிய பூர்த்தியான முடி வைக் கொடுத்த போதிலும் ஜானகிராமனின் யதார்த்த பார்வை, புனித கங்கை நீர் தன்னுட் கொண்டிருக்கும் சக்தியையும் சவங்களையும் போல அந்த லட்சிய பூர்த்தி யின் அடித்தலத்தில் வேரோடும் அவலத்தையும் வெளிக் கொணராதிருக்க முடிய வில்லை. பண்பாடு, பண்பாடு என்று சிறகடிக்கும் புனிதாத்மாக்களுக்கும் இலக்கிய ஆசார சீலர்களுக்கும் கசப்பாக இருக்கும்
உண்மைகள்,
தங்கராஜு ராஜா. இவ்விரண்டு பாத்திரங்களும் மலர்மஞ்சத்தில் காட்சியளிக்கும் முறையில் சில விசே ஷங்கள் உண்டு. ஜானகிராமன் எழுதியிருக்கும் தோரணை 'யில் தாங்களாகவே ஒரு இடத்தைப் பெற்றவர்கள் அல்லர் இவர்கள். ஏனெனில் ஆசிரியர் மூலமாகவோ, நேராகவோ நாம் இப்பாத்திரங்களை பெரும்பாலும் அறிய முடிவதில்லை. இருவரையுமே பாலியின் பார்வை யிலே தான் பெரும்பாலும் அறிய முடிகிறது. ஒரு சில இடங்களைத்தவிர' இதை ஏதும் குறையாகக் கூறவில்லை. இப்படி இருக்கிறது. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. பாலி, ராமையா இவர்களின் போராட்டங்களுக்கு இவர்கள் கருவிகள் தான். ஆகவே, பாலியின் பார்வையிலேயே ஜீவிப்பது அவ்வகையில் சரிதானே.
ராமையா, இந்தத் தீர்மானம், வெகு சீக்கிரம் அன்றிரவே ஆட்டங்காண்கிறது.'என்னால் தாங்கத்தான் முடியவில்லை. ஆனால் இந்த ஹோவென்று கிடக்கும் வெளியில் என்னை அழித்துக் கொள்ளப் பார்க்கிறேன். நான் இங்கேயே உட்கார்ந்து இந்த வெளியிலே என் னையே கரைத்து ஒண்ணு மில்லாததாகப் பண்ணிக் கலாம் என்ற போதும், இவ்வளவுக்கும் பிறகும். பாலி யைக்கல்லூரிக்கு அனுப்பும் பொறுப்பு என்னது என்ற போதும் தன்னை லட்சியமாகக் கொண்டு, தாம் செய்து, ஏமாற்ற முற்று தன்னை அழித்துக் கொள்ள விழையும் தங்கராஜுவைக் கண்டு மனம் கரைகிறது. தன்னை அன்று தேவடியாள் என்று வையன்னா சொன்ன.தற் காக, வன்மம் பூண்டு, தங்கராஜு அவனைக் கொலை செய்த விவரத்தை அவன் மூலமாகவே கேட்ட போது கரைந்த மனம் நீராகிறது. இவ்வளவு பெரிதாகக் கட் டினானே அதெல்லாம் யுகம் யுகமாக இரண்டு காக்கை கள் அதன் மீதிருந்து கரையத்தானா? அந்த ஸ்தூபியின் ஒளி இருட்டில் எவ்வளவு பளிச்செனத் தெரிகிறது. இவ்வளவு இருட்டிலும் பார்க்க முடிகிறதே. இருட்டில் தான் தெரியும். உண்மை வெளிச்சம் தெரிய மற்ற வெளிச்சம் விலகி இருள் சூழவேண்டும். "அவள் மனம் மாறி விட்டது. 'அப்பா சொல்வது சரிதான்டி" என்று படுகிறது. செல்லம் சொல்லுகிறாள் "இதைப்பற்றி யெல் லாம் தர்க்கித்து முடிவுக்கு வருவதற்கில்லை. எது சரி என்று படுவதற்கு வேளை வந்தால்தான் உண்டு" என்று இதே சொற்களை நாவலில் மூன்று நாள்கு முறை வெவ் வோறு பாத்திரங்கள் மூலம் கேட்கிறோம். அப்படி என் றால் என்ன?எந்த 'வேளை'யில் படும் எந்த, 'சரி?ராமை யாவே கூட தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக் கலாம். இந்தக் குழந்தையை இவ்வளவு நாள் கஷ்டப் படுத்தியது போதும். அவள் கஷ்டப்பட்டுப் பார்க்க வேண்டுமென்று எனக்கென்ன ஆசை? எவளோ ஒருத்தி எப்பவோ சொன்னாள். அவளும் போய் விட்டாள். இருப் பவர்களைக் கஷ்டப்படுத்துவானேன். என்று. பின் இது தான் சரி என்று படும் வேளை வந்து விட்டதா? ஓடிப் போய் விடலாம் என்று எண்ணினாளே பாலி. அப் பொழுது அது சரி என்று தான் பட்டது. அந்த வேளை தானா முடிவான சரி என்று படும் வேளை. பின் பாலியின் மனப்படுக்கையில் வந்து போவானே ராஜா, அப் பொழுது நினைத்துக் கொள்வாளோ ஒரு வேளை. அன்று சரி என்று படும் வேளை வந்து விட்டதாக நினைத்தேனே. அது சரிதானா உண்மையில் ஹரிச்சந்திர கட்டத்தில் நாயக்கர் இதைப்பற்றிச் சொன்னதைப் பின்னர் நினைக் கும் போதெல்லாம் ராமையா நினைத்துக்கொள்வாரா, அன்று சரி என்று படும் வேளை வந்து விட்டதாக நினைத் தோமே. அந்த வேளை உண்மையான சரி என்று படும் வேளை தானா என்று?
ஜானகிராமனுக்கு யதார்த்த நோக்கிலும் எழுத்தி லும் இருக்கும் ஈடுபாடு அதிகம். மிக தைரியமானதும் பிரமிக்கத்தக்கதும் கூட, பின் யார் தான் "எல்லாருமாச் சேந்து கட்டி வைச்சாங்க தலை கீழா நின்னு பாத்தேன். இவன் தாண்டி உனக்குப் பொறந்த வன்னாங்க. தெய்வ மேன்று கழுத்தை நீட்டினேன். அப்புறம் எல்லாம் சரியாப் போச்சு. இருந்தாலும் கண்ணாடியை வைசம்னு சொல்ல முடியுமா?" என்று வடிவக்காளின்புரையோடிப் போன நிளைவுகளைக் கிளற முடியும்? பாலி விஷயமும்
ஏதும்
கை
இன்னொரு விசேஷம் தங்கராஜுவிடம் தன் மனம் சென்றவரை, அவனின் உருவம், குணம் சிந்தனை, மோகத்தூண்டுதல் அறிவு, குரல், நயம், இவற்றில் மனம் ஒன்றி மயங்கும் பாலிக்கு, ராஜாவின் தோற் றத்தைப் பற்றிய குணங்களை பற்றிய சிந்தனைகள் ஏதும் எழுவதில்லை. அவள் மனம் ராஜாவிடம் ஈடுபட தங்க ராஜுவின் நினைவிற்கும் மேல் எழுந்து காரனம் இருந்ததாகவும் தெரியவில்லை இதற்கெல்லாம் கார ணம் ஏதும் வேண்டுமா என்ன? கட்டைச்சுவரில் வைத்து மோன வெளியைப் பார்த்துக் கொண்டிருப் பான். அதிகம் பேசமாட்டான். அவன் வந்தால்'படிக்கி றியா' என்று கேட்டு விட்டுப்போவான். இவ்வளவு தானே நடந்ததெல்லாம். தெரிந்தும் சின்னப் பெண்ணாக பாலி தஞ்சைக்கு வந்ததிலிருந்து அவளுக்காக மோன தவம் இருந்தவன், அது, அவள் மனம் ஈடுபட்ட பிறகுதான் தெரிந்தது. பிறகு செல்லமும் சொல்கிறாள் "உன்ளைப் பத்தி பேச ஆரம்பித்த போதும், நடராஜா ஒரு புன் சிரிப்பு சிரிச்சிண்டு ஆடறதே அந்த மாதிரி முகத்திலே ஒரு பூரிப்பு ஒரு தேஜஸு...எங்கிருந்தோ ஒரு
அழகு வரும். ஒரு சமயம் உங்கிட்டேயிருந்து வந்தது தானே என்னவோ" என்று இவ்வளவு தூரம் உக்கிரத் துடன், உணர்ச்சி ஆழத்துடன், இவ்வுள்ளக் கவர்ச் சியைப் பற்றி யாரும் எழுதியது கிடையாது. மிக அழ கான உன்னத சித்திரம் என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
புது
தங்கராஜு,ராஜா இவர்களின் உள்ளக்கிளறல்கள் கதைப்போக்கை அதன் கருத்து சுழற்சிமையத்தி ‘னின்று அப்பால் இழுத்துச் செல்வதாகிவிடும். ஏனெ னில் அவர்களின் மனப்போராட்டங்கள் கதையின் மையக் கருத்துக்கு அவசியமில்லாதவை. அவற்றிற் கென தனித்து ஏதும் இடம் இல்லை. ஆகவே தங்க
எழுத்து 198
ராஜுவும் ராஜாவும் தாங்களாகவே அறிமுகமாகாதது சரிதான்,
காதல்” என்று சொல்லப்படும் ஒன்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு வெறும் இலக்கிய சம் பிரதாயம், என்று க.நா.சுப்ரமண்யம் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். பலர் மறுப்பார்கள். அது எப்படி இருந்தாலும் நமது நாவலாசிரியர்கள் (அல்லது தொடர் கதையாசிரியர்கள்) கையாளும் தோரணையில் அது வெறும் இலக்கிய சம்பிரதாயம் தான். இன்னமும் சரியாகச் சொல்வதென்றால் நமது இன்றைய தமிழ் இலக்கியத்திற்கே உரித்தான சம்பிரதாயம். அதற்கும், உண்மைக்கோ, நடப்பியல்புக்கோ ஏதும் உறவு கிடை யாது. அத்தகைய காதல், அவர்கள் எழுத்துக்களிலோ, அவர்கள் வாசகர் வேட்டையிலோ ஜீவிப்பது, உணர்ச்சி களுக்கு இத்தகைய ஆழமான, உக்கிரமான உருவம் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கும் ஜானகி ராமன் ஒரு இடத்தில் கூட இந்த காதல் அது இது என்ற சம்பிரதாய சொற்களை உபயோகிக்காது சாதித் சாதித் திருப்பதை எவ்வளவு தான் பாராட்டுவது இவ் வுணர்ச்சிகளுடன்கூடிய, நிகழ்ச்சிகளை, சம்பாஷணைகளை ஜானகிராமன் எழுதும் பாவம் நடப்பியல்புக்கு ஒத்தது. அவற்றில் எதையும்,செயற்கையானது என்று சொல்லி விடமுடியாது. மற்ற தொடர் கதை ஆசிரியர்களின் பார் வைக்கு ஒன்றிரண்டு இடங்களைக் குறிப்பிட விரும்பு கிறேன். தங்கராஜு பாலியிடம் தன் மனத்தைத்திறந்து சொல்லும் இடம் நமது தொடர் கதை ஆசிரியர்களுக் கெனவே எழுதப்பட்டது போல் தோன்றுகிறது இந்த மாதிரி எனக்குப் பாடம் சொல்லிக் கொண்டே வந்தார் அவர் (ராமையா) அதாவது வெள்ளைக்காரர்கள் சொல் கிற மாதிரி நான் உள்னை நேசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொன்னார் அவர்...அதைப்பற்றி யோசிக்கவும் யோசித்தேன், அந்த வார்த்தைகளைச் சொல்ல முடியும் என்று தோன்ற வில்லை. ஒரு விஷயத்தை வாய் விட்டுச் சொல்லி விட் டால் அதுவும் இதைச் சொல்லி விட்டால் ஏதோ செடி யைப் பிடுங்கி வெளியே போடுவது போல் இருக்கிறது எனக்கு... எனக்கு அதைச் சொல்லவும் இஷ்டம் இல்லை...' என்று ராஜா பாலியிடம் தன்மனதைத்திறந்து சொல்லும் இடம், ராமையாவிடம் சொல்லும் இடம் தங்கராஜு செல்லத்திடம் தன் ஏமாற்றத்தை விவரிக்கும் இடம் எல்லாம் இதே தோரணையில் இயற்கையாக நடப்பியல்புக்கு மாறாது அதே சமயம் உணர்ச்சி குன் றாது எழுதப்பட்டவை. ஏன்? பாலி தனக்கு இவ்விவ காரத்தில் இஷ்டமில்லை என்று வடிவக்கா, பெரியசாமி, வக்கீல் மாமா, நாயக்கர், இவர்களிடம் சொல்லும் இடங்கள் எல்லாம் இதே ரீதியில் எழுதப்பட் டவை. பாலியின் மனது தன்னிடம் ஈடுபட்டிருப்பதை பாலியே வாய்விட்டுக் கூறி அறிந்தவளே அல்ல ராஜா, இருப்பினும் அவனுக்குத் தெரியும் தங்கராஜு பாலிக்கு
ராமையா,
தன் மூலம் கடிதம் கொடுத்தனுப்புவதையும் புரிந்து கொள்கிறான், தங்கராஜுக்கு பாலியின் மனது தெரியும் என்று.
