Pages

Friday, May 25, 2018

அசுரகணம் - க நா சு ::: கடைசி அத்தியாயங்கள்

...........................

வார்த்தைகளை ஊன்றுகோல்களாகக் கொண்டே  நான் இந்தப் பதினெட்டு வருஷங் களையும் தள்ளிவிட்டேன்

இனியுன்ன ஒரு பதினெட்டோ இரு பதினெட்டோ பதினெட்டோ - அப்படித்தான் போகும்,

கல்யாணத்துக்கு எனக்கு என்ன அவசரம்?

நான் நாலரை ரூபாய் கொடுத்து வாங்கிய அந்த அனுபவம் என் அப்பாவுக்குத் தெரிந்துவிட்டது என்பது எனக்குத் தெரியும் அவரும் அதற்குப் பக்கத்துக் குச்சுக்குப் போக்குவரத்தாக இருப்பவர்தானே?

அதனால்தான் அவசரப்பட்டதா?

அல்லது ஹேமாவைக் கண்டதும் எனக்குக் காதல் வந்துவிட்டது. இனி சும்மா இருந்தால் காரியம் கெட்டு விடும் என்று எண்ணினாரா அவர்? -

அல்லது அவர் நண்பரின் மருமகள், என் வயதுள்ளவள் கிடைத்துவிட்டாள். காலதாமதம் செய்வானேன் என்று எண்ணி னாரோ?

எப்படி எந்தக் காரணமானால் என்ன? விஷயம் முற்றி விட்டது. ருக்கு சொன்னதிலிருந்து ஜாதகப் பரிவர்த்தனை வரையில் வந்துவிட்டது,

கல்யாணம் செய்து கொள்ளுவதில் எனக்கொன்றும் தடையில்லை. ஒருநாள் பூராவும் நாதசுரம் வாசிப்பான் என்பதைத் தவிர எனக்குக் கல்யாணம் செய்து கொள்வதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை.

அதுவும் ஹேமாவைப் போன்ற ஒரு பெண் கிடைத்தால் நான் அதிருஷ்டசாலிதான்.

ஆனால் அவள் தாயார், அந்தச் சூர்ப்பனகையின் விஷயம் என்ன ?

அதுதான் என் மனத்தைக் கலக்கியது.


10

அந்த   வேங்கடநாராயனர் ரோட்டில் அந்த வீட்டை அடையும் போது மணி மூணரை, அப்போது ஹேமா கல்லூரியில் இருப்பாள், வீட்டிலிருக்கா மாட்டாள். அவள் தாயாரைச் சந்திக்கத்தான் போனேன் என்று சொல்லவேண்டும்.

அவள், அதே ஊஞ்சலில், நான் நேற்று விட்டுப் போன நேரத்திலிருந்து,  அசையாது அப்படியே உட்கார்ந்திருப்பவள் போல் உட்கார்ந்திருந்தாள். ரவிவர்மாவின் மோகினியாக

"வா" என்றாள்.

நான் வருவேன் என்று தெரிந்தே அவள் காத்திருந்தது போல இருந்தது,

“வந்துவிட்டேன்" என்றேன்,

ஊஞ்சல் லேசாக ஆடியது. எதிரில் பிரம்பு நாற்காலிக்குப் பதிலாக மெத்தென்று, தாயின் கர்ப்பப் பையின் கதகதப்பையும் மிருதுத் தன்மையையும் நினைவுபடுத்திய அந்த ஸோஃபா போடப்பட்டிருந்தது. அதிலே உட்கார்ந்தேன்.

- ஹேமா இருக்கமாட்டாள் என்று தெரிந்தேதான் நான் வந்திருந்தேன். ஏன்? எதற்காக? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

பதிலே இல்லாத கேள்விகள் கேட்டு என்னையே திக்கு முக்காடச் செய்துகொள்ளுவதில் நான் புலிதான். - கடவுள் என்று ஒருவன் உண்டானால் அவன் மனிதர்கள் என்கிற மாணவர்களுக்கு பதில் தரமுடியாத கேள்வித்தாள்கள் தயாரித்து எல்லோரையும் திணற அடிக்கும் ஒரு "டனா டாவண்ணா " வாகத்தான் இருக்கவேண்டும். -

கேள்விகள் பலவற்றிற்குப் பதிலே கிடையாதுதான். ஆகவே கேள்விகள் கேட்பதே முட்டாள்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும், மனிதன் கேள்விகள் கேட்டுக் கொண்டே தன் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறான், பாவம்! வேதங்கள் என்ன, பைபிள் முன்னோடிகள் என்ன, ஜெராஷ்டர் என்ன, சீனத்து லாவும்,  குங்கும் என்ன, சிலுவை ஏக என்ன

________________




எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக பதிலேயில்லாத கேள்விகனள சரமாரியாகக் கேட்டுக் கொண்டேதான் மனித சரித்திரத்திலே இடம் பெற்றிருக்கிறார்கள்,

நம்புகிறவர்கள் நம்பிவிட்டுப் போகட்டும். இவர்கள் எல்லாராலும் மனிதகுலம் அடைந்துள்ள முழு முடிவான தன்மைதான் என்ன என்று கேட்டால்..?'

அதற்கும் பதில் கிடைக்காதுதான்!

என் சிந்தனை கள் எந்த முடிவையும் நோக்கி நகர மறுக்கின்றன,

எதிரே ஊஞ்சலில் உல்லாசமாக வீற்று ஆடிக்கொண்டிருந்த ஆரஞ்சுப் புடவை பழுப்பு நிறச் சோளிக்காரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவள் யாரோ, நான் யாரோ! இல்லாத ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு நான் அவஸ்தைப்படு வானேன்?

என் கலைஞன் விரல்கள் கொலை செய்யத் துடித்தன.

சூர்ப்பனகையே ஜாக்கிரதை என்று அவளுக்கு லட்சுமணன் குரலில் சொல்ல விரும்பினேன் நான்.

ஆனால் நான் லட்சுமணன் அல்லன், வெறும் ராமன்தான்.

சூர்ப்பனகை என்னை நாடி வரவில்லை, இன்று அவளை நான்தான் தேடி வந்திருந்தேன். என்ன உத்தேசத்துடன் அப்படி வந்திருந்தேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை .

நான் அங்கு அந்த சமயம் வந்து மாட்டிக்கொண்டது பிசகு என்று எனக்குத் தோன்றியது.

