Pages

Saturday, May 26, 2018

பாட்டிமார்களும் பேத்திமார்களும் - ஜெயகாந்தன் :: முன்னுரை & இந்தப் பின்னணியில்...




முன்னுரை
சில ஆண்டுகளுக்கு முன் தினமணி கதிர் பத்திரிகையில் 'இந்த நேரத்தில் இவள்' என்ற தலைப்பில் நான் எழுதிய நாவலின் தொடர்ச்சியே இந்தப் 'பாட்டிமார்களும் பேத திமார்களும்' ஆகும் .
தொடர்ச்சி என்றால் அந்தக் கதை முடிந்த இடத்தில் அது தொடர்கிறது என்று அர்தத மல்ல. அது ஒரு தலைமுறையைச் சேர்ந்த கதை. அதைத் தொடர்ந்து வருகிற அக்கதை மாந்தர் உள்ளிட்ட, மே லும் சில புதுப் பாத்திரங்கள் அடங்கிய இன்னொரு தலை முறையின் கதை இது. - இதனை ஏன் நான் ஒரே கதையாக எழுது வில்லை என்பதற்கு எவ்வளவோ காரணங்கள் : இருக்கின்றன. பத்திரிகைகளில் எழுத ஒப்புக் கொள்கிற போது உத்தேசமாக இத்தனை லாரங் கள் வரும் என்று நான் சொல்லித்தான் எழுத நேர் கிறது. அநேகமாக எல்லா நாவல்களும் எதிர் பார்க்கப்பட்ட வாரங்களுக்கு ஓரிரு இதழ்கள் அதிகமாகவே எழுத நேர்ந்து விடுவதும் உண்டு, அவ்விதம் முடி சுகிறபோது நான் எழுத எடுததுக் கொண்ட கதையும் கதை மாந்தரும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கையில் நானே வலிய கதை முடிவுக்காக ஓரிடத்தில் நிறுத்தி விடுகிறேன்,________________


அதிலிருந்து இன்னொரு கதை தொடர்கிறபோது கதைக் களனையும், மாந்தர் தம் பெயரையும் மாறறி முன்னதற்குச் சம்பந்தமற்றது போல் தோற்றம் தருமாறு ஒரு 'புதுக் கதை' எழுதுவது இதனளவில் பொருத்தமற்றுத் தோன்றியதால் தனித் தனிக் கதைகளாக எழுதியும் இவற்றின் ஊடே ஒரு தொடர்பு ஏற்படுத்தலாம் என யோசித்தேன்.
மகுடேசன் பிள்ளையின் முதல் மனைவியின் மரணத்தில் தொடங்கி-மகுடேசன் பிள்ளையின் மரணம் வரை ஒரு கதையாக முதல் பகுதியை எழுதினேன். இந்த இரண்டாவது கதை கல்கியில் வெளியாயிற்று.
பாட்டிமார்களும் பேத்திமார்களும் மகுடே சனது மகனின் வளர்ப்பிலும், அவனது காலச் சூழ்நிலையிலும் சென்று ஓரிடத்தில் முடிகிற போது இன்னும் ஒருபகுதி எழுதவேண்டும் என்று உணர்த்திற்று. அதன் விளைவாக 'அப்புவுக்கு ' அப்பா சொன்ன கதைகள்' தினமணி கதிரில் பின்னர் வெளிவந்தது.
'இவை மூன்றும் தனித் தனிக் கதைகளும் ஒன்றோடு ஒன்று சொந்தம் கொண்டவைகளும்________________


ஆகும். எனினும் இதன் முதற் கதையை எழுதத் தொடங்கியபோது இவ்வாறு நான் திட்டமிட. வில்லை என்பதைச் சொல்லிவிட வேண்டும். ஒரு செயலின், பயனின், அனுபவத்தின் விளைவாக இன்னொன்று அதிலிருந்து தொடர்வது சூழ் நிலைகளின் விளைவுதான்,
சொந்தங்கள் எதுவும் அப்படித்தான். நமது வசதிக்கும் விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப அதை நாம் பாராட்டுகிறோம்; அல்லது ஒதுக்குகிறோம். | நாம் பாராட்டி ஏற்றுக் கொண்டாலும், வெறுத்து ஒதுக்கினாலும் அவை இருக்கின்றன என்பது போல்-இந்த மூன்று கதைகளுக்கும் ஒரு சொந்தம் உண்டு என்பதற்காகத்தான் இதைச் குறிக்க நேர்கிறது. அதனதன் அளவில் அவை தனித்தனிக் கதைகளே! பத்திரிகைகளின் காண்டு தலாலும், படிக்கிறவர்களின் எதிர்பார்ப்புகளி னா லும், ஆழமான நோக்கமும் பயனும் கருதி எழுதப்படும் கதைகள் என்னுடையவை. அவற் றின் வடிவங்களும் வார்ப்புகளும் அந்த நிலைமை களுக்கு ஏற்பவே உருவாகின்றன. இந்தப் படிப் படியான வளர்ச்சியை எனது எல்லாக் கதை களிலும் கூட காண முடியும். எனினும் இந்த மூன்று கதைகளும் விசேஷமான தொடர்புடை பன. 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'________________


