Pages

Saturday, November 18, 2017

பூனைகளின்-அநுசரணம்/

http://unnatham.net/பூனைகளின்-அநுசரணம்/
Saturday, 18th November 2017

உன்னதம் (http://unnatham.net/)




By unnatham Posted on November 8, 2017

X.

சிறுகதை

-ஜூலியோ கொர்த்தஸார்

அலனாவும் ஓசிரிஸம் என்னைப் பார்க்கும்போது, அப்பார்வையில் ஏதாவது கொஞ்சம்பாசாங்கோ, கொஞ்சம் வஞ்சனையோ கலந்திருந்தது என்று என்னால் புகார் சொல்ல முடியவில்லை. அலனா அவளுடைய நீல விழிச்சுடரோடும், ஒசிரிஸ் அதனுடைய பசுமை ஒளிரும் விழிக்கதிரோடும் என்னை நேர்கொண்டு நோக்கினார்கள். மேலும்,அவர்கள் தம்மில் ஒருவரையொருவர் பார்க்கும்போது இந்த முறையில்தான் பார்த்துக்கொண்டார்கள். பால் கிண்ணத்திலிருந்து திருப்தியுடன் மியாவியபடி ஓசிரிஸ் தன் வாயை உயர்த்தும்போது, அலனா அதன் கருத்த முதுகைத் தடவிவிடுவாள். எனக்குப் புலப்படாத வெளிகளில், என் கொஞ்சல்கள் எட்டமுடியாத தூரத்தில் நின்று, ஒருவரையொருவர் புரிந்து கொண்டுள்ளனர்-இந்தப் பெண்ணும் பூனையும்.இதை அறிந்த பிறகு சிலகாலம், நான் ஒசிரிஸ் மேலிருந்த என் அதிகாரத்தைத் துறந்துவிட்டேன்; பாலமிட்டு இணைக்கமுடியாத தூரத்தில் இருந்துகொண்டு, நாங்கள் நல்ல சிநேகிதர்களாக இப்போது இருக்கிறோம். ஆனால், அலனா-என் மனைவி, எங்களுக்கிடையில் இருக்கும் தூரம், மாறுபட்ட ஒன்று. இந்த விஷயத்தை அவள் உணர்ந்திருக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தாலும், என்னைப் போலவே அவள் என்னை நேர்கொண்டு நோக்கும்போதும், என்னைப் பார்த்துப் புன்னகை செய்தோ அல்லது என்னைப் பார்த்துப் பேசியபடியோ, எல்லாவிதச் சமிக்ஞைகளிலும் எல்லாவித விஷயங்களிலும் கொஞ்சம்கூட மிச்சம் வைக்க நினைக்காமல் தன்னை அவள் சமர்ப்பிக்கும்போதும்,- காதலுறவின் போது தன்னை அவள் கொடுப்பதுபோல், அவளுடைய ஒட்டு மொத்த சரீரமும் அவள் கண்களைப் போலவே விளங்கியது. பூரணமான அர்ப்பணிப்பு குறுக்கீடில்லாத பரிமாறல்,

இது வினோதமானதுதான்-ஓசிரிஸின் உலகத்தினுள் புகுவதற்கு நான் மறுதலிக்கப்பட்டபோதும் கூட, அலனாவின் மேல் எனக்குள்ள காதலை, சுலபமான முழுமையான விஷயமாக எளிமையானதாக, தம்பதிகளுக்கேயுரிய ரகசியங்களற்ற வாழ்க்கையாக என்றும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அந்த நீலவிழிகளுக்குப்பின்புறத்தில், வார்த்தைகள்-முணுமுணுப்புகள்-மெளனங்களின் ஆழத்தில், இன்னும் அகன்ற மற்றொரு பிரதேசம் விரிகிறது.இன்னொரு அலனா அங்கே உயிர்க்கிறாள். ஆனால் இதை இப்படி நான் அவளிடம் சொன்னதில்லை. நிறையதினங்களும் நிறைய வருவடியங்களுமாக நழுவிக்கொண்டு விலகிய இந்த சந்தோஷத்தின் மேல்மட்டத்தைச்சிதைக்க முடியாதபடி நான் அவளை மிகவும் அதிகமாகக் காதலித்தேன். அதனால், எனக்கே உரித்தான முறையில் புரிந்து கொள்ளவும், கண்டுபிடிக்கவும் பிடிவாதமாக முயன்று வந்தேன். வேவுபார்க்காமல் அவளைக் கண்காணித்தேன். சந்தேகிக்காமல் அவளைத் தொடர்ந்து கவனித்தேன். அங்ககினப்பட்டும் கூட அற்புதமாக உள்ள ஒரு சிலையை முடிவுறாத ஒரு கைப்பிரதியை, வாழ்க்கை ஜன்னலில் செதுக்கப்பட்ட ஒரு துண்டு வானத்தை நான் காதலிக்கிறேன்.