மீண்டும் ஓடிவிடுவது சரியல்ல, இருந்து சமாளிக்கத்தான் வேண்டும்.

"உனக்குப் பதில் சொல்ல வந்தேன்" என்று தைரியமாகத் தொடங்கி அவள் கேட்ட காதல் கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதிலைச் சொல்லிவிட்டால் நல்லதுதான். அவளைப் பார்க்கப் பார்க்க எனக்குத் துணிச்சல் வரவில்லை, பேச்சை எடுக்கவே வாய் வரவில்லை .________________




ஏதோ ஒரு பொய் -

வரு பொய் சொல்வ த்தான் வாய் வந்தது. - மாமாவை என் அப்பா அழைத்து வரச் சொன்னார்

பாமாவின் மாமா

கையோடு" என்றேன்.

சொன்னாள்: "நேற்று ,

போய்விட்டா

சாவின் தாயார் லேசாக ஊஞ்சலை ஆட்டிவிட்டுச் னாள்: "நேற்று மாலை ஏதோ தந்தி வந்தது, யாருக்கோ

உடம்பு சுகம் இல்லை என்று, தம்பி விசுவநாதன் ஊருக்குப் அ, "டான். வர ஒரு வாரம், பத்து நாள் ஆகும்" என்றாள், "சரி" என்று எழுந்து திரும்பியிருக்க வேண்டியது தானே

கா'படிச் செய்யாமல் ஸோஃபாவில் இன்னும் சௌகரிய மாக அசைந்து சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தேன்.

ம் ஹேமா கல்லூரி போயிருக்கிறாள். நீ போகவில்லையா?"

நான் அப்படிச் செல்

என்று கேட்டாள்.

"இன்று மட்டம் போட்டுவிட்டேன்" என்றேன். வாசலில் கார் வரும் சப்தம் கேட்டது.

"நம்ப வீட்டுக் கார்தான், ஹேமாதான். அதற்குள் வந்து விட்டாளே!" என்றாள் ஹேமாவின் தாயார், ஊஞ்சலைவிட்டு இறங்காமல், வாசல் பக்கம் பார்த்துக் கொண்டே

“தப்ப முடியாது!" அதுவும் நல்லதுதான் என்று எண்ண மிட்டேன் நான். தப்ப விரும்பவில்லை நான். அது எனக்குத் திடமாகவே தெரிந்தது.

பூட்ஸ் கால்களுடன் யாரோ நடந்து வரும் சப்தம் கேட்டது. ஹேமா மட்டும் அல்ல; அவளுடன் வேறு யாரோ, ஒரு ஆணும் வரு கிற மாதிரி இருந்தது. ஹே மாவும், ஹேமா வைப் பின்தொடர்ந்து ஒரு வாலிபனும் உள்ளே வந்தனர்,

என்னை அச்சமயம் அங்கு ஹேமா எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது, அவள் கன்னங்கள் சற்றே கன்னின. லேசாகச் சிவந்தன. நாணம் என்றோ, வியப்பு என்றோ , பிரியம் என்றோ , குழப்பம் என்றோ தீர்மானமாகச் சொல்லமுடியாத ஒரு பாவம் அவள் முகத்தில் படர்ந்தது.

ஹேமாவும் தன் தாயாரைப் போலத்தான் என்று எனக்கு அச்சமயம் நிச்சயமாகத் தெரிந்தது.

கநா. சுப்ரமண்யம்________________




அர்த்தமற்ற சமூகப் பழக்க வழக்கங்கள் பலவும் வணக்கம், கைகுலுக்கல், சௌக்கியமா எல்லாமே சிந்தனைத் தயக்கத்தை மறைக்கவே ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டும்,

"ஹெள ஆர் யூ ?" என்று கேட்டுக்கொண்டே முன் வந்து, எங்களுக்கிடையே என்றும் இருந்திராத ஒரு நட்புடன் என் கையைப் பிடித்துக் குலுக்கினான் சந்திரசேகர், ஏதோ ஒரு புதுமாதிரியான சகோதரத்துவத்தை நிலைநிறுத்த விரும்பினான் போலும், அழகி (ஹேமாவைத் துரத்தி ஓடும் வாலிபர் சங்கம் என்று அதற்குப் பெயர் வைக்கலாமே!

"உட்காரு சந்திரசேகர்" என்று தேன் சொட்டும் குரலில் சொன்னாள் ஹேமாவின் தாய், என்னைவிட அவன் தனக்கு வேண்டியவன் என்று தன் குரலால் சொல்ல அவள் விரும்பினாள் என்று எனக்குத் தோன்றியது.

சந்திரசேகரன் எனக்கு எதிர்ப்பக்கம் இருந்த ஆசனத்தில் உட்கார்ந்தான். ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த 'அம்மாமியைப் பயபக்தியுடன் பார்த்தான்.

அந்தப் பயமும் பக்தியும் எனக்கு ஒருக்காலும் வராது, வந்துவிடக்கூடாது என்றுதான் நான் என்றுமே பிரார்த்திருப் பேன்,

'உன் சிநேகிதர் கெட்டிக்காரர்னு ஹேமா சொன்னாள், உன்னைக் கேட்ட கேள்வியையே அவரையும் கேட்டேன், பதில் சொல்ல, நேற்றுப் போய்விட்டு, இன்று வந்திருக்கிறார்" என்றாள் ஹேமாவின் தாயார், ஊஞ்சலை விஷயமாக லேசாக உந்திவிட்டுக் கொண்டே,

"காபி கொண்டுவரச் சொல்றேன்" என்று ஹேமா, பின் அறைத் திரைக்கப்பால் மறைந்து தப்பித்துக் கொண்டாள்.

கோப மேகங்கள் என்னுள்ளே மூண்டு எழுந்தன. இடித்து மோதின.

"நான் கேட்ட கேள்வி தெரியுமே! அதற்கு நீ அன்று சொன்ன பதிலைச் சொல்லு மறுபடியும்" என்றாள் ஹேமாவின் தாயார் விஷமப் புன்சிரிப்பு கடைவாயில் தவழ,

வயதுக்கு ஏற்காத கேள்வி! வயதுக்கு ஒவ்வாத விஷயம்! வயதுக்கு ஒவ்வாத புன்சிரிப்பு அது! அது________________




ஓஹோ எற்கனவே நடந்துவிட்ட சம்பாஷனைதானா. என்று எண்ணினேன்.