கூட இதன் இறுதிக் கதையல்ல. தொடர்ந்து, இடைவெளியற்றுச் செல்லுகிற வாழ்க்கை வெள்ளத்தை என து வசதிக்கேற்ப ஒரு பகுதியைச் சித்திரமாகத் தீட்டுகிற போது அதன் ஆரம்பமும் முடிவும் நான் காட்டுகிற ஆரம்பமும் முடிவுமா கவே இருக்க முடியுமா, என்ன?
இல்வா று தொடர்ந்து எழுதுவதற்குக் காரணம் வாழ்க்கை முடிவற்றதாய் இருப்பதே ஆகும். எனினும் ஒருகதை தொடக்கமும் முடிவும் பெற்றாக வேண்டும் என்பதால் இது அவ்வப் போது கதைகளில் 'சுபம்' சொல்லி முடிக்கப்படும் கிறது. இந்த நாவல் வரிசையில் அந்த வசதி இப்ப வும் நமக்கில்லாது போவது ரசமானதே!!
இதன் அடுத்த பகுதி 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்,' அதற்கு அடுத்த பகுதி எப்போ வருமோ? என்று எதிர்பார்க்கும் குறி புட ன் நிறுத்தப்பட்டுள்ள து. எனினும் இவை எனக்கு நிறைவைத் தருகின்றன.
இவற்றைத் தொடர்ந்து வெளியிட்ட பத்திரி, கைகளுக்கும் பதிப்பகத்தாருக்கும் எனது நன்றி உரியது.
த. ஜெயகாந்தன் சென்னை -78                                            25-3-80




பாட்டிமார்களும் பேத்திமார்களும்

இந்தப் பின்னணியில்...

*

இந்த மண்ணின் மனிதர்களுக்கு 'எலெக்டிரிஸிடியில் தேவையும் அவசியமும் தெரியா திருந்த காலம் அது. அந்த ஆதார சக்தியின் அறிமுகமே இல்லா திருந்ததால் | அதனைத் தொடர்ந்து வரும் சேதாரங்களும் இல்லா திருந்த காலம் அது. உரலும் உலக்கையும் மாடுகளும் மனித சக்தியும் கொண்டு அன்றாட வாழ்க்கை அழகிய தன்னம்பிக்கையோடு வாழ்வது அறியாமையென்றோ, போற்றத் தகுந்த எளிமை என்றோ எண்ணாத நாகரிகம் இறுமாந்திருந்த காலம் அது. இயற்கை உற்பாதங்களைக் கண்டு அஞ்சுவது போல் அழகாக ஒரு பாவனை காட்டிக் கொண்ட இந்த நாகரீகம் எல்வளவுதான் ஆற்றில் வெள்ளம் புரண்டாலும் அந்த ஆற்றின் கரையை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தது. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கடவுளைக் குல தெய்வமாக நிறுவி ஒவ்வொரு கோயிலிலும் ஒரு நம்பிக்கையைக் குடிவைத்த நாகரீகம் அது.

ஆற்றில் வெள்ளம் வந்து கரைபுரண்டு போகிறதாம். எல்லோரும் வேடிக்கை பார்க்கப் போயிருக்கிறார்கள். வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்த நேரத்தில் | இங் கொரு வெள்ளம் வடியப்போகிறது. இவ்வளவு | பிள்ளைகள் பெற்று இத்தனை பேரோடு வாழ்ந்து இந்த________________




10.

பாட்டி மார்களும் பேத்திமார்களும் நேரத்தில் இவள் கதி இப்படியா? அம்மா, மாமி, அத்தை, அண் ணி, பாட்டி என்று பலராலும் 'அடி.யே' என்று அனைவராலும் அழைக்கப்படுகிற இவளுக்கு அம்பிகை அம்மாள் என்று பெயர்.

அவளது பதினாலு வயதில்- மகுடேசன் பிள்ளை தமது பத்தொன்பதாவது வயதில் அம்பிகைக்கு மாலை யிட்டார். அவர் 2 த்தமன் என்று ஊரில் பேரெடுத்தவர். நடப்பதற்காக மட்டுமல்லாமல் அவர் வருவதைப் பிறருக்கு அறிவிப்பதற்காகவே அணிந்துள்ள அந்தப் பாதக் குறடு களின் ஓசை அந்த வீட்டு மக்களின் செவிக்குப் பழக்க மானது. அதைக் கேட்ட மாத்திரத்தில் கூடத்தில் குழுமி யிருக்கிற கும்பல் ஒரு நொடியில் சிதறும். அம்பிகை மட்டும் தயாராகக் கதவைத் திறந்து நிற்பாள்... அவர் சுதவைத் தட்டமாட்டார். அவருக்கு யார் வேண்டுமானா அம் சாப்பாடு பரிமாறலாம், பூஜைக்குச் சந்தனம் மட்டும் அவள் தான் அரைத்துத் தர வேண்டும். வருகிற அம்மா வாசைக்குப் பூஜைக்குச் சந்தனம் அரைத்துக் கொடுக்கத். தான் இருக்கப் போவதில்லை என்பது இவளுக்குத் தெரிந் இருக்கிறது... இவள் படுக்கையில் விழுந்த இந்தப் பதினைந்து நாட்களிலேயே அவரது முறுக்கு எவ்வளவோ தளர்ந்து போயிருக்கிறது.

