Pages

Monday, January 04, 2016

இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, - - பிரமிள்

Kaala Subramaniam added 2 new photos.

6 hrs ·

வேலூர் அருகிலுள்ள கரடிகுடி கிராமத்தில் 6.1.1997ல் மறைந்த பிரமிளின் சமாதி. 19ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று.





Kaala Subramaniam commented on this.

Thuraiyur Saravanan
16 hrs · ‎Monday, ‎January ‎4, ‎2016

இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி,
நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள்,
சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள்.
பஸ்கள்,
பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராக்ஷஸ சொரூபமான கட்டிடங்களினிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,
எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி,
கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய்,
மறையும்,
நண்பர்கள்.
இவையாவும் பிரத்தியட்சம் ...


- பிரமிள்



Kaala Subramaniam எதில் உள்ளது?

Like · Reply · 1 · 4 hrs


Thuraiyur Saravanan ”கண்ணாடியுள்ளிருந்து” கவிதை தொகுப்பில் உள்ள “தர்சனம்” கட்டுரையில் உள்ளது. படிப்பவர்களுக்கு வசதியாக வரிகளைப் பிரித்துப் பகிர்ந்தேன்...

Like · Reply · 1 · 3 hrs


தஞ்சை தவசி என் ஆவியை
உங்களுக்குள் வைப்பேன்...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனத்திற் கண்
மாசிலனாதல்
மனிதநேயம் வாழ்தல்...
தானே தன்னில்
மடைமாறுதல்தான்
விடுதலையாதல்...
கொடுப்பது அழகு
பங்கிடுவது அற்புதம்
உறைந்திருக்கும்
புனிதத்தை அன்பின்
ஒருகை ஓசை
உருகவைக்கட்டும் "2016".
- தாயன்புடன்
தஞ்சை தவசி -

பச்சைக் கதை - பிரமிள்

கானகத்தினுள்
பசுமைச் சாறுபொங்க
துடிக்கிறது
“அல்ல, அல்ல” என்ற உன்
சொல்லின் தாளகதி.

சற்றே நிழல்களுள் சரிகிறேன்,
வழிதடுமாறாத களைப்பு.
எதிர்வரும் என் வேளைகளினுள்
உன்னைச் சிறைபிடிக்கின்றன
தீர்க்க தர்சனங்கள்.

தளிரே - என் மன எலும்பு
உன்னகத்தில் கிளைபடர
இலைமுகம் கொள்கிறாய் நீ.
நாம் எதிலும்
மறைமுகப்பொருள்களை
சர்ச்சிக்க வேண்டாம்.
எது மறை பொருள்?
இந்த உருகிய மறுப்புகளின்
உரம்தான் - அவ்வுரம்
உன்னுள் என்கிளையின்
பணியாத பக்திகளாகட்டும்
பளுவற்றுச் சிறுசிறு
பச்சைச் சிறகுகளில்
எழுந்து தத்தளிக்கட்டும்.

சிறகுகளில் சில
துடிப்பு அணைந்து
மண்வண்ணமாகும்
வீழும்.. வீழினும் உரமாகும்.

மீந்திருப்பவற்றுள்
விளைகின்றன புதர்த்தீ இருள்கள்
உணவுகள்
விஷங்கள்
முட்கள்
முட்கள்
ஸ்தாவர மான்களும் புலிகளும்.

நகங்கள் என்னைக் கிழிக்கின்றன
ஆயின் உன்
மூலிகை இலைக்கண்கள்
சிகிச்சையளிக்கின்றன.


Piramil facebook

January 17, 2014 ·

தர்சனம்

புதுக்கவிதை என்ற பெயர் தற்காலீகமானது. கவிதையின் பெயர் கவிதையே. இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள்; செய்யப்பட்டவை. கவிதை எல்லாவகையான சொற்களையும் உதறுகிறது.நிதர்சனத்தில் திளைக்கிறது. யாப்பு என்ற திட்டமிடப்பட்ட உருவத்தை துறக்கும் கவிஞன் ஒரு புதிய உருவை நாடி இத்துறவை மேற்கொள்ளவில்லை.நிதசர்ணத்தை உணராத செய்யுள் வாதிகள், யாப்பு என்ற உருவில் ஒரு சௌகர்யத்தைக் கண்டு அதன் கதிக்குள் இயற்கைப் பொருள்களின் வர்ணனைகளையும், சாமான்ய மனிதனுக்குக்கூடத் தெரியும் அற முறைகளையும் அதீதமானவை என்று பிரமை காட்டி எழுதினர். இவர்கள் ஆழ்ந்த வாழ்வின் அதீத ரகசியங்களையோ மானுஷ்ய தர்மங்களையோ உணராதவர்கள். பிரத்தியட்சத்தின் மீது காதல் கொண்ட மனிதன் செய்யுள் வாதியிலிருந்து உயர எழுந்து ஸ்தூல நிதர்சனங்கள் வாழ்வின் அதீத ரகசியங்களுக்குக் குறியீடுகளாக, தார்மிக சக்திக்கு உரமாகக்கண்டான். போலி வர்ணனைகளையும் போலி தர்மங்களையும் துறந்தான். அந்தத் துறவோடு உடனிகழ்வாக யாப்பையும் துறந்தான். கவிதை தமிழில் புனர்ஜன்மம் பெற்ற கதை இது.

