Pages

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .98 - 134 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய 98 - 133 .

நீலகண்டப் பறவையைத் தேடி. . . . 98 - 134

வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய 98 - 134
(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)

automated google-ocr in ubuntu with the help of Libre draw


தெளிவாகத் தெரிகிறது. இலைகளின் நடுவே சோனா ஏதோ கவனமாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு ஈசமூக்குக் கவலை ஏற்பட்டது. "சோனா தர்முஜ் கொடிகளைப் பிடுங்கிக்கிட்டிருக்கானோ?'' அவன் மண்டி யிட்டு நகர்ந்து படகுக் கூண்டுக்கு வெளியே வந்து, ''சோனாபாபு, எங்கே இருக்கீங்க?'' என்று அழைத்தான். சோனா அவசர அவசரமாகத் தன்னை இலைகளுக்குப் பின்னால் இன்னும் மறைத்துக்கொண்டான். ஒன்று. அவன் தனியாக வீட்டைவிட்டு வெளியுலகத்துக்கு வந்திருக்கிறான். இரண்டாவதாக, மணலில் பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி ஒரு குளம் தயார் செய்திருக்கிறான். குளம் வெட்டும்போது இரண்டு தர்ஜ் கொடிகள் வேரோடு வந்துவிட்டன. இந்தக் குற்ற உணர்வு அவனுள்ளே வேலை செய்கிறது. மறுபடியும் இலைகளை விலக்கிக் கொண்டு தலையை நீட்டிப் பார்த்த அவன், ஈசம் தன்னைத் தேடிக் கொண்டு அந்தப் பக்கம் வருவதைப் பார்த்தான். அவன் உடனே தரையோடு தரையாகக் குனிந்து கொண்டு தவழ்ந்தவாறே நகர்ந்து போக ஆரம்பித்தான். ஈசம் தன்னை நெருங்கி வரவர அவன் கொஞ்சங் கொஞ்சமாக நகர்ந்து போய்ச் சோளக் கொல்லையை அடைந்து அதற்குள் ஒளிந்துகொண்டுவிட்டான்,

ஈசம், சோனாவை முன்பு பார்த்த இடம் இப்போது காலி. இரண்டு தர்ஹஜ் கொடிகள் பிடுங்கப்பட்டுக் கிடந்தன. ஒரு பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீரில் ஒரு மாலினி மீன் மிதந்து திரிந்தது. தண்ணீர் கொஞ்சங் கொஞ்சமாக வெற்றிக்கொண் டிருந்தது. மீன் ஈசமைக் கண்டதும் கலங்கிய தண்ணீருக்குள் ஒளிந்துகொண்டது. ஈசம் மறுபடி கூப்பிட்டான் : "சோனா எசமான் ! எங்கே போயிட்டீங்க?''

ஆற்றின் படுகை மேடாகிக் கிராமத்துடன் சேரும் இடத்தில் சோள வயல்கள், கோதுமை வயல்கள். இப்போது அறுவடைக் காலம். சில மைனாக்கள் தானியங்களைக் கொத்திக்கொண்டு பறக் கின்றன. ஈசம் மறுபடியும் கத்தினான் : "சோனா பாபு, எங்கே போயிட்டீங்க? உங்களுக்கு ஈடுகொடுக்க முடியுமா என்னாலே ? வாங்க வந்தீங்கன்னா உங்களைத் தோளிலே வச்சுக்கிட்டு அக் கரைக்குக் கூட்டிக்கிட்டுப் போவேன்."

அவன் சொல்வது காதில் விழுந்தும் சோனா அசையவில்லை. ஈசமோடு ஓடிப் பிடித்து விளையாடும் ஆசை அவனுக்கு. அவன் சோளக் கொல்லைக்குள் இன்னும் மறைவாக உட்கார்ந்தான், உட்கார்ந்துகொண்டே அங்கிருந்த புல்லைப் பிடுங்கினான். அப்போது சோளப் பயிர் அசைந்தது. பயிர் அசைவதைப் பார்த்த ஈசம் அங்கு வேகமாக வந்து சோனாவைப் பிடித்துக்கொண்டு சொன்னான் ; "இப்போ எங்கே போவீங்க, எசமான் ?"

98
சோனா அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தன் கைகால்களை உதறிக்கொண்டு திமிறினான். அவன் போட்ட கூச்சலில் வயல்களிலிருந்த மைனாக்களெல்லாம் மாலை வெயிலில் பறந்தோடின. அவை பறந்து போய் ஆற்றுப் படுகையில் இறங்கின. "நான் வரமாட்டேன். என்னை விட்டுடு!'' என்று சோனா கத்தினான். ''உங்களை ஏதாவது சொன்னேனா? வாங்க, படகிலே உட்கார்ந்து கிட்டு மானத்தைப் பார்க்கலாம்" என்று சொல்லிக்கொண்டு ஈசம் சோனாவைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்,

சோனாவுக்கு இப்போது தோல்வியடைந்த வருத்தம் இல்லை, அவன் ஈசமின் தோளில் உட்கார்ந்து கொண்டு கால்களை ஆட்டினான். ஸோனாலி பாலி ஆற்றின் நீர், சில படகுகள், ஒரு சில கிராமவாசிகள். வசந்த காலத்துக் காற்று பயிர்களுக்குள் நுழைந்து மறைகிறது. ஆற்றங்கரையிலிருந்து பார்த்தால் பார்வை செல்லும் தூரம் வரை ஒரே சோளம், கோதுமைக் கதிர்கள். சில சிவப்பு அலரிச் செடிகள். அவற்றின் பூக்கள் தரையில் ஜமுக்காளத்தைப் போல் பரவலாக விழுந்திருக்கின்றன. சோனா கேட்டான் : "ராத்திரி உங்களுக்குப் பயமா இருக்காதா ?" "இல்லே எசமான் ! அல்லாதான் துணை. பயமாயிருந்தா அல்லா பேரைச் சொல்லுவேன்.” ''ராப்பிசாசு தூக்கிட்டுப் போயிட்டா ?'' "என்னைத் தூக்கிக்கிட்டுப் போகாது.'' "தூக்கிக்கிட்டுப் போயிடும். பாருங்க ! உங்களுக்குத் தெரியா மலேயே தூக்கிக்கிட்டுப் போயிடும்.'' '' ஊஹும்! என்னைத் தூக்கிக்கிட்டுப் போகாது ! ராப்பிசாசு என்னோட சினேகிதன்."

"பின்னே அம்மா ஏன் சொல்றாங்க. "சோனா, நீ எந்த இடத்துக்கும் தனியாப் போகாதே, ராப்பிசாசு உன்னைத் தூக்கிட்டுப் போயிடும்'னு ? அது வந்து அம்மா மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வருமாம். உன் மாதிரி வருமாம். அப்படியா ?'' ''ஆமாம்." "அப்போ நான் ஒரு இடத்துக்கும் தனியாகப் போகமாட்டேன்." "போக வேண்டாம்." இப்போது சோனா ஈசமின் முகத்தைப் பார்த்தான். நாற்புறமும் வயல்கள், பயமுண்டாக்கும் கதைகள் அவன் நினைவுக்கு வந்தன, கதிர்கள் அவனுடைய உடம்பில் உரசின. உரசிய இடத்தில் அரிக்கின்றது. அவன் ஈசமின் தோளிலிருந்து இறங்கித் தர்ஜ் வயலுக்குள் ஓடியபடி சொன்னான்: "நான் தனியா வீட்டுக்குப்

99போகமாட்டேன். உங்களோடேயே வரேன், ஈசம் அண்ணே .'' பிறகு அவன் தன் அன்புக்குரிய மீனைத் தேடினான். அவன் ஈசமிடம், ''நீங்க படகிலே உட்காருங்க, இதோ வரேன்" என்றான்.

அவன் ஒரு தர்ஹஜ் பழத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு மீனைத் தேடிக் கண்டுபிடித்தான். அது தண்ணீருக்குள் கண்ணாமூச்சி விளையாடியது. அவன் கிராமத்துப் பக்கம் பார்த்தான். பொழுது சாய்ந்துகொண் டிருந்தது. தர்மஜ் இலைகளின் இடுக்குகள் வழியே ஒளிக்கதிர்கள் நீர்க்கோடுகள் போல் கீழே இறங்குகின்றன.

ஒரு பெரிய தர்ஜ் பழம் இலைகளுக்கு மேலே நீட்டிக்கொண் டிருந்தது. அவன் வெகு நேரம் சூரிய ஒளி ஆற்று நீரின் மேல் விழுவதைப் பார்த்துக்கொண் டிருந்தான். தர்ஜ் பழத்தின் மேல் உட்கார்ந்தவாறே அவன் வானத்தில் மூலைக்கு முலை மிதந்த மேகங் களையும், கிராமத்தை நோக்கிப் பறந்துகொண் டிருந்த பறவை" களையும் பார்த்தான். அவனுக்கு எழுந்திருக்கவே மனமில்லை. ஈசம். படகுக்குள் இருந்துகொண்டு அவனைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். புகையிலை நாற்றம் காற்றில் வந்தது. கறுப்பு வாத்துக் களின் ஒலி கேட்டது.

சோனா எழுந்திருக்கவில்லை. அவனது முழுக்கவனமும் ஆற்றுமணல் மேலே இருந்தது. மிகவும் ஆளரவமற்ற பிரதேசம். அவன் வயலுக்கு நடுவில் ஒரு கரடியைப் பார்த்துவிட்டான். அவன் வேக மாகப் படகை நோக்கி ஓடி வரும்போது நினைவுக்கு வந்தது, அவன் பார்த்த கரடியின் முகம் ஏதோ ஒரு படப் புத்தகத்தில் பார்த்தது போன்று. ஆகையால் அவன் பயப்படக் காரணமே இல்லை. அவன் படகில் நுழைந்து சொன்னான் : "ராப்பிசாசு என் சிநேகிதனாக்கும்! எனக்கு யார் கிட்டேயும் பயம் இல்லே!''

அவன் படகுக்குள் சற்று நேரம் குதித்து விளையாடினான். ஓர் ஓரத்தில் ஒரு சிறிய சட்டியில் ஈசம் ஹக்கா குடிப்பதற்காக நெருப்பை வைத்திருந்தான். அதிலிருந்து புகை வந்து கொண் டிருந்தது.

"வெளியே வாங்க! ஆகாசத்துக்குக் கீழே எவ்வளவு சுகமா யிருக்கு. பாருங்க !" என்று ஈசம் சொன்னான்.

ஈசம் கால்களை நீட்டிக்கொண்டு தர்மூழ் சாப்பிட உட்கார்ந்தான்.. அவனுடைய மடியில் உட்கார்ந்துகொண்டு, ''என்னைத் தோளிலே தூக்கிக்கிட்டு அக்கரைக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்னீங்களே, கூட்டிக்கிட்டுப் போகல்லியே!'' என்று கேட்டான் சோனா.

ஆற்றைக் கடந்து போக அவனுக்கு வெகு நாட்களாக ஆசை ஈசம் அவனுடைய பேச்சைக் கேட்கவில்லையென்று அவனுக்குக் கோபம். தூரத்தில் ஆற்று நீர் மெல்லிய போர்வையைப் போல் 100

1891சலசலத்தது. முகத் திரையணிந்த இரண்டு பெண்கள் ஆற்றுப் படுகையில் நடந்து வந்தார்கள். சோனாவுக்கு நிஜமாகப் பயம் பிடித்துவிட்டது. அவன் ஈசமோடு ஒட்டிக்கொண்டு உட்கார்ந் தான். ஈசம் சொல்லிய பிசாசுக் கதை அவனுக்கு நினைவு வந்தது : 'பிசாசுக்கு இரண்டு கண்களும் வெள்ளை . வேறு அவயவமே இல்லை.'

இரவு வேளைகளில் அம்மா சொல்லும் கதைகளில் வரும் ராக்ஷசர்கள் ஆற்று மணலில் மெதுவாக நடந்து வருவதுபோல் இருந் தது. அவன் மிகுந்த பணிவுடன் சொன்னான் : ''ஈசம் அண்ணே , நான் அம்மா கிட்டேப் போறேன்.'' ''போகலாம். என் கூடப் போகலாம்.'' "எனக்கு இப்பவே போகணும்.'' இரண்டு பெண்கள், முகத்திரை அணிந்தவர்கள் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் புது வீட்டுப் பெரிய மியான். அவர்கள் இருவரும் மியானுடைய பீபிகள். ஈசம் கையைத் தூக்கிக் கூப்பிட்டான் : "பெரிய மியான் ! பெரிய மியா... ஆ ஆ...ன் !" பெரிய மியானை அணுகுவதற்காக அவன் சோனாவைத் தோளில் தூக்கிக்கொண்டு தர்மூஜ் வயலைக் கடந்தான்.

ஈசம் பெரிய மியானை அணுகுவதைப் பார்த்துச் சோனாவுக்குப் பயமாயிருந்தது. நான் அம்மா கிட்டே போகணும்! நான் அம்மா கிட்டே போகணும்!'' என்றான் சோனா.

ஈசமின் குரலைக் கேட்டுக் கண்களைத் தவிர வேறு அவயவமே இல்லாத அவ்விரண்டு கறுப்பு உருவங்களும் பொம்மைகளைப் போல் அசையாமல் நின்றன. சோனா மறுபடியும் சொன்னான்: ''எனக்குப் பயமா இருக்கு. நான் வீட்டுக்குப் போகணும்,''

ஈசம் சொன்னான் : ''ஏ பெரிய மியான். கொஞ்சம் நில்லு ! உன் பீபிகளோட மூஞ்சியைச் சின்ன பாபுவுக்குக் காண்பிச்சுட்டுப் போ! அவங்க முகத்திரை போட்டிருக்கறதைப் பார்த்துச் சின்ன பாபு பயப்படறார்.''

பெரிய மியானுக்கு அவலட்சணமான முகம், அம்மைத் தழும்புகள் நிறைந்த முகம். ஒரு கண் வெளுத்துப்போய் ஒளியின்றி இருக் கிறது.

சோனா இப்போது ஈசமைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ''நான் இனிமே துஷ்டத்தனம் பண்ண மாட்டேன். என்னை விட்டுடுங்கோ !'' என்றான்.

சோனாவின் பேச்சைக் கேட்டுப் பெரிய மியானுக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. இது தன பாபுவின் பிள்ளையா?'' என்று கேட்டான்.

101
''ஆமாம்." ஈசம் சிரித்தான். பிறகு சோனாவிடம், ''ஏன் பயப்பட நீங்க ? இவன் அந்தக் காலத்திலே நம்ம வீட்டிலே வேலை பார்த்தவன் தான்" என்றான்.

இப்போது ஸோனாலி பாலி நதியில் அஸ்தமிக்கும் சூரியனின் ஒளி தங்க அன்னம் போல் பிரகாசித்தது. அவயவம் இல்லாத அந்த இரண்டு கரிய உருவங்களும் மெளனமாக, அசையாமல் நின்றன. ஒரு மந்திரவாதி தன் மந்திர பலத்தால் இரண்டு ஆவிகளைக் கட்டுப் படுத்தி அவற்றைக் கொண்டு விளையாட்டுக் காட்டுவது போல் தோன்றியது. சர்க்கஸில் சிங்கம் வரும்போது உண்டாகுமே அதுமாதிரி பயம் ஏற்பட்டது சோனாவுக்கு. ரோமங்கள் குத்திட்டு நிற்க அவன் ஈசமைக் கட்டிக்கொண்டான். கரிய உருவங்கள் இரண்டும் அவனை அணுகின. "சோனாபாபு எப்படிப் பயந்து போயிட்டார் பாரு! இப்போ உன் பீபிகளைக் காட்டி அவரோட பயத்தைப் போக்கு" என்றான் ஈசம்,

நாற்புறமும் சோள வயல்கள். கோதுமை வயல்கள். வயலோரங் களில் மஞ்சித்தி மரங்கள். அவற்றில் நீலகண்ட பறவைகளைப் போல் மைனாக்கள் தங்கியிருக்கின்றன. அவற்றின் 'கிசிர் மிசிர்' ஒலி. தூரத்தில் பசுவின் குரல் கேட்கிறது. சூரிய ஒளி இன்னும் தங்க அன்னமாகக் காண்கிறது. வியப்பில் மயங்கிய இயற்கையின் மெளனத்தினிடையே பெரிய மியான் தன் பீபிகளின் முகத் திரைகளைத் தூக்கினான். அவர்களுடைய உடல்வாகு ஒற்றை நாடி, அழகான முகங்கள். துர்க்கையைப் போல் அவ்வளவு அழகு. மூக்கில் மூக்குத்தி. கால்களில் கொலுசுகள் 'ஜல் ஜல்' என்று ஒலிக் கின்றன. இப்போது சோனாவின் கண்கள் இருண்ட இரவில் படகின் விளக்கைப் போல, வியப்பால் ஜொலிக்கின்றன.

