Pages

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .37-91 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

 (மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
 automated google-ocr in ubuntu with the help of Libre draw

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .37-91
வங்காள மூலம் :
அதீன் பந்த்யோபாத்யாய
தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா புதுடில்லி

இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்ததால் ஜோட்டனும் சுமுகமான மன நிலையில் இல்லை. அவள் சொன்னாள்: ''தந்தி போறபோது அந்த ஆளைப் பத்தி விசாரிச்சுட்டு வா. மனுசன் உசிரோடே இருக்கானா இல்லையான்னு பாத்துட்டு வந்து சொல்லு!'' ''சொல்றேன், சொல்றேன்!'' ஜோட்டனின் முகம் வாடிக் கிடப்பதை ஆபேத் அலி கவனித் தான். இரண்டு நாட்கள் சாப்பிடாததால் அவளுடைய கண்கள் இடுங்கிக் கிடந்தன ''பகலுக்கு நீ நம்ம வீட்டிலே சாப்பிடு!" இப்போது ஆபேத் அலி ஜாலாலியைப் பார்த்தான். உதிக்கும் சூரியனின் கிரணங்களால் இயற்கையிலேயே ஜலாலியின் 'சிடுசிடு' முகம் இன்னும் 'சிடுசிடு' வென்று காட்சியளித்தது. ஆபேத் அலி யின் பேச்சைக் கேட்டு அவளுடைய முகம் புட்கா மீனைப் போல் உப்ப ஆரம்பித்தது.

"அடடே! என்ன செய்யறே நீ? உன் கன்னம் வெடிச்சுப் போயிடப் போறது'' என்று ஆபேத்அலி சொன்னான். விஷயத்தைப் புரிந்து கொண்ட ஜோட்டன் சொன்னாள் : "வேண்டாம், வேண்டாம்! என் சாப்பாட்டைப் பத்தி என்ன ?" ஜோட்டன் சாப்பிடமாட்டாளென்று ஆபேத் அலிக்குப் புரிந்தது. ஜோட்டன் வாசலிலிருந்து பாதையில் இறங்கினாள். ஆனால் பாதை வழியே போகாமல், இன்னும் தண்ணீர் தேங்கியிருந்த வயல் களின் நடுவே எதையோ தேடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவள் வரப்புக்களின் மிருதுவான ஈரமணலில் ஆமை முட்டை களைத் தேடுகிறாள். இந்தச் சமயத்தில்தான் வரப்பு மணலில் ஆமைகள் முட்டையிடும். முட்டைகளைப் பொறுக்கிக்கொண்டு போய்ப் பச்சிம்பாடாவில் கொடுத்து அதற்குப் பதிலாகக் ஒரு தொன்னை அரிசி வாங்கிக்கொள்வது அவளுடைய திட்டம். அவள் ஒவ்வொன்றாக வரப்புக்களைத் தோண்டிப் பார்க்கத் தொடங்கினாள். சூரியன் பிஸ்வாஸ் பாடாவுக்கு மேலே மிக உயரத்துக்கு வந்து விட்டான். பயிர்களின் மேல் விழுந்த பனி, புற்களின் மேலிருந்த பனி இவையெல்லாம் ஒன்று சேர்ந்து துளிகளாகி இங்குமங்கும் வெயிலில் கலந்துகொண் டிருக்கின்றன.

அந்த மனுஷன் நேற்று வரவில்லை. அவள் மூட்டை முடிச்சுக் களைக் கட்டிக்கொண்டு தயாராக இருந்தாள். மெளல்வி சாயபு வுக்குச் சொல்லிவைத்திருந்தார்கள். சாட்சியும் தயாராக இருந்தது. ஆனால் அந்த ஆள் வரவில்லை!

ஒரு நாள் அந்த மனிதர் *முஸ்கிலாசானைக் கையிலெடுத்துக் * முஸ்கிலாசான் - மூன்று முகங்களுள்ள ஒரு விசேஷ ரக விளக்கு. முஸ்லிம் பக்கிரி கள் அதை எடுத்துக்கொண்டு முஸ்கிலாசான் என்று கூவிக்கொண்டு ஊர்களில் பிச்சை எடுப்பார்கள். 'முஸ்கிலாசான்' என்ற வார்த்தைக்கு 'பிரச்னைகள் தீர்ந்து விடும்' என்று அர்த்தம்.

37

கொண்டு அவர்களுடைய வீட்டு வாசலுக்கு வந்து, ''இது ஆபேத் அலி வீடுதானே ?" என்று கேட்டார்.

அவர் பீரின் தர்காவில் இருப்பவர். ஆபேத் அலி, ஜாலாலி, ஜோட்டன் எல்லாரும் அவரிடம் போய்ப் பொட்டு இட்டுக்கொண் டார்கள்.

அவர் நல்ல உயரம் ; பெரிய பெரிய கண்கள். வெள்ளைத் தாடி தொப்புளுக்குக் கீழே இறங்கி வந்திருக்கிறது. ஆயிரம் கிழிசல் உள்ள ஜிப்பா. தலையில் ஒரு சிறு தலைப்பாகை, கழுத்தில் வித விதமான மாலைகளும் தாயத்துக்களும். ஜோட்டன் முதல் சந்திப்பி லேயே அவரிடம் காதல் கொண்டுவிட்டாள். அன்று இரவு வெகு நேரம் வரை குளிர்காலத்தின் மென்மையான சூடு போன்ற ஓர் இதமான உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது.

ஜோட்டன் வரப்புப் பக்கம் கவனமாகப் பார்த்தவாறே நடக்கிறாள். ஆமை முட்டையைக் காணோம். அவள் இங்குமங்கும் பார்த்து விட்டுச் சட்டென்று சில தானியக் கதிர்களைப் பிடுங்கித் தன் துணிக்குள் ஒளித்து வைத்துக்கொண்டாள். வயல்களில் வேலை செய்பவர்கள் அவளைக் கடந்து வேறு வயல்களுக்குச் சென்றார்கள். அவள் இப்போது தரையில் உட்கார்ந்துகொண்டு உண்மையி லேயே ஆமை முட்டை சேகரிக்கத் தொடங்குகிறாள். வயல் வேலைக் காரர்கள் தானியத்தை அறுவடை செய்கிறார்கள். அவள் தன்னிட மிருந்த கூர்மையான கத்தியை வயிற்றுக்குக் கீழே துணிக்குள் செருகிக்கொண்டாள். அவள் எம்பி நின்றுகொண்டு பார்த்தாள், வயல் வேலைக்காரர்கள் யாருடைய வயல்களில் வேலை பார்க்கிறார்கள் என்று. தூரத்தில் மாடுகள் தண்ணீருக்குள் இறங்கிக்கொண் டிருந்தன. மனுஷனைக் காணோமே! முஸ்கிலாசான் மனுஷன்! பதின்மூன்று குழந்தைகளின் தாயான ஜோட்டன் மறுபடியும் தாயாகும் ஆசையுடன் வயல்வரப்பின் மேல் துடித்துக்கொண்டு நின்றுகொண் டிருந்தாள். நாற்பது வயதான ஜோட்டன் தானிய வயலில் கடவுளைத் தேடிக்கொண் டிருக்கிறாள். கடவுள் கட்டளை யிட்ட விளைச்சல் தன் உடம்பிலிருந்து உண்டாகவில்லையே என்ற கவலை அவளுக்கு.

இரண்டு நாட்களாக வயிற்றில் சோறு விழவில்லை. கிராமத்தின் மற்ற ஏழை பாழைகளுடன் அவளும் இரண்டு நாட்களாக ஹாஜார்தி ஏரியில் அல்லிக்கிழங்கு பொறுக்கிக்கொண்டு வந்தாள். துக்கம் வந்தால் சாமி ஞாபகம் வரும் என்பது ஜோட்டனின் நம்பிக்கை. அவள் தன்னுடைய கூர்மையான கத்தியால் ஒரு தானியக் கதிரைச் சட்டென்று நறுக்கி அதைத் தன் மடியில் ஒளித்து வைத்துக்

38

கொண்டாள். வயிற்றுப் பசி பொறுக்க முடியாத வேதனை. அவள் தான் செய்யும் குற்றத்துக்காக அல்லாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். ''சாமியே, வயித்துப் பசிதான் காரணம்.'' அவள் வயலின் சொந்தக்காரனிடம் சொல்ல விரும்பினாள் : 'பயப்படாதே. எங்கிட்டே வேறே என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாணயம் இருக்கு. ஒன்னோட வயல்லே இருக்கிற கதிரை நறுக்கல்லே நான். வரப்பு மேலே சாஞ்சு கெடக்கற கதிரைத்தான் எடுத்துக்கறேன்.'

ஹாசியின் தகப்பன் தயாபாடா வேப்பமரத்தைத் தாண்டியதும் ஜோட்டன் சட்டென்று இன்னொரு தானியக் கதிரை நறுக்கித் தன் மடியில் ஒளித்து வைத்துக்கொண்டாள்.

இந்த நேரத்தில் அவளுக்கு மாலதியின் நினைவு வந்தது. நரேன் தாஸின் தங்கை மாலதி விதவையாகிப் பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறாள். மாலதி படும் வேதனையை நினைத்து ஜோட்டன் கிழக்குப் பக்கமாகப் போன்னா மரத்தின் இடுக்கு வழியே நரேன்தாஸின் நெசவுக் கூடத்தைப் பார்த்தாள். தறி இயங்கும் சப்தம் கேட்கிறது. ஜோட்டன் சட்டென்று இன்னொரு கதிரை நறுக்கினாள். அப்போது அவளுக்குப் பின்னாலிருந்து யாரோ கத்தினான் : ''ஜூட்டி, மண்டையை உடைச்சுடுவேன் !"

ஜோட்டன் திரும்பிப் பார்த்தாள். ஈசம் வந்துகொண் டிருந்தான். அவள் விதிர் விதிர்த்துப்போய், ''நான் ஒன்றும் பண்ணல்லியே!'' என்றாள்.

"ஆமாமா, நீ ஆகாசத்தைப் பார்த்துக்கிட்டிருக்கே. அநாவசியமாப் பேச்சை வளக்காமே வீட்டுக்குப் போய்ச் சேரு.''

வீட்டுக்குப் போகும் பாவனையில் அவள் நடக்கத் தொடங்கினாள். ஆனால் ஈசம் மசூதிக் கிணற்றில் தண்ணீரெடுக்க வாளியை இறக்கிய போது அவள் சட்டென்று வயலுக்குள் இறங்கிப் பயிர்களுக்குப் பின் ஒளிந்துகொண்டாள். தவழ்ந்து கொண்டே வயலுக்குள் முன்னேறிய அவள் ஓர் இடத்தில் மண் சரிந்து உருண்டை உருண்டையாக வெள்ளை முட்டைகள் வெளியே வந்து கிடப் பதைக் கண்டாள். மலர்ந்த முகத்துடன் அவள் எழுந்து நின்றாள். முஸ்கிலாசான் விளக்கின் நினைவு அவளுக்குக் கதகதப்பான உணர்வைத் தருகிறது. தூரத்தில் வயல்களில் அறுவடை நடக்கிறது ஆட்கள் காஜியின் பாட்டுக்களைப் பாடிக்கொண்டே அறுவடை யான கதிர்களைக் கட்டிக்கொண் டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து மிதந்து வந்த பாட்டின் ஒலியலைகள், மாலதி படும் கஷ்டத்தின் நினைவு, முதல் நாள் இரவு முழுதும் காத்திருந்தது - இவை எல்லாம் சேர்ந்து ஜோட்டனை வேதனைக்குள்ளாக்குகின்றன. மாலதிக்கு மறுபடியும் கல்யாணம் நடக்காது. அவளுடைய சரீரத்திலிருந்து

39

விளைச்சல் உண்டாகாது. அல்லாவுக்கு இதனால் கோபம் வரும். மனித உடல் மண்ணைப் போல. அதைத் தரிசாக விட்டுவைப்பது குற்றம். மாலதியின் வாழ்க்கையைப் பற்றி நினைத்தவாறே சோம்பல் முறித்துக்கொண்ட ஜோட்டன் போன்னா மரத்தடியில் மாலதி, மெளனமாக, தனியாக நிற்பதைக் கண்டாள். மாலதி அணிந் திருந்த வெள்ளைப் புடைவையின் தலைப்புக் காலைக் காற்றில் அசைந்தது. மாலதியைப் பார்த்ததும் ஜோட்டன் அவசர அவசர மாக எல்லா முட்டைகளையும் ஈரமண்ணிலிருந்து எடுத்துத் தன் முன்றானையில் கட்டி வைத்துக்கொண்டாள்.

வேறு நாளாக இருந்தால் ஜோட்டன் மாலதியுடன் ஏதாவது பேசியிருப்பாள். ஆனால் இன்று மாலதியின் இந்தத் தனிமை உண்மையிலேயே ஜோட்டனைத் துன்புறுத்தியது. காரணம் தெரியாத ஒரு குற்ற உணர்வு காரணமாக அவளால் மாலதி யுடன் பேச முடியவில்லை. அவள் அந்த வழியாக நடந்து போய்ப் புகையிலை வயலை அடைந்தாள். அவள் திரும்பிப் பார்த்தபோது மாலதி போன்னா மரத்தைக் கடந்து, மஞ்சித்தி மரத்தடி வழியே குளத்தங்கரைக்கு வந்து, வாத்துக்கள் குளத்து நீரில் நீந்துவதைப் பார்த்தவாறே ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

ஜோட்டன் அப்புறம் தாமதிக்கவில்லை. தாமதித்தால் அவளு டைய வேதனை தான் அதிகமாகும். தவிர, வெறும் அல்லிக் கிழங்கே சாப்பிட்டு அவளுடைய தேகம் பலவீனமாயிருந்தது. அவள் அவசர அவசரமாக நரேன்தாஸின் வீட்டைக் கடந்து கிராமத்துப் பாதையில் நடக்கத் தொடங்கினாள். மகிழமரத்தைத் தாண்டினால் டாகுர் வீட்டுப் பாக்குத் தோப்பு. அவள் மெதுவாகத் தோப்புக்குள் நுழைந்து மரத்தடியில் பாக்குத் தேடத் தொடங்கினாள். எவ்வளவு தேடியும் ஒரு பாக்குக்கூடக் கிடைக்காமல் போகவே அவள் மரத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து, பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள். ''அல்லா, ஒரு பாக்குத் தா''. எல்லா மரங்களிலும் பாக்கு மஞ்சளாக, குலை குலையாகத் தொங்குகிறது. பாக்கின் மஞ்சள் நிறத்தோலை உரித்து விட்டுக் கொட்டையை வாயில் போட்டுக்கொள்ள ரொம்ப ஆசை ஜோட்டனுக்கு. ஒரு மரங்கொத்திப் பறவை ஒவ்வொரு மரமாகப் போய்க்கொண்டிருப்பதை அவள் கண்டாள். ''அல்லா அல்லா ஒரு பாக்குத் தாயேன் !"

அப்போது கிழவியம்மாளின் குரல் கேட்டது. அவள் சப்தம் செய்யாமல் பாக்குத் தோப்புக்குப் பக்கத்திலிருந்த சடுயிமரக் காட்டுக்குள் ஒளிந்துகொண்டாள். பறவை ஒரு பாக்கைக் கடித்துக் கீழே போடாதா என்ற ஆசையில் ஜோட்டன் வெகு நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். பறவை இங்கு மங்கும் பரப்ப

40

தைப் பார்த்து அவள் தவித்தாள். மரங்கொத்தி பாக்குக் குலையின் மேல் உட்கார்ந்து இரண்டு கொத்துக் கொத்தியது. கூடவே சில பாக்குக் கொட்டைகள் மரத்தடியில் விழுந்தன, மாணிக்கங்கள் போல. ஜோட்டனின் நெடுங்கால விருப்பம் இப்போது மரத்தடியில் உருவம் பெற்றுவிட்டது. அவள் நாற்புறமும் நன்றாகப் பார்த்துக் கொண்டாள். குளத்துப் படித்துறையில் கிழவியம்மா ஸ்நானம் செய்துகொண்டிருக்கிறாள். ஜோட்டனால் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. ஆனால் யாராலும் அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் வேகமாக மரத்தடிக்கு ஓடினாள். மூன்று பாக்குகளையும் பொறுக்கித் தலைப்பில் முடிந்துகொண்டாள். பிறகு டாகுர் வீட்டுக்குள் நுழைந்து கூப்பிட்டாள். ''பெரிய மாமி இருக்காங்களா?" கூப்பிட்டுக் கொண்டே அவள் பிரசவ அறைக்கு முன்னால் போய் நின்றாள். "தன மாமி, மாணிக்கத்தை ஒரூ தடவைக் காட்டுங்க, பார்ப்போம்! மாணிக்கத்துக்காக ஆமை முட்டை கொண்டு வந்திருக்கேன்" என்றாள். பெரிய மாமியைப் பார்த்துச் சொன்னாள்: "ஆமை முட்டையை எடுத்துக்கிட்டு ஒரு தொன்னை அரிசி கொடுங்க !" அரிசியை வாங்கிக்கொண்டு சொன்னாள்: ''ரெண்டு வெத்தலை கொடுங்க, பெரிய மாமி!"

"எடுத்துக்கோயேன். செடிக்குக் கீழே நிறைய வெத்தலை விழுந்து கிடக்கு ."

ஜோட்டன் அரிசியைத் தலைப்பில் முடிந்து கொண்டு பெரிய அறைக்குப் பின்னே போனாள், பூனையவரைக் கொடி படர்ந்த புதரைத் தாண்டிப் போய்க் கள்ளிச்செடிக்கு அருகில் நின்றாள். வெற்றிலைக் கொடி கள்ளிமேல் படர்ந்திருந்தது. கைகள் இரண்டும் கொள்ளும் அளவுக்கு வெற்றிலைகளை கொடியிலிருந்து பறித்துக் கொண்டாள். பிறகு மறுபடியும் டாகுர் வீட்டுக்குள் நுழையாமல் பூனையவரைப் புதரைக் கடந்து வயலில் இறங்கி வந்தாள். நீரிலும் சேற்றிலும் நடந்து மறுபடி கிழக்கு விட்டுக் குளத்தங்கரை வழியே தானிய வயலுக்கு வந்துசேர்ந்தபோது மாலதி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக்கொண் டிருப்பதைக் கண்டாள். இப்போது ஜோட்டனால் மாலதியுடன் பேசாமல் போக இயலவில்லை. அவள் மாலதிக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு கூப்பிட்டாள் : 'மாலதி !''

மாலதி பேசவில்லை, அழுதாள். அவளுடைய முகம் திரும்பி யிருந்ததால் ஜோட்டனால் அவளுடைய முகத்தைப் பார்க்க முடிய வில்லை. ஆனால் மாலதியின் கண்களிலிருந்து நீர் பெருகுவது புரிந்தது ஜோட்டனுக்கு.

31

ஜோட்டன் சொன்னாள்: ''மாலதி, அழாதே! அழுது என்ன பிரயோசனம்? எல்லாம் தலையெழுத்து, மாலதி !''

ஜோட்டன் எழுந்து நின்றாள். பாவம், அழுகிறாள், அழட்டும்! தன்னுடைய மூன்றாவது கணவனின் நினைவு வந்தபோது ஜோட்ட னுக்குத் துக்கத்தால் தொண்டை அடைத்துக் கொண்டது. பொழுது ஏறுகிறது. வயிற்றில் அகோரப் பசி. அவளிடம் உள்ள அரிசி இரண்டு வேளைக்குக் காணும். அவள் போகும் வழியில் ஆற்றுப் படுகையிலிருந்து கொஞ்சம் கீரை பறித்துக்கொண்டாள். அவள் ஆபேத் அலியின் குடிசையைக் கடந்து தன் குடிசையின் வாசலை அடைந்தபோது ஆச்சரியத்துக்குள்ளானாள். நேற்று வராத மனிதர் , அவள் நேற்றிரவு முழுதும் யாருக்காக விழித்துக் கொண்டு காத்திருந்தாளோ அந்த மனிதர், ஒரு கிழிந்த தடுக்கின் மேல் தொழுகை செய்யும் பாவனையில் உட்கார்ந்துகொண்டு தம் லுங்கியைத் தைத்துக்கொண் டிருக்கிறார். நீல நிறமான நீளப்பை, முஸ்கிலாசான் விளக்கு, விதவிதமான தாயத்துகள் கோத்த மாலை, குன்றிமணி மாலை, கண்ணாடிக் கற்கள் கோத்த மாலை - இவற்றுடன் அவரைப் பார்க்கக் குதிரைப் பந்தயத்துப் பீர் மாதிரி இருந்தது. ஜோட்டன் சொன்னாள்: "சலாமாலேகும்!" பக்கிரிசாய்பு இப்போதுதான் ஜோட்டனைக் கவனித்துவிட்டுச் சொன்னார்: ''ஆலேகும் சலாம்!" தன் குடிசை மூலையில் முக்காட்டைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் ஜாலாலி. தானும் தன் குடிசைக்குள் முக்காடு போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்க ஆசைதான் ஜோட்டனுக்கு. ஆனால் விருந்தாளியை உபசரிக்கவேண்டிய கடமை இருந்ததால் அவளால் தன் நாணத்துக்கு இடங்கொடுக்க முடியவில்லை. அவள் ஜாலாலியின் வீட்டுக்குள் நுழைந்து சொன்னாள்: ''மனுஷர் சாப்பிடப் போறார். நான் அவருக்கு என்ன சமைச்சுப் போடப் போறேன்?" தாழ்ந்த குரலில் ஹோட்டன் பேசிய பேச்சு பக்கிரிசாமியின் காதில் விழுந்துவிட்டது. அவர் சொன்னார்: ''எனக்காகக் கவலைப் படாதீங்க. ரெண்டு சோறும் கீரையும் போட்டாப் போதும். எவ்வளவு கவலையில்லாமல் சாப்பிடறேன், பாருங்க!''

ஜோட்டன் ஜாலாலியிடம் சொன்னாள்: ''பூன்ட்டி மீன் வத்தல் ரெண்டு கொடு, ஜாலாலி !'

ஜோட்டன் ஒரு கட்டு நாணல் குச்சி எடுத்துக்கொண்டு வந்தாள் அடுப்பெரிக்க. குச்சிகளை மளமளவென்று முறித்து வீட்டுக் குள் எடுத்துக்கொண்டுவரும்போது பக்கிரி சாய்பு இன்னும் துணிக்கு ஒட்டுப் போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் வேலி இடுக்கு வழியே அவருடைய அகன்ற மார்பையும் மணிக்கட்டையும்

42

பார்த்தாள். அவளுடைய உடலிலிருந்து கடவுளின் வரிவசூலாக நேரமாகாது. இந்த நினைப்புடன் அவள் உற்சாகமாகச் சமையலில் ஈடுபட்டாள். இரண்டு வருடங்களாக அவளுடைய உடம்பு கொஞ்சமும் வெட்கமில்லாமல் துஷ்டத்தனம் செய்யத் துடிக்கிறது. எவ்வளவோ தடவை அவள் இரவில் கிழிந்த தடுக்கின் மேல் உட்கார்ந்துகொண்டு அல்லாவை நினைத்து அதன் மூலம் தன் உடலின் கெட்ட ஆசைகளைத் துரத்த முயன்றிருக்கிறாள். தன் தேகத்தின் ஆசையைத் தணிக்கும் சக்தி எந்த ஆணுக்கும் இல்லை என்பதுதான் மூன்று தலாக்குகளுக்குப் பிறகு ஜோட்டன் புரிந்து கொண்ட உண்மை. அதனால் தான் தலாக்குக் கொடுத்தாள் அவள். அவள் சொல்லுவாள் ? இந்தச் சனியன் பிடித்த உடம்புக்கு எப்போதும் பசி" எனறு.

அவள் மறுபடி இன்னும் கொஞ்சம் குச்சிகளை அடுப்புக்குள் திணித்துவிட்டு வேலியிடுக்கு வழியே பக்கிரி சாயபுவின் உடம்பைப் பார்த்தாள். எல்லா அரிசையையும் சமைத்துவிட்டாள் அவள். இரண்டு பேர் சாப்பிடப் போதும். வற்றல் மீன் இரண்டையும் நெருப்பில் சுட்டு வைத்தாள். நிறையச் சிட்டகாங் மிளகாயை எடுத்து அரைத்து வைத்தாள். இரண்டு பெரிய வெங்காயங்களை நறுக்கி வெங்காயத் துண்டுகளுடன் சுட்ட மீன்களைக் கலந்து பிசைந்து பீங்கான் தட்டில் வைத்தாள். மீன் துவையல் தயார் செய்தபோது அவளுக்கு நாக்கில் நீர் ஊறியது. அவள் விரும்பி யிருந்தால் எல்லாச் சமையலையும் அவள் ஒருத்தியே சாப்பிட்டுத் தீர்த்திருக்க முடியும். ஆனால் வீட்டில் விருந்தாளி. அவள் தன் பசியைச் சற்று நேரத்துக்கு அடக்கிக் கொண்டாள். பாத்திரத்தில் சோறு தளதளவென்று கொதிக்கிறது. சோறு வேகும் மணம். அவள் கஞ்சியை ஒரு பாத்திரத்தில் வடித்து அதில் கொஞ்சம் உப்புப் போட்டு, சற்றுப் பின்பக்கம் திரும்பிக்கொண்டு அவ்வளவு கஞ்சியையும் கடகடவென்று குடித்துவிட்டாள். இப்போதுதான் அவளுடைய கண்களுக்குப் பார்வை வந்தது அவளால் எல்லாப் பொருள்களையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இப்போது பக்கிரி சாயபு அவள் கண்களுக்குப் பீர் போலவே காட்சியளிக்கிறார். சாட்சாத் தர்காவோட பீர் தான் பக்கிரி சாய்பு ! அவள் தன் சரீரத்தையும் ஒரு தடவைப் பார்த்துக்கொண்டாள். இந்த உடம்பிலும் நல்ல தெம்பு இருக்கிறது. பக்கிரி சாயபுவை வசப்படுத்துவது பெரிய காரியமில்லை. ஜோட்டன் தனக்குள் சிரித்துக்கொண்டாள். வேலியிடுக்கு வழியே கூப்பிட்டாள். "பக்கிரி சாகேப், குளிச் சுட்டு வாங்க! சமையல் தயாராயிடுச்சு."

4

பக்கிரி சாய்பு தன் சாமக்கிரியை - முஸ்கிலாசான் உட்பட எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு படித்துறைக்குப் போனார். காகம் கரையும் ஒலியைக் கேட்டுக்கொண்டு, வானத்து வெயில் மரக் கிளைகளில் விழுவதைப் பார்த்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந் திருந்தாள் ஜோட்டன். வீட்டுக்குப் பின்புறம் மஞ்சள் நிற நிழல். பிரம்புப் புதரில் குளவிக் கூடும். கீழே போன்னா மரங்கள் அடர்ந்த காடு. பக்கிரிசாயபு ஹாசிம் வீட்டுக் குளத்தில் குளிக்கிறார். ஜோட்டன் காஜியின் பாட்டுக்களைப் பாடத் தொடங்கினாள் தனக்குள். அவளுடைய கண்களில் கனவு பிறந்தது. புதரில் பழுக்கும் பிறப்பம்பழம் போல இக்கனவிலும் ரசம் ஊறி நிரம்பும். இனிய எதிர்காலத்தின் வண்ணச் சித்திரத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அவளால். கனவு, காஜி பாட்டுப் பாடும் பாடகனின் கையிலுள்ள கோல் போலத் தோற்றமளிக்கிறது. அது சந்திரனின் உருவெடுத்துச் சப்பட்டை மூக்குடன் ஜோட்டனின் சுகத்தை யெல்லாம் பார்க்கிறது.