வெளியீட்டுத்திறன் இல்லாத காரணமோ அல்லது வாசகர் கூட்டம் குறையுமென்ற காரணமோ மற்ற நாவ லாசிரியர்களுக்கு ஒரு நொண்டிச்சாக்கை அளித்திருக் கிறது. ஒரு எழுத்தாளர் சொன்னார், நிகழ்ச்சிகளுக்கு நாம் தரும் அர்த்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக
அதனுள்
வாழ்க்கை உண்மைக்கு மாறான போதிலும் இலக்கிய உண்மைகளாகும் என்று. மேலே குறிப்பிட்டுள்ள பகுதி களில், எதைச் சாதிக்க முடியாது என்ற காரணத்திற் காக நடப்பியல்பை மீறிய தோரணையில் மற்றவர்கள் எழுதுவதாக கூறுகிறார்களே, அவற்றை மிகச் சிறந்த முறையில் ஜானகிராமன் அவர்கள் சாதித்திருப்பதைப் பார்க்கிறோம். மற்ற பெரும்பாலோர் எழுத்தில் இவை கட்டுரைப் போக்கில் நீண்ட பிரசங்கங்களாகியிருக்கும், தமிழ் சினிமா பாணியில். கற்பனையேயானாலும் பாத் திரங்கள், நிகழ்ச்சிகள், சம்பவங்கள் கதை வளர்ச்சி இவை. உண்மைத் தோற்றம் அளிக்க வேண்டும், இலக் கியம் என்ற பெயர் கொடுத்த காரணத்தால், இவற்றின் நடப்பு தோற்ற ரீதியில் செயற்கை உணர்வு எழச் செய்தால் அவை Convincingஆக இருப்பதில்லை எந்த எழுத்திற்குமே அதன் முதல் குறிக்கோள் அதன் உண் மையை Convince செய்வது தான்.
ஈடுபாடு
நாயக்கர்: தன்னுடைய பாத்திரங்களெல்லாம் முழுக்க முழுக்க கற்பனையல்ல. உண்மை
வாழ்க்கையி லிருந்து எடுக்கப்பட்டவை என்று ஜானகிராமன் ஒரு முறை கூறினார். அவரது மாதிரிப் பாத்திரம் நாயக் கரைப் போல நிந்தாஸ்துதி பாடுபவரல்ல
என்பது என் கணிப்பு. இந்த நிந்தாஸ்துதியின் பின்னிருக்கும் அந்த தெய்வ நம்பிக்கை ஜானகிராமனிடமிருந்து பெற்ற அம்சம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த சித்தரிப்பில் ஜானகிராமனுக்கு இருக்கும் நிந்தாஸ்துதியின் தோரணையிலேயே வெளியாகிறது. நாயக்கர் பாத்திரத்தை இம்மாதிரியான இடங்களில் எழுதும்போது மிகவும் அனுபவித்து எழுதுகிறார் ஜானகி ராமன். இதன் காரணமாகவே இது நாயக்கரோடு மாத் திரம் நிற்பதில்லை. 'ரோஜாத்தி பாவாடைக்காரிக்கு வவ்வவ்வே காட்டும்' செல்லத்தையும், கருவூரார் கதை சொல்லும் பெரியசாமியையும், 'இந்த ஸ்வாமி யோடே ரொம்ப நாளா பழகிட்டு வறீங்களே தொட்டா எப்படி இருக்கும்? இறுக அணைச்சுக்க முடியுமோ அவரை? என்று விநோதமாகக் கேட்கும் ராமையாவை யும் பற்றுகிறது. நம்மில் பெரும்பாலோருக்கு இந்தப் பற்றில் பங்கு இல்லாவிட்டாலும் கூட அனுபவிக்க முடி கிறது. நம்பிக்கையின் மீது எழும் இப்பற்று எவ்வளவு இன்ப அனுபவமாக இருக்கும் என்றும் ஊகிக்க முடிகிறது. பிரசார தோரணை இன்றி ஒரு இன்ப அனுபவமாக இப் பற்றைநமக்குத் தொற்றவைத்திருக்கும்(Communicate) சாதனை ஜானகிராமனின் திறனுக்கு உதாரணம்.
'என் உசிரு இருக்கிற வரைக்கும் உன் மனசுக்கு விரோதமா எதுவும் நடக்கும் படியா விடமாட்டேன்னு உன் மககிட்டே சொன்னேன். நடந்திருந்து, கிளம் பிட்டேன். உசிர விட முடியுமா? நாமா உசிரப்போக்கிக்க முடியுமா? சந்நியாசம் என்கிறது வேற ஜன்மம் மாதிரி. அதனாலேதான் இப்படிக் கிளம்பிட்டேன் என்று நாயக் கர் சொல்லுவது சந்நியாசத்தை இன்னொரு ஜன்டி சுருதும் சந்நியாஸ்ரமிகளின் கொள்கைக்கு பொருத்தியது தான். ஆனாலும் இதன் தர்க்க நியாயம் நம்மைச் சிந்திக்கத்தான் வைக்கிறது.
மாகக்
பெரியசாமி : பெரியசாமி கூட நம் கவன த்தைக் கவரும் பாத்திரம். பாத்திர அமைப்பு என்பது நமது தொடர்கதை ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் எட்டாத் கனி, சுலபமாகச் சுட்டிக்காட்டிவிடக் கூடிய என் நினை
ஓர் உதாரணம். வுக்கு உடனே வரும்
பிரபல தொடர் கதையில் வரும் காலேஜ் 'புரபஸர், அவரை, நாம் காலேஜ் புரபஸர் என்று அறிந்துகொள்வதற்கு
எழுத்து-199
யெல்லாம் அடங்கியுள்ள உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதற்காக இப்படி எழுதப்படுபவைகள்
ஒரு
வகை
ஆசிரியரால் "அவரது
"அவரது படிப்பறையில், பாரதியார், இளங்கோ, கம்பன், பெர்னாட்ஷா" புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன" என்றுதான் எழுத முடிந்தது. அதற்கு மேல் அவரை நாம் மற்றவரிலிருந்து இனம் பெரியசாமி பிரித்துக் காண்பதற்கு ஏதும் இல்லை. இவற்றிலிருந்து மாறுபட்ட பாத்திரம். பரதநாட்டியம் போன்ற கலைஞானம் வெறும் பிழைப்புக்கு யல்ல. அதைப்போன்று எந்த கலைஞானமுமே அதன் ஒட்டுறவின் காரணமாக உண்மையான கலைஞனுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை தத்துவத்தைக் கற்பிக்கும். இந்த விதத்தில் பெரியசாமியின் நம்பிக்கைகள் கொள் கைகள் வரழ்க்கை நோக்கு வாழும் முறை மாறுபட் டிருப்பதை நாம் காண முடிகிறது ஜானகிராமனின் சித்
தரிப்பில்
66
39
திருவாசகம், பிரபந்தங்கள் இவற்றின் பாதிப்பை ''தர்மம் அப்படி ஒன்றும் தன்னை எளிதில் காட்டிக் கொண்டுவிடாது. என்றும்,' உனக்கு ஒரு குறையும்
"தாத்தா அப்படியெல்லாம் வராது.
சொன்னாரா? அவர் நல்ல படிப்பு சம்ஸ்காரம் எல்லாம் உள்ளவரா யிற்றே" என்றும் சொல்லும் ராமையாவிடமும் காண் கிறோம்.தான் எடுத்துக்கொண்ட பொருள் குணச் சித்தி ரம் இவற்றைப் பற்றிய பூரண அறிவை ஜானகிராமனின் எழுத்துக்களில் காணமுடிகிறது.
உலக நடப்புகளில் ஜானகிராமனுக்குள்ள கூரிய பார்வையை, சூழ்நிலை எழுப்பலிலும், அவற்றில் நாம் காணும் சின்னஞ் சிறு விவரங்களில் கூட நுண்ணிய விவரிப்பிலும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மனிதர் எப் படி நடந்துகொள்வார்கள் என்பதன் பூரண அறிவை அவற்றின் யதார்த்த வெளிப்பாட்டிலும் காண்கிறோம்.
(1) அகிலாண்டம் இறந்து, துக்கம் கேட்க வந்த வர்களைப்பற்றி எழுதுகிறார். "வந்த காரியத்தைக் கடைசிவரையில் நினைவுவைத்துக்கொள்ளாமல், எழுந்து போகும்போது "அப்ப நான் வரட்டுமா” என்று புன் சிரிப்பு சிரித்து, திடீர் என நினைவு வந்து மிரண்டு முகத்தை மீண்டும் துக்கத்தில் போர்த்திக் கொண்ட ஒருவர்--ராமையாவின் வீடு யாத்திரை ஸ்தலமாக...
(2) 'குழந்தை பாலியைப்பற்றி எழுதுகிறார் ; 'பாலி வேகமாகப் பேசும் பேச்சுக்குத் தகுந்தாற் போல் புருவங்களும் கண்ணும் உதடும் தலையும் வெடுக் வெடுக்கென்று அசைந்துகொண்டிருக்கும். தயங்காமல் பயப்படாமல் பட்பட்டென்று
பேசும் பேச்சுக்களைக் CSLO...'
கேட்
(3) குழந்தைகள் சண்டை: முழுக்கக் டுண்டு பேசுடி ராட்சசி. நீ தாத்தாட்ட சொன்னா தேவடியான்னு அர்த்தம் சொல்லாம இருந்தா அப்படி இல்லே...
69
f‘தூவிட்டேன்னு சொல்லுடா, சத்யமான்னு சொல்
லப்படாது.''
66
"தூவிட்டேன்.''
"மூணு தடவை சொல்லு.''
(4) கோவிந்துவுடன் வண்டியில்,
சரி இப்பவாவது சொல்லுங்க.
றேன்னு பாக்கறீங்களா.”
என்னபண்
'என்ன பண்ணுவே," என்றாள் பாலி. "என்ன பண்ணுவியா.... த்தா நில்லுடா ராஜா..." என்றான் கோவிந்து; வண்டி நின்றது இறங்கிவிட்டான். தலைக் கயிற்றை கையிலே பிடியுங்க. இதோ கா நாளியிலே வர்றேன், தலையைக் கொணாந்து
இதோ கையிலே கொடுக்கறேன். கையிலே கொடுங்க."