சிறிய பீபி சொன்னாள்: ''வாங்க பாபு, என் கிட்டே வாங்க!'' அவள் சோனாவை ஈசமிடமிருந்து வாங்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண் டாள். அவனுடைய முகத்துக்கருகே தன் முகத்தை வைத்துக் கொண்டு, "என்ன பாபு, அப்படிப் பார்க்கறீங்க முழிச்சு முழிச்சு?" என்று கேட்டாள்.

சோனாவால் பதில் பேச முடியவில்லை. அவன் சிறிய பீபியிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு ஈசமைப் பார்த்தான். ஈசம் பெரிய மியானுடன் பயிர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். பெரிய பீபி, "'பாபு, என் கூட வந்துடுங்க" என்றாள். சோனா மறுபடி சிறிய பீபி பக்கம் திரும்பவே, அவள், ''என்னை உங்களுக்குப் பிடிச்சுப் போச்சா? பாருங்க பெரிய மியான்! சோனா

102பாபு என்னைப் பார்த்துக் கண் சிமிட்டார் !' என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்.

அவளுடைய சிரிப்பைக் கேட்டு ஈசம் சொன்னான்: ''உன் சிரிப்பு முந்தி மாதிரிதான் இருக்கு." பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவனாக, ''ஜாபிதா, உன் அம்மாவோட உடம்பு எப்படி இருக்கு ?" என்று விசாரித்தான். ''நல்லாத்தான் இருக்கு, அண்ணே !" சிறிய பீபி சோனாவின் மோவாயைப் பிடித்துக்கொண்டு, ''பாபு, என்னை நிக்காஹ் பண்ணிக்கனுமின்னா நீண்ட தாடி வெச்சுக் கணும். தாடியில்லேன்னா என்னைத் திருப்திபடுத்த முடியாது. உங்களுக்குப் பெரிய பெரிய கண் இருக்கு, மூக்கு, மூஞ்சியெல்லாம் அளகாயிருக்கு. ஆத்துமணல் மாதிரி நிறம் இருக்கு ரொம்ப அளகா யிருக்கீங்க. ஆனா தாடி இல்லையே கன்னத்துலே!'' என்று சொல்லி விட்டு அவள் ஓரக்கண்ணால் பெரிய மியானைப் பார்த்தாள். இதைக் கேட்டு ஜாக்கிரதையாகிவிட்டான் பெரிய மியான். அவனுக்குக் குருட்டுக் கண். சிறிய பீபியின் கண்கள் வைரமாக ஜொலித்தன. அவள் சிரித்துக்கொண்டே, ''பயப்பட வேண்டாம்" என்றாள். பிறகு சோனாவை மார்போடு கட்டிக்கொண்டு, 'அல்லா, சோனா பாபு மாதிரி எனக்கு ஒரு புள்ளே கொடு' என்று வேண்டிக் கொண்டாள்.

பெரிய மியான், "அப்போ வரேன் ஈசம் அண்ணே ! நேரம் ஆயிடுச்சு. வீடு போய்ச் சேர ராவாயிடும். நேரம் கிடைச்சா வீட்டுக்கு வாயேன்" என்றான். "இந்தா அண்ணே, பாபுவை எடுத்துக்குங்க !' என்று சொல்லிச் சிறிய பீபி சோனாவைக் கீழே இறக்கிவிட்டுவிட்டுத் தன் முகத் திரையை அணிந்துகொண்டாள். பிறகு அவர்கள் புறப்பட்டு ஆற்றைக் கடந்து மறுகரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். முன்னால் பெரிய மியான், பின்னால் சிறிய பீபியும் பெரிய பீபியும், அவர் களுக்குப் பின்னால் அவர்களுடைய நிழல். சோனா ஈசமின் கையைப் பிடித்துக்கொண்டு வெகு நேரம் அங்கேயே நின்றான். இரண்டு பீபிக்களின் நிழல் தண்ணீரில் மிதந்தது. அவர்கள் அக்கரையில் நடந்து வெகுதூரம் போய் விட்டார்கள். சோனாவுக்கு வருத்தமாயிருந்தது. பெரிய பெரிய கண்கள், துர்க்கையின் முகம் போன்ற அழகான முகம், மூக்கில் மூக்குத்தி. கால்களிலிருந்த கொலுசுகளின் 'ஜல் ஜல்' சப்தம் இன்னும் அவன் காதுகளில் ஒலிக்கிறது. பிறகு படத்தில் பார்த்த அந்தக் கரடி அவன் கண் முன்னே தோன்றியது. அவன் ஈசமிடம்

103"எனக்கு ஒரு துப்பாக்கி வாங்கித் தரேன்னு அம்மா சொல்லி யிருக்கா" என்றான்,

ஈசம் ஏதோ நினைத்துக் கொண்டிருந்தான். பெரிய பீபியின் இளமைக் காலமோ அல்லது வேறொரு சிறு நிகிழ்ச்சியோ சிறிது நேரத்துக்கு அவனைத் தன்னை மறக்கச் செய்தன. அல்லது இப்படியும் இருக்கலாம். சூரியன் அஸ்தமித்துக்கொண் டிருந்தான். பசுமாடு களின் முக்காரம் இப்போது கேட்கவில்லை. வயல்களிலிருந்து புற் கட்டுகளை எடுத்துக்கொண்டு வயல் வேலைக்காரர்கள் திரும்பு கிறார்கள். ஆகவே, வீடு திரும்பும் நேரமாகிவிட்டதால் அவனுக்குத் தன் நொண்டி பீபியின் நினைவு வந்திருக்கலாம். பெரிய மியான் அதிருஷ்டக்காரன், இரண்டு பீபிகளை வைத்துக்கொண்டு குடித் தனம் நடத்துகிறான், ''துப்பாக்கியாலே ஒரு கரடியைச் சுடப்போகிறேன்'' என்றான் சோனா.

ஈசம் பதில் சொல்லவில்லை. அவன் சோனாவின் கையைப் பிடித்துக் கொண்டு தர்மஜ் வயலுக்குள் நுழைந்தான். ஒரு சில பெரிய தர்மூஜ் பழங்களைப் பறித்துப் படகுக்குள் வைத்துவிட்டுப் படலையை முடி விட்டு, "வாங்க, போகலாம்!'' என்றான்.

சோனா பரணிலிருந்து இறங்கியபடி, ''என்னைத் தோளிலே வச்சுத் தூக்கிக்கிண்டு அக்கரைக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்னீங்களே" என்று கேட்டான். "இன்னிக்கு வேணாம். பொழுது சாஞ்சிடுச்சு. தனமாமி தேடுவாங்க சீக்கிரம் வாங்க, போகலாம்.''

தர்மஜ் வயலைக் கடக்கும்போது சோனாவுக்கு ஞாபகம் வந்தது, அவனுடைய மாலினி மீன் தனியாக இருக்கிறது என்று. "கொஞ்சம் இருங்க, நான் மீனைக் கொண்டுபோய் ஆத்துத் தண்ணியிலே விட்டுட்டு வரேன்" என்றான் சோனா.

சோனா குதித்துக்கொண்டே தாமுஜ் இலைகளையும் பழங்களையும் தாண்டிக்கொண்டு ஓடினான். எவ்வளவு தேடியும் தான் பள்ளத் தோண்டிய இடத்தைக் காணாமல் நிராசை மேலிட நின்றான். ஈசம் அவனைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டும் அவன் பதில் சொல்ல வில்லை. ஈசம் அவன் அருகில் வந்தபோது, "மாலினி மீனைக் காணோம் " என்றான் சோனா.

ஈசம் சோனாவின் கையைப் பிடித்துப் பள்ளத்துக் கருகில் கொண்டு சென்றான். பள்ளத்தில் இப்போது தண்ணீர் இல்லை. மீன் பள்ளத்து மணலில் தலை குப்புற விழுந்து கிடந்தது. சோனா பள்ளத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். தன் உள்ளங்கையில் மீனை வைத்து அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

104அது இறந்துவிட்டது என்று உணர்ந்ததும் வருத்தம் மேலிட நாற்புறமும் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். எழுந்திருக்கப் பிடிக்கவில்லை அவனுக்கு. மீனின் கண் அவனைத் துன்புறுத் தியது. பெரிய மியானின் சிறிய பீபியை நினைவுறுத்தியது, மீனின் கண். அவன் மெதுவாக மீனை மணலில் கிடத்தினான். பக்கத்தி லிருந்த மணலை எடுத்து மீனை நன்றாக மூடினான். அந்த இடத்தில் ஒரு கூரை போலத் தாமுஜ் இலையொன்றைப் பறித்து ஊன்றி வைத்தான். பிறகு அந்தச் சிறிய மீனுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். அப்போது பெரிய மியானின் வெண்மை யான, பொட்டைக் கண் பயிர்களின் இடுக்கு வழியே அவனைப் பார்ப்பது போல் இருந்தது. 'ஆங் ஊங்... மனிசன் வாசனை அடிக் குது!' என்று அது சொல்வது போலிருந்தது.

அந்தப் பொட்டைக் கண், முகத்தில் தாடியுடன், சப்தம் செய் யாமல் அவனை நெருங்குகிறது. அவன் எல்லாவற்றையும் விட்டு விட்டு, ஈசமையும் விட்டுவிட்டு மணல் வெளியைக் கடந்து ஓடத் தொடங்கினான். ராப் பிசாசு அவனைப் பிடித்துக்கொண் டிருக் கிறது. அதுதான் அவனை இந்த ஆளில்லா இடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. ஈசமைக் கூட ஒரு கன்றுக்குட்டி என்று நினைத்துவிட்டான் சோனா. அவன் ஓடினான். ஆனால் வெகுதூரம் ஓட முடியவில்லை, அவனால். வயல் வரப்புகளின் மேல் ஓடும் போது அவனுக்கு வழி தவறிவிட்டது. பயத்தால் அவனுடைய தொண்டை , உலர்ந்துவிட்டது. உரத்த குரலில் அழக்கூட முடிய வில்லை அவனால். பயத்தால் வெளிறிப் போனான் அவன். நாற் புறமும் தானியக் கதிர்கள் அவனை மறைத்துவிட்டன.

அவன் பயத்தால் கண்களை மூடிக்கொண்டான். வயல்களில் இருள் சூழ்ந்துவிட்டது. ஓநாய்கள் இங்குமங்கும் ஓலமிட ஆரம் பித்தன. ாசம் சோனாவைத் தன் மார்புடன் அணைத்துக்கொண்டு, ''எசமான், என்னை விட்டுட்டு எங்கே ஓடினீங்க?'' என்று கேட்டான்.

இப்போது சோனா கண்களைத் திறந்தான். அவன் முன்னே இருந்தது, அவனுக்கு மிகவும் பழக்கமான இடம். அவனுக்கு மிகவும் பிடித்தமான அந்த மகிழமர மரத்தடியில் ஏராளமான மகிழம்பூக்களின் மணம். சோனா பயம் தெளிந்தவனாக, ''நான் ஓர் இடத்துக்கும் போகமாட்டேன். ஈசம் அண்ணே ! உங்களை விட்டுட்டு எந்த இடத்துக்கும் போகமாட்டேன்'' என்றான்.

105 .வலை வெயிடுக்கு :

சில வருடங்கள் சென்றுவிட்டன.

சைத்ர மாதத்தின் நடுப்பகுதி . வயல்களிலிருந்து தானியங்கள் அறுவடையாகி வீட்டுக்கு வந்துவிட்டன. காலியாகக் கிடந்த வயல்களில் வெயில் காய்ந்தது. காய்ந்த தரையில் கலப்பைக்கு வேலையில்லை. விவசாயத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு மலட்டுப் பருவம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் வெண்ணிற மங்கல், உலர்ந்த மண் கல்லாக இறுகி மேடாகியிருக் கிறது. பறவைகளையே காணோம். வெயிலில் காய்ந்து பொசுங்கி விட்டனவோ என்னவோ? இப்போது பார்த்தால், 'இந்த வயல் களிலும் பொன்னாக விளையும், இந்த வயல்களிலும் தண்ணீர் வெள்ளமாக வந்து நிரம்பும்' என்று நம்ப முடியாது. புதர்கள் கூடப் பொட்டலாகி விட்டன. ஏழைகள் கீழே விழுந்து கிடக்கும் சருகுகளைச் சேகரிக்கிறார்கள், முஸ்லீம் குடியானவப் பெண்கள் சருகுகளைச் சேகரிக்கும்போது வானத்தை அடிக்கடி பார்த்துக் கொள்கிறார்கள்,

ஜோட்டனும் ஆகாசத்தைப் பார்த்தாள். அவளுக்கு இது கஷ்ட காலம். பக்கிரி சாயபு ஐந்து வருடங்களுக்கு முன் அவள் வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டுப் போனவர்தாம், அப்புறம் வரவே இல்லை. ஆபேத் அலி ஆகாசத்தைப் பார்த்தான். காரணம், விவசாயமும் இல்லை, படகு வேலையும் இல்லை. கொய்னாப் படகில் வேலை குளிர்காலத்திலேயே நின்று போய்விட்டது. மழை பெய்தால் தரையிலிருந்து கீரைச் செடிகள் கிளம்பும். அதற்காக ஆகாசத்தைப் பார்த்தாள் ஜோட்டன். இந்தப் பிராந்தியத்தில் ஆகாசத்தைப் பார்க்கும் வழக்கம் எல்லாருக்கும் உண்டு. தரைப்பில் இளம்புல், செடிகளில் தளிர்கள், மழையால் நனையும் மண்ணின் மணம். ஆகா, ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் புருசன் வீட்டுக்குப் போகலாம்.

ஜோட்டன் ஆபேத் அலியிடம், "மழைக்காலம் வந்தப்பறம் என்னைப் புக்ககத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போ" என்று கூறினாள் . "உன் புக்ககம் எங்கே இருக்கிறது?'' "ஏன், என் புள்ளைகள் இல்லியா ?" "எல்லாரும் இருக்காங்க. ஆனா உன்னைப்பத்தி ஒருத்தனும் கவலைப்படறதில்லே !''

ஆபேத் அலியின் இந்தச் சங்கடந் தரும் பேச்சுக்கு ஜோட்டன் பதில் சொல்லவில்லை, முந்தைய நாள் ஆபேத் அலிக்கு வேலை ஒன்றும் கிடைக்க

106வில்லை. இன்று நாள் முழுதும் இந்து பாடாவில் சுற்றிச் சுற்றி" வந்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை.