அம்மா என்றாலும் எப்படிப்பட்ட அம்மா இந்த ! அம்பிகை. நாற்பத்தைந்து வயதுக்குள் நவக்கிரகங்களைப் பெற்றவள். ஒன்றுக்கு ஒன்று சோடை போகாத இழுபறி. சீமந்த புத்திரன் பெரியசாமி... பத்தொன்பது வய துக் குள்ளே பேரைக் கெடுத்துக் கொண்டான். ஒரு தாசியுடன் உறவு வைத்துக் கொண்டான். அதை அறுப்பதற்காக அல்லவோ அவனுக்குக் கலியாணம் செய்து வைத்தார்கள்.

குத்து விளக்கு மாதிரி மருமகள் மங்களம் நிற்கிறாள்... இவளை இப்படி நிறுத்தி வைத்து விட்டு அவன் அந்தத் தாசி வீட்டில் விழுந்து கிடக்கிறான். பாவம்! அவளைப் போய்த் தாசி என்று சொன்னால் போதுமா? அவளையும் -________________




இந்த அம்பிகை ஒரு சமயம் கோயிலில் பார்த்துக் பேசிய ருக்கிறாள்.... அவனுக்கு அம்பிகை அங்கேதான் இருக்க றாள். அதற்காக அவளைத் தள்ளி வைத்து விடுவதா இந்த வீட்டின் மேந்த புத்திரனை வாசற்படி மிதிக்கக் கூடாது என்று மகுடேசன் இட்டிருக்கிற உத்தரவை மாற்றித் தனக்குக் கொள்ளி வைப்பதற்காகவேனும் இப்போது அவனைக் கூப்பிட்டனுப்ப வேண்டும் என்று அம்மா விரும்புகிறாள்.

' இந்த வீட்டுப்பெண்களைப் பொறுத்தவரை, புருஷன் வீட்டுக்குப் போகிற- வருகிற அதாவது போன அல்லது ஒரேயடியாய்த் திரும்பி வந்த வழியைத் தவிர மற்றப் புழுக் கங்களெல்லாம் கொல்லைப்புற லா சல வழியேதான். உவரிலும் பெயர் அப்படி ததான்; மகுடேசன் பிள்ளை வீட்டுப் பெண்கள் வீட்டு வாசற்படி தாண்டமாட்டார் கள் என்று! ''வாசற்படி தாண்டினால் தானா? விட்டுக் குள் இருந்து கொண்டே லோகத்தைக் கவிழ்த்து விட மாட்டாதவனா!' என் று தன் பெண் களைப் பற்றிய நினைப்பில் அம்பிகை சுகங்களை மூடிய வாறே புன்னகை செய்கிறாள். - ஒவ்வொரு பெண்ணின் கதையும் ஒவ்வொரு வித மான து. மூத்தவள் காந்திமதி இளம் விதவை.

அடுத்தவள் பொன்னம்மாள்... அம்பிகையிடம் கோபிக் துக் கொண்டு தாயின் முகத்திலேயே விழிப்பதில்லை என்று சபதம் செய்து விட்டுப் புருஷன் வீட்டுக்குப் போன வள்.

மூன்றாவது பெண் சிவகாமி புருஷன் வீட்டு உறலை அறுத்துக் கொண்டு நிரந்தரமாக இங்கு வந்து விட்டவள். இந்த வீட்டின் கூடம் நிறையப் போடப்பட்டுள்ள கோலங் சுளும், சுவரில் தொங்கும் பின்னல் சித்திரங்களும், வாசம் படியிலும், கூடத்திலும் தொங்குகிற அலங்காரத் தோரணங்களும் அவளது கைத்திறனுக்கு அடையாளம் அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்,________________




நாலாவது பெண் இந்திராணி. பக்கத்துத் தெருவில் வாழ்க்கைப்பட்டவள், புருஷன் ஒரு நிரந்தர நோயாளி. | அதுபற்றி இவளுக்குக் கவலையுமில்லை. அவனால் தனக் கும் தன்னால் அவனுக்கும் தொந்தரவு இல்லாமல் தாய் வீடே வாசமாகக் கொண்டு விட்டாள்,

ஐந்தாவது பெண்ணுக்குப் பெயரே மகாராணி. அவளது கணவன் அவளுக்கு மட்டுமில்லாமல் இந்த வீட்டுக்கே சேகவன் மாதிரி.

