Pages

Tuesday, September 13, 2016

பரவளைவுக் கோடு - சண்முகம் சிவலிங்கம்

www.noolaham.org















http://padamm.blogspot.in/2006/05/lesbos.html
Chandra


பரவளைவுக் கோடு

அதிகம் நடந்து விட்டோம்
ஆவணிமாத வெயிலின் கொடுமை
மிகவும் களைத்து விட்டாய்

...
...
...


வேறெங்கு போவோம்? - பார்
வானம் விரிந்துள்ளது
ஆனியில் வெட்டி,
அறுவடை செய்தவர்கள் போனபின்,
அந்தப் புதைதாளின் ஒட்டுகள் மஞ்சள் நிறமாகி
வைக்கோல் இடையிடையே சிந்திக் கிடக்க,
திரளாய்ப் பசுக்கள் எல்லாம் வந்து நின்று மேய,
வரம்பு ஒன்றில் ஏறி நாம்,
தென்திசையைப் பார்த்தோம்
வடதிசையும் பார்த்து நின்றோம்.

'கண்படும்வரை நீள்கரவாகு வட்டை' என்றேன்.
'அங்கே அடிவானம் அண்டுதுபார்' என்று சொன்னாய்

அன்று,
தலைமழை பெய்த அடுத்தநாள் என்று நினைக்கிறேன்
ட்றாக்டர் இரைச்சல் ஒன்று
இந்த வயலில் எழத்திரும்பிப் பார்த்து நின்றோம்.

'மந்தப் பொழுதில் மலைகளைப்பார்' என்று சொன்னாய்.

'இந்த வயலூடு இவ்வாறே இவ்வாறே நாம் நடந்து சென்றால்,
அந்நீலச் சிகரங்களையுடைய
ஊவா மலைத்தொடரில் ஊன்றலாம் கால்" என்று சொன்னேன்.

நீயோ சிரித்தாய்
நெடுகச் சிரித்து வந்தாய்
ஓமோம் பிழைதான்
உணர்ந்தபின்னர் நான் சிரித்தேன்.

"வாழ்வினிலே அன்றுசெல்லும் அடிவானத்தை
வசப்படுத்தப் பயணமுற்ற மனிதர் உள்ளே
நாமும் இருதுளியானோம், நடந்துசெல்வோம்..."
என்று நான் முன்னர் எழுதியதைச் சொன்னேன்
நன்றி என்று சொன்னாய்
திரும்பி நடந்து வந்தோம்.

மீளத் தொடர்ந்து விரியும் புதுவானின்
நீளம் அளக்கும் நினைப்போ எனக்குளது?

நீளமும் இல்லை
அகலங்கள் இல்லை
வளைவு - வளைவு - வளைவு!...

-சண்முகம் சிவலிங்கம்