சைத்ரமாதம், எங்கும் வறட்சி. ஆபேத் அலி கெளர் சர்க்காரின் வீட்டுக்குப் புதுக் கூரை வேய்ந்து கொடுத்தான். ஏதோ கொஞ்சம் கூலி கிடைக்கும். அவன் கூலியைப் பற்றிப் பேசவில்லை. வேலைக்கு நிறைய ஆட்கள் இருந்தார்கள். முசல்மான் பாடாவில் ஜீவனோ பாயத்துக்கு வழியில்லை. மாடு கன்று வைத்திருந்தவர்கள் பாலை விற்று ஒரு வேளை சாதமும், இன்னொரு வேளை வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்குமாகச் சாப்பிட்டார்கள். ஆபேத் அலி யிடம் மாடும் இல்லை, நிலமும் இல்லை. உழைக்க உடல் மட்டுமே இருந்தது. உடலை விற்றாலும் காசு கிடைக்கவில்லை. நாள் முழுதும் உழைத்தபின் கூலி விஷயமாகக் கெளர் சர்க்காருடன் தகராறு ஏற்பட்டுவிட்டது. அசிங்கமாக அவனைத் திட்டிவிட்டு வந்து விட்டான் ஆபேத் அலி.

அவனுடைய பீபி ஜாலாலி லீட்டில் வயிற்றைத் தரையில் அழுத்திக் கொண்டு படுத்திருக்கிறாள். நாள் முழுதும் வயிற்றில் எதுவும் விழவில்லை. ஜப்பர் பாட்டுக் கச்சேரி கேட்க ஆஸ்மாந்திக்குப் போயிருக்கிறான்.

ஜாலாலி வயிற்றைத் தரையிலிருந்து உயர்த்தாமலேயே, "ஒன்றும் கிடைக்கலியா?" என்று கேட்டாள்.

ஆபேத் அலி பதில் சொல்லவில்லை. அவன் தன்னிடமிருந்த மூட்டையை எடுத்துத் தரையில் தூக்கி எறிந்தான். எதிரில் ஜோட்டனின் குடிசை. அதன் படல் மூடியிருந்தது. முட்டையைப் பார்த்ததும் ஜாலாலி வேகமாக எழுந்து, அவிழ்ந்திருந்த தன் துணியை வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டாள், சருகுகளை முற்றத்தில் கொட்டிவிட்டுப் பாத்திரங்களைக் கழுவப் போனாள். ஆபேத் அலி தன் கவலையை மறக்க ஹக்காவை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான்.

அவன் எவ்வளவு நேரம் ஹக்கா பிடித்துக்கொண்டு உட்கார்ந் திருந்தானோ தெரியாது. ஜாலாலி அடுப்பின் மறுபக்கம் உட்கார்ந்து கொண்டு பாத்திரத்தில் அரிசி போடுவதை அவள் கவனித்தான், அவள் குட்டைத் துணி அணிந்திருந்தாள். முழங்கால்களுக்கு இடையே வயிற்றின் ஒரு பகுதி தெரிந்தது. வயிற்றைக் காட்டிக் கொண்டிருப்பது இந்தப் போக்கிரியின் வழக்கம். இப்போதெல்லாம் அவள் தன் உடம்பைக் கொடுப்பதில்லை. ஆயினும் அவளுடைய திறந்த வயிறு அவனுடைய ஆசையைக் கிளப்பியது. தன் பீபி இப்படி உட்கார்ந்திருப்பதை வெகுநேரம் பார்த்துக் கொண் டிருந் தால் அவனுக்குப் பருப்பு வயலோ, காலி மைதானமோ நினைவுக்கு

107வரும். அவன் அதை மறக்க முயற்சி செய்தபடி, ''ஜப்பர் எங்கே? அவனை நேத்திலேருந்து பாக்கல்லியே?" என்று கேட்டான்.

ஜாலாலி அவனுடைய கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொண்டாள். ''குனாயி பீபியோட பாட்டுக் கேட்கப் போயிருக்கான ஜப்பர்" என்றவள், சாதத்தை மரக்கரண்டியால் கிளறிவிட்டுக்கொண்டே, "குனாயி பீபி பாட்டுக் கேட்க எனக்கும் ஆசையா இருக்கு" என்றாள்.

இவ்வளவு கஷ்டத்துக் கிடையிலும் ஆபேத் அலிக்குச் சிரிப்பு வந்தது. ''ஆத்திலே வெள்ளம் வரட்டும், உன்னைத் தண்ணி மேலே கூட்டிக்கிட்டுப் போறேன்" என்றான்.

ஜாலாலியின் வார்த்தைகள் ஆபேத் அலிக்கு அனுமதி. வயலில் இறங்கி உழ அனுமதி.

ஜோட்டன் தாழ்வாரத்தில் உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவர்களுடைய உல்லாசப் பேச்சு அவளுக்குப் பொறுக்கவில்லை. அவள் தன் வீட்டுப் படலை இன்னும் நன்றாக மூடிவிட்டு மெளனமாக உட்கார்ந்திருந்தாள். ஒரு வேலையும் இல்லை. உடல் முழுவதும் சோம்பல். கூந்தலிலிருந்து பேனைத் தேடி எடுத்துக்கொண் டிருந்தாள், பழி வாங்கும் ஆசை அவளுக்கு. கல்யாண முருங்கை மரத்துக்குக் கீழே மன்சூரின் முகம் தோன்றியது. அவள் தன் கையில் அகப்பட்ட பேனை இரண்டு நகங்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு பாடலின் இடுக்கு வழியே எட்டிப் பார்த்தாள். புலி தன் வேட்டையைக் கவ்விக்கொண்டு ஓடுவதுபோல் ஆபேத் அலி ஜாலாலியைக் கட்டிப் பிடித்துக்கொண் டிருந்தான். ஜாலாலி கொடி போல் அவனுடைய கால்களுக்கிடை யில் தொங்கினாள்.

இப்போது சைத்ர மாதமானதால் நினைத்து நினைத்துச் சுழல் காற்று அடிக்கிறது. காற்று புழுதியை வாரி அடித்ததால் ஆபேத் அலி தன் வேட்டையை என்ன செய்கிறானென்று அவளால் பார்க்க முடியவில்லை. அவள் கோபமும் வருத்தமுமாக வெளியே வந்து வயல்வெளியில் புழுதியுடன் புழுதியாக மறைந்து விட்டாள் .

சைத்ர மாதமாதலால் வயல்களில் வெயில் தகிக்கிறது. குளங்கள் வற்றிவிட்டன. ஸோனாலி பாலி நதியில் மட்டும் மெல்லிய போர்வை மாதிரி கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. மசூதிக்கிணற்றில் தண்ணீர் இல்லை, கிராமவாசிகள் கஷ்டப்பட்டு வெகுதூரத்தி லிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள், ஆற்று நீரில் தண்ணீர்க் குடங்கூட முழுவதும் அமுங்காது. நமசூத்திரபாடாவைச் சேர்ந்த 108பெண்கள் வரிசை வரிசையாகத் தண்ணீர் கொண்டுவரச் செல்கிறார் கள். அவர்கள் ஒரு லோட்டாவால் தண்ணீர் இறைத்துக் குடத்தில் நிரப்புகிறார்கள். மேட்டுக் குளத்திலும் சர்க்கார் வீட்டுக் குளத்திலும் தண்ணீர் குழம்பிக் கிடக்கிறது. மாடுகள் இறங்கி இறங்கித் தண்ணீர் பாசி பிடித்துப் பச்சையாக இருக்கிறது. ரொம்பக் கஷ்டகாலம் இப்போது,

ஜோட்டன் வீட்டைவிட்டுப் புறப்படும்போது குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள். அவள் ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கிழட்டு ஹாஜிசாயபு விட்டுக்குப் போவாள். அவள் இவ்வளவு கஷ்டப்பட்டுத் தண்ணீர் எடுத்து வந்ததற்காக அவளுக்கு ஏதாவது கூலி கிடைக்கும். காசு கிடைக்கா விட்டாலும் ஒரு தொன்னை நெல்லாவது கிடைக்கும். சிலபேர் வெயிலில் வயல்களின் வழியே ஓடிக்கொண் டிருந்தார் கள். அவர்கள் தலையில் வாந்திபேதி சாமி. பிஸ்வாஸ்பாடாவில் வாந்திபேதி ஏற்பட்டிருக்கிறதாம். இந்தத் தூரத்திலிருந்து அவளால் ஓடிக்கொண் டிருப்பவர்களை அடையாளங் கண்டுகொள்ள முடிய வில்லை .

வயலில் நடந்தபோது ஜோட்டனுக்கு நினைவு வந்தது, ஜாலாலி இப்போது அம்மணமாக வீட்டுக்குள் இருப்பாள் என்று. அடுப்பில் சோறு வெந்து கொண்டு இருக்கிறது. சருகுகளிலோ, வைக்கோலிலோ நெருப்புப் பிடித்துக்கொண்டு பற்றியெரிய எவ்வளவு நேரமாகும்! நடக்கும்போது இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டன அவளுக்கு.

சைத்ர மாதத்தில் கூரையிலும் மூங்கிலிலும், எங்கே பார்த்தாலும், நெருப்பு பிசுக்கென்று பிடித்துக்கொண்டு விடுமே!

அவளுடைய மனசு சரியாக இல்லை. அவள் வேகமாக நடந்தாள், எல்லாரும் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்புகிறார்கள். அவளும் சீக்கிரம் திரும்பவேண்டும். கிராமத்துக்குக் கிராமம் வாந்திபேதி பரவிக்கொண் டிருக்கிறது.

வாந்திபேதி சாமியை எடுத்துக்கொண்டு வந்தவர்கள் அவள் அருகில் எதிரே வந்துவிட்டார்கள். அவள் உடனே குடத்தைக் கீழே வைத்துவிட்டு முழங்காலிட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். கழுதையின் முதுகின் மேல் ஊர்வலமாகப் போகிறாள் வாந்திபேதி அம்மன். சிலர் அம்மனைத் தலையில் வைத்துக்கொண்டு தம்பட்டை அடித்துக்கொண்டு போகிறார்கள். ஹோட்டன் வெகுதூரம் அவர் களுடன் போகவில்லை, பாதை ஓரத்தில் கல்யாண முருங்கை மரங்கள், அவற்றில் லீக் நோட்டீஸ் கள் தொங்குகின்றன. ஜோட்டன் மரங்களின் நிழலில் கிராமத்துப் பக்கமாக நடந்தாள்.

109வழியில் பேலு ஷேக்கைச் சந்தித்தாள். அவன், "ஜட்டி, தண்ணீ யாருக்காக எடுத்துக்கிட்டுப் போறே?" என்று கேட்டான்.

ஜோட்டன் தரையில் துப்பினாள். அந்த ஆளுடன் பேசினாலே பாவம். அவன் ஆன்னுவின் புருசனை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றுவிட்டு ஆன்னுவுடன் குடித்தனம் நடத்துகிறான். ஒரு நாள் உட்கார்ந்துகிட்டு விவரமா எல்லாக் கதையையும் ஆபேத் அலி கிட்டே சொல்றான். என்ன தைரியம் இவனுக்கு? யார் கிட்டேயும் பயமில்லே. இப்போ சாம்சுத்தீனோடே சேர்ந்துகிட்டு லீக் வேலை யெல்லாம் செய்யறான்.

ஜோட்டன் அவனுக்குப் பதில் சொல்லாமல் அவன் போக வழி விட்டுவிட்டு வரப்போரமாக நின்றாள்.

ஆனால் பேலு நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. அவன் விஷம் மாகச் சிரித்துக்கொண்டு அவளுக்கு முன்னால் நின்றுகொண் டிருந்தான். வைசூரியால் ஒரு கண் குருடாகிவிட்டது அவனுக்கு. பயங்கரமான அருவருப்பை உண்டாக்கும் முகம். இப்போது தாடி பாதி முகத்தை மறைத்திருக்கிறது. சடுகுடு விளையாட் டெல்லாம் இப்போது இல்லை. உடம்பில் சக்தி குறைந்துவிட்டது போலும். இருந்தாலும் கண் மட்டும் பயங்கரமாக ஜொலிக்கிறது. பேலு விஷமச் சிரிப்புடன், ''ஜூட்டி, உன்னோட பக்கிரி சாய்பு அப்பறம் வரல்லியா?" என்று கேட்டான். ''அதுக்கு என்ன பண்ணச் சொல்றே?'' ஜோட்டன் மறுபடியும் காறித் துப்பினாள்.

பேலு இப்போது பேச்சை மாற்றினான். புதர்களுக்கிடையில் இப்படி நின்றிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று, அவ ளுடைய முகபாவத்திலிருந்தே அவனுக்குப் புரிந்துவிட்டது. அவன் மிகவும் நல்லவன் போல, "இவங்க என்னத்தை எடுத்துக்கிட்டுப் போறாங்க?' என்று கேட்டான். ''வாந்திபேதி அம்மனை." "மண்டையை உடைச்சுட்டா எப்படியிருக்கும் ?" ஜோட்டன் பல்லைக் கடித்துக்கொண்டு சொல்ல விரும்பினாள்; 'நாசமாப் போறவனே, உன் மண்டையை உடைச்சுடுவேன்' என்று. ஆனால் வாயிலிருந்து வார்த்தையொன்றும் வரவில்லை. எல்லாருக்குமே அவனிடம் பயம். யார் தலையை எப்போ வெட்டு வானோ தெரியாது. சிரித்துக்கொண்டே அநாயாசமாகத் தலையை வெட்டறதிலே அவனுக்கு நிகர் யாரும் இல்லை. ஆகையால் யாருமே அவனைச் சீண்டுவதில்லை. சீண்டினால் அன்று ராத்திரியே, 'பிஸ்மில்லா ரஹ்மானே ரஹீம்'னு ஆட்டைப் பலிகொடுக்கிற மாதிரி

110கழுத்தை வெட்டிவிடுவான். பலி கொடுக்கிற அன்னிக்கு இந்த ஆளைப் பார்த்தால் இன்னும் பயமா இருக்கும். ஆகையால் ஜோட்டன் எப்படியாவது அவனிடமிருந்து தப்பித்துக்கொண்டு புதர் வழியே ஓடிவந்துவிட முயற்சி செய்தாள்.

சைத்ர மாதத்தின் இறுதி வெயில் மூங்கில் காட்டுக்கு மேலே காய்ந்துகொண்டிருப்பதைக் கவனித்தான் போலு. சாம்சுத்தீன் தன் கோஷ்டியுடன் வெகுதூரம் முன்னால் போய்விட்டான். இப்போது வயல்வெளியில் யாரும் இல்லை , கள்ளிச் செடிகளும் புதர்களும் நிறைந்த இடத்தில் அவர்கள் இருவர் மட்டுமே நின்றார்கள், அவளுடன் சரசம் செய்பவன் போல் அவன் அவள் அருகில் குனிந்து கொண்டு, "ஒரு குத்து விடவா?" என்று கேட்டான்.

ஜோட்டன் பயந்துபோய், ''நாசமாப் போறவனே, உன்னை வாந்திபேதி கொண்டு போயிடும். வழியை விடு, இல்லாட்டாக் கத்துவேன்'' என்றாள்.

இப்படி ஓர் ஆபத்து நேரும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை அவள்,

பேலு சிரித்துக்கொண்டே சொன்னான் : "கோவிச்சுக்காதே, சும்மா விளையாட்டுப் பண்ணினேன்.'' பிறகு நாற்புறமும் பார்த்துக் கொண்டு சிரித்தபடி, ''வைசூரிச் சாமி, வாந்திபேதி சாமி அப்படீன்னெல்லாம் சொல்லி என்னைப் பயமுறுத்த முடியாது. வேணுமின்னா சொல்லு, இன்னி ராத்திரியே சாமி தலையை வெட்டிக் கிட்டு வந்துவிடுவேன்'' என்றான். சாம்சுத்தீன் தன் குழுவுடன் போனான். லீக்கின் கூட்டம் நடக்கப் போகிறது. பட்டணத்திலிருந்து மௌல்வி சாயபு வரப் போகிறார்.