ஆறாவது பெண் ராசாத்தி, பாவம், இனிமேல் தான் இவளுக்கொரு வழி பிறக்க வேண்டும்.

இந்த மங்களம் இந்த ஆறு ராட்சஸிகள் மத்தியில் என்னென்ன பாடுபடப் போகிறாளோ? அம்பிகை ஒருத்தி இல்லை என்றால் இவள து ஆறு பெண்களும் அவளை உயிரோடு வைத்தே குதறிக் கூறு போட்டு விடுவார்கள்... கர்வம் மிகுந்த இந்த வீட்டுப் பெண்களுக்கென்ன... எல்லாமே கேலிதான், கிண்டல் தான், குதர்க்கம் தான், கோண ல் தான்! தான் பெற்ற இந்தப் பெண்களின் வாய்க் குப் பயந்தே அம்பிகை வாயை மூடிக் கொண்டு மெளனி யாகிவிட்டாள். இந்தப் பெண்களுக்கெல்லாம் தன் மீது பொறாமை என்பதற்காகத் தாயான அம்பிகை அவர் களைத் தள்ளி வைத்து விடவா முடியும்? எங்கே தள்ளி லைப்பது? அவர்களுக்குத்தான் போக்கிடம் இல்லையே! அந்த புத்தியும் அவர் சுளுக்கு இல்லை, எல்லாம் இவள் இருக்கிற வரை தான் செல்லும்! அதுவும் எவ்வளவு நாட் 'களுக்கு நாட்களா? எவ்வளவு நேரத்துக்கு? |

'என்னடா வீட்டிலே இருக்கிற ஜனம் பூரா வெள்ளம் பார்க்க வந்துட்டுதே... அம்பிகை தனியாக இருப்பாளே'! என்ற பதைப்பில் மகுடேசன் பிள்ளை புழக்கடை வழியாக வீட்டுக்குள் வருகிறார். 'நீங்களும் புது வெள்ளம் பார்க்கத் தான் போயிட்டீங்களா?' நீங்க எப்பவுமே குழந்தை தான். எனக்கு மொதல் குழந்தையே நீங்கதானே? இவளுங்க________________




கிட்டே என்னென்ன படப் போறீங்களோ? இவளும் களுக்கு உங்களைப் புரியாதே... என் குழந்தைகளை இந்த லங்காணிகள் கிட்டே ஒப்படைச்சுட்டுப் போகிற நேர மாச்சே'-

அம்பிகையின் மனம் தான் பேசுகிறது...

அம்பிகையின் காதோரம் கண்ணீர் வழிவதை அவர் பார்க்கிறார். கட்டிலின் ஓர் ஓரமாய் உட்கார்ந்து அவள் தலையை மடியில் வாங்கிக் கொள் கிறார்.

"என் கொழந்தே" என்று பெரியசாமியைப் பற்றி வெள் ள மாய்ப் பெருகிவந்த நினைப்பில் அவள் வாய் குழறு 'கிறது. "இந்த நேரத்திலாவது நம்ப குழந்தை பெரிய , 'சாமி'' என்று சொல்வதற்குள் துயரமும் பயமும் அம்பிகை, யின் தொண்டையில் அடைக்கிறது. அவருக்குத்தான் 'என்னமாய் ஒரு கோபம் வருகிறது! அவள் தலையைத் தள்ளி விட்டது போல் எழுந்து பிடி வா தமான குரலில் சொல்லுகிறார். "நான் செத்தாலும் அவள் இந்த வீட்டு வாசற்படி மிதிக்கக் கூடாது."

அம்பிகை கண்களை மூடினாள்,

வெள்ளம் பார்க்கப் போனவர்களெல்லாம் வீடு இரும்பி விட்டார்கள். கையில் விளக் சடன மங்களம் | அம்பிகையின் அறைக்குள் நுழையும்போ து அம்பிகை சுடரோடு ஐக்கியமாகி இருந்தாள் லீடு நிறைய விழுந்து மறித்துப் புரளும் உருவங்களும் நிழல்களும், ஒலமும் ஒப்பாரியும்... மகுடேசன் பிள்ளை சுண்கள் நாக்குளமாகி வழிய 'அம்மா' என்று வாய் குழறத் தனிமையில் தம் விதியை நினைக்கிறார். தனிமையில் மருகி அழுகிறார்.