அவள் அவசர அவசரமாகப் பக்கத்திலிருந்த ஒரு குட்டையில் முழுகிவிட்டு வந்தாள். தலையைத் துவட்டிக்கொண்டு கட்டம் போட்ட புடைவை அணிந்துகொண்டு உடைந்துபோன கண்ணாடி யில் தன் அழகிய முகத்தைப் பார்த்துக்கொண்டாள். தன் வெள்ளை வெளேரென்ற பல் வரிசையைப் பார்த்த அவளுக்குப் பீரின் தர்காவில் இரவில் ஒலிக்கும் ஹீராமன் பட்சியின் நினைவு வந்தது. இந்நினைவில் அவள் உணர்ச்சி வசப்பட்டாள். பக்கிரி சாயபு கிழிந்த தடுக்கில் சம்பிரமமாக உட்கார்ந்துகொண்டார். அவருடைய ஈர லுங்கி அவரைப் பந்தலில் காய்ந்து கொண் டிருந்தது. அவர் இரண்டு தடவை அல்லாவின் பெயரை உச்சரித்துவிட்டு ஆகாயத்தைப் பார்த்தார். நிர்மலமான ஆகாயம், சுத்தமான முற்றம். அவரால் சாப்பாட்டை அவசர அவசரமாக விழுங்க முடியவில்லை. அவர் நிதானமாக ஒரு தட்டுச் சோற்றையும் மீன் துவையலுடன் கலந்து கலந்து உருட்டி உருட்டி ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தார். கீழே விழுந்த ஓரிரண்டு சோற்றுப் பருக்கைகளையும் விரல் நுனியால் லாகவமாகப் பொறுக்கி வாயில் போட்டுக்கொண்டார், 'இது அல்லா வின் மிகச் சிறந்த பிரசாதம். இது தீர்ந்து போய்விட்டால் மறுபடி கிடைக்காது' என்று நினைத்தவர் போல.

அவர் ஒரு தட்டுச் சோற்றைக் காலி செய்ததும், ஜோட்டன் இன்னொரு தட்டில் சோறு கொண்டு வந்து வைத்தாள். அவர் அதை யும் சாப்பிட்டு முடித்தார். முடித்துவிட்டு இன்னும் சோற்றை எதிர் பார்த்து உட்கார்ந்திருந்தார். திடீரென்று அப்போதுதான் கண்டு பிடித்தவர் போல ஆசனத்திலும் தட்டு விளிம்பிலும் ஒட்டிக்கொண்

44

டிருந்த சோற்றுப் பருக்கையையும் விரலால் பொறுக்கி வாயில் போட்டுக்கொண்டுவிட்டு உட்கார்ந்திருந்தார். தொழுகை செய்ய உட்காருவது போல் இப்படி உட்காருவது அவருக்கு மிகவும் பிடித்த மானது. இதையெல்லாம் குடிசைக்குள்ளிருந்து கவனித்துக்கொண் டிருந்த ஹோட்டன் வெட்கத்தால் குன்றிப்போனாள். அவள் சோற்றுப் பாத்திரத்துக்குள் கையைவிட்டு அதில் மிச்சமிருந்த இரண்டு கை சாதத்தையும் மிச்சமிருந்த எல்லாத் துவையலையும் தட்டில் வைத்துப் பக்கிரி சாயபுவுக்கு முன்னால் வைத்தாள். அவர் சொன்னார் : "போதும், இப்ப நீங்க போய்ச் சாப்பிடுங்க!'' ஜோட்டன் குடிசையின் ஒரு மூலையில் உட்காந்தாள். அவளுடைய தலை சுற்றியது. சுவரின் மேல் சாய்ந்துகொண்டாள். புடைவை இடுப்பிலிருந்து நழுவி விழுந்தது. ஆபேத் அலியும் இல்லை, ஜப்பாரும் இல்லை. இருந்திருந்தால் அவர்களிடம் சொல்லியிருப்பாள் : 'இந்தக் குடிசையை அடகு வச்சுக்கிட்டு எனக்கு ஒரு வயித்துச் சோறு போடு' என்று. பசி வேதனை பொறுக்க முடியாமல் அவள் கொஞ்சம் பருப்புக் கீரையை வேகவைத்துச் சாப்பிட்டாள். பருவத்துக்கு முன்பே பழுத்துவிட்ட சில பிரப்பம் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டாள். இப்போது முற்றத்தில் மரங்களின் நிழல் நீள்கிறது. காகங்களும் மைனாக்களும் கிளைகளிலும் புதர்களிலும் உறங்கிக் கிடக்கின்றன. பக்கிரி சாயபு கிழிந்த தடுக்கில படுத்துக்கொண்டு தூங்குகிறார். ஜோட்டனால் மேலும் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவள் சோர்வுடன் தன் புடைவைத் தலைப்பைத் தரையில் விரித்து அதன் மேல் குப்புறப் படுத்துக்கொண்டு தூங்கிப் போய் விட்டாள்.

மாலை நேரம். பறவைகள் கூவிக்கொண்டு பறந்தன, சாத்பாயி - சம்ப பறவைகள் சுரைக்காய்ப் பந்தலின் கீழே கீச்கீச்சென்று கத்தின. வயல் வேலைக்காரர்கள் பாதையில் நடந்து வந்துகொண் டிருந்தார்கள். ஜோட்டன் தன் சோர்ந்த உடலைக் கஷ்டப்பட்டு நிமிர்த்தினாள். பக்கிரி சாயபு உட்கார்ந்துகொண்டு ஹக்கா பிடித்துக்கொண் டிருக்கிறார். அவருடைய மூட்டை முடிச்சுக்கள் கவனமாகக் கட்டிவைக்கப்பட் டிருக்கின்றன. ஹக்கா குடித்து முடித்ததும் அவர் புறப்பட்டுவிடுவார் போல் இருந்தது

ஜோட்டனால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவள் உள்ளிருந்தே கேட்டாள் : ''பக்கிரி சாகேப், என்னைக் கூட்டிக் கிட்டுப் போகமாட்டீங்களா?"

பக்கிரிசாயபு முட்டைகளைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டே சொன்னார்: ''இன்னிக்கு இல்லே, இன்னொரு நாள் .

45

இப்போ கோர்பான் ஷேக்கோட படையலுக்குப் போறேன். எப்போ திரும்புவேனோ தெரியாது!''

அவர் புறப்படும்போது கதவின் இடைவெளி வழியே ஜோட்டனின் சோர்ந்த முகத்தில் பொறுக்க முடியாத வேதனையின் அடையாளத்தைக் கவனித்துவிட்டுச் சொல்லிக்கொண்டார் : ''அல்லா ரசூல்! ஐயோ! ஆசை நிறைஞ்ச இந்த உலகத்திலே நாம் எவ்வளவு தூரம் போக முடியும்?''

அவர் நடந்து சென்றபோது தன்னை ஜோட்டனின் கண்கள் பின்னாலிருந்து பார்த்துக்கொண் டிருப்பதை உணர்ந்தார்.

ஜோட்டனுக்குத் தோன்றியது. அன்னத்தின் சிறகு போன்ற மாலதியின் உடலிலிருந்து ஆசையாகிய நீர் உருண்டு விழுகிறது. பீரின் உடல் காஜிப் பாட்டுப் பாடும் பாடகனின் கோல் போல் அசைகிறது, நடக்கிறது. சந்திரனைப் போல் உருவெடுத்துக் கொண்டு சப்பட்டை மூக்குடன் ஜோட்டனின் துக்கத்தையெல் லாம் பார்த்துக்கொண் டிருக்கிறது. ஜோட்டன் விக்கி விக்கி அழுதாள். "அல்லாவே! உன்னோட உலகத்திலே எனக்காக ஒருத்தருமே இல்லையா?''

முரு ஹாட் கிலாப் பறவை வெகு நேரமாகத் தொடர்ந்தாற் போல் கூவிக்கொண்டிருக்கிறது. வீட்டுக்கு வடக்கே கோரைப் புல் காடு. இப்போது அங்கே பலவிதப் பூச்சிகள் பறந்துகொண் டிருக் கின்றன. முதலை போல் பெரிய இரண்டு உடும்புகள் புதருக்குள் போய் மறைந்தன. பருந்து கத்திக்கொண் டிருக்கிறது. மாலதி சீதாப்பழ மரத்துக்குக் கீழே நின்றுகொண்டு எல்லாவற்றையும் கேட்டுக்கொண் டிருந்தாள். இன்னும் கீழே இறங்கிவரத் துணிவு வரவில்லை அவளுக்கு. ஏகாதசிக்கு மறுநாள் நல்ல உறைப்பாக ஏதாவது சாப்பிட ஆசையாயிருக்கிறது. பிரம்புக் கொழுந்தை வேகவைத்துச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. கொழுந்துடன் கடுகெண்ணெயும் பச்சை மிளகாயும் சேர்த்துச் சாப்பிட்டால் பிரமாதமாயிருக்கும். மாலதி பிரம்புக் கொழுந்தைப் பறிப்பதற் காகச் சீதாப்பழ மரத்தடியில் நின்றாள். பிரம்புப் புதரில் குளவிக் கூடு. புதருக்குள்ளிருந்து பறவையின் ஒலி. உள்ளே பாம்பு, பறவையையோ குஞ்சையோ விழுங்கிக்கொண் டிருக்கும் என்று

46

பயந்து அவள் புதரை அணுகவில்லை. அவளுடைய கையில் ஒரு நீண்ட குச்சி. குச்சியின் நுனியில் அவள் ஒரு சிறிய அரிவாளைக் கட்டிவைத்திருந்தாள். அவள் தயங்கினாள். எங்கும் சீதாப்பூவின் மணம்.

ஒரு சிறிய கத்தரித் தோட்டத்தைத் தாண்டினால் ஆபாராணியின் சமையலறை. நரேன் தாஸ் இருக்குமிடம் தெரியவில்லை. நெசவு அறையில் அமூல்யன் துணி நெய்துகொண் டிருக்கிறான். இடை யிடையே அவனுடைய பாட்டு காதில் விழுகிறது. நரேன் தாஸின் மனைவி ஆபாராணி வராந்தாவில் உட்கார்ந்துகொண்டு கீரைத் தண்டு நறுக்கிக்கொண் டிருக்கிறாள் மாலதி இன்னும் பிரம்புக் கொழுந்து பறித்துக்கொண்டு வரவில்லை. அவள் கூப்பிட்டாள். ''மாலதி ! ஏ மாலதி ! நேரமாகல்லியா?"

சீதாப்பூ மணத்தை முகர்ந்துகொண் டிருந்த மாலதிக்குக் காதில் விழுந்ததோ என்னவோ? புதருக்குள்ளிருந்து பறவையின் ஓலம் விட்டுவிட்டுக் கேட்டது. தூரத்தில் ஜப்பர் வயலில் உழுது கொண்டிருக்கிறான். இது என்ன மாதம்? பால்குனாக இருக்கலாம், மாக மாதக் கடைசியாகவும் இருக்கலாம். மாலதி நின்றவாறே கணக்குப் போட்டுப் பார்த்தாள். இப்போது ஜப்பர் அங்கே வந்து அவளைக் கேட்டாலும் கேட்கலாம், ''மாலதி அக்கா, ஒரு குவளை தண்ணி கொடு!'' என்று.

மாலதி உரக்கச் சொன்னாள். ''அண்ணி, எனக்குப் புதருக் குள்ளே நுழையப் பயமாயிருக்கு. ஒரு ஹாட்கிலா அப்பவே பிடிச்சுக் கத்திக்கிட்டிருக்கு." ''ஹாட்கிலா கத்திக்கிட்டிருந்தா உனக்கு என்ன ?" ''அதைப் பாம்பு முழுங்கிக்கிட்டிருக்கு போலே இருக்கு.'' "ஒங்கிட்ட சொல்லிச்சாக்கும்?" மாலதி இதற்குப் பதில் சொல்லவில்லை. ஆற்றுப்படுகை வழியே சாமு வருவதைக் கண்டாள். அவன் கூடவே பேலு. சாமு, பேலுவை விட்டு ஒரு பெரிய காகிதத்தை மரத்தின் அடிப்பாகத்தில் ஒட்டச் செய்தான். மாலதி கூப்பிட்டாள், ''சாமூ, ஓ சாமூ!'' மாலதி தனக்கேற்பட்ட துன்பத்தை மறந்து கொண் டிருக்கிறாள் என்று சாமுவுக்குப் புரிந்தது. சிறுவயதில் அவள் அவளுக்குப் புதர்களிலிருந்தும் மரங்களிலிருந்தும் பிரம்பம்பழம், பலிசப்பழம், அந்தந்தப் பருவத்துக்குரிய வெவ்வேறு பழங்கள், பூக்கள் இவை யெல்லாம் பறித்துக்கொண்டு வந்து தருவான். இப்போதும் அவளுக்கு ஏதோ தேவைப்படுகிறது. அவன் மரத்தடியிலிருந்தே

47

கையைத் தூக்கிக்கொண்டு சொன்னான்: "வரேன் , வரேன்! இந்த நோட்டீசை ஒட்டிட்டு வரேன்.'' ''அது என்ன நோட்டீஸ் ?" 'லீக் நோட்டீஸ்." "ஆமா, பிரமாத லீக்! முதல்லே நான் சொல்றதைக் கேளு. அப்புறம் லீகைக் கட்டிக்கிட்டு அழு!" சாமு அருகில் வந்ததும் அவன் அவளிடம் அரிவாள் கட்டிய குச்சியைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்: "எனக்கு ரெண்டு பிரம்பங்கொம்பு பறிச்சுத் தா!'' சாமு அரிவாளைக் குச்சியில் இறுகக் கட்டிக்கொண்டு புதருக்கு அருகில் வந்தான். ஹாட்கிலா இப்போது முன்போல் அடிக்கடி கத்தவில்லை. அதன் ஓலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகே கேட்கிறது. சாமு புதருக்குள் நுழைந்ததும் சில பூச்சிகள் பறந்து வந்து அவனுடைய முகத்திலும் உடம்பிலும் உட்கார்ந்தன. அவன் அவற்றைத் தட்டிவிட்டுவிட்டு இரண்டு இளங்கொம்புகளை ஒடித்துக்கொண்டு வந்தான். "பாரு , இன்னும் வேணுமா?' "வேண்டாம்!'' மாலதி சாமுவை அரிவாளையும் குச்சியையும் தரையில் வைக்கச் சொன்னாள். அவன் வைத்ததும் குச்சியை மட்டும் எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். பின்னால் திரும்பிப் பார்க்கா விட்டாலும் சாமு தன் பின்னே வந்துகொண் டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அரிவாளைச் சாமுவே வீட்டுக்குக் கொண்டு வரவேண்டும் மென்பது அவளுடைய ஆசை. போகும்போது மாலதிக்கு நினைவு வந்தது, அவளுடைய உடலில் ரவிக்கை இல்லை, கைகளில் வளையல் இல்லை என்று. அவள் எவ்வளவு முயன்றும் புடைவையால் தன் உடம்பை முற்றும் மறைத்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பின்னால் வரும் மனிதன் அவளுடைய உடலிலிருந்து சீதாப்பூவின் மணத்தை நுகர்கிறான். ஆனால் எவ்வளவு தூரம் அவன் போவான் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் அவசர அவசரமாகத் தன் புடைவைத் தலைப்பைப் போர்வை போல் பிரித்து அதனால் உடலைப் போர்த்துக்கொண்டாள். சாமு தன்னைப் பின்தொடர்கிறான் என்பதை நினைக்கும்போதே அவளுடைய உடலில் வாசம் செய்யும் கிரெளஞ்ச பட்சி, வேலை நேரம் பாராமல் கூவத் தொடங்கிவிடுகிறது. அதன் குரலைக் கேட்டதும் அவளுடைய சரீரத்தின் ரோமங்கள் குத்திட்டு நிற்கின்றன. ஆகவே அவள் பின் பக்கம் திரும்பாமலேயே சொன்னாள்: ''சாமு, இனிமே நீ கூட வரவேண்டாம். வீட்டுக்குப் போ!" சாமு ஒன்றும் பேசாமல் அரிவாளை நரேன் தாஸின் வீட்டு வராந்தாவில் வைத்துவிட்டுப் போய்விட்டான். மாலதி ஏதேதோ

48

நினைவில் ஆழ்ந்தவளாகப் பிரம்புப் பட்டையை உரிக்க ஆரம்பித் தாள். ரொம்பப் பிஞ்சு. வேக வைத்தால் வெண்ணெயைப் போல் ஆகிவிடும். மணம் மிகுந்த பச்சரிசிச் சாதம், கொஞ்சம் நெய், வேக வைத்த இளம் பிரம்பு இவை எல்லாம் விதவைப் பருவத்துக்கு ஏற்ற உணவு. ஏகாதசிக்கு மறுநாள் இத்தகைய பிஞ்சுப் பிரம்புக் கிடைத்ததில் அவளுடைய நாக்கில் நீர் ஊறியது. கூடவே அவளு டைய இளமைப் பருவத்தின் சில காட்சிகள் அவள் மனக் கண்ணில் தோன்றின. சாமுவும், ஏஸோவும், ரஞ்சித்தும் எவ்வளவு நாட்கள் அவளுக்கு வயலிலிருந்து மெஜந்தா நிறமுள்ள பலிசப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். பிரப்பம்பழம் மஞ்சித்திப்பழம், மகிழம்பழம் என்று அந்த அந்தப் பருவத்துக்கேற்ற பழங்களை அவளுக்குக் கொண்டுவந்து கொடுக்கத் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண் டிருந்திருக்கிறார்கள்.

இத்தகைய இன்ப நினைவுகளில் மாலதி பகலைக் கழிக்க முடிகிறது. ஆனால் இரவுதான் கழிவதில்லை. இரவில் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு வெள்ளி நிலவு படர்ந்த வயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும். சில சமயம் அந்த நிலவொளியில் ஒரு ராட்சசனின் உருவம் தோன்றும். அவன் என்ன சொல்கிறானோ? எப்படித் திறக்கிறான் வாயை ! செம்பருத்தி போல் ரத்தச் சிவப்பான லட்சம் கண்கள் அவனுக்கு ! உதடுகளைத் திறக்கிறான். ஒரு ராட்சசி அவனைத் துரத்திக்கொண்டு போய் அடிக்கிறாள்.

அப்போது மாலதிக்குத் தூக்கம் வருவதில்லை. கடைசி ஜாமத்தில் தான் அவள் தூங்குவாள். அவளுடைய உறக்கம் கலையும் போது சூரியன் உதித்து வெகு நேரமாயிருக்கும். ஆபாராணி அவளை எழுப்பி எழுப்பி அலுத்துப் போவாள். நெசவு அறையிலிருக்கும் நரேன்தாஸ் சொல்லுவான் : "போனால் போறது, தூங்கட்டும். அவளோட இவ்வளவு பெரிய சோகத்தைக் கொஞ்சம் மறக்கட்டும்." மாலதியின் தூக்கத்தில் ஒரு பறவை ஓலமிடும் ; 'என்னை ஏற்றிக் கொண்டு படகை விடு. ஏரி நீரில் இருளில் முழுக்கப் போகிறேன் நான்.'

மாலதி சீத்தா மரங்களின் இடுக்கு வழியே பார்த்தாள். சாமு எப்போதோ போய்விட்டான். நெசவு அறையிலிருந்து தறி இயங்கும் சப்தம் கேட்கிறது. தன் வீட்டு வாசலில் உளுந்து மிதித்துக் கொண்டிருக்கிறான் மன்சூர். நான்கு பெரிய மாடுகள் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கின்றன.

இரண்டு நீண்ட மாதங்களுக்குப் பிறகு இன்று மாலதிக்கு ஆகாயமும் பூமியும் அன்பினால் நிறைந்திருப்பவையாகத் தோற்று

49

கின்றன. ஆகையால் தான் அவளால் சாமுவைக் கூவியழைக்க முடிந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு அவளுக்குத் தானும் இந்த மண்ணைப் போல் நல்ல நீர் நிறைந்தவள், இனிய கனிகள் நிறைந்தவள் என்ற உணர்வு ஏற்பட்டது. அவள் வெகு நாட்களுக்குப் பின் முதல் தடவையாக உற்சாகத்துடன் புடைவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். அவள் குளத்தங்கரையிலிருந்த கொய்யா மரத்தடிக்கு ஓடினாள். கட்டாரி மர நிழலில் நின்றுகொண்டு மரத்தில் ஏதாவது பழுத்த பழம் இருக்கிறதா என்று தேடினாள். இருந்தால் தொறட்டியால் பழம் பறிக்கலாம். பிறகு அதன் கொட்டையைச் சப்பிட்டுக்கொண்டே - அவளுடைய கணவனின் உதடுகளிலும் நாக்கிலும், ஆகா! என்ன ருசி!- ஒரு பழம் கிடைத்தால் அதைத் தின்றுவிட்டுக் கொட்டையைக் காற்றில் துப்பலாம். கட்டாரிப் பழத்தின் வழுவழுப்பான கொட்டையும் கணவனின் ஜில் லென்று குளிர்ச்சியான நாக்கும் ருசியில் ஒன்றுதான். ஒரு கட்டாரிப் பழம் சாப்பிட ஏங்கினாள் அவள். ஏக்கத்தில் அவளுடைய முகம் சிவந்துவிட்டது. அவள் மரத்தைப் பார்க்கிறாளா, அல்லது ஏதாவது பறவையைப் பார்க்கிறாளா என்று புரியவில்லை.

மரத்தில் ஒரு பழங்கூட இல்லை. குளிர் காலம் கழிந்துவிட்டால் கட்டாரி மரத்தில் பழங்கள் இருக்காது. மாலதி வீட்டுக்குள் நுழைந்தாள். விதவை மாலதி என்ன என்ன சாப்பிடலாம், அவளுக்கு என்ன என்ன சாப்பிடப் பிடிக்கும் என்றெல்லாம் யோசித்து ஆபாராணி அக்கறையோடு அவளுக்காக வெள்ளைக் கல்லின் மேல் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.

மாலதி அண்ணிக்குப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்துகொண்டு சொன்னாள்: ''சாமு முந்தி மாதிரியேதான் இருக்கான், அண்ணி. கூப்பிட்டதும் ஓடி வந்தான், பிரம்புக் கொப்பு பறிச்சுக் கொடுத்தான், அவன் என்னவோ பாஸ் பண்ணினானே ?" ''ஆமா, மாமா வீட்டிலே இருந்துகொண்டு பரீட்சை பாஸ் பண்ணி னான். ஒரு வேலை கிடைக்கணும்னு உன்னோட மாப்பிள்ளைக் கிட்டே எவ்வளவோ தடவை வந்தான், அவரும் அவனுக்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனா இப்போ என்ன ஆயிடுத்து, பார் அண்ணி !'' மாலதியால் மேலே பேச முடியவில்லை. அவள் விம்மி விம்மியழத் தொடங்கினாள். ''எனக்கு இனிமே உசிரோடிருக்க பிடிக்கலே, அண்ணி !'' ஆபாராணி சொன்னாள், "அழாதே!'' என்று. மாலதி அண்ணிக்கு உதவி செய்யத் தொடங்கினாள். பிரம்புத் தண்டை நறுக்கிக் கொடுத்தாள். வேலை செய்துகொண்டிருக்கும்

50

போது அவல சம்பவங்களின் நினைவுகள் மனத்துக்குள் எட்டிப் பார்க்கும், அவள் மெளனமாகி விடுவாள். அவள் தன் அகன்ற கண்களால் உலகத்தை வெறித்து வெறித்துப் பார்ப்பாள். எல்லாமே அர்த்தமற்றவையாகத் தோன்றும் அவளுக்கு. கணவனுடன் ஏற் பட்ட சின்னஞ்சிறு தகராறுகள் அவளுடைய நினைவுக்கு வரும். கண் களில் நீர் நிரம்பும். அப்போது அவளுக்கு ஒன்றுமே பிடிக்காது.

ஆகையால் அவள் வராந்தாவை விட்டு எழுந்து, கத்தரித் தோட்டத்தைத் தாண்டி, முன்பு ஹாட்லாப் பறவை கூவிக்கொண் டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள். நிர்ஜனமான இந்த இடம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் ஏதோ நினைத்துக்கொண்டே எலுமிச்சை மரத்திலிருந்து இரண்டு இலைகளைப் பறித்து அவற்றைக் கசக்கி முகர்ந்தாள். காரணமின்றி அவளுக்குத் தன் கணவனின் நினைவு வந்தது. அவனுடைய கண்கள்! விதவிதமான இனிய நினைவுகள்! நினைக்க நினைக்கக் கடைசியில் மிஞ்சுவது வேதனை தான்.

இங்கிருந்து பார்த்தால் செங்கடம்பு மரம் நன்றாகத் தெரிந்தது. அந்த வழியே சென்றவர்கள் மரத்தில் ஒட்டியிருந்த விளம்பரத் தைப் பார்த்தார்கள். படிக்கத் தெரிந்தவர்கள் நின்று அதைப் படித் தார்கள். சாமுவுக்கு வேலையில்லை. ஆகையால் அவன் லீக் கட்சிப் பிரமுகன். அவன் மரங்களிலும் முஸ்லிம் கிராமங்களிலும் இந்த விளம்பரத்தை ஒட்டி அமைதி தேடிக் கொள்கிறான். சாமு விளம் பரத்தில் என்ன எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள மாலதிக்கு மிகுந்த ஆவல். ஒருவருக்கும் தெரியாமல் அதைக் கிழித்தெறிந்து விட ஆசை. கிழித்தெறிந்துவிட்டால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சாமுவுக்குத் தெரிந்தால் அவளைக் கேட்பான், "ஏன் இப்படிச் செய்தே?'' என்று. 'ஏன் செய்யக் கூடாது? தேசம் உங்க ஆட்களுக்கு மட்டுந்தான் சொந்தமா ?'' "ஏன், எல்லோருக்குத்தான் சொந்தம்!'' "அப்படீன்னா ஏன் இஸ்லாம், இஸ்லாம்னு கத்திக்கிட்டு இருக்கே ?"

“ஏன்னா, எங்க ஆளுக குதிரை மாதிரி ஆயிட்டாங்க. ஒரு தடவை கண்ணைத் திறந்து பாரு. உத்தியோகம் உங்களுக்கு, நிலம் உங்களுக்கு, ஜமீந்தார் நீங்க ! படிப்பு கிடிப்பு எல்லாம் இந்துக் களுக்கு." ''சரிதான்."