ஆகையால் அரசியல் தலைவனைப் போல் உடையணிந்திருக்கிறான் பேலு. கட்டம் போட்ட லுங்கி. மேலே கையில்லாத கருப்புக் கலர் பனியன். கழுத்தில் துண்டை மப்ளரைப் போல் சுற்றிக் கொண்டிருக்கிறான், அவன் ஜோட்டனுக்கு வழிவிட்டான். மற்றவர்கள் வெகுதூரம் முன்னால் போய்விட்டார்கள். போய் அவர்களைப் பிடிக்க வேண்டும், அவன் வரப்பு வழியே வேகமாக ஓடினான். வாந்திபேதி அம்மன் கிராமத்துக்குள்ளே நுழைந்து விட்டாள். அப்போது ஒரு புகைப் படலம் உருண்டையாக மேலே எழுந்தது. அவள் பயந்தது நடந்துவிட்டது. ஆற்றில், வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை. வயல்கள் காய்ந்திருக்கின்றன; இலைகள் உலர்ந்திருக்கின்றன. நாள் முழுவதும் காயும் வெயிலில் கூரைகளும் சணல் தட்டையாலான வேலிகளும் காய்ந்து கிடக் கின்றன.

111ஜோட்டன் இடுப்பில் குடத்தை வைத்துக்கொண்டு ஓடினாள். பக்கத்துக் கிராமத்திலிருந்தும் ஜனங்கள் ஓடி வருவதைப் பார்த்தாள் அவள், ஸோனாலிபாலி ஆற்றிலிருந்து குடிதண்ணீர் எடுத்து வந்த வர்கள் கூட அந்தத் தண்ணீரை நெருப்பின் மேல் ஊற்றினார்கள். நெருப்பு காற்றுடன் சேர்ந்துகொண்டு தேர்ச்சியில்லாதவர்கள் கட்டிய குடிசைகளைப் பொசுக்கிச் சாம்பலாக்கியது. ஜோட்ட னின் குடிசை எரிந்துகொண் டிருந்தது. ஆபேத் அலியின் வீடு முன்னாலேயே எரிந்துவிட்டது. ஆபேத் அலி ஜாலாலியின் அலங் கோலமான சரீரத்தைக் கட்டிப் பிடித்து வைத்திருந்தான். இல்லா விட்டால் நெருப்பில் போய் விழுந்திருப்பாள் அவள். அவளுடைய துணிகள், தலையணை, ஜமுக்காளம், ஈயம் பூசின தட்டு, பீங்கான் பாத்திரம் எல்லாம் போய்விட்டன. நெருப்பு கிராமம் பூராவும் பரவி விட்டது. ஆகையால் பச்சை மூங்கில், வாழைமரம், சேறு நிறைந்த தண்ணீர் எல்லாமே நெருப்பை அணைக்கப் பயன்பட்டன. நாற் புரமும் பயங்கரக் காட்சிகள். தலையணையும் ஜமுக்காளமும் வைத் திருந்தவர்கள் அவற்றை வீட்டுக்கு வெளியே கொண்டுவந்து போட்டார்கள், ஜாலாலி மாமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு தலையிலடித்துக் கொண்டிருந்தாள், கிழக்கு வீட்டு நரேன்தாஸ் அரிவாள் எடுத்து வந்திருக்கிறான். நெருப்பு கூரைக்குக் கூரை தாவும் வாய்ப்பு இருக்கும் இடங்களில் கூரையை வெட்டித் தள்ளி நெருப்புப் பரவாமல் பார்த்துக்கொண்டான். ஜனங்கள் குனிந்து கொண்டு நெருப்பை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கிணற்று நீர் தீர்ந்துவிட்டது. ஹாஜி சாயபுவின் குளத்திலிருந்த கொஞ்ச நஞ்சம் தண்ணீரும் காலி. மன்சூர் வீட்டுக் குளத்தில் சேறுதான் பாக்கி, மக்கள் சேற்றை மண்வெட்டியால் எடுத்துக் கூரைகளின் மேல் எறிந்தார்கள். தூரத்தில் வாந்தி பேதி அம்மனுக்கு முன்னால் தாரையும் தப்பட்டை யும் முழங்குகின்றன. பிஸ்வாஸ்பாடாவில் ஹரிபாத பிஸ்வாஸ் விக்கி விக்கிச் செத்துப் போய்விட்டான். கோபால் டாக்டர் சைக்கிளை ஒட்டிக்கொண்டுவிட்டுக்கு வீடு ஓடினான், நோயாளியைப் பார்க்க, பணம் சம்பாதிக்க போகும்போது நெருப்பு எரிவதைப் பார்த்து விட்டு இந்தப் படிப்பறிவற்ற மக்களைத் திட்டினான். ஒவ்வொரு வருஷமும் ஏதாவதொரு கிராமத்தில் இப்படி நெருப்புப் பற்றிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. கற்றுக்குட்டி கோபால் டாக்டருக்கு நல்ல அதிர்ஷ்டம் இப்போது. நோயாளிகளைக் கவனிப் பதில் பணம், கஷ்டகாலத்தில் ஏழைகளுக்குக் கடன் கொடுப்பதில் வட்டி வரும்படி. கோபால் டாக்டர் வரப்பின்மேல் சைக்கிளை நிறுத்திக்கொண்டு மணியை அடித்தான், 'வாங்க, வாங்க. பணம்

112வேணும்னா பணம், மருந்து வேணும்னா மருந்து வாங்கிட்டுப் போங்க !' என்பது போல். சசீந்திரநாத் பாதரட்சைக் கட்டையைப் போட்டுக்கொண்டு ஓடி வந்தார் ஜோட்டன். ஆபேத் அலி, மற்றும் கிராமவாசிகள் எல்லா ரும் ஆறுதலுக்காக அவரைச் சூழ்ந்து கொண்டார்கள் அவர் எல்லா ருடைய முகத்தையும் பார்த்தார். எல்லாரும் ஆபேத் அலியைக் குற்றம் சொன்னார்கள். ""எல்லாம் விதி !" என்றார் சசீந்திரநாத். சாம்சுத்தீனின் கோஷ்டி இரவு வெகு நேரம் கழித்துத் திரும்பி வந்தது, கூட்டத்தை முடித்துக்கொண்டு, அவர்களும் இங்குமங்கும் அலைந்து எல்லாருக்கும் ஆறுதல் சொன்னார்கள். தீயை அணைக்கும் முயற்சியில் பெரிய பெரிய பச்சை மூங்கில்களையும் சேற்றையும் நெருப்பில் போட்டும் தீ அணையவில்லை. நெருப்பு அணையாது என்பது புரிந்ததும் அவர்கள் மசூதியை நோக்கிப் போனார்கள். மசூதியும் எரிந்து கொண் டிருந்தது. ஊரே எரிந்துகொண் டிருந்தது, கன் முன்னால், பிஸ்வாஸ்பாடா வில் இப்போதும் வாந்தி பேதி அம்மனுக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. நெருப்பிலிருந்து காப்பாற்றி வெளியில் கொண்டு வரப்பட்ட துணிமணிகளையும் சாமான்களையும் காத்துக் கொண் டிருந்தார்கள், அவற்றின் உடைமையாளர்கள். தீயின் ஒளியில் அவர்களுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது. கடைசியில் தீ சற்றுத் தணிந்தது. ஜோட்டன் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். நாற்புறமும் ஒரே இருட்டு. விட்டுவிட்டுப் புகை கிளம்பியது. அவள் இருட்டில் சப்தம் செய்யாமல் ஹாஜீசாயபு வின் களஞ்சிய வீட்டுக்குப் போனாள். ஏதாவது சாமான்கள் கிடைத் தால் எடுத்துக்கொள்ளும் ஆசையில் தாண்டித் தாண்டி நடக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் சுற்று வழியாகவும் போகவேண்டி யிருந்தது. எங்கும், பொங்கல் நாற்றம். பக்கத்தில் விபத்துக் குள்ளான மக்களின் மூலம் கேட்டது. இருட்டில் தனக்குப் பழக்க மான குரலைக் கேட்டு ஜோட்டன் சொன்னாள்: ''என் விடு எரிஞ்சு போச்சு, அண ணே ! நல்லதுதான். கண்ணு போகிற இடத்துக்குப் போறேன், வீடு இருந்த அந்தப் பாசம் விடாது."

அவள் சொல்ல விரும்பியது, ஆனால் சொல்லாமல் இருந்தது, "பக்கிரி சாயபுவும் வரல்லே. அவரும் வராதபோது யாருக்காகக் காத்துக்கிட்டு இங்கே உட்கார்ந்திருக்கணும்?' என்பதே.

ஜோட்டன் பேசிய அந்த ஆளுக்கு அவளுடைய கஷ்டம் புரிந்தது. "ஆபேத் அலிக்கு வேளை பொழுது இல்லே" என்று சொன்னான் அவன்.

113"யாரை என்ன சொல்றது சொல்லுங்க! அவன்தான் ஆம்பிளை, அவனுக்கு வேளை போது கிடையாது. பகல் இல்லே ராவில்லே - எப்பவும் வேணும். இந்தப் பொம்பளையாவது வேளைபோது பாக்கவேண்டாம்? இவ அம்மணமா நின்னா எப்படி ?"

அதன் பிறகு ஜோட்டன் நிற்கவில்லை. ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருட்டில் ஹாஜி சாயபுவின் களஞ்சிய வீட்டுக்குள் நுழைந்தாள். பெரிய பெரிய களஞ்சியங்கள் எரிந்துவிட்டன. நெல்லும் பருப்பும் எரிந்த நாற்றம் வீசியது. எங்கிருந்தோ ஒரு தவளை க்ளப்களப்' என்று சப்தம் செய்தது. ஜோட்டன் கனிந் திருந்த நெருப்புக் குவியலைக் கிளறிப் பார்த்தாள். ஒன்றும் கிடைக்க வில்லை. சாம்பல் மூடிக் கிடந்த நெருப்பு குபீரென்று எரிந்து மறுபடி அணைந்துவிட்டது. அதன் வெளிச்சத்தில் ஜோட்டனின் முகம் கர்ப்பிணியின் முகம் போல், பேராசையும் சாப்பாட்டு வெறியும் கொண்டு தோற்றம் அளித்தது. அவ்வொளியில் அவள் தான் போக வேண்டிய வழியைப் பார்த்துக்கொண்டாள். வாந்திபேதி அம்ம னுக்கு முன்னால் ஒலிக்கும் தாரை, தப்பட்டைகளின் ஒலி கேட்டது.

அப்போது ஹாஜி சாய்பு தன் மூன்று பீபிக்களின் மடியில் கால்களை வைத்துக்கொண்டு தலையிலடித்துக் கொண்டிருந்தார். அவருடைய மூன்று பிள்ளைகளின் மூன்று மனைவிகளும் வயலில் படுக்கையை விரித்துக்கொண்டு, ஏதோ ஒரு நல்ல தருணத்துக் காகக் காத்திருப்பவர்கள் போல் உட்கார்ந்திருந்தார்கள். 'நடந்தது நல்லதுதான். எல்லாம் உருண்டு போகட்டும்!' என்று சொல்வது போல் இருந்தது, அவர்களுடைய முகபாவம்.

இருட்டில் தான் மட்டும் தனியாக இல்லை என்று ஜோட்டனுக்குத் தோன்றியது. இன்னும் சிலரும் கையில் கட்டையை வைத்துக கொண்டு நெருப்பைக் கிளறிக்கொண் டிருந்தார்கள். தூரத்தில் ஓர் அறை நெருப்புக்கு இரையாகாமல் இருந்ததாகத் தோன்றியது. அவள் அந்தப் பக்கம் ஓடினாள். பாத்ர மாத்த்து மழை போல் அவளிடம் ஆசை பெருக்கெடுத்தது. அவளுடைய காலடிச் சப்தம் கேட்டு இருட்டில் யாரோ கேட்டார்கள், ''யாரு ?" என்று. ''நான் .... நான் தான் !'' யாரோ ஒருவன் இருட்டில் எதையோ தேடுவது அவளுக்குத் தெரிந்தது. 'நீ யாரு?''

அவன் பேலு ஷேக்கோ என்று அவளுக்குத் தோன்றியது. அவன் ஏதாவது சாமான் திருட வந்திருக்கலாம், அல்லது ஹாஜி சாயபுவின் இரண்டாம் பீபியுடன் காதல் செய்ய வந்திருக்கலாம். எல்லாரும் வயலில் இறங்கிப் போய்விட்ட பிறகு, எல்லாரும் தூங்கின

114.பிறகு, மறந்து போய்விட்ட எதையோ எடுத்து வரும் சாக்கில் ஹாஜி சாயபுவின் இரண்டாம் பீபி இருட்டில் அங்கு வரலாம். பேலுவைச் சந்திக்க. யார் கண்டுபிடிக்க முடியும் ? பேலுவின் வெறியைத் தணித்துக்கொள்ள... எப்பேர்ப்பட்ட வெறி அது ?

ஹாஜி சாயபு பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ இந்தப் பீபியைக் கூட்டி வந்திருந்தார்.

அப்போது பேலு அவருடன் இருந்தான். பேலு தான் காசு கொடுத்து ஆசை காட்டி மயக்கி அவளை ஹாஜிசாயபுவின் படகுக்கு அழைத்து வந்தவன். ஹாஜிசாயபு அப்போது ஹாஜியாகவில்லை. போலுவுக்கு நல்ல இளமை, புகழ் வேறு. அவன் அவளுடன் காதல் செய்யத் தருணம் பார்த்துக்கொண் டிருந்தான். அவள் சீதாமர வேலிக்கருகில் உட்கார்ந்துகொண்டு பாடுவாள். பேலு படகுத் துறையில் உட்கார்ந் திருப்பான். அவன் ஹாஜிசாயபுவின் பெரிய படகில் படகோட்டி யாக இருந்தான். சந்தைக்குப் படகில் போவான், சாமான்கள் கொள் முதல் செய்துகொண்டு வருவான். அவளுடன் காதல் புரிவதற்காகத் துறையில் உட்கார்ந்திருப்பான் அவன் ,

கலி முத்திசாயபு ஹாஜ் யாத்திரைக்குப் போய்விட்டு ஹாஜிப் பட்டத்துடன் திரும்பி வந்த பிறகு அவருக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது. ''அப்படியா சமாசாரம்!" என்று பேலுவை விரட்டி விட்டார். எவ்வளவோ காலத்துக்கு முந்தைய சமாசாரம் இது. அதன் பிறகு பேலு ஹாஜிசாயபு வீட்டுக்குப் போவதில்லை. ஆனால் இடையிடையே அவளுடைய முகம் நினைவுக்கு வந்து அவனுக்கு வெறியூட்டும்.

அப்போது அவனுக்குப் பைத்தியம் பிடித்தாற்போல் இருக்கும், பைத்தியக்கார டாகுரைப்போல, அவன் ஆற்றுப் படுகையில் இறங்கிவந்து அரசமரத்தடியில் புதர்களுக்குப் பின்னால் சப்தம் செய்யாமல் உட்கார்ந்திருப்பான், சீதாமர வேலிக்குப் பின்னால் அவளுடைய முகம் எப்போது தெரியும் என்று காத்துக்கொண்டு.

பேலுவின் பீபி அன்னு அடிக்கடி ஹாஜிசாயபுவின் வீட்டுக்குப் போவதுண்டு. ஆன்னுவும் ஹாஜிசாயபுவின் சிறிய பீபியும் ரொம்பச் சிநேகம். சிறிய பீபி ஆன்னுவுக்கு எண்ணெய், பருப்பு, பருப் புருண்டை எல்லாம் தருவாள். சிறிய பீபி தருவதாக ஆன்னு சொல்லுவாள். ஆனால் உண்மையில் தருவது இரண்டாவது பீபிதான் என்று நினைத்தாள் ஜோட்டன்.

சிறிய பீபிக்குத் தன்னிடம் ரொம்பப் பிரியம் என்று காட்டிக் கொள்வாள் ஆன்னு. ஜோட்டனுக்கு எல்லாம் தெரியும்.