வழியொடு போகிறவர்கள், வருகிறவர்களையெல்லாம் - கேள்வி கேட்டு மடக்கியடிக்குமாம் ஒரு ஸ்ஃபின்க்ஸ், அந்த மாதிரித் தன் வீட்டுக்கு வருகிறவர்களையெல்லாம் இரு. கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தாளோ இவள் ?

அந்த ஸ்ஃபின்க்ஸ் பாதிப் பெண்ணுருவும், பாதி மிருக உருவமும் கொண்டதாக இருந்ததாம்! இவள் பாதி மனுஷி, மறுபாதி ராட்சஸி ! கவர்ச்சிகரமான ராட்சஸிதான், சூர்ப்பனகை அழகியாக வேஷம் போடுகிறாள்.

ரவிவர்மா விஷயம் தெரிந்தேதான் மோகினியை வயதாகிக் கொண்டிருக்கும், அழகு அழிந்து கொண்டிருக்கும் ஒரு ஸ்திரீயாக, ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்துச் சித்தரித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். ஒரு உண்மையான உருவகம் அது, மோகினி இப்படித்தான் இருப்பாள்; மோகினிப் பிசாசு இப்படித்தான் மனிதன் மனத்தில் பற்றிக்கொள்ளும்,

“உங்களுக்குத் தெரியாதா? வயசாச்சே! வயசாகாத வாங்களைக் கேட்கிறீர்களே? எங்களுக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டாமா ?" என்று ஒரேடியாக விஷ யத்தைத் தீர்த்து விடலாமா என்று எண்ணினேன்,

“கற்றுத் தருகிறேன் வா" என்று பதில் சொல்லி விட்டாளானால் என்ன பண்ணுவது?

2 சந்திரசேகரன் சிந்திக்க அறியாதவன் அவன் தயங்க வில்லை, "பரிசுத்தமான இரண்டு உள்ளங்கள் ஒன்றுபடுவதே காதல் என்று 'பாடம்' ஒப்பித்தான்.

மிகவும் சுலபமான பதில், நான்கூட நேற்றே சொல்லி யிருக்க முடியும். -

உள்ளம் ஒன்றுபட்டுவிட்டால், உடலும் ஒன்றுபட்டுத் தானே ஆகவேண்டும்?

(பாவம்! மனிதன் எத்தனையோ பொய்களைச் சிருஷ்டித்துக் - கொண்டு அந்தப் பொய்களின் ஒளியிலே வாழ முயலுகிறான். அந்தப் பொப் இளிகளிலே இந்தக் காதலும் ஒன்று. இதற்குக்________________




கலைஞர்கள் பல தலைமுறைகளாக இலக்கியக் கலை மெருகு ஏற்றித் தந்திருக்கிறார்கள்,

காதல் என்பது உண்டாக இரண்டு உள்ளங்கள் தேவை. இரண்டு உடல் களும் தேவைதான். பரிசுத்தம் தேவை. ஒன்றுபடுதல் தேவை. பேஷ்!

அரசியலையும் பொருளாதாரத்தையுமே உண்மையென்று நம்பி வாழ முயலும் இன்றைய மனிதனுக்கு உள்ளங்கள் உண்டா? பரிசுத்தம் என்பது என்ன என்று தெரியுமா? அல்லது, தானின்றிப் பிறருடன் ஒன்றுபடுவது என்பது தெரியுமா?

இரவொரு சினிமாவும் நாளைக்கொரு சினிமா ராணியு மாகக் காலங்கடத்தும் இந்தக் காலத்து யுவன் சந்திரசேகரன் அவன் காதலைப்பற்றி அறியாதது என்ன?

கோபம் என்னுள்ளே தீயாக மூண்டெழுந்தது.

"பரிசுத்தமான உள்ளங்கள் என்று இன்று உலகில் உண்டா? என்று கேட்டேன். அ திடுக்கிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான் சந்திரசேகர், நான் கேட்டது அவனுக்கு புரியவில்லைதான். எப்படிப் புரியும் ?

"தூய உள்ளம் என்பதும், மற்ற எத்தனையோ தூயங்களைப் போல, ஒரு கட்டுக்கதைதான்" என்றேன் நான். "பரிசுத்தத்திலோ உள்ளங்களிலோ எத்தனை பேர் இந்தக் காலத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் இருக்கிறார்கள். உனக்கே நம்பிக்கையுண்டோ சொல்லு என்றேன்,

"சரியான கேள்வி" என்று என்னை ஆமோதித்தாள் ஹேமாவின் தாயார்,

என்னை ஆமோதிப்பவர்களைக் கண்டால் எனக்கு என்றுமே பிடிக்காது. சூர்ப்பனகை ராட்சஸி என்று என் மனத்திற்குள் சொல்லிக்கொண்டேன்,

- "உடல் ஒன்று சேர முயற்சிக்கலாம். ஆனால் உள்ளங்கள் ஒன்று சேருவதாகச் சொல்லுவது வெறும் புரட்டு. பொய்" என்றேன் தொடர்ந்து. 3

"காதல் என்பது ஒரு புனிதமான உணர்ச்சி" என்றான் சந்திரசேகரன்,________________




"வெறும் வார்த்தைகள்" என்றேன். 'புனிதம் என்பது நம்பிக்கை வைக்க மனிதகுலம் மறுத்து இப்போது பல தலைமுறை கனாகிவிட்டன" என்றேன்.

நாஞ்சலாடுவதை நிறுத்திவிட்டு நான் சொல்லுவகை கவனமாகக் கேட்டான். ஹேமாவின் தாயார். அரக்கிதான் அவள் சந்தேகமில்லை அசுரகணத்தவள்!

அவள் கழுத்தைப் பிடித்து நெறித்துவிட வேண்டும் என்று கைவிரல்கள் துடித்தன,

அவள் கழுத்திலே அழகு இன்னமும் குடியிருந்தது. நாலு விரல் வைத்து அழுத்த இடமிருந்தது. குரல் வளையைப் பிடித்தால்,

"காதல் என்பது வெறும் அசட்டுக் கற்பனையா? குருட்டு நம்பிக்கைதானா?" என்றான் சந்திரசேகரன்,

"காதல் என்பதை நம்பித்தான் எல்லாக் கவிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள், தங்கள் காவியங்களுக்கு உயிர் தந்திருக்கிறார்கள். உலகத்திலேயுள்ள பல புரட்டுகளில் இந்தக் காதல் என்கிற புரட்டும் ஒன்று."-

"சபாஷ்" என்று சொல்லிவிட்டு சூர்ப்பனகை மீண்டும் ஊஞ்சலை உந்தி ஆட்டிவிட்டாள்.