பாலி
வாங்கிட்டு என்
அவனைப் பார்த்தாள். அவன் கண்கள்
உறுதியிலும் தீர்மானத்திலும் விழித்து நின்றன, மூக்கு புடைத்துக்கொண்டு நின்றது. ராமையா அவ `னையே, அவன் முகத்தையே ஏற இறங்கப் பார்த்தார். மார்பையும் புஜங்களையும் பார்த்தார். கண்ணெடுக்காத பார்வை. அந்தண்டை இந்தண்டை நகரமுடியாமல் நின்றான் அவன்,
"ஏறு வண்டியிலே" என்று அவர் குரல் சிறிது நேரம் கழித்து எழுந்தது.
''கோவிந்து ஏறு வண்டியிலேன்னு சொன்னாங்க் காதிலே விழலை?'' என்றாள் பரலி.
'கோவிந்து ஏறி உட்கார்ந்தான்,
(5) ராமையா நிலத்தை விற்க ஏற்பாடு செய்த தைக் கேட்டு, நிலம் எழுப்பும் நினைவுகள் கண் முன் நிற்கின்றன.
"கிராமத்து முற்றத்தில் காலைத் தொங்கப் போட் டுக்கொண்டு அவர் போடும் உத்தாவுகளை வாங்க..... திண்ணையில் உட்கார்ந்து அவர் வாழைப்பட்டை சீவ மாட்டார்...
17
77
"ஜிலு ஜிலுவென்று இதமான காற்று. "த்தா... சையென்று களத்துக்குள் ஓடிவந்து நெல்லின்மீது காலைத் தூக்கும் நாயை யாரோ விரட்டுகிறார்கள். சங்கராந்திக் கரும்பை நறுக்கித் துண்டு துண்டாக மடி யில் கட்டிக்கொண்டு அவள் வைக்கோல் போர்மீது உட்கார்ந்து துப்பிக்கொண்டிருந்தாள்."
தஞ்சை ஜில்லா கிராமங்களைப் பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் தெரியும் இவையெல்லாம் எப் படிப்பட்ட graphic pictures என்பது.
இவற்றோடு, ''எப்படியிருக்கு பாரேன், இது. சந்த னக் காப்பிட்ட மாதிரி' என்று ஆற்றில் குளித்துக் கரை கூறிய சங்கரப்பிள்ளை யேறின ராமையாவைப் பற்றிக் கூ மனைவி லோகம், நாலு மாதங்களுக்கொருமுறை கிரா மத்துக்கு வந்து தன் இரண்டு குழந்தைகளைப் போலவே (வையன்னாவுக்குப் பிறந்த. ஆனால் தன் தென்றெண்ணி) மூன்றாவதையும் கொஞ்சிவிட்டுப் போகும் பழனி, "ம்ஹ்ம் நடக்கட்டும்.. விளையாட்டுக் காட்றாப்பலே இருக்கு அபிமானப் புள்ளே புள்ளே தான்.'' என்று வையன்ன தனபாக்கியத்திடம் தனக் குப் பிறந்த குழந்தையைக் கொஞ்சுவதைப் பார்த்துச் சிரிக்கும் கணேசன். “செருப்புப் போட்டுக்கிட்டு, குடை யெல்லாம் எடுத்துக்கிட்டு, போவியாமே' என்று பாலி படிப்பதைப் பற்றிக் கேட்கும் வேப்பம்மாள், பத்து வருஷமாக வாசல் திண்ணையில் ஒரு பெஞ்சியிலேயே படுப்பதும் உட்காருவதுமாகக் காலத்தை ஓட்டிக்கொண் டிருந்த குப்பான் பிள்ளை, இவர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒன்றிரண்டு வாக்கியங்களில் மறக்க முடியாதபடி பளிச்சென கிராமத்துப் பாத்திரங் களை பல்வேறு குணபேதங்களில் சிருஷ்டித்துவிடும் ஜானகிராமனின் சாகஸம் அவரதுதான். இம்மாதிரி யான கூரிய பார்வையும், விவரங்களில் அக்கறையும் ஒரு யதார்த்த சூழ்நிலை எழுப்பலிலும் ஜீவத்துடிப்பிற் கும் பெரிதும் உதவுகின்றன.
ஜானகிராமனின் சுபாவமான ஹாஸ்யம் நாவல் முழுதும் முழுதும் நிரவிக் கிடக்கிறது, ஆனால் "ஆளுக்கு இரண்டு சக்கரத்திலே ஏறி ஊட்டுக்குப் போகலாமா' என்று
சொல்லி செல்லம் முறுக்கைக் கொடுக்கும்
எழுத்து 200
போதும், "நான் தைரியம் நிறைய ஸ்டாக் வைச்சிண்டி ருக்கேன். வேண்டுகிறவர்ளுக்கு உடனே ஒரு அவுன்ஸ் கொடுப்பேன். சிரிப்பிலே கலந்து சாப்பிடணும்” என்று செல்லம் சொல்லும்போது மட்டும் இந்த ஹாஸ்ய வெடிகள் பரிதாபகரமாக. புஸு புஸுத்து விடுகின்றன.
இன்னொன்றைப் பற்றியும் சொல்லித்தீரவேண் டும். ஜானகிராமனது கொச்சைப் பேச்சு நடை. இந் நடையைக் கண்டு பல பேராசிரியர்கள், பண்டிதர்கள் முகம் சுளிப்பார்கள். ஆனால் கொச்சைதான் பாத்தி ரங்களுக்கும், பேச்சுகளுக்கும் ஜீவனளிப்பது, யதார்த் தத் தோற்றம் எழுப்புவது. சம்பவங்கள் நிக்ழும் தஞ்சை ஜில்லா முத்திரை பெற்றவை இக்கொச்சைகள், ஜானகி ராமனும் தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்தவராதலால் அவருக்கு இது மிக சுலபமாகவும் பிசகாமலும் வரு கிறது. அவர் பேச்சு வாக்கியங்களை அதிக் நீளத்திற்கு எழுதுவதில்லை. மிக நீண்ட கருத்தைச்சொல்லும் அவசி யம் ஏற்பட்டால்கூட அதைச் சிறு சிறு வாக்கியங்களா. கத் துண்டித்து, பேச்சு அமைதியில் கொச்சையாக எழுதிவிடுவது அவர்
அவர் பாணி. கொச்சையும் பாத். திரங்களின் தரத்திற்கேற்ப மாறுபடுகிறது.
முன்னர் கூறியபடி ஜானகிராமனின் பெரும் பாத் திரங்கள் எல்லாம (வையன்ஞாவைத் தவிர).
ஒரு குற்றச்சாட்டல்ல. அவர் கையாளும் கதைக் கருக் கள் அப்படிப்பட்டவை. அதற்கு அவருக்கு பூரண சுதந் திரம் உண்டு. மாறாக, அவரது சிறு கதைகளில் யதார்த்த உலகின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் காண முடிகிறது.
இதையும் கூறி,கடைசியாக, தமிழ் நாவல் இலக் கியத்திலே க.நா.சுப்ரமண்யத்தின் 'பொய்த்தேவு, 'ஒரு நாள்' இவற்றிற்குப் பிறகு வந்த ஒரு சிறந்த நாவல் (ஆசிரியரது 'மோகமுள்' நான் படித்ததில்லை.) இதுதான் என்று சொல்லத் தோன்றுகிறது. மற்ற தொடர் கதை ஆசிரியர்களுக்கும் ஜானகிராமனுக்கும் எவ்வளவு தூரம்? ராஜா, தங்கராஜைச் சொன்னது. போல நாமும் ஜானகிராமனின் எழுத்துக்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவரைப் படிப்பது "பட்டுச் சால் வையை மேலே போட்டுக்கறாப்பல இருக்கும். அவ்வ ளவு உசந்த எழுத்து.''
படையில் லட்சிய ஜீவன்கள். மிக மிக நல்ல குணம் மாய்மாலம்
படைத்தவர்கள். ஜகது, சுப்பிரமணியம் கோவிந்து, சாமையா, வக்கீல், சுப்பிரமணியம், வடிவு, சொர்ணக்கா புருஷன்,சொர்ணக்கா, தங்கராஜு, பாலி, ராஜா, செல் லம். பெரியசாமி, நாயக்கர் மகன், சங்கரி, நாயக்கர் இவர்களின் மனைவிகள் (மலர்மஞ்சம் நாவலின் பாத்தி, ரங்கள் பட்டியுலே ஆகிவிடவில்லையா?) இவர்களில் யாரை, ஏது பழுது சொல்லமுடியும்? இவர்கள் சித்தி ரங்களில் ஒரு கரிய கோடு கிடையாது. எல்லோரும் வெள்ளைக் கலையுடுத்துலவும் தேவைகள். யத்திற்குக்கூட விமோசனம் கொடுத்து விடுகிறார் ஆசிரியர். தங்கராஜுவுக்கு உதவ என்ன தியாகம் செய்கிறாள்! பின் தன் பாபங்களைக் கரைக்க கங்கைக் கரைக்கே வந்துவிடுகிறாள். ஜானகிராமன் முதலியா ரையும் அவர் மனைவியையும் கூட விட்டுவைக்கவில்லை, அவர்களைப் பெரும் கர்ணப் பிரபுக்களாக ஆக்கிவிடு கிறார்.
தனபாக்கி
உலகம் என்ன இவ்வளவு தேவ ஜீவன்கள் நிறைந்த உலகமாகவா இருக்கிறது? இருந்த போதி லும் ஜானகிராமனின் சிருஷ்டியில் யாருமே செயற்கை யாகத் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் ஜீவத்துடிப் புடன் யதார்த்த இயல்புடன் உலவும் பாத்திரங்கள், யுதார்த்தப் போர்வை போர்த்த லக்ஷிய உருவங்கள். இவர்களில் நாம் பேதம் காணமுடியாமல் இல்லை. ஆனால் அந்த பேதம் நாம் முத்துக் குவியலில் காணும், உருவபேதங்கள், கற்கள், கண்ணாடிகள், வைரக்கற்கள், முத்துக்கள், பிளாஸ்டிக் துண்டுகள் பளிங்குகள் இவை சேர்ந்த கலவையின் பேதங்கள் அல்ல.
தனது கதா பாத்திரங்களில் இத்தகைய பேதத் தைக் காட்டக் கூடாதா இவர்களும் நம் போன்றவர்கள் தான் என்று எண்ணத்தோன்றும். ஆர். ஷண்முக சுந்தரத்தினது போன்ற, ஏன், ஜானகிராமனது சிறு கதைகளது போன்ற பாத்திரங்களைச் சிருஷ்டிக்கக்
கூடாதா, அவரது கதைக் கருவும் மலர் மஞ்சத்தைப் போன்று பெரும்பாலும் ஓர் கற்பனைப் பிரச்னையாக இல் லாது, உண்மையாக நாம் கிடந்து அல்லல்படும் ஒன் றாக இருக்கக்கூடாதா என்றும் தோன்றுகிறது. இது
எழுத்து 201
மையிட்ட இரவிலே மினுமினுக்கும் தாரகை, உறக்கத்தின் எல்லையில் நெளிந்தோடும் சிறுகனவு, சிந்தனை விளிம்பிலே சிதறும் இலக்கியம்
இவையெல்லரம்
யாரழைக்க வந்தனவோ? எங்கிருந்தோ? எப்படியோ?-
பிறப்பின் முதற்குரல் சாவின் நெட்டுயிர்ப்பு, மகிழ்ச்சியின் வானவில், துயரத்தின் நெடு நிழல் ஆசையின் சுழலோசை துறவின் நிசப்தம்
இவையெல்லாம் இரட்டைப் பிறவிகளா? இயற்கையின் இருகூறா?