வசனத்தை உடைத்துப்போட்டு கவிதையை சாதித்துவிட முடியாது.

இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள், சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள். பஸ்கள், பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராஷஸ சொரூபமான கட்டிடங்களிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி, கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய், மறையும் நண்பர்கள். இவையாவும் பிரத்தியட்சம்.

யாப்பின் கதிக்கு இந்த பிரத்தியட்சத்தில் இடமேது? எமது இன்றைய பிரக்ஞையின் இந்த சீரற்ற ஒரு புதிய தன்மையில் யாப்பு அங்கதத்திற்கே உதவும்.

In the room women come and go Talking of Michelangelo

என்ற வரியிலும்

I grow old, I grow old
I shall wear the bottoms of my trousers rolled

என்ற வரியிலும் சப்தம் அதீத உணர்வுக்காக உபயோகமாகவில்லை. கேலிக்கு அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று.

பண் என்பார் பாட்டென்பார்
கண்ணைச் சொருகிக் கவியென்பார்
அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?

என்ற யாப்புருவம் கேலிக்கே -- அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று. ஏனெனில் எமது பிரக்ஞையின் கதியில் இன்று அன்றைய சாவதானம் இல்லை. எனவே சாவதானத்தில் விளைந்த யாப்பு எமது பிரக்ஞையின் நடுவே நிகழும் போது அங்கதமாகிறது. பழைய வாழ்வின் கதியையோ, நாம் அதன் யாப்புருவோடு சேர்த்தே பருகுகிறோம்.



வேலையாகப் போயிருந்த இடத்தில், இறக்குமதி ஏற்றுமதி மோசடிகள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பொறி வைத்துப் பிடித்த சம்பவங்கள் பற்றியெல்லாம், மூடிய அறைக்குள் ஓரிருவர் முன் சற்று விவரிக்க நேர்ந்தது. அவர்களுள் வழியனுப்ப வந்த இளைஞர் ஒருவர், அக்கம் பக்கம் பார்த்தபடி, ரகசியம் காத்தால் போதும், 'என்ன' வேண்டுமானாலும் செய்யவும் 'எதை' வேண்டுமானாலும் எடுத்துக் கொடுக்கவும் தயாராய் இருப்பதாய்க் கூறினார்.

3. கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது. 
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. 
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி அதை நெருக்கிப்போட்டது. 
8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது. 
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார். 
-மாற்கு 4:3-9 தமிழ் பைபிள் 

14 The farmer sows the word. 
15 Some people are like seed along the path, where the word is sown. As soon as they hear it, Satan comes and takes away the word that was sown in them 
16 Others, like seed sown on rocky places, hear the word and at once receive it with joy.
17 But since they have no root, they last only a short time. When trouble or persecution comes because of the word, they quickly fall away.
18 Still others, like seed sown among thorns, hear the word; 
19 but the worries of this life, the deceitfulness of wealth and the desires for other things come in and choke the word, making it unfruitful.
20 Others, like seed sown on good soil, hear the word, accept it, and produce a crop—some thirty, some sixty, some a hundred times what was sown.

Mark 4:14-20 New International Version (NIV)
 http://tamil.thehindu.com/general/literature/கவிதையின்-புது-வெளிச்சம்/article8088908.ece
ஜனவரி 6 - பிரமிள் நினைவு நாள்
 

கவிதையின் புது வெளிச்சம்

பிரமிள் என்று அழைக்கப்பட்ட தருமு சிவராமு கவிஞர்களால் வியந்து பார்க்கப்பட்டவர். உலக இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் நன்றாக அறிந்தவர். நவீனக் கவிதை குறித்து அவருக்கேயான ஒரு பார்வை இருந்தது. விமர்சனக் கவிதைகளை அதிகம் எழுதியவர். கவிஞர்களில் அதீத உணர்வாளர் என்று பிரமிளைத்தான் சொல்ல முடியும்.