மனசுக்குள் தீர்மானம் செய்துகொண்டு மாலதி விளம்பரத்தை நோக்கி நடந்தாள். இரண்டு வயல்களைக் கடந்தால் அந்த மரம். நரேன்தாஸுக்குச் சொந்தமான மரம். சாமு இந்த மரத்தில் விளம்பரம் ஒட்டியதன் நோக்கம், மாலதி அதைப் படிக்க வேண்டும் என்பதுதான். ''இஸ்லாமுக்கு ஆபத்து. இந்த ஆபத்துக் காலத்தில் நாம் நம் மதத்தைக் காப்பாற்ற வேண்டும்.”

இப்போது வயல்கள், பயிர் வயல்கள், நெல், உளுந்து, பட்டாணி வயல்கள், புகையிலை, வெங்காயத் தோட்டங்கள் காலியாக இருக் கின்றன. உழப்பட்ட நிலந்தான், உலர்ந்து கிடக்கிறது. மண் கட்டியாக இறுகிக் கிடக்கிறது. அவள் வரப்பு மேலே நடக்கவில்லை.

வயல்களின் குறுக்கே நடக்கிறாள். வேகமாக நடப்பதற்காகப் புடைவையை முழங்காலுக்கு மேலே தூக்கிக்கொண்டு போகிறாள். தரையில் அவளுடைய காலடி பதிகிறது. நெடுநாட்களுக்குப் பிறகு இன்று ஆகாயம் நிர்மலமாக, நீலமாக இருக்கிறது. அவள் கொஞ்சம் கொஞ்சமாக மரத்தை நெருங்குகிறாள். அவளுடைய கேசம் காற்றில் பறக்கிறது. பக்கத்து நிலத்தில் ஒரு காலத்தில் ரஸோவும் பூடியும் முழுகி இறந்து போய்விட்டார்கள் என்ற நினைவு வந்ததும் அவள் அங்குச் சற்று நேரம் நின்றாள். கண்ணீர் தேவைப்படாத அன்புச் சுழல் ஒன்று இங்கு நீண்ட கால மாக இருந்து வருகிறது போலும்.

அவள் நடந்தாள். விளம்பரம் காற்றில் அசைகிறது. விளம் பரத்தைப் படித்து அவள் உணர்ச்சி வசப்பட்டாள். ஹக்சாகேப் புதிய புதிய பேச்சுக்கள் பேசினார். விளம்பரத்தின் ஒரு மூலையில் நஜீமுத்தீன் சாகேப்பின் படம். தூரத்தில் உழவு நடக்கிறது. உழவர் கள் உழுதுகொண்டே பாடுகிறார்கள். சாமுவின் துவேஷ மனப்பான்மை மாலதிக்குப் பிடிக்கவில்லை - அவள் இங்கும் மங்கும் பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் விளம் பரத்தைக் கிழித்தெறிந்தாள். பிறகு கிடுகிடுவென்று நடந்து ஹாட் கிலாப் பறவை ஓலமிட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள். தன் கணவனின் முகம் நினைவுக்கு வந்தபோது அவள் உரத்த குரலில் கத்த விரும்பினாள். 'நான் பண்ணினது சரிதான். சாமு உன்னோட பெரிய மனுஷத்தனம் எனக்குப் பிடிக்கல்லே. நீ முன்னே நல்லவனாகத்தானே இருந்தே.'

ஹாட்கிலா மறுபடி கூகூவென்று கூவத் தொடங்கிவிட்டது. புதருக்குள் எங்கிருந்து அந்தச் சப்தம் வருகிறது, அது ஏன் இப்படிக் கத்துகிறது என்று மாலதிக்குப் புரியவில்லை. அந்த ஒலி வெகு தூரத்திலிருந்து காற்றில் மிதந்து வருவது போலிருக்கிறது. 52

கோரைப்புல் காட்டில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இறங்கிவிட்டது. அடிமரத்தில் மஞ்சள் நிறச் சுவடை விட்டுச் சென்றிருக்கிறது. மாலதி கத்தரித் தோட்டத்தில் நின்றுகொண்டு புதருக்குள் எட்டிப் பார்த்தாள். பட்சி தொடர்ந்து ஓலமிட்டுக்கொண் டிருந்தது. அதற்கு ஏதோ ஒரு பொறுக்கமுடியாத வேதனை. அவள் உள்ளே பார்க்கப் பலவிதமாக முயற்சி செய்தாள். பிரம்பு இலைகளை விலக்கிப் பருத்திக் கிளைகளின் மேல் சாய்ந்து, தரையில் ஊர்ந்த வண்ணம், இவ்வாறெல்லாம் அந்தப் பறவையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தாள். கோரைப்புல் காட்டுக்குள் நுழைந்து குதிகாலைத் தூக்கிக்கொண்டு எம்பிப் பார்த்தாள். பறவையைக் காணோம். அதன் ஓலம் மட்டும் புதரின் அடிக்குள்ளிருந்து வந்துகொண்டிருக் கிறது. அவள் தன் வீட்டிலிருந்து தொறட்டி எடுத்து வந்து புதருக்குள் குத்திப் பார்க்கும் எண்ணத்துடன் திரும்பியபோது ஒரு பானசப் பாம்பு புதருக்குள் நுழைய முயற்சி செய்வதையும் ஆனால் அதனால் நகர முடியாமல் இருப்பதையும் கண்டாள். பாம்பின் மாதுளை முத்துப் போன்ற சிவந்த கண்கள் அவளைப் பார்க்கின்றன. பட்சியின் பாதி உடல் பாம்பின் வாய்க்குள் இருக்கிறது. இவ்வளவு பெரிய பறவையை எப்படித்தான் விழுங்குகிறதோ இந்தப் பாம்பு ? மாலதி பயந்து போய்க் கத்தினாள். "அண்ணி, வந்து பாரு இந்த அதிசயத்தை! பானசப் பாம்பு ஹாட் கிலாவை முழுங்கறது பாரு!''

''ஐயோ, உன்னையும் கடிச்சுடுண்டி!'' என்று சொல்லிக் கொண்டே ஆபாராணி ஓடி வந்து மாலதியை அழைத்துக்கொண்டு போனாள். வீட்டு வாசலுக்கு வந்து கொண் டிருந்த மாலதி சாமு தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்டாள். கார்த்திகேயனுக்கு இருப்பது போல் அவனுக்கும் மெல்லிய கோடு போன்ற மீசை. முகத்தில் கோபத்தின் சாயை. அவன் மாலதிக்கு முன்னே சென்று நின்றான். ஆபாராணி பயந்து போய்ச் சற்றுத் தூரத்தில் நின்றாள். சாமு கோபத்துடன், ஆனால் பணிவு குன்றாமல் கேட்டான், ''நீ விளம்பரத்தை ஏன் கிழிச்செறிஞ்சே ?" "கிழிச்சா உனக்கென்ன?" 'டாக்காவிலேருந்து இதையெல்லாம் கொண்டு வர்றது எவ்வளவு கஷ்டம்னு உனக்குத் தெரியாதா? இனிமே ஒரு நாளும் கிழிக்காதே!''

'கிழிப்பேன், ஒரு தடவை இல்லே, நூறு தடவை கிழிப்பேன்! என்று சொல்ல விரும்பினாள் மாலதி. ஆனால் அவனுடைய முகத் தைப் பார்த்து அப்படிச் சொல்ல மனம் வரவில்லை அவளுக்கு,

53

பிறகு ஏதோ நினைத்துவிட்டுச் சொன்னாள், "எவ்வளவு பெரிய ஹாட் கிலாப் பறவையைப் பாம்பு முழுங்கறது, பாரு !" சாமு வேகமாகத் திரும்பிப் பார்த்தான். பாம்பு பறவையை முக்கால்வாசி விழுங்கிவிட்டது. பூரா விழுங்கியதும் தன் தேகத்தை . அசைத்து அசைத்துக்கொண்டு இந்தப் பக்கம் வரும். எந்தக் காரணத்தாலாவது பறவை பாம்பின் வாயிலிருந்து தப்பிவிட்டால், வேறு வினை வேண்டாம்! சாமு அதட்டினான். ''ஏய், உனக்குக் கொஞ்சங்கூடப் பயமில்லே? போ, வீட்டுக்குப் போ!" 'என்னை அடக்க வந்துட்டியாக்கும்!' என்று அடங்காப்பிடாரி போல் பதில் சொல்ல விரும்பினாள் மாலதி. அது முடியாமல் போகவே 'ஹோ ஹோ' என்று சிரித்துவிட்டாள். ''விளையாடாதே, மாலதி. பாம்போட வாயிலிருந்து ஆகாரம் நழுவிப் போயிட்டா அதுக்கு வெறி பிடிச்சுடும்." ''மனுஷங்களுக்கு வெறி பிடிக்கிறதில்லையா?'' சாமு கண்களை இடுக்கிக்கொண்டு மாலதியை உற்று நோக்கினான். கிழக்கிலிருந்து வரும் வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடும் நதியைப் போல் அவளுடைய உடலில் இளமையும் அழகும் பொங்கிக் கொண்டிருந்தன. விதவையாகி விட்ட ஓர் இளம் பெண்ணின் உடலில் இப்படியா அழகு பொங்கும் !

சாமு கடைசியாகச் சொன்னான். ''போ வீட்டுக்கு ! காட்டிலே நின்னுக்கிட்டிருக்காதே!''

மாலதி நகரவில்லை. அவள் மறுபடி புதருக்குள் எட்டிப் பார்த் தாள். பாம்பு ஒரு மொட்டை மரத்தில் தன் உடலைச் சுற்றிக் கொண்டிருந்தது. அதன் கண்கள் மாதுளை முத்தைப் போல் சிவப்பாக ஜொலிக்கின்றன. அவர்கள் சற்றுத் தூரத்தில் போய் நின்றுகொண்டு பறவை பாம்பின் வாய்க்குள் அந்தர்த்தியான மாவதைக் கவனித்தார்கள். பாம்பின் கழுத்து உப்பிப் போய்ப் பிறகு மறுபடி பழைய நிலைக்கு வந்துவிட்டது. அப்புறம் பாம்பு சவம் போல் கிளையில் தொங்கத் தொடங்கியது. மறுநாள் அதிகாலையில் மாலதி எழுந்திருந்து வாத்துக்களை விரட்டிக்கொண்டு போய்க் குளத்தில் விட்டாள். ஒரு மரத்தின் கணுவின் மேல் உட்கார்ந்துகொண்டு தண்ணீரில் தன் பிரதி பிம்பத்தைப் பார்த்தாள். அவளுடைய உடலில் வெள்ளைப் புடைவை. அந்த அசட்டு நிறத்தாலும் அவளுடைய அழகை மறைக்க முடியவில்லை. பொன்னான மேனி, வண்ணத்துப் பூச்சி போன்ற மென்மையான மனம். இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த மனம் மரக்கணுவைப் போல் உணர்வற்று இருக்கிறது.

54

தண்ணீரில் கால்களைப் போட்டுக்கொண்டு மரக்கணுவின் மேல் உட்கார்ந்திருக்கிறாள் மாலதி . வாத்துக்கள் தண்ணீரில் நீந்தும், விளையாடும், மிதந்து மிதந்து போகும். தண்ணீருக்குள் மூழ்கி வெகு தூரத்துக்குச் சென்று மேலே வரும். மேலே வந்ததும் ஆண் வாத்து மற்ற வாத்துக்களை விரட்டும். இருட்டிய பிறகு அவளு டைய கணவன், வீட்டுக்குள்ளும் தோட்டத்திலும் அவளைத் துரத்திக்கொண்டு வருவானே, கண்ணாமூச்சி விளையாடுவானே, அதுபோல. அவள் ஓடிக் களைத்துவிட்டால் அவன் அவளை அப்படியே பிடித்துத் தூக்கிக்கொண்டு போவான், எதோ ஒரு மலைக்கோ, நதிக்கரைக்கோ அவளை எடுத்துச் செல்பவன் போல. என்ன இனிய விளையாட்டுக்கள்! அந்த மாதிரிதான் இந்த வாத்துக் களும் விளையாடுகின்றன. மாலதியின் கால்கள் கொஞ்சங் கொஞ்ச மாக மரத்துப் போய்க்கொண் டிருக்கின்றன. தேகம் கட்டையாகிக் கொண்டிருக்கிறது. அவளுடைய அழகிய பாதம் மாச்ராங்கா மீனைப் போல் தண்ணீரில் மூழ்கிக்கொண் டிருந்தது.

அடிக்கடி ரஞ்சித்தின் நினைவு வருகிறது அவளுக்கு. ரஞ்சித், டாகுர் வீட்டுப் பெரிய மாமியின் தம்பி. அவன் இப்போது எங்கே இருக்கிறானோ, யார் கண்டார்கள்? அவன் எங்கோ ஓடிப் போய் விட்டான். எங்கே போனானென்று ஒருவருக்கும் தெரியாது.

குளத்தின் மறுபக்கத்தில் புதருக்குள் பெரிய மீன் ஒன்று அசைந் தது. சிறு வயதில் மாலதி மீன் பிடிப்பாள். மழைக்காலத்தில் கொய்னாப் படகுகளின் பொய்கள் காற்றில் அசையும். புதர்களிலும் காடுகளிலும் பூக்கள் மலர்ந்திருக்கும். அப்போது இங்கே நிறையச் சேலா மீன்கள், டார்க்கீனா மீன்கள், புடைவை கட்டிய பூன்ட்டி மீன்கள் எல்லாம் இருக்கும். மாலதி சிறிய தூண்டில் போட்டுப் பூன்ட்டி மீன் பிடிப் பாள் அப்போது.

ஒரு நாள் மாலையில் தனிமையில் ரஞ்சித் அருகில் நின்றுகொண்டு மீன் பிடித்தவாறே கிசுகிசுத்தான். ''வரியா - மாலதி? என்னோட வரியா?" ரஞ்சித் என்ன சொல்கிறான் என் அவளுக்குப் புரிந்தது. ஆனால் அவள் ஒன்றும் புரியாதவள் போல் நடந்துகொண்டாள். மேலும் பேசத் துணிவு ஏற்படவில்லை ரஞ்சித்துக்கு.

அவள் மரக்கணுவின்மேல் உட்கார்ந்திருந்தாள். எழுந்திருக்கவே மனமில்லை அவளுக்கு. குளத்து நீர் கீழே இறங்கிவிட்டது. ஆகையால் மரக்கணுவையும் கீழே இறக்கி வைத்திருந்தார்கள். குளத்தில் இறங்குவதற்குப் படியாக பயன்பட்டது அது. எவ்வளவோ கால மாக இங்கே இருக்கிறது இந்தக் கட்டை. ரஸோ, ரஞ்சித், சாமு எல்லாரும் மழைக்காலத்தில் இதன்மேல் ஏறித் தண்ணீரில் குதிப்

55

பார்கள், முழுகுவார்கள், மிதிப்பார்கள். நீந்திக்கொண்டு புதர்களில் போய் மறைந்துகொண்டு மாலதியைப் பயமுறுத்துவார்கள்.

இரவில் அவள் கண்ட சில கனவுகள், குளத்து நீர், வாத்துக் களின் இன்பமயமான வாழ்க்கை , எதிரிலிருந்த வயல்வெளி, சோள கோதுமை வயல்கள், உழவர்கள் ஒன்றாகப் பாடும் அறுவடைப் பாட்டு இவையெல்லாம் சேர்ந்து அவளை ஆட்கொள்ளுகின்றன. இரவுக் கனவுகள் தெளிவற்ற நினைவுகளைப் போல் மறைகின்றன. காதலனின் முகம் கந்தப்பாதால் செடிப்புதரிலிருந்து எட்டிப் பார்க் கிறது. இயற்கையின் நிசப்தமும் காலை நேரத்தின் இனிமையும் மாலதியை வேதனைக்குள்ளாக்குகின்றன. மரத்தில் சாமுவின் விளம் பரம் தொங்குகிறது. நாளுக்கு நாள் தேசம் எப்படி ஆகிக்கொண்டு வருகிறது.

மாலதி தண்ணீரில் இறங்கிக் கைகளையும் முகத்தையும் கழுவிக் கொண்டாள். நினைவின் ஆழத்திலிருந்து காதலனின் முகத்தை மேலே கொண்டு வந்து, கடவுளின் பெயரை ஜபித்தாள். அவள் கண்களில் நீர் நிறைந்தது.

நரேன் தாஸ் மேற்குப் பாடாவிலிருந்து திரும்பி வந்துகொண் டிருக்கிறான். அவன் கையில் ஒரு கலதா சிங்டி மீன். மாலதி தன் சுற்றுப்புறத்தையே மறந்துவிட்டு வாத்துக்கள் நீரில் நீந்துவதைப் பார்த்துக்கொண் டிருக்கிறாள். தான் வந்திருப்பதைத் தெரிவிக்கும் முறையில் ஒரு தடவை கனைத்துக்கொண்டான் நரேன்தாஸ். ஏதோ குற்றம் செய்து அகப்பட்டுக்கொண்டது போல் குறுகிப் போனாள் மாலதி. வாத்துக்களின் விளையாட்டு - இந்த மாதிரி விளையாட்டு மாலதிக்கு இந்தப் பிறவியில் கிடையாது. அவளைப் பொறுத்த வரையில் எல்லாமே முடிந்துவிட்டது. அவள் சங்கடத் துடன் பார்த்தாள். நரேன்தாஸம் அப்பாவிச் சிறுவன் போல் அவளைப் பார்த்துச் சொன்னான். "பாரு , எவ்வளவு பெரிய மீன் கொண்டு வந்திருக்கேன்! சமைச்சுச் சாப்பிடு!''

அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அவனுடைய தங்கை மாலதி, விதவை. அவன் தனக்கு வந்த பெருமூச்சை அடக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனான். மாலதி அவனுடன் கூட வந்து கொண்டே சொன்னாள்: ''அண்ணா, சாமு மரத்திலே நோட்டீஸ் ஒட்டறான். நீ ஒட்டக்கூடாதுன்னு சொல்லு!" ''ஒரு இடத்திலே ஒட்டக்கூடாதுன்னா இன்னொரு இடத்திலே ஒட்டுவான்."

நரேன்தாஸ் க்குச் சாமுவைத் தடுக்கத் துணிவில்லை என்று மாலதிக்குப் புரிந்தது.

56

சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு சாமு அந்தப் பக்கம் நோட்டீஸ் ஒட்ட வந்தபோது மாலதி அவனிடம் சொன்னாள் : "சாமு, நோட்டீஸ் ஒட்டாதே ?” "ஏன்?" ''இது என் அண்ண னோட மரம்.'' "அதனாலே என்ன?'' ''உன் மரம் இருந்தா அதிலே ஒட்டிக்கோ ." "இது என் மரந்தான். நீ என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ." ''பெரிய பெரிய பேச்செல்லாம் பேசாதே, சாமு." ''நேற்றுப் பொறந்தவன் நீ. அதுக்குள்ளே பெரிய மனுஷன் வேஷம் போடாதே! நீ குடிச்ச பால் வாசனை கூட மறையல்லே இன்னும்,''

"ஏ குட்டி! உன்கிட்டே மட்டும் என்ன வாசனை இருக்கு ?' என்று சொல்லிக்கொண்டே சாமு மரத்திலேறி உயரத்தில் நோட்டீஸைத் தொங்கவிட்டான். ''எங்கே இப்போ கிழி. உன் சாமர்த்தியத்தைப் பார்க்கறேன்." ''சரி'' என்று சொல்லிவிட்டு மாலதி தன் வீட்டுப் பக்கம் போய்க் கட்டாரி மரத்தடியில் நின்றாள்.

மாலதியின் கோபத்தைப் பார்த்து மனத்துக்குள் சிரித்துக்கொண் டான் சாமு. அவளுடைய பிடிவாத குணம் மாறவில்லை. சாமு முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு கிராமத்தை நோக்கிப் போனான். ஆனால் கிராமத்தின் பசுஞ்செடி கொடிகளைப் பார்க்கப் பார்க்க அவனுடைய மனத்தில் மாலதிக்காக அநுதாபம் பொங்கியது. மாலதியின் தேகத்தின் நிறம் தானியத்தின் நிறத்தைப் போல் இருந்தது. அவளுடன் சம்பந்தப்பட்ட குழந்தைப் பருவ நினைவுகள், வகுப்புக் கலவரத்தில் அவளுடைய கணவனின் மரணம், அவளது விதவைக் கோலம் - எல்லாம் சேர்ந்து சாமுவின் மனத்தில் வேதனையை உண்டாக்கின. இப்போது அவனுக்கே தன்னுடைய வகுப்பு வெறி பிடிக்கவில்லை. அவன் இனி அந்த மரத்தில் நோட்டீஸ் ஒட்டுவதில்லை என்று தீர்மானித்தான். வேறு எங்காவது ஒட்டிக் கொள்ளலாம். அவன் திரும்பிப் பார்த்தபோது மாலதி ஒரு பெரிய குச்சியை வைத்துக் கொண்டு, அவன் அவளுக்குப் பிரப்பங் கொப்பு பறித்துக் கொடுக்க உபயோகித்தானே, அதே குச்சி - நோட்டீஸைக் கீழே இறக்கிக் கொண்டிருந்தாள். கோபத்தில் சாமுவுக்குக் கால் ரத்தம் தலைக் கேறியது. உணர்ச்சி வசப்பட்டவனாக அவன் படபடப்புடன் அவள் அருகே ஓடி வந்தபோது அவள் அவனைப் பார்த்துச் சிரித்து விட்டாள்,

57

''பாரு, என்னாலே நோட்டீஸைக் கீழே இறக்க முடியுமான்னு பாரு!" மாலதியின் இந்தக் கொம்மாளத்துக்கு முடிவு கட்ட விரும்பினான் சாமு. அவன் அவளிடம் தனக்கேற்பட்ட அநுதாபத்தை அடக்கிக் கொள்வதற்காக வலிந்து மேற்கொண்ட கடுமையுடன் சொன்னான். 'நீ இப்போ ஒரு விதவை, மாலதி. இப்படி நீ சிரிக்கறது நல்லா யில்லே .'' "ஏ சா... மூ...!'' என்று சொல்லிக்கொண்டு மாலதி நோட்டீசும் கையுமாகக் கீழே விழுவது போல் மரத்தின் மேல் சாய்ந்தாள். குழந்தை போல் பொருமிப் பொருமி அழ ஆரம்பித்தாள், விதவைக்குச் சிரிக்க உரிமை இல்லை ! மாலதி விதவை என்பதைச் சாமு அவளுக்கு ஞாபகப்படுத்திவிட்டான். சாமு மாலதியின் நிலையைக் காணப் பொறாதவனாக அங்கிருந்து போய்விட்டான். கொஞ்சங் கொஞ்சமாகத் தள்ளிவிட்டு வந்தாள் மாலதி. அவள் காலடியில் அந்த விளம்பரம் கிடந்தது. அவள் தலையை உயர்த்திப் பார்த்தபோது வயல் வெளியில் வேறு யாரும் இல்லை. சாமு கிராமத்தை நோக்கிப் போய்க்கொண் டிருக்கிறான். சந்தை மாடுகள் போய்க்கொண் டிருக்கின்றன. அவற்றின் கழுத்து மணிகள் ஒலிக்கின்றன. அருகில் சில மஞ்சித்தி மரங்கள். வசந்த காலமாதலால் அவற்றில் பழங்கள் இல்லை. அந்தப் பக்கத்தில் பலவிதப் பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஏரியில் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டது. இந்தப் பருவத்தில் ஏரிக்கு நிறைய வாத்துக்கள் பறந்து வரும். மூடாபாடா யானையின் மணியோ சையை அவள் கேட்டு வெகு நாளாயிற்று என்பது மாலதிக்கு நினைவு வந்தது. அதைப் பார்க்கும்போது அவளுக்குத் தைரியம் வரும்.

இந்தப் பிராந்தியத்துப் புல்லும், பூக்களும், பறவைகளும் சைத்ர மாதத்து அனல் காற்றைப் பொறுத்துக்கொண்டு கால வைசாகிக் காகக் காத்திருந்தன. வயல் வெளி சூனியமாகக் கிடக்கிறது. ஆகாயம் வெண்கலப் பாத்திரம் போல் பழுப்பு நிறமாகக் காண்கிறது. பறவைகளும் பூச்சிகளும் பறக்கும்போது குப்பை செத்தை காற்றில் பறப்பது போல தோன்றுகிறது. வயல்வெளி, ஆறு, தர்மூஜ் வயல் எல்லாமே எரிந்து சாம்பலாகிவிடும் போலிருக்கிறது. ஆரஞ்சுத் தோலின் நிறத்தில் சூரியன் காட்சியளிக்கிறான். பூவரசமரம் மொட்டை யாக நிற்கிறது. இலவ மரத்தில் தளிர் விடுகிறது. நெல் வயல்களும் உளுந்து வயல்களும் இப்போது விவசாயத்துக்குத் தயாராயிருக் கின்றன. இந்தச் சமயத்தில் உழுது வைத்தால் நல்ல விளைச்சல் இருக்கும் ; களை வளராது. டாகுர் வீட்டுச் சின்னபாபு உழவு எப்படி நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார். மாலதி தனபாபுவின் சின்னக் குழந்தை சோனாவை மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சு

58

கிறாள். கொஞ்சிக்கொண்டே மரத்தடியில் மாலை நேரத்துக் காற்றை வாங்கிக்கொண்டு நிற்கிறாள். ஸ்ரீசசந்தா, தந்தி சந்தைக்குப் போகப் போகிறான். அங்கிருந்து நரேன் தாஸுக்கு நூல் கட்டு வாங்கிவரப் போகிறான். அது பற்றிக் கேட்டுக்கொண்டு போவதற்காக இந்தப் பக்கம் வருகிறான். அவன் மாலதியைப் பார்த்துக் கேட்டான், "அண்ணா எங்கே?" '' நூல் சுத்தறார். நீங்க செளக்கியந்தானே, சித்தப்பா ?" "ஏதோ இருக்கேன். சந்தையிலே இப்போ நிலைமை சுகமில்லே. பராபர்தி மார்க்கெட்டிலே எல்லா முசல்மான்களும் ஒண்ணு சேர்ந்துக் கிட்டிருக்காங்க. இந்துக்களோட கடையிலேருந்து ஒரு சாமானும் வாங்கமாட்டாங்களாம்!'' பூவரச மரத்தைப் பார்த்துக்கொண்டே மாலதி நினைத்தாள், ஊரெல் லாம் எவ்வளவு கெட்டுப் போச்சு என்று. சோனா அவளுடைய மார்பைக் கட்டிக்கொண் டிருக்கிறான். இப்போது தூங்கிவிடுவான். எங்கும் குளிர்காற்று வீசுகிறது. சரீரமும் குளிர்ந்துவிட்டது. தேகம், மனம் இரண்டுமே லேசாகிவிட்டன போல் தோன்றுகின்றன. சாமு டாக்கா போயிருக்கிறான். வெகு நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லை அவன். பச்சாதாபம் காரணமாக இருக்கலாம்.