சந்திரசேகரன் பதில் சொல்லவில்லை.

நானே தொடர்ந்தேன்: “காலம் என்கிற ஒன்றைப் போலக் காதல் என்பதும் நாமாக, நமக்காக என்று சிருஷ்டித்துக் கொண்டுவிட்ட ஒரு பொய். அந்த பொய்யின் உதவியில்லாமல் வாழ்வே சாத்தியமில்லை போலத் தோன்றுகிறது. இலக்கியத்தில் மட்டும் 'நிஜமாக" இருந்த ஒரு கானல்நீரை எடுத்து நாம் நீர்நிலையாக மாற்றிக் கொள்ள முயன்று ஏமாறுகிறோம்!"

சந்திரசேகரன் திணறினான் என்பது தெரிந்தது எனக்கு. புரிந்து கொள்ளவே திணறினான்,

| "உலகத்திலுள்ள இன்பங்கள் எல்லாமே உண்மையானவை என்று நான் நம்புகிறேன். அவற்றிலே காதல் இன்பம் தலையாயது என்றும் நான் கருதுகிறேன். என்னுடன் பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது" என்றான் சந்திரசேகரன்,________________




"ஆடுகளுக்குத் தழை தின்பது இன்பம் தருகிற விஷயம், அதேபோல் மனிதன் காதலிலே இன்பங்காணக் கற்றுக்கொண்டு விட்டான்" என்றேன் நான்,

"இன்பமேயில்லை என்று மறுக்கிறாயா நீ?"

“உடலின்பம் உண்டு, உண்டு, இல்லையென்று யார் (சொல்ல முடியும்? அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு இல்லாத காதலின்பத்தைச் சுவைப்பது முட்டாள் தனம் என்றுதான் சொல்லுகிறேன்" என்றேன், அழுத்தந்திருத்தமாக,

இதற்கு யாரும் பதில் தராததனால், நானே இரண்டு வினாடிக்கெல்லாம் தொடர்ந்து சொன்னேன்: "உலகத்துக் காவியங்கள் யாவும் கிட்டாத காதலைத்தான் வருணிக்கின்றன. கிட்டாத வரையில்தான் அந்த உணர்ச்சிக்காக காதல் என்கிற பெயர் தகும். ஹெலனை ஏற்றுக்கொள்ள விரும்பும் மெனிலாஸை அவளைப் பதிதை, தானாக இன்னொருவனுடன் ஓடிவிட்டவள் என்று அறிந்தே தோமர் ஏற்றுக்கொள்ள வைக்கிறார். மகரிஷியான வால்மீகிக்கு அது சாத்தியப்படவில்லை. சீதை பதிவிரதைதான் என்று தெரிந்திருந்தும் அவளை அக்கினிப் பரிட்சைக்கு உள்ளாக்குகிறான் ராமன் என்கிறார். இதற்கெல்லாம் விசேஷ அர்த்தங்கள் உண்டுதானே!" - இதற்கும் பதில் இல்லை.

இது "தற்காலக் கவி ஒருவர் சொல்லியிருக்கிறபடி-"

ஹேமாவின் தாயார் குறுக்கிட்டாள்: "எனக்குக் கவிதை பிடிக்கும். ஏதாவது கவி சொல்லுங்கள்” என்றாள்,

எனக்குக் கோபம் உள்ளே மூண்டது. "Does the imagination dwell the most

upon a woman won or woman lost என்று டபிள்யூ. பி.யேட்ஸ் என்கிற தற்காலக் கவி கேட்கிறார்."

"சுவியின் பதில் என்ன "

ஹேமாவின் தாயாரை நிமிர்ந்து பார்த்தேன் நான். "கவிகள் கடவுள், ஞானிகள் யாரும் தாம் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் தருவதில்லையே" என்று சொல்லிவிட்டு, நானும் அந்த வரிசையைச் சேர்ந்தவன்தான் என்று காட்டுவதற்கே போல, வாயை மூடிக் கொண்டேன்,________________




மௌனமானேன்.

பக்தனை பேசிவிட்டதே பைத்தியக்காரத்தனம் என்றா எண்ணினேன். எனக்கென்னவோ பேசத் தொடங்கிவிட்டான், நிறுத்த மனம் வருவதே கிடையாது. வார்த்தைகள் தான் கோடிக்கணக்கில் இருக்கின்றனவே! எல்லா வார்த்தைகளையா உச்சரித்துப் பார்த்துவிட வேண்டும்போல எனக்கிருக்கும்.

கோமா உன்னை ஏன் கெட்டிக்காரர் என்று சொல்வனம் கிறான் என்று இப்போதுதான் தெரிகிறது" என்றாள் வேறமாவின் தாயார், ஊஞ்சல் ஆடுகிற வேகத்தில் பட்டுப்புடவை ஓரம் அலைந்து உள்பாவாடையின் வெள்ளை வரம் தெரிய.

எங்கள் 'காதல் சம்பாஷணை' முடிந்துவிட்டது என்று அறிந்து கொண்டவள்போல (ஹேமா எங்கள் மூவருக்கும் அந்தச் சமயம் பார்த்துக் காபி கொணர்ந்தாள், ( அவள் கதவுக்கப்பால் நின்றிருந்தாளானால் நாங்கள் பேசியதெல்லாம் நிச்சயமாக அவள் காதிலும் விழுந்திருக்கும், வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் இருந்திருப்பாள் அவள்.

