Pages

Tuesday, April 29, 2014

ஆலன் கின்ஸ்பெர்க்கின் நினைவு கவிதை

நினைவு - ஆலன் கின்ஸ்பெர்க்
(மொ.பெ - பிரமிள்)

பாரிஸ் நண்பன்
வஷேல் லிண்ட்ஸேக்கு :
நட்சத்திரங்கள் புறப்பட்டுவிட்டன, வஷேல்.
அமெரிக்காவின் கொலராடோ தெருவில்
அந்தி இருள் கவிகிறது.
வெற்று வெளியினூடே
மெதுவாக ஊர்கிறது ஒரு கார்.
காருக்குள்,
ரேடியோவின் ஜாஸ் இசை அலறல் ;
மங்கிய ஒளியில்
மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறான்.
காருக்குள் இருக்கும் வியாபாரி.

இன்னொரு நகரின் 25 ஆண்டுகளுக்கு முன்
ஒரு சுவரில் உனது நிழலைக் காண்கிறேன்.
படுக்கையில்
நீ அண்டர்வேருடன் உட்கார்ந்திருக்கிறாய்.
நிழலின் கையில் ஒரு கைத்துப்பாக்கி-
அது உன் தலைக்குக் குறி வைக்கிறது.

உன் நிழல் தரையில் வீழ்கிறது.