மகுடேசன் பிள்ளைக்கு இப்போது உற்ற துணை விளக்குச்சாமிதான். இந்தத் தெருவின் இரண்டு கோடி யிலும் உள்ள இரண்டு விளக்குக் கம்பங்களின் உச்சியில் உள்ள கண்ணாடிப் பெட்டிகளைத் திறந்து அதனுன்________________




மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றுவது இந்த விளக்குச் சாமிக்கு ஊர் கூடி த்த ந்த தொழில், யாரென்ன கூட்டுவது? மகுடேசன் பிள்ளை தான் இவருக்கு இந்த வேலையை இட்டார். - சில வருஷங்களுக்கு முன்னால் அம்பிகை அம்மான் எட்டாவது பிரசவத்துக்காக உதர வேதனையில் துடித்துக் கொண்டிருந்தபோது இந்த மனிதர் ஒரு பிச்சைக்காரனைப் போன்ற கோலத்தில் இந்த வீட்டின் வாசலில் வந்து மயங்கி விழுந்தார். திண்ணையில் உட்கார்ந்திருந்த பிள்ளை மனம் பதைத்து ஓடி. இவரைத் தூக்கித் திண்ணையில் கிடத்தி, தண்ணீர் புகட்டி ஆசுவாசப் படுத்தினார், ஆனால் மனமெல்லாம் ஆறு பெண்களுக்குப் பிறகு இது வாவது ஓர் ஆனாய் இருக்க வேண்டுமே என்ற பிரார்த் தனையிலேயே லயித்திருந்தது. சீமந்தப்புத்திரன் தறுதலை! யாய்த் திரிந்து கொண்டிருப்பதால் மகுடேசன் பிள்ளை யாருக்கோ அவனைத் தத்துக் கொடுத்து விட்டதுபோல் தமக்கொரு மகன் இருப்பதையே மறந்திருந்தார்.

இதோ, இந்தச் சிங்காரம் அப்போதுதான் பிறந்து வீறிட்டான். உடனே இந்தப் பரதேசியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார் பிள்ளை. அன்றைக்குப் பிடித்த தொந்தம் இந்த விதியின் இரண்டு பக்கமும் விளக்குகளாய் எரிந்து இவரை 'விளக்குச்சாமி'யாய்த் திரிய லிட்டி ருக் கிறது இந்த ஊரில்.

''... இப்போது பிறந்திருக்கிறானே பையன்...கேட்டை யில் பிறந்த ஆண் கோட்டையை அழிப்பான். ஆனா அம்! உன் குலம் தழைக்கும் போ" என்று அன்று மொழிந்த சாமியாரின் வார்த்தைகளில் 'குலம் தழைக்கும்' என்ற அருள் வாக்கைக் கேட்டுத் தனது இஷ்ட தெய்வமான , அம்பிகையை மனத்துள் வணங்கினார் மகுடேசன்,

இந்தப் பெண்களின் மத்தியில் ஆண் பிள்ளையாகப் பிறந்த சிங்காரம்-ஒரு பெண் குழந்தை மாதிரி தலைப் பின்னலும், காலில் தண்டையும் கொலுசும் அணிந்து. |________________




பாவாடை சட்டை தரித்து ஒரு பெண்ணைப்போ வளர்ந்து கொண்டிருப்பது இப்போதெல்லாம் மதடேசன், பிள்ளையின் மன த்தை உறுத்துகிறது. சிங்காரத்துக்குப் பிறகு அம்பிகை அம்மாள் ஒன்பதாவது பிரசவத்துக்குத் தயாரான தால் வெரை அந்தப் பெண்களே வளர்க்க நேர்ந்தது. அந்த ஒன்பதாவதும் ஆண் நாள், அது தான் அம்பிகைக்கு நோயையும் மரணத்தையும் கொணர்ந்த தாம்.

"எங்க அம்மா என்னை எதுக்குப் பெத்தாளாம்? அந்தச் சனியனைக் காக்கிச் சொமக்கறதுக்கு தான் என்று எப்போதோ ஒரு சலிப்பதும் சச்சரவிலும் சொல்லிக் கொள்கிற ளெம் விதலை காந்திமதி. அந்த நோஞ்சான் குழந்தை வைத்தியைத் தனக்கொரு சுமை யென் று சொல்லிக் கொண்டே துணையாகக் கொண்டு விட்டாள், - அம்பிகை போன பிறகு மகுடேசனுக்கு சிங்காரத்தைப் பற்றித்தான் கலலை. அந்த ஒன்பதாவதைப் பற்றி ஆணா பெண்ணா என்று கூட அவர் அக்கறை காட்டி யதிகலை | இந்தச் சிங்காரத்தைப் பெண் குழந்தையாக வளர்ப்பது விபரீத விளையாட்டாகி வருகிறது. ஆசைப்பட்டு கடவுள் அருளால் கிடைத்த இந்தப் பையன் ரெனடுங் கெட்டானாகி விடுமோ என்ற கவலை மகுடேசனுக்கு மனத்தில் அரிக்கிறது.