ஒரு தருணத்தில், சங்கீதமானது, அவளிடம் என்னைச் சரியாகக் கொண்டு போய்ச்சேர்க்கும் பாதையை அமைக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியுள்ளது. எங்கள் வசமிருந்த பர்டோக், டியூக் எல்லிங்டன், கால்காஸ்டா-இசைத்தட்டுக்களை அவள் கேட்கும்போது கவனித்திருக்கிறேன். படிப்படியான ஊடுருவல், அவளுள் என்னை அமிழ்த்தியது.இசை, ஒரு மாறுபட்ட விதத்தில் அவளை நிர்வாணமாக்கியது. அதிகமாக இன்னும் அதிகமாக, அலனாவாக அவளை மாற்றியது, ஏனெனில், என்னிடமிருந்து எதையும் மறைக்காத, என்னை எப்போதும் நேர்கொண்டு பார்க்கக்கூடிய பெண்ணாக மட்டும் அப்போது அலனா தோன்றவில்லை. அவளை இன்னும் நன்றாகக் காதலிக்கும் வகைமைக்காக, அலனாவுக்கு எதிரிலும் அலனாவுக்கு மேலாகவும் நின்று, அவளை நோக்கி அப்போதும் நகர்ந்தேன்- முதலில், இசையானது இன்னொரு அலனாவை எனக்கு வடிணத் தோற்றமாகக் காட்டிவந்தாலும், ஒருநாள் ரெம்ப்ரெண்டின் படப்பிரதியொன்றில் முகங்கொண்டிருந்தபோது, அவள் இன்னும் அதிகமாக மாறியிருந்ததைக் காணும்படி எனக்கு வாய்த்தது. ஒரு நீலக்காட்சியில் தோன்றும் வெளிச்சங்களையும் நிழல்களையும், வானிலிருந்து ஒரு மேகக்கூட்டம் சட்டென்று மாற்றியமைத்ததைப் போலிருந்தது அது, அலனாவிலிருந்த அலனாவின் ஷணத்தோற்றத்தை, மீண்டும்திரும்ப நிகழவே நிகழாத உடனடி உருமாற்றத்தை அளவிட்டுக் கொண்டிருக்கும் ஒற்றைப் பார்வையாளராக, அந்த ஓவியம், அவளை, அவளையும் மீறி எங்கோ தூக்கிச் சென்றுவிட்டது என்று நான் உணர்ந்தேன். கீத் ஜெத்ரெட் பீதோவன், அணிபல் ட்ரோலியே போன்ற மத்தியஸ்தர்கள், அருகில் நெருங்க அனிச்சையாக உதவினார்கள். ஆனால் ஒரு ஓவியத்தையோ படப்பிரதியையோ கவனித்திருக்கும் போது, தான் எதுவாக இருக்கிறோம் என்று அவள் நினைத்திருக்கிறாளோ, அதுவும் கூட தொலைந்து போய் நின்றாள் அலனா. ஒரு கற்பனை லோகத்துக்குள் அவள் ஒரு கணம் சென்றிருக்கலாம்; எனவே, அதை அறியாமல் தன்னைவிட்டே அவள் விலகி வந்திருக்கலாம்-ஒரு ஒவியத்திலிருந்த இன்னொன்றுக்கு நகர்ந்து கொண்டு, அவை பற்றிய அபிப்பிராயங்களை உதிர்த்துக் கொண்டோ அல்லது மெளனித்தோ இருந்து வருவதை, அவளுக்குக் கொஞ்சம்பின்னாக இருக்கையில் அல்லது அவளை சீட்டுக் கட்டினுள் அதன் ஒவ்வொரு புதிய அலட்சியமான உதறலின்போதும் ஒளிந்துகொண்டும் ஜாக்கிரதையாகவும் உள்ள ஒருசீட்டைப் போன்று இருக்கிறாள்; ஒன்றுக்குப்பின் ஒன்றாக, குயின்களும் ஏஸ்களும் ஸ்பேடுகளும் கிளப்களுமாக வருகிறாள் அலனா.

இந்த ஓசிரிஸ"டன்கூடிக்குலவுவதற்கு என்ன இருக்கிறது? அதற்க அதன் பாலைக் கொடுத்ததும்,திருப்தியடைந்ததைப் போல், சந்தோஷத்தில் மியாவிடும் கரும்பந்தாக, தனியே விலகிப் போய்விடுகிறது அது. ஆனால் நேற்றுப்போலவே, இன்றும் அந்த ஓவியகாலரிக்கு அலனாவை அழைத்துச்செல்கிறேன். கண்ணாடிகளாலும் இருள் மங்கிய அறைகளாலும் ஆன ஒருதியேட்டருக்கு மறுபடியும் ஒரு தடவை போகிறோம். கான்வாஸிலுள்ளதுல்லியமான பிம்பங்கள், இந்த பிம்பத்துக்கு முகம் காட்ட உல்லாசமாக, நீல ஜீன்ஸ்களுடனும் ஒரு சிவப்புரவிக்கையுடனும், நுழைவாசலில் சிகரெட்டைவீசியெறிந்துவிட்டுப்பின் படம் படமாய் போய்ப்பார்க்கிறவளாய், பார்ப்பதற்குத் தேவைப்படும் கச்சிதமான தூரத்தில் நிற்கிறவளாய், சமயாசமயங்களில் விமர்சிக்கவோ தன் அபிப்பிராயத்தை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளவோ என்னை நோக்கித்திரும்புகிறவளாய் அவள் கவனிக்கிறாள். நான் ஓவியங்களுக்கு அங்கே இருக்கவில்லை என்பதையோ, கொஞ்சம் பின்னாலிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் நான் பார்க்கும் முறை அவளுடையது போன்றதல்ல என்பதையோ அவள் கண்டுபிடிக்கவேயில்லை. படத்துக்குப் படம் சென்று பார்க்கும் முறை அவளுடையமெதுவான பிரதிபலிப்பான நடை அவளை மாற்றிக்காட்டுகிறது என்பதை, நான் கண்களை இறுக்கமூடிக் கொண்டு என்கரங்களில் அவளை அழுத்தமாகப் பிடித்துக்கொள்வதற்கும் அவளுடன் ஒரு சித்தப்பிரமைக்குள் பறக்கத்துடிக்கும் பைத்தியகாரத்தனம் கொஞ்சம் பிறக்க, நேராகப் பொதுஜனங்களிடைபுகுந்து வெளியேறத் துடிப்பதற்கு எதிராகவும் போராடிக்கொண்டிருந்ததை அவள் அநேகமாக உணரவேயில்லை. ஆசுவாசம் கொண்டவளால், தன் சந்தோஷமும் கண்டுபிடிப்பின் அதிசயமும் கலந்த இயல்போடு, கனமேயில்லாமல், தன்னுடைய தயக்கங்களும் என்னிலிருந்து வேறான ஒரு காலவெளியில் செதுக்கப்பட்டதை உணராமல், என் தாகத்தின் எதிர்பார்ப்புமிகுந்த உணர்ச்சி வேகத்திலிருந்து அந்நியமானவளாய் அவள் தோன்றினாள்.

சங்கீதத்தில் ஆழ்ந்த அலனா, ரெம்ப்ராண்டைப் பார்க்கும் அலனா-இதுவரை எல்லாமே ஒரு நிச்சயமற்ற சகுனமாகவே இருந்தன. ஆனால், இப்போது என் நம்பிக்கை, பொறுக்க முடியாமல் நிறைவுபெற ஆரம்பித்தது. நாங்கள் அங்கே வந்து சேர்ந்த கணத்திலிருந்து, ஒரு பச்சோந்தியின் சகிக்கமுடியாத கபடமின்மையுடன் ஓவியங்களில் தன்னைப் பறிகொடுத்தவளாய் ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்காகப் போய்க்கொண்ட அவளது தோரணைகளைப் பதுங்கியிருந்து வேவுபார்க்கும் பார்வையாளனை அறியாதவளாய் அலனா தோன்றினாள். அவளுடைய சிரத்தின் முன்நோக்கிய சாய்வு, அவளுடைய கரங்களின் அல்லது உதடுகளின் அசைவு உள்முகமாக அவளக்குள் உள்ளோடும் அவளை, இன்னொருத்தியாக காட்டும்வரைக்கும் தனக்குள் முழுதாக ஒடியாடுவதானவர்ணவியலைத் தேடி அந்த அடுத்தவள் எப்போது அலனாவாக இருக்க, தன்னை இன்னொரு அலனாவாகச் சேர்ந்தெழுப்ப, சீட்டுக்கட்டு முழுதும் காலியாகும் வரை, சீட்டுகள் அணிவகுக்கின்றன. அவளுக்குப் பக்கமாக, காலரியில் சுவரையொட்டி, மெதுவாக நடந்துகொண்டே தன்னை ஒவ்வொரு ஓவியத்துக்கும் அவள் உந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன்.அவளிடமிருந்து ஒவியத்துக்கும், ஒவியத்திலிருந்து என்னிடமும், மீண்டும்திரும்பிஅவளிடமும் செல்லும் ஒரு முக்கோண



________________

மின்னல் வேக வீச்சில், என் கண்கள் அகண்டு பெருகின. அவளைச் சுற்றிலுமுள்ள மாறுபட்ட பிரபை, ஒருகணம் பின்னதுக்கு வழிவிட்டு, ஒரு புதிய ஒளிவட்டம் அமைப்பதையும், சாசுவத நிர்வான நிலைக்கு, சத்திய நிலை ஒன்றில் அவளைப் பகிரங்கப்படுத்திக் காட்டும் விதத்தில், வர்ண அடர்த்தி பெற்றுமாறுவதைச் சிக்கெனப் பிடித்தன என் கண்கள். இந்த பிரித்துக்காட்டும் வர்ணக் கலவை, திரும்ப நிகழ்வது எவ்வளவுதூரம் சாத்தியம் என்பதை முன்னறிவது அசாத்தியமாகியது.எத்தனை புதிய பல அலனாக்கள், ஒரு தொகுப்பில் பின்வரும் தீர்மானத்துக்கு என்னை இறுதியில் இட்டுச் செல்லும்? நாங்களிருவரும் திருப்தியடைந்தவர்களாய் வெளிப்படத்தோன்ற, எதையும் அறியாதவளாய், தனக்குக் குடிப்பதற்கு பானம் வாங்கும்படிஎன்னிடம் சொல்வதற்கு முன், புதிய சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டாள் அவள் என்னுடைய நீண்டகாலத் தேடல் கடைசியாக உச்சகட்டம் அடைந்துவிட்டது என்பதை நான் அறிந்த நிலையில், இதன் பிறகு இதிலிருந்து, என் காதல், புரிந்துகொண்டும் புரியாமலும் கூட உருவெடுக்கும் என்பதை உணர்ந்த நிலையில், மூடிய கதவுகள், தடுக்கப்பட்டநடைபாதைகள் பற்றிய நிச்சயமின்மை இல்லாமல், அலனாவின் தெளிந்த பார்வையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

எதிர்புறத்தில், கருத்த பாறைகளின் பின்னணியில் ஒரு தனித்த படகு, அங்கு அவள் அசைவற்று நெடுநேரம் இருந்ததைக் கவனித்தேன். அவளது கரங்களின் புலனாகாத சிறகடிப்பு, ஆகாயத்தில் நீந்துவதாக, கடலுள் நீந்துவது தொடுவானங்களிலிருந்து பறப்பதாக அவளைத் தோன்றவைத்தது. ஆச்சரியப்படும் சக்தியை நான் நீண்டநேரம் தக்கவைத்திருக்கமுடியவில்லை.அந்த இன்னொரு படம்-ஈட்டிமுனைக்கம்பிக்கிராதி ஒன்று தண்டித்துவிலகிச் சென்று, மரத்தொகுதியின் எல்லையில் நிற்பதான ஒவியம்-ஒரு சரியான நோக்குநிலையைத் தேடுவதற்கு அவளைப் பின்வாங்க வைத்தது.திடீரென்று விலகி வெறுத்தல், ஒப்புக்கொள்ள முடியாத எல்லைக் கோட்டைப்புறமொதுக்குதல், பறவைகள், கடலின் ராட்ஸ்சமிருகங்கள், மெளனத்தினுள் ஜன்னல்கள் திறந்து கொள்கின்றன. அல்லது மரணம் என்ற போலியான தோற்றத்தை உள்நுழையவிடுகின்றன. ஒவ்வொரு புதிய ஓவியமும் அலனாவை மேன்மேலும் ஈர்த்து இழுத்துச்சென்றன. அவளுடைய முந்திய நிறத்தை அவளிடமிருந்து கொள்ளையிட்டுச் சென்றன. அவளிடமிருந்த, சமயத்துக்குத்தக சரிசெய்த கொள்ளும் அநுசரணச் சுதந்திரத்தை பிடுங்கியெறிந்தன. பறத்தலை, விரியத்திறந்தவெளிகளை இரவையும் இன்மையையும் எதிர்கொண்டு மறுக்கும் அவளை, சூரிய வெளியின் வியாகூலத்தை ஃபோனிக்ஸ் பறவையாகும் அதிபயங்கர ஆவல் துடிப்பை ஸ்திரப்படுத்தின. அவளுடைய பார்வையைத் தாங்குவது எனக்கு அசாத்தியம் என்பதை அறிந்தவனால், திகைப்பை என் முகத்தில் அவள் கண்டபோது, கேள்விக்குறியின் எதிர்பாராத வியப்பை அவள் கொண்டாள். ஏனெனில் நானும் பயணத்தின் இலக்காக இருக்கும் அலனா.என் அலனாவிடம், இதுதான் நான் ஆசைப்பட்டது. நகரத்தின் நிகழ்காலத்தாலும் கஞ்சத்தனத்தாலும் இதுவரை கடிவாளமிடப்பட்டிருந்தது. இது முதற் கொண்டும் இறுதிவரையிலும் இப்போது அலனா, கடைசியில் அலனாவும் நானும். அவளுடைய நிர்வாணத்தை என்கரங்களுக்குள் பிடித்தனைக்க ஆசைப்படுகிறேன். நான் அவளுடன் காதலுறவுகொள்ள, எல்லா விஷயங்களும் தெளிவுபட்டுவிடும்; எல்லா விஷயங்களும் எப்போதைக்குமாகப் பேசி முடிக்கப்பட்டிருக்கும் (அவற்றில் பலவற்றை நாங்கள் முன்பே அறிந்திருப்போம்) வாழ்வின் முதல் விடியல் பிறக்கும்.

காலரியின் இறுதியை நாங்கள் அடைந்துவிட்டோம். இன்னும் என் முகத்தை மறைத்தபடி, காற்றும் விதிவிளக்குகளும் என்னைப் பற்றி அலனா அறிந்தவைகளுக்குள் மீண்டும் என்னைக் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் வெளிப்புறக் கதவை நோக்கி நான் சென்றேன். மற்ற பார்வையாளர்கள் என்னிடமிருந்த அவளை மறைக்க, ஒரு ஓவியத்தின் முன்பு-ஒரு ஜன்னலும் பூனையும் உள்ள அந்த ஓவியத்தின் முன்பு-நீண்டநேரமாக அசைவற்றுப்பார்த்துக் கொண்டு அவள் நிற்பதைக் கண்டேன். கடைசியாக நிகழ்ந்த ஒரு மாற்றம், மற்றவர்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் நேர்த்தியாக விரிக்கப்பட்டு, மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் சிலையாக அவளைப் படைத்துக்காட்டியது. அந்தப் பூனை, ஓசிரிஸை ஒத்ததோற்றத்திலிருப்பதைக் கவனித்தேன். எங்களது பார்வையைத் தடுக்கும் பக்கச் சுவரின் ஜன்னல் வழியாக, தொலைதூரத்திலிருந்த ஏதோ ஒன்றை அது நோக்குவது போலிருந்தது. தனக்கேயுரிய அலட்சியத்துடன் அசைவற்றதாக-அலனாவின் நிரந்தர அசைவின்மையைவிட மாற்றுக்குறைந்த அசைவின்மையில் உள்ளதாக அது தெரிந்தது. ஏதோ ஒருவகையில், முக்கோணம் சிதறிப் போனதை நான் உணர்ந்தேன். என்னை நோக்கித்தன் தலையை அலனா திருப்பியபோது, அந்த முக்கோணம் அதற்குமேல் உயிர்தரித்திருக்கவில்லை. ஓவியத்துக்குள் அவள் ஆழ்ந்துவிட்டாள். அவள் திரும்பிவரமாட்டாள். இப்போதும் பூனையின் பக்கத்தில்தான் அவள் இருந்தாள். அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று யாரும் காண முடியாத,ஜன்னலுக்கு அப்பால் பார்த்துக்கொண்டு, நேர்கொண்டு பார்க்கும் வேளைகளில் மட்டும் என்னைப் பார்த்துக்கொண்டு, அலனாவும் ஒரிசிஸ் எம்நின்றார்கள்.

தமிழில்: கால சுப்பிரமணியம்