Pages

Wednesday, May 21, 2014

விஸ்வ ரூபம் - நாரணோ ஜெயராமன்

விஸ்வ ரூபம் - நாரணோ ஜெயராமன் 

வியாபீ !
அடையாளங்கள்
சாசுவதமல்ல !
- சுவர் இடிந்தால்
செங்கல்; மண் !
ஏரி புரண்டால்
கரை எங்கே ! -
நிதர் சனங்கள்
சிலந்தி மூளை
சுவாசிக்க மறந்து
கற்பித்தவை !
தீக்குச்சி உராய்வில்
உலை கொதிக்க
கும்பிக்குக் கூழ் !

இது போல
இன்னும் பல
உனக்கும், எனக்கும் பொது !
நிர்வாணமாகு,
மூர்த்தண்யம் காட்டு !

- உன்னதம் - 5, ஜனவரி 1996

விமானம்
https://www.facebook.com/riyas.qurana/posts/913952345301519

ஏதோ,
ஒரு மூலையில் உக்கிரமாய்
உதிக்கிறாய்.
பகலில்,
உன் கழுகு நிழல்
உன்னை மீறி மைதானம் ஏகுகிறது.
இரவில்,
உன் சிகப்புப் பின் விளக்கு
வட்டமாய், பின்னர் சிறிய பொட்டாய்
போக்கு காட்டி,
ஒற்றைப் பனைமரத்தின் விசிறித் தலைக்குள்
உன்னைச் சிறிது ஓளிக்கிறது.
எப்பொழுதானாலும்,
சரியும் இடியின் ஓசையாய்
ஓங்காரம் ஒடுங்க,
வெளியில் விடுதலை பெறுகிறாய் - எங்கோ
மீண்டும் இறங்கி
இன்னொரு ஜனனத்திற்கான ஜடமாகிறாய்.
@ நாரணோ ஜெயராமன்