'சிங்காரம் சிற்றாடை கட்டிக் கொள்கிறான்; கோலம் போடுகிறான்; விளையாட்டெல்லாம் சமையல் செய்தல், மாவு அரைக்கல் மன்சள் குளித்தல்... என்று பழகினா பின் னால் இவன் 'பொண்டுக சட்டி 'யாகி விடுவாளோ என்கிற அருவருப்பான பயம், கேட்டையில் பிறந்த ஆண் கோட்டையை அழிப்பான் என்றபோது கவலைப்படா தலர் குலம் தழைக்கவித்து வேண்டுமே என்று கவலைப் படுகிறார். சீமந்த புத்திரனுக்குப் பிள்ளைப் பிறந்தால் அது 'தாசி பெத்தது' என்றுதான் பெயரெடுக்குமாம்,________________




ஏன் மங்களம் அம்மாவுக்கே பிறக்கக் கூடாதா என்ன? | அதை நினைக்கக் கூட முடியாத அளவு மூர்க்கமான ' கோபம் அவர் விவேகத்தை மறைத்திருக்கிறது.

"இனிமே இவனுக்கு யாராவது இந்த மாதிரி பொட்டை வேஷம் போட்டு விட்டீங்கன்னா தெரியும் 39 தி... புத்தி இல்லே? ஒரு ஆம்பளைப்பையனை வளர்க்கற லட்சணமா இது?'' என்று மகுடேசன் பிள்ளை கேட்ட ஒரு கேள்விக்குப் பொன்னம்மாளும் சிவகாமியும் தான் என்னமாய்ப் பொரிந்து தள்ளினார்கள்!

"எங்களுக்கென்ன வேற வேலை இல்லையா? விதியா? உலகத்திலே இல்லாத ஆம்பளைப் புள்ளை பெத்திட்டீங்க ... 'பெத்தவ இருந்தா, பெத்தவ இருந்தா'ன்னு பேசினா என்ன அர்த்தம்?... பெத்தவ அருந்த காலத்திலே மட்டும் என்ன வாழ்ந்திச்சு? எந்தப் புள்ளையை உங்க பெண் டாட்டி வளர்த்தா? எங்களை நீங்கவளர்த்த லட்சணத்தை நாங்க வாழப்போன வீட்டிலே வந்து கேக்கணும், பெரிய புள்ளையை நீங்க ஆண் பிள்ளையா வளர்த்த லட்சணம் தான் தாசித் தெருவே சிரிக்குது. புள்ளை வளக்கறதைப் பற்றிப் பேசறதுக்கு இந்த வீட்டில் யாருக்கு வாய் இருக் குது? ஏன்? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க இஷ்டத்துக்கு உங்க பிள்ளையை வளர்த்துக்கறதை யாரு வேணாம்னு சொல்றாங்க? அப்ப உங்க இஷ்டத்துக்கு நீங்க மெரட்டலாம். அவளும் கேட்டுக்குவா. நாங்க ஒண்ணும் விதியத்து இந்த வீட்டிலே வந்து கெடக்கலே.', - கடைசியாகச் சொன்ன விஷயம் காந்திமதியின் மனத்தில் மட்டும் அசரீரி வாக்கு போல் போய்ப் பதிந்தது. அவளுக்கு அப்பா மீது மரியாதையும் அன்பும் மாத்திரமில், லாமல் அம்பிகையை அவர் பறிகொடுத்திருப்பதால் ஓர் அநுதாபமும் உருவாகியிருந்தது. மேலும் அவளது இயல் புக்கேற்ப ஒரு கலியாணம் நடத்திப் பார்க்க அவள் ஆசைப் பட்டாள். அந்தக் குடும்பத்தில் * கலியாணம் என்றாலே காந்திமதி'' தான் என்று பெயரெடுக்கும்________________




அளவு ஒரு பெண்ணையோ பையனையோ பார்த்த மாத்திரத்தில் இன்னாருக்கு இன்னார்தான் ஜோடியாக வாய்க்க வேண்டுமென்று ஏற்கெனலே பார்த்திருந்த முகம் களோடு மிக இசைவாக இவள் ஒட்டி விடுவாள்... அதற் 'கான காரியங்களை ஒன்றுகூட்டிக் கலியாண த்தை நடத்து வைக்க மிகப் பிரயாசை எடுத்துக் கொள்வாள்... "நான் சொன்னபடி தானே ஆச்சு" என்று கையைத் தட்டிக் கொண்டு உட்காருகிறவரை ஓயமாட்டாள். இப்போது மகுடேசன் பிள்ளைக்கு மறுமணம் என ற ம் அவள் ம தில் தோன்றிய முகம் கப்பல்கார வீட்டுப் பெண் கோதை யினுடையது.

