Pages

Tuesday, May 10, 2016

மலகுவேனா* - பெடரிக்கோ கார்ஸியா லோர்க்கா, பாலை - கமலாதாஸ்

நன்றி : அலைகள் 1990 , www.noolaham.org

மலகுவேனா*

- பெடரிக்கோ கார்ஸியா லோர்க்கா


மரணம் தவறணையின்
உட்சென்று, வெளியில் வருகிறது. 
கிற்றாரின் ஆழ் பாதைகளுடாய் 
கறுப்புக் குதிரைகளும், கெட்டமனிதர்களும்
நகர் கின்றனர். 
கிளர்ச்சியூட்டும் 
கடற்கரைக் கிழங்குகளில்
'உப்பி’னதும், பெண்ணின் இரத்தமனமும்
அங்கு. 
மரணம் தவறணையின்
உட்சென்று, 
வெளியில் வருகிறது: 
தவறணையின் மரணம் உட்சென்று
வெளியில், வருகிறது.

* பிரபலமானதொரு நடனத்தினதும், மெட்டினதும் பெயர்.


பாலை - கமலாதாஸ் 


ஒருதடவை நினைத்தேன் 
தந்தைக்கும் தாய்க்கும், 
கணவனுக்கும் சோதரிக்கும், 
உரிமையானவள் நான் என்று. 
பின்னர் நினைத்தேன் நான், 
எனது காதலனுக்கென்று. 
வளர்ந்தபிறகு 
நிச்சயமாய் அறிந்தேன் 
என் வாசகருக்கு மட்டுமே, 
வேண்டப்படுவதாய். 
இன்று எல்லாம் இழக்கப்பட்டுவிட்டது: 
யாருக்காகிலும் முழுமையாய் 
நான் வேண்டப்படுவது சந்தேகம். 
இக் கடதாசி வெண்ணிறப் பாலை: 
எனது அழுகையும் ஒலிகளற்றது. 
இங்குயாருமே என்னோடு இல்லை: 
நான்
கமலா வென அவர்கள்
முன்பு,
அழைத்த ஒருத்தி.


இரண்டு கவிதைகளையும் ஆங்கிலம் வழி தமிழில் :

கடலோடி o