ஒரு வயது முதிர்ந்த முஸ்லிம் அந்தப் பக்கம் வருவதைக் கண்டாள் மாலதி. அவன் செங்கடம்பு மரத்தில் ஒரு நோட்டீசைத் தொங்க விட்டுவிட்டு நின்றான். அவன் லுங்கியும் ஜிப்பாவும் அணிந்திருந் தான். முகத்தில் தாடி. மாலதி தன் வீட்டு ஓரம் வரை வந்தாள். ஆனால் வயல் வெளிக்கு இறங்கி வரத் தைரியம் வரவில்லை அவளுக்கு. அந்த மனிதன் தன் கிராமத்துக்குத் திரும்பிப் போகவில்லை. இந்த ஆள் யார்? தூரத்தி லிருந்து அவளால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிய வில்லை. அவன் நரேன்தாஸின் வீட்டை நோக்கி வந்தான். மாலதி தன் அண்ணனைக் கூப்பிட்டு ஒரு மியான் அவளைத் தேடிக்கொண்டு வருவதைத் தெரிவிக்க நினைத்தாள். அந்த ஆள் அருகில் வந்தபோது, 'அடே! என்ன ஆச்சரியம்! சாமுவா இது! கார்த்திகேயன் மாதிரி அரும்பு மீசை வைத்திருந்த சாமு இப்போது மெளல்வி சாயபு மாதிரி தாடி வளர்த்துக்கொண் டிருக்கிறான். அவனை அடையாளமே தெரியவில்லை. முற்றும் அந்நியன் போல ஆகிவிட்டான் அவன்.'

மாலதியால் அவனுடன் பேசமுடியவில்லை. அவனும் அவளை அடையாளம் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவன் நேரே நடந்து வந்தான். அவளுடன் பேசவில்லை அவனுடைய கண்களிலும் முகத்திலும் ஒரு கடுமையான பாவம்

59

மாலதிக்கு வேதனையும் கோபமும் ஒருங்கே ஏற்பட்டன. அவள் உரக்கக் கூவினாள், "அண்ணா , யாரோ மியான் நம்ம வீட்டு வழியே போனார்.'' நரேன் தாஸ் நூல் சுற்றிக்கொண் டிருந்தான். தூரத்திலிருந்து அவனுக்கும் சாமுவை அடையாளம் தெரியவில்லை. அவன் நூல் சுற்றும் சட்டத்தைக் கீழே வைத்துவிட்டுப் பார்த்தான், ஒரு மியான் கோரைப்புல் காட்டைத் தாண்டிக்கொண்டு அவன் வீட்டுப் பாதையில் போவதை. அவன் கத்தினான், "என்ன மியான் ! போக வழி எங்கேன்னு தெரியல்லியா? காலை முறிச்சுடுவேன், ஆமா ! வீட்டுக்கும் ரோட்டுக்கும் வித்தியாசம் தெரியல்லே உனக்கு ?"

மாலதி கட்டாரி மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு 'ஹோ ஹோ' வென்று சிரித்தாள். அவளுடைய முகத்திலும் நின்ற நிலையிலும் பழி வாங்கும் பாவம் தொனித்தது. தூங்கிக்கொண்டிருந்த சோனா அவளுடைய சிரிப்பொலியில் திடுக்கென்று விழித்துக்கொண்டு அழத் தொடங்கினான், இந்தப் புதரில் தான் ஒரு பானசப் பாம்பு ஒரு ஹாட்லாப் பறவையை விழுங்கிவிட்டு மொட்டை மரத்தின் கிளையில் சுருண்டு கிடந்தது. சில மாதங்களுக்கு முன், இந்த நினைவு வந்ததும் அவளுக்கு வானத்தைப் பார்க்கத் தோன்றியது. கீழே வயல்வெளி, உலகத்தின் சுகதுக்கங்கள், காய்ந்த பூவரச மரக்கிளை, மடியில் தனபாபுவின் சிறிய பிள்ளை சோனா - எல்லாமாகச் சேர்ந்து மாலதியை ஓர் இனம் புரியாத பலவீனத்தில் ஆழ்த்தின. இதற்குள் சாமு சாலைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான். ஒரு தடவைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை அவன். வெகுநாட்களாகி விட்டதால் வயல்வெளியைக் கடக்கும்போது சாமுவுக்கு வழி மறந்து விட்டது போலும்.

மழைக்காலம் வந்துவிட்டது. மழைக்காலம் வந்தால் வயல், ஏரி ஆறு, குளம் எல்லாம் தண்ணீரில் முழுகிவிடும். கிராமங்கள் மட்டும் தீவுகள் போல் தண்ணீரில் மிதக்கும். மழைக்காலத்தில் பெரிய பெரிய படகுகள் ஆற்றில் போகும். ஏரிகளிலும் வயல் நீரிலும் பெரிய பெரிய மீன்கள் கிடைக்கும். நெல் வயல்களில் கிரெளஞ்ச பறவைகள் முட்டையிடுவதற்காகக் கூடுகட்டும். இந்தக் காலத்தில் தான் உறவினர்கள் வெளியூர்களிலிருந்து வருவார்கள். அல்லியும்

80

தாமரையும் நீரில் மலரும். நீர்ப்பறவை பூக்களின் மேல் ஜாக்கிரதை. யாக ஒரு காலை வைத்துக்கொண்டு மீன் பிடிப்பதற்காகத் தண்ணீரையே பார்த்துக்கொண் டிருக்கும்,

மழைக்காலம் வந்துவிட்டால் கிழவர் மகேந்திரநாத்தால் தம் அறைக்குள் அடைந்துகிடக்க முடியாது. அவர் மெதுவாக வந்து வராந்தாவில் உட்காருவார். ஒரு மான் தோலின் மேல் உட்கார்ந்து கொண்டு மாலைப் பொழுதைக் கழித்துவிடுவார். அவருக்கு வயது எண்பதுக்கு மேலாகிவிட்டது. இப்போதெல்லாம் கண் கொஞ்சங் கூடத் தெரியவில்லை. இருந்தாலும் அங்கு உட்கார்ந்தவாறே தோட் டத்தில் என்னென்ன மரம் இருக்கிறது, என்னென்ன பூ பூத்திருக் கிறது என்று தெரிந்துவிடும் அவருக்கு. தனமாமி சோனாவை அவருக்கு அருகில் கொண்டுவந்து விடுவாள். ஒரு துணியின் மேல் படுத்துக்கொண்டு கை காலை ஆட்டிக்கொண்டு விளையாடுவான், சோனா. மகேந்திரநாத் இடையிடையே அவனுடன் பேசுவார், அவனுடைய இடுப்பில் வெள்ளி அரைஞாண், கையில் பொன் வளையல். அவனுடைய சிரிப்பு கிழவருக்குக் கடந்த காலத்தின் பல காட்சிகளை நினைவுறுத்தும். தமக்கு மிகவும் பழக்கமாகிவிட்ட இந்த மாலை நேரத்தின் மணத்தை முகர்ந்தவாறே பழைய நாள் கதைகளைச் சொல்லிக்கொண் டிருப்பார் கிழவர், சோனாவும் தம் வயது தான் என்று எண்ணியவர் போல், தம்முடைய தனிமை அவனுக்குப் புரிந்திருப்பது போல. சோனா 'ஆ... ஆ... தா... தா' என்றெல்லாம் சொல்லிக்கொண் டிருப்பான். திண்ணைப் பக்கம் சுவரோரம் சணல் தட்டைக் கட்டு சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். திண்ணையைக் கடந்ததும் தென்பக்கத்து அறை.

மேக மூட்டமாயிருக்கிறது. இன்று நிச்சயம் பூச்சிகள் நிறைய வரும். இது சரத் காலம். சரத் காலம் வந்துவிட்டால் பூபேந்திரநாத் மூடா பாடாவிலிருந்து படகை அனுப்புவார். அஷ்டமியன்று துர்க்கைக்குப் பலியிடப்பட்ட முழு ஆட்டின் மாமிசம் தோலுரிக்கப்பட்டுப் படகில் வரும் டாகுர் வீட்டுக்கு.

பெரிய மாமி கையில் சூடான பாலுடன் வந்தாள். பால் டம்பளரைக் கிழவருக்கு முன்னால் வைத்துவிட்டு அவரது காலடியில் உட்கார்ந் தாள். எதிரில் குளம், மா, நாவல் மரங்களின் நிழல். அதற்குப் பின்னால் வயல்வெளி. மழைக் காலமாயிருந்ததால் எங்கும் தண்ணீர் மயம். அறுவடையான சணல் வயல்கள் நீர் நிறைந்து சமுத்திரம் போல அல்லது ஒரு பெரிய ஏரி போலக் காட்சியளிக்கும். கர்ணபரம்பரைக் கதைகளில் வரும் ராஜகுமாரி இந்த நீரில்தான் மிதந்து வருவாள். தண்ணீரைப் பார்த்ததும் பெரிய மாமிக்கு இதெல்லாம் நினைவு வரும்.

61

கல்யாணமான பிறகு, தான் ஒரு பெரிய படகில் இங்கே வந்தது நினைவுக்கு வரும். இவ்வளவு பெரிய ஏரியில் படகு வரும்போது அவளுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. யாரோ இந்த ஏரியின் கதையைச் சொல்வது போல் இருந்தது. நாடோடிப் பாடல்களில் வரும் கதை அது. ராஜகுமாரி, அவள் பெயர் ஸோனாயி மீமி - அந்த ஏரியில் படகில் வந்து கொண்டிருந்தபோது படகு முழுகி விட்டதாம். பொன் படகு, அதன் துடுப்பு வெள்ளி.

அந்த முதல் நாள், தன் கணவனின் முகம் அந்தக் கதையை நினைவு படுத்தியது என்பது இப்போது ஞாபகம் வந்தது பெரிய மாமிக்கு. அவள் சற்று நேரம் தன்னையே மறந்துவிட்டாள். அவளுடைய கணவனுக்கு அப்போதே மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அன்று நாடோடியைப் போல இப்படிப்பட்ட கதையைச் சொல்லியிருப்பாரா?

சோனாவின் முகத்தை உற்றுப் பார்த்தபோது பெரிய மாமிக்குத் தோன்றியது. அவன் தன் தாயின் ஜாடையுமில்லை ; தந்தையின் ஜாடையுமில்லை என்று. அவளுடைய பைத்தியக்காரக் கணவனின் ஜாடைதான். பெரிய மாமி கல்கத்தாவில் வளர்ந்தவள், சிறிது காலம் கான்வென்ட் பள்ளியில் படித்தவள். இப்போதெல்லாம் அவள் தன் கணவனைப் பைத்தியமாகக் கருதுவதில்லை. அவளுக்கு அவர் புனித மோஸஸ் மாதிரி அல்லது கிரேக்கப் புராணத்து வீரனொரு வன் மாதிரி - யுத்த களத்தில் வழி தவறிவிட்ட வீரன்.

பெரிய மாமி சொன்னாள். ''அப்பா, சோனாவுக்கு உங்க பெரிய பிள்ளையோட ஜாடை.''

மகேந்திரநாத் மெல்லச் சிரித்தார், பிறகு ஏதோ வருத்தம் தோன்றியது அவர் முகத்தில். '' மணியை எங்கே காணோம்?" ''குளத்தங்கரையிலே உட்கார்ந்திருந்தார்." கிழவர் தன் பெரிய நாட்டுப் பெண்ணிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்று வெகு காலமாக நினைத்துக் கொண்டிருந்தார். அவளு டைய பிறந்தகத்தாருக்கு ஓர் அபிப்பிராயம். அவர் தம் பெரிய பிள்ளையின் மூளைக் கோளாற்றை மறைத்துக் கல்யாணம் செய்து வைத்துவிட்டதாக. அவளும் அப்படி நினைக்கிறாளோ, என்னவோ ? அவர் சொல்ல விரும்பினார் அவளிடம், 'நான் என் வாழ்க்கையிலே பொய் சொன்னதில்லே, யாரையும் ஏமாத்தினதில்லே. நான் சொல் றேன். நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி.''

இவ்வாறு யோசித்துவிட்டு அவர் சொன்னார். ''என் காலம் முடியப் போகிறது. அதுக்கு முன்னாலே உங்கிட்டே ஒரு விஷயம் சொல் லணும், அம்மா !'

62

அவள் மெல்லச் சிரித்தாள். ''சொல்லுங்க ! மணி லீவிலே வீட்டுக் வரபோதெல்லாம் என்னோட நெஞ்சு சந்தோஷத்தாலே பூரிக்கும். இந்தப் பிராந்தியத்திலேயே அவனைப் போலக் கெட்டிக்காரப் பையன் இல்லே. அதனால்தான் உங்கப்பாவோடே கல்யாணப் பேச்சு நடத்தினேன். இப்ப சில பேர் சொல்றாங்க, நான் என் பிள்ளை பைத்தியம்னு தெரிஞ்சுக்கிண்டே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சதாக !'

பெரிய மாமி பதில் பேசவில்லை. அவள் சோனாவை மடியில் வைத்துக்கொண்டு அவர் அருகில் உட்கார்ந்திருந்தாள். ''தெரியுமா அம்மா? மணி 'என்ட்ரன்ஸ்' பரீட்சையிலே முதலா வதா வந்து அவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சபோது எல்லார்கிட் டேயும் சொன்னேன், பகவான் என் மானத்தைக் காப்பாத்தி டான்னு. கல்யாணத்துக்கப்பறம் அவனுக்குப் பைத்தியம் பிடிச்ச போது பகவான் என்னை வச்சுக்கிட்டு விளையாட்டுப் பண்றார் அப்படீன்னேன்.''

அவர் எதையோ தேடுவது போல் கையை நீட்டினார். அவரது குழம்பிய கண்கள் அசையாமல் நின்றன. ஒரேயடியாக வெளுத்த தலைமயிரும் தாடியும் அவருக்குச் சாந்தாகிளாசின் தோற்றத்தை யளித்தன. சுருங்கிக் கிடந்தது தோல். ''உங்க தடியை எடுத்துக் கொடுக்கவா?" ''இல்லேயம்மா, உன் கையைக் கொடு." அவள் கையை நீட்டியதும் கிழவர் அதைத தம் இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டு சொன்னார்: "அம்மா, மணிக்குக் கல்யாணத்துக்கு முன்னாலே பைத்தியம் பிடிக்கல்லேன்னு நீயாவது நம்பணும். நான் உன்னை ஒரு பைத்தியத்துக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துக் கூட்டிக்கிண்டு வரல்லே.''

கிழவர் மெளனமானார். அவருடைய கண்களிலிருந்து நீர் வழிந் தது. அவரது முகத்தில் சோகம் கட்டிக் கிடந்தது. நம்பிக்கை யின் சுவடே இல்லை, அதில் சாவை நோக்கிப் பிரயாணம் செய்யும் பிரயாணி அவர். வழியில் சிறிது காலம் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைத்துக்கொண்டு வாழ்நாள் பூராவும் எல்லாருக்கும் தண்ணீர் வழங்கிவிட்டுக் கடைசியில் மிஞ்சியிருந்த தண்ணீரால் கைகால்களையும் முகத்தையும் அலம்பிக்கொண்டு பெரும் பயணத் துக்குத் தயாராகிவிட்டார்.

அவருடைய பேச்சு எங்கோ வெகு தூரத்திலிருந்து வருவது போலிருக்கிறது. ''மணியோட அம்மா பேச்சைக் கேட்டிருந்தா இப்படி ஆயிருக்காது. இதோ பாரு அம்மா ! நான் வீட்டு எஜமான்,

63

மணி என்னோட பெரிய பிள்ளை. அவன் ஒரு மிலேச்சப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கறதா? அது சரியல்லேம்மா, சரியில்லே." கிழவரின் பேச்சைக் கேட்கப் பெரிய மாமிக்குப் பொருக்கவில்லை. அவளுடைய கண்களைச் சோகம் கப்பிக்கொண்டது. கிழவரின் அருமைப் பிள்ளை, அவளுடைய கணவர், காதலால் பைத்தியமாகி விட்டார். கிழவர் தொடர்ந்து பேசினால் அவளுக்கு அழுகை வந்து விடும். அவள் பேச்சை மாற்றுவதற்காகச் சொன்னாள். ''வாங்கோ அப்பா, உங்களை உங்க ரூமிலே கொண்டு விடரேன்."

''நான் இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கேன், அம்மா . இங்கே உட்கார்ந்திருந்தா ஆறுதலா இருக்கு. மழைக்காலத்துப் பயிர் பச்சைகளோட வாசனை வருது. அப்போ கடவுளுக்கு ரொம்பக் கிட்டே இருக்காப்பலே தோன்றது. உன் மாமி எங்கே ?" "அவர் பத்ம புராணம் கேட்கப் போயிருக்கார். உங்களுக்குப் பத்ம புராணம் கேட்க ஆசையா இல்லையா, அப்பா?" ''நானே பத்மபுராணந்தானே ! வாழ்க்கை பூராவும் நான் சாந்த் ஸதாகரோட பாத்திரத்திலே நடிக்கிறேன். நீ பேஹலொ பாத்திரத் திலே நடிக்கிறேன்.'' கிழவர் இப்போது வார்த்தைகளை நீட்டி நீட்டிக்கொண்டு பேசினார். வரம் கொடுக்க உரிமையுள்ள வயது வந்துவிட்டது அவருக்கு. கடவுளுக்குச் சமானமாகத் தோற்றமளித்தார் அவர். அவருடைய பேச்சு வெகு தூரத்திலிருந்து வந்தாற்போல் இருந்தது, "அம்மா, நீ பதிவிரதை சாவித்திரிதான் நீதான் பேஹவா! நீ சங்கும் சிந்தூரமுமா தீர்க்க சுமங்கலியா இருக்கணும்."

ஆழ்ந்த இரவில் பெரிய மாமி தூங்கிக்கொண் டிருக்கிறாள். ஒரு விளக்கு அணையும் தறுவாயில் இருக்கிறது. ஜன்னல் திறந்திருக் கிறது. மழைக் காலத்தின் ஈரக்காற்று ஜன்னல் வழியே உள்ளே நுழைந்து அவளுடைய உடைகளைக் கலைத்து விடுகிறது. அவளு டைய இரு கைகளும் நெஞ்சுக்கு மேலே அஞ்சலி செய்யும் பாவத்தில் சேர்ந்திருக்கின்றன. அவள் உறக்கத்தில் கூடக் கடவுளிடம் தன் கணவருக்காகப் பிராத்தனை செய்வது போல் இருக்கிறது.

அப்போது மணீந்திரநாத் அறைக்குள் உலவிக்கொண் டிருக்கிறார். அவருக்கு உறக்கம் இல்லை. திடீரென்று அறைக் கதவைத் திறக்கிறார். அவர். ஆற்றில் அக்கறையில் யாரையோ விட்டு விட்டு வந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

வானத்தில் இன்னும் சில நட்சத்திரங்கள் விழித்திருக்கின்றன. பூஜையறைக்கு அருகிலேயே ஒரு பவழமல்லிகை மரம். அதன்

* சாந்த்ஸதாகர், பேஹலா - வங்காள நாடோடிக் கதைகளில் வரும் பாத்திரங்கள்.

64

பெரும்பாலான பூக்கள் கீழே உதிர்ந்துவிட்டன, உதிர்ந்து கொண் டிருக்கின்றன. ஒரு சில மட்டும் காம்புகளுடன் ஒட்டிக்கொண் டிருக்கின்றன. காலைக்காகவோ வெயிலுக்காகவோ காத்துக்கொண் டிருக்கின்றன போலும்! மணீந்திரநாத் சில பூக்களைப் பொறுக்கி, அவற்றின் காம்புகளின் மஞ்சள் சாற்றைக் கைகளிலும் முகத் திலும் தேய்த்துக்கொண்டார். இரவு கழிந்து வந்தது.

அவர் ஏதோ நினைத்துக்கொண்டு மூங்கில் புதருக்கருகே வந்து நின்றார். எதிரில் படகுத் துறை. மழை நீர் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. அவர் சிறிய கோஷாப் படகில் ஏறி உட்கார்ந்து கொண்டு துடுப்பை வலித்ததும் படகு நகரத் தொடங்கியது.

கிராமங்கள், வயல்வெளிகளைத் தாண்டி ஆற்றுக்குப் போய்ச் சேரப் போகிறார் அவர். அவருடைய இன்னோர் உலகம் ஆற்றங் கரையில் விளையாடிக்கொண் டிருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத வேதனை ஒன்று அவருடைய மூளையைத் துளைத்துக்கொண் டிருக்கிறது. அவர் வேண்டுவது தனிமை.

கிராமத்தையும் வயல்வெளிகளையும் கடந்து ஏரிக்குப் போய்ச் சேர்ந்துவிடுகிறது கோஷாப் படகு. படகிலிருந்து பார்த்தபோது நாற்புறமுமுள்ள கிராமங்கள் மிகவும் சிறிதாகத் தெரிகின்றன. எங்கும் நிசப்தம். பயங்கரமான , ஆளரவம் அற்ற தனிமை. தூரத்தில் ஸோனாலி பாலி ஆறு கோடு போல் தெரிகிறது. மணீந்திரநாத் பத்மாஸனம் போட்டுக்கொண்டு துறவியைப் போல் உட்கார்ந்திருக்கிறார். ஏரி நல்ல ஆழம் ; துடுப்பின் நீளத்தைவிட ஆழம். அவர் தண்ணீருக்குள் பாலினுடைய முகத்தைப் பார்க்கிறார். பாலின் எப்படி ஆற்று நீரில் காணாமல் போய்விட்டாள்? ஆற்றங் கரையில் எவ்வளவு விளையாட்டுக்கள் விளையாடியிருக்கிறார்கள் அவர்கள் !

அந்தக் கோட்டை நினைவுக்கு வருகிறது. பெரிய மைதானம் ; மைதானத்துக்கருகே கோட்டை. கோட்டையிலிருந்து கொண்டைப் புறாக்கள் பறக்கும். மணீந்திரநாத் உரக்கக் கவிதை சொல்ல ஆரம்பித்தார் : கீட்ஸ் என்று ஒரு கவி ; இப்போது அவன் உயிருடன் இல்லை .' மணீந்திரநாத் கவிதை சொல்லும்போது பாலின் கோட்டைச் சிகரத்தைப் பார்த்த வண்ணம் தன்னை மறந்துவிடுவாள்.

சில செங்கடம்பு மரங்களைத் தாண்டிய பிறகு நந்தி வீட்டாரின் படகுத் துறை. பிறகு முசல்மான் கிராமம். வெகு நாட்களுக்குப் பிறகு அவர் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். எங்கும் சணல் ஊறிக் கொண்டிருக்கிறது. ஊறிய சணல் தட்டையின் மணம். இங்கு________________

65

மங்கும் ஆகாசத் தாமரைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. அவற்றின் வெளிர் நீலப் பூக்களும், கரையிலிருக்கும் வாத்துக்களும் அசைகின்றன. ஒவ்வொரு படகுத் துரையிலும் பறங்கி, பூசணிப் பந்தல்கள்; கொடிகள் பந்தலுக்குக் கீழே தொங்குகின்றன. அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே கவனமாகக் கால் வைத்துக் கரை ஏறிவந்தார். அப்போது ஒரு களஞ்சியத்தின் பின்னாலிருந்து வந்தான் ஹாமீத். அவன் அவரிடம் சொன்னான். பேசுவது அர்த்தம் இல்லைதான். இருந்தாலும் அவர் பெரிய மனிதர். ஒரு தடவை அவன் அவரை ஹாஸான்பீரின் தர்க்காவில் பார்த்திருக்கிறான். அவன் கண்முன்னே அவர் குழந்தையிலிருந்து இளைஞனாக வளர்ந்திருக்கிறார்.

ஆனால் இளமை இன்னும் மாறாமல் இருக்கிறது. கட்டுமஸ்தான தேகம், விரைந்தோடும் குதிரையைப் போல.

ஹாமீத் சொன்னான்: ''இவ்வளவு நாள் கழிச்சு எங்க ஞாபகம் வந்ததா, அண்ணே ?" மணீந்திரநாத் கண்களை அகல விரித்து அவனைப் பார்த்துச் சிரித்தார். ''கொஞ்சம் உக்காந்துக்குங்க , அண்ணே !''

ஹாமீத் அவருக்கு உட்கார ஓர் ஆசனம் கொடுத்தான். பிறகு 'அண்ணன் வந்திருக்காரு' என்று சொல்லி எல்லாரையும் கூப்பிட்டான். உடனே அவனுடைய தாயார், இரண்டு மனைவிகள் குழந்தைகள் எல்லாரும் வந்தார்கள். கிராமத்துக்குள் செய்தி பரவியது. எல்லாரும் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்; அவருக்குச் சலாம் செய்தார்கள். மணீந்திரநாத் ஒன்றும் பேச வில்லை. பேசாமல் இருக்கும் வரை நல்லது. அவர் எல்லாரையும் விழித்து விழித்துப் பார்த்துக்கொண் டிருந்தார்.

ஹாமீத் தன் இரண்டாம் பீபியிடம் சொன்னான்: " அண்ணனோட படகிலே ஒரு நல்ல பூசணிக்காய் எடுத்து வை!"

கிராமத்து விளைச்சலில் நல்லது எதுவோ, புதியது எதுவோ அதை அவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது என்று நினைத்தார்கள் கிராமவாசிகள்.

கிராமத்துக்குள் நடந்தார் அவர். அம்மணமான சிறு குழந்தை களும் கரும்பைக் கடித்துக் கொண் டிருந்த சிறுவர் சிறுமியரும் அவரைத் தொடர்ந்தார்கள். அவர் அவர்களை ஒன்றும் சொல்ல வில்லை . சிறிய பெரிய பள்ளங்கள், மூங்கில் காடு, சேறு நிறைந்த வழுக்கல் பாதை இவற்றைக் கடந்து ஹாஜி சாகேபின் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தார் அவர். ஹக்காக் குழாயை வாயில் வைத்துக்கொண்

66________________

டிருந்த ஹாஜிக் கிழவர் வாசலிலிருந்து வந்த கொம்மாளத்தைக் கேட்டதுமே பைத்தியக்கார டாகுர் வந்திருப்பதை ஊகித்தறிந்து கொண்டார். அவர் ஹக்காவை எறிந்துவிட்டு ஓடிவந்து அவரை வரவேற்றார். ''வாப்பா, வா! இப்பல்லாம் நீ இந்தப் பக்கமே வரதில்லே !" மணீந்திரநாத்துடன் பேசுவதில் பயன் இல்லை என்று அவருக்குத் தெரியும். இருந்தாலும் இவ்வளவு பெரிய மனிதர் இந்தப் பக்கம் வந்திருக்கும் போது அவரிடம் பேசாமல் இருக்க முடியவில்லை ஹாஜி சாயபுவால். மணீந்திரநாத் உட்காரவில்லை. ஹாஜி சாயபுவைப் பல தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தார். பிறகு அவர் வாயிலிருந்து வெளிவந்தது அந்தப் பழைய வார்த்தையே - காத்சோரத்சலா !

ஹாஜி சாயபு சிரித்துவிட்டுத் தம் வேலையாளைக் கூப்பிட்டுச் சொன்னார்: 'டாகுரோட படகிலே ரெண்டு குலை மார்த்தமான் வாழைப்பழம் எடுத்து வச்சுட்டு வா." அவர் மணீந்திரநாத்திடம் சொல்ல விரும்பினார். "டாகுர் பழத்தை எடுத்துக்கிட்டுப் போய், பழுத்தப்புறம் சாப்பிடு. உனக்குக் கொடுக்காமே சாப்பிட எனக்கு மனசு வராது!'