பழகிவிட்ட பசும்பால் உப்பிட்ட கஞ்சி பல்லக்குச் சவாரி
தார்ரோடில் வெறுங்கால், அரசியல் சொற்பொழிவு... அடுக்களையில் பட்டினி
இவையெல்லாம் வள்ளுவன் காலமுதல் வளர்ந்துவிட்ட விளையாட்டா?
டி. ஜி. நாராயணசாமி
Pages
Thursday, April 17, 2025
'மலர்மஞ்சம்' ஆய்வு :: ஜானகிராமன் படைத்த யதார்த்த பாத்திரங்கள் - வெ.சாமிநாதன்
Saturday, April 12, 2025
ஓதாமல் ஒருநாளும் - தேவிபாரதி & மீதி - தேவிபாரதி
ஓதாமல் ஒருநாளும் - தேவிபாரதி
அன்றைக்கென்று பார்த்து பால்ராஜ் வாத்தியார் வரவில்லை. அவருக்குப்
பதிலாய் லீவ் லெட்டரொன்று வந்து சேர்ந்தது.
சேர்ந்தது. இவருக்கு என்ன செய்கிறதென்று
தெரியவில்லை.
இனி அய்ந்து வகுப்புப்
ஒருத்தராக மாரடிக்க வேண்டும்.
பிள்ளைகளிடமும் இவர்
எல்லாப்
இது கடலைக் கொடி பிடுங்குகிற காலம். பிள்ளைகளும் கிழக்கு வெளுக்கும் முன்பே காடுகளில் இருக்கும். அங்கே, விளையாடிக் கொண்டே ஒவ்வொரு பிள்ளையும் நாலு கொட்டுக்கூடை கடலைக்காய் பறித்துவிடும். கொட்டுக்கூடை எட்டணாவென்று போட்டால்கூடத் தலைக்கு இரண்டு ரூபாய் தேறும். 'பள்ளிக்கூடத்துக்குப் போய் படிச்சுக் கிழிக்கிறதென்ன இப்போ?'
பிள்ளைகள் கொஞ்ச நேரத்துக்கு அமைதியாய் இருந்து பார்த்தார்கள். பிறகு ஒருவரோடொருவர் குசுகுசுவென்று பேசத் துவங்கினர். நேரம் செல்லச் செல்லப் பேச்சுப் பெரிதாகிப் பெரிதாகி வளர்ந்தது. வகுப் பறையிலேயே தட்டாங்கல் விளையாட்டுத் துவங்கி யிருந்தது.
கோபத்துடன் மேசையைத் தட்டி, "பேசாம, இருங் கடா...!'' என்று சத்தம் போட்டார். சூட்டோடு சூடாக ஸ்கேலை எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்குள் புகுந்து பிள்ளைகள் தலைக்கு ஒரு அடியாகப் போட்டார், மிரண்டு அமைதிப்பட்டார்கள்,
“இனிமே எவனாச்சும் சத்தம் போட்டீங்கன்னா தோல உரிச்சுப் புடுவேன், உரிச்சு... படவா ... எல்லோரும் சிலேட்ட எடுங்கடா... எடுத்து ஒண்ணுலயிருந்து நூறு வரைக்கும்
எழுதுங்கடா..."
பழையபடி, சன்னத்துச்குக் கைகளை முட்டுக் கொடுத்து உட்கார்ந்தார். ஒரு பையன் தயக்கத்தோடு எழுந்து நின்றான்.
'எங்கிட்டே சிலேட்டில்லீங்க சார்...'
அவனது முசத்திலும்
குரலிலும் நடுக்கம். இவருக்கு
எரிச்சலாக இருந்தது.
"சிலேட்டில்லாம இங்க செரைக்கறதுக்காடா வந்தே?
வாடா இங்க...
பையன் நடுங்கினவாறே அருகில் வந்தான்.
"சிலேட்டு என்னடா ஆச்சு?''
"ஒடஞ்சு போச்சுங்க சார்...”
“ஒடஞ்சா இன்னொண்ணு வாங்கறதுக்கென்ன? சிலேட்டில்லாம இங்க புடுங்கறதுக்கா வந்த...?"
பட்டனில்லாத சட்டைத்
திறப்பினூடே, ஒட்டிக்
கிடந்த அவனது கறுத்த வயிற்றில் கைபோட்டுக் கிள்ளி னார். பையனின் சண்களில் கதகதவென்று நீர் திரண்டு விட்டது. பிரம்பில் இரண்டடி போட்டார்.
"போடா...போய் உக்காரு...
பையன் விசும்பிக் கொண்டே போய் உட்கார்ந்தான், இவர் கொஞ்ச நேரம் கூரை முகட்டை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஜன்னலருகே நின்று வெளியில் பார்வையை ஓட்டினார்.
பிள்ளைகள் இவரது நடையையும், பிரம்பையும் பார்த்து மிரண்டு போனார்கள். ராகம் போட்டுச் சொல்லிக் கொண்டே எழுதினார்கள். தளர் வாயிருந்த இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு வெளியில் வந்தார். ஒரு பழைய மாணவன் இவருக்குக் 'குட் மார்னிங் சார்' சொன்னான். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது சட்டைப் பாக்கெட்டைத் துழாவினார். ஒரு ரூபாய் கிடந்தது.
பிரம்படிபட்ட பையன் இன்னும் விசும்பிக் கொண் டிருந்தான். புறங்கைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கண்ணீர் விட்டான். இவருக்குப் பரிதாபமா யிருந்தது. அவன் பெயரைச் சொல்லிக் கனிவாகத் தன்ன ருகே அழைத்தார். விழிநீரைப் புறங்கைகளால் துடைத்த படி அருசில் வந்து நின்றான் பையன்.
இவர் எங்கோ பார்த்தபடி பேசாமல் உட்கார்ந்திருந்தார். என்னத்துக்குக் கூப்பிட்டோமென்று யோசிக்கிற மாதிரி.
சார்..."
திரும்பி, என்ன வேணும் என்பது போல் பார்த்தார்.
கூப்புட்டீங்க சார்..."
"ம்... ம்... போய் நாடார் கடையில்
நா சொன் னன்னு சொல்லி ஒரு டீ வாங்கிட்டு வா..
"சரீங்க சார்..." என்று துள்ளலுடன் ஓடினான். பையன்.
பிள்ளைகள் ஒவ்வொருவராக வந்து எழுதியதைக் காண்பித்தார்கள். சாக்பீசால் எல்லோருக்கும் 'டிக்’ செய்தார். பிறகு எல்லோரையும் 'நூத்தி ஒண்ணுலயிருந்து இருநூறு வரைக்கும்' எழுதச் சொன்னார். வாசலில் 'அப்பா' என்ற குரலுடன் வந்து நின்றான் செல்வம். இவர் ஒரு பையனைக் கூப்பிட்டு, பால்ராஜ் வாத்தியாரின் நாற்காலியைக் கொண்டுவரச் சொல்லி, அவனை உட்காரச் சொன்னார். இதற்குள் பையன் டீயுடன் வந்து சேர்ந்தான்.
"செல்வம் டீக் குடிக்கிறயாப்பா...?"
அந்தப் பையனிடம் ஒரு டம்ளர் எடுத்துவரச் சொல்லி,. பாதியை ஊற்றி செல்வத்துக்குக் கொடுத்து விட்டு, டீயை உறிஞ்சத் தொடங்கினார்.
"பால்ராஜ் சார் வரலியாங்கப்பா?" என்று பதட்ட மான குரலில் கேட்டான் செல்வம்.
"இல்லப்பா... அவரு திடீர்னு லீவு போட்டுட்டாரு... அதான் என்ன பண்றதுன்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருந்தேன்..."
செல்வம் பெருமூச்சு விட்டான்.
யோசனையுடன் எழுந்து, "இரு வர்றேன்" என்று செல்வத் திடமும், 'சத்தம் போடாமல் எழுதுங்கடா" என்று பிள்ளைகளிடமும் சொல்லி விட்டு, வெளியில் வந்தார். நிராதரவாக விடப்பட்ட குழந்தை போல வெறுமையாய் கிடந்த தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றார். பிள்ளைகள் பாடமெழுதுகிற சப்தத்தையும், தூரத்தில் எப்போதாவது கத்தும் செம்மறியாடுகளின் சத்தத்தையும் தவிர, ஊரே நிசப்தமாயிருந்தது. பால்ராஜ் ாத்தியார் வந்திருந்தால் இப்படி நிராதரவாய் நிற்க வேண்டியிருந்திருக்காதென நினைத்தார்.
தூரத்தில் மளிகைக்கடை ராமசாமியின் தலை தெரிந் தது. இவர் பதட்டத்துடன் கைதட்டி அவனைக் கூப் பிட்டார். அவன் திரும்பி அவரைப் பார்த்துப் புன்ன கைக்கும் முன்பே அவனை நோக்கி நடந்தார். மர நிழலில் ஒதுங்கி அவருக்காகச் சலிப்புடன் காத்திருந்தான். இவருடைய பழைய மாணவன் அவன். அய்ந்தாம் வகுப்புடன் புத்தகங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மளிகைக்கடை வைத்து உட்கார்ந்து விட்டான். இப்போது கல்யாணமாகி பிள்ளை குட்டியென்று வாழ் கிறான், கடையும் ரொம்பப் பெருத்து விட்டது.
"என்ன ராமசாமி...? எப்படியிருக்கு ஏவாரமெல்
லாம்?'' என்று சிநேக பாவத்துடன்
அவன் சிரித்தான்.
"என்னமோ ஓடுது சார்... வண்டி
கேட்டார்.
"பெரிய முதலாளியெல்லா
எப்பிடி?"
இப்பிடிச்
சொன்னா
ராமசாமியின் முகத்தில் இளவெயிலாய் ஒரு பெருமிதம்.
"என்ன சார் பெரிய முதலாளி... நம்பளவிடப் பெரியவ னெல்லாம் இருக்கான். நீங்கதாஞ் சொல்றீங்க என்னெ முதலாளின்னு...
கோ சொ
அவன் நகைச்சுவையாய் ஏதோ சொல்லிவிட்டது போல அவர் சிரித்தார். சிரிப்பு ஓய்ந்ததற்கப்புறம் சொன்னார்.
"ஒண்ணுமில்ல ராமசாமி...பணமிருந்தா ஒரு 10 ரூபா கெடைக்குமா? செல்வத்துக்கு வேணுமாம்... என்னமோ அப்ளிக்கேஷன் போடணும்னு..."
நா குளறி பேச்சுத் தடைபட்டு, முகம் வியர்க்க அவனைப் பார்த்தார்.
ராமசாமி எங்கோ பார்த்தான். கொஞ்ச நேரம்
மெளனம்.
இந்
“எங்க சார்...பணத்தயெல்லா நேத்துத்தாம் பொறுக்கி
சரக்கு வாங்கக் கொடுத்தனுப்பிச்சேன் ... தெட்டுக்கு நெறையக் கடன் வேற... வாங்கறாங்க, அப்புறம் கடப்பக்கம் வர்றதேயில்ல... என்று அவர் முகத்தைப் பார்த்தான்.
அவர் கூட அவனது கடைக்குப் பாக்கி தர வேண்டியிருந் தரவில்லை. ஓரிரு தது. இரண்டு மாசமாய் எதுவும் தடவை ஆளனுப்பிக் கேட்டிருந்தான் ராமசாமி.
“நம்பளுது இந்த மாசம் வந்துரும்... நீ கவலைப்பட வேண்டாம்... இப்ப வாங்கற பத்தயுஞ் சேத்துப் பையங்கிட்டக் குடுத்தனுப்பிடறேன்..."
பின்னும் என்னென்னவோ சொன்னான் ராமசாமி.