வெறிபிடித்து விட்டால் பேலுவால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவன் தான் இப்போது இருட்டில் இரண்டாவது பீபிக்காகக்

115காத்திருக்கிறான். எங்கும் சத்தம், குழப்பம். யார் எங்கே இருக்கிறான் என்று யாருக்குத் தெரியும்? இதுதான் சரியான சமயம் என்று இங்கு வந்து காத்துக்கொண்டிருக்கிறான் போலு, அவளுடைய கண்களில் அப்படி என்ன தான் மாயம் இருக்கிறதோ ! மனசில்தான் என்ன இருக்கிறதோ! மனம் எப்போதும் எதையாவது விரும்பிக் கொண்டே இருக்கிறது. பேலுவுக்கு எப்போதும் ஏதாவது வேண்டி யிருக்கிறது. அவன் வீட்டில் அழகான பீபி ஆன்னு இருக்கிறாள். அவனுக்கும் வயது நாற்பதுக்கு மேலாகிவிட்டது. அப்படியும் அவன் மனம் எதற்கோ ஏங்குகிறது, இத்தனை வறுமையிலும்! ஆன்னுவுக்காக அவன் என்ன தான் செய்யவில்லை ஆல்தாப் சாயபுவின் தலையை அப்படியே வெட்டிவிட்டானே!

ஆல்தாப் சாயபு அறுவடை எப்படி நடந்திருக்கிறது என்று பார்க்கச் சணல் வயலுக்கு வந்திருந்தார். கிழவர் அல்தாப் சாயபுவின் கடைசி பீபியைப் பக்ரீத் பண்டிகையின்போது இவரின் தர்காவில் பார்த்ததும் பேலுவுக்குக் காதல் பைத்தியம் பிடித்துவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை அவனுக்கு. அப்போது இளமையின் கடைசிக் கட்டத்தில் இருந்தான் அவன். அவன் அடுத்த பக்ரீதுக்கு ஆல்தாப் சாயபுவின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான், அவருடைய விருந் தாளியாக, தான் ஒரு பெரிய வியாபாரிபோல் நடந்துகொண்டான். ஆல்தாப் சாயபுவைச் சணல் வியாபாரத்தில் இறங்கச் சொன்னான். அந்தக் காலத்தில் அவன் தன் தரடியில் அத்தர் பூசிக்கொள்வான். பாபுர்ஹாட்டிலிருந்து நல்ல லுங்கி வாங்கிக்கொண்டு வந்து உடுத்திக் கொள்வான். குஷி ஏற்பட்டால் தன் மெடல்களைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொள்வான்.

கிழவர் ஆல்தாப் சாயபு விளையாட்டுகளுக்கு உற்சாகம் அளிப் பவர். பிரபல விளையாட்டுக்காரன் பேலு தமக்கு எவ்வளவு வேண்டியவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினார். தன் பீபி களிடமும் குழந்தைகளிடமும் அவனைத் தம் அந்தப்புரத்துக்கே கூட்டிக்கொண்டு போய்விட்டார் அவர். காதல் கலை போலுவுக்குக் கைவந்த ஒன்று. மலர் மொட்டுப்போல் இருந்த கிழவரின் சிறிய பீபிக்கு அவன் தருணம் பார்த்து ஆமை போன்ற தன் அகன்ற மார்பைத் திறந்து காட்டினான். அதில் மெடல்கள் மின்னின. அப் போது ஆன்னுவுக்குத் தன் பால்யப் பருவம் நினைவுக்கு வந்தது. சிறுமி ஆன்னு விளையாட்டுப் பார்க்கப் போயிருந்தாள். சடுகுடு விளையாட்டு. பராபர்திஹாட்டில் விளையாட வந்திருந்தான் பேலு.

அன்று சந்தை நாள் அல்ல. இருந்தாலும் என்ன கூட்டம்! என்ன கூட்டம்! ஏழெட்டு மைல் தூரத்துக்குள் அன்று இளைஞன் ஒருவன் கூட வீட்டில் இல்லை.

116அன்று பக்ரீத் திருவிழாவைப் போல் வீட்டுக்கு வீடு கொடி பறந்தது. திருவிழாவின் நாயகனாக இருந்தான் போலு. அன்று விளையாட்டிலும் ஜயித்துவிட்டான். சிறுமி ஆன்னு அன்றே பேலுவிடம் காதல் கொண்டுவிட்டான்

அந்தப் பேலு இன்று ஆல்தாப் சாயாபுவின் விருந்தாளியாக வந்தி ருக்கிறான். அன்று பீபி தன்னையே கேட்டுக்கொண்டாள், 'இப்படியா இருக்கு உன் மனசு?' என்று .

அதன் பிறகு சமயம் பார்த்துப் பேலு சணல் வயலில் ஆல்தாப் சாயபுவின் கழுத்தை வெட்டிவிட்டான். பலியிடும்போது பிஸ்மில்லா ரஹ்மானே என்று சொல்லிக்கொண்டு எட்டுப் பத்துப் பலிகளை ஆராயாசமாக இடுவது போல் அவன் ஆல்தாப் சாயுபுவின் காததை வெட்டிவிட்டான். அவன் ஆன் சலுவுக்கு முகத்திரை அலாவித்துத் தன் வீட்டுக்குக் கூட்டி வந்த ஈ அன்றுதான் ஆலதாப் சாயுபுவைக் கொலை செய்த விஷயத்தை முதல் முதலாக அவளிடம் கூறினான். இதைக் கேட்டு ஆன்னு சொன்னாள், "இதுவா உன் கண்ணாம்'' என்று சொல்லிவிட்டு அந்தப் பரந்த வயல்வெளி யில் "ஹா... ஹோ' வென்று சிரித்தாள்.

ஆன்னுவைப் பார்த்தால், அவள் போலுவுக்காக இவ்வளவு பெரிய கொடையைக் கூடச் சகித்துக்கொண்டிருக்கிறாள் என்று தோன்றவே தோன்றாது.

பேலு இருட்டில் அந்தப் பக்கம் வரும் ஓர் உருவத்தைக் கண்டு ஹாஜி சாய்புவின் இரண்டாவது பீபி தான் சப்தம் செய்யாமல் வந்திருக்கிறாளென்று நினைத்தான்.

ஆனால் இது யார் குரல் ? ஜோட்டன் மாதிரியல்லவா இருக்கிறது. திருட வந்திருக்கிறானென்று யாராவது பிடித்துக்கொண்டால்? அவனுக்குப் பயம் பிடித்தது.

ஜோட்டன் எரிச்சலுடன் கேட்டாள் : "என்ன மியான் ! உன் பேரைக் கூடச் சொல்லக் கூடாதோ ?' பேலு பொய் சொன்னான். "நான் மதிஉர்." ''உன்னோட மத்த ஆளுக எங்கே ?" ''அவங்க நெருப்பைப் பார்த்துட்டுப் பயந்து ஓடிட்டாங்க.'' " நீ இங்கே என்ன செய்யறே?'' ''பீங்கான் தட்டு தேடறேன்." 'இந்த அறையிலே நெருப்புப் பிடிக்கல்லேன்னு ஹாஜி சாய்பு வுக்குத் தெரியல்லே ,'' "ஹாஜி சாயபுவுக்கு நெருப்புன்னா ரொம்பப் பயம்.'' அந்த ஆள் தூரத்திலிருந்தே பேசினான். குரல் தெளிவாகக் கேட்கவில்லை. ஒரு சமயம் அந்தக் குரல் பக்கிரி சாயபுவின் குரலைப்

117பேசுவது போஓட்டம் பாபினாள் ஜே"ஏதாவது 25

போல் இருக்கிறது ; இன்னொரு சமயம் பேலுவே மதி உரைப் போல் பேசுவது போலிருக்கிறது. அந்த ஆள் இருட்டில் எதையோ எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். 'பிடி, பிடி' என்று கத்த விரும்பினாள் ஜோட்டன். ஆனால் கத்த முடியவில்லை. அவளே திருட வந்தவள் தானே ! ஏதாவது தட்டு, நெல், பாதி எரிந்த துணிகள், எது கிடைத்தாலும் சரி, தான் எடுத்தவற்றை அவள் மாமரத்தடியில் கொண்டுவந்து சேர்த்தாள். ஜாலாலி அவற்றுக்குக் காவல் இருந்தாள். பொறுக்கிய சாமான்களை - அங்கே போட்டுவிட்டு மறுபடி இருட்டுக்குள் புகுந்தாள், ஹோட்டன் இன்னும் சாமான்கள் எடுக்க, பிஸ்வாஸ் பாடாவிலிருந்து அழுகையொலி காற்றில் மிதந்து வந்தது. அப்போது வாந்திபேதி அம்மனுக்குத் தீபாராதனை நடந்தது. யாராவது வாந்திபேதியில் இறந்து போயிருக்கலாம். ஜோட்டன் இருட்டில் தட்டு, பாத்திரம், பித்தளைக் குவளை இவற்றைத் தேடிக் கொண்டே அந்த அழுகையொலியைக் கேட்டாள். யாரோ ஆற்றங்கரைப் பக்கம் ஓடினார்கள். மரத்தடியில் இங்குமங்கும் எரிந்துகொண் டிருந்த விளக்குகள் காற்றில் அணைந்துகொண்டிருந் தன, வயலில் ஹாஜி சாயபுவின் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கு மாத்திரம் எரிந்தது. ஊரில் வைசூரி பரவியிருந்தால் ஒரு கெட்ட ஆவி காற்றில் வளைய வரும். அதுபோல் ஜோட்டன் இருட்டில் திரிந்து கொண் டிருந்தாள். அவள் சப்தம் போடாமல் அடிமேலடி எடுத்துவைத்தாள். வயலில் ஹாஜி சாயபு, "சோபான் அல்லா, சோபான் அல்லா!'' என்று கத்திக்கொண் டிருந்தார். அவரால் தூங்க முடியவில்லை, அவருக் கருகில் அவருடைய சிறிய பீபி யார் எப்போது, என்ன செய்து விடுவானோ என்ற பயத்தில் அவருக்குத் தூக்கம் வரவில்லை.

பாழடைந்த குடிசையை மட்டும் இழந்தவர்கள் கோரைப் புல்லைப் படுக்கையாக விரித்துக்கொண்டு தூங்கிப் போய்விட்டார்கள். பொழுது விடிந்ததும் எல்லாரும் வயிற்றுப் பிழைப்புக்காக இந்து பாடாவுக்குப் போகவேண்டும். மூங்கிலெல்லாம் இந்துபாடாவில் தான் கிடைக்கும். சணல் வயல்களும் இந்துக்களுக்குத்தான் சொந்தம். அவர்களிடமிருந்து சாமான்கள் கேட்டு வாங்கிவந்து குடிசை கட்டி முடிப்பதற்குள் மழை வந்துவிடும்.

ஜோட்டன் தன் வீட்டைப் பற்றி நினைத்தாள், மழைக் காலத் தைப் பற்றி நினைத்தாள், பேலுவைப் பற்றி நினைத்தாள். பேலு எப்போது பார்த்தாலும் உதைக்க வருகிறான். மன்சூரைப் போல் அழகாகவும் இல்லை அவன். "இருக்கட்டும், ஒரு நாள் அவனுக்கு

118ஒரு குத்து விடுகிறேன்!' என்று நினைத்துக்கொண்டாள் அவள். ஒரு பித்தளைக் குவளை அவளுக்குக் கிடைத்தது. அதை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிப் போய் ஜாலாலியிடம் அதைக் காட்டினாள். “என்ன கொண்டுவந்திருக்கேன், பாரு !" என்றாள்.

ஜாலாலி அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். எவ்வளவு பெரிய பித்தளைக் குவளை ! அவளால் கண்களை நம்ப முடியவில்லை.

ஆபேத் அலி பக்கத்திலேயே கழுத்தை நீட்டிக்கொண் டிருந்தான், அவன் பாத்திரத்தைக் கையால் தடவிப் பார்த்தான். அதைப் பார்த்ததுமே அவனுக்குத் தாகம் ஏற்பட்டுவிட்டது. 'இந்தக் குவளை நிறையத் தண்ணி கடகடன்னு குடிக்கணும்." ஜாலாலி இன்னும் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடப் புறப் பட்டாள். ஜோட்டன் தண்ணீர் எடுத்துவரப் போனாள். பக்கத்தில் வேறு யாரும் இல்லை. ஆபேத் அலி ஜாலாலியை அறையப் போனான்; "திருடவா போறே? உனக்கு என்ன தைரியம் ?" அவன் துணியால் முகத்தைத் துடைத்துக்கொண்டான். வியர்வை யில் முகமெல்லாம் அரித்தது. அவன் மாமரத்தின் மேல் சாய்ந்து கொண்டான். தண்ணீருக்கும் பஞ்சம். ஜோட்டன் தண்ணீர் திருடிக்கொண்டு வரப் போயிருக்கிறாள்.

ஜாலாலி சற்று நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு ஆமையைப் போல் கழுத்தை உயர்த்திக்கொண்டு, "நாசமாப் போறவனே ! உன்னாலேதான் வீட்டிலே நெருப்புப் பிடிச்சது" என்று கத்தினாள்.

அவளுடைய கூச்சலைக் கேட்டுப் பயந்துவிட்டான் ஆபேத் அலி. "என்னாலேயா ?''

நான் எல்லார்க் கிட்டேயும் சொல்றேன், பாரு!'' *'என்ன சொல்லுவே?'' 'நீ என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டேன்னு.'' 'ஆமா. இழுத்தேன். நீ சமையல் செய்யறபோது ஏன் வயத்தைக் காட்டினே ?" ''உனக்கு வேளை போது கிடையாதா?" எல்லாமே நெருப்புப் பிடித்தாற் போல் திடீரென்று நடந்து விட்டது. ஆபேத அலி மரத்தின்மேல் இன்னும் நன்றாகச் சாய்ந்து கொண்டான். எனக்கு மட்டும் ஆசையிருக்காதா ? பக்கிரி சாயபு வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்தார். மரத்தின் மேல் ஒரு காகங்கூடப் பறக்கவில்லை. அவர் கிராமத்து வீடுகளைப் பார்த்தார். வைசாக மாதம் முடியும் சமயம். மாமரங்களில் நல்ல விளைச்சல். அவர், தம் தாயத்து மூட்டையிலிருந்து ஒரு பெரிய

119பொட்டலத்தை எடுத்தார். அதிலிருந்த மாமிசத்தைப் பார்த்தபோது அவருக்கு நினைவு வந்தது. இந்தத் தடவை பலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய் விட்டதென்று.

..வ்வளவு பலிகள் நடந்திருக்கிறதென்று அவரால் விரல்விட்டு எண்ணிவிட முடியும். வேறெந்த வருடமும் பக்ரீதில் இவ்வளவு குறைந்த பலிகள் நடந்ததில்லை. ஆகையால்தான் மாமிசம் கிடைக்காமல் காகங்கள் தவிக்கின்றன. எவ்வளவு பறந்தும் எங்கும் அவற்றுக்கு மாமிசம் கிடைக்கவில்லை. அவை இங்குமங்கும் பறந்து போய்விட்டன. ஆகையால் அவருக்குக் கவபை விட்டது. பொட்டலத்துக்குள் கையை விட்டு வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டு, சுண்ணாம்பு டப்பியிலிருந்து சுண்ணாம்பு எடுத்து உதட்டில் வைத்துக்கொண்டபோது அவருக்குத் தாம் முன்பொரு நாள் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது.

எதிரில் பாதை. தூரத்தில் எங்கேயோ இந்துக்கள் திருவிழா ஒன்று நடக்கிறது. நயாபாடாவைத் தாண்டிப் போனால் குதிரைப் பந்தய மைதானத்தில் இந்தச் சீசனின் கடைசிப் பந்தயம் நடக்கும். அங்கே போனால் தேவலை. வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்ததில் பழைய வாக்குறுதி ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பாதையில் கழுத்து மணியை ஆட்டிக் கொண்டு குதிரை போகிறது. பிஸ்வாஸ்பாடாவைச் சேர்ந்த காலூாபிஸ்வாஸின் அருமைக் குதிரை. நல்ல கறுப்பு, நெற்றி மட்டும் வெள்ளை. கழுத்தில் தங்க நிறச் சோழி மாலை தொங்கியது. குதிரை பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டது.

