Pages

Thursday, January 07, 2016

From Allen Ginsberg's “Kaddish” , சி.சு.செல்லப்பா - தருமுவின் ‘விடிவு கவிதை பற்றி

 ......

V


Caw caw caw crows shriek in the white sun over grave stones in Long Island

Lord Lord Lord Naomi underneath this grass my halflife and my own as hers

caw caw my eye be buried in the same Ground where I stand in Angel

Lord Lord great Eye that stares on All and moves in a black cloud

caw caw strange cry of Beings flung up into sky over the waving trees

Lord Lord O Grinder of giant Beyonds my voice in a boundless field in Sheol

Caw caw the call of Time rent out of foot and wing an instant in the universe

Lord Lord an echo in the sky the wind through ragged leaves the roar of memory

caw caw all years my birth a dream caw caw New York the bus the broken shoe the vast highschool caw caw all Visions of the Lord

Lord Lord Lord caw caw caw Lord Lord Lord caw caw caw Lord

Paris, December 1957—New York, 1959


Allen Ginsberg, “Kaddish” from Collected Poems, 1947-1980. Copyright © 1984 by Allen Ginsberg.

 சி.சு.செல்லப்பா - தருமுவின் ‘விடிவு கவிதை பற்றி 
 நன்றி : Kaala Subramaniam shared Krish Ramadas's post.
விடிவு

பூமித்தோலில் 

அழகுத் தேமல்

பரிதி புணர்ந்து 

படரும் விந்து

கதிர்கள் கமழ்ந்து 

விரியும் பூ

இருளின் சிறகைத் 

தின்னும் கிருமி

வெளிச்சச் சிறகில் 

மிதக்கும் குருவி

இந்தக்கவிதையின் தனிச்சிறப்பு நூற்றுக்கு நூறு படிமங்களாலேயே ஆனது. உதய காலவர்ணனை, தலைப்பைத் தவிர வேறு எதுவித ஆசிரியர் நேரடிக்குறித்தலும் கிடையாது. முதலில் பூமியைத் தோலாக உருவகப்படுத்தி அதன் மீது தேமல் படரவிட்டு, அதுவும் அழகானதாக குணம் ஏற்றி, ஒரு மங்கிய
நிறத்தைசசுட்டி, அது மறையும் கடலை கருக்கிருட்டு மங்கி வந்து வளரும். ஆரம்ப ஒளியின் மங்கிய தோற்றமும் வளர்ந்து, இரண்டும் கலைவையான வெளிறின ஒளியைச்சுட்டிக் காட்டுவது இந்த முதல் படிமம் ஒரு வேளை இந்தப்படிம வலுவும் அழுத்தமும் போதாதோ என்ற சம்சயத்தாலோ, ஒரு ஆணிக்கு இரண்டு ஆணியடியாக அடுத்த படிமம். கதிரோனும் மதியும் புணர்ந்து வெளிவந்த விந்து படர்வதாக, அந்த விந்தின் நிறத்தைக் கொண்டு உஷைக்கால வெளிறிய சாம்பல் நிற மங்கலொளியை உருவகப்படுத்துவது. இதுவும் (முந்தின. கவிதையில் உள்ளது போல்) பாலியல் படிமம். மரபான படிமங்களை ரசித்துப் பழக்கமான வாசகனுக்கு இந்த விபரீதக் கற்பனைப் படிமம் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியது. ஆனால் மூன்றாவது ஆண் அடி உருவமான சூரிய கிரகணங்கள் மணம் வீசி மலரும் புஷ்பம் உவமை, முந்தின படிமத்துக்கு பரிகாரம் செய்வது போல் ரொமான்டிக் என்கிற அதிசயோக்தி பாவ உருவமாக அமைந்திருக்கிறது. நான்காவது படிமமான இறந்து கொண்டிருக்கும் இருள் பறவையின் சிறகை அரித்து உட்கொள்ளும் கிருமியாக (ரியலிஸ்டிக்) என்கிற யதார்த்த தோரணை உருவமாக ஆக்கப்பட்டிருக்கிறது. கடைசிப்படிமமான வெளிச்சம் என்ற சிறகின் மீது மிதப்பதுபோல் (அதாவது எந்த சமயத்திலும் மூழ்கியோ இறந்தோ போய்விடக் கூடும் என்பது போல) அழுத்தம் இல்லாது உட்கார்ந்திருக்கும். ஒரு கரு நிற இருள் குருவியாக உருவகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடைசி இரண்டு படிமங்களிடையே ஒத்த பார்வை இருந்தாலும், ஒரு தோற்ற முரண் காட்டப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டும் விடிவு. ஒளி பற்றியதாக இருந்தாலும் முன்னதில் இருளைச்சிறகாக உருவகப் படுத்தி ஒளிக்கிருமியால் பாதிக்கப்படுவதாகவும். பின்னதில் ஒளியைச் சிறகாக உருவகப்படுத்தி இருள் குருவியை பாதிப்பதாகவும் காட்டி, இரண்டும் விடிவுக் காட்சிக்கு உதவப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த ஐந்து படிமங்களும் சேர்ந்து உதய கால கணப் பொழுதின் நிறத்தைச் சுட்டி வண்ண ஒவியமாக சிறந்த காட்சிச் சித்தரிப்பு சாத்தியமாகி இருக்கிறது. இது தற்காலத் தமிழ் புதுக்கவிதைத் துறையில் முதலில் வந்த சிறந்த படிமக்கவிதை, புதுக்கவிதைத் துறையில் பின்னால் இத்தகைய படிமங்கள் கணக்கற்றுத் தோன்றுவதற்கு இதுதான் முன் உதாரணம் அடுத்து வந்த சிவராமுவின் கவிதைகளில் இந்தவிதப்படிமப்பாங்கு செழிப்பேறுவதைக் காண்கிறோம்.