அடிமனம்

முட்டித் ததும்பியென்ன?/மாலையில் பகல் வடிகிறது/ஒளி ஒதுங்கி இரவாகிறது/கதிர்/எங்கோ சொட்டி/விளைந் தன தாரகைகள்,/பகலின் துளிகள்./என் மன அகலிகையின்/நிறைவின்மை முடிவுற்று/வாழ்வு கரவாகிறது

கவிதையின் ஆரம்ப வரிகள் வண்ணங்கள் தெறிக்கும் கித்தானாக அதிர்கின்றன. நிறங்கள் வடிவமாகி உயிர் கண்டு முடிவில்லாத வெளியில் அலைகின்றன. இதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் புதுப்பிக்கப்படுவது கவிதையால் நிகழ்கிறது.

இவரது கவிதையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். கவிதையின் அழகியலை ஒவ்வொரு வார்த்தையிலும் பார்க்கலாம். கவிதை எதைப் பேசுகிறது என்றும் பார்க் கலாம். பிரமிள் தனித்து ஒளிர்வது அவருக்கேயான கவிதை ஆக்கத்தால் என்று சொல்லலாம். ‘முட்டித் ததும்பியென்ன’ என்று பரிதியை விளிப்பது, ‘மாலையில் பகல் வடிகிறது’ என்று இயற்கையின் அன்றாடத்தைக் கவிதைக்குள் கொண்டுவரும் அழகு இவருக்கேயான மொழி.

பின் வருகிற ஒவ்வொரு சொல்லும் உடலின் அங்கமாக மாறிவிடுகிறது. கவிதையை வாசித்து முடிக்கும்போது ஆரம்ப வரிகள் வேறு பொருள் தந்து கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. ததும்பி வடிந்து என்ற சொற்கள் பரிதிமீதும் அது வினைப்படுகிற வெளிமீதும் படிகின்றன. ‘கதிர் எங்கோ சொட்டி விளைந்தன தாரகைகள்’ என்று வாசிக்கிறபோது மனமே மலராக விரிகிறது. ‘மன அகலிகை’ என்னும் சொற் சேர்க்கையை பிரமிள் தெரிந்தே செய்கிறார். நிறைவின்மை, கரவு என்ற இரண்டுச் சொற்களில் மையம் கொள்கிறது கவிதை. தொன்மத்தை நிகழ்காலத்துக்குக் கடத்துகிறார். மனித மனத்தின் வினையாக மாறுகிறது அகலிகையின் கதை.

இனி என்ன?

கோதம உக்கிரத்திற்கு/ஒரு போலி/போலிப் பரிதி/ஒரு போலி வைகறை

போலிப் பரிதி, போலி வைகறை என்கிற வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். இங்கே காட்சியாகும் போலி முற்றிலும் மனதோடு தொடர்புடையது. எது சரி என்ற கருத்தைப் பேச வரவில்லை பிரமிள். உணர்வின் பெரு வெள்ளத்தைக் கவிதை எங்கும் ஓட விடுகிறார்.

உதிக்கிறது எங்கும் ஒரு/திருட்டுத் தெளிவு/இந்திர நிலவு/பாதி தெளிந்து/ஆடை களைந்து/வெளிர்கிறது மனவெளி/ஒலியற்றுச் சிரித்து/மனம் பதைக்கும் புணர்ச்சிக்கு,/தனித்து,/வெறிச்சோடிய தெருவெங்கும்/அழுகி வடியும் விளக்கின்/வாழ்த்தொளி/இது நிகழ்ந்த சமயம்/இடமற்ற/மனோவேளை

மொழியைக் கவிதையே ஆள்கிறது. தெரிந்த பழக்கமான சொற்கள் நாம் அறிந்த பொருளில் இல்லை. பரிதி, நிலவு இந்த இரண்டும் கவிதைக்குள் வேறு வேறு உருவங்கள் காண்கின்றன. ‘திருட்டுத் தெளிவு / இந்திர நிலவு’ இந்த வரிகளில் குவியும் உணர்வுகளை மென்று தீராது மனம். நாம் அறிந்த கோதமன், இந்திரன், அகலிகை மூவரும் கவிதைக்குள் அடி மன வினைகளாக மாறுகிறார்கள். மனித மனத்தின் ரகசியக் கதவுகள் கவிதைக்குள் திறக்கப்படுகின்றன. உள்ளே நுழையும் வாசகன் யாருடைய உதவியுமின்றி உரையாடலாம். எல்லாமும் இடமற்ற மனோவேளையின் எண்ண அதிர்வுகள்.