டுங்க...'' என்று அவன் கடைசியாய்ச் சொன்னது
வேணும்னா ஒரு
பையெனக் கடைக்குத் தாட்டியு
மட்டும் அவருக்கு ஞாபகம் இருந்தது.
வகுப்புக்குத்
திரும்பி, சிலேட்டில்லாத அந்தப் பையனை ராமசாமியின்
கடைக்கு அனுப்பி விட்டு உட்கார்ந்தார்.
“செல்வம் அந்த இண்டர்வியூ எத்தனாந் தேதின்
னுப்பா சொன்ன?"
* “எந்த இண்டர்வியூங்கப்பா?"==
ஐயா
"அதாம்பா, தபால் தந்தில கிளார்க் போஸ்ட்டுக்கு...'
“இருபத்தி நாலாந் தேதிங்கப்பா...” "இண்டர்வியூ எங்கே?”
"கோயமுத்தூர்லங்கப்பா...?"
அவர் பின்னால் திரும்பி காலண்டரைப்
பார்த்தார்.
தேதி இருபதாகி விட்டது, நாலே நாட்கள் தானிருக் கின்றன. எப்படியும் பால்ராஜ் வாத்தியார் இருக்கிறார்...
கொஞ்ச நேரத்தில் பையன் வந்தான்,
ஓதாமல் ஒருநாளும்
“சார் அவருகிட்ட அஞ்சு ரூபாதான் இருந்துச்சாம்.... ஒண்ணாந் தேதி கண்டீப்பாக் குடுத்துரணும்னு சொன்னாரு...
அவர் ஒரு பெருமூச்சுடன் அதை வாங்கிக் கொண்டார். இதைத் கொண்டு என்ன செய்ய? எதுவும் செய்யத் தோன்றாதவராய் மேசையின் மேல் எழுதுவதும், அழிப்பதும்...எழுதுவதும் அழிப்பதுமாய்...
"டேய்... யாராச்சும் ஒரு பை குடுங்கடா..." சட்டென்று எழுந்து பிள்ளைகளைப் பார்த்துச் சப்தம் போட்டார். நாலைந்து பிள்ளைகள் புத்தகங்களைக் கொட்டிவிட்டுப் பைகளை நீட்டினர். அவற்றில் நல்லதாக ஒன்றை வாங்கிக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குள் நுழைந் தார். எல்லாவற்றையும் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்செல்வம்.
ஸ்டோர்ரூம் கதவை உட்புறம் சாத்திக் கொண்டு பிள்ளைகளின் மதியச் சாப்பாட்டுக்கென்றிருக்கும் கோதுமை ரவையில், அவசர அவசரமாக ஒரு ரண்டு மூன்று கிலோவுக்கு அள்ளிப் பையில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தார்.
செல்வத்திடம் பையைக் கொடுத்துப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். ராமசாமியிடம் வாங்கிய அய்ந்து ரூபாயைக் கொடுத்து,
''கொண்டுபோய் அம்மா கிட்டக் குடுத்து மத்தியானம் உப்புமாக் கௌ றிக்கச் சொல்லு... நா சாயந்திரமா வர்றேன்...''
“உங்களுக்கு மத்தியானச் சாப்பாடுங்கப்பா?"
"எனக்கு எப்பிடியோ ஒண்ணு ஆவுது... நீ போ... யாராச்சும் பைல இருக்கறதெப் பாத்துடப்
போறாங்க
எங்கியும் நிக்காமப் போ..." என்று
தணிந்த குரலில் பதட்டமாகச் சொன்னார்.
பையை எடுத்துக் கொண்டு
கொண்டு குனிந்த தலையுடன் வெளியேறினான் செல்வம். இவர் அவன் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றார். பின்பு, முகத்தில் பொடித்திருந்த வியர்வைத் துளிகளை வேட்டித் தலைப் பினால் துடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்.
மணி பதினொன்றாகிவிட்டது.
ய
ஏ
•
ae
காலையிலிருந்து பாடமே நடத்தலை. பாடம் நடத்த லாமா, மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யலாமாவென யோசித்தார். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாதது நினைவுக்கு வந்தது, டம்ளரைக் கொடுப்பதற்காக டீக்கடைக்குப் போன, சிலேட்டில்லாமல் அடிவாங்கிய பையன் திரும்பி வந்ததும், அவனிடம் தீப்பெட்டியைக் கொடுத்து, அடுப்புப் பற்ற வைக்கச் சொல்லி அனுப்பி
னார்.
ரொம்பவும் உற்சாகத்தோடு, கிழிந்த காக்கி டிரௌசரின் வழியே குண்டிகள் தெரிய சமையல் கட்டுக்குப் போன வனைப் பார்க்க அவருக்கு ஒரு கணம் மனசு கனத்துப் போயிற்று.
சத்தம் போடாமல் படிக்க வேண்டுமென்று பிள்ளைகளை எச்சரித்துவிட்டு அவரும் சமையல் கூடத்தை நோக்கிப் போனார்.
மத்தியானம் போகிறது...?
பாடம் நடத்திக் கொண்டால்
ஓதாமல் ஒருநாளும்
ஒரு விமர்சனம் :
'ஓதாமல் ஒருநாளும்'
வேலையின்மை, பற்றாக்குறை, வறுமை போன்றவை இன்றைய சமூக அமைப்பின் அரசியல், பொருளா தாரத்தின் விளைவுகள். இவ்விளைவுகள் மனித ஆளுமையின் மீதும், மனிதப் பண்புகள் மீதும், ஆதிக்கம் செலுத்தி அவற்றைச் சிதிலப்படுத்து கின்றன. தன்னிரக்கம், பொய், திருட்டு, போலித் தனம் போன்ற சிதைவுகளுக்கு இவை காரணமா கின்றன. இளம் உள்ளங்களில் மேலான மனிதப் பண்புகளையும், மனித இனத்தின் வளர்ச்சிக்கேற்ற அறிவியல் பார்வையையும் ஊட்டி, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இவற்றைக் கையளிக்கச் செய்கிற பணி, ஆசிரியப் பணி. இத்தகைய உயர்ந்த பணியில் ஈடுபட்டுள்ளோரிடம் மேற்கண்ட சிதைவுகள் தோன்றுவது இந்தச் சமூக அமைப்பின் மிகப் பெரிய அவலமாகும். இந்த அவலத்தை எதார்த்தத்தோடு சித்தரிப்பது 'ஓதாமல் ஒருநாளும்.'
-நா. இராதாக்கிருட்டிணன்.
படிப்பகம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மீதி - தேவிபாரதி
எல்லோரும் அவனிடம் பிரியம் செலுத்தினார்கள். அவனைப் பார்க்கும்போது அவரவர்க்குள்ள முகங்களை உடனே பிரியமுள்ள முகங்களாக மாற்றிக் கொண் டார்கள். பிரியஞ் செலுத்தலொரு கடமையெனக் கொண்டார்கள். தகப்பனை இழந்து வந்திருக்கிறவனின் மேல் பிரியஞ் செலுத்தாமலிருப்பது கூடாது.
பஸ்ஸை விட்டிறங்குகிற போதே அவனைக் கண்டு
கொண்டவர் சுப்பிரமணியம் சார்,
"அட நீங்களா...? வாங்க
தம்பி சௌக்கியமா இருக்கீங்களா? திடீர்னு பொறப்புட்டு வந்திருக்கீங் களே, ஒரு லெட்டர் கீது போட்டுட்டு வந்திருக்கலா மில்லையா? ஊர்ல எல்லோரும் சௌக்கியமா? அம்மா தேறீட்டாங்களா? அந்தப் பொடியன்... அவம் பேரென்ன... அவென் பேருலதான் உசுராயிருந் தாரு ஒங்கப்பா!"
எல்லாவற்றுக்கும் ஒரு சேரத் தலையாட்டிச் சொன்னான், "எல்லாரும் சௌக்கியமாத்தான் சார் இருக்கோம்.
நீங்கள்ளாம் நல்லாயிருக்கீங்களா சார்...?"
"என்னமோ இருக்கோம்... சார்தான் இப்படி அகால மாய்க் காலமாயிட்டாரு. இனியும் அதயே நெனச்சு கவலப்பட்டுட்டு இருக்காம ஆகவேண்டியதெல்லாம் பார்த்துத்தான் ஆகனும்...'
தந்தையின் நினைவுகள் தூண்டப்பட்டவனாய் சுப்பிரமணியம் சாரின் பாதச்சுவடு பற்றி நடந்தான். தந்தையைப் போன்றவரிவர். தந்தையின் திரேகமும் தந்தையின் குரலும், தந்தையின் சுபாவமு முடையவர்.
"அப்பாவோட சாமானெல்லாம்
போலாம்னு வந்தீங்களா தம்பி..."
எடுத்துட்டுப்
"ஆமா சார்... அப்பா குடியிருந்த வீட்டைக் காலி பண்ணியாகணுமில்லையா? மற்றபடி சாமானெல் லாம் ஒண்ணும் அதிகமிருக்காது...?"
'ஆமாமாம்... என்னமோ கஞ்சி காச்சிக்குடிக்க ரெண்டு சாமாணும். உடுத்திக்க நாலு துணிமணியும், படுத்துக்க பாய் பெட்ஷீட்டுன்னும் வெச்சிருந்தாரு...? அப்புறம் அவரு ஓட்டிக்கிட்டு இருந்த பழைய சைக்கிள் ஒண்ணிருக்கும். அது டயர் டியூப்பெல்லாம் ஒண்ணும் வேலைக்காகறாப்பல இல்ல. மாத்தி, ஓவராயில் பண்ணுனா கொஞ்சநாளைக்கு ஓட்டலாம் அப்படியே..."
சுப்பிரமணியம் சாரின் வீட்டுக்குப் போகிற போதே சங்கிலிமுத்து சாரும், துரைராஜ் சாரும் கண்டு கொண்டு உடன் நடந்தார்கள். அப்பாவை எல்லோருமே கடைசி காலங்களில் நிறையப் பராமரித்திருக்கிறார்கள்.
அப்பா செத்துப்போன அன்றைக்கு ஹெட்மாஸ்டருக்கு தந்தி கொடுத்திருந்தான். எல்லாரும் இரவோடிரவாய்ப் புறப்பட்டு வந்துவிட்டார்கள். சுப்பிரமணியம் சாரென் றால் அப்பாவின் பாதந்தொட்டு வணங்கி
சிறு பிள்ளையாய் அழத் துவங்கி விட்டார். சங்கிலிமுத்து சாரும், துரைராஜ் சாரும் எல்லோருக்கும் ஆறுதல் சொன்னார்கள்.
"அப்பா போயிட்டா
என்ன?
நாங்கள்ளாம்
இருக்கோம்ல...? அப்பாவோட ஸ்தானத்துல நாங்க இருக்கோம்... யாரும் அழக்கூடாது,"
எல்லோரும் சேர்ந்து பெரிய ரோஜா மாலையாய் வாங்கிப் போட்டார்கள். பாடை தூக்குகிற போது மூன்று பேரும் மாற்றிமாற்றி அப்பாவைச் சுமக்கிறதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். உறவுக்காரர்களும் ஊர்க்காரர்களும் ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். இறந்து போன அப்பா வைக் குறித்துப் பெருமையாய்ப் பேசிக் கொள்ளலா னார்கள்.
சங்கிலிமுத்து சார் சொன்னார்,
"அப்பா சாகறதுக்கு ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாலேயே அவரால் நடக்க முடியாமப் போயிடுச்சு... பேசக்கூட ரொம்பச் சிரமப்பட்டாரு... நான்தான் இருந்த நெலமயப் பாத்துட்டு சாருகிட்டச் சொன்னேன்... பேசாம ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு
ஓடம்பப் பத்தரமாப் பாத்துக்குங்க க சாருன்னு
எனக்கான வரையிலுஞ் சொன்னேன். கேக்கல, மெல்ல ஊர்ந்து ஊர்ந்துன்னாலும் வந்துருவேன்னு சொன்னார். அப்புறந்தான் நெலமயப் பாத்துட்டு தினசரி அவரச் சைக்கிள்ல ஒக்கார வெச்சு கூட்டிக் கிட்டுப் போயிட்டு வர ஆரம்பிச்சோம்."