கோடைக் காலத்தின் முடிவில் ஏற்பட்ட மழையும் புபாலும் சில விடுகளை இடித்துத் தள்ளிவிட்டன. வயலில் சணலின் இளம் பயிர் கள் காற்றில் அசைந்தன. வயல்களில் இங்குமங்கும் உழவர்கள் தலையில் தொப்பி அணிந்துகொண்டு, 'அல்லா, மேகத்தைக் கொடு! தண்ணியைக் கொடு!' என்று பாடியவாறே களையெடுத்துக் கொண் டிருந்தனர். சைத்ரமாதத்தின் தகிப்பும் வரட்சியும் போய்விட்டன. இப்போது வயல்கள் பசுமையாக இருக்கின்றன. 'வருடம் முடிந்து விட்டது, துக்கமும் முடிந்துவிட்டது' என்ற பாவம் மக்களின் முகத்தில். பஞ்சத்தின் கொடுமை அவ்வளவு இல்லை. ஏழைகள் இலைகளையும் கீரைகளையும் தின்று பிழைத்துக்கொள்ளலாம். வெயில் வேளையில் சணல் தளிர்களைக் கீரையாகச் சமைத்து ஒரு தட்டுச் சாதத்துடன் சாப்பிட்டால் சுகமாக இருக்கும்.

முஸ்கிலாசான் பாத்திரத்துக்கு அடியில் பலியிட்ட ஆட்டின் மாமி சத்தை எடுத்து வைத்துக்கொண்டபோது அவருக்குத் தோன்றியது.

120'கடைசிக் காலத்துக்கு ஆதரவாக ஜோட்டனைக் கட்டி வைத்துக் கொண்டால்..... மாமிசத்தைப் போல் அவளும் மலிவுதான். கிராமத் துக்குப் போகத் தீர்மானித்தார் அவர்.

முள் கிலாசானில் எண்ணெய் இல்லை, அவர் தர்காவில் பூண்டு நனைத்து வைத்திருந்தார். அதன் எண்ணெயை எரித்தால் நல்ல வெளிச்சம் வரும். தர்காவுக்குத் திரும்பிப் போனால்தான் எண்ணெயை நிரப்பிக்கொள்ள முடியும். முள் கிலாசான் விளக்கை ஏற்றிக் கொண்டு, குழந்தைகளுக்குக் கண்களால் மைாட்டுக் கொண்டு ஆஸ்தானா சாகேபின் தர்காவில் ரசூலிடம். ஜோட்டாறுக் காகப் பிரார்த்தனை செய்யவேண்டுமென்று நினைத்திருந்தார் அவர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

அவர் மசூதிக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கால்களைக் கழுவிக்கொண்டார். நுாறு இடங்களில் கிழிந்த ஒரு ஜோடி துணிச் செருப்புக்களை அணிந்துகொண்டார். அதில் கால் நுழைக்கும் போது கட்டைவிரல் அமைப்பின் கழுத்தைப் போல் செருப்புக்கு வெளியே நீட்டிக்கொண்டது. அப்போது புனர் இஷ்டி குடும் பறவை கூவியதைக் கேட்டுப் பக்கிரி சாயபு, இன்று நான் நன்றாக போகும் என்று சொல்லிக்கொண்டார்.

அபேத் அலியின் வீட்டு வாசலுக்கு வரும்போது, முள் கிலாசான் எல்லாம் கைகூடச் செய்துவிடும் என்று சொல்லிக்கொண்டே வந்தார். திருவிழா நாளில் ஜோட்டன் வீட்டில் இல்லை என்று அவருக்குப் புரிந்தது. அவர் வீட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டு, ''அவங்களைக் கொஞ்சம் கூப்பிட்டாத் தேவலை. ரொம்பத் தூரத்தி லிருந்து வரேன் அப்புறம் எப்போ மறுபடி வருவேன்னு சொல்ல முடியாது. அதனாலே அவங்களைக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு நினைக்கிறேன்'' என்றார்.

பிறகு அவர் யார் தயவையும் எதிர்பாராமல் தம் கிழிந்த லுங்கியைப் புல்லின்மேல் விரித்து அதில் உட்கார்ந்துகொண்டார். மாலைகளை யும் தாயத்துகளையும் கழற்றிப் பத்திரமாக மூட்டைகளுக்கு அருகில் வைத்தார். வேறொரு பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை அவர். கல்யாணத்துக்கு வக்கீல், சாட்சி. மௌல்வி சாயபு எல்லாருமே தயாராயிருப்பது போல் இருந்தது, அவர் நடந்து கொண்ட விதம். அவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு முகத்தை உயர்த்திய போது, ஜாலாலி ஜோட்டனுக்குச் செய்தி சொல்வதற்காக ஹாஜி சாயபுவின் வீட்டை நோக்கி ஓடுவதைக் கண்டார். ஜாம்ருல் மரத்தின் இடுக்கு வழியே பக்கிரி சாயபுவுக்கு ஜோட்டனின் முகம் மங்கலாகத் தெரிந்தது. அவளுடைய உடம்பில் முன்பிருந்த பலம் இல்லை. அவள் தன் குடிசைக்குள்

121நுழைந்தாள். இப்போது பக்கிரி சாய்புவால் அவளைப் பார்க்க முடிய வில்லை. ஆனால் குடிசைக்குள்ளிருந்து வந்த சப்தங்களிலிருந்து அவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டார். நனைந்த சணலைப் போன்ற தலை மயிர். எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டை போட்டுக்கொண்டிருக் கிறாள்! ஜோட்டன் வேலி இடுக்கு வழியே தம்மைப் பார்த்து மயங்குகிறாள் என்பதை அவர் திரும்பிப் பார்க்காமலேயே உணர்ந்து கொண்டார்.

அவர் மரத்தின் பக்கம் பார்த்துக்கொண்டு, சீக்கிரம். சீக்கிரம் !" என்றார்.

ஜோட்டன் வெட்கத்தால் குன்றிப் போய் வீட்டுக்குள்ளிருந்து கிசு கிசுத்தாள், "ஆபேத் அலி வரட்டும்" என்று. "வக்கீலைக் கூப்பிடணுமே!" ஜோட்டனுக்கு இப்போது கொஞ்சம் துணிவு வந்தது. 'ஆபேத் அலி வந்து எல்லாம் ஏற்பாடும் பண்ணுவான். நீங்க கவலைப் படாதீங்க !" என்றாள் அவள். பக்கிரி சாயபு தாம் சேர்த்து வைத்திருந்த மாமிசத்தின் மேல் கையை வைத்துக்கொண்டு. "பொழுது சாயறதுக்குள்ளே புறப் படணும். இல்லாட்டி மாமிசம் வீணாப் போயிடும்" என்று கூறியபடி. மாமிசப் பொட்டலத்தை மூக்கால் முகர்ந்தவாறே அவர், ''மாமிசத்துக்கு மசாலா, உப்பெல்லாம் நல்லாப் போடத் தெரியுமா உனக்கு ?" என்று கேட்டார். குடிசைக்குள்ளிருந்து 'களுக்' கென்று சிரித்துவிட்டாள் ஜோட்டன். "ஏன், கூட்டிக்கறதுக்கு முன்னாலே பரிசோதிச்சுப் பாக்கலா மேன்னு தோணுதா?'' ''தோணுதுதான். ஆனா பொழுதாயிடுச்சே!'' ஜோட்டன் பல் விளக்கினாள். நன்றாக வாயைக் கொப்புளித்து விட்டுப் பானையிலிருந்து வெற்றிலைப் பாக்கு எடுத்து வாயில் போட் டுக் கொண்டாள். ஜாலாலி வருவது புதரடுக்கு வழியே தெரிந்தது. அரசமரத்து உச்சியிலிருந்து வெயில் இறங்கிக்கொண் டிருந்தது. வயல் வேலையாட்கள் தலையில் புல்கட்டும். சணல் பயிர்கட்டுமாக வந்துகொண் டிருந்தார்கள். திருவிழா நாளாயிருந்தும் ஆபேத் அலி டாகுர் வீட்டில் வேலைக்குப் போயிருந்தான். இப்போது அவன் திரும்பும் நேரந்தான். ஜோட்டன் தன் உதடுகளை வெற்றிலைச் சாற்றால் சிவப்பாக்கிக்கொண்டு கட்டம் போட்ட புடைவையை - அவள் பாபூர்ஹாட்டில் வாங்கியது - எடுத்துக் கட்டிக்கொண்டாள்

அப்போது தன் நெஞ்சே உலர்ந்துவிட்டதாகத் தோன்றியது அவளுக்கு. அவள் தன் உதட்டிலிருந்து கொஞ்சம் எச்சிலை எடுத்து

122நெஞ்சில் தடவிக்கொண்டாள், தன் உலர்ந்த உடம்பை மிருதுவாக ஆக்கிக்கொள்ள, அவளுக்குத் தோன்றியது, பக்கிரி சாய்புவின் கிழட்டு எலும்புகள் ஆக்ரான் மாதத்து நெல்லைப் போல என்று. அவை புகலிடம் அளிக்கும், நிக்காஹ் செய்து கொள்ளும், திறந்த வெளிபோல் அம்மணமாக விளையாடும்.

அவளுடைய நெடுங்கால ஆசை நிறைவேறப் போகிறது. அல்லாவுக்கு வரி கொடுக்க இந்த வயதிலும் சரீரம் பாடுபடும். பொழுது இருக்கும்போதே ஆபேத் அலி வந்துவிட்டான். உடனேயே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தான். கிராம மக்கள் சிலர் வாசலில் கூடினார்கள்,

ஆபேத் ஆலி எல்லாருக்கும் வெற்றிலை, பாக்கு, புகையிலை கொடுத்தான். ஹாஜிசாய்புவின் சிறிய பீபி ஜோட்டனுக்கு ஒரு கிழிந்த முகத்திரை கொடுத்தாள். ஜோட்டன் தான் நெருப்பிலிருந்து எடுத்து வந்த பித்தளைக் குவளையைக் கொண்டு வந்து பக்கிரி சாயுபுவுக்கு அருகில் வைத்தாள்.

ஜோட்டன் லாங்கல் பந்து சந்தையிலிருந்து இரண்டு மண் குடங்கள் வாங்கி வைத்திருந்தாள். அவற்றையும் மற்றச் சாமான்களையும், இரண்டு சட்டிகள், அவள் கோடைக் காலத்தில் சேர்த்து வைத்திருந்த சருகுகள், சணல் தட்டைகள் எல்லாவற்றையும் ஜாலாலிக்குக் கொடுத்துவிட்டாள். ஒரு கிழிந்த துணியில் தன் உடைந்த கண்ணாடி, டாகுர் விட்டுப் பெண்கள் தூக்கியெறிந்த மரச்சீப்பு, பீங்கான் தட்டு, சாப்பிட ஒரு சேவைப் பொட்டலம் இவற்றை எடுத்து வைத்துக்கொண்டாள். புறப்படும்போது வழக்கம்போல் ஆபேத் அலியின் கையைப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.

இது நாலாவது நிக்காஹ். நான்காவது தடவையாக ஜோட்டன் தன் பிறந்தகத்தை விட்டு விட்டுக் கணவனுடன் புறப்படுகிறாள், கடவுளுக்கு உடலால் வரி கொடுக்க. பக்கிரி சாயபு எல்லாச் சாமான்களையும் கவனமாக மூட்டை கட்டினார். பித்தளைக் குவளையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு அதிலிருந்த தண்ணீரை உறிஞ்சிக் குடித்தார். மிச்சம் இருந்த தண்ணீரைக் கீழே கொட்டினார். இடக் கையில் பித்தளைக் குவளை, தோளில் துணி மூட்டை, வலக் கையில் முஸ்கிலாசான், வாயில் அல்லா அல்லது ஈதலின் பெயர் - இவ்வாறாக அவர் புறப்பட்டார். ஜோட்டன் ஒரு கையில் ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டாள். ஆபேத் அலியின் வீட்டுக்குள் நுழைந்து முகத்திரையை அணிந்துகொண்டாள். பிறகு ஆபேத் அலியிடம், ''ஜாலாலியை அடிச்சி இம்சிக்காதே" என்றாள், பிறகு ஜாலாலியிடம், "அவனுக்கு வேள் வேளைக்குச் சமைச்சுப் போடு'' என்று கூறினாள்.

123இதையெல்லாம் சொன்னபோது ஜோட்டனின் கண்களில் நீர் வந்துவிட்டது. எவ்வளவு காலத்துக்குப் பிறகு இந்தக் கல்யாணம்! அவளுக்குத் தன் பதின் மூன்று குழந்தைகளின் நினைவு வந்தது. இந்தக் கண்ணீர் அவர்களுக்காகத்தானோ ? அவளுடைய அதிருஷ்டம், அவளுக்கு எங்கும் நிலையான புகலிடம் கிடைப்ப தில்லை. அவள் நான்காவது தடவையாகக் கணவன் வீடு போகிறாள். அல்லாவுக்கு வரி கொடுக்கப் போகிறாள். ஏதாவது ஒரு காரணத்தால் அல்லாவின் கருணை தீர்ந்துவிட்டால் அவள் மறுபடி திரும்பி வருவாள். ஸோனா லிபாலி' நதியிலும் ஏரியிலும் கல்லிக்கிழங்கு பிடுங்கி, வீட்டுக்கு வீடு அவல் இடித்துக் கொடுத்து விசேஷங் களுக்குச் சம்சாரி வீடுகளில் உதவி வேலை செய்து.... இன்பமாகவோ துன்பமாகவோ தன் காலத்தைக் கழிப்பாள்.

முகத்திரை அணிந்துகொண்டு ஜோட்டன் நடந்து சென்றாள். அவள் மறுபடி குடித்தனம் செய்யப் போவதை அப்பிராந்தியத்தில் இருந்தவர்கள் பார்த்தார்கள். குடித்தனம் செய்து சில குழந்தைகள் பெற்றுவிட்டு அவள் திரும்பிவருவாள். ஆபேத் அலி மறுபடியும் அவளுக்குத் தென்பக்கத்துக் குடிசையைத் திறந்து கொடுத்துவிட்டு அவளோடு தகராறு செய்வான் என்று எல்லாருக்கும் தெரியும். அவள் போவதைப் பார்த்துவிட்டு இந்து பாடாவிலுள்ள பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து சிரித்தார்கள். புதருக்குள் பிரம்புப் பழம் தேடிக்கொண்டிருந்த மாலதி ஜோட்டனைப் பார்த்துவிட்டுத் தன் அண்ணியைக் கூப்பிட்டாள். '' அண்ணி, இங்கே வந்து பாருங்க. ஜோட்டன் ஒரு பக்கி யோட போறா.''தீன பந்துவின் மனைவியும் ஜோட்டனைப் பார்க்க சப்தபர்ணி மரத்தடிக்கு ஓடிவந்தாள். டாகுர் வீட்டுப் பெண்களும் குளக் கரைக்கு ஓடிவந்தார்கள்.

கையில் முஸ்கிலாசானும், தோளில் மாமிசப் பொட்டலமும், கழுத்தில் தாயத்து மாலையுமாகப் பக்கிரிசாயபு நிமிர்ந்து பார்த்துக் கொண்டு நடந்தார். நூறு கிழிசல்களுக்கு ஓட்டுப் போட் டிருந்தது, அவர் அணிந்திருந்த நீண்ட அங்கியில் கிடைத்த துணித் துண்டுகளைக் கொண்டு ஒட்டுப் போட்டிருக்கிறார் அவர். அங்கியும் அல்லா படைத்த உலகத்தைப் போல், உலகத்தில் எது எங்கே

124கிடைக்கிறதோ அது அங்கேயே வைக்கப்பட்டிருக்கிறது அல்லவா அதைப்போல் !