ஹாஜி சாயபு அல்லாவிடம் புகார் செய்யும் தொனியில் சொல்லிக் கொண்டார். ''உம், பாவம், கிழவரோட தலையெழுத்து இப்படியா இருக்கணும்!"

மழைக் காலம், கடும் மழையால் பாதைகளில் எல்லாம் ஒரே சேறு. சில இடங்களில் முழங்கால் வரையில் சேற்றில் அமுங்குகிறது. ஆகையால் நடப்பது கஷ்டமாயிருக்கிறது, மணீந்திரநாத்துக்கு. பாதையின் இருபக்கமும் குப்பை, ஆபாசம், நாற்றம். இதையெல் லாம் அவர் கவனிக்கவேயில்லை. கிராமத்திலிருந்த முஸ்லிம் பெண்கள் அவரைக் கண்டதும் வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டார்கள். ஏழைகளாதலால் அவர்களிடம் தேகத்தை மூடப் போதிய துணி இல்லை. கிராமத்து ஆண்களில் பெரும்பாலோர் வயல் வேலைக்கோ சணல் அறுவடைக்கோ போயிருக்கிறார்கள் ; மாலையில் தான் திரும்புவார்கள். மணீந்திரநாத் கிராமத்தை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு மறுபடி தம் படகில் வந்து உட்கார்ந்தார். தமக்கு அளிக்கப்பட்டிருந்த பொருள்களை ஒரு பக்கத்தில் அடுக்கிவைத்து விட்டுப் படகை ஓட்டத் தொடங்கினார். அம்மணமான குழந்தை களும், சிறுவர் சிறுமியரும் படகுத் துறையில் நின்றுகொண்டு வருத்தத்துடன் அவருக்கு விடையளித்தார்கள்.

இப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது, தம் மனைவி தமக்காகக் காத்துக்கொண் டிருப்பாளென்று. அவளுக்காக அவர் மனத்தில்________________

பரிவு சுரந்தது. அவளுடைய ஆழ்ந்த கண்கள் அவரை வீட்டுப் பக்கம் இழுத்தன. ஆனால் ஏரிக்குள் படகு நுழைந்ததுமே வீடு திரும்பும் அவருடைய ஆவல் வற்றிவிட்டது. அவர் படகுக்குள் சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்திருந்தார், எவ்வளவு நேரம் காலை நேரத்துச் சூரியனைப் பார்த்துக்கொண் டிருந்தார், பிஸ்வாஸ் பாடா, நயாபாடாவில் காகங்களின் கத்தல், நெல் வயல்களில் கிரெளஞ்ச பட்சியின் 'டுப், டுப் சப்தம், இவை எல்லாம் அவரை எவ்வளவு நேரம் தன்னிலை மறக்கச் செய்தன - ஒன்றுமே தெரியாது அவருக்கு. அவர் தண்ணீரில் இறங்கி நீந்தத் தொடங்கினார். அவரது உடலெங்கும் மிகவும் சூடாக இருந்தது. எவ்வளவு தடவை நீரில் முழுகினாலும் அவரால் தம் மன வேதனையைப் போக்கிக்கொள்ள முடியவில்லை. ஆளரவம் அற்ற ஏரி கரையில் மெளனமாக உட்கார்ந்திருப்பதன் மூலம் அவர் தமக்குப் பழக்கமில்லாத பேச்சுக்களிலிருந்தும் ஆபாசங்களிலிருந்தும் விடுதலைப் பெற எத்தனையோ தடவை முயன்றிருக்கிறார். ஆனால் அவ்வாறு விடுதலைப் பெற முடியவில்லை அவரால். எல்லாமே குழம்பிப் போய்விடுகின்றன ; நினைவின் ஆழத் தில் போய் விழுந்துவிடுகின்றன. அவர் எவ்வளவு யோசித்தும் தாம் வாழ்க்கை நடத்த என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. அவருடைய எரிச்சல் அப்போது தீவிர மாக வெளிப்படுகிறது. அவர் இருகைகளையும் உயரத தூக்கிக் கொண்டு கத்துகிறார்: ''நான் ராஜா ஆகப்போகிறேன்!''

மாலையில் பூபேந்திரநாத் கிராமத்துக்கு வந்தார். வேலைக்கு நடுவில் அடிக்கடி தந்தையின் நினைவால் சலனமடைந்துவிட்டார் அவர். அவருக்குத் தம் கிழத் தந்தையிடம் ரொம்பப் பாசம். கிழவரே இன்னும் குடும்பத்தைச் சமாளித்துக் கொண் டிருக்கிறார். ஆரம்பத் தில் பூபேந்திரநாத்துக்கும் சில லட்சியங்கள் இருந்தன. - நாட்டுக்கு விடுதலை கிடைக்கும். சுதந்தர பாரதத்தின் சித்திரம் அவரது மனக் கண்ணில் தோன்றும். இப்போது அந்த லட்சியங்களெல்லாம் இல்லை. அண்ணன் பைத்தியமாகிவிட்டார். வெறும் புரோகிதத்தால் இந்தப் பெரிய குடும்பத்தைப் பராமரிக்க முடியவில்லை. பூபேந்திர நாத் கனவு காண மறந்துவிட்டார். கிழத் தந்தைக்காக, தம் பெரிய குடும்பத்துக்காகப் பொருளீட்ட முற்பட்டார் அவர். குடும்பத்துக் காக அவர் தம் சொந்த சுகத்தைத் தியாகம் செய்துவிட்டார். அவருக்குக் கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைக்க வில்லை. சந்திர நாத்துக்குக் கல்யாணம் செய்துவைத்தார். இப்போது வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிராமத்துக்கு

68________________

வருவார். தந்தையுடன் உட்கார்ந்து கொண்டு குடும்பத்தைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் அவருடன் பேசி அவருடைய ஆலோசனையைக் கேட்பார். அவருக்கு வாழ்க்கையில் இதைத் தவிர வேறோர் அக்கறையும் இல்லை. பூபேந்திரநாத் படகிலிருந்து இறங்கும் போதே அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிந்துவிட்டது, மூடாபாடாவிலிருந்து படகு வந்திருக்கிறது, அதில் அரிசி, ஜீனி, கத்மா - மழைக் காலமாதலால் பெரிய பெரிய கரும்பு எல்லாம் வந்திருக்கின்றன என்று.

பூபேந்திரநாத் வரக் கூடிய பாதையில் நின்றுகொண் டிருந்த தன மாமி முக்காட்டை இழுத்துப் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.

அவர் வீட்டுக்குள் நுழைந்ததுமே கைத்தடியை வராந்தாவில் வைத்துவிட்டுத் தந்தை இருந்த இடத்துக்குச் சென்றார். சாஷ்டாங்க மாக விழுந்து தாய் தந்தையரை வணங்கினார். கிழவர் பிள்ளையின் சுகத்தைப் பற்றிக் கேட்டார், அவருடைய எஜமானரைப் பற்றி விசாரித்தார். அவர்கள் பேசிக்கொண் டிருந்தபோது யாரோ வெளியில் வந்து நிற்பது போல் இருந்தது. 'பெரிய மாமி பெரிய மாமி. அண்ணிக்கு வணக்கம் செய்ய வேண்டும்.'

வாசல் பக்கம் இறங்கி வீட்டைச் சுற்றிப் பார்த்தார். வீட்டில் ஒரு மாறுதல் தென்பட்டது. வீட்டின் நாற்புறமும் முன்பிருந்த வறட்சி இல்லை ; எங்கும் செடி கொடிகள் நிறைய வளர்ந்திருக்கின்றன. வடக்குப் பக்க அறையைத் தாண்டியதும் சகட மரத்துக்கருகில் ஒரு வெள்ளரிப் பந்தல். கொடியில் மஞ்சள் நிறப் பூக்கள் ஒன்றிரண்டு வெள்ளரிப் பிஞ்சுகள் பந்தலில் தொங்குகின்றன. பக்கத்தில் பீர்க்கைப் பந்தல், பாகற்பந்தல். சந்திரநாத் வைத்தவை யாக இருக்கும். பூபேந்திரநாத் சிறுவர்களைத் தேடினார். அவர்கள் எங்கே ? அவர்களை வீட்டில் காணோம். சிறுவர்கள் லால்ட்டுவும் பல்ட்டுவும் தங்கள் கொம்மாளங்களாலும் சத்தங்களாலும் வீட்டையே கலகலப் பாக்குவார்கள். பூபேந்திர நாத் அவர்களுக்காக நல்லரகக் கரும்பு தடியான , சாறு நிறைந்த, மஞ்சள் நிறக் கரும்பு கொண்டு வந்திருந் தார். இந்தக் கரும்பு அவர்களுக்கு மிகவும் விருப்பமானது. அவர் அதைத் தாமே முறித்து அவர்களுக்குக் கொடுத்தால்தான் அவருக் குத் திருப்தியாயிருக்கும். அவர்கள் எங்கே போனார்கள்?

முடாபாடாவிலிருந்து படகு வந்திருக்கும் செய்தி கேட்டு லால்ட்டுவும் பல்ட்டுவும் ஓடி வந்துகொண் டிருந்தார்கள். படகு வந்திருக்கிறதென்றால் அவர்களுக்காகக் கரும்பு வந்திருக்கிறதென்று • கத்மா - ஒரு தின்பண்டம்.

69________________

அர்த்தம். ஆரஞ்சுப் பருவத்தில் ஆரஞ்சு, எள்ளுருண்டை - கத்மா முதலிய தின்பண்டங்களும் அந்த அந்தப் பருவத்தில் கிடைக்கும். பருவத்துக்கேற்றபடி மாம்பழம், நாவற்பழம்.

அவர்கள் படகுத் துறையை அடைந்தபோது அலி மத்தி கூடை களை இறக்குவதைக் கண்டார்கள். அரிசி, பருப்பு, எண்ணெய், பாகற்காய், பீர்க்கங்காய், பெரிய மீன் எல்லாம் கொண்டுவந்திருந் தார் பூபேந்திரநாத். சிறுவர்கள் இருவரும் பலகைக்கடியிலிருந்து அதை வெளியே தூக்கினார்கள். வீடு இப்போது திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பெரியமாமி மட்டும் சோகம் ததும்பும் கண்களுடன் யாரையோ தேடிக்கொண் டிருக்கிறாள் நாள் முழுதும் அவளுடையவர் எங்கோ போனார். வர வேண்டியவர், இன்னும் வரவில்லை. அவளுடைய விசாலமான கண்களைப் பார்த்ததுமே பூபேந்திர நாத்துக்குப் புரிந்தது, தம் அண்ணன் எங்கோ மறுபடியும் போய்விட்டாரென்று. அவருடைய மனசு சங்கடப்பட்டது. அவரால் தம் அண்ணியை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை . சாயங்காலம் வராந்தாவில் பூபேந்திரநாத், கிழவருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண் டிருந்தார். மூடாபாடாவி லிருந்து வந்ததும் எல்லாச் செய்திகளையும் தந்தைக்குத் தெரிவிப்பது அவரது வழக்கம். அவருடைய எஜமானர்கள் ஆனந்த பஜார் வாரப் பத்திரிகை படிப்பார்கள். அவர்கள் படித்து முடித்ததும் பூபேந்திர நாத் அதை வாங்கி ஆதியோடந்தம் படிப்பார். இவ்வாறு உலக விவகாரங்களை யெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு அவற்றைப் பற்றித் தம்மைச் சந்திக்க வருபவர்களிடம் பேசுவார். வீட்டுக்கு வந்தால் நாட்டு நிலைமையைப் பற்றி விவரமாகப் பேசுவார். ''இப்போது லீக் பண்ற காரியங்களைப் பார்த்தா மறுபடியும் கலகம் வரும்போல இருக்கு" என்று சொன்னார் தந்தையிடம். கிழவர் மெதுவாகச் சொன்னார். "ஹாபிஜத்தியின் பையன் சாமு வைத்தான் உனக்குத் தெரியுமே! அவன் தோடார்பாகிலே லீக்கோட கிளை ஒண்ணு ஆரம்பிச்சிருக்கானாம். மரத்துக்கு மரம் நோட்டீஸ் தொங்கவிடறானாம். உம், நாளுக்கு நாள் தேசம் என்ன ஆயிட்டிருக்குன்னு எனக்கும் புரியல்லே!" ''பத்திரிகையிலே ஒரு விளம்பரம் பார்த்தேன், அப்பா. காரோ மலையிலேருந்து ஒரு சந்நியாசி வந்திருக்காராம். கடந்தகாலம். எதிர்காலம் எல்லாத்தையும் சொல்றாராம். அவர்கிட்டே அண்ணா வைக் கூட்டிக்கிண்டு போய்ப் பார்க்கலாம்னு..." ''கூட்டிக்கிண்டு போயேன். உனக்கு எது சரின்னு தோன்றதோ அதைப் பண்ணு ."

70________________

"ஈசமும் கூடவே வரட்டும்." வீட்டுக்குள்ளே பெரிய மாமி அரிசியை - சுமார் இரண்டு முட்டை இருக்கும் - எடுத்து வைக்கிறாள். காய்கறிகளை எடுத்துவைக்கிறாள்.

அவளுடைய கணவரைச் சந்நியாசியிடம் கூட்டிக்கொண்டு போகப் போகிறார்கள். சிறு நம்பிக்கையொளி அவளுக்குள்ளே தோன்றி மறு நிமிஷமே மறைந்துவிட்டது. அவரைக் குணப்படுத்துவதற்குப் பத்து வருடங் களாக எவ்வளவு முயற்சிகள் நடந்திருக்கின்றன! அவருக்குக் குணமாகவில்லையே!

இப்போதெல்லாம் மணி நாள் கணக்கில் வீட்டுக்கே வருவ தில்லை. எங்கே இருக்கானோ, என்ன சாப்பிடறானோ? கடவுளுக்குத் தான் தெரியும்.

பூபேந்திரநாத் சொல்ல விரும்பினார், "அண்ணன் சாப்பாடில் லாமே சுத்தறார், எங்கே இருக்கார், எங்கே இராப்பொழுதைக் கழிக்கிறார், ஒண்ணும் தெரியல்லே. இப்படி விடறதைவிட அவரைக் கட்டிவைக்கறது தேவலை" என்று. ஆனால் வாயைத் திறந்து அவர் பேசவில்லை. காரணம் பக்கத்தில் அவருடைய தாய் இருந்தாள், அண்ணி இருந்தாள். இம்மாதிரி பேச்சை அவர்கள் பொறுக்க மாட்டார்கள். அவ்வாறு நேர்ந்தால், இன்னும் சிறிது நாட்கள் உயிர் வாழக்கூடிய அவருடைய தந்தையும் மனமுடைந்து விரைவில் உயிரை விட்டுவிடுவார். ஆகையால் பூபேந்திரநாத் பேச்சை மாற்றினார். ''சோனாவைக் கூட்டிக்கிண்டு வாங்க, பார்ப்போம்!"

அண்ணி சோனாவைக் கொண்டு வந்து அவருடைய மடியில் விட்டாள். அவனைப் பார்த்து ஆச்சரியமடைந்தார் பூபேந்திரநாத். அப்படியே அவருடைய அண்ணனின் ஜாடை குழந்தைக்கு ! அவனைத் தூக்கிக்கொண்டு அவர் வெளியறைக்கு வந்தார். சோனா, ''ஆ... ஆ... தா . தா...'' என்று மழலை பேசினான். வேற்று முகத்தைப் பார்த்துக் கொஞ்சங்கூட அழவில்லை. அவன் அடிக்கடி பல்லைக் கடித்துக்கொண்டான். சுண்டெலியின் சின்னஞ்சிறு பற்களைப் போல் பற்கள் முளைத்திருந்தன அவனுக்கு. "டேய், பையா, உனக்கு ஏதாவது உடம்புக்கு வந்துடப்போறது'' என்று சொல்லிக் கொண்டே அவனுடைய பற்களை மெதுவாகத் தட்டினார் பூபேந்திர நாத். அவர் இப்படித் தட்டுவதன் மூலம் அவனுக்கு வரவிருந்த நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற விரும்பினார். சோனா உரக்க அழத் தொடங்கினான். பக்கத்து வீட்டுத் தீனபந்து அவரைப் பின்னாலிருந்து கூப்பிட் டார். ''என்ன தம்பி , டாக்காவிலே மறுபடி கலகம் நடக்கப் போற தாமே?"

71

''நடக்கலாம்." ''யார் ஜயிப்பாங்கன்னு தோண்றது?" "எப்படிச் சொல்ல முடியும்?" ''என்ன அக்கிரமம் பாரு! அம்மாகிட்டே பால் குடிக்கற பசங்க கூடக் கத்தியை எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டாங்க." 'நீ பார்த்தியா என்ன?'' ''பார்க்காமே என்ன? மாலதியோட கல்யாணத்தின்போது டாக்கா போயிருந்தேனே! ஊரைச் சுத்திப் பார்த்தேன். எவ்வளவு பெரிய ஊரு ! ரமண மைதானம் பார்த்தேன், பீரங்கி பார்த்தேன்."

மாலை ஆனதும் தனமாமி மேற்குப் பக்க அறையில் ஒரு ஹரிக் கேன் விளக்கு வைத்துவிட்டுப் போனாள். கைகால் கழுவத் தண்ணீர், ஒரு துண்டு, ஆசனம் எல்லாம் கொண்டு வந்து வைத் தாள். பூபேந்திரநாத் கைகால்களைக் கழுவிக்கொண்டு அறையில் உட்கார்ந்துகொண்டு விடுவார். இனி வெளியில் போகமாட்டார். அவர் கிராமத்துக்கு வந்திருக்கும் செய்தி ஊரில் பரவிவிட்டது. அவருக்கு உலகத்தில் நடக்கும் சமாசாரங்கள் எல்லாம் தெரியும். ஆகையால் இவரைப் பார்க்க எல்லாரும் வருவார்கள். பால் வீடு, மாஜி வீடு, சந்தா வீடு - எல்லா இடங்களிலிருந்தும் வயது முதிர்ந்தவர்கள் ஒரு கையில் தடி, ஒரு கையில் லாந்தர், கால்களில் பாதரட்சைக் கட்டை சகிதம் அங்கு வந்து கூப்பிட்டார் கள், "பூபேன் இருக்கிறானா?" என்று.

பூபேன் பெஞ்சியின் மேல் உட்கார்ந்து ஜபம் செய்துகொண்டும் ஈசமுடன் நலம் விசாரித்துக்கொண்டும் இருந்தார். பாதரட்சைக் கட்டைகளின் ஓசை அவருடைய காதில் விழுந்தது. வந்தவர்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். ஊர் வம்பு. பத்திரிகைச் செய்தி கள், நாட்டு நிலைமை, வெளி நாட்டு விவகாரங்கள், காந்திஜியின் பேச்சு - எல்லாவற்றைப் பற்றியும் கேட்க அவர்களுக்கு ஆவல். இப்போது இந்தக் குழுவின் உயிர் அவர்தாம். அவர்கள் அவரை எல்லாம் அறிந்தவராகக் கடவுளைப் போலவே நினைத்தார்கள். அவர் சொன்னார். ''ஊர் நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு ஹாரான்!" ''ஏன் சித்தப்பா ?" "நேத்திக்குப் பாபிர்ஹாட் சந்தை பூராச் சுத்திப் பார்த்தேன். ஒரு புடைவை கூடக் கிடைக்கல்லே.'' "ஏன் அப்படி ?" ''ஜமீந்தாரியிலே வசூலே இல்லே. காந்திஜி சட்டமறுப்பு இயக்கம் நடத்திக்கிட்டிருக்கார். இங்கிலீஷ்காரங்களும் சும்மா

இயக்கப்பட்டினம். இதேபோல் ..கும்

72

கரப்பா

இல்லை ; தடியடி செய்யறாங்க, குண்டு போடறாங்க. இங்கிலாந்துப் பிரதம மந்திரி லீக்கை ஆதரிக்கிறார். லீக்குக்கு நல்ல காலம் இப்போ .'' மாஜி வீட்டைச் சேர்ந்த ஸ்ரீ சசந்தா சொன்னான். ''கலிகாலம் வந்துடுத்து, தம்பி.' ''நாலுபக்கமும் சதி நடக்கிறது. காட்டுக்குள்ளே ஆனந்தமாயி காளி கோயிலுக்குப் பக்கத்திலே ஒரு பழைய கட்டடம் இருக்கு. ஒரு குளம் இருக்கு. இவ்வளவு நாள் அதை ஒருத்தரும் சீந்தல்லே. இப்போ மெளல்வி சாயபு சொல்றார். அது மசூதியாம். அங்கே முஸ்லிம் ஜனங்க தொழுகை செய்யப் போறாங்களாம்." "அப்போ கலகம் வரத்தான் போகுது." ''இந்து ஜனங்க சும்மா விடுவாங்களா? இடம் அமர்த்த பாபு வோடது. பக்கத்திலே காளி கோயில் . கலகம் உண்டாக எவ்வளவு நேரமாகும்?"

''என்ன அநியாயம்? தேசத்திலே சட்டம், நியாயம் ஒண்ணும் கிடையாது. ஜாதி, மதம், பூஜை, புனஸ்காரம் ஒண்ணுமில்லே. காளிமாதா மணிதப் பூண்டையே அழிச்சுடப் போறாள்."

ஸ்ரீச சந்தா அப்போதுதான் கவனித்தான், ஈசம் வாசலில் உட்கார்ந்து கொண்டு ஹக்கா பிடித்துக்கொண்டிருப்பதை. அவன் நாக்கைக் கடித்துக்கொண்டான். ஈசம் இருப்பதை இவ்வளவு நேரம் வரை அவன் கவனிக்கவே இல்லை. அவன் இப்போது தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னான். ''தம்பி, இப்போ முசல் மான்கள் என் கடையிலே சாமான் வாங்கறதில்லே. எவ்வளவு நாளைய வாடிக்கைக்காரங்க ! இப்போ அவங்க எல்லாரும் சரி பத்தி யோட கடையிலே சாமான் வாங்கிக்கறாங்க."

எல்லாரும் மௌனமானார்கள். யாருக்கும் பேசத் தோன்ற வில்லை. பூபேந்திரநாத் ஹக்கா பிடித்துக்கொண் டிருந்தார். பெருங் காற்றில் விளக்கின் சுடர் சற்று அசைந்தது. தூரத்தில் ஸோனாலி பாலி நதியில் கொய்னாப் படகுகளின் ஒலி. சசீந்திரநாத் பூஜையறை யில் நைவேத்தியம் செய்கிறார். பூஜைமணி, கொய்னாப் படகின் ஒலி, ஈசமின் சோகம் நிறைந்த கண்கள் - இவை எல்லாரையும் வேதனைக்குள்ளாக்குகின்றன. கிழவர் தம் அறையில் படுத்துக் கொண்டு கண்ணீர் விடுகிறார். அவருடைய பைத்தியக்காரப் பிள்ளை எங்கே சுற்றிக்கொண் டிருக்கிறானோ? எந்த மரத்தடியில் படுத்திருக்கிறானோ? பெரிய மாமி கிழக்குப் பக்க அறையின் ஜன்னலைத் திறந்து கொண்டு அதனருகில் நின்றுகொண்டிருக் கிறாள். எதிரில் சகட மரம், அதன் பின் பிரம்புப் புதர், பிறகு அத்திமரம், அதைக் கடந்துவிட்டால் வயல்வெளி. மரத்தின்

73

________________

உச்சியில் முழு நிலா . வெள்ளி நிலவில் மரங்கள் தெளிவாகத் தெரிகின்றன. வயல்களில் பயிர்கள் மட்டும் பனியால் சற்றே மூடப்பட்டிருக்கின்றன.

அவள் வெளியே பாதையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள், ஒரு மனிதனின் நிழல் விழாதா என்று எதிர்பார்த்துக்கொண்டு. கைத்தடி யின் ஓசையைக் கேட்டால், அல்லது ஏரியில் படகின் அரவம் கேட்டால் அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறாள், சாது, சந்நியாசி போன்ற அந்த மனிதர் வந்துவிட்டாரா என்று!

அவரை நினைத்தபோது அழுகை அழுகையாக வந்தது பெரிய மாமிக்கு.

கொஞ்ச தூரம் படகில் வந்ததுமே மணீந்திரநாத்துக்கு வீடு திரும்பும் ஆசை வற்றிவிட்டது. அவர் படகை நினைத்தபடி திருப் பினார். இடையிடையே துடுப்பை எடுத்துச் சிலம்பம் விளையாடு பவர் போல் தம் தலைக்கு மேலே சுழற்றினார். இந்த நட்சத்திரக் கூட்டம், இந்த ஆகாயம், ஏரி நீரில் கிரெளஞ்ச பட்சியின் அழைப்பு - எல்லாவற்றுடனும் போராட்டம் - கண்காணாத போராட்டம் - நிகழ்த்துகிறார் அவர். படகின் மேற்பலகையின் மேல் குதிக்கிறார். எதையோ கைகளால் இறுகப் பிடித்து அதன் கழுத்தை நெறிக்கிறார். அவர் துடுப்பைச் சுழற்றும்போது 'விர் - விர்' என்று சப்தம் கேட் கிறது. வயல்களில் சணல் அறுத்துக்கொண் டிருப்பவர்கள் அந்த ஒலியைக் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார்கள். பைத்தியக்கார டாகுர் படகில் நின்றுகொண்டு தடியைச் சுழற்றுவதைப் பார்த்துவிட்டுச் சொல்லிக்கொள்கிறார்கள். ''எப்படிப்பட்ட மனிதர் எப்படி ஆகி விட்டார்'' என்று.

அவர் படகில் வெகுதூரம் வந்துவிட்டார். ஆகவே வீடு திரும்ப வெகு நேரம் ஆகும். தன் மனைவியின் அகன்ற, ஆழமான கண்கள் அவரை வேதனைக்குள்ளாக்குகின்றன. வீட்டுக்கு விரைவில் திரும்பும் ஆர்வம் முனைக்கிறது. அப்போது அவர் ஏரியில் ஒரு பான்ஸிப் படகைப் பார்க்கிறார். அதில் பாலின் உட்கார்ந்திருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. படகு பாலினை ஏற்றிக்கொண்டு கண்காணாத உலகத்துக்குப் போய்விடப் போகிறது. மணீந்திரநாத் பலகைக்கு அடியிலிருந்து சிறிய துடுப்பை எடுத்து வேகமாக வலிக்கிறார். பெரிய பெரிய அலைகள் எழும்புகின்றன. படகு மேலுங் கீழும் ஆடிக்கொண்டு ஆற்றுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. இப்போது அது ஆற்றின் பிரவாகத்தில் தானே மிதந்து செல்கிறது. அவர் துடுப்பு வலிக்கத் தேவையில்லை. அவர் சும்மா சுக்கானைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

-

-

தி

74________________

பான்சிப் படகில் இருந்த மனிதர்கள் தங்களுக்குப் பின்னால் ஒரு படகு வருவதைப் பார்க்கிறார்கள். அதில் மேலாடை அணியாத ஆஜானுபாகுவான ஒரு மனிதர். நல்ல சிவப்பு நிறம், வெயில் காரணமாகச் சற்றுக் கறுத்திருக்கிறது. அவர் சுக்கானைப் பிடித்துக் கொண்டு, கண்களை முக்கால்வாசி மூடிக்கொண்டு உட்கார்ந்திருக் கிறார். படகுக்காரர்களுக்கு அவரைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.