துரைராஜ் சார் சொன்னார்,
அவரென்ன அந்தச் சீக்குக்குப் பயப்பட்டாரா? கையெழுத்துப் போட்டுட்டு பேசாம உக்காந்துக்குங்க சாருன்னு எல்லாருஞ் சொல்லுவோம், கேக்க மாட் டாரு. கொஞ்சம் சுடு
சுடு தண்ணியெ மேஜைமேல் வெச்சுக் குடிச்சிக்கிட்டு அந்தக் குழந்தைகளுக்கு எதை யாவதொன்னச் சொல்லிக் குடுத்துக்கிட்டேயிருப்
பாரு...உ
நினைவுகள் சேரச் சேர மனசின் துயரம் அதிகமாயிற்று. அப்பா ஏன் இப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டார். லீவும் எடுக்காமல்... வைத்தியமும் பார்த்துக் கொள் ளாமல்... மௌனமாய் நடக்கச் சங்கடமாயிருந்தது.
அப்பாவைக் குறித்துப் பேசுகிறவர்களிடம் ஏதும் பேசாமல் வருகிறது சரியில்லை. ஆனால் என்ன பேசுகிற தென்று தெரியாதவனாய் சுப்பிரமணியம் வீட்டுக்குப் போகிற வரையிலும் சங்கடத்துடனேயே நடந்தான்.
சாரின்
சுப்பிரமணியம் சார் வீட்டு வாசலை எட்டுகையிலேயே அவரது சம்சாரம் வீட்டுக்குள்ளேயிருந்து ஓடி வந்து அவர்களை எதிர்கொண்டு நின்றது. சொல்லமுடியாத பிரியத்துடனும், தவிப்புடனும் அவனைப் பார்த்தது. பக்கத்து வீடுகளிலிருந்து கமலத்தம்மாள், போஸ்ட்மேன் சம்சாரம் பேச்சிப்பாட்டி, கோயமுத்தூர் அத்தை எல்லோரும் வந்து அவனைச் சுற்றித் திரண்டார்கள்.
ஒவ்வொருவரும் அவன் மேல் தனிப்பட்ட பிரியம் செலுத்தி னார்கள். அவனால் தாங்கமுடியாத அளவுக்கு ரொம்பவும் வெளிப்படையானதாகவும் சம்பிரதாயமானதாகவும் இருந்தது அவர்கள் காட்டின பிரியம். அவனைப் பார்க்கிற போது இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்று முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்ட வர்களைப் போல எல்லோரும் ஒரே மாதிரி நடந்து கொள்ளலானார்கள்.
கோயமுத்தூர் அத்தை மட்டும் எல்லோரையும் விட அதிக உரிமையெடுத்துக் கொண்டு அவனைக் கட்டிப்பிடித்து என்னென்னவோ சொல்லிச் சொல்லியழத் துவங்கிற்று. அவனுக்கு இன்னும் சங்கடமானது. தவிப்புடன் இதிலிருந்து விடுபடும் வழிதேடி யோசித்தான்.
எல்லோரிடத்திலும் அப்பா ஆஸ்பத்திரியிலிருந்து, கடைசி காலங்களில் பேசினது, சாப்பிட்டது.
பின் செத்துப்
போனது எல்லாவற்றையும்
சொல்லத் துவங்கினான். சொல்லி முடிக்கையில் பின்னுமிருவர் வந்தனர். அவர் களுக்கும் அதே விவரங்களைச் சொன்னான், பின்னும் வந்தனர். ஒவ்வொரு முறை வந்தவர்களுக்காகவும் ஒவ்வொரு தடவை சொல்ல வேண்டியதாயிற்று.
திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விவரங்களை ஒரே மாதிரியான வார்த்தைகளால் கோர்த்துச் சொன்னான். நிறைய பேருக்குத் திரும்பத் திரும்பச் சொன்ன விவரங் களாதலால் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி சொன் னான். வார்த்தைகளோ, பாவனைகளோ எதுவும்
மாறவேயில்லை. எழுதி வைத்துப் படிக்கிறது போலிருக் கிறது அவன் சொன்னது.
கடைசியில் இதில் அவனுக்கே ஒரு சலிப்புத்தட்டி எரிச்சலு றலானான். மனசில் ஏக்கம் பிடித்தது. முகம் வியர்த்தது; மெலிதாக நடுக்கமுற்றான். பின் சுப்பிரமணியம் சார் சொன்னார்,
"சரி, போதும் விடுங்க. அவர் சாப்பிடட்டும். வந்ததி லிருந்து வெறுங்காபியோட ஒக்காரவச்சு பேசிக்கிட்டி ருக்கோம். எங்க எப்பச் சாப்புட்டாரோ என்னவோ! வாங்க தம்பி, கையைக் கழுவுங்க சாப்புடலாம்..."
துரைராஜ் சாரும், சங்கிலிமுத்து சாருங்கூட தங்கள் வீடு களில் சாப்பிடக் கூப்பிட்டார்கள். அவன் யாரிடமும் எதையும் மறுக்கவில்லை. ஒவ்வொருவரிடமும் ரொம்பவும் ஜாக்கிரதையாயும், நிதானமாயும் பேசினான். தன் பேச்சின் காரணமாய் யாருடைய மனசும் புண்பட்டு போய்விடக் கூடாதென்கிற பயத்துடனேயே பேசினான். அவர்கள் அவனிடத்தில் பிரியம் செலுத்துதலை அவன் உள்ளூர விரும்பினான். யாரும் அந்த நேரத்திய தங்களது முகங்களை மாற்றிக் கொண்டு விடாதிருக்க வேண்டும்.
பரிமாறுகிறபோது சுப்பிரமணியம் சாரின்
சம்சாரம் சொன்னது,
இப்படித்தான்
சாரும்... சூதுவாதறியா மனுஷன். ஒண்ணு வேணும்னா கூச்சப்படாமக் கேட்டு வாங்கிச் சாப்புடுவாரு. சலிச்சு வந்தாருன்னா ஒரு டம்ளர் காபி குடுங்க டீச்சரம்மான்னு கேட்பாரு. டீச்சர், டீச்சர்னு கூப்புடாதீங்க சார். எனக்குக்கையெழுத்துப் போடவுங்கூட தெரியாதும்பேன். அதனால டீச்சர்... வாத்தியார் சம்சாரம் டீச்சர்தானேன்னு
என்ன
சொல்லுவார். சொல்லிட்டுச் சிரிசிரின்னு சிரிப்பார்..
பாவம் எதார்த்தமான மனுஷன்.”
உதட்டில் ஒரு புன்னகை அவிழ பெருமூச்சுவிட்டு நின்றது. சாப்பிட்டபடியே சுப்பிரமணியம் சார் சொன்னார்,
"யதார்த்தம்னா எல்லாருகிட்டயுமா...? அந்த மளிகைக்
18 கடைக்காரன் என்னமோ சுருக்குனு ஒரு
ஒரு வார்த்த சொல்லிட்டான்னு கடேசி வரையிலும் மொகங் குடுத்து அலங்கிட்ட ஒரு வார்த்த பேசலியே... நான் தான் அவருகிட்டச் சொன்னேன். ஒடம்புக்குச் சரி யில்லாத சமயத்துல சமைச்சுக்கிட்டுக் கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க சார். ஒங்களுக்கு என்ன வேணும் னாலும் கேளுங்க சார். கூச்சப்படாம கேட்டு வாங்கிச் சாப்புடுங்க
இது ஒங்க வீடு மாதிரிம்பேன். அதே மாதிரி தான் நடந்துக்கவும் செஞ்சாரு.''
சாப்பிட்டு முடித்து எல்லோரும் வேப்பமர நிழலில் கட்டில் போட்டு உட்கார்ந்தார்கள். துரைராஜ் சார் சொன்னார்,
"கடசீல எங்களுக்கெல்லாம் புரிஞ்சு போச்சு... சாரை
வண்டியேத்தி
ஒங்க ஊருக்கு அனுப்பறப்போ எல்லோரும் பஸ் ஸ்டாப் வரையிலும் வந்தோம். சங்கிலிமுத்து சார் தான் கூடக்கௌ பினாரு. அப்ப நாங்க நாங்க எல்லோரும் சார் மொகத்த பார்த்தோம்.
அப்படியென்ன நெனச்சாரோ தெரியல. அவரும் எங்களையெல்லாம் வெறச்சு வெறச்சுப் பாக்குறாரு. எங்களுக்குன்னா ரொம்ப கவலயாப் போச்சு. எங்க சார மறுபடி உயிரோட பாப்பமான்னு நெனச்சேன்.
கண்ணுல தண்ணி ஊற ஆரம்பிச்சிட்டுது.
அத
சாருக்குத் தெரியாம மறைக்கனுமேன்னு துண்டால மொகந் தொடைக்கற மாதிரி தொடச்சிக்கிட்டேன்.''
துரைராஜ் சாரின் விழிகளில் இப்போதுங்கூட லேசான மினுமினுப்புத் தென்பட்டது. வேட்டித் தலைப்பினால் துடைத்துக் கொண்டு அமைதிப்பட்டார். பின் சங்கிலி முத்து சாரும், போஸ்ட்மேன் சம்சாரமும்
கமலத்தம் மாளும், கோயமுத்தூர் அத்தையும் அவரவர்க்குள்ள நினைவுகளைச் சொல்லத் துவங்கினர். எல்லோருக்கும் அப்பாவைக் குறித்து எவ்வளவோ விஷயங்கள் நினைவி லிருந்தன.
பிறகு எல்லோரும் அவனைச் சுற்றி உட்கார்ந்தார்கள். துரைராஜ் சார் பேப்பரும் பேனாவுமாக கணக்குப் போடத் தொடங்கினார். அப்பா இறந்து போனதனால் கிடைக்கிற பத்தாயிரம் ரூபாய், பிராவிடன்ட் தொகை, கிராஜிவிட்டி, இன்சூரன்ஸ் தொகைகள் எல்லாவற்றையும் கணக்குப் போட்டார்கள். அதோடு அப்பா ஊர்க்காரர் களிடமும், ஆசிரியர்களிடமும் பட்டிருந்த கடன்களையும் கணக்கிட்டார்கள். சங்கிலிமுத்து சார் எல்லாவற்றையும் டைரியில் குறித்து வைத்திருந்தார்.
ப்து
கடைசியில் எல்லோரிலும் மூத்தவரான சங்கிலிமுத்து சார் சொன்னார்,
வர்ற
'தம்பி, அப்பாவோட பணமெல்லாம் வந்தவொடனே
மொதல்ல கடனெல்லாம் அடச்சிடுங்க. பணத்தை பொறுப்பாப் பாத்துச் செலவு பண்ணுங்க.
தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வையுங்க மொதல்ல... அப்புறம் அம்மாவை பத்திரமாப் பாத்துச்குங்க. அவங்க மேலதான் உரு ராயிருந்தாரு ஒங்கப்பா... நீங்களும் ஏதோ ஒசு பொண்ணப் பாத்துக் கல்யாணத்தப் பண்ணிக்கப் பாருங்க... எப்படியோ பொளச்சு அப்பா பேர எடுத் தாக வேண்டியது ஒங்க கடமையில்லையா?''