வயல்கள், செடிகொடிகள், பறவைகள், ஆற்றங்கரை, தர்மூஜ் வயல் - எல்லாமே ஒரு பெரிய அங்கியில் போடப்பட்டுள்ள ஒட்டுக் கள் தாம். ஆச்சரியமான செழிப்பு மண்ணாலும் தண்ணீராலும் உலகத்தை அழகாக்கியிருக்கிறார் அல்லா,

முகத்திரை அணிந்து கொண்டு வழி நடக்க ஜோட்டன் சிரமப்படு வதைக் கண்டார் பக்கிரி சாயபு. ஆனால் இந்தப் பழக்கமான இடத்தி லாவது முகத்திரை யணிந்துகொண்டு போகாவிட்டால் மரியாதை யாக இருக்காது. அவர் அவளை வேகமாக நடக்கச் சொன்னார்.

ஜோட்டன் முகத்திரைக்குள் பித்தளைக் குவளையை வைத்துக் கொண்டு வேகமாக நடக்க முயன்றாள். கிராமத்தை விட்டுப் போகுமுன் நரேன் தாஸின் விதவைத் தங்கை மாலதியிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போக ஆசை அவளுக்கு. மாலதியின் வாத்துக்கள் க்வாக், க்வாக்' என்று கத்திக்கொண் டிருந்தன. 'ஆண்வாத்து ஒன்று இல்லாமல் மாலதிக்கு ரொம்பக் கஷ்டம். மாலதி தன் உடம்பால் அல்லாவுக்கு வரி கொடுக்கமாட்டாள்' என்பது குறித்து ஜோட்டனுக்கு வருத்தமாயிருந்தது.

ஆறு, வாய்க்கால்களைக் கடந்தபோது ஜோட்டனின் கையைப் பிடித்து மூங்கில் பாலத்தின் மேல் ஏற்றிவிட்டார் பக்கிரிசாயபு, கொள்முதல் செய்து கொண்டு வருகிறார் அவர். கையிலிருந்த முஸ்கிலாசான, சிங்காடாப் பழம் போல் மூன்று பக்கத்தில் மூன்று முகங்களாக இருக்கிறது. மை சேர்த்து வைக்கப்பட்டிருந்த குழியில் ஒரு மெல்லிய குச்சி இருக்கிறது. நான்கு கோசதூரம் போக வேண் டும். ஜேஷ்ட மாதமாதலால் ஆற்றில் நீர் பெருகத் தொடங்கிவிட்டது.

பக்கிரிசாயபு ஜோட்டனை ஒரு பூவரச மரத்தடியில் நிறுத்திவைத்து விட்டு, எதிரிலிருந்த சந்தையில் சாமான் வாங்கப் போனார். அவர் வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்கிறாள். அவள் வீட்டில் விளக்கேற்றி வைப்பாள். தூரத்தில் தர்காவுக்குப் பக்கத்தில் பக்கிரி சாயபுவின் குடிசை. திருவிழாக் காலத்தில் தர்காவில் புதைகல்லுக்கு மேலே நிறைய மெழுகுவர்த்திகள் எரியும். அவற்றின் வெளிச்சத்தில் புதர்களெல் லாம் வெள்ளையாகத் தெரியும். அவர் கறுப்பு அங்கி அணிந்து கொண்டு முஸ்கிலாசான் விளக்கை ஏற்றிக்கொண்டு இருட்டில் வயல்களைக் கடந்து சம்சாரிகளின் வீட்டுக்குப் போவார். தடித்த குரலில், ''முஸ்கிலாசான் காரியம் கைகூட வைக்கும்!'' என்று கத்துவார். அதைக் கேட்ட மக்கள் பயப்படுவார்கள். அவருடைய கண்கள் செம்பரத்தைப் போலச் சிவந்திருக்கும். பூண்டு

125எண்ணெயைக் கண்ணில் விட்டு அதைச் சிவப்பாக வைத்துக் கொள்ளாவிட்டால் அவரைப் பார்த்து யாரும் பயப்படமாட்டார்கள். அவருக்குக் காசு போடமாட்டார்கள். இப்படி வெளியில் புறப்பட்டு விட்டால் பிறகு வீடு திரும்பவே மனம் இருக்காது அவருக்கு. இருட் டில் விதவிதமான புற்களில், வயல் வரப்புகளில் ஒரு பயங்கர ரகசியம் இருப்பது அவருடைய உணர்வில் படும். இந்த அதிசய ரகசியத் துக்குள் அல்லா மறைந்திருக்கிறார் என்று தோன்றும் அவருக்கு.

சந்தையிலிருந்து திரும்ப வெகு நேரமாகவில்லை அவருக்கு, சந்தையைத் தாண்டினால் லோக்நாத் பிரம்மசாரியின் ஆசிரமம். அவர் ஜோட்டனைக் கேட்டார், ''பாபா லோக்நாத்தைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா?" என்று.

ஜோட்டன் முகத்திரைக்குள்ளிருந்து பதில் சொன்னாள்: "அப்போ ஒரு அணாவுக்குக் கல்கண்டு வாங்கிக்கங்க."

பக்கிரி சாயபு, திடீரென்று நினைவு வந்தவர் போல், ''பலி மாமிசத்தை எடுத்துக்கிட்டு அவர்கிட்டே போகலாமா ? ஜேஷ்ட மாசம், பாபாவோட திருவிழா நடக்குமே. அதுக்கு வாலாம். இனியும் தாமதிக்க வேண்டாம். காலா காலத்திலே போய்ச் சேரணும். இன்னும் ஒரு கோச தூரம் இருக்கு. கொஞ்சம் வேகமாக நட.' அவர்கள் வேகமாக நடந்தார்கள். பக்கிரி சாயபு சொன்னார்: ''பி ரொம்ப நாளாகவே நினைச்சுக்கிட் டிருந்தேன், உங்கிட்டே வரணுமின்னு. ஆனா தைரியம் வரல்லே.'' ""ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க ?" ''என் குடிசை ரொம்பச் சின்னது. சுத்தி ஒரே காடு. புதைகல். பெரிய பெரிய காட்டு வாகைமரம். --ரங்கே வசிக்க உனக்குப் பயமாயிருக்கும் ராத்திரியிலே.'' 'நீங்க என் கண்மணி !' என்று சொல்ல ஜோட்டனுக்கு ஆசை. ஆனால் இவ்வளவு சீக்கிரம் காதல் பேச்சுப் பேச வெட்கமாயிருந்தது அவளுக்கு. பொழுது சாய்ந்துகொண் டிருந்தது. சூரியன் மேகனா நதியின் மறுகரையில் அஸ்தமித்துக்கொண் டிருந்தான். பக்கிரிசாயபு ஒரு குளத்தில் கைகால்களைக் கழுவிக்கொண்டு தொழுகை செய்ய உட்கார்ந்தார். அவருக்கு அருகில் ஜோட்டனும் உட்கார்ந்தாள். சூனியமான வயல்வெளி, அஸ்தமிக்கும் சூரியன். எதிரில் தெரியும் கிராமந்தான் சுல்தான்பூர் என்று தோன்றியது ஜோட்டனுக்கு. அவளுக்கு மிகவும் பிடித்தமான கிராமம் சுல்தான்பூர். அவளுடைய முதல் கல்யாணத்தின் நினைவு வந்தது. அந்தக் கிராமத்தில் பெரிய பிஸ்வாஸின் சிறிய பிபியாக இருந்தாள் அவள். பேகம் மாதிரி இருந் தாள். இப்போது அவளுடைய குழந்தைகள் வயல்களில் சுற்றிக்

126கொண்டிருக்கலாம். தன் முதல் கல்யாணத்தின் நினைவு அவளைச் சோகத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் ஆஸ்தானா சாகேபின் தர்காவை அடைய இரவாகி விட்டது. எங்கும் சமாதிகள். செடிகளுக்கும் புதர்களுக்கும் நடுவில் கற்கள் பதித்த பெரிய மேடை. பிணத்தைப் புதைக்க வந்த யாரோ எல்லாச் சமாதிகளின் மேலும் மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்துப் போயிருக்கிறார்கள். இருட்டில் கைத்தடியால் தரையைத் தட்டிக் கொண்டு தன் குடிசையில் நுழைந்தவாறே பக்கிரி சாயபு, ''பயப் படாதே பீபி! இப்போ நீ முகத்திரையை எடுத்துட்டுக் காத் தாட இருக்கலாம். நான் போய் மெழுகுவர்த்தி விளக்கிலேருந்து முஸ்கிலாசானை ஏத்திக்கிட்டு வரேன்" என்றார்.

பக்கிரி சாயபு போனதும் ஜோட்டன் முகத்திரையைக் களைந்தாள். இருட்டில் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட கும்மிருட்டை அவள் தன் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டதில்லை. ஒரு நாயின் குரைப்பு ஒலியோ, கோழி கூவும் ஒலியோகூடக் கேட்க வில்லை. தூரத்துக் கிராமங்களில் விளக்கு எரிவது கூடத் தெரிய வில்லை. மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்து பல் யோசனை தூரம் வந்துவிட்டதாகத் தோன்றியது அவளுக்கு. பயத்தால் அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. காட்டில் உலர்ந்த சருகுகளின் சரசர ஒலி, இறந்து போனவர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு ஒத்திகை பார்ப்பதற்காக இறங்கிவந்திருப்பது போல் இருந்தது. தூரத்தில் முஸ்கிலாசானின் வெரிச்சம்; ஒநாயின் ஓலம். மரஞ் செடிகளுக்கிடையே தெரியும் பக்கிரி சாய்புவின் தோற்றம் யாரோ ஒரு ரசூலை நினைவுறுத்தியது. எதிரில் பல மருதமரங்கள் கிளைகளை உயரே நீட்டிக்கொண்டு நின்றன. அவற்றுக்குக் கீழே புதிதாகக் குழி தோண்டுகிறார்கள். புதிய சவப் பெட்டியின் மணம் ஜோட்டனை எட்டி யது. ஜனங்கள் பேசிக்கொண்டார்கள், சுலதான் நான் பெரிய பிஸ்வாஸ் ஓடைய சின்ன பிபியின் முதல் பிள்ளை செத்துப் போய் விட்டான் என்று சவபெட்டியைக் குழிக்குள் இறக்கியவர்களை ஜோட்டனால் பார்க்க முடியவில்லை. பக்கிரிசாயபு முள் கிலாசான் வெளிச்சத்தில் எதையோ தேடித் திரிந்தார். இப்போதுதான் இங்கே முதல் முறையாக மனித அரவம் கேட்டது ஜோட்டனுக்கு. புதைக்க வந்தவர்கள் திரும்பிப் போனார்கள். கையில் அரிக்கேன் விளக்குடன் அவர்கள் கீழே இறங்கி வயலுக்குள் நடந்தார்கள். 'பாவம், பெரிய பிஸ்வாஸ்! கடவுள் தயவு பரிபூர்ணமா இருந்தது அவருக்கு. இப்போ அவரோட அன்பு மகன் செத்துப்போயிட்டான்.'

127பெரிய பிஸ்வாஸின் பெயரைக் கேட்டதும் ஜோட்டனின் முகம் உலர்ந்துவிட்டது. அவள் பக்கிரி சாய்புவுக்காகக் காத்துக்கொண் டிருந்தாள். அவர் வந்தால் செய்தி தெரியும். அவர்கள் சுல்தான்பூரின் பெரிய பிஸ்வாஸைப் பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்கள். ஆனால் அவர்கள் பேசியது பூராவும் தெளிவாக அவள் காதில் விழவில்லை.

இப்போது மக்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அரிக்கேன் விளக்கின் ஒளி மட்டும் இருட்டில் தெரிந்தது.

செத்துப் போனது யார் என்று ஜோட்டன் கேட்டதும் பக்கிரி சாயபு விளக்கை ஜோட்டனின் முகத்துக்கு எதிரே உயர்த்தி உற்றுப் பார்த்தார். பிறகு அவளோடு உராய்வது போல் நெருங்கி நின்றுகொண்டு சொன்னார்: "நீ இப்படிக் கேட்கிறது நல்லாயில்லே, பீபி ! இப்ப நீ பக்கிரி சாயபுவோட கடைசி பீபி !''

பிறகு அவர் தம் முகத்தை அவள் முகத்தருகே கொண்டுவந்து, தன்னை மறந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு உணர்ச்சி பொங்கச் சொன்னார்: ''என்னை விட்டுட்டுப் போகமாட்டீன்னு சத்தியம் பண்ணு .'' ''போகமாட்டேன்." சரி, இப்போ மாமிசத்தைச் சபை.ச்சுப் போடேன்.'' குடிசையில் பலவிதப் பாத்திரங்கள் இருந்தன. நல்லவை, உடைந்தவை இரண்டு வகையும். வெளியில் குளம். குடிசைக்குப் பின்புறம் உப்பரித்த பழைய செங்கல் மசூதி. பக்கிரி சாயபு விளக்கை ஒரு மூங்கிலில் தொங்கவிட்டார். உடைகளையும் தாயத்து மாலை களையும் கழற்றி ஒரு கெளபீனத்தை மட்டும் அணிந்துகொண்டார், குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். சமையலான தும் மாமிசத்தைச் சாப்பிட்டுவிட்டு இருட்டில் ஜோட்டனுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு கதை பேச ஆரம்பித்தார்.

இருட்டு, இந்தச் சைத்தானின் ராஜ்யத்தை விழுங்கிக்கொண் டிருந்தது. புதர்களிலும் காடுகளிலும் ஆவிகளும் தேவதைகளும் உலாவிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. சில ஓநாய்கள் மெதுவாகப் புதிய புதைகுழியை அணுகிக்கொண்டிருந்தன. புதிய மாமிசம் தின்னும் ஆசையில் அவை 'யாங்க், க்யாங்க்' என்று ஒலியெழுப்பின. ''எனக்கு ரொம்பப் பயமா இருக்கு" என்று ஜோட்டன் சொன்னாள். பக்கிரி சாயபுவுக்குத் தெரியும், சுல்தான்பூரின் பெரிய பிஸ்வாஸின் சிறிய பீபியின் பெரிய பிள்ளை காலராவில் இறந்துவிட்டான். அவனுடைய பிணத்தைத் தோண்டியெடுக்கத்தான் ஓநாய்கள் வருகின்றன என்று. அவர் அவளுக்கு ஆறுதல் சொன்னார் :

128''ஓநாய்கிட்டே இவ்வளவு பயமா? பயப்படாதே! அதுக பசியிலே இப்படித்தான் செய்யும். உனக்கு ஞாபகம் இருக்கா ? அஞ்சு வருஷத்துக்கு முன்னாலே எனக்கும் ஒரு தடவை இந்த மாதிரி பசி வந்தது. நீ மீன்வத்தலைக் குழம்பு பண்ணி வயிறு நிறையச் சாப்பாடு போட்டியே! வயிறு நிறைஞ்சுட்டா அது இது மாதிரி கத்தாது."