ஹேமா சூடான, ஆவி பறந்த காபியை என் கையில் தந்தபோது அதைக் கைநீட்டி, வாங்கிக்கொண்டேனே தவிர, நான் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை, யாருடைய முக பாவமும் அப்படியொன்றும் சட்டென்று உண்மையைச் சொல்லிவிடுவதில்லை என்பது எனக்குத் தெரியும்,

ஹேமாவினுடைய உள்ளம் பரிசுத்தமானதுதானா? என் உள்ளம் பரிசுத்தமானதுதானா? எங்கள் உடல்கள் கூடப் பரிசுத்த மானதாக இருக்கும் என்று நம்ப எனக்குத் தைரியம் இல்லை ,

பாபத்தில் பிறந்து, பாபத்தில் வாழ்ந்து, பாபத்திலே இறப்பவர்கள் மனிதர்கள் என்று அவர்கள் பாபத்தைப் போக்க வந்து தியாகம் செய்தான் ஏசுகிறிஸ்து. புத்தன் அன்பு அடிப்படை தேடினான். குரு குங் உறவுமுறை கிளர்த்தினான். வார்த்தைகளின் ஓய்வே வார்த்தைகளின் முடிவு என்றும், செயலில்லாமையே செயலின் முடிவு என்றும் வற்புறுத்தினான் குரு லாவ், எத்தனையோ மதங்கள் எத்தனையோ அடிப்படைகள்,

மத அடிப்படை போகட்டும், மனோதத்துவ அடிப்படை இன்று பலர் நம்புகிற அந்த மனோதத்துவ அடிப்படை என்ன சொல்லுகிறது ?________________




பிறந்த குழந்தை தாயிடம் பால் சாப்பிடும்போது விஷம் மனத்துடன் தான் பால் சாப்பிடுகிறது என்கிறான் ஃப்ராய்ட்

இந்த அழகிலே பரிசுத்தம் பேசி என்ன பயன் ? பரிசுத்தம் என்பதற்கு அர்த்தம் என்ன ?

உடல் சேர்க்கையை நாடியே எல்லா உடல்களுமே உயிர் பெற்றிருக்கின்றன என்கிற அளவில் ஸிக்மண்ட் ஃப்ராய்ட் நமக்கு இன்றையத் தத்துவத்தை நிர்மாணித்து விட்டான். அதை நம்ப ஆதாரம் இருப்பதுபோலவே இருக்கிறது.

இந்த அழகில் பரிசுத்தம் என்பதை அளவிட, பாலில் தண்ணீர் விட்டிருப்பதை அளவிடக் கருவி ஒன்று இருப்பது போல, ஒரு கருவி இருந்தால்தான் நல்லது.

"காபி சாப்பிடுங்கள்! ஆறிவிடும்" என்ற ஹேமாவின் குரல் என் சிந்தனைகளில் குறுக்கிட்டது.

என் கையில் காபி இருப்பதை நான் உணர்ந்தேன். ஒரு சொட்டு காபி சிந்தி, என் சட்டையில் கறையாக்கி விட்டது.

பரிசுத்தத்தின் மறுப்புத்தானே கறை? நிமிர்ந்து ஹேமாவைப் பார்த்தேன்.

அவள் என்னைப் பார்த்த பார்வையைக் காதல் பார்வை என்று சொல்லுவது பொருந்தும்தான். என்னிடம் இல்லாத ஒன்றைக் கண்டு, அதற்காக அவளிடம் இல்லாத ஒன்றைத் தரத் தயாராக இருந்தாள் அவள் என்று அப்பார்வை எனக்கு அறிவுறுத்தியது.

காதலில் நம்பிக்கையேயற்ற என்னிடம் காதலை வைத்து பாவம் அவள் என்ன இன்பத்தைக் கண்டுவிடப் போகிறாள்? ஆனாலும் அவளைத் தடுக்க நான் யார்?

இல்லாத ஒன்றில் ஈடுபட நானும் தயார்தான். உலகத்தோடு ஒட்டி வாழ்வதுதான் மிகவும் சுலபம்!

காதல் என்பது ஒரு கவர்ச்சி உண்மையல்லாது, நிலைத்து நிற்காத, புலனுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட, தவிர்க்க முடியாத ஒரு பிணைப்பு உணர்ச்சியைக் காதல் என்கிறோம். ஆணும் பெண்ணும் உணரும் கவர்ச்சியைக் காதல் என்றும், ஆணும் ஆணும் கவரப்பட்டால் அதை நட்பு என்றும், கடவுள்________________




என்ற இல்லாத ஒன்றிடம் சுவர்ச்சி பெற்ற மனிதனைப் பக்க வசப்பட்டவன் என்றும் சொல்லுகிறோம். காதல், நட்பு, பக்டு 87ல்லாம் ஒருவிஷயத்தின் மாறுபட்ட பல பெயர்கள்,

ஹேமாவை நான் கவர்ச்சியான ஓர் உருவமாக உணரு கிறேன். அதுதான் காதலா?

அதுதான் காதல் என்று அவன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது போலவே தோன்றுகிறது.

சூர்ப்பனகை என்ன ஆவது?

அவளைத் தேடியும் என்னால் வரமுடிந்ததே! அனக மான்னவென்று சொல்லுவது அவள் கவர்ச்சியை என்னவென்று சொல்லி எப்படி விவரிப்பது?

ஹேமா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தாள்.

காபியைச் சாப்பிட்டுவிட்டு, கப்பை சிறு மேஜைமேல் வைத்துவிட்டு என் கைகள் இரண்டையும் அப்போதுதான் புதுசாகப் பார்ப்பவன்போலத் திருப்பித் திருப்பிப் பார்த்தேன்,

எனக்குக் கைகள் இருந்தன, ஒரு கலைஞனின் கை விரல்கள் இருந்தன,

அவளுக்கு, அந்தச் சூர்ப்பனகைக்கு, அழகான கழுத்திருந்தது, ,

சூர்ப்பனகையிடமிருந்து இந்த ராமனைக் காப்பாற்ற இடிவர லட்சுமணனோ இல்லை , .

என் கையேதான் எனக்கு உதவி செய்தாக வேண்டும், இதோ என் கைகள் ! ஹோவென்று ஒரு இரைச்சல் என் காதை நிரப்பியது.

என் கைகளையும், எதிரிலிருந்தவனையும் மாறிமாறிப் பார்த்தேன்,

ஹேமாவும் அதே அறையில்தான் இருந்தாள். அவள் அந்த ஐந்தாறு வினாடிகள் என் கண்ணில் பட்டதாகவே எனக்குத் தெரியவில்லை .

கைகளிலேதான், விரல்களுக்கு ஊடே எத்தனை ரத்தம் பிறீட்டு அடித்தது ! அந்தக் கழுத்துத்தான் எத்தனை அழகாகத் தெரிந்தது! அந்த அழகான பல் வரிசை! வெற்றிலைக் காவி
படிந்த உதடுகள் லேசாகத் திறக்க, தலைமயிரில் இள நரை ஓடி, வயதாகிக் கொண்டிருந்ததைக் காட்டிய நடு உடல் பருமனுடன் அந்த உடல், உயிர் பிரியும் தருவாயில் எப்படித் தவித்தது!