எல்லோருமாய் அப்பா குடியிருந்த வீட்டைப் பார்க்கப் புறப்பட்டார்கள். அப்பா குடியிருந்த வீடு ரொம்பவும் சின்னது. நாலைந்து மாசமாய்ப் பூட்டிக்கிடந்த வீட்டில் தூசியும், பூச்சிக் கூடுகளும் மண்டிக்கிடந்தன. ஒரு விதமான புளுக்கமான காற்றும் மட்கிய வியர்வை வாடையும் வீசிற்று.
சுப்பிரமணியம் சார் சொன்னது போலதான், சாமான்கள் ஒன்றும் அதிகமில்லை. உடுத்திக் கொள்ள ரெண்டு வேட்டியும் (பழையதாகிப் போனதும் கிழிந்து தையல் போடப்பட்டதுமான எட்டுமுழ வேட்டி ஒன்று, புதியதும் சலவை செய்யப்பட்டதுமான நாலுமுழ வேட்டி இன்னு மொன்று) இரண்டு சட்டைகளும், அண்டர்வேர்களும் துண்டுமருந்தன. அப்புறம் சில அலுமினியப் பாத்தி ரங்கள். ஒரு ஸ்டவ் அடுப்பு, ஒரு தகரப்பெட்டி, பாய், தலையணை, போர்வை இவ்வளவுதான் அப்பாவி: னறையில் இருந்தவை.
தகரப்
பெட்டியில் அப்பாவின் சர்ட்டிபிகேட், ஒரு பஞ்சாங்கம், அப்பாவுக்குக் கருங்கல்பாளையம் மச்சான் கொடுத்த டயரி, அப்பாவுக்கு வந்த கடிதங்கள் ஆகியன
இருந்தன. டயரியில் நிறையப் பக்கங்கள் காலியாகக்
கிடந்தன. இந்த வருஷம் டயரி எழுத அப்பாவுக்கு வாய்க்கவேயில்லை. கடிதங்களை எத்தனையோ வருஷங் களாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார் அப்பா. அப்பா, அம்மா எடுத்துக்கொண்ட பழைய போட்டோ ஒன்றும்
இருந்தது. தவிர, தாத்தாவும் அப்பாவும் ரொம்ப வருஷங்களுக்கு முன்பே சேர்ந்தெடுத்துக்
போட்டோ
'கொண்ட ஒன்றுமிருந்தது. அதிலிருக்கிற
அதிலிருக்கிற அப்பா இளமையுடனும் அழகுடனுமிருந்ததைப் பார்த்துச் சந்தோஷப்பட்டான். அந்த போட்டோவில்
உள்ள அப்பா இவனைப் போலவும் தாத்தா அப்பாவைப் போலுமிருப்பதாய் சுப்பிரமணியம் சார் சொன்னார்.
அப்பாவின் சைக்கிள் காற்றுப்போன நிலையில் கிடந்தது. வீட்டுக்காரருக்கு அப்பா தரவேண்டிய வாடகை பாக்கிக்காக அந்த சைக்கிளை அவருக்குக் கொடுத்தான். மீதியிருந்த சாமான்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டான். வேட்டியிலும் சட்டையிலும் அப்பாவின் வியர்வை வாடை இருக்கும். ஒவ்வொருவர் உடம்புக்கும் ஒரு தனி வாடை உண்டே. அப்பாவுக்குரிய உடம்பு வாடை அவரது துணிகளில் இருக்கும். அந்தத் துணிகளைத் துவைக்காமல் அப்பாவின் உடம்பு வாடையைப் பாதுகாத்து வைக்க வேண்டும். பாத் திரங்கள் அப்பாவின் எச்சில்பட்டவை. அப்பாவுக்கு வந்த கடிதங்கள் அப்பாவின் வாழ்க்கையைப் பற்றி நிறையச் சொல்லும்.
சுப்பிரமணியம் சாரைத் தவிர மற்றவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க விடைபெற்றுப் போயினர். சுப்பிரமணியம் சார் மட்டும் பஸ் நிறுத்தம் வரையிலும் வந்தார். சுப்பிரமணியம் சாருக்குப் பிற ஆசிரியர்கள் மேல் ரொம்பக் கோபம்.
"பார்த்தீங்களா தம்பி, இப்படி ஒங்களை ஒத்தையில நிக்க வச்சிட்டு அவுங்கவுங்க பாட்டுக்குப் போயிட் டாங்க... நாளைக்கு அவங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா கடசிவரையிலும் இருக்க மனசு
வருமா...? எல்லோரும் வாயிலதான்
வாயிலதான் சர்க்கரைய
வச்சுக்கிட்டுப் பேசுவாங்க...?" T_"
"அதனால என்னங்க சார், பரவாயில்லை...?''
மீதி
அவன் எவ்வளவோ சொல்லியும் கூட அவர் பஸ் வருகிற வரையிலும் அவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந் தார். பஸ் ரொம்ப நேரத்துக்கப்புறமே வந்தது. அது வரையிலும் சலிப்பின்றிக் காத்திருந்தார்.
அவர் மட்டும் இல்லாதிருந்தால் பஸ்ஸில் மூட்டையை ஏற்றுவதற்கு ரொம்ப சிரமப்பட்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் அம்மாவிடம் சொன்னபோது அம்மா ஒரு விஷயத்தைப் பேச்சுப் போக்கில் அவனிடம் சொன்னாள். கடைசிக் காலத்தில் சுப்பிரமணியம் சார் அப்பாவோடு சண்டை போட்டுக் கொண்டாராம். இதனால் அப்பாவும் அவரும் ரொம்ப நாட்கள் பேச்சு வார்த்தையின்றி இருத்தார்களாம்.
- 1984.
**************************************
ஒரு அனுபவம்
'மீதி'
திசைகளெங்கும் சப்தக் கங்குகள் வெடித்துச் சிதறிய நவீன இலக்கியக் கூட்டமொன்றில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது! 'இவர்தான் தேவிபாரதி' என்றார் தவமணி. ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து உரசிக்கொண்டன பார்வைகள். அவர் விழிகளில் ஒளிப்புழுதி எனது உள்ளங்கையில் அன்பின் ஈரம் கசிந்தது. சற்றைக்கெல்லாம் நாங்கள் நவீன இலக்கியத்தைக் கதைத்தோம். இந்த நிகழ்வு எந்நேரம் வரை நீடித்ததோ, மேடையிலிருந்து அழைப்பு.
மேடையில் தேவிபாரதி, சட்டென சொற்களுக்கு சிறகு முளைப்பதை உணர்ந்தேன். அந்த மண்டபம் முழுவதும் உளியின் செதுக்கல்களில் அதிரும் ஓசை உருண்டோட ஆரம்பித்தது. காற்று உரத்து வீசுகை பில் காலங்காலமாய் திறவுபடா கதவுகள் உடைத்துத் திறந்தன. சட்டென சூல்கொண்ட மேகம் அதிர்ந்து மின்னலும் மழையும் இருதயத்தில் பொழிந்தது.
பிரளயம் ஓய்ந்து ஈரமண்ணின் வாசனையாய் அவர் அழைப்பு, "வீட்டுக்கு வாருங்கள், 'காம்யு'வின்
'அந்நியன்' தருகிறேன்."
வீட்டிற்குப் போனோம். வீட்டில் உறவினர் கூட்டம். அவர் அப்பாவின் ஈமச்சடங்கு நடந்து கொண்டி ருந்தது.
“அம்மா செத்துப் போய்விட்டாள். செத்துப்போனது நேற்றாகவும் இருக்கலாம்; அதற்கு முன்னராகவும் இருக்கலாம்' என்றான் காம்யு.
முந்திய நாள் அவர் அப்பா இறந்து போயிருந்தார். அவரது அப்பாவை நான் பார்த்ததில்லை. வருடம் கழித்து இந்தக் கதையில் பார்த்தேன்.
ஒரு
-கௌதம சித்தார்த்தன்.
படிப்பகம்
Thursday, February 27, 2025
சந்திப்பு - தர்மூ சிவராமூ
சந்திப்பு
தர்மூ சிவராமூ
எனது நண்பனை நான் வரச்சொல்லியிருந் தேன். அவனை நான் சந்திப்பதாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னும் ஒரு மணித்தியாலமாவது ஆகும்; இப்பதானே ஆறரை?
இவ்வூருக்கு வந்தது பரீட்சை எழுத. ஆனால் அம்மா ஓரிரு உறவினர்களையும் - நான் முன்பின் சந்தித்தே இராத உறவினர்களையும் கண்டு தொடர்பு வைத்துக் கொண்டு வரும்படி சொல்லி யிருந்தாள். அவளுடைய கருத்திலும் பொதுவாக மற்றவர்கள் கருத்திலும் இந்தவகை விஷயத்தில் நான் கொஞ்சம் மந்தம். ஆனால் ஒரே பிள்ளை; உறவு கிறவு என்றிருப்பது பேருக்கென்றாலும் வேணும் என்பது அம்மாவின் கரிசனையில் பிறந் தது. வேண்டா வெறுப்பாக அவளுக்காக ஒருப் பட்டுவிட்டேன், இப்போது நண்பனை சொல்லிவிட்டுப் போவதில், அவனைக் காணும் ஆதாங்கம், என் திறமைக்கு மீறிய சம்பிரதாய மூறையிலன்றி, ஒரு உத்வேகத்துடனேயே அவர் களிடமிருந்து சீக்கிரம் என்னை விடுவிக்கும் என நினைத்தேன்.
வரச்
முதல்நாளே பரீட்சை எழுதிவிட்டபடியால் தலைநகரில் வந்து மாட்டிக் கொண்ட நண்பர்களு டன் அளவளாவுவதற்கு மனம் பறந்தது. பரீட்சை எழுதுவதுதான் என்ன, கதை எழுதுவதுபோல் தான் என் விஷயத்தில். 'மூ:ட்' சரியாக இருப்ப தைப் பொறுத்தது. பரீட்சிப்பவர்களும் விமர் சகரைப்போல் தான்; எனது 'மூஃட்' இருளில் தடு மாறி அகப்பட்டதைச் சுருட்டி வந்து அவர்க ளிடம் பிடிபட்ட என் திருட்டுச் சொற்கள் போலவே பரீட்சைத் தாள்களும் பரீட்சிப்பவர் களிடம் அகப்பட்டு முழிக்கப் போகின்றன... எண் ணங்களின் டிசைன்கள் விசித்திரமாகின்றன என்று தென்பட்டதும் என்னை நானே வியந்து கொண்டேன்.. விந்தையான நினைவுகள் இவை எப்படி ஒருவித முன்னேற்பாடுமின்றி பிறக்க முடி கிறது? இதே நினைவுகள் மீண்டும் சுற்றி வந்து என் நண்பனுடன் பேசப்போகிற விஷயங்களுடன் சேர்ந்துகொண்டன. இவற்றோடு-இக் கண நேர நினைவுகளோடு இன்னும் எவ்வளவோ அவ னைத் திணறவைக்க ஏற்கெனவே இருக்கிறது. இப் போது அவனுக்குச் சொல்ல இருப்பவை மண மேடையில் தம்மைத்தாமே ஒத்திகை பார்க்கத் துவங்குகின்றன...அவ் ஒத்திகையின் அடியில் அவனை அவனுக்காகவன்றி நான் சொல்ல இருப் பவைக்காகவே சந்திக்கவேணுமென்ற ஆசை ஒரு நிர்ப்பந்தமாகிக் கொண்டிருக்கிறது.