ஜோட்டனுக்குப் பழைய நினைவுகள் வந்தன. அன்று பக்கிரி சாயபு கம்பீரமாகக் கிழிந்த ஜமக்காளத்தில் சாப்பிட உட்கார்ந் தார். இரண்டு தடவை அல்லாவின் பெயரைச் சொல்லிவிட்டு ஆகாயத்தைப் பார்த்தார். ஆகாயம் தெளிவாக இருந்தது. சுத்த மான திண்ணையில் உட்கார்ந்துகொண்டு தெளிவான ஆகாயத் துக்குக் கீழே, சாப்பாட்டைக் கப், கப்' என்று விழுங்க முடிய வில் அவரால். சம்பிரமமாக உட்கார்ந்தார். ஒரு தட்டு முரட்டுச் சோற்றையும் மீன் குழம்புடன் கலந்து கலந்து நிதானமாக ரசித்து ரசித்துச் சாப்பிட்டார். இங்கே சாப்பிடுவது போல் கொஞ்சமும் அவசரம் இல்லை. கீழே இரண்டொரு பருக்கைகள் விழுந்து விட்டன. அவற்றை அவர் ஜாக்கிரதையாக விரல் நுனியால் எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டார். ஒவ்வொரு பருக்கையும் அல்லா அளித்த விலையுயர்ந்த செல்வம், அது தீர்ந்துவிட்டால் பின்னால் கிடைக்காது,

இப்போது ஜோட்டனுக்கு ஞாபகம் வந்தது. ரசித்து ரசித்துச் சாப்பிடுவது பக்கிரி சாயபுவின் நெடுங்கால் வழக்கம். இப்போது இருட்டில் அவளையும் ரசித்து ரசித்து அனுபவித்தார். அவருடைய சரீரத்தில் சக்தி இல்லை. ஆயினும் பொக்கை வாயால் மாமிசத்தைக் கடித்துத் தின்பதுபோல் அவர் கைகளால் இங்குமங்கும் தடவிப் பார்த்தார். கொஞ்சங் கொஞ்சமாக ஜோட்டனும் அவருக்கு அடங்கிப் போனாள். இப்போது ஓநாய்களின் கூக்குரல் காதில் விழவில்லை ; சுலதான்பூரின் பெரிய பிஸ்வாஸ் நினைவுக்கு வரவில்லை.

ஜோட்டன் பதின்மூன்று குழந்தைகள் பெற்றவள் என்று இந்த இருட்டில் சொல்ல முடியாது. அவளுடைய பெரிய பிள்ளை கை கால்கள் மரமாகிச் சவப்பெட்டிக்குள் படுத்துக் கிடக்கிறான். ஆனால் அவளுக்கோ தாயாம் சபலம் குறையவில்லை. அவள் பக்கிரி சாயபுவின் மடியில் படுத்துக்கொண்டு. "சந்திரன் போன்ற உங்க மூஞ்சியைக் கொஞ்சம் பாக்கிறேனே, பக்கிரிசாய்பு!'' என்றாள். ரசித்து ரசித்துச் சாப்பிடுவதில் மூழ்கியிருந்தார் பக்கிரிசாயபு, 'உன் முகம் சந்திரன் மாதிரி இருக்கு. நீ என் கண்மணி ! தண்ணி மாதிரி உன்னைக் கட்டிக்க ஆசையா இருக்கு!' என்பன போன்ற காதல் வார்த்தைகள் கூட அவர் வாயிலிருந்து வரவில்லை. ஜோட்டனும்

129அவரிடமிருந்து தன் பேச்சுக்குப் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவளும் ரசித்து ரசித்துச் சாப்பிடுவதில் ஈடுபட்டாள்.

சின்னச் சிற்றப்பா லால்ட்டுவையும் பல்ட்டுவையும் அவர் களுடைய படிப்பறையில் அதட்டிக்கொண் டிருந்தார். சோனாவின் படிப்பு முடிந்துவிட்டது. இப்போது அவனுக்கு ஓய்வு. ஆனால் அவனுக்கு வெளியறையில் தனியாக உட்கார்ந்திருக்கப் பிடிக்க வில்லை. அவன் பைத்தியக்காரப் பெரியப்பாவை மானசீகமாகத் தேடத் தொடங்கினான்.

அம்மா சமையலறையில் பச்சரிசி சமைத்துக்கொண் டிருந்தாள், பச்சரிசி சாதம், கொய்மீன் வதக்கல், வாசனையான நெய். அவனுக்கு இப்போதே பசி எடுப்பது போலிருந்தது. அவன் செம் பரத்தை மொட்டைப் பறித்துக்கொண்டான். லால்ட்டுவும், பல்ட்வும் படித்து முடித்துவிட்டால் எல்லாருக்கும் ஒன்றாகச் சாப்பாடு போடுவாள்.

அவன் நாற்புறமும் பெரியப்பாவைத் தேடிக்கொண்டு நடந்தான். தோட்டத்தில் காசித் தும்பைப் பூக்கள் பூக்கின்றன. மல்லிகைப் பூவின் மணம் வந்தது. தொங்கட்டான் கொடிகள் மரங்களிலிருந்து தொங்கிக்கொண் டிருந்தன. இந்தத் தோட்டத்தில் விதவிதப் பூக்கள். செம்பரத்தைப் பூவில்தான் எவ்வளவு வகை! சிவப்பு வெள்ளை, சந்தன நிறம்.

விடியற்காலையில் அவன் பெரியம்மாவுடன் பூப்பறிக்க வருவதால் பூக்களின் பெயர் மனப்பாடமாகிவிட்டது. காசித் தும்பைச் செடி களுக்குக் கீழிருந்த புல்லில் பெரியப்பா படுத்துக்கொண் டிருப்பதை அவன் பார்த்தான், அவன் அங்கே போய்ப் பெரியப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அவர் ஒரு கையைத் தலைக்குக் கீழே வைத்துக்கொண்டு இன்னொரு கையை முகத்துக்கு நேரே கண்ணாடியைப் போல் வைத்துக்கொண் டிருந்தார், அந்தக் கைக்குள் உலகத்தையே பார்க்க விரும்புபவர் போல. சோனா மெதுவாக வந்து அவருடைய வயிற்றின் மேலே உட்கார்ந்துகொண்டு இலைகளின் இடுக்கு வழியே பார்த்தான். பலவேறு பெண்ணை த்துப் பூச்சிகள் செடிகளின் மேல் உட்கார்ந்திருந்தன. பெரியப்பா கையைப் பார்க்கவில்லை, வண்ணத்துப் பூச்சிகளைத்தான் பார்த்துக்கொண் டிருக்கிறார் என்று அவனுக்குப் புரிந்தது. அவன் அவரை, - பெரியப்பா !' என்று கூப்பிட்டான். மணீந்திரநாத் பதில் பேசாமல் சும்மா சிரித்தார், சோனா கேட்டான் : "ஹக்கா பிடிக்கறீங்களா? ஹக்கா கொண்டுவந்து தரவா ?" "கேத்சோரத்சாலா !'' "உங்களுக்குப் பசிக்கவே பசிக்காதா?"

130"கேத்சோரத்சாலா!'' சோனாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "அப்போ நானும் உங்களைக் 'கேத்சோரத்சாலா' என்று சொல்லுவேன்.'' மணீந்திர நாத் இப்போதும் சிரித்தார். செடிக்கிளையில் உட்கார்ந் திருந்த வண்ணத்துப் பூச்சிகளைச் சோனாவுக்குக் காண்பித்துவிட்டு இரண்டு மூன்று புற்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அப்புறம் வெகுநேரம் வாயை 'ஆ'வென்று திறந்து வைத்துக்கொண் டிருந்தார். 'என் வாயைப் பார், தொண்டையைப் பார், உள் நாக்கைப் பார்!' என்று சொல்வதைப் போல இருந்தது அவர் செய்கை.

சாம்சுத்தீன் ஏதோ காரியமாய் இந்தப் பக்கம் படகோட்டிக் கொண்டு வந்தான். ஈசம் அதிகாலையிலேயே படகை எடுத்துக் கொண்டு பயிர் அறுவடைக்குப் போய்விட்டான். இது பாத்ரமாதம்.

மணீந்திர நாத் பெரிய பெரிய காசித் தும்பைச் செடிகளுக்குப் பின்னால் தம்மை மறைத்துக்கொண் டிருந்தார். வெளியிலிருந்து யாரும் அவரைப் பார்க்க முடியாது. அங்கே நுழைந்துவிட்டதால் சோனாவும் கண்ணுக்குத் தெரியவில்லை. அங்கு வெறும் செடிகளும் ஏராளமான பூக்களும் - சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய பல நிறப் பூக்கள் - மட்டுமே பூத்துக் கீழே விழுந்து கிடப்பதாகத் தோன்றும், படகுத் துறையைக் கடந்தால் வாய்க்கால். அதில் படகுகள் சென்றன. பாபூர்ஹாட்டின் புடைவைகள் படகில் போகின்றன. அவை பாயை விரித்துக்கொண்டு ஸோனாலி நதியில் போய்ச் சேரும். சாமு பாதிமாவின் கையைப் பிடித்துக்கொண்டு சிறிய பாபுவிடம் போனான். "பாபுஜி, உங்க பெட்ரோமாக்ஸ் விளக்கை வாங்கிக் கிட்டுப் போகவந்தேன்.'' "பெட்ரோமாக்ஸ் எதுக்கு ?" ''பூல்னுக்கு நிக்காஹ் பாணப் போறேன்.'' ''எந்த வரிலே?'' ''='. ஸ்!1.ாந்தியிலே .'' ''வெளியறையில் உட்காரு. விளக்குச் சரியா இருக்கான்னு பார்க்கிறேன் '' சா மு (

தோட்டத்தைக் கடந்தபோது பெரிய பாபு செடிகளுக்குக் கீழே படுத்திருப்பதைப் பார்த்தான். அவருடைய பகை தலைக்குக் கீழே இருந்தது. (சொனா அவரைக் கட்டிக்கொண் டிருந்தான். அவர்கள் செடிகளில் எதையோ கவனமாகத் தேடினார்கள். பாதிமா சோனாவைப் பார்த்ததும் சாமுவிடம் சொன்னாள், "நான் போறேன், பாபாஜி !' என்று. ""எங்கே போவே?'' பெரிய பாபுகிட்டே .''

131"போ. ஆனா அவரைத் தொட்டுடாதே! சோனா பாபுவையும் தொடாதே."

இந்தப் பூச்செடிகள், பாதாபஹார் மரங்கள், எலுமிச்சை மாங்கள் இவற்றைக் கடந்தால் கிராமத்துக்குப் போகும் வழி வரும். பாதிமா திரும்பிப் போய் அந்த வழியில் உட்கார்ந்துகொண்டாள். ''சோனா பாபு!'' என்று கூப்பிட்டாள்.

சோனா செடிகளுக்குள்ளிருந்து விழித்து விழித்துப் பார்த்தான். "நீயா ?" பாதிமா 'களுக்'கென்று சிரித்தாள். ''பாபாவோட வந்திருக்கேன்.'' அவள் இடையில் பாபூர்ஹாட் புடைவையொன்றை அணிந்திருந் தாள். மூக்கில் மூக்குத்தி. மை தடவிய சிறிய கண்கள். கால்களில் கொலுசு. நடந்தால் 'ஜல் ஜல்' என்று ஒலிக்கும். உடலின் நிறம் பசுமை. அழுத்தமான இலையின் நிறத்தில் முகம், சோனா உள்ளே வரியா?" என்று கேட்டான். ''எப்படி வருவேன் ?'' ''ஏன், செடிகளை விலக்கிட்டு வாயேன்,'' அவள் தவழ்ந்து தவழ்ந்து, மலர்களைக் கடந்து உள்ளே வந்தாள். எலுமிச்சை மரப் புதரில் நுழைந்து சோனாவின் பக்கத்தில் உட்கார்ந்து, வளர்ப்புப் பறவைபோல முகத்தை வைத்துக்கொண்டு வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியம், அவள் இதுவரை பார்த்ததேயில்லை. அவள் காலடியில் ஒரு கந்தராஜச் செடி, வெள்ளைப் பூக்கள் செடி முழுவதும் பூத்திருந்தன. செடிக்குக் கீழே அந்த நாய் படுத்துக்கொண்டு வாலை ஆட்டியது. பாதிமா தனக்குப் பழகியவளாகத் தோன்றவில்லை. ஆகையால்) அது வாயைத் திறந்து உறுமலாமா என்று பார்த்தது. ஆனால் அவளுக்கும் சோனா பாபுவுக்கும் இருந்த சிநேகத்தைப் பார்த்துவிட்டுப் பேசாதிருந்தது.

மணீந்திர நாத் அப்படியே படுத்திருந்தார். கிளைகளுக்கு மேலே முடிவற்ற வானம், அங்கே மேகங்களுக்குப் பின்னால், வெகு நாட் களுக்கு முன் ஸோனாலி பாலி நதியில் கண்ட படகைப் போல், ஒரு முகம் மிதந்துகொண் டிருந்ததைக் கண்டார் அவர். வழக்கம் போல் அவருடைய கவிதைப் பறவைகள் அம்முகத்தின் மேல் பறந்துகொண் டிருந்தன. அவர் முணுமுணுத்தார்: "I have examined and do find of all that favour me, there's none I grieve to leave behind, but only, only thee!''

மூக்குத்தி அணிந்த பாதிமா வளர்ப்புப் பறவை போல் உட்கார்ந்து கொண்டு மணீந்திர நாத் முணுமுணுப்பதைக் கேட்டுச் சிரித்தாள். அவளுக்கு அது ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் புரியாவிட்டால்

132அவள் சிரிப்பாள். ''பெரியப்பா இங்கிலீஷ் பேசறார். நானும் பெரியப்பா மாதிரி பெரியவனா ஆனப்பறம் இங்கிலீஷ் பேசுவேன். இப்பவே நான் ஏ, பி, சி, டி படிப்பேனாக்கும் !" என்று சோனா சொன்னான்.

பாதிமா பதிலுக்கு, ''என்னோட பாபா என்னையும் படிக்க வைக்கறேன்னு சொல்லியிருக்கார். நானும் படிப்பேன்" என்றாள்.

சோனா சொன்னான். நான் காலம்பற வாழையிலையிலே நாணல் குச்சியாலே ஏ, பி, சி, டி எழுதினேன்.'' 'நிர்மல சரணே, ரத்னே விபூஷித குண்டலகர்ணே' சொன்னேன்" என்றும் சொல்ல நினைத்தான் அபேன்.

ஒவ்வொரு நாளும் படிப்பு முடிந்ததும் சோனா படகுத் துறையில் நின்றுகொண்டு எழுதிய இலைகளைக் கிழித்து எறிவான். அவற்றைத் தண்ணீரில் மிதக்கவிட்டு, கரஸ்வதியை வணங்கிக்கொண்டே பாடுவான். ''வாங்க வாங்க சரஸ்வதி, போயிடாதீங்க! உங்க கையைக் காலைப் பிடிச்சுப் படிப்புக் கத்துக்கறேன்.'

ஆனால் சோனா இதையெல்லாம் பாதிமாவிடம் சொல்லவில்லை. காரணம், அவனுடைய பெரியப்பா கண்களை அகல அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். எங்கேயாவது புறப்பட்டுப் போவதற்கு முன்னால் இப்படி பலர மலர விழிப்பது அவர் வழக்கம். சோனாவும் பாதியாவும் பேசிக் கொண் டிருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. பாதிமா ஒரு வார்த்தை சொன்னால் இரண்டு வார்த்தை சொல்கிறான் சோனா . "பாபா சொல்றார், தந்திர்ஹாட்டிலேருந்து எனக்குப் புஸ்தகம் வாங்கிக்கிட்டு வருவாராம். நான் மசூதி வராந்தாவிலே உட்கார்ந்து கிட்டுப் படிப்பேன் !" பைத்தியக்கார டாகுர் சொன்னார். ''கேத்சோரத்சாலா!'' சோனா சொன்னான். "நீங்கதான் கேட்சோரத்சாலா!'' இப்போது பைத்தியக்கார டாகுர் சோனாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து ஒரு வண்ணத்துப் பூச்சியை அவன் பிடிக்க உதவி செய்தார். பாதிமாவும் அவர்களுடன் கூட நடந்தாள். வண்ணத்துப் பூச்சியை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு சோனா. 'இது உனக்கு வேணுமா?" என்று பாதிமா வைக் கேட்டான். "வேணும்." ''எப்படி எடுத்துக்கிட்டுப் போவே?'' பாதிமா கழுத்தில் கல் மாலை அணிந்திருந்தாள். அவள் இடுப்பில் செருகியிருந்த புடைவை நுனியை அவிழ்த்துவிட்டுக்கொண்டாள். ஒரு சேம்பு இலையைப் பறித்துவந்தாள். மரநிழலில் நின்றுகொண்டு

133