படகுக்குள் ஓர் அறையில் ஒரே படுக்கையில் உட்கார்ந்திருக் கிறார்கள் ஜமீந்தார் வீட்டு மைனரும், பாட்டுக்காரி விலாஸியும். பாட்டு, அதன் பிறகு வேடிக்கைப் பேச்சு. விலாஸி கையில் சரோத் வாத்தியத்தை வைத்துக்கொண்டு கால்களை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். சரோதின் 'டுங், டாங்' ஒலி. 'ஆ, சஜனியா' என்று பாடும் பாவத்தில் அமர்ந்திருக்கிறாள் அவள். அவர்களுடைய கண்கள் போதையில் கிறங்கிக் கிடக்கின்றன. அவர்களால் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளக்கூட முடியவில்லை. மணீந்திரநாத் நீண்ட தூரம் வரை அப்படகைப் பின்தொடர்ந் தார். சரோதின் ஒலி அவருக்கு ஒரு பெண்ணின் முகத்தை நினை வுறுத்துகிறது. அவர் வயல்வெளிகளில், ஆற்று நீரில், மணலில் - எங்கும் பாலினுடைய முகத்தை , உருவத்தை, அவளுடன் சம்பந் தப்பட்ட நிகழ்ச்சிகளைக் காண்கிறார். திடீரென்று அவருக்கு எல்லாம் குழம்பிவிட்டது. பான்சிப் படகைத் தொடர்ந்து வந்ததில் தாம் போகவேண்டிய வழியை மறந்துவிட்டார் அவர். கரையை நோக்கி அவர் படகைத் திருப்பினார். ஆனால் நாணற் புல் காட்டுக்குள் படகு நுழைந்த பிறகு அதிலிருந்து வெளியே வரத் தெரியவில்லை அவருக்கு. சூரியன் மேற்குத் திசையில் சாய்ந்துவிட்டான் ; சற்று நேரத்தில் அஸ்தமித்துவிடுவான். கிளெரஞ்ச பட்சியின் சோகக் குரல் வானத் தில் ஒரு மூலையிலிருந்து கேட்கிறது. சந்தையிலிருந்து ஆட்கள் திரும்பி வந்துகொண் டிருக்கிறார்கள்.

அவர் படகின் மேற்பலகையில் படுத்துக்கொண்டார். உடம்பில் ஏதோ வேதனை , பசி, தாகம், அந்த வேதனையிலிருந்து எப்படி விடு படுவது என்று புரியவில்லை அவருக்கு. படுத்தவாறே கிரெளஞ்ச பட்சியின் ஓலம் வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தார். வானத்தில் எங்கும் சூனியம். ஒரு பூச்சி கூடப் பறக்கவில்லை.

சோர்ந்த குரலில் அவர் சொல்ல விரும்பினார், "பாலின் , நான் உன் கிட்டே வரேன்!'' என்று.

தூரத்தில் ஏதோ ஒரு கிராமம். அங்கிருந்து வெண்கல மணியின் ஓசை கேட்கிறது. ஏதோ ஒரு முசல்மான் கிராமத்திலிருந்து தொழு கைக்கு அழைக்கும் ஒலி. ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள் மலர்ந்

75________________

திருக்கின்றன. இப்போது வானம் சூனியமாகத் தெரியவில்லை. நட்சத்திரங்களின் உலகந்தான் எவ்வளவு தூரம் ? வேண்டுமென்றால் அதைப் பிடிக்க முடியாதா? இந்த நட்சத்திர உலகத்தில் - அல்லது பனி மூட்டத்தில் - படகின் பாயை விரித்துக்கொண்டு தூங்கிப் போய்விட்டால் எப்படி இருக்கும்!

விசித்திரக் கற்பனைகளில் தம்மை மறந்து கிளர்ச்சி வசப்பட்டார் மணீந்திரநாத்.

நெற்பயிர்களின் இடைவெளிகளில் சில மின்மினிகள் மினு மினுக் கின்றன. நிலவொளியில் உலகம் அமைதியாக இருக்கிறது.

மெல்லக் காற்று வீசுகிறது. நாள் முழுதும் ஏற்பட்ட சிரமம், காற்றின் இனிமையில் மறைந்துவிட்டது. மறுபடி பாலினின் முகம் தோன்றுகிறது. மணீந்திரநாத் படுத்துக்கொண்டே ஏதோ முணு முணுத்தார். அவரைப் பார்ப்பவர்களுக்குத் தெரியாது, அவர் இப்போது கல்கத்தாவில் ஓர் ஐரோப்பியக் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று. அவர் ஏதோ உளறிக்கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றும். அவர் உரக்கப் பேசியிருந்தால் அவர் ஆங்கிலம் பேசுவது புரிந்திருக்கும். கையின் மேலே தலையை வைத்துக்கொண்டு அவர் முணுமுணுப்பது அவரைப் பைத்திய மாகவே தோற்றுவிக்கிறது.

தம் குடும்பத்தினரின் முன்னே போய் நின்றுகொண்டு, ''நான் பாலினைக் காதலிக்கிறேன்!'' என்று உரக்கக் கத்த முடிந்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும் அவருக்கு. ஆனால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மணீந்திரநாத் தந்தையின் கட்டளையை ஏற்றுக் கொண்டு வனவாசம் செய்ய நேர்ந்தது. அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. "காத்சோரத்சாலா!'' அவர் எழுந்து நின்றுகொண்டு சொல்ல விரும்பினார். ''பாலின், நான் பைத்தியம் இல்லை. என்னை எல்லாரும் அநியாயமாப் பைத்தி யம்னு சொல்றாங்க. உன்கிட்டே வந்துட்டா நான் நன்னா ஆயிடுவேன்.''

அவருடைய வார்த்தைகள் வயல்களிலும், காடுகளிலும், நீரிலும் எதிரொலித்துத் திரும்பின. "நான் பைத்தியம் இல்லை! எல்லாரும் அநியாயமா என்னைப் பைத்தியம்னு சொல்றாங்க!''

இரவு நேரம். லால்ட்டுவும் பால்ட்டுவும் தெற்குப் பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஈசம் இன்று தர்மூஜ் வயலுக்குப் போகப் போவதில்லை; போவதானால் நேரங் கழித்துப் போவான். தனமாமி சமயலறையில் பெரியமாமி கதவருகில் உட்கார்ந்திருக்கிறாள். சோனா அவளுடைய மடியில் தூங்கிப் போய்

76________________

விட்டான். பெரிய மாமி பனைவிசிறியால் விசிறிக்கொண்டிருக்கிறாள். ரொம்ப உஷ்ணமாக இருக்கிறது. மேற்குப் பக்க அறையில் இவ்வளவு நேரம் சொக்கட்டான் விளையாடிக்கொண் டிருந்த வர்கள் ஒவ்வொருவராகப் போய்விட்டார்கள். தீனபந்து மட்டும் பூபேந்திரநாத்தின் காலடியில் உட்கார்ந்து கொண்டு ஹக்கா பிடித்தவாறே அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். தீனபந்து பூபேந்திரநாத்தைத் தாஜா செய்ய விரும்பினார். அவர், குத்தகையில் சாகுபடி செய்து கொண்டிருந்த ஜமீந்தாரின் நிலத்தைத் தமக்கே சொந்தமாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கு ஜமீந்தாரின் சிரஸ்த்தார் பூபேந்திரநாத்தின் தயவு வேண்டியிருந்தது அவருக்கு. சமையலானதும் சசிபாலா எல்லாரையும் சாப்பிடக் கூப்பிட்டாள். பூபேந்திரநாத்துக்குப் பலாக்கட்டையால் செய்த பெரிய ஆசனமும், லால்ட்டுவுக்கும் பால்ட்டுவுக்கும் சிறிய ஆசனங்களும் போட்டாள். தண்ணீர் எடுத்துவைத்தாள்.

இரட்டைச் சார்பு போட்ட பெரிய அறை. மூங்கில் சுவர். சிமெண்ட் போட்ட தரை. சசிபாலா நிலையின் மேல் சாய்ந்து கொண்டு குழந்தைகள் சாப்பிடுவதைக் கவனிப்பாள். பெரியமாமி பரிமாறுவாள் . தனமாமி சமையலறையில் முக்காட்டை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவ்வப்போது சமைத்த பண்டங்களைப் பெரிய மாமியிடம் கொடுத்துவிட்டு அவளுடன் கிசுகிசுக் குரலில் பேசுவாள்.

சாப்பிட உட்கார்ந்ததும் பூபேந்திரநாத்தின் மனம் துக்கத்தால் கனத்தது அண்ணனின் ஆசனம் காலியாயிருந்தது. அந்தப் பக்கம் பார்த்துவிட்டு அவர் கேட்டார், ''அண்ணா எப்போ வெளியே போனார்?' என்று. சாதத்தைப் பரிசேஷனம் செய்துவிட்டுக் கையிலிருந்த நீரை ஆசமநம் செய்யப் போன சசீந்திரநாத் அண்ணனின் கேள்வி யைக் கேட்டுத் தலையைத் தூக்கினார். பதில் பேசாமல் ஜலத்தை ஆசமநம் செய்துவிட்டுப் பிறகு சொன்னார். ''முந்தாநாள் அதிகாலை யில் அண்ணி தூங்கி எழுந்தபோது அறைக் கதவு திறந்திருந்தது. படகுத் துறைக்குப் போய்ப் பார்த்தா, நம்ம கோஷாப் படகை அங்கே காணோம். ராத்திரி ரெண்டாம் ஜாமத்துலே அவர் படகிலே புறப்பட்டுப் போனதா ஹாசிமோட அப்பா சொல்றான்.'' ''நாளைக்குப் போய்த் தேடிப் பார்க்கறேன். அலிமத்தியையும் கூட்டிக்கொண்டு போறேன்.'' ''போங்க. ஆனா கண்டுபிடிக்கறது கஷ்டம். அவர் எங்கே இருக்கார், எங்கே போனார்னு ஒருத்தருக்கும் தெரியாது."

77________________

பெரிய மாமி ஒன்றும் பேசாமல் அவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண் டிருந்தாள். கண்களில் நீர் ஊறியது முக்காட்டுத் துணியால் அதை மெதுவாகத் துடைத்துக்கொண்டாள். தனக்கு எவ்விதக் குறைவுமில்லை என்பது போன்ற பாவம் அவளுடைய முகத்தில். அவளை மணந்து கொண்ட சுந்தர புருஷர் ஒரு நாளும் அவளுடன் அன்பாகப் பேசியதில்லை. அன்பு நிகழ்ச்சி எதுவும் சமீப காலத்தில் அவர்களுடைய வாழ்வில் நிகழவில்லை. நடுவில் எப்போதாவது அவர் அவளை ஆவேசத்துடன், ஒரு மிகப் பழைய வெறியால் உந்தப்பட்டு - கொள்ளைக்காரனைப் போல் - தெளிவிழந்த கண்களுடன் - தம்முடன் இணைத்துக்கொள்வார். அப்போது அவரைப் பார்த்தால் மனிதராகவே நினைக்கத் தோன்றாது. அவர் அவளை மார்புடன் அணைத்துக்கொண்டு வனவிலங்கு போல் நடந்து கொள்வார். பெரிய மாமி தன் தேகத்தை அவரிடம் விட்டுவிடுவாள், அவரைக் குழந்தையாக நினைத்துக்கொண்டு அல்லது ஆதிமனிதனாகப் பாவித்துக்கொண்டு. அவர் அவளை வைத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் விளையாடட்டும்! ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளையும் பெரிய மாமியால் விரல் விட்டு எண்ண முடியும். எவ்வளவு தடவை, இவை நிகழ்ந்த எந்த இரவுகளில் நிலவு இருந்தது, எந்த இரவுகள் இருட்டாக இருந்தன என்பதையெல்லாம் சொல்ல முடியும் அவளால்.

இரண்டு நாட்களுக்கு மேலாகிவிட்டன, அவளுடைய கணவர் திரும்பவில்லை. அவர் அவளுடைய சொத்து. மணையில் மண நாளன்று அவரை முதலில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அமைதி யற்ற மனிதர். வாழ்க்கையில் தம் பொன்மானை இழந்துவிட்டாற் போன்ற பாவம். இமை கொட்டாமல் அவளைப் பார்த்துக்கொண் டிருக்கிறார். எதையோ யாரையோ சபிக்க விரும்புபவர் போலத் தோன்றியவர் இப்போது அவளை, அவளது அழகைப் பார்வை யாலேயே விழுங்கிக்கொண் டிருக்கிறார். எவ்வளவு ஜனங்கள், எவ்வளவு வெளிச்சம், எவ்வளவு கொண்டாட்டம் - அப்படியும் அன்று பெரிய மாமிக்குப் பயமாயிருந்தது. அவள் இரவில் தன் தமக்கையிடம் சொன்னாள். ''அக்கா, எனக்குப் பயமாயிருக்கு. இந்த மனுஷர் என்னை முழுங்கிடுவார் போலேயிருக்கு. நீங்க என்னத்தைப் பார்த்து என்னை இவருக்குக் கல்யாணம் செஞ்சு வச்சீங்க? அந்தப் பட்டிக்காட்டிலே நான் எப்படி இருப்பேன்?" பிற்பாடுதான் அவள் புரிந்துகொண்டாள். மனிதர் சாதுதான், ஆனால் மூளையில் ஏதோ கோளாறு என்று. இதற்குள் அவள் இந்தச் சுந்தரப் புருஷரை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள். சாதாரணமாக 78________________

அல்ல, தன் உயிருக்கும் மேலாக . இப்போது அவள் துக்கத்தைத் தன் வாழ்க்கைத் துணையாகக் கருதப் பழகிவிட்டாள். ஆகவே தனக்காக வருத்தப்படுவதை விட்டுவிட்டாள். அவருக்காக அவள் உறக்கமிழந்து இரவு பூராவும் காத்திருக்கிறாள்.

இரவு வெகு நேரமாகிவிட்டது. துறையில் பெரிய மாமி பாத்திரம் தேய்க்கிறாள். சோனா அழுததால் தனமாமியை வீட்டுக்கு அனுப்பி விட்டாள். துறையில் அவள் இப்போது தனியாக இருக்கிறாள்.

சசிபாலா சாப்பிட்டுவிட்டுப் பெரிய அறைக்குப் போய் விட்டாள். ஆள் இல்லாத அமைதியான இரவில் கிழவரின் இருமல் ஒலிகூடக் கேட்கவில்லை. எல்லாரும் தூங்கிப் போயிருப்பார்கள். அலி மத்தி படகைத் துறையில் நிறுத்திவைக்கவில்லை; தண்ணீரில் லேயே நிறுத்தி வைத்துவிட்டுத் தூங்கிப் போய்விட்டான். பாத் திரங்களைத் தேய்த்தாகிவிட்டது. ஆனாலும் பெரிய மாமிக்கு எழுந் திருக்க மனம் வரவில்லை. விளக்கின் ஒளியில் அவளுடைய முகம் சோகம் நிறைந்ததாகத் தெரிகிறது. நிலவு காய்வதால் தூரத்தில் செல்லும் படகுகளும் தெளிவாகத் தெரிகின்றன. இன்று மூடுபனி இல்லை. பெரிய மாமி காணாமற் போய்விட்ட அந்த மனிதருக்காக உட்கார்ந்திருக்கிறாள். அவர் வந்துகொண்டிருக்கலாம், இப்போதே வந்துவிடலாம். பெரிய மாமியின் கண்கள் நினைவுக்கு வந்து விட்டால் அந்த மனிதர் வெறிபிடித்தவர் போல் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவார்.

நேரம் இரவில் முன்னேறுகிறது. தனியாகத் துறையில் உட்கார்ந் திருக்கத் தைரியம் இல்லை பெரிய மாமிக்கு செடிகளிலும் புதர் களிலும் பரிசயமில்லாத பறவைகள், பூச்சிகள் இரவு வேளையை அறிவிக்கின்றன. பூனையவரைக் கொடிப் புதரில் 'டுப் டுப்' என்ற ஒலி ; கந்த பாதாலச் செடிக்குள்ளிருந்து சுவர்க்கோழி கத்துகிறது. இரவு நேரமாக ஆக நடுநிசிப் பிராணிகள் ஆயிரக் கணக்கில் கத்து கின்றன. நள்ளிரவில் விழித்திருக்கும் பெரிய மாமிக்குத் தோன்றும், அவளுடைய கணவரும் ஒரு நிசிப் பிராணி போல் நீரிலும், காட்டிலும் சுற்றுகிறார் என்று.

அவள் சமையலறையில் பாத்திரங்களை வைத்துவிட்டுக் கிழக்குப் பக்க அறைக்குள் நுழையும்போது துறையிலிருந்து துடுப்போசை கேட்பது போல் தோன்றியது. அவளுடைய நெஞ்சு நடுங்கியது. அவள் வேகமாகத் துறைக்கு ஓடினாள்.

அவர் குனிந்து கொண்டு படகிலிருந்து இறங்குகிறார். படகு கரைக்கு இழுக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்தப் பக்கமும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவர். எவ்வளவு உயரம்! ஏதோ இரகசியம்

79________________

ஒளிந்திருக்கும் கண்கள்! இந்த அழகிய நிலவில் ஆகாயத்திலிருந்து ஒரு தேவதூதன் வந்து இறங்கினாற் போலிருக்கிறது. அவருடைய உடம்பில் ஆடை இல்லை. அநேகமாக அம்மணமாக இருந்த அம் மனிதர் குழந்தையைப் போல், அவள் விழித்திருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறார். படகில் சேப்பங்கிழங்கு, பூசணிக்காய், வாழைப்பழம். எல்லாரும் தங்கள் தங்கள் மரங்களில் முதலில் காய்த்ததை அவருக் குப் படைத்திருக்கிறார்கள்.

முதலில் பெரிய மாமிக்குப் பேச நாவெழவில்லை. ஒரு துறவி வெகுகாலம் தீர்த்த யாத்திரை செய்துவிட்டுத் தம் குடிலுக்குத் திரும்பியிருக்கிறார். வேறு நாளாக இருந்திருந்தால் அவள் அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடி அவருக்கு உடுக்க உடைகளை எடுத்துக் கொண்டு வந்திருப்பாள். இன்று அவ்வாறு செய்யத் தோன்றவில்லை. வெள்ளி நிலவில், குழந்தை போன்ற இந்த இளைஞருடன் விளையாடித் திரியத்தான் தோன்றுகிறது.

அப்போது மாலை நேரம். வயல்களில் மழை நீர் தளும்பி நிற்கிறது. ஜோட்டன் ஆற்று நீரில் நீந்திக்கொண்டு போகிறாள். நீர்ச் செடி களையும் புல்லையும் நீந்திக் கடக்கிறாள். பக்கத்துக் கிராமத்துக்குப் போய்க்கொண் டிருக்கிறாள் அவள். டாகுர் வீட்டுப் பாக்குத் தோட்டத்தை அடைந்ததும் அவள் கரையிலேறிப் பார்த்தாள், ஏதாவது பாக்கு விழுந்து கிடக்கிறதா என்று. ஒரு பாக்குக்கூட இல்லை. துறையில் ஒரு மூன்று தட்டுப் படகு நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன் கூரைக்குக் கீழே இரண்டு படகோட்டிகள் குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறார்கள். வெகு நேரம் நீந்தியிருக்கிறாள் அவள். அவள் செம்பரத்தை மரத்தடியில் மறைவாக நின்றுகொண்டு தன் ஈரப் புடைவையை அவிழ்த்துப் பிழிந்தாள். அதைத் திரும்பக் கட்டிக்கொள்ளும்போது எங்கோ, யாரோ அவல் இடிக்கும் சப்தம் அவளுக்குக் கேட்டது. யாரோ பனங்காயை வடை சுடுகிறார் கள். அவள் மூச்சை இழுத்து அந்த வாசனையை முகர்ந்தாள், அவல் இடிக்கப்படும் அரவம். இது பாத்ர மாதம். மழைக்கால நெல்லால் அவல் தயார் செய்யும் பருவம். தானும் அவல் இடித்துக் கொடுத் தால் நல்ல வரும்படி கிடைக்கும் என்று அவள் நினைத்தாள்.

ஜோட்டன் டாகுர் வீட்டுக்குள் நுழைந்தாள் இரண்டாவது பாபு மேற்குப் பக்க அறையில் பெஞ்சியின் மேல் உட்கார்ந்து

80________________

கொண்டு ஒரு பெரிய புத்தகத்தைப் படித்துக்கொண் டிருக்கிறார் அவரைக் கண்டதும் ஜோட்டன் அறை வாயிலில் வந்து நின்றாள். ''யார் நிக்கறது?'' பாபு தலையைத் தூக்கிப் பார்த்தார். ஆபேத் அலியின் அக்கா ஜோட்டன். அவளுடைய உடல் மெலிந்து காணப்படுகிறது. தலை மயிர் இல்லையென்றே சொல்லலாம் ; இருப்பதும் சணல் மாதிரிதான் இருக்கிறது. முகத்தில் எவ்வித மென்மையும் இல்லை உடல்கட்டுக் குலைந்து போய்விட்டது. கன்னத்தில் பரு, முகம் அவலட்சணம். பூபேந்திரநாத் கேட்டார், ''ஜூட்டியா?" என்று. ''ஆமா! நான்தான். திரும்பி வந்துட்டேன்." "உனக்குத் தலாக் கொடுத்துட்டானா?" ''ஆமா. நாசமாப் போறவன் ஒரு புள்ளே கூடக் கொடுக்கல் லே; ஒரு முழத்துணி கூடக் கொடுக்கல்லே.''

''புள்ளே கொடுக்காட்டா நல்லதுதான். கொடுத்திருந்தா அதுக்குச் சோறு எப்படிப் போடுவே?'' பாபு கேட்டது சரிதான் என்று உணர்ந்த ஜோட்டன் பதில் பேசவில்லை. அவர் மறுபடி புத்தகம் படிக்கத் தொடங்கினார். பாபுவின் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே அவருடைய கண்களில் இரக்கம் பிரதிபலிப்பதைக் கண்டு அவளுக்குச் சொல்லத் தோன்றியது. 'எசமான், பழசோ கிழசோ ஏதாவது ஒரு ஆள் பார்த்துக் கொடுங்க எனக்கு' என்று. ஆனால் பேச வாய் வரவில்லை அவளுக்கு. பேச முடிந்திருந்தால் சொல்லியிருப்பாள். பக்கிரி சாய்பு வந்தார். அவள் கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சதையெல் லாம் , காஞ்ச மீன் துவையலைத் தொட்டுக்கிட்டு முரட்டு அரிசிச் சாதம் எல்லாததையுமே சாப்பிட்டுட்டுப் போயிட்டார். போனவர் போனவர்தாம் ; திரும்பியே வரல்லே, இப்போதும் அக்காட்சி அவளுடைய மனக்கண் முன் நிற்கிறது. பக்கிரிசாயபு ஹக்கா பிடித்துக்கொண்டிருக்கார். பக்கத்திலே மூட்டைகள் கட்டி வச்சிருக்கு. ஹக்கா பிடிச்சு முடிச்சதும் புறப்பட்டுடுவார் போலேயிருக்கு. ஜோட்டனால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவள் சொன்னாள். ''பக்கிரி சாகேப், என்னைக் கூட்டிக்கிட்டுப் போகமாட்டீங்களா?'' பக்கிரி சாயபு முட்டைகளைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டே சொன்னார். 'இன்னிக்கு வேண்டாம். இன்னொரு நாள். இப்போ சொர்பான் ஷேக்கோட படையலுக்குப் போயிக்கிட் டிருக்கேன். எப்போ திரும்புவேன்னு நிச்சயமில்லே.''________________

போனவர் போனவர்தாம். திரும்பித்தான் வருவாரோ இல்லையோ, தெரியாது. அவள் தனக்கு ஒரு புருஷனைத் தேடிக்கொண்டு வீடு வீடாக அலைகிறாள். 'எனக்குப் பழசோ கிழசோ ஒரு ஆளைப் பார்த்துக் கொடுங்க' என்று கேட்க அவளுக்குத் தைரியம் வரவில்லை. மூன்று தடவைகள் தலாக் ஆனதால் அவளுடைய தேகம் அசுத்தமாகிவிட்டதோ ? பாபு கேட்டார். ''ஏதாவது சொல்லணுமா?" "என்ன சொல்லுவேன், எசமான்? என் பொழப்பு எப்படி நடக்கும்?" ''உனக்கு மறுபடி பைத்தியம் பிடிச்சுடுத்தா ? இது சரியில்லே!" ஜோட்டனின் ஆசை அவருக்குப் புரிந்துவிட்டது. அவருடைய பேச்சைக் கேட்ட பிறகு ஜோட்டன் அங்கு நிற்க வில்லை. அவள் சீதாமர வேலியைத் தாண்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள். பெரியமாமியும் தானமாமியும் நிற்கிறார்கள்; கூடவே மாலதி. ஹாரான்பாலின் மனைவி அவல் இடிக்கிறாள். ஜோட்டன் சொன்னாள், ''கொடுங்க, நான் இடிக்கிறேன்!'' என்று. அவள் வெகுவிரைவில் அவல் இடித்து அதை முறத்தில் பரப்பிக் காண்பித்தாள். அவளால் நன்றாக அவல் இடிக்க முடியும். அவள் இடிக்கும் அவல் அகலம் அகலமாக இருக்கும் என்று எல்லாருக்கும் காண்பிக்க விரும்பினாள் அவள். அவள் தான் இடித்த அவலைத் தனியாக ஒரு பிரம்புத் தட்டில் போட்டாள். அதைப் பார்த்தால் சசிபாலா அம்மாள் சந்தோஷப்படுவாள். அவளுடைய முந்தானை யில் ஒரு சட்டி அவலைக் கொட்டிக் கொடுப்பாள்.

தனமாமி கேட்டாள். "ஏண்டி, உனக்கு மறுபடி கல்யாணம் பண்ணிக்கிற ஆசை வந்துடுத்தாமே?''

''ஏ அல்லா! இது இவ்வளவு நாள் கழிச்சுத்தான் தெரிஞ்சுதா உங்களுக்கு? ஆனா, புருசன் எங்கே கிடைக்கறான் ?" ''உனக்கு நிறையக் கொழுப்பு இருக்கு, ஜூட்டி!'' 'நீங்க என்னவெல்லாம் சொல்றீங்க ? வெக்கக்கேடு. இது தேகத்தோட சமாசாரம். உங்களுக்கும் இது இருக்கு, எனக்கும் இருக்கு. உங்களுக்குச் சுகம் கிடைக்கிறது, எசமான் வந்துட்டுப் போறார். நீங்க வாய்விட்டுச் சொல்றதில்லே. எனக்குப் புருசன் இல்லே, சுகமில்லே. அதனாலே வாயைத் தொறந்து பேசறேன்."