நான் நினைவுகளில் தடுமாறி எங்கேயெல் லாமோ போய்க்கொண்டிருந்தேன். சில நினைவு கள் திகைப்பூண்டு போன்றவை, அவற்றில் மனம் பதித்தால் இக்கணம் - நிதர்சனம் - மங்கிவிடு கிறது. கானகத்துள் வழி தடுமாறியவனை நோக்கி வரும் அறிமுகமற்ற மரங்கள்போல் எண்ணங்கள் மட்டுமே எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கும் குறிப் பிட்ட விலாசத்தில் சிதறலாக மனிதர்கள் கூட் டம், அழுகுரல், என் அடையாளத்தை தடுமாறி சொல்லியபடி உரியவர்களிடம் அழைத்துக் செல் லப்பட்டது யாவுமே அளவற்ற மனோவேகத்தில் அள்ளுண்டு செல்லும் எனக்கு 'ஹோ'வெனச் சோனாமாரியாகப் பெய்யும் மழையூடே புலப் படும் ஒரு மங்கிய உலகில் நடப்பவையாயின் அது ஒரு மரணச்சடங்கு என்பதை நான் அறிந்தபோது நான் ஏன் ஒருவித விசித்திரத்தை யும் என் வருகையில் உணரவில்லை. நான் அங்கு அந் நிகழ்ச்சியில் கலக்கவே உத்தேசித்து வந்த ஒரு சாமானிய உணர்வுதான். என்னையறியாமலே இதை
எதிர்பார்த்திருந்தேனோ? எப்படியானாலும் நான் என்னால் சமாளிக்க முடியாத ஒரு சமூக நிர்ப்பந்ததத்துள் அகப்பட்டுவிட்டேன். என் வருகை பொருட்டற்றதாக ஆரம்பித்து வியாபிக் கும் ஒரு புள்ளிபோல் வட்டம் விரியத் துவங்கி யது.
இம் மனிதர்கள்-இவர்களுள் ஒருவருடம் நான்முன்னுறவு கொள்ளவில்லை எனவே இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிர். அவர்களது பார்வை கள் கணம் என் பார்வையைச் சந்தித்து, தடுமாறி என் முகத்தைத் துளாவிவிட்டு என்னுள் நுழை யும் பாதை புலப்படாது சறுக்கி விழுந்து அகலும் போது, அகலுமுன், அக் கணநேர கண் சந்திப்பில் அவர்களூடே ஒரு இருள் உலகாகவே அவர்கள் எல்லையற்று, அடத்தனமற்றுச் செல்கிறார்கள். ஒவ்வொரு முகமும் ஒரு பூமிபோல் கண்கள் குகை களாக இருண்டு உள்ளுருவற்றன. பூமியைத் துளையிட்ட குகைகள் திரும்பி வரமுடியாத பெரு வெளியில் பாய்வனபோல் அடையாளமற்ற அமானுஷ்யமாயின. ஒருவனை நாம் இன்னானெனக் காண்பதன் அசட்டுத்தனம் அறிமுகமற்றவன் முன்தான் புலப்படுகிறது. இன்னான் இத்தகைய வனென்று, அடையாளமற்றவனாயினும் பழகிய வனென்பதற்காகவேதானே கொள்கிறோம்? பழக் கமற்றவன் எப்படி தன்னை என் முன் காப்பாற்றி தன் அடையாள மின்மையை மட்டுமே காண் பிக்கிறான்!... நமது இறந்த காலம் என்ற ஒரே உறுதியையும் குலைக்கிறான்!
அவர்களிடையே நான் என்ன சொன்னேன், எவ்விதமாக என்னை அறிமுகப்படுத்தினேன் - இவ் விதமாகச் சொல்லியிருக்க வேண்டியது - இந்த - வார்த்தை - இவ்வகை இங்கிதம் என்பனவெல் கோமாளித்தனமானவைதான்
லாம்
எனத் தோன்றும்படி சூழல் மாறாட்டமாயிற்று? அங்கு ஒன்றுகூடிய மனிதர்கள் யாவரும் ஒரு குடும்ப மென, ஒரே உலகென கொள்வது வெறும் இறந்த காலமென்கிற உறுதியில்தான். அவர் களுடன் அவ்விறந்தகால உறவற்ற எனக்கோ, நானும் அவர்களுள் ஒவ்வொருவனும் ஒவ்வொருத் தியும் அநாதரவாய் தனித்து அறிமுகமற்ற பிற மனிதர்கள் தழைத்திருக்கும் கானகத்துள் வழி தடுமாறுபவர்களாயினோம். தம் பேச்சால் விசா ரணையால் இவ்வகையில் இன்னார் வழியில் என என்னுடனும் உறவு கொள்ள அவர்கள் முயல்வது தலையில் இரு இருள் குழிகளோடு, என்னை அங்கு மிங்கும் கைநீட்டித் தேடி, என்னையும், நான் நிற் குமிடம் தெரியாது வெறும் வெளியையும் தடவுவ தாய்த் தோன்றிற்று. சிலர், நான் நிற்குமிடத் தையும் தாண்டி கைகளை முன் நீட்டி உதடுகளற்ற கபாலச் சிரிப்புடன் வெளியைத் துளாவுவது நிம் மதியாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னைத் தம் விசாரணையினால் தடவிக் கண்டுகொண்டவர் களின் உறவுச் சொற்கள் என்மீது என்மீது புரள்வது பாம்புகள்போல்தான் அருவருத்தது.
நான் அவ்வீட்டின் அந்நிகழ்ச்சியின் மைய அச்சாகினேன். என்னைச் சூழ்ந்து ஒரு உலகு, மனிதச் சுழல் ஓயாது சுற்றுவதுபோல் அடிக்கடி பிரமை எழுந்தது. கண்ணில் என் வெறிப் பார் வைக்கு நேரே ஒரு முகம் வெளிறிச் சாம்பல் பூத்து உறைந்த பனிச் சிரிப்போடு நின்றது நின்றது தான். அச்சிரிப்பில் என் சுபாவ பயத்தின் எல் லையை நானே மீறிவிட்டேன் போலும், யாருமற்ற ஒரு இருள் வழியில்போல அச்சிரிப்பு, உருவற்ற ஒரு குளிர் காற்றாய் என்மீது மோதி என்னூடே வழிகண்டு ஓடி உள்ளுறைந்தது.
கொள்ளிவைக்கும் உறவு நெருக்கம் அதுக்கு நான் வரும்வரை இல்லை. நான் அங்கு அந்நிகழ்ச் சிக்கு என்றே உடல்கொண்டவனானேன். ஆம், உறைந்து கிடக்கும் அச்சிரிப்பு, நான் வைக்கும் தழலில்தான் உருகி ஓடவேண்டும்... எவ்வளவு காலம்... இதெல்லாம் எவ்வளவு காலம் கடந்தது? இதன் நிகழ்ச்சித் தொடரென்ன? என்பதெல் லாம், நிகழ்ச்சிக்கு அவசியமான தர்க்கப்புலம் இதற்கு இல்லாததால் தடுமாறி, என்றோ, எப் போதோ, தாறுமாறாக முன்பின் மாறி நிகழ்வ தாயின.
சிதையில் நெருப்பை மூட்டிவிட்டு அவர்கள் சொன்னபடி திரும்பிப் பார்க்காமலே கெளர வித்து விலகும் மனிதர்களூடே நான் வந்துக் கொண்டிருக்கிறேன். ஆம், நான் சுடுகாட்டி னூடே நடந்து கொண்டிருக்கிறேன். அந்தரங்க மாக மனம் சிக்கிக்கொண்டது, வெளிப்படையில் நான் அச்சமூக நிர்ப்பந்தத்திலிருந்து விடுபட்டா லும்... அந்தச் சிரிப்பு, என் தழலில் உருகிவிட் டாதா? உருகத் துவங்குகிறதா?... உருகி ஓடியது என் இதயத்தைச் சுற்றிய சர்ப்பமாகிவிட் டதா?... நான் சிக்கிக் கொண்டேன்
பூரணையை அணுகிவிட்ட சுக்கில பக்ஷத்து நிலவில் பூமிமீது அடர்ந்த செழிப்பான பசும்புல் சாம்பல் பூத்தது. விருட்சங்களிலிருந்து உதிர்ந்து காற்றில் அள்ளுண்டு வழியில் திட்டுத் திட்டாக கிடப்படை சாம்பல் பூத்த பிண உதடுகளாக நிலத்தில் பூத்திருக்கின்றன. அவற்றில் உள்ளங் கால்கள் பட்டதும் என் மிதியில் நசிந்து நெளியும் தசைகளாயின. உடலூடே எனக்கு உணர்வு குளிர்ந்தது. அருவருப்புடனேயே ஒவ்வொரு காலடியையும் நிலத்திலிருந்து எடுத்தேன். என் னுள் உருகிய சிரிப்புக்களின் ஊளை ஓட்டம்... எதிரே நிலத்தில் இப் பிண உதடுகளிலிருந்து ஓயாது பாயும் மௌன ஊளையை பொத்தி மறைக்க என் பாதச் சுவடுதானா? ஏன் இப்பாதங் கள் பூமியிலிருந்து பெயர்ந்து எதிரே நீண்டதும் அப்படியே வெறும் வெளியில் என்னை ஏற்றிச் செல்லலாகாது? வெறும் வெளியில் பார்வைக்குப் புலனாகாது படிக்கட்டுகள் இருக்கின்றன. அதில் மிதித்து ஏறி ''ஊ' வென்று குவிந்த உதடுகளை மிதிக்காது தப்பித்துவிடுவேனென காலை வைப் பேன். ஆனால், படிக்கட்டு இல்லை. அது இனித் தான். இப்போது-இந்த-இது! பாதங்களை ஊடுருவி உடலூடே ஒரு கூக்குரல் பாய்கிறது. உறவு. அந்த அதன் உறவு .. ஆம் ஒவ்வொரு அடிச்சுவட்டினூடேயும் சுடுகாட்டில் தன் லையை வந்தடைந்த இச் சவம் என் தழலில் உரு கிய பனிச் சிரிப்பை இவ் ஊளையில் சேதி சொல் லியபடியே இருக்கிறது. எதிரே மிதிப்பது இன் னொரு தடவை கேட்கவேதான்... படிக்கட்டில்லை, தப்பு தலில்லை...எதிர் காலம்-எதிர் கணம்-படிக் கட்டு தப்புதல் ஒளியைத் தேடி மரத்தைத் துறந்த, பறவைகள்போல் இருளில் நினைவுகள் குறியற்றுப் பறந்தன. நான் நடந்தேன்.
நண்பனைச் சந்திக்க மனம் விரும்பவில்லை; குறியற்று தெருக்களிலேயே இரவு வெகு நேரம் திரிந்தேன்... இரவு மடிந்துவிடவில்லை. அதனூடே குரல்களும் மடியவில்லை. இரவு எட்டி, எட்டி, பூமியை வளைத்து ஒண்டுகிறது, ஒளிகிறது. சந்திர ஒளி ஒரு புலம்பலைப்போல உலகின்மீது படர் கிறது. விட்டுவிட்டுக் கேட்கும் தெரு நாய்க் குரைப்பு நிசப்தமான இரவுக் குளத்தின்மீது ஏறி யப்பட்ட கற்களைப்போல் விழுந்து, ஓய்வதற்காக விரியும் சப்த அலைகளாயின. குளிரான குளிரான காற்று தென்னங் கீற்றுகளூடே மழைத்துளிகள் உதிர் வது போன்ற ஒரு ஒலியை எழுப்பியபடி தன் போக்கில் இயற்கையுடன் தொடர்பற்று இயங் கும் தோரணையில் ஒரு பழக்கத்துக்குக் கட்டுப் பட்டு ஊர்ந்து ஊர்ந்து இலைகளை அசைத்துவிட்டு தெருக்களில் திசையற்று நுழைந்து மறைகிறது. புதிய காற்று, தூரத்தில் அணுகும் பெருவெள்ளம் போல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அணு யதும் வேகமிழந்து ஊர்ந்தே செல்கிறது. அடிக் கடி வெகு வெகு தூரத்தில், இரவுக்கும் அப்பால், வான எல்லையில், அமானுஷ்யமான கையொன்றால் உருவப்பட்டு மின்னல்கள் தோன்றி மறைந் தன, நிசப்தமாக.