மகுடேசல் பிள்ளைக்கோ ஆயிரம் கவலைகள் | கடல் போல் பரந்து கிடக்கும் சொத்துக்களை வெள்ளைக் காரன் சூறையாடி விடுவான் போலிருக்கிறது. வெள்ளைக் காரனை நம்ப முடியவில்லை, அவன் பாஷை தெரிய வில்லை. தான் இங்கிலீசு படிக்காமல் போன து பிள்ளைககு அந்த வெள்ளைக்காரத் துரை சுளின் சந்நிதியில் நிற்கும் போ து அவமானமாக இருக்கிறது. அந்தத் 'துபாலி | சொல்ற மடத்தனமான விஷயத்துக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு அவன் காட்டுகிற இடத்தில் எல்லாம் கையெ முத்துப் போட்டுவிட்டு அந்தக் கையெழுத்து தன்னை எங்கெங்கே கட்டிப் போடப் போகுதோ என்னும் கவலை ஒன்று மனத்துள் நிரந்தர நமைச்சல் தருகிறது. "அந்தத் தொரை கேக்கறான்... உன் ஐசுவரியம் என்னா பெறும்னு

அது எப்படி கணக்குப் போட்டுப் பாக்கறது... ரூபா அணா பைசா கணக்கிலே ஐசுவரியத்தை எப்படி அழிச்சிப் பாக்கறது... ஒண்ணுமில்லாத பயலுல எல்லாம் இங்கிலீசு | படிச்சிட்டு அதிகாரம் பண்றான்... நெனைச்சா அக்கம் வர மாட்டேங்குது. தனக்கு அப்புறம் இத்தினி பொம் பனைப் பொண்ணுங்களும் எப்படி த தான் காலம் தள்ளுமோ"... என்றெல்லாம் மனம் அலை பாய்கிறது.

பிள் ளை சொத்து சேர்க்கும் ஆசையில் எதையும் வாங்கியதில்லை. இன்னொருத்தன் சவுரியத்துக்கு வாங்கி________________




எது தான்... நெலம்... ஆடு, நகை எல்லாமே அப்படித் தான், அதே போல் அவர் எந்தச் சொத்தினையும் விற்றது. மில்லை ...

இரண்டாவது பெண் பொன்னம்மாளின் புருஷன் மார்த்தாண்டம் பிள்ளை, இல்லாத லீலைகளெல்லாம் புரிந்து விட்டுத் தாயின் கண்டிப்புக்கும், தம்பியின் கடுமைக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி மனம் உடைந்து, ஊரை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்ப் பட்டாளத்தில் சேர்ந்து கண் காணாச் சீமைக்குப் போய விட்டான், கையில் ஒரு குழந்தையுடனும் மாமியார் சிவ பாக்கியத்தம்மாளின் துணையுடனும் பொன்னம்மாள் பிறந்த வீட்டோடு வந்து விட்டாள். தாயின் முகத்தில் கூட விழிக்க மாட்டேன் என்று சொல்லிப் போனவன், தாய் போன பிறகு தாய் வீடு வந்து சேர்ந்தாள். அவளு டைய மாமியார் தனது பெரும் சொத்தில் நடிப்போன மூத்தமகனின் பங்கை இளைய மகன் வைரவனிடமிருந்து பறித்து மருமகளுக்கு எழுதி வைத்துவிட வேண்டும் என்ற ஆவேசத்தில் கோர்ட்டு, கேஸ் என்று நிற்கிறாள். மகுடேசன் பிள்ளைக்கு இதெல்லாம் பிடிக்காத, புரியாத விஷயம், தன் மகளுக்கு ஒரு வீட்டை எழுதி வைத்து. அவளைச் சிலபாக்கியத்தம் மாளுடன் அங்கு குடிவைக்கவே அவர் விரும்புகிறார்.

தனது கலியாண விஷயமாக நடக்கும் ஏற்பாடுகளில் அவர் மனம் சிறிது தடுமாறுகிறது. இந்த வீட்டுப் பொண்கள் கிட்ட மாட்டிக்கிட்டு இந்த மங்களம் ஒருத்தி. படற பாடு, நெனைச்சர வயிறு எரியுது! இந்தப் பாவம் போ தா துன்னு இன்னொருத்தியைக் கொண்ணாந் து ! நானும் ஒரு பெண் பாவத்தைக் கொட்டி.க்கணுமா'' என்று யோசிக்கிறார்!

"இந்த வீட்டிலே இருக்கற பெண்களுக்குப் புத்தி வரணும்னா சரியான பொம்பளை ஒருத்தி இங்கே வந்தாக ணும்... நீங்க சும்மா தோணின முடிவைத் தொடர்ந்து________________




ஆகவேண்டிய காரியத்தைக் கவனிங்க... எல்லாம் நல்லது. தான் நடக்கும்" என்று சொல்லும் விளக்குச் சாமியின் வார்த்தைகள் மகுடேசனின் மனத்துக்கு உகக்கின் றன.