அறியாத வலியைப் பற்றிய கவிதைகள்

பிரமிளின் சில வரிகளின் சொற்கள் அந்தக் கணம் பிறந்த ஈரத்தோடு இருக்கும். இன வலியைப் பேசுகிற அவரது ஆறு கவிதைகள் முக்கியமானவை. “கடல்களைத் தாண்டிக் கேட்கிறது / வீறிட்ட சிசுக்குரல், / காப்புடைந்த பெண்ணின் கதறல், / கனன்றெரியும் வீட்டின் குமுறல்” இப்படித் தொடங்குகிறது ஒரு கவிதை. ‘மரணம் மட்டுமே என்ற பின் மரணம்தான் என்ன?’ என்ற கேள்வியை வைக்கிறது கவிதை. 100 ஆண்டுகளின் துயர வரலாற்றில் நாம் அறியாத வலியின் இடங்களைப் பேசுகிற கவிதைகள். வலியும் வீரமும் கலந்த வார்த்தைகள்.

மனித வர்க்கத்தின்/மனச்சாட்சியினுள்/பாய்கிறது அதன்/உதிர நதித் துடிப்பு

இப்படியான வரிகள் ஏராளம். வலியை அனுபவித்த மக்கள் மட்டுமே எழுத முடிகிற எழுத்து. இச்சூழலை உதவியற்ற அமைதிப் பிராந்தியமென்கிறார் பிரமிள். இவரது வார்த்தைகளுக்குப் பயந்து சமூக மனம் ஓடி ஒளிகிறது.

‘குழந்தமை கற்பிழந்து / பயங்கரம் முதிர்கிறது’. இந்த வார்த்தைகளை மனித குலம் வாங்க முடியுமா? ஒவ்வொரு வார்த்தையும் இணைந்து விரிகிற வெளியில் உலகம் வெட்கப்பட்டு மறைவிடம் தேடுகிறது. தமிழ் ஈழப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து தனி மனிதத் துயரங்களைப் பேசுகிற வார்த்தைகள். அதே கவிதையில் இன்னொரு வரி, ‘உலகின் ஊமைச் சட்டங்கள்’ என்கிறபோது மனித நாகரிகம் அம்மணமாகத் தெருவில் நிற்கிறது. இலங்கையின் இனப் படுகொலையை இவர்போல கவிதையில் சித்தரித்தவர் யாருமில்லை. ‘இருபத்திநாலு மணிநேர இரவு’ என்ற கவிதையின் ஒவ்வொரு வரியும் இந்தியத் தமிழ்க் கவிதைக் காணாதவை. நாம் அனுபவித்திராத கவிதானுபவம்.

பிஞ்சுக் கை பிடித்த/துப்பாக்கி இரும்பில் மட்டும்/நட்சத்திரங்களின்/ஒளிக் கண்ணீர்த்துளி ஒன்று/உதயத்தை நோக்கிப்/பிரவஹிக்கிறது நெருப்பாக

இனப் போராட்டம் குறித்த உலகின் ஆகச் சிறந்த கவிதைகளில் பிரமிளின் கவிதைகளுக்கு இடம் உண்டு. வாழ்வை முழுதாக இழந்து தவிக்கிற சூழலில் இந்த வரிகளைக் கடக்க முடியாது மனம் வலிக்கிறது. “விடிவின் திசையற்று / ஒரு சமூகத்தின் உயிரைச் சூழ்கிறது / இருபத்திநாலு மணி நேர இரவு” என்ற வரிகளை வாசிக்கிறபோது குற்ற உணர்வில் மூழ்கித் தவிக்கிறோம்.

‘காலமுகம்’ என்ற கவிதையின் இறுதி வரிகள்..../ராஜீயக் கடப்பாறைத்/தாக்குதலில் எங்கோ

வீறிடுகிறது ஓர்/சின்னஞ்சிறு குழந்தை./அதன் உதிரவெளி/மானுட இரவாகி/உலகை மூடுகிறது

வார்த்தைகளின் பின்னே இருக்கிற அனுபவ நிகழ்வில் நாம் இல்லை. வேறு யாரோ இருந்திருக்கிறார்கள். அந்த யாரோ வேறு யாருமில்லை. நம்மைப் போலவே இன்னொரு உயிர். கவிஞனால்தான் அதை உணர முடியும். அதனால்தான் மானுட இரவு என்கிறார். மதமும் மொழியும் அழிந்து, தேச எல்லைகள் கரைந்து, முழு மானுட அனுபவத்துக்குக் கவிதை நகர்கிறது. வரலாற்றிலிருந்து மனிதனை விடுவித்துத் தனித்துப் பார்க்கிறபோது மனித வாழ்வின் இருத்தல் வலிகளைக் கூடுதலாக உணரலாம். வாழ்வின் உண்மை அப்போதுதான் தெரிய வரும். பிரமிளின் கவிதையை இந்த இடத்திலிருந்து வாசிக்கிறபோது தனி மனித வாழ்வின் இருத்தல் வெளி எதுவென்று புரிகிறது.

தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com

Keywords: கவிதையின் புதுவெளிச்சம், இனி என்ன, அறியாந்த வலியைப் பற்றிய கவிதைகள், கவிதைகள்
Topics: இலக்கியம்|