நிமிர்ந்து பார்த்தேன், ஊஞ்சலில் காணவில்லை அவளை! கைகளைப் பார்த்தேன். ஒரே ரத்தம்! எழுந்து ஓடிவிட்டேன். போலீஸ் ஸ்டேஷன் எங்கிருந்தது என்று தெரியும் எனக்கு.

"The multitudinous seas incarnadine" என்று மாக்பெத் பாடம் ஒப்பித்தேன், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம். ஏழு கடல்களும் ரத்தமாக ஓடுகின்றன என்றேன்,

போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்படி ஒன்றும் என்னை நம்பிவிடுவதாக இல்லை. வேங்கடநாராயணா ரோடு விலாசம் சொன்னேன். சைக்கிளில் ஆளை அனுப்பினார்.

என் கைகளில் ரத்தம் தோய்ந்து கசகசவென்று காய்ந் திருந்ததே! என் கை ரத்தம் ஏன் அவருக்குத் தெரியவில்லை?

அவள் உடல் என் கைகளுக்கிடையில் கழுத்தைத் தந்து விட்டு எப்படித் துடித்தது என்று தத்ரூபமாக விவரித்தேன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முகத்தில் நம்பிக்கையே வரவில்லை. ( சைக்கிளில் போன போலீஸ் காரன் வந்தான், தன் பொட்டில் கைவைத்து, "பைத்தியம்" என்றான். | இன்ஸ்பெக்டர், “அரைமணி உன்னால் வீண், போடா சோமாறி, வீட்டுக்கு” என்றார்,

வீட்டு விலாசத்தை மட்டும் கேட்டுக் குறித்துக் கொண்டார். .




11

ரத்தமும் கையுமாக வீடுவந்து சேர்ந்தேன்.

ருக்குவினாலும் என் கையில் ரத்தத்தைக் காண இயல் வில்லை . 1

- "ஹேமா அழகாகத்தான் இருக்கிறாள் அண்ணா , கல்யாணம் செய்து கொண்டு விடு. மன்னியை எனக்குப் பிடித்துவிட்டது.” என்றாள் ருக்கு.________________




என்ற இல்லாத ஒன்றிடம் கவர்ச்சி பெற்ற மனிதனைப் பக்தி வசப்பட்டவன் என்றும் சொல்லுகிறோம். காதல், நட்பு, பக்தி எல்லாம் ஒருவிஷயத்தின் மாறுபட்ட பல பெயர்கள்,

ஹேமாவை நான். கவர்ச்சியான ஓர் உருவமாக உணரு கிறேன், அதுதான் காதலா?

அதுதான் காதல் என்று அவள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது போலவே தோன்றுகிறது.

சூர்ப்பனகை என்ன ஆவது?

அவளைத் தேடியும் என்னால் வரமுடிந்ததே! அதை என்னவென்று சொல்லுவது? அவள் கவர்ச்சியை என்னவென்று சொல்லி எப்படி விவரிப்பது?

ஹேமா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தாள்.

காபியைச் சாப்பிட்டுவிட்டு, கப்பை சிறு மேஜைமேல் வைத்துவிட்டு என் கைகள் இரண்டையும் அப்போதுதான் புதுசாகப் பார்ப்பவன்போலத் திருப்பித் திருப்பிப் பார்த்தேன்.

எனக்குக் கைகள் இருந்தன. ஒரு கலைஞனின் கை விரல்கள் இருந்தன.

அவளுக்கு, அந்தச் சூர்ப்பனகைக்கு, அழகான கழுத்திருந்தது.

சூர்ப்பனகையிடமிருந்து இந்த ராமனைக் காப்பாற்ற ஒடிவர லட்சுமணனோ இல்லை.

என் கையேதான் எனக்கு உதவி செய்தாக வேண்டும். ) இதோ என் கைகள்!

ஹோவென்று ஒரு இரைச்சல் என் காதை நிரப்பியது.

என் கைகளையும், எதிரிலிருந்தவளையும் மாறிமாறிப் பார்த்தேன்,

ஹேமாவும் அதே அறையில்தான் இருந்தாள். அவள் அந்த ஐந்தாறு வினாடிகள் என் கண்ணில் பட்டதாகவே எனக்குத் தெரியவில்லை ,

கைகளிலேதான், விரல்களுக்கு ஊடே எத்தனை ரத்தம் பிறீட்டு அடித்தது! அந்தக் கழுத்துத்தான் எத்தனை அழகாகத் தெரிந்தது! அந்த அழகான பல் வரிசை! வெற்றிலைக் காலி________________




"நீ எங்கே பார்த்தாய் அவளை?" என்று கேட்டேன்.

"அவளும் அவள் அம்மாவும் சற்றுமுன் வந்து அரை மணி இருந்துவிட்டு இப்பத்தான் போகிறார்கள். உன்னைப் பற்றி இருவரும் பேசினார்களோ, பேசினார்களோ அப்படிப் பேசினார்கள். அந்தப் பெண் உன்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாளாம். உன்னைக் கண்டதும் முதலே, சுமார் இரண்டு வருஷமாகவே அவள் தன் வீட்டில் உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பாளாம்.” என்று ருக்கு மடமடவென்று பேசினாள்.

உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், என்னால் சூர்ப்பனகையைத் தீர்த்துக்கட்ட இயலவில்லை.

நான் ராமன். லட்சுமணன் அல்லன்.

ஓடிய ரத்தமும், துவண்டு துடித்த உடலும் ஹேமாவுக்கு தான் எழுதிய கடிதம் போலவே கற்பனைதான்.

ஆனால் மனிதனுடைய வாழ்விலே எது கற்பனை, எது நிஜம் என்று யார் தீர்மானித்துச் சொல்லிவிட முடிகிறது?

உண்மை என்பதற்கும், பொய் என்பதற்கும் இடையே உள்ள தடுப்பு, திரை, கோடு, மிகவும் மெல்லியது; மென்மையானது. அதனால்தான் மனிதன் உண்மைக்கும் பொய்க்கும் இடையே இப்படி ஊசலாடி வாழமுடிகிறது.