இவ்வளவு பேசிவிட்டு அவள் அவல் இடிக்கத் தொடங்கினாள். அப்போது அவளுடைய வாயிலிருந்து கிரெளஞ்ச பட்சியின் ஒலி போன்ற சப்தம் வந்தது. பாத்ர மாதமாதலால் வீட்டுக்கு வீடு பனம்பிட்டு தயார் செய்து கொண் டிருந்தார்கள். ஊர் பூராவும்________________

அதன் மணம். ஹாரானின் மனைவி சட்டியில் நெல்லை வறுக்கிறாள். சசிபாலா அடுப்பில் உலர்ந்த விறகைத் திணிக்கிறாள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியம் செய்கிறார்கள். ஜோட்டன் குடிக்கத் தண்ணீர் கேட்டாள். பெரிய மாமி தண்ணீர் எடுத்து வரக் கிணற்றடிக்குப் போனாள். இந்தச் சமயத்தில் நாவல் மரத்தில் ஒரு இஷ்டி குடும் பறவை கூவிற்று. இரண்டு பக்கமும் சாக்கை விரிக்கும் போது ஜோட்டன் பறவையின் கூவலைக் கேட்டுச் சொன்னாள். "தன மாமி, இஷ்டி குடும் மரத்துலே கத்தறது. விருந்து வரப் போகுது "

சமையலறையில் பவன் பாபுவின் மனைவி. அவளும் அவளுடைய குழந்தைகளும் அங்கு வந்திருக்கிறார்கள். சசிபாலா ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த வீட்டுக்காரர்களை எதிர்பார்ப்பாள். மழைக் காலம் முழுதும் குடும்பம் குடும்பமாக உறவினர்கள் வருவார்கள்.

அப்போது தன மாமிக்கு மூச்சுவிட நேரம் இருக்காது. பெரிய மாமி நாள் முழுதும் சமயலறையில் இருப்பாள். வாய் தவறி வார்த்தை வந்துவிடும் போலிருந்தது. ''போதும், போதும், விருந்து போதும்!'' ஆனால் சமையலறையில் பவன் பாபுவின் மனைவி இருக்கிறாளே! ஆகையால் அவளால் சொல்ல முடியவில்லை, "பட்சியை விரட்டிவிடு ஜட்டி !'' என்று .

மழைக்காலம் முழுதும் விருந்துதான். இரவும் பகலும் விருந்தினர் வருவதும் போவதுமாக இருக்கும். சசிபாலா அம்மாவுக்கு உறவுக் காரர்களென்றால் ரொம்பப் பிரியம். யாருக்கு என்ன சாப்பிடப் பிடிக்கும் என்பதெல்லாம் அவளுக்கு அற்றுப்படி. இந்தச் சமயத் தில் மேக்னா - பத்மா நதிகளில் இலிஷ் மீன்கள் கூட்டங் கூட்டமாக வரும். சசிபாலா அம்மா விருந்தினருக்காக விதவிதமாகச் சமைப் பாள். உறவினர்கள் வீடெங்கும் சுற்றித் திரிவார்கள். வீட்டு வாசலில் குழந்தைகளின் கும்மாளம். படகுத் துறைகளில் எல்லாம் படகுகள் கட்டப்பட்டிருக்கும்.

ஹாரான்பால், படகுத் துறையில் ஒரு கூடை இலிஷ் மீனை இறக்குவதைக் கவனித்தாள் ஜோட்டன். பெரிய பெரிய மீன்கள், மாலை வெயிலில் வெள்ளியைப் போல் பளபளக்கின்றன.

ஜோட்டனால் அந்த மீன்களிலிருந்து கண்களை அகற்ற முடிய வில்லை. மீன்களையே பார்த்துக்கொண்டு நின்றாள் அவள். இந்த மீன்களின் ருசி கூட மறந்துவிட்டது அவளுக்கு.

அவளுடைய ஏக்கத்தை உணர்ந்த சசிபாலா சொன்னாள். ''ராத்திரி இங்கே சாப்பிட்டுட்டுப் போ, ஜட்டி !'

ஜோட்டனின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. அவள் சொன் னாள் ''மீன் வயத்திலே முட்டையிருக்கு, பெரியம்மா, அப்படின்னா முட்டையை வறுத்துத் தரச் சொல்றேன்."________________

ஜோட்டன் வேறொன்றும் பேசத் தோன்றாமல் அவல் இடிக்கத் தொடங்கினாள். கிரெளஞ்ச பட்சியின் ஒலி இன்னும் வருகிறது அவளிடமிருந்து. அவள் அணிந்திருந்த கிழிசல் புடைவை இதற்குள் காய்ந்துவிட்டது. பெரிய மாமி அவளுக்கு ஒரு தொன்னை அவல் தின்பதற்குக் கொடுத்தாள். ஆனால் அவள் அதைச் சாப்பிடாமல் முந்தானையில் முடிந்து வைத்துக்கொண்டாள். பல்ட்டு அவளுக்குக் கொஞ்சம் பச்சைப் பாக்கு கொண்டுவந்து கொடுத்தான். அதையும், முந்தானையில் கட்டிக் கொண்டாள். இரவு வெகு நேரமாகிவிட்டது.

அவள் வாழையிலையை அலம்பி வைத்துக்கொண்டு உட்கார்ந் திருந்தாள். சமையலானதும் அவளுக்குச் சாப்பாடு கிடைக்கும்.

ஜோட்டன் நன்றாக ரசித்துச் சாப்பிட்டாள். ஒன்று கூட விடாமல் சோற்றுப் பருக்கைகளைக் கவனமாகப் பொறுக்கிச் சாப்பிட்டாள். வதக்கிய கத்தரிக்காயுடன் இலிஷ் மீனின் ருசி, மழைக் காலத்து முரட்டு அரிசிச் சாதம் - இவை அக்குடும்பத்தின் இரக்க உணர்வை ஜோட்டனுக்கு உணர்த்தின. கிழவியம்மா, பெரியமாமி, தனமாமி . இவர்களெல்லாருமே உதார குணத்தில் பைத்தியக்கார டாகுரைப் போல. இந்த விருந்து சாப்பாட்டுடன் இரவின் நிலவு, பைத்தியக் கார டாகுரின் நினைவு, கிழ எசமானரின் நல்ல மனசு, பூபேந்திரநாத் தின் நற்குணம் - இவையெல்லாம் ஜோட்டனுக்கு ஒரு தனிப்பட்ட சுகத்தைக் கொடுக்கின்றன. இந்தக் குடும்பத்தோடு அவளுக்கு எவ்வளவு காலமாகப் பரிச்சயம்!

அவள் பெரிய மாமியிடம் சொன்னாள். ''ரொம்ப நாளைக்கப்பறம் இன்னிக்கு வயிறு நிறையச் சாப்பிட்டேன், பெரிய மாமி. இந்தச் சாப்பாட்டை என்னிக்கும் மறக்கமாட்டேன்.''

அவளுடைய சோகக் கதையைக் கேட்டுவிட்டுப் பெரியமாமி சொன்னாள். ஏதோ தர்காவிலே இருக்கிற பக்கிரி சாயபு உன்னை நிக்காஹ் பண்ணிக்கப் போறதாச் சொன்னியே!'' ''என்ன சொல்றீங்க, மாமி? சொப்பனம் எவ்வளவோ பார்த்தேன். ஆனா அல்லா கண் திறந்து பார்க்கல்லேன்னா நான் என்ன பண்ணு வேன் ?" ''ஏன்? பக்கிரி சாயபு வந்ததா ஆபேத் அலி சொன்னானே!" ''வந்தார். வந்து வயிறு நிறையச் சோத்தை முழுங்கினார். முழுங்கி விட்டு, சொர்பான் ஷேக்கோட படையலுக்குப் போறேன். திரும்பி வந்ததும் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன், அப்படீன்னுட்டுப் போனார். போனவர் போனவர்தான். எவ்வளவு நாளாயிடுச்சு?' "சொல்லிட்டுப் போயிருக்கார்னா நிச்சயம் வருவார்.'' ஜோட்டன் வேறெதுவும் பேசாமல் தன் எச்சில் இலையைத் திரட்டி எடுத்துக்கொண்டு நாவல் மரத்தைக் கடந்து போய், கந்தபாதாலப்

84________________

72________________

புதருக்கு மறுபுறம் அதை எறிந்தாள். நிலவு வெளிச்சத்தில் புதர்கள், காடு, தூரத்து வயல் வெளி, பச்சைப் பயிர்களின் மங்கலான காட்சி - எல்லாமே அவளுக்கு மகிழ்ச்சியளித்தன. அவள் கணக்குப் போட்டுப் பார்த்தாள். அவளுடைய தேகம் அல்லாவுக்கு வரி கொடுத்து, ஏறக்குறைய இரண்டு வருஷமாகிவிட்டது. குறிப்பாக இந்த இரவும், புதர்களிடையே இங்குமங்கும் பரவியிருந்த இருளும், தொண்டை வரை நிரம்பியிருந்த விருந்துச் சாப்பாடும் ஜோட்டனின் மனசில் ஒரு தீவிர ஆசையைக் கிளப்பிவிட்டு அவளைத் துன்புறுத் தின. பக்கிரி சாயபு இந்தச் சமயத்தில் மிகவும் அதிகமாகவே நினைவுக்கு வந்தார்.

அவள் பெரிய மாமியிடமிருந்து ஒரு வெற்றிலையைக் கேட்டு வாங்கிக்கொண்டாள். பச்சைப் பாக்கு ஒன்றை முழுசாக வாயில் போட்டுக்கொண்டு தோப்புக்குள் நுழைந்தாள். ஒரு மந்திரசக்தி அவளைத் தோப்புக்குள்ளேயே நிறுத்திவைத்தது. பழுத்த பாக்கு ஏதாவது மரத்திலிருந்து கீழே புல்லில் விழுந்தால் 'டுப்' என்று சப்தம் கேட்கும். வெளவால்கள் பறந்து வரும். அந்தச் சப்தத்துக்காகக் காதைத் தீட்டிக்கொண்டு நின்றாள் அவள். ஆனால் 'டுப்' சப்தம் எழவில்லை. ஒரு வெளவாலும் பறந்து வரவில்லை. பச்சைப் பாக்கின் ரசம் போதையைப் போல் அவளுடைய தலையைக் கனக்க வைத்தது.

நீரில் வெள்ளி நிலவு பிரதிபலித்தது. அவள் நீரில் இறங்கினாள். கொஞ்சங் கொஞ்சமாகப் புடைவையை முழங்காலுக்கு மேல் தூக்கிக் கொண்டு முன்னேறினாள். தண்ணீரின் ஆழம் அதிகமாக ஆக அவள் துணியை மேலே தூக்கிக்கொண்டே போய் ஒரு சமயம் இடுப்பு வரைக்கும் கொண்டுவந்துவிட்டாள். தண்ணீரின் ஆழம் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் அவள் தன் துணியை அவிழ்த்துத் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு உடும்பைப் போல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தாள். அவளுக்கு இருப்பது அந்த ஒரே துணிதான். ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு இரவைக் கழிப்பது ரொம்பச் சிரமம். தண்ணீரில் நீந்திக்கொண்டே புதர்களின் இடுக்கு வழியே அவள் பார்த்தாள். நரேன்தாஸ் வீட்டு வராந்தாவில் சிம்னி விளக்கு எரிந்தது. கிழக்குப் பக்க அறையிலிருந்து தறி இயங்கும் அரவம் கேட்கவில்லை. தறியை இயக்குவது அமூல்யன். அவன் தன் வீட்டுக்குப் போய்விட்டால் தறி இயங்காது. தவிரவும் இப்போது மார்க்கெட்டில் நூல் கிடைப்பதில்லை. அதன் காரணமாகவும் நரேன் தாஸ் தறியை மூடி வைத்திருக்கலாம், இப்போதெல்லாம் ஜோட்ட னால் நூல் சுற்றும் கதிர் நிறைய நூல் நூற்க முடிவதில்லை. அவள் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு சர்க்கா வாங்கியிருந்தாள். நூல் நூற்றுப் பணம்

85________________

சேர்த்து இந்துப் பெண்கள் உபயோகப்படுத்தும் வெண்கலத் தட்டுப் போல் ஒரு தட்டைத் தானும் வாங்கிப் பெரிய மனுஷி ஆக வேண்டும் என்று கோட்டைக் கட்டிக்கொண்டிருந்தாள் அவள். இந்தச் சமயத்தில் நூல்கண்டு விலை அரையணாவிலிருந்து ஒரு அணா ஆகிவிட்டது. ஒரு பக்கிரியையும் வைத்துப் பராமரிக்கும் வசதி அவளுக்கு ஏற்படும் சமயத்தில் வந்தது அனர்த்தம், நூலே மார்க்கெட்டில் கிடைக்காமல் போய்விட்டது.

ஜோட்டன் தண்ணீரில் தவளையைப் போல் மிதந்து கொண்டே நீந்துகிறாள். அவளுடைய கைகால்களின் அசைவில் கொப்பளங்கள் கிளம்புகின்றன. வெப்பத்தினிடையே நீரின் இந்தக் குளிர்ச்சி, நிர்மலமான ஆகாயம், கிழக்கிலிருந்து சிரித்துக்கொண்டிருக்கும் பெரிய சந்திரன் இவையெல்லாம் சேர்ந்து ஜோட்டனின் தேகத்தை வரி கொடுக்கத் தூண்டுகின்றன. தொண்டை வரையில் சாப்பிட்ட தில் அவளுள்ளே எவ்வளவோ விதமான ஆசைகள் பிறக்கின்றன. தூரத்து வயல் வெளியில் ஓர் ஒளிப்பொறி . எதிரில் சணல் வயல்கள், சணல் சாகுபடியாகிவிட்டது. நீர் தெளிந்திருக்கிறது. காற்றில் நாற்புறமும் நீர் சலசலக்கிறது. தெளிந்த நீரில் ஜோட்டன் தன் உடலின் உஷ்ணத்தைத் தணித்துக்கொண்டிருந்தாள். வாய் நிறைய நீரை எடுத்துக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்துக் கொப் புளித்து உமிழ்ந்தாள். ''ஒன்னோட உலகத்திலே எனக்கு என்ன வேலை இருக்கு, சொல்லு!" வானத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கிறது. தண்ணீரில் அல்லியும் ஆம்பலும் இருக்கின்றன. வயல் வெளியின் முடிவில் மாமரங்களும் நாவல் மரங்களும் நிழலாகத் தெரிகின்றன. எல்லாம் பார்க்க அழகாக இருக்கிறது. அவள் அல்லிப்பூவைப் போல் நீரிலிருந்து முகத்தைத் தூக்கி, இரண்டு கல்யாண முருங்கை மரங்களைக் கடந்த பின் கவனித்தாள். ஆற்றுப் படுகையில் ஆலமரத்தடியில் ஓர் அரிக்கேன் விளக்கு, அதற்கருகில் ஒரு படகின் நிழல், ஒரு மனிதனின் நிழலுங்கூட, அவள் அவசர அவசரமாகத் தண்ணீ ருக் குள் அமுங்கித் தன்னை மறைத்துக்கொள்ள முயற்சி செய்தாள். தண்ணீரில் ஒலி கேட்டது. ஒரு மீன் ஓடுகிறது போலும்; அல்லது போயால் மீனுக்கான பெரிய தூண்டிலில் போயால் மீன் அகப்பட்டுக்கொண் டிருக்கலாம். படகுக் கருகில் இருந்த மனிதன் மீனைப் பார்க்க வந்தான். புதர்களுக்குப் பின்னால் நீரில் மனித உருவம் மிதந்து கொண் டிருப்பதைக் கவனித்தான். ஜோட்டன் கழுத்துவரை தண்ணீரில் அமுங்கித் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்த்தாள், முடியவில்லை.

86________________

மன்சூர் - அவன்தான் அந்த மனிதன் - அவளுக்கு நேரே விளக் கைக் கொண்டு வந்து பார்த்து, ''ஜோட்டனா?'' என்றான்.

ஜோட்டன் வெட்கத்தால் கண்களை மூடிக்கொண்டாள். மூடிய கண்களுடனேயே அவள் பதில் சொன்னாள். "ஆமா ! ''எங்கே போயிருந்தே?" "டாகுர் வீடு. வழிவிடு , நான் போறேன்.'' மன்சூர் அவளது நிலையை உணர்ந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னான். ''பெரிய மீன் ஒண்ணு தூண்டில்லே ஆப்பிட்டுக்கிட்ட தாக்கும்னு நினைச்சேன்." 'வேறொண்ணும் நினைக்கல்லியே?" "வேறே என்ன நினைப்பேன்?" என்று கேட்டுக்கொண்டே அவன் படகின் மேல் ஏறி உட்கார்ந்தான். ''ஏன்? வேறே ஒண்ணும் நினைக்க முடியாதா? நீ இந்தப் பக்கம் எங்கே வந்தே?" என்று கேட்டுக்கொண்டே ஜோட்டன் கண் களைத் திறந்தாள். பேசியதில் அவளுடைய வெட்கம் மறைந்து விட்டது. மன்சூரின் மேலுடம்பு திறந்து கிடக்கிறது. இடுப்பில் மிகவும் சன்னமான துண்டு. அதுவும் தண்ணீரில் நனைந்து கொஞ்சம் மேலே தூக்கிக்கொண் டிருக்கிறது. அவன் ஜோட்டன் இருக்கும் பக்கம் திரும்பவேயில்லை. ஜோட்டனுக்கு ஒரே சிரிப்பாக வந்தது. அவள் கேட்டாள். "உங்கிட்டதான் நிறையக் காசு இருக்கே. பெரிய துண்டு ஒண்ணு வாங்கிக்கக் கூடாதா?'' ''சரி, சரி, நீ போ !" ''போகல்லேன்னா நீ என்ன பண்ணுவே?'' ஜோட்டனை ஆசை தூண்டியது.

'என்ன பண்ணுவேன் ?' - அவன் தான் அங்கே இருப்பதற்குக் காரணம் தேடிச் சொன்னான். ''ஹாயிஜாதி போயிருந்தேன், மருந்து வாங்க. திரும்பறத்துக்குள்ளே ராத்திரி ஆயிடுச்சி. தூண்டில்லே மீன் சிக்கியிருக்கான்னு பார்க்க இங்கே வந்தா, நீ கொம்மாளம் போடறே. இருக்கற நிலாவை ஒரேயடியா இருட்டாக்கிக்கிட்டு உக்கார்ந்திருக்கே. நீ இங்கே இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா நல்ல லுங்கி கட்டிக்கிட்டு வந்திருப்பேன்.''

மன்சூரும் ஜோட்டனும் சம வயது. இளமைப் பருவத்து நிகழ்ச்சி களில் சில அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தன. சிறுவயதில் அவர்கள் இந்தச் சணல் வயல்களில் அலைந்து திரிந்திருக்கிறார்கள். ஜோட்டன் அந்தச் சம்பவங்களை நினைவூட்ட விரும்பினாள். ஆனால் சங்கோசம் காரணமாக அவர்கள் இருவருக்குமே பேச்சு வரவில்லை. இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவளுடைய உடம்பு காய்ந்து

87________________

போய் ஏங்குகிறது. அவள் கெஞ்சும் குரலில் சொன்னாள். ''நான் போகணும், வழி விடு.'' ''நான் வழி மறிச்சுக்கிட்டு நிக்கறேனா?'' இந்தத் தண்ணீர், இந்த நிலவு, வயிறு நிறைய நல்ல சாப்பாடு சாப்பிட்ட திருப்தி - எல்லாமாகச் சேர்ந்து அவளை நீந்திக்கொண்டு அங்கிருந்து போக விடவில்லை. அவள் மெதுவாகத் தண்ணீரின் மேலே மிதந்து வந்தாள். அவள் தண்ணீரில் உடலைப் பரப்பிக் கிடந்த விதம் மின்மினியைப் பிடிக்க வாய் திறந்தவாறு நீரில் மிதக்கும் தவளையை நினைவூட்டியது. மன்சூர் ஒன்றும் பேசாமல் இருப்பதைப் பார்த்து அவளே சொன்னாள். ''உன் மூஞ்சியைப் பார்த்தா சந்திரன் மாதிரி இருக்கும். ஆனா இப்போ அது அமாவாசை ராத்திரி மாதிரி ஆயிடுச்சு. காஞ்சு போயிடுச்சு." ''காஞ்சு போயிடுச்சா? உங்கிட்ட சொல்லிச்சா?" மன்சூர் தன் நோயாளி மனைவியை நினைத்துச் சற்று அலுத்துக் கொண்டான். வெகு காலமாகவே அந்த நோயாளியின் உடம்பு அவனுடைய நெஞ்சின் தாகத்தைத் தணிக்கவில்லை. மன்சூரைத் தாகம் வாட்டிக்கொண்டே இருந்தது. இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும் ஆசை அவனுக்கு இல்லவேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவன் தன் நோயாளி மனைவியை உண்மையிலேயே நேசித்தான். அவன் மிகவும் கஷ்டப்பட்டுச் சொன்னான். 'இருட்டு ராத்திரிக்கு வெளிச்சம் போட முடியுமா உன்னாலே?"

மன்சூர் அவள் பக்கம் திரும்பியதும் அவள் மறுபடி தண்ணீருக் குள் தன் உடம்பை மறைத்துக்கொண்டாள். அவளுக்கு முன்னும் பின்னும் இருந்த நீர்ப் புல் அவளுடைய மானத்தைக் காத்தது. மன்சூரையும் தன்னுடன் இழுத்துக்கொன்டு தண்ணீருக்குள் முழுக்க விரும்பினாள் அவள். இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத மன்சூர் தன் இருகைகளாலும் அவளை ஒரு பெரிய செத்த மீனை நீரிலிருந்து படகின் மேல் ஏற்றுவது போல, இழுத்துப் படகின் தட்டில் போட்டான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு கிராமத்திலிருந்து அழுகையொலி சணல் வயல்கள் வழியே மிதந்து வந்தது. அதை ஜோட்டனும் மன்சூரும் கேட்டார்கள். படகின் மேல் சில பூச்சிகள் பறந்தன. வயல் வெளியில் நிலவு ஒரு மாயத்தைப் பூசியிருந்தது. சுகமும் மகிழ்ச்சியும் படகில் கட்டிப் பிடித்து விளையாடின. வேதனைகள் யாவும் தண்ணீரில் கரைகின்றன. வெப்பமெல்லாம் நிலவைப் போல் உருகியோடுகின்றன. இச்சையின் உலகத்தில் விளையாட்டுப்

98________________

பொம்மை போலிருந்த மன்சூர் தன் பீபியின் வற்றிய முகத்தை நினைத்துக்கொண்டவனாகக் கேட்டான். ''யார் அழறது ?" ''உன் வீட்டிலேருந்து தான் அழுகைச் சத்தம் வராப்பலே இருக்கு .'' "அப்போ என்னோட பீபி செத்துப் போயிட்டா போலே இருக்கு." மன்சூரின் முகம் பட்சவாதம் பிடித்த நோயாளியின் முகம் போல் ஆகிவிட்டதை ஜோட்டன் கவனித்தாள். மன்சூர் தன் வெப்பத்தை யெல்லாம் இங்கே கொட்டிவிட்டுக் கேவிக் கேவி அழுது கொண்டு படகை வலிக்கத் தொடங்கினான்.

யாரோ நாயைத் தண்ணீருக்குள் வீசியெறிந்து விட்டுப் படகில் ஓடிப் போய்விட்டார்கள். நாய் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நீந்துகிறது. எப்படியோ மிகவும் சிரமப்பட்டுத் தன் மூக்கை மட்டும் தண்ணீருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக் கிறது அது. ஆழமற்ற இடத்தையடைந்து சற்று நிதானித்து நின்றது. ஊஹம், வெகு தூரம் வரை கிராமமொன்றும் தென்பட வில்லை அதன் முகத்திலும் கண்களிலும் நிராசை.

மழைக் காலத்தின் கடைசி நாட்கள். நெல் வயல்களிலிருந்தும் சணல் வயல்களிலிருந்தும் நீர் இறங்கிக்கொண்டிருக்கிறது.

பைத்தியக்கார டாகுர் படகை வரப்புகளின் மேலே தள்ளிக் கொண்டு வந்தார். சோனா படகுத் தட்டில் தவழ்ந்து கொண் டிருக் கிறான். நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடக்கின்றன.

சிராவண - பாத்ர மாதங்களில் இருந்த தெளிவு இல்லை தண்ணீரில் . குழம்பிக் கிடந்த நீரிலிருந்து அழுகின செடிகளின் நாற்றம் வருகிறது. இரு பக்கமும் சேறு, அழுகின நத்தைகள், நாற்றமடிக்கும் நீர்ப்பாசி.

டாகுர், சர்க்கார் வீட்டு நிலத்தில் படகைக் கொண்டு வந்து நிறுத்திய போது அங்கு ஒரு நாய் நிற்பது தெரிந்தது. அதன் முகத்தில் கலக்கம். அது பைத்தியக்கார டாகுரைப் பார்த்து 'குர்' என்று உறுமியது.

அவர் தம் வழக்கப்படி கைகளைக் கசக்கிக்கொண்டு சொன்னார். ''கேத்சோரத்சாலா !" நாய் மறுபடி உறுமியது. மறுபடியும், ''கேத்சோரத்சாலா!'' தண்ணீர் கொஞ்சமாக இருந்ததால்தான் நாயால் வரப்பின் ஒரு புறம் நிற்க முடிந்தது. அது ஒரு புறமாக நகர்ந்து கொண்டு டாகுர் போக வழிவிட்டது. அதனுடைய இந்தப் பண்பு டாகுருக்குப் பிடித்திருந்தது. ஆகையால் அவர் அதை அப்புறம் திட்டவில்லை.________________

நாய் விட்ட வழியில் படகை இழுத்துக்கொண்டு போன டாகுர் ஏதோ நினைத்துக்கொண்டு பின்னால் திரும்பிப் பார்த்தார். நாய் சூதுவாது அறியாத குழந்தை போல அவர் பக்கம் பார்த்துக்கொண்டு நின்றது. அவர் அதை அன்புடன் அழைக்கும் பாவனையில் வாயால் ஏதோ ஒரு சப்தம் செய்தார். நாய் நீரில் 'சப், சப்' என்று ஒலி எழுப்பிக்கொண்டு நடந்து அவருக்கருகில் வந்து நின்றது. அவர் அதைத் தூக்கி எடுத்துக்கொண்டு அதன் முகத்தில் முத்தமிட்டார். அதைப் படகில் ஏற்றிக்கொண்டு சொன்னார். ''கேத்சோரத்சாலா!''

நாய் படகின் ஒரு புறத்தில் நின்றுகொண்டு தன் உடலைச் சிலிர்த்துக்கொண்டது. பிறகு சோம்பல் முறித்துக்கொண்டு சற்று நேரம் நாக்கை நீட்டிக்கொண்டு நின்றது. பைத்தியக்கார டாகுரை யும் சோனாவையும் பார்த்தவாறே அது இறைக்க இறைக்க மூச்சு விட்டது. மணீந்திரநாத் அல்லி விதையைப் பறித்துத் தின்றார். அதைப் பிய்த்துச் சோனாவுக்கும் கொடுத்தார். சோனாவால் கெட்டியான எதையும் கடித்துத் தின்ன முடியாது. அவன் அதைக் கடித்துவிட்டுக் கத்தத் தொடங்கினான். அவனுடைய கண்களும் முகமும் சிவந்து விட்டன. அவர் அவனை மடியில் போட்டுக்கொண்டு சமாதானம் செய்தார்.