)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

நேச மித்ரன்
16 hrs ·

விமர்சனம் என்பதே நமக்கு புதிய விஷயம். நாம் அறிந்திருந்தது ரசனைதான். ரசனை என்பது வாழ்வின் சௌகர்யங்களை அபரிதமாகப் பெற்றுள்ள ஒரு வர்க்கம் குருட்டுத்தனமாகப் பொழுதுபோக்கும் ஒரு மனநிலை என்றுதான், இன்றைய நமது பிரக்ஞைக்குப்படுகிறது. இன்று 'ரசனை' என்ற பதம் எங்காவது பிரயோகிக்கப்பட்டால் அது விமர்சனம் என்ற பிரயோகத்தின் வசப்பட்டு, ஓரு ஆழ்ந்த அர்த்தத்தை ஏற்றுக்கொண்ட வகையாகத்தான் உபயோகிக்கப்படுகிறதா என அவதானிக்க வேண்டும். அப்படி ஒரு ஆழ்ந்த அர்த்தம் அதற்கு இல்லையென்றால், 'ரசிப்பது' என்பது 'பேஷ்' போட்டு தலையாட்டும் ஒரு கோணங்கி மரபுதான். இது விசேஷமாக, சௌகர்யமான வாழ்க்கை நிலையில் கிடந்து மந்தமான உணர்வுகளுடன் வாழும் வர்க்கத்தினரின் மரபு. இவ்வர்க்கம் தமிழர்களிடையே 'பொழுதுபோக்கு' என்ற அடிப்படையில்தான் பேரிலக்கியங்களைக் கூட சந்தித்து வந்துள்ளது. மிகவும் 'ஹைகிளாஸ்' பொழுதுபோக்கு. அவ்வளவுதான்

-" பிரமிள் 'வெயிலும் நிழலும்' கட்டுரைத் தொகுப்பில் பக்கம் 244 -M.D.M