- நான் சூர்ப்பனகையைக் கொன்றுவிட்டேன் என்பதும் உண்மைதான்,

இப்போதெல்லாம் ஹேமாவின் தாயின் நிழல் எனக்குச் சூர்ப்பனகை உருவமாகக் காட்சியளிப்பதில்லை, கற்பனையில்,

சூர்ப்பனகை அன்றோடு இறந்துவிட்டாள் என்றுதானே அர்த்த ம்?

என் கையில் படிந்திருந்த ரத்தத்தைப் போலீஸ் இன்ஸ் பெக்டரோ, ருக்குவோ காண மறுத்தார்கள் என்றாலும்கூட நான் கொலைகாரன்தான், என் கைகள் ரத்தத்தில் தோய்ந்தவைதான்.

சூர்ப்பனகை இன்று இல்லாமையே அவள் கொலை யுண்டு விட்டாள் என்பதற்குப் போதுமான சாட்சியமல்லவா?

சூர்ப்பனகை இல்லை, ஹேமாவின் தாயார் மட்டும் இருக்கிறாள்,________________




ஹேமாவைப் பற்றித்தான் என் நினைப்பெல்லாமே தவிர, ஹேமாவின் தாயைப் பற்றி எனக்கென்ன கவலை!

அசுரகணம் எங்கு எப்படி வேண்டுமானாலும் தலை விரித்தாடட்டும். இனி என்னைப் பாதிக்காது. ஒரு வீரச் செயல் அது கற்பனையில்தான் என்றாலும் வீரச்செயல்தானே செய்து நான் மீண்டெழுந்துவிட்டேன்.

ருக்கு தனக்கு ஹேமாவைப் பிடித்திருக்கிறது என்று சொன்ன அன்றைக்கே என் கல்யாணம் நிச்சயமாகிவிட்ட மாதிரித்தான்.

அப்பா என் சம்மதத்தைக் கேட்டபோதெல்லாம், "நான் பரிட்சைக்குப் படிக்கிறேன் அப்பா" என்றேன்,

ருக்குதான், "அண்ணாவுக்குச் சம்மதம்தான்" என்று எனக்காகச் சொன்னாள்.

கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு நான் வேங்கடநாராயணா ரோட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டேன், போவது சரியல்ல என்று அப்பா சொன்னார். அப்படித்தான் எனக்கும் தோன்றிற்று.

ஹேமாவின் நினைவுகள் தினமும் என்னை நரகத்துக்கும், சொர்க்கத்துக்கும் இட்டுச் சென்றன வழக்கம்போல.

வழக்கம் போல் படிப்பு நடந்தது.

பி.ஏ.யில் நான் அந்த வருஷத்தியப் பட்டியலில் இரண்டு ஸப்ஜெக்ட்களில் முதலாவதாகத் தேறினேன்,

ஹேமாவும் தேறிவிட்டாள். பிறகுதான் கல்யாணம்.

நான் சாதாரண மனிதனாகி விடுவதற்குச் செய்த முயற்சிகள் என் வரையில் பலித்துவிடும் போலத்தான் இருந்தது.

இப்போதெல்லாம் மனிதன் மனிதன் என்று ஏதாவது ஒரு சிந்தனையைத் துரத்திக் கொண்டு நான் ஓடிக்கொண்டிருப்ப தில்லை, கால் வலிக்க நடை, நடையென்று போவதுமில்லை, அதற்கு மாறாக வீட்டிலே உட்கார்ந்து ருக்கு சொல்லுவதை எல்லாம் கேட்கப் பழகிக் கொண்டேன். )________________




“ஹேமா சொல்லுவதைக் கேட்கப் பழகுவதற்கு இது ரிஹர்ஸல்" என்று ருக்குவே என்னைப் பல தடவைகளில் கேலி

, செய்கிறான், இருந்தும் எனக்குக் கோபம் வருவதில்லை

அவளும் ஹேமாவும் அடிக்கடி சந்தித்து என்னைப் பற்றிப் பேசிக்கொள்ளுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்வார்களோ, அது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

ஒருநாள் கல்யாணத்துக்குத் தேதி வைத்த பிறகு நடந்தது இது. கல்யாணத் தேதிக்கு இன்னும் இருபது நாள் இருந்தது, ருக்கு சிரித்துக் கொண்டே வந்தாள்.

"என்ன இப்படிச் சிரிப்பு" என்று கேட்டேன்.

“ஹேமா உன்னுடைய காதல் தத்துவப் பேச்சுப் பற்றிச் சொன்னாள். அவள் அம்மாவோடும், சந்திரசேகர் என்கிற வாலிபனோடும் விவாதம் செய்தாயாமே, உனக்குக் காதலில் நம்பிக்கையே இல்லாத மாதிரி” என்றாள் ருக்கு. இ ருக்குவும் காதல் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டாளா? சூர்ப்பனகை நிழல் அங்கும் ஒளிந்திருக்கிறதா என்று தூக்கி வாரிப் போட்டது. .

"அதைப்பற்றி என்ன இப்போது" என்று முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு கேட்டேன்.

"உன் பேச்சிலே காதலில் நம்பிக்கையில்லாத மாதிரி தொனித்தாலும் நீ காதலில் நம்பிக்கை வைத்திருப்பவன் என்பது பின்னாடி தெரிந்ததாம் ஹேமாவுக்கு!"

“அதுவா? நீ வீட்டை விட்டு ஓடிப்போய், உன் காதலியை உனக்குக் கல்யாணம் பண்ணித்தர மறுத்த உன் காதலியின் தாயைக் கொன்று விட்டதாகப் போலீஸ் ஸ்டேஷனில் போய்ச் சரண் அடைந்தாயாமே! கதை மாதிரி இருக்கிறது!" என்று கூறிச் சிரித்தாள் ருக்கு.

அட ஈஸ்வரா? அதுவும் தெரியுமோ ஹேமாவுக்கு என்று முதலில் தோன்றியது. பிறகுதான் போலீஸ்காரன், சைக்கிளில் ஏறிக்கொண்டு என் காதலின் தூதுவனாகப் போயிருக்கிறான் என்று தெரிந்தது. வெட்கக்கேடுதான்!!________________




கல்யாண தினத்தன்று காலையிலிருந்து எங்கள் வீட்டி லேயே நாதசுரக்காரன் வெளுத்து வாங்கத் தொடங்கி விட்டான்.