ஆமாம்! அந்த வீட்டுப் பெண்கள் லேசுப்பட்டவர் களா? மூன்று கட் டுகருடைய இந்த வீட்டின் அந்தப்புரம் போன்ற இடைக்கட்டுக் கதவுகள் சாத்தப்பட்டால் மறு | நாள் காலையில் தான் திறக்கப்படும், அதற்கு மேல் தான் மகுடேசன் வீட்டுப் பெண் மக்களின் அந்தப்புர வாழ்க்கை தொடங்கும், 'மகாசபை' கூடிப் பல அரிய விஷயங்களா விவாதிக்கும். கேளிக்கைகள் தொடங்கும். அப்பா மா நரி யும், விளக்குச்சாமி மாதிரியும் அம்பிகை மா திரியும் வேலங்கள் தரித்துச் சிலர் நடித்துக் காப்பா , மகுடேசன் குடும்பம் சைவம் என்று ஊரில் பெரெடுதத து. காற்றில் மிதந்து வரும். நாற்றத்தைக்கூடப் பொறுக்க மாட்டாதவர் அவர். அப்படிப் பட்டவரின் பெண் கள இரவில் பின் வீட்டின் பின் கட்டுப் பிரதேசத்தில் மாமிசம் சமைப்பர். அம்பிகை அம்மாள் காலம் தொட்டே இது நடந்து வருகிறது. அவள் இது குறித்து அச்சம் கொண்டாள். மங்களம் இந்த விருந்தில் பங்கெடுத்துக் கொள்ள மாட்டாள் என் நா ம் அதற்கான வேலைகளை மறுக்கத் தைரியமில்லாமல் அம்மியில் அரைத்தும் ஆகா யதை மறைத் தும் எல்லா வேலைகளும் செய்தவாறு மனப் குமட்டிக் கொ ண் டு அவள் பட்டினி கிடப்பாள். இங்கே மறைக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ, உண்டு, வெற்றிலை பாக்குப் பகையிலை சமாசாரம், பொடி | சுருட்டு. மாமிச உணவு...எது இல்லை? ஒரு வேடிக்கைக்கு என்று ஆரம்பித்த இந்த மாதிரிப் பழக்கங்கள் இப்போது நிரந்தரமாகி விட்டன.

இப்போது கொஞ்ச நாட்களாக இந்தப் பெண் களின் கூட்டத்தோடு சிங்காரமும் மாமிச பட்சிணியாகிக் | கொண்டிருக்கிறான். மகுடேசன் பிள்ளைக்குத் தெரிய வந்தால் என்ன ஆகுமோ?________________




ஒருநாள் பூனை ஒன்று மீனைக் கல்விக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வருவதைச் சகியா து கால்கட்டையை அதன்மேல் அவர் எறியப் போக அந்தக் கட்டை அதன் கண்ணில் பட்டு... பாலம்! அந்தப் பூனைக்கு ஒரு கண்ணே நொள்ளையாகி விட்டது. அவருக்கு அசைவ உணவில் அப்படி ஓர் அருவருப்பு, வெறுப்பு,

இதெல்லாம் தெரிந்துதான் விளக்குச் சாமியார் இப்படிச் சொல்கிறார் போலும்; ''இந்த வீட்டுப் பெண் கள் கொழுப்பை அடக்கற மாதிரி இந்த வீட்டுக்கு ஒரு நிறம் ராணி லரவேணும்." கடை சியில் அவர் மகுடேசன் பிள்ளைக்கு ஆசி கூறுவது போல் சொன்னார்: ''பிள்ளை அம்பிகை அம்மாளுடைய அருளினால் உங்களுக்கு ஒரு நல்ல குணவதி வரட்டும். உங்க வயசுக்கு விசேஷமாத்தான் புத்திமதி சொல்ல முடியும். எப்படிப்பட்டவங்க உங்களுக்கு வாய்ச்சாலும் நீங்கள் உங்களைப் பொறுத்து வரைக்கும் மகாபாரதத்தில் வர சந்தனு மகாராஜாமா திரி இருக்கணும்." பிள்ளை பெரிய கல்விமான் அல்ல.. எனினும் மகாபாரதம் ராமாயணம் எல்லாம் அறிந்தவர். சாமியாரின் பேச்சிலுள்ள தாத்பரியத்தைப் புரிந்து கொண்டார்.

'வீடு, குடும்பம், தாயற்ற குழந்தைகள், சிங்காரத்தை வளர்க்சு, என்று ஓராயிரம் பொய்க் காரணங்களைச் சொன்னாலும் உண்மையில் எனக்கொரு பெண் துணை வேண்டும் என்பதுதானே காரணம்?...' என்றெல்லாம் யோசிக்கிறார் பிள்ளை . ''என் ன இருந்தாலும் இப்படி ஒரு தேவகுமாரியையா ஐம்பது வயதான எனக்குப் பெண் பார்த்து முடிப்பது?'' என்ற வியப்பு பிள்ளைக்கு உடம் பையும் உயிரையும் அடிக்கடி சிலிர்க்க வைக்கிறது.!