இரண்டு வயல்களைத் தாண்டிவிட்டால் ஹாஸான்பீரின் தர்கா வந்துவிடும். சென்ற குளிர்கால முடிவில் ஒரு தடவை இந்தப் பக்கம் வந்திருந்தார். அப்போது பீரின் திருவிழாவும் படையலும் இருந்தன வெவ்வேறு கிராமங்களிலிருந்து மக்கள் வந்தார்கள். பீரின் தர்காவில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு, திருவிழாக் கடைகளில் சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பினார்கள், இப்போது மனித அரவமே இல்லை இங்கே. இடிந்த மசூதியின் மேலும் பீர்சாயபுவின் சமாதிச் சுவரின் மேலும் சில காகங்கள் எப்போதும் பறந்துகொண் டிருக்கின்றன. சோனாவின் அழுகை ஓயவில்லை. அவர் ஒரு கையால் சோனாவை மார்புடன் அணைத்துக் கொண்டு மற்றொரு கையால் துடுப்பை வலித்தார். ஹாசான்பீரின் தர்காவில் படகைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு அவர் கரை யேறினார்.

காகங்கள் சுவர் மேல் உட்கார்ந்துகொண்டு கூச்சலிட்டன. பீர்சாகேபின் சமாதிக்கு அருகில் பூவரச மரம் இன்னும் இருக்கிறது. டாகுரைக் கண்டதும் காகங்கள் அந்த மரத்தின் மேல் உட்கார்ந்தன. புதர்களின் இடைவெளி வழியே வெகுதூரத்தில் ஆரம்பப் பள்ளிக் கூடம் தெரிகிறது. மணீந்திரநாத் ஒரு காலத்தில் படிப்பதற்கு இந்தப் பள்ளிக்கூடத்திற்கு நடந்து வந்ததுண்டு.

90________________

வீட்டு மனைகள் போல் இந்த நிலமும் மேடாக இருக்கிறது. சில மாமரங்கள், சில பறவைகள், பிரம்புப் புதர்கள், நண்டுகள், பாம்புகள், கோரைப்புல் காடு - இவற்றின் நடுவில் தன் புதைக் குழிக்குள் உறங்கிக்கொண் டிருக்கிறார் பீர்சாகேப். சாதாரண மழையானால் நீர் அவருடைய சமாதி வரை வராது. அப்போது பக்கத்திலுள்ள ஆறுகள், வாய்க்கால்களிலுள்ள ஆமைகள் மிருது வான மண்ணைத் தேடிக்கொண்டு பீர்சாகேபின் சமாதி அருகில் வந்து விடும். அவற்றுக்கு முட்டையிட, முட்டையை அடைகாக்க, பாது காப்பான இடம் தேவை.

அக்ராண் மாதம். பொழுது சாய இன்னும் வெகு நேரமில்லை. சோனா இன்னும் அழுகிறான். நாய் அவர்களுடன் நடந்து வருகிறது. சமாதியின் மேல் சில சருகுகள் விழுகின்றன. பின் பனிக்காலத் தின் இலேசான குளிர் புல்லிலும் தர்காச் சுவற்றிலும் வியாபித்து நிற்கிறது. சுவருக்குக் கீழே வித விதமான பள்ளங்கள். சமாதி மேடையிலிருந்து உடைந்த கண்ணாடித் துண்டுகள் நீட்டிக்கொண் டிருக்கின்றன. மணீந்திரநாத் சோனாவை இடுப்பில் வைத்துக்கொண்டு சுவரின் நாற்புறமும் சுற்றினார். ஆளரவம் அற்ற தர்காவில் பறவைகள் இப்போது திடீரென்று மனிதர்களைக் கண்டு சஞ்சலமடைந்தன. அவை அவருடைய தலைக்கு மேல் சுற்றிச் சுற்றிப் பறந்தன. வெகு நாட்களுக்குப் பிறகு தர்காவுக்கு வந்திருக்கிறார், மணீந்திர நாத். இவ்வளவு காலங்கழித்து அவருக்குத் தோன்றியது, பீர்சாகேப் கழுத்தில் சுருக்குப் போட்டுக்கொண்டு இறந்த காரணத்தைக் கேட்க வேண்டுமென்று.

சோனாவின் அழுகை நின்றுவிட்டது. அவர் அவனைப் புல்லில் படுக்க வைத்துவிட்டுக் கொஞ்ச தூரம் உலாவினார். நாய் சோனா வுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டது. கொஞ்சங்கூட நகரவில்லை. சோனா கைகால்களை ஆட்டிக்கொண்டு விளையாடுகிறான். மணீந்திர நாத் தர்காவின் கதவின் மேல் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்து, ''கேத்சோரத்சாலா !'' என்று சொன்னார். 'பீர்சாகேப்! உங்க தர்காவிலே திருவிழா நடக்கிறது. நீங்க இந்து முஸ்லீம் எல்லாருக்கும் பீராயிருக்கீங்க. நீங்க ஏன் சுருக்குப் போட்டுக்கிட்டுச் செத்துப் போனீங்க?' எனறு கேட்க விரும்பியவர் போல அவர் மேடைக் கருகே போய் நின்றார். சுவரின் மீது ஒரு காய்ந்த கிளை முறிந்து விழுந்தது. சப்தபர்ணி மரத்தின் உச்சாணிக் கிளையில் சில பருந்துகள் கூடு கட்டிக்கொண் டிருப்பதை அவர் கவனித்தார். 'கேத்சோரத்சாலா !"

91.________________

'பீர்சாகேப் உள்ளே இருக்காரா?' என்று கேட்க விருப்பம் அவருக்கு. அவர் மேடைக் கருகில் உட்கார்ந்துகொண்டு காதைத் தரையோடு சேர்த்து வைத்துக்கொண்டார். பீர்சாகேபின் முகம் அவருக்கு நினைவில் தெரிகிறது. அவர் பார்த்த காலத்தில் பீர்சாகேப் கிழவராகித் திராணியற்று இருந்தார். மணீந்திரநாத் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வழியில் தர்காவுக்கு வந்து பீர்சாகேபின் மீசையையும் தாடியில்லாத முகத்தையும் பார்த்துக்கொண்டே நிற்பார்.

ஒரு நாள் இரவு பீர்சாகேப் கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொண்டு சப்தபர்ணி மரத்திலிருந்து தொங்கினார். பாவம்! அவரைப் போன்ற மனிதர் உலகத்தில் இல்லை. அவருக்குச் சாப்பாடே தேவையில்லை என்று சொல்வார்கள். அவர் எப்போதும் ஹக்காவையும் ஹக்காக் குடுவையும் தன் இடுப்பிலேயே கட்டி வைத்துகொண் டிருப்பார். தர்காவில் எங்கும் சுற்றிக்கொண் டிருப்பார். இரவில் தூரத்தில் கொய்னாப் படகுகளின் விளக்குகள் கண் சிமிட்டும். கிராமங்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும். அப்போது பிர்சாகேப் கீரையைத் தேடிப் பறிப்பார் அல்லது சப்தபர்ணி மரத்தின் மேல் ஏறிப் பருந்து முட்டைகளைத் தேடுவார். ஆமைகள் தர்காவிலும் வாய்க் கால் ஓரங்களிலும் பின் பனிக்கால முடிவிலும், குளிர்காலத்தின் ஆரம்பத்திலும் முட்டைகள் போடும். பீர் சாகேப் அந்த முட்டை களையும் தேடி எடுத்து வைப்பார்.

இப்போது அந்தக் கீரைச் செடிகளெல்லாம் தர்காவில் இல்லை ; எல்லாம் செத்துப் போய்விட்டன. மழைக்காலம் அப்போதுதான் முடிந்திருந்ததால் தர்காவின் நாற்புறமும் களைகளும், சில இடங்களில் புல்லும் மண்டிக் கிடந்தன.

சோனாவின் நினைவு வந்ததும் அவர் சுவருக்கருகே வந்து நின்றார். சோனா தூங்குவதையும், நாய் அவனுக்குக் காவலாயிருப்பதையும் பார்த்துவிட்டு அவர் அங்கிருந்து நகன்றார். சுவருக்கு உட்புறம் விசாலமான இடம். பெரிய பெரிய பள்ளங்கள், புதை குழிகளைத் தோண்டி யாரோ சவங்களை எடுத்துக்கொண்டு போய்விட்டாற் போல. பெரிய பெரிய பாறைகள் கிடக்கின்றன. ஒவ்வொரு பாறையைப் போட்டு ஒரு மனிதனை முழுவதும் மறைத்துவிடலாம். பாறைக்கடியில் ஒரு மனிதர் நசுங்கிக் கிடக்கிறான் என்பதே தெரியாது. விசாலமான இடத்தைப் பார்த்து, இங்கேயே தர்காவில் வீடு கட்டிக் கொண்டு வசிக்கலாமா என்று தோன்றியது மணீந்திரநாத்துக்கு. திருவிழாக் காலத்தில் மெழுகுவர்த்தி ஏற்றும் இடமும், படையல் படைக்கும் இடமும் மட்டுமே சுத்தமாயிருக்கின்றன. அந்த இடத்தில் அருகம் புல் வளர்ந்திருந்தது. பாழடைந்த ஒரு குடிசையும், உடைந்த

92________________

மண்சட்டிகளும் இருந்தன. பீர்சாகேபிடம் ஏதோ சக்தி இருந்தது. அதன் காரணமாகத்தான் திருடனாக இருந்த ஹாஸான் பக்கிரியாகி, பிறகு பீரும் ஆகிவிட்டார். மாலைகள், தாயத்துகள், பலதரப்பட்ட எலும்புகள் இவற்றையெல்லாம் சேகரித்து வைப்பார் பீர்சாகேப். அவரைப் புதைக்கும் போது இவற்றையெல்லாம் அவருடனேயே சேர்த்துப் புதைத்துவிட்டார்கள். நீண்ட மேடையின் மேல் பருந்துகள் எச்சமிட்டிருக்கின்றன. காகங்களும் மற்றப் பறவைகளும், முக்கியமாக மைனாக்களும், தர்காவில் கூட்டம் போடுகின்றன.

இந்த ஹாசான் பீர்தான் அவரிடம் சொன்னார். அந்தக் காலத்தில் ; ''உன் கண்ணோட பாப்பாவைப் பார்த்தா நீ பைத்தியமாயிடு வேன்னு தெரியுது.'' 'நீங்க என்ன சொல்றீங்க, பீர்சாகேப்?'' ''நான் சரியாகத்தான் சொல்றேன். உன்னோட படிப்பெல்லாம் வீண். பீர், சாமியார் ஆறதுக்கு உனக்கு இருக்கிற மாதிரி கண் இருக்கணும், முகம் இருக்கணும். உன் மாதிரி கண் இல்லேன்னாப் பைத்தியம் ஆகமுடியாது. பைத்தியமாப் பண்ண முடியாது.'

போர்ட் வில்லியமின் மதில் சுவரின் மேல் உலவும் போது பாலின் சொல்லுவாள். "உன் கண்கள் எவ்வளவு ஆழமா, எவ்வளவு சோகமா இருக்கு ! யுவர் ஐஸ் ஆர் க்ளுமி!''

பொட்டானிக்கல் பூங்காவில் பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பாலின் தன் பாப் செய்த தலை மயிரைக் கைகளால் அளைந்தவாறே ஆங்கிலத்தில் கிசுகிசுப்பாள். ''வரியா, நாம் இரண்டு பேரும் கீட்சோட கவிதையைச் சொல்வோம் ! - Thiere's none I grieve to leave behind, but only, only tliee !"

அப்போது தூரத்திலுள்ள தென்ன மரங்கள், கங்கையில் மிதக்கும் கப்பல்களின் சங்கொலி, சமுத்திரத்திலிருந்து வரும் பறவைகளின் இறக்கைகளின் படபடப்பு - இவை இருவரையும் ஏதேதோ நினைவு களில் ஆழ்த்தும். அப்போது அவர்கள் தங்களது சூழ்நிலையை மறந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். கவிதை சொல்லி முடித்த பிறகு இருவரும் பறவையின் இறகு போன்ற மெல்லிய ஒரு சோகத்தில் ஆழ்ந்து போய்ச் சற்று நேரம் மெளனமாக இருப்பார்கள்.

பாலின் சொல்லுவாள். "வா, நாம் இந்தக் கப்பல்லே ஏறிக்கிண்டு வேறொரு சமுத்திரத்துக்குப் போயிடலாம்!''

இந்நினைவுகள் மனந்திரநாத்தை உணர்ச்சி வசப்படச் செய்தன. அவருடைய ஆசைக்குரிய பாலின் ... 1925 - 26 ஆம் ஆண்டு. பாலின்

|

|

93.________________

அப்போது யுவதி. முதல் உலக யுத்தத்தில் அவளுடைய அண்ணனின் மரணம், அவர்களுடைய வீட்டில் ஏதோ ஓர் இரவின் இருளில் ஏசு கிறிஸ்துவின் சித்திரத்துக்கு முன் எரியும் மெழுகுவர்த்தி, முழங் காலிட்டு உட்கார்ந்திருக்கும் பாலின் - இந்த நினைவுகள் மாறி மாறி அவருடைய மூளையில் மிதக்கின்றன, பிறகு மறைகின்றன. இப்போது அவரால் எதையும் தெளிவாக நினைவு கூற முடியவில்லை. தர்காவின் பீரைக் கேட்கத் தோன்றுகிறது. ''நான் மறுபடி அந்த இடத்துக்கு அந்தக் காலத்துக்குப் போக முடியாதா?"

ஆனால் பேச முயற்சி செய்தால் அந்த ஒரு வார்த்தைதான் வாயி லிருந்து வருகிறது. பறவைகள் பறந்துகொண் டிருந்தன. பின்பனிக் காலத்து வெயில் இறங்கிவிட்டது. தாழ் நிலத்தில் மழை நீர் முழங்கால் அளவுதான் நிற்கிறது. சின்னஞ்சிறு சாந்தா மீன்களும், பொய்ச்சா மீன்களும் பயிர்களுக்கிடையில் வாலையாட்டிக்கொண்டு பாசியைத் தின்கின்றன . இலேசான குளிரின் வருகை பிராணிகளுக்கு ஒரு கெட்ட செய்தி யைக் கொண்டுவருகிறது. கோரைப் புற்களைத் தாண்டி, காடுகளைக் கடந்து, பல நதிகளையும் வாய்க்கால்களையும் கடந்து, ஃபோர்ட் வில்லியமில். அதன் மைதானத்தில், அதன் ஸ்தூபியின் உச்சியில் கொண்டைப் புறாக்கள் பறக்கின்றன. தர்கா மேடையின் மேல் உட்கார்ந்திருக்கும் மணீந்திர நாத் மணக்கண்ணால் போர்ட் வில்லியம் கோட்டையின் மேல் சூரியன் பிரகாசிப்பதைப் பார்க்கிறார். குளிர்காலத்து மைதானத்தில் பாலினும் சூரியனின் ஒளியும் பரந்திருப்பதை உணர்கிறார்.

சோனா உட்கார்ந்திருக்கவில்லை, தவழ்ந்து நகரவுமில்லை, அவன் தூங்கிப் போய்விட்டான். நாயும் நகராமல் உட்கார்ந்திருக்கிறது. அதற்கும் தூக்கம் வந்துவிட்டது போலும். அதன் கண்களும் மூடியி ருக்கின்றன. பின்பனிக் காலத்து வெயில் அவற்றின் மேல் விழுகிறது, மெல்லிய கோடாக, உருக்கிய தங்கம் போல் பளபளக்கிறது அது. மணீந்திரநாத் பூவரச மரத்துக் கிளைகளை விலக்கிக்கொண்டு ஒளி வரும் அந்த திசையை உற்றுப் பார்க்கிறார். அந்த ஒளி ஊற்றுப் பெருகும் இடத்தைத் தன் இரு கைகளாலும் பிடிக்க முயற்சி செய் கிறார். உள்ளே இருட்டு சுடுவது போலிருக்கிறது. அவர் சுவர்மேல் ஏறி வெளியே குதித்தார். பிறகு கைகளை நீட்டி ஒளியின் இருப்பிட மான சூரியனைப் பிடிக்க ஓடினார். அவர் ஓட ஓடச் சூரியனும் பின் வாங்குகிறான். கொஞ்சங் கொஞ்சமாக வயலுக்குள் இறங்கினார் அவர். அங்கு முழங்கால் வரை நீர். சூரியன் தேரிலேறி ஓடிப் போய்க்கொண்டிருக்கிறான். அவர் அந்த தேரில் ஏறிக்கொண்டு

94________________

குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொள்வார். பிறகு பாலின் தூங்கிக்கொண்டே கனவு காணும் இடத்துக்குச் சூரியனை இழுத்துக் கொண்டு போவார். அது முடியாவிட்டால் சூரியனை அரசமரத்துக் கிளையில் கட்டித் தொங்கவிட்டு விடுவார். பூமியின் கஷ்டத்தைக் களைவதற்கு, அதன் இருளைப் போக்குவதற்கு, அவர் சூரியனைப் பிடித்துக்கொண்டு வருவார். பூமியைக் களங்கத்திலிருந்து காப்பாற்று வதற்காக, தன் அன்பின் அடையாளத்தைப் பதிப்பதற்காக, அவர் வெறி பிடித்தவர் போல் தண்ணீரில் நீந்திக்கொண்டு போய் மேட்டு நிலத்திலுள்ள குளத்தங்கரைக்கு வந்து சேர்ந்தபோது சூரியன் ஓடி யொளி பவன் போல் மரங்களுக்கு மறுபக்கம் இறங்கிப் போயிருந் தான். சூரியன் ஏரித் தண்ணீருக்குள் அமுங்கி மறைவதைப் பார்த்து அவர் இடிந்துபோய்விட்டார். தோல்வியடைந்த ஒரு போர்வீரன் துப்பாக்கிக் குழாயைக் கையால் பிடித்துக்கொண்டு நிற்கும் பாவனை யில் அவர் ஒரு மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு நின்றார். நாற் புறமும் இரவில் சஞ்சரிக்கும் பூச்சிகளின் ஒலி. தூரத்திலிருந்து வரும் குழந்தையின் அழுகை ஒலி. அவருடைய மூளைக்குள் ஏதோ வலித்தது. எதையோ பின்னால் விட்டு விட்டு வந்தாற்போன்ற உணர்வு. ஆனால் 'எதை' என்பது மட்டும் நினைவுக்கு வரவில்லை. தூரத்திலிருந்து வந்த அழுகையொலி வயல்வெளி முழுதும் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உரத்த குரலில் கத்துகிறாற் போன்ற பிரமையை உண்டாக்கியது. அவருக்கு ஒன்றும் நினைவுக்கு வர வில்லை. சேறு நிறைந்த பாதை வழியே அவர் வீடு திரும்ப வேண்டும். அவருக்கு நன்கு தெரிந்த பாதைதான் அது. நாற் புறமும் இருள் சூழ்ந்து வந்தது. குழந்தையின் அழுகையொலி அவரை வேதனைக்குள்ளாக்கியது.

அன்று சாயங்காலம் சோனா தனியே வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான். மனரீந்திரநாத் அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டே தெருவில் உலாவப் போனார். அவர் அவனைப் படகில் தூக்கி வைத்துக்கொண்டு ''சோனா, பார்! இது பூமி, இது வயல், இந்த நிலத்திலேதான் நீ பெரியவனாவே. இது உன்னோட பிறந்த மண், இது தாயைவிட உசத்தி. இந்த மண்ணும் பூவும் புல்லும் சாமியைவிட உண்மை யானவை'' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே படகை வெகுதூரம் கொண்டு போய்விட்டார்.

ஆனால் இப்போது, அவர் எப்போது வீட்டைவிட்டுக் கிளம்பினார், அப்போது அவருடன் யார் இருந்தார்கள் - ஒன்றுமே அவருக்கு நினைவு வரவில்லை.________________

நாயும் சோனாவும் சிறிய படகும் தர்காவிலேயோ கிடந்தன. தர்கா வின் மண்ணில் ஹாஸான்பீரின் ஸ்பரிசம் அவர்களைத் தழுவிக் கொண்டிருந்தது. சப்தபர்ணி மரக்கிளையில் பருந்துகளின் ஒலி. மணீந்திரநாத் வீடு திரும்பியபோது எல்லாரும் பரபரப்புடன் இங்குமங்கும் அலைந்து கொண் டிருப்பதைக் கண்டார். சோனா எங்கே மாயமாக மறைந்து போய்விட்டான்? ஏன் தன மாமி கேவிக் கேவி அழுகிறாள். பைத்தியக்கார டாகுர் திரும்பி வந்துவிட் டார். ஆனால் சின்னப் படகைக் கொண்டு வரவில்லை. தனமாமி, பெரிய மாமி எல்லாருமே அழுதார்கள். கிழவர் வாசலில் கட்டை போல் நின்று கொண்டிருந்தார். சோனாவைக் காணோம் என்பதும் எல்லாரும் அவனைத் தேடுகிறார்கள் என்றும் மணீந்திரநாத்துக்குப் புரிந்தது. இப்போது கொஞ்சங் கொஞ்சமாக அவருக்கு நடந்த தெல்லாம் நினைவுக்கு வந்தது. ஒருவருக்கும் தெரியாமல் அவர் தண்ணீரில் இறங்கி நடக்கத் தொடங்கினார். அவர் போகப் போக, நாயின் ஒலம் அவர் காதில் தெளிவாக விழத் தொடங்கியது. அவர் சொல்லிக் கொண்டார். ''ஹாஸான் பீர் ! நீ இருக்கே, உன் தர்கா இருக்கு; என் சோனா உன் பொறுப்பிலே இருக்கான்!''

அவர் இருட்டில் சேற்றுப் பாதையில் ஓடினார். உடம்பில் வியர்வை வழிகிறது. உடம்பெல்லாம் சேறு. நாயின் ஓலம் வரும் திசையை நோக்கி அவர் முன்னேறுகிறார். அவரது கையில் விளக்கு இல்லை. தூரத்தில் ஓநாய்களின் ஊளை. ஒரு நாய் இவ்வளவு ஓநாய்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா? மணீந்திரநாத் பைத்தியம் தெளிந்தவர் போல் உணர்ச்சி பெருகக் கத்தினார். "சோனா! சோனா! உன்னைக் காட்டிலே விட்டுவிட்டு வந்துட்டேனே!'' அதற்கு மேல் ஒன்றும் சொல்லமுடியவில்லை அவரால் வெளிச்சம் இல்லை. இருந்தாலும் நட்சத்திரங்களின் ஒளியில் அவரால் வழியை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

அவர் தர்காவை நெருங்கியதும் கத்தினார். கேத்சோரத்சாலா! திருப்பித் திருப்பி அதே வார்த்தையை உச்சரித்தார். ஆனால் நாய் அவருக்கருகில் வரவில்லை. அதன் குரல் ஏதோ ஒரு பள்ளத்தி லிருந்து வருவது போல் கேட்கிறது. அவர் உள்ளே போனார். சோனா தவழ்ந்து நகர்ந்து கொண்டே அழுகிறான். பக்கத்திலேயே நாய் இருக்கிறது. அழுது அழுது குழந்தையின் தொண்டை அடைத்துவிட்டது. நடுநடுவே விக்கல் ஏற்படுகிறது. மணீந்திரநாத் அவசர அவசரமாகச் சோனாவைத் தூக்கிக் கொஞ்சினார். அவனுடைய உடம்பைத் தடவிப் பார்த்தார். நல்லவேளை அவனுக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. அவருக்கு அபார மகிழ்ச்சி. நன்றி பொங்க அவர் நாயை மீண்டும் மீண்டும் முத்தமிட்டார்.

96________________

சோனாவுடனும் நாயுடனும் அவர் சின்னப் படகில் உட்கார்ந்து கொண்டபோது சுவரின் மறுபுறத்திலிருந்து ஓநாய்கள் சேர்ந்து ஊளையிடுவது கேட்டது. அவர் ஆகாயத்தின், தர்காவின், கண்ணாடி களின் தெளிவைக் கலக்கிக்கொண்டு பெரிதாகச் சிரித்தார். நாயிடம், 'ஆகாயத்தைப் பார்!'' என்றார். சோனாவிடம் சொன்னார் : ''நட்சத்திரத்தைப் பார்! புல், பூ, பூச்சி, பறவைகளைப் பார் உன் பிறந்த மண்ணைப் பார் 1' பிறகு தாமே வானத்தை நிமிர்ந்து பார்த்தார். அதில் வரையப்பட்டிருந்தன, சோனாவின் முகமும், பாலினின் கண்களும்.

நாய் படகின் மேல்தட்டில் நின்றுகொண்டு மெளனமாக வாலை ஆட்டியது.

சிறிது காலத்துக்குப் பிறகு...

சோனா தர்மூஜ் வயலில் உட்கார்ந்துகொண்டு முழு மனசுடன் மண்ணைத் தோண்டிக்கொண் டிருந்தான். மணற்பாங்கான இடமாத லால் நிறைய மண்ணைத் தோண்டிவிட்டான். ஸோனாலி பாலி ஆற்றின் படுகை அப்போது உலர்ந்திருந்தது. அதைக் கடந்து வந்தால் ஆற்று நீர் மெல்லிய போர்வை போல் காற்றில் சலசலத் தது. தெளிந்த நீரில் சின்னஞ்சிறு மாலினி மீன்கள் நீந்தித் திரிகின்றன. சோனா ஒரு சிறிய தேங்காய்ச் சிரட்டையில் ஆற்றுத் தண்ணீர் கொண்டுவந்து, தான் தோண்டியிருந்த பள்ளத்தில் ஊற்றி னான். ஆற்றில் தண்ணீர் முழங்காலளவுதான். மாடுகளும் வண்டி களும் ஆற்றைக் கடக்கமுடியும். சோனா தண்ணீரில் இறங்கி ஒரு மாலினி மீனைப் பிடித்தான். அதைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து பள்ளத்துத் தண்ணீரில் விட்டான். பிறகு தர்முஜ் இலைகளுக்குள் ளிருந்து தலையை மட்டும் முயலைப் போல் வெளியே நீட்டிப் பார்த் தான். படகின் கூரைக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு ஈசம் புகை பிடித்துக்கொண் டிருப்பதைக் கவனித்தான்.

சோனாவையும் தர்முஜ் வயலையும் கவனித்துக்கொண் டிருந்தான் ஈசம். சோனா தன்னைத் தர் முஜ் இலைகளுக்குப் பின்னால் இன்னும் நன்றாக மறைத்துக்கொண்டான். அவனுக்கு மிகச் சிறிய உடம்பு. ஆற்றுமணலைப் போன்ற நிறம் ; வெறுங்கால்கள் வசந்தகாலம். வசந்தகாலக் காற்று வீசுகிறது. காற்று பலமாக வீசுவதால் தர்முஜ் இலைகள் விலகுகின்றன. விலகும் போது சோனாவின் உடம்பு

97