Pages

Thursday, July 17, 2014

அதுவாகும் நீ - பிரம்மராஜன்

அதுவாகும் நீ - பிரம்மராஜன்

நீ அது ஆகிறாய்
ஆம் அது நீயாவாய்
ஆனாய் அதுவாய் நீ
நீயே உனது மொழி
நிகர் என்றும் மொழியே உன்
பொருளாய்ப் பலவாய் மொழிந்து
பொருளே சொல்லாய் ஒன்றினுள்
என்றும்
அதன் பொருள்
யானே உனது நீ
அது நான் ஆனேன்
ஊனே உருகிய உள்ளத்துள்
ஆனாய் அது வாய் இனிமை
பொய்க்கலப்புடன் மெய்கலந்ததுவாய்
கை கலந்தும் வாய் கலந்தும்
சிரம் பற்றி
சிந்தை பற்றாது
நின்றவராய்
சென்றதென் மெய்வாய்
உன்றன் பொய்வாயுடன்
குழல் கடந்தேகத் தடங்கிய
குளத்துள் மெய்
யாகவிருந்தோம்
மெய் கலவாது
சற்றும்