எனக்கோ சாவு நினைவுகளாகவே வந்து மண்டிக் கொண் டிருந்தன.

அன்று போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று வந்தபிறகு என் கல்யாண தினத்தன்றுதான் நான் ஹேமாவின் தாயாரைப் பார்க்கிறேன்,

ஹேமாவும் நானும் கையைக் கோத்துக்கொண்டு, கழுத்தில் மாலைகளுடன், அவள் தாயாருக்கும் நமஸ்காரம் செய்யப் போனோம்.

முன்னைக்கு இப்போது இளமையுடன் காட்சியளித்தாள் ஹேமாவின் தாயார் "பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம். தாயின் சந்தோஷத்தை வர்ணிக்க முடியுமா? என்று கேட்டார். விசுவநாதன்,

என் கலைஞனின் விரல்கள் துடித்தன. குனிந்து பார்த்தேன்.

நல்லவேளையாக ஹேமா என் கைவிரல்களைக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஹேமாவின் தாயாரின் கழுத்திலே நாலு விரல் ஊன்ற இடம் இருந்தது. எத்தனை ரத்தம்? எத்தனை துடிதுடித்தது அவ்வுடல் பிராணனை விடுமுன்!

ஹேமாவின் தாயார் ஹேமாவின் தாயாராகவே இருந்தாள். பக்கத்தில் நிழல் இல்லை. சூர்ப்பனகை அன்றே இறந்து விட்டாள்!

கல்யாணத்துக்கு விருந்தினனாக அந்தக் காதல் தூதன், சைக்கிள் போலீஸ்காரன் வந்திருந்தான், அவன் ரகசியமாக, "நான் பெரிய அம்மாவிடம் சொல்லவேயில்லை. சின்னம்மாவிடம்தான் பக்குவமாகச் சொன்னேன். அவ்வளவு தெரியாதுங்களா எனக்கு?" என்று கண்ணைச் சிமிட்டினான் அவன்.

தான் காதல் தத்துவத்தைப் பூரணமாக அறிந்தவன் என்கிற நினைப்பு அவனுக்கு.

அவன் நினைப்புப் பொய் என்று சொல்ல நான் யார்?________________




கல்யாண தினத்தன்று காலையிலிருந்து எங்கள் வீட்டி லேயே நாதசுரக்காரன் வெளுத்து வாங்கத் தொடங்கி விட்டான்.

எனக்கோ சாவு நினைவுகளாகவே வந்து மண்டிக் கொண் டிருந்தன.

அன்று போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று வந்தபிறகு என் கல்யாண தினத்தன்றுதான் நான் ஹேமாவின் தாயாரைப் பார்க்கிறேன்,

ஹேமாவும் நானும் கையைக் கோத்துக்கொண்டு, கழுத்தில் மாலைகளுடன், அவள் தாயாருக்கும் நமஸ்காரம் செய்யப் போனோம்.

முன்னைக்கு இப்போது இளமையுடன் காட்சியளித்தாள் ஹேமாவின் தாயார் "பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம். தாயின் சந்தோஷத்தை வர்ணிக்க முடியுமா? என்று கேட்டார். விசுவநாதன்,

என் கலைஞனின் விரல்கள் துடித்தன. குனிந்து பார்த்தேன்.

நல்லவேளையாக ஹேமா என் கைவிரல்களைக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஹேமாவின் தாயாரின் கழுத்திலே நாலு விரல் ஊன்ற இடம் இருந்தது. எத்தனை ரத்தம்? எத்தனை துடிதுடித்தது அவ்வுடல் பிராணனை விடுமுன்!

ஹேமாவின் தாயார் ஹேமாவின் தாயாராகவே இருந்தாள். பக்கத்தில் நிழல் இல்லை. சூர்ப்பனகை அன்றே இறந்து விட்டாள்!

கல்யாணத்துக்கு விருந்தினனாக அந்தக் காதல் தூதன், சைக்கிள் போலீஸ்காரன் வந்திருந்தான், அவன் ரகசியமாக, "நான் பெரிய அம்மாவிடம் சொல்லவேயில்லை. சின்னம்மாவிடம்தான் பக்குவமாகச் சொன்னேன். அவ்வளவு தெரியாதுங்களா எனக்கு?" என்று கண்ணைச் சிமிட்டினான் அவன்.

தான் காதல் தத்துவத்தைப் பூரணமாக அறிந்தவன் என்கிற நினைப்பு அவனுக்கு.

அவன் நினைப்புப் பொய் என்று சொல்ல நான் யார்?________________




அது எப்படியானாலும் அவன் திருப்தியைக் கெடுப்பா னேன் நான். தவிரவும் ஒரு கல்யாணச் சாப்பாடு கிடைத்து விட்டது அவனுக்கு. அவன் செய்த காரியத்தால், அதுவும் திருப்திப்பட வேண்டிய விஷயம்தானே?

எனக்கும் என் செயல்கள் சிந்தனைகளால் இப்படிப்பட்ட சுலபமான திருப்திகள் ஏற்பட்டுவிடுமானால் நல்லது என்றுதான் தோன்றுகிறது. முடிவில்லாத சிந்தனைகளால் என்ன லாபம்?

ஒவ்வொரு செயலும் ஒரு கல்யாணச் சாப்பாடு போன்ற திருப்தியான விஷயத்தில் முடியவேண்டும். அதுதான் நல்லது.

ஓய்ந்திருந்த நாதசுரக்காரன் மீண்டும் தொடங்கி விட்டான்.

ஹேமாவின் கண்களிலும் நீர் நிறைந்ததைக் கண்ட நான், “ஏன்?” என்று ரகசியமாகக் கேட்டேன்.

“அப்பா இல்லையே என்று நினைத்தேன்” என்றாள் ஹேமா. அவளுக்கும் நாதசுரம் ஒரு சாவைத்தான் நினைவுபடுத்தியது என்பது தெரிந்தது.

“எனக்கு அம்மா இல்லை” என்றேன்.

"அந்த வாக்கியத்துடன் என் தோல்வி எனக்குப் புரிந்து விட்டது, சூர்ப்பனகையைக் கொல்ல முயன்று உழன்றது போக, அவளை என் தாயாகவும் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டேன் நான்.

- அசுரகணம் விருத்தியாகாமல் என்ன செய்யும்!

ஓ ராமா! ஓ லட்சுமணா! அலரற